மதுரை ராஜூ
Moderator
நிலாச்செய்தி….
புதன் கிரகத்திற்கும், வெள்ளி கிரகத்திற்கும் நிலாக்கள் கிடையாது.
இதுவரை பச்சையன்….
குற்றாலம் சென்றுவிட்டு வந்த பிறகு நிலாமகளுக்கு பச்சையனிடமிருந்து எந்த தகவலும் வராததால் கவலையில் ஆழ்பவளை தாய் பார்கவி தேற்றுகிறாள். ஆபிஸை திறக்கவேண்டிய விமலா வரவில்லை என்ற தகவல் வருகின்றது. நிலா மகள் ஆபிஸ்க்கு செல்கிறாள். இனி …..
பச்சையன் ----7
நிலா ஆபிஸ் கதவை மாற்றுச்சாவி கொண்டு திறந்து உள்ளே போக அனைவரும் நுழைந்து அவரவர் இடத்தில் உட்கார்ந்து கொண்டனர். யாரும் எதுவும் பேசவில்லை.
நிலா மகளுக்கு ஆபிஸ் நேரத்தில் அநாவசியமாக பேசுவது பிடிக்காது. உணவு இடைவேளை மட்டுமே எல்லாரும் தோழிகள், மற்ற நேரத்தில் ஆபிஸ் …ஆபிஸ் வேலை மட்டுமே. இது நிலா மகளின் எழுதப்படாத அலுவலகச் சட்டம்.
நிலாமகளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. இயந்திரத்தனமாய் கைகள் இயங்கி கொண்டு இருந்தன. காதல் வைரஸ் (?) பரவியதால் மூளை ஒத்துழைக்க மறுத்தது. தன் தாய்க்கு அடுத்து யாரிடமாவது தன் உள்ளக்குமுறலை கொட்டவேண்டும் என்று மனசு பரபரத்தது.
மதிய நேரம், உணவு அறையில் எல்லாரும் கூடியிருக்க வசந்தி நிலாமுகத்தை பார்த்தாள். வழக்கமாக குறுகுறுப்புடன் , சிரித்த முகத்துடன் ,பளபளக்கும் கண்களை உடைய நிலா இல்லை என தெரிந்துகொண்டாள். இருந்தபோதும் பேச்சை ஆரம்பித்தாள்.
“ என்னம்மா இங்க ஒரு ஆளு மவுனவிரதத்துல இருக்காங்களா ? ஒரு பேச்சையும் காணோம்”.
“ குற்றால ‘காதல்’ அருவியில் குளித்த குமரிப்பெண் மாயம். இரண்டு நாட்களாக தோழிகள் வலைவீசி தேடி வருகின்றனர்” இன்னொருத்தி வம்பை தொடர்ந்தாள்.
” பசலை நோயில் பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய பருவப்பெண் பகல் எது இரவு எது எனத் தெரியாமல் பரிதவிப்பு”
” யேய் ! அவளை பேச விடுங்கடி . என்னம்மா . என்ன இரண்டு நாளா சத்தத்தையே காணோம். ஆபிஸ் வாட்ஸ்அப் குரூப்ல ஏதாவது ஒரு செய்தியாவது வரும், ஆனா ஒண்ணுமே காணோம், என்னாச்சு அம்மணி ?”
நிலாமகள் அதுவரை அடக்கி வைத்திருந்த சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழ ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமைதியானாள்.
வசந்தி மற்றவர்களை பேசாமல் இருக்க சொல்லிவிட்டு நிலாவின் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“ சாரிடி, பச்சையன் உன்கிட்ட பேசுனாரா இல்லையான்னு எங்களுக்குத் தெரியாது. நீ வேற ஏதாவது ஒரு கவலையில இருக்கேன்னு நினைச்சோம். சரியா சாப்பிடக்கூட இல்லை, ஏதோ பேருக்கு வாயில கொறிச்சிக்கிட்டு இருந்த. என்ன ஆச்சும்மா ? அவருக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா ? உனக்கு காதல் வந்தே இரண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள எப்படி ? ஒண்ணும் விளங்கலையே ! ம்ம்ம் …”
நிலாமகள் உடைந்த குரலில் மெதுவாக ஆரம்பித்தாள்.
“ குற்றாலத்தில் ஆரம்பித்த காதல் குற்றாலத்திலேயே முடிந்து விட்டது போல எனக்கு தெரிகிறது. குற்றாலத்தில் இருந்து வந்ததில் இருந்து எந்தவித போன்காலும் , எஸ்எம்எஸ்ஸூம் இல்லை. என்னோட விசிட்டிங் கார்டு அவர்கிட்ட இருக்கு, ஆனாலும் இதுவரை பதில் இல்லை”.
மாதவி ஆரம்பித்தாள்.
“ எங்களுக்கு எல்லாம் தெரியுமடி. உன்னோட அம்மா எல்லாத்தையும் சொன்னாங்க, உன்கிட்ட எதுவும் கேக்க்கூடாதுன்னு சொல்லிட்டாங்க, அதனாலதான் நாங்க யாரும் உன்கிட்ட கேக்கலை, கேட்டு உன்னை தொந்தரவு பண்ண விரும்பலை”
வசந்தி இடைமறித்தாள்.
“ சரி , மத்தியானம் ஆச்சு , இதுவரை விமலாவை காணோம். என்ன விசயம்னு தெரியலை”
நிலாவும் மற்றவர்களும் தற்பொழுது நிதானத்துக்கு வந்தார்கள். நிலா இப்பொழுது ஆரம்பித்தாள்.
“ அவ அப்பா , அம்மா ஊர்ல இருக்காங்க. இவ தனியா இங்கதான் வீடு எடுத்து தங்கியிருக்கா. என்ன ஆச்சுன்னு தெரியலை ? என்னோட கவலை பெரிசா எனக்கு பெரிதா தெரிஞ்சது, ஆனா உயிர் தோழியை மறந்துட்டேன், என்ன ஒரு சுயநலம் எனக்கு பார்த்தியா ? “
வசந்தி விரல்களால் நெற்றியை தட்டி யோசித்துக் கொண்டு இருந்தவள் திடீரென ஏதோ ஞாபகத்திற்கு வந்தவள் போல பேச ஆரம்பித்தாள்.
“ நிலா எனக்கு இப்ப ஞாபகம் வந்திருச்சு. நாம பச்சையனை விட்டு கிளம்பினப்ப அவ திடீர்னு திரும்பி அவனை நோக்கி போனா. அப்புறம் பட்டுன்னு திரும்பி வந்துட்டா. அவ முகம் ஒரு மாதிரி இருந்துச்சு. நான் விசாரிச்சப்ப ஒண்ணும் இல்லைன்னு மழுப்பி சமாளிச்சா . அப்புறம் அவ அவளாவே இல்லை. ஏதோ கடமைக்கு பேசினா , சிரிச்சா “
“ ஏண்டி இத முதல்லே சொல்லியிருந்தா நான் அவகிட்டே கேட்டிருப்பேன்ல “
நிலா கோபிக்க வசந்தியிடமிருந்து பதில் உடனே வந்தது.
“ அம்மாடி , நீ வேறு உலகத்துல இருந்த, எங்க்கிட்ட சரியா பேசாம தனியா சிரிச்சு , தனியா உளறிகிட்டு இருந்த. எப்படி நாங்க சொல்றது உன்னோட காதுல விழும் ?”
நிலா மகள் தன்னை நொந்துக்கொண்டாள்.
“ நான் ஏன் இப்படி மாறி போனேன் ? ஏன் எனக்கு இப்படி ஆகிறது ? காதல் வந்தால் எல்லாருக்கும் இந்த நிலைதானா ? இல்லை எனக்கு மட்டும்தானா ? கண்றாவி காதல் என் ஆவியை வாங்குவது ஏன் ? தாயை உதாசீனப்படுத்தி, தோழிகளின் நட்பை அவமரியாதை செய்து, நான் என்னையே மறந்து …. சே ! பித்து பிடித்து அலைகின்றேனா ? அவன் பேசாமல் , பார்க்காமல் படாதபாடுபடுத்துகின்றான் என்றால், இந்த விமலாவிற்கு என்ன ஆனது தெரியாமல் படாதபாடுத்துகின்றாள். என் நரம்பெல்லாம் இந்தக் காதல் பூச்சி ஊர்ந்து என்னை வரம்பு மீறி நடக்க வைக்கின்றதே ! “
நிலாமகளின் தவிப்பைக் கண்டு கலங்கிய மூன்று தோழிகளும் அவள் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டனர்.
திடீர்க் காதலை வரவைத்து காணாமல் போன காதலனை தேடுவதா ? அல்லது திடீர் என காணாமல் போன நீண்ட நாள் தோழியைத் தேடுவதா ? ஒரே குழப்பம் எல்லாருக்கும்.
வசந்தி மவுனத்தை வார்த்தை சுத்தியலை வைத்து உடைத்தாள்.
“ நான் ஒரு யோசனை சொல்றேன். மாதவியும் , மாலாவும் விமலாவை தேடுதறதுல ஈடுபடட்டும். நான் இன்னையிலிருந்து நிலாமகளோட இருந்து அந்த பச்சையனை கண்டுபிடிக்கறதுல வேலை செய்யப் போறேன். சம்மதம்தானா ?”
எல்லாருக்கும் வசந்தியின் யோசனை மிகவும் பிடித்து இருந்தது.
உண்மையில் எல்லா வேலை பார்க்கும் இடங்களிலும் ஒரே குடும்பமாக வேலை பார்க்க ஆசைப்படுவர். ஆனாலும் சில ’ஏழரைகளுக்கு’ மத்தியில் வேலை செய்யும் போது சலிப்பு ஏற்பட்டு ஏண்டா இங்கு வேலை பார்க்கின்றோம் என நினைக்கத்தோன்றும்.
ஆனால் இங்கு நிலாமகளின் ஆபிஸில் வேலைபார்க்கும் எல்லாரும் பெண்கள் என்றாலும் இதுவரை அடுத்தவரைப்பற்றி புறணி கிடையாது , பொறாமை கிடையாது , மொத்தத்தில் கூடப்பிறக்கவில்லையென்றாலும் எல்லாரும் இங்கு ஒரு தாய் மக்கள்தான்.
அவர்களுக்குள் பேச்சு ஆரம்பித்தது.
“ விமலாவை எப்படித் தேடுவது ?”
“ கண்டிப்பா கவலைபட வேண்டாம். எங்க இருந்தாலும் இந்த ஊரலதான் இருப்பா. அவளோட நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியலை ? ஒருநாளும் இப்படி இருக்க மாட்டா. நம்ம குரூப்ல தைரியமானவ , அதே சமயத்துல சரியான வாயாடியா இருந்தாலும் இரக்க மனசு கொண்டவ”.
வசந்தி இப்போது ஆரம்பித்தாள்.
“ உண்மைதான் மாலா, சீக்கிரம் நாம அவளை சந்திக்கலாம். இந்த பச்சையனைதான் எங்கே தேடுறதுன்னு தெரியலை ? ஆனா அவர் சொன்னமாதிரி குற்றாலத்துக்கு பக்கத்துல ஏதாவது ஒரு ஊர்லதான் வேலை பார்த்தாகனும். ஏன்னா அடிக்கடி தான் அங்கு வர்றதா சொல்லியிருக்காரு. நாம முயற்சி பண்ணலாம் . காதல் என்றும் தோற்பதில்லை, காதலித்தவரும் தோற்பதில்லை. இது உண்மைக் காதலுக்கு மட்டும் பொருந்தும். காதலில் மனதை தொலைத்தவர் உண்டு , ஆனால் காதல் எப்பொழுதும் தொலைந்ததில்லை .சரிதானே நிலா ?”
ஏற்கனவே கொடுக்கப்பட்ட தாயின் ஆறுதல் வார்த்தைகள், இப்பொழுது தோழிகளின் அரவணைப்பு மற்றும் ஆறுதல் வார்த்தைகளால் நிலாமகள் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாள்.
”வசந்தி என்மேல நீங்க எல்லாரும் காட்டற அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியலை. என்னை நீங்க ஒரு முதலாளியா என்னைக்கும் பார்த்ததில்லை, ஒரு உடன்பிறக்காத சகோதரியாதான் பார்க்கிறீங்க. இப்ப எனக்கு என் உயிர்த்தோழிகள்ல ஒருத்தி விமலாதான் முக்கியம். என் காதல் பிரச்சனையை அப்புறம் பார்த்துக்கலாம். எனக்கு நீங்க அப்புறம் உங்க நட்பு முக்கியம்”.
உணவு இடைவேளைதாண்டி பேச்சு நீண்டு கொண்டிருந்தது
காதல் ஒரு பக்கமும், பழகிய நட்பு மறு பக்கமும் நிலாவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின.வாய் வழியாக நட்புதான் முக்கியம் என்று சொல்லிவிட்டாலும் பச்சையனின் உருவம் மனதை பிறாண்டிக்கொண்டு இருந்தது. காதல் அடக்க முடியா யானையைப் போல மனதிற்குள் உள்ளே திமிறிக்கொண்டு இருந்தது.
வசந்தி இப்போது பேசினாள்.
“ மாலா ஆபிஸ் முடிந்து சிரமம் பார்க்காம விமலா வீட்டுக்கு போ, வீடு பூட்டியிருந்தா பக்கத்துல யாரிடமாவது விசாரிச்சு உடனே தகவல் அனுப்பு”.
“சரி, கண்டிப்பா போய் தகவல் அனுப்புறேன்”..
” இன்னும் ஒரு மணி நேரம் வேலை பாருங்க, மூன்று மணிக்கு இன்னைக்கு முடிச்சுக்குவோம்”
நிலா மகள் சொல்ல அனைவரும் கலைந்தனர். அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பு பகுதியில் அமர்ந்தனர். பாதி மரதடுப்பும் அதன் மேல் பாதி கண்ணாடி தடுப்பும்உள்ள பகுதி. அமரந்து வேலை பார்ப்பவர்கள் வெளியில் இருந்து யாராலும் பார்க்க முடியாது.
அந்த சமயத்தில் வெளியே ஏதோ ஒரு ஆட்டோ சத்தம் கேட்கவும், வாசல் பக்கம் ஒருவர் நடந்து வரும் சத்தமும் கேட்க ஆர்வத்தில் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு எழுந்து பார்க்க….
ஆபிஸில் உள்ளே நுழைந்தது…………………?
பச்சையன் வருவான் … காத்திருங்கள்…