மதுரை ராஜூ
Moderator
இதுவரை பச்சையன்…
குற்றாலத்திற்கு தோழிகளுடன் சென்ற நிலாமகள் அங்கு ஒருவனைக் கண்டு காதல் கொண்டு பச்சையன் என பெயர் வைக்கின்றாள். ஆனால் குற்றாலத்திலிருந்து வந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும் பச்சையனிடமிருந்து தகவல் ஏதும் வராமல் போகவே கலக்கம் கொள்கின்றாள். இதே சமயத்தில் தோழி விமலாவும் ஆபிஸுக்கு எந்த தகவலும் தெரிவிக்காததால் கலக்கமடைகின்றனர். அந்த நேரத்தில் வாசலில் ஏதோ சத்தம் கேட்க……. அங்கு….?
பச்சையன் ….8
வாசல் பக்கம் சத்தம் கேட்டவுடன் அனைவரும் ஆர்வத்தில் எழுந்து பார்க்க அங்கே விமலா உள்ளே நுழைந்து கொண்டு இருந்தாள். மெதுவான தளர்ந்த நடை , சற்றே வாடிய முகம். அஙள் முகத்தில் தெரிந்த உணர்வுகளைக் கொண்டு யாராலும் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
நிலா மகள் ஓடிவந்து விமலாவை கட்டிக்கொண்டு அழுதாள். மற்ற அனைவரும் சுற்றி நின்று கொண்டார்.
நிலா மகள் விமலாவை உரிமையுடன் கேட்க ஆரம்பித்தாள்.
“ ஏண்டி இரண்டு நாளா எந்த தகவலும் இல்லை, ஒரு போன் இல்லை. என்னடி ஆச்சு உனக்கு ?”
விமலா முகத்தை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தாள். ஆனால் முடியாமல் திணறினாள்.
“ சொல்லுடி , அதான் கேக்கறாளே சொல்லுடி ?”
இன்னொருத்தி குறுக்கே பேச இன்னொருவள் அதை கவனித்தாள்.
விமலாவின் இடது காலில் பாதியாக ஒரு கட்டு போடப்பட்டு அதில் மருந்து தடவிய அடையாளம் இருந்தது. வலி வேதனையை முகத்தில் தெரிவதை சிரமப்பட்டு விமலா அடக்க முயற்சி செய்துகொண்டிருப்பதை தோழிகளால் உணர முடிந்தது.
அவளை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார்கள். தங்கள் நாற்காலிகளை அவளைச் சுற்றி போட்டு கொண்டார்கள்.
விமலா மெல்லியக் குரலில் பேசினாள்.
“ அன்று பச்சையனை ஏதோ ஒன்று கேட்கப் போய் அவன் எதுவும் பதில் சொல்லாததால் உடனே அவசரப்பட்டு திரும்ப பக்கத்தில் இருந்த ஒரு கூர்மையான கல்லில் அடிபட்டது. அவசரத்தில் பார்த்த பொழுது இடித்த இடம் வலிக்கவே எதையும் கவனிக்காமல் உங்களுடன் வந்து விட்டேன். ஆனால் பிறகு பார்த்தால் காலின் அடித்தோல் கிழுந்து இருந்தது. உங்களுக்குத் தெரியாமல் ஒரு சிறு துணியை கட்டி ஊர் வந்து சேர்ந்தேன். ஆனால் வந்த இடத்தில் காயம் பெரிதாகவும் , சரியான வைத்தியம் உடனே பார்க்காததாலும் என்னால் வலிதாங்க முடியவில்லை. பக்கத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க போக, அதே சமயத்தில் என்னுடைய போனும் ரிப்பேர் ஆக என்னால் யாருடனும் பேச முடியவில்லை, காலில் காயம் ஆழமாக இருந்ததால் என்னால் நடக்க முடியாத சூழ்நிலை . உங்களுக்கு யார் மூலமாக சொன்னால் நீங்கள் பதட்டமடைவீர்களுன்னு நான் சொல்லலை. என்னை மன்னிசுருங்கடி”
முன்பு எத்தனை போன் நம்பர்கள் என்றாலும் மனப்பாடமாக சொன்ன மனிதன், இன்று செல்போன் வந்தவுடன் எல்லா நம்பர்களையும் மனப்பாடமாக ஏற்றாமல் எல்லாவற்றையும் போனில் ஏற்றி விடுகின்றான், பின் அவசரத்திற்கு நம்பர் தேடி போனை தேடுகின்ற அவல நிலையில் இருக்கின்றான்.
தன்னுடைய உயிர்த்தோழி நிலாமகளின் நம்பரைக் கூட ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியாமல் விமலா முதலில் தவித்தாள். பின் ஞாபகத்திற்கு வர அவள் அருகில் இருந்த ஒரு நர்ஸிடம் போனை கேட்டு பேச நினைத்து பின் நிலாமகளும் மற்றவர்களும் பதட்டமடைவார்கள் என தன் முடிவை மாற்றிக் கொண்டாள்.
“ நீ போன் பண்ணியிருந்தா பதட்டமடைவதை விட, உன்னை காணோம்னு தவிச்ச தவிப்பு அதிகம்டி. ஏண்டி இத்தனை வருசம் ஒரு தாய் பிள்ளையா பழகி இருக்கோம் ., உனக்கு எப்படி எங்களை தவிக்க விட மனசு வந்தது. கல் நெஞ்சக்காரி…கல்நெஞ்சக்காரி….”
நிலா மகள் குறுக்கே புகுந்தாள்’.
“ சரிடி, அவளே வேதனையில இருக்கா. அவளை தொந்தரவு பண்ண வேணாம். இன்னைக்கு இதோடவேலை முடிச்சிக்காலம் . நீங்க கிளம்புங்க. நான் அவளை என் வீட்டுக்கு கூட்டி போய் பார்த்துக்கறேன்”.
வசந்தி மற்றவர்களை பார்த்தாள்.
“ சரிடி,உயிர்த்தோழிகள் இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இனி நம்ம பேச்சு எடுபடாது. நாம கிளம்புவோம்.”
மூவரும் கிளம்ப விமலாவும், நிலாமகளும் தனியே இருந்தனர். நிலாமகள் வாசல் வரை சென்று எல்லாரும் கிளம்பியதை உறுதிப்படுத்திவிட்டு வந்து விமலா அருகில் உட்கார்ந்தாள்.
“ உண்மையைச் சொல்லு உனக்கு என்ன பிரச்சனை ? உன்னை எனக்குத் தெரியும். என்கிட்ட எதையும் மறைக்காதே “
நிலாமகள் சொன்னவுடன் விமலா வெடித்து அழ ஆரம்பித்தாள். அவள் அழுது முடியட்டும் என நிலா காத்திருந்தாள்.
விமலாவை மற்றவர்களுக்கு முன்னால் நிலாமகளுக்குத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாமல் விமலாவை ஹார்ட் டிஸ்க் என செல்லமாக கூப்பிட்டு வம்பிழுப்பாள். எந்த நேரம் எந்த தகவல் கேட்டாலும் உடனே ஞாபகப்படுத்தி கோர்வையாக சொல்லக்கூடிய அபார மூளைத்திறன் கொண்டவள் விமலா என நிலாவுக்கு நன்குத் தெரியும். ஆனால் இப்பொழுதோ தன்னுடைய போன் நம்பரைக் கூட ஞாபகம் இல்லை , மற்றவர்களின் நம்பரும் மறந்து விட்டது என்று நாடகமாடியதை நிலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விமலாவிற்கு நேராக உட்கார்ந்து , தன்னை பார்ப்பதை தவிர்த்து தலைகுணிய முயற்சிக்கும் அவள் தாவங்கட்டையை தன்னுடைய விரல்களால் நிமிர்த்தி கேட்டாள்.
“ என்னை நன்றாகப் பார்த்து உண்மையைச் சொல், ஏதோ சொல்ல வந்து என்ன முழுங்குகின்றாய் ? நாம் அப்படியா பழகியிருக்கின்றோம் ? “
நிலா மகள் இப்படி கேட்டவுடன் மெதுவாக கண்களை உயர்த்தி நிலாமகளைப் பார்த்தாள். இரண்டு நாட்களுக்கு மேலாக பச்சையனை காணாமல் கவலைப்பட்டு தற்பொழுது சகஜ நிலைக்கு வந்த நிலாமகளின் அந்த சக்திவாய்ந்த ஊடுருவும் காந்தப் பார்வையை தாங்க முடியாமல் தவித்தாள் விமலா.
“ இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை. வேறு எந்த காரணமும் உள்நோக்கமும் இல்லை. பலவித குழப்பங்கள், உடல் முழுவதும் ஊமைக் காயங்கள், காலில் கடுமையான வலி என எல்லாம் சேர்ந்து என்னை யோசிக்க விடாமல் செய்து விட்டது. உங்கள் எல்லாரையும் ஒதுக்க நினைக்கவில்லை, சங்கடப்படுத்தக் கூடாது என்பதே என்னுடைய நோக்கம். நிலா தப்பா என்னை நினைச்சிக்காதே. உன்னை விட்டா, உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா ? எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை”.
நிலா மகள் விமலாவை மறுபடி ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் நம்பவில்லை என்ற அர்த்தம் தெரிந்தது.
“ உண்மையில் என்னை நம்பு. நீ நம்பவில்லையென்றால் யார் என்னை நம்புவது ? இன்னுமா நீ நம்பவில்லை ?”.
“ சரி , உன்னை நம்புகின்றேன். ஆனால் குற்றாலத்தில் பச்சையனிடம் சொல்லிவிட்டு திரும்பிய போது நீ ஏன் மீண்டும் அவரிடம் சென்றாய் ? என்ன கேட்க முயற்சி செஞ்ச ? பின் ஏன் பேசாமல் வந்து விட்டாய் ? உண்மையில் என்ன நடந்தது அங்கே ? எதை மறைக்க முயற்சி செய்யற ? மற்றவர்களை நீ ஏமாற்றலாம், ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. சொல்லுடி”.
கோர்ட்டில் சரமாரியாக குறுக்கு விசாரணை செய்யும் வக்கீல் போல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போன விமலா கோப வளையத்திற்குள் நுழைந்தாள். முகம் மாற ஆரம்பித்தது. குரலும் மாற ஆரம்பித்தது.
“ இப்ப உனக்கு என்ன தெரியனும்ங்கற ? காணாம்னு பரிதாபத்துல கேக்கறியா இல்லை ஏன் காணாம்னு விசாரிக்க நினைக்கறியா ? நான் இவ்வளவு தூரம் சொல்லியும் நீ நம்பலைன்னா நான் என்ன செய்யறது ?”
கோபத்தில் வெடித்த விமலாவைக் கண்டு நிலாமகள் நிதானித்தாள். தன்னுடைய வார்த்தை விமலாவை கோபமடைய செய்தது கண்டு ஆச்சரியப்பட்டாள். இதுவரை மற்றவர்களை தன் கண்களால் கோபமடையச் செய்த தான் தற்பொழுது தன் வார்த்தைகளால் அடுத்தவளை கோபமடையச் செய்தது கண்டு திகைத்தாள்.
“ இல்லைடி, உன்னை கோப ப்படுத்தறது என்னோட எண்ணமும் இல்லை. நீ முதல்ல என்னை புரிஞ்சிக்க. ஒரு விசயத்தை தெரிஞ்சக்க நினைக்கறது தப்பா ? உன்னை காணோம்னு உண்மையான அக்கறையால தவிச்சது தப்பா ? ப்ளீஸ் , ப்ளீஸ் புரிஞ்சக்கடி”.
“ நீ கேக்கறது எனக்கு புரியுது. ஆனா சுத்தி வளைச்சு என்னை கேள்வி வளையங்களால நகராம மாட்டி விடறது மாதிரி நீ கேக்கறது பிடிக்கலை “.
” எப்பவும் கோபப்படாம அமைதியா சிரிச்சு சமாளிக்கற நீ , இன்னைக்கு மட்டும் கோபப்பட காரணம் என்ன ? “
“ எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு. எல்லை மீறிய தொல்லை வந்தால் நான் என்ன செய்ய ? நான் ஒண்ணும் மிஷின் இல்லை, மனுஷிதானே”
“ இப்ப நான் என்ன கேட்டேன் ? ஏன் இவ்வளவு கோபம் ? “ ஃ
விமலா எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் சாதித்தாள். சற்று நேரம் அங்கே யாரும் விரும்பாத மயான அமைதி நடைபோட்டு கொண்டு இருந்தது.
“ சரி , உனக்கு சொல்ல விருப்பம் இருக்கா இல்லையா ? நான் உன்னை கேட்பது பிடிக்கவில்லை என்றால் மெதுவாக யோசித்து சொல். நாம இப்ப கிளம்பலாம். வா என் வீட்டுக்கு. அம்மா ரொம்பவும் கவலைப்பட்டாங்க “
“ இல்லை , நான் வரலை. நான் என் வீட்டுக்கு போறேன்”.
விமலா மறுத்தவுடன் நிலா மகள் கோபப்பட்டாள் .
“ இப்ப என்ன ஆச்சு உனக்கு ? வர போறியா இல்லையா ? இல்லை எதுவும் பைத்தியம் பிடித்து விட்டதா ? “
விமலா குரலை உயர்த்தி கத்தினாள்.
“ ஆமா , நான் காதல் பைத்தியம் ஆயிட்டேன் . அதனால அப்படிதான் பேசுவேன்”
“ சரி , காதல்ல விழுந்தவ சந்தோசமா இருக்க வேண்டியதுதானே ? ஏன் கோபப்படுற? யாரை காதலிக்கற ?”
நிலா மகள் கோபம் தணிந்து ஒரு ஆர்வத்துடன் கேட்க விமலா சிறிது நேரத்திற்குப் பிறகு தயக்கத்துடன் சொன்னாள்.
“ நான் காதலிக்கறது……………பச்சையனை “
நிலா மகள் அதிர்ந்தாள்.
ஆயிரம் தேள்கள் கண்ணில் கொட்டியதுப் போல நிலா மகள் வேதனை அடைந்தாள்.
கண்களில் சிவப்பு ஏற விமலாவை பார்த்தாள்.
இனி என்ன நடக்கும் ?......பச்சையன் வருவானா ? யாருடைய காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவான் ? காத்திருங்கள்…….