எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK 03 - அகிம்சையில் கொல்வது ஏன் பெண்ணே!- கதை திரி

Status
Not open for further replies.

NNK-03

Moderator
டீஸர் :

"இப்போ எதுக்குடி இவ்வளவு நெர்வோஸா (nervous) இருக்க.
இது என்னமோ முதல் முறை நமக்குள்ள நடக்குற மாதிரி நேர்வேஸா என்னை பார்த்து முழிக்கற.. ஒஹ்! உனக்கு தான் இங்கிலீஷ் தெரியாதுல..
ம்ச்! பட்டிக்காடு பதட்டமாகிறளவுக்கு ஒண்ணுமில்ல."


அவன் பேசிய பேச்சில் மிரண்டாலும் 'அதை விட அவன் பார்வையின் வீச்சு நடக்க போவதை நினைத்து 'அவள் ஓட்டம் எடுக்கும் முன்னே அவளை எப்பொழுதோ அவன் ஆளுகைக்குள் கொண்டு வந்து அவள் ரோஜா இதழை அவன் முரட்டு இதழ்கள் சிறை பிடித்தன.


 
Last edited:

NNK-03

Moderator
டீஸர் 2:

“பப்பா நீங்க so ஸ்வீட்..
எனக்கு கார்டனிங் பிடிக்கும்னு எனக்காக ரோஸ் பார்ம் ஹவுஸ் வாங்கி இருக்கீங்க.
இனி நாம வீக்கெண்ட்ஸ் வந்தா அங்க தான் போகணும் பப்பா.”

மகளின் கண்களில் கண்ட அந்த சந்தோசதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தன் மகளின் சந்தோஷத்தில் ஆனந்தம் கண்டான் ஆரியன்.

“பப்பா அந்த பார்ம்ல பொண்ட் (pond-குளம்) வச்சி அதுல நம்ம லோட்டஸ்(lotus-தாமரை) வைக்கலாமா?”

என்றவள் பேச்சில் சில நொடிகள் அவனின் ராட்சசியின் நினைவலைகள்

‘ஏன்டி நீ வேண்டாம்னு தான் நான் என் வாழ்க்கை, என் குடும்பம்னு தனி உலகத்தில் வாழனும் வந்ததே ஆனா எங்க போனாலும் உன் நினைவு, ச்சை!’ என்று வாழ்க்கையே சூனியமனவனாக எண்ணியவனின் முகத்தில் ஈரம் உணர்ந்தான். நிமிரந்து பார்க்கயில் அவன் மகள் தந்தையை இறுக்கி அணைத்து தன் தந்தையின் முகத்தில் முத்திரை பதித்து கொண்டே.

"ஐ லவ் யூ பப்பா!"

என்றவளின் அன்பில் அவளை பற்றிய அவன் சிந்தனையை புறம் தள்ளியவன்.

“ஐ லவ் யூ டூ மை பேபி டால்!”

என்றவன் மகளின் அன்பில் கட்டுண்டு போனான்..

 

NNK-03

Moderator
அகிம்சை பெண்ணே 1:

நியூயார்க் நகரம் அங்கே ஓர் அறையில்...

"வாட் ஆர் யூ டூயிங் பப்பா தூங்கிட்டே இருக்கீங்க?"

"மார்னிங் சீக்கிரம் எழுந்து தீம் பார்க் கூப்பிட்டு போறேன் சொன்னீங்க. என்ன இன்னும் தூக்கம்" என்று சொன்னவள்.

அவளின் அப்பா அருகில் சென்று அவளுடைய அப்பாவை எழுப்பினாள் அவள் ஆராதியா ஐந்து வயசு குட்டி தேவதை.

அந்த சின்ன சிட்டு அடிப்பது அவனுக்கு தட்டிக் கொடுப்பது போல இதமாக இருந்தது.

"பேபி இன்னும் கொஞ்சம் மேல அடிடா அங்க தான் ரொம்ப பெயின் இருக்கு" என்றவன் தன் கண்ணை திறக்காமல் சொன்னதும் அவளின் கோபம் அதிகமாவதை ஓர கண்ணில் பார்த்தவன் சின்ன கேலி சிரிப்பில் இன்னும் அவனுடைய குட்டி ராட்சசியை இம்சை செய்தான்.

இவள் எழுப்பியும் எழுந்துக் கொள்ளாமல் இருந்த தன் பப்பாவை இனி சும்மா விடுவததுற்கு மனம் பொறுக்க முடியாமல் அவளும் அதிரடியை காட்டினாள்.

"நீங்க இப்படி பண்ணா எழுந்துக்க மாட்டீங்க வரேன் இருங்க" என்றவள் பேச்சில் இன்னும் சுவாரசியம் கூட காத்திருந்தான்.

மெல்ல தன் தந்தை முதுகின் மீது தவழ்ந்து வந்தவள் அவன் உணரும் முன்பு அவள் நினைத்ததை செய்து முடித்தவள் கை தட்டி சிரித்தாள் தன் மகளின் செயலில் சர்வமும் அடங்க ஒரு நிமிடத்தில் அவனுள் பல மாற்றங்கள். தூக்கமும் விலகி ஓடியது தன் மகளின் அந்த செயலில் அவன் ஆர்யவர்மன்.

அவனின் மகள் இப்படி செய்வது முதல் முறை அல்ல பலமுறை செய்தாலும் இதன் முதல் அனுபவம் தந்தவள் இவளின் தாய் அல்லவா.

அமைதியின் உருவம் கொண்டவள் ஆசை, கோபம், அரவணைப்பு எல்லாம் காட்டும் ஒரே இடம் இவன் ஒருவன் மட்டுமே...

அவளிடம் நீ வேண்டும் என்று சொல்லி அவளை ஆட்கொள்ளும் போதும் அவனின் சம்மதத்துக்காக உடன்பட்டவள். நீ என் வாழ்வில் வேண்டாம் என்று விலகி வந்த போதும் அழுதோ ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவனை மட்டும் இல்லாமல் அவனுக்காக மகளையும் விட்டு கொடுத்தவள்.

இவள் எப்படி பட்டவள் அன்றும் இன்றும் அவனுள் புரியாத புதிர் அவள். தான் மறக்க நினைக்கும் ஒருத்தியின் ஞாபகம் ஆழ் மனது வரை பாதிப்பாள் என்று அவனே உணராமல் போனது என்ன விந்தையோ.

தன் மகள் வளர்ந்து முதன்முதலாக தன் தாயை போலவே அவன் காது கடித்து எழுப்புவதற்கு இன்றும் கைக்கொண்டு வருவதால் அவனுள் மறக்கப்பட்டது என்று எண்ணிய அவளின் நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பது ஏனோ எண்ணாத நாட்களில்லை.

"என் வாழ்க்கையில யாரை நான் ரொம்ப வெறுக்கிறேனோ அவளே என் வாழ்க்கை முழுவதும் என் நினைவை ஆக்ரமித்து இருக்காளே."

"உண்மையான அன்போ காதலோ இல்லாத ஒருத்தியை இன்னுமும் என் இதயம் நினைக்க தானே செய்கிறது."

"அத நினைச்சா என்ன நினைச்சு எனக்கே வெறுப்பா இருக்கு என் மேல. நீயாடி நீயா இப்படி ஏன் நீ எனக்கொரு நல்ல சந்தர்ப்பதில் அறிமுகமாகாமல் போனாய்.

எனக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லை என்று விலகிய பின்னும் ஏன் என்னுள் தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறாய்.

உன் கூட நான் வாழ்ந்த வாழ்க்கையில் கூட எப்படி உன்னால அப்படி தத்துரூபமா நடிக்க முடிஞ்சது.

உன்கூட வாழந்த அந்த 2 வருஷம் உன்னை நான் நடிச்சு ஏமாத்த நினைச்சு கடைசியா உன் வலையில் விழுந்து நானே ஏமாந்து போவேன்னு நினைச்சு கூட பார்க்கல டி.

நல்லவேளை என் ஏமாற்றம் என்னோட போனது.

ஆனா என் தவறுக்கும் ஏமாற்றத்துக்கும் கிடைச்ச அழகான பரிசு தான் என் மகள்.

உன்கிட்ட என் வெறுப்பு முழுவதும் காட்டி இருக்கேன் அப்ப எல்லாம் கூட எப்படி அமைதியா அது கடந்து போன டி.

அப்போ கூட எவ்வளவு அழகா நல்லவள் மாதிரி உன் நடிப்பை தொடர்ந்து இருக்க.

நீ நடிச்சது என்னால கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சியா.இப்போ நான் உன்னை நினைத்து இருக்க இந்த நேரத்துல கூட, நீ உன் இஷ்டத்துக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை உனக்கு வேணுமோ அப்படி தானே வாழ்ந்துட்டு இருப்ப உனக்கு உன் சந்தோஷம் உன் நிம்மதி உன் சுயநலம் மட்டும் தான் டி முக்கியம். உன்ன சுத்தி யாரு எப்படி இருக்காங்க அதை பத்தி எல்லாம் ஒரே ஒரு சிந்தனை கூட உனக்கு கிடையாது நீ என்ன ஜென்மமோ.

எப்படி எப்படி டி உன்னைய உண்மையா உயிராக நினைச்ச ஒரு உயிரை இந்த நிலைமைக்கு உன்னால கொண்டு வர முடிஞ்சது.

கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாம என்கூட உன்னால சந்தோஷமா வாழ முடிஞ்சது 2 வருஷமா உனக்கு உன் சுயநலம் மட்டும் முக்கியமா போச்சு யாரு எப்படி போனா என்ன.

உன்ன மறக்க நினைச்சு எனக்கு உன்னையே ஞாபகப் படுத்தற மாதிரி என் மகளை பெத்து குடுத்துட்டியேடி.

உன்னை விட்டு இவ்வளோ தூரம் பல மைல் வந்தாலும் உன் நினைவு உன்ன பத்திய எண்ணமே என் மனசு பூரா ச்சீ...என் மனசை நினைச்சா எனக்கே அருவருப்பா அசிங்கமா இருக்கு. பட்டிக்காடு.... பட்டிக்காடு" என்று எவ்ளோ கடுப்புடன் அவளை திட்டிய போதும் அந்த வார்த்தை பட்டிக்காடு என்று உரைக்கும் போது அவனை அறியாமல் அவன் முகத்தில் ஒரு புன் முறுவல் தோன்றியது.

அவன் சிந்தனை முழுவதும் அவளை முதல் முதலாக சந்தித்த அந்த நாள் ஞாபகம் நினைவில் வந்தது.

அவன் நினைத்த மாதிரி அவளை பழி வாங்க முதல் நாள் கூத்தாக தன் தாய் தந்தையுடன் அவள் பெற்றவர்களிடம் சென்று பெண் கேட்ட அந்த தினம்.

இங்கே இவன் எண்ணங்களுக்கு சொந்தமானவளும் அவளை பெண் பார்க்க வந்த தினத்தை நினைத்த மாத்திரத்தில் கண்ணீரும் புன்னகையும் அவள் முகத்தில் தோன்றியது.

"பப்பா இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவீங்க கம் ஆன் பப்பா லெட்ஸ் ஸ்டார்ட் அவர் ஜர்னி சீக்கிரம் கிளம்புங்க" என்று மகளின் பேச்சில் நினைவு கலைந்து அங்கே அவன் மகளின் முகத்தில் இருந்த சந்தோசம் இவனையும் தொற்றிக் கொள்ள கிளம்ப ஆயத்தமானான்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பே லேக் மற்றும் லேக் பியூனா விஸ்டாவில் உள்ள டிஸ்னி வேர்ல்ட் (Disney World)

"சிலிங்கி டாக் டேஷ்.பப்பா அது இவ்ளோ ஜாலியா இருந்ததில்லை. நம்ம இன்னொரு முறை வரும்போது. இன்னும் அதிகமா மோர் தென் ட்வைய்ஸ் டைம் நம்ம போனோம் பப்பா" என்றவள்.

"அப்பா அங்கு நீங்க பாத்தீங்களா எல்லாரும் அவங்கவங்க மம்மி டாடி அப்புறம் அவங்களுடைய சிப்லிங்ஸ் ஓட வந்தாங்க இப்போ நீங்க நான் மட்டும் தான இப்ப போனோம் அப்ப எப்ப நம்ம மம்மியை கூப்பிட்டு இங்க வருவோம் பப்பா."

தன் மகள் இப்படி சொல்லும் போது மீண்டும்.

அவளின் ஞாபகம் அவன் கண் முன்னால்.

"மாமா இப்போ நீங்க நான் மட்டும் தான் வந்தோம் அப்புறம் இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு நமக்கு பாப்பா வந்த பிறகு நீங்க நானு பாப்பா எல்லாம் போகணும் மாமா இதே போல ஆனா ஒன்னு அப்ப போனாலும் நீங்க என்கூட தான் வரணும்"

என்று சொன்னவளின் ஞாபகம் கண்முன்னே தோன்றியது.

"எப்படித்தான் இவளை மாதிரி எல்லாத்தையும்,குணத்துல, என் மேல வச்சிருக்க அன்புல ஒவ்வொரு செயலுலயும் எல்லாமே அவளை மாதிரி என் மக பொறந்திருக்கா இது எனக்கு வரமா. இல்ல அவளை மறக்க முடியாமல் தினம் தினம் நினைக்க கடவுள் எனக்கு கொடுத்த சாபமா தெரியல.

ஆனா என் மக எனக்கு வரம் என் வாழ்க்கையில் என் மக மட்டும் இல்லனா ஒரு உயிர்ப்பே இல்லாம இயந்திர மனிசனா தான் வாழ்ந்துருப்பேன்."

"டாடி நெக்ஸ்ட் எங்க போறோம். அந்த பிக் தண்டர் மவுண்டன் ரயில் ரோடு போலாம் டாடி" என்று அவளின் உற்சாகத்தில் இவனும் பங்கு கொண்டு "என் ஏஞ்சல் எங்க சொல்றீங்களோ நெக்ஸ்ட் அங்க போகலாம்" என்று சொன்னவன் பேச்சில் தன் தந்தையை அணைத்தவள் "ஐ லவ் யூ பப்பா" என்றாள்.

எல்லாம் விளையாட்டும் முடிந்த பிறகு அங்கேயே அவன் புக் செய்து இருந்த ஹோட்டலுக்குச் சென்றவன் தன் மகளை ரெப்பிரேஷ் செய்து இரவு உணவு ஆர்டர் செய்து வந்ததும் ஊட்டி விட்டு அவளுக்கு கார்ட்டூன் ஆன் பண்ணிவிட்டு அவன் குளிக்கச் சென்றான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் அவனின் மகள் "பப்பா" என்று அழைத்தவள் "எனக்கு கார்ட்டூன் வேண்டாம் நீங்க அங்க இருந்து ஸ்டோரி சொல்லுங்க... சிண்ட்ரெல்லா ஸ்டோரி" என்று கேட்டவளின் செயலில் "பொம்மை பட்டிக்காடு உன்கிட்ட எனக்கு பொண்ணு பெத்து கொடு டி னு சொன்னா அது எப்படி டி உன்ன மாதிரி ஜெராக்ஸ் காப்பிய ஆஹ் பெத்து கொடுத்து இருக்க" என்றவன் முகத்தில் புன்முறுவல். பின்பு வாய் விட்டு சிரிக்க அவன் சிரிப்பில் "பப்பா" என்று பயந்தவள் குரலில் இதுலயும் அவளை போலவே கடவுளே என்றவன்.

"ஏஞ்சல் 5 மினிட்ஸ் பப்பா வந்து ஸ்டோரி சொல்றேன்" என்றவன்.

"என்னோட மொபைல்ல அந்த சாங் கேட்டுட்டு இருங்க வரேன்" என்றவன் சீக்கிரம் அவனை ரெப்ரேஷ் செய்து வரும் போது அவன் மகள் பாட்டு கேட்டுக் கொண்டே உறங்கி இருந்தாள்.

அவள் காதில் இருந்து இயர் பட்ஸ் எடுத்தவன் தன் காதில் பொறுத்திக் கொண்ட போது

தாய் அன்பிற்கு

ஈடேதம்மா ஆகாயம்

கூட அது போதாது

தாய் போல் யார்

வந்தாலுமே உன் தாயை

போலே அது ஆகாது

என் மூச்சில்

வாழும் புல்லாங்குழல்

உன் பேச்சு நாளும்

செந்தேன் குழல் முத்தே

என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

அந்த பாடல் பாடி நின்றதும் ஒருமுறை அவன் உயிர் வரை அந்த குரலில் உறைந்து நின்றவன் தன் மகள் பக்கத்தில் படுத்தவன் கண்ணில் அவன் அறியாமல் கண்ணீர் அது அவனுக்காகவா இல்லை அவனின் உயிரானவளுக்காகவா என்று உணராமல் போனான்.
.......

அப்பொழுது தன் மொபைலில் அந்த பாடலைக் கேட்டுக் கொண்டு இருந்தவன் அப்படியே சிறிது நேரத்தில் கண்ணுறங்கினான்.

அவன் ஆழ்ந்த நித்திரையில் அவளுடன் மிக நெருக்கத்தில் அவளின் இதழை கொய்ய சென்ற போது...

அப்பொழுது அவனுடைய தொலைப்பேசி அழைப்பின் சத்தத்தில் தன் தூக்கம் தொலைத்தவன் தன் மகளின் தூக்கம் கலையாத வண்ணம் அவன் எழுந்து போர்ட்டிக்கோ சென்று தொலைப்பேசியை உயிர்ப்பித்து பேச தொடங்கினான் அழைப்பு தன் தந்தையிடம் இருந்து.

"சொல்லுங்கள் அப்பா, எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க தாத்தா, பாட்டி எல்லாரும் நல்லா இருக்கீங்களா?"

"வர்மா நாங்க இருக்கிறது இருக்கட்டும்.
நீ எப்படி இருக்க எங்க செல்ல பேத்தி தியா குட்டி சுகமா? அப்புறம் எப்பதான் தியாவை இந்தியா கூட்டிட்டு வர போற?"

"சீக்கிரமே அப்பா. நெக்ஸ்ட் மந்த் விசா அப்ளை பண்ணி இருக்கேன் நெக்ஸ்ட் மந்த் நானும் தியாவும் அங்க இருப்போம் ப்பா"

"சரி வர்மா அது வந்து ஏம்பா இன்னும் உனக்கு கோபம் போகலையா இன்னும் எத்தனை வருஷம் தான் பாவம் அந்த மகளையும் தண்டிப்ப" என்றவர் குரலில் வருத்தமும் ஆதங்கமும் எவ்வளவு முயன்றும் குரலில் வெளிப்பட்டது.

"நீயும் அவளை தேட மாட்டேன்னு சொல்லிட்ட எங்களையும் தேடக்கூடாதுன்னு சொல்லிட்ட. என்ன தான் இருந்தாலும் அவ நம்ம வீட்டுப் பொண்ணு தானே தனியா எங்க எப்படி இருக்கானு கூட தெரியல வர்மா.

அவளை தேடி போனோம் தான். அதுக்கு நீ சொன்னது எங்க கூட ஒரு உறவு இல்லாம போயிடும்னு சொன்ன.

நாங்க தேடி போனதும் உன்னோட கோவம் பிடிவாதமாகி எங்கள வேண்டாம்னு எங்கள விட்டுட்டு பிரிஞ்சு இப்போ அஞ்சு வருஷமாச்சு.

நீ யோசனை பண்ண கூடாதா. உன் வாழ்க்கைகாக இல்லனா கூட அந்த சின்ன குழந்தை வளர வளர அம்மாவோட அரவணைப்பு தேவைப்படும் அன்பு தேவைப்படும் எல்லா விஷயமும் அப்பா கிட்ட சொல்லிட முடியாதுப்பா அஞ்சு வருஷம் நீ வளர்த்துட்ட ஆனா இதுக்கு மேல அந்த குழந்தை அவ அம்மா கூடவும் வாழணும்னு இல்ல"

"சரி ப்பா தியா எழுந்துக்கிறா நான் அப்புறமா பேசறேன் அம்மாகிட்ட நாளைக்கு பேசுறேன் சொல்லுங்க. அம்மாவை ஒழுங்கா மாத்திரை போட சொல்லுங்க. நீங்க உடம்ப பாத்துக்கோங்க ப்பா பாட்டியையும் தாத்தாவையும் விசாரிச்சேன்னு சொல்லுங்க பாய் பா டேக் கேர்."

"தேவை இல்லாம நான் குடும்பத்துக்குள்ள அவளை சேர்த்துட்டேனோ. அவளை நான் பழி வாங்கணும்னு தனியாவே வச்சு பழிவாங்கி இருக்கணுமோ."

"அவ என்னை நம்பணும் முழுசா நம்பணும் நான் தான் உயிர் நேசம் காதல் எல்லாமே நான் தானே நம்பணும் அவ என் மேல உயிரா இருக்குற அந்த நேரம் அவளுக்கு.

நான் நேசிக்கல அப்படின்னு அந்த தருணம் வரும்போது அப்பொழுது அவளுக்கும் அந்த வலி புரியும் என்று நினைத்து தானே இவ்ளோ பண்ணேன்.

ஆனா என்ன தான் பண்ணாளோ நல்லா சொக்குப்பொடி போட்டு எல்லாரையும் நல்லா மயக்கி வச்சிருக்கா எங்க அப்பா எங்க அம்மா எங்க தாத்தா பாட்டி கேட்கவே வேணாம்" என்றவன் எண்ணத்தில் 'ஏன் நீ மயங்கலையா?' என்று கேட்ட மனசாட்சியை "போதும் நீ உன் வேலையை பாரு" என்று அடக்கியவன்.

தன் தாத்தா பாட்டி அவளிடம் காட்டும் அன்பு நினைவில் தோன்றியது "ஏற்கனவே என்ன விட அவ கிட்ட எப்பவும் பேத்தி பேத்தினு தான் ரொம்ப கொஞ்சிட்டு இருப்பாங்க. நீ ஏன் டி ஒரு நல்ல சூழ்நிலைல எனக்கு அறிமுகமாகாமல் போன" என்று தனக்குள் கேட்டுக் கொண்டு இருந்தவன். "அவங்களுக்காக அவ கூட வாழ்ந்து இருந்து இருக்கலாமோ" அவன் எண்ணம் போன போக்கை எண்ணி "ச்சீ என்ன எப்படி அவ செஞ்ச மா பாவத்தை மறந்தேன் நீ எனக்கு வேண்டாம் டி" என்றவன் தூக்கம் இன்றும் தொலை தூரம் சென்றது.

தன் முன்னாள் மனைவி அனுஷனாவை நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளோ இதோ அழகான ஒரு பரிசலில் அவளின் மகனுடன் சேர்ந்து சந்தோஷத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் சந்தோசத்துக்கு காரணமானவன் அவர்களை ரசித்து பார்த்துக் கொண்டே வேகமாக பரிசலை செலுத்தினான் அவன் வீரபாண்டியன்.


சில்லென்று பூமி

இருந்தும் இந்த தருணத்தில்

குளிர்காலம் கோடை

ஆனதேனோ


வா அன்பே நீயும்

வந்தால் செந்தணல் கூட

பனிக்கட்டி போல மாறுமே

யே யே யே யே

நியூயார்க் நகரம்

உறங்கும் நேரம் தனிமை

அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும்

கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி

சுவர்களுக்குள்ளே நானும்

மெழுகுவர்த்தியும் தனிமை

தனிமையோ தனிமை

தனிமையோ கொடுமை

கொடுமையோ



தொடரும்...


Thread 'அகிம்சையில் கொல்வது ஏன் பெண்ணே!- கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/11839/
 

NNK-03

Moderator
அகிம்சை பெண்ணே 2:


மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து..

தர்மபுரியில் இருந்து சுமார் 47 KM தொலைவிலும் பென்னாகரத்தில் இருந்து 16 KM தொலைவிலும் அமைந்து உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அதை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள்.

அந்த வன பகுதியில் வனப் பாதுகாவலராக பணிபுரிந்து வருபவள் அனுஷனா. இங்கு சுற்றிலும் மரங்களும் மலை சார்ந்த மலைகளும் ஆக இருக்கும் இடத்தில்.

இவள் இங்கு வந்து ஐந்தாண்டு மேலாக இங்கே இருக்கும் கிராமத்தில் தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள்.

இன்று தன் மகனுடைய விருப்பத்திற்காக வீராவுடன் பரிசல் போக தன் மகனுடன் சந்தோஷமாக புறப்பட்டு விட்டாள். இரு வாரத்திற்கு ஒரு முறையாவது தன் மகனின் விருப்பப்படி.

அவன் விரும்பும் அருவி சுற்றிப் பார்க்கவும் அங்கே இருக்கும் நிலைமை அறியவும் அவள் இரு வாரத்துக்கு ஒரு முறை தன் மகனுடன் பரிசல் செல்வது வழக்கமாகிக் கொண்டிருந்தாள். இதோ தன் மகனுடன் பரிசல் பயணம்.

"ஆத்விக் பார்த்து டா" என்ற வீராவின் பதற்றமான குரலில் "ஹாய் வீரா ஐம் பிரேவ் பாய் சோ யூ டோன்ட் ஒர்ரி" என்றவன் பேச்சில் சிரிப்புடன் "சரிங்க ஆஃபீஸர்" என்றான்.

அதற்கு வீரா "நான் ஆஃபீஸர் இல்லை உனக்கு பாஸ்" என்றவன் பேச்சில் வீரா ரசித்து சிரிக்க.

அனுஷனா ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் தன் மகனை பார்த்தவள் அங்கே ஆரியன் முகம் தெரிவது கண்டு இன்னும் அதிர்ந்து போனாள்.

"மம்மி சீக்கிரம் வாங்க எவ்வளவு நேரம் தான் உங்களுக்காக வீரா குட்டி போட்ல வெயிட் பண்ணுவாங்க வாங்க" என்று மகன் அழைப்பில்
தன் சிந்தனையில் இருந்து சற்று விலகி வந்தவள் "இதோ வந்துட்டேன் ஆத்வி செல்லம்" என்று பரிசலில் ஏறினாள்.

ஏறிய சிறிது நேரத்தில் ஆத்விக் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான். அவன் கவனம் தங்களிடம் இல்லை என்று உணர்ந்துக் கொண்ட அனுஷனா வீராவுடன் பேச தொடங்கினாள்.

"இந்த முறை டெண்டர் யார் கைக்கு போகுது.
ஆமா நம்ம கிராமத்துல ஏற்கனவே பரிசல் ஓட்டறவங்க அவங்க நேம் ஏற்கனவே இருக்கா இல்ல அதுல ஏதாவது மாற்றம் இருக்கா" என்று வீராவுடன் பேசிக்கொண்டு வந்தாள். அங்கே அடுத்ததாக வர இருக்கும் அந்த டெண்டர் குறித்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

"முன்ன மாதிரி வந்து நம்ம கிராமத்திற்காக பார்க்கிறவங்க இல்லாம இதுலயும் பணம் பாக்குறவங்க அதிகமா ஆயிட்டாங்க அனுமா.
இந்த கிராம மக்களுடைய அறியாமை இவங்களுக்கு சாதகமாக சில சுயநலம் மனிதர்கள் மாத்திக்கிறாங்க" என்றான் கவலை கொண்டவனாக.

"ஆமா வீரா இந்த முறை எப்படியும் நம்ம கிராமத்திலிருந்து அஞ்சு ஆறு பேராவது பரிசல் ஓட்டக்கூடாதுன்னு சொல்லிடுறாங்க இது வந்து தொடக்கமா வச்சு இன்னும் வருஷா வருஷம் இதே போல ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமா சில பேர விட்டுட்டு அவர்களுக்கு சாதகமான சில பேரை எடுக்கணும்னு நினைக்கறாங்க. இதுலயும் வியாபாரம் பண்ண பார்க்கிறாங்க இதுல எங்களோட ஆபீஸ்ல சில பேரு அவங்களுக்கு சாதகமா செயல்படுறாங்க அதை நினைச்சா வேதனையா இருக்கு."

"ஏன் அனுமா உங்களால ஒன்னும் பண்ண முடியாதா?"

"நான் ஆல்ரெடி மேல் இடத்துக்கு பேசி இருக்கேன் என்னன்னு தெரியல பாக்கலாம்"

"அது கூட பரவாயில்ல அனுமா இத்தனை வருஷமா வாழ்ந்த கிராமத்தை விட்டு வெளியே போங்கன்னு சொன்னா நாங்க எங்க போறது எங்களுக்கு தெரிஞ்சது இந்த பரிசலும் இந்த சுத்திருக்க நிலங்கள்ல விதைச்சு அதுல அறுவடை பண்றது தானே எங்க வேலை. ஆனா ஏன் அரசாங்கம் எங்களை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க இதுக்காக ஒவ்வொரு முறையும் விருமாண்டி மாதிரி ஒரு காவலன் தான் இந்த 22 கிராமங்கள் எல்லாம் காப்பதற்கு தன்னுடைய வாழ்க்கையை தியாகம் பண்ணனும் போலயே."

"இதை நினைச்சு கவலைப்படாத வீரா
நல்லவங்களுக்கு எப்பவும் நல்லது நடக்கும் நம்ம எடுத்து வைக்கிற ஒவ்வொரு முயற்சியும் நம்பிக்கையோட வைக்கிறப்ப நம்ம எண்ணம் போல அது நடக்கும் அதை நினைச்சு நீ கவலைப்படாதே."

"ஆமா எத நினைச்சு கவலைப்பட கூடாது மம்மி."

வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்திருந்த தன் மகன் திடீரென்று கேட்ட கேள்வியில் அவள் மீண்டும் அதிர்ந்து போனாள்.

'இவன் அப்பா என்ன வேலை எது செஞ்சாலும் அங்க சுத்தி என்ன நடக்குதுன்னு அப்சர்வ் பண்ணுவாரு அதே மாதிரி இருக்கான்.'

"அது ஒன்னும் இல்ல செல்லக்குட்டி நம்ம வேற ஊருக்கு போகணும் போல நம்மள வேற ஊருக்கு போக சொல்றாங்க பாஸ் அத தான் அனுமா கவலைப்படாதன்னு சொல்றாங்க வேற ஒன்னும் இல்ல" என்ற வீராவின் பேச்சில்.

"வேற வீட்டுக்கா ஏன் ஏன் நம்ம அப்ப இங்க இருக்க உங்க வீடு என்ன பண்ணுவீங்க ரெண்ட்க்கு விட்ருவீங்களா அப்போ இங்க இருக்க கவ், கோட் இதெல்லாம் என்ன ஆகும். உங்க கூடவே கூட்டிட்டு போயிடுவீங்களா?" என்றவன் பேச்சு அவன் யோசனையை நினைத்து இருவரும் சிரிக்க தொடங்கினார்கள்.

பரிசல் சென்று கரையில் இறங்கியவுடன் அங்கே அனுஷனாவுக்காக காத்துக் கொண்டு இருந்த வண்டியில் புறப்படும் போது "வீரா உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா. வேற ஏதாவது உங்களுக்கு தேவைப்படுதா நீங்களும் கூட வரீங்களா?"

"நீங்க போங்க போயிட்டு நீங்க வரும்போது எனக்கு கால் பண்ணுங்க அதுவரை இங்கே நான் சவாரி ஏதாவது பார்த்துட்டு இருக்கேன் அனுமா."

"ஓகே வீரா அப்போ நாங்க கிளம்பறோம்" என்று சொல்லும் போது ஆத்விக் "பை வீரா" என்றான்.

வீராவும் "பை பாஸ்" என்றவன் "அனுமா இங்க வரும்போது கால் பண்ணுங்க நான் வந்துடுவேன்.

இது அந்த கிராமத்தை விட்டு டவுன் வந்து தனக்கு தேவையானதும் ஆத்விக் கேட்டதும் லிஸ்ட் போட்டவள் அங்கே ஒரு மால் சென்றாள்.அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அனுஷனாயுடைய தங்கை
வினோதனா அங்கே வந்தாள்.

"வாடா வினோ இப்பதான் வந்தயா இல்லை வெயிட் பண்ணிட்டு இருக்கியா?" என்று தங்கையை காக்க வைத்து விட்டோம் என்று நினைத்து கவலையில் கேட்டாள்.

அதற்கு "இப்பதான் அக்கா வந்தேன் ரொம்ப நேரமாகல இங்க வந்து ஒரு காபி ஷாப்பில் காபியை குடிச்சிட்டு உங்களுக்காக வெயிட் பண்ணேன் 10மினிட்ஸ் குள்ள நீங்க வந்தாச்சு.
ஓகே அக்கா போலாமா?"

அங்கே சென்று தனக்கு தேவையானது அனைத்தும் வாங்கிக் கொண்டு தன் தங்கை கேட்டது வாங்கிக் கொண்டவள்.

"வேற எங்கடா போலாம்?" என்று கேட்க "அக்கா மூவி பார்க்கலாம் ப்ளீஸ் ப்ளீஸ் வாங்க இந்த முறையாவது" அதற்கு அனு "ஆத்விக்கும் நீயும் போங்கடா நான் அதுவரையும் கொஞ்சம் வாங்க வேண்டியது இருக்கு வாங்கிட்டு வரேன்."

"நீங்க என்கூட வரல"

"இன்னொரு நாள் போலாம் ஆத்விக் கூட போய்ட்டு வா வினோ." என்று அனு அங்கே இருந்து சென்றுவிட்டாள்.

"அய்யோ நான் மூவி அதுவும் இந்த சித்தி கூடவா நான் போகவே மாட்டேன்."

"ஏய் ஏன்டா அப்படி சொல்ற? நான் உனக்கு சாக்லேட் வாங்கி தரேன் வா டா."

"ஐயோ நீங்க சாக்லேட் வாங்கி தருவீங்க வாங்கி தந்த பிறகு என்ன கேட்பீங்க வீரா என்ன பண்ணான் வீரா எங்க போனான் வீரா யார் கூட பேசனான். இதெல்லாம் கேப்பீங்க எப்ப பாத்தாலும் வீரா...வீரா... வீரா சொல்லுவீங்க."

"நீங்க சாக்கி வாங்கி வந்துட்டு வீரா பத்தி கேக்குறது நீங்க தர சாக்லேட் விட வீரா நீங்க எது கேட்டாலும் வீரா சொல்ல கூடாதுனு சொல்லியாச்சு. எனக்கு அதிகமா சாக்லேட் இன்னும் வாங்கி தரேன் என்ன பத்தி யார் எது கேட்டாலும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு வீரா சொல்லி இருக்கான்"

"டேய் நான் உனக்கு சித்தி டா என்னை விட்டு உனக்கு வீரா ரொம்ப ரொம்ப முக்கியமா..."

ஆத்விக் "அதெல்லாம் எனக்கு தெரியாது சித்தி வீரா சொன்னா சொன்னதுதான் நான் சொல்ல மாட்டேன்."

"சரிடா நான் யாரை பற்றியும் கேட்கல வா போய் படத்தை பார்த்துட்டு வரலாம்."

"ஆமா ஆத்விக் உனக்கு வீரானா ரொம்ப பிடிக்குமா?"

"ஆமா சித்தி."

"லாஸ்ட் வீக் நீ எங்கேயோ போனியாமே.
உங்க மம்மி சொன்னாங்க."

"ஆமா சித்தி நானும் வீராவும்" என்று சொன்னவன்
வினோ தான் எதிர்பார்த்தது கிடைக்க போவது நினைத்து இருந்தவள்

"நீயும் வீராவும்."

ஆத்விக் வீரா சொன்னது ஞாபகம் வர வாயை பொத்திக்கொண்டான்.

"சித்தி நீ படம் பார்க்க போலாம்னு தான் சொன்ன இப்ப என்ன திடீர்னு வீரா பத்தி கேக்குற வா நாம போய் படம் பார்த்து விட்டு சீக்கிரம் போலாம் வா வா."

'பையன் இவ்வளவு உஷாரா இருக்க கூடாது அப்படியே மாமா மாதிரி உஷாரா இருக்கான்.
எங்க அக்கா அவளை மாதிரி பெக்காம மாமா மாதிரி பெத்தது இல்லாம அறிவும் அவர் மாதிரியே' என்று நொந்தவள் படம் பார்க்க போனாள்.

படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் உடனே தன் அக்காவிற்கு அழைக்கவும் "வினோ நீ அங்கே வெயிட் பண்ணுடா நானு எங்க பக்கத்துல ஒரு கோயிலுக்கு வந்து இருக்கேன் இங்க தெரிஞ்சவங்களை பாக்கணும் பார்த்துட்டு வந்துடுறேன் டா."

"சரிக்கா அப்ப நாங்களும் அங்கே வந்துவிடவா?"

"இல்ல வேண்டாம் நானே அங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் வினோ."

"இல்ல அக்கா படம் பார்த்தாச்சு ரொம்ப போர் அடிக்குது அதெல்லாம ஆத்விக் உங்களை வேணும்னு கேக்குறான்."

"அப்போ ஒன்னு செய் அங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்குல்ல அங்க வந்துடுங்க வினோ."

"சரி அக்கா நாங்க வந்துடுறோம் அங்கே எந்த இடத்தில் இருக்கீங்க."

"உள்ள தான்டா இருக்கேன் நீ வந்துட்டு எனக்கு கால் பண்ணுடா"

"சரி அக்கா."

வினோ ஆத்விக்கை தன் அக்கா சொன்ன கோவிலுக்கு போகும் வழியில் கூட்டிக் கொண்டு போகும் போது.

அவளிடத்தில் எதிர்புறம் இருந்த கடையை பார்த்த ஆத்விக் "சித்தி அது வேணும்" என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

"செல்லக்குட்டி நம்ம போயிட்டு ரிட்டன் வரும்போது மம்மி கூட வருவாங்க அப்ப வாங்கிக்கலாம் இப்ப மம்மி நமக்காக வெயிட் பண்றாங்க ப்ளீஸ் வா போலாம். நம்ம வரும்போது அந்த சைடு தான் வரும் அப்போ வாங்கி தரேன் தங்கம்."

"நோ சித்தி. எனக்கு அந்த டாய்ஸ் வேணும்.
சற்று நேரம் யோசித்தவன் அவள் கையை விட்டுவிட்டு அந்த ரோடை கிராஸ் பண்ணி ஓடிக்கொண்டிருந்தான் திடீர் என்று ஆத்விக் இப்படி செய்வான் என்று எதிர் பார்க்காதவள் "ஆத்வி இரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வேகமாக வந்த ஒரு இரு சக்கர வாகனம் அவனை மோதியது மோதிய வேகத்தில் கீழே விழுந்தவனுக்கு நெற்றியில் ரத்தம் வர தொடங்கியது. அங்கே குழந்தைக்கு என்ன ஆச்சு என்று கூட்டம் கூடி இருக்க கூட்டத்தின் நடுவில் விலக்கிச் சென்று ஓடிய வினோ அங்கே வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஆத்விக் தூக்கி மடியில் ஏந்தியவள் தன்
போனை எடுத்து தன் அக்காவுக்கு டயல் செய்தாள் ஆனால் அது பிசியாக வந்ததால் உடனே.
வீராக்கு கால் பண்ணினாள்.

ஆத்விக்கை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவமனை போய் கொண்டு இருப்பதை அழுதுக் கொண்டே சொன்னவள் அங்கே அவனை வர சொன்னாள்.

வீராக்கு ஒன்றும் புரியாமல் சில நொடிகள் நின்றவன் உடனே மருத்துவமனை சென்றான்.

தன் அக்காவுக்கு மீண்டும் போன் செய்ய ஆரம்பித்தாள். அங்கே கால் அட்டென்ட் செய்த அனு "என்னடா வந்துட்டீங்களா?" என்று கேக்கும் போதே தங்கை அழுகிற சத்தம் கேட்டு

"என்ன என்ன ஆச்சுடா?"

"வினோ நல்லா இருக்க தானே?"

"சரி ஆத்விக் கிட்ட போன் குடு பேசணும்" என்றதும் அவள் தங்கை பதட்டமாக

"அது வந்து அக்கா நம்ம தங்கம்க்கு ஆக்சிடேன்ட் ஆயிடுச்சி" என்று சொன்னதை கேட்டவள் என்ன செய்வது என்று அறியாது அதிர்ச்சியில் அங்கே சரிந்து மயங்கி விழுந்தாள் அனுஷனா.


உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே
சிறகாய் விரிந்தேன் உன்னால்
தரையில் பறந்தேன் உன்னால்
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே
ஒற்றை cryon ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம்
உருளைச் சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்
நொறுக்கிடுவோம் ...
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா


தொடரும்...

 
Last edited:
Status
Not open for further replies.
Top