chitrasaraswathi
Member
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK97 ன் அழகில் தொலைத்தேன் ஆருயிரே எனது பார்வையில். விஸ்வாமித்திரன் பெங்களூரில் வளர்ச்சி அடைந்த பங்கு பரிவர்த்தனை நிறுவனம் வைத்திருக்கும் அவன் மற்ற துறைகளில் ஈடுபட முதலில் உணவகங்கள் தொடர்பாக புதிய நிறுவனம் தொடங்குகிறான். அந்த நிறுவனத்தின் முதல் தொடக்கம் தமிழ் நாட்டில் தொடங்க முடிவு செய்கிறான்.
பொள்ளாச்சி அருகில் பி.எஸ். பவன் என்ற உணவகத்தை சுகாதார பிரச்சினைகள் காரணமாக மூட வைக்கும் அவன் அந்த உணவகத்தை தன் நிறுவனத்துடன் இணைத்து ஒப்பந்தம் செய்து அதற்கு பதிலாக அந்தக் குடும்பத்தின் பெண் கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ள கேட்கிறான்.
பி.எஸ் பவன் பரம்பரைத் தொழிலாக செய்து வரும் சொக்கலிங்கம் மற்றும் சுந்தரேசன் சகோதரர்கள். ஆண் மக்களுக்கு கீழானவர்கள் பெண் மக்கள் என்று நினைக்கும் அவர்களின் சொந்த சகோதரி சரஸ்வதி தன் குடும்பத்தை எதிர்த்து தாணுமால்யனை காதல் திருமணம் செய்து கொண்டவர். அவனது கல்லூரிப் படிப்பு முடியும் வேளையில் இவர்களை அவமானப்படுத்தும் அம்மாவின் பிறந்த வீட்டினரை பழிவாங்க நினைக்கும் அவனது எண்ணத்தை புரிந்துக் கொள்ளும் சின்ன மாமாவின் பெண் மேனகா அவனது தோழியாக இருந்தவள்.
விஷ்வாவின் பழிவாங்கும் நடவடிக்கையில் கார்த்திகா திருமணத்திற்கு முன் தன் காதலனுடன் வெளியேற மேனகா உடன் விஷ்வாவின் திருமணம் நடக்கிறது. விஷ்வா ஏன் அவர்களை பழி வாங்குகிறான் மேனகாவின் இலட்சியமான கஃபே நடத்தும் எண்ணத்தை தனது பழிவாங்கும் நடவடிக்கையால் கெடுக்கிறான். தைரியமான பெண்ணான மேனகாவால் என்ன செய்ய முடிந்தது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துகள்.