மதுரை ராஜூ
Moderator
நிலாச் செய்தி..
செவ்வாய் கிரகத்தின் இரண்டு நிலாக்களின் பெயர்கள்… போபாஸ் மற்றும் டெய்மோஸ்
இதுவரை பச்சையன்..
விமலாவை காணாமல் தவித்த நிலாமகளும் மற்ற தோழிகளும் கவலையில் ஆழ்ந்திருக்க , விக்டோரியா ஆஸ்பத்திரியிலிருந்து போன் வர பதறியடித்து கிளம்புகின்றனர். அங்கே…
பச்சையன் –13
விக்டோரியா மருத்துவமனை வாசல். வழக்கம் போல பரபரப்பாக இருந்தது. கவலை தோய்ந்த முகங்களும் , எல்லாவற்றையும் பார்த்து பார்த்து பழகிப்போய் எந்தவித உணர்வும் முகத்தில் காட்டாமல் மருத்துவமனை நர்ஸ்கள் மற்றும் ஊழியர்களும் உள்ளே உலவிக்கொண்டு இருந்தனர். குறுக்கும் நெடுக்குமாக மனித நடமாட்டங்கள்.
விமலாவிற்கு என்ன நடந்தது , எப்படி இருக்கிறாள் எனத் தெரியாமல் நிலாமகள் உள்ளே ஓடினாள். அவள் பின்னாலேயே மற்றவர்களும் வேகமாக நடந்தனர்.
“ சிஸ்டர், எனக்கு இப்ப போன் வந்தது. என் பெயர் நிலாமகள். விமலா எந்த ரூம்ல அட்மிட் ஆயிருக்காங்க ?”
கேள்வி கேட்கப்பட்ட சிஸ்டர் நிமிர்ந்து பார்த்தாள். பக்கத்தில் இருந்த ஒரு நோட்டை விரித்து சில வினாடிகள் பார்த்து விட்டு நிமிர்ந்தாள்.
“ ரூம் நம்பர் 205. போய்பாருங்க“
நிலா மகள் சுற்றும் முற்றும் பார்த்தாள். கடந்த முறை பார்த்த முகங்கள் எதுவும் இல்லை. எல்லாம் புதிய முகங்களாக இருந்தது.
“ நிலா இந்த பக்கம் வா. எல்லாரும் பதட்டப்டாம என்கூட வாங்க “
குரல் கேட்டு அனைவரும் திரும்ப, அங்கே அவர்களுக்கு பழக்கமான டாக்டர் நேத்ராவின் நர்ஸ் கலா நின்றுகொண்டு இருந்தார்.
“ அக்கா , மித்ரா டாக்டர் எங்க ?”
“ ஒரு விசயமா வெளியூர் போயிருக்காங்க. இன்னைக்கு வந்துருவாங்கன்னு எதிர்பார்க்கறேன்”.
சொல்லிவிட்டு கலா முன்னே விறுவிறுவென நடந்தார். வேறு எந்த பதிலும் சொல்லாமல் கலா நடக்க பின்னால் அனைவரும் பதட்டத்துடன் மாடி ஏறினர்.
“ கலா அக்கா என்ன நடந்துச்சு ? ஏதாவது உங்களுக்கு தெரியுமா ?”
கலா சிஸ்டரை நிலா மகள் அழுகையோடு கேட்க விமலா இருந்த அறைக்கு முன் நின்றாள்.
“ நிலா நேத்து ராத்திரி விமலாவோட எதிர்த்த வீட்டுல இருந்து வந்து விமலாவை சேர்த்தாங்க. அப்பவே தலையில பயங்கர அடி. பாதி மயக்கத்துல இருந்தா. நான் நேத்து நைட் டூட்டி , அதனால நான் பார்த்து எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன், டாக்டருக்கு உடனே போன் பண்ணினேன், யாரையும் பதட்டப்படுத்த வேண்டாம், காலையில போன் பண்ணினா போதும்னு சொல்லிட்டாங்க”
“ எதுனால சிஸ்டர் இப்படி ஆச்சுன்னு தெரியுமா ? “
“ கீழே கொட்டி கிடந்த தேங்கா எண்ணெயை கவனிக்காம கால் வச்சி அப்படியே மல்லாக்க விழுகிறப்ப பக்கத்துல இருந்த கட்டில் முனையில அடிபட்டு கிடந்துக்கா. வேற ஒண்ணும் தெரியாது “
“ அக்கா எனக்குத் தெரியும்”
குரல் கேட்டு அனைவரும் திரும்ப அந்த சிறுமி நின்றிருந்தாள்.
“ விமலா அக்காவுக்கு எதிர்த்த வீடு நான். நேத்து ராத்திரி ஒரு அங்கிள் வந்தாங்க . இரண்டு பேரும் வாசல்ல நின்னு காரசாரமா சண்டை போட்டாங்க. நான் படிச்சிகிட்டு இருந்தவ வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன், தண்ணி குடிக்க எந்திருச்சு உள்ளே போயிட்டு திரும்ப வந்தப்ப அந்த அங்கிளை காணோம். கதவு திறந்து கிடந்துச்சு. ஒரு சந்தேகத்துல உள்ளே போய் பார்த்தேன். அக்கா கீழே எக்குத்தப்பா விழுந்து கிடந்தாங்க. தரையெல்லாம் ஒரே ரத்தம் . பக்கத்து கட்டில் முனையில அவ்வளவும் ரத்தமா கிடந்துச்சு . நான் என்னோட அப்பா, அம்மாகிட்ட சொல்லி உடனே இங்கே கொண்டு வந்து சேர்த்தோம்”.
எல்லார் மனதிலும் பச்சையன் வந்து போனான். விமலா அறைக் கதவு திறக்கப்பட உள்ளேயிருந்து ஒரு நரஸ் வெளியே வந்தார். பின்னால் கதவு இடுக்கு வழியே விமலா தலையில் கட்டுடன் படுக்கையில் தெரிந்தாள்.
“ சிஸ்டர் நாங்க பார்க்கலாமா ?” விமலா அழுகையோடு கேட்க சிஸ்டர் தலையை ஆட்டி மறுத்தார்.
“ அதிக வேகத்துல மோதுனதால கடுமையான அடி. அவங்களால பேச முடியலை. ஏதாவது முயற்சி பண்ணி பேச வைக்க நினைச்சா தலை ரொம்ப வலிக்குதுன்னு சைகை காட்டுறாங்க. ஸ்கேன்ல எந்த பிரச்சனையும் இல்லை, இருந்தாலும் தலை அதிர்வுகளால அவங்க பேச சிரமப்படுறாங்க. தயவு செய்து ஒரு ஆள்போங்க . போய் பார்த்திட்டு வாங்க “
நிலா மெதுவாக உள்ளே நுழைந்தாள். விமலா நிலாவை பார்த்தவுடன் அழ ஆரம்பித்தாள். நிலாவும் அழ ஆரம்பித்து விமலாவை கட்டி பிடித்துக் கொண்டாள்.
“ ஏண்டி இப்படி கிடக்குற ? என்ன ஆச்சு உனக்கு ? ”
விமலா வாயை திறந்து வலியை தாங்க முடியாமல் முகத்தை சுழித்தாள்.
நிலா , விமலாவின் நிலை கண்டு கலங்கினாள்.
‘ இவளிடம் எதைக் கேட்பது ? இந்த நிலையில் இவளை தொந்தரவு செய்து ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது ? இவள் போன் எங்கே என தெரியவில்லை . எதற்கும் சைகையில் கேட்க முயற்சி செய்தால் என்ன ? ‘
நிலா தயங்கி தயங்கி விமலாவிடம் சைகையில் அவள் போன் எங்கே என கேட்க, அவள் கைகளை உயர்த்தி ஏதோ சொல்ல முயற்சிக்க சரியாக அதே சமயத்தில் நர்ஸ் உள்ளே நுழைந்தாள்.
” அவங்களை தொந்தரவு பண்ண கூடாதுன்னு சொன்னேன்ல. ஆனா நீங்க ஏன் இப்படி பண்றீங்கன்னு தெரியலை ? அவங்க விழுந்ததுல தோள்பட்டை எலும்புகிட்ட இரத்தக்கட்டு வேற இருக்கு. ப்ளீஸ் , கொஞ்சம் வெளியே இருங்க”.
நிலா தயக்கத்துடன் எழுந்தாள். திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள். எல்லாரும் சூழ்ந்து கொண்டனர்.
எப்போதுமே பற்று வைத்த உறவுகள் நோயாளியை பார்க்கத் துடிக்கும். ஆனால் தொற்று ஏற்பட்டு நோயாளிக்கு ஏதாவது ஆகிவிடும் என ஆஸ்பத்திரியில் தடுப்பதும் இயற்கைதான். இங்கேயும் அதே கதைதான்.
வசந்தி கேட்டாள். “ என்னடி ஆச்சு ? எப்படி இருக்கா ? “
நிலா மகள் சொல்ல ஆரம்பிக்க அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.
“அவங்க அப்பா , அம்மாவுக்கு தகவல் சொல்லியாச்சா ? “ நிலா கேட்டாள்.
“ அவங்களுக்கு விமலா பையில் இருந்த நோட்டுல இருக்கற போன் நம்பர் வைச்சு சொல்லியாச்சு. வந்துகிட்டு இருப்பாங்க”.
கலா சிஸ்டர் குறுக்கிட்டாள்.
“ நான் இங்க பார்த்துக்கறேன். அந்த சிஸ்டர் கொஞ்சம் கெடுபிடி., ஆனா நல்லவ. விமலாவை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் “.
கலா நகர்ந்து விட, அனவைரும் உட்கார்ந்தனர்.
வசந்தி பேச ஆரம்பித்தாள்.
பொதுவாக எந்த குழப்பமான சூழ்நிலை ஆனாலும், முடிவெடுக்க முடியவில்லை என்றாலும் வசந்தி நிதானமாக , பதட்டப்படாமல் முடிவெடுக்க கூடியவள். எல்லாரும் வசந்தியின் வார்த்தைக்கும், முடிவுக்கும் கட்டுப்படுவார்கள்.
” நிலா , பச்சையனை அவன் தங்கியிருக்கற இடத்துல போய் பாரு, விசாரி, எதையும் வெளிய காட்டிக்காதே. மாலா , நீ விமலாவோட வீட்டுக்குப் போய் அவங்க அப்பா, அம்மாவை பார்த்துக்க. அப்படியே விமலா போன் எங்கன்னு தேடு. ஒருவேளை அவ அதை சைலண்ட்ல போட்டிருக்கலாம். மாதவி நீ இங்க இரு. முடிஞ்சா ஏதாவது அவகிட்ட முயற்சி செய். மாதவி நம்ம டாக்டர் நேத்ரா வந்தா தகவல் கொடு. நிலா ஒரு நிமிசம் உன்னோட போனைக் கொடு. உன்கிட்ட இருக்கற பச்சையன் போட்டோவை எல்லார் போனுக்கும் அனுப்பிக்கறேன். யார் பார்த்தாலும் தகவல் சொல்லுங்க. வேற யாருக்கும் பச்சையன் விவரத்தை சொல்ல வேண்டாம்.. இப்ப கிளம்புங்க”.
நிலா மகள் வசந்தியின் தைரியத்தைக் கண்டு பிரமித்தாள். விமலாவிற்கு அடுத்தப்படியாக வசந்தியைதான் நம்புவாள். மற்றவர் மாதிரி அழுது பதட்டப்படாமல் வசந்தியின் முடிவு எல்லாருக்கும் பிடித்திருந்தது.
நிலாமகளின் போனிலிருந்து பச்சையனின் போட்டோ எல்லாருக்கும் அனுப்பப்பட்டது.
“ எந்த தகவல்னாலும் எல்லாரும் எனக்கு உடனே உடனே அனுப்புங்க, பேசுங்க. இந்த நேரத்துல நான் நிலா கூட இருக்கேன். ஏன்னா அவளுக்கு தைரியம் வேணும். தைரியமான அவ இப்ப நிலைகுலைஞ்சு இருக்கா. ஆனா நான் அவளை ஒரு ஐந்தடி தள்ளி பின்தொடர்வேன் யாருக்கும் தெரியாம”.
அவரவர் கிளம்பினர்.
நிலா வெளியே வந்தாள். வண்டியை கிளப்ப சற்று நேரம் கழித்து அவள் பின்னாலே வசந்தியின் வண்டி பின் தொடர்ந்தது.
நிலாவின் வண்டி முன்னே செல்ல, அவள் சிந்தனைகள் பின்னோக்கி பல கேள்விகளை எழுப்பின.
‘ விமலா நேற்று இரவு டாக்டரை பார்த்தாளா ? இரவு அவளிடம் பேசிய அந்த ஆண் யாராக இருக்க கூடும் ? விமலாவின் தலை காயத்துக்கு யார் காரணம் ? அவள் வீட்டில் இருந்தால் அவள் போன் அவளிடம்தானே இருந்திருக்கனும், வேற யாராவது எடுத்திருந்தா…? என்கிட்ட என்ன சொல்ல முயற்சி செஞ்சிருப்பா ?”
நிலா கடைசியில் பச்சையன் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்தாள்.
உள்ளே நுழைந்து வரவேற்பறையில் பார்த்தாள். ஒரே ஒருவன் ஒடிசலாய் நின்றிருந்தான். உள்ளே நுழைந்த நிலாவை மேலும் கீழும் பார்த்தான்.
நிலாமகள் தனது பையிலிருந்த போனை எடுத்தாள். பச்சையன் போட்டோவை காட்டினாள். அதைப் பார்த்த அவன் முகம் ஒரு திடுக்கிடலுக்கு போய் உடனே சமாளித்து மாற்றினான். நிலாமகள் அவனை மீண்டும் பார்க்க மேசை மேல் இருந்த இடது கையை எடுத்து மேசைக்கு அடியில் கொண்டு போனான். அந்த வினாடியில் அவன் இடது கையில் ஏதோ மருந்து போட்டிருந்ததை நிலா மகள் கவனிக்கத் தவறவில்லை.
“ தம்பி, இவரை… இவர் எந்த ரூம்ல இருக்கார். சொல்ல முடியுமா ?”
அவன் மெதுவாக மேசை மேல் இருந்த நோட்டை ஒன்றும் சொல்லாமல் நகர்த்தினான்.
“ அவருடைய ரூம் நம்பர் 17. ஆனா இப்ப அவர் இங்க இல்ல. இன்னைக்கு அதிகாலையில காலி பண்ணிட்டாரு”
நிலா மகள் இதை எதிர்பார்த்தாள். நோட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் 17ஆம் நம்பருக்கு நேராக விரலை நிறுத்தினாள்.
பெயருக்கு நேராக ’மேன்ரோ ’ என போடப்பட்டிருந்தது. வேறு எந்த தகவலும் இல்லை.
“ என்ன தம்பி, வேற எந்த விவரமும் இல்லை. ஆதார் இல்லைன்னா வேற அடையாள அட்டை விபரமும் இல்லையே. நீங்க பதிய மாட்டீங்களா ? ‘
அவன் பேசாமலிருந்தான். ஏதோ சொல்ல வந்து பின் தயங்குவது நன்றாக தெரிந்தது.
‘ என்னால இப்ப எதுவும் சொல்ல முடியாது . இதை நான் சமாளிச்சுக்குவேன் . நீங்க கவனமா இருங்க “.
நிலா வெளியே வந்தாள். சற்றுத் தள்ளி நின்றிருந்த வசந்தியிடம் போய் எல்லாவற்றையும் சொல்ல அவள் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது போன் அடிக்க, எடுத்து காதுக்கு கொடுத்தாள்.
நிலா மகள் வசந்தியைப் பார்க்க , தூரத்தில் பச்சையன் நின்று அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பச்சையன் மீண்டும் வந்து விட்டான். அவன் எப்படிப்பட்டவன் ? நல்லவனா , கெட்டவனா ?
காதல் பிழைக்குமா ? நட்பு என்ன செய்யும் ? காத்திருங்கள்.