ரத்த ரங்கோலி 5
கடல் அலைகள் தன் முயற்சியில் சற்றும் தளராமல் மீண்டும் மீண்டும் கரை ஏற முயன்று கொண்டிருந்தது. ஆதி இமை மூடாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவை அவன் கருத்தில் பதியவில்லை.
அவன் பாதத்தை முத்தமிட்டு ஓடிச் செல்லும் அலைகள் சில்லென்ற உணர்வை ஏற்படுத்தியது. சென்னை மெரினா பீச் தனக்கே உரித்தான கலகலப்புடன் திகழ்ந்தது.
குழந்தைகளின் கும்மாளம், காதலர்களின் கிசுகிசுப்புகள், சுண்டலின் கமகம வாசனை. அவ்வப்பொழுது குதிரை அசால்டாக வாளை ஆட்டியபடி கேட்வாக் சென்றது என குதூகலம் நிரம்பி வழிந்தது.
ஆதி மட்டுமே சிலை போல உலகத்திற்கு தமக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஒரு மோன நிலையில் நின்றிருந்தான்.
“ஆதி” என்னும் குரல் கேட்டுத் திரும்பினான்.
மெரூன் குர்த்தா, வெள்ளை லெக்கிங்ஸ், காதில் பெரிய வளையம், விரிந்த கூந்தல் என மாடர்ன ஒவியமாய் அபூர்வா நின்றிருந்தாள். அவளை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.
அவன் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவளாக “ஆர் யு ஓகே?” எனக் கேட்க
அவன் உடனே இல்லை எனத் தலையசைத்தான்.
அவன் கையை பிடித்தபடி சற்று நேரம் நடந்தாள். இருவரின் விரல்களும் பின்னி பிணைந்தது. அவளின் மெல்லிய விரல்கள் ஆதியின் விரல்களை அவன் மன அமைதிக்காக தன் கட்டுக்குள் கொண்டு வந்தது.
கூட்டம் குறைவான இடத்தில் அமர்ந்தனர். அலைகள் போல ஆதி இதயத்தில் குழப்பங்கள் தொடர்ந்து அடித்துக் கொண்டிருப்பதை அவன் முகம் உணர்த்தியது.
“சொல்லு ஆதி” என்றாள் அவன் கையை தன் கைக்குள் சிறை வைத்தபடி
“கார்மேகம் அங்கிள் டெத்ல சில குழப்பம் இருக்கு” என தொடங்கினான்.
என்ன என்பதாய் புருவம் உயர்த்தினாள்.
“போலீஸ் பவனை சந்தேகப்படறாங்க?”
“வாட்?” முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்
“ஆமா இந்த கொலைல அவனுக்குப் பங்கு இருக்கலாம்னு சொல்றாங்க. அப்படியே அவனை கண்காணிக்கனுமாம்”
“அப்பாவையே மகன் எப்படி? லாஜிக்கே இல்லையே. அதுவும் நீ கண்காணிக்கணுமா?”
“இதையே தான் நானும் கேட்டேன். அதுக்கு கார்மேகம் அங்கிள் பவனுடைய சொந்த அப்பா இல்லங்கறது அவங்க வாதம்”
“எனக்கு என்ன சொல்றதுனு தெரியில … ஆனா இந்த காலத்துல கணவன் மனைவியை கொலை செய்யறது .. அம்மா தன் சொந்த பிள்ளைகளை கொலை செய்யறதுனு எத்தன செய்தி வருது. பவன் விஷயத்துல என்னால நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியலை” என்றாள்
ஆதி “எனக்கு பவனைச் சின்ன வயசுல இருந்து தெரியும். கார்மேகம் அங்கிள் மேல உயிரையே வெச்சிருந்தான். அவரை வேலை செய்யவே விட மாட்டான். அவருக்கு கொரோனா வந்தபோது கூட அப்படி பாரத்துக்கிட்டான். நான் கூட என் அப்பாவை அப்படி பார்த்துகிட்டது இல்லை. மோர்ஓவர் அவன் நல்லவன் மனசாலையும் செயலையும்” எனச் சொல்கையில் கண்ணீர் வந்துவிட்டது.
“சின்ன வயசில் இருந்த அவ்வளோ நெருக்கமா இருந்த ஒருத்தரை இப்ப வேவு பார்க்கணும்னா என்னால முடியாது . அவன் ரொம்ப நல்லவன் எனக்குத் தெரியும்” புலம்பாத குறையாக பேசினான்.
“ஆதி அவன் நல்லவன்னு உனக்குத் தெரியும். அதை நிரூபிக்க உனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பவனை கண்காணிச்சி அவன் மேல தப்பு இல்ல சொல்லி நிரூபி. அப்பப் பிரச்சனை தீர்ந்திடும் இல்ல. இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்க” என்றாள்.
அவன் குழப்பம் அகலாதவனாய் அவளை நோக்க.. அவள் சொற்கள் அவனுள் ஒரு விதையை வித்திட்டது.
“யெஸ் பவன் மிஸ்டர் கிளீன்னு நீ தான் உலகத்துக்கு சொல்லணும். உன் நண்பனை காப்பாத்த உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு ”
ஆதி முகத்தில் அலை ஓய்ந்த உணர்வு “அபூர்வா அவன் உன் வீட்ல இருக்கட்டும். அப்பதான் கண்காணிக்க முடியும். எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு” மனவோரத்திலிருந்த சிறு பயம் வெளி வந்தது.
“நீ எதுக்கும் கவலைப்படாத” என்றாள்
ஆதி முகத்தில் மெல்ல புன்னகை அரும்பியது
“அங்கிள் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தாச்சா ஆதி?”
“ம்ம் .. அடிப்பட்டதால்தான் இறந்திருக்காராம்.“
“ஐ சீ”
“அபூர்வா பவனை கண்காணிக்கிறது வேற யாருக்குமே தெரிய வேண்டாம்”
“ஷ்யூர்”
“தேங்க்ஸ அபூர்வா இப்பதான் மனசு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு”
“நான் என்ன மூணாம் மனுஷியா தேங்க்ஸ் சொல்ல .. உன் வருங்கால மனைவி டா நானு” என்று சிரித்தபடி கண்சிமிட்டினாள்.
“இந்த விஷயத்தை உன்னைத் தவிர யார்கிட்டயும் மனம் விட்டுப் பேச முடியாது அபூர்வா. பவன் மூணு குடும்பத்துச் சொத்து” மனமுடைந்து ஆதி கூற
“டேய் இதெல்லாம் ஒரு விஷயமா .. விடுடா” என அவன் கண்ணை நேருக்கு நேர் கண்டு தைரியம் சொன்னாள்.
இருவரும் வெகு நேரம் பேசிவிட்டு கிளம்பினர்.
பூமிநாதன் தன் மகிழ்ச்சியை மறைக்கப் பெரும்பாடு பட வேண்டி இருந்தது. காரணம் இனியன் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை.
கைலாஷ் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான் “கொலையாளியை பிடிச்சாச்சி இன்னும் என்னவாம்? அப்பா வெளிநாடு போனா என்ன பிரச்சனை? ” என தன் ஆதங்கத்தைக் கோபமாக மனைவியிடம் காட்டினான்.
“என்னங்க நீங்க .. போலீஸ் சொன்னா தட்ட முடியுமா? ” சசி கேட்க
“உனக்கு என்ன? உன் அப்பாவா இருந்த இப்படி பேசுவியா?” எனச் சண்டை திசைமாறியது.
பூமிக்கு தன் மருமகளை பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் இப்போது வக்காலத்துக்குப் போனால் தன் மேல் பாய்வான் மகன் என்று நன்கு தெரியும். அதனால் மௌனமாக இருந்தார்.
சசி அவனிடம் பேசி பயனில்லை என துணியை காய வைக்கும் சாக்கில் மொட்டை மாடி சென்றுவிட்டாள்.
பூமிக்கு இரண்டு மாதம் கழித்து என்ன செய்வது என்ற கவலை எட்டிப் பார்க்க “அரசியல்வாதியை போல நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டியதுதான்” என திட்டம் தீட்டினார்.
பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தையைப் போல அவர் நடந்து கொண்டார்.
தன் செல்போனில் பழைய புகைப்படங்களைப் பார்த்தார். ஆயுத பூஜை அன்று சிரித்த முகத்துடன் செல்வா காணப்பட்டான். அவனைப் பார்க்கப் பார்க்க ரத்தம் கொதித்தது. தன் நண்பன் பட்ட வேதனை அவருக்கு வலித்தது. செல்வா இப்படி செய்வான் என கனவிலும் நினைக்கவில்லை.
அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்காமல் இங்கிருந்து செல்லக் கூடாது என உறுதி பூண்டார். மரண தண்டனை என்பது ஒருவித விடுதலை என்பது அவர் எண்ணம்.
இன்ஸ்பெக்டர் இனியன் தன் மேசையில் சில காகிதங்களைச் சரி பார்த்துக் கையெழுத்திட்டார். பின்னர் மற்றொரு முறை இறந்த கார்மேகம் வீட்டிலிருந்து சேகரித்த ஆதாரங்களைச் சோதித்தார். வீட்டின் பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட செல்வாவின் கைரேகைகள். வீட்டின் பின்புற சுவரில் செல்வா ஏறிக் குதித்ததில் அவன் ஆடை கிழிந்து சில நூல் இழைகள் மாட்டியிருந்தன. அவை செல்வாவின் ஆடையிலிருந்தவை என உறுதிப் படுத்தியாயிற்று.
கார்மேகம் வீட்டிலிருந்த உணவுகளிலும் எந்த நஞ்சும் கலக்கவில்லை என ரிப்போர்ட் சொன்னது.
கார்மேகத்தின் உடல் கூராய்வு ரிப்போர்ட்டில் அவர் தாக்கப்பட்டதன் காரணமாக மரணம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.
இனியனுக்கு இவை எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும் ஏதோ ஒன்று நெருடலாக இருந்தது. அதனால் உடல் கூராய்வு செய்த மருத்துவரை நேரில் சந்தித்தார்.
“டாக்டர் கார்மேகம், தாக்கப்பட்ட காரணத்தால்தான் மரணம் அடைந்தாரா? வேற விஷம் அப்படி எதுவுமே இல்லையா?” இனியன் ஆர்வமாகக் கேட்க
இதெல்லாம் ஒரு கேசா என்பது போலச் சிரத்தை இல்லாமல் “தாக்கபட்டதால மட்டுமே மரணம்” என்று ஒரு வரியில் முடித்தார்.
“இப்பலாம் ஏதோ கெமிகல் ஊசினால கொலை செய்றாங்களே .. அப்படி எதுவும்?” எனக் கூர்ந்து நோக்க
“அப்படி எதுவும் இல்லை” எனக் கடிகாரத்தைப் பார்த்தார். “கெட் அவுட்டை நாகரீகமாகச் சொல்லுகிறார் என்பதைப் புரிந்து கொண்டு இனியன் வேறுவழி இல்லாமல் கிளம்பினார்.
பவன் புட் ஆர்டர் செய்தது உண்மை அதனால் டெலிவரி பாயை விசாரித்தார்.
காவல்துறையைக் கண்டதும் பதட்டத்துடன் “சார் நான் எந்த தப்பும் செய்யலை” என்றான்
“கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றவர் கார்மேகத்தின் முகவரியைக் கூறி “நீதான டெலிவரி பண்ணின”
“ஆமா சார். அன்னிக்கு பயங்கர மழை கஷ்டப்பட்டு டெலிவரி செஞ்சேன்”
“யார் கிட்ட உணவை கொடுத்த?”
“கேட் பக்கத்துல ஒருத்தர் இருந்தார் அவரே வாங்கிட்டார்”
“பாக்க எப்படி இருந்தான்?”
“தலைல இருந்து கால்வரை தொள தொளனு கருப்பு ரைன் கோட்டுக் கருப்பு கண்ணாடி மாஸ்க் போட்டிருந்தான் .. எனக்கு முகமே தெரியலை”
“உனக்கு ஆர்டர் அலாட் ஆனா வேற யாருக்கெல்லாம் தெரிய வரும்?”
“எங்க குரூப்ல எல்லாருக்கும் தெரியும். இன்பாக்ட் அது என் ஆர்டர் இல்லை என் பிரண்டோடது அவனுக்கு உடம்பு சரியில்ல அதனால நான் போனேன்”
“உன் பிரெண்ட் டீடெயில்ஸ் கொடு”
“சார் அவன் ஹாஸ்பெட்டல இருக்கான் விடாம ஜீரம்”
“பரவாயில்லை கொடு. ஹாஸ்பெட்டல் பேர் என்ன?
அவன் கொடுத்தவற்றைக் கொண்டு நண்பனை விசாரித்ததில் பயனுள்ளதாக எதுவும் இல்லை.
கார்மேகத்தின் மரணம் காரணமாகக் குப்பைக் கிடங்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. கொலையாளியை உடனே பிடித்துவிட்டதால் அங்கு யாரையும் விசாரிக்கவில்லை. சட்ட சம்பிரதாயமாகவே சில நாட்கள் மூடியிருந்தது.
இனியன் அதைத் திறக்க முடிவு செய்தார். அங்குச் சென்று அனைவரையும் விசாரிக்க வேண்டும். கார்மேகம் அல்லாது பவன் பற்றியும் விசாரிக்க எண்ணினார்.
மறுநாளே செயல்படுத்தினார். பவன் மற்றும் பூமிநாதனை அங்கு வரவழைத்தார். கைலாஷ் தன் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டான்.
இனியன் முதலில் சாதாரணமாகக் கணக்கு வழக்குகளிலிருந்து தொடங்கினார். பின்பு சட்ட சம்பந்தமான பத்திரங்கள் என அனைத்தையும் அலசி ஆராய்ந்தார்.
அனைத்தும் சட்டதிட்டத்திற்கு ஏற்ப மிகவும் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
கார்மேகத்தைப் பற்றி விசாரித்தார். நேர்மையான மனிதர் கொஞ்சம் முன்கோபி எனப் பரவலாக பதில் வந்தது.
பவன் பற்றி விசாரிக்கையில் அனைவரும் ஒருமனதாக “தங்கமான தம்பி” என நற்சான்றிதழை வழங்கினார்கள்.
இனியனுக்கே “நாம தப்பான பாதையில் செல்கிறோம் ” என என்னும் அளவு பவனை அவர்கள் கொண்டாடினர்.
எனில் அந்த ரெயின்கோட் ஆசாமி யார்?
பவன் கொலை நடந்த நேரம் இங்கு இருப்பதாகத் தகவல் சொல்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் அவனை யாரும் இங்கு நேரில் காணவில்லை.
கார்மேகம் வீட்டின் பக்கத்திலுள்ள சீசி கேமராவில் பவன் இரவு வெகு நேரத்திற்குப் பின்பு வந்ததிற்கான ரெகார்ட் உள்ளது.
அனைவரும் பவனை நல்லவன் எனக் கூறுவதே இனியனுக்கு நெருடலாக இருந்தது. எப்படி ஒருவன் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க இயலும்? ஒரு எதிரி அல்லது விமர்சகர் கூட இல்லையா?
அன்று ஆதி கூட “பவன் ரொம்ப நல்லவன் சார்” எனப் பரிந்து பேசியது நினைவுக்கு வந்தது.
தான் மட்டும் ஏன் பவனைச் சந்தேகிக்கிறோம் என தன்னை தானே கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவர் உள்ளுணர்வு பவனைக் குற்றவாளியாகவே பாவித்தது. அடுத்து செல்வாவை பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.
தொடரும் …