chitrasaraswathi
Member
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK 19ன் மலடியின் மகளே எனது பார்வையில். சூர்யாவின் காதல் மனைவி வெண்மதி திருமணம் ஆகி சில வருடங்கள் நிறைவு செய்தும் குழந்தை இல்லை. சூரியா குழந்தை இல்லை என்பதை பற்றி பெரிதுப்படுத்தப்படாமல் இருந்தாலும் அவன் அம்மா மற்றும் அண்ணி அவளுக்கு குழந்தை இல்லை என்பதை விட மதி அநாதை என்பதால் கொடுமைப்படுத்துகிறார்கள்.
படித்த பெண்ணாக இருந்தாலும் காதல் கணவனிடம் தங்கள் வீட்டில் நடப்பதை சொல்லாமல் மறைக்கிறாள். படித்த தைரியமான பெண் கணவன் குடும்பத்தை விட்டு பிரிந்து போகக் கூடாது என்ற காரணத்திற்காக பொறுத்துக் கொள்வதாக தந்திருப்பது மனதை நெருடுகிறது. பிரச்சினைகளை தைரியமாக குடும்பம் சிதறாமல் இருக்குமாறு கையாண்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
தன் வீட்டில் மனைவியின் நிலை என்ன என்பதை அறிய அவனும் அவளும் கொடுக்கும் விலை அதிகம். தனியாக வந்த பிறகு குழந்தைக்காக எடுக்கும் சிகிச்சை அவளுக்கு ஏற்படுத்தும் நிலை அத்தகைய மருத்துவ மனைகளை பற்றிய விழிப்புணர்வும் எச்சரிக்கையை நமக்கு தருகிறது. குழந்தை தத்தெடுக்கும் சட்டம் பற்றி விவரங்களையும் தந்திருக்கிறார் எழுத்தாளர்.
சூர்யாவை போன்ற காதல் கணவன் அரிது . அவன் அண்ணன் சந்துருவும் நேர்மறையான கதாபாத்திரம். இதில் வரும் பெண்கள் கதாபாத்திரங்கள் தான் எதிர்மறையாக இருக்கிறார்கள். குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியினர் தெரிந்துக் கொள்ள விழிப்புணர்வு தரும் கதை. வாழ்த்துகள் மா.

Last edited: