எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கட்டிக்கரும்பே என் கண்ணாட்டி‌ - 2

NNK77

ஏங்கிய விழிகளும்... கனிந்த நெஞ்சமும்...

அத்தியாயம் 2​

“எம்மா குறிச்சி வந்தாச்சு, குறிச்சி இறங்கறவங்க எல்லாம் எந்திருச்சு தயாரா நில்லுங்க.” என்று நடத்துனர் சத்தமாக குரல் கொடுக்கவும், ஒவ்வொருவரும் எழுந்து நின்று இறங்குவதற்கு தயாராக, சிட்டுவும் பூவலகியும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஒரு சேர இறங்க தயாராகினர்.​

“அடியே சிட்டு இந்த பஸ் போயிட்டு ரிட்டன் வரும் தானே! நம்ப வேணா பஞ்சாயத்தில் இருந்து தப்பிக்க திரும்பி வர இந்த பஸ்லையே ஏறி நம்ம காலேஜ் ஹாஸ்டலுக்கு போயிடுவோமா?.” என்று தன் தோழியை காப்பாற்ற எண்ணி பூவலகி வழி கூறவும். அவளை அனல் கக்க முறைத்தால் சிட்டு.​

“நானும் என் மாமாவும் காதலிக்கிறோம்னு நீ நம்புறியா பூவு.”என்று இலகுவாக கேட்ட சிட்டுவை கண்டு அதிர்ந்தவள்,​

“நீ எப்படிடி உன் மாமாவை காதலிப்ப. உன்னோட மாமாவை நீ எந்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறேன்னு எனக்கு தெரியும். நாள் முழுக்க உன் கூட தான் இருக்கேன். காலேஜ்லயும் சரி, ஹாஸ்டல்லையும் சரி, நீயும் நானும் பிரிந்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது நீ உன் மாமாவை இல்ல இன்னொருத்தரை காதலிச்சிருப்பேன்னு சொன்னா கூட சத்தியமா என்னால நம்ப முடியாது.” என்று பொட்டில் அடித்தார் போல் உரைத்தவளைக் கண்டு மெல்லிய புன்னகை உதிர்த்தவள்,​

“அப்புறம் எதுக்கு புள்ள நான் ஊரை விட்டு ஓடி ஒழியனும். நான் தான் தப்பே பண்ணலையே. "துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும்.​

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற பாரதியின் வரிகள் தான் என் காதுல ஒளிச்சுக்கிட்டே இருக்கு. கண்டிப்பா என் மேல தப்பில்லைன்னு நிரூபிச்சிட்டு தான் நம்ம காலேஜுக்கே கிளம்பனும். இப்ப நான் உன்ன பவானி வரைக்கும் கூட்டிட்டு போனேனே எதுக்குன்னு தெரியுமா?.” என்ற சிட்டுவின் கேள்விக்கு பூவலகி உதட்டை பிதுக்க, அவளின் கைபிடித்து பேருந்தின் முன் படிக்கட்டில் இறங்கியவரே,​

“இன்னைக்கு நான் எதுக்கு உன்னை பவானி வரைக்கும் கூட்டிட்டு போனேன்னு பஞ்சாயத்துல தெரிஞ்சிடும் வா‌.” என்று உரைத்தபடியே தங்கள் நிறுத்தத்தில் வந்து இறங்கினர் தோழிகள் இருவரும்.​

“என்ன சிட்டு ஏன் இங்கயே நின்னுட்ட வா போலாம்.” என்று அவளின் கைபிடித்து இழுத்த பூவழகியிடம்,​

“கொஞ்ச நேரம் இரு புள்ள, ஒரு ஆளு வரணும் வந்ததும் பேசிட்டு கிளம்பிடலாம்.” என்றவளின் பதில் மொழி பூவழகிக்காக இருந்தாலும். அவளின் விழிகள் என்னமோ பேருந்தின் பின்னாடி படிக்கட்டு வழியாக நடத்துனருக்கு கையசைத்து பதில் அளித்துவிட்டு இறங்கும் அரவிந்தின் மேலேயே நிலைத்து நின்றது.​

“நீ ஏன் புள்ள அரவிந்த் அண்ணனையே பார்த்துகிட்டு நிக்கிற. இருக்கிற பிரச்சினைல வேற எதையும் இழுத்து விட்டுடாத சிட்டு. நம்ம கிளம்பலாம் வா.” என்று மீண்டும் அவளின் கரம் பிடித்து தரதரவென இழுத்த பூவலகியிடம் “ப்ளீஸ் ப்ளீஸ் பூவு ஒரே நிமிஷம் நில்லு. என்னால அவரோட அமைதியை பார்த்துட்டு கண்டும் காணாம ஒதுங்கி போக முடியல. அவரை நாலு வார்த்தை நறுக்குனு கேட்டுட்டு வந்துடறேன் ப்ளீஸ்.” என்று பூவலழகியிடம் இறைஞ்சி நின்றவளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவள்,​

“ஓ இன்னைக்கு பஸ்ல அவரை ஒருத்தன் பேசினானே அதை சொல்லுறியா!.”​

“ஹீம்ம்ம் ஆமா பூவு. அவன் இவரை எப்படி பேசினான். இவர் ஏன் அமைதியா போகணும். என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.” என்று அரவிந்திற்காக மனம் தாளாமல் தன் தோழியிடம் சன்னமாக புலம்பியவளின் முன் வந்து நின்றான் அரவிந்த்,​

“என்னத்தா எதுக்கு இங்கேயே நின்னுகிட்டு இருக்கீங்க. யாரும் வராங்களா?. அவங்களுக்காக காத்திருக்கீங்களா?.”என்று வயது பெண்கள் தனியாக நிற்பது சரி இல்லை என்றுணர்ந்து அவர்களுக்கு காவலனாக முன்வந்து வினவினான் ஆடவன்.​

“நாங்க யாருக்காகவும் காத்திருக்கல அண்ணா. இதோ இவ தான் உங்களுக்காக காத்திருக்கா.” என்று பட்டென்று பூவு மொழிந்துவிட, அரவிந்தின் கேள்விக்கனைகள் சிட்டுவைத் துளைக்க தயாராகின.​

“என்னைய எதுக்கு புள்ள இப்ப பார்க்கணும். வயசுப் புள்ளையா நேரம் காலமா வீட்டுக்கு போய் சேர வேண்டியதுதானே.”என்று சிட்டுவை மிரட்டிய இதழ்கள் அவனின் கம்பீர மீசைக்குள் ஒளிந்திருக்க. அவனை மேலிருந்து கீழ் வரை அளவிடும் பார்வை பார்த்து நின்றால் பாவையவள்.​

அவளின் ஊடுருவும் விழிகள் தன்னை அங்குலம் அங்குலமாக செதுக்குவதை கண்டவன். கரம் கொண்டு தன் மீசையை அழுத்தமாக தடவி முறுக்கி விட, அய்யனார் அப்பனையே நேரில் பார்ப்பது போல் கம்பீரமாக உயர்ந்து நின்றிருந்தவனை வார்த்தைகளால் வசை பாடத் துவங்கினால் சிட்டு.​

“ஆள் பார்க்க பனை மரத்துல பாதி உசரத்துக்கு வளர்ந்து நிக்குறீங்க. இம்புட்டு பெரிய மீசை வச்சிருக்கீங்க. ஆனா உங்கள பேசின ஒருத்தனை செவிள் மேலேயே ஒன்னு வைக்க உங்களால முடியாதா?. இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி ஊரார் பேச்சையே வாங்க போறீங்க.”என்று அவன்ிற்காக அவனிடமே வாதாடும் பெண்ணை பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கவும்,​

“சரியாத்தா இனிமேல் எவன் பேசினாலும் அவன் செவில்லையே ஒன்னு வைக்கிறேன் போதுமா!. இப்ப நீ வீட்டுக்கு கிளம்புறியா?.” என்று அவளை அங்கிருந்து நகர்த்துவதிலேயே குறியாக இருந்தவனை காணும் போது சினம் துளிர்த்தது சிறியவளிற்கு.​

“இப்ப என்ன?. என்னைய இங்கே இருந்து நகர்த்திட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற குடிசை வீட்டு விலை மாதுக்கிட்ட போகப் போறீங்க. அப்படித் தானே. ஊருல பேசுறவனுக்கு எல்லாம் நான் அப்படி இல்லைன்னு நிரூபிக்க இப்படி தான் எவ்ளோ ஒருத்தியை தேடி போகணுமா?.” என்று அரவிந்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைக்க துவங்கினால் காரிகையவள்.​

விலைமாதுவை பற்றி சிட்டு பேசத் துவங்கியதும், அவர்களின் சம்பாஷனைக்கு இடையூறு தராமல் நாசுக்காக பத்தடி தள்ளி நின்றால் பூவழகி.​

எந்த விடயம் சிட்டுவிற்கு தெரியக்கூடாது என்று அவளை துரிதமாக கிளப்ப நினைத்தானோ! அந்த விடயம் அவளின் வாயால் கேட்கும் போது கசக்க செய்ய, “தேவையில்லாம பேசிட்டு இருக்காத. ஒழுங்கா இங்க இருந்து கிளம்பிரு. வயசு பிள்ளைங்க தனியா நிக்கிறீங்களேன்னு என்ன ஏதுன்னு கேட்க வந்தது தப்பா போச்சு. முதல்ல இங்கிருந்து இடத்தை காலி பண்ணுங்க.”என்று முகத்தில் அடித்தார் போல் மொழிந்தவனிடம் மேலும் பேச முனையாமல் வேக எட்டுக்களால் அங்கிருந்து இடத்தை காலி செய்திருந்தால் சிட்டு. ‌​

வாடிய முகமாய் தன்னுடன் நடந்து வரும் தோழியின் முகத்தை காண இயலாதவளாய், “இது உனக்கு தேவையா சிட்டு. நீ அவன் நல்லதுக்காக தான் சொல்ற. ஆனா! அவன் புரிஞ்சுகிட்டானா. எப்படித் திமிரா பேசுறான் பாத்தியா. சரியான திமிரு புடிச்சவன். இந்த திமிரு புடிச்சவன் கூட வாழ முடியாம தான் அவன் பொண்டாட்டி ஓடிப் போயிட்டா போல.” என்று பூவழகி வார்த்தையை விட, சட்டென்று தன் கரம் கொண்டு அவளின் அதரங்களை மேலும் பேச முடியாமல் அடைத்தவள்,​

“உனக்கு தெரியுமா அவன் பொண்டாட்டி ஓடிப் போயிட்டான்னு.”​

“ம்ம்ம் தெரியுமே, பஞ்சாயத்துல சொன்னாங்க தானே! இவன் கொடுமை தாங்க முடியாம தான் அவன் பொண்டாட்டி ஓடிப் போயிட்டான்னு.”​

“யாரு இவரு கொடுமைப்படுத்துறவரா?. பஸ்ல தன்னை ஒருத்தன் கேவலமா பேசியும், திரும்பி பேசாம அமைதியா விலகி போனாரு நீயும் பார்த்த தானே.”​

“ம்ம்ம் ஆமா.”என்று மொழிந்த பூவின் குரல் உள்ளே போனது.​

“சரி அத விடு. ஒருவேளை பொம்பள பொறுக்கியா இருந்து அதை தாங்க முடியாம அவ ஓடி போயிருப்பாளோன்னு, நீ நெனச்சா! ரெண்டு பொம்பள புள்ளைங்க தனியா நிக்கிறோம்னு, நமக்கு அரணா வந்து. நம்ம முன்ன நின்னு, கேள்வி கேட்டுருப்பாரா?.” என்றவள்,​

“ஊர்ல ஒவ்வொருத்தனும் அவரை பொட்ட பொட்டன்னு சொல்லும் போது, அவனுங்க வீட்டு பிள்ளைங்க கைய புடிச்சு இழுத்து, நான் அப்படி இல்லைன்னு நிரூபிக்க எம்புட்டு நேரம் ஆகப்போகுது. ஆனா அது ஆம்பளத்தனம் இல்ல. தன்னை நம்பி வந்த பொண்ணு, பண்ண தப்பை இப்ப வரைக்கும் வெளிய சொல்லாம காப்பாத்திட்டு வரான் பாரு, அதுதான் உண்மையான ஆம்பளைக்கு அழகு. ஏன் சித்த நேரத்துக்கு முன்ன கூட நான் அவர் கூட பேச நிக்கிறது தெரிஞ்சும். எங்க தேவையில்லாம பேசி வயசு புள்ளையோட பெயர் கெட்டுப் போக கூடாதுன்னு, கிளப்பிவிட நினைச்சார் இதுவும் ஒரு ஆம்பளைக்கு அழகு தான்.” என்று அரவிந்தின் அருமை பெருமைகளை ஒவ்வொன்றாக பட்டியலிடும் சிட்டுவை கண்டு விழிகளை சுருக்கிய பூவு,​

“அவரு குடிசை வீட்டுக்கு போறதுக்காக தானே உன்னை அவசரமா கிளப்ப நினைச்சாரு.”​

“ஆமா குடிசை வீட்டுக்கு போறார் தான். அங்கேயும் அந்த மனுஷன் போலன்னு வையேன். இவன் அவனே தான்னு பச்சைய குத்திடுவாங்க இந்த மனுஷனுங்க.”​

“உனக்கு எப்படி அவரைப் பற்றி இம்புட்டு விஷயம் தெரிஞ்சது. அரவிந்த் அண்ணாவோட பஞ்சாயத்து நடக்கும் போது நம்ம ஒன்பதாவது படிச்சிட்டு இருந்திருப்போமா. நம்மளை அந்த பஞ்சாயத்து பக்கம் கூட விட்டுயிருக்க மாட்டாங்க. ஆனா நீ அவர் பொண்டாட்டி ஓடிப் போக அவர் காரணம் இல்லைன்னு அடிச்சு சொல்லுற, கொஞ்சம் விட்டா சூடம் ஏத்தி சத்தியமே பண்ணுவ போல. அப்புறம் எதுக்கு தான் அந்த பொண்ணு ஓடிப் போச்சு.” என்று மீண்டும் அதே கேள்வியை தாங்கி நின்றால் பூவழகி.​

“நேரம் காலம் வரும் போது என்ன நடந்துச்சுன்னு நானே உனக்கு சொல்லுறேன். அதுவரைக்கும் அரவிந்தை பற்றி தப்பா ஒரு வார்த்தை பேசாத பூவு. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். அப்படி பஞ்சாயத்தில் சொன்ன ஒரு சொல் தான் அவரோட வாழ்க்கையை மொத்தமா புரட்டிப் போட்டுருச்சு.”என்று மொழிந்த சிட்டுவின் குரல் என்னவோ போல் ஒலித்தது.​

“எந்த பஞ்சாயத்துல அவரோட வாழ்க்கையை தொலைச்சாரோ! இப்ப அதே பஞ்சாயத்துல தான் வந்து நிக்குது உன்னோட வாழ்க்கையும். உன் அக்கா சாயந்திரம் என்ன சொல்லப் போறான்னு நினைச்சா இதயம் ஏகத்துக்கும் தாளம் தப்பி துடிக்குது. நீ என்னன்னா சாவகாசமா சுத்திட்டு இருக்க.” என்று இருவரும் வாயளந்து கொண்டே வந்து நின்றயிடம் அரவிந்தின் வீட்டு வாயில்.​

“ஏ ஆத்தா வீட்டுல இருக்கியா.” என்ற சிட்டுவின் குரல் கேட்டு வெளியே வர முனைந்த வள்ளி அப்பத்தாவின் முன் வழிமறைத்து நின்றான் அரவிந்த்.​

“என்ன ராசா எதுக்காக இப்படி குறுக்கால நிக்கிற. அந்தப் புள்ள வேற வாசல்ல நின்னு கத்திகிட்டே கிடக்குது.”​

“இங்க பாரு அப்பத்தா. அவ என்ன பேசினாலும் நான் வீட்டுல இருக்கிற மாதிரி காட்டிக்காத.”என்று கட்டளையாக தன் அப்பத்தாவிடம் உரைத்தவன். ஜன்னல் அருகே சென்று, அவள் உருவம் முழுவதும் தன் விழிகளில் விழும்படி மறைந்து நின்று கொண்டான் ஆடவன்.​

 
Top