மதுரை ராஜூ
Moderator
நிலாச்செய்தி …
நமது வான்வெளியில் உள்ள யுரேனஸ் கிரகத்திற்கு மட்டும் 27 நிலாக்கள் உள்ளது என்றால் நம்புவீர்களா.
இதுவரை பச்சையன்……
நிலாமகள் அவள் மனது கவர்ந்த பச்சையனை குற்றாலத்தில் சந்திக்கிறாள். தன் செல்போனை காணவில்லை என நிலாமகள் தேட அனைவரும் பதட்டமடைகின்றனர். இனி….
பச்சையன் – 5
நிலா மகள் கலக்கமடைந்தாள். சுற்றி நின்ற அனைவரும் பதட்டமடைய , விமலா நிதானித்தாள்.
“ கொஞ்சம் அமைதியாயிருங்க. ஆளாளுக்கு பதட்டப்பட்டா ஒண்ணும் சரியா வராது. ஏற்கனவே நிலா காதல் மயக்கத்துலேயும், செல்போன் காணாம போன பதட்டத்திலேயும் இருக்கா. நானும் வசந்தியும் போய் தேடிட்டு வர்றோம். மத்தவங்க நிலாவை பார்த்துக்குங்க. போன உடனே வந்துருவோம்”.
நிலா அங்கும் இங்கும் கண்களை அலையவிட்டாள். அவள் எதிர்பார்த்த அவன் எங்கும் தென்படவில்லை. மீண்டும் தலையை குணிந்து கொண்டாள்.
விமலா சொன்னதற்கு வசந்தியிடம் எந்த மாற்றமும் இல்லை. மற்றவர்களும் கவனித்ததாக தெரியவில்லை.
நிலா எதேச்சையாக நிமிர்ந்தாள். முகம் பிரகாசமடைந்தது. தூய தங்கம் சூரிய ஒளியில்பட்டு பளபளப்பது போல பகலில் நிலா மின்ன ஆரம்பித்தாள்.
“ யாரும் எங்கேயும் போக வேண்டாம். ஏன்னா.. “ வெட்கத்தில் அவளுக்கு வார்த்தைகள் தடுமாறியது. மெதுவாக தனது அழகான ஆட்காட்டி விரலை நீட்டினாள். எல்லா தலைகளும் அவள் கைவிரல் காட்டிய திசை நோக்கி திரும்பினர்.
சற்று தூரத்தில் அவன் வந்து கொண்டு இருந்தான். பார்த்த எல்லாரும் கண்களை சிமிட்டாமல் பார்க்க ஆரம்பித்தனர். நிலாமகள் மெதுவாக நகர்ந்து விமலா தோளுக்குப்பின் பதுங்க ஆரம்பித்தாள்.
“ ஏம்மா நிலா தனியா இருக்கறப்ப வர்ற தைரியம் இப்ப எங்கம்மா போச்சு ? ஓ ! இதுக்கு பேருதான் வெக்கமா ? “ மாலா வம்பிழுத்தாள்.
“ சும்மா இருடி அவளே இப்பதான் காதல் போருல சண்டைபோட பயந்துகிட்டு பதுங்குறா. அவளைப் போய்…. “ வசந்தி சீண்டினாள்.
அவன் பக்கத்தில் வர அவனது கைகளில் செல்போன் வைத்திருந்ததை அப்பொழுதான் எல்லாரும் கவனித்தார்கள். அவன் போனை நீட்ட நிலா மகள் தயங்கினாள். விமலா கைகளை நீட்டி வாங்கிகொண்டாள்.
நிலா மகளின் விரல்கள் மறுபடி கோலம் போட ஆரம்பித்தன. எல்லாரையும் தன்வசப்படுத்தும் நிலாமகள் தன்னை மறுபடி இழந்தாள்.
” ஹலோ மிஸ்டர் , உங்க மனதுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க ? எங்க தோழி எல்லாரையும் தடுமாற வைச்சிருக்கா, ஆனா நீங்க அவளையே மயக்கிட்டீங்கள்ள”.
மாதவி அவனை வம்பிழுத்தாள். நிலா அவளை மெதுவாக கிள்ளினாள்.
“ பார்த்தீங்களா, உங்களை சொன்னவுடனே என் பிரண்டுக்கு கோபம் வந்துருச்சு. என்னை எப்படி கிள்றா பாருங்க. கண்ணால பேசுன அவ இப்ப கையால பேச ஆரம்பிச்சிட்டா . இது எங்க போய் முடிய போகுதோ ?”
மாதவி புலம்ப, அவன் மெதுவாக சிரித்தான்.
“ நான் அவங்க உருண்டு பள்ளத்துல விழுந்துடாம இருக்க தடுத்தேன். அவ்வளவுதான். வேற ஒண்ணும் செய்யலை”.
அவன் குரலைக் கேட்டு ஒருநிமிடம் அனைவரும் பேச்சு மூச்சில்லாமல் திகைத்தனர்.
வசீகரக் குரல், வசியக்குரல், தேன் குரல் , காந்தக்குரல் என எத்தனையோ பேரில் பல குரல்களைக் கேட்டிருந்த அவர்களுக்கு அவன் குரல் அவர்கள் மனதை அசைத்துப்பார்த்தது. அவனின் கம்பீரமும், அழகும், நிமிர்ந்த நடையும் இவர்களை சில வினாடிகள் ஊமைகளாக மாற்றிவிட்டது.
வசந்தி சுதாரித்துக்கொண்டாள்.
“ அதாவது மரணப்பள்ளத்தில விழ இருந்தவளை காப்பாத்தி , காதல் பள்ளத்தாக்குல தள்ளிவிட்டீங்க , அப்படிதானே மிஸ்டர் “
அவன் எல்லாரையும் ஒருமுறை பார்த்தான். அந்த கண்களின் வீரியம் யாரையும் நேருக்கு நேர் பார்க்க வைக்க முடியவில்லை. அவன் கண்களும் ஏதோ ஒரு பெரும் சக்தியாய் செயல்பட்டு இவர்களின் அடிமனதுவரை ஊடுருவியதை நன்கு உணர முடிந்தது.
விமலா குறுக்கிட்டாள்.
“ ஐயா , நீங்க உண்மையிலேயே என்ன பண்றீங்க ? நீங்க யாரு ? உங்க பேரு என்ன ?”
“ பயங்கர ஆர்வமா இருக்கீங்க. நான் ஒரு மென்பொருள் நிறுவனத்துல வேலை பார்க்கறேன். அடிக்கடி வார கடைசியில குற்றாலத்துக்கு வந்து இயற்கை அழகை ரசிக்கறது வழக்கம். அதிக நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று தியா னிக்கறது வழக்கம். அன்னைக்கும் அப்படிதான் நான் ரசிக்கறப்ப உங்க பிரண்டு அந்த பக்கமா வந்தாங்க, விழ பார்த்தாங்க, காப்பத்தினேன். வேற ஒண்ணும் செய்யலை தாய்மார்களா !”
அவன் அப்பாவியாக முகத்தை வச்சிகிட்டு சொன்னவுடன் அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அவன் தொடர்ந்தான்.
“ என்னோட உண்மையான பெயரு எனக்கே மறந்துடுச்சு. அதான் உங்க பிரண்டு எனக்கு பச்சையன்னு அருமையான பெயர் வைச்சிருக்காங்க, அதுவே இருக்கட்டும். ஆமா என்ன உங்க பிரண்டு எதுவும் பேச மாட்டேங்கறாங்க “
“ ம்ம்ம் ! அவ இன்னைக்கு மவுன விரதம். யாருகிட்டேயும் பேச மாட்டாங்களாம் “ மாதவி நக்கலடித்தாள்.
“ என்னது , உங்க பிரண்டு மவுன விரதமா ? மேலே அப்படி என்கிட்ட பேசினாங்க. காதல் வசனமெல்லாம் வந்துச்சே . பொதுவா ஆண்கள்தான் பெண்கள் பின்னாடி அலைவாங்க. ஆனா உங்க பிரண்டு என்னை கண்டவுடனே காதல்வயப்பட்டாங்க. நான் ஒண்ணும் செய்யலை. பாவம் நான் அப்பாவி”.
நிலா இப்போது மெதுவாக வாயை திறந்தாள்.
“ நான் ஒண்ணும் அலையலை. அவருதான்….”
“ என்ன அவருதான் ? எல்லாம் பேசிட்டு வந்து இங்க வந்து நல்ல பிள்ளை மாதிரி விமலா பின்னாடி ஒளிஞ்சிகிட்டு நிக்கறியா ? “
எல்லாரும் விமலாவை மேலும் கீழும் பொய் கோபத்துடன் பார்க்க அவள் நெளிந்தாள். அவளின் அழகான கண்கள் படபடத்தன. அவள் கண்களின் படபடப்பை கண்டு அருகில் பறந்துகொண்டு இருந்த வண்ணத்துப்பூச்சி தனது இறக்கைகளின் அசைவை நிறுத்தி தடுமாறியது.
“ ஏய் , இங்க பாருங்கடி , வெக்கத்துல கால் விரல்ல கோலம் போட்டு அந்த இடத்தையே பள்ளமாக்கிட்டா பாரு. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அங்க ஒரு ஊத்து கிளம்பியிருக்கும் “
“ சும்மா இருங்கடி, கொஞ்சம் விட்டா ஆளாளளுக்கு கிண்டல் பண்ண ஆரம்பிச்சிருவீங்களே . ஊர்ல யாரும் செய்யாததையா நான் பண்ணிட்டேன்”.
“ இங்க பாருங்கடி, நிலாவுக்கு வெட்கம் மட்டுமல்ல கோபம் கூட வருதடி “
இப்போது அவன் குறுக்கிட்டான்.
“ பாவம் உங்க பிரண்டு , அங்களை ஒண்ணும் சொல்லாதீங்க “.
“ பார்றா இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க. இனிமே நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்”.
வசந்தி சொன்னவுடன் எல்லாரும் பயந்தது போல போலியாக பின்வாங்கினார்கள். இப்போது நிலா மகள் பச்சையனுக்கு இணையாக ஆனால் சற்று தள்ளி நின்றிருந்தாள். பார்த்த அனைவருக்கும் மெய்மறந்தார்கள்.
ஆம், சில கதைகள் கேள்விபட்டிருக்கின்றோம். அதில் ஒன்று இரவு நேரத்தில் எல்லாரும் உறங்கிய பிறகு தேவர்களும் , தேவகன்னியரும் பூமியல் உலவுவார்களாம். நிலா மகளும் , பச்சையனும் அருகருகே நின்றிருந்தது தேவலோகத்து மாந்தர்கள் போல இருந்தது கண்டு தோழிகள் திகைத்தார்கள். அந்த இடமே ஏதோ மின்னுவது போல சூரிய ஒளியில் தகதகத்தது.
நிலா மகள் திரும்பி விமலாவிடம் கையை நீட்ட, அவள் ஒரு சிறு பையை எடுத்துக்கொடுத்தாள்..அது நிலாமகளின் சிறு பீரோ. ஆம் ,அவளது தோழிகள் எல்லாரும் அவளது பையை அப்படிதான் சொல்லுவார்கள். அதில் இல்லாத பொருள் எதுவும் இல்லை என்று எல்லாரும் சொல்லி நிலாமகளை வம்பிழுப்பது வழக்கம்.
நிலா மகள் அந்த பையிருந்து அவளது நிறுவன விசிட்டிங் கார்டை எடுத்து பச்சையனிடம் கொடுத்தாள். அவன் மெதுவாக கைகளை நீட்டி வாங்கிக்கொண்டான்.
“ இது என்னுடைய தனிப்பட்ட அலைபேசி எண் இருக்கு. எப்ப வேண்டுமானாலும் கூப்பிடலாம். அப்புறம்…”
அவள் அதற்கு மேல் தொடர முடியாமல் வெட்கத்தில் தலைகுணிய விமலா வம்பிழுத்தாள்.
“ ஏதாவது பேசுங்க மேடம். இப்படி பாதியிலேயே விட்டா எப்படி ? எங்களுக்கு பதட்டமாகாதா ? பாரு இவரு நீ பேசறதையும் உன்னோட அழகையும் பார்த்து வாய் பேசமுடியாம நிக்கறாரு. இனிமே நீ எங்ககிட்ட பேச போற ? உங்களுக்கே பேசுறதுக்கு நேரம் பத்தாது. நாங்க ஒதுங்கிக்கறோம் தாயி. ஹலோ மிஸ்டர், ஏதாவது பேசுங்க. இப்படியே எங்களோட பிரண்டை பார்த்துகிட்டே நின்னா எப்படி ? உங்க விசிட்டிங் கார்டை கொடுங்க. நிலா பத்திரமா வச்சுக்கவா”
விமலா சொன்னவுடன் நிலா மகளுக்கு கூடுதலாக கொஞ்சம் வெட்கம் பிடுங்கி தின்றது.
“ சும்மா இரு விமலா, உனக்கு என்னையும், அவரையும் வம்பிழுக்கறதே வேலையா போச்சு”
“ பார்றா இங்க அதிசயத்தை ! காதல் வந்தவுடனே அவரு முக்கியமாயிட்டாரு, நாங்க சாதாரண ஆளாயிட்டோம் அப்படிதானே “
“ எனக்கு விசிட்டிங் கார்டு அடிச்சு வச்சிக்கற பழக்கம் கிடையாது. கண்டிப்பா உங்க பிரண்டோட சீக்கிரம் பேசுவேன், பார்ப்பேன் , போதுமா ?”
மாதவி வயதான கிழவி மாதிரி தாடையில் கையை குறுக்காக வைத்து வயநான கிழவி மாதிரி அங்கலாய்த்தாள்.
“ அடி என்னாடி நிலா இது அநியாயமா இருக்கு. உன்னோட ஆள் ரொம்ப தெளிவா இருக்காரு. எதையும் பயங்கர நிதானமா செய்யறாரு. பெரிய தில்லாங்கடியா இருப்பார் போல இருக்கு. நிலா கவனமா இருந்தக்கடி”.
நிலா மகள் நாக்கை துருத்தி செல்ல கோபத்துடன் மாதவியை இழுத்து தலையில் வலிக்காமல் குட்டினாள்.
வசந்தி ஞாபகப்படுத்தினாள்.
“ ஏய் நாம அடுத்த இடத்துக்குப் போக நேரமாச்சுடி. நேரம் தாண்டிச்சனா பிளான் எல்லாமே மாறிரும், கிளம்பலாமா ?”
அவள் சொன்னபிறகுதான் எல்லாருக்கும் தாங்கள் அதே இடத்தில் நான்கு மணி நேரமாக நின்றுகொண்டு இருப்பதை உணர்ந்தார்கள்.
“ என்னம்மா நிலா மகளே, போகலாமா ? இல்லை இன்னும் காதல் வசனமெல்லாம் பேச பாக்கி இருக்கா ? கிளம்பலாமா ? உத்தரவு கொடுங்க மகாராணி “ விமலா போலியாக தலையை குணிந்து கையை நெஞ்சுக்கு குறுக்காக வைத்து பணிவாக கேட்டாள்.
“ ஐயோ, இருங்கடி வயசான கிழவிகளா. இன்னும் கொஞ்ச நேரம்தாண்டி. அப்புறம் போகலாம்” நிலா செல்லாமாக சிணுங்கினாள்.
விமலா உட்பட அனைவரும் நிலா மகளை ஆச்சரியமாக, அதிர்ச்சியாக பார்க்க ஆரம்பித்தனர். எல்லார் மனதிலும் ‘ நிலா மகளா இவள் ! கடிகாரத்தை முழுங்கிய மாதிரி ஓடும் இவள் இப்படி மாறி விட்டாளே ! காதல் வந்து ஒருத்திக்குள் அல்லது ஒருவனுக்குள் நுழைந்து விட்டால் என்ன பாடுபடுத்துகிறது ! குடித்துவிட்டு உளறுபவர் உள்ள போதை கண்ணை மறைக்கும், ஆனால் காதல் போதை மூளை , நரம்பு , தசை என்று உடம்பெல்லாம் பரவி எதையும் யோசிக்கவிடாமல் ஆறறிவு உள்ள மனிதனை , சிலநேரம் ஏழறிவு ஞானியாகவும் , சிலநேரம் ஐந்தறிவு செல்ல பிராணியாக மாற்றி விட்டு காதலியை சுற்றி சுற்றி வர வைக்கும். காதலில் தப்பாத மனிதர் உண்டோ ? மனசு உண்டோ ? ‘ என்ற எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது.
“ ஐயா , எங்க வூட்டு ராணியை நாங்க இட்டுகிட்டு போலாமா ? இன்னா சொல்றீங்க நீங்கோ “ வசந்தி மெட்ராஸ் பாஷைக்கு மாறினாள்.
பச்சையனுக்கு சிரிப்பு வந்து விட்டது. அதுவரை வைத்த கண் வாங்காமல் நிலாவை முழுங்கி கொண்டு இருந்தவன் சுதாரித்தான்.
“ தாராளமா கூட்டிகிட்டு போங்க. நான் எந்த தடையும் சொல்லலை”
“ அம்மா தாயே , உத்தரவு வந்திருச்சு . கிளம்பலாமா ? “
நிலா மகள் தனது மனதை விட்டு விட்டு பிரிய மனமில்லாமல் கிளம்பினாள். அழகாக கையை அசைத்து கிளம்ப மற்ற அனைவரும் கிளம்பினர். அவன் அங்கேயே நின்று கொண்டுஇருந்தான்.
நிலா மகள் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே நகர முடியாமல் உடல் அளவில் மட்டும் நகர்ந்தாள். விமலா கடைசியாக மெதுவாக நடந்தாள். ஏதோ ஒரு ஞாபகத்தில் அவன் பக்கம் திரும்பி கேட்கலாம் என நினைக்கும்போது அதை கவனித்தாள்.
பச்சையன் கையில் ஏற்கனவே அடிபட்ட அந்த பகுதியில் காய்ந்த இரத்தப்பகுதியில் வித்தியாசம் தெரிய, விமலா சற்று முன்வந்து உற்றுப்பார்க்க முயல……….அந்த எதிர்பாராத சம்பவம் நடக்க ஆரம்பித்தது.
அது ?………..பச்சையன் வருவான்… காத்திருங்கள்.