எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காந்தையே காதலுற்றேன்

santhinagaraj

Well-known member
காந்தையே காதலுற்றேன்

விமர்சனம்

ஆழமான காதலும் நட்பும் கலந்த ஃபீல் குட் ஸ்டோரி.

ஜோவிதா அம்மா பொண்ணு எல்லாத்துக்கும் அம்மாவை எதிர்பார்க்கிற ரொம்ப பயந்த சுபாவம் உடைய பொண்ணு.

விபு பிரசாத் மனைவி ஜனனி மகன் சச்சின் அம்மா சுதா இவங்களோட இருக்க பள்ளியில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி வைக்கிறான்.

விபு வேலை செய்யும் அதே பள்ளியில் ஜோவிதா வேலைக்கு செல்கிறாள். பயந்த சுபாவம் கொண்ட ஜோவிக்காவிற்கு அவள் தடுமாறும் நேரங்களில் சக ஆசிரியராக உதவி செய்ய அதுவே இருவருக்குள்ள ஈர்ப்பை ஏற்படுத்தி காதலாக மாறுகிறது.

மனைவி புள்ளையோட இருக்கிறவனுக்கு எப்படி ஜோவிதா மேல காதல் வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறப்போ ஜனனி அவனோட வீட்டில பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்திருக்கான்னு தெரியுது.

விபு என் வேலை செய்ற இடத்துல உனக்கு கல்யாணம் ஆனதை மறைச்சு இருக்கான்? ஏற்கனவே குடும்பத்தோடு இருக்கும்போது ஜோவி மேல எப்படி காதல் வருகிறது? தோழி கழுத்துல தாலி கட்டுற அளவுக்கு அப்படி என்ன இக்கட்டான சூழ்நிலை? ஜனனி விபு கல்யாணத்தை ஜோவி எப்படி எடுத்துக்கிறா அவங்க காதல் என்ன ஆகிறது? ஜோவி விபு காதல ஜோவியோட வீட்ல எப்படி எடுத்துக்கிறாங்கன்னு நிறைய கேள்விகளோட கதையை ரொம்ப சுவாரசியமா கொண்டு போய் இருக்காங்க.

விபு ஜோவி மீது காட்டும் காதலும் அக்கறையும் சூப்பர்.😍😍

விபு ஜனனி நட்பு அருமை👏👏.

ஒரு இக்கட்டான சூழ்நிலை தான் ஒருத்தருக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுக்கும் சொல்லுவாங்க அப்படி ஒரு சூழ்நிலைல தைரியத்தோட தன்னம்பிக்கையோடு ஜனனி தன்னோட வாழ்க்கைக்கான முடிவை எடுத்து தனக்கான அடையாளத்தை உருவாக்கும் விதம் அருமை👏👏👏

விபு சச்சின் ரெண்டு பேரோட மச்சி சச்சி என்கிற அவங்களோட பாண்டிங் சூப்பரா இருந்தது👌👌👌

விபு ஜோவியோட அம்மா கிட்ட தனது காதலுக்காகவும் நட்புக்காகவும் பேசுற பேச்சு செம.

ஆண் பெண் நட்பை அழகாக எடுத்துச் சொல்லி கதை நிறைவா முடித்த விதம் சூப்பர்.👌👌👌

தெளிவான எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:
Top