மதுரை ராஜூ
Moderator
நிலாச் செய்தி
நிலாவில் உயிருள்ள மனிதன் உயிரோடு வாழ வாய்ப்பு இருக்கின்றதா என மனிதன் தேடிக் கொண்டு இருக்கின்றான். அதே சமயம் வேறு எந்த கிரகத்திலாவது மனிதன் போன்று வேறு உயிரினம் இருக்கிறதா என்றும் தேடிக் கொண்டு இருக்கின்றான். இன்னும் அவன் கைக்கு எந்த ரகசியமும் சிக்கவில்லை. பொறுத்திருப்போம்.
இதுவரை பச்சையன்….
விமலா வீட்டிற்கு பச்சையனை வண்டியில் அழைத்துச் செல்கிறாள் நிலாமகள். பச்சையனுக்கு இடையில் ஒரு அழைப்பு வர அவன் முகம் மாறுகிறது. பின் செய்தி அனுப்பிய பின் பழைய நிலைக்கு மாறுகிறது. இனி….
பச்சையன்……19
விமலாவின் வீடு நெருங்கி கொண்டு இருந்தது. பச்சையனின் காதலும் விமலாவை நெருங்கி கொண்டு இருந்தது.
விமலாவிற்கு பச்சையனின் அருகாமை வண்டியை விட அவள் மனது வேகமாக பறந்து கொண்டு இருந்தது. நேற்று வசந்தி போனில் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அதை பச்சையனிடம் சொன்னால் அவன் என்ன செய்வான் என உள்ளுக்குள் பயந்தாள். ஆனால் தற்போதைய நிலையில் அவன் சம்மதிப்பான் என நம்பினாள்.
விமலாவின் வீட்டிற்குள் நிலாமகளும் பச்சையனும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். அங்கே மாலா, மாதவி மற்றும் வசந்தி வரவேற்ப்பறையில் உட்கார்ந்திருந்தனர். ஜோடியாக நுழைந்த இவர்கள் இருவரையும் கண்டதும் எல்லாரும் உற்சாகம் தொற்றிக்கொண்டது, எழுந்து பச்சையனை வரவேற்றனர். நிலாமகளும் , பச்சையனும் உட்கார்ந்தனர்.
மீண்டும் பச்சையனை மாலாவும் , வசந்தியும் அருகில் மறுமுறை பார்த்தனர். எல்லாருக்கும் இருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. பச்சையன் முதலில் ஆரம்பித்தான்.
“ நேற்று வசந்தி நிலாவும் , வசந்தியும் போனில் என்ன பேசினார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். அதாவது நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் என ஏற்கனவேத் தெரியும்”.
பச்சையன் சொன்னவுடன் வசந்தி அதிர்ந்தாள். நிலாவைப் பார்த்தாள், இவள் ஏதாவது சொல்லியிருப்பாளோ எனப் பார்க்க, நிலா மகள் சொல்லவில்லை என மவுனமாக தலையை ஆட்டினாள்.
பச்சையன் சிரித்தான்.
“ நிலா என்னிடம் எதுவும் சொல்லவில்லை,ஆனால் நீங்கள் உங்கள் தோழி விமலாவை நான் பழைய நிலைக்கு மாற்ற முடியுமா என என்னிடம் எதிர்பார்க்கின்றீர்கள். கண்டிப்பாக செய்கின்றேன், செய்ய முயற்சிக்கின்றேன். எங்கே விமலா ? “
பச்சையன் சொன்ன பதிலை கேட்டவுடன் அனைவருக்கும் நிம்மதி உண்டானது.
வசந்தி பக்கத்து அறையை காட்டினாள். ஏற்கனவே இவள் முயற்ச்சியால் டாக்டர் மித்ராவிடம் பேசி விமலாவை வீட்டில் வைத்து பார்க்கின்றோம் என சிறப்பு அனுமதி வாங்கி வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தார்கள். உள்ளே அந்த அறையில் விமலா மாத்திரையின் காரணமாக பாதி மயக்கத்தில் இருந்தாள். அவள் அப்பா, அம்மா மாடியில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்கள். வசந்தி எல்லா ஏற்பாடுகளையும் நிதானமாக அழகாக கச்சிதமாக அனைத்தையும் செய்து முடித்து இருந்தாள்.
விமலா இருந்த அறையில் மெல்லிய இரவு விளக்கு அவள் தூக்கத்திற்கு இடையுறு இல்லாமல் எரிந்து கொண்டு இருந்தது. வாசலுக்கு நேராக தெரியும் வண்ணம் கட்டில் போடப்பட்டு இருந்தது. விமலாவின் கால்கள் தெரிந்தன. பச்சையன் மெதுவாய் எழுந்தான். வாசலுக்கு நேராக கட்டில் பக்கத்தில் விமலாவின் கால்களுக்கு நேராக நின்றான். சற்று பக்கவாட்டில் திரும்பி நின்றான். வசந்தி சென்று ஏற்கனவே காயம்பட்ட கால்களில் இருந்த மருந்து துணியை மெதுவாக அகற்றினாள். எல்லாரும் வாசலுக்கு நேராக சற்று தள்ளி நிற்க பச்சையன் குணிந்து தொட அவன் கைவிரல்களில் பச்சை ஒளி மெதுவாய் உருவாகி பின் மெல்லிய கதிர் வீச்சாய் கோடு போல விமலாவின் கால்களில் இறங்க ஆரம்பிக்க அந்த அதிசயம் எல்லார் கண்களுக்கு முன்னால் நிகழ ஆரம்பித்தது. பச்சையன் சொன்ன போது எல்லாவற்றையும் கேட்டிருந்த நிலா இப்போது விமலாவின் கால்களை பார்த்து அதிசயித்தாள்.
கால்கள் ஏதோ இப்போதுதான் கழுவியது போல பளிச்சென்று சுத்தமாய் இருந்தது. பச்சையன் மெதுவாய் நகர்ந்து விமலாவின் தலைமாட்டில் சென்று பிரசவம் பார்க்கும் மருத்துவர் மெதுவாய் இருகைகளாலும் தலையை பிடிப்பது போல, இருகைகளையும் வைத்து சில நொடிகள் சேர்த்து வைக்க அந்த அறையே மெல்லிய பச்சை நிறத்தால் நிரம்பியது. சில விநாடிகள் கழித்து பச்சையன் நகர அனைவரும் விலகி நிற்க பச்சையன் வெளியே வந்தான்.
அனைவரும் சிறிது நேரம் அங்கு நடந்தவற்றை நம்பாமல் வியந்து ஆச்சரியத்தில் பேசாமல் இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து பச்சையனே ஆரம்பித்தான்.
“ நேற்று நான் தங்கி இருந்த ஓட்டல் வரவேற்று அறை பையனை கைகளை சரியாக்கினேன். இன்னும் அந்த ஓட்டலில் வேறு அறையில் தங்கியிருக்கின்றேன். நான் யாருக்கும் எதிரி இல்லை. சில சூழ்நிலைகள்…சில தவறான நேரங்கள்…சில தவறான முடிவுகள் என்னை வில்லனாக காட்டியிருக்கின்றன”.
வசந்தி மெதுவாய் ஆரம்பித்தாள்.
“ இன்னும் நீங்கள் உங்களை முழுவதும் வெளிகாட்டவில்லை. அது தவிர .. நீங்கள் இந்த பூமியை சார்ந்தவர் இல்லை என சொல்லி எங்கள் வயிற்றில் புளியை கரைக்கின்றீர்கள். அப்படியானால் நீங்கள் …?”
“ வசந்தி…. மன்னிக்கவும் பெயரைச் சொல்லலாம் இல்லையா, என்னுடைய சில சூழ்நிலைகள் என்னை சொல்ல விடாமல் கட்டிப் போட்டிருக்கின்றன, அல்லது இப்படி எடுத்துக் கொள்ளலாம். உங்களால் அதை தாங்க முடியாது”.
மாதவி கேட்டாள்.
“ இப்படியே ஏதாவது ஒரு காரணம் சொல்கிறீர்கள். எங்களிடம் இருந்து உண்மையான காரணத்தை மறைக்க பார்க்கறீர்கள். எப்போதுதான் சொல்ல போறீங்க ?”.
பச்சையன் மெதுவாய் எல்லாரையும் சுற்றி ஒருமுறை பார்த்தான். எழுந்து கொண்டான்.
“ நான் நிறைய பேச வேண்டி உள்ளது. நிலா நாம் சற்று வெளியே போய் வரலாமா ?”.
பச்சையன் கேட்டவுடன் நிலாமகள் உடனே எழுந்தாள். அவள் எழுந்த வேகம் அவளுக்குள் எழுந்த காதலின் வேகத்தை விட அதிகமாக இருந்தது. மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க அவளுக்குள் வெட்கம் சுனாமியாய் எழ சற்று தயங்கினாள்.
பச்சையன் சிரிக்காமல் சொன்னான்.
“ யாரும் பயப்பட வேண்டாம். நான் ஒன்றும் அவளை கரைத்து குடித்து விட மாட்டேன். ஏற்கனவே அவள் காதலில் என்னுள் கரைந்து உள்ளாள்”
அனைவரும் சிரிக்க நிலா மகளின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.
இப்போது வசந்தி சிரிக்காமல் பதில் சொன்னாள்.
“ நீங்கள் கரைக்க வேண்டாம் . அப்படியே சாப்பிடலாம்”
நிலா வசந்தியின் காதை செல்லக் கோபத்துடன் திருக ஆரம்பித்தாள். கால்களை தரையில் உதைத்து சிணுங்கினாள்.
அடுத்து ஒருத்தி ஆரம்பித்தாள்.
“ முழு நிலாவான எங்கள் நிலாமகளை மனதை தேய்பிறையாக்கி உங்கள் காதலால் சாய்பிறையாக்கிவிட்டீர்களே.இது நியாயமா பச்சையன் சார்”.
“ போடி ,கண்களுக்கு இங்கு வேலை இல்லை. பச்சையன் சார் கைப்பட்டாலே எந்த நிலாவுக்கு அழகு கூடி விடும்”.
“ ஏய் வாலுகளா, பேசாம இருக்க மாட்டீங்களா ?” நிலா செல்லமாய் கத்த உடனடி பதில் வந்தது.
“ ஓ ! அப்ப நீங்க பேச போறீங்க, நாங்க பேசாம இருக்கனும், அப்படிதானே. அம்மாத் தாயே , கூட்டிகிட்டு போ”.
நிலாவும் பச்சையனும் வெளியே வந்தார்கள்.
“ நிலா வண்டியை நாம பேசிய பூங்காவிற்கே விடு”
பச்சையன் சொல்ல வண்டி கிளம்பியது.
காதல் என்பதே ஒரு மாயாஜாலம்தான். காதலித்தால் காதலிப்பவருக்கு உடலில் , உணர்வில் பல மாயாஜாலங்கள் நிகழும். ஆனால் மாயாஜாலக்காரனே காதலனாக வந்தால்…. நிலாவிற்கு நினைக்க நினைக்க சிரிப்பு வந்தது.
காலில் விழுந்து, பின் காதலில் விழுந்து , பின் மோதலில் ஆரம்பித்தது இறுதியில் காதல் ஜெயித்தது என்ற நிலையில் தான் இருப்பதை நினைத்து நிலா மகிழ்ந்தாள். ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் தற்போது பச்சையன் என்ன சொல்ல போகிறான் என அறியும் ஆவலில் இருந்தாள்.
கண்ணாமூச்சி ஆட்டம் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால் இங்கு காதல் இருவருக்கும் இடையில் கண்ணாமூச்சி காட்டி விளையாடிக் கொண்டு இருந்தது. பச்சையன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தான் காதலில் இருந்து ஒருபோதும் பின் வாங்க கூடாது என்று நிலா தீர்மானித்தாள்.
யாரும் வாழ்க்கையில் தீர்மானம் செய்து காதல் செய்ய ஆரம்பிப்பது இல்லை. ஆனால் காதலித்த பின்தான் பலர் தீர்மானங்கள் எடுக்க ஆரம்பிக்கின்றனர்.
பூங்கா வந்தது. வண்டியை நிறுத்தினாள். இருவரும் பூங்காவிற்குள் நுழைந்து புல்தரையில் அமர்ந்தனர்.
இதுவரை நேருக்கு நேராக பேசி காதலித்தவள், தோழி விமலாவிற்காக மோதியவள் ,இன்று ஒரக்கண்ணால் அவனை ரசித்தவாறே, பக்கத்தில் குணிந்து புற்களை பிடுங்கி கொண்டு இருந்தாள்.
“ அம்மாத் தாயே ஓரக்கண்ணால் ரொம்ப பார்த்தா கண் சுளுக்கிக்கப் போது, அப்புறம் இந்த பூங்காவுல இப்படி வெக்கத்தால புல் எல்லாத்தையும் பிடுங்கி பிளேகிரவுண்டா மாத்திராதம்மா “
பச்சையன் சொன்னதைக் கேட்டு நிலாவை ( அவளை ) வெட்க மேகம் சூழ ஆரம்பித்தது.
“ நிலா இப்படி எடுத்தக்கெல்லாம் வெட்கப்பட்டுகிட்டே இருந்தா என்னை பத்தி எப்ப தெரிஞ்சக்க போற ?”
“ என் அம்மா பாசத்திற்கு பிறகு, என் உயிரைக் காப்பாற்றி என்னை நேசிக்கற உன்னை கண்டா பேச்சு காணாம போகுதய்யா “
நிலா சொல்லி முடிப்பதற்குள் கண்களில் ஆனந்தத்தில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. மறுபடி மனம் விட்டு பேச ஆரம்பித்தாள்.
“ஐயா, நீங்க யார் வேணும்னா இருங்க, என்ன வேணும்னாலும் இருந்துட்டு போங்க, அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. எனக்குள்ள முழுசா புகுந்துட்ட உன்னை நான் எப்படி இருந்தாலும் ஏத்துக்குவேன்” உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் நிலா வாயிலிருந்து வர ஆரம்பித்தது.
காதல் இனம், மொழி, மதம் தாண்டியதுதான். ஆனால் இங்கு பூமியைத் தாண்டிகாதல் பறந்து கொண்டிருந்தது. எல்லை மீறி பழகாமல் , பூமி எல்லையை தாண்டிய காதல் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
பச்சையன் தனக்காக, தன் மேல் கொண்ட காதலால் உருகும் அவளைப் பார்த்து மெழுகாய் உருகினான் மனதிற்குள் பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.
‘ நான் இவளிடம் எப்படி இதைச் சொல்லப் போகிறேன். சொன்னால் அவள் என்ன நினைப்பாள் ? என்னை வெறுப்பாளா ? என் காதலை துறப்பாளா ? இரண்டு நாளாக எனக்கு வரும் செய்தியை இவளிடம் சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வாள் ?”
தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டே ஏதோ சிந்தனையில் இருக்கும் பச்சையனை கண்டு நிலா அவன் முன் தன் வெண்டைக்காய் பிஞ்சு விரல்களால் சொடுக்கினாள்.
“ என்ன பலமான யோசனை , என் இனிய பிராண நாதா ?”.
நிலா மகளைப் பார்த்தவாறே பச்சையன் சொன்னது இதுதான்.
“ நான் உன்னை உண்மையாக காதலிக்கின்றேன். ஆனால் இது தொடருமா எனத் தெரியவில்லை ?”
நிலா திகைத்தாள்.
“ எனக்கு புரியவில்லை “
“ என்னால் உன்னைத் தொடர்ந்து காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை “
நிலா அதிர்ச்சியானாள். அவளின் காதல் நீரின் மேல் வரைந்த ஓவியமா ? காற்றில் எழுதிய கவிதையா ? குழம்பி நின்றாள்.
பச்சையன் உண்மையில் யார் ? அவர்கள் காதலுக்கு இடையில் வந்த அந்த தடை என்ன ?
காதல் விதியை வெல்லுமா ?
காத்திருங்கள் .. இனி….