‘See I was on the verge of breaking down
Sometimes silence can seem so loud
There are miracles in life I must achieve
But first I know it starts inside of me
If I can see it, then I can be it
If I just believe it, there's nothing to it…
I believe I can fly
I believe I can touch the sky
I think about it every night and day
Spread wings and fly away’
என்று செவிகளுக்குள் நுழைந்து அகத்தினில் பதிந்த பாடலில் லயித்தவாறு விழிகளினை அழுத்த மூடி தனது இருக்கையில் சாய்ந்திருந்தான் அவன்.
கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில், துபாயில் இருந்து இத்தாலி நோக்கி பறந்து கொண்டிருந்தது அந்த பிரமாண்ட வணிக வகுப்பு விமானம். ஒவ்வொரு பயணிக்காகவும் தனித்தனி தடுப்புகள் அமைக்கப்பட்டு அத்தனை கட்சிதமாக வடிவமைக்கப்பட்ட விமானம்தனின் ஜன்னலுக்கு அப்பால் சூரியக்கதிர்கள் இயற்கையின் வர்ணஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.
சாதாரண நாட்களாயிருந்தால் அந்த எழிலின் நிறப்பிரிகைகளை புகைப்படமாக எடுத்துத் தள்ளியிருப்பான் அவன். ஆனால், இன்றோ அத்தனையும் தலைகீழான உணர்வு. காலத்தால் கடந்து வந்தாலும், இதயத்திலிருந்து அத்தனை சுலபமாக வெட்டி அடியோடு தூக்கியெறிய முடியாத தவிப்பில் அல்லவா தத்தெளித்துக் கொண்டிருக்கிறான்.
“அப்பா, அம்மா முகம் கூட சரியா தெரியாத இவனை எப்படி எங்க வீட்டு மருமகனாக்குவது? எங்க குடும்பத்து கௌரவம், மரியாதை எல்லாம் இவன் பெயரைச் சொல்லி கெடுத்துக்கவா?”
“அனாதை என்றாலும் சரினு என் பேத்திக்கு கட்டி வெக்கலாம். ஆனா, பெறந்ததும் பெத்தவங்க உயிரை குடிச்சிட்டு, வளரும் போது வளர்த்த பாட்டியையும் வதைச்சு அவங்களையும் கர்த்தர்கிட்ட அனுப்பிவைச்ச ராசியில்லாவன் இவன். நாளைக்கே என் பேத்திக்கும் இவனால ஏதும் ஆச்சுனா?”
“கல்யாணம் என்ன விளையாட்டா? எம் போத்திக்கு என்ன குறைச்சல்னு கேட்கிறேன். அழகு, டாக்டர் படிப்பு, எல்லாத்துக்கும் மேல எத்தனை கோடி சொத்துக்கு இவ சொந்தக்காரி தெரியும் தானே? போயும் போயும் ச்சீ கண்ட க..”
மிதமான அந்த விமானத்தின் குளிரூட்டியின் குளிரினையும் தாண்டி குப்பென முகம் வியர்க்க மூடியிருந்த விழிகளைத் திறந்து கொண்டான் அவன். காதில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலினை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து வறண்டு போயிருந்த தொண்டையை சரிசெய்யவேண்டி முழு மூச்சாக நீரினை பருகி முடித்தான்.
அப்போதும் ஏதோ உள்ளுக்குள் அழுத்த தனது சிகையினை கோதிவிட்டு, ஒன்று முதல் பத்து வரை எண்ணி இரண்டு மூன்று முறை மூச்சினை இழுத்து விட்டுக் கொண்டவன் தனது இடது புற மார்பகத்தை கை கொண்டு வருடிவிடவும் தவறவில்லை.
கண்ணுக்குள் காட்சியாக விரிந்த அந்த விசாலமான வரவேற்பு அறையும், அங்கு அவன் பிறப்பைப் பற்றி எழுந்த விமர்சனங்களும் மீண்டும் மீண்டும்
சுவற்றினில் விட்டெறிந்த பந்தாக தாக்குவதை தவிர்க்க முடியாதவனாக தனது அழைப்பேசி தொடுதிரையை வெறிக்க ஆரம்பித்தான்.
பளீச்சென வரிசை முரல்கள் சிரிக்க, கண்களில் ஒருங்கே காருண்யமும், சிறுபிள்ளையின் குறும்பும்மின்னிய அப்பெண்ணின் உருவம் அவனது தொடுதிரையை அடைத்திருந்து ஆட்சி செய்தது. தனது ஆட்காட்டி விரல் கொண்டு அப்புகைப்படத்தை வருடிவிட்டவனின் உடலில் வழமை போலவே பரவசம் ஓடி மறைந்து ஒரு கட்டுக்குள் அடங்கியது.
“ஜெனிஃபர் ஏஞ்சல்” அவனது இதழ்கள் தன்னால் முணுமுணுத்துக் கொண்டன.
“ஷீ இஸ் லுகிங் கோர்ஜியஸ்” விமானப் பணிப்பெண்ணின் குரல் கேட்டுப் பார்வையை விலக்கிப் பார்த்தவனிடம் மீண்டும் அவ்வாக்கியத்தை உரைத்தாள் அப்பணிப்பெண்.
சட்டென அவனது குறும்புத்தனம் தலைதூக்க, “நாட் மொர் தென் யூ சுவீட்டி! பட் டோண்ட் கம் கிளோசர் டியர், காஸ் யூ ஆர் …” ‘ஹோட்’ என்று வலது கையினை ஆட்டி சைகை செய்தபடியே தனது ஒற்றை கண்னை சிமிட்டிக் காட்டினான்.
அப்பெண்னோ அழகாக இதழ்விரித்து, “நெவர் லைக் யூ மேன்” என்றாள். “ஐ ஸீ” எனக் கூறியவன், தலையை மெதுவாக சாய்த்து சிறியதாக சலாம் வைத்தான். மேலும் அவனின் துடுக்குத்தனம் அதிகரித்து,
அப்பெண்ணுடன் ஏதேதோ பேசி சிரித்து என அவள் வழங்கிய உணவுப்பொதியைப் பெற்றுக் கொண்டான்.
அவனுக்கான உணவினை வழங்கிவிட்டு மேலும் ஏதும் தேவையுள்ளதா என விசாரித்துவிட்டு அவ்விடம் விட்டு அடுத்த பயணியைக் கவனிக்கசென்ற பணிப்பெண் ஒரு நொடி அவன் மீது ஆராய்ச்சி பார்வையை செலுத்தியபடியே திரும்பி நடந்தாள்.
வைன் நிற டீ சர்ட், மண் நிறத்தில் கால்சராய், மென்மஞ்சல் ஷூ என கச்சிதமான ஆடை அணிந்து, பிடரி தாண்டி வளர்ந்த அடர்தியான கூந்தலை சிறு சிண்டாக ரப்பர்பாண்டில் அடக்கி வைத்திருந்தான். இருபதுகளின் கடைசி அல்லது முப்பதுகளின் தொடக்கத்திலிருக்கும் சாதாரண இந்திய வாலிபன் எனும் தோற்றத்தை விடவும் நூலளவு வேறுபடுத்திக் காட்டும் அவன் ஹேசல் விழிகளும் ஒட்டியும் ஒட்டாமலும் உறவாடும் புருவங்களும் அவனுக்கு மேலும் வசிகரத்தை கூட்டியது.
அவனுடைய ஆடைகள், கைகடிகாரம், கழுத்தில் தவழ்ந்த சங்கிலி அனைத்தும் ‘நான் செல்வந்தனே’ எனும் விதமாக புகழ்பெற்ற வியாபாரக்குறிகளை தாங்கிநின்றன. அதற்கேற்றவாறே அவன் நடத்தையும் செல்வச்செழிப்பை பறைசாற்றியது. இருப்பினும் அவனுடைய உள்ளார்ந்த குணம் ‘டேக் இட் ஈசி’ ரகத்தினைச் சார்ந்தது தான்.
எத்தனையோ ரணங்கள் உள்ளே அமிலமாக அரித்துக் கொண்டாலும் வெளியில் சிரிப்பை தொலைக்காதவன். எதுவாயினும் அவனுடைய முகம், அதில் வந்து செல்லும் பாவங்கள் அனைத்திலும் சில பல தேடல்கள் குடியிருக்கும். அழகை விழியின் தேடலாக ரசிப்பவன் சற்றுமுன் பேசியது போல் வாய்மொழியாக புகழ்ந்துவிடுவான்.
ஆனால் அவனின் இதயத்தின் தேடலுக்கான விடையை உள்ளுக்குள்ளே பூட்டிப் புதைத்து விட்டிருந்தான். அவன் ஜோஷ் டீ ஆல்வின் கிரிஸ்தோஃபர்.
அகத்தினை தட்டித் திறந்து தலைகீழே விழ வேண்டிய சில நாட்களை கடக்க வேண்டியே இப்போது விதி எனும் அரக்கன், அவனுடன் கடல் கடந்து பயணிக்கின்றான்.
*****
கட்டடக் கலைகளுக்கும் பழமைவாய்ந்த புராதன தேவாலயங்களும் பெயர்பெற்ற இத்தாலி நாட்டின் தலைநகராமான மிலனில் மாலை ஆறுமணியைக் கடந்தும் சூரியன் விடைபெறாமல் தனது கதிர்களை பரப்பி ஒலியூட்டிக் கொண்டிருந்தான்.
அம்மாநகரத்தின் மத்தியில் கம்பிரமாக உயர்ந்திருந்த வைத்தியசாலைக் கட்டடத்தின் புற்றுநோய் வைத்தியப்பிரிவு மாத்திரம் மூன்றில் ஒரு பகுதியை வியாபித்திருந்தது.
புற்றுநோயானது பல்வேறு உடற்பகுதிகளை மெல்லக்கொன்றாலும் பெண்களுக்கே தனித்து விடப்பட்டது போன்ற மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அவ்வைத்தியசாலையின் ஒன்றுகூடல் அறையில் குழுமியிருந்தனர்.
“இறைவன் பெண்களைப் படைத்து, அடுத்த சந்ததிகளை உருவாக்குவதற்கான உடற்கட்டமைபையும் வழங்கி, அந்த உயிரின் பசிபோக்கும் உடல் அமைப்பையும் நம்மிடமே வழங்கியுள்ளான். வெறும் உணர்வுகளினை கிளர்ந்து எழச்செய்யும் அங்கமோ அல்லது காமத்தின் முதற்படியே அல்லாமல் எம்மார்பகத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு உயிர்பை கடத்துவதற்கு பங்களிப்போம்.
இருப்பினும் ஆண்டவரே, எது எமக்கு சிறந்தது என்ற வழியினையும் காட்டக் கூடியவர். இயற்கையாகவும் சிலபல செயற்கை நுண்ணுயிகளாலும் எமக்கு ஏற்படும் இவ்வாறான மார்கப்புற்று நோய் ஒரு சாபமென கருதாமல் அதற்கான சரியான வைத்திய நடைமுறையை பின் பற்றி இழந்த சிறகிலும், நமக்குள் ஒடுக்கி விடப்பட்ட சிறகிலும் மெல்லப் பறந்து பல உயரங்களைத் தொடுவோம்.”
கருணையே உருவான வடிவில் முகத்தில் உறைந்த சிறு புன்னகையுடன் அப்பெண்களுக்கு மத்தியில் இத்தாலியனில் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.
நீண்ட வெள்ளை நிறக் கவுன் பாதணிகளை தொட்டுவிடுமாறு பாந்தமாக அணிந்திருந்தவள், விரித்து விடப்பட்ட முதுகு தொடும் அலையான கூந்தலை வெளியில் விட்டவாறு கழுத்தினைச் சுற்றி சால் ஒன்றினை மார்பு வரை இழுத்து மூடி நாகரிக மங்கையாகவும் அதிக ஒப்பனையின்றி சாதாரண ஒரு இந்திய பெண்ணின் சாயலில் இருந்தாள்.
பேசும் இத்தாலியன் மொழியின் சரலமும், நீண்ட நாள் வெளிநாட்டு வாசத்தினால் சற்று அதிகபடியான வெண்ணை நிற மேணியும் அவளுக்கே உரித்தான தனி அழகினை வழங்கியிருந்தது.
பேச்சு முடிவில், அனைத்து நோயாளிகளின் முகத்தில் தோன்றிய தெளிவினை திருப்தியுடன் ஏறிட்டவள், நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உடைகள், சில பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழு உறுப்பினர்களின் உதவியுடன் வழங்கினாள் அவள், ஏஞ்சலின் ஸ்டார்.
மேலை நாடுகளில் வாலண்டியர் என அழைக்கப்படும் சுயேட்சையாக சமூக பணிகளில் ஈடுபடும் ‘கோட்ஸ் ஹேண்ட்’ எனப்படும் நிறுவனத்தின் பகுதி செயளாலர் அவள். தனது மாதாந்திர உழைப்பில் தன் தேவை தவிர்த்து மீதி பணத்தினை இவ்வாறான தொண்டு நிறுவனத்தின் பெயரில் செலவிடுவதனால் என்னவோ அவளை சக குழு உறுப்பினர்கள் ஏஞ்சல் என அழைக்கின்றனர்.
மாதம் ஒரு முறை இவ்வாறான வைத்தியசாலை நோயாளிகள், வீடற்றோர், தொழிலற்றோர் என சில குறிப்பிட இடங்களுக்கு சென்று உதவி செய்வதே இவளினது வழக்கமாகிப் போனது.
அனைத்து பணிகளையும் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக முடித்து, ஒழுங்கமைத்துக் கொடுத்த வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் நன்றி தெறிவித்து என அவள் விடைபெறவே இரவு ஒன்பது மணியைக் கடந்திருந்தது.
இவ்வாறான பணிசெய்யும் நாட்களில் வீட்டிற்குச் செல்லும் முன் தனது வேலையிடத்திற்கு சென்று திரும்புவதை வழக்கமாக கொண்ட ஏஞ்சலின் ஸ்டார் அன்று ஏனோ நேரடியாக தனது இருப்பிடத்திற்கு சென்றாள்.
காரினைத் தனதுதரிப்பிடத்தில் நிறுத்தியவள் நகரத்தின் மத்தில் அமைத்திருந்த ‘பென்த்ஹெவுஸ்’ வகையினைச் சார்ந்த ஆடம்பர அடுக்கு மாடிக்குடியிருப்பின் நான்காவாது தளத்திற்கு லிப்டின் உதவியுடன் சென்றடையும் போது உடல் தொப்பலாக வியர்த்திருந்தது அவளுக்கு.
கதவினைத் திறந்து சோபாவில் அமர்ந்தவளோ கண்களை மூடி, தலையினை அழுத்த கைகளினால் பிடித்துக் கொண்டாள். “கோட், எத்தனை நாளுக்கு இந்த பயம் என்னை துரத்துமோ? லிப்ட்க்குள் போனதும் அந்த இருட்டும், கதவு பூட்டப்பட்ட அந்த அறையும் என் கண்ணுக்கு முன்னே தோன்றனும்?” என சத்தமாக புலம்பியவளுக்கு கைகள் நடுக்கமெடுக்க ஆரம்பித்தன.
“இரண்டு மாத்திரை எடுக்கலான இன்னைக்கு தூக்கம் காலி.” கைப்பைக்குளிருந்து மாத்திரையை தேடி எடுத்தவள் உடனே அதனை விழுங்கிக் கொண்டாள்.
மெதுவாக உடல் எங்கோ பறப்பது போன்ற மாயை எழ கண்களை திறந்து கொண்டே பொத்தென சேபாவின் கீழுள்ள விரிப்பில் மடங்கி விழுந்தாள்.
“தென்றல் காற்றும் ஊமைக் காற்று தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு அவன் தானே நம்மைச் செய்தான் துன்பங்கள் ஏனடா?” என பாடலை முனங்கியவள் அப்படியே சயனித்திருந்தாள்.
உறங்கிய அவள் விழிகளுக்குள் மங்கலாக ஆயிரம் காட்சிகள் விரிந்தன.மாலையில் அவள் சந்தித்த சில மார்பகங்களைத் தொலைத்த பெண்கள். எத்தனை மூடியும் அவர்களின் உடலிலிருந்த வெற்றிடம் அதற்கு பின்னால் உள்ள வெட்டுக் காயங்கள் என நீண்டு கொண்டே சென்றது அவள் கனவு.
எங்கோ கிராமத்தில் மாடிவீட்டு படிச்சுவர், இரண்டு ஆண்களின் வலுவான பிடி, “பசிக்குது சோ சோறு, இல்ல தண்ணி கூட போதும்.” என்ற அழுகைக்குரல்.
தீக்காயம், “அம்மா! சுடுது இது எனக்கு வேணாம்…” என்று ஈனக் குரலிலான முனங்கள். அத்து மீறிய சில கரங்கள், தடதட இரயில் வண்டி, இறுதியாக, “இந்த வலி எனக்கு வேணும், இன்னும் இன்னும்
இது எனக்கு வேணும், இது என்னோட பிறப்புக்கு நான் கொடுக்கும் தண்டனை. இந்த போதை….” கடைசியாக அத்தனையும் இருட்டாகிப்போனது.
ஒரு தேவதை கேட்பாரற்று தரைவிரிப்பிலே கண்ணயர, இருட்டுக்குள் மறைந்து நின்ற விதியோ அவளினைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தது.
****
பசுபிக் பெருங்கடலினில் மிதந்து கொண்டிருந்த சரக்குக் கப்பலின் முகப்பிலிருந்த கம்பிகளைப் பற்றியவாறு நின்றிருந்தான் அந்த நெடியவன்.
நெடு நெடுவென்ற உயரத்துடனும் முழுமையாக சவரம் செய்யப்பட்ட முகலட்சனத்துடனும் இருந்தவன் கடற்காற்றுக்கு அசைந்த ஒட்டவெட்டியும் சிலுப்பி நின்ற கேசத்தினை அழுத்தக் கோதிக்கொண்டான் அவன். வஷிஸ்டன் பார்த்தசாரதி.
இலக்கற்ற பார்வை கும்மிருட்டாகவிருந்த வானத்தை நோக்கியிருக்க, அங்கே பிறை நிலவும் ஒற்றை நட்சத்திரமும் உறவாடிக் கொண்டிருந்தது.
“கேப்டன், உங்க போன் ரொம்ப நேரமா அடிச்சிட்டிருக்கு.” கையிலிருந்த தொலைபேசியை வஷிஸ்டனிடம் நீட்டினான் புதிதாக வேலையில் சேர்ந்த சென்னை வாலிபன் ஒருவன்.
‘தாய் கிழவி’ என்று பதிவு செய்யப்பட்ட இலக்கத்திலிருந்து தொடர்சியாக ஐந்து தவறிய அழைப்புக்களை வாட்ஸ்அப் செயலி காட்டியது.
“ப்ச் கிழவி உசுர வாங்குது. அம்புட்டு அவசரம், வெசனம் பிடிச்ச ஆத்தா இன்னைக்கு என்ன வையப் போகுதோ?” சத்தமாக சலித்துக் கொண்டே இவன் பாட்டியை அழைத்தான். இவனது அழைப்பிற்காக நீண்ட நேரம் காத்திருப்பார் போலும் உடனே அவரும் அழைப்பினை ஏற்றுவிட்டார்.
“ராசா, வஷீ! எப்படி டா இருக்க?” அக்கறையாக வந்து விழுந்தது கேள்வி. “நேத்ததைக்கு எப்படி இருந்தேனோ அப்படியே தான் பாட்டி இருக்கேன். தெனம் தெனம் புதுசா மாற நான் என்ன போலி சாமியாரா? வேசம் சரியில்ல கலைச்சிட்டேன்னு சொல்ல.” எப்படி கடினப்பட்டும் குரலில் சிரிப்பை மறைக்கப்பாடுபட்டு கடைசியில் சத்தமாக நகைத்தும் விட்டானவன்.
“குட்டிக்கழுதை! எப்போ ராசா வீட்டுக்கு வர, ரொம்ப நேரமா இந்த போனை போட்டுடே இருக்கேன், நீ பாட்டுக்கு கண்டுக்காம விட்டியோ?” என்றார் வாஞ்சையாக.
“ஐயோ கிழவி! எத்தனை வாட்டி சொல்றது. நடுக்கடல்ல உங்க தாத்தா வேலுப்பாண்டியரா டவர் கட்டி வச்சிருக்கார்? எப்ப செல்லுலார் வேர்க் பண்ணுமோ அப்போ தான் கூப்பிட முடியும். எண்ணி பத்து நாளுல உன் கண்ணு முன்னாடி நிற்பேன் பாத்துக்கோ.” எப்போதும் போல பாட்டியின் குடும்பத்ததையும் பாட்டியையும் வம்பிழுத்தவன் அவர் கேட்ட தகவலையும் வழங்க தவறவில்லை.
“சரி, சரி வந்ததும் இட்லிக்கு போயிடாத. அந்த ஸ்டர்ரூ பொண்ணுக்கு வாய்க்கு ருசியா கறிவடகம் போட்டுத் தாறேன்டா” என்றவர் மேலும் எதுவோ பேச வந்து தயங்கியபடியே மௌனமானார்.
“ஆத்தா, அது இட்லி இல்லத்தா இத்தாலி அதுபோல அவ ஸ்டர்ரூ இல்ல ஸ்டார். அந்த பெயரெல்லாம் வெளிஉலகத்துக்கு தான் எனக்கு எப்போவும் அவ **** தான். எனக்கு எப்படி சமாளிக்கனும்னு பத்து வருச அனுபவம் இருக்கு நான் பாத்துக்குவேன். நீ வெசனப்படாத. இங்க நெட்வேர்க் சரியில்ல. வைக்கட்டுமா. மிஸ் யூ கிழவி.”
கரகரத்த தொண்டையுடன் பேசியவனிடம், “டூ மிணிட்ஸ்.” என்று கூறிய பாட்டியோ அவனை மேலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி அழைப்பைத் துண்டித்தார்.
“மீ டூ வை எப்படி சொல்லுது பாரு! எல்லாம் நைட்க்கு மேகி சாப்பிடுறதால் வந்தது.” பாட்டியின் நக்கலில் உதடு வளைத்து சிரித்துக் கொண்டே முனங்கியவன், சிறிது தூரத்தில் நின்ற அந்த வாலிபனின் கழுத்தினைச் சுற்றி கை போட்டு வளைத்தவாறு,
“உண்மைச் சொல்லு, டைட்டானிக் படத்துலவார சீன் பார்த்து தானே இந்த வேலைக்கு படிச்சே?” எனவும் அவ்வாலிபனோ நெழிந்துகொண்டே அசடு வழிந்தான்.
“அட நான் சொன்னது, ரோஸ் என்ட் ஜக் கம்பியப் பிடிச்சு நிக்குற சீன் தம்பி நோ கட்டிப்பிடி” என பெரும் குரலெடுத்து சிரிக்கவும், அவ்வாலிபன் ‘எடுத்தேன் பார் ஓட்டத்தை’ என ஓடி மறைந்தான்.
நெற்றியில் லேசாக தட்டிவிட்டுக் கொண்டு வஷீ மீண்டும் வானத்தை நோக்கினான். இந்த படிப்பு, அதன் பின்னான கப்பல் பணி எல்லாமே டைட்டானிக் படம் பார்த்ததன் விளைவுதான். இளமை துருதுருப்பில் திருட்டு தனமாக படம் பார்த்து அப்பாவிடம் அடிவாங்கி, ‘நான் கப்பலத்தான் பார்த்தேன். நீங்க பார்க்க வேணாம்னு சொன்னிங்க நான் அங்கேயே வேலைக்கு போய் காட்டுவேன்’ என்ற சபதத்தில் முடிந்தது.
இன்று படிப்படியாக கடந்து கேப்டனாக வளையவருகிறான். படிப்பு, வேலை, கடல் நடுவில் வாட்டும் தனிமை என நாட்கள் நகர்ந்தாலும் அந்நாட்களிடையே வந்து போனது ஒரு தேவதையின் முகம் கூடத்தான்.
கடல்தேவதை போலத்தான் அவளும் அவனுக்கு, ஆழ ஆழச் செல்லும் கடலுக்குள் அத்தனை இரகசியம் கொட்டிக்கிடக்கும் அதே போலவே காயங்களை அடக்கி அடக்கி வாழ்கிறாளே அவள்.
அவளைப் பற்றி நினைக்கையில் வஷிஸ்டன் தனது கைகளை விரித்துப் பார்த்தான். வலது கரம் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த கரத்தினால் அவள் முகத்தை தொட்டபோது அவளுக்கு வெறும் பதினெட்டு வயதே. இவனை விட இரண்டு வயது சிறியவள். மாதம் வருடம் கடந்து இப்போது முப்பது வயதின் ஆரம்பத்தில் நிற்கிறான் அவன்.
முழுதாக பத்து வருடங்கள் கடந்து விட்டிருந்தும். வெளிப்பூச்சும், அவள் அணிந்து கொண்டுள்ள முகமூடியும் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் அல்லவா இறுக்கப் பிடித்து வைத்திருக்கிறாள்.
வெள்ளி நிற பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது ஏற்படும் சத்தமும், விதவிதமான உணவுப்பொருட்களின் கலவையான வசாமும் அச் சமையல் கூடம் முழுவதும் வியாபித்திருந்து.
“செஃப்! இந்த லிமென்செல்லோ திரமிசு காசெரோவின்( limoncello tiramisu casero) வாசனையை கொஞ்சம் சரிபாருங்க. சீனி ஒரு கிள்ளுதல் (Pinch) அளவு அதிகமாகியிருக்கும் போல.”
தன்முன்னே பேஸ்ட்ரி செஃப்யினால் (pastry chef) நீட்டப்பட்ட வெள்ளை நிற நீண்ட தட்டிலிடப்பட்ட உணவினை கையில் பெற்றுக் கொண்டாள் ஸ்டார்.
லைம் எல்லோ எனப்படும் எழுமிச்சை நிறத்தில் தட்டில் பரப்பியிருந்த அவ் இனிப்புப் பதார்த்ததினை ஆராய்சியாக பார்த்தவள் தனது நாசிக்கு அறையடி தூரத்தில் வைத்து முகர்ந்து பார்த்தாள்.
“பத்து கிராம் சீனி அதிகமாகிருக்கு செஃப். இதை வாடிக்கையாளருக்கு பரிமார வேண்டாம்.” என்றவள் அடுத்தாக வெதுப்பக பகுதிக்குள் நுழைந்தாள்.
“இறைச்சி எல்லாம் சரியான பதத்தில் சுடுபட்டு இருக்கு. இதே வெப்பநிலையை மாற்றிடாம எல்லா இறைச்சியையும் சுட்டு எடுத்திடுங்க. பீட்சா டாப்பிங்கு சரியாகவிருக்கும்.” என மீட்ஸ் செஃபிடம் (Meat chef ) கட்டளையிட்டவள் அடுத்தாக சோஃசியர் செஃபின் இடத்திற்குச் சென்றாள்.
சோஃசியர் செஃப் சின்னதாக இதழசைத்து “ குட் மார்னிங் சூ செஃப்.” எனவும் ஸ்டாரும் புன்னகைத்து சம்பிரதாயமாக காலை வணக்கத்தை தெரிவித்தாள்.
சோஃசியர் (Saucier) செஃபினால் அலங்கரிப்பட்ட உணவு பாத்திரங்களை பார்வையிட்டவள் சிறு சிறு மாற்றங்களை செய்து விட்டு அடுத்தடுததாக அனைத்து செஃப்களையும் சந்திந்து, அவர்களின் சமையலைப் பரிசோத்தித்து என நேரத்தினைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
மிலன் நகரத்தில் புகழ்பெற்ற இத்தாலியன் உணவகமென்றின் சூ செஃப்பாக (Sous chef) பணிபுரிகின்றாளவள். அவ் உணவத்தின் இருபதுக்கு மேற்பட்ட செஃப்களும் இதர பணியாளர்களும் என ஐம்பது முதல் அறுபது வரையான நபர்கள் வேலை செய்கின்றனர். பொதுவாகவே இவர்களிடையே இத்தாலியன், ஸ்பெனிஸ், ஆங்கிலம் என அவரவர்க்கு தகுந்தது போன்ற மொழிகளில் பேசிக்கொள்வார்கள்.
எஸ்கடிவ் (Executive) செஃப் எனும் உயர் நிலைக்கு அடுத்ததாக சூ செஃப் வகையரா அடங்கும். அனைத்து செஃப்களினையும் மேற்பார்வை செய்து எஸ்கடிவ் செஃபிடம் அறிக்கையிட்ட பிறகே இவளுடைய சமயற்பணி தொடரும். காலை முதல் நள்ளிரவு வரை தொடர்சியாக பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு சேவை.
ஆம் உணவிடுவது வேலையைத் தாண்டிய ஒருவகை சேவையே. அந்த நாளுக்கான அறிக்கையை குறிப்பெடுத்தபடி எஸ்கடிவ் செஃபின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் ஸ்டார்.
“டோக் யூர் சீட் ஸ்டார்.” தனது மேசைக்கு எதிரினிலிருந்த இருக்கையில் அமரும் படி பணித்தார் அவ் உணவகத்தின் எஸ்கடிவ் செஃப் வில்லியம்ஸ். ஸ்டாரும் இருக்கையில் அமர்ந்து குறிப்புக்களை பகிரத்தொடங்கினாள்.
சுமார் ஒரு மணி நேரமாக உணவுகள் தயாரிப்பு முதல் மூலப்பொருட்களின் தரம் தொடர்பான அனைத்தையும் கூறி, கலந்தாலோசித்த ஸ்டார் அவரிடமிருந்து விடைபெற்று கதவினில் கை வைத்த போது,
“ஸ்டார் வட் யூ திங்கிக் அபவுட் டேனியல்” எனக் கேட்டார் வில்லியம்ஸ். “ப்ச்! அவரைப் பற்றி நினைக்க என்ன இருக்கு செஃப்?’’ சலிப்பான குரலில் கேட்டவளின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.
“தனிப்பட்ட விடயங்களை வேலை நேரத்தில் பேசுவது சரி கிடையாது தான் ஸ்டார். ஹ்ம்! டேனியல் என்னோட நீண்ட கால நண்பன். சோசியல் ரிங்கிங்கைத் தவிர எந்த கெட்ட பழக்கவழக்கமும் இல்லாதவன். என் நண்பன்னு பொய்யாக சொல்வதை விரும்பவில்லை, கல்யாணம் பண்ணிக்க எல்லாத் தகுதியும் இருக்கும் ஆள் அவன்.
ஏனோ முப்பத்தைந்து வயசாகியும் திருமணத்தில் பிடிப்பு இல்லாம சுத்திட்டான். இப்போ உன்னை பார்த்ததும் ஏதோ ஆசை போல. நீ கொஞ்சம் யோசிச்சு பாரு!” ஒரு வழியாக சொல்லி முடித்தார் வில்லியம்ஸ்.
“செஃப்! முதல்ல உங்க ப்ரெண்ட் உங்களைப்போல தான் இருப்பாங்க என யாரும் வாதிக்க முடியாது. உங்களுக்கு அப்படி ஒன்னும் பெரிய குறையே கிடையாது. உங்க உணர்வுகளோட பொறுந்தக் கூடிய ஒரு ஆணை நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கோங்க.
ஆனால் என்னால இந்த கல்யாணம் எனும் பிணைப்புக்குள்ள எப்போதும் நுழையமுடியாது. சோ தயவுசெய்து, டேனியல்க்கு புரிய வைங்க.” வில்லியம்ஸ்க்கு தேற்றுதலாக பேசியவள் கடைசியில் கெஞ்சலாக முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்.
வில்லியம்ஸின் அறையிலிருந்து நோராக ஓய்வறைக்குள் நுழைந்தவளின் காதுகளுக்குள் திருமணம் எனும் வார்த்தையே மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டன.
சென்ற மாதத்தில் டேனியல் இவர்களினது உணவகத்திற்கு தனது அலுவலக நண்பர்களுடன் உணவருந்த வந்திருந்தார். சில சமயங்களில் லைவ் கவுண்டர் பார் பக்கமாகவுள்ள ஊழியர்களை பார்வையிட செல்லும் ஸ்டாருடன் அன்று வில்லியம்ஸும் இணைந்திருந்தார்.
இருவரும் அவ்விடத்தை சுற்றிவரும் போது தற்செயலாக டேனியலினை சந்தித்த வில்லியம்ஸாே அருகிலிருந்த ஸ்டாரினையும் அறிமுகப்படுத்த தவறவில்லை. கைகுழுக்கலுடன் சில வார்த்தைகள் பேசி முடித்தவளும் அவ்விடம் விட்டு விடைபெற்றாள்.
சரியாக அச் சந்திப்பு நிகழ்ந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஒரு பல்பொருள் அங்காடியில் மீண்டும் டேனியலைச் சந்தித்தாள். டேனியலாக முன் வந்து இவளிடம் பேசிய போதும் ஏற்கனவே அறிமுகமான ஒரு நபருடனான நலன்விசாரிப்பாகவே அச்சந்திப்பு நிகழ்ந்தது.
ஆனால் மூன்றாவது முறை இவள் வழக்கமாக செல்லும் தேவாலயத்தின் முன் தனது விலையுயர்ந்த காரில் சாய்ந்து நின்றவாறு பார்வையால் இவளைத் தழுவிய டேனியல் வித்தியாசமாகவே தோன்றினான்.
தெரிந்த நபரைக் கண்டுவிட்டு, முகத்தை திருப்பிக் கொள்ள முடியாத காரணத்தினால் ஸ்டார் அவன் நின்றிருந்த இடத்திற்குச் செல்லவும் எந்தப் பேச்சுக்களுமின்றி கையிலிருந்த சிவப்பு ரோஜா பூங்கொத்தை நீட்டினானவன்.
‘உன் பார்வைக்கான அர்த்தம் இதுதானா?’ எனும் ரீதியாக கண்டனப் பார்வையென்றை அவன் பக்கம் உதிர்த்தவள் விடு விடு என தனது காரினை நோக்கி நடந்து விட்டாள்.
அதன் பின்னான நாட்களில் இரண்டு மூன்று முறை உணவு விடுதியில் டேனியலின் முகத்தைக் காணக்கூடியதாக இருந்தும் இவள் எந்த வித எதிர்வினையுமாற்றாமல் கடந்து சென்றுவிட்டாள்.
ஆனால் இன்று வில்லியம்ஸினூடாக இப்படியொரு பரிந்துரை வருமென இவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. இவள் டேனியலை தவிர்த்து கடந்து சென்றுமா இப்படி வில்லியம்ஸை தூது விட்டிருக்கிறான் என நினைக்கும் போதே ஏனோ ஒரு வித எரிச்சல் மனநிலைக்கு தள்ளப்பட்டாள்.
நேரடியாக இவளிடம் தனது விருப்பத்தை கூறியிருந்தாலும் இவள் கண்டிப்பாக மறுத்திருப்பாள் தான் ஏனெனின் இவள் வாழ்வினில் அவள் கடந்து வந்த பாதை அத்தனை கடினமானது. ஆனால் இப்படி டேனியல் மீது அளவு கடந்த வெறுப்பினை உமிழ்ந்திருக்க மாட்டாள்.
எடுத்துச் சொல்லி கடந்திருக்க வேண்டியதை டேனியல் மிகவும் சிக்கலாக்கி விட்டிருந்தான். தன் காதலுக்கு சிபாரிசு என்று மூன்றாம் நபரினை இழுத்து விடுபவர்களைக் கண்டாளே நான்கடி தள்ளி நின்றுவிடுவாள் ஸ்டார் என்பதை டேனியல் அறிந்திருந்தால் இவளிடம் நல்ல நட்பினையாவது தொடந்திருக்கலாம் அவன்.
முகத்தினை நீரைனால் அடித்துக் கழுவி விட்டு தன் உடையை சீராக்கிக் கொண்ட ஸ்டார், அந் நீரைப் போலவே டேனியல் என்பவனையும் துடைத்து எறிந்துவிட்டாள். அழகான புன்னகையென்றை முகத்தில் படரவிட்டு மீண்டும் சமயல்கூடத்தில் நுழைந்தவள், செஃப்ஸ் ஸ்பெசல் எனும் வகையராவிற்குள் உள்ளடங்கும் (crack me open Panna cotta choco bowl) கிராக் மீ ஓப்பன் பெனா கோட்டா சொக்கோ பௌஃலை தயாரிக்க ஆரம்பித்தாள்.
****
காற்றில் மிதந்து தனது நாசியில் நுழைந்த கேஃபீசினோ (Cappuccino) குளம்பியில் தனது பார்வையை நிலைக்க விட்டிருந்தான் ஜோஷ். எத்தனை நறுமணமாக இருப்பினும் தனது நாட்டில் கிடைக்கும் சூடான டீக்கு ஈடாகுமா இந்த குளம்பி எனும் சிந்தனை மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது அவனுக்கு.
நேற்று இரவு இத்தாலியின் தலைநகரம் மிலன்க்கு வந்து சேந்திருந்தான். தனியாக நாடு விட்டு நாடு பயணிப்பது அத்தனை புதிதில்லை அவனுக்கு. ஆனால் இந்த பயணம் ஏனோ சோம்பலான மனநிலையில் அவனைத்தள்ளியிருக்க உடலும் சோர்ந்து போனது.
தனக்காக முன் பதிவு செய்திருந்த ஹோட்டலில் தூங்கியவன் காலை எழும்போது நேரம் பகல்வேளையைக் கடந்திருந்தது. எழுந்தவுடன் தனக்கான குளம்பியொன்றை தயாரித்து பருகியவன், பகலுணவைத் தவிர்த்து தனது வேலையைக் கவனிக்க மடிகணணியின் முன் அமந்துவிட்டான்.
வேலையை முடித்துவிட்ட பிறகே பசியை உணர ஆரம்பித்தவன் உணவகத்தை நோக்கி பயணித்தான். பாஸ்தா, குளம்பி என வாங்கிக் கொண்டவன் பசியினால் பாஸ்தாவின் சுவையறியாமல் உள்ளே தள்ளிவிட்டான். ஆனால் பசி முடிந்தவுடன் நாவுக்கு ருசியறிய குளம்பியை பார்த்தவனின் முகம் கூம்பிப் போனது.
மம்மி! எனக்கு இப்போ டீ வேணும்’ சிறுபிள்ளை போல தனக்குள் அவன் சிணுங்கிக் கொண்டிருக்கையில், அவனது தொலைபேசி தனது இருப்பைக் காட்டியது.
“மச்சி! ஆர் யூ ஓகே?” என இவனது நண்பன் தருண் மறுபுறம் இருந்து கேட்டுக்கொண்டிருந்தான். “ப்ச், இல்லைடா.” உண்மையை மறைக்காமல் சொல்லிவிட்டவன் தொடர்ந்து, “இப்போவே ஒரு கிளாஸ் டீ குடிக்கனும் போல இருக்குடா” என்றான் சலிப்பாக.
“டேய் டேய், இவ்வளவு பிரட்சினை நடந்திருக்கு நீ பாட்டுக்கு கிளம்பி இத்தாலி போயிட்ட. ஒரு பிரண்ட்னு நான் எதுக்கு இங்க உக்காந்து இருக்கேனு புரியாம போன் போட்டா, நீ பாட்டுக்கு டீ வேணும்னு சொல்ற. இல்ல உனக்கு என்னைப் பார்த்தா எப்படிடா இருக்கு?” ஆத்திரமாக கத்தினான் தருண்.
“தருண் நீ சொல்லித்தான் நான் இத்தாலி கிளம்பினேன்னு மறந்திட்டியா?” ‘மறந்திட்டியா?’ என்பதை ஒரு மாதிரியான குரலில் கேட்டான் இவன்.
“இவரு பெரிய மதராசபட்டிணம் எமிஜாக்சன் மறந்துட்டியா? இருந்துட்டியானு. நல்லா வருது வாய்ல” அடுத்து தருண் என்ன சொல்லியிருப்பானே, ஜோஷ் பெரும் குரலெடுத்து சிரிக்கவும் தருண் அமைதியாகிவிட்டான்.
“விடு தரு, இது எல்லாமே பழகிபோயிடிச்சு. சின்ன வயசில் இருந்து பாத்துட்டு தானேடா இருக்கேன். அப்போ வெளியாட்கள் முதுகுக்கு பின்னாடி பேசினாங்க இப்போ சொந்தக்காரங்க முகத்துக்கு நேர பேசிட்டாங்க அவ்வளவுதான் சிம்பில்டா” என்னவென்று பிரித்தரிய முடியாத உணர்சிகள் துடைக்கபட்டவாறு கூறினான் ஜோஷ்.
“சொந்தம்னா யாரு ஜோ? உன்னோட உண்மையான சொந்தம் யாரு என்னனு மறந்திடிச்சா? உன் தாத்தாவும் அப்பாவும் என்னைத் தேடி ஆபிஸ் வரைக்கும் வந்தாங்க. அவங்களை யாரும் நேரில் பார்க்கனும் என்றால் எத்தனை நாள் காத்திருக்கனும், ஆனா” அவன் பேசி முடிக்க முன்னமே,
“டாடி, தாத்தா வந்தாங்களா? இதையேன்டா இவ்வளவு லேட்டாஹ் சொல்லுற?” தருணிடம் எகிறினான். ஜோஷ்ஷின் வீட்டு ஆட்களை அத்தனை சுலபத்தில் யாரும் சந்திக்கவே முடியாது. அதுபோலவே அவ்வளவு இலகுவில் அவர்களும் யாரையும் சந்திக்கவும் முன்னறிவிப்பின்றி செல்லவும் மாட்டார்கள். இப்படி தருணின் அலுவலகத்திற்கே சென்றார்கள் என்றால் ஜோஷ்ஷினால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
பெண்கேட்டு தன்னால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று எண்ணியல்லவா இரண்டு வாரம் கழித்து வரவேண்டிய இத்தாலி பயணத்தை, அவசரமாக அடுத்த நாளே புறப்பட்டான். இப்போது தன்னால் தருணின் அலுவலகத்திற்கு வேறு சென்றிருக்கிறார்கள் என நினைக்கும் போதே மனம் கசந்து வெதும்பியது ஜோஷ்ற்கு.
“நீ கேட்ப மச்சான். ஏதோ நான் தான் உன்னை இத்தாலிக்கு அடுத்த நாளே பார்சல் பண்ணிட்டதா நினைச்சிட்டாங்கடா. ப்ச் அதை விடு அவங்க என்னை தேடி வரக் காரணம் யாரு? நான் போன் போடவும் ஒரு ரிங்ல பிக்கப் பண்ணிய நீ, ஏன் உன் வீட்டு ஆளுங்க கிட்ட பேசவேயில்லை?” பதில் கூறவேண்டும் என்ற கண்டிப்புடன் வினவினான் அவன்.
“என்னால் எத்தனை கஷ்டம்டா அவங்களுக்கு.” என்றவனிடம்,
“எது ஜோ கஷ்டம், நீ அவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்ததா நினைக்கிறடா, ஆனா உன் தாத்தாவும், அப்பாவும் அவங்க ஏதோ தப்பு பண்ணியதாகவும் நீ தனிமையில உடைந்து போயிருப்பாய் என்றும் வருந்திட்டு இருக்காங்கடா.
பாரு ஜோ! உனக்காக உன் வீட்டு ஆளுங்களும் அவங்களுக்காக நீயும் யோசிச்சுனு தப்பா முடிவெடுக்காமல் உடனே வீட்டுக்கு பேசிடுட்டு எனக்கு போன் போடு. பை” என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அடுத்த கணமே ஜோஷ் அவனுடைய வீட்டுக்கு அழைத்திருந்தான். தருண் விளக்கியிருக்காவிட்டாலும் நிச்சயமாக இவன் அழைத்திருப்பான் தான். ஆனால் அப்போது மனதில் ஒரு தெளிவிருந்திருக்காது. ஆனால் தருண் கூறிய அனைத்து விடயத்தின் பின் திடமான மனதுடன் வீட்டிற்கு அழைத்திருந்தான்.
****
மாலை ஏழுமணியைக் தொட்டுக்கொண்டிருந்தது அவ் வீட்டின் கடிகாரம். விசாலமான வரவேற்பறையின் சோபாவில் தாத்தா கிரிஸ்தோபரின் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டு விசும்பிக் கொண்டிருந்தாள், இருபத்தைந்து வயது நிரம்பிய வைத்தியர் ஜோவியா ரோஸ்.
அதற்கு எதிர்புற சோபாவில் அமர்ந்திருந்தனர் அவளுடைய தந்தை டேவிட் கிரிஸ்தோபர், ஒட்டிப்பிறந்த தம்பி ஜோன் டீ ஆவின் கிரிஸ்தோபர் மற்றும் தாய் ஜோலி ஜோசப்.
“தாத்தா, என்ன பண்ணுவியே தெரியாது. இப்போவே நான் அண்ணாவை பார்க்கனும்.” விசும்பலின் நடுவே மெதுவாக பேசினாள் ஜோவியா.
“ஜோவியா! அண்ணா கண்டிப்பா போன் பண்ணுவான்டா. நீ தாத்தாவை டென்ஷன் படுத்தாத.” என அவளது தாய் சமாதானப்படுத்தும் போதே தாத்தாவின் தொலை பேசி அடித்தது.
“அண்ணா தான் கூப்பிடுது.” தாத்தாவின் மடியிலிருந்து துள்ளி எழுந்த ஜோவியா உடனே அழைப்பை ஏற்றவள் படபடவென பெறிய ஆரம்பித்தாள்.
“ஹலோ அண்ணா. எப்படியிருக்க? சாப்பிட்டியா? போ அண்ணா நீ மட்டும் இன்னைக்கு காஃல் பண்ணலனு வை, நாளைக்கே உன்னைத் தேடி இத்தாலி வந்திருப்பேன். இரு இரு வீடியோ காஃல்ல வர்றேன்.” என்றவள் உடனே தொலைபேசியை தொலைக்காட்சியுடன் இணைத்து வீடியோ காஃலை உயிர்ப்பித்தாள்.
“சாரி தாத்தா. என்னால் உங்களுக்கு” ஜோஷ் முடிக்குமுன்னே கிரிஸ்தோபர் பேச ஆரம்பித்தார்.
“நாங்க எல்லோரும் தான் சாரி சொல்லனும் ஜோ. என் பொண்ணு வயித்து பேத்திதானேனு இந்த திருமணப் பேச்சை எடுத்திருக்க கூடாதுடா. இப்போ பாரு திடீர்திடுப்புனு எங்களை விட்டு நீ தூரமாக போயிட்ட. தாத்தா சாரி கேட்டுக்கிறேன் ஜோ, எங்களை விட்டு தள்ளி போயிடாத. கர்த்தர் மீது ஆணைடா.” கண்களில் பனித்த நிரை சிமிட்டிவிட்டுக் கொண்டே அவர் பேசவும் ஜோவிற்கு உள்ளுக்குள் உருகிவிட்டது.
“ஜாே! மம்மி, டாடி தப்பு பண்ணிட்டோம்டா. உன்கிட்ட ஒரு வார்த்தை…”
“அண்ணா! நானும் தப்பு பண்ணிட்டேன்னா.”
“அண்ணா! மீ டூ” என அம்மா,அப்பா,தங்கை, தம்பி என ஒருவர் மாற்றி ஒருவர் மன்னிப்பு, தப்பு என பேசவும் ஜோ எல்லாவற்றையும் மறந்துவிட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.
“ஐயோ! கர்த்தர் எம்மையும் உம்மையும் மன்னிப்பாராக!” ஆசீர்வதிப்பது போல ஜோ பாவனை செய்யவும் அவ்வீட்டார் அனைவரினதும் சிரிப்புச் சத்தம் காதை அடைத்தது.
அதன் பின்னறாக அக்காணொளி அழைப்பு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தொடர்ந்தது. நல விசாரிப்புக்கள் தொடங்கி ஜோவினுடைய செல்லப்பிராணி ரொனால்டோ வரை பேச்சுக்கள் தொடர்ந்து ஒருவழியாக அழைப்பைத் துண்டிக்கும் போது அவனுயை முகத்தில் தொலைந்து போன தேஜஸ் தனது இடத்தில் மீண்டுவந்து ஒட்டிக் கொண்டது.
அழைப்பைத் துண்டித்தவன், மெதுவாக தான் இத்தாலி கிளம்பி வருவதற்கு முன்னதான நாளினையும் அக் கசப்பான சம்பவத்தையும் நினைக்கலானான்.
கிரிஸ்தோபரின் ஒரே மகள்வீட்டில், அவளுடைய மகனுடைய நிச்சயதார்த்த விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. உறவினர்களுக்கு மத்தியில் சாதாரனமாக விழாக்களில் எழும் பேச்சுப்போலவே ஜோவின் திருமணப்பேச்சும் அங்கு தவிர்க முடியாமல் எழுந்தது.
“ஜோவை விட வயது கம்மிதானே அங்கிள் எல்வினுக்கு. அவனுக்கே நிச்சயம் எனும் போது நம்ம பையன் ஜோவிற்கும் பார்க்கலாமே அங்கிள். டெல்லியில் எங்க வீட்டுகாரங்க ஒன்னுவிட்ட அண்ணன் பொண்ணுக்கு வரன் தேடிக்கொண்டிருக்காங்க. ஏதும் ஐடியா இருந்தா கண்டிப்பா சொல்லுங்க.” என கிரிஸ்தோபரிடம் அவரது தூரத்து உறவுக்கார பெண் கூறிவிட்டுச் சென்றார்.
யேசனையுடன் அவர் நெற்றியைச் சுருக்கும் போது, “தாத்தா! இந்த ரெஸ்ல எடிசாவா இல்ல நானா அழகாயிருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.” ஓடிவந்த ஜோவியாவை துரத்தி வந்த எடிசாவின் மீது பார்வையைப் பதித்தவரின் சிந்தனைக்குள் ஜோவின் அருகில் மனமகளாக எடிசா நிறுத்தப்பட்டாள்.
தனது ஒற்றை மகள், தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு பேரனை மருமகனாக மாற்றிக் கொள்வாள் என நினைத்து பொதுவாக ஜோவிற்கு எடிசாவை திருமணம் முடித்து தருமாறு பேச்சை தொடங்கியதுதான் தாமதம்,
முப்பது வருடங்களாக ஜோவினை மருமகனாக தாங்கிய ஜோவின் அத்தயைும் மாமாவும் சபை நடுவே அவனின் பிறப்பைப் பற்றி ஆயிரம் விமர்சனங்களை எழுப்பி அவனை தலைகுனிய வைத்திருந்தனர்.
தன் மகள், மருமகனின் வாய்க்குள் தனது செல்லப் பேரன் விழுந்து அரைபடுவதை விரும்பாத கிரிஸ்தோபர் எந்தப் பேச்சுமின்றி மகன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அவ் வீட்டை விட்டு வெளியேரியிருந்தார்.
நேராக வீடு சென்ற ஜோவோ, தனது அடைக்குள்ளே அடைந்து கொண்டான். பாட்டியின் இறப்பிற்கு பின்னரே தாத்தாவிற்கு தன்னால் துன்பங்கள் அதிகம் என உள்ளுக்குள் நொந்து கொண்டிருந்தவனுக்கு இச் சம்பவம் இன்னுமின்னும் சுமையை ஏற்றிவிட்டிருந்தது.
எடிசாவுடன் திருமணம் என்பதை தன்னிடம் ஒரு வார்தை கேட்டிருந்தால் நிச்சையமாக இவன் மறுத்திருப்பான். தன் தங்கை ஜோவியாவுடனே சிறு வயது தொடங்கி டாக்டர் படிப்புவரை ஒன்றாக படித்த எடிசாவினை தன் குட்டித்தங்கை ஜோவியா போலவே மனதில் பதிந்து வைத்திருந்தான் இவன்.
சுயபட்சாதாப நிலையில் சிக்கியவன், வீட்டினரின் முகம் பார்த்து சரியாக விடைபெறாமலே, வியாபார கலந்துரையாடல் ஒன்றிக்காக இரண்டு வாரம் முன்கூட்டியே இத்தாலிக்கு கிளம்பி வந்திருந்தான்.
“ஜோ! எவ்ரி திங் கம் பிஸ்ஸி’’ என்றவன் நிகழ்வுக்குத் திரும்பியிருந்தான். மேசை மீதிருந்த குளம்பி சூடற்று போய் கிடந்தது. குளம்பியை பருகாமலே அவ்விடத்ததை விட்டு நகர்ந்தான் ஜோ.
கசப்பான குளம்பியை தவிர்த்த ஜோஷின் வாழ்வு இன்னும் சில நாட்களில் அமுதவிஷத்தினால் தாகம் தீர்க்கப்பட இருப்பதை அவன் அறியான்.
மதுரை மீனாட்சி கேவிலின் தரிசனத்தை முடித்துக் கொண்டு நெற்றியில் வைத்த குங்குமத்துடன் தனது வீட்டிற்குள் நுழைந்தான் வஷிஸ்டன்.
“ராசா, வாட நேர வந்து சாப்பிடுவியாம். உனக்கு பிடிக்குமேனு வாய்க்கு ருசியா இட்லியும் ஆட்டுக்கறி குழம்பும் செய்திருக்கேன். அந்த துருப்பிடிச்ச கப்பல்ல என்னத்தை சாப்பிட்டியே எழும்பும் தோலுமா இளைச்சி போயிட்டே.” என்று வஷியிடம் பேசிக்கொண்டே அவனை சாப்பாட்டு மேசையின் முன் அமரவைத்த நாச்சியார் பாட்டி, ஒரு வாய் இட்லியை அவனுக்கு ஊட்டிவிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன் தாயகத்திற்கு திரும்பிய வஷிக்கு தினமும் இதே கவனிப்புத்தான். நல்ல திடகாத்திரமாக இருப்பனை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததால் என்னவே வீட்டினர் ஒருவர் மாற்றி ஒருவர் என சமைத்து, ஊட்டிவிட்டு என அன்பைப் பொழிந்தனர்.
பாட்டி ஊட்டிக் கொண்டிருக்கும் போதே வஷியுடைய தான் மீனா மீன் குழம்பு நிறைந்த பாத்தித்தை அவனருகில் வைத்தவர். “இட்டியை முடிச்சிடு கண்ணா! அம்மா இரண்டு தோசை ஊத்துரேன்.” என்றவர் பரிவாக அவனது தலையை வருடிவிட்டுக் கொண்டிருந்தார்.
வீட்டின் ஒரே ஆண் வாரிசு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசும் வஷி என்பதால் அவன் மீது அத்தனை பிரியம் அனைவருக்கும். இவனது ஒரே அக்காவும் திருமணமாகி வெளியூரில் தங்கியிருக்க, கப்பலிலிருந்து விடுமுறைக்கு வரும் இவனை குடும்பத்தினர் கொண்டாடிவிடுவார்கள்.
“க்கும்!.” தொண்டையை செருமியவாரு வஷியின் அருகில் வந்த அவனது தந்தை பார்த்தசாரதியோ, “கண்ணனுக்கு பிடிக்கும்னு பருத்திப்பால் சொல்லிருந்தோன். கட்சிக்காரப் பையன் கொடுத்துட்டுப் போறான். ஒரு டம்ளர் நிரம்ப ஊத்திக் கொடு மீனா.” என கையிலிருந்த தூக்கு வாலியை மேசை மீது வைத்தார்.
“பா! மிடீல, அப்புறம் பாத்துக்கிடுறேன்.” என்ற வஷி, தனது தந்தையின் முகத்தை உற்றுப்பார்த்தான்.
எதையே சொல்லவந்து தயங்குவது அவரது முகத்தில் வந்து போன சிந்தனை ரேகைகள் உணர்த்திக் கொடுக்க, தந்தையின் கை பற்றியவன்,
“உக்காருபா, என்கிட்ட என்ன தயக்கம்? ஒரு வேளை உனக்கு மேல வளர்ந்துட்டேன்னு யோசிக்கிறியாபா? எப்போவும் நான் உங்க வஷிதான்பா. சொல்லு என்ன பிரட்சினை? கடையில் எதுவுமாபா? அதுதான் ஆறு மாதம் நான் இருந்து பாத்துக்க பேறேனே.” என்றவன், தனது தந்தையை அருகில் அமர்த்திக் கொண்டார்.
மகனின் பேச்சில் தனது தந்தையின் சாயலைக் கண்ட பார்த்தசாரதியின் கண்கள் பனித்துவிடும் போல தோன்றின. வயதாகும் போது நமது பிள்ளைகளுக்கு தாமே குழந்தைகள் போலகிவிடுகிறோம் என்பதை அக்கணம் உணர்ந்தார் மதுரையின் முன்னால் பிரபல ஆரசியல்வாதி பார்த்தசாரதி.
“ஆறு மாசம் கப்பல சாகுரான். ஆறு மாசம் தொழில், கடைனு ஓடுரான். ஹ்ம் மீனாட்சி என் பேரனுக்கு சத்தே ஓய்வையும் கொடுக்க கூடாது.” அவசர வேண்டுதலை வைத்த தனது தாயைப் பார்த்துவிட்டு மகனிடம் பேச்சை ஆரம்பித்தார் அவர்.
“வியாபாரத்துக்கு ஏதும் குறையில்ல கண்ணா. எல்லாம் உன் கல்யாணம் பத்தித்தான். வருசா வருசம் இலவச கல்யாணம்னு எத்தனையோ பேருக்கு தாலி எடுத்து எங்கையால கொடுக்கேன். உன் விஷேஷத்தை முன்ன நின்டு நடத்த வேணாமா? சாதி சனத்துக்குள்ள கையில பொண்னை வைச்சிருக்கிறவன் எல்லாம் உன்னை கட்டிக் கொடுக்க கேட்கிறான்.
சிலர் உன் அக்கா மாதிரி நீயும் ஏன் கல்யாணம் வேணாம்னு பிடிவாதம் பிடிக்கிறனு காதுபட கேட்கிறானுங்க. இவங்களுக்கா வேணாம் தம்பி, உனக்காக ஒரு துணை வேணாமா?” மகனின் வலது கையை தனது உள்ளங்கைக்குள் பொதித்துக் கொண்டார் வஷியின் தந்தை.
“ஸ்டார் பொண்ணுக்கிட்ட பேசினியா கண்ணா?” தந்தையை தொடர்ந்து கேள்வியெழுப்பிய தாயைப் பார்த்து விரக்தியாக சிரித்தவன்.
“டெய்லி பேசிக்கிட்டு தான்மா இருக்கேன். ஆனா கல்யாணம், ப்ச் அந்த வார்தையைக் கேட்டாலே குரல் நடுங்க ஆரம்பிக்குதுமா அவளுக்கு. அப்பா இன்னும் எண்ணி ஒரு வாரத்துல இத்தாலில நான் இருப்பேன். முகத்துக்கு நேரவே பேசிடுறது நல்லதுனு சொல்லுவியேபா, இந்த வருஷத்துக்குள்ளே நம்ம வீட்டில் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்.
உங்க ஆசீர்வாதத்தோடே எல்லார் முன்னவும் நீ தாலி எடுத்து கொடுக்க தான் போகிறாய்பா. ஏய் கிழவி உன் காதுல மாட்டியிருக்குற தண்டட்டியை என் பொஞ்சாதிக்கு தருவியாத்தா?’’ உணர்சிவசப்பட்ட தொண்டையினை சரிசெய்து பேசியவன் வழக்கம் போல தனது பாட்டியை வம்பிழுத்தே முடித்தான்.
“உன் பொஞ்சாதிக்கு நீ வாங்கிப்போடுவியாம். இது என் தாத்தா எனக்கு போட்டதாகும்.” முகவாயை தோளில் இடித்து பழிப்புக்காட்ட அனைவர் முகத்தில் புன்னகைக்கு பஞ்சமில்லாமல் போனது அங்கு.
சிறகை விரித்த வண்ணாத்து பூச்சிகள் வெள்ளை நிறப்பாத்திரத்தில் மிதப்பது போல அந்த பம்கின் ராவியோலி வித் பிரவுன் பட்டர் சோஸ் (Pumpkin ravioli with brown butter sauce) ஐ தயாரித்து முடித்த ஸ்டார், அவ் உணவினை பரிமாறும் சிப்பந்தியிடம் ஒப்படைத்தாள்.
“செஃப்! லிகர் ஸ்டாக் செக் பண்ணிட்டனும் இன்னைக்கு!” என்று மற்றுமொரு உதவியாளர் அவளருகில் வந்து அழைக்கவும், லைவ் கவ்ண்டர் பார் பக்கமாக சென்றாளவள்.
‘இரவல் வெளிச்சம் நீ, இரவில் கண்ணீர் நீ
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ ’
எனச் சினுங்கி தனது கையடக்க தொலைபேசி தனது இருப்பை உணர்த்தவும் கையிலிருந்த உணவுப்பட்டியலை மேசை மீது வைத்து விட்டு அழைப்பினை ஏற்றான் ஜோ.
“மம்மீ!” என ஆற்பாட்டமாக பேச ஆரம்பித்தானவன். “சாப்டியா ஜோ?” அவனுடைய தாய் ஜோலி ஜோசப் தாயாக அவன் பசிபொறுக்க மாட்டானே என்று வினவினார்.
“நோ மீ! எட் ரெஸ்டாரன்ட். ப்ச் மெனுவை பார்த்தாலே தலை சுத்திட்டு வருதுமீ. மிஸ்ஸிங் இந்தியன் பூட்ஸ். ஒரு தோசையை கண்ணுல பார்க்க மாட்டோமானு தோணுது. இங்க சவுத் இந்தியன் கடை எதுமே இல்லமீ. நான்கு நாளா சரியா சப்பிடாம பசி வேற கொள்ளுதுமீ.” என்றவனின் பார்வை விரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பட்டியலை ஆராய்ந்தது.
இவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சிற்றூழியன் உணவுக்கான ஆர்டர் எடுக்க வரவும் ஏதோ ஒரு வகை பீட்சாவின் பெயரின் மீது விரலினால் சுட்டிக்காட்டிவிட்டு பேச்சைத் தொடர்ந்தான்.
“அடேய் அண்ணா! இத்தாலி போயிட்டு தேசை தேடுறவன் நீ ஒருத்தனாத்தான் இருப்பாய் போ. எந்த ஊரு போனாலும் நடு பீஸ் எனக்கு வேணும்னு சாப்பிட வேணாமா?” தாயுடன் பேசும் போதே குறுக்கிட்டாள் அவனின் தங்கை ஜோவியா.
“சுட்டிக் குழந்தை, நீ இன்னும் ஹாஸ்பிட்டல் போகல? சரிதான் இன்னைக்கு ஒரு பைத்தியமும் உன்கிட்ட சிக்கலை போல’’ தங்கையினை வம்பிழுத்தானவன்.
“பாரு மீ அண்ணாவை. அது எல்லாம் உன்னைப் போல நிறைய தேசை பைத்தியங்க இன்னைக்கு நைட் சிப்ட்ல மாட்டுங்க. பைத்தியம்னு சொல்ல கூடாதுணா. தே ஆர் ஜஸ்ட் பேசன்ட்ஸ். கை, கால் வலி போல அவங்களுக்கு மனதில் வலி.” சுட்டித் தங்கையிலிருந்து பொறுப்பான மனநோய் வைத்தியராக பேசினாள் ஜோவியா.
“என் செல்லம் ரொம்ப பெரிய மனுசியாகிட்டா மீ. ஆவின் எங்கடா? ஆபிஸ்ல இருந்து இன்னும் வரல?” என்றவனிடம்,
“ஆறு மணிக்கு மேல ஆகிடும்னு சொல்லிட்டு போனான் ஜோ. ஏன்டா உடம்பை வருத்திக்குற? ஏதாச்சும் பிடிச்சதா பார்த்து சாபிட்ட மாட்டியா? பேசாம இந்தியா வந்துரு ஜோ. எத்தனை கோடி லாஸ்ட் உன் பிஸ்னஸ்ல வந்தாலும் பரவாயில்லை.” மகன் வீட்டு உணவை விடுத்து பிற உணவுகளை விரும்பியுண்ண மாட்டான் என்ற உண்மையரிந்த ஜோலி ஜோசப், ஜோவினை உடனே வீட்டிற்கு அழைத்தார்.
“விடுமீ. அடுத்த வாட்டி வழக்கம் போல குக் யாரையாச்சும் கூட அழைச்சிட்டு போயிவேன்.” அவன் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே,
“அண்ணா! இனிமே எதுக்கு குக். அதுதான் மம்மி உனக்கு நல்ல தேசை சுடக்கூடிய அண்ணியை ஏற்பாடு பண்ணிட்டாங்க தெரியுமா? வாட்ஸ்அப் பாருணா. நான் போட்டோ அனுப்பி வைக்கிறேன்.” ஆர்பாட்டமாக கூவிய ஜோவியாவிடமிருந்து தொலைபேசியை வாங்கிய அவளது தாய்,
“ஜோ, மம்மி உனக்கு சில போட்டே என்ட் டீடெயில்ஸ் அனுப்பியிருக்கேன். வழக்கம் போல இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லி மறுக்காமல் கட்டாயம் போட்டோஸ் பாரு. உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பார்க்கலாம்.”
“சரி மீ. பார்க்குறேன். இப்போ சாப்பாடு மேசைக்கு வந்திருச்சு. ஐ வில் காஃல் யூ லேட்டர்.” மேசை மீது மூடப்பட்ட தட்டிலிருந்த உணவைப் பார்த்தவன் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டான்.
வழக்கம் போலவே திருமணத்தைப் பற்றி பேசும் போது வேண்டாம் என மறுக்கத் தோன்றிய மனதை கட்டுப் படுத்தி தாயிடம் புகைப்படத்தையாவது பார்க்கிறேன் என கூறி சமாளித்தவன்,
பின் புகைப்படத்தில் இருக்கும் பெண்களை பிடிக்கவில்லை வேறு பெண் பார்க்கலாம் என்று நாட்களை வீணடிக்கலாம் என நினைத்துக் கொண்டவன், தனது தொடுதிரையில் சிரிக்கும் பெண்ணின் புகைப்படத்தை ஒரு விரல் கொண்டு வருடிவிட்டான்.
“ஜோ! உணவு நமக்காக காத்திருக்க கூடாது.” என்ற அவனது பாட்டியின் பேதனை நினைவில் வரவும் தனது பீட்சாவினை மூடியிருந்த அலுமினிய மூடியைத் திறந்தவன் சுகமாக அதிர்ந்துபோனான்.
வைன் போத்தல்களின் கொள்வனவு பட்டியலினை பரிசோதித்துக் கொண்டிருந்தாள் ஸ்டார். இரண்டு வாரமாக கையிருப்பு மீதி அதிகமாக இருப்பனதனால் கொள்வனவின் அளவில் மாற்றம் ஏதும் செய்யலாமா என்ற யேசனையுடன் நின்றவளின் செவிகளைத் தொட்டது அத் தமிழ் பாடல்.
முற்றிலும் தடுக்கப்படாமல் துண்டு துண்டாக மரத்தினால் வேளைப்படாடு செய்யப்பட்ட தடுப்புக்கு எதிர்ப்பக்கமாக ஒலித்துக் கொண்டிருந்த பாடல் ஜோவின் அழைப்பேசியின் அவனது அம்மாவின் அழைப்புக்காக பிரத்தியோகமாக அவன் பயன்படுத்தும் பாடலே.
அதிகமாக இவ் உணவு விடுதிக்கு வெளிநாட்டவர்கள் வந்து செல்வார்களாயினும் இவ்வாறான தமிழ்பாடாலென்றை இவள் கேட்டது மிகவும் அறிதே.
இதழில் புன்னகை சட்டென விரிய, எதிர்பக்கமிருந்தவனின் மறைந்தும் மறையாமலும் தெரிந்த முதுகை ஏறிட்டவளின் செவியினில் நுழைந்தது. “மிஸ்ஸிங் இந்தியன் பூஃட். தேசை வேணும்.” என்ற வாக்கியமும், அடுத்ததாக அவன் கூரிய ‘பசிக்கிறது’ என்ற சொல்லுமே.
அச் சொல்லில் அவனின் பசியை இவள் உணர்ந்தாள் என்பதே உண்மை. கனவு போன்று தேன்றிய இவளது கடந்தகாலத்தில் பசி என்று கெஞ்சியது எல்லாம் நினைவில் வரவே, அவளைக் கடந்து சென்ற சிற்றூழியரிடமிருந்த ஜோவினால் வழங்கப்பட்ட உணவுக்கான ரிசிப்ட்டை பெற்றுக் கொண்டு சமையல்கூடத்திற்குள் சென்றாள்.
உணவுக்களஞ்சியத்தில் கிடைக்ககூடிய பொருட்களான, கோதுமை மாவில் சிறிதளவு அரிசிமா, சீரகம், மிளகு என சேர்த்து தேசைமா பதத்திற்கு தயார் செய்து சுடச்சுட பத்து கோதுமை தோசையை சுட்டெடுத்தவள், தொட்டுக் கொள்வதற்கு பூண்டு, வத்தல்மிளகாய், சீரகம் என்பவற்றை மையாக அரைத்து அதன் மீது சூடான தேங்காய் எண்ணையை ஊற்றி காரமான சட்னியை தயாரித்தாள்.
ஒரு சிறிய கிண்ணத்தில் தயிரினுள் உப்பில் ஊரவைக்கப்பட்ட பீட்ரூட், வெள்ளரியை இட்டு கலந்தவள் ஒரு முழு பெரிய வெங்காயத்தினை வட்டமாக வெட்டி இன்னுமொரு கிண்ணத்தில் வைத்தாள்.
அடுத்தாக பீட்சா பரிமார பயன்படும் தட்டத்தில் அனைத்தையும் அடுக்கியவள் பிறகு ஸ்டிக்கி நோட்ஸ் எழுதப்படும் தாள்துண்டை எடுத்தவள்,
“ஐ ஒன்லி எட் இன் த்ரீ பிலேஸ்ஸ்: ஹீயர், தேயர் அண்ட் எவெரிவியர். (I only eat In three places: Here, there and everywhere)” என்று ஆங்கிலத்தில் எழுதி கீழே ஒரு நட்சத்திரத்தை வரைந்தாள்.
தோசையின் நடுவே அத்தாளினை வைத்தவள் உடனே பரிமாறுவதற்காக சிப்பந்தியிடம் அனுப்பி வைத்தாள்.
தனக்கு முன்பேயிருந்த தட்டில் வட்டமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த தேசைகளைப் பார்த்தவன் எந்த சிந்தனையுமின்றி ஒரு துண்டு தேசையை விள்ளலாக எடுத்து காரச்சட்னியில் தோட்டு தனது வாயில் வைத்து கண்களை அழுத்த மூடி சுவைத்து உண்டான் ஜோ.
ஒரு வாய் உணவு தொண்டைக்குள் இறங்கவும் சுற்றத்தை உணர்ந்த ஜோ, தோசைக்கு நடுவில் எழுதப்பட்டிருந்த குறிப்பை கையில் எடுத்து வாசித்துப்பார்த்தான்.
‘பாம்பு சாப்பிடும் ஊருக்குச் சென்றால் நடுத்துண்டு எனக்கு வேண்டும்’ என தன் தங்கை கூறிய பழமொழியை ஆங்கிலத்தில் எள்ளலாக எழுதியிருப்பதை பார்த்தவனின் விழிகளினை எட்டியது புன்னகை.
‘நட்சத்திரம்! ஹ்ம் ஸ்டார். யாராகவிருக்கும். யாரோ நம்ம பேசியதை கேட்ட நபராக இல்லை கண்டிப்பாக ஒரு தமிழ்தெரிந்த நபராகவிருக்கும்.’ என முனங்கிய ஜோ சுற்றியும் தனது பார்வையை ஓடவிட்டான்.
“ஸ்டார்! கம் ஒன் கேர்ள்!” தூரத்தே கேட்ட ஆணின் குரலின் பக்கமாக பார்வையைத் திருப்பிய ஜோவின் விழிகளின் கருமணிகளிரண்டும் அசைய மறுத்து ஸ்டாரின் மீது தழுவியது.
ஜோவிற்கான தேசையை சமைத்து வழங்கிய ஸ்டார் நேரடியாக லைவ் பார் பக்கமாகவே சென்றாள். பாதியில் விடப்பட்ட கொள்வனவு பட்டியலினை சரிபார்க்க ஆரம்பித்தவள் அப் பணியில் மும்முரமானாள்.
தடுப்புச் சுவரின் கடைசி மூளையின் பக்கம் இவள் செல்லும் போது அழகான பூக்குவியலாக வந்து மோதினாள் சிறுமியெருத்தி. கவர்சியாக பளிச்சிட்ட விளக்குகளின் நிறத்தை தொட முயற்சித்து ஓடியவந்திருப்பாள் போலும் அச் சில்வண்டு.
தன் மீது மோதி தனது காலினைக் கட்டிக் கொண்ட அக் குழந்தையை கைகளில் அள்ளிக் கொண்டாள் ஸ்டார். இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை, குண்டு குண்டு இளரோஜா வர்ணக் கன்னத்தையும், மஞ்சள் திராட்சை நிறக் கண்களையும் கொண்ட அக்குழந்தையின் கன்னம் பற்றி அழுத்தமாக இதழ்பதித்தவள்,
குழந்தையின் பெற்றோர் என யூகிக்ககூடிய தம்பதிகளை நோக்கி நடந்தாள். அப்போழுது தான் வில்லியம்ஸ் ஸ்டாரினை தூரத்தே நின்று அழைத்துக் கொண்டிருந்தார்.
வில்லியஸிடம் ஒரு நிமிடம் என கண்களால் சைகைகாட்டிய ஸ்டார், அப்பெற்றோரிடம் இரு வார்தைகள் பேசிவிட்டு, மீண்டும் ஒரு அவசர முத்தத்தை வழங்கிவிட்டே அவ்விடம் விட்டு வில்லியம்ஸிடம் நகர்ந்தாள்.
அவ் உணவகம் முழுவதும் வெறுமையாக தானும் ஸ்டாரும் மாத்திரமே தனித்திருக்கும் இடமாக நினைத்துக் கொண்ட ஜோ அவனது மேசையிலிருந்து ஐந்தடி தூரத்தே நடந்து சென்ற ஸ்டாரினை வெறித்த பார்வை பார்த்து வைத்தான்.
வெள்ளை நிற நீண்ட மேல் அங்கி, முட்டிவரை நீண்டிருக்க, கருப்பு ஜீன்ஸ், கூந்தைலை முழுமையாக மூடி அணியப்பட்ட தொப்பி சகிதமாக பொன்நகையின்றி புன்னகை புரிந்த ஸ்டாரின் வென் மூரல்களிலும்,
குழந்தையின் குண்டு கன்னத்தில் முத்தமிட்ட ஸ்டாரின் செவ்விதழ்கள், கூர்மையான நாசி, முழு நிலா முகம் என பார்வையை ஓட்டியவன், இவை அத்தனைதிற்கும் மேலான காருண்யம் பொங்கி வழிந்த அவள் விழி எனும் கருந்துளைக்குள்ளும் ஜோ தனது பூட்டப்பட்ட இதயத்தின் சாவியைத் தொலைத்தான்.
சூடான தோசையின் வாசனையில் மோன நிலை தடைபடவும், அருகிலே சென்று கொண்டிருந்த சிற்றூழியனிடம், “மே ஐ கெட் டு நோஃ. ஹூ இஸ் ஷீ’’ என நடந்து சென்ற ஸ்டாரினை சுட்டிக் காட்டி விசாரித்தான் ஜோ.
“ஷீ இஸ் ஸ்டார். அஃவர் சூ செஃப்.” என்ற ஊழியனிடம் சரியென தலையசைத்த
ஜோவோ ஆசையாக, பேர் உவகையாக அத் தேசைகளை உண்டு முடித்தான்.
உணவுக்கான பணத்தினை செலுத்தியதும் ஸ்டார் எங்கும் தென்படுவாளா? என கண்களால் நோட்டமிட்டவன், நாகரிகம் கருதி உணவகத்தை விட்டு வெளியேரினான்.
வெளியே சாலையில் நடந்தவனுக்கு இதயத்தில் ஏதோ இதம் பரவ, வலது கையால் மார்பகத்தை நீவி விட்டவன், தனது அழைப்பேசியை எடுத்து தனது தாயினால் அனுப்பட்ட புகைப்படங்களின் வருகையை உணர்த்திய குறுஞ்சைய்தியை தொடுதிரையிலிருந்து ஒதுக்கி தள்ளினான் அவன்.
‘இனிமேல் எந்த பெண்ணினையும் தனக்கான வரனாக பார்க்க வேண்டாம்.’ என தாயிடம் கண்டிப்பாக மறுத்துக் கூற வேண்டும் என நினைத்தவன் தன் தொடுதிரையில் சிரித்த பெண்ணின் கண்களை விரலால் வருடினான் ஜோ.
தனக்கு முன் திறந்து கிடந்த மடிக்கணினியில், வியாபாரத்திற்கான உடன்படிக்கையினை இரண்டாவது முறையாக வாசித்துப் பார்த்த ஜோவிற்கு, சில குறிப்புக்கள் தவறாக தோன்றியது.
மாற்ற வேண்டிய குறிப்புக்களை சிவப்பு நிறத்தினால் மேற்கோளிட்டு காட்டியவன் அவ் உடன்படிக்கையின் பிரதிகளை; ஒப்பந்தக்கார கம்பனிக்கும், தருணுக்கும், தங்களது நிறுவன வக்கிலுக்கும் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டான்.
வேலைகளை முடித்தவன் ஆசுவாசமாக அமரவும், அவன் மனதில் அடி ஆழம் வரை சுகமாக கிளைபரப்பியிருந்த ஸ்டாரின் முகம் சட்டென நினைவில் மேல் எழுந்தது.
அவ் உணவுவிடுதியில் ஸ்டாரினைப் பார்த்து இன்றுடன் இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இந்த இரு நாட்களாகவே மதிய வேளைக்கு அவ் உணவத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கிறான் இவன்.
ஆனால் ஸ்டாரின் முகத்தினை எங்குமே காணமுடியவில்லை. தேவி தரிசனத்திற்கான பக்தன் போல இன்றும் வேலைகளை முடித்தவன் அங்கு சென்றான்.
அதே மேசையில் அமர்ந்திருந்து, ஏதோ ஒரு உணவை வரவழைத்து உண்டவனின் பார்வை சுற்றிவர ஸ்டாரைத் தேடியது. இன்றும் தான் அவளைக் காண முடியாது என்ற ஏமாற்றத்தில் வெளியேறி சாலையில் நடக்கும் போது எதிர்ப்பட்டான் அவன்.
“ஹாய் ஜோஷ்! இட்ஸ் பிளசண்ட சர்ப்ரைஸ் மேன். எப்போடா மிலான் வந்தாய். ஒரு போஃன் காஃல் பண்ணியிருக்கலாம். போடா.” நீண்ட வருடங்களுக்கு பிறகு நண்பனைக் கண்ட ஆச்சரியம், மகிழ்சியென படபடவென பொரிந்தான் ஜோவின் பல்கலைக்கழக நண்பன் இந்திரஜித்.
“ஹாய்டா இந்தர். நீ எங்கேடா இங்கே. முதல் நீ எப்போ லண்டன்ல இருந்து இத்தாலி வந்தாய்.” வியப்பை தேக்கிய குறுநகையுடன் கேட்டான் ஜோ.
“இன்ஸ்டால போஸ்ட் போட்டிருந்தேன். ப்ச் நீ பார்க்கல போலடா. சாரி ஜோ. மூன்னு மாதமா நான் மிலான் வாசிடா. புது ஆபிஸ்ல ஜாயின் பண்ணியிருக்கேன்.” என்ற இந்தர் மேலும் சில தகவலை வழங்கி,
ஜோ எப்போது, எதற்காக மிலான் வந்தான் என பேச்சினைத் தொடர்தான். இறுதியில் “கம்மிங்
ஃப்ரைடே இங்க ஹாலிடே ஜோஷ். கண்டிப்பாக என் வீட்டுக்கு நீ வரணும். லஞ்ச், டின்னர் எல்லாம் எங்ககூடத்தான் ஜாயின் பண்ணிக்கனும்.” என அழைப்பொன்றை விடுத்தே விடை பெற்றான் இந்தர்.
நண்பன் விடைபெற்றுச் செல்லவும் வேறு எங்கும் செல்ல விரும்பாத ஜோவோ நேரக தான் தங்கியிருக்கும் அறைக்கே சென்றான்.
தனிமை மேலும் அவனை பாடாய் படுத்தவும், தனது வீட்டினருக்கு அழைத்தான் அவன். முதலில் தந்தைக்கு அழைத்தவன், தாத்தா மற்றும் தந்தையிடம் பேசி முடித்தான்.
அடுத்தாக தாய்க்கு அழைக்கவும், அவனது தாய் பேச்சுக்கு மத்தியில் தான் அனுப்பிய பெண்களின் புகைப்படங்களைப் பற்றிய பேச்சைத் தொடங்கவும், மெதுவாக சமாளித்து வேறு விடயத்தின் பக்கமாக பேச்சை மாற்றிவிட்டான்.
ஒருவாராக அழைப்பைத் துண்டித்தவனின் தலை ‘வின்’ என வலித்தது. “ஒரு கப் டீ கூடக் கிடைக்காது.” எனப் புலம்பியவன் குளம்பியை தயாரித்து பருகிக் கொண்டிருந்தான்.
அச்சமயம் தருணிடமிருந்து இவனுக்கு காணொளி அழைப்பு வந்தது. இந்த நிமிடத்தில் அவனது மனதின் தவிப்பினைக் கொட்டிவிடக் கூடிய நபர் தனது நண்பன் தருண் மாத்திரமே என உணர்ந்த ஜோவும் அவனது அழைப்பை ஏற்றான்.
“ஹாய் தரு!” என சுரத்தையே இல்லாமல் கூறிய ஜோவினை கூர்ந்து நோக்கிய தருண்,
“என்னாச்சு ஜோ? என் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” என்றான் தருண்.
தன்னிடம் எழும் நுண்ணிய மாற்றங்களை இலகுவாக இனங்கண்டு கொள்ளும் நண்பனை நினைத்து மெச்சிக் கொண்ட ஜோ உண்மையை மறைக்காது, “ஐ பீல், ஐம் இன் லவ்” என்றான்.
“வாட்! ஜோ இன்னைக்கு ஏப்ரல் பெஸ்ட் கிடையாதுடா. விளையாடுறியா என்ன?” நம்பதாத தொணியில் கேட்ட தருணிடம்,
“ஐம் சீரியஸ் தரு, நான் அவளைக் கல்யாணம் பண்ணிகலாம்னு இருக்கேன்டா.’’ உள்ளார்ந்த குரலில் கூறினான் ஜோ.
“ஜோ! கொஞ்சம் பொறு.” என்ற தருண் தனது கையில் நகக்கண் அழுத்திக் கிள்ளிப் பார்த்தான்.
“ஸ், வலிக்குதுதான்டா. என் பொண்டாட்டி நல்லா ரசம் வைச்சிருக்காள்னு சொன்னா கூட நம்பிடுவேன். ஆனா உனக்கு ஒரு பொண்னைப் பிடிச்சு அதுவும் கல்யாணம் பண்ணும் அளவுக்கு பிடிச்சு இருக்குனா நம்ப முடியலியே.” என்றான்.
“போடா தரு. உன் நண்பன் குடும்பஸ்தனாக மாறனும், புள்ளை குட்டினு இருக்கனும் என ஆசையே இல்லையாடா உனக்கு. கல்யாணம் பண்ணிக்கோ ஜோனு சொன்னது எல்லாமே பொய்யாடா?” மனதுக்கு மிக நெருக்கமானவர்களுடன் உரையாடும் போது நமக்கான தளைகள் நீங்கப்பெறுவது போலே தனது வழக்கமாக தருணிடம் எள்ளலாக பேசினான் ஜோ.
“சொல்லும் போது நல்லாத்தான் இருக்கும் ஆனா கல்யாணம்னு ஒன்னு பண்ணினால் தெரியும்” என தருண் கூறிமுடிக்கும் முன்னே,
“தரு! பின்னால ஸ்ருத்திடா.” எனக் கூவினான் ஜோ. ஒரு நொடி விதிர்விதித்துப் போன தருண், “ஹீ ஹீ சும்மா சொன்னோன் ருதிமா.” அசடு வழிந்து கொண்டு சிரித்தவாறு பின்னால் திரும்பிய தருணுக்கு காணக்கிடைத்தது வெற்றிடமே.
“போடா டேய்! ஒரு நிமிசம் பயந்துட்டேன்.” என்றவன் தொடர்ந்து “இத்தனை வருஷமா பொண்ணுங்க கூட சிரிச்சு பேசி மட்டும் ஒரு எல்லைக்குள்ள இருக்கும் ஜோக்கு ஒரு பொண்னை பிடிச்சிருக்கா. யாருடா மச்சான் என் தங்கச்சி.” என வினவினான் தருண்.
“ஸ்டார்.” என அவள் பெயரைச் சொல்லும் போதே ஜோவின் முகத்தில் புது பொழிவென்று உதயமானது.
“டேய் மச்சான் வெட்கம் எல்லாம் படுவியா நீ? ஐயோ நல்ல வேளை என் பக்கத்தில இல்லாம போயிட்ட.” தருணின் கேலியில் ஜோவின் கண்களில் ஓரம் புது மின்னல்கள் பாய்ந்தது. ஆனால் எல்லாச் சந்தேசமும் நொடியில் வாடியது இவன் ஸ்டாரினைப் பற்றி கூறியதும் தருண் கேட்ட கேள்வியினால்.
“ஜோ! புரிந்து தான் பேசுரியா நீ. அதே கண்கள்னு ப்ச் அதே உணர்வுகள்னு எப்படி சொல்லுவ. ஒ..ஒருவேளை அந்த ஸ்டாருக்கு கல்யாணமாகியிருக்க போகுதுடா.”
நண்பனை வருத்துவது தனக்கும் கஷ்டமாக இருப்பினும் பெயரும் முகமும் அறிந்தால் மட்டும் பேதாதே திருமணம் எனும் பந்தத்திற்கு இரு மனங்களும் ஒன்றை ஒன்று முற்றாக தழுவிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கு முயன்றான் தருண்.
“அவ கையில எந்த ரிங்கும் இல்லடா. அப்போ கண்டிப்பா அன்மெரிடட் தான் ஸ்டார்.” என்ற ஜோவின் குரல் மெதுவாக உட்சென்றது.
“உன் கெச்சிங் எல்லாம் உன் வேலைல மட்டும் வைச்சுக்கே ஜோ. பிஸ்னஸ் அனாலிசிஸ்ட்னா அது வியாபாரத்தோட போச்சுடா. ரிங் இல்ல கையிலனு அசால்டா சொல்லுர. செஃப்ஸ் குக்கிங் பண்ணும் போது நகைங்க எதும் அணியக்கூடாதுனு தெரியாது உனக்கு.
சரி வெட்டிங் ரிங் கழட்டமாட்டாங்கனு வை, அப்போ கல்யாணம் ஆகவில்லைனாலும் ஏதாச்சும் பாய் ஃப்ரண்ட் இல்லாம இருக்குமா. இப்படி எத்தன இருக்குமானு கேள்விகள் இருக்கும் போது எப்படி நீ கல்யாணம் வரை அந்த பொண்ணுக்கூட யோசிச்ச ஜோ.” என சரமாரியாக கேள்விகளைத் தொடுத்த தருணிடம்,
“ஐ காண்ட் கெட் இட் தரு. சாரி” என்ற ஜோ தனது மடிக்கணினியை மூடி அழைப்பைத் துண்டித்தவன், சிண்டாக முடிந்திருந்த சிகையின் கலைத்து விட்டு முன்நெற்றி முடியினைக் கோதி பிடரி முடியை அழுத்தப் பற்றிக் கொண்டான்.
தருண் கூறிய அனைத்தும் சரியாகவிருக்கும் பட்சத்தில் ஸ்டார் எனும் பெண் ஜோவின் வாழ்கையில் நுழையவே முடியாது. ஆனால் நூற்றில் ஒரு பங்காக இவையனைத்தும் பொய்யாகி போய்விடாத என்ற ஏக்கம் அவனின் மனதில் மெல்லப் பரவியது.
“ஜீஸஸ்! தருண் சொன்ன மாதிரி ஸ்டாருக்கு எந்த ரிலேசன்சிப்பும் இருக்க கூடாது. இஃவன் மாமா, அத்தை பையன்னு கூட யாரும் இருக்க கூடாது. கோஸ் ஷீ இஸ் மை கேர்ள்.” அவசர வேண்டுதலை வைத்தான் ஜோ.
***
“என்ன தைரியம் இருந்தா, ஒரு ஸ்கூல் படிக்கும் பொண்ணு மேல கை வைப்பாய். அக்கா, தங்கச்சி கூடப்பிறந்தவன் தானடா நீ. அடுத்தவன் வீட்டு பொண்ணுங்க மேல வைத்த உன்னோட கை, இனி ஆறு மாத்துக்கு எதுக்கும் யூஸ்ஸாகம போகட்டும்.” என்றான் ஸ்டாரின் அத்தை மகன் வஷிஸ்டன்.
அவர்களது வியாபார நிலையத்திலிருந்து வீட்டுக்குச் செல்லும் குறுகலான பாதையொன்றில் வாலிபன் ஒருவன் பாடசாலைச் சீருடை அணிந்த பெண்ணின் கைகளை பலவந்தமாக பிடித்து இழுப்பதைக் கண்ட வஷியோ எரிமலையாக கொதித்து விட்டான்.
வண்டியை இடிப்பது போல அவ் வாலிபனின் காலடியில் விடவும் அவனது பிடி நழுவிவிட அப் பெண் உடனே ஓடி மறைந்துவிட்டாள். வஷியோ வண்டியிலிருந்து இறங்கி பளார் என ஓரு அரைவிடவுமே அவ் வாலிபன் நடுங்கிவிட்டான்.
அதற்கு மேலும் பொறுமையிழந்தவன், அவ்வாலிபனின் கையை முதுகுப்புறமாக மடக்கி முறுக்கிவிடவும் என்புகள் உடையும் சத்தம் வஷியின் காதை அடைந்தது.
“ஜாக்கிரதை.” ஒற்றை விரல் நீட்டி நாக்கை மடித்துக் காட்டியவன் வலியில் துடிக்கும் வாலிபனைத் திருப்தியாக பார்த்துவிட்டு தனது வண்டியில் ஏறிப் பறந்தான்.
****
கடந்த இரண்டு நாட்கள் எப்படி சென்றது என்று கேட்டால்
ஜோவிடம் சரியான பதில் கிடைக்காது என்பதே உண்மை. தான் இத்தாலி வந்ததன் நோக்கமான வியாபார உடன்படிக்கை தொடர்பாக மிலானில் இருந்து ரோமிற்கு சென்றிருந்தான் அவன்.
வேலை, வேலை என ஓடினாலும் ஸாடாரின் நினைவுகளும் உடனே அவனுள் ஓடிக் கொண்டிருந்தது. தருணுடன் பேசியும் இரண்டு நாட்கள் கடந்திருக்க, நேற்று மாலை போல இந்தரஜித்திடம் இருந்து குறுஞ்செய்தி வேறு இவனுக்கு வந்திருந்தது.
இரவு பத்து மணிபோலவே மீண்டும் மிலானுக்கு திரும்பியவன் இன்று அதிகாலை எழுந்து விட்டான். நேரத்தை சரி பார்த்தவன் தருண் அலுவலகத்திலிருபான் என எண்ணி அவனுக்கு அழைத்தான்.
வழக்கம் போலவே அழைப்பை ஏற்ற தருணிடம், முதலில் வியாபாரம் தொடர்பான தகவலை கலந்துரையாடினான் ஜோ.
பின், “தரு!” என ஆரம்பிக்கவும், “பிள்ளையாருக்கு நூறு தேங்காய் உடைக்கிறதா வேண்டியிருக்கேன் ஜோ. உன்னோட ஆசை கண்டிப்பாக நிறைவேற வேண்டும்னு. நான் ஸ்ருத்தியை காதலிக்கும் போது ஸ்கூல் படிச்சிட்டு இருந்தோம்டா. அப்போ என்ன சொன்ன நீ,
காலம்கடந்த பின்னால் வாழ்கையில செட்டில் ஆன அப்புறமும் நமக்கான ஒரு துணை வேணும்னு தோனும் போது ஸ்ருத்தி உன் மனசுல இருந்தா அப்போ நீயே கல்யாணம் பண்ணி வைப்பேனு சொன்னாய். அதுபடியே எனக்கு கல்யாணமும் பண்ணி வைத்தாய் ஜோ.
பதினைந்து வயசுல உனக்கு அவ்வளவு பக்கும்டா. ஒரு வேளை வயசுக்கோளாராக என்னோட காதல் இருக்கும்னு அப்போவே யோசித்தாய். இப்போ உன்னோட முப்பது வயசுல உன்னோட பக்குவம் எவ்வளவு முதிர்சியடைந்திருக்கும் என எனக்கு நல்லாவே புரியுதுடா. சோ..” தன் நண்பனுக்கு ஸ்டார் மீது உள்ளது காதல் என்று முற்றாக விளங்கிக் கொண்டவனாக பேசினான் தருண்.
“நீயா ஈஸியாக விடமாட்டாய்னு தெரியும் ஜோ. ஏதாச்சும் நீட்ஸ் இருந்தா…” என்ற தருண் மறைமுகமாக, இவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என சொல்லவரவும்,
“ஐ நெவர் லூஸ் இட் தருண்.” என்று ஆழ்ந்த குரலில் கூறிய ஜோவின் ஹேசல் நிற விழிகளில் பளபளப்பு கூடியிருந்தது. அந்த கண்களில் இருந்த ஒரு வித வலி அவனின் ஏக்கங்களை, அவன் சமாளிக்க வேண்டிய நபர்களையும் ஒருங்கே நினைவூட்டியது.
அதன் பின் இந்தரஜித்தின் விருந்து அழைப்பு பற்றி கூறிய ஜோ, நேற்று அவன் மீண்டும் விருந்துக்கு அழைத்து குறுஞ்செய்தி அனுப்பியதையும் அதற்கு தான் சம்மதித்ததையும் பற்றி பேசிய பின்னே அழைப்பைத் துண்டித்தான்.
தொலைபேசியை தூர வைத்தவன், இந்தரஜித்தின் வீட்டிற்குச் செல்ல தயாரானான். எப்போதுமே அகத்தைப் போலவே புறமும் அழககா இருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவன் ஜோ.
அதுபோவே இன்றும் மிடுக்காகவும் நாகரிகமாவும் உடையணிந்து, பிடரி தாண்டி வளர்ந்த முடிகளை சிண்டாக ரப்பர்பாண்டில் அடைத்து கம்பீரமாக வெளியேரியவன், பல்பொருள் அங்காடியொன்றில் நுழைந்து கொண்டான்.
மஞ்சள் நிற ரோஜா பூங்கொத்து, இந்தரின் இரண்டு மகள்களுக்கு கரடி பொம்மை மற்றும் இனிப்புக்கள் என வாங்கியவன், இந்தரினால் அனுப்பட்ட முகவரியில் உள்ள அந்த பென்த்ஹவுஸ் எனப்படும் அடுக்கு மாடிக்குடியிருப்புக்குச் சென்றான்.
ஆறாவது மாடியிலிருக்கும் இந்தரின் வீட்டின் கதவின் அழைப்பு மணியைத்தட்டி விட்டு தொலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டு நின்றவனின் முன்னிருந்த கதவு திறக்கப்படவும், “ஹாய்.” என கூறியவாறு மூரல்கள் வரிசையாக மின்ன நிமிர்ந்தவனின் உடல் சிலிர்த்து அடங்கியது.
தனது தோளில் முகம் புதைத்து சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு கையால் தட்டிக் கொடுத்தவாறு கதைவை மறு கையால் திறந்த ஸ்டாரினை சர்வ நிச்சயமாக ஜோ அங்கு எதிர்பார்திருக்கவில்லை.
ஒரு நொடிக்கும் மேலாக தன்னை ஆச்சரியமாக பார்பவனை இதற்க்கு முன் எங்கோ சந்தித்தாக ஸ்டாருக்கு தோன்றியது.
“ஹாய்.” என அவளும் சம்பிரதாமயாக கூறிவிட்டு, “உள்ள வாங்க.” என வழிவிட்டவளிடம் தனது கையிலிருந்த மஞ்சள் நிற ரோஜா பூங்கொத்ததை நீட்டினான் ஜோ.
வட்டமாக கண்கள் விரிய அவனை உருத்து விழித்த ஸ்டாரின் விழிகளில் தொலைந்து போய்விடுவோம் என எண்ணிய ஜோவோ, தலையை அழுத்தக் கோதிவிட்டவன்,
“கை..கையில் போஃன்.” என்றவன்; கீழே இருந்த பைகளைச் சுட்டிக்காட்டி கொஞ்சம் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கண்களால் கெஞ்சினான்.
ஜோவினுடைய ஹேசல் நிற கண்களை ஏறிட்ட ஸ்டாரினுல் ஏதோ ஒரு வித குறுகுறுப்பு வந்து சென்றது. அந்த கெஞ்சும் கண்களில் இருந்து விழியகற்றி அவனின் குரலை செவிகளுக்குள் செவிமெடுத்த ஸ்டார் இவன் யார் என அறிந்து கொண்டாள்.
‘அட, அந்த தோசை மேன்.” என உள்ளே நினைத்த ஸ்டாரும் அவன் கையில் இருந்த பூவை வாங்கவில்லை.
“வா! மச்சான் ஜோஷ்.” என ஆர்பாட்டமாக அழைத்த இந்தரின் கைகளே அப் பூங்கொத்தை வாங்கிக்கொண்டது.
‘கரடி’ என்று நினைத்தாலும், “ஹாய்! நண்பா.” என்றவாறு உள்ளே சென்றான். இவர்கள் உள்ளே நுழைய வழிவிட்ட ஸ்டார் குழந்தையுடன் முன்னே நடந்தாள்.
வாங்கி வந்த பொருட்களை வரவேற்பறை டீபாயில் வைத்தவன், சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“ஹலோ! அண்ணா. எங்க வெட்டிங்கு அப்புறம் இப்போ தான் உங்களை நேரில பார்கிறேன். ஐந்து வருஷத்துக்கு முன்னே இருந்தது போலவே இப்போவும் ஸ்டைலிஸ்ஸா எப்படி மெயின்டையின் பண்றிங்கனு இவருக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.” என்றபடி கைக்குழந்தையுடன் அவனின் எதிரில் வந்து அமர்ந்தாள் இந்திரஜித்தின் மனைவி ப்ரீத்தா.
இந்திரஜித்தின் திருமணத்தி்ன் பின் இப்போதுதான் நேரில் சந்தித்தாலும் ப்ரீத்தா நன்றாகவே பேசினாள் ஜோவுடன். ப்ரீத்தாவினை முன்கூட்டியே தெரிந்திருந்ததால், ஜோவிற்கு ஸ்டார் தொடர்பாக எந்தவித சந்தேகமும் எழவில்லை என்பதே உண்மை.
ப்ரீத்தாவின் உறவுக்கார பெண்ணாக இருக்குமோ என்ற யோசனை ஓடிய போதும் ப்ரீத்தா வடமாநிலத்தை சேந்தவள், ஆனால் ஸ்டாரின் தோற்றம் தமிழ்நாட்டுக்குறிய முகலட்சமாகமே இருந்து.
“அதுக்கென்னமா? சொல்லிக்கொடுக்க நான் ரெடி. ஆனா இந்தர் ரெடிபோல இல்லையே.” என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டியவனின் பார்வை ப்ரீத்தாவின் அருகில் இருந்த ஸ்டார் மீதே இருந்தது.
ஸ்டார் ஜோவைப் பார்க்க அவன் இவளைப் பார்த்து கண்சிமிட்டுவது போன்றே தோன்ற சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.
தான் இருந்த இருக்கையில் இருந்து எழுந்த ஜோவோ, “ஹாய் மிஸ்.” ‘மிஸஸ் ஜோ’ என்று கைகளை குலுக்க நீட்டவும், தவிர்க முடியாமல் ஸ்டாரும் குறுநகையுடன் கையை நீட்டினாள்.
இத்தனை மென்மையை இதுவரை தொட்டிறாதது போன்று அழகான பஞ்சு கைகளை தொட்டவனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அடுத்த நொடி இந்த கையை விடக்கூடாது என்ற பேராவலில் சற்று அழுத்தமாக பிடிக்கவும், மெதுவாக கரத்தினை தன் பக்கம் இழுத்துக் கொண்ட ஸ்டார் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அதன் பின் ஆண்கள் இருவரையும் பேசவிட்டு விட்டு, குழந்தைகளை கண்பார்வைக்கு எட்டிய தூரத்தில் விளையாடவிட்ட பெண்கள் இருவரும் சமையல் கூடத்திற்குள் புகுந்து கொண்டனர்.
மேலத்தேய பாணியில் திறந்த சமயற்கூடத்தில் ஸ்டார் எதையே சமைத்துக் கொண்டிருக்க ப்ரீத்தா அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.
இந்தருடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஓர விழியினால் ஸ்டாரையே அடிக்கடி நோட்டமிட்டான் ஜோ.
பேச்சின் நடுவிலே இந்தரிடம் சாமத்தியமாக ஸ்டாரினை பற்றிய தகவல்களை போட்டு வாங்கிக் கொண்டிருந்தான் அவன்.
தாங்கள் மூன்று மாதத்திற்கு முன் இங்கு குடிவந்த போது ஸ்டாருடன் நட்பு உதயமானதைப் பற்றிக் கூறினான் இந்தர். அவனுடைய முன்று வயது நிரம்பிய மூத்த மகள், ஸ்டாரினைப் பார்த்து அவளது சித்தி என நினைத்து கட்டிக் கொண்டதையும் அதன் பின் ஸ்டார் அடிக்கடி இவனது மகளைப் பார்க்க வருவதையும் பின் இரு வீட்டாரும் நண்பர்களாகியதையும் கூறியவன்.
“உனக்கே தெரியுமே ஜோ. ப்ரீத்தா வாரத்துல ஏழு நாளும் சப்பாத்தியை சாப்பிடும் ஆள் என்று. இங்க ஸ்டார் செஃப்னு தெரிந்ததுக்கு பிறகு, சில நம்ம ஊர் டிஸ் எல்லாம் கேட்டு சமைக்க கத்துக்கிட்டாள். அந்த பொண்ணு ஸ்டாரும் ரொம்ப நல்ல டைப்டா. என்ன ஹெல்புனு கேட்டாலும் முன் வந்து செய்யும்.
நல்ல கைப்பக்குவம் அவளுக்கு. இதுல காண்டினென்டல் செஃப் அவள். பட் ஊர் வாசம் விட்டு போகல. அது மட்டும் இல்லாம சோசியல் சேர்விஸ் கூட பண்ணுதுடா.” ஸ்டாரின் புகழ்பாடினான் இந்தர்.
இந்தர் பேசபேச ஜோவி்ன் பார்வை ஸ்டாரினைத் துளைத்தது. லாவண்டர் நிற காலர் வைத்த டாப்பும் வெள்ளை நிற நீண்ட ஸ்கேர்டும் அணிந்திருந்தவள் சமைப்பதற்க்கு தோதாக தூக்கிப் போட்ட கொண்டை சகிதம் இருந்தவளின் காதில் சிறிய தோடு மாத்திரம் ஒட்டி உறவாடியது.
கழுத்தில் ஏதும் சங்கிலி இருக்குமா என நோட்டம் விட்டவனுக்கு அவளின் தொண்டைக்குழிக்கு கீழே பூட்டியிருந்த காலரே தரிசனம் கொடுத்தது. பார்வையை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கியவன் தலையைச் சிலுப்பிக் கொண்டான்.
யாரோ முதுகுக்கு பின்னால் தன்னை அவதானிப்பது போன்று தோன்றவும் சட்டென திரும்பி்ய ஸ்டாரின் விழியில் தென்பட்டது என்னவோ; ஜோவின் தலைச் சிலுப்பலே. ‘நத்திங் ஸ்டார்’ என்று முணுமுணுத்தவள் சமையலைத் தொடர்ந்தாள்.
“இப்போ கூட உனக்காக சமைக்க ஹெல்ப் கேட்டதுக்காக இன்னைக்கு லீவ் போட்டுட்டு இங்க வந்திருக்கா ஸ்டார். ஆனா போ நான் ஸ்டாரை மிஸ் பண்ணிட்டேன்.” என்ற இந்தரின் பேச்சில் திகைத்துப் போனன் ஜோ.
“வாட் யூ மீன்.” அதிர்வுடனே கேட்ட ஜோவிடம். “தம்பிக்கு வரனாக ஸ்டாரை கேட்டோம்டா. ஆனா அந்த பொண்ணுக்கு கல்யாணத்தில விருப்பம் இல்லைனு ப்ரீத்தாகிட்ட சொல்லிட்டு. நான்..நாங்க ஒரு நல்ல பொண்னை மிஸ் பண்ணிட்டோம்.” இந்தர் வருந்திக் கொண்டிருக்க,
ஜோவோ மகிழ்சிக் கடலில் தத்தழித்துக் கொண்டிருந்தான். இந்த நிமிடம் உலகினிலே மிக மகிழ்சியான ஒருத்தன் யார் எனக் கேட்டால் தன் பெயரை உரக்க கத்தி செல்லிவிடுபவன் போல அத்தனை நிம்மதியும் ஆசுவாசமும் அவனுள் ஊற்றெடுத்தது.
அரை மணி நேரத்திற்கு பின் அவ் வீடே பிரியாணி வாசத்தினால் நிரம்பியிருந்தது. சாப்பாட்டு மேசையின் முன்னால் குழந்தைகள் தவிர்த்து நால்வரும் அமர்ந்திருந்தனர்.
அதிலும் ஆண்கள் இருவருக்கு எதிரிலும் பெண்கள் இருவரும் அமர்ந்து பரிமாரிக் கொண்டிருந்தனர்.
சீரகசம்பா பிரியாணி, கோழி மிளகு வறுவல், ரைத்தா, அவத்த முட்டை, இரால் குடைமிளகாய் குழம்பு, குடல் பிரட்டல் மற்றும் இனிப்பு வகையாக கேசரி, குழாப்ஜாமுன் என அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தனையும் ஜோவிற்கு மிகப்பிடித்த உணவுகள். இந்தர் சொல்லி சமைத்திருப்பாள் போலும் ஸ்டார்.
ஒரு வாய் பிரியாணியை உண்ட ஜோவிற்கு அவ் உணவின் சுவை அவனின் மனம் கவர்ந்தவள் போலவே நவைக் கட்டியிழுத்தது. ஒருவாராக அனைத்தையும் ருசித்து வழக்கத்திற்கு அதிகமாகவே புசித்தான் அவன்.
இறுதியாக கண்ணாடிக் குடுவையில் குழாப்ஜாமுனை வைத்து கொடுத்த ஸ்டாரின் கைகளைப் பார்த்தவன், “சச் எ டேஸ்டி பூஃட். எல்லாரும் சொல்றது போல உன்னோட கைக்கு தங்கம்..ம்ஹூம் வைரத்தில் காப்பு போடனும் கேர்ள்.” என்றான்.
‘மரியாதையா பேசுடா.’ ஒருமையில் ஜோ பேசியதில் கடுப்பான ஸ்டார் மனதுக்குள் முனங்கிக்கொண்டு, “தங்யூ மிஸ்டர்.” என்றாள்.
“காப்பு மட்டும் இல்லை. மோதிரம் கூட மாத்…இல்லை போடலாம்.” சலனமே இல்லாமல் சஞ்சலாமக்க என்னால் முடியும் என்பது போல் ஒட்டியும் ஓட்டாமலும் இருந்த தனது புருவத்தை ஏற்றி இறக்கியவாறு கூறிவிட்டு இந்தர் அருகில் போய் நல்லவன் போல அமர்ந்து விட்டான்.
‘இவன் என்ன பைத்தியா? இல்லை எங்கிட்ட சும்மா ப்ளிட்ரிங் பண்ணுறானா. பட் அவன் கண்ணு..பச் வேணாம் ஸ்டார்.” என நினைத்த ஸ்டார் சமையலறையை சுத்தம் செய்ய சென்றுவிட்டாள்.
செல்லும் அவளையே நோக்கிக் கொண்டிருந்த ஹேசல் நிற நேத்திரத்தில் வெற்றிக் களிப்பு குடியேறியது.
‘வினா தாள் போல் இங்கே கனாக் காணும் காளை,
விடை போலே அங்கே நடை போடும் பாவை…’