மதுரை ராஜூ
Moderator
இதுவரை ஆல்பா….
ரஷ்ய விஞ்ஞானி கண்டு பிடித்த சிறு கருவியால் இதுவரை கண்டு பிடிக்க முடியாத எஸ்ரா கோளை கண்டு வியந்த மேகலாவும் மணியும் திகைத்து நிற்க அவர்கள் கண்டு பிடிக்க முயன்று கொண்டு இருக்கும் பிளானட் எக்ஸ் கண்டுபிடிக்க முடியுமா ? டேவின் ரகசிய திட்டம் என்ன ............?
குழப்ப ஆல்பா……07
மணியும் மேகலாவும் ”எஸ்ரா” கோளைக் கண்டு வியந்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சி சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது.
டேவ் தொடர்ந்தார், “ என்னுடைய முயற்சி தொடர்ந்துக் கொண்டு இருக்கும். கூடிய சீக்கிரம் இன்னும் ஒரு மாதத்துல அடுத்த நிலைக் கருவியை கண்டு பிடிச்சுருவேன். அப்புறம்….” என்று பேசியவரை இடைமறித்த து அலைபேசியின் சத்தம். எடுத்துப் பேசியவர் ஒரு சில நிமிடங்களில் பேசி முடித்து விட்டு இவர்கள் பக்கம் திரும்பினார்.
”மன்னிக்கவும், ஒரு முக்கிய வேலை, போய் விட்டு வருகிறேன்.”.
டேவ் அறையை விட்டு வெளியேற இருவரிடமும் பெரிய அமைதி நிலவியது.
“மேகலா என்ன நடக்குதுன்னு புரியலை. நாம எந்த நிலையில இருக்கோம்னு புரியலை. உன் மேல கொண்ட காதல் உண்மையினா….” பேசிக் கொண்டு வந்தவன் வாய் தவறி சொன்ன ‘காதல்’ எனும் வார்த்தையால் நாக்கை கடித்துக் கொண்டான். பயத்துடன் மேகலாவை பார்த்தான்.
ஏதோ சிந்தனையில் இருந்த மேகலா அவனைத் திரும்பி பார்த்தாள். அவளுடைய அழகான பெரிய கண்கள் இன்னும் பெரிதாய் மாறி இவனை முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஆழமாய் பார்த்தாள்.
“ என்ன சொன்னீங்க மணி சார்?”
மணிக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. மேகலாவுக்கு அதிக கோபம் வந்தால் மரியாதையாக (?) பேச ஆரம்பித்து விடுவாள்.
“அது வந்து கொஞ்ச நாளாவே என் மனசு என்கிட்ட இல்ல மேகலா. அடிக்கடி தடுமாறுறேன். நிறைய மறந்து போகுது. ஆராய்ச்சியில கவனம் வர மாட்டேங்குது.”
மணி சற்று தைரியமாக பேசி முடித்த பிறகு மேகலா மணியை பார்த்து பேசினாள்.
“ அப்ப விண்வெளி ஆராய்ச்சியை விட்டு என்னைய ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருந்தீங்களா சார் ?”
“ஆமா , பெண் மனசு ஆழம் மட்டுமல்ல அந்த மனசு அடைய முடியா அளவுக்கு ரொம்பத் தூரம்னு நான் புரிஞ்சுகிட்டேன்.”
”ஓ ! கதை அப்படி போகுதா சார், உங்களுக்கும் எனக்கும் எப்படி ஒத்துப் போகும் சார் ? நீங்க நாத்திகம் நான் ஆத்திகம், ஆன்மீகம் எப்படி காதலுக்கு துணை போகும் ?”
“”கடவுளே காதல் திருவிளையாடல் நடத்தவில்லையா?”
“பரவாயில்லை நல்லா சமாளிக்கிறீங்க. அது கடவுள். எனக்கும் அந்த காதலிக்கிற எண்ணம் இல்லையே, நான் என்ன பண்ண?”
மணிசேகரன் பரிதாபமாக பார்த்தான். அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தான்.
மேகலா மெதுவாக அவனருகில் அமர்ந்தாள். அவனை உற்றுப் பார்த்தாள். அவன் திருதிருவென முழிப்பதைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டாள்.
”நான் ஒருவேளை உங்க காதலை ஏத்துக்கலைன்னா என்ன செய்வீங்க?’
“காதலுக்கு கண் இல்லை, அதாவது அதற்கு கண்ணுக்கு முன்னாடி இருக்கற சாதி, மதம், இனம், மொழி, நிறம், வயசு கலாச்சாரம்னு எதுவும் தேரியாது. சில சமயம் யாருன்னு தெரியாம குரலை வச்சு, ஆளைப் பார்க்காம கூட காதல் நடப்பது உண்டு. நீ சரின்னு சொல்லைனா கூட நான் தற்க்கொலை பண்ணிக்க மாட்டேன். உன் நீனைவா எங்கயாவது கண் காணாத இடத்துலிருப்பேன்.”
“ எது எதுக்கோ வயசாகுது, காணாம போகுது. ஆனா இந்த காதல் உணர்வு மட்டும் வருசக்கணக்கா தொடர்ந்துகிட்டுதான் வருது”.
“ அழிவில்லாதது காதல் உணர்வுதான். மனுசன் மட்டையாய் போய் கட்டையில கிடந்தாலும் மறையாத உணர்வு காதல் மட்டும்தான்”.
“ அப்படிங்களா மணி சார், காதல் பற்றி பலவித ஆராய்ச்சி பண்ணியிருப்பிங்க போல. நீங்க எப்பவுமே இப்படிதானா அல்லது இப்படிதான் எப்பவுமேவா ?”
“ மேகலா மருத்துவ துறையில எத்தனையோ கருவிகள் வந்தாலும் எத்தனையோ நோய்களை கண்டுபிடித்தாலும், காதல் நோயை மட்டும் கண்டுபிடிக்க எந்ந கருவியும் இல்லை”.
“ காதலை கண்டுபிடிக்கறதுல அறிவியல் தோத்துப் போச்சு, அப்படிதானே மணி சார்”.
” அறிவியல் தோத்துப் போகலாம், ஆனா இந்த மணி தோத்துப் போக மாட்டான்””.
“ காதலிச்சு என்ன செய்யப் போறே ?”.
“ காதலிக்காம நீ என்ன செய்ய போற” ?.
“ கல்யாணம் பண்ணவங்கெல்லாம் காதலிச்சவங்களா ?”.
“ காதலிச்சவங்க கல்யாணம் பண்றதில்லையா ?”
“ உன்னை திருத்த முடியாது. மூளை மழுங்கிப் போச்சு”.
“ இதயத்தை தொலைச்சவன் மூளையைப்பத்தி கவலைப்பட மாட்டான் “.
“ ரொம்ப முத்திப் போச்சு போல . உன்னை குணப்படுத்த முடியாது “.
“ உன் பார்வை வீச்சும், காதல் பேச்சும் , தொட்டும் தொடாமலும் படும் உன் கை விரல் ஸ்பரிஸம் போதுமடி எனக்கு. எந்த நோயும், நாயும் ஏன் பேய்கூட அண்டாது என்னை “.
“ கண்ணை மூடி பேசலாம். ஆனா கண்மூடித்தனமா பேசக்கூடாது”.
“ நம்மை மீறி வரும் கொட்டாவியைக் கூட அடக்க முடியாது. அதேபோலதான் காதலும். மனசை மீறினா மூளை சொன்ன பேச்சைக் கேட்காது”.
“ பெண்களின் உடல் அமைப்பையும் அழகையும் பார்த்து வருவதுதான் உங்க வீணாப் போன காதல்”.
“ உடல் பார்த்து வருவது காமம். மனசு பார்த்து வருவதே காதல் இல்லைன்னா மனம் தானா விரும்பி வருவதுதான் காதல். அமிலம் ஊற்றப்பட்டு முகம் சிதைந்த பெண்ணை ஒருவர் மணம்புரியவில்லையா?”.
“ எங்கோ ஏதோ ஒரு இடத்துல நடக்கறதை வச்சுப் பேசக் கூடாது”.
“ பெண்கள் ஒருத்தரை விரும்பினா யார் வந்தாலும் அவங்க காதலை தடுக்க முடியாது, ஆனா அதே சமயம் அவங்களை யாராவது வற்புறுத்தி காதலிக்க நினைத்தா அதை கடவுளே சொன்னாலும் அனுமதிக்க மாட்டாங்க”.
“ சரிய்யா, எனக்கு உன் மேல விருப்பம் இருக்கா இல்லையான்னு எப்படி உனக்குத் தெரியும் ?”
“ எந்த பெண்ணும் தனக்கு பிடிக்கலைன்னா எதிர் ஆள்கிட்ட ரொம்ப நேரம் பேச மாட்டா. ஆனா நீ நிறைய கேள்வி கேட்டு என்னை சோதிச்சு , நான் உண்மையிலேயே உன்னை காதலிக்கறேன்னா தெரிஞ்சிக்க ஆசைப்படுற”.
மேகலா அயர்ந்துப் போனாள், தன் மனதை படம் பிடித்ததுப் போல பேசுகிறானே என்று. எந்த வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருப்பவனை கண்டு மனதிற்குள் மகிழ்ந்தாள். ஆதரவற்ற தன்னையும் நேசிக்க ஒரு ஜீவன் இருக்கிறது என நினைத்து திகைத்துப் போனாள்.
என்ன கேள்வி கேட்டாலும் தடுமாறாத அவன் காதலை கண்டு இவள் தடுமாறினாள.
இவனுக்குள் என் மேல இவ்வளவு காதலா? மேகலா அவனை யோசனையாய் பார்த்தாள்.
பதில் சொல்லாமல் தன்னை உற்று நோக்கிய அவளைக் கண்டு குழம்பினான்.
பதில் எப்படி வரும் என்று தெரியாமல் அவளை உற்று நோக்கி ஏதாவது பேசுவாளா என எதிர்ப்பார்த்து காத்திருந்தான்.
குழப்பம் குற்றுச் செடியாய் அவர்கள் இடையில் முளைத்து எழ காதல் காற்று வீசலாமா வேண்டாமா என திகைத்து நின்றது. ஆன்மீகம் வேடிக்கை பார்த்தது.
காதல் கனியுமா ? மனங்கள் கவிழுமா ?
காதல் மலரக் காத்திருப்பது சுகம்தானே !
காத்திருங்கள்…..
ஆல்பா வரும்…..