அத்தியாயம் 01
சிறு அணுவாய் தன் கருவறையில் தடம்பதித்த உருவமற்ற உயிரை
ஈர் ஐந்து மாதம் தன் கருவறைப் பெட்டகத்தில் பாதுகாத்து
தொப்புள் கொடி வழியே தன் சக்தியை வழங்கி மனித உருவாய் பூரணமடையச் செய்யுது
இறுதியில்
தாங்க முடியாத உயிர்வலியையும் தாங்கி தன்னுயிரிலிருந்து ஓர் உயிரை உதிக்கச் செய்யும் பெண்மையின் மாபெரும் வலிமையே தாய்மை
இன்று..
வானமே கரிருளில் மூழ்கியிருக்க வானத்திலோ இடியோடும் இடையிடையே வெட்டும் மின்னல் கீற்றுக்களோடும் பேவென பொழிந்தது அடைமழை
மழையின் பேரிரிச்சலிலுமே சிறு ஒலியாய் ஒலித்தது அவள் குரல்.
பிரசவத்தின் உச்சவலியில் துடித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
பவித்ரா பெயருக்கு ஏற்றாள் போல் பவித்ரமான அழகுடைய பெண்.
அந்த அழகும் கூடியிருந்தது அவள் தாய்மையின் வலியில் சிந்தும் கண்ணீரால்.
தாய்மையில் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் மகத்துவமானது அதை அறிவீரோ மானிடரே.
அவர்கள் அறிவர்
ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வர வலியோடு போராடும் அந்த பெண்கள் அறிவர் அந்த கண்ணீரின் மகிமை எத்தகையது என்று.
அந்த லேபர் அறையிலே வலியோடு போராடிக் கொண்டிருந்த பவித்ரா மனதிலே
தாய்மையை அடையப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியிருந்த போதிலும்
தாம் இந்த கொடூர வலியிலிருந்து பிழைப்போமா இல்லை உயிர் நீப்போமா நான் இறந்துவிட்டாள் என் குழந்தையின் நிலை அய்யோ என்ற கோர எண்ணங்களின் ஆட்சியும் சூழ்ந்து கொள்ள பிரவசவலியோடு கூடவே இந்த எண்ணங்களின் தாக்கத்திலும் பலமடங்கு வலியை அனுபவித்தவளோ "அம்மா ஆஆஆஆஆ" என்றலறித் துடித்தாள்.
இடுப்பென்மை உடைத்து நொருக்கி தொடை இரண்டும் கனத்து இறுகி அடிவயிற்றில் எழும் விபரிக்கவே முடியாத ஓர் உயர்வலியில் ஆயிரம் வாற் மின்சாரம் பாய்ந்தது போன்று உடல் தூக்கிப்போடுவது போலிருந்த வலியில் நிமிடத்திற்கு நிமிடம் ஓர் பெரும் அலறலோடு துடித்தாள் பெண்ணவள்.
இங்கே அறையினுள் அவள் வலியில் அலறித் துடிக்க அறைக்கு வெளியே துடித்துக் கொண்டிருந்தது மறு உயிர்.
அவள் குரலின் ஒலியில் மடிந்து தரையில் வீழ்ந்து கண்ணீர் சிந்தினான் அந்த ஆண்மகன்.
அவன் மனமோ குற்றம் புரிந்த குற்றவுணர்ச்சியில் தவித்தது
அவன் பெயர் கௌதம்.
பவித்ராவின் காதல் கணவன் காதலால் கரம்பிடித்தவன் அவன்.
தன்னை நம்பிவந்தவளை காயப்படச் செய்துவிட்டோமே என்ற எண்ணத்திலும் அவள் வலியில் துடிப்பதை செவிவழியே விழும் அவள் அலறலில் வலியை உணர்ந்ததிலும் துடித்துப் போனான்.
அழுது கொண்டே தரையில் வீழ்ந்தவன் வாய் உச்சரித்த வார்த்தைகள் யாவும் மன்னிப்பு ஒன்றே.
" ஐ ம் ஸாரி பவி தப்பு பண்ணிட்டேன் ஐ ம் ரியலி ஸாரி என்ன மன்னிச்சிடுடி ப்ளீஸ்.. என்ன மன்னிச்சிடு என்கிட்ட திரும்ப வந்திடு.. உன்ன புரிஞ்சிக்காம நடந்திக்கிட்டேன் ஸாரிடி" என கதறியழுதான்…
அவன் கதறலும் அவள் கதறலும் அந்த அடைமழையின் பேரிரைச்சலில் அடங்கிப் போக எண்ணங்கள் மெதுவாய் சுழன்று பின்னோக்கிச் சென்றது.
கௌதம் பவித்ரா இருவரும் ஐந்து வருடமாய் உயிருக்குயிராய் காதலித்தனர்.
அவர்கள் காதலுக்கு எந்த எதிர்ப்புமின்றி வீட்டில் சம்மதித்த கணமே இருவீட்டிலும் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் அமோகமாக நிறைவேறியது.
கௌதம் பவித்ராவின் மீது கொண்ட அளவில்லாத காதலின் தாக்கத்தால் அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது அவள் காதல் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தான் இதன் விளைவு திருமணம் ஆன புதிதில் கூட்டுக்குடும்பமாய் இருந்த தன் வீட்டிலிருந்து அவளை பிரித்து தனியே அழைத்துச் சென்றான்.
வீட்டினர் அனைவரிடமும் வேலை மாற்றம் என பொய்யுரைத்து அவளை வேறு ஊர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.
கௌதமின் இந்த அளவில்லா காதலில் கட்டுண்ட பவித்ராவும் அவன் போக்கிற்கு அவனோடு மகிழ்ச்சியாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியிருந்தாள்.
அவள் அறிவாள் அவன் தன் மீது கொண்ட பொஸஸ்ஸிவை காதலித்த காலங்களில் தன் மீது அவன் கொண்ட இந்த பைத்தியகாரத்தனமான காதலை நண்பர்கள் கேலி செய்த போதிலும் அதை பொருட்டாகவே கொள்ளாது தான் தான் எல்லாம் என தன்னிடம் குறையாத காதலை காட்டிய கௌதம் மீது எப்போதும் போல் அவளுக்கு அளவுகடந்த காதல் பூத்தது.
பவித்ரா கௌதம் இருவரும்
தனிவீட்டிற்கு வந்த நாள் தொடக்கம் மகிழ்ச்சி ஒன்றே எங்கள் தாரக மந்திரம் என்பதுபோல் வலம் வந்தவர்களின் வாழ்க்கையில் வந்து வீழ்ந்தது ஓர் அதிர்ச்சி.
அது பவித்ராவிற்கு ஆனந்த அதிர்ச்சியாக இருக்க கௌதமிற்கோ என்னவென்று கூற முடியாதோர் அதிர்ச்சி.
இவ்விருவரின் வேறுபட்ட மனநிலைக்கு காரணமானது ஒன்றே ஒன்று அது தாய்மை பவித்ராவின் வயிற்றில் காதலால் கருவாகி உருவாகி நின்ற கௌதமின் உயிரால் பவித்ராவின் பெண் என்ற ஸ்தானத்தில் இருந்து தாய் என்ற ஸ்தானத்திற்கு கிடைத்த பதவியுயர்வு.
தாய்மை என்ற நிலையை மகிழ்வாய் எண்ணி மகிழ்ந்தவள் தன் பதியின் (கணவனின்) வார்த்தைகளில் கலங்கிப் போனாள் அன்று.
அன்று.
காதல் திருமண வாழ்க்கை மெதுவாய் நகர என்றும் போல் காலையில் கௌதம் வேலைக்கு சென்றிவிட..தன் அன்றாட வேலைகளை கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தாள் பவித்ரா.
தன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு வாந்தியும் தலை சுற்றலுமாய் இருக்க துவண்டு போனவள் காலையுணவை முடித்துவிட்டமர்ந்த சில நிமிடத்திலே
குடலே முழுவதுமாய் உருவி வெளியே வீழ்வது போன்று அனைத்தையும் வெளியே தள்ளியிருந்தாள்.
"அய்யோ என்னாச்சு எனக்கு ஏன் இப்பிடி வாமிட் வருது" என தலையை தன் கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று ஏதோ தோன்ற
நாட்குறிப்பை பார்த்தவள் உணர்ந்து கொண்டாள்.
தன் எண்ணம் சரியா என்பதை மேலும் உறுதி செய்ய சில பொருட்களை வாங்கி வந்து சோதித்து பார்க்க அதுவோ அவள் நினைப்பை உறுதிப்படுத்த ஆனந்தமாய் அதிர்ந்தாள்.
கண்களில் கண்ணீர் நிரம்பிவழிய தன் அடிவயிற்றை தடவியவள் இதழ்களிலும் முகத்திலும் தாய்மையின் பூரிப்பில் பூத்தது.
"கௌதம் நம்ம குழந்தை இப்போ என் வயிற்றில இருக்குடா நான் எவ்வளவு ஹெப்பியா இருக்கேன் தெரியுமா என் கௌதமோட குழந்தை என் வயித்துல என் உயிரோடு உயிரா கலந்து என் வயித்துல இருக்கு கௌதம் நம்ம காதலோட சின்னம் என் வயித்துல இருக்குடா" என்றவள் மனமோ இப்போதே தன்னவனிடன் இதை கூற வேண்டும் என்ற எண்ணம் உதிர்க்க அவசரமாய் அவனிற்கு அழைக்க மறுபுறமோ அழைப்பு ஏற்கப்படாமல் இருந்தது....
"ப்ப்ச்ச் என்ன பண்றான் இவன்" என்றபடியே மீண்டும் மீண்டும் அவனை அழைபேசியில் தொடர்பு கொண்டு தோற்றவள் சலிப்போடு கட்டிலில் அமர்ந்தாள்.
"ப்ப்ச் எங்கடா போய்ட்ட எவ்வளவு சந்தோஷமா உனக்கு இந்த விசயத்தை சொல்லனும்னு கால் பண்ணேன்…ப்ப்ச் போடா லூசு" என எதிரில் மாட்டப்பட்ட அவன் போட்டோவை பார்த்துசெல்லமாய் அழுத்துக் கொண்டவள் பின்..
"ம் இது நல்லது தான்டா மாமா நீ நேர்ல வா உன்கிட்ட இந்த விசயத்தை சொல்லி உன் முகத்துல உண்டாகுற அந்த சந்தோஷத்தை நான் பார்க்கனும்" என்றவள் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
ஆபிஸில் வேலை அனைத்தையும் முடித்த கௌதமோ அப்போதுதான் சைலென்ட் மூடில் போட்டு வைத்திருந்த தன் மொபைலை ஆராய்ந்தவன் பவியின் அழைப்புகளை பார்த்து.
"என்னது பவிக்குட்டி இத்தனை வாட்டி கால் பண்ணியிருக்கா"என்றபடி அவளை அழைக்க அவளோ அழைப்பை துண்டித்தாள்.
"ஆஹா என் பவிக்குட்டி ரொம்ப கோபமாயிருக்கா போலயே டேய் கௌதம் இன்னைக்கு உனக்கு சங்கு தான்" என புலம்பியபடி தன் அறையை விட்டு வெளியேற எதிர்பட்டான் அவன் நண்பன் தினேஸ்.
"டேய் மச்சான் என்ன இன்னும் வீட்டுக்கு கிளம்பாம இருக்க" என்க.
அவனோ முகத்தில் அசூசையுடன்
"அடப்போடா வீட்ட போய் என்ன பண்ண சொல்ற" என்ற சலிப்போடு நண்பனை பார்த்தான்.
நண்பனின் சலிப்பில் அவன் தோள் மேல் கரம் பதித்தவன்"என்ன மச்சான் இப்பிடி சலிச்சுக்குற என்னாச்சு உனக்கு" என்க..
தினேஸோ"பின்ன என்னடா இந்த வாழ்க்கையை நினைச்சாலே வெறுப்பா இருக்கு" என எரிச்சலோடு மொழிந்தவனை ஆழமாய் பார்த்த கௌதம்.
"என்னாச்சு தினேஸ் வீட்ட எதும் பிரச்சனையாடா"என வீட்டில் ஏதும் பிரச்சனையோ என்ற எண்ணத்தில் கேள்வியெழுப்ப அவனோ "ஆமா பிரச்சனை தான் மச்சி" என்றிருந்தான்..
"டேய் என்னடா என்னாச்சு காவ்யா (தினேஸ் மனைவி) ஏதும் சண்ட போட்டாளா என்றவனிடம்
"அட போ மச்சி இங்க ஒழுங்கா பேசியே ஒருவாரமா ஆகுது இதுல எங்க சண்டை போடுறது" என அலுப்போடு சொன்னவனை புரியாமல் பார்த்தவாறு "ஏன்டா காவ்யா அம்மா வீட்டுக்கு போய்ட்டாளா? அதான் இப்பிடி சலிச்சுக்குறியா"என்றிட.
"அவ எங்கேயும் போகல வீட்ட தான் இருக்கா"என்றவனை முறைத்தபடி"
டேய் எரும ஒரே வீட்டுக்க இருந்தா ஒருவாரமா பேசாமயிருக்கிங்க" என்று கேட்க.
தினேஸோ "டேய் மச்சான் உனக்கு என் பீலிங்ஸ் புரியாது மச்சி உனக்குன்னு ஒரு பையன் வரும் போது தெரியும் இந்த அப்பாவியின் நிலைமை" என பாவமாய் கூற.
அவன் பேச்சு புரியாத கௌதமோ குழப்பத்துடன் "என்ன தான்டா சொல்ல வர இப்போ ஒழுங்கா சொல்லு எரும" என்றிட..
தினேஸோ நண்பனுக்கு புரிய வைக்கும் முகமா
"டேய் கௌதம் என் பிரச்சனை என்னன்னு தானே கேக்குற என் பிரச்சனையே என் பையன் தான்டா அவனால தான் என் பொண்டாட்டி கூட பேசி ஒரு வாரம் ஆகிடுச்சு" என்றான்..
"என்னடா சொல்ற உன் பையனாலயா நீ காவ்யா கூட பேசாம இருக்க" என யோசனையா கேட்க..
அவனோ"அட ஆமா மச்சி இந்த பொண்ணுங்க எல்லாம் காதலிக்கும் போதும் கல்யாணம் பண்ண புதுசுலயும் மட்டும் தான் நம்ம பின்னாடியே குட்டி போட்ட பூனைங்க போல சுத்துவாளுங்க அப்புறமா குழந்தை பிறந்துச்சுனு வை நம்மள கண்டுக்கவே மாட்டாங்கடா.
என் பொண்டாட்டி என் பையன் பண்ற சேட்டையிலே அவன் பின்னாடி ஓடி கலைச்சி போயிடுறா நானும் ஆசையா போய் பேசுனா அவன் மேலே காட்ட முடியாத கோபத்தை என் மேலே காட்டிர்ரா மச்சி" என அழுதுவிடுபவன் போல கூறிய நண்பனின் தோற்றம் கௌதமிற்கு சிரிப்பூட்ட பக்கென அவனை பார்த்து சிரித்தவன் அவன் முதுகில் தட்டியபடி "டேய் எரும இதெல்லாம் ஒரு காரணமா போட டேய்" என்க.
நண்பனின் சிரிப்பில் காண்டானவனோ"இப்போ நீ எல்லாம் சொல்லுவடா உனக்குன்னு ஒரு குழந்தை வரும்போது தெரியும் உன்னை விட்டுட்டு ஆல் டைம் அவன் பின்னாடியே தான் சுத்துவா பவித்ரா.
நீ வேற ஓவர் பொஸஸ்ஸிவ் உனக்கு போட்டியாவே உன் பையன் இல்ல பொண்ணு வருவா பாரு அப்போ தெரியும் இந்த நண்பனின் நிலைமை" என கேலி போல் அவனிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றுவிட.
கௌதமோ கோபத்துடன் நின்றிருந்தான்.
"என் பவி எனக்கு தான் அவ எனக்கு அப்புறமா தான் யாரயும் பார்ப்பா அது என்குழந்தையாவே இருந்தாலும்" என்றவனின் மனதிலோ பவித்ராவின் மீதான பொஸஸ்ஸிவ் தலை தூக்கி நின்றது.
தொடரும்.