எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சராங்கே சந்தரவதனா - கதை திரி

Status
Not open for further replies.

NNO7

Moderator
(ஹாய் டியர்ஸ்! புது கதையுடன் வந்துவிட்டேன். கதையில் வரும் அனைத்துக் கதாப்பாத்திரங்களும், கதைக் கருவும் கற்பனையே யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட வில்லை. இந்தக்கதை முழுக்க என் சொந்தக் கற்பனையால் எழுதப்படுகிறது என்பதை உறுதியாக கூறுகின்றேன்)

சராங்கே சந்தரவதனா

அத்தியாயம் – 1

“நான் என் முடிவில் உறுதியா இருக்கேன். கண்டிப்பா டெல்லி போகத்தான் போறேன்” என்று கூண்டில் இருந்து வெளியே பறக்க இருக்கும் கிளியைப் போல் மிகவும் மகிழ்ச்சியாக தன் தோழிகளிடம் பேசிக்கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி சந்தரவதனா சுறுக்கமாக வதனா.

அவளைப் பார்த்து சுற்றி இருந்த அனைத்து தோழிகளும், அவள் சொல்வதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

உடனே முகத்தை சிறியதாக வைத்துக் கொண்ட வதனா, “இப்ப எதுக்காக இப்படி சிரிக்குறீங்க?. கேம்பஸ் இண்டர்விவ்ல முதல் ஆளா வந்துருக்கேன். நம்ம ஹச்ஓடி கூட என்னைக் கூப்பிட்டு பாராட்டுனார் தெரியுமா” என்று தன் சட்டையில் இல்லாத காலரை தூக்கிவிட்டாள்.

அதில் ஒரு தோழியோ, “எல்லாம் சரி தான். உன் பாசமான அண்ணனுங்க, பக்கத்தில் இருக்கும் ஊட்டிக்கே காலேஜ் டூர் விடலையாம், இதில் உன்னை டெல்லிக்கு, அதுவும் வேலைக்கு அனுப்பிட போறாங்களாக்கும்” என்று சொல்ல அவளுடன் சில தோழிகளும் இணைந்து கொண்டனர்.

அதில் வதனாவின் முகமே வாடிய கொத்தமல்லி தழை போல் மாறிவிட்டது. அதைத் தன் தோழிகள் பார்த்துவிடாமல் இருக்க, வேகமாக தன் முகத்தை மாற்றியவள், “அவங்களுக்கு என் மேல ரொம்ப பாசம். அதான் அப்படி. ஆனா நான் அடம்பிடிச்சி கேட்டா அவங்க இதுக்கு கண்டிப்பா சம்மதிப்பாங்க” என்று தீபஒளியைப் போல் பிரகாசித்தாள்.

“ஆனா உன்னைப் பார்த்தா எங்க எல்லாருக்கும் பொறாமையா இருக்கு வதனா. ஒன்னுக்கு ரெண்டு அண்ணன் உன்னை தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க. நீ வீட்டுக்குப் போக கொஞ்சம் தாமதம் ஆனாலும், குயின்ஸ் நகைமாளிகையே ஆடி தான் போகுது...” என்றாள் இன்னொரு தோழி சிரித்தபடி. அவளுடன் சேர்ந்து மற்றவளும், “ஆமாம் ஆமாம் நீ ரொம்ப லக்கி தான் வதனா. குயின்ஸ்சோட பெஸ்ட் கலெக்ஷன்ஸ்ல ஒன்னான மயில் வைர நெக்லஸ் என் ஒரே தங்கச்சிக்குன்னு உன் அண்ணன் கூட மீடியா முன்னாடி சொன்னாரே” என்று சிலாகித்துப் பேச, அதை எல்லாம் அமைதியாக இதழில் மென்மையான கசந்த நகையுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் சந்தரவதனா.

ஆனால் அவள் மனதிலோ பலவித யோசனைகள் ஓடிக்கொண்டு இருந்தது. பார்வையில் படுவது எல்லாம் உண்மையாகாது என்ற வாசகம் வதனாவின் தோழிகளுக்கு தெரியவில்லை. அதனால் தான் வதனாவின் உதடு கசப்பைக் கலந்து சிரித்தது.

ஒடிசலான தேகம், மயில் போன்று நடையில் நிமிர்வு, பார்ப்பவரைக் கட்டி இழுக்கும் அப்பாவியான முகம், கதை பேசும் பெரிய கண்கள், செண்பகப்பூ போன்ற மூக்கு, வண்ணம் பூசாத செர்ரி நிற உதடு என அழகின் பிறப்பிடமாய் மின்னினாள் வதனா.

சந்தம் என்ற சொல், ஒலியின் வண்ணம், அழகு என்ற பொருளை தாங்கி வருகிறது அதனைத் தன் பெயரின் முற்பாதியாக கொண்ட சந்தரவதனா, பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். அனைவரிடமும் அன்பாக நட்பு பாராட்டுபவள். வகுப்பில் எப்போதும் முதல் மாணவி.

ஆனால் இதெல்லாம் கல்லூரியில் மட்டுமே, வீட்டில் வதனா இருக்கும் நிலையோ வேறு. காயத்தின் மீது கற்கள் மட்டும் அல்ல அழகான பூக்கள் விழுந்தாலும் வலிக்கவே செய்யும்.

அவளைக் கூப்பிட மகிழுந்து வந்ததும், அதில் ஏறிய வதனா, ஜன்னலில் தன் தலையை சாய்த்து தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

‘இறுதியா என்னோட இத்தனை வருஷ பிரார்த்தனையை கடவுள் கேட்டுட்டார்’ என்று அவளுள் பெருமூச்சு ஒன்று எழுந்தது. அதே கடவுளிடம் தான் பலமுறை, “இப்படி இருக்கத்தான் என்னை படைச்சியா? பேசாம என் உயிரை எடுத்துக்கொள்” என்று வேண்டி இருந்தாள்.

சுலபமாக தங்கக்கூண்டில் இருந்து தப்பிவிடலாம் என்ற ஆசை நிறைவேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கண்களை மெதுவாகத் திறந்து ஜன்னல் வழியாக கடந்து போகும் மரங்களைப் பார்த்தாள், தன் வீட்டில் இதற்கு ஒத்துக்கொள்வார்களா என்ற எண்ணம் எல்லாம் அவளுள் எழவில்லை மாறாக, ‘நானே அவர்களுக்கு சுமை தானே! அதனால் இதை நான் சொன்னதும், சந்தோஷமாக அனைவரும் ஏற்றுக்கொள்வர்’ என்று நினைத்துக்கொண்டாள்.

“பெரிய அண்ணன் எங்க இருப்பாரு தாத்தா” என்று வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த முதியவரிடம் கேட்டாள் வதனா.

“பெரியவர் நம்ம மெயின் பிராஞ்ச்சில் தான் இருப்பாரு அம்மா” என்றார் வண்டியை ஓட்டிக்கொண்டே,

“அப்ப நேர அங்கயே போங்க தாத்தா” என்றாள் வதனா. அவள் கட்டளையை ஏற்று அவரும் நேராக அவர்கள் நகைமாளிகைக்கு வண்டியை செலுத்தினார்.

குயின்ஸ் நகைமாளிகை என்று பொன் எழுத்துக்களுடன், வைரமாக ஒளியும் மின்ன, ஐந்து அடுக்குகள் கொண்ட, அந்த பெரிய வளாகத்தின் உள்ளே நுழைந்தது வதனா அமர்ந்திருக்கும் மகிழுந்து.

தங்க நகைகள் மட்டும் இல்லாது ஒரு மாடியில் வைரம், இன்னொன்றில் முத்துக்கள், என வெள்ளி, பிளாட்டினம் என முறையே இருந்ததது. முதல் மாடியில் வைரநகைகள் பிரிவில், உள்ள ஒரு அறையில் அமர்ந்து மடிக்கணினியில் எதுவோ செய்துகொண்டிருந்தான் அஜய். வதனாவின் முதல் அண்ணன்.

அஜய்க்கும் வதனாவிற்கும் கிட்டத்தட்ட ஒரே முகஜாடை. கதவைத்தட்டி விட்டு அஜய்யின் முன்னால் வந்து நின்றாள் வதனா. அவள் முகத்தில் கேள்வியாக பார்வையை செலுத்திவிட்டு, திரும்பவும் தன் மடிக்கணினியை நோக்கி செலுத்தியவன், “காலேஜ் பீஸ் எல்லாம் கட்டியாச்சே!” அதான் உனக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டேனே பின் எதுக்காக இங்கே வந்தாய் என்பது போல் தான் இருந்தது அவனது பேச்சு.

மூச்சை ஆழமாக இழுத்து வெளியேவிட்டவள், “எனக்கு உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றதும், மடிகணினியைத் தட்டிக்கொண்டிருந்தவன் கை அப்படியே நின்றது. தன் கூரிய விழிகளை, வதனாவை நோக்கி வீசியவன், “இதை ஏற்கனவே நாம பேசிட்டோம்னு நினைக்குறேன். அதுக்கு நீயும் ஒத்துக்கிட்ட. குயின்ஸ்ல உனக்கு எந்தவித ஷேர்ஸ்சும் கிடையாது” என்றான் உறும்பளோடு.

“நானும் வேண்டாம்னு தான் சொல்றேன் அண்ணா. எனக்கு அது தேவை இல்ல” என்றாள் பிசிறாத குரலில்.

“பின்ன எதுக்கு இங்க வந்த?” என்றான் குரலில் சிடுசிடுப்புடன். வந்தவளை அமரக்கூட சொல்லவில்லை.

“நான் இதுக்கு மேலையும் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல...” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் கைகளை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவன், “ஏன் சாகப்போறியா?” என்று வார்த்தைகள் என்னும் அமிலத்தை அவள் மீது தெளித்தான்.

ஆனால் இதற்கு எல்லாம் சிறிதும் கலங்காத வதனா, “அப்படி எல்லாம் இல்லை அண்ணா” என்றாள் சாதரணமாக, முதல் தடவை என்றால் வருத்தம் இருக்கும், அவன் வாயில் இருந்து அவள் அடிக்கடி கேட்கும் சொல் தானே, அதனால் பெண்ணவள் அதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“பின்ன எதுக்காக இங்க வந்த?. இங்க எல்லாம் நீ வரக்கூடாதுன்னு உன்னை ஏற்கனவே சொன்னதா நியாபகம்” என்று கடினமான குரலில் பேசினான்.

முன்பு ஒருமுறை வதனா இங்கே வந்த பொழுது, அனைவரிடமும் சமமாய் பழகும் அவளின் மனது, நகைமாளிகையில் வேலை செய்யும் பணியாட்களைக் கவர்ந்தது. அவர்கள் தங்களுக்குள் வதனாவை வாழ்த்தி பேச, அது எப்படியோ அஜயின் காதில் வந்து விழுந்துவிட்டது. அதில் இருந்து அவள் நகைமாளிகைக்கு வரவே கூடாது என்று தடையும் போட்டான்.

“மன்னிச்சிடுங்க அண்ணா. இனி இந்த தவறு நடக்காது. நான் கேம்பஸ் இண்டர்விவ்ல செலக்ட் ஆகிருக்கேன். நான் இனி இங்க இருக்க மாட்டேன்” என்று தான் சொல்ல வந்ததை வேகமாக சொல்லிவிட்டு, அஜயின் முகத்தைப் பார்த்தாள்.

அஜயின் முகத்தில் யோசனை ரேகைகள். முன்பு அவன் மனைவி அமலா சொன்ன விஷயங்கள் அவன் முன்னால் வந்து நின்றது.

“வதனா படிப்பு முடியப்போகுது. அவளை என்ன பண்ணப்போறீங்க?” என்றாள் சுமையைத் தூக்கி தன் தோளில் வைத்திருப்பவள் போல.

“அவளுக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி, அப்பாக்கு நான் தந்த வாக்கை காப்பாத்தணும்” என்று கடமை உணர்ச்ச்சியுடன் பேசினான்.

அதற்கு முகத்தை சுழித்த அவனின் மனைவி, “குயின்ஸ்ல பாதி ஷேர்ஸ் அவளுக்கு இருக்கு. அது உங்க நியாபகத்தில் இருக்கு தானே! என்ன தான் அவளுக்கும் நகைக்கடைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நீங்க அவளிடம் தினமும் பத்து தடவை ஓதினாலும், பத்திரத்தில் இருப்பது தானே உண்மை” என்றாள்.

“இப்ப நீ என்ன தான் சொல்ல வர்ற?” என்று அவன் கேட்க.

“வதனாக்கு கல்யாணம் ஆனாத்தான் அவளால் ஷேர்ஸ்சை விற்க முடியும்னு, உங்க அம்மாவும் அப்பாவும் சேர்த்தே உயில் எழுதி வச்சிட்டு போயிருக்காங்க. உங்க அம்மாவோட மொத்த ஷேர்ஸ்சும் அவளுக்குத் தான் சொந்தம். அவளுக்கு திருமணம் செஞ்சா, அவளுக்கு வர்றவன் சும்மா இருக்க மாட்டான். குயின்ஸ்ல வந்து உரிமை கொண்டாடுன்னா என்ன பண்ணுவீங்க...” என்று அவள் சொல்லும் போதே அஜய்க்கு கோபம் வந்துவிட்டது.

“போதும் நிறுத்து. கண்டவன் எல்லாம் வந்து உரிமை கொண்டாட நான் ஒருநாளும் விடமாட்டேன்” என்றான் வீரஆவேசமாக.

“அதைத்தான் நானும் சொல்றேன்ங்க. அதுக்காக நாம தலையில் துண்டை போட்டுட்டுப் போக முடியாது. நான் சொல்றதைக் கேளுங்க. நாம சொல்ற பேச்சைக் கேட்டு நமக்கு அடிமை மாதிரி இருக்கும் ஒருத்தன் தான் வதனா கழுத்தில் தாலி கட்டணும். வதனா கடைசி வரையும் இந்த வீட்டில் தான் இருக்கணும் அது தான் நமக்கும் நாளைக்குப் பிறக்கப்போகும் நம் குழந்தைக்கும் நல்லது” என்று திட்டம் தீட்டினாள்.

அவளுக்கும் அஜய்க்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் அவர்களுக்குக் குழந்தை இல்லை. இன்னும் உருவாகாத தன் பிள்ளைக்காக உயிர் உள்ள பெண்ணவளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் திட்டத்தை அருமையாக நடத்திக்கொண்டிருந்தாள் அமலா.

தன் மனைவி சொன்னதை யோசித்தவன், தன் முன்னே நின்றிருந்த வதனாவைப் பார்த்து, “உனக்கு கல்யாணம் செய்யலாம்னு ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு” என்றான் ஒற்றை வாக்கியமாய்.

“ஆனா அதுக்கு நான் சம்மதம் சொல்லவே இல்லையே அண்ணா” என்று முதன்முதலாக தன் வாழ்க்கைக்காக பேசினாள் வதனா.

கோபத்தில் இருக்கையில் இருந்து படாரென்று எழுந்த அஜய், “இப்படி எல்லாம் பேச யார்கிட்ட இருந்து கத்துக்கிட்ட?. சரியா பேசுறதா நினைப்பா உனக்கு?” என்று கண்மண் தெரியாமல் பேசினான்.

‘வதனா யோசிக்க ஆரம்பிச்சா நமக்கு நல்லது இல்ல’ என்று அவனது மனது எடுத்துரைக்க, சிறிது நிதானித்தவன், “சரி பார்க்கலாம். இப்ப வீட்டுக்குப் போ” என்றான் கட்டளையாக.

“நான் என் முடிவில் உறுதியா இருக்கேன் அண்ணா” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் வதனா.

தன் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்ட அஜய், வதனாவின் பெயரில் இருக்கும் பங்குகளை எவ்வாறு கைப்பற்றுவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
 
Last edited:

NNO7

Moderator
அத்தியாயம் – 2

“என்ன? இன்னைக்கு நம்ம கடைக்கு வந்திருந்தாளா?” என்று வதனாவின் வருகையை அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்தாள் அஜயின் மனைவி அமலா.

“ம்... வதனா ரொம்ப யோசிக்குறா” என்றான் தன் நாடியைத் தடவியபடி.

“ம்ச்... அவளை யோசிக்க விடுறது நல்லதுக்கு இல்லைன்னு நான் முன்னவே சொல்லி இருந்தேனேங்க. அவளை அவள் போக்கில் விட்டுப்பிடிப்போம்” என்று இன்னொரு திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.

“அதுக்காக அவளை வேலைக்கு அனுப்ப சொல்றியா?. இவ்வளவு நாள் நாம் சொல்றதைக் கேட்கும் கைப்பாவை போல இருந்தவள். வெளிய மட்டும் அவள் போயிட்டா, அவள் மூளை எப்படி வேணாலும் யோசிக்கும்” என்று சொல்லும் மடையனுக்குத் தெரியவில்லை, வதனா இவ்வளவு நாள் கட்டுப்பட்டிருந்தது அண்ணன் என்ற சொல்லால் மட்டுமே என்று.

“நான் அப்படி சொல்லலைங்க, நீங்க அவளிடம் அன்பா பேசுங்க. உனக்கு கல்யாணம் பண்றது தான் வதனா எனக்கு முக்கியம். உனக்கு கல்யாணம் ஆனதும் நீ என்னவேணாலும் செய்ன்னு சொல்லுங்க” என்று வேதம் ஓதினாள்.

“இதுக்கு அவள் ஒத்துப்பாளா?” என்று அவன் சந்தேகத்துடன் வினவ, “கண்டிப்பா ஒத்துப்பா, பாசத்துக்காக அவள் என்னவேணாலும் செய்வாள். அப்படி ஒத்துக்கவில்லைன்னா நான் பேச வேண்டிய விதத்தில் பேசுறேன்” என்றாள் விஷம புன்னகையுடன்.

எ.எஸ்.பி பாஸ்கர் – குமாரி தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் முதலாவது மகன் தான் அஜய் அவனின் மனைவி அமலா. சுயநலத்தின் மொத்த உருவமும் அஜய் தான். அவனைப் போலவே அவனுக்காகவே படைக்கப்பட்டவள் தான் அமலா.

மெகா சீரியலில் வருவது போல் கொடூரமான அண்ணி இல்லை அமலா. ஆனால் அன்பாக பேசி அதே நேரத்தில் விஷத்தைக் கக்கும் தந்திரவாதி. ஒருவரை அடித்து தான் காயப்படுத்த வேண்டும் என்பது இல்லை. சொற்களின் வீரியத்தால் கத்தி போல் குத்தி கிழிப்பதும் ஒரு வித கொடுமை தான்.

பக்கத்தில் இருந்தே பாந்தமாய் பேசி நஞ்சை விதைப்பவள் தான் அமலா. வதனா தன்னை இன்னும் அறியவில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாள் அமலா. ஆனால் இவர்கள் சுயரூபம் தெரிந்து தான், வதனா இவர்களை விட்டு தூரமாக செல்ல நினைக்கின்றாள் என்பது வேறு கதை.

இது தான் வதனாவின் மூத்த அண்ணன் குடும்பம்.

பாஸ்கர் – குமாரி தம்பதியின் இரண்டாவது மகன் தான் விஜய் அவனது மனைவி மகா.

“இன்னைக்கு வதனா, அண்ணனைப் பார்க்க மெயின் பிராஞ்ச் போய் இருக்கா” என்று அந்த பெரிய மாளிகையில் இன்னொரு அறையில் அமர்ந்தபடி தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான், வதனாவின் இரண்டாவது அண்ணன் விஜய்.

“உங்க அண்ணன் அதுக்கு ஒரு ஆட்டத்தைப் போட்டு இருப்பாரே” என்று சரியாக கணித்தாள் அவனது மனைவி மகா.

“ம்... ஆமாம் தலையை பிடிச்சிட்டே அவன் ரூமுக்குப் போனான். மேனேஜர் தான் என்கிட்ட சொன்னாரு” என்று தனக்குத் தெரிந்த விவரத்தைக் கூறினான்.

“சரி வக்கீலைப் பார்த்து பேசுனீங்களா? நமக்கு எவ்வளவு ஷேர்ஸ் வரும்?” என்று இப்போது கணக்குப் போட ஆரம்பித்தாள் மகா.

“அவர் எதுவும் சொல்ல மாட்டேங்கிறார் மகா. வதனா கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் எதுனாலும் சொல்லுவேன்னு சொல்லிட்டார்” என்றான் விஜய்.

“எனக்கு என்னமோ உங்க அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும்னு சந்தேகம் வருது” என்று மனதில் பட்டதைக் கூறினாள்.

“ஆனா எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது. நான் அடிச்சு சொல்லுவேன் அவனுக்கு இதைப் பத்தின விஷயம் தெரிஞ்சி இருக்கு. எங்க அண்ணன் ரொம்ப மோசமானவன்” என்று தன்னுடன் பிறந்தவனின் மனநிலைமையை நன்றாக ஆராய்ந்தவன் போல் கூறிக்கொண்டிருந்தான்.

“அமலா அக்கா கூட எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை. நமக்கு வரவேண்டிய பங்கு சரியா வரும் வரை” என்று சொன்ன மகா, தன் கணவனின் யோசனை முகத்தைப் பார்த்து, “என்னங்க யோசிக்குறீங்க?” என்று கேட்டாள்.

“அஜயும் வதனாவும் அப்படி என்ன பேசி இருப்பாங்கன்னு யோசிக்குறேன்” என்றான் அவளிடம்.

“ஒருவேள சொத்து சம்பந்தமா ஏதாவது இருக்குமோ?” என்று மகா கேட்க.

“அஜய் டென்ஷன் ஆகுறான்னா கண்டிப்பா குயின்ஸ் சம்பந்தப்பட்ட விஷயமாத் தான் இருக்கும்” என்ற விஜயின் மனதும் சுற்றி சுற்றி பங்கில் வந்தே நின்றது.

விஜயும் மகாவும் காதல் திருமணம் புரிந்தவர்கள். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது.

வதனாவின் மூத்த அண்ணன் அண்ணியைப் போல் இவர்கள் கிடையாது. அவளிடம் பாசமாகவும் பேசமாட்டார்கள், வன்மத்துடனும் பேச மாட்டார்கள். மாறாக வதனா என்ற ஒருத்தி இருப்பதாகவே கண்டுகொள்ளமாட்டார்கள்.

இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு பிறந்தவள் தான் சந்தரவதனா. அவளது தாய் குமாரி உயிருடன் இருக்கும் வரை இளவரசி போல் இந்த மாளிகையை வலம் வந்தவள், இன்றோ “சாப்டியா” என்று கூட கேட்க ஆள் இல்லாமல், அனாதை போல் இருக்கின்றாள்.

தன் பதினைந்து வயதில் திடீரென்று ஒருநாள் தாயை இழந்தாள். மாரடைப்பால் தன் உயிரை விட்டிருந்தார் குமாரி. அவர் இறந்த பிறகு பாஸ்கர் மிகவும் உடைந்து போனார். விளைவு நோய் வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகிப் போனார். அவரைத் தாயாகி பார்த்துக் கொண்டாள் வதனா.

அந்த சமயத்தில் தான் படிப்பு முடித்து வந்த அவளின் இரண்டாவது அண்ணன் நகைக்கடையின் பாதி பொறுப்பை ஏற்றான். அஜய் அதற்கு முன்பே அங்கு வேலை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

மூன்று வருடங்கள் படுக்கையில் கழித்த பின்பு தான் பாஸ்கர் தன் உயிரை நீத்தார். அதற்கு முன்பே தன் கடைசி ஆசையாக, மகனை திருமண கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டு, தன் நண்பனின் மகள் அமலாக்கு அவனை திருமணம் செய்து வைத்தார். அவர் செய்த பெரிய தவறே அது மட்டும் தான்.

சிறுவயதில் இருந்தே அம்மா மற்றும் அப்பாவின் கைக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவள் தான் வதனா. ஆனால் அஜயும் விஜயும் சிறு வயதில் இருந்தே ஹாஸ்டலில் தான் தங்கிப்படித்தனர். தொழில் வித்தைகள் அனைத்தையும் தன் மகன்களுக்குக் கற்றுக் கொடுத்த பாஸ்கர், அன்பை போதிக்க மறந்தார். விளைவு சகோதரர்களுக்குள் பாசம் பிணைப்பு அன்பு எதுவும் கிடையாது. அதே தான் அவர்களின் மனைவிகளுக்குள்ளும் இருந்தது. இதில் வசமாக சிக்கி, மன அழுத்தத்திற்கு உள்ளானது என்னவோ வதனா தான்.

அமலா உள்ளே நுழைந்ததில் இருந்து ஐந்து வருடங்களாக நரக வேதனையில் தான் இருக்கின்றாள் வதனா. தாய் தந்தையை இழந்த பெண்ணின் மனதை வந்த முதல் நாளே குத்திக்கிழித்தாள் அமலா.

“அண்ணி” என்று ஆசையாக அவளிடம் வந்த வதனாவைப் பார்த்து, முகத்தை சுழித்தவள் வார்த்தைகள் மட்டும் வேறு மாதிரியாக வந்தது.

“ஏன் என்னோட ரூமுக்கு எல்லாம் வர்ற வதனா?. இனி நீ உன் அறையில் மட்டும் தான் இருக்கணும். நீ நல்லா படிக்கணும் அதுக்காக மட்டும் தான் சொல்றேன். உன் படிப்பு தடை படக்கூடாது பாரு” என்று தேன் கலந்த சொற்களைப் பேசினாள்.

அவளின் சுயரூபம் தெரியாத வதனாவோ, எப்போதும் தன்னிடம் பேசாத அண்ணன்கள் மத்தியில் தன்னிடம் பேசுவதற்கும், தனக்காக யோசிப்பதற்கும் ஒரு உறவு வந்துவிட்டது என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அதிக சொத்துடன் பார்க்க அழகாகவும் வளமான வாழ்வு வாழும் அஜய் மட்டுமே அமலாவிற்கு தேவை. அவனுடன் இலவச இணைப்பாக வரும் அவனது தங்கையையும், அவள் தந்தையையும் அவள் சிறிதும் விரும்பவில்லை. அவள் உள்ளே வந்த ஒரு வாரத்திலையே பாஸ்கர் இறந்திருந்தார்.

இத்தனைக்கும் குயின்ஸ் நகைக்கடையை தனியாளாக உருவாக்கியவரே பாஸ்கர் தான். வசதியில் மிகவும் பின் தங்கி இருந்த, தன் நண்பனின் மகள், பொறுப்பாக குடுப்பத்தை நடத்துவாள் என்று தப்புக்கணக்குப் போட்டார்.

அவளோ நன்றாக பேசுவது போல் பேசி வதனாவை நன்றாக வேலை வாங்கினாள். ஒரு நாள் திடீரென்று வதனாவின் அறைக்குள் வந்தவள், அங்கே ஓடிக்கொண்டிருந்த ஏசியைப் பார்த்து, “இப்ப எதுக்கு உனக்கு ஏசி வதனா?. உன் அண்ணன் கஷ்டப்பட்டு சம்பாத்தியம் பண்றார். நானும் ஏசி இல்லாம தான் இருக்கேன். நாம் என்ன அவரை மாதிரி சம்பாத்தியமா பண்றோம். உனக்கு காலேஜ் பீசே ஏகப்பட்டது வருது. எந்த வீட்லையும் எந்த அண்ணனும் அவங்க தங்கச்சிக்கு இவ்வளவு பண்ணி, நான் பார்த்ததே இல்ல. நீ ரொம்ப கொடுத்து வைத்தவள் தான் வதனா” என்று பேசினாள்.

அவள் தேன் தடவிய பேச்சுக்குள், “நீ வெறும் தண்டச்சோறு தான் சாப்பிடுகின்றாய். இதெல்லாம் என் கணவனின் பணம்” என்ற அர்த்தம் பொதிந்து இருந்தது. அதில் “நாம்” என்ற வார்த்தையை மட்டும் சரியாக சேர்த்து பேசினாள்.

அமலாவின் பேச்சு பெண்ணவளுக்கு சாதாரணமாகத் தான் இருந்தது. பின் ஒவ்வொரு விஷயமும் வதனாவிடம் இருந்து பறிக்கப்படும் வரை.

கதை எழுதுவதில் ஆர்வம் மிகுந்த வதனாவை, “இதெல்லாம் எதுக்குப் பண்ற வதனா? உன் படிப்பைப் பார்” என்று சொல்லி பார்த்தாள்.

ஆனால் அவளோ, “இப்ப எனக்கு செமஸ்டர் லீவ் அண்ணி” என்று கூற, ‘இவள் காலம் முழுவதும் நமக்கு அடிமையாக மட்டும் தான் இருக்கணும், முன்னேறவே கூடாது’ என்று நினைத்த அமலா, “இது நல்ல பழக்கம் கிடையாது வதனா, உன் அம்மா உயிரோடு இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லி இருப்பாங்க” என்று மெதுவாக எது எதையோ சொல்லி அவளை எழுதவிடாமல் தடுத்தாள்.

“அவள் என்ன பண்ணா உனக்கு என்ன? அவளைக் கண்டுக்காத” என்று அஜய் சொல்ல, “அப்படி எல்லாம் சொல்லாதீங்க. இன்னைக்கு எழுதுற வதனா, நாளைக்கு உரிமை கேட்பா. எழுத்தாளர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் கிடையாது. இதை எல்லாம் முளையிலையே கிள்ளி எறியணும்” என்று துவேஷமாக பேசினாள்.

விளைவு கூண்டில் அடைந்த பறவை போல் அறைக்குள்ளே முடங்கி போனாள் வதனா. அவள் உள்ளே இருந்தாலும் அமலா அவளை கண்காணித்துக் கொண்டே தான் இருப்பாள். அவள் பாவப்பட்டு விட்டது என்னவோ வதனா படிக்கும் படிப்பை மட்டும் தான்.

அமலா திருமணமாகி வரும் போது வதனா முதல் வருட பொறியியல் படிப்பில் இருந்தாள். மனப்பாடம் செய்து எதையோ பரிச்சையில் எழுதுகின்றாள். இதனால் என்ன மாற்றம் வரப்போகின்றது என்று நினைத்துக் கொண்டாள் அமலா. அவளும் அவள் தோழிகளைப் பார்த்து இருக்கின்றாளே, அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள் இல்லை என்பது அவள் நினைப்பு. வதனாவை ஒடுக்கி வைக்கவே, அவள் பால்கனியில் நின்றால் கூட, “யார் கூட ஓடிப் போகலாம்னு பார்க்குற வதனா?” என்று நெருப்பை அள்ளி வீசிவிட்டு, “இந்த இடத்தில் உன் அம்மா இருந்தாலும் இப்படி தான் பேசி இருப்பாங்க. வயசு பொண்ணு நீ உன் மனசு அலைப்பாயும் வயசு. ஏதாவது ஒன்னு தப்பா நடந்தா எங்களுக்குத் தான் கெட்ட பெயர். உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று இறுதியாக கூறிய வார்த்தைகளில் அழுத்தத்தைக் கொடுத்தாள் அமலா.

சிலசமயம் இல்லை பலசமயங்களில் வதனாவிற்கு உண்ண உணவு கூட கிடைக்காது. விஜய் எதையும் கண்டுகொள்ள மாட்டான், அவன் சாப்பாடு எல்லாம் வெளியே தான். ஒரு நாள் இவள் தான் என் மனைவி என்று மகாவை அழைத்து வந்தான் விஜய்.

அமலாவிடம் அப்போது தான் பாடம் படித்திருந்த வதனா, தானாகவே மகாவிடம் இருந்து ஒதுங்கிக்கொண்டாள். அமலா, மகாவை போட்டியாகவெல்லாம் எண்ணவில்லை, “நான் நேர்வழியில் வந்தவள், நீயோ குறுக்கு வழியில் வந்தவள்” என்பதொரு பார்வை மட்டுமே இருக்கும்.

அமலாவின் குறிக்கோள் எல்லாம், தங்களுக்கு சேர வேண்டிய சொத்தைத் தவிர வதனாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களும் ஷேர்ஸ்களும் அவளது கைகளுக்கு வரவேண்டும். இதில் விஜயின் பங்கை எல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை.

****

மயில், தொகைகளை விரித்து அழகாக நடனம் ஆடுவதைப் போல இருந்த வைர நெக்லஸ்சை ஆசையாக தடவிப்பார்த்தவள், அதை எடுத்து தன் கழுத்தில் அணிந்து கொண்டாள். அவள் பெயர் ரத்னா.

மீடியாவின் முன் அஜய், “இதை என் ஒரே தங்கைக்கு பரிசளிக்கின்றேன்” என்று அவன் கூறிய அதே நெக்லஸ்.

பின் தன் கைப்பேசியை எடுத்த ரத்னா, “ஹலோ அஜய் அண்ணா. நான் இப்ப அங்க தான் வரேன்” என்று கூறிவிட்டு வைத்தாள்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 3

தன் மகிழுந்தை ஓட்டிக்கொண்டே தன்னுடைய இன்னொரு கையால், மயில் தோகையில் அழகாக தன் கழுத்தில் மின்னும் நெக்லசை அடிக்கடி தடவிக்கொண்டாள் ரத்னா. பின் தன் முன்னே இருந்த மகிழுந்தின் கண்ணாடியை சரி செய்தபடி, அதில் தன் முகத்தைப் பார்த்தவள், “எனக்காகவே செய்தது போல் இருக்கு இந்த நெக்லஸ்” என்று வாய்விட்டுக் கூறி சிலாகித்தாள்.

மாளிகை போல் அழகாக மின்னிக்கொண்டு இருந்த அந்த பெரிய வீட்டில் அவளது மகிழுந்து நுழைந்ததும், அவளை வரவேற்பதற்காகவே காத்திருந்தனர் அஜய் அமலா தம்பதியினர்.

தன் மகிழுந்தை விட்டுக் கீழே இறங்கிய ரத்னா, “அண்ணா” என்று ஆர்பரித்தபடி, ஓடி வந்து அஜயை அணைத்துக் கொண்டாள்.

செல்லமாக அவளின் தலையைத் தடவியவன், “நல்லா சாப்பிடுறது இல்லையா ரத்னா? இளைச்சுபோயிட்ட” என்று செல்லமாக கடிந்தான்.

அமலாவோ, “வீட்டுக்கு வான்னு கூப்பிட்டாத் தான் வருவியா ரத்னா? இது உன் வீடுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்” என்று சொல்ல, அவள் குரல் கேட்டு அமலாவை ஏறிட்டவள், “அண்ணி” என்று கூறியபடி அவளையும் அணைத்துக் கொண்டாள்.

“சரி சரி வாங்க உள்ள போகலாம்” என்று அஜய் கூற மூவரும் உள்ளே சென்றனர்.

அப்போது அங்கே வந்த விஜய் ரத்னாவைப் பார்த்து, “எப்படி இருக்க ரத்னா. பார்த்து ரொம்ப நாளாச்சு” என்று சம்பிராதாயத்திற்கு விசாரிக்க, “ஆமாம் விஜய் அண்ணா. ஒரு ப்ராஜெக்ட்ல ரொம்ப பிஸியா இருந்துட்டேன்” என்றாள்.

“ம்... நம்ம ரத்னாக்கு வேலை அதிகம் விஜய். இந்த சின்ன வயசிலையே தனியா பொட்டிக் ரன் பண்றது சாதாரண விஷயம் இல்லையே!” என்றான் அஜய்.

“ஐயோ அண்ணா இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம். உங்க பாசமும் அரவணைப்பும் இல்லைன்னா, இதெல்லாம் சாத்தியம் இல்ல” என்று சொல்லிக் கொண்டே போக, “சரி சாப்பிடலாம் வா” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அமலா.

இங்கே நடந்த கூத்தை எல்லாம் மேலே இருந்து பார்த்த மகா, ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு, அலைபேசி மூலம் தன் கணவனை அழைத்தாள்.

அவனோ தன் அலைபேசியைப் பார்த்தவன், “மகா எதுக்காக கூப்பிடுறா?” என்ற எண்ணத்துடன் தன் அறையை நோக்கி நடந்தான்.

“வெளியே போற நேரம் எதுக்காக கூப்பிட்ட மகா. ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று தன் மனைவிடம் விஜய் கேட்க, “ரத்னா எதுக்காக இங்க வந்துருக்கா? உங்க அண்ணனும் அண்ணியும் எதுக்காக அவளிடம் இப்படி குலையுறாங்க” என்றாள் சிடுசிடுப்புடன்.

இது எப்போதும் வீட்டில் நடக்கும் ஒன்று தான். தன் சொந்த தங்கையை விட விபத்தில் இறந்து போன தன் சித்தாப்பா சித்தியின் மகள் ரத்னாவின் மேல் அஜய்க்கு கொள்ளை பாசம். அமலாவும் ரத்னாவை தாங்கு தாங்கென்று தாங்குவாள்.

மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்தக்கூத்தில் மகாவிற்கு எரிச்சல் தான் வரும். மகாவைப் பொருத்தவரை, வதனா எப்படியோ அப்படியே தான் ரத்னாவும். பெரியதாக எதுவும் பேசிக்கொள்ள மாட்டாள். கண்டுகொள்ளவும் மாட்டாள்.

தன் மனைவியின் பேச்சில், “இது எப்போதும் நடக்குறது தானே மகா” என்று விஜய் சகஜமாக பேச.

“ம்ச்... நான் அதுக்காக சொல்லலை. ரத்னாவைப் போல தானே வதனாவும் அவளைப் பார்த்தா மட்டும் அவங்களுக்கு என்ன தான் ஆகுமோ” என்றாள். அவளுள்ளும் சிறிது ஈரம் இருந்திருக்கும் போல.

தன் மனைவியை வித்தியாசமாக பார்த்தவன், “உன் கருணைப் பார்வை வதனா மேல எப்ப இருந்து விழுந்தது?” என்றான் சிரிக்காமல்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல. நான் கொஞ்சம் சுயநலவாதி தான். புதுசா திருமணமாகி, அதுவும் காதல் திருமணம் பண்ணி வந்த இடத்தில் எப்படி இருக்கணுமோ அப்படி தான் இருக்கேன். அதுக்காக ராட்சஸி கிடையாது” என்றாள் முகத்தை தூக்கி வைத்தபடி.

அதற்கு சிரித்த விஜய், “சரி அப்படியே இருக்க வேண்டியது தானே! அவங்க வதனாவை எப்படி நடத்துனா உனக்கு என்ன?” என்றான்.

“அப்படி இல்லைங்க. ஏதோ தப்பா தெரியுது. சொந்த தங்கச்சிக்கிட்ட முகத்தைக் காட்டும் உங்க அண்ணன். சித்தாப்பா பெண்ணை தன் சொந்த தங்கச்சியா பார்க்குறாரு. அதை தான் கேட்குறேன்” என்றதும், விஜயின் முகம் இறுகியது.

உடனே அதை தன் மனைவிடம் இருந்து மறைக்கும் விதமாக, அவளுக்கு முதுகு காட்டி நின்றவன், “வதனாக்கு சொத்தில் பங்கு இருக்கு. ரத்னாவுக்கு இல்லையே. அதனால் கூட இருக்கலாம்” என்றான்.

“ம்... இருக்கலாம். ரத்னாக்கு சொத்தில் பங்கு கிடையாது. அவளுக்குன்னு எதுவும் செய்யணும்னு அவசியம் இல்ல. அவங்க அப்பாவே எல்லாத்தையும் செஞ்சி வச்சிட்டு தான் போயிருக்கார். ஆனா அந்த மயில் தொகை வைர நெக்லஸ்சை எதுக்காக ரத்னாவிடம் தூக்கி கொடுக்கணும்?” என்றாள் மகா.

“இது ஒரு வியாபார தந்திரம் மகா. செண்டிமெண்ட் டச் கொடுத்தாத்தான் ரீச் கிடைக்கும். சரி எனக்கு வேலை இருக்கு நான் வரேன்” என்று சொன்னவன், இதுக்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து என்பது போல் வேகமாக கீழே சென்றான்.

உணவு மேஜையில் அமர்ந்திருந்த ரத்னாவிற்கு உணவை பரிமாறிக்கொண்டிருந்த அமலா, “நீ பேசாம இங்கயே வந்துரு ரத்னா. எதுக்காக தனியா இருக்க” என்றாள்.

“எனக்கு என் பிளாட் தான் சரியா இருக்கும் அண்ணி. என்னோட பொட்டிக்கில் இருந்து பக்கமா வேற இருக்கு. அதான் உங்களைப் பார்க்க நான் வரேனே” என்றாள் சிரித்தபடி.

“யாரு? நீ மாசத்துக்கு ஒருக்க தான் இங்க வர்ற. சண்டே கூட விடாம வேலை பார்க்குற” என்று சலித்துக்கொண்டான் அஜய்.

“சரி அண்ணா. உங்களுக்காக வாரவாரம் இங்க வர முயற்சி செய்றேன்” என்று சொல்லி சிரித்தாள் ரத்னா.

கடுவான் பூனை போல் எப்போதும் முகத்தை வைத்திருக்கும் அமலா, ரத்னாவிடம் மட்டும் விழுந்து விழுந்து பேசுவதென்ன கவனிப்பதென்ன என்பது தான் மகாவின் யோசனையாக இருந்தது.

அனைத்திற்கும் காரணகாரியம் வைத்திருக்கும் அமலா, இதற்கு மட்டும் என்ன வைக்காமலா போவாள்.

ரத்னா சாதாரணப்பட்ட ஆள் கிடையாது. அவளது தந்தை கிரனைட் வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்தவர். அவரும் அவர் மனைவியும் ரத்னா கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். தன் படிப்பை முடித்த ரத்னா அந்தத் தொழிலில் விருப்பம் இல்லா காரணத்தால், தனக்கென்று தனியாக பொட்டிக் வைத்து நடத்துகின்றாள். இப்போது தன் தந்தையின் தொழிலை மேனேஜர் வைத்துப் பார்த்துக் கொள்கிறாள். அதில் மாத வருமானமே கோடிகளுக்கு மேல் செல்லும்.

இப்படிப்பட்ட மகாலட்சுமியை அமலா மெச்ச வில்லை என்றால் தான் ஆச்சரியம். தன் ஒரே தம்பியை ரத்னாவிற்கு மணமுடித்து வைக்க அவள் போடும் கணக்கு தான் இந்த உபசரிப்பு. இதைப் பற்றி மகாவிற்கு எதுவும் புரியவில்லை.

இவர்கள் விஷயத்தில் எப்போதும் தலையீடு காட்டாத கடுகு உள்ளம் கொண்டவள் மகா. தான் தன் கணவன் என்று தனக்குள் ஒரு வட்டத்தை அமைத்து வாழ்பவள். அதையும் மீறி அவளுள் சிறு ஆச்சரியம், ரத்னாவிற்கு தரும் வரவேற்பு வதனாவிற்கு இல்லை என்பது தான். விஜய் சொன்ன பதிலில் அவள் முழுவதுமாய் திருப்தி அடையவில்லை.

தன் கல்லூரிக்கு செல்வதற்காக வெளியே வந்த வதனா, கீழே ரத்னாவின் பேச்சு சத்தம் கேட்கவே சிறிது தயங்கி நின்றாள். பின் நேரமாவதை உணர்ந்தவள் வேகமாக கீழே இறங்கினாள். அப்போது தன் கையைக் கழுவ சென்ற ரத்னா, மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் வதனாவைக் கண்டு, ஆர்வமாக அவள் அருகில் சென்றாள்.

தன் முன்னே வந்த ரத்னாவைக் கண்டு தேங்கி நின்றவள், சிரிக்கவா வேண்டாமா என்பது போல் ரத்னாவை ஏறிட்டாள்.

மயில் தொகை நெக்லசை தடவியபடி வதனாவைப் பார்த்த ரத்னா, “அண்ணாக்கு என் மேல ரொம்ப பாசம்ல” என்றாள்.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டிக்கொண்ட வதனா, அங்கிருந்து செல்லப்பார்த்தாள், “கொஞ்சம் நில்லு வதனா” என்று சொல்லி அவள் முன்னே வந்து நின்ற ரத்னா, “காலம் எப்படி எல்லாம் மாறுது பார். அப்பா அம்மாவோட மகிழ்ச்சியா வாழ்ந்த நீ, இன்னைக்கு சொந்த வீட்டில் சாப்பிடாம வெளிய போற. ஆனா அப்பா அம்மா இருந்தும் பாசம் இல்லாம வளர்ந்த நான், இப்ப அண்ணா அண்ணின்னு சந்தோஷமா இருக்கேன்” என்றாள்.

“எது இந்த நெக்லசை அவன் கொடுத்ததாலையா?” என்பது போல் வதனாவின் பார்வை ரத்னாவின் கழுத்தைத் தொட்டு மீண்டது.

அதைப் புரிந்துகொண்டவளாக, “இது மட்டும் இல்ல. அவங்க என் மேல உயிரே வச்சிருக்காங்க. போன மாசம் எனக்கு உடம்பு சரியில்லாம போனதும், அண்ணி என் பிளாட்க்கு வந்து என்னை எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா” என்றாள்.

ரத்னாவின் பேச்சு எல்லாம், ‘உனக்கு கிடைக்காதது அனைத்தும் எனக்குக் கிடைக்கிறது’ என்பது போல் இருந்தது. தாயை இழந்தவனிடம் சென்று தாயின் அருமைகளைக் கூறுவது தவறு என்று சிலருக்குப் புரிவதில்லை. அதே போல் தான் ரத்னாவும் அவளுக்கு நன்றாக தெரியும், வதனா இங்கே வாழும் வாழ்வு. இருந்தும் அவள் மனதை வேதனைப்படும் படி பேசினாள்.

சிறுவயதில் இருந்தே ரத்னா இப்படித் தான். அதனால் வதனா இதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் அவளும் மனுஷி தானே! தான் பார்த்தாலே முகம் சுழிக்கும் தன் அண்ணன், ரத்னாவிடம் பாசத்தைப் பொழிவதைக் கண்டு பெண்ணவளுக்கு வலிக்கத் தான் செய்தது.

ரத்னாவைப் பார்த்தவள், “எனக்கு நேரமாச்சி அக்கா நான் போகணும்” என்று வெளியே சாதரணமாக கூறிவிட்டு, மனதில் பாரத்தை சுமந்தபடி அங்கிருந்து சென்றாள் வதனா.

ரத்னாவின் முகத்திலோ மகிழ்ச்சியின் சாயல். அப்போது அமலா கூப்பிட, “இதோ வரேன் அண்ணி” என்றாள்.

****

“உண்மையைச் சொல். எதிரி நிறுவனத்திற்கு ப்ராஜெக்ட்டை வித்தது நீ தானே!” என்று மூவர் சுற்றி நின்று, ஒருவனை துப்பாக்கியை அவன் தலையில் வைத்தபடி மிரட்டிக் கொண்டிருந்தனர்.

முகத்தில் மரணபீதி தெரிய, “நான் சொல்றதை நம்புங்க அது நான் இல்ல” என்று முன்பு சொல்லிய அதே பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தான் அந்த மனிதன். அப்போது திடீரென்று சத்தம் கேட்க, அங்கே இருந்த அனைவரும், “கிங் வந்துட்டாரு... கிங் வந்துட்டாரு...” என்க.

மரண பீதியில் நின்று கொண்டிருந்த அந்த மனிதனுக்கு அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு மயக்கம் வர ஆரம்பித்தது.

“கி...கிங்...” என்று பயத்தில் தன் எச்சிலை விழுங்க, அவன் எதிர்பார்ப்பதற்குள் அவன் தலையில் துப்பாக்கியை வைத்திருந்தான் கிங் என்று அனைவராலும் சொல்லப்பட்ட கிங் என்றவன்.

அவனைப் பார்த்ததும் நடுநடுங்கிப் போனவன், “நான்... நான் பிள்ளைக் குட்டிக்காரன் சார்” என்றான் திணறியபடி.

இதுவரை ‘அது தான் இல்லை’ என்றவன், தன் முன்னால் ஆறடி உருவத்தில் ஆளுமை தோற்றத்துடன் நின்ற ஆண்மகனைப் பார்த்து உண்மையைத் தன்னை அறியாமல் உளறினான்.

ஆனால் அதற்கு மனம் இறங்காத ஆறடி ஆண்மகன், “ப்ராஜெக்ட்டை விற்கும் போது, உன் பிள்ளை, ஏன் உன் கண்ணுக்குத் தெரியல” என்று கேட்டுக்கொண்டே துப்பாக்கியை அழுத்தி அவன் கதையை முடித்திருந்தான்.

அருகில் நின்ற தன் ஆட்களிடம், “டிஸ்போஸ் பண்ணிரு”என்று சொல்லும் போதே, ஒருவன் டிசு பேப்பரை அவனிடம் நீட்ட, அதில் தன் கையைத் துடைத்தவன், “நான் கேட்டது என்ன அச்சு?” என்றான்.

தன் காற்சட்டைப் பையில் இருந்து ஒரு பெண்ணின் படத்தை எடுத்த அவனின் ஆள், “இது தான் கிங், அந்தப் பொண்ணு” என்று சொல்லி வதனாவின் புகைப்படத்தை அவனிடம் நீட்டினான்.

அதனை வாங்கிப் பார்த்த, அந்த ஆடவனின் இதழ்கள் விரிந்தது. அது மகிழ்ச்சியில் விரிந்ததா அல்லது வன்மத்தில் விரிந்ததா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 4

கட்டுமானத்தொழிலில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கிங் என்ற பட்டப்பெயரைக் கொண்டவன் தான் இந்த குறளரசன். திருவள்ளுவரின் இன்னொரு பெயரை தன் பெயராகக் கொண்டவன். மன்னிப்பு என்ற சொல் அவனது அகராதியிலையே கிடையாது.

ஆறடியில் ஒல்லியான உடல்வாகு, பளிங்கு சிலை போன்ற தேகம் என பார்க்க சாக்லேட் பாய் தோற்றத்தில் இருந்தாலும், உள்ளே ரத்தத்திற்கும் சதைக்கும் பதில், இருப்பும், கல்லும் உள்ளது என்றால் அது மிகை அல்ல.

பார்த்ததுமே பெண்களைக் கவரும் தோற்றம். இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான கிங் கன்ஸ்ட்ரக்ஷனை ஒற்றை ஆளாக கட்டி ஆள்பவன். அவனிடம் பழக பல பெண்கள் போட்டி போட, தன் பார்வையாலையே அனைவரையும் தள்ளி வைப்பவன்.

தென் கொரிய தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்தவன். அதனால் தான் என்னவோ கிரேக்க சிலை போல் மின்னுகிறான்.

வதனாவின் புகைப்படத்தை தன் கையில் ஏந்திய குறளரசன், “ஜகியா(லவ்) நான் வந்துட்டே இருக்கேன்” என்றான் புன்னகை முகமாக, அதை அவன் சொல்லும் போதே அவன் நினைவு சிறிது பின்னோக்கி சென்றது.

பத்து வயதே இருக்கும் அழகிய பெண் குழந்தை ஒன்று, சிறிய வயது குறளரசனின் கையைப் பிடித்துக் கொண்டு, “என்னை விட்டு எங்கையும் போகமாட்டேன்னு சொல்லிட்டு, இப்ப என்னை விட்டுட்டுப் போற. போ... நான் உன்கூட பேசவே மாட்டேன்” என்று முகத்தைத் திருப்பியது.

அந்த குழந்தையின் தலையைத் தடவிய குறளரசன், “ஜகியா, நான் கூடிய சீக்கிரம் திரும்பி வந்து உன்னை என்னோடவே கூட்டிட்டுப் போவேன் சரியா. அதுவரை நீ சமத்தா இருக்கணும்” என்று சொல்ல, பொம்மை போல் அந்த குழந்தையும் தன் தலையை ஆட்டிக் கொண்டது.

இப்போது அதை நினைத்துப் பார்த்த குறள், “நான் திரும்பி வர ரொம்ப நேரம் எடுத்துட்டேன்னு நினைக்குறேன் ஜகியா... இதுக்கும் மேல அந்த நரகத்தில் உன்னை விட்டு வைக்கமாட்டேன்” என்றவன் கண்கள், செய்தித்தாளில், புதிய டிசைன் நெக்லஸ் ஒன்றை வெளியிட்டு அதில் சிரித்துக் கொண்டிருந்த அஜய் மீது வன்மமாகப் படிந்தது.

****

“நான் நேத்தே சொன்னேன் தானே அண்ணா” என்று அந்த வீட்டின் தோட்டத்தில், பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் அஜய் முன் நின்று பேசிக் கொண்டு இருந்தாள் வதனா.

“அதான் நேத்தே சொல்லிட்டேனே! உனக்கு திருமணம் முடிஞ்சதும் நீ எங்க வேணாலும் போ. இதுக்கு மேல பேசுறதுக்கு ஒன்னுமே இல்ல வதனா” என்று எரிச்சலுடன் பேசினான் அஜய்.

கூண்டுப் பறவை வெளியே சிறகடித்துப் பறக்க காத்துக் கொண்டிருப்பதைப் போல, புதிய உத்வேகத்துடன் அஜயை நோக்கியவள், “நான் டெல்லி போகப்போறேன்னு உங்கக் கிட்ட தகவல் தான் கொடுத்தேன் அண்ணா. அனுமதி கேட்கல” என்று தைரியமாக வதனா மொழிந்தாள்.

இது போன்ற எழுச்சியை அவளிடம் கண்டு அதிர்ச்சி அடைந்த அஜய், “ஓ... பீஸ் கட்ட மட்டும் இந்த அண்ணன் வேணும். படிச்சு முடிச்சு ஒரு வேலை கிடைச்சதும் நீ யாருடான்னு கேட்குற?” என்றான்.

“அப்படி நான் எதுவும் கேட்கல அண்ணா. ஆனா எப்போ கல்யணம் பண்ணனும்னு நான் தான் முடிவு பண்ணனும். அது தனி மனித சுதந்திரம். அதில் உங்க தலையீடு வேண்டாம்னு தான் சொல்றேன். அது போல டெல்லி போறதும் அப்படித்தான். உங்களால் என்னைத் தடுக்க முடியாது” என்று கூறி அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்தாள் வதனா.

இவர்களது சம்பாஷனைகள் அனைத்தையும் சிறிது தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அமலாவிற்கும் பேரதிர்ச்சி உண்டானது. வேகமாக அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்தவள், “என்ன பேச்சு பேசுற வதனா?. உன்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சி இந்த நிலைக்கு கொண்டு வந்த உன் அண்ணனைப் பார்த்து இப்படி பேச உனக்கு எப்படி தான் மனசு வந்துச்சுன்னு எனக்கும் தெரியல” என்று சோகமாக பேசி நடிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் வதனவோ, அவளின் நடிப்பை கண்டுகொண்டவள் போல, “நான் அப்படி என்ன பேசிட்டேன் அண்ணி?” என்றாள்.

“உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுக்கணும்னு உங்க அண்ணன் நாயா அலையுறாரு. ஆனா நீ ரொம்ப சுலபமா எங்களை விட்டுட்டுப் போறதுக்கு ப்ளான் பண்ற” என்று கூறி கண் கலங்கினாள்.

அஜயும், “உனக்காகத் தான் நாங்க இன்னும் குழந்தை கூட பெத்துக்காம இருக்கோம்” என்று அமலாவிற்கும் மேலே ஒரு படி தாண்டி சென்று பேசினான்.

அவனது அட்டகாசமான நடிப்பில், வதனா வீழ்ந்தாள். அஜயின் வலி மிகுந்த பேச்சில் தன்னிலை இழந்தவள் மனதில், ‘தனக்காக மற்றவரையும் தொல்லை செய்கின்றேனோ!’ என்ற எண்ணம் எழுந்தது.

‘தனக்காகத் தான் குழந்தை பிளானை தள்ளி வைத்திருக்கின்றனர்’ என்று நம்பிய வதனா, “நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் கேட்குறேன் அண்ணா. ஆனால் மாப்பிள்ளை எனக்கு பிடிச்சா மட்டும் தான் நான் இதுக்கு சம்மதம் சொல்வேன்” என்ற நிபந்தனையை மட்டும் வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

“நான் தான் சொன்னேன்ல பேச வேண்டிய விதத்தில் பேசினால் தான் காரியம் வெற்றி பெரும்“ என்று வதனா சென்ற திசையைப் பார்த்தபடி பேசினாள் அமலா.

“அதெல்லாம் இருக்கட்டும். இப்ப திடீர்னு மாப்பிள்ளையை எங்க இருந்து பார்க்குறது? அதுவும் இல்லாம மாப்பிளை எனக்கு பிடிச்சா, மட்டும் தான் கல்யணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போறா. நமக்கு பிடிச்ச மாப்பிளை இவளுக்கு எப்படி பிடிக்கும்” என்று தன் நாடியைத் தடவினான் அஜய்.

“இப்ப சம்மதிக்க வச்ச மாதிரி, அப்போதும் பேச வேண்டிய விதத்தில் பேசி சம்மதம் வாங்கிடலாம்ங்க” என்று யோசனை கொடுத்தாள் அமலா.

“சரி நாம் சொல்றதை எல்லாம் கேட்குற மாப்பிளைக்கு எங்க போறது” என்று அவன் தன் மனைவிடம் கேட்க, அமலா இதை ஏற்கனவே யோசித்து வைத்திருப்பாள் போல, அஜயின் காதில் ஏதோ கூற, அதைக் கேட்டவன், “இது சரியா வருமா அமலா?” என்றான்.

“கண்டிப்பா சரியா வரும். நான் அந்த மாப்பிள்ளையைப் பத்தி எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். எல்லாம் நமக்கு ஏத்தவன் தான்” என்றாள் புன்னகை முகமாக.

அதனைக் கேட்டுத் தானும் மகிழ்ந்த அஜய், “அப்ப நான் இப்பவே இதைப் பத்தி விஜய்கிட்ட பேசுறேன்” என்றான்.

“சரி நீங்க பேசுங்க நான் உள்ள போறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் அமலா.

கைப்பேசி மூலம் விஜயை அழைத்திருந்தான் அஜய். உடனே அவனும் தோட்டத்திற்கு வந்தான்.

“என்ன விஷயம் அண்ணா?” என்று விஜய் கேட்க.

அவனை சைகையால் கல் இருக்கையில் அமர சொன்ன அஜய், அவன் அமர்ந்ததும், “வதனாக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கேன் விஜய். பையன் ரொம்ப நல்லவன். எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டா நாம நிம்மதியா இருக்கலாம் பாரு. அதான் உன்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லலாம்னு உன்னைக் கூப்பிட்டேன்” என்று எடுத்ததும் மடமடவென்று பேசினான்.

“ம்.. அதவும் சரி தான் அண்ணா. ஆமாம் மாப்பிள்ளை யாரு? என்ன பண்றான்?” என்று விஜய் கேட்க.

“எல்லாம் நமக்கு தெரிஞ்சவன் தான்” என்றதும் விஜயின் முகம் யோசனைக்கு உண்டானது.

விஜயின் அமைதியைப் பார்த்து, “அதான் நம்மக்கிட்ட வேலை பார்க்குறானே மாரி அவன் தான் மாப்பிள்ளை” என்று கூற, விஜயின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

“என்னது அவனா? அவனுக்கு எத்தனை வயசாகுதுன்னு உனக்குத் தெரியுமா? அதுவும் இல்லாம அவன் நம்மக்கிட்ட கைக்கட்டி சம்பளம் வாங்கும் வேலைக்காரன்” என்று கொதித்தான்.

விஜயும் சுயநலவாதி தான் அதற்காக மனிதநேய மற்றவன் கிடையாது.

“ஹேய் அவன் ரொம்ப நல்லவன்டா. நாம சொல்றதைக் கேட்பான். வதனாவும் நல்லா இருப்பா. அதுவும் இல்லாம வீட்டோட மாப்பிள்ளையா இருக்க அவன் சம்மதிப்பான்” என்றான்.

“இப்ப எதுக்காக நீ வீட்டோட மாப்பிளை பார்க்குற?. வதனாவின் பாரம் நம்ம ரெண்டு பேருக்குமே இருக்கு. அதுக்காக இன்னொரு பாரத்தையும் நம்மாள சுமக்க முடியாது. அவளை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்கலாம். இல்லாட்டி ஏதாவது பிரச்சனை என்றால் நம்மிடம் தான் வந்து நிற்பாள்” என்றான் விஜய்.

விஜயின் எண்ணம் எல்லாம், நல்ல இடமாகப் பார்த்தால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். தங்களுக்கும் பிரச்சனை வராது. திருமணம் முடிந்ததும் அத்தோடு அவளைக் கைகழுவி விடுவதில் தான் விஜயின் எண்ணம் இருந்தது.

அவனின் தோளில் தன் கையைப் போட்டவன், “நகை இல்லாம வதனாவை கல்யாணம் பண்ணி, நாம் சொல்றதைக் கேட்டு மாரி நடப்பான் விஜய். அவனுக்கு அம்மாவும் அப்பாவும் கிடையாது” என்றான்.

இருக்கையில் இருந்து எழுந்த விஜய், “என்னது நகை இல்லாமலா? அம்மா வதனாக்கு வச்சிட்டுப் போன நகையே கோடி ரூபாய் பெரும் அதை எல்லாத்தையும் நீ ஆட்டைய போடலாம்னு பார்க்குறியா?” என்றான் கோபமாக.

“நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்ட விஜய். அவளோட உரிமை எல்லாம் அவளுக்குக் கிடைக்கும். இதை நான் சத்தியம் பண்ணி சொல்றேன். ஆனா அப்பா என்னை நம்பி தான் வதனாவை விட்டுட்டுப் போய் இருக்கார். அவள் நல்லதுக்காக வீட்டோட மாப்பிள்ளை பார்க்குறது தப்பில்லையே” என்றான் அஜய்.

மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விட்ட விஜய், “நீ என்ன நினைச்சு இந்த முடிவை எடுத்தன்னு தெரியல. ஆனா ஒன்னு சொல்றேன் கேளு, மாரிக்கும் வதனாக்கும் செட் ஆகாது. பெரிய குடும்பத்துப் பொண்ணு வதனா. ஆனா மாரி ரோட்டில் கிடப்பவன்” என்று அவனுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தான்.

“இதில் பணத்தைக் கொண்டு வராத விஜய். பணத்தைப் பார்க்காமல் மனசைப் பாரு” என்று வசனம் பேச.

“ம்ச்... நீ சொல்றது காதல் திருமணதிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனா அரேன்ஞ் மேரேஜ்க்கு இது சாத்தியமே இல்ல. ஒரு நல்ல குடும்பத்தில் வதனாவை திருமணம் செய்து வைத்தால், நாளை அவளுக்கும் பிரச்சனை இல்ல, நமக்கும் பிரச்சனை இல்ல. வீட்டோட மாப்பிள்ளை அது இதுன்னு சொன்னா உனக்குத் தான் பிரச்சனை. இதில் நான் தலையிட மாட்டேன்” என்றான் விஜய்.

“என்ன நடந்தாலும் வதனா என்னோட பொறுப்பு விஜய். உன் தலையில் அவள் பொறுப்பை கட்டமாட்டேன். ஆனா நான் முடிவு பண்ணிட்டேன். மாரி தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்று சொல்லிவிட்டு, அதோடு அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 5

“அவங்க வதனாக்கு என்னவேணாலும் செஞ்சிட்டு போகட்டும். இதில் நாம தலையிட வேண்டாம் விஜய்” என்று தன் கணவனிடம் கூறிக்கொண்டிருந்தாள் மகா.

“இல்ல மகா மாரிக்கு குடும்பம் இருக்கா, இல்லையானே தெரியாது. அப்பா பார்த்து அவனை வேலைக்கு வச்சாரு. நாங்க கொடுக்குற வெறும் எட்டாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு இருப்பவன்” என்றான் தன் நெற்றியைத் தடவியபடி.

“அது தான் உங்க அண்ணனே சொல்லிட்டாரே! என்ன ஆனாலும் நாங்களே வதனாவ பார்த்துக்குறோம்னு” என்று அவர்கள் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருக்க, அவர்களின் பேச்சு தெள்ளத்தெளிவாக கீழே தோட்டத்தில் நின்று கொண்டிருந்த வதனாவின் காதுகளைச் சென்று அடைந்தது.

வாழ்க்கையில் எது எதையோ சாதிக்க, தன் டைரியின் பக்கங்களை தன் எழுத்துக்கள் மூலம் நிரப்பியவள், அண்ணன் தனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை மாரி என்று கேட்டவுடன் அதிர்ச்சியில் தன் நெஞ்சைப் பிடித்தாள். அவள் மனது பிசையத் துடங்கியது.

அவளுமே அறிவாள் மாரி என்பவனை. அவன், அவளது தந்தை பாஸ்கருக்கு மிகவும் விசுவாசி. தன் சொந்த ஊரில் இருந்து, அனாதையான மாரியை அழைத்து வந்தார் பாஸ்கர். மாரியின் வயது எப்படியும் நாற்பதை தொட்டிருக்கும். சரியாக பேச வராது. புத்தி சுவாதீனம் வேறு. கொடுக்கும் எடுபடி வேலையை மட்டும் சரியாக செய்வான்.

இதை எல்லாம் நினைத்துப் பார்த்த வதனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அஜய் அமலாவின் சூழ்ச்சியும் புரிய ஆரம்பித்தது. ‘காலம் முழுவதும் இங்கயே இருந்து கஷ்டப்பட்டு என் உயிரை விட முடியாது’ என்று நினைத்துக் கொண்டே வழியும் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள், முடிவு எடுத்தவளாக உள்ளே சென்றாள்.

இங்கே விஜய், “அஜய் பார்த்துப்பான் தான். ஆனா இதில் ஏதோ இருக்கு. காரணம் காரியம் இல்லாமல் அவன் ஒன்னையும் செய்யமாட்டான்” என்றான்.

“ம்... அமலா அக்காவும் லேசுபட்டவங்க கிடையாது. அவங்க வழியில் நாம குறுக்கிட வேண்டாம் விஜய். வதனாவை வச்சி அவங்க என்னவேணாலும் செய்யட்டும். அது நமக்கு தேவையில்லை. ஆனா நம்ம பங்கை மட்டும் சரியா வாங்கிடணும்” என்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள்.

“குயீன்ஸில் வதனாக்கு பங்கு இருக்கும்னு நினைக்குறேன் மகா. அதான் எங்க அண்ணன் இந்த மாதிரி பேசுறான்” என்று அஜயின் செயலை மிக விரைவிலையே கண்டுபிடித்தான் விஜய்.

“என்ன சொல்றீங்க?” என்று அதிர்ந்த மகா, “அப்ப நம்மக்கிட்ட இருக்கும் பங்கையும் பறிக்க கண்டிப்பா திட்டம் தீட்டுவாறு உங்க அண்ணா” என்று சொன்னவளுக்கு புதிய கவலைப் பிறந்தது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த விஜய், “அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. உயில் பத்திரத்தில் என்ன இருக்கோ அது தான் நடக்கும். உன் கணவன் ஒன்னும் வதனா மாதிரி ஏமாளி கிடையது” என்றான்.

அதற்கு நிம்மதி பெருமூச்சிவிட்ட மகா, “நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தா, உங்க அண்ணாவும் அண்ணியும் பயங்கர கேடி தான் போல. அவங்க சங்காத்தம் நமக்கு வேண்டாம். அவங்க வதனாக்கு, ஒரு பன்னியைக் கூட கூட்டிட்டு வந்து கட்டி வைக்கட்டும். நீங்க எதுக்குமே வாய் திறக்காதீங்க” என்று அவனுக்கு அறிவுரை வழங்கினாள்.

மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட விஜய், “சரி எனக்கு இதில் பிரச்சனை இல்லைன்னு, நான் அஜய்கிட்ட சொல்லிடுறேன்” என்றான்.

ஒருவன் பேராசைக் கொண்டு, தன் உடன் பிறந்தவளின் வாழ்க்கையை அழிக்க நினைக்க, இன்னொருவனோ சுயநலத்தின் உச்சமாய் மிகப்பெரிய தவறுக்கு துணையாகிப் போனான்.

தன் அறைக்குள் வந்த வதனாவின் இதயம் இன்னும் வலித்துக் கொண்டே தான் இருந்தது. அதை நீவிவிட்டவள், “நான் ஒத்துக்கிட்டா தானே இது நடக்கும். எனக்கே தெரியாம நாலு பேரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்தா அது எப்படி சரியா வரும்” என்று வாய்விட்டுக் கதறினாள்.

‘என் வாழ்க்கையின் முடிவை எடுக்க யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தது?’ என்று நினைத்தவள், தன் பையில் இருந்து கோப்பு ஒன்றை எடுத்தாள். ‘கிங் டெக்னோ’ என்ற ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய அவளுக்குக் கொடுத்திருக்கும் அப்பாயின்மென்ட் லெட்டர் தான் அது.

அவளுக்கு நேற்று தான் செமஸ்டர் மதிப்பெண்களும் வந்திருந்தது. இன்னும் ஒருவாரத்தில் கிங் டெக்னோவில் வேலைக்கு சேர வேண்டும் என்பதாக அந்த லெட்டரில் எழுதி இருந்தது.

அதைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள், “இது மட்டும் அமலா அண்ணி கண்ணில் படக்கூடாது. இதில் என் வாழ்க்கையே அடங்கி இருக்கு” என்று சொல்லும் போதே, அவளின் அறைக்கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

சாத்தானைப் பற்றி நினைத்ததும் சாத்தானே வந்துவிட்டது என்ற பழமொழிக்கு ஏற்ப, அமலவைப் பற்றி வதனா நினைத்ததும் அவளே வந்துவிட்டாள்.

உடனே வேகமாக தன் கையில் இருந்த கோப்பை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு வதனா நிமிர, அமலாவும் அவள் முன் வந்து நிற்க சரியாக இருந்தது.

“வதனா, உன் முகத்தில் அதற்குள் கல்யாணக் கலை வந்திருச்சு போல” என்று மிகவும் பாசமான அண்ணி போல் தன் நாடகத்தை ஆரம்பித்தாள் அமலா.

‘உள்ளே ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் மூடன்’ என்று தான் வதனா தன் மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

அமலாவின் பேச்சுக்கு அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள் வதனா. வதனாவின் அமைதியைப் பார்த்து, தன் பேச்சைத் தொடர்ந்தாள் அமலா, “உன் அண்ணன் வேகமா உன் கல்யாணத்தை முடிக்கலாம்னு பார்க்குறாரு” என்று சொல்ல, அதற்கும் தன் அமைதியைத் தொடர்ந்தாள் வதனா.

“என்னாச்சி வதனா? ஏன் எதுவும் பேச மாட்டேங்குற?” என்று வினாவ.

“அதான் எல்லாத்தையும் நீங்களும் அண்ணனும் முடிவு பண்ணிட்டீங்களே அண்ணி” என்றாள்.

“என்ன இருந்தாலும் கல்யாணப் பொண்ணு நீ தானே. இந்த காலத்தில் நல்ல பையன் கிடைக்குறது லேசுபட்ட காரியம் இல்ல. ஆனா நீ நிஜமாவே கொடுத்து வைத்தவள் தான் வதனா. இவ்வளவு சீக்கிரம் உனக்கு வரன் அமையும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல” என்று சொல்லி, வதனாவின் முகத்தில் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்மையாக ஆராய்ந்தாள் அமலா.

அப்படி எதுவும் தெரியாமல் போகவே, ‘என்ன நடக்குது இங்க. மாப்பிள்ளை பாத்தாச்சுன்னு சொல்றேன் இவள் முகத்தில் சோகம், துக்கம், மகிழ்ச்சின்னு இப்படி எதுவுமே தெரியலையே!’ என்று யோசித்த அமலா, “சரி வதனா. நான் கீழ போறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்ற அமலா, நேராக தன் அறைக்குள் புகுந்து அலைபேசி மூலம் தன் கணவன் அஜய்யை அழைத்தாள்.

“எங்க இருக்கீங்க? வேகமா நம்ம ரூம்க்கு வாங்க” என்று சொல்லிவிட்டு வைத்தவள், அஜய் அறைக்கு வந்ததும், “வதனா முகமே சரியில்லைங்க. ஏதோ தப்பா தெரியுது” என்றாள்.

“ஹேய் என்னடி ஏதோ சொல்ற?. நம்ம திட்டம் எல்லாம் சரியாத் தான் போகுதுன்னு சொன்ன, இப்ப இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுற” என்று காய்ந்தான்.

“இப்ப தான் ஒருத்தனை சமாளிச்சிட்டு வந்தேன்” என்று விஜயை குறிப்பிட்டுக் கூறினான்.

அவன் பேச்சைக் காதில் வாங்காத அமலாவோ தன் கையைப் பிசைந்தபடி, “இப்ப என்ன பண்ணலாம். நம்ம திட்டம் அவளுக்கு தெரிஞ்சி போச்சோ!” என்று கூறி புலம்ப ஆரம்பித்தாள்.

தன் தலையில் கைவைத்தவன், “தெரிஞ்சா தெரிஞ்சிட்டுப் போகுது. எப்படியும் அவளுக்குத் தெரியத் தானே போகுது. அதுக்காக நீ ஏன் புலம்புற?” என்று கேட்டான்.

“என்னங்க நீங்களும் புரியாம பேசுறீங்க. அவள் இங்க இருந்து ஓடிப் போக ப்ளான் பண்றான்னு நினைக்குறேன்” என்று மிகவும் சரியாக வதனாவின் மனநிலையைக் கணித்தாள் அமலா.

வதனாவை எப்போதும் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வரும் அமலா, வதனாவின் முகத்தை வைத்தே அனைத்தையும் உணர்ந்து கொண்டாள். அஜய்க்கும் பதற்றம் பிடித்துக் கொண்டது.

“என்னடி சொல்ற?” என்று யோசித்தவன், “நம்ம திட்டம் அவளுக்குத் தெரியாது அமலா. ஆனா, நாம கல்யாணம் பண்ணி வைக்குறது பிடிக்காம டெல்லிக்குப் போக ப்ளான் பண்றான்னு நினைக்குறேன். அவளோட செர்டிபிகேட்டை பிடுங்கி வை. முக்கியமா அவள் வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை பிடுங்கு. பிறகு அந்த கழுதை எங்கையும் போகாது” என்று கோபத்துடன் பேசினான்.

“மச்... நாம கோபத்தில் எதுவும் செய்யக்கூடாதுங்க. தந்திரமாத் தான் காயை நகர்த்தனும். அவளுக்கே தெரியாம எல்லாத்தையும் நான் எடுத்து எரிச்சிடுறேன்” என்று மிகவும் வன்மமாக பேச.

“நீ சொல்றதெல்லாம் சரி தான் அமலா. ஆனா அவள் கையைக் கட்டி கல்யாணம் பண்ண முடியாது. அதுக்கும் சேர்த்து ஏதாவது யோசி. சாதாரணமா கல்யாணம்னு சொன்னதுக்கே இங்க இருந்து ஓடப்பாக்குறா. இதில் மாரி தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்றான்.

“அதெல்லாம் பார்த்துக்கலாம். சொந்தக்காரன் வாயை முதலில் அடைக்கணும். நாளைப் பின்ன அம்மா அப்பா இல்லாத பொண்ணுக்கு அண்ணிக்காரி துரோகம் பண்ணிட்டான்னு யாரும் சொல்லக்கூடாது பாருங்க” என்றாள் அமலா.

“வேற ஜாதி பையனை விரும்புறா, அதான் வேகவேகமா கல்யாணம் பண்றான்னு சொன்னா எவனும் நம்மை எந்த கேள்வியும் கேட்க மாட்டன். அந்த அளவு ஜாதி வெறி பிடிச்சவனுங்க. அவனுங்களைப் பற்றி நீ கவலைப் படாத. வதனாவைப் பத்தி மட்டும் யோசி” என்று சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான் அஜய்.

தன்னுடைய கோப்புகள் அனைத்தையும் எடுத்து ஒரு பையில் வைத்த வதனா, ‘இங்க இருந்து எப்படி போகுறது’ என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவள் தோழிகளிடமும் உதவி கேட்க முடியாது. தேவை இல்லாத கேள்விகள் எழும். அவர்களுக்கு வதனாவின் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் பற்றி தெரியாது. அதைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் வதனா விரும்பவில்லை.

தன் கைப்பேசியை எடுத்தவள், ‘பேருந்தில் போறது சேப் இல்ல. அங்க போனதும் கம்பெனியில் இருந்தே தங்குறதுக்கு இடம் கொடுத்துடுவாங்க. ஆனா ஒருவாரம் அதுக்காக நான் காத்திருக்கணும். ஒரு வாரம் ஹோட்டலில் தங்க முடியாது’ என்று அவள் குழம்பும் போதே அறைக்குள் நுழைந்தாள் அமலா.

“உன் ரூமில் இன்னும் லைட் எரியுறதைப் பார்த்து வந்தேன் வதனா. ஆமாம் ஏன் நீ இன்னும் தூங்கல?” என்றாள்.

அமலாவின் நடிப்பு மிகுந்த பேச்சு வதனாவுக்கு எரிச்சலைத் தந்தாலும், வெளியே சிரித்த முகமாகவே, “இதோ தூங்கப்போறேன் அண்ணி” என்றாள் கொட்டாவி விட்ட படி. அப்போது சரியாக வதனா தன் கோப்புகளை வைத்திருந்த கருப்பு நிற பையும் அமலாவின் கண்களில் பட்டுவிட்டது.

‘நீ இப்படி தான் பண்ணுவன்னு எனக்குத் தெரியும்டி’ என்று கோபத்துடன் நினைத்தவள், “சரி நீ வேகமா தூங்கு” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவள், வதனாவின் அறை வாசலிலையே நின்றாள்.

கதவைப் பூட்டாமல் வதனாவும் வாஷ் ரூம் செல்ல, அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமலா, அந்த பையை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து திறந்து பார்த்தாள். உள்ளே அவள் நினைத்தது அனைத்தும் இருந்தது.

அப்போது அங்கே வந்த அஜய்யும், கிங் டெக்னோ என்று அச்சிடப்பட்ட காகிதத்தை பையில் இருந்து எடுத்தவன், லைட்டர் மூலம் அதற்கு நெருப்பு வைத்தான்.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 6

மிகுந்த பாசம் இருப்பதைப் போல மயங்கும் வார்த்தைகளை எல்லாம் கூறி, மகுடி இசை வார்த்தைகளால் பெண்ணவளின் எதிர்காலத்தை அதுவும் தன் சொந்த தங்கையின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டு, கொடூரமாக சிரிக்கும் அஜய்யின் முகம் வதனாவின் முன்பு வந்து வந்து சென்றது வதனாக்கு.

வெப்ப அலை மிகுந்த சென்னை கடற்கரையில், கதிரவனின் கொடூர வெயிலையும் பொருட்படுத்தாது, அந்த சுடும் மணலில் நின்று கடலை வெறித்துக்கொண்டிருந்தாள் வதனா.

அழுவதற்குக் கூட அவள் உடலில் வலிமை இல்லை. மனம் முழுவதும் மரத்துப் போய் இருந்தது. சின்ட்ரெல்லா கதைகளில் வருவது போல் தன்னைக் காப்பாற்ற ராஜ குமாரன் குதிரையில் வருவான் என்பது போல் எல்லாம் அவள் கனவு காணவில்லை. மாறாக தன் சொந்த காலில் நிற்க நினைத்த சாதாரண ஆசை மட்டுமே. அதுவும் நேற்று இரவே நிராசையாகி விட்டது.

முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவள், தான் கோப்புகளை வைத்திருந்த பையைக் காணாமல் திகைத்து நின்றாள்.

‘இங்க தானே வச்சிருந்தேன்’ என்று நினைத்தபடி அவள் சுற்றும் முற்றும் பார்க்க, அவளின் இதயம் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது.

‘ஒருவேள அண்ணி எடுத்து இருப்பாங்களோ!’ என்று நினைத்தபடி அவள் வேக வேகமாக அவர்கள் அறைக்கு செல்ல, அங்கே அவளின் கனவுகள் எல்லாம் எரிந்து கொண்டிருந்தது.

அவள் கோப்புகளை எல்லாம் அழித்துவிட்டு சிரிக்கும் அஜய்யும், அமலாவும் வதனாவின் கண்களுக்கு அரக்கர்களாகத் தெரிந்தனர். ஆனால் அவர்கள் முன் சென்று அவள் வாதிடவில்லை.

சத்தம் செய்யாமல் அங்கே இருந்து, தன் அறைக்குள் வந்தவள், வாயை மூடி அழ ஆரம்பித்தாள்.

எவ்வளவு நேரம் அழுதாள் என்பது எல்லாம் அவள் நினைவில் இல்லை. பின் எப்படியோ காலையில் எழுந்தவள், ‘மார்க் செர்டிபிகேட் எல்லாம் காலேஜ்ல போய் வாங்கிக்கலாம். ஆனா வேலையில் சேருவதுக்கு உண்டான அப்பாயின்மென்ட் ஆர்டர் இல்லாம ஒன்னுமே செய்யமுடியாதே ‘ என்று மனதினுள் புழுங்க ஆரம்பித்தாள்.

பின், ‘அவ்வளவு பெரிய நிறுவனத்தில் அப்பாயின்மென்ட் ஆர்டர் இல்லைன்னா சேர்க்க மாட்டாங்க. இருந்தாலும் ஒரு தடவை நம்ம எச்ஓடியிடம் சொல்லி கேட்டு பார்க்கலாம்’ என்ற நினைப்போடு, கிளம்பி வெளியே வந்தாள்.

அவளை மிதப்பாக பார்த்த அமலா, “எங்க கிளம்பிட்ட வதனா?” என்றாள்.

அவள் முகத்தைப் பார்க்கவே வதனா விரும்பவில்லை. ஆனால் தன் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்பதை இப்போது நன்கு உணர்ந்தவளாக, “கோவிலுக்குப் போயிட்டு, அப்படியே என் தோழிகளைப் பார்க்க போறேன் அண்ணி” என்றாள் சிரித்த முகமாக.

‘என்ன சொல்றா! செர்டிபிகேட்ஸ் எல்லாத்தையும் காணாமல் அழுது ஒப்பாரி வைப்பான்னு நினைச்சா, இவ்வளவு பிரகாசமா இருக்கா. ஒருவேளை எதுக்காக வேலைக்குப் போய் கஷ்டப்படணும், கல்யாணம் பண்ணிட்டு இங்கையே ஜாலியா இருக்கலாம்னு நினைச்சிட்டாளோ!‘ என்று நினைத்தவளின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல்.

அவள் யோசனையைப் பார்த்து, ‘நீங்க தந்திரக்கார நரின்னா அதை வேட்டையாடும் வேடன் நான். என் குறிக்கோள் என்றுமே தோற்காது’ என்று தன் மனதினுள் நினைத்த வதனா, “சரி அண்ணி நான் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள் வதனா.

செல்லும் வதனாவைப் பார்த்த அமலா, ‘நல்லா சிரி வதனா. மாரி தான் மாப்பிளைன்னு தெரிஞ்சதும் உன் முகம் என்ன ஆகுதுன்னு நானும் பாக்குறேன்’ என்று வன்மமாக நினைத்துக் கொண்டாள்.

நேராக தன் கல்லூரிக்கு சென்றவள், தன் துறை பேராசிரியரிடம் சென்று நின்றாள். அவரோ அவளைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தார்.

“உன்னிடம் இதை எதிர்பார்க்கவே இல்ல வதனா. நல்லா படிக்குற பெண் நீயே இப்படி கவனமில்லாம இருக்கலாமா?” என்று வதனாவைத் திட்டினார்.

“இல்ல மேம் நான் கவனமாத் தான் இருந்தே எப்படி மிஸ் ஆனதுன்னு தெரியல. ப்ளீஸ் மேம் எனக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணுங்க” என்று அவரிடம் கெஞ்சினாள்.

“யூனிவர்சிட்டி செர்டிபிகேட்டை உனக்கு நான் இன்னொரு காபி எடுத்துக்கொடுத்துருவேன் சந்தரவதனா. ஆனா உன்னோட வேலைக்கான ஆர்டரை என்னால ஒன்னும் பண்ண முடியாது. அவங்க ஸ்பாட்லையே சைன் பண்ணி தந்த செர்டிபிகேட்டை மிஸ் பண்ணது உன்னோட தப்பு” என்று சொல்லி தன் கையை விரித்துவிட்டார்.

அதில் அவளது நம்பிக்கையும் உடைந்து போனது. பித்துபிடித்தவள் போல் கடலை வெறித்துக் கொண்டு நிற்கின்றாள்.

சிறு சிறு அலைகள் இப்போது அவள் கால்களை நனைக்க ஆரம்பித்திருந்தது. திடீரென்று பெரிய அலை ஒன்று வேகமாக வந்து அவள் மீது மோத, நிலை தடுமாறி கீழே விழுந்தாள் வதனா.

அந்த உச்சு வெயிலில் யாரும் அவ்வளவாக கடற்கரையில் இல்லை. ஆனால் அவள் விழுவதைப் பார்த்த ஒரு ஜோடி கண்கள் மட்டும் பதறிப்போய் அவளை நோக்கி வந்தது.

அது வேறு யாரும் இல்லை நம் கதையின் நாயகன் குறளரசன் தான். கீழே விழுந்த வதனா, தன் கையை அந்நியன் ஒருவன் பிடிப்பதைக் கண்டு பதறிப் போய் அவனிடம் இருந்து தன்னை விடுவிக்கப் போராடினாள்.

அதற்குள் இன்னொரு ராட்ச அலையும் அவர்கள் மீது வந்து மோதியது. அதில் நிலை தடுமாறிய குறளரசனும் அவள் மீதே விழுந்தான்.

தன் முயற்சியைக் கைவிடாத வதனாவும் தன் கையைப் பற்றிய குறளரசனிடம் இருந்து தன் கையை விடுவித்து, அவனை ஓங்கி அடித்திருந்தாள். அதில் அவன் அவள் கையை திரும்பவும் பற்றிக்கொள்ள, தன் இன்னொரு கையால் அவன் தோள்பட்டையை அடிக்க ஆரம்பித்தாள்.

கிங் சாம்ராஜ்யத்தையே கட்டியாளும் குறளரசனுக்கு அது வலிக்கவில்லை போலும். அவள் அடியை எல்லாம் பொருட்படுத்தாது, அவளின் கையை இழுத்துக் கொண்டு அலைவராத பகுதிக்கு வந்தான்.

அலையில் சிக்கியதால் பேச்சு வராமல் மூச்சு விட சிரமப்பட்ட வதனா இப்போது, “ஹேய் யாருடா நீ” என்று கத்தினாள்.

அவள் கையை விடுவித்து தன் இடுப்பில் கையை வைத்தபடி அவளை நோக்கியவன், “மனுஷனா பிறந்த எல்லாருக்கும் கஷ்டம் வரத்தான் செய்யும். அதுக்காக சாக நினைக்கக்கூடாது...” என்று அவன் சொல்ல, வதனவோ தன் வாயில் கைவைத்தபடி அவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.

மேலும் தொடர்ந்து பேசியவன் கடலைக் காட்டி, “இதோ, இது போல் பல அலைகள் உன் எதிரே வந்து கொண்டு, உன்னை கீழே விழ வைக்கத் தான் செய்யும். நீ தான் அதை எல்லாம் எதிர்த்து எதிர்நீச்சல் போடணும்” என்று மிகவும் தீவிரமாகப் பேசினான்.

தன் தலையில் கைவைத்துக் கொண்டவள், “நான் இப்ப சாகப்போறேன்னு உங்களுக்கு யாருங்க சொன்னது?” என்று கோபத்துடன் குறளரசனை நோக்கினாள். இப்போது தான் அவன் முகத்தை நன்றாக ஏறிட்டுப் பார்க்கின்றாள். பார்த்ததுமே அவளுள் பட்டாம்பூச்சிகள் பல பறக்க ஆரம்பித்தது. குறளரசனை முதல் பார்வையிலையே அவளுக்குப் பிடித்துவிட்டது. இருந்தும் தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

“அப்ப நீ... சாக நினைக்கலையா ஜாகியா” என்று சந்தோஷத்தில் திக்கினான்.

தன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கி அவனைப் பார்த்தவள், “ஜாகியாவா? நீங்க நான் யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசுறீங்கன்னு நினைக்குறேன்” என்று சொன்னவள், தன் மனதிற்குள், ‘இவன் போட்டிருக்கும் சட்டையை வைத்துப் பார்த்தால் கொரியன் டிராமாவில் வரும் சிஇஓ மாதிரி இருக்கான். வழிஞ்சான் கேசு மாதிரியும் தெரியல’ என்று யோசனை செய்து கொண்டிருந்தாள்.

அவள் யோசனையைக் கலைத்தவன், “உனக்கு என்னை நியாபகம் இல்லையா ஜாகியா. நான் தான் குறள். உன்னோட குறள். திரும்பி உன்கிட்டயே வந்துட்டேன்” என்றான் உருக்கமாக.

அதில் தானும் உருகியவள், ‘என்கிட்ட இப்படி யாராவது பேசமாட்டாங்களான்னு நானும் காத்துக்கிட்டு தான் இருக்கேன். ஆனா இதுக்கெல்லாம் எனக்குத் தான் குடுப்பினை இல்லையே!’ என்று நினைத்தவளாக, அவனைப் பார்த்தவள், “இங்கப் பாருங்க மிஸ்டர் நீங்க நினைக்குற ஆள் நான் கிடையாது...” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளை இறுக்கமாக அணைத்தவன், “இனி உனக்கு அம்மாவும் அப்பாவுமா நானே இருப்பேன் ஜாகியா. அவங்க இல்லாத கவலையை உனக்கு நான் வரவிடமாட்டேன்” என்றான்.

அவன் அணைத்ததும் அவனைத் தன்னில் இருந்து பிரிக்கப்போராடியவள், அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு அமைதியானாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவளது கண்ணீரைத் துடைத்தவன், “இனி அந்த நரகத்துக்குள் உன்னை போகவிடமாட்டேன்” என்றான்.

அவனை அதிர்ச்சியாக பார்த்தவள், “நீங்க என்ன சொல்றீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியுமா? ஆனா நீங்க யாருன்னு எனக்குத் தெரியல” என்றதும் அவன் நெஞ்சில் சிறு வலி பிறந்தது.

இருந்தும் தன் மனதை நீவிவிட்டவன், “நான் உன்னோட சின்ன வயசு தோழன். நான் உன்னை ஜாகியான்னு தான் கூப்பிடுவேன்” என்றவன், “ஜாகியான்னா...” என்று அவன் அதற்கான அர்த்தத்தை சொல்வதற்கு முன்பாகவே, “தெரியும் தெரியும் கொரியன்ல ஸ்வீட்டி தானே!” என்று முந்திக்கொண்டு கேட்டாள் வதனா.

அவனும் மகிழ்ச்சியுடன், “ஆம்” என்று தன் தலையை ஆட்டினான். “காலேஜ்ல சில நேரம் ப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து, லேப்டாப்பில் கொரியன் டிராமா பார்ப்போம்” என்றாள் மகிழ்ச்சியாக.

குறளரசனை கிங் என்ற ஒளியில் வைத்துப் பார்ப்பவர்கள் அனைவரும் இப்போது, அவன் வதனாவின் முன் நிற்கும் தோற்றத்தைக் கண்டு இருந்தால், நிஜமாகவே மயக்கம் அடைந்திருப்பார்கள்.

அவ்வளவு கனிவுடன் வதனாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் குறளரசன்.

“நீங்க ஹால்ப் கொரியனா? தமிழ் நல்லா பேசுறீங்களே!” என்று வினாவினாள்.

அதற்கு வெறும் ஒற்றை வரியில் தன் பதிலைக் கூறியவன், “உனக்கு இன்னும் என்னை அடையாளம் தெரியலையா ஜாகியா” என்றான் வருத்தம் கொண்ட குரலில்.

அதில் அவளையும் வருத்தம் தாக்க, “சாரிங்க. உங்களுக்கு என்னைப் பத்தி தெரிஞ்ச அளவு எனக்கு உங்களைப் பத்தி தெரியல. இன்பாக்ட் உங்க முகம் எதுவுமே என் நியாபகத்தில் இல்ல” என்று வெளிப்படையாக பேசினாள் வதனா.

அவள் முகம் சோர்வடைவதைப் பார்த்து மனம் சுணங்கிய குறளரசன், “ஹேய் ஜஸ்ட் சில் ஜாகியா. இன்பாக்ட் எனக்குமே உன் பெயர் தெரியாது. ஜாகியான்னு கூப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு. ஆனா ஏதோ வருமே சம்திங்... அகானாவோ, ரத்னாவோ இல்லை வதனாவோ” என்று அவன் யோசிக்க.

அதில் சிரித்தவள், “வதனாங்க” என்றாள்.

அவள் சிரிப்பில் தன்னை மறந்தவன், “நீ எப்போதும் இப்படியே சிரிச்சிக்கிட்டே இருக்கணும் வதனா...” என்று முதன் முதலாக அவள் பெயரைக் கூறி பேசினான்.

இப்போது இப்படி சொல்பவன் தான் பின்னாளில் அவளின் மொத்த துக்கத்திற்கும் காரணமாகப் போகின்றான் என்பது இப்போது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
Last edited:

NNO7

Moderator
அத்தியாயம் – 7

குறளரசனின் வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாக மாறி, அவள் காதில் தேனைப் பாய்ச்ச, தன்னிலை மறந்து அவனை நோக்கினாள் பெண்.

ஆனால் அவள் நினைப்பெல்லாம் ‘எனக்கு ஏன் இவரைப் பற்றிய நியாபகம் எதுவும் இல்ல. சின்ன வயசுல பார்த்திருந்தாலும், அதுல இருக்கும் சின்ன நினைவு கூட எனக்கு இல்லையே!’ என்று குழப்பமும் அவளை சுற்றி தான் வந்து கொண்டிருந்தது.

இருந்தும் வதனாவோ அவன் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பினாள். திடீரென்று ஒருவன் தன் முன்பு வந்து நின்று, நீயும் நானும் சிறுவயது நண்பர்கள் என்று சொன்னால், யாரும் அவ்வளவு சீக்கிரம் நம்பி விடமாட்டார்கள் தான். ஆனால் வதனா இருக்கும் நிலை அப்படி. அவன் தன்னைப் பற்றி கொடுத்த சிறு குறிப்பையும், அவன் காட்டிய அன்பையும் வைத்து, வாழ்க்கை வாழ, போராட்டத்தில் இருந்தவள் குறளரசனை கண்ணை மூடிக்கொண்டு நம்பினாள். அதுமட்டும் அல்ல அவனை விரும்பவும் ஆரம்பித்துவிட்டாள்.

சின்ன வயதில் நடந்த அத்துணை நிகழ்ச்சியையும் குறளரசனாவது அவளிடம் கூறி இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி அவன் பெரியதாக ஒன்றும் பேசவில்லை. காரணம் அவள் பெற்றோர்களை நினைத்து மனம் வருந்தக்கூடும் என்ற ஒரே நினைப்பு தான்.

ஆனால் அவ்வாறு சொல்லாதது எவ்வளவு பெரியத் தவறு என்பதை பின்னாளில் அவன் அறியும் காலமும் நிச்சயம் ஏற்பட்டும்.

“சரி இப்ப இந்த நேரத்துல இங்க நின்னு நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று அப்போது தான் அவன் விஷயத்திற்கே வந்தான்.

“அது ஒன்னும் இல்ல. சும்மா தான்” என்று கூறி சமாளித்தாள். குறளரசனுக்கு அவளைப் பற்றி தெரிந்திருந்த போதிலும், அவனிடம் வீட்டில் நடந்தவற்றை அப்படியே கூறாமல், “எனக்கு டெல்லில வேலை கிடைச்சிருக்கு. ஆனா அதுக்கான அப்பாயின்மென்ட் லெட்டரை நான் மிஸ் பண்ணிட்டேன். அதான் சோகமா இங்க நிக்குறேன் வேற ஒன்னும் இல்லைங்க” என்றாள்.

அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன், “நீ சொல்றது எல்லாம் உண்மை தானா? இது தான் காரணமா? வேற ஒன்னும் இல்லை தானே!” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அவள் மீது அடுக்கினான்.

“ம்... உண்மை தான். நான் எப்படியாவது இங்க இருந்து போயிடனும்” என்று அவள் சொல்லும் போதே அவள் நினைப்பில் விஜய் மகாவிடம் சொன்ன வார்த்தைகள் கேட்டுக் கொண்டிருந்தது. உடனே அவள் கண்களில் இருந்து கண்ணீர் விலுக்கென்று விழுந்தது.

‘விஜய் அண்ணா எப்போபோதும் என்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி பேச மாட்டான். அதுக்காக அவனுக்கு என் மேல் பாசம் இல்லாம போயிடுமோன்னு நினைச்சேன். இப்ப அதுவும் பொய்யின்னு ஆகிடுச்சி. அவனும் சுயநலமா இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டான்’ என்று மனதால் வருந்தினாள் வதனா.

அவள் சோர்ந்த முகத்தைக் கண்டு, நெஞ்சம் பொறுக்காத குறளரசன், “இது மட்டுமே உன் பிரச்சனை இல்லைன்னு நான் நினைக்குறேன். இந்த வேலை போனா என்ன? இன்னொரு வேலை கிடைக்கும். அதுவும் இல்லாம உனக்கு இருக்கும் வசதிக்கு நீயே முதலாளி கூட ஆகலாம்” என்று அவன் சொல்லிக்கொண்டே போக, “கொஞ்சம் இருங்க குறள். எனக்கு அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் இங்க இருக்கக்கூடாது அவ்வளவு தான்” என்று பதற்றத்துடன் வதனா கூற, அதில் கலக்கம் அடைந்தவன், அவள் இரு தோள்களையும் தன் கைகளால் பற்றி, “உனக்கு வேற என்ன பிரச்சனைன்னு சொல்லு ஜாகியா. இப்படி எதுவுமே சொல்லாம இருந்தா உன் உடல் நிலை கண்டிப்பா பாதிக்கும்” என்று கெஞ்சினான் குறள்.

இவ்வளவு நாள் வதனா பட்ட கஷ்டங்களை எல்லாம் ஒரே நொடியில் தான் போக்கிவிட வேண்டும் என்ற உத்வேகம் அவனுள்.

“எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்குறாங்க. நான் காலம் முழுக்க அவங்க காலடியிலையே கிடக்கணுமாம்” என்று கூறி வெடித்து அழ ஆரம்பித்தாள் வதனா.

இதைக் கேட்டதும் குறளரசனின் முகம் முழுவதும் கோபத்தின் ஜுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தது.

“உனக்காக யாரும் இல்லைன்னு இந்த மாதிரி செய்றானா அந்த அஜய்... இந்த கிங் யாருன்னு அவனுக்கு நான் காட்டுறேன்” என்று கர்ஜித்தான்.

அவன் முகத்தைக் கண்டு வதனாவே சிறிது பயந்துவிட்டாள், “என் அனுமதி இல்லாம அவங்களால ஒன்னும் பண்ண முடியாதுங்க. இருந்தும் இங்க இருக்க எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

உடனே சற்றும் யோசிக்காமல், “பேசாம நீ என்கூடவே வந்துரு வதனா” என்று சொன்னான் குறளரசன்.

அதில் விழித்தவளாக, “என்ன பேசுறீங்க குறள்?. திடுதிப்புன்னு வந்தீங்க. ஏதேதோ சொன்னீங்க, இப்ப உங்கக்கூட கூப்பிடுறீங்க. நீங்க பேசுறது எல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?” என்றாள்.

இப்போது அவள் கன்னத்தைப் பற்றியவன், “இப்ப மட்டும் இல்ல. வாழ்க்கை முழுவதுக்கும் நீ என்கூட வரணும்னு நான் ஆசைப்படுறேன்” என்ற வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வந்ததும், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள் வந்தனா.

அவன் தடாலடியாக இப்படி சில வார்த்தைகளைக் கூறுவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

பேச மறந்தாள், ஏன் மூச்சு விடவும் மறந்து தான் போனாள். அவள் மனதெல்லாம் ஏதோ புரியாத ஒரு உணர்ச்சி பொங்க, சில கணங்கள் கடந்து கடினப்பட்டு தன் கன்னத்தில் இருந்து அவனது கையை எடுத்து, “இப்ப நீங்க எனக்கு ப்ரபோஸ்சா பண்ணீங்க” என்று புரியாமல் கேட்டாள்.

“ஏன் நான் சொன்னது உனக்குப் புரியலையா? தமிழில் தானே சொன்னேன்” என்றான் இதழில் தோன்றிய குறுநகையுடன்.

ஒரு வழியாக வார்த்தைகளை ஒன்று சேர்த்தவள், “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல குறள். இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு. இது சின்ரெல்லா கதை ஒன்னும் இல்லையே” என்றாள் குழப்பம் கொண்டவளாக.

அதில் இதழோரம் சிரித்தவனாக, தன் கைகள் இரண்டையும் விரித்துக் காட்டி, “நான் நிஜம் மட்டும் தான் ஜாகியா. நீ இப்ப எந்த நிலையில் தனிமரமா நின்னுக்கிட்டு இருக்கியோ, அதே நிலையில் தான் நானும் நின்னுக்கிட்டு இருக்கேன். எனக்கும் யாரும் இல்ல. என்னோட சின்ன வயசு தோழி மட்டும் தான் இருக்கான்னு உன்னைத் தேடி வந்துருக்கேன்” என்றான் கண்களில் ஈரம் மின்ன.

ஏற்கனவே அவன் கண்களில் தெரிந்த காதல் கடலில் விழுந்தவள், அவன் பேச்சில் இன்னும் அதிக ஆழத்திற்குள் சென்றாள்.

அவன் பேச்சில் தெரிந்த உண்மை, அவனை மொத்தமாக நம்ப வைத்தது அவளுக்கு. உடனே முடிவெடுத்தவளாக, “நீங்க நிஜமாத் தானே சொல்றீங்க! இப்ப பிடிச்ச என் கையை கடைசி வரைக்கும் விட மாட்டீங்களே!” என்று திரும்பவும் கேட்டாள்.

அதில் முகம் பிரகாசம் அடைந்தவனாக, அவளின் முகத்தைப் பற்றியவன், “அப்ப, என்னை திருமணம் செய்ய உனக்கு சம்மதமா?” என்றான் குரள்.

அதில் மெதுவாக தன் தலையை ஆட்டியவள், “எனக்கு சம்மதம் தான். வீட்ல எப்படி சமாளிக்கன்னு தான் தெரியல” என்றாள் கொஞ்சம் பயம் கலந்த குரலில்.

தன் அண்ணன் அண்ணியின் முடிவுக்கு எதிராக சில முடிவுகளை வதனா எடுத்திருந்தாலும், முதன் முதலாக அவர்களை மீறி ஒன்று செய்யும் போது பெண்ணவளுக்கு சிறிது பயமாகத்தான் இருந்தது. அதை அப்படியே குறளிடமும் கூறினாள்.

தான் மனதில் நினைத்ததை எல்லாம் ஒருவனிடம் கூறுகிறோம் என்று அவளுக்கே சிறிது ஆச்சரியமாகத் தான் இருந்தது. இருந்தும், ‘எனக்கானவர் குறள் மட்டும் தான்’ என்று நினைத்தவள், அவன் மட்டுமே தன் எதிர்காலம் என்று முடிவே செய்திருந்தாள்.

அவளின் பேச்சைக் கேட்டு, அவள் கன்னத்தில் இருந்து தன் கையை எடுத்தவன், “இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு நீ உனக்கு நான் இது எப்போதும் தொடரும். நடுவில் யார் வந்தாலும், அவங்களை அழிக்காம விடமாட்டேன்” என்றான் கோபமுகத்துடன்.

அவன் இதழில் கைவைத்தவள், “அழிப்பேன்னு நீங்க சொல்ற, இந்த வார்த்தை மட்டும் வேண்டாம் குறள். நீங்க இந்த வார்த்தைய சொல்லும் போது, என் மனசு படபடப்பா இருக்கு” என்றாள் அக்கறையுடன்.

அவளின் மணிக்கட்டைப் பிடித்து, அவள் விரலில் தன் இதழை ஒற்றி எடுத்தவன், “சரி. அப்ப, நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.

முதலில் அவன் செய்த செயலில் வெட்கம் கொண்டு தன் தலையை தாழ்த்திக் கொண்டவள், அவன் அடுத்து பேசிய பேச்சில், இமைக்கவும் மறந்து அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் முன் சுடக்கிட்டவன், “என்னாச்சி? மூச்சிவிட மறந்து போயிட்டியா?” என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டான்.

“நீங்க... நீங்க சும்மாத் தானே சொன்னீங்க” என்று திணறிய குரலில் கேட்டாள்.

“அட என்ன ஜாகியா.... நான் என்ன சொன்னாலும் நம்பாத மாதிரியே கேட்குற” என்று அலுத்துக்கொண்டவன், “இப்பவே என்கூட வர உனக்கு விருப்பமா?” என்றான்.

தன் தலையை ஆட்டிக் கொண்டவள், “எனக்கு விருப்பம் தான். ஆனா...” என்று அவள் இழுக்கும் போதே, நாம டெல்லி போகலாம்” என்றான் குறள்.

“என்னது டெல்லிக்கா... அங்க தான் நானும் போகலாம்னு நினைச்சேன்” என்றாள் அவள் மகிழ்ச்சியாக. ஆனால் அங்கே தனக்கு வேலை கிடைத்ததையும், இப்போது அதில் தான் சேர முடியாமல் போனதையும் அவள் கூற மறந்தாள்.

இதுவே நாளை மிகப்பெரிய பிரச்சனையைக் கொண்டு வந்து விடப்போகிறதைப் பற்றி அவள் அறியவில்லை. ஏன் அவனும் கூட அறிந்திருக்க மாட்டான். அவனாவது எந்த நிறுவனத்தில் பணிபுரியப்போகின்றாய் என்பதனைக் கேட்டு இருக்கலாம்.

“அங்க தான் எனக்கு வேலை எல்லாம் இருக்கு வதனா. நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம். என்னோட லாயர் ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாத்தையும் பார்த்துப்பார்” என்றான் அவசரமாக.

அவன் பேச்சை எல்லாம் கேட்டு, மகுடிக்கு இயங்கும் நாகத்தைப் போல் தான் தன் தலையை தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள் வதனா.

இப்போது தான் ஒருவன் வந்தான், அதற்குள் காதலைக் கூறி, திருமணமும் செய்ய கூப்பிடுகிறான். அவன் நல்லவனா? கெட்டவனா? என்ற யோசனை எல்லாம் அவளிடம் துளியும் இல்லை.

ஏதோ மிகப்பெரிய புயலில் சிக்கியத் தன்னைக் காக்க கடவுள் அனுப்பிய ரட்சகன் போலவே குரளரசனைக் கண்டாள். யாருடைய ஆதரவும் இன்றி சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தாலும், மனதில் காதல் வேண்டும் என்ற அடிப்படை ஆசை அவளுக்கு இருந்தது. அவளும் மனுஷி தானே!

அதிக மனஅழுத்தம், யாருமே இல்லாத அனாதை போன்ற தத்தளிப்பு எல்லாம் சேர்ந்து அவளைத்தாக்க, காயத்திற்கு போட்ட மருந்தைப் போல் வந்தவன் தான் குறளரசன். அவனின் அணுகுமுறை அவளை ஏதும் யோசிக்க விடவில்லை.

காயத்திற்கு மருந்திடுபவன், அதே காயத்தை மேலும் பெரியதாக்கி ஆறாத வடுவாக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 8

நடப்பது அனைத்தும் நன்றாக நடந்து விட்டால் அந்த காலனுக்கு என்ன வேலை?. இதுவரை துயரத்தை மட்டுமே சந்தித்து வந்த சந்தரவதனாவின் வாழ்வில் மிகப்பெரிய பிரளயம் நடந்துவிட்டது.

பெற்றோர்களை இழந்து உடன்பிறப்புகளால் கைவிடப்பட்ட வதனா, தன் சரிபாதி என்று யாரை நினைத்தாளோ, அவனும் கைவிட்ட நிலையில், தன் துயரங்களுடன் எதிர்நீச்சல் போட்டு, இப்போது ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் வேலை செய்கின்றாள்.

“வதனா, இன்னைக்கு நம்ம டீம்ல எல்லாரும் சேர்ந்து அவுட்டிங் போகலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். நீயும் வரியா?” என்று அவளுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி கேட்க.

அதற்கு இன்முகமாகவே, “இல்லைப்பா... எனக்கு வீட்ல வேலை இருக்கு” என்று கூறி மறுத்துவிட்டவள், தன் கணினியைப் பார்த்து, இறுகிய முகத்துடன் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

யாரிடமும் சகஜமாகப் பேச கூட அவளின் மனது விளையவில்லை. அவள் பட்ட அடி அவ்வாறு ஆறாத வடிவாகிப்போனது.

ஆறு மாதங்களுக்கு முன், நடந்த ஒவ்வொரு விஷயங்களுமே அவள் மனதில் தீக்காயம் போல் காந்திக்கொண்டே தான் இருக்கின்றது.

வேலையை முடித்துவிட்டு நேராக தான் இருக்கும் பிளாட்டிற்கு சென்றவள், சாப்பிடவும் மறந்து, பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்த மூங்கில் ஊஞ்சலில் தன்னைப் பொருந்திக்கொண்டாள்.

அவள் நினைப்பு முழுவதும், குறளரசன் ஒருவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது. அவனை இறுதியாகப் பார்த்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது.

வெறும் இரண்டே நாட்களில் அனைத்தும் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களில் இதுவரை அவள் பார்த்திராத அன்பை திகட்டத் திகட்டக் கொடுத்தவன், மூன்றாம் நாளில் அனைத்தையும் ஒன்றும் இல்லாது செய்துவிட்டான்.

அவன் ஆடிய ஆட்டம் இன்னும் அவள் நெஞ்சைவிட்டு அகலவில்லை. பார்த்ததும் காதல் கொண்டுவிட்டாள். அவன் தொடுதலில் உருகியும்விட்டாள். ஆனால் அதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை நாட்கள் கழித்து தான் உணர்ந்தாள். அதன் பிறகு நினைத்து என்ன பிரயோஜனம் அதான் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டதே!

குறளரசன் அவள் கழுத்தில் கட்டிய தாலி, இப்போது அவளது அலமாரியில் தான் உறங்கிக்கொண்டிருந்தது. அவன் பேசிய பேச்சு இன்னும் அவள் காதில் எதிரொலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

“என்னோட ஜாகியா நீ இல்ல...” என்று அவன் கத்திய கத்தல், இன்னும் அவள் காதில் கேட்டுக்கொண்டே இருக்க, அழுத்தமாக தன் இருகைகளால் காதுகளை மூடிக்கொண்டவள், “இல்ல... இல்ல... நான் உன்னைப் பத்தி நினைக்கல” என்று கத்தியபடி அழ ஆரம்பித்தாள்.

அன்று அவனிடம் அவள் பேசிய பேச்சுக்கள் ஏராளாம். ஆனால் அதற்கு அவன் பதில், “நீ ஜாகியா இல்ல” என்பது மட்டுமே.

“நானும் இல்லைன்னு தானே சொன்னேன். நீ தானே, ‘நீ தான் என் ஜாகியான்னு’ சொல்லி என்னைக் கல்யாணம் பண்ண. சின்ன வயசு நியாபகம் இல்லாத நானும், நீ சொன்னதை நம்பி இப்படி வந்து நிற்குறேன்” என்று அன்று கூறியதை நினைவு கூர்ந்தாள்.

அப்போது அவளின் அலைபேசி சிணுங்க, அவள் காதில் அது விழவில்லை. மறுபடியும் அது சிணுங்கிக்கொண்டே இருக்க, சிறிது நேரம் பிடித்தது அவள் சுயத்திற்கு வர.

குறளரசன் அவளை விட்டுச் சென்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டாலும், அவள் தினமும் அவனை நினைத்து அழுவதை நிறுத்தவே இல்லை. அந்த அளவுக்கு அவனை விரும்பிவிட்டாள்.

ஆனால் அவன், இவளை குப்பை போல் தூக்கி எறிந்தாலும், இன்னும் அவன் கட்டிய தாலியை சுமந்துகொண்டே இருக்க அவள் ஒன்றும் ஆண்ட்டி ஹீரோ கதையில் வரும் கற்பனை நாயகி இல்லையே!

மிகவும் முற்போக்கு எண்ணம் கொண்ட நவீன பெண் தான் சந்தரவதனா, ஆனால் காதல் என்ற ஒன்று, அவனை மறக்கவிடாமல் அவளை பாடாய்படுத்துகிறது. குறளரசன் மீது கோபம் வந்தாலும், அவனைத் தான் தேடுகிறது அவளின் மனது.

தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள், மெதுவாக தன் அலைபேசியை எடுத்து தன் காதில் வைத்தாள்.

“ஹலோ” என்று அவள் சொல்ல, அந்தப்பக்கம், “வதனா... தேங்க் காட்... நீ நல்லாத் தானே இருக்க?” என்று பதற்றத்துடன் கேட்டது வேறு யாரும் இல்லை, அவளது இரண்டாவது அண்ணன் விஜய் தான்.

அவள் பதற்றமாக அலைபேசியை அணைக்கப் போக, அதற்குள் விஜய், “லைனை கட் பண்ணிராத வதனா. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு. நான் உன்னைப் பார்க்க தான் மும்பை வந்துருக்கேன். உன் விருப்பத்திற்கு மாறா எதுவும் நடக்காது” என்று மிகவும் கனிவாக பேசினான்.

‘இவன் அண்ணனாக ஒழுங்கா இருந்தா எனக்கு எதுக்கு இந்த நிலை வரப்போகுது’ என்று நினைத்துக் கொண்டது அவளின் மனது.

“வதனா, இப்ப வீட்லையா இருக்க?” என்று விஜய் கேட்க.

“எனக்கு உன்கூட பேச கொஞ்சமும் இஷ்டம் இல்ல” என்று சொல்லி இணைப்பை அணைத்துவிட்டு கதறி அழ ஆரம்பித்தாள்.

அவள் மனது யாரையும் நம்பத் தயாராக இல்லை. சிறிது நேரத்திற்கு பின் ஷவரில் சென்று நின்றவள், ‘என்னோட நம்பர் எப்படி விஜய் அண்ணாக்கு கிடைச்சது. அஜய் அண்ணா மாதிரி இவனும் ஏதாவது ப்ளான் போடுறானோ!’ என்று நினைத்துக் குழம்ப ஆரம்பித்தாள்.

குறளரசனிடம் ஏமாந்தவள், வீட்டிற்கு செல்லவில்லை. அவள் ஏற்கனவே பேங்கில் எடுத்து வைத்திருந்த பணத்துடன் மும்பை வந்திறங்கினாள். பின் அங்கையே தனக்கென்று ஒரு வேலையையும் தேடிக்கொண்டாள். கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதினால், வேலை அவளுக்கு சுலபமாக கிடைத்துவிட்டது. சம்பளம் என்னவோ குறைவு தான். ஆனால் அதுவே வீட்டிற்கு வாடகை கொடுக்கவும், அவள் போக்குவரத்து செலவிற்கும் சரியாக இருந்தது.

அவள் வேலை செய்யும் நிறுவனமே மதிய உணவு கொடுத்துவிடும், மற்றவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உண்பதாலோ என்னவோ, மதிய உணவை, தன் உணர்வுகளை அடக்கியபடி உண்பவள், இரவு சாப்பிடவும் மறந்து போய், கண்ணீருடன் தான் அவள் இரவு செல்லும், காலையில் அரக்கப்பறக்க, ஒரு துண்டு பிரட்டை விழுங்கிவிட்டு, வேலைக்கு மின்சார ரயிலில் ஓடிவிடுவாள்.

அதே போல் தான் மறுநாளும் கிளம்பி, தன் நிறுவனத்திருக்கு உள்ளே செல்லப்போனவளை, “வதனா...” என்று கூப்பிட்டான் விஜய்.

அவனைப் பார்த்து அதிர்ந்தவள், “நீயா?” என்றாள் அதிர்வுடன்.

அவள் அருகே ஓடி வந்தவன், “பக்கத்துல இருக்குற காபி ஷாப் போய் பேசலாம்” என்று அவளைக் கையோடு அழைத்துச் சென்றான் விஜய்.

தன் முன்னே இருந்த கோப்பையில் இருந்த காபியை வெறுமனே வேடிக்கைப் பார்த்தவள், விஜயைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

அதில் உண்மையிலையே அவன் மனது காயப்பட்டு தான் போனது.

“வதனா...” என்று அவன் அவளை அழைக்க, இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், ”என்ன விஷயம்னு சொல்லிட்டு வேகமா கிளம்பு. எனக்கு வேலைக்கு நேரமாச்சி” என்று முகத்தில் அடித்தபடி கூறினாள்.

தன்னுடைய செய்கைகள் மட்டும் தான் தன்னுடன் பிறந்தவளை இவ்வாறு பேச வைத்தது என்பதை காலம்கடந்து உணர்ந்தவன், “நீ வீட்டை விட்டு வெளிய போனது தப்பு வதனா” என்றான்.

அதற்கு அவனை நக்கலாக பார்த்தவன், “ஆமாம் உங்களைப் பொறுத்தவரை நான் போனது தப்பு தான். இருந்திருந்தா உங்களுக்கு எல்லாம் வேலைக்காரி செலவு மிச்சம் ஆகி இருக்கும் இல்லையா?” என்றாள் நக்கல் புன்னகையுடன்.

“நான் உன்னை என்னைக்கும் அப்படி நினைச்சது இல்ல வதனா. கொஞ்சம் இல்ல ரொம்பவே சுயநலவாதியா இருந்துட்டேன். நீ போனதும் என்னென்னவோ வீட்ல நடந்துருச்சி. நீ திரும்பவும் வீட்டுக்கு வரணும் வதனா” என்று மிகவும் தாழ்மையுடன் பேசினான் விஜய்.

அதில் பட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்த வதனா, “நீ உண்மையிலையே என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சா, நான் இருக்குற இடத்தை உன் அண்ணாக்கும், அண்ணிக்கும் தெரியாம பார்த்துக்கோ. இதுக்கு மேல உன்னோட பேச எனக்கு இஷ்டம் இல்ல” என்று சொல்லிவிட்டு செல்லபோனவள், விஜயின் வார்த்தையில் அப்படியே பேச மறந்து நின்றாள்.

“எனக்கும் மகாக்கும் டைவர்ஸ் ஆகப்போகுது” என்று அவன் சொல்ல, அதில் அதிர்ந்தவள் தன்னை மறந்து, “என்ன சொல்ற நீ. அவங்களை லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று கேட்டாள்.

அதற்கு, “ஆமாம்” என்று தன் தலையை ஆட்டியவன், “ஆனா அவளோட எண்ணம் எல்லாம் எனக்கு இப்ப தான் புரிஞ்சது. எங்களுக்குள்ள எதுவும் சரிப்படல. அதான் நான் அவளுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் கொடுத்துட்டேன்” என்றதும், எங்கிருந்து தான் வதனாவிற்கு அவ்வளவு கோபம் வந்ததோ, தன் மனதில் தேக்கி வைத்திருந்த அனைத்து கோபத்தையும் அதாவது குறளரசன் மேல் இருந்த கோபத்தையும் சேர்த்தே, விஜய்யின் தலையில் இறக்கினாள்.

“உங்களுக்கு எல்லாம் பெண்கள்னா அவ்வளவு இளக்காரமா போச்சில. நீங்க லவ் பண்ணா பண்றதுக்கும், உங்களுக்குப் பிடிக்கலைன்னா குப்பையை வீசுற மாதிரி தூக்கி போடுறதுக்கும், நாங்க அவ்வளவு சுலபமா ஆகிட்டோம் இல்லையா?” என்று அவள் வார்த்தைகளைக் கடித்து துப்ப ஆரம்பித்தாள்.

‘இப்படி எல்லாம் பேசுவது தன் தங்கை தானா!’ என்று ஆச்சரியமாக இருந்தது விஜய்க்கு.

“எதுவுமே தெரியாம என் மேல தப்புன்னு எப்படி சொல்ற வதனா” என்று அவன் கேட்க.

“மகா அண்ணி நல்லவங்க தான். எனக்குத் தெரிஞ்சி அவங்க உன் மேல ரொம்ப காதல் வச்சிருந்தாங்க” என்று அவள் சொல்ல.

“ஆனா, நீ வீட்டை விட்டு வெளிய போறதுக்கு அவளும் ஒரு காரணம் தான் வதனா” என்றதும், மெல்லியதாக சிரித்துக் கொண்டவள், “சொந்த அண்ணனே அப்படி இருக்கும் போது, நேத்து வந்தவங்க மேல பழி சொல்றது நல்லா இல்லை அண்ணா” என்றாள்.

அவர்கள் உரையாடலில் இப்போது தான், ‘அண்ணா’ என்ற வார்த்தையே அவள் வாயில் இருந்து வருகிறது. அதை நினைத்து மனதால் மகிழ்ந்த விஜய், “நீ வீட்டுக்கு வந்துரு வதனா” என்றான்.

ஆனால் அவள் அதைக்கண்டுகொள்ளாமல், “நீ மகா அண்ணிக்கிட்ட போய் பேசு. உங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும், அதை வேகமா சரி பண்ணுங்க” என்று அவனுக்கு அறிவுரை கூறினாள்.

“நீ என்னுடன் வந்தா, நான் மகாகிட்ட பேசுறேன்” என்று அவன் சொல்ல, அவன் முன்னே வந்து திரும்பவும் அமர்ந்தவள், “நான் நல்லா இருக்கணும்னு நினைச்சா, தயவு செஞ்சி இங்க இருந்து போ அண்ணா” என்று அவள் மன்றாட.

“நீ இல்லாம நான் எங்கையும் போறதா இல்ல வதனா” என்று தன் குரலில் உறுதியாக இருந்தவனைப் பார்த்து, “நான் உன்னோட தங்கச்சின்னு உனக்கு இப்ப தான் தெரிஞ்சதா?. இதுக்கு முன்ன நான் கஷ்டப்படும் போது தெரியலையா?” என்று அவள் குரலை உயர்த்த, அவனும், “ஆமாம். உண்மை தெரியுற வரை எனக்கு நீ யாரோவாத் தான் இருந்த” என்று உண்மையை உளறினான்.




























 

NNO7

Moderator
அத்தியாயம் – 9

அவன் பேச்சில் சிலையாகி பின் மெதுவாக, “நீ என்ன சொன்ன?” என்றாள் குரலில் நடுக்கத்துடன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல வதனா. நான் உன்னை யாரோ போல பார்த்தது தப்புன்னு எனக்கு மகாவின் செய்கை தான் உணர்த்துச்சி. நீ என்னோட வந்துரு. அதைத் தான் சொல்ல வந்தேன்”என்று மிகவும் லாவகமாக, அவளின் திசையை திருப்ப முயற்சி செய்தான்.

அவன் நினைத்தது போலவே அது வேலையும் செய்ய, “முதல்ல உங்களுக்குள்ள என்ன பிரச்சனை அண்ணா? அதுவும் என்னை வச்சி” என்று அவள் கேட்க.

“அது எதுக்கு இப்போ. நீ என்னோட வந்தா, அந்த சண்டை முடிவுக்கு வரும்” என்றான் பிடிவாதமாக.

“நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று அவள் கேட்க, “எனக்கு தெரிஞ்ச நம்பகமான ஆட்களை வச்சி கண்டுபிக்க சொன்னேன்” என்று சொல்லிக்கொண்டே அவளின் கையைப் பற்றியவன், “என்னை நம்பி என்கூட நம்ம வீட்டுக்கு வா. உனக்கு பாதுக்காப்பா எப்போதும் உன்கூடவே இருப்பேன்” என்று நம்பிக்கை அளித்தான்.

அதற்கு மென்மையாக சிரித்தவள், “அந்த காலம் எல்லாம் எப்பவோ கடந்து போயிடுச்சி அண்ணா. நீ எனக்காக எவ்வளவு பேசுறது எனக்கு சந்தோசம் தான். ஆனா நான் இப்ப இருக்குற மனநிலையில் யாரை நம்பியும் நான் இல்ல. எனக்கு யாரும் வேண்டாம்னு தான் இந்த இடத்தில் வந்து இருக்கேன். எனக்கு குடும்பமும் வேண்டாம். பந்த பாசமும் வேண்டாம். இருக்குற வரைக்கும் நான் இப்படியே இருந்துட்டு போறேன்” என்றாள் பற்றற்ற குரலில்.

“ம்ச்... என்ன பேசுற நீ. உன் பேச்சு எல்லாம் நூறு வயசு கிழவி மாதிரி இருக்கு. நான் பண்ணது மிகப்பெரிய தப்பு தான். அந்த தப்பை திருத்துறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பை நீ தரணும்” என்று கெஞ்சினான் விஜய்.

“இவ்வளவு நாள் இல்லாம, இப்ப என்ன அண்ணா புதுசா” என்றாள் மெதுவாக.

“சில விஷயங்கள் எல்லாம் தப்புன்னு எனக்கு இப்ப தான் புரியுது வதனா. மகா அவளோட தங்கைக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் போது, நான் என் தங்கைக்கு எதுவும் செய்யலைன்னு, என் நெஞ்சம் எல்லாம் அழுத்துது” என்றான் உண்மையான குரலில்.

“அதனால் தான் உனக்கும் அண்ணிக்கும் சண்டையா?” என்று கேட்டாள்.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டியவன், “அவளோட தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க. அதில் ஒவ்வொன்னையும் மகா பார்த்து பார்த்து செய்றப்ப தான், எனக்கு எல்லாம் புரிஞ்சது. உனக்கே தெரியும் வீட்டில் நான் இருந்த நேரத்தை விட, ஹாஸ்டல்ல நான் இருந்த நேரம் தான் அதிகம். அதுக்கப்பறம் வேலைக்குப் போகும் போது தான் மகாவை லவ் பண்ணேன். என்ன மாதிரியே அவளும், அவள் குடும்பத்துடன் ஒட்டுதல் இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். அப்படித் தான் அவளும் இருந்தா. அவள் குடும்பத்தை விட்டு எனக்காக வந்தா. ஆனா கொஞ்ச நாளில் அவள் அப்பா அம்மா கூட பேச ஆரம்பிச்சா... அதன் பிறகு தான் எங்களுக்குள்ள சண்டை வந்துச்சு” என்றான்.

சில பல விஷயங்களை வதனாவின் நலன் கருதி அவன் மறைத்திருந்தாலும், அவனுக்கும் அவன் மனைவிக்கும் நடந்த கருத்து வேறுபாட்டை உணமையாகவே கூறினான்.

அவனது பேச்சில் அவள் மனம் இளகினாலும், அவளின் நினைப்பு எல்லாம், ‘இப்படித் தான் ஒருத்தன் வந்தான். ரெண்டு நாளும் திகட்டத் திகட்ட அன்பை கொடுத்துட்டு, மொத்தமா என் இதயத்தை சுக்குநூறா உடச்சிட்டு போயிட்டான். இப்ப அதே வசனத்தை பேசிட்டு, என் சொந்த அண்ணனே வந்துருக்கான். நான் நல்லா ஏமாருவேன்னு என்னைத் தவிர எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

“நீ சொல்றது எல்லாம் நிஜமாவே இருக்காட்டும். உனக்கு உண்மையாவே என் மேல அன்பு இருந்தாலும், நான் அங்க வர்றதா இல்ல” என்று முற்றிலுமாக மறுப்பு கூறினாள்

“ஏன் வதனா, அஜய் உன் கல்யாணத்தைப் பத்தி பேசுவான்னு பயமா. அப்படி இருந்தா அதைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம். நம்ம ஊரில் இருக்கும் பெரிய மனிதர்கள் எல்லாம் இப்படி ஒரு அநியாயம் உனக்கு நடக்கப்போறத தெரிஞ்சி, அண்ணனை சத்தம் போட்டுட்டுத் தான் போய் இருக்காங்க. அண்ணனோ, அண்ணியோ ரெண்டு பேரும் உன்னை எதுவும் செய்ய முடியாது” என்றான் உறுதியளிக்கும் குரலில்.

அதனைக் கேட்டவள், “அப்படியா? உன்னை நம்பி எப்படி நான் வர்றது?. நீயும் இதில் கூட்டு தானே!. என்னை வரவச்சி, அந்த அரைக்கிழவன் மாரிக்கு கல்யாணம் பண்ணி வைக்கத் தான் இப்படி நாடகம் ஆடுறியா?” என்று சூடாக கேட்டாள்.

பெருமூச்சி ஒன்றை விட்ட விஜய், “இதுக்கும் மேல, உன்னை எப்படி நம்ப வைக்குறதுன்னு எனக்கு சத்தியமா தெரியல வதனா. ஆனா இதில் உன் தப்பும் எதுவும் கிடையாது. ஏன்னா நான் நடந்து கொண்டது அப்படி. கண் கெட்டப் பிறகு தான் சூரிய நாமஸ்காரம் மாதிரி, எனக்கு தாமதமாகத் தான் எல்லாமே புரிய வருது. உனக்கு வர விருப்பம் இல்லைன்னா, நீ இங்கவே இரு. ஆனா, இப்ப நீ இருக்குற இடம் வேண்டாம். உனக்குன்னு நான் சொந்தமா பிளாட் பார்த்து வச்சிருக்கேன். அங்க பாதுகாப்பும் அதிகம். நல்ல வசதியும் கூட” என்றான்.

“நான் எங்கையும் போறதா இல்ல. உன் தப்பை எல்லாம் என்னை மன்னிக்க சொல்லிக் கேட்டல்ல. மன்னிச்சுட்டேன் போதுமா. இப்ப என்னை நிம்மதியா இருக்க விடு” என்றாள்.

“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குற வதனா. நம்ம குடும்பம் என்ன, பாரம்பரியம் என்ன? நீ இப்படி ஒரு இடத்தில் இருக்குறது தெரிஞ்சா, உன் உயிருக்குக் கூட ஆபத்தா முடியலாம்” என்றான்.

“அது என்னோட கவலை. அதை நான் பார்த்துக்குறேன்”

“ஆனா என்னால உன்னை அப்படியே விட முடியாது வதனா. குயின்ஸ் நகைமாளிகையில் எனக்கும் அஜய்க்கும், எவ்வளவு பங்கு இருக்குதோ, அதைவிட அதிகமா உனக்கு இருக்கு. அதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட அஜய்யும் அமலா அண்ணியும், உன்னை மாரிக்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணி இருக்காங்க. நீ இங்க இருக்குறது சேப் இல்ல” என்றான்.

“ஓ... எனக்கு அதிகமா ஷேர்ஸ் இருப்பதை தெரிஞ்சிக்கிட்டு தான் நீ இங்க வந்துருக்க இல்லையா?” என்று அவள் அவனைத் தவறாக கணிக்க, அதில் நொந்து தான் போனான் விஜய்.

“சத்தியமா முடியல வதனா... அப்படியே அப்பா மாதிரியே பேசுற. உன்னோட ஷேர்ஸ் எனக்கு தேவை இல்ல. அப்பா எனக்கும் என் தேவைக்கு அதிகமாவே ஷேர்ஸ் கொடுத்துருக்காரு. நான் கேட்குறது என் தங்கச்சியும் அவளோட பாசம் மட்டும் தான். உனக்கு பிடிச்ச வேலையை நீ பாரு. ஆனா நீ இப்ப தங்கி இருக்கும் இடம் உனக்கு வேண்டாம். நீ எப்ப விரும்புறியோ அப்ப நீ வீட்டுக்கு வா. நீ எப்போ வந்தாலும் குயின்ஸ் நகைமாளிகை உன்னை வரவேற்க தயாரா இருக்கும். நீ தான் அதோட சிஇஓ” என்று சொல்லி நிறுத்தினான்.

அவள் அப்போதும் அமைதியாக இருக்க, “நம்பிக்கை இல்லாத இடத்துக்கு நீ வர வேண்டாம். ஆனா நான் சொல்றதைக் கேளு. உன் கம்பெனி பக்கத்திலையே ஒரு பிளாட் இருக்கு. அது ரொம்ப சேப். ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு, நீ நம்ம வீட்டுக்கு வர்றத இருந்தா எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. கொஞ்சம் டைம் எடுத்துக்கோ. நல்லா யோசிச்சுப் பாரு. நான் நாளைக்கு இதே நேரத்துக்கு, உனக்காக இங்க காத்துக்கிட்டு இருப்பேன்” என்று கூறி விடைபெற்றான்.

இங்கே நேராக தான் வேலை செய்யும் இடத்திற்கு வந்தவளின் மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

அடுத்ததடுத்து பாசத்தால் வீழ்ந்ததால், விஜய் பேசியதில் அவள் உருகிவிடவில்லை. பாசத்தை அவள் மனது வேண்டவும் இல்லை. வேண்டிய பாசம் அனைத்தும் வற்றிய நீராகி, அங்கே பாலைவனமே காட்சியளித்தது.

அவள் இதயம் இறுகிப் போய் அங்கே எந்த ஒரு மனிதனும் தங்குவதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

பின் வேலை முடித்து வீட்டிற்கு வந்தவள், விஜய் கூறியதை எல்லாம் யோசனை செய்து பார்த்தாள்.

‘எனக்கு எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டு தான், நான் வெளிய போக நினைச்சேன். ஆனா என்னைப் போக விடாம என் மார்க் ஸ்டேட்மெண்ட் எல்லாத்தையும் எரிச்சி, என் வாழ்க்கையவே வீணாக்க நினைச்சாங்க அமலா அண்ணி. அவங்களுக்கும் என் அப்பா சொத்துக்கும் என்ன சம்பந்தம்?. இதில் உரிமைப் பட்டவள் நான். எனக்கு முழு உரிமை நகைமாளிகையில் இருக்கு. அப்படி இருக்க, நான் எதுக்காக இங்க கஷ்டப்படணும். பேசாம வீட்டுக்குப் போவோமா!’ என்று ஒரு புறம் நினைத்தாள்.

ஆனால் அவளின் இன்னொரு மனமோ, ‘அந்த நரகத்திற்குள் திரும்பவும் சென்று விடாதே’ என்று அலறியது.

இரண்டு மனதிற்கு நடுவே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தவள் இறுதியாக முடிவெடுத்தாள், “நான் அங்க போறதுனால என்ன ஆகிவிடப்போகுது. என்ன இருந்தாலும் எனக்கும் அதில் உரிமை இருக்கு. நான் ஒன்னும் அனாதை இல்லையே” என்று வாய்விட்டு பேசியவள். அங்கே செல்வதென்று முடிவெடுத்தாள்.

மறுநாள் முன்பு சொன்னது போலவே, விஜய் அவளுக்காக அதே காபி ஷாப்பில் காத்துக்கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும், “வா வதனா. நான் சொல்றது உனக்கு ஓகே தானே!” என்க.

“இல்லை அண்ணா. அது சரியா வராதுன்னு நினைக்குறேன்” என்றாள் வெறுமனே.

அதில் முகம் சுருங்கியவன், “நான் உன் பாதுகாப்புக்கு...” என்று ஏதோ சொல்ல வருவதற்குள், குறுக்கிட்டவளாக, “நான் இன்னும் சொல்லி முடிக்கல அண்ணா. நான் நம்ம வீட்டுக்கு வர்றதா முடிவு பண்ணிருக்கேன்” என்று சொன்னதும் தான் தாமதம், விஜயின் சோர்ந்த முகம் மகிழ்ச்சியை தத்தெடுத்துக் கொண்டது.

“நீ நிஜமாத் தான் சொல்றியா? இல்ல என் காதில் தான் தப்பா கேட்டதா?” என்று திரும்பவும் அவளிடம் கேட்டு உறுதி படுத்திக்கொண்டவன், “நீ என்னோட வர சம்மதிப்பன்னு நான் நினைச்சு கூட பார்க்கல வதனா” என்றான் ஆனந்தமாக. அதில் அவன் கண்களில் இருந்து சிறிது கண்ணீரே கசிந்து விட்டது.

ஆனால் அவனின் மகிழ்ச்சி அவன் தங்கையிடம் இல்லை. மாறாக அவள், “உன்னோட மனசை உடைக்குறதுக்கு என்னை மன்னிச்சிரு அண்ணா. ஆனா உன் மீது எனக்கு துளியும் பாசம் இல்ல. நான் இப்ப அங்க வர்றது கூட என் வாழ்க்கையை அழிக்க நினைச்சவங்களை பழி வாங்குறதுக்குத் தான்” என்று பெண் சிங்கமாய் கர்ஜனை செய்தாள்.










 

NNO7

Moderator
அத்தியாயம் – 10

வதனாவின் பேச்சில் விஜயின் மனது காயம் கொண்டாலும், “உனக்கு என் மீது பாசம் இல்லாமல் இருக்கலாம், ஆனா எனக்கு உன் மீது பாசம் இருக்கு வதனா. உன் வெளி பேச்சு எல்லாம் என் மீது உனக்கு இருக்கும் கோபத்தை தான் காட்டுதே தவிர வெறுப்பைக் காட்டல. ஆனா அமலா அண்ணி உனக்கு செஞ்சது மிகப்பெரிய துரோகம் தான். அதை நான் என்னைக்குமே மன்னிக்க மாட்டேன்” முதலில் கனிவாக ஆரம்பித்து கோபமாக முடித்தான் விஜய்.

அவனது பேச்சில், “என்ன சொல்ற? அண்ணி என்ன பண்ணாங்கன்னு உனக்கு தெரியுமா?” என்றாள்.

“ம்... உன் சர்ட்டிபிகேட்டை எரிச்சிட்டதா அஜய்யே என்கிட்ட வந்து சொன்னான். நான் அப்போதே அவனை நல்லா திட்டிவிட்டுட்டேன். சீப்பை ஒளிச்சி வச்சிட்டா, கல்யாணமே நின்னு போயிருமுன்னு அந்த கிறுக்கன் நினைச்சிட்டான் போல. என்னதான் சர்டிபிகேட் இப்ப திரும்ப கைக்கு வந்தாலும், அவங்க எரிச்சது எல்லாம் மன்னிக்கவே முடியாது. அமலா அண்ணிக்கு கண்டிப்பா மனநலம் பாதிக்கப்பட்டு தான் இருக்கு”

“ம்ச்... அவங்களைப் பத்தி நன் பேச விரும்பல. இனி நீயும் என்கிட்ட அவங்களைப் பத்தி பேசாத. மகா அண்ணியை கூட்டிட்டு நாம நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றாள் அவள் இறுதியாக.

“அதெல்லாம் வேண்டாம். அவள் ஒரு வாரம் அவங்க அம்மா வீட்ல இருக்கட்டும். அவளை மெதுவா போய் கூப்பிடலாம். நீ இப்ப வா நாம போகலாம். உன் லக்கேஜ் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா?” என்றான் கேள்வியாக.

“ம்.. வச்சிட்டேன். ஆனா நான் என் கம்பெனியில் எதுவும் சொல்லல” என்றாள். அவள் அறியாமலையே சாதாரண அண்ணன் தங்கை போல் இருவரும் பேசிக்கொண்டனர்.

வேலை இடத்தில் தான் சிறிது பிரச்சனை இருந்தது. திடீரென்று வேலையை விட்டு நின்றதால், இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று நிறுவனம் சொல்ல, விஜய் தான் அந்த பணத்தைக் கட்டிவிட்டு, வதனாவை அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி பயணமானான்.

இங்கே வதனாவின் முதல் அண்ணன் அஜய் தன் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் முன்னே வந்து அமர்ந்த அமலா, திரும்பவும் தன் விஷத்தை விதைக்க ஆரம்பித்தாள்.

“இப்ப எதுக்காக இப்படி உட்காந்திருக்கீங்க?. இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. ஓடிப்போன அந்தக்கழுதைய, எங்க இருந்தாலும் தேடி இழுத்துட்டு வாங்க. நாம நினைச்சதை சாதிச்சிடலாம்” என்றாள் வன்மம் நிறைந்த குரலில்.

“இதுக்கும் மேல எப்படி உன்னால இப்படி பேச முடியுது. உன் பேச்சைக் கேட்டு நான் நடந்ததால் தான் இப்படி ஒரு நிலைமையில் வந்து நிற்குறேன்” என்றான் நொடித்தபடி.

“இப்ப என்ன ஆகிப்போச்சு?. ஊரில் இருக்கும் ரெண்டு மூணு பெருசுங்க வந்து பேசிட்டு போனதெல்லாம் நினைச்சு இப்படி பயந்துக்கிட்டு இருக்கீங்க” என்றாள் சாதாரணமாக.

“இப்ப எதுக்கு இங்க வந்த? வீட்ல உன் இம்சை தாங்க முடியாம தான் கடைக்கு வந்தேன். இங்க வந்தும் என் நிம்மதிய கெடுக்க வந்துட்டியா?” என்று அவள் மேல் எரிந்து விழுந்தான்.

குயீன்ஸ் நகைமாளிகையில் இருக்கும் அவனது அறையில் தான் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

“என்னங்க இப்படி பேசுறீங்க?. நான் நமக்காக மட்டும் தானே பேசிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு நமக்குப் பிறக்கப் போற குழந்தைக்கும் சேர்த்தே தான் பேசுறேன்” என்று அவள் சொல்ல, “மண்ணாங்கட்டி... ஒரு குழந்தை பெத்து கொடுக்க துப்பு இல்ல. இதில் என்னை குத்தம் சொல்ல வந்துட்டியா?” என்று முதல்முறையாக அமலாவை மிகவும் தாக்கி பேசினான்.

அதில் அதிர்ந்தவள், “என்ன வார்த்தை சொல்லிட்டீங்க” என்று தன் நெஞ்சை பிடித்தவள், அதிக குரல் எடுத்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

“நான் என்ன பண்ணுவேன்.... என் வீட்டுக்காரரே இப்படி பண்ணிட்டாரே...” என்று அவள் கத்த, “அடச்சீ... வாயை மூடு. வேலை நடக்கும் இடத்தில் வந்துட்டு என்ன பண்ற?” என்று வார்த்தைகளைக் கடித்து துப்ப.

அதில் இன்னும் அவள் அதிகமாக கத்த ஆரம்பித்தாள், “நீங்க பேசுறதை எல்லாம் கேட்டுட்டு, இதுக்கு மேலையும் நான் உயிரோடு இருக்கணுமா?” என்று அழுதாள்.

அதில் அஜய்க்கு தலைவலி உண்டாக, தன் நெற்றியை அழுத்தமாக நீவி விட்டவன், “வசதி இல்லாத பொண்ணா இருந்தா, என்னை நல்லாப் பாத்துப்பான்னு நினைச்சது என்னோட தப்பு தான். சாவுகிராக்கி சாவடிக்குறா” என்று வார்த்தைகளை தனக்குள் முணங்கிக்கொண்டவன், “நீ முதல்ல வீட்டுக்குப் போ அமலா. எதுனாலும் வீட்டில் போய் பேசிக்கலாம்” என்று சொல்ல, அதன் பிறகு சிறிது சமாதானம் அடைந்த அமலா, “வீட்டுக்கு வேகமா வந்துருங்க” என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்றதும் இருக்கையில் தளர்வாக சாய்ந்து அமர்ந்தவன், “சரியான பஜாரியா இருப்பா போல. இவளைப் போய் ஏன்டா கட்டிக்கிட்டேன்னு இருக்கு” என்று வாய்விட்டு சொன்னவன், திரும்பவும் தனது தலையை பிடித்துக் கொண்டான்.

அப்போது கதவைத் தட்டிவிட்டி அங்கே நுழைந்தாள் பிரபல மாடலும், சினிமா நடிகையுமான சுஜி.

“அஜய்...” என்று அவனது பெயரை மயக்கும் குரலில் இழுத்துக்கொண்டே, அவன் அருகே வர, அவளைப் பார்த்ததும் அதுவரை இருந்த அஜய்யின் துயரங்கள் எல்லாம் பறந்தோடிப் போக, இருக்கையில் இருந்து பட்டென்று எழுந்தவன், பாய்ந்து சென்று சுஜியை அணைத்துக் கொண்டு, அவள் முகம் முழுவதும் முத்த மழைப் பொழிந்தான்.

“உன்னோட ஷூட்டிங்லாம் எப்படி போச்சி புஜ்ஜிக்குட்டி” என்று அவளைப் பார்த்து கேட்க.

“அதெல்லாம் நல்லாத் தான் போச்சு மாமாக்குட்டி” என்று அவளும் பல்லை இளித்தாள்,”ஏன்டா என் செல்லம் இப்படி இளச்சி போயிடுச்சி” என்று அவன் அவளை இறுக்கமாக கட்டிக்கொள்ள, அவளோ, “இந்த மாமாக்குட்டிய பார்க்காம தான் இந்த புஜ்ஜிக்குட்டி இளச்சி போயிடுச்சி” என்றாள்.

இருவரும் மாறிமாறி கொஞ்சிக்கொண்டனர். பின் சுஜியை இருக்கையில் அமர வைத்தவன், “நீ ஏன் புஜ்ஜிக்குட்டி இவ்வளவு தூரம் அலையுற. எனக்கு ஒரு கால் பண்ணி இருந்தா நானே வந்துருப்பேனே” என்று வழிந்தான் அஜய்.

“நேர ஏர்போர்ட்ல இருந்து இங்க தான் வரேன் மாமாக்குட்டி. இந்த ஒரு மாசமும் உன்னைப் பார்க்காம எப்படி தான் இருந்தேன்னு தெரியல. நான் வரும் போது தான் உன் ஒய்ப் போனாங்க. அவங்க போறது வரைக்கும் காத்துக்கிட்டு இருந்தேன்” என்றாள் ஒட்ட வைத்த சிரிப்புடன்.

“ம்ச்... நல்ல மூட்ல இருக்கேன். இப்ப எதுக்காக அவளைப் பத்தி பேசுற” என்று சொல்லியபடி, அவளின் இதழ்களில் தன் இதழ்களைப் பொருத்தி அவளை மொத்தமாக சுவைக்க ஆரம்பித்தான்.

இரவு வெகு நேரம் கழித்து, அஜய் வீடு திரும்ப, அவனுக்காகவே வரவேற்ப்பு அறையில் காத்துக் கொண்டிருந்த, அமலா, “வந்துட்டீங்களா... சீக்கிரம் வரச் சொன்னேன்ல எதுக்காக இவ்வளவு நேரம் கடந்து வரீங்க” என்று கடிந்து கொண்டாள்.

அதுவரை அவனை விட்டு சென்ற மன அழுத்தம் திரும்பவும் அவனது இருப்பிடமான நெஞ்சில் சென்று குடியேறியது.

“நான் ரொம்ப சோர்வா இருக்கேன் அமலா. தயவு செஞ்சி எதுவும் பேசாத” என்றவன் தன் அறையை நோக்கி நடைபோட்டான்.

அவனை செல்லவிடாமல், அவன் கையைப் பிடித்து திருப்பியவள், “எங்க போறீங்க? இந்த சந்தர்ப்பத்தை விட்டா நமக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்காது. ரத்னாவும் நம்ம கையை விட்டு போயிட்டா. இருக்குற சொத்தையாவது காப்பாத்திக்கணும்” என்றாள் படபடவென்று.

இப்போது அவளைத் திரும்பி பார்த்து முறைத்தவன், “அதுக்கு இப்ப என்ன செய்யணும்னு சொல்ற?” என்றான்.

“ஏதாவது பண்ணி வதனாவின் ஷேர்ஸ் எல்லாத்தையும் நம்ம பெயருக்கு வர்ற மாதிரி மாத்திக்கலாம்” என்றாள் குறுக்கு வழியில்.

“அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. வதனாக்கு இருக்கும் ஷேர்ஸ் பத்தி விஜய்க்கும் தெரிஞ்சி போச்சி. நாம ஏதாவது செஞ்சா, விஜய்யே நமக்கு எதிரா நிற்பான்” என்றான் சரியாக கணித்தபடி.

“அதெல்லாம் உங்க தம்பி ஒன்னும் பண்ண மாட்டார். அவரே பொண்டாட்டி, அம்மா வீட்டுக்குப் போன சோகத்துல இருப்பாரு. அவருக்கு இது தான் வேலையா?. நாம செய்ய வேண்டியதை செய்வோம். அப்படி முடியலைன்னா, அந்த வதனாவ கண்டுபிடிச்சி கூட்டிட்டு வாங்க. அதுக்குப் பிறகு என்ன பண்ணலாம்னு நான் முடிவு பண்றேன்” என்று முகத்தை விகாரமாக வைத்துக் கொண்டு, திட்டம் தீட்டினாள்.

“அவளோட விருப்பம் இல்லாம அவளுக்கு கல்யாணம் பண்ண முடியாது” என்றான் அஜய்.

“அந்த மாரி தனக்கு வேண்டாம்னு தானே, இங்க இருந்து போனா. அவளுக்கு பிடிச்ச மாதிரி அழகான ஒருத்தனா, அதுவும் நாம சொல்றதைக் கேட்கும் ஒருத்தனா பார்த்தா வேண்டாம்னா சொல்லப்போறா...” என்று திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்தவளை, வெட்டவா, குத்தவா என்பது போல் பார்த்த அஜய், பொய் புன்னகையுடன், “அட அட... இது தான் நல்ல ஐடியா... சரி நீ ரூம்க்குப் போ... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.

அவளோ புரியாத பார்வையுடன், “இந்த ராத்திரி நேரத்துல என்ன வேலை” என்றாள்.

“வதனாவ கண்டுபிடிக்க சொன்னீல வேண்டாமா?” என்று கேட்க.

“கண்டுபிடிக்கணும் கண்டுபிடிக்கணும்...” என்று வேகமாக தன் தலையை ஆட்டியவள், “நீங்க போயிட்டு வாங்கங்க” என்று அவனை அனுப்பி வைத்தவள், ‘என் புருஷன் வெளிய எவ்வளவு பெரிய ஆளு. ஆனா அவரே என் கைக்குள்ள இருக்காரு. நான் சொல்றதை எல்லாம் அப்படியே கேட்குறாரு’ என்று மனதிற்குள் சிலாகித்துக்கொண்டாள்.

இங்கே தன் மகிழுந்தில் ஏறி அமர்ந்த அஜய், தன் அலைபேசியை எடுத்து, “ஹலோ புஜ்ஜிக்குட்டி, இதோ மாமாக்குட்டி வந்துக்கிட்டே இருக்கேன்டா” என்று கூறியபடி தன் அலைபேசியில் முத்தம் வைத்தான்.

விஜயும், வதனாவும் மும்பையில் இருந்து சென்னை விமானநிலையத்தில் வந்து தரையிறங்கினர். வெளியே வரும் போது, “கஷ்டமோ, மகிழ்ச்சியோ, துக்கமோ எப்பவுமே உன்னுடனே இருப்பேன் வதனா. இதில் உனக்கு என் மேல நம்பிக்கை வரவில்லைனாலும் அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல. ஒரு அண்ணனா உனக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் நான் செஞ்சிக்கிட்டே தான் இருப்பேன்” என்றான்.

நீ என்னவேண்டுமானாலும் பேசிக்கொள் என்பது போல், அவள் அமைதியாக நிர்மலான முகத்துடன் நிற்க, அவளின் காயங்களை மேலும் மேலும் ரணமாக்கும் நினைப்போடு விதி விளையாட ஆரம்பித்தது.

விஜய்யும், வதனாவும் ஒரு இடத்தில் நிற்க, “அண்ணா, வதனா...” என்ற குரலில் அவர்கள் திரும்பி பார்க்க, அங்கே மிகவும் மலர்ச்சியான புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள் ரத்னா.

‘இவள் என்ன இங்கே என்பது போல் இருவரும் பார்க்க, “என்ன அப்படி பார்க்குறீங்க ரெண்டு பேரும்” என்று அவள் பேசும் போதே அவள் அருகில் வந்து நின்றான் குறளரசன். அவனைப் பார்த்து அதிர்வுடன் வதனா நிற்க, ‘யாரிவன்’ என்பது போல் விஜய் அவனைப் பார்த்தான்.

அதனைப் புரிந்து கொண்ட ரத்னா, “இவர் தான் என் சின்ன வயசு தோழன் குறள். இவரைத் தான் நான் கல்யாணம் பண்ணப்போறேன் அண்ணா” என்று கூறி சிரித்தாள் ரத்னா.










 

NNO7

Moderator
அத்தியாயம் – 11

சென்னை விமானநிலையத்தில், வதனாவும், விஜய்யும் வந்து கொண்டிருக்க, ரத்னாவின் குரல் அவர்களைக் கலைத்தது.

தன் அருகில் இருந்த குறளரசனை விஜய்க்கும் வதனாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் ரத்னா.

“இவரைத் தான் நான் திருமணம் செய்யப் போறேன் அண்ணா” என்ற ரத்னாவின் வார்த்தைகள், கம்பியை பழுக்க காய்ச்சி வதனாவின் காதுகளில் விடுவது போல் இருந்தது.

அவளால் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை. அவன் முன்பு கூறிய, “சராங்கே சந்தரவதனா” என்ற இரண்டு வார்த்தைகளும் அவள் மூளையை வலிக்க செய்ய, கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வராமல் இருக்க, மாறி மாறி தன் கண்களை இறுக்கமாக இமைத்துக் கொண்டே இருந்தாள்.

தென்கொரிய ஆடவனின் தோற்றத்தில் இருந்த குரளரசனைப் பார்த்து அதிர்ந்த விஜய், “ஹேய் ரத்னா. இந்த சீனாக்காரனையா கல்யாணம் பண்ணப்போற?. இவனை எங்க இருந்து பிடிச்ச” என்றான் விளையாட்டாக.

“அண்ணா... நான் தான் சொன்னேனே இவர் என்னோட சின்ன வயசு நண்பர். இவரு அம்மா தென் கொரியாவை சேர்ந்தவங்க, அப்பா தமிழ்நாட்டை சேர்ந்தவரு. அதான் இவருக்கு குறளரசன்னு பெயர் வச்சிருக்காங்க. என்னோட அப்பா அம்மாவும் இவரு அப்பாவும் நெருங்கிய நண்பர்கள்” என்று உலகத்தையே ஜெயித்துவிட்டது போல் பேசிக் கொண்டிருந்தாள் ரத்னா.

அதுவரை உலகம் மறந்து அந்தகார உலகில் இருந்த வதனா, ரத்னாவின் மகிழ்ச்சி குரலில், தன்னை அறியாமல் வெற்றுப் புன்னகை ஒன்றை சிந்தினாள். அது அச்சுப்பிசங்காமல், குறளின் கண்களில் விழுந்தது.

‘ஓ... இது ரத்னா வதனா பெயரில் வந்த குழப்பமா!’ என்பது அப்போது தான் அவளுக்குப் புரிந்து, அவள் நெஞ்சை வலிக்க செய்தது.

அவனது பாவனைகள் எதுவும் வெளியே தெரியாதபடி, குளிர்கண்ணாடியை தன் கண்களில் அணிந்திருந்தவன், மிகவும் பகுமானமாக நின்றிருந்தான். முகமோ கல்லை விழுங்கிவிட்டதைப் போல இறுகிப் போய் இருந்தது.

ஒருவரை அறிமுகம் செய்யும் போது இருக்கும் சிறுதலையசைப்பு கூட அவனிடம் இல்லை. அதைக் கண்டுகொள்ளாத ரத்னா, “இவரு எங்க பெரியப்பா பையன் விஜய், இது அவங்க தங்கை சந்தரவதனா” என்று இருவரையும் குறளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அப்போதும் முன்பு போலவே நின்றிருந்தான்.

குறளை வினோத ஜந்தைப் போல் பார்த்த விஜய், மரியாதை நிமித்தமாக தாமே தன் கையை அவனை நோக்கி நீட்டியவன், “ஹலோ மிஸ்டர் குறளரசன். நான் விஜய்” என்று கூற.

பதிலுக்கு தன் கையைக் கொடுக்காமல், அவனை ஏற இறங்க பார்த்த குறள், தன் டையை சரி செய்துகொண்டபடி, ரத்னாவைப் பார்த்து, “எனக்கு நேரம் ஆகிடுச்சு ஜாகியா. நான் போறேன் நீ சீக்கரம் வா” என்று சொல்லிவிட்டு சென்றான்.

விஜய்யோ எரிச்சலுடன் தன் கையை கீழே இறக்கினான். வதனாவோ, அவன் சொன்ன, ஜாகியா என்ற சொல்லில் மொத்தமாக உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.

‘இதே வாய் தானே என்னை ஜாகியான்னு சொல்லுச்சு’ என்று மனதிற்குள் புழுங்க, அவளின் இன்னொரு மனதோ, ‘தப்பா சொல்லாதே! அவனோட ஜாகியா நீ இல்ல. அவனோட ஜாகியாவா, உன்னை தப்பா நினைச்சுக்கிட்டான்’ என்று உண்மையை எடுத்துக் கூறியது.

குறளரசன் செல்வதைப் பார்த்த ரத்னா, “சாரி அண்ணா. அவருக்கு அவசர வேலை. இப்ப தான் கொரியாவில் இருந்து வந்தாரு. அவரைக் கூப்பிட தான் நான் ஏர்போர்ட் வந்தேன். நான் வரேன்” என்று அவசரமாக சொல்லிவிட்டு சென்றாள்.

“சரியான திமிர் பிடிச்சவனா இருக்கான். இப்பெல்லாம் இந்த மாதிரி ஆட்களைத் தான் பெண்களுக்குப் பிடிக்குது” என்று விஜய் ஓடும் ரத்னாவைப் பார்த்து சொன்னபடி, வதனாவை நோக்க, அவளின் கண்களோ ரத்த சிவப்பில் இருந்தது.

அப்பவோ இப்பவோ என்று வழியும் நிலையில் காத்துக்கொண்டிருந்த அவளது கண்ணீர் இப்போது தான் அவளது கன்னத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

அதனைப் பார்த்து பதறிய விஜய், “வதனா... என்னாச்சி உனக்கு? ஏன் இப்படி இருக்க?” என்று அவன் கேட்க.

“ஒன்னும் இல்ல” என்று கூறியபடி தன் கண்களை வேகமாக கசக்கத் தொடங்கினாள். அவள் செய்கையில் அதிர்ச்சி அடைந்த விஜய், வேகமாக அவளது கையைப் பிடித்துக் கொண்டு ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தவன், தன் கார் ஓட்டுனரிடம் இருந்து சாவியை வாங்கி, “நீங்க போங்க அண்ணா. நான் பார்த்துப்பேன்’ என்றவன், வதனவை காரில் அமரவைத்து, இன்னொரு பக்கம் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டவன், “என்னாச்சி? எதுக்காக அழற?” என்றான் கண்டிப்பான குரலில். தன் தங்கையின் அழுகைக்கு காரணமானவர்களை அடித்து துவம்சம் செய்யும் வேகம் அவனது பேச்சில் இருந்தது.

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட வதனா, “அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா. என் கண்ணுல ஏதோ விழுந்துருச்சு. இப்ப சரியாகிப் போச்சு” என்றாள்.

அதை நம்ப மறுத்த விஜய், “என்கிட்ட பொய் சொல்லாத வதனா. ரத்னாவைப் பார்த்ததும் தான் உனக்கு இப்படி ஆச்சு. அவள் உன்னை ஏதாவது சொன்னாளா?” என்றான்.

“இல்ல இல்ல... நிஜமாவே ஒன்னும் இல்ல...” என்றாள் பதற்றம் கொண்டு. அதில் விஜய் தன்னைக் கண்டுகொள்வானோ என்ற பயமும் சேர்ந்தே இருந்தது.

அவளை நம்ம மறுத்த விஜய், அவள் கையைப் பிடித்து, “இனி எதுக்காகவும், யாருக்காகவும் நீ பயப்படக்கூடாது சரியா. உன்கூட எப்போதும் நான் இருப்பேன்” என்றான் உறுதியாக.

அதற்கு வெறுமனே சிரித்துக் கொண்ட வதனா, ‘நான் பண்ண வேலை உனக்கு தெரிஞ்சா, இப்படி எல்லாம் என்கிட்ட பேசமாட்ட. முன்னவிட என்னை அதிகமா வெறுப்ப’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

விஜய்யோ தன் மனதினுள், ‘இந்த ரத்னா, வதனாவை ஏதோ பண்ணி இருக்கா. அதான் அவளைப் பார்த்ததும் வதனா இப்படி ஆகிட்டா. இனி இந்த ரத்னாவையும், வதனாக்கிட்ட வராம பார்த்துக்கணும்’ என்று வதனாவின் அழுகைக்கு ரத்னா தான் காரணம் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

காலையில் விடிந்தது கூட தெரியாமல் மதியம் பன்னிரெண்டு மணியைக் கடந்து, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த அமலா, “அச்சோ இவ்வளவு நேரம் ஆகிடுச்சா... வயிறு வேற பசிக்குதே!” என்று சொல்லியபடி, குளிக்காமல் கீழே இறங்கி வந்தாள்.

வரவேற்பு அறையைக் கடந்து சமையல் அறைக்கு அவள் செல்லும்போது, அங்கே வதனா அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டாள்.

தன் கண்களை நன்றாக கசக்கிவிட்டு திரும்பவும் பார்த்த அமலா, வந்திருப்பது வதனா தான் என்று தெரிந்த பிறகு, ‘வாவ்... என் புருஷன் தான் பெஸ்ட். நான் சொன்னதும் ராத்திரியோட ராத்திரியா, தேடி கண்டுபிடுச்சி அந்தக் கழுதையை கூட்டிட்டு வந்துட்டாரே!’ என்று உண்மை தெரியாமல் நினைத்தவள், ‘ஆமாம் இந்த மனுஷன் எங்கப்போனாரு’ என்று யோசித்தபடி, வதனாவின் அருகே வந்தவள், “ஹேய், ஓடுகாலி கழுத, எங்க மானத்தை எல்லாம் வாங்கிட்டு போயிட்டு, இப்ப திரும்பவும் வந்துட்டியா. உன்னால எங்களுக்கு ஊரில் தலை காட்ட முடியல” என்று வதனா வீட்டை விட்டு சென்றதுக்கு வசைபாட ஆரம்பித்தாள்.

அமலாவைப் பார்த்ததும், இப்போது நன்றாக கால் மேல் காலைப் போட்டு அமர்ந்தவள், “ஓ... நீங்களா? நான் கூட பிச்சைக்காரி தான் நடுவீட்ல வந்து கத்துறான்னு நினைச்சேன்” என்று நக்கல் செய்தாள்.

அதில் அமலாக்கு ஆத்திரம் மிகுதியாக, “என்னடி பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு. கொண்டு போன காசை எல்லாம் செலவு செஞ்சிட்டு திரும்பவும் இங்க வந்துட்டு, என்னையவே இந்த வீட்டு எஜமானியவே திமிரா பேசுற. என்னை எதிர்த்து பேசிட்டு, உன்னால இந்த வீட்ல எப்படி இருக்க முடியும்” என்று வன்மத்தால் கொந்தளித்தாள்.

“காசை எல்லாம் செலவு செஞ்சேனா?. ஆமாம் செஞ்சேன். இப்ப என்ன அதுக்கு. எல்லாம் என் அப்பா எனக்கு வச்சிட்டுப் போன பணத்தைத் தானே செலவு செஞ்சேன். உங்க அப்பா பணத்தை ஒன்னும் நான் எடுக்கலையே!” என்றதும் அவள் பேச்சில் கொஞ்சம் பயந்து தான் போனாள் அமலா.

இவள் பழைய வதனா இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அமலா, ‘வதனா இப்படி பேசுறது நல்லதுக்கு இல்லையே! இப்ப என்ன பண்றது’ என்று யோசிக்க தொடங்கினாள்.

தொடர்ந்து பேசிய வதனா, “அதுவும் இல்லாம நீங்க ஒன்னும் இந்த வீட்டுக்கு எஜமானி கிடையாது. நீங்க எதுக்காக இந்த வீட்டுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க” என்று சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி சென்றாள் வதனா.

அமலா அதிர்ச்சியாகி தன் நெஞ்சைப் பிடித்துவிட்டாள், அவள் எதை நினைத்துப் பயந்தாளோ அதுவே நடந்துவிட்டது. வதனா பேசிய பேச்சின் தோரணை எல்லாம், அவளை மிகவும் பக்குவப்பட்டவளாக காட்டியது.

‘இப்ப என்ன பண்ணலாம்... என்ன பண்ணலாம். இவள் முட்டாளாக இருக்குறது தான் நமக்கு நல்லது’ என்று யோசித்தபடி, தன் அறைக்கு வந்த அமலா, தன் கணவன் அஜய்யை அலைபேசி மூலம் அழைத்தாள்.

இரவு முழுவதும், சுஜியுடன் தன் நேரத்தைக் கழித்தவன், காலையில் கிளம்பி, தன் நகைக்கடைக்கு வந்திருந்தான்.

அமலாவின் அழைப்பைப் பார்த்தவன், “என்னடா எல்லாம் அமைதியா இருக்குன்னு நினைச்சேன். சாத்தான் வந்துருச்சி” என்று சொல்லிக்கொண்டே, இணைப்பை எடுத்து தன் காதில் வைத்தவன், “சொல்லு” என்றான் எரிச்சலுடன்.

“எங்க இருக்கீங்க? இப்ப உடனே வீட்டுக்கு வாங்க” என்று கத்தினாள்.

அதில் கோபம் கொண்டவன், “நீ கூப்பிட்ட உடனே வர்றதுக்கு, உன் அப்பன் மாதிரி நான் என்ன பெட்டிக்கடையா வச்சிருக்கேன்” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.

“ஐயோ, நீங்க வேற நேரம் தெரியாமல் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று அவள் சிணுங்க, தன் தலையில் அடித்துக் கொண்டவன், “அடியே நான் கோபமா உன்னைத் திட்டுறேன்டி. அது கூட உனக்குப் புரியலையா?” என்றான் ஆத்திரம் மிகுந்த குரலில்.

“நீங்க என்னமோ பண்ணிக்கோங்க. நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன். நீங்க கூட்டிட்டு வந்தீங்களே உங்க தங்கச்சி. அவள் பேச்செல்லாம் முன்ன மாதிரி இல்லைங்க. என்னையவே எதிர்த்து பேசுறா..” என்று கூறிக்கொண்டே செல்ல, அவள் பேச்சில் இடையிட்ட அஜய், “என்ன? என்ன சொன்ன... நான் கூட்டிட்டு வந்தேனா? வதனாவையா சொல்ற? இப்ப வீட்லையா இருக்கா?” என்றான் பெரிய அதிர்ச்சியுடன்.

ஆனால் அவன் கேள்விக்கு விடை அளிக்காமல் தன் போல் பேசிக்கொண்டிருந்தாள் அமலா, “என்னை அவள் என்ன சொன்னா தெரியுமா?. நான் எதுக்காக இந்த வீட்டுக்கு வந்திருக்கேனோ, அந்த வேலையை மட்டும் பார்க்கணும்னு, சொல்றாங்க” என்றாள்.

அதில் கடுப்பானவன், “ஒரு வாரிசை பெத்து கொடுக்க வக்கு இல்லைன்னா பார்க்குறவன் எல்லாம் பேசத் தான் செய்வான்டி. இப்ப என்ன பண்றான்னு உன்கிட்ட கேட்டேன். அதுக்கு இன்னும் பதில் வரல” என்று பிற்போக்காக பேசினான்.

“போங்க... நீங்க என்னைத் தான் சுலபமா திட்டுறீங்க... இன்னைக்கு உங்க தங்கச்சியை, நீங்க நல்லா திட்டணும் அதை நான் பார்க்கணும்”

“என் கேள்விக்கு இது பதில் இல்லை அமலா...” என்று அவள் பல்லைக் கடிக்க, “அவங்கக்கிட்ட ஏன் கேட்க்குறீங்க. நானே வந்துட்டேனே!” என்று சொல்லியபடி, மிகவும் ஒய்யலாக அஜய் இருக்கும் அந்த அறைக்குள் நுழைந்தாள் வதனா.




























 

NNO7

Moderator
அத்தியாயம் – 12

வதனாவைக் கண்டதும் பேச மறந்து தன் இருக்கையில் இருந்து எழுந்த அஜய், தன் அலைபேசியை அணைத்துவிட்டு, “இங்க நீ என்ன பண்ற?” என்றான்.

“இங்க நீ என்ன செய்றியோ, அதே தான் வதனாவும் பண்ண வந்திருக்கா அஜய்” என்று கூறியபடி அங்கே வந்தான் விஜய்.

“ஓ... இவளை இங்க கூட்டிட்டு வர்றதுக்கு தான், என்கிட்ட அந்த பேச்சு பேசுனீயா. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்தா, நான் அப்படியே எல்லாத்தையும் தூக்கி உங்களுக்கே கொடுத்துருவேன்னு நினைப்பா” என்றான் அதிகாரமாக.

“உன் முகத்திரை எல்லாம் கிழிஞ்சி போச்சே அண்ணா. இன்னும் எதுக்காக எல்லாமே உனக்கே சொந்தம்னு நீ ஆடிக்கிட்டு இருக்க?. நம்ம எல்லாத்தை விடவும் வதனாக்கு தான் ஷேர்ஸ் அதிகம்னு வக்கீல் சொல்லிட்டாரே!. இனி இந்த சேர் வதனாக்கு தான்” என்று அவன் அமர்ந்திருந்த இருக்கையைக் கைக்காட்டி கூறினான் விஜய்.

அஜய்கோ கையறுநிலை. அவனால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் வதனாவோ, “உங்க சேர் எனக்கு வேண்டாம். அதை நீங்களே வச்சிக்கோங்க. அப்பா உடம்புக்கு முடியாம போனதில் இருந்து மொத்தத்தையும் உங்க தோளில் சுமந்திருக்கீங்க. அதனைப் பறிக்க நான் விரும்பல. ஆனா நான் இங்க தான் வருவேன். என்னை வரக்கூடாதுன்னு சொல்ற உரிமை உங்களுக்குக் கிடையாது” என்று அவள் பேசியது, விஜய்க்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அஜய்யோ, “எதுவோ இது எல்லாத்தையும், நீ எனக்கு பிச்சை போடுற மாதிரி பேசுற. ஷேர்ஸ் உன் பெயரில் இருந்தா நீ முதலாளி ஆகிடுவியா?. நீ என்னவேணாலும் பண்ணிட்டுப் போ... ரெண்டு பேரும் முதலில் வெளியப் போங்க” என்று இருவரையும் வெளியே அனுப்பியவன், தன் நம்பகமான வக்கீல் நண்பனை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, “வதனா திரும்பி வந்துட்டா... இப்ப எப்படி ஷேர்ஸ்சை வாங்குறது?” என்று சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் வழி கிடைக்குமா என்று ஆலோசனை செய்ய ஆரம்பித்தாள்.

வெளியே வந்த விஜய் வதனாவிடம், “ஏன் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்ட வதனா?. அஜய்யை பார்ப்பது பிடிக்கலைன்னா, நீ வேணா வேற பிராஞ்ச் நகைக்கடையை பார்க்கலாமே வதனா” என்று கேட்க.

“இல்ல அண்ணா. எனக்கு அதில் விருப்பம் இல்ல. கஸ்டமர்ஸ்சோடா பழகணும். அவங்க விருப்பப்படுற டிசைன்ஸ் எல்லாத்தையும், பெஸ்ட் டிசைனர்ஸ் மூலம் கொண்டு வரணும். நகைகளைப் பத்தியும், நகைக்கடை நடத்துறத பத்தியும் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும். அதுக்கு நான் ஒரே ரூமில் அடைஞ்சி கிடக்குறது சரியா வராது” என்றாள் வதனா.

அதைக் கேட்டு சிரித்தவன், “இது எல்லாத்தையும் வேகமா படிச்சு என்ன செய்யப்போற?. புதுசா நகைக்கடை ஒன்ன ஆரம்பிக்கப்போறியா?” என்று கேட்டான்.

அதில் வதனாவுக்கு தான் பக்கென்று ஆனது. ஏனெனில் அவள் அந்த நினைப்போடு தான் இங்கே வந்தாள். நகைக்கடையில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, தன்னை யாருக்கும் தெரியாத இடத்திற்கு செல்ல நினைத்திருந்தாள். அதில் மிகப்பெரிய ரகசியமும் அடங்கி இருந்தது.

அவள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைக் கண்டவன், “அதுக்கு எதுக்கு நீ இப்படி பார்க்குற வதனா. தனியா ஒரு பிராஞ்ச் ஆரம்பிக்கும் ஐடியா உனக்கு இருந்தா சொல்லு. நானும் உனக்கு உதவியா இருப்பேன்” என்று அவன் சொன்னதும் தான் அவள் பெருமூச்சு விட்டாள்.

‘மூணு மாசம்... வெறும் மூணே மாசம் மட்டும் தான் எனக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள நான் எல்லாத்தையும் கத்துக்கணும்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் வதனா.

இங்கே தன் வீட்டில் சோகமே வடிவாக அமர்ந்திருந்தாள் ரத்னா. அவள் அருகே வந்தமர்ந்த குறளரசன், “நான் அவசரமா டெல்லிக்குப் போகணும் ரத்னா” என்றான்.

முகத்தை சிறியதாக வைத்துக்கொண்ட ரத்னா, “இப்ப தான் நீ இங்க வந்துருக்க. வந்த உடனே போகணும்னு சொல்ற” என்று குறைபட்டுக் கொண்டாள்.

“டெல்லில இருக்கும் நிறுவனத்தில் இப்ப நிலைமை சரியில்ல. நான் உடனே போய் தான் ஆகணும்” என்று குறள் சொல்ல, அதற்கு ரத்னா, “ஆனா நம்ம கல்யாணம்...” என்று இழுக்க, அவனிடம் பேச்சு இல்லை.

“என்னாச்சி குறள்? ஏன் எதுவும் பேசமாட்டேங்குற? சின்ன வயசுல என்னை ஜாகியான்னு கூப்பிடுவ. இப்ப உனக்கு நான் வெறும் ரத்னா மட்டும் ஆகிட்டேன். இன்னைக்கு காலையில் ஏர்போர்ட்ல வச்சி அதிசயமா என்னை ஜாகியான்னு கூப்பிட்ட, அதை நினைச்சு நான் சந்தோஷப்படும் போதே பெரிய குண்டைத் தூக்கி என் தலையில் போடுற” என்றாள் பாவமான முகத்துடன்.

“எல்லாமே தப்பாகி போச்சு” என்றான் இப்போது இருக்கையில் இருந்து எழுந்தவாறு.

“அப்படி என்ன தான் தப்பாகி போச்சு?. கொரியாவுல அங்கிள் ஆண்ட்டி எல்லாம் நல்லாத் தானே இருக்காங்க” என்றாள் அக்கறையுடன்.

ஆம் குறளரசனின் தாய் தந்தை உயிரோடு தான் இருக்கின்றனர். முதலில் அதை வதனாவிடம் இருந்து மறைக்கப் பெரிய காரணம் இருந்தது. ஆனால் இப்போது உண்மையை முழுவதுமாக உணர்ந்த பின், ரத்னாவிடம் அவன் அதனை மறைக்க நினைக்கவில்லை.

“இங்கப்பாரு ரத்னா, அவசரமா நான் செய்தது எல்லாம், மிகப்பெரிய பாவமாகிப் போயிடுச்சி. நான் திரும்பவும் அந்த தப்பை பண்ண விரும்பல. அதனால் தான் சொல்றேன் நீ கொஞ்சம் பொறு. அம்மா கல்யாணத்துக்கு சம்மதிக்க நேரம் ஆகலாம். அதுவரை நாம காத்துக்கிட்டு இருப்போம்” என்றான் பொறுமையாக.

அதில் ரத்னாவிற்கு எரிச்சல் வந்தது. ஆனால் அதை அப்படியே வெளியே காட்டி, குறளிடம் அவள் கெட்ட பெயர் வாங்க விரும்பவில்லை. அதனால், “ஏன் ஆண்ட்டிக்கு என்னைப் பிடிக்காது குறள்?” என்றாள் சோகமாக.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ரத்னா” என்றான் சமாளிப்பாக.

“யாருமே இல்லாம அனாதை மாதிரி இங்க இருக்கேன் குறள். நீ வந்ததும், என்னோட அப்பாவே திரும்ப வந்த மாதிரி இருந்துச்சி. இப்ப நீயும் என்னை விட்டுப்போறேன்னு சொல்ற” என்றாள் சோகமாக.

அவள் சோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனாக, “சாரி ரத்னா. ஒரு நண்பனா இதில் நான் தவறு செஞ்சிட்டேன். நிச்சயம் உன்னை விட்டுப் போக மாட்டேன். நான் இங்க இருந்தே ஆன்லைன் மூலம் அந்த வேலையை முடிக்கப்பார்க்குறேன்” என்று சொல்லிவிட்டு தான் தங்கி இருக்கும் அறையை நோக்கி சென்றான்.

அவன் செல்வதையே பார்த்தவள், ‘எங்க, என் வாழ்க்கை இப்படியே போயிரும்னு நினைச்சேன். நல்ல வேளை நீ திரும்பி வந்த குறள். எனக்கே எனக்கான ஒருத்தன். சின்ன வயசுல இருந்து என்னையே நினைக்கும் ஒருத்தன். அவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும், மற்ற பெண்களை ஏறெடுத்து பார்க்காத ஒருத்தனை கடவுள் எனக்காக படைச்சி வச்சிருக்காரு’ என்று தன் மனதிற்குள் சிலாகித்துக் கொண்டவள், தன் மடிக்கணினிக்குள் மூழ்கினாள்.

இங்கே தன் அறைக்குள் நுழைந்த குறளரசன், தன் அலைபேசியில், “இல்ல, நான் சென்னையில் இருக்கும் பிரான்ச்சில் இருந்தே, நீங்க கேட்ட அத்தனையையும் பண்ணி கொடுத்துடுறேன்” என்று ஆங்கிலத்தில் உரையாடி வைத்தவனுக்கு, அடுத்த இணைப்பாக அவன் தாயின் இணைப்பு வந்தது.

எடுத்ததும், “ஒம்மா...” என்று கொரிய மொழியில் அழைத்தவன், அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “இப்ப எதுக்கு என் கூட பேச மாட்டேங்கிறீங்க?” என்றான் கொஞ்சலாக.

“நீ எதுக்காக, இப்ப சென்னையில் போய் உட்காந்துருக்க?” என்று மிகவும் ஆவேசமாகக் கேட்டார்.

“என்கிட்ட இப்ப எதுவும் கேட்காதீங்க. நானே நொந்து போய் இருக்கேன். ஆனா ஒன்னு ஒம்மா, இனி உங்க சம்மதம் இல்லாம, நான் எதையும் செய்ய மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வைத்தான்.

இங்கே தென் கொரியாவின் சீயோல் நகரில், அரண்மனை போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் அந்த வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த குறளரசனின் தாய், “செசங்கே!(அடக்கடவுளே)இந்தப்பையன் என்ன சொல்றான்” என்று வாய்விட்டு புலம்ப, அப்போது அங்கே வந்தார் குறளரசனின் தந்தை ருத்ராஜ், “என்னாச்சி ஜெனி, எதுக்காக இப்படி புலம்பிக்கிட்டு இருக்க” என்றார்.

கிங் குழுமத்தின், மூன்றாம் தலைமுறையை சேர்ந்தவர் தான் ருத்ராஜ். குரளரசனோ நான்காம் தலைமுறை.

“எல்லாம் இந்தப் பையனை நினைச்சு தான். நான் சொன்னதைக் கேட்காம சென்னை போய் அந்த பொண்ணு கூட இருக்கான்” என்றார் தன் நெஞ்சை நீவி விட்டபடி.

“இதுக்காக நீ ஏன் டென்ஷன் ஆகுற. நீ பயப்படுற மாதிரி ஒன்னும் ஆகாது” என்றார் உறுதியான குரலில். இருந்தும் அவர் மனதிலும் கலக்கம் இருக்கத் தான் செய்தது.

“பயப்படமா எப்படிங்க இருக்க முடியும். கட்டுனா அவளைத் தான் கட்டுவேன். உங்க சம்மதம் எனக்கு தேவை இல்லைன்னு சொல்லிட்டு போனானே!. அவளைக் கல்யாணம் பண்ணி இருப்பானா?” என்றார் பயத்துடன்.

“உன்கிட்ட என்ன சொன்னான்” என்று அவர் கேட்க, “உங்க விருப்பம் இல்லாம எதுவும் செய்யமாட்டேன் ஒம்மான்னு சொன்னான்” என்றார் ஜெனி.

“அப்ப அவன் அப்படி பண்ண மாட்டான். அவனை அவன் போக்கில் விடு. அதற்குள் அந்தப்பெண்ணோட குணநலன்கள் அவனுக்கே தெரிய வரும். இதெல்லாம் சொன்னா புரியாது பட்டால் தான் புரியும்” என்றதோடு நிறுத்திக்கொண்டார் ருத்ராஜ்.

“அந்தப்பொண்ணுக்கு அம்மா அப்பா இல்லைன்னு தெரிஞ்சதும் எனக்கு வருத்தமாத் தான் இருந்தது. ஆனா அவங்க நமக்கு செஞ்ச துரோகம் எல்லாம் கொஞ்ச நஞ்சம் இல்ல. பாட்னரா இருந்து நம்மை நல்லா ஏமாத்துனாங்க. கிங் நிறுவனமே கையை விட்டு போகும் நிலையில் இருந்தது. கொரியாக்கு வந்து எவ்வளவு கஷ்டபட்டோம்னு நம்ம மத்த பசங்களை விட, இவனுக்குத் தான் நல்லா தெரியும். அப்படி இருந்தும் ஏன் தான் இப்படி ஜாகியான்னு பைத்தியம் பிடிச்சு திரியுறான்னு தெரியல” என்று புலம்பினார் ஜெனி.

“அம்மா அப்பா பண்ண தப்புக்கு பிள்ளைங்கள தப்பு சொல்றது நல்லது இல்லை தான். ஆனா அந்தப்பொண்ணை நான் விசாரிச்ச வரைக்கும் எதுவும் சரியா இல்லை ஜெனி. அதனால் கூடிய சீக்கிரம் நம்ம மகன் நம்மக்கிட்ட திரும்பி வருவான்” என்று நம்பிக்கை தந்தார் ருத்ராஜ்.

“என்னமோங்க நம்மளோட மத்த பசங்க மாதிரி குறள் இல்லைன்னு நான் இதுவரை பெருமை பட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப யாருடைய மூச்சுக் காத்து படக்கூடாதுன்னு நினைச்சோமோ அங்கயே போயிட்டான்” என்று வருத்தம் கொண்ட ஜெனியை சமாதனம் செய்தார் ருத்ராஜ்.

****

“தலைக்கு மேல வெள்ளம் போகுது. எப்படி தான் இப்படி அசால்ட்டா பத்து தோசையை முழுங்குறீங்களோ” என்று தன் கணவனை வசைபாடிக்கொண்டிருந்தாள் அமலா.

தன் கோபத்தையெல்லாம் கட்டுபடுத்தியபடி உண்டு கொண்டிருந்த அஜய், ‘இன்னைக்கும் வீட்டுக்கு வராம என் புஜ்ஜிக்குட்டி கூடவே இருந்திருக்கலாம். ராட்சசி உயிரை வாங்குறா’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன், வெளியே எதுவும் பேசவில்லை.

“பொன் முட்டை போடுற வாத்துன்னு நினைச்சு அந்த ரத்னாக்கு என்னவெல்லாம் நான் செஞ்சேன். கடைசியில் அவளும் ஒரு சீனாக்காரனை கூட்டிட்டு வந்துட்டு, இவனை தான் கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்றா” என்று அங்கலாய்த்தாள்.

“அவன் சீனாக்காரன் இல்லை. கொரியாக்காரன்” என்று அஜய் அவளைத் திருத்த, “ஆமாம், இப்ப அது ரொம்ப முக்கியம். என் தம்பிக்கு அவளைப் பேசி முடிக்கலாம்னு நினைக்குறதுக்குள்ள இடி மேல இடி. இருந்தாலும் அந்த ரத்னா சரியான கேடி தான். எப்படி தான் ஒரு ஆம்பளையோட கல்யாணம் ஆகாம ஒரே வீட்டில் இருக்காளோ” என்று கூற, அப்போது அங்கே எதர்ச்சையாக வந்த வதனாவின் காதுகளில் அமலாவின் வார்த்தைகள் அச்சுப்பிசங்காமல் சென்றடைந்து, நெஞ்சை ரணமாக்கியது.










 

NNO7

Moderator
அத்தியாயம் – 13

தன் அறையில், குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த சந்தரவதனாவிற்கு, கீழே அமலா சொன்ன வார்த்தைகள் தான் கேட்டுக் கொண்டே இருந்தது.

‘ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருக்காங்களா!. அப்ப உண்மையாவே கல்யாணம் பண்ணிக்கப் போறானா. அவனோட ஜாகியா ரத்னாவா...’ என்று நினைத்து கவலை கொண்டாள்.

அப்போது அங்கே கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் விஜய். தன் தங்கையின் முக வாட்டத்தைக் கண்டவன், “ஏன் ஒருமாதிரியா இருக்க வதனா. அண்ணா அண்ணி எதுவும் பேசுனாங்களா?” என்றான் அக்கறையுடன்.

அமலாவின் வார்த்தைகளில் ஏற்பட்ட கடுப்பில் இருந்தவள். அதை விஜய்யிடம் காட்ட ஆரம்பித்தாள்.

“உனக்கு என்ன தான் பிரச்சனை அண்ணா. என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டியா?” என்றாள் எரிச்சலுடன்.

“எதுக்காக இவ்வளவு கோபப்படுற வதனா. உனக்கு ஏதாவது பிரச்சனைனா, அதை தீர்த்து வைக்கலாம் இல்லையா அதான் கேட்டேன்” என்றான் கனிவுடன்.

“என் பிரச்னையை எல்லாம் உன்கிட்ட சொல்ற அளவுக்கு, அவ்வளவு ஒன்னும் நாம நெருக்கம் கிடையாது தானே! இப்ப என்ன புதுசா என் மீது அக்கறைப் பட வந்துட்ட” என்று சூடாக வார்த்தைகளை வீசினாள்.

அவளின் பேச்சு, அவன் மனதைக் காயம் கொள்ள செய்தாலும், தான் இதற்கு முன் வதனாவிடம் நடந்து கொண்டதற்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டவன், “நீ இப்ப ரொம்ப கோபமா இருக்கன்னு நினைக்குறேன். நான் பிறகு வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அவன் சென்ற பின்பு தான் சிறிது நிதானத்திற்கு வந்தவள், “ஐயோ, விஜய் அண்ணாக்கிட்ட நான் என்ன பேசி வச்சிருக்கேன்” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள், “இப்ப எதுக்காக அந்த குரளரசனைப் பற்றி நான் நினைக்குறேன். என்னை வேண்டாம்னு தூக்கிப் போட்டு போனவன் எனக்கும் வேண்டாம். இங்க இருக்கப்போறது என்னவோ மூணு மாசம் மட்டும் தான். அவன் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன’ என்று அவளது மனது கூறினாலும், இறுதியில் அவள் மனக்காயமே வென்றது.

பார்த்ததும் காதல் கொண்டு, திருமணமும் செய்து மொத்தமாக ஏமாந்தும் போய்விட்டாள். முதலில் இது குறளின் மீது தான் கொண்ட ஈர்ப்பால் மட்டுமே நடந்தது என்று நினைத்தவளுக்கு, மாதங்கள் செல்லச் செல்ல தான் தெரிந்தது இது அவன் மேல், தான் கொண்ட காதல் என்று. அதுவும் இல்லாமல், அவன் அவளிடம் விட்டுச் சென்றது எல்லாம் அவள் மனதை ஏதோ செய்ய, தன் அலமாரியைத் திறந்து அவன் கட்டிய மஞ்சள் கயிறைத் தடவி பார்த்தவள், “நீ கொடுத்ததை என்னால் தூக்கி எறிய முடியாது. ஆனா அதுக்காக உன்னை என் மனசுல சுமக்கவும் முடியல. உன்னை சீக்கிரம் நான் மறக்கணும்னு அந்த ஆண்டவன் கிட்ட தான் தினமும் கேட்குறேன்” என்று சொன்னவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

தன் காதலுக்கு அவன் தகுதியில்லை என்று தெரிந்தாலும், அவளின் மனது கேட்க வேண்டுமே.

அன்று இரவு முழுவதும் வழக்கம் போல் கண்ணீரில் கறைந்தவள் வெகு நேரம் கழித்தே உறங்கினாள்.

மறுநாள் காலை நேரம் கழித்து எழுந்து, குளித்து கிளம்பி கீழே வந்தவளை, எதிர்கொண்டான் விஜய்.

“இப்ப தான் எழுந்தியா வதனா. வா சாப்பிடலாம்” என்று அழைத்தான்.

அதற்கு நிர்மலான முகத்துடன், “எத்தனை நாள் காலையில் சாப்பிடாம காலேஜ் போய் இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?. இப்ப என்ன புதுசா ஏதேதோ பண்ற” என்றாள்.

அதில் விஜய்யின் முகமே விழுந்துவிட்டது. அதனைப் பார்த்து, ‘குத்திக் காட்டி பேசுறது எல்லாம் உன் குணம் கிடையாது வதனா. ஏன் இப்படி பேசுற’ என்று தன்னைத் தானே மனதினுள் திட்டிக்கொண்டவள், வெளியே விஜய்யிடம், “என்னை மன்னிச்சிடு அண்ணா. உன் மனசை நோகடிக்கணும்னு, நான் நினைக்கல. நீ பேசுறது எல்லாம் எனக்கு புதுசா இருக்கு” என்றாள் தலையைக்குனிந்தபடி.

“எனக்கும் புரியுது வதனா. என் அக்கறையை அவ்வளவு சீக்கிரம் உன் மனசு ஏத்துக்க விரும்பல. இதில் உன் தப்பு எதுவுமே இல்ல. இதெல்லாம் முழுக்க முழுக்க என்னோட தப்பு மட்டும் தான். நீ இதெல்லாம் நினைச்சு பீல் பண்ணாத” என்றான் புன்னகை செய்தபடி.

“சரி அண்ணியை எப்ப கூப்பிட போற?” என்று அவள் கேட்க, “கூடிய சீக்கிரம் வதனா. சரி நீ போய் உன் வேலையைப் பாரு” என்று சொல்லிக்கொண்டே தன் காற்சட்டைப் பையில் இருந்து சாவியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவளோ, “என்னது இது” என்பது போல் பார்க்க, “ஸ்கூட்டி. உனக்காக வாங்குனேன். எப்படியும் நே காரில் போக விருப்பப்பட மாட்ட. அதனால் தான். இதையாவது வாங்கிக்கோ” என்றான் கெஞ்சலாக.

“சரி” என்று தலையாட்டியபடி அதனை வாங்கிக்கொண்டவள், “ரொம்ப நன்றி அண்ணா” என்று ஸொல்லிகொண்டு செல்ல, “சாலையில் போகும் போது கவனமா போ வதனா” என்ற விஜயின் குரல் அவளைப் பின் தொடர, அவளும் சென்று கொண்டே, “அதெல்லாம் நான் பார்த்து வண்டியை ஓட்டிக்குவேன் அண்ணா” என்று கூறியபடி உணவு மேஜையில் சென்று அமர்ந்தாள்.

விஜய்யும் அவளுடன் சேர்ந்து கொள்ள, வேலையாட்கள் இருவர் உணவை பரிமாறினார். பின் விஜய்யிடம் இருந்து விடைபெற்றாள் வதனா.

வதனா சென்றதும் வேலையாட்களைப் பார்த்தவன், “இனி இந்த மாதிரி தப்பை எப்போதும் செய்யாதீங்க. வதனா தான் இந்த வீட்டின் முதலாளி. அதை நியாபகத்தில் வச்சிக்கோங்க” என்று கண்டித்தான்.

அவர்களும் பணிவாக, “மன்னிச்சிருங்க ஐயா, அமலா அம்மா சொன்னதுனால தான் நாங்க அப்படி செய்தோம். இனி அப்படி நடக்காது” என்றார்கள் தலையைக்குனிந்தபடி.

“பாத்துக்கோங்க... இல்லைனா உங்களுக்கு இந்த வேலை இல்ல” என்று சொல்லிவிட்டு சென்றான்.

காலையில் விஜய் வந்து பார்க்கும் போது, இருவருக்கு மட்டுமே சமைத்துக் கொண்டிருந்தனர். அவன் என்னவென்று கேட்க, “அமலா அம்மா உங்களுக்கு சமைக்க சொல்லலை” என்று அசால்ட்டாக பதிலை சொல்ல, அவர்களை வாங்குவாங்கு என்று நன்றாக வாங்கி இருந்தான்.

விஜய்யின் திருமணதிற்கு முன்பு எப்படி சமைத்தனரோ அப்படியே சமைத்து வைத்திருந்தனர். விஜய் பொதுவாக வீட்டில் உணவு உண்ண மாட்டான். விஜய்க்கு திருமணம் ஆனப்பிறகு தான், மகா தனக்கும் தன் கணவனுக்கும், வேலையாட்களை வைத்து தனியாக சமையல் செய்ய வைத்திருந்தாள். அதில் யாருமே கண்டுகொள்ளாதது வதனா ஒருவளைத்தான்.

மீதி இருக்கும் உணவை மட்டும் தான் அவள் உணவாக எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் தனியாக மும்பையில் இருக்கும் போது கூட உண்ண மாட்டாள். ஆனால் இன்று தான் வயிற்றுக்கு திருப்தியாக உண்டிருந்தாள்.

வதனா தன் ஸ்கூட்டியில் ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது, தன் ஆடி காரில் இருந்த குறளரசன் அவளைப் பார்த்துவிட்டான்.

அவன் என்ன நினைக்கின்றான் ஏது நினைக்கின்றான் எதுவும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவனது மனதில், நிச்சயம் வதனாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

வாகன நெரிசலில் ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒரு வழியாக, வதனாவின் ஸ்கூட்டி அருகே சென்றவன், தன் கார் கதவின் கண்ணாடியைத் திறந்து, “உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் எங்கே பார்த்தபடி.

கூட்டத்திலும் கொடுமையான கூட்டம் என்றால், அது சென்னை வாகன நெரிசல் தான். வாகனம் ஒவ்வொன்றில் இருந்தும் வெளிவரும் புகையும், ஹாரன் சத்தமும், புதியதாக இயற்கை சூழ்நிலையில் இருந்து வந்து பார்ப்பவருக்கு, நெஞ்சி வலியே வரவைத்துவிடும்.

அந்த இரைச்சலில் அவன் சத்தம் எப்படி அவள் காதுகளை அடையும்?. தன் சத்தத்தை சிறிது கூட்டி, “ஹேய் உன்னைத் தான்” என்று கத்தி அழைத்தான்.

நல்ல வேளை இப்போது அவனின் சத்தம் அவள் காதலி அடைந்துவிட்டது. அவள் சட்டென்று யாரென தன் இடப்பக்கம் திரும்ப, அங்கே நிச்சயமாக அவள் குறளை எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அவள் பார்வை ஒரு வினாடி மட்டும் தான், அவன் மீது படிந்தது. ‘ஹேய், ஓய்ன்னு கூப்பிட்டா நான் உடனே என்னன்னு கேட்கணுமா? போடா வெண்ண’ என்று மனதினுள் திட்டினாலும், அவளின் இன்னொரு மனமோ, ‘ என் பெயரைக் கூட உச்சரிக்க அவ்வளவு கஷ்டமா இருக்கோ’ என்று நினைத்து வெம்பியது.

எறும்புகள் நகர்வதைப் போல, அந்த கூட்ட நெரிசலில் அவள் மெது மெதுவாக தன் வண்டியை உருட்ட, அவனும் ஊர்ந்தபடி அவளைப் பின் தொடர்ந்தான்.

“உன்ன தான் கூப்பிடுறேன். உன் காதில் விழவில்லையா?” என்று இப்போது அவன் கத்த, அதில் ரோட்டில் செல்லும் மற்றவர்கள் தான் இவளைத் திரும்பி பார்த்தனர்.

அதில் அவள் ஏதோ போல் ஆக, அவனைப் பார்த்து முறைத்தவள், “ஹேய் எனக்குன்னு பெயர் இருக்கு. இப்ப நீ யாரிக்கூப்பிட்ட” என்று சிடுசிடுத்தாள்.

“உன்கூட பேசணும்” என்று அதில் கண்ணாக இருந்தவன், “கேப் கபே போறேன். நீயும் அங்க வந்துரு” என்று ஆணையிட்டுவிட்டு முன் சென்றான்.

அதில் வதனாவின் ஆத்திரம் எல்லை மீறியது, “இவனோட வேலைக்காரின்னு நினைச்சுட்டான்னா என்னை” என்று வாய்விட்டு புலம்பியவள், அவன் சொன்னதை செய்யவும் செய்தாள்.

அவன் சொன்ன இடத்திற்கு சென்றவள், ஒரு ஓரத்தில் அவன் இருந்த மேசைப் பக்கம் சென்று அவன் முன்னே நின்றவள், “எதுக்காக ரோட்டில் வச்சி இப்படி பண்ற” என்றாள் எரிச்சலுடன்.

அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், “உன்னோட மரியாதை எங்க போச்சு?” என்றான் அழுத்தமாக.

அதில் வதனாவுக்கு ஆத்திரம் மேலும் மேலும் பெருகியது, “உனக்கு மரியாதை ஒன்னு தான் கெடு. எதுக்காக என்னை இங்க வர சொன்ன” என்றாள் அவன் முன்னே இருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்தபடி.

“நான் அன்னைக்கு இருந்த மனநிலையில் உன்கிட்ட சரியா பேசமுடியல. அதுக்காக தான் உன்னைக் கூப்பிட்டேன். ஆனா உன் பேச்சு எல்லாம் வரம்பு மீறுது. நான் உன்னோட பெரியவன் எனக்கு மரியாதை கொடுக்க மாட்டேங்குற. அவன் இவன்னு பேசுற” என்று தான் எதற்காக அவளை இங்கு வரவழைத்தோம் என்பதனை மறந்து அவள் மீது கூற்றம் சுமத்த ஆரம்பித்தான்.

அவளோ நன்றாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி, “எல்லாம் என்னோட தப்பு தான். நீ பண்ண வேலைக்கு எல்லாம் உன் சட்டையைப் பிடிச்சி கேள்வி கேட்டு, உன்னை ஜெயிலுக்கு அனுப்பாம விட்டேனே! நீ நல்லா கேள்வி கேளு” என்று நக்கலாக பேசினாள்.

அதில் தன் நெற்றியை தடவியவன், “ம்ச்... தேவை இல்லாம பேச வேண்டாம். நான் கூடிய சீக்கிரம் ரத்னாவை கல்யாணம் பண்ணப்போறேன். அதில் உன் தலையீடு இருக்கக்கூடாதுன்னு நினைக்குறேன்” என்று சொல்லி வதனாவை மௌனமாக்கினான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 14

குறளரசன் வாயில் இருந்து உதித்த ஒவ்வொரு வார்த்தைகளும், அவள் அடிமனதில் ஆறாத ரணமாக துடித்துக் கொண்டிருக்க, நல்ல கை தேர்ந்த நடிகை போல், தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவள், “முதல்ல நீ யாரு?. எனக்கு நீயே யாரும் இல்லாதவன் தான். இதில் உன் வாழ்க்கையில் வந்து நான் ஏன் குழப்பம் பண்ணப் போறேன்னு நீ நினைக்குற?” என்றாள் வெகு சாதரணமாக.

நேற்று ரத்னா தான் குறளரசனின் ஜாகியா என்பதை உணர்ந்தவுடன், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் கண்ணீர் விட்டு அழுதவள், எப்படியும் இவர்களை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்ற நினைப்பில் தான் தன்னைத் தானே தட்டிக்கொடுத்து, தன் நெஞ்சை ஆயிரம் முறை பலப்படுத்திக்கொண்டாள்.

“இங்கப்பாரு இதெல்லாம் என்னோட தப்பு தான். அதுக்காக என்னிடம் அட்வான்டேஜ் எடுக்கப்பார்க்காத” என்று அவன் பாட்டிற்குப் பேசிக்கொண்டே போக, அதில் எரிச்சல் அடைந்தவள், “நான் சொல்றது உனக்கு காதில் கேட்கலையா? இல்ல நான் பேசுற மொழி உனக்குப் புரியலையா?. உனக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. நமக்குள்ள நடந்தது எல்லாமே ஒரு விபத்து மட்டும் தான்” என்று அவனிடம் சொல்லும் போதே, அதை தனக்கும் உண்டானதாக தன் மனதினுள் பதித்துக் கொண்டாள்.

அவள் பேச்சில் ஆசுவாசம் அடைந்தவன், “நல்ல வேளை நீ புரிஞ்சிக்கிட்ட. எங்க பைத்தியம் மாதிரி அழுது சீன் போடுவன்னு நான் பயந்தே போயிட்டேன்” என்றான்.

“நான் எதுக்காக அழனும்” என்று அவள் எதிர் கேள்வி கேட்க, “அவனோ, அதான் பெண்கள் எல்லாமே பூ மாதிரின்னு சொல்லுவாங்களே! லேசா ஒரு துக்கம் வந்தாலும் வாடிப்போயிருவாங்களாம்” என்று சொல்லி தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

“பூ மாதிரி தான். ஆனா அது ரோஜாப்பூ மட்டுமாத் தான் இருக்க முடியும். ரோஜாவை மாதிரி கம்பீரமாகவும் இருப்பாள் தன்னை கசக்க நினைப்பவரை தன் முள்ளால் குத்தியும் விடுவாள் பெண்” என்றாள்

“தேங்க் காட். நீ இவ்வளவு சீக்கிரம் புரிஞ்சிப்பன்னு ன்ன நினைக்கவே இல்ல. அன்னைக்கு அழுத மாதிரி இன்னைக்கும் அழுதுருவன்னு நினைச்சேன்” என்று சொல்லிவிட்டு அவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளப்பார்க்க, “கொஞ்சம் இருங்க மிஸ்டர். நீங்க பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டீங்க இனி நான் பேசணுமே!” என்றதும் தன் இருக்கையில் திரும்பவும் அமர்ந்தவன், “வேகமா சொல்லு எனக்கு நேரமாச்சி” என்றான் தன் மணிக்கட்டில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி.

“இந்த முறையாவது ரத்னா தான் உங்க ஜாகியான்னு நல்லா தெரிஞ்சி தானே பழகுறீங்க” என்றாள் நக்கல் கலந்த குரலில்.

குறளரசனிடம் எப்போதுமே ஒரு தெளிவு இருக்கும். தொழிலில் கூட அவன் கணிப்பு சரியாக இருக்கும். முதன்முதலில் அவன் ஒரு தவறு செய்தான் என்றாள் அது இந்த விஷயத்தில் மட்டும் தான்.

வதனாவின் பேச்சு குறளின் தவறை குத்திக்காட்டுவதைப் போல் இருக்க, அதில் கோபம் கொண்டவன், “உனக்கு இன்னைக்கு ஏதோ நல்ல நேரம் இருக்குன்னு நினைக்குறேன். அதனால் தான் உன்னை எதுவும் செய்யாமல் சும்மா விடுறேன்” என்று அடிக்குரலில் சீறினான்.

“இப்ப நான் என்ன பெருசா தப்பா கேட்டுட்டேன்?. சொல்லப்போனா எனக்கு உன் மேல் சந்தேகமா இருக்கு. இப்படி தான் ஜாகியா ஜாகியான்னு சொல்லிட்டு ஒவ்வொரு பெண்ணையும் கல்யாணம் பண்ணி ஏமாத்துறியோ” என்று அவள் குற்றம் சுமத்த.

“ஹேய், வார்த்தையை அளந்து பேசு. நான் ஒன்னும் பொம்பளை பொறுக்கி இல்ல” என்றான் சீற்றம் கொண்டு.

அதற்கு தன் ஒரு உதட்டை மட்டும் வளைத்து சிரித்தவள், “ஓ... நானும் தான் பார்த்தேனே! என்னுடன் நீ இருந்த இரண்டு நாளும் என்ன செய்தன்னு” என்றாள்.

“***” என்று ஆங்கிலக் கெட்ட வார்த்தை ஒன்றை அவளை நோக்கி வீசியவன், “நமக்குள்ள நடந்தது எல்லாமே விபத்துன்னு சொல்லிட்டு, எதுக்காக இப்போ இப்படி பேசிக்கிட்டு இருக்க” என்றான்.

“நீ தானே, நான் ஒன்னும் பொம்பளை பொறுக்கி இல்லைன்னு சொன்ன. அதான் ரெண்டு நாளும் நீ பண்ணதை சொன்னேன்” என்று அவனைப் போலவே பேசி காண்பித்தாள்.

“போதும் நிறுத்து” என்பது போல் அவளை நோக்கிக் கைக்காட்டியவன், “எனக்கு ஜாகியான்னா உயிரு...” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, மனதால் ஆயிரம் முறை செத்துப் போனாள் வதனா.

“என் வாழ்வில் முதலும் கடைசியும் அவள் மட்டும் தான்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு வாழ்ந்துட்டு வந்தேன். ஆனா இடையில் மிகப்பெரிய தப்பை செஞ்சிட்டேன். மிகப்பெரிய பாவம் பண்ணிட்டேன்” என்று அவன் சொன்னதும், ‘அவன் மிகப்பெரிய தப்பென்று உன்னைத் தான் சொல்கிறான்’ என்று அவளின் மனது நேரம் காலம் தெரியாமல் எடுத்துக் கூறிக்கொண்டு இருந்தது.

“ஆனா நான் உனக்காக நிச்சயம் ப்ரே பண்ணுவேன். நீயும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க. உன் பேச்சில் அது தெரிஞ்சது. நீ கூடிய சீக்கிரம் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்றதும் வதனாவின் ஆத்திரம் அதிகமானது.

“நான் என்ன பண்ணணும்னு நீ சொல்லவேண்டாம். உன் வாழ்க்கையை நீ பாரு என் வாழ்க்கையை நான் பார்க்குறேன். இதில் ப்ரீ அட்வைஸ் பண்ணாத” என்றாள் கடுப்புடன்.

“இல்ல இதில் என் மீது தவறு இருக்கு...” என்று அவன் திரும்பவும் ஆரம்பிக்க, “ஐயா சாமி போதும் நிறுத்து, நான் ஆன்ட்டி ஹீரோயினா மாறி உன்னையும் உன் ஜாகியாவையும் பிரிக்க வரமாட்டேன்” என்று தன் இருகையையும் தூக்கி அவனை நோக்கி கும்பிடு போட்டாள்.

அப்போது சரியாக, அவள் கழுத்தை ஓட்டிப் போட்டிருந்த துப்பட்டா கீழே சரிய, அவளின் சங்கு கழுத்து ஆடவனின் கண்களுக்கு அழகாக காட்சியளித்து, ‘எனக்கு திரும்பவும் உன் இதழ் முத்தம் வேண்டும்’ என்று பேசுவதைப் போல் இருந்தது. அவனோ அதில் தன்னை மறந்தான். முன்பு அதே இடத்தில், அவன் செய்த செய்கைகள் எல்லாம் அவன் கண் முன்னே தோன்றியது.

விட்டால் இப்போதே, அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்து, அவள் ரத்தத்தை உரிந்து விடுவான் போல, அப்படித் தான் இருந்தது குறளரசனின் விழுங்கும் பார்வை.

படபடவென்று பொரிந்து கொண்டிருந்த வதனாவும், அவனின் பார்வையை கவனிக்கத் தவறினாள்.

“எல்லாமே எல்லாருக்கும் சுலபமா போயிருச்சி. இப்ப தான் மனிதர்களோடு ஒவ்வொரு முகமும் எனக்குத் தெரிய ஆரம்பிக்குது” என்றவள் அப்போது தான் தன் கழுத்தில் இருந்து கீழே விழுந்த துப்பட்டாவை கவனித்தாள், உடனே அதை எடுத்து தன் கழுத்தை சுற்றிப் போட்டுக்கொள்ள, அப்போது தான் குறளும் தன் தவறை உணர்ந்தான்.

ஆனால், அவன் தன் பார்வையைத் தான் மாற்றினானே தவிர, தன் மனதை அல்ல, அவன் உடம்பில் ஓடும் ரத்தம் மொத்தமும் சூட்டினால் கொதிக்க, அவனது ஒவ்வொரு தசை நாளங்களும் வதனாவுக்காக ஏங்கியது.

இந்த ஆறு மாதங்கள் வதனா எவ்வளவு மனக்கவலையில் இருந்தாளோ, அதை விட அதிகம் கவலையில் இருந்தவன் தான் குறளரசன்.

வதனாவிடம் இப்போது அவன் பேசும் தோரணை திமிராகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவளுக்காக மிகவும் கவலை கொண்டு தான் இருக்கின்றான்.

வதனாவின் புகைப்படத்தை பார்த்த நொடியே, அவன் மனதை மொத்தமாக இழந்து தான் போய்விட்டான். இவளை விடவே கூடாது என்ற நினைப்பில் தான் அவன் வேகமாக திருமணமும் செய்தது. தன் தாயை மீறி முதன் முதலாக அவன் செய்தது ஒன்று என்றால் அது இது மட்டும் தான்.

இதுவே அவன் முதன்முதலில் பார்க்கும் போதே அது ரத்னாவாக இருந்திருந்தால், அவளை திருமணம் செய்திருப்பானா என்றால், இல்லை என்பது தான் அவனது பதிலாக இருக்கும்.

ஏனென்றால் வதனாவின் முகஅழகை விட, அவளின் மென்மை, தைரியம் அவள் பேசிய விதம் என்று அத்தனையும் அவனைக் கவர்ந்து தான் இருந்தது. ஆனால் அதுவே ரத்னாவிடம் அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஏன் அவளுடன் இருக்கும் நேரத்தைக் கூட அவன் விரும்பவில்லை.

சிறுவயதில் இருந்தே ஜாகியாவைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்று இவன் காதில் யார் கூறிச்சென்றனரோ, அதை ஒன்றை மட்டும் வேதவாக்காக எடுத்துக் கொண்டு, இப்போது ரத்னாவை திருமணம் செய்ய தன்னைத் தானே மனதளவில் தயார் செய்து கொண்டிருக்கின்றான்.

இதில் வதனாவைப் பார்த்ததும் அவன் மனது தடுமாற, ‘பிசிக்கல் ரிலேஷன் வச்சதால தான், என் மனசு இப்படி இருக்குது’ என்று பல லட்சம் தடவை தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“இதுக்கு மேலையும் இங்க இருக்க எனக்குப் பிடிக்கல. உன் முகத்தைப் பார்க்கவும் பிடிக்கல. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றாள் வதனா.

செல்லும் வதனாவையே பார்த்துக் கொண்டிருந்தவன், “நான் அவசரப்பட்டு இருக்கவே கூடாது. இதுக்கு எல்லாம் காரணம் அந்த இன்பார்மர் மட்டும் தான்” என்று பழி போட்டான்.

மெயின் ப்ரான்ச்சில் இருக்கும் தன் கடைக்கு வந்தவள், அனைவரிடமும் சகஜமாக உரையாட ஆரம்பித்தாள். இது அனைத்தையும் சிசிடிவி வழியே தன் அறையில் இருந்து பார்த்த அஜய், “எத்தனை நாள் தான் இப்படி ஆடுறன்னு நானும் பார்க்குறேன்” என்று வன்மமாக நினைத்துக்கொண்டவனின் அலைப்பேசி அடித்தது.

யாரென்று பார்த்தவனின் நெஞ்சுக்குள் சாரல் மழை, சிரித்த முகத்துடன் அலைபேசியை எடுத்து தன் காதில் வைத்தவன், “புஜ்ஜிக்குட்டி, இந்த மாமாக்குட்டியைப் பார்க்காம தவிச்சி போயிட்டீங்களா” என்று உருகினான்.

அந்தப்பக்கம் பேசிய சுஜி, “ஆமாம் மாமாக்குட்டி. உங்களைப் பார்க்க தான் நான் வந்துக்கிட்டு இருக்கேன்” என்று அவளும் வழிய.

“ஹேய் வேண்டாம் வேண்டாம். இனி கடைக்கு எல்லாம் வராத புஜ்ஜி” என்றான் செல்லமாக.

“ஏன் மாமாக்குட்டி” என்று அவள் முகம் சுருக்க, “இங்க என் தங்கச்சி இருக்கா புஜ்ஜிக்குட்டி. இனி அடிக்கடி இங்க வருவா. அவளுக்கும் படிப்பு முடிஞ்சிருச்சி இல்லையா” என்றான். என்னதான் அவனுக்கும் அவன் தங்கைக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்சனை ஓடினாலும், அதை என்றுமே வெளி ஆட்களுக்கு முன்னால் காட்டிக்கொண்டது இல்லை அவன்.

“அப்ப எனக்கு டைமண்ட் நெக்லஸ் தரேன்னு சொன்னது என்னாச்சி மாமாக்குட்டி” என்று அவள் கேட்க.

“டைமண்ட் நெக்லசோடா இன்னைக்கு உன் வீட்டுக்கு வரேன்டா புஜ்ஜிக்குட்டி” என்று குழைந்தான்.

“அப்ப நான் வைக்குறேன் மாமாக்குட்டி” என்று அவள் இணைப்பை அணைக்க, சரியாக அஜய்யின் காதில் வந்து விழுந்தது, வதனாவின் வார்த்தைகள்.

“அது யாரு அண்ணா புஜ்ஜிக்குட்டி?” என்றாள் அவன் பேசும் போதே உள்ளே வந்துவிட்ட வதனா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 15

கதவருகே தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த வதனாவைப் பார்த்து அதிர்ந்து போன அஜய், “ஹேய், நீ எப்ப உள்ள வந்த?. மேனேர்ஸ் இல்ல” என்று கத்தினான்.

அவன் உடல் முழுவதும் பயத்தில் நடுங்கத் தொடங்கினாலும், அதை மறைக்க கோபத்துடன் பேசினான்.

“மேனேர்ஸ் எல்லாம் உங்களை விட எனக்கு அதிகமாவே இருக்கு அண்ணா. நீங்க தான் மேனேர்ஸ் இல்லாம, வேலை நேரத்தில் தேவை இல்லாத பேச்செல்லாம் பேசுறீங்க. நான் கதவை தட்டினது கூட, உங்க காதில் கேட்கல” என்றாள் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டபடி.

தன் நெற்றியை நீவிவிட்டவன், “அது ஒரு முக்கியமான விஷயத்தை அமலா கூட பேசிக்கிட்டு இருந்தேன்” என்று வாயில் வந்ததை அடித்து விட்டான்.

“அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது அண்ணா. நீங்க என்னை திட்டுனதுக்கு, திரும்ப நான் பதில் மட்டும் தான் கொடுத்தேன்” என்று சொல்லிவிட்டு அவன் முன்னே வந்து நின்றவள், “இந்தக்கடையோட கணக்கு வழக்கை எல்லாம் நான் பார்க்கணும். அது சம்பந்தமான பைலை பார்க்க, எனக்கு பாஸ்வேர்ட் வேணும்” என்றாள் வதனா.

எதுவும் கோபம் கொள்ளாமல், தன் முன்னே இருந்த காகிதத்தில் ரகசிய குறியீட்டு எண்ணை எழுதியவன், “உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ. ஆனா என் மீது எந்த ஒரு தப்பையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாது” என்றான் தைரியமாக.

“உங்களை மாட்டிவிடுறது என் எண்ணம் இல்ல. நான் இங்க தொழில் கத்துக்க மட்டும் தான் வந்துருக்கேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சிறுவயதில் இருந்தே தன்னுடன் அதிக வயது மூத்தவனான, அஜய்யை மரியாதையாக மட்டுமே அழைத்தவள், இப்போதும் அதையே தொடர்கிறாள்.

அவள் சென்றதும், ‘அப்படியே கண்டுபிடிச்சாலும் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்ல வதனா. என்னை உன்னால் எதுவுமே செய்ய முடியாது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

கொட்டிக் கிடக்கும் கணக்குகளை எல்லாம் பார்வையிட்டவளுக்கு பசிக்க ஆரம்பித்தது. அப்போது சரியாக அங்கே வந்த விஜய், “வா வதனா வீட்டுக்குப் போய் சாப்பிடலாம்” என்று அழைத்தான்.

“சரி” என்றவள், அவனுடன் வீட்டிற்கு சென்றாள்.

அங்கே வீட்டையே தலைகீழாக திருப்பி போட்டுக்கொண்டிருந்தாள் அமலா.

“உணவு மேஜையில் குறைந்தது ஐம்பது டிஷ் இருக்கணும்” என்று அமலா வேலையாட்களிடம் கூறிக் கொண்டு இருக்க, எதுவும் பேசாமல் இருவரும் உணவு மேஜையில் சென்று அமர்ந்து, தங்களது உணவை உண்ணத் தொடங்கினர்.

அவர்கள் முன்பு வந்து நின்ற அமலா, தன் தொண்டையை கரகரத்துக் கொண்டு, “இன்னைக்கு ராத்திரி சீக்கிரம் வந்துருங்க தம்பி” என்றாள் விஜய்யைப் பார்த்து.

நிமிர்ந்து அமலாவைப் பார்த்தவன், “என்கிட்டையா சொன்னீங்க அண்ணி?” என்றான்.

“ஆமாம். இன்னைக்கு ரத்னாக்கும் அவள் வருங்கால புருஷனுக்கும் விருந்து வைக்கப்போறோம்” என்றாள் செய்தியாக.

“விருந்தா? என்ன திடீர்னு” என்றான் அவன்.

வதனா உணவை உண்டு கொண்டிருந்தாலும், அவள் காது மட்டும் அவர்கள் பேச்சைத் தான் கேட்டுக் கொண்டு இருந்தது.

“என்ன இப்படி கேட்டுட்டீங்க. அவளும் இந்த வீட்டு பொண்ணு தானே. அதுவும் இல்லாம அவள் உங்க தங்கச்சியும் கூட. நாம தானே அவள் கல்யாணத்தை முன்னாடி இருந்து நடத்தி வைக்கணும்” என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ம்.. சரி அண்ணி” என்றதும், “நீயும் வேகமா வந்துரு வதனா” என்று அவளிடமும் சொல்லிவிட்டு சென்றாள் அமலா.

அவள் சென்றதும், வதனாவிடம், “அண்ணி காரணம் காரியம் இல்லாம எதுவுமே செய்ய மாட்டாங்க வதனா. ரத்னாவை தன்னோட தம்பிக்கு திருமணம் செய்து வைக்கும் நினைப்பில் இருந்தவங்க, எப்போ இப்படி மாறினாங்கன்னு தெரியல” என்றான்.

“அவங்க மாறல அண்ணா. இதுக்குப் பின்னாடியும், அவங்களுக்கு லாபம் வரும் ஏதாச்சும் இருக்கலாம்” என்று சரியாக கணித்தாள்.

“இருக்கலாம்” என்று அவனும் தன் தலையை ஆட்டிக்கொண்டான்.

உண்டு முடித்துவிட்டு, திரும்பவும் கணினி முன் அமர்ந்த வதனாவிற்கு, வேலையே ஓடவில்லை. அவள் மனது எல்லாம் எங்கேங்கோ சுற்றி இறுதியில் குறளரசனிடம் வந்தே நின்றது.

‘ம்ச்... இப்ப எதுக்காக எங்க வீட்டுக்கு நீ வரப்போற. வந்து எனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்க பார்க்குற. சுலபமா சொல்லிட்டுப் போயிட்ட... வெறும் விபத்துன்னு...’ என்று குறளை நினைத்து மருகினாள்.

காதல் கொண்டு மனதால் மட்டும் இணையாமல், உடலாலும் இணைந்து விட்டு, சுலபமாக விபத்து என்று கூறி சென்றுவிட்டான். அவனிடம் பேசும் போது தன்னை தைரியம் மிகுந்தவளாக காட்டிக் கொண்டாலும், உள்ளத்தால் ஆயிரம் முறை இறந்தவள் தானே, இந்த சந்தரவதனா.

இனி அவள் கட்டிவைத்திருக்கும் தைரியம் அனைத்தும் கம்பீரமாக நிற்குமா அல்லது சீட்டுக்கட்டைப் போல் சரிந்து விழுமா என்பதனை காலம் தான் பதில் சொல்லும்.

“உனக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப்போறது தெரிஞ்சதும் என் மனசில் இருந்த பாரமே குறைஞ்சி போச்சு ரத்னா. உன் கல்யாணத்துக்காக நான் வேண்டாத தெய்வமே இல்ல” என்று வழக்கம் போல் அமலா ரத்னாவிடம் ஐஸ் மழையை பொழிந்து கொண்டிருந்தவள், “அப்படி தானேங்க” என்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அஜய்யையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.

அவனும், “ஆமாம் ரத்னா. உன் அண்ணிக்கு உன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம்” என்று ஜால்ரா தட்டினான்.

அதற்கு சிரித்துக் கொண்ட ரத்னா, குறளின் கைகளை அழுத்தமாக பிடித்தபடி, “எல்லாம் உங்க ஆசிர்வாதத்தால் மட்டும் தான், இப்படி ஒருத்தர் எனக்கு கிடைச்சிருக்காரு” என்றாள் குறளைப் பார்த்தபடி.

இதனை எல்லாம் தலையெழுத்தே, என்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர் விஜய்யும், வதனாவும்.

உணவு மேஜையில் அஜய்யும் அமலாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்கள் பக்கத்திலையே விஜய்யும் வதனாவும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிர்புறம் குறளரசனும், ரத்னாவும் அமர்ந்திருந்தனர்.

முதலில் வதனாவிற்கு கீழே வரவே விருப்பம் இல்லை. ஆனால் யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் தான் அவள் வந்தாள். இப்போது இங்கே நடக்கும் கூத்தை எல்லாம் பார்த்து, அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. அதுவும் வந்ததில் இருந்து, தன்னைப் புதியாதாக பார்ப்பதைப் போல் பார்வை பார்த்த குறளைக் கண்டு, அவள் நெஞ்சம் எல்லாம் பற்றி எரிய ஆரம்பித்தது.

அமலாவிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்த ரத்னாவின் பார்வை, இப்போது வதனாவை நோக்கி சென்றது.

“ஆறு மாசமா நீ எங்க போயிருந்த வதனா?. அண்ணி உன்னை நினைச்சு எவ்வளவு கவலைப்பட்டாங்க தெரியுமா?” என்றாள்.

அதற்கு வதனாவை முந்திக் கொண்டு பேசிய அமலா, “இவள் எங்க இருக்கான்னு தெரியாம, நான் எவ்வளவு தவிச்சு போனேன்னு உங்க அண்ணனுக்கு நல்லாவே தெரியும் ரத்னா. ஆனா வதனாக்கு அதெல்லாம் பெருசா தெரியல. என்னை மனசு நோகும் படி பேசுறா. நானும் சின்ன பொண்ணுன்னு அமைதியா போறேன். ஏதோ நான்குறதால இவளை அனுசரிச்சுப் போறேன். இதே நாளைக்குக் கல்யாணம் ஆகி போற வீட்ல, இதே மாதிரி பேச முடியுமா?. இவள் நல்லதுக்குப் பார்த்து என்னை கெட்டவளா ஆக்கிட்டா” என்று குறைபட்டுக்கொண்டாள்.

அதற்கு வதனா பெருசாக எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதில் ஆத்திரம் அடைந்த விஜய், “நானும் இந்த வீட்டில் இருந்து, என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் அண்ணி. நீங்க தேவை இல்லாம பேசவேண்டாம். விருந்தாளிங்க வந்துருக்காங்கன்னு பார்க்குறேன்” என்றான் குறளைப் பார்த்தபடி.

அதில் பட்டென்று அமலா தன் வாயை மூடிக்கொண்டு, தன் கணவனைப் பார்த்து முறைத்தாள். அவனோ இது அனைத்தையும் கண்டுகொள்ளாமல், பஞ்சாபி சிக்கனை கபளீகரம் செய்துகொண்டிருந்தான்.

‘இவரு தம்பி என்னை பேசுறான். கொஞ்சமாச்சும் கண்டுக்குறாரான்னு பாரு’ என்று தன் மனதிற்குள் நொடித்துக் கொண்டாள் அமலா.

நிலைமையை சகஜமாக்க வேண்டி, குறளரசனைப் பார்த்த விஜய், “நீங்க என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்கீங்க குறள்?” என்று கேட்க, அவன் வாயை திறப்பதற்குள், முந்திக்கொண்டு பதிலளித்தாள் ரத்னா.

“கிங் நிறுவனம் கேள்விபட்டு இருப்பியே அண்ணா. அதோட சிஇஓ இவரு தான்” என்றாள் பெருமிதமாக.

அந்த பதிலில் விழுக்கென்று குறளைப் பார்த்துவிட்டு, திரும்பவும் தன் தட்டில் கவனம் செலுத்தினாள் வதனா. அவள் மனதோ, ‘அப்ப எனக்கு வேலை கிடைச்சது இவனோட நிறுவனத்தில் தானா?. அப்ப தான் நான் இவனோட ஜாகியா இல்லைன்னு கண்டுபிடிச்சானா?’ என்று நினைத்துக் கொண்டாள்.

“வாவ்... நானும் அதைப் பத்தி நிறையா கேள்வி பட்டு இருக்கேன்” என்ற விஜய், திரும்பவும் அவனிடம் கேள்வி கேட்டான்.

“உங்க அம்மா அப்பா எல்லாம் என்ன செய்யுறாங்க?” என்று கேட்க, அதற்கும் முந்திக்கொண்டு ரத்னா பேசப்போக, அவள் கையைப் பிடித்துத் தடுத்த குறள், “நான் பேசுகிறேன்” என்பது போன்ற பாவனையில் பார்த்துவிட்டு, தானே அதற்கு விடையும் அளித்தான்.

அப்போது ரத்னாவின் கையை அவன் பிடித்ததை வதனாவின் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. எரிமலைக் குழம்பை அள்ளி உடம்பில் பூசியது போல், அவள் மேனி எங்கும் காந்தத் துவங்கியது.

இதென்ன பிரமாதம் என்பது போல், குறளின் பேச்சு அவளை மேலும் மேலும் அடியாளதிற்குள் செல்ல வைத்தது.

“என்னோட அம்மா அப்பா கொரியால தான் இருக்காங்க. அப்பா அங்க இருக்கும் எல்லாத்தையும் பார்த்துக்குறாங்க” என்று குறள் சொன்ன பதிலில் மொத்தமாக உடைந்து தான போனாள் வதனா.

‘அம்மா அப்பா இல்லைன்னு சொன்னதெல்லாம் பொய்யா!’ என்று அவளின் மனது அரற்றியது.

‘என்னை ஏமாத்தணும்னு தான் அப்படி செய்தானா? இல்லை இதற்குப் பின் ஏதாவது காரணம் இருக்குமா’ என்று அவள் மனதில் ஏதேதோ யோசனைகள் ஓடிக்கொண்டே தான் இருந்தது.

துக்கம் என்னும் கடலில் மிதந்து கொண்டு, தேவை இல்லாத யோசனைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தது வதனாவின் மனது.

“உங்க அம்மா கொரியன்னு ரத்னா சொன்னாளே!. அப்ப உங்க அம்மா அப்பா லவ் மேரேஜ்ஜா” என்று விஜய் தன் சந்தேகத்தைக் கேட்க, வெறுமனே, “ஆம்” என்று மட்டும் தன் தலையை ஆட்டிக்கொண்டான் குறள்.

அப்போது அவன் கை தெரியாமல் மேஜையின் நுனியில் பட்டு, அவனுக்கு வலியைக் கொடுக்க, “ஆ...” என்றான் சத்தமாக.

அவ்வளவு தான், அதுவரை மனதில் மறித்துக் கொண்டிருந்த வதனா, தன்னை சுற்றி இருந்த யாரையும் பொருப்படுத்தாமல், “அச்சோ பார்த்து...” என்று கத்திக் கொண்டே, தன் இருக்கையில் இருந்து எழுந்தவளாக, எக்கிப்போய், தன் முன்னே அமர்ந்திருந்த, குறளின் கையைப் பற்றினாள்.

இதில் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தவர்களாக வதனாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 16

தன் கையைப் பிடித்த வதனாவை, “என்ன பண்ற?” என்று அடிக்குரலில் சீறியபடி கேட்டான் குறள்.

அவனருகே அமர்ந்திருந்த ரத்னாவுக்கு ஆத்திரம் மிகுந்து போக, “ஹேய் வதனா, என்ன பண்ற?” என்ற அதட்டலோடு அவள் பிடித்திருந்த குறளின் கையை வெடுக்கென்று எடுத்துவிட்டாள்.

அப்போது தான் கனவுலகில் இருந்து முழித்தவள் போல் நின்றிருந்த வதனாவிற்கு தான் செய்த செயலின் காரியமே புரிபட்டது. அது வெறும் சாதாரண அடி தான். அதற்கு அவள் செய்த காரியம் மிகவும் பெரியதாக அனைவருக்கும் தெரிந்தது.

அனைவரும் தன்னையே நோக்குவதைக் கண்டவள், “அது.. அது ஒன்னும் இல்ல. நேத்து நானும் இதே மாதிரியே அடிச்சுக்கிட்டேன். இப்ப அது சாதாரணமா தெரிஞ்சாலும், ராத்திரி பயங்கரமா வலிச்சது. அதான் நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்” என்று கூறி சமாளித்தாள்.

ஆனால் ரத்னா இதை நம்ப மறுத்தாள். அவளுக்கு வதனாவின் செயல் மிகப்பெரிய ஆத்திரத்தைக் கொடுத்தது. அமலாவோ, வதனாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தாள். அஜய்யோ, நிமிர்ந்து பார்த்துவிட்டு, திரும்பவும் உணவை உண்ண ஆரம்பித்தான்.

வதனாவின் விளக்கத்தைக் கேட்ட விஜய் தான், “ரொம்ப வலிச்சதா வதனா. டாக்டரைப் போய் பார்ப்போமா?” என்றான் அக்கறையாக.

அவன் அக்கறையில் இப்போது அஜய்யுமே வியந்து போய் பார்த்தான்.

“இப்ப எனக்கு பரவாயில்ல அண்ணா” என்று சொல்லிவிட்டு, உணவு ஒன்றையே தன் கண்ணாக வைத்துக் கொண்டாள்.

“இவர்கள் இருவரும் எப்போது இப்படி ராசியாகினர்?’ என்பது போல் அமலாவைப் பார்த்த ரத்னா, அவள், ‘பிறகு சொல்றேன்’ என்று சைகை காட்ட, தன் தலையை ஆட்டிக்கொண்டாள்.

ஆனால், குறளின் கையைப் பிடித்த வதனாவின் மீது வந்த ஆத்திரம் மட்டும் ரத்னாவை விட்டு செல்லவில்லை.

“இவ்வளவு நாள் வெளியப் போய் என்ன பண்ண வதனா?” என்று கேட்டாள் ரத்னா.

உணவில் இருந்து தன் கண்ணை எடுக்காமல், “மும்பையில் இருக்கும் ராய் நிறுவனத்தில் வேலை பார்த்தேன் அக்கா” என்றாள்.

“அங்க பசங்களும் வேலை செயவாங்காளே...” என்று இழுக்க, “இது என்ன கேள்வி ரத்னா. ஒரு நிறுவனம்ன்னு இருந்தா எல்லாரும் தான் வேலை பார்ப்பாங்க” என்று முந்திக்கொண்டு கூறினான் விஜய்.

‘இவன் வேற’ என்று மனதிற்குள் விஜயை வசைபாடியவள், அவனைக் கண்டுகொள்ளாமல் வதனாவை நோக்கி, “அங்க உனக்கு யாரையாவது பிடிச்சிருந்ததா வதனா?” என்றாள் சிரித்தபடி.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அக்கா” என்று சொல்லிவிட்டு அமைதியானாள்.

“ஏன் உனக்கு யாரும் கிடைக்கலையா? இல்ல உன் முகத்தைப் பார்த்து யாரும் வரலையா?” என்று கேட்டுவிட்டு, ஏதோ மிகப்பெரிய ஜோக் ஒன்றை சொன்னவள் போல் சிரிக்க ஆரம்பித்தாள்.

விஜய் தான், “என்ன பேச்சு இது ரத்னா?. இதுவே நம்ம அம்மா அப்பா இங்க இருந்திருந்தா, இப்படி எல்லாம் நீ பேசுவியா? எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று கண்டித்தான்.

“அண்ணா, நான் விளையாட்டுக்கு தானே கேட்டேன்” என்று அவள் முகத்தை சுருக்க, “எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு ரத்னா” என்று அவன் சொல்லும் போதே இடையிட்ட, குறளரசன், “அதான் பேசாதன்னு சொல்லிட்டீங்களே! பின்ன எதுக்கு திரும்பத் திரும்ப ரத்னாவை ட்ரிக்கர் பண்றீங்க?” என்றான் அழுத்தமான குரலில்.

“என்ன? ட்ரிக்கர் பண்றேனா?” என்று விஜய் அதிர்ந்து போய் கேட்க, “அவள் விளையாட்டா பேசுனதை எல்லாம் பெருசு படுத்தாதீங்க. உங்க வீட்டுக்கு நாங்க வெறும் விருந்தாளிங்க மட்டும் தான்” என்றான் கோபமாக.

“அது மாதிரி, என் தங்கை இந்த வீட்டின் முதலாளி, அவளை ரத்னா அது போல் கேட்டு இருக்கக்கூடாது” என்று சொல்லும் போதே, மேஜையில் இருந்த விஜய்யின் கையை அழுத்தி, “வேண்டாம் அண்ணா” என்று மறுப்பாக தன் தலையை ஆட்டிக் கொண்டாள் வதனா. அதன் பிறகு விஜய் எதுவும் பேசவில்லை. ஆனால் அமலாவோ, “சின்ன விஷயத்தை பெருசு பண்ணாதீங்க தம்பி. ரத்னா கேட்டதில் என்ன தப்பு இருக்கு. வயசு பிள்ளைங்க இது போல் பேசுறது எல்லாம் சகஜம் தானே!” என்று கூற.

அதற்கு ஏதோ பேசப்போன விஜய்யை, “வேண்டாம் அண்ணா” என்று கூறி தடுத்தவள், இப்போது ரத்னாவைப் பார்த்து, “எனக்குன்னு வாழ்க்கையில் நிறையா லட்சியம் இருக்கு அக்கா. ஏற்கனவே நான் நரகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்து, எனக்கான உலகத்தை அமைச்சிக்கிட்டு இருக்கேன். இதில் நீங்க சொல்றதை எல்லாம் செய்யுறதுக்கு எனக்கு நேரம் இல்ல” என்றவள் பார்வை குறளரசனைத் தொட்டு மீண்டது.

பின், விஜய்யும், வதனாவும் தங்களது அறைக்கு சென்றிருக்க, குறளுடன் பேசிக்கொண்டிருந்தான் அஜய்.

குறளின் கீழ்பார்வை, அவனின் விட்டோதித்தனமான பேச்சு, அஜய்க்கு எரிச்சலை உண்டு செய்துகொண்டிருந்தது. அப்படி இருந்தும் தன் மனைவிக்காக பேசிக்கொண்டு இருந்தான்.

இங்கே தோட்டத்தில் வேறு ஒரு பக்கம் அமர்ந்து கொண்டு அமலாவும் ரத்னாவும் பேசிக் கொண்டு இருந்தனர்.

“நீ சொன்னது நீஜம் தானே ரத்னா” என்று அமலா சிறிது தயங்க.

“நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் அண்ணி. நான் குறளைக் கல்யாணம் பண்ணிட்டு கொரியாக்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். இங்க இருக்கும் பிசினஸ் அனைத்தையும் பார்க்க ஒரு ஆள் தேவைப்படுதது. அதுக்கு உங்க தம்பியைத் தவிர வேற யாரும் சரியா வரமாட்டாங்க” என்றாள் அவளின் கைக்கு அழுத்தம் கொடுத்தபடி.

“அவன் கல்லூரியில் மெடல் எல்லாம் வாங்கி இருக்கான் ரத்னா. அவன் நல்லா பார்த்துப்பான். ஆனா நீ இங்க இல்லாம நான் தான் என்ன செய்யப்போறேன்னு தெரியல” என்று வருத்தமும் அடைந்து கொண்டாள்.

“இதுக்கு எதுக்கு அண்ணி வருத்தப்படுறீங்க?. என்னைப் பார்க்கணும்னா ஒரு கால் பண்ணுங்க. நான் உடனே உங்களுக்கு ப்ளைட் டிக்கெட் போடுறேன்” என்றாள் ரத்னா.

அதில் வாயைத் திறந்து ஆச்சரியம் கொண்ட அமலா, “நிஜமாத் தான் சொல்றியா?. நான் என் வாழ்க்கையில் வெளிநாட்டை எல்லாம பார்த்ததே இல்ல தெரியுமா. உன் அண்ணன் எப்ப பார்த்தாலும் அந்த நகைக்கடையையே கட்டி அழறாரு. இதில் இவரு எங்க என்னைக் கூட்டிட்டு போவாரு. ஏதோ உன் புண்ணியத்தில் நான் கொரியாவை பார்த்தாதான் உண்டு” என்று சலித்துக் கொண்டிருந்தாள்.

அஜய்யின் பேச்சு எல்லாம் குறளின் எரிச்சலை அதிகப்படுத்த, குறளின் பேச்சு வேறாக மாறியது. அப்படி இருந்தும் அஜய் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி, அவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“இங்க பாருங்க அஜய். ரத்னா கழுத்தில் போட்டு இருக்கும் மயில் நெக்லஸ், நீங்க கொடுத்ததுன்னு சொன்னா. அதுக்கான பணத்தை உங்களுக்கு நான் கொடுத்துடுறேன்” என்று சொல்லிக் கொண்டே தன் காற்சட்டைப் பையில் இருந்த வெற்று செக்கை கையெழுத்திட்டு அவனிடம் நீட்டினான்.

“என்ன குறள் பண்றீங்க. நான் அவளுக்கு, தங்கைன்னு ஆசையில கொடுத்தேன். நீங்க அதுக்கான பணத்தை திருப்பி தர்றது என்னை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு” என்றான்.

“நீங்க முதல்ல உங்க சொந்த தங்கச்சியைப் பாருங்க மிஸ்டர். அதுக்குப் பிறகு உங்க சித்தப்பா பெண்ணைப் பார்க்கலாம்” என்று முகத்தில் அடித்தபடி கூறினான் குறள்.

“இல்ல...” என்று அஜய் ஏதோ சொல்ல வருவதற்குள், அந்த காசோலையை அஜய்யின் சட்டைப் பையில் வைத்தவன், “இதுக்கும் மேல உங்கக்கூட பேச எனக்கு துளியும் விருப்பம் இல்ல. ரத்னாக்காக மட்டும் தான் உங்க கூடவெல்லாம் பேசுறேன். இப்ப நீங்க போகலாம்” என்று முகத்தில் அடித்தபடி கூறிவிட்டான்.

குறளைப் பார்த்து எதுவும் திட்டமுடியாத ஆத்திரத்தில், நிலத்தை ஓங்கி எத்திவிட்டு, ‘சரியான கிறுக்கனா இருக்கான். எப்படி பேசணும்னு கூட தெரியல. என் வீட்டிற்கு வந்து என்னையவே பேசுறான்’ என்று தன் மனதினுள் திட்டிக் கொண்டே, அங்கிருந்து சென்றான்.

அஜய் சென்றதும் தண்ணீர் பருக சமையல் அறைக்குள் நுழைந்தாள் வதனா. குறளைத் தாண்டி தான் சென்றாள். ஆனால் சிறிதும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஆனால் அவன் அவளையே தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததான்.

அவனது மனதில் தென்றல் காத்து சூறாவளியாக மாறி, அவனை அலைக்கழித்தது என்னவோ உண்மை.

அவள் சென்ற சில கணங்களில், ஏதோ உடையும் சத்தம் கேட்டது. அதில் பதறிப்போய் முந்திஅடித்துக்கொண்டு, சமையலறைக்குப் போனான் குறள்.

அங்கே கண்ணாடி தம்பளார் உடைந்து இருக்க, கையில் சொட்டும் ரத்தத்துடன் நின்றிருந்தாள். அவ்வளவு தான் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போன்று ஓடி சென்று, ரத்தம் சொட்டும், வதனாவின் விரலை தன் வாயில் வைத்திருந்தான் குறள்.

வதனாவிற்கு அதிர்ச்சியுடன், வலி, வேதனை, சொல்லமுடியாத நடுக்கம் என்று அனைத்தும் சேர்ந்தே வந்தது.

கடினப்பட்டு அவனிடம் இருந்து தன் கையை எடுத்துக் கொள்ள முனைந்தாள். அவனோ விடாமல், “என்ன பண்ற வதனா? கையில் காயம் வந்துருக்குப் பாரு” என்று சொல்லிக் கொண்டே, அவளை தன்னுடன் இழுத்துச் சென்று, அங்கே இருந்த குழாயில் அவளது கையை கழுவ ஆரம்பித்தான்.

வதனாவிடம் பேச்சு இல்லை. குறளோ, தான் என்ன செய்கின்றோம், ஏது செய்கின்றோம் என்பதை அறியாமல் அவன் பாட்டிற்கு அவனது வேலையை செய்து கொண்டிருந்தான்.

இருவருக்குள்ளும் வேதியியல் மாற்றம் நிகழ ஆரம்பித்தது. இருவருமே ஒருவருக்கொருவர் புதியவர் அல்லவே. அதனால் வேதியல் மாற்றம் வேகமாக நிகழ ஆரம்பித்தது.

இருவரும் தங்களது தனி உலகில் டூயட் பாடவே ஆரம்பித்து இருந்தனர்.

அதில் முதல் அடி எடுத்து வைத்த குறள், அவள் கையில் முத்தம் வைத்தான். பல மாதங்களுக்குப் பிறகு கிடைக்கும் முத்தத்தில் தன்னிலையில் அவளும் இல்லை அவனும் இல்லை.

பின் மெதுவாக, அவளின் பின்பக்கம் வந்து நின்றவன், இன்று காலை அவனை சீண்டிய, அவளின் அழகு சங்கு கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

அவன் உதடு பட்டதும், அவளுள் படபடப்பு. தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு அவனை உணரத் தொடங்கினாள் பெண்.

சரியான நபர்கள் தான். ஆனால் அவர்கள் நிற்கும் இடம் சரியான இடம் இல்லையே!. எப்போது வேண்டுமானாலும் அந்த இடத்திற்கு யாரேனும் வந்துவிடும் சூழல் இருந்தது.

ஆனால் வேலையாட்கள் அனைவருமே எப்போதோ அங்கிருந்து கிளம்பி இருந்தனர். அந்த வீட்டில் குடும்ப நபர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

கழுத்தில் முத்தை எடுத்துக்கொண்டிருந்தவனின் கைகள் மெதுவாக, அவளின் இடையைத் தொட்டு மேலும் கீழே இறங்கப்போக, அப்போது தான் ஷாக் அடித்தவள் போல் தன் நிலையை வதனா உணர, சரியாக அந்த இடத்திற்கு வந்த அமலா, “வதனா...” என்று அதிர்ச்சி கலந்த கோபத்தோடு கத்தினாள்.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 17

குறளரசனும், வதனாவும் தங்களை மறந்து, நின்றுகொண்டிருக்க, அவனது எண்ண ஓட்டத்தை உணர்ந்த வதனா, அவன் கைகளை தட்டி விடும் போது, சரியாக யாரோ சமையல் அறைக்குள் நுழையும் காலடி சத்தமும் கேட்டது. அதில் பதறிய வதனாவின் கைகள் எல்லாம் நடுங்க, அங்கே இருந்த இன்னொரு வழியான தோட்டத்திற்கு செல்லும் வழியே வெளியேறினான் குறள்.

அந்த நேரம் உள்ளே வந்த அமலா, உடைந்து கிடந்த கண்ணாடி சாமானைப் பார்த்தவள், கோபம் கொண்டவளாக, “வதனா... என்ன பண்ணி வச்சிருக்க?” என்று கத்தினாள்.

அப்போது தான் மூச்சு விட்டு ஆசுவாசம் அடைந்த வதனா, அமலாவைப் பார்த்து, “இதை உங்க வீட்டில் இருந்து நீங்க கொண்டு வரல. அதனால ஓவரா கத்தாதீங்க” என்று சாதரணமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

செல்லும் வதனாவை வன்மத்துடன் பார்த்தவள், “உடைச்சிட்டு சுத்தம் செய்யாம போற?. இதை சுத்தம் செய்யுறதுக்கு நான் ஒன்னும் இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வரல” என்றாள் கத்தலாக.

இப்போது திரும்பி பார்த்த வதனா, “நான் உங்களை கிளீன் பண்ணவே சொல்லவில்லையே! உடனே சுத்தம் செய்யுறதுக்கு வீட்டில் வேலை ஆட்கள் இல்ல. அதே மாதிரி இங்க ஒன்னும் சின்ன குழந்தைங்க இல்லையே, அவங்க காலால் இதை மிதிச்சிருவாங்கன்னு பயப்படுறதுக்கு. எனக்கு தூக்கம் வேற வருது. நாளைக்கு வேலைக்காரங்க வந்ததும் கிளீன் பண்ணிக்கலாம்” என்று சொல்லிவிட்டு, அங்கே நிற்காமல் சென்றுவிட்டாள்.

வதனாவை கரித்துக் கொட்டியபடி தன் அறைக்குள் நுழைந்த அமலா, தன் கணவனைப் பார்த்து, “நிலைமை எல்லாம் நம்ம கையை மீறி போயிருச்சிங்க. அந்த வதனா என்ன பேச்சு பேசுறான்னு தெரியுமா” என்றாள் எரிச்சலுடன்.

“நானும் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்கேன் அமலா. விஜய்யும் அவளுடன் சேர்ந்து அதிகம் ஆடுறான். ரெண்டு பேருக்கும் இருக்கு” என்று பல்லைக் கடித்தான்.

“என்ன இருக்கு? உங்களால என்ன பண்ண முடியும்?. வதனாவை யார் கல்யாணம் பண்றானோ, அவனுக்கு எல்லாம் போகப்போகுது. நாம கையைக் கட்டி வேடிக்கைப் பார்க்க வேண்டியது தான்” என்றாள் கோபமாக.

“வதனா பேச்சை எல்லாம் பார்த்தா, அவள் கண்டிப்பா புருஷனுக்கு அடங்கிப் போற ஆள் மாதிரி தெரியல. அதனால அவளுக்கு கல்யாணம் ஆனாலும், அவள் ஷேர்ஸ் விஷயத்தில் யாரையும் நுழைய விட மாட்டா” என்றான் தன் தாடையைத் தடவியபடி.

“எப்படிங்க அவள் இவ்வளவு புத்திசாலியா மாறுனா?. இப்ப நாம என்ன பண்றது?” என்றாள் சோகமாக.

“ஒன்னு குறுக்குவழியில் யோசிக்கணும் இல்லையா வதனாவை பகைக்காம இருக்கணும்” என்றான் அஜய்.

“ம்க்கும்...” என்று முகத்தை சுழித்த அமலா, “ரெண்டாவது சொன்ன யோசனை என்னைக்குமே நடக்க வாய்ப்பில்லை. இந்த உலகத்தில் எனக்கு பிடிக்காதது யாருன்னா அது வதனா மட்டும் தான்” என்றாள்.

“சரி கொஞ்சம் பொறுத்து இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு, அவளை அணைக்கப் போக, அவனை தள்ளிவிட்ட அமலா, “உங்களுக்கு எப்ப பார்த்தாலும் இதே நினைப்பு தானா? ஏதவாது புதுசா ப்ளான் பண்ணிட்டு தூங்கப் போங்க” என்று ஆணையிட்டவள், தான் மட்டும் படுக்கையில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

‘ஆமாம் நீ பூதம் மாறி நல்லா தூங்குவ. நான் தூங்காம முழிச்சி இருந்து திட்டம் தீட்டணுமாக்கும்’ என்று தன் மனதில் நொடித்துக் கொண்டவன், தானும் படுத்துக் கண்ணை மூடி, ‘புஜ்ஜிக்குட்டி உன்னை மிஸ் பண்றேன்டா மாமாக்குட்டி’ என்று நினைத்தபடி, கனவில் சுஜியுடன் டூயட் பாட ஆரம்பித்தான்.

இங்கே தங்களது வீட்டிற்கு வந்த குறளரசனால், ரத்னாவை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை.

“குறள்” என்று ரத்னா மயக்கும் குரலில் எதுவோ கூற வர, “எனக்கு தூக்கம் வருது ரத்னா” என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் சென்று, கதவை அடித்து சாத்தினான்.

குறளின் இந்த செயல், ரத்னாவிற்கு வலியைத் தர, “என்னாச்சி இவனுக்கு. ஒரு வேளை இவன் சுபாவமே இது தானோ. இல்ல அமலா அண்ணி சொன்ன மாதிரி..” என்று ஏதோ யோசித்தவள், “ச்சீ... சீ அதெல்லாம் இருக்காது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

தோட்டத்தில் அமர்ந்து அமலாவும் ரத்னாவும் பேசிகொண்டிருக்கும் போது அமலா சொன்ன ஒரு விஷயம் தான் இப்போது, ரத்னாவின் நியாபகத்தில் வந்து சென்றது.

“பார்த்தியா ரத்னா. அழகா அம்சமா ஒரு பையன் கண்ணுக்கு தெரிஞ்சிர கூடாது. உடனே இந்த வதனா எப்படி விழுந்து போய், உன் வருங்கால கணவர் கையைப் பிடிக்குறான்னு பார்த்தில்ல... உன் நல்லதுக்கு சொல்றேன் பார்த்து கவனமா இரு” என்று எச்சரிக்க செய்தாள்.

“அவள் என்ன செய்தாலும் குறளின் மனதில் இடத்தைப் பிடிக்க முடியாது அண்ணி. ஏன்னா அவர் எனக்கே எனக்குன்னு படைக்கப்பட்டவர். எனக்காக இவ்வளவு வருஷம் காத்திருந்தார்” என்றாள் ரத்னா.

“உன்னவர் நல்லவர் தான் ரத்னா. ஆனா இந்த வதனா அப்படி இல்லையே!. இன்னைக்கு அவளோட ஒவ்வொரு அசைவுகளும் வித்தியாசமா இருந்துச்சி. உணவு தட்டில் கவனமா இருக்குற மாதிரி அந்த வதனா நல்லா நடிச்சா. ஆனா நான் யாரு, அதை கண்டுபிடிச்சிட்டேன். குறளுக்கு ஒன்னுனதும் எப்படி போறான்னு பார்த்தில்ல” என்றாள் முகத்தை சுழித்துக்கொண்டு.

“நானும் பார்த்திட்டு தான் இருந்தேன் அண்ணி. நம்ம முன்னாடியே முன்னப்பின்ன தெரியாத, ஆணின் கையைப் பிடிக்குறா. அதுவும் அவர் என்னோட வருங்கால கணவர்னு தெரிஞ்சே பிடிக்குறான்னா, அவள் பெரிய கேடியா தான் இருப்பா” என்றாள் தன் பங்கிற்கு.

“அதுக்கு தான் நான் சொல்றேன் ரத்னா. ரொம்ப ஜாக்கிரதையா இருந்துக்கோ. அடுத்தவள் புருஷனை எப்ப தான் தன் கைக்குள்ள போடலாம்னு இந்த வதனா மாதிரியான ஆட்கள் எல்லாம் அலையுறாளுங்க” என்று வதனாவை ஏதேதோ சொல்லி வசைபாடினாள்.

அதனை நினைத்துப் பார்த்த ரத்னா, தன் அறைக்குள் இருந்த, ஆளுயுரக் கண்ணாடி முன் வந்து நின்று, தன்னை மேலும் கீழுமாய் பார்த்தவள், “அந்த வதனா ஒன்னும் என்னை விட பெரிய அழகி எல்லாம் ஒன்னும் இல்லையே! குறளை யாருக்கும் கொடுக்க மாட்டேன். அவன் எனக்கு மட்டும் தான். எங்க போகப் போறான் இங்க தானே இருக்கான்” என்று உண்மை எதையும் அறியாமல் ஏதேதோ பேசினாள்.

இங்கே தன் அறையில் ஆக்ரோஷமாக சுவற்றை குத்திக் கொண்டு இருந்தான் குறள். அவன் சிறிது நேரத்திற்கு முன்பு செய்ததை எல்லாம் நினைத்து வெட்கி கோபம் கொண்டு, பலவாறாக தன்னைத் தானே காயம் செய்து கொண்டிருந்தான்.

அவனும் அறிவான், வதனாவைப் பார்த்ததும் உருகி கரையும் அவனது மனது ரத்னாவைப் பார்த்ததும் பத்தடி தள்ளி தான் நிற்கின்றது. ரத்னாவைத் தான் திருமணம் செய்யப் போகின்றேன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும், வதனாவைப் பார்க்கையில் அவன் தன்னிலை இழந்து அவன் சபதம் எல்லாம் கேள்விக்குறியானது.

“எனக்கு என்ன தான் ஆச்சு. இது நான் இல்ல... எல்லாரும் பயப்படுற கிங் நான். என்னையவே ஒரு பொண்ணு அவளிடம் மண்டிபோட வைக்குறா.... இல்ல... இல்ல....” என்று இன்னும் இன்னும் வேகமாக சுவற்றைக் குத்தினான் குரல்.

அதே வேளை அங்கே தன் அறையில் ஒடுங்கிப் போய் தன் கால்களைக் கட்டிக் கொண்டு அதில் தலைவைத்துப் படுத்திருந்தாள் வதனா.

“என்னால சுத்தமா முடியல” என்று வாய்விட்டு சொல்லி அழ ஆரம்பித்தாள்.

என்ன தான் தைரியமாக வெளியே காட்டிக்கொண்டாலும், அவன் தொடுதலில் தன்னை மறந்து தான் கட்டி வைத்திருந்த கோட்டையை தகர்த்து தான் விட்டாள்.

அவளை நினைத்தே அவளுக்குக் கோபம் வந்தது. என்னடா வாழ்க்கை இது என்று நினைத்தபடி தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அழுத்தமாக துடைத்தவள், ‘மதிப்பில்லா காதலுக்காக அழறத முதலில் நிறுத்து வதனா’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், தரையில் இருந்து எழுந்து, “வெறும் மூணே மாதங்கள் மட்டும் தான். எவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து போகணுமோ அவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து போயிடணும்’ என்று நினைத்தவளுக்கு, அந்த நேரம் ஆறு மாதங்களுக்கு முன்பு குரளரசனுடன் ஓருடல் ஈருயுறாய் ஒட்டி உறவாடிய வாழ்க்கை நியாபகம் வந்து துளைத்தது.

அங்கே அதே நினைவில் தான் குறளரசனும் இருந்தான்.

“நீங்க என்ன சொல்றீங்க? இப்பவே நமக்கு கல்யாணமா?” என்று வதனா கேட்க, “ஆமாம் இப்பவே லேட் ஆகிடுச்சி. இந்த நேரம் ரிஜிஸ்டர் ஆபிசை பூட்டி இருப்பான். நாம கோவிலில் வச்சி கல்யாணம் பண்ணலாம்” என்று அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்று, திருமணமும் செய்தான்.

தன் தாயும், தந்தையும் தங்களைப் பிரித்து விடுவார்களோ என்ற பதற்றம் அவனுக்கு அதிகமாக இருந்தது. அதனால் சிறிது நேரத்தைக் கூட அவன் வீணாக்க விரும்பவில்லை.

அவசர கதியில் பார்த்து, அவசர கதியில் திருமணம் செய்து அதோடாவது விட்டு இருக்கலாம் அவன். ஆனால் ஆசை யாரை விட்டது.

மகாபலிபுரத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏழு நட்சத்திர விடுதிக்கு அவளை அழைத்துச் சென்றவன், “திங்கட்கிழமை நாம் இங்க இருந்து டெல்லி போகலாம் வதனா” என்று சொல்லிக் கொண்டே, அவள் கன்னத்தில் மெதுவாக தன் இதழைப் பதித்தான்.

அந்த இனிய தனிமை இருவருக்கும் உள்ளே ஏதேதோ செய்ய ஆரம்பித்தது. அவள் இதழ் ஒற்றல், பெண்ணவளின் இதயத்தை அதிகமாக துடிக்க வைக்க, அவன் மேலும் முன்னேறி ஆழமாக பெண்ணவளின் செர்ரி போன்ற இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான். வதனாவுக்கும் அவனைத் தடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.

இனி குறள் மட்டும் தான் தன் வாழ்வில் உண்டு என்ற முடிவே எடுத்துவிட்டாள்.

அவன் கைகளோ, பெண்ணவளின் கொடி இடையை அழுத்தமாக பற்றிக் கொண்டது. பின் என்ன? நடந்த அனைத்திற்கும் இருவருமே சாட்சி.

எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது திங்கட்கிழமை காலை விடியும் வேளை வரை.

“இன்னும் ஒரு மணி நேரத்தில் நாம கிளம்பி ஏர்போர்ட் போகணும் ஜாகியா” என்று அவசரமாக சொன்னவன், முகத்தில் புன்னகை தழுவியபடியே இருந்தது.

உலகையே வென்று விட்டது படி மிகவும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருந்தான் குறளரசன்.

“டெல்லில எனக்கு வேலை கிடைக்கும்ல குறள்” என்று அவள் சந்தேகத்தோடு கேட்க, வெறுமனே சிரித்துக் கொண்ட குரல், ‘உனக்காக முதலாளி இருக்கையே காத்துக்கிட்டு இருக்கு ஜாகியா’ என்று மனதிற்குள் இன்பமாய் நினைத்துக் கொண்டான்.

தொடந்து பேசிய வதனா, “டெல்லியில் இருக்கும் கிங் டெக்னோவில் தான் எனக்கு வேலை கிடைச்சிருந்தது” என்று சொன்னதும் அவன் அதிர்ந்துவிட்டான்.

‘கிங்லையா! ஆனா எனக்கு ஏன் இதைப் பத்தி எந்த தகவலும் வரல’ என்று யோசித்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 18

சந்தரவதனாவின் பேச்சில் அவன் யோசனைக்கு செல்ல, “கேம்பஸ் இன்டெர்வீவ்வில் எனக்கு கிடைச்ச வேலை அது” என்று வதனா கூற, அதில் தன் புருவத்தை சுருக்கிய குறள், “என்ன சொல்ற? அப்ப இந்த வேலை உனக்கு எப்ப கிடைச்சது?” என்றான்.

அவள் அனைத்தையும் கூற, அதில் மொத்தமாக அதிர்ந்தவன், “என்னது இப்ப தான் உன் படிப்பையே முடிச்சியா?” என்றவன், பின் தன்னை சமாளித்துக் கொண்டு, “நீ நல்லா படிக்கும் பொண்ணுன்னு நான் நினைச்சேன்” என்று கூறினான். அவள் அரியர்ஸ் வைத்து வைத்து இவ்வளவு காலம் படித்து, இப்போது தான் படிப்பை முடித்திருப்பாள் போல என்று நினைத்துக் கொண்டான்.

அதற்கு சிரித்தவள், “நான் நல்லா படிக்கும் பொண்ணு தான் குறள். உங்க மனைவி ஒன்னும் முட்டாள் இல்ல. நான் கோல்ட் மெடலிஸ்ட் தெரியுமா?” என்றாள் தன்னிடம் இல்லாத காலரை தூக்கிவிட்டபடி.

அவனுக்கு பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. “என்ன சொல்ற? உன் வயசு என்ன?” என்று அவன் கேட்க, அவளும் பதில் சொல்ல, ‘எங்கோ தவறு நடந்து விட்டது’ என்பதை உணர்ந்து, தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்றான்.

அவனின் முகமும் அவனது செயலும் எதுவுமே வதனாவின் மனதிற்கு சரியாகப்படவில்லை.

சில கணங்களுக்குப் பிறகு உள்ளே வந்தவன், “உன்னோட அம்மா அப்பா பெயர் என்ன?” என்றான் பாறை போல் இறுகிய குரலில்.

அதற்கு அவளும் பதிலளிக்க, தன் தலையை பிடித்துக் கொண்டு பெருமூச்சு ஒன்றை விட்டவன், “என்னோட ஜாகியா நீ இல்ல” என்று மெதுவாக அவளை நோக்கிக் கூற, அதில் குழப்பம் அடைந்தவள், “நீங்க என்ன பேசுறீங்க குறள்? தலை ஏதும் வலிக்குதா?” என்று கேட்டுக் கொண்டே அவனின் தலையைப் பிடிக்க அவள் வர, படாரென்று அவளின் கையைத் தட்டி விட்டு, தனது முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன், “என் பக்கத்தில் வராத” என்று கத்தினான்.

அவன் சத்தம் பெண்ணின் கண்களில் இருந்து நீரை சுரக்க வைக்க, “நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா குறள். எதுக்காக இவ்வளவு கோபப்படுறீங்க” என்று உடைந்து அழுதாள்.

அவளின் அழுகை ஆடவனுக்கு வலியைத் தந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்குள் அடக்கிக்கொண்டவன், “ஏதோ தப்பு நடந்துருச்சு. நான் சின்ன வயசுல பாத்துப் பழகுன என்னோட ஜாகியா நீ இல்ல” என்றான் கோபத்துடன்.

“இல்ல எனக்குப் புரியல. இறுதி வரைக்கும் உன்னோட கைகளை விடவே மாட்டேன்னு சத்தியம் எல்லாம் செய்தீங்களே! நீங்க தானே இப்பவே திருமணம் பண்ணிக்கலாம்னு சொன்னீங்க. உங்க விருப்படி தானே எல்லாமே நடந்துச்சு. கண்ணைக் கட்டிக் கொண்டு நல்லது கெட்டது எதுவுமே யோசிக்காம, உங்க பின்னால் தானே வந்தேன் குறள்.” என்று கூறி அழுதவள், அவன் கைகளைப் பற்றி, “இதெல்லாம் நீங்க பண்ற பிரான்க் மட்டும் தான்னு சொல்லுங்க குறள்... சொல்லுங்க” என்று அவன் கையைப் பிடித்து உலுக்கினாள்.

ஆனால் எதுக்குமே அசையாமல் மரம் போல் நின்றிருந்த குறள், “இது பிரான்க் இல்ல. உண்மை மட்டும் தான். நான் தேடுன பொண்ணு நீ இல்ல” என்று அவன் மரத்த குரலில் கூற.

இப்போது வெடித்து சிதற ஆரம்பித்தாள் வதனா, “என்ன ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க. என் கழுத்தில் தாலி கட்டும் போது தெரியல, என் கூட படுக்கும் போது தெரியல. இப்ப உனக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சா” என்று கத்தினாள்.

அதற்கு எதுவும் பேசாமல் தன் மணிக்கட்டில் கட்டி இருந்த தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “எனக்கு வேலை இருக்கு. என்னால இதுக்கும் மேல இங்க இருந்து உன் பேச்சைக் கேட்டு, என் நேரத்தை வீணடிக்க முடியாது” என்றவன் அவளை அங்கே விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.

மிகப்பெரிய கொடூரத்தை தான் அவன் செய்துவிட்டான். அவன் அவளுக்குத் தந்த நம்பிக்கை எல்லாம் எரிந்து சாம்பலாகி காற்றோடு காற்றாக பறந்து சென்றுவிட்டது.

“இப்போது பிடித்த உன் கையை எப்போதும் கைவிட மாட்டேன்” என்றவன் வார்த்தைகள் எல்லாம் சருகாய் காய்ந்து போய், வெறும் இரண்டு நாட்களிலையே மண்ணோடு மண்ணாக கரைந்து விட்டது.

இவ்வளவு நேரம் அப்படியே அழுதாள் என்பது வதனாக்கு தெரியவில்லை, மெதுவாக எழுந்தவள், ஏற்கனவே தன் கையில் இருந்த பணத்தை பத்திரப்படுத்திக் கொண்டு, மும்பை செல்லும் ரயிலில் ஏறினாள். அங்கே ரயில்வே டொமன்ட்ரியில் இரண்டு நாட்கள் தாங்கியவள், பின் தனக்கென்று ஒரு வீடையும் தேடி, வேலையையும் தேடிக்கொண்டாள்.

அவசர கதியில் அனைத்தையும் பார்த்ததால், வீடு மிகவும் சுமார் நிலையில் தான் இருந்தது. ஆனால் அவளின் அதிஷ்டமாக ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது. ஆனால் சம்பளம் மிகவும் குறைவு. வேலை கிடைத்ததே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

இது அனைத்தையும் நினைத்தபடி நிழல் காலத்திற்கு வந்த வதனா, ‘எவ்வளவு பெரிய பொய்யை என்கிட்ட சொல்லி இருக்கான். அவன் கண்டிப்பா பிராட் தான்’ என்று அவளின் ஒரு மனது சொல்ல, அவளின் இன்னொரு மனமோ, “அவன் அப்படி இல்லை. கிங் டெக்னோவின் முதலாளி எவ்வாறு அப்படி இருக்க முடியும்’ என்று சொல்லியது.

‘பின்ன எதுக்காக, தனக்கு யாரும் இல்லைன்னு பொய் சொல்றான். இதைப் பத்தி அவன் கிட்ட கேட்டே ஆகணும். ஏன்னா இதில் பாதிக்கப்பட்டது நான் தான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

இரவு முழுவதும் அழுது முடித்து, மறுநாள் காலையில் எழுந்து, அழுதத் தடம் தெரியாமல், நன்றாக அரிதாரம் பூசிக் கொண்டு கீழே வந்தவள், உணவு மேஜையில் சென்று அமர்ந்தாள்.

அவளை இதுவரை அப்படி பார்த்திராத அமலா, ‘இப்ப எதுக்காக மேக்அப் போட்டு மினுக்கிக்கிட்டு இருக்கா’ என்று யோசிக்கும் போதே, அங்கே அஜய்யும், விஜய்யும் வந்தனர்.

வதனாவைப் பார்த்து புன்னகை புரிந்த விஜய், “இன்னைக்கு பார்க்க ரொம்ப பிரெஷ்சா இருக்க வதனா. இனி எப்போதும் இப்படியே இரு. நம்மை க்ரூமிங் பண்ணிக்கிட்டாத் தான் நமக்கு தன்னம்பிக்கையும் கூடும்” என்றான்.

‘இதுங்க என்ன புதுசா பாசப்பயறு வளர்க்குதுங்க’ என்பது போல் அவர்களைப் பார்த்து வைத்தான் அஜய்.

“இன்னைக்கு என்னோட பிரான்ச்க்கு வா வதனா” என்று விஜய் அழைக்க, “சரி அண்ணா” என்றாள் வதனா.

“அப்ப சேர்ந்தே போவோம் வதனா” என்று விஜய் சொன்னதும் தன் தலையை ஆட்டிக் கொண்டாள் வதனா.

பின் இருவரும் மகிழுந்தில் பயணம் செய்து கொண்டு இருக்க, “உனக்கும் ரத்னாக்கும் என்ன பிரச்சனை?” என்று தன் தங்கையிடம் கேட்டான் விஜய்.

அதில் உள்ளுக்குள் பதற்றம் அடைந்தவள், வெளியே தன்னைத் திடமாகக் காட்டிக் கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா” என்றாள்.

“ஒன்னும் இல்லைன்னு நீ சொல்ற. ஆனா அவளோட பார்வை எல்லாம் வேற மாதிரி இருந்தது. அவள் கண்ணுல எரிக்கும் சக்தி இருந்தா, உன்னை எரிச்சி இருப்பா” என்று விளையாட்டாக சொல்லி புன்னகைக்க, பதில் புன்னகை செய்தவள், “ரத்னா எப்போதும் அப்படித் தான் அண்ணா. சின்ன வயசில் இருந்தே என்னைப் பிடிக்காது. இதில் அவள் தப்பும் எதுவும் கிடையாது. அம்மா அப்பா அரவணைப்பு அக்காக்கு இல்ல” என்றாள்.

“அதுவும் சரி தான். ஆமாம் அந்தப் பையன் குறளரசன், அவனைப் பத்தி நீ என்ன நினைக்குற?” என்று கேட்டதும், வதனாவின் வயிற்றில் சுழன்று கொண்டிருந்த பயப்பந்து, அவள் கழுத்திற்கு வந்து நின்றது.

“நான் என்ன நினைக்குறேன்... ஒன்னும் நினைக்கலையே” என்று பதறினாள்.

“அதில்ல வதனா. கிங் நிறுவனத்தைப் பத்தி நான் கேள்வி பட்டு இருக்கேன். அவன் பெயர் கூட நம்ம தமிழ் நாட்டுப் பெயராத் தான் இருக்கு. ஆனா ஆள் தான் பார்க்க, சீனாக்காரன் மாதிரி இருக்கான். அவன் நம்பிக்கையானவனா இருப்பானா?” என்றான்

“அதெப்படி அண்ணா எனக்குத் தெரியும்” என்று எந்த ஒரு பாவனையையும் முகத்தில் காட்டாமல் இறுகிப் போய் பேசினாள்.

“வேற ஒன்னும் இல்ல. இந்த காலத்தில் நல்லா விசாரிச்சு கல்யாணம் பண்ணாலே, விவாகரத்தில் போய் தான் முடியுது. எந்த புத்துக்குள் எந்த பாம்பு இருக்குன்னே தெரியல. இதில் ஏதோ சிறு வயது நண்பனை நம்பி எப்படி ரத்னா இந்த முடிவை எடுத்தான்னு தெரியல. எல்லாத்துக்கும் காரணம் அவனுங்க தான்” என்றான் சலித்துக் கொண்டபடி.

அதுவரை தனக்குள் இறுகிப் போய் இருந்தவள், அவன் இறுதியில் சொன்ன வரிகளைக் கேட்டு “யாரை அண்ணா சொல்ற?” என்றாள் புரியாமல்.

“அதான் அந்த ஏழு பேர். கொரியாக்காரனுங்க” என்றதும் வதனா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தவள், “அவங்க பிடிஎஸ் பாய் பேன்ட் க்ரூப் அண்ணா” என்றாள்.

அவள் சிரிப்பைக் கண்டதும், விஜய்யின் முகத்தில் புன்னகை மலர ஆரம்பித்தது. அவள் தலையைத் தடவிவிட்டவன், “எப்போதும் நீ சிரிச்சிக்கிட்டே இருக்கணும் வதனா. உனக்கு என்னவேணாலும் என்கிட்டக் கேளு. நான் கொடுப்பேன்’ என்று உறுதி அளித்தான்.

அவனை நேர்பார்வை பார்த்தவள், “என்ன கேட்டாலும் தருவியா” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

மகிழுந்தை ஓட்டிக் கொண்டே, தன் ஒரு கையால் அவள் கையைப் பிடித்தவன், “ம்... நிச்சயம் தருவேன். நீ எது கேட்டாலும் இல்லைன்னு சொல்ல மாட்டேன். கேளு வதனா” என்று உறுதியாக் கூறினான்.

“இப்ப இல்ல. நான் நேரம் வரும் போது நிச்சயம் கேட்பேன்” என்று சொன்னவள், தன் மனதினுள், ‘நான் யாருக்கும் தெரியாமத் தான் இங்க இருந்து போகப்போறேன் அண்ணா. அப்படி அது உனக்கு தெரிஞ்சி போச்சுனா, ‘சத்தியம் பண்ணி இருக்க என்னைப் போகவிடுன்னு’ மட்டும் தான் நான் சொல்லுவேன்’ என்று நினைத்துக் கொண்டு, இருக்கையில் சாய்ந்தபடி தன் கண்களை மூடிக்கொண்டாள்.

இங்கே உணவு மேஜையில் அமர்ந்திருந்த அமலா, “நடக்குற கூத்தை எல்லாம் பார்த்தீங்களா! என்னமா ரெண்டும் கொஞ்சுதுங்க. அண்ணன் தங்கை ரெண்டு பேரும் சிவாஜி கணேஷன் சாவித்திரியவே மிஞ்சி போயிருவாங்க போல” என்று கவுண்ட்டர் அடித்தவள். “இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குறது நமக்கு நல்லது கிடையாதுங்க” என்றாள்.

“ஆமாம்” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டவன், “நான் வர லேட் ஆகும் நீ சீக்கிரமா தூங்கு” என்று சொல்லிவிட்டு அஜய் எழப்போக, “சரி” என்றவள் திடீரென்று நியாபகம் வந்தவளாக, “உங்க தங்கச்சி பிள்ளைத்தாச்சி மாதிரியே நடந்துக்குறா” என்றாள் வதனாவை நன்கு கவனித்தவளாக.






 

NNO7

Moderator
அத்தியாயம் – 19

அமலாவின் பேச்சைக் கேட்ட அஜய், “அதிகம் வாய் பேசுறதுனால அப்படி இருக்கான்னு சொல்றியா?” என்று கேட்க.

“அதுவும் தான். ஆனா இப்ப நான் சொல்றது, அதைப் பத்தி இல்லைங்க. அவள் நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி இருக்கு” என்றாள் புதிர் போட்டபடி.

“ஹேய், நான் கடைக்குப் போகணும் நேரமாச்சிடி, ஒழுங்கா சொல்லித் தொலை, இல்லைன்னா நான் போறேன்” என்று செல்லப்போனவனின் கையைப் பிடித்தவள், “என்னங்க உங்களுக்கு இப்பெல்லாம் தேவை இல்லாமல் கோபம் வருது” என்று சொல்ல, அவளைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தான்.

“சரி, சரி சொல்றேன். அவள் நடக்குற நடை, அவள் செய்கை எல்லாம் பார்க்குறதுக்கு ஏதோ பிள்ளைத்தாச்சி பொண்ணு மாதிரியே இருக்குங்க” என்றதும் தாமதம், அவளை அடிப்பது போல் தன் கையை கொண்டு சென்றவன், “அறைஞ்சே கொன்னுடுவேன் பாத்துக்கோ... ஏதவாது வாயில் வருவதை எல்லாம் பேசாத” என்று எச்சரிக்கை செய்து தன் கையை கீழே இறக்கினான்.

“உண்மையை சொன்னா அடிக்க வரீங்க” என்று அவள் முகத்தை சுழிக்க, “ஆமாம் பெரிய உண்மை. நீ ஏழு எட்டுப் பிள்ளை பெத்தவ பாரு, இதை எல்லாம் கண்டுபிடிக்க. ஒன்னுக்கே இங்க வழியைக் காணும்” என்று திட்டித்தீர்த்தான்.

“நீங்க என்னவேணாலும் சொல்லுங்க. என் மனசில் பட்டதை தான் நான் பேசுவேன். எங்க பெரியம்மா பொண்ணு மாசமா இருக்கும் போது எப்படி இருந்தாளோ, அப்படி தான் வதனாவும் இருக்கா. அவள் உட்காரும் போது வயிறு வேற குட்டியா தெரியுது. அது தெரியாம இருக்கத் தான் லூசான ட்ரஸ் போடுறா” என்று ஏதேதோ சொல்ல, “ஏய், உனக்கு வேற வேலையே இல்லையாடி. எப்ப பார்த்தாலும் வதனா, வதனான்னு, குணா படத்தில் வர்ற கமலஹாசன் அபிராமி அபிராமின்னு சொல்ற மாதிரி நீ வதனாவைப் பத்திப் பேசி பேசியே சாவடிக்குற” என்று கத்தினான்.

“அது இல்லைங்க...” என்று ஏதோ சொல்லப்போக, தன் சைகையால் அவளை நிறுத்தியவன், “யாரு பிள்ளைத்தாச்சி, எப்படி பிள்ளைத்தாச்சின்னு, யோசிக்குறத விட்டுட்டு, முதலில் நீ எப்படி பிள்ளைத்தாச்சி ஆகலாம்னு யோசி” என்று நன்றாக அமலாவை திட்டிவிட்டு சென்றான்.

“ம்ச்...நான் சொல்றதை இவரு நம்ப மாட்டேங்குறார். நான் என்ன தான் கேவலமா வதனாவை திட்டுனாலும், வதனா அப்படி பட்டவள் கிடையாதே!. ஒரு வேளை இப்பெல்லாம் அதிகமா சாப்பிடுறாளோ! இருக்கும் இருக்கும்” என்று வாய்விட்டு சொன்னவள், வழக்கம் போல் டிவி முன்பு அமர்ந்து, சீரியலில் வரும் வில்லிகளை திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள்.

விஜய்யுடன் வேறு பிரான்ச் நகைக்கடைக்கு சென்றவள் அங்கிருப்பதை எல்லாம் கற்றுக் கொள்ளத் துவங்கினாள். தன்னுள் இருந்த துக்கம் அனைத்தையும் ஓரம் கட்டி வைத்தவள், வேலையில் மூழ்கினாள்.

கணினி முன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தா விஜய், “ஒரே நாளில் எல்லாத்தையும் கத்துக்க நினைக்கும் உன் ஆர்வம் எனக்குப் புரியுது வதனா. ஆனா எதுக்காக இவ்வளவு வேகமா எல்லாத்தையும் பண்ற வதனா. கொஞ்சம் மெதுவா போ...” என்றான் அக்கறையாக.

‘மூணு மாசத்தில் எல்லாத்தையும் கத்துக்கணும் அண்ணா” என்றாள் தன்னை அறியாமல்.

“அதென்ன மூணு மாசம்” என்று புரியாமல் கேட்க, அதில் சிறிது தடுமாறியவள், பின் தன்னை சமாளித்துக் கொண்டவளாக, “அது... அதுக்குள்ள எல்லாத்தையும் கத்துக்கிட்டா நல்லது தானே!” என்றாள்.

“ம்... நல்லது தான். ஆனா இதுக்காக உன்னை வருத்திக்காத” என்றான்.

“ம் சரி அண்ணா” என்றாள்.

“மெயின் பிரான்ச்ல நீ பார்த்த வரைக்கும் எல்லாமே நல்லாத் தானே போகுது” என்று சாதாரணமாகக் கேட்டான் விஜய்.

“ம்... நல்லாத் தான போகுது. புதிய ஆர்டர்ஸ் எல்லாம் அதிகம் வருது. அஜய் அண்ணா உண்மையாவே க்ரேட் தான். கஸ்டமர்ஸ் கேட்குற ஆர்டரை எல்லாம், கொல்கத்தா, குஜராத்ல இருந்து கை வேலைப்பாடு செய்யும் சின்ன சின்ன ஆசாரிகிட்ட இருந்து வாங்குறாரு. அதனால் தான் நம்ம நகைக்கடை எப்போதும் பர்ஸ்ட் இருக்கு” என்றாள் பெருமிதமாக.

அதற்கு ஒத்துக்கொண்டதைப் போல், தானும் தன் தலையை ஆட்டிய விஜய், “அஜய் இதுல பயங்கர புத்திசாலின்னு சொல்லலாம். வாடிக்கையாளர்கள் மனதை நல்லா தெரிஞ்சி வச்சிருக்கான்” என்றான்.

“சரியா சொன்ன அண்ணா. இதுவரை எந்தக்கடையிலும் இல்லாத யூனிக் டிசைன்ஸ் எல்லாம் நம்மக்கடையில் குவிஞ்சி இருக்கு” என்ற வதனா, “ஆனா எவ்வளவு தான் தனித்துவமான மாடல்களை நம்மக் கடை கொடுத்து இருந்தாலும், அண்ணனுக்கு அண்ணி எப்போதுமே சம்திங் ஸ்பெஷல் தான்” என்றாள் வதனா.

“அவங்களைப் பத்தி பேசாத பிடிக்கலைன்னு என்னை சொல்லிட்டு, இப்ப நீயே பேசுற வதனா” என்றான் பொய் கோபம் கொண்டபடி.

“அதில்லை அண்ணா. அஜய் அண்ணாவோட காதலைத் தான் சொன்னேன். அண்ணிக்குன்னு தனியா ரொம்பவே ஸ்பெஷலா, லண்டனில் இருக்கும் ராஜகுடும்பத்து மருமகள் கேட் மிடில்டன் போட்டு இருக்கும், அதே மாதிரியான வைர நெக்லசை அண்ணிக்கு பார்த்துப் பார்த்து செஞ்சி கொடுத்து இருக்கார்” என்றாள்.

“நீ என்ன சொல்ற வதனா? அப்படி ஒரு மாடல் நம்மக்கிட்ட கிடையாது. நாம அதுமாதிரி எதுவும் செய்யல” என்று அடித்துக் கூறினான்.

“ஐயோ அண்ணா உனக்கு இன்னுமா புரியல. அண்ணிக்கு ஸ்பெஷல்லா செஞ்சிருக்கார்” என்றாள்.

“அது மட்டும் இல்லை. மாச மாசம் அண்ணிக்கு இதுபோல் ஒரு வித்தியாசமான கிப்ட் கொடுக்குறார். ஒரு தடவை வைர மோதிரம் இன்னொரு தடவை ப்ரோச், வலையல்ன்னு ஏகப்பட்டது. இது அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானது” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

இந்த பரிசுகள் எல்லாம் எங்கே செல்கின்றது என்பதனை ஓரளவுக்கு வதனா கணித்துவிட்டாள்.

அந்த பிரான்ச்சில் இருந்து வந்த பணத்தில் தான் இது அனைத்தையும் செய்த அஜய். கணக்கை சரியாக எழுதியும் வைத்தான். ஆனால் ஒன்று தனக்காக வாங்கினேன் என்று எழுதி வைத்தவன், அதைக்கொடுத்தது எல்லாம் சுஜிக்கு தான்.

வதனாவின் பேச்சைக் கேட்டு, “இதென்ன அதிகப்பிரசங்கித்தனம். நம்ம தொழில் ஒன்னா தானே இருக்கு. அப்படி இருக்கும் போது, அவன் ஏதாவது பெருசா வாங்குனா எல்லார்க்கிட்டையும் சொல்றது தானே முறை” என்று கோபம் கொண்டான் விஜய்.

“நீங்க சொல்றது புரியலை அண்ணா. அண்ணிக்கு தானே வாங்கி இருப்பார்” என்றாள், ஏதோ ரகசியத்தை வெளியே கொண்டு வரும் நோக்கில்.

“யாருக்கு வாங்கி இருந்தா என்ன? இதை அவன் வாங்கினது தப்பு இல்ல. ஆனா யாருக்கும் தெரியாம வாங்குறது தப்பு தான். தொழிலில் நம்ம ஷேர்ஸ்சும் இருக்கு. வாங்கப்போகுறதுக்கு முன்னாடி எல்லார்கிட்டையும் தகவல் கொடுத்திருக்கணும் அவன்” என்று ஆதங்கத்துடன் பேசினான் விஜய்.

“ஆனா கணக்கில் எல்லாம் கொண்டு வந்துருக்காரே அண்ணா. இதை எப்படி தப்புன்னு சொல்றீங்க” என்று அவன் புரியாமல் கேட்பது போல் நடிக்க.

“என்ன வதனா நீயும் புரிஞ்சிக்காம பேசுற அவன் எடுத்தது கோடிக்கணக்கான ரூபாயை. நாளைக்கு அவன் எடுக்குறான்னு நானும் எடுத்தா, கடையின் நிலைமை என்ன ஆகுறது? அதுவும் இல்லாம, இப்ப எதுக்காக தேவை இல்லாம மாதமாதம் கிப்ட்?. அவங்க அப்பா வீட்ல அப்படி தான் மாதமாதம் வைர நகையை வாங்கி குவிச்சிக்கிட்டு இருந்தாங்களா அமலா அண்ணி” என்று சொன்ன விஜய்க்கு கோபமாக வந்தது.

தொடர்ந்து பேசிய விஜய், “இங்க வந்து, நான் பேப்பர் வாங்குனதுக்கு எல்லாம் கணக்கு கேட்பான். இப்ப என்ன வேலை எல்லாம் செஞ்சிருக்கான் பாரு. என்ன தான் வசதியான வீட்டில் வாழ்ந்தாலும், என்னால மகாக்குன்னு எதுவும் வாங்கித்தர முடியாது. அதனால் தான் மகா, எனக்கு சேர வேண்டிய ஷேர்ஸ்சில் ஆர்வம் காமிச்சா” என்றவன், வதனாவைப் பார்த்து, “நீ எதுவும் தப்பா நினைக்காத வதனா. மகா உண்மையிலையே நல்ல பெண் தான். சில விஷயங்கள் அவளை தப்பா மாத்திருச்சி” என்றான்.

“அச்சோ, நான் அப்படி எல்லாம், எதுவும் நினைக்கல. எங்களுக்குள் சரியா பேச்சு வார்த்தை கிடையாது. அதனால் தான் எங்க ரெண்டு பேருக்குமே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரியாம போச்சு... ஆமா நீ எப்ப அண்ணியை வீட்டுக்குக் கூட்டிட்டு வரப் போற?” என்றாள் ஆர்வம் மிகுந்த குரலில்.

“இன்னைக்கு சாயந்திரம் அவளை நான் கூப்பிடப்போகலாம்னு நினைச்சேன். ஆனா இந்த அஜய் பிரச்சனை வேற வரும்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல” என்றான் தன் தலையைக் கோதியபடி

“அவர்கிட்டையே நேரடியாக இதைப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணிட்டியா அண்ணா” என்று வதனா ஆர்வத்துடன் கேட்டாள்.

“ம்.. ஆமாம் வதனா. இப்ப கடையில் தான் இருப்பான்” என்று சொல்லிக் கொண்டே அவன் எழப்போக, “கடையில் வச்சி எதுவும் கேட்க வேண்டாம் அண்ணா. வீட்டுக்குப் போனா, அமலா அண்ணியும் இருப்பாங்க. இதில் அவங்களும் சேர்த்தி தானே!” என்று லாவகமாக காய் நகர்த்தினாள்.

“அப்ப வீட்டில் போயே பார்த்துக்கலாம். இன்னைக்கு ராத்திரி நாம இதைப் பத்தி பேசியே ஆகணும்” என்று கூறிக்கொண்டான்.

“கண்டிப்பா பேசணும் அண்ணா. நீ போய் அண்ணியை கூட்டிட்டு வா. இங்க நான் பார்த்துக்குறேன்” என்றாள் புன்னகை முகமாக.

“சரி” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டவன், பின் யோசித்தவனாக, “வீட்டுக்குப் போகும் போது, தனியா போக வேணாம். நான் வந்து உன்னை பிக் பண்ணிக்குறேன்” என்றான் விஜய்.

“அதெல்லாம் வேண்டாம் அண்ணா. என்னோட ப்ரண்டை பார்க்கணும். அதனால் நானே டாக்ஸி பிடிச்சி வந்துப்பேன்” என்றாள்.

“ம்.. அப்ப சரி. டாக்ஸி ஏறினதும் எனக்கு ஒரு கால் பண்ணிரு” என்று சொல்லிக் கொண்டு, கிளம்பினான் விஜய்.

அவன் சென்றதும், ‘என்னை வச்சி என்னென்னவோ ப்ளான் போட்டீங்க அமலா அண்ணி. கடைசியில் பாருங்க, உங்களை வச்சி நான் ப்ளான் போடா வேண்டியதா போச்சு. இன்னைக்கு, உங்க வாழ்க்கையில் வெடிக்கப் போகும் அணுகுண்டுக்குப் பிறகும், நீங்க என் வாழ்க்கையை அழிக்க திட்டம் தீட்டுவீங்களான்னு நானும் பார்க்குறேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள். இதில் வதனாவின் தவறும் எதுவும் இல்லை. ஏனெனில் அவள் அனுபவித்த வலியும், வேதனையும் அப்படி.

காலச்சக்கரம் என்றுமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பது இல்லை. இன்று ஒருவன் வாழ்க்கை உஞ்சல் ஆடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து ரசிப்பவனுக்கு, நாளைக்கே அதே நிலைமை வரலாம். சாதி, பணம், அந்தஸ்த்து போன்றவைகளில் எப்படி உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாதோ, அதே போலவே ஒருவர் கஷ்டத்திலும், ஏளனம், கேலி செய்யக்கூடாது.

அப்போது சரியாக, வதனாவின் அலைபேசி அடிக்க, அதில் குறளரசனின் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 20

ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவனது அலைபேசி அழைப்பு. தொடுதிரையில் ஒளிர்ந்த குறளின் அழைப்பைப் பார்த்த வதனா, ‘இன்னைக்கே பேச வேண்டியதை எல்லாம் பேசி முடித்துவிடனும்’ என்ற எண்ணத்துடன், இணைப்பை எடுத்து தன் காதில் வைத்தாள்.

“நான் குறளரசன் பேசுறேன்” என்று ஒரு வித தயக்கத்துடனே பேச ஆரம்பித்தவன், “நேத்து...” என்று ஏதோ சொல்ல வருவதற்குள் அவனைத் தடுத்தவள், “அதைப் பத்தி பேச வேண்டாம்னு நினைக்குறேன்” என்றாள் தடாலடியாக.

“இல்லை நான் வந்து..” என்று அவன் இழுக்க, “வேண்டாம்னு சொல்லிட்டேனே!. ஆனா ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி உன் கிட்ட பேசணும்” என்றாள் இறுகிய குரலில்.

“ம்... பேசு” என்று ககுறள் கூற, “இங்க இல்ல. நேரில் பார்க்கணும்” என்றாள்.

“இல்ல... இனி நாம நேரில் சந்திக்குறது எல்லாம் சரியா வராது” என்றான் மறுப்பாக.

அதற்கு இகழ்ச்சியாக புன்னகை செய்தவள், “ஏன் உன் ஜாகியாக்கு மறுபடியும் துரோகம் பண்ணிருவன்னு பயப்படுறீயா?” என்றாள்.

அதில் அவனது ஆத்திரம் பெருக, “உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. உன் மூஞ்சில் விழிக்கக்கூடாதுன்னு நினைக்குறேன். அந்தக்காரணம் மட்டும் தான்” என்று அவள் உண்மையைக் கூறிய கோபத்தில் பொய் கூறினான்.

“பார்க்க பிடிக்கல. ஆனா கட்டிப்பிடிச்சு முத்தம் மட்டும் கொடுக்கத் தெரியுமோ!” என்று அவள் வார்த்தைகள், அவனுள் நேற்று இரவு நடந்ததை நினைவு படுத்த, அதில் தன்னிலை இழந்தவன் முன்னால், சமையலறை சம்பவங்கள் காட்சிகளாய் விரிந்தது.

அதில் அவன் பேச மறக்க, “என்னாச்சி? அதுக்குள்ள திரும்பவும் போயிட்டியா?” என்று நக்கல் செய்தாள்.

அதில் அவன் கனவுகள் கண்ணாடியாய் உடைய, “பார்த்து பேசு வதனா. என்னோட உயரம் தெரியாம பேசுற” என்று கண்டித்தான்.

“உன்னோட உயரம் எனக்கு நல்லாவே தெரியுமே!. ஒரு நிமிஷம் கூட கட்டிலில் இருந்து என்னை எழவிடாமல் கட்டிபிடிச்சு...” என்று அவள் ஏதோ சொல்ல வருவதற்குள், “ஹேய், நிறுத்து” என்று வேகமாக இடையிட்ட குறள், “ச்சீ...” என்று வெறுப்பை உமிழ, “என்ன ச்சீன்னு சொல்ற?. ப்ராக்டிக்கல் மட்டும் உனக்கு இனிச்சதோ” என்று சொன்ன வதனா, இன்று முழு பார்மில் இருந்தாள்.

தான் இங்கிருந்து செல்வதற்கு முன்னால், எப்படி அஜய்யையும், அமலாவையும் கதறவிட வேண்டும் என்ற முடிவை எடுத்தாளோ, அதே போலவே குறளையும் வைத்து செய்ய வேண்டும் என்று நேற்று இரவிலையே சில முடிவுகளை எடுத்துவிட்டாள்.

“உனக்கு என்னடி வேணும்” என்று தன் எரிச்சலைக் கொட்ட, “உன்னை நான் பார்க்கணும்” என்றாள் உறுதியான குரலில்.

“இன்னைக்கு என்னால் உன்னை பார்க்க வரமுடியாது. எனக்கு அவசரமா டெல்லி போகணும்” என்றான்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ எப்ப ப்ரீன்னு சொல்லு” என்று கேட்டாள்.

“நாளைக்கே நான் பிளைட்டில் திரும்பி வந்துருவேன். ஆனா நல்லா நியாபகம் வச்சிக்கோ, நான் கல்யாணம்ன்னு ஒன்னு பண்ணா, அது ரத்னாவை மட்டும் தான் பண்ணுவேன்” என்று கூற, தன் கண்களை அழுத்தமாக மூடிவிட்டு திறந்தவள், “நீ ரத்னாவைக் கல்யாணம் பண்ணு இல்லை பிச்சைகாரியைக் கூட கல்யாணம் பண்ணு. எனக்கு அந்த ஆணி எல்லாம் தேவை இல்ல. உன்கிட்ட எனக்கு சில விஷயங்கள் பேசணும். அதுக்காக மட்டும் தான் கூப்பிட்டேன். என் மேல தேவை இல்லாம கற்பனையை வளர்த்துக்காத” என்றாள்.

“நேத்து நடந்ததை பேச வேண்டாம்னு சொல்லிட்டு ஜாடை மாடையா அதைப் பத்தியே பேசுற நீ. நான் தான் அப்படி நடந்துக்கிட்டேன். உன் புத்தி அப்ப எங்க போச்சு” என்று பல்லைக் கடித்தபடி கேட்டான்.

“நான் ஒன்னும் ஜாகியான்னு வேற ஒருத்தன் பின்னாடி சுத்தல. என் வாழ்க்கையில் முதலில் வந்தவனும் நீ தான். கடைசியா வந்தவனும் நீ தான். நீ மட்டும் தான். ஆனா நேத்து நடந்ததுக்கு, என்னை நானே கேவலம் செய்து வெட்கி தலை குனியுறேன். மனதில் காதலே இல்லாத ஒரு கொடூர மிருகத்துக்கு பணிஞ்சு போயி, என்னிலை இழந்துட்டேன்” என்றாள் இறுகிய குரலில்.

பெண்ணவளின் பேச்சு, அவன் மனதில் எரிமலைக் குழம்பை அள்ளி ஊற்றுவதைப் போல் இருந்தது. இவளிடம் மேலும் பேச்சை வளர்க்க வேண்டாம் என்று நினைத்த குறளரசன், “நாளைக்கு ராத்திரி ஏழு மணிக்கு ஹிடேச் ஸ்டார் ஹோட்டல்ல மீட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு வைத்தான்.

“வச்சிட்டியா... நீ கிரீன் பிளாக்ன்னு நினைச்சு ஏமாந்த நான் தான் முட்டாள். நீ பயங்கரமான ரெட் ப்ளாக்” என்று தன் அலைபேசியைப் பார்த்து திட்டினாள்.

பின் வீட்டிற்கு வந்ததும் வதனாவை வரவேற்றாள் மகா.

“என்னை மன்னிச்சிரு வதனா. காதல் கல்யாணம் பண்ணி உள்ள வந்ததும் நான் கொஞ்சம் பயந்து தான் போயிட்டேன். அதனால் தான் நான் சுயநலமா இருந்துட்டேன். ஆனா இங்க உன் நிலைமை தெரிஞ்சும் அமைதியா இருந்துட்டேன்” என்று உண்மையாகவே மன்னிப்பை வேண்டினாள்.

“அச்சோ அண்ணி. ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்குறீங்க. உங்க பக்கமும் நியாயம் இருக்கு. இனி தேவை இல்லாததைப் பத்தி யோசிக்க வேண்டாம். நாம் ஒரே குடும்பம்” என்று கூற, மகாவோ, அவளை அணைத்துக் கொண்டாள்.

முன்பு பூக்காமல் பொய்த்துப் போன, அந்தக் கிளைகளில் இப்போது பூக்கள் மலரத் தொடங்கியது. மகா மற்றும் வதனாவின் அழகிய உறவு அங்கே மலர்ந்தது.

பின் பேசிக்கொண்டே, வதனாவின் அறைக்கு வந்த மகா, “என்னோட தங்கச்சி மாதிரி தான் நீயும் வதனா. என்னை உன்னோட பிரெண்ட்டா நினைச்சிக்கோ” என்றாள்.

“சரி அண்ணி. ஆமாம் அண்ணனுக்கும், உங்களுக்கும் இருந்த ஊடல் சரியாகிவிட்டது தானே!” என்று சிரித்தபடி கேட்டாள்.

“ம்... அதெல்லாம் ஆகிடுச்சி. உன் தங்கை மாதிரி தான், என் தங்கைன்னு சொல்லி நிறையா விஷயங்களை அவர் எனக்குப் புரியவச்சாரு” என்றாள் மகா.

“அதெல்லாம் இப்ப வேண்டாம் அண்ணி. நாம ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ்ன்னு சொன்னீங்களே!. இனி ஜாலியா மட்டும் தான் பேசணும். இனி நாம ரெண்டு பேரும் சேர்ந்து பன் பண்ணுவோம் சரியா” என்று ஹய்பை செய்ய தன் கையை நீட்ட, மகாவும் தன் கையை அவள் கையில் தட்டினாள்.

“நீ இவ்வளவு அருமையா பேசுவன்னு எனக்கு முதல்லையே தெரியாம போயிருச்சி வதனா. இங்க முதன் முதலா வந்த போது கொஞ்சம் இல்ல. ரொம்பவே பயமா இருந்தது. அமலா அக்காவும் ஒரு மாதிரி ஏளனமா பார்த்தாங்க. நீயும் என்னிடம் பேச வரல. அதில் உன்னை தப்பா நினைச்சு தான், சுயநலமா இருந்துட்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்டாள்.

“அப்படி இல்லை அண்ணி. நான் அமலா அண்ணியிடம் கற்ற பாடம் தான், உங்கக்கூட பேசுறதுக்கு தடுத்தது. ஆனா இனி அப்படி எதுவும் இல்ல” என்று அவள் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.

அப்போது அங்கே வந்த விஜய், “ஹேய், நீங்க ரெண்டு பேருமே இங்க தான் இருக்கீங்களா” என்று உற்சாகமாக கேட்டபடி உள்ளே வந்தவன், வதனாவைப் பார்த்து, “உன் பிரண்ட்டை பார்க்கணும்னு சொன்னியே பார்த்துட்டியா?” என்று கேள்வி எழுப்பினான்.

“இல்லை அண்ணா பார்க்கல. நாளைக்கு தான் பார்க்கணும்” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

அதை கவனித்த மகா, “ஏன் திடீர்னு ஏதோ போல் பேசுற வதனா?” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி” என்று சமாளிக்கப் பார்க்க, விஜய்யோ, “அவள் ஊரில் இருந்து வந்ததில் இருந்து இப்படி தான் இருக்கா மகா” என்றான் சலிப்புடன்.

“ஏன் மகா ஒருவேளை, அமலா அக்கா பண்ணது எல்லாம் உனக்கு ட்ராமா ஆகிருச்சா?. நாம டாக்டரைப் போய் பார்ப்போமா?” என்றாள் பதற்றமாக.

“அச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி” என்றவள் விஜய்யைப் பார்த்து, “அஜய் அண்ணா வந்துட்டாரா அண்ணா?” என்று கேட்டாள்.

“இன்னும் வரல வதனா. நீ ரெஸ்ட் எடு. அவன் வந்ததும் பார்த்துக்கலாம்” என்க, மகாவோ, “என்னாச்சி விஜய்?” என்று கேட்க, வதனாவைப் பார்த்து, “நீ ரெஸ்ட் எடு வதனா” என்றவன், மகாவிடம், “வா சொல்றேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

அவர்கள் சென்றதும், வதனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. வெகு காலங்களுக்குப் பிறகு, தன்னை ஒருவர் அன்புடன் கவனிக்கிறார் என்ற நினைப்பே, அவள் இதயத்தில் தித்திப்பைத் தந்தது. அந்த ஆனந்தமே, அவள் கண்களில் இருந்து கண்ணீர் சுரக்க காரணமாக இருந்தது.

பின் தன்னை சுத்தம் செய்து கொண்டு கண்ணாடியைப் பார்த்தவள், ‘மகா அண்ணி என்னை கவனிக்குறாங்க. இனி சோகமா இல்லாத மாதிரி காட்டிக்கணும்’ என்று தனக்குள் முடிவு எடுத்தவளாக கீழே இறங்கி வந்தாள்.

அப்போது தான் அஜய்யும் வந்திருந்தான். அவனைப் பார்த்த அவனது மனைவி, “வந்துட்டீங்களா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை சாமி படத்துக்கு பூ வாங்கிட்டு வர சொன்னேனே! வாங்கிட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டாள் அமலா.

“வாங்கிட்டு வரல. மறந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்லப்போனவனை தடுத்த அமலா, “எவ்வளவு படிச்சு படிச்சி சொன்னேன். இப்படி வாங்காம கையை வீசிட்டு வந்துருக்கீங்க” என்று கத்த ஆரம்பித்தாள்.

“கத்தாத, எனக்கே தலை எல்லாம் வழிக்குது. உனக்கு அவசியம் வேணும்னா நீயே போய் வாங்கிக்க வேண்டியது தானே. புருஷன்னு ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டா போதும், அவன் தலையில் எல்லாத்தையும் கட்டிட வேண்டியது” என்று கரித்துக் கொண்டே தன் அறைக்குள் சென்றான்.

இதை எல்லாம் பார்த்த வதனாவிற்கு சிரிப்பு மட்டுமே வந்தது. அவள் வாய்விட்டு சிரிக்க, அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அமலா, “ஏண்டி சிரிக்குற? எங்க பேச்சை எல்லாம் ஒட்டுக்கேட்டதும் இல்லாம கெக்க பிக்கன்னு சிரிப்பு வேறையா?” என்றாள் மூச்சை விட்டபடி.

“நான் எங்க ஒட்டுக்கேட்டேன். நடுஹாலில் வச்சு பேசுனா எல்லாருக்கும் தான் கேட்கும்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்க, அப்போது அங்கே வந்த மகா, “என்ன ஜோக் வதனா. சொன்னா நானும் சிரிப்பேன்ல” என்று கேட்டாள்.

‘பாதகத்தி இவளும் வந்துட்டாளா!’ என்று உள்ளுக்குள் எரிச்சல் அடைந்தாள் வதனா

“அது ஒன்னும் இல்ல அண்ணி. அமலா அண்ணி கேட்டு ஒரு பூவை கூட அஜய் அண்ணா வாங்கி தரமாட்டேங்குறார். ஆனா வைரத்தை மட்டும் டன்டன்னா அண்ணிக்கு வாங்கி குவிக்குறார்” என்று சொல்ல, “அப்படியா அக்கா?” என்று தன் நாடியில் கைவைத்தபடி கேட்டாள் மகா.

அப்போது ஏதோ மறந்துவிட்டு கீழே வந்த அஜய், இவர்களின் பேச்சைக் கேட்டு, தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 21

வதனா பேசுவதைக் குழப்பமாகப் பார்த்த அமலா, “ஹேய் என்னடி வைரம் பூவுன்னு என்னென்னவோ சொல்லிக்கிட்டு இருக்க” என்று கேட்கும் போதே, அந்த இடத்திற்கு பாய்ந்து வந்த அஜய், “அமலா, நாம வெளிய போகலாம். சீக்கிரம் கிளம்பு” என்று அவளை துரிதப்படுத்தினான்.

ஆனால் அஜய்யின் பேச்சைக் கண்டுகொள்ளாத அமலா, வதனாவின் வாயைப் பார்க்க, உடனே அமலாவின் கையைப் பிடித்து இழுத்து தன்னை நோக்கி நிறுத்தியவன், “நாம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு வரலாம்” என்று அவள் கண்களைப் பார்த்துக் கூற, அதில் ஆனந்தம் அடைந்த அமலா வதனா கூறியதை மறந்து விட்டு, “அப்படியா சரிங்க” என்று கூறிவிட்டு, தங்களது அறைக்குள் ஓடினாள்.

அவள் சென்றதும், வதனாவைப் பார்த்து, பயங்கரமாக முறைத்தவன், “என்ன வேணும் உனக்கு” என்று அடிக்குரலில் சீறினான்.

வதனாவோ தன் தோள்களை மிகவும் சாதாரணமாக குலுக்கிவிட்டு, “எனக்கு ஒன்னும் வேணாம். நான் சும்மா அண்ணிக்கிட்ட பேசிட்டு தான் இருந்தேன்” என்றாள்.

“இங்கப்பாரு வதனா” என்றவன், தன் அறை இருக்கும் திசையை எட்டிப்பார்த்துவிட்டு, திரும்பவும் வதனாவை நோக்கியவன், “அமலாக்கு நான் வாங்கின வைர நகைகள் எல்லாம், சர்பிரைஸ்சா அவளிடம் கொடுக்கத் தான். நீ அதை கெடுக்க நினைக்காத” என்றான் மெதுவாக.

“எதுக்காக அண்ணா சர்பிரைஸ்?. அண்ணியோட பிறந்த நாள், உங்கத் திருமண நாள் எல்லாம் நாலு மூணு மாதத்திற்கு முன்னே முடிஞ்சிருக்குமே!. நீங்க ஆறுமாதமா, வைர நகைகளை, அதுவும் ஸ்பெஷல் யூனிக் நகைகளை அவங்களுக்காக மிகவும் மெனக்கெட்டு எதுக்காக செஞ்சீங்க?” என்று விடாமல் வினாவினாள் வதனா.

வதனா மேல் ஆத்திரம் மேல் ஆத்திரம் வந்தாலும், இதில் பொறுமையின் அவசியத்தை உணர்ந்த அஜய், தன் கண்களை கசக்கிக் கொண்டே, “தான் எப்படியாவது அம்மாவாகிடணும்னு அமலா ஏங்குற. அது நடக்குற அன்னைக்கு, அவளை பரிசு பொருட்களால் நிறைக்க நினைக்குறேன் அதுக்காக மட்டும் தான்” என்று மிகவும் உடைந்தவன் போல் பேசினான்.

அதில் வதனா, அவன் சொன்னது எல்லாம் உண்மை என்று அப்பட்டமாக நம்ப ஆரம்பித்தாள்.

‘அப்ப நான் தான் தவறா ஏதோ கற்பனை பண்ணிட்டு, பேசிட்டேனா! ஆனா அஜய் அண்ணா வாழ்க்கையில் ஒரு பொண்ணு இருக்குறது நிச்சயம் தான். அன்னைக்குக் கூட போனில் கொஞ்சி கொஞ்சி தானே பேசிக்கிட்டு இருந்தார். அமலா அண்ணியைப் பார்த்ததும் எரிஞ்சி விழறார். இதில் என்னவோ இருக்கு’ என்று நினைத்துக் கொண்டாள்.

இப்போது தன் கைகளைக் கூப்பி அவளை வணங்கிய அஜய், “அமலாவுக்காக நான் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்றேன். அழகான எங்க கூட்டில் கல்லை எறிஞ்சிட்டு போயிடாத” என்று சொல்லிவிட்டு அவனும் சென்றான்.

நடப்பதை எல்லாம் எதுவும் அறியாதவளாக வதனாவைப் பார்த்த மகா, “இங்க என்ன நடக்குது வதனா? உங்க அண்ணாவும் சொன்னாரு என்ன நடந்ததுன்னு ஆனா இவரு என்னடான்னா, எதையோ தன் மனைவிக்கிட்ட இருந்து மறைக்குற மாதிரி பேசுறாரு” என்று மிகவும் சரியாக கண்டுபிடித்தாள் மகா.

அதில் குழப்பம் அடைந்த வதனா, “என்ன அண்ணி சொல்றீங்க? மறைக்குற மாதிரியா!” என்று கேட்டாள்.

“ஆமாம் வதனா. தன்னோட மனைவிக்கு இந்த விஷயம் தெரியக் கூடாதுன்னு அவருள் ஒரு பதற்றம், மனுஷனுக்கு வியர்த்து வேற வழிய ஆரம்பிச்சிருச்சு, அவர் முகமே ஏதோ மிகப்பெரிய தப்பை செய்யுறது போல இருந்தது. அடிக்கடி அவர் அறை இருந்த பக்கம் வேற பார்த்துக்கிட்டாரு” என்று அவள் நோக்கிய அனைத்தையும் கூறினாள்.

தொடர்ந்து பேசியவள், “அது மட்டும் இல்ல வதனா, மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க நினைக்கும் கணவனின் நிலை மாதிரி அவர் நிலை இல்ல” என்பதனை அடித்துக் கூறினாள்.

“எனக்கு இந்த சந்தேகம் இருந்தது அண்ணி. அதனால் தான் நான் அமலா அண்ணிக்கிட்ட அப்படி கேட்டேன். அஜய் அண்ணாவோட நடவடிக்கை எதுவும் சரியில்ல” என்றாள் வதனா.

“உன்னோட விஜய் அண்ணா, இதைப் பத்தி கேட்குறேன்னு சொன்னாரே! அப்ப ரெண்டு பேரும் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்” என்று மகா சொன்னதற்கு தன் தலையை ஆட்டிக் கொண்டாள் வதனா.

“இன்னைக்கு என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லைங்க. என்னை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போனதும் இல்லாம, ஷாப்பிங் கூட்டிட்டு போய், எனக்காக இவ்வளவு பொருட்கள் வாங்கி குவிச்சிருக்கீங்க. நீங்க ரொம்ப ஸ்வீட்” என்று தான் வாங்கிய பொருட்களை எல்லாம் கைநிறைய வாங்கியபடி உள்ளே நுழைந்தாள் அமலா.

அவளுடன் தானும் சில ஷாப்பிங் பைகளை தன் கையில் கொண்டு வந்த அஜய், “இதில் என்ன இருக்கு அமலா, நாம ரெண்டு பேருமே, ஒருத்தருக்காக ஒருத்தர் தானே வாழ்றோம்” என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நுழைய, அதுவரை இருட்டாக இருந்த வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிய ஆரம்பித்தது.

அஜய்யும், அமலாவும் வீட்டினுள் நுழையும் போது, நேரம் இரவு மணி பன்னிரெண்டை கடந்து கொண்டிருந்தது.

விளக்கு எரிந்ததும் “யார் லைட் எல்லாத்தையும் போட்டது” என்று சொல்லிக் கொண்டே தன் இடப்பக்கம் பார்க்க, அங்கே வதனா, விஜய் மற்றும் அவனது மனைவி மகா நின்று கொண்டிருந்தனர்”

“அர்த்த ராத்திரியில் எதுக்காக பேய் மாதிரி நின்னுக்கிட்டு இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே தன் மனைவியைப் பார்த்தவன், “நாம போகலாம் அமலா” என்று சொல்லி மேலும் நடக்க ஆரம்பித்தவனை விஜய்யின் குரல் தடுமாற வைத்தது.

“கிட்டத்தட்ட நானூறு கோடி இருக்கும் வைர நகைகளை எல்லாம் உன்னோட மனைவி பெயரில் வாங்கி இருக்க நீ. இதுக்கு நீ விளக்கம் கொடுத்தே ஆகணும்” என்ற வார்த்தைகள் தான் அஜய்யை நொடிந்து போக வைத்தது.

விஜய்யின் பேச்சில், ‘என்னது நானுறு கோடிக்கு வைர நகைகளா? அதுவும் எனக்கா!’ என்று தன் மனதிற்குள் இனிமையாக உணர்ந்தாள் அமலா.

திரும்பி தன் தம்பியைப் பார்த்த அஜய், “நட்டநடு ராத்திரியில் வந்து எதுக்காக கேள்வி கேட்குற?. எங்களுக்கு தூக்கம் வருது. நாங்க போறோம்” என்று சொல்லி முன்னேறியவன் முன் வந்து நின்ற விஜய், “எனக்கு முதலில் பதில் சொல்லு. இல்லை நகை எல்லாத்தையும் திருப்பி இப்பவே கொடு” என்று அடமாக கேட்டான்.

“ஏங்க, எனக்காகவா வாங்குனீங்க” என்று மகிழ்ச்சியுடன், தன் கணவனைப் பார்த்து அமலா கேட்க, “ஆம்” என்று தன் தலையை ஆட்டியவன், நீ கர்ப்பமானதும், உனக்கு சர்பிரைஸ்சா கொடுக்கலாம்னு நினைச்சு இருந்தேன்” என்று ஆஸ்கார் வாங்க நினைக்கும் சிறந்த நடிகனைப் போலவே நடிக்க ஆரம்பித்தான்.

‘நானூறு கோடியா... அதுவும் எனக்காகவா...’ என்று தன் வாயைப் பிளந்த அமலாவின் கோபம் எல்லாம் இப்போது விஜய் மேல் திரும்ப ஆரம்பித்தது, “என்ன தம்பி கொஞ்சம் விட்டா அதிகமா பேசுறீங்க?. உங்க அண்ணன் ஒன்னும் சும்மா எதையும் சம்பாதிக்கல. அவரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாரு. அதில் வரும் பணத்தில் அவர் வாங்குறார். உங்களுக்கு ஏன் வலிக்குது?” என்றாள்.

“தொழிலில் எங்க பங்கும் இருக்கு அண்ணி. இது தெரியாம நீங்க எங்களுக்குள் பேச வராதீங்க. உங்களுக்கு இங்க எந்த ஷேர்ஸ்சும் கிடையாது. அதே போல் இதைப் பத்தி பேசுற உரிமையும் கிடையாது” என்று அவன் கூறியதைக் கேட்டு அமலா அதிர்ந்து பார்க்கும் போதே, தன் அண்ணனைப் பார்த்தவன், “நகையை முதலில் கொண்டு வா. இல்லைன்னா நானும் வதனாவும், நாளைக்கே ஆளுக்கு நானூறு கோடி எடுப்போம். அதுவும் இல்லாம வதனாவின் ஷேர்ஸ் எதுவும் இதுவரை பணமா எடுக்காம தான் இருக்கு. அதற்கும் சேர்த்தே எடுப்போம்” என்று மிரட்டல் விடுத்தான்.

அதில் தன் கைகளில் வைத்திருந்த ஷாப்பிங் பைகளை தொப்பென்று கீழே போட்டவன், “எல்லாத்தையும் எடுத்துட்டு, நகைக்கடையை மொத்தமா மூடுறதா ரெண்டு பேரும் ப்ளான் பண்றீங்களா?” என்று வதனாவையும், விஜய்யையும் பார்த்தபடி கேட்டான்.

“எங்களுக்கு அந்த நோக்கம் கிடையாது அண்ணா. ஆனா உங்களுக்கு தான் அந்த நோக்கம் இருக்கும் போல. அதனால் தான் பொறுப்பே இல்லாம, இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்க” என்று இப்போது பேசினாள் வதனா.

தன் தலையை அழுந்த கோதியவன், “இப்ப முடிவா, உங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் வேணும்?” என்றான் எரிச்சலுடன், “அண்ணிக்கு நீ கிப்ட் வாங்குனது தப்பு இல்ல. ஆனா வாங்குறதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு. அவங்களுக்கு சர்பிரைஸ் பண்ணும்னு நினைச்சா, மாதமாதம் உனக்கு வரும் தனிப்பட்ட பணத்தில் இருந்து எடு. கம்பெனி காசில் கைவைக்காத. இந்த ஒரு தடவை நாங்க உன்னை விடுறோம்” என்ற விஜய்யின் பேச்சு அஜய்க்கு, சொல்ல முடியாத கோப நெருப்புகள் எல்லாம் அவன் உடம்பில் உருவாக காரணமாகிற்று. ஆனால் எதையும் அவன் வெளியே காண்பித்து, அமலாவிடம் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தொடர்ந்து பேசிய விஜய், “அந்த நகைகள் எல்லாம் நாளைக்கு காலையில் இங்க வந்தாகணும்” என்றவன் வதனாவிடம், “அந்த நகைகளை எல்லாம், ஒரு கண்காட்சி மாதிரி, மக்கள் பார்வைக்கு வச்சிட்டு, அதை சேல்ஸ்க்கு வச்சிப்போம் வதனா” என்றான்.

“யார் நகையை யார் எடுக்குறது?. அதெல்லாம் முடியாது. நான் தரமாட்டேன்” என்று அமலா இப்போது தன் திருவாய் மலர, அவளை நக்கலாக பார்த்த வதனா, “தரமாட்டீங்களா? அந்த நகைகளை எல்லாம் முதலில் உங்க கண்ணால் பார்த்து இருக்கீங்களா அண்ணி?” என்று அவள் கேட்டாள்.

“உனக்கு சர்பிரைஸ்க்கு தமிழ் விளக்கம் தெரியாதா வதனா?. என்ன இருந்தாலும் அது என்னோட நகை” என்று எதுவும் தெரியாமல் அமலா குதிக்க, இப்போது அவள் முன்னே வந்த விஜய், “அது உங்களுக்கு சேர வேண்டிய நகை இல்லை அண்ணி குயீன்ஸ்க்கு சேர வேண்டியது” என்றான்.

இங்கே இவர்கள் மூவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க தன் தலையை பிடித்தபடி, படிக்கட்டில் அமர்ந்த அஜய், “போச்சு... எல்லாம் போச்சு” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

பேசி பேசி பிரச்சனை பெருகிக்கொண்டே தான் சென்றதே தவிர, அதற்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

அமலாவிடம் பேசுவது வீண் என்பதை உணர்ந்த விஜய், “அண்ணா, நாளைக்கே அந்த நகைகள் எல்லாத்தையும் குயின்ஸ்ல சேர்த்துரு” என்றான் முடிவாக.

சோர்ந்து போய் அமர்ந்திருந்த அஜய், “என்னால முடியாது. அது இப்ப என் கையில் இல்ல. என் நண்பன் கிட்ட கொடுத்து வச்சிருக்கேன். அவன் இப்ப இந்தியாவில் இல்ல” என்று ஏதோ பொய் சொல்ல ஆரம்பித்தான்.

“என்ன? உன் கையில் இல்லையா?. ஆனா நீ செஞ்ச யூனிக் வைர நெக்லஸ் எப்படி பிரபல நடிகை சுஜி கழுத்துக்குப் போச்சு?” என்று கேட்டுக் கொண்டே, சுஜி அந்த நெக்லஸ் அணிந்து இருக்கும் புகைப்படத்தை தூக்கி எறிந்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 22

சுஜியின் புகைப்படம் அந்த இடம் முழுவதும், பறந்தபடி கீழே விழுந்தது. அஜய்யின் மானமும் அதே போல், அப்போது முழுவதுமாய் சரிந்தது. அவனது முகம் அமலாவைத் தான் ஏறிட்டுப் பார்த்தது. அவளோ, கீழே கிடந்த சுஜியின் புகைப்படத்தை எடுத்தவள், “இதே மாதிரியான நெக்லசை தான் எனக்காக நீங்க வாங்கி இருக்கீங்கலாங்க?” என்று அப்பாவியாய் கேள்வி எழுப்பினாள்.

அமலாவிற்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட விஜய், “அண்ணி, உங்களுக்கு இன்னுமா புரியல. அண்ணன் அந்த நெக்லசை உங்களுக்காக செய்யல. அவர் செஞ்சது இந்த நடிகை சுஜிக்காக மட்டும் தான்” என்று உண்மையைப் போட்டு உடைத்தான்.

“வாய் இருக்குன்னு என் கணவர் மேல அபாண்டமா பழி போடாதீங்க தம்பி. என் கணவர் அப்படிப்பட்டவர் இல்ல” என்று சொல்லும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

நிலைமை தன் கையை மீறி போனதால், நொடிந்து போய் அமர்ந்திருந்த அஜய், எதுவும் பேசாமல் தன் முகத்தை அழுந்த துடைத்தான். அவனருகே வந்த அமலா, “ஏங்க... உங்கத் தம்பி ஏதேதோ பேசுறாரு. நீங்களும் இடிச்ச புளி மாதிரி அப்படியே இருக்கீங்க ஏதவாது சொல்லுங்க” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

அவளிடம் இருந்து தன் கையை உருவியவன், மெதுவாக எழுந்து, விஜய்யை நோக்கி, “அப்ப எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிக்கிட்டு தான் எதுவுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்டியா?” என்றான் நம்பாத குரலில்.

“எப்படியும் உண்மை ஒரு நாள் கண்டிப்பா வெளியவரத்தான் செய்யும். அது இன்னைக்குன்னு எனக்கு தெரியாதே அண்ணா” என்றான் தன் தோள்களைக் குலுக்கியபடி.

விஜய்யின் பாவனை, அஜய்யை எரிச்சல் அடைய செய்ய, தன் கோபத்தைக் கட்டுப்படுத்தாமல், அவனது சட்டையைப் பிடித்து, “நான் இப்போதும் உனக்கு அண்ணன் தான்டா. இதுக்காக உன்கிட்ட பதில் சொல்லணும்னு எனக்கு எந்த வித அவசியமும் இல்ல” என்றான்.

வதனாவும், மகாவும் பதற்றத்தோடு, அவர்களை விடுவிக்க முனைந்தனர். வெறுப்பாக விஜய்யின் சட்டையை விட்டவனின் பார்வை, இப்போது அமலாவை நோக்கி சென்றது.

அவளின் முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லை. மாறாக சுவற்றை நோக்கியபடி ஏதோ போல் நின்றாள், மெதுவாக அவளின் அருகே சென்று அவள் தோள்களைச் சுற்றி தன் கையைப் போட்டவன், “இதுக்கான விளக்கம் நான் உன்கிட்ட மட்டும் தான் கொடுக்க முடியும் அமலா. எனக்கு உன் நம்பிக்கை மட்டும் தான் முக்கியம்” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான்.

செல்லும் அஜய்யைப் பார்த்த விஜய், “நகை எப்ப கிடைக்கும் அண்ணா” என்று அதிலையே குறியாக இருந்தான்.

“எனக்கு ஒருவாரம் டைம் கொடு. என் தலையை வித்தாவது நான் நகையோட வரேன்” என்று திரும்பிப்பார்க்காமலையே சொல்லிவிட்டு, மேலும் முன்னேறினான்.

அவர்கள் சென்றதும், “இன்னைக்கு விடிய விடிய சிவராத்திரி தான்னு நினைச்சேன். நல்லவேளை உங்க அண்ணன் அப்படி எல்லாம் எதுவும் செய்யல” என்றாள் மகா.

அதில் சிரித்துக் கொண்ட வதனா, “நானும் தான் அண்ணி. இதுக்கு ஏதாவது கற்பனைக் கதையைக் கட்டுவாருன்னு நினைச்சேன்” என்றாள்.

“நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்குறீங்க?. இதை வச்சி ரெண்டு பேரும் சண்டை போடுவாங்களா?” என்று விஜய் கேட்க.

“கண்டிப்பா” என்று இரு பெண்களுமே கூற, அவனது மனைவியோ, ஒரு படி மேலே சென்று, “நாளைக்கே அமலா அக்கா அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருவாங்க. ஏன் அவங்களுக்கு இடையே விவாகரத்துக் கூட ஆகிரும்” என்றாள் பாவமாக.

அதற்கு சிரித்துக் கொண்ட விஜய், “நாளைக்கு அப்படி ஒன்னு நடக்குதான்னு முதலில் பாரு” என்றவன், கொட்டாவி விட்டபடி, “சரி நான் தூங்கப் போறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகன்றான்.

“இவரு என்ன ஏதோ சொல்லிட்டுப் போறாரு” என்று பெண்கள் இருவரும் குழம்பி தான் போனர்.

பின் மறுநாள் காலை, விஜய் சொன்னது போலவே தான் நடந்தது. நேற்று இரவு அப்படி ஒரு பிரளயம் நடந்ததற்கு உண்டான எந்த வித அறிகுறியும் இல்லை.

அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்து தங்களது உணவை உண்டு கொண்டிருக்க, அஜய்யும், அமலாவும் தங்கள் கைகளை கோர்த்தபடி, சிரித்துக் கொண்டே, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

அதில் வதனாவும், மகாவும் ஒருவர் முகத்தை ஒருவர் வியப்பாக பார்த்துக் கொண்டனர். விஜய்யோ, ‘இது தெரிந்த விஷயம் தானே’ என்று மிகவும் சாதாரணமாக இருந்தான்.

இப்போது தான் திருமணம் ஆனா புதுமண தம்பதிகள் போல, வெட்கம் கலந்த சிரிப்போடு, உணவு மேஜைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தனர்.

“இந்தாங்க இட்லி வச்சிக்கோங்க... கறிக்குழம்பு ஊத்துறேன்’ என்ற அமலாவின் கவனிப்பு மிகவும் தடபுடலாக இருந்தது.

அவனும் சும்மா இருக்காமல், “நீயும் நல்லா சாப்பிடு அமலா. இந்த ஈரலை வச்சிக்கோ” என்று விழுந்து விழுந்து கவனித்தான்.

நடக்கும் நாடகத்தை சிரித்தபடி பார்த்தது விஜய் மட்டும் தான். மகாவோ, வதனாவின் முகத்தைப் பார்த்து, ‘உனக்கு ஏதாவது தெரியுமா?” என்பது போல் கேட்க, அவளோ தன் ஒரு தோளை மட்டும் குலுக்கி, “இல்லை” என்றாள்.

“இன்னைக்கு நாம சினிமாக்கு போவோமாங்க” என்று அவள் ஆசையுடன் கேட்க, “ம்... கண்டிப்பா அமலா. இன்னைக்கு சாயந்திரம் ரெடியா இரு. நான் சீக்கிரம் வரேன்” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் பத்தித்தான். அதனை அனைவரும் ‘ஆவேன்று’ தான் பார்த்தனர்.

“மச்... என்னங்க நீங்க” என்று சொல்லிக் கொண்டே தங்கள் முன்பாக அமர்ந்திருந்த மூவரையும் பார்த்தவள், “நாம சந்தோஷமா இருக்குறதைப் பார்த்து சில ஜென்மங்களுக்கு எல்லாம் வயிறு எரியும். கண்ணு வச்சிருவாங்க. அதனால் கண்டவங்க முன்னாடி இப்படி பண்ணாதீங்க” என்று சிணுங்கிக்கொண்டே கூறினாள்.

அதைக் கேட்டு தன் தலையில் அடித்துக் கொண்ட விஜய், “எல்லாம் கொடுமையாத் தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு, அஜய்யைப் பார்த்தவன், “ஒரு வாரம் டைம் கேட்டு இருக்க அஜய். அதை நீ காப்பத்துவன்னு நினைக்குறேன். இல்லைன்னா உன் மேல சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உன்கிட்ட இருக்கும் ஷேர்ஸ்சையும் பிடுங்கிருவோம்” என்றான் மிரட்டலாக.

“அதெல்லாம் அவர் சரியா தந்திருவார்” என்று விஜய்க்குப் பதிலளித்த அமலா, “நீங்க கிளம்புங்க. கண்டவங்கக்கிட்ட, நமக்கு என்ன பேச்சு” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றாள்.

“என்னங்க நடக்குது இங்க. இப்ப இவ்வளவு நேரம் அவங்க ரெண்டு பேரும் தமிழில் தானே பேசுனாங்க. ஆனா எனக்கு என்னமோ கொரியன் டிராமாவை சப்டைட்டில் இல்லாம பார்த்தது மாதிரி இருக்கு” என்று வெகுளியாய்க் கூறினாள் மகா.

அதற்கு,”ஆம்” என்று தன் தலையை ஆட்டிக் கொண்ட வதனா, “இதை தான் நீ நேற்று சொன்னியா அண்ணா?” என்று கேட்டாள்.

“ம்... அண்ணனுக்கும் அந்த நடிகை சுஜிக்கும் தொடர்பு இருக்குன்னு அரசல்புரசலா பலபேருக்கு தெரியும். இன்னும் சொல்லப்போனா, இது அண்ணியோட அப்பாவுக்குமே தெரியும். ஆனா அண்ணிக்கும் இது தெரியுமான்னு எனக்கு தெரியாது” என்றான் அவன் ஆச்சரியமாக.

“ஒருவேளை அவங்க அப்பாவே சொல்லி இருப்பாரோ!” என்று மகா கேட்க.

“இந்த உண்மை தெரிஞ்சதும், நேத்து அவங்க ஷாக்ல தான் இருந்தாங்க. அதுக்குப் பிறகு அவங்க அப்பாக்கிட்ட இதைப் பத்தி போனில் பேசி இருப்பாங்க. அவரு ஏதாவது சொல்லி, அவங்களை சமாதனம் செஞ்சி இருப்பார். இப்ப நடந்தது எல்லாம் ஒரு நாடகம் தான். ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம அன்னியோன்யமா இருங்கன்னு அவங்க அப்பா சேர்த்தே தான் சொல்லி இருப்பார். அதான் இந்த நாடகம்” என்றான் விஜய்.



“அவங்க அப்பாக்கு தெரியும்னு, உங்களுக்கு எப்படி அண்ணா தெரியும்?” என்று அவள் ஆச்சரியமாகக் கேட்க, “அவரோட சொந்தக்காரன் ஒருத்தன் என்னோட நெருங்கிய நண்பன். இவங்க கல்யாணம் பண்ணிக்கப்போற விஷயம் தெரிஞ்சி, ஒரு பெண்ணோட வாழ்க்கை வீணாகக்கூடாதுன்னு, இவன் அவர்கிட்ட அஜய்யைப் பத்தி எல்லாத்தையும் சொல்லி இருக்கான். ஆனா அதுக்கு அவர், ‘இதெல்லாம் பெரிய இடத்தில் சாதாரணம்னு’ சொல்லி கடந்து போயிட்டாருன்னு அவன் என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டான்” என்று தனக்குத் தெரிந்ததைக் கூறினான் விஜய்.

“அவங்களுக்குள்ள என்னவேணாலும் இருந்துட்டு போகட்டும், ஆனா என் வாழ்க்கைக்குள் அவங்க வராத வரைக்கும் நல்லது தான். சரி அண்ணா நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள் வதனா.

“வதனா ரொம்ப ஸ்வீட்” என்று மகா கூற, “ம்.. ஆமாம். ஆனா, அவளிடம் ஏதோ வித்தியாசம் தெரியுது மகா. அவளை நினைச்சா எனக்குக் கவலையா இருக்கு” என்று விஜய் கூற, “நான் இருக்கும் போது, நீங்க ஏன் இதைப் பத்தி எல்லாம் கவலைப் படுறீங்க. அதான் நான் இருக்கேனே, நான் வதனாக்கிட்ட இதைப் பத்தி பேசுறேன். உங்க அமலா அண்ணி பண்ண வேலையில், அவளுக்கு ஏதாவது ட்ராமா ஆகிருக்கும். இல்லைனா ஏதாவது லவ் பிரேக்அப்பாகக் கூட இருக்கலாம்” என்றாள்.

“பிரேக்அப்பா! அதெல்லாம் ஒன்னும் கிடையாது. என் தங்கச்சி குனிந்த தலை நிமிராம காலேஜ் போயிட்டு வர பொண்ணு. அவளுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்றான் எரிச்சலுடன்.

“அப்படி இருந்தாலும் தப்பு இல்லை அஜய். நாம ரெண்டு பேரும் அவளுக்கு உறுதுணையா இருப்போம். அவள் வேலை பார்க்கட்டும், அவள் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கும் போது, யாரை சூஸ் பண்றாளோ, அதற்கு நாம ஆதரவா இருக்கணும்” என்று அவளின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் தன் எதிர்காலத்தை, எப்போதோ தீர்மானம் செய்துவிட்ட வதனா, ‘நீ செஞ்ச தப்புக்கு தண்டனை மட்டும் எனக்கா’ என்று குறளை நினைத்து மனதினுள் திட்டியவள், ‘இன்னைக்கு பேச வேண்டியதை எல்லாம் பேசிடணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

பின் இரவு ஏழு மணி போல், அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள் வதனா. அந்த ஹோட்டலில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தான் குறளரசன்.

இவளுக்கு முன்பே அங்கே அமர்ந்திருந்தவன், அவளை சைகையால் அமரக்கூறினான். அவளோ தலையசைப்புடன் அவன் எதிர்திசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள், எடுத்ததுமே தான் கூற வந்த விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.

அவள் கூறிய விஷயத்தைக் கேட்டு அவன் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் மேலே ஏறியது. மேஜையில் இருந்து விருட்டென்று எழுந்தவன், “என்ன சொன்ன... கம் அகைன்” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறிமாறிக் கேட்டான்.

“நான் ஐந்து மாசம் பிரேக்னன்ட்” என்று திரும்பவும் அந்த வார்த்தைகளைக் கூறினாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 23

குறளரசனின் அதிர்ச்சி அடைந்த முகத்தைப் பார்த்த வதனா, தன் உதட்டை சுழித்து, “எதுக்காக இவ்வளவு அதிர்ச்சியாகுற?. இப்படி எல்லாம் ஆகும்னு தெரியாமையா அப்படி இருந்த?. இல்ல அப்படி இருந்தா இப்படி ஆகும்னு தெரியாத அளவுக்கு நீ என்ன சின்ன பாப்பாவா. இப்பெல்லாம் சின்ன பசங்களுக்குக் கூட எல்லாமே தெரியுது” என்றாள் நக்கல் மிகுந்த குரலில்.

தன் தலையை அழுந்த கோதியவன், “நீ நிஜமாத் தான் சொல்றியா” என்றான் மேலும் அதிர்ச்சியாகி.

அவள், “ஆம்” என்று தன் தலையை ஆட்ட, பொத்தென்று தன் இருக்கையில் விழுந்தவன், “நீ நிஜமாத் தான் சொல்றியா” என்று கேட்டவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

‘இது எனக்கு சந்தோஷத்தையும், துக்கத்தையும் சேர்த்தே தருது’ என்று நினைத்துக் கலக்கம் அடைந்தான். இதென்ன புது பிரச்சனை என்று அவன் மனது கலங்கித் தான் போனது.

கலக்கம் எல்லாம் அவனது பயம் மட்டுமே, ரத்னாவின் மீது உண்டன காதல் இல்லவே இல்லை. ஏன் ரத்னாவின் நினைப்பு ஒரு துளி கூட அவனுக்கு வரவே இல்லை.

“அப்ப நான் பொய்யா சொல்றேன்” என்றாள் தன் வயிற்றை தடவியபடி.

“அப்ப அன்னைக்கே, நீ ஏன் இதை என்கிட்ட சொல்லல” என்றான் கோபம் கலந்த குரலில்.

“சொல்லிட்டா மட்டும் என்ன சொல்லி இருப்ப? இது என் குழந்தை இல்லைன்னு சொல்லி இருப்ப” உங்க ஆண்கள் சமூகம் இப்படி தான் பேசும்னு எங்களுக்கு தெரியாதா” என்றாள் வெறுப்பை உமிழ்ந்த படி.

“இல்ல... நான் அப்படி எல்லாம் சொல்றதுக்கு, கேவலமான ஜீவன் இல்ல. நீ நிஜமாவே ப்ரக்னேன்ட்டா இருந்தா, நிச்சயம் அது என் குழந்தை தான். ஆனா முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்னை கலைக்க சொல்லி இருப்பேன்” என்று மிகப்பெரிய வார்த்தைகள் கூற, அதுவரை கம்பீரமாக அமர்ந்திருந்த வதனாவின் கைகள் எல்லாம் பயத்தில் நடுங்கத் தொடங்கியது.

அவளும் அறிவாளே, ‘கிங்’ என்ற நிறுவனத்தைக் கட்டி ஆளும் குறளரசன் சாதாரணமானவன் கிடையாது. அவன் நிழல் உலகத்தில் மாபியா தலைவன் என்ற செய்தியும் பரவுவதை அவள் அறிவாள்.

அப்படிப்பட்டவன் முன்பு, தான் இதை சொல்லி இருக்கக்கூடாதோ என்று நினைப்பு அப்போது தான் அவளுக்கு வரவே செய்தது.

அதற்கு முன்னர் கூட, இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்தவள், ‘குறளுக்கு தெரிவதால் என்ன ஆகிவிடப்போகிறது? நான் ரத்னாவிடம் ஏதாவது சொல்லிருவேன்னு பயப்படத் தான் போறான். நான் மூணு மாசம் இங்க இருக்குற வரைக்கும், அவன் பயந்து பயந்தே சாகட்டும்’ என்ற நினைப்பில் தான் அவனிடம் கூறினாள்.

தன் வயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவள், “இது... இது என்னோட குழந்தை. இதுக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன் “ என்றாள் பதற்றமாக.

தன் நெற்றியை நீவிவிட்டவன், “நீ பயப்படுற மாதிரி நான் எதுவும் செய்யமாட்டேன் வதனா. நான் தான் மிகப்பெரிய பாவத்தை செஞ்சிட்டேன். இப்படி வயிற்றில் குழந்தையோட கஷ்டப்படுறன்னு எனக்குத் தெரியாது” என்று சொன்னவனின் நெஞ்சம் எல்லாம் மிகவும் வலிக்க ஆரம்பித்தது.

“நான் ஒன்னும் கஷ்டப்படல. உன்கிட்ட இன்னும் ஒரு விஷயம் கேட்கத் தான் இங்க வந்தேன். என்கிட்ட உனக்கு யாரும் இல்லைன்னு எதுக்காக பொய் சொன்ன?” என்று அவள் கேட்க, அவனிடம் மௌனம் மட்டுமே.

அதில் தன் அஞ்சன விழியால் பயங்கரமாக அவனை முறைத்துப் பார்த்தவள், “நான் எனக்கே தெரியாம ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா?” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

அவனோ, “இல்லை” என்று தன் தலையை ஆட்ட. “அப்ப என் அப்பா, இல்ல என் குடும்பத்தில் யாராவது உனக்கு துரோகம் செஞ்சிட்டாங்களா?” என்று தீவிரமான குரலில் கேட்டாள்.

“ஹேய் வதனா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்றான்.

“பின்ன எதுக்காக என்னைப் பழி வாங்குன? என்னைக் கல்யாணம் பண்ணி, எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னை தூக்கிப் போட்ட” என்று கேட்கும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் கசியத் தொடங்கியது.

ஆனால் அதற்கு, அவன் அவளின் மேல் இரக்கம் எல்லாம் படவில்லை. மாறாக, “அதிகம் சீரியல் பார்க்குறன்னு நினைக்குறேன். அதனால் தான் இப்படி ஒரு எண்ணம் உனக்கு வருது. சீரியல் எடுக்குறவனுக்கு தான் அறிவில்லை உனக்குமா அறிவில்லை. யாரையாவது பழி வாங்கனும்னு நினைச்சா, எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்ணை பழி வாங்குறானுங்க. இதுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வேற... கருமம்” என்று தன் தலையில் அடித்துக் கொண்டான்.

“அப்ப, எதுக்காக உனக்கு யாரும் இல்லைன்னு பொய் சொன்ன? நிஜமாவே நான் தான் உன் ஜாகியான்னு தப்பா நினைச்சியா” என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி கேட்டாள்.

“நீ தேவை இல்லாத கற்பனை எல்லாம் பண்ணவேண்டாம் வதனா. நான் ரத்னாவை கல்யாணம் செய்வதில் எங்க அம்மாவுக்கு விருப்பம் இல்ல. அதனால் தான் உன்னைப் பார்த்து நீ தான் ஜாகியான்னு நினைச்சிட்டு, வேக வேகமா திருமணமும் செஞ்சிக்கிட்டேன். எனக்கு யாரும் இல்லைன்னு உனக்குத் தெரிஞ்சாத் தான், நீ என்னை உடனே கல்யாணம் பண்ண சம்மதிப்பன்னு நினைச்சேன்” என்று உண்மைகளை மட்டுமே பேசினான்.

தான் கர்ப்பமாக இருக்கும் விசயத்தைப் பற்றி யாருக்கு தெரியவே கூடாது என்று நினைத்தாளோ அவனிடம் வந்தே முதல் ஆளாக கூறிக்கொண்டிருந்தாள் வதனா.

இதில் குறளிடம் எதுவுமே எதிர்பார்க்கவில்லை. காதல் கொண்டு தான் சேர நினைத்தாளே தவிர, குழந்தைக்காக சேர நினைக்கவில்லை. அதுவும் இல்லாமல், குறளரசனுக்கு இதெல்லாம் பிடிக்காது என்பது அவளின் எண்ணம்.

“முதல்லையே தெரிஞ்சிருந்தா குழந்தையை கலைச்சி இருக்கலாம்” என்ற அவனது பேச்சும், அவளின் எண்ணத்தை பிரதிபலிப்பு போல் தான் இருந்தது.

“இதை உனக்கு சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு ஜாலியா சுத்துற பார்த்தியா... அது எனக்குப் பிடிக்கல. இனி இதை நினைச்சே தினமும் பயப்படு” என்றாள் வெறுப்பை கக்கியபடி.

“ஏன் இப்படி பேசுற வதனா. எனக்குத் தெரிஞ்சி உன்னோட குணம் இது கிடையாது. எனக்குப் புரியுது நான் உனக்கு செஞ்சது மிகப்பெரிய அநீதி. அதுக்காக உன் நல்ல எண்ணங்களை கெடுக்காத” என்றான் சிறிய குரலில்.

“ஏன் உன் கதையில் வில்லியாகி உன்னைப் பழிவாங்கிருவேன்னு, உனக்குப் பயமா இருக்கா?” என்றாள் இப்போது நக்கல் தொணிக்கும் குரலில்.

பெருமூச்சி ஒன்றை விட்ட குறள், “நீ உண்மையிலையே வில்லி தான்டி. ஆனா நீ சொல்ற மாதிரி எனக்கு எந்த ஒரு பயமும் இல்ல” என்றான்.

“ரத்னாவை நினைச்சும் கவலை இல்லையா?. அக்காகிட்ட உன்னைப் பத்தி நான் சொன்னா உன் நிலைமை என்னவாகும்” என்று தன் கன்னத்தைத் தொட்டு யோசித்தாள்.

“நீ சொல்றதுக்கு முன்னாடி நானே சொல்லிடுவேன். இதில் ஒன்னும் எனக்குப் பயம் இல்ல” என்றான் கம்பீரமான குரலில்.

“ஏன் பயமில்ல? ரத்னா அக்காவை அப்ப நீ நேசிக்கலையா?. இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சா அவள் தூக்கில் கூட தொங்க வாய்ப்பிருக்கு” என்று கூறி அவனை அதிர செய்தாள்.

அதில் தன் கண்களை விரித்தவன், “என்ன பேசுற?. இதுக்கு எல்லாம் யாராவது தற்க்கொலை பண்ணுவாங்களா?” என்றான்.

“யாராவது பண்ணுவாங்களான்னு தெரியாது. ஆனா நிச்சயம் ரத்னா பண்ணுவா. அதுவும் இல்லாம இது கொரியா கிடையாது இந்தியா. இங்க எமோஷன்க்கு எல்லாம் மதிப்பு அதிகம்” என்றாள்.

மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே கட்டியாளும், குறளுக்கு இது பெரிய தலைவலியாக இருந்தது. இதுவரை எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல், முகம் தெரியாத தன் வாழ்க்கை துணைக்காகவே, தன் கற்பைக் கட்டிக்காத்தவன், பெண்கள் வாசமே படாமல் இருப்பவன். இப்போது இரு பெண்களுக்கும் நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கின்றான்.

“உனக்கு என்ன தான் வேணும் வதனா?என்னைக் கல்யாணம் பண்ண நினைக்குறியா?” என்று கேட்டே விட்டான்.

அவன் பேச்சைக் கேட்டு தன் முகத்தை சுழித்தவள், “ஏற்கனவே, உன்னை ஒரு தடவை கல்யாணம் பண்ணப்போய் தான், நான் இப்படி வந்து நிற்குறேன்” என்றாள் தன் வயிற்றைக் காட்டி.

இப்போது அவன் கண்கள் அவள் வயிற்றுப் பகுதிக்கு செல்ல, “மேடேர்னிட்டி கவுன் போடாம என்ன டிரெஸ் போட்டு இருக்க?” என்று இப்போது வேறு பேச்சுக்கு மாறினான்.

தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்துக் கொண்டு, “என் டிரெஸ் என் உரிமை. அதுவும் இல்லாம இந்த மாதிரி ட்ரெஸ் போட்டாத் தானே என்னோட வயிறு வெளியே தெரியாது” என்றாள் எங்கோ பார்த்தபடி.

ஐந்து மாதத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் வயிற்றை விட, வதனாவிற்கு சிறியதாகத் தான் இருந்தது. அதனால் அதனை மறைத்துக் கொள்வதில் அவளுக்கு சிரமம் இருக்கவில்லை.

“யாருக்காவது தெரிஞ்சிரும்னு பயந்து தானே இப்படி இருக்க... எப்படியும் ஒரு நாள் வெளிய தெரியத் தான் போகுது அப்போ என்ன செய்வ?” என்றான்.

“அது என்பாடு. கண்டிப்பா உன்கிட்ட வரமாட்டேன். என் குழந்தைய எப்படி வளர்க்கனும்னு எனக்குத் தெரியும்” என்றாள் கம்பீரமான குரலில்.

“இங்கப் பாரு வதனா பேசும் போது எல்லாமே நல்லாத் தான் இருக்கும். ஆனா உனக்குன்னு லைப் இருக்கு. நீ நல்லா வாழவேண்டிய பொண்ணு. உன் வாழ்க்கையை அழிச்ச குற்ற உணர்ச்சி எனக்கு ரொம்ப அதிகமா இருக்கு. ஆனா பாரு, இப்ப தனியா போராடுன்னு சொல்ற இதே மனசு, நாளைக்குக் குழந்தை பிறந்து வளரும் போது பலவித எரிச்சல், கோபம், மனஅழுத்தம் இப்படி எல்லாத்தையும் கொண்டு வரும். இப்ப தான் படிப்பை முடிச்சி இருக்க. கொஞ்ச நாள் லைப்பை ஜாலியா என்ஜாய் பண்ணு” என்று அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்தான்.

வதனாவோ முகத்தில் எதையும் காட்டாமல், “அப்ப குழந்தையை என்ன பண்ணலாம்னு சொல்ற” என்றாள் பாறை போல் இறுகிய குரலில்.

“இப்போவே ஐந்து மாசம் ஆகிடுச்சு. அதனால் ஒன்னும் செய்ய முடியாது. குழந்தை கண்டிப்பா பிறக்க தான் போகுதுன்னு கடவுள் விதிச்சிட்டார். அதை யாராலையும் மாத்த முடியாது. குழந்தை பிறந்ததும், அதை என்னோட எடுத்துட்டு போயிடுறேன். நான் செஞ்ச தவறுக்கு, குழந்தையோட நீ கஷ்டப்பட வேண்டாம்” என்றான்.

அவனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காதவள், “ஆனா இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். இந்தக்குழந்தை எனக்கு மட்டும் தான் சொந்தம் உனக்கு இல்ல” என்று சொல்லும் போதே, சரியாக அந்த இடத்திற்கு அஜய்யும், அமலாவும் வந்தனர்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 24

“நேத்து தானே ஷாப்பிங் முடிச்ச இன்னைக்கும் கண்டிப்பா ஷாப்பிங் போகணும்னு ஏன் அடம்பிடிக்குற?” என்று அமலாவிடம் கேட்டுக் கொண்டே முன்னே நடந்தான் அஜய்.

“அந்த ஆட்டக்காரிக்கு அவ்வளவு ரூபாய் செலவு பண்ணி இருக்கீங்க. நான் ஷாப்பிங் போகணும்னு நினைச்சது தப்பா?” என்று கேட்டதும் அஜய் திண்டுக்கல் பூட்டை வைத்து தன் வாயைப் பூட்டிக்கொண்டான்.

இருவரும் சேர்ந்து வதனாவும் குறளும் அமர்ந்திருக்கும் அதே ஹோட்டலுக்கு தான் சென்றனர்.

உள்ளே, “உன்கிட்ட வாழ்க்கைப் பிச்சைக் கேட்டு நான் இங்க வரல. உன்கிட்ட இருந்து வந்த குற்ற உணர்ச்சியே எனக்குப் போதும். நான் யார் துணையும் இல்லாம என் குழந்தையை நல்ல படியா வளர்ப்பேன். குழந்தைக்காக மட்டும் தான் என்னோட வேலையை எல்லாம் விட்டுட்டு. நகைக்கடைக்கு வந்துருக்கேன். என் குழந்தையின் எதிர்காலம் பினான்சியலாகவும் சேப்பா இருக்கும்” என்றாள்.

“நீ சரியான வில்லி தான் வதனா. மிகப்பெரிய குற்றஉணர்ச்சி பாரத்தை மொத்தமா என் தலையில் சுமத்தி வச்சிட்ட” என்றான் பாவம் இல்லாத குரலில்.

“ஒரு வில்லி எப்படி ஜெய்க்குறான்னு, முதன் முதலா உன் வாழ்க்கைக் கதையில் தான் பார்க்கப் போற” என்றாள் வதனா. அதற்கு அழகாக சிரித்தவன், “நீ நல்லா இருந்தா அது எனக்கு சந்தோசம் தான் வதனா” என்று கூறினான்.

அப்போது தான் சரியாக அந்த இடத்திற்கு வந்திருந்தாள் அமலா. அஜய்யோ அலைபேசியில் பேசுவதில் கவனமாக இருந்தவன், இதனைக் கவனிக்கவில்லை.

வதனாவைப் பார்த்து சிரிக்கும் குறளரசனைக் கண்ட அமலா, “இவன் என்ன இவள் கூட பேசிக்கிட்டு இருக்கான். இவங்களுக்குள் ஏற்கனவே பழக்கம் இருக்குமா’ என்று நினைத்தவளுக்கு மண்டை குழம்ப ஆரம்பித்தது.

அமலா அங்கு நிற்பதை, தற்செயலாகத் திரும்பிய வதனா பார்த்துவிட, “ஐயோ அண்ணி” என்று அதிர்ந்தவள், குறளைப் பார்த்து, “நீ பண்ண பாவத்துக்கு பரிகாரம் பண்ற மாதிரி ஒன்னு கேட்குறேன். செய்வியா?” என்றாள் பதற்றத்துடன்.

அதற்குத் தான் காத்துக் கொண்டு இருப்பவன் போல, “சொல்லு வதனா, குழந்தைக்கான மொத்தப் பொறுப்பையும் நானே ஏத்துக்க தயாரா இருக்கேன்” என்றான் வேகமாக.

அதற்கு தன் தலையில் அடித்துக் கொண்டவள், “எங்க அண்ணி இங்க வந்துருக்காங்க. இப்ப நான் இங்க இருந்து போறேன். ஆனா ஒன்னு, இந்த விஷயம் நம்மைத் தவிர வேற யாருக்கும் தெரியவே கூடாது முக்கியமா என் வீட்டு ஆளுங்களுக்கோ, ரத்னாக்கோ தெரியவே கூடாது” என்று சொல்லி தன் கையை அவன் முன்பு நீட்டியவள், “சத்தியம் பண்ணு” என்றாள்.

அவனும், “சரி” என்று அவள் கை மேல் தன் கையை வைத்து, “இது யாருக்கும் தெரியவராது வதனா” என்று உறுதியளித்தான்.

கிங் என்ற பெயரில் பெரிய பெரிய தொழில்துறை ஜாம்பவான்களை எல்லாம் நடுநடுங்க செய்பவன், வதனாவின் பேச்சுக்கு எல்லாம், தன் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான்.

“சரி நான் போறேன்” என்று சொல்லிக் கொண்டே தன் கைப்பையை எடுத்தவள், ஏதோ நியாபகம் வந்தவளாக, “ஆமாம் சொல்ல மறந்துட்டேன். இந்தியாவில் கல்யாணம் பண்ணாம, ஒரு பொண்ணும், பையனும் சேர்ந்து இருந்தா, அதுக்கு வேற மாதிரி அர்த்தம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

அமலா, தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே அவர்கள் அமர்ந்திருந்த மேஜையின் அருகே வருவதற்குள், அந்த இடத்தைக் காலி செய்திருந்தாள் வதனா. இப்போது அந்த இடத்தில் குறளரசன் மட்டுமே இருந்தான்.

அவன் அருகே வந்தவள், “இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே, வதனா இங்க உட்காந்திருந்தா” என்றாள் அங்கிருந்த நாற்காலியை சுட்டிக்காட்டியபடி.

அதற்கு எதுவும் விளக்கம் கொடுக்காத குறள், “நீங்க தானே ரத்னாவோட அண்ணி?” என்று கேட்டான்.

“ஆமாம்” என்று சொல்லியபடி, சுற்றும் முற்றும் வதனாவைத் தேடிக் கொண்டு இருந்தாள் அமலா.

அவள் முன்னே வந்து சுடக்கிட்ட குறள், “யாரை தேடுறீங்க?” என்றான்.

“அதான் சொன்னேனே எங்க வீட்ல இருக்கும் பொண்ணு வதனா...” என்றாள்.

அப்போது சரியாக அந்த இடத்திற்கு அஜய் வர, குறளைப் பார்த்து மரியாதை கருதி சிரித்து வைத்தவன், தன் மனைவியிடம், “நம்ம டேபில் அங்க இருக்கு அமலா” என்றான்.

“இல்லைங்க. இப்ப தான் வதனா, இவர் கூட பேசிக்கிட்டு இருந்தா, அதுக்குள்ள எங்கப்போனான்னு தெரியல” என்று புகார் வாசித்தாள்.

அவனோ புரியாமல், “வதனாவா? இவரோடையா? என்று குறளரசனைக் காட்டிக் கேட்க, “ஆமாங்க” என்று அடித்துக் கூறினாள்.

“இங்கப் பாருங்க மிஸ்டர் அஜய், உங்க மனைவி என்ன பேசுறாங்கன்னு தெரியல. நானும் என்னோட கிளையன்ட் ஒருத்தரும் இங்க உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். அதற்குள் இவங்க வந்து வதனா வதனான்னு ஏலம் போட்டுட்டு இருந்தாங்க” என்றான் விரக்தியாக.

உடனே அமலாவைப் பார்த்து பல்லைக் கடித்து முறைத்த அஜய், குறளைப் பார்த்து, மன்னிச்சிடுங்க மிஸ்டர் குறளரசன். நாங்க போயிட்டு வரோம்” என்று தன் மனைவியை தள்ளாத குறையாக இழுத்துக் கொண்டு வந்தவன், “உனக்கு என்ன வதனா பைத்தியம் முத்திப்போச்சா? எப்ப பார்த்தாலும் வதனா, யாரைப் பார்த்தாலும் வதனா” என்று கத்தினான்.

“இல்லைங்க அது வந்து...” என்று எதோ கூறவரப் போன அமலாவைத் தடுத்தவன், “வதனாவை மறந்துட்டு, முதலில் ஒரு குழந்தையை பெத்துக் கொடு” என்று அடிக்குரலில் சீறினான்.

அதில் அமலாவின் முகம் ஏதோ போல் ஆனது. அதை எல்லாம் பார்க்காமல், “குடும்ப கவுரவத்தைக் காப்பாத்துறதுக்கு தான், உன்கிட்ட குழந்தை கேட்குறேன்” என்று வார்த்தைகளை கொண்டு அவளைத் தாக்கினான்.

எப்போதும் அவனுடன் பதிலுக்கு வாதிடும் அமலா, “நான் தான் தப்பா பார்த்துட்டேன் போல” என்று சொல்லி அமைதி அடைந்தாள்.

நேற்று இரவு அறைக்குள் சென்றதுமே, அமலாவைப் பார்த்த அஜய், அவளிடம் மன்னிப்பை வேண்டவில்லை மாறாக, “இது தான் நான். உனக்குப் பிடிக்கலைன்னா, டைவர்ஸ் பண்ணிட்டு போயிடு” என்று கொதிக்கும் நெருப்பாய் பேசினான்.

அதற்கு அமலா சிறிதும் அதிரவில்லை மாறாக, “அதெல்லாம் பண்ண முடியாது. நான் இங்க தான் இருப்பேன்” என்றாள்.

“அது உன் இஷ்டம். எவ்வளவு நாளைக்குத் தான், நானும் மூடி மூடி மறைக்க” என்றான் சாதாரணமாக.

“எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருச்சின்னு உங்களுக்கு கொஞ்சமும் பயம் இல்லையா?” என்றாள் இறுகிய குரலில்.

“நிச்சயம் இல்ல. நீ என்னை விட்டுப்போனாலும் எனக்குக் கவலை இல்ல” என்றான் பயம் இல்லாமல்.

“நீங்க அந்த நடிகை சுஜியை வச்சிக்கோங்க, ஏன் இன்னும் கூட எவளையாவது வச்சிக்கோங்க. ஆனா உங்க மனைவி நான் மட்டும் தான். இங்க இருந்து நான் எங்கையும் போக மாட்டேன்” என்று சொன்னவளின் வார்த்தைகளைக் கேட்டு, இப்போது அதிர்ச்சி அடைவது அஜய்யின் முறையாகிற்று.

“என்ன சொல்ற நீ? உனக்கு கவலையா இல்லையா?” என்றான் புரியாத குரலில்.

“இல்லவே இல்லை. நீங்க இப்படிப்பட்டவருன்னு தெரிஞ்சே தான் உங்களைக் கல்யாணம் பண்ணேன்” என்று அசால்ட்டாக கூறியவள், கட்டிலில் சென்று கால் மேல் கால்போட்டபடி அமர்ந்து, “காலேஜ் முடிச்ச உடனே ஒரு பெரிய பணக்காரனைப் பார்த்து கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். பெரிய பணக்காரன் கண்டிப்பா உங்களை மாதிரி தானே, சின்ன வீடு, பெரிய வீடுன்னு வச்சி இருப்பான். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஆனா ஒரு நடிகையை வச்சி இருப்பீங்கன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல” என்றதும், “என்னப் பெண் இவள்” என்பது போல் தான் அமலாவைப் பார்த்தான் அஜய்.

“நீ என்ன பேசிக்கிட்டு இருக்க? அப்ப நிச்சயமா உனக்கு வருத்தம் இல்லையா?” என்று திரும்பவும் கேட்டான்.

“இல்லவே இல்ல. என்ன தான் நீங்க வெளியே நடிகையை வச்சி இருந்தாலும், என்னை நல்லா தானே வச்சி இருக்கீங்க. ஆனா என்ன, நீங்க அவளுக்கு வாங்குன நகையை மட்டும் என்னால ஏத்துக்கவே முடியல. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க, அதிக விலையுள்ள பொருள் வாங்குற விசயத்தில் எல்லாம் நீங்க எனக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கணும்” என்று கண்டிப்புடன் கூறினாள்.

“உனக்கு என் மனைவின்னு அந்தஸ்த்தைக் கொடுத்து, உன் தேவை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் அமலா. சுஜி எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்து பழக்கம் அதனால் அவள் உறவை என்னால அவ்வளவு சீக்கிரம் விடமுடியல” என்றான்.

“அப்ப ஏன் அவளையே கல்யாணம் பண்ணல” என்று அமலா கேட்க, “சுஜிக்கு திருமணத்தில் இஷ்டம் இல்ல. அதுவும் இல்லாம அவள் இருட்டு உலகிற்கு மட்டும் தான்” என்றான். கொஞ்சமும் தன் மனைவி முன்பு பேசுகின்றோம் என்ற பயம் அவனுக்கு துளியும் இல்லை.

அமலாவும் அதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு காரணம்.

தொடர்ந்து பேசிய அஜய், “அவளுக்கு வாங்குன வைர நகைகளை விட பல மடங்கு அதிகமா உனக்கு வாங்குறேன். ஆனா அதுக்கு நீ, முதலில் ஒரு குழந்தையைப் பெத்து கொடு” என்று சொன்னான்.

“கண்டிப்பா பெத்து கொடுப்பேன்” என்று உறுதி அளித்தவள், “நமக்குள் நடக்கும் விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். இனி ரெண்டு பேரும் அன்பா இருக்குற மாதிரி கட்டிக்கணும்” என்றதும் அவன், “சரி” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டான்.

இரவு நடந்த இந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தான், காலையில் அஜய்யும் அமலாவும் கையோடு கைக்கோர்த்து இறங்கி வந்த நிகழ்வும் அரங்கேறியது.

இப்போது, வதனாவின் நினைப்பை தன் நினைவில் இருந்து எடுத்தவள், உணவில் கவனம் வைக்க ஆரம்பித்தாள்.

அமலாவை திருமணம் செய்ய, அவன் தந்தை கேட்ட போது உடனே சரி என்று சொல்லிவிட்டான் அஜய்.

‘நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஏத்த பொண்ணுங்க எல்லாம், ஆளுக்கு ரெண்டு மூணு பாய் பிரண்டை வச்சிக்கிட்டு திரியுறாளுங்க. நமக்கு இது போல் இருந்தா நல்லது தான்’ என்று அப்போது நினைத்திருந்தான் அஜய்.

கற்பும் நீதியும் பெண்ணுக்கு மட்டும் தான். தனக்கு இல்லை என்பது அந்த முட்டாளின் நீதி. இப்போது அமலாவின் பேச்சை எல்லாம் கேட்டு உலகை வென்று விட்டதாக நினைத்தவன், ‘அமலா நிஜமாவே எனக்கு ஏற்றவள் தான்’ என்று உள்ளுக்குள் சிலாகித்துக் கொண்டான்.

பணத்தாசைக் கொண்டு, வதனாவின் சொத்தையும் சேர்த்துப் பிடுங்க திட்டம் தீட்டிய, அமலாவுக்கு அஜய்யின் செயல் எதுவும் பெரியதாக தெரியாமல் போய், அவனது கேவலமான கறுப்பு பக்கங்களுக்கு பச்சைக் கொடியும் காட்டினாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 25

“என்ன பேசுற குறள்?. இப்போ எதுக்காக வீட்டை விட்டுப் போற?” என்று உடைந்த குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள் ரத்னா.

“நாம ரெண்டு பெரும் ஒரே வீட்டில் இருப்பது நல்லது இல்ல ரத்னா” என்று சொல்லிக் கொண்டே தன் உடைமைகளை எடுத்து தன் பெட்டிக்குள் வைத்தான் குறள்.

“இந்த மூணு நாளும் இங்க தானே இருந்த. திடீர்னு எதுக்காக ஏதோ சொல்லிக்கிட்டு இருக்க குறள்” என்று கேட்ட ரத்னாவிற்கு குறள் இங்கிருந்து செல்வதில் சிறிதும் விருப்பம் இல்லை.

“இன்னைக்கு தான் இங்க இதெல்லாம் தப்புன்னு என் நண்பன் ஒருத்தன் சொன்னான்” என்று கூறியவன், வதனா, தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்தான்.

“எந்த மடையன் உன்கிட்ட இப்படி சொன்னது. இப்ப இதெல்லாம் மிகவும் சாதாரணம். அதுவும் இல்லாம நாம் லிவிங் டுகெதர்ல ஒன்னும் இல்லையே! நீ தான், என்னை உன் பக்கத்தில் நெருங்கவே விடமாட்டேங்குற. ஒரு டெனன்ட் மாதிரி தான இருக்கோம். அப்படியே இருந்திட்டுப் போவோம்” என்று ஏதேதோ சொல்லி குறளை நிறுத்தப்பார்த்தாள்.

அவனோ, அனைவரையும் கட்டி ஆளும் கிங் ஆகிற்றே, ரத்னாவின் பேச்சில், “என்னை இப்படி தொல்லை பண்றது எனக்குப் பிடிக்காது” என்று முகத்தில் அடித்தபடி, கடினமான குரலில் கூறிவிட்டான்.

அதில் கப்சிப்பென்று தன் வாயை மூடிக் கொண்டவள், பின் மெதுவாக திறந்து, “நாம எப்ப கல்யாணம் பண்ணப்போறோம் குறள்” என்று கேட்டாள் சின்ன குரலில்.

அவளைத் திரும்பிப் பார்க்காமல் தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டே, “கூடிய சீக்கிரம். இன்னும் கொஞ்ச நாளில் அம்மாவும் அப்பாவும் இந்தியா வரப்போறாங்க. அப்ப நாம இதைப் பத்திப் பேசலாம். இப்ப நான் வரேன்” என்றவன் திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

செல்லும் குறளைத் தடுத்து நிறுத்தத் தெரியாமல் தன் மீதே கோபம் கொண்டவள், தன் காலால் நிலத்தை ஓங்கி எற்றினாள்.

‘இவனுக்கு என்ன தான் பிரச்சனை. இந்த இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியப்போறான். ஒருவேளை வேற ஏதாவது பொண்ணைப் பார்த்து மனசு மாறிட்டானோ!’ என்று நினைத்தவள் பின் அவளே, “இல்ல கண்டிப்பா இருக்காது. குறள் எனக்காகவே காத்துக்கிட்டு இருந்தவன். டிடேக்டிவ் கூட அப்படி தானே சொன்னார்” என்று தனக்குத் தானே ஆறுதல் மொழிகளைக் கூறிக் கொண்டாள்.

ரத்னாவைப் பொறுத்தவரை அவளுக்கு எல்லாமே புதியதாக வேண்டும். அதனால் தான் அவள் இதுவரை ஒரு பாய்பிரண்ட் கூட வைத்துக்கொள்ளவில்லை. அதற்காக எந்த வித கெட்டப் பழக்கமும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

அடிக்கடி பணக்காரர்கள் மட்டும் கூத்தடிக்கும் பிரபல பப்பிற்கு செல்பவள் அங்கே பலமுறை ஒன் நைட் ஸ்டாண்ட் வைத்துள்ளாள். தனக்கென்று குறள் போன்ற ஒரு இணையைத் தான் இதுவரை தேடிக்கொண்டு இருந்தாள்.

அவளின் தோழி கூட ஒருமுறை, “எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாத, அதுவும் நம்ம ஸ்டேடஸில் இருக்குற பையன்கள் எப்படி ரத்னா உனக்குக் கிடைப்பாங்க. இப்பெல்லாம் நம்ம ஸ்டேட்ஸில் இருக்கும் எந்த வித கெட்டப் பழக்கமும் இல்லாத பெண்ணைக் கூட கண்டுபிடிக்க முடியாது” என்றாள் மது கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டபடி.

“ஏன் கிடைக்க மாட்டான்? அதெல்லாம் கிடைப்பான். இப்போதெல்லாம், கெட்டப் பழக்கம் இல்லாத பொண்ணுங்களைக் கூட பார்க்க முடியாதுன்னு சொல்ற. ஏன் அதில் என் தங்கச்சி சந்தரவதனா அடக்கம் இல்லையா?” என்றாள் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

“அந்தப்பெண்ணா? அவள் என்னடி அப்படி இருக்கா? உன் பிறந்த நாள் விழாவில் கடைசியா பார்த்தது. உங்க அண்ணி எப்போ பார்த்தாலும் அவளை முறைச்சி பார்த்துட்டே இருக்காங்க. அதனால் அன்னைக்கு அவள் சரியாகக்கூட சாப்பிடல” என்றாள் வருத்தமான குரலில்.

“மச்... அவளோட பேச்சு இப்ப எதுக்கு. எனக்கு அவளை மாதிரியே ஒரு அப்பாவி தான் வேணும். என் மீது ரொம்ப அன்பா இருக்கணும். நான் நில்லுன்னா நிற்கணும். நான் சொல்றதைக் கேட்கணும். பெரிய பணக்காரனா இருக்கணும்...” என்று நீளமாக சொல்லிக் கொண்டே அவள் செல்ல, இடையிட்ட அவளின் தோழி, “ஆனா, எந்தவித கெட்டப் பழக்கமும் இருக்கக் கூடாது சரியா” என்று கேட்டதும் தன் தலையை ஆட்டிக் கொண்டாள் ரத்னா.

“உன்கிட்ட தான் அதிகமா பணம் இருக்கேடி பின்ன ஏன் பணக்காரன் தான் வேணும்னு சொல்ற? நல்லப்பையனா மட்டும் இருந்தா போதாதா?”

“அதெல்லாம் உனக்குப் புரியாது. எனக்கு இது மாதிரி தான் பையன் வேணும்” என்று தன் முடிவில் உறுதியாக இருந்தாள் ரத்னா.

அவளின் தோழியோ, “ஆனா ஒன்னு ரத்னா, நீ கேட்குற மாதிரியான குணநலன்களோடு ஒரு பையன் அம்பானி வீட்டில் இருக்கான்” என்று சொல்லும் போதே, அதில் ஆர்வம் தோன்ற, தன் புருவத்தை சுருக்கி வைத்துக் கொண்டு, “யாருடி இருக்கா? அம்பானி பையன்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகியிருச்சே” என்றாள்.

“அம்பானி வீட்டு நாயைத் தாண்டி சொல்றேன். அது தான் நீ நில்லுன்னா நிற்கும். உன் பேச்சை எல்லாம் கேட்க்கும். அதுக்குன்னு மூணு கோடிக்கு காரெல்லாம் இருக்கு. அது போக சொத்துக்களும் இருக்கலாம்” என்று சிரிக்காமல் கூறிக்கொண்டிருந்தாள்.

அதில் மிகவும் ஆத்திரம் கொண்ட ரத்னா, அப்போதே அந்தப்பெண்ணின் நட்பை உடைத்தும் இருந்தாள்.

இங்கே, ஒருபெரிய ஏழு நட்சத்திர அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த குறளரசன், வதனாவைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

கிங் கட்டுமான நிறுவனம், இங்கே சென்னையில் இருந்தாலும், அவனுக்கு தனியாக வீடு கிடையாது. இப்போதைக்கு விடுதியில் தங்கலாம் என்று நினைத்தவன் வேகமாக வீடு பார்க்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்.

அந்த அறையின் பால்கனியின் வழியே முப்பதாவது மாடியில் இருந்து, நகரத்தின் அழகைப் பார்த்தவனுக்கு, அதை மனதால் ரசிக்க முடியாமல் போனது. ஏனென்றால் அவன் மனது வதனாவைத் தான் நினைத்துக் கொண்டு இருந்தது.

வதனாவின் மேல் பாசம், அன்பு அனைத்தையும் மனதினுள் பூட்டி தான் வைத்திருக்கின்றான். ஆனால் அதற்கு காதல் என்ற பெயர் சூட்ட அவன் மனது விளையவில்லை. இது அவள் கர்ப்பமாக இருப்பதற்கு முன்பே அவனுள் இருந்தது.

அவளது கர்ப்பத்தினால் மட்டும் அவன் மனதில் எந்த வித மாற்றமும் வரவில்லை.

பால்கனியின் கைப்பிடியை அழுத்தமாகப் பிடித்தவன், “நீ ஏன் என்னோட ஜாகியாவா இல்லாமப் போன” என்று அங்கிருந்து வதனாவை நினைத்துக் கத்தினான்.

மனது வதனாவிடமே சென்றாலும், அவள் தன் குழந்தையை சுமந்து கொண்டு நிற்கின்றாள் என்பதை அறிந்தாலும், அவன் பாழாய்ப் போன மனது என்னவோ, தனக்குத் திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது ரத்னாவுடன் மட்டும் தான் என்று ஆணி அடித்தார் போல் பதிந்து வைத்து இருந்தது.

‘குழந்தையை வைத்து அவள் கஷ்டப்படக்கூடாது. குழந்தை பிறந்ததும், வதனா தடுத்தாலும் அதை என்னோடவே கூட்டிட்டுப்போயிடுவேன். இதைப் பத்தி ரத்னாகிட்ட முதலில் பேசணும். எனக்குன்னு ஒரு குழந்தை கேட்கவே பிரம்மிப்பா இருக்கு’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டவன், “கண்டிப்பா நான் உனக்கு நல்லா தந்தையா இருப்பேன் செல்லாம்” என்று இன்னும் பிறக்காத தன் குழந்தைக்கு சொல்லிக்கொண்டான்.

இங்கே தன் வீட்டில், பூட்டிய தன் அறையின் உள்ளே அழுது கொண்டிருந்தாள் வதனா.

அலமாரியைத் திறந்து, அதில் இருந்த மஞ்சள் கையிற்றை தடவியவள், அப்படியே தன் இன்னொரு கையினால், தன் வயிற்றையும் தடவிக்கொண்டாள்.

“நீ எனக்காக விட்டுட்டுப் போனது இந்த இரண்டும் தான் குறள். உன் கண்களுக்கு நான் ஏதோ ஒரு பொண்ணு மாதிரி தான் தெரியுறேன். என்னை நினைச்சி உன் முகத்தில் குற்ற உணர்ச்சியும், தப்பை திருத்த நினைக்கும் பாவனை தான் தெரியுதே தவிர, காதல் துளியும் தெரியல. எனக்கும் உன் காதல் தேவை இல்ல” என்று அவள் வாய்விட்டு சொல்லும் போதே, அவள் இதயத்தில் சிறு ஓரத்தில் வலி உண்டாகி, ‘உன் மனது அவன் காதலைக் கேட்கிறது தானே!’ என்று அதிகமாக சத்தமிட்டு துடிக்க ஆரம்பித்தது.

அவள் நெஞ்சைப் பிடித்தபடி கீழே அமர்ந்தவள், “நான் ஏன் உன்னோட ஜாகியாவா இல்லாம போனேன். ஏன் இப்படி ஜாகியாவத் தான் கல்யாணம் பண்ணப் போறேன்னு பைத்தியம் பிடிச்சு அலையுற” என்று கத்தினாள்.

அப்போது அவளின் அறைக்கதவு தட்டப்பட, பதற்றம் அடைந்தவளாக, வேகமாக தன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, முகத்தை சாதரணமாக வைத்தபடி, கதவைத் திறந்தாள்.

அங்கே மகா தான் நின்று கொண்டிருந்தாள்.

“ஒரு வழியா கதவைத் திறந்துட்டியா. சரி வா சாப்பிடப் போகலாம்” என்று வதனாவை அவள் அழைக்க, “எனக்கு வேண்டாம் அண்ணி பசியில்ல” என்றாள்.

“மணி பத்தாகப் போகுது வதனா. நீயும் சாப்பிட வருவன்னு நான் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஆனா நீ வர்ற மாதிரி தெரியல. நீ வரலைன்னா உங்க அண்ணன் என்னைத் தான் திட்டுவாரு” என்று ஏதேதோ கூறி வதனாவை தன் கையோடு அழைத்துச் சென்றாள்.

கீழே இவர்கள் வருவதை, கையில் தண்ணீர் ஜக்கோடு பார்த்துக் கொண்டிருந்த அமலா, ‘இதெல்லாம் எப்ப நடந்துச்சி. இந்த மகா எதுக்காக வதனாவை இந்தத் தாங்கு தாங்குறா...’ என்று நினைத்த அமலா, அப்போது தான் வதனாவின் உடையைக் கண்டாள்.

‘அடப்பாவிகளா’ என்று தன் வாயில் கைவைத்தவள், ‘இந்த ரத்னாவை கட்டிக்கப்போற சீனாக்காரனுக்கு, இந்த வதனாக் கூட என்ன பேச்சு’ என்று நினைத்தாள்.

குறளை சந்தித்துவிட்டு, வீட்டிற்கு வந்த வதனா, தன் உடையைக் கூட மாற்றாமல், மனம் நொந்தபடி அழ ஆரம்பித்தாள். அவள் உடையை வைத்தே, குறளுடன் இருந்தது வதனா தான் என்று நூறு சதவிதம் உண்மையாக நம்ப ஆரம்பித்தாள் அமலா.

உணவு மேஜையில் வந்து அமர்ந்த வதனாவைப் பார்த்தவள், ஒரு பெரிய நட்சத்திர உணவு விடுதியின் பெயரைச் சொல்லி, “நீ அங்க இருந்து தானே வந்த வதனா! அதுக்குள்ள உனக்கு திரும்பவும் பசிக்க ஆரம்பிச்சிருச்சா” என்றாள் தன் கன்னத்தில் கைவைத்துக் கொண்டே.

அதனைக் கேட்ட வதனாவிற்கு திக்கென்று ஆனது. அங்கே தான் விஜய்யும் இருந்தான். விஜய்யும், மகாவும் அமலாவின் முகத்தை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

நொடிப்பொழுதில் தன்னை சமாளித்துக் கொண்ட வதனா, தன் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல், “இல்லை. நான் எங்கேயும் போகல. கடையில் இருந்து நேர வீட்டுக்கு வந்துட்டேன்” என்றாள் வதனா.

“இல்ல. நீ வந்த” என்று வாதிட ஆரம்பித்தாள் அமலா. அதில் விஜய்க்கு எரிச்சல் மேலிட, “அதான் ஸ்டார் ஹோட்டல்க்குப் போயிட்டு, நல்லா சாப்பிட்டு வந்துட்டீங்களே! பின்ன ஏன் எங்களை சாப்பிட விடாம தொந்தரவு பண்றீங்க?” என்று தீக்குச்சி போல் எரிந்து விழுந்தான்.

அதில் தன் வாய்க்குள், “சில்லு வண்டுகள் எல்லாம் ஒன்னு சேர்ந்துடுச்சி. இதை எல்லாம் சொல்ல வேண்டியவங்களுக்கு சொன்னாத் தான் சரியா வரும்” என்று முணங்கியவள். அங்கிருந்து சிறிது தள்ளிப் போய், தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த அலைபேசியை எடுத்து ரத்னாவிற்கு அழைத்தாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 26

ரத்னாவோ அப்போது தான் தன் படுக்கையில் படுத்து தூங்க ஆரம்பித்திருந்தாள். தன் அலைபேசி சிணுங்க, ‘ஒருவேளை குறளாக இருக்குமோ!’ என்ற நினைப்பில் அடித்துப் பிடித்து, அருகில் இருந்த மேஜையில் இருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தவள், அமலாவின் பெயரைக் கண்டதும், முகத்தை சுழித்தாள்.

“இப்ப எதுக்காக இவங்க போன் பண்றாங்க! இந்த பொம்பளையோட ஒரே தொல்லையாப்போச்சு. வதனாவை வெறுப்பேத்த இதோட பழகுனா, அட்டைப்பூச்சி மாதிரி அப்படியே வந்து ஒட்டிக்குது. கல்யாணம் ஆகி கொரியா போனதும், இந்தப் பொம்பளையோட எல்லாத்தையும் முறிச்சிக்கணும்” என்று வாய்விட்டு சொன்னபடி, இணைப்பை அழுத்தி தன் காதில் வைத்தாள்.

அந்தப்பக்கம் பேசிய அமலா, “ஹலோ ரத்னா, நல்லா இருக்கியா?” என்றாள் பாசம் ஒழுக.

“ம்ச்... அண்ணி ராத்திரி மணி பத்தை தாண்டியிருச்சி. இப்ப எதுக்காக போன் பண்ணி நலம் விசாரிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் கொட்டாவி விட்டபடி.

“அச்சோ, நான் அதுக்காக போன் பண்ணல ரத்னா. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் கூப்பிட்டேன். உனக்குப் பின்னாடி மிகப்பெரிய அநியாயம் நடக்குது வதனா” என்றாள் தன் கண்களை பெரியதாக வைத்துக் கொண்டு.

அதில் வதனாவின் கண்களும் பெரியதாக விரிய, தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சுத்திவளைத்து பேசாம சீக்கிரம் சொல்லுங்க அண்ணி” என்றாள்.

“இன்னைக்கு நானும் உன் அண்ணனும் ஹோட்டல் போயிருந்தோம்...” என்று அவள் ஆரம்பிக்க, தன் தலையில் கைவைத்துக் கொண்ட ரத்னா, அமலாவிற்கு கேட்காதவாறு, கெட்ட வார்த்தை ஒன்றை முணங்கினாள்.

தொடர்ந்து பேசிய அமலா, “அப்ப குறளரசனை நான் பார்த்தேன், அதுவும் அந்த வதனாவோட” என்று சொல்லும் போதே, ரத்னாவின் கண்கள் விரிய ஆரம்பித்து அவள் மனதில் படபடப்பு அதிகமாக ஆரம்பித்தது.

“என்ன அண்ணி சொல்றீங்க? வதனாவும், குறளுமா? வாய்ப்பே இல்ல. நீங்க வேற யாரையாவது பார்த்து இருப்பீங்க” என்று வெளியே அடித்துக் கூறினாலும், ‘என்ன பேசுறாங்க இவங்க! உண்மையாகவா!’ என்று பலவாறாக யோசிக்க ஆரம்பித்தது.

“அட அது வதனா தான்னு நான் அடிச்சு சொல்லுவேன்” என்றாள் ஆணித்தரமாக.

“குறள் எதுக்காக வதனாக் கூட அங்க வரப்போறாரு. குறளுக்கு வதனாவோட முகம் கூட நியாபகம் இருக்குமான்னு தெரியல அண்ணி” என்ற ரத்னாவிற்கு, ஏதோ சொல்ல முடியாத வேதனை அவள் மனம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

“அது தான் எனக்கும் தெரியல ரத்னா. இந்த ஆம்பளைங்கள நம்பவே கூடாது. எப்ப பார்த்தாலும் கண் கொத்தி பாம்பா கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். அதுவும் இல்லாம குறளரசன் வெளிநாட்டுப் பையன் வேற நீ தான் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று அறிவுரை கூற ஆரம்பித்தாள்.

“அண்ணி குறளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவர் செம்பு கலக்காத தங்கம். இந்த நிகழ்வு எதர்ச்சியாக கூட நடந்து இருக்கலாம். நீங்க தேவை இல்லாம கற்பனை பண்ணாதீங்க” என்று அவள் கூற வந்ததை நம்ப மறுத்தாள் ரத்னா.

ஆனால் அமலா விடுவதாக இல்லை. “உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நான் இவ்வளவும் சொல்றேன் ரத்னா” என்று சொல்ல, தன் நெற்றியை நீவிவிட்டவள், “உங்க கூட அண்ணனும் வந்திருந்தாரா?” என்று கேட்டாள்.

உடனே குஷியாகிய அமலா, “ஆமாம் வந்தாரு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானே போனோம்” என்று வெட்கம் கலந்த குரலில் கூறினாள்.

“அண்ணி, அஜய் அண்ணாக்கிட்ட போனை கொடுங்க” என்றாள் அழுத்தமான குரலில்.

‘இப்ப இவளுக்கு என்ன ஆச்சி’ என்று யோசித்தபடி, அஜய்யின் அருகே சென்றவள் அவனிடம் தன் அலைபேசியை நீட்டி, “என்னங்க, ரத்னா பேசுற” என்றாள்.

அவனோ, “இந்த நேரத்திலையா?” என்று கேட்டபடி அலைபேசியை வாங்கியவன், “என்னாச்சி ரத்னா, எதுவும் பிரச்சனையா? நான் வேணா வரட்டா?” என்று அக்கறையாக கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா. அண்ணி என்னவோ சொல்றாங்க... வதனாவும், குறளும் ஒன்னா சாப்பிட வந்தாங்கலாம்! இது உண்மையா அண்ணா? அண்ணி என்ன அண்ணா சொல்றாங்க? நீங்களும் அதைப் பார்த்தீங்களா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டாள்.

அதற்கு சிரித்துக் கொண்ட அஜய், “அமலா சொல்றதை எல்லாம் கேட்டுட்டு நீ ஏன் பதற்றமா இருக்க ரத்னா. அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்று அடித்துக் கூறியவன், தன் முன்னே நின்றிருந்த அமலாவையும் முறைக்கத் தவறவில்லை.

“பின்ன எதுக்காக அவங்க இப்படி சொல்றாங்க அண்ணா? இவங்களால் என் தூக்கமே போச்சு” என்று புகார் வாசித்தாள்.

“அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன் ரத்னா. குறளரசனை நாங்க ஹோட்டலில் பார்த்தது உண்மை தான். ஏன் அவர் கூட பேசக்கூட செஞ்சோம். வதனா அங்க வரவே இல்ல. யாரையோ பார்த்துட்டு உங்க அண்ணி அது ரத்னான்னு கத்திக்கிட்டு இருக்கா. இன்பேக்ட் குறளரசன் அங்க தன்னோட கிளைன்ட்டை மீட் பண்ண வந்ததா சொன்னாரு” என்று அவளிடம் மன்னிப்பையும் கேட்டு விரிவான விளக்கத்தையும் கொடுத்தான்.

அதனை கேட்டதும் தான் ரத்னாக்கு மனதே நிம்மதியானது.

“சரி அண்ணா. நான் கூட ரொம்ப பயந்து போயிட்டேன்” என்றாள் நிம்மதி பெருமூச்சி விட்டவளாக.

“உன் பயம் தேவையில்லாதது ரத்னா. முதலில் வதனா எதுக்காக குறளோட ஹோட்டலுக்கு வரணும்? யார் என்ன சொன்னாலும் உடனே நம்பி நீ டென்சன் ஆகாத” என்று அவன் சொல்லும் போதே, அவனுக்கு அருகே நின்றிருந்த அமலா, “இல்லைங்க நான் சொல்றது உண்மை தான்” என்று பேச, தன் உதட்டில் கைவைத்து, “அமைதி” என்று எச்சரித்தவன், “சரி ரத்னா நான் வைக்குறேன். நீ தூங்கு” என்று சொல்லி வைத்தான்.

“இல்லைங்க...” என்று அமலா மறுபடியும் ஆரம்பிக்க, தன் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அவளை முறைத்துப் பார்த்தவன், “என்னடி எப்ப பார்த்தாலும் வதனா... வதனான்னு அவள் பெயரை ஜபம் பண்ணிக்கிட்டே இருக்க? உனக்கு என்ன தான் வேணும்?” என்று கத்தினான்.

“நான் உண்மையைத் தாங்க சொல்றேன். வதனா தான் குறளோட இருந்தா. நான் ஹோட்டலில் வச்சி பார்க்கும் போது, என்ன டிரஸ் போட்டு இருந்தாளோ, இப்போதும் அதே டிரஸ் தான் போட்டு இருக்கா” என்றாள் அமலா.

“ம்ச்... இப்ப எல்லாம் ஆன்லைன்ல தான் எல்லாரும் டிரஸ் எடுக்குறாங்க. அதை வாங்கிட்டு ஊருக்குள்ள எல்லாருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் உடை போடுறாங்க. அதைப் பார்த்து நீ தப்பா நினைச்சி இருப்ப. அதுவும் இல்லாம, வதனாக்கும், குறளரசனுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. இனி தேவை இல்லாம யாரையாவது பயமப்படுத்திக்கிட்டே இருக்காத” என்று சொன்னவன், அவள் தலையில் கொட்டு வைத்தான்.

“ஆ...” என்று வலியால் கத்தி தன் தலையை தடவிவிட்டவள், “வலிக்குதுங்க” என்றாள் அழுதுவிடும் குரலில்.

“வலிக்கட்டும் தான் அடிச்சேன். சரி சொல்லு, நான் இங்க இருக்கவா இல்ல சுஜி வீட்டுக்குப் போகவா?” என்று நாக்கில் நரம்பு இல்லாமல் கேள்வி கேட்டான்.

முன்பு மறைத்து வைத்த விஷயங்கள் அனைத்தும் இப்போது அம்பலமாகிவிட, நேரடியாகவே கேட்டான் அஜய். இதெல்லாம் தெரிந்தும் அவனுடன் இருப்பதால், தன்னை மிகவும் இளக்காரமாய் பார்ப்பான் என்பதை அமலாவும் அறியவில்லை. அவள் அறிந்தது எல்லாம், பணம் இருக்கும் இடத்தில் மட்டுமே என் வாசம் இருக்கும் என்பது மட்டுமே.

அவன் பேச்சில் தன் முகத்தை சுழித்தவள், “சும்மா குழந்தை வேணும்னு சொன்னா மட்டும் போதுமா?” என்றாள்.

“அப்ப வா. வதனா பெயரை எடுத்த, உன்னை கொன்றுவேன்” என்று சொல்லிவிட்டு படுக்கைக்குப் போனான்.

‘இதில் நிச்சயம் ஏதோ ஒரு மர்மம் ஒளிஞ்சி இருக்கு. ஆதாரத்தோட வதனாவை கண்டுபிடிக்குறேன்’ என்று அமலா தன் மனதினுள் நினைக்க, “இன்னைக்கு ராத்திரி முழுசும் அங்கையே நிற்கப் போறியா?” என்று அஜய் சத்தம் கொடுத்தான்.

“உடனே, “இதோ வந்துட்டேங்க” என்று அரக்கப்பரக்க சென்றாள்.

மறுநாள் காலை பலருக்கு பலவித அதிர்ச்சியை உண்டாக்கப் போகும் நாள் போல் விடிந்தது.

வீட்டில் உள்ள அனைவரும் உணவு மேஜையில் குழும்பி, உணவை உண்டு கொண்டிருந்தனர்.

அங்கே மகாவையும், வதனாவையும் தவிர வேறு யாரும் பேசிக்கொள்ளவில்லை.

அஜய்யும், அமலாவும் தங்களது நடிப்பை மறந்தவர்களாக அமைதியின் வடிவாய் உணவை உண்டு கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் ஆராய்ச்சியாக பார்த்த விஜய், தன் அமைதியைக் கலைத்து, “சுஜிகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா?” என்று அஜய்யைப் பார்த்துக் கேட்டான்.

அதில் அஜய்க்கு ஆத்திரம் மேலோங்க, “நான் உன்னோட பெரியவன் அஜய். மரியாதை கொடுத்துப் பேசு. என்ன பேச்சு இதெல்லாம்” என்று கடுகடுத்தான்.

“நீ பண்ணும் போது அசிங்கமா தெரியல. நான் கேட்கும் போது அசிங்கமா தெரியுதா?. நான் அப்படி ஒன்னும் வரம்பு மீறி உன்கிட்ட எதுவும் கேட்கல. அதுவும், உன் குப்பை வாழ்க்கை விஷயங்கள் எல்லாம் எனக்கு தேவை இல்ல. எனக்கு நகை மொத்தமும் கைக்கு வந்தாகணும். கண்காட்சிக்கு டேட் பிக்ஸ் பண்ணனும்” என்றான் முறைத்தபடி.

“நான் சுஜிக்கிட்ட இதைப் பத்தி பேசிட்டேன். இன்னைக்கே நகை எல்லாம் கைக்கு வந்துவிடும்” என்றான் மெதுவான குரலில்.

விஜய்யின் பேச்சு அமலாவிற்கும் கோபத்தை வரவைக்க, “வரம்பு மீறிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசாதீங்க தம்பி. சுஜி ஒன்னும் இவரோட கள்ளக்காதலி கிடையாது. அவள் எங்க ரெண்டு பேருக்கும் நெருங்கிய தோழி அவ்வளவு தான்” என்றாள் காட்டமாக.

அதில் பட்டென்று சிரித்துவிட்ட விஜய்க்கு புரையேறிவிட்டது. வேகமாக, வதனா அவனுக்குப் பருக தண்ணீர் கொடுக்க, மகாவோ அவன் தலையைத் தட்டிவிட்டவாரே, “சாப்பிடும் போது ஜோக் காட்டாதீங்க அக்கா. இப்பப்பாருங்க எங்க வீட்டுக்காரர் கஷ்டப்படுறார்” என்று சிரிக்காமல் கூற, அதற்கு வதனா கொஞ்சம் கத்தியே சிரித்துவிட்டாள்.

அவளைப் பார்த்து முறைத்த அமலா, “எல்லாரும் ஒன்னு சேர்ந்து எங்களை புல்லி பண்றீங்களா? கடவுள் கேட்பார்” என்று சாபமிடுவதைப் போல பேசினாள்.

இங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால், தன் மொத்த மானமும் பறந்துவிடும் என்று நினைத்த அஜய், அங்கிருந்து வேகமாக சாப்பிட்டு விட்டு இடத்தை காலி செய்தான்.

அமலாவும் அங்கே இருந்து செல்ல, இப்போது மூவருமே சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர். சிறிது தூரம் சென்ற அமலாவின் காதுகளில் வதனாவின் சிரிப்பு சத்தம் மட்டும் அதிகமாக கேட்க, திரும்பி நின்று வதனாவை வன்மத்துடன் பார்த்தவள், தன் அலைபேசியை எடுத்து, “ஏற்கனவே, நான் சொன்னது போல, இன்னைக்கு சாயந்திரம், போட்டோல இருக்கும் பொண்ணை கடத்திரு. அவள் நான் சொன்ன ரூட் வழியாகத் தான் வருவா” என்றாள் விஷமப் புன்னகையுடன்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 27

தன் கணவன் தூங்கியதைக் கண்ட அமலா மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து பால்கனிக்கு சென்றவள், ‘இந்த வதனா சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியுது’ என்று உண்மை நிலைமை தெரியாமல் நினைத்தவள், ‘அப்படி எல்லாம் நீ இருக்க நான் விடவே மாட்டேன் வதனா. காலம் முழுவதும் என் காலடியில் தான் நீ கிடக்கணும். அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்’ என்று வன்மமாக நினைத்துக்கொண்டவள் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.

அந்தப்பக்கம் அழைப்பு எடுக்கப் பட்டதும், “போனை எடுக்குறதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா” என்று கத்தினாள் அமலா.

அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “நான் சொல்றதைக் கேளு...” என்று சிலபல திட்டங்களைத் தீட்டியவள், “இதை நீ நேரடியா செய்யாத, ஆட்களை வச்சிக்கோ. நான் வதனாவோட போட்டோவை உனக்கு வாட்ஸ்அப்பில் சென்ட் பண்றேன்” என்று சொல்லி அவளது புகைப்படம் ஒன்றை அனுப்பியும் வைத்தாள்.

இப்போது மகாவிடம் எதோ சொல்லி சிரித்த வதனாவை வன்மமாக பார்த்தவள், “இன்னைக்கு நீ சிரிக்கும் சிரிப்பு தாண்டி உன் கடைசி சிரிப்பு. நேத்தே உன் மானத்தை வாங்குறதுக்கு, எல்லா திட்டத்தையும் நான் தீட்டிட்டேன். நீ அந்த குறள் கூட சுத்து இல்ல வேற எவன் கூடயாவது சுத்து. எனக்கு அதில் கவலை இல்ல. ஆனா இன்னைக்கு தான் இந்த வீட்டில் உனக்கு கடைசி நாளா இருக்கும். ஆட்டமா ஆடுற...”என்று சூர்ப்பனகையை விட மிகவும் கொடூரமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க திட்டம் தீட்டினாள்.

இங்கே விஜய், இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான். “சரி அப்ப நானும் கிளம்புறேன் அண்ணி” என்று சொல்லி எழுந்தவளின் கையைப் பிடித்து, அமரவைத்தவள், “என்ன அவசரம் எங்கப் போற” என்று கேட்டாள்.

“என்னாச்சி அண்ணி” என்று அவள் கேட்க, “கொஞ்ச நேரம், நாம பேசுவோம் வதனா” என்றாள்.

“சரி அண்ணி” என்று சிரித்துக் கொண்டாள்.

“இங்க வேண்டாம் வதனா. தோட்டத்திற்குப் போகலாம்” என்று சொல்லி வதனாவை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே இருந்த மிகப்பெரிய நாவல் மரத்தின் அடியே இருந்த, கல் இருக்கையில் பெண்கள் இருவரும் அமர்ந்தனர்.

பறவைகளின் அழகிய சத்தத்தை ரசித்துக் கொண்டிருந்த மகா, தன் அமைதியைக் கலைத்தவாறு, “இந்த இடம் ரொம்ப அழகா இருக்குல்ல வதனா” என்றாள்.

“ஆமாம் அண்ணி. ரொம்ப அழாக இருக்கு. நான் படிக்கும் போது இங்க உட்க்கார்ந்து தான் படிப்பேன். இந்த சூழல் நம்ம வருத்தம், துக்கம் எல்லாத்தையும் மறக்க வைத்துவிடும்” என்றாள் புன்னகை முகமாக.

“நானும் இங்க தான் வருவேன். எவ்வளவு நேரம் தான் வீட்டையே சுத்தி சுத்திப் பார்க்குறது. இந்த அழகான காட்சி வேற எங்கும் கிடைக்காது. நீங்க எல்லாரும் கடைக்குப் போனதும், நான் லேப்டாப்பை எடுத்துட்டு இங்க வந்துருவேன்” என்றாள் மகா.

“நீங்க பேசாம கடைக்கு வரலாம்ல அண்ணி” என்று வதனா கேட்க.

“அதெல்லாம் எனக்குப் பிடிக்காது வதனா. லேப்டாப் தான் இருக்கே. அதில் தான் ஷேர் மார்கெட் வேலை பார்க்குறேன். எனக்கும் அப்படியே பொழுதும் போயிடும். இதோட மேலும் சில வேலைகள் பார்க்கலாம்னு நினைக்குறேன்” என்று தன் வழக்கமான தினசரி வேலைகளை வதனாவிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

தொடர்ந்து பேசிய மகா, “அதுசரி நானே பேசிக்கிட்டு இருக்கேன். நீ எதுவும் பேச மாட்டேங்குற வதனா” என்று அவளையும் பேச அழைக்க, “நான் என்ன அண்ணி பேச” என்று தன் தலையைத் தட்டி யோசிக்க ஆரம்பித்தாள்.

அதற்கு சிரித்துக் கொண்ட மகா, ஏதோ நியாபகம் வந்தவளாக, “ஆமாம் இந்த ரத்னா என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்கா?” என்று கேட்டாள்.

“ரத்னா நல்லா தான் இருக்கா அண்ணி” என்று கூற, “அதில்லை வதனா, நான் இங்க இருந்து போனதும் ஏதோ ஒரு சீனாக்காரனை கூட்டிட்டு வந்தாளாமே! உங்க அண்ணன் சொன்னார்” என்று கேட்க.

தன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்த வதனா, “அவன் சீனாக்காரன் இல்லை அண்ணி கொரியாக்காரன்” என்றாள்.

அதிர்ச்சியடைந்த மகா, “என்னது கொரியாக்காரனா?. உன் அண்ணன் சீனாக்காரன்னு தான் சொன்னார். இப்ப என்ன? நீ இப்படி சொல்ற?” என்று வருந்த ஆரம்பித்தாள்.

“நீங்க ஏன் அண்ணி சோகமா ஆகிட்டிங்க?” என்று கேட்க, “கொரியன் டிராமாவைப் பார்த்து கட்டுனா, ஒரு அழகான கொரியன் பையனைத் தான் கட்டுவேன்னு உறுதியா இருந்தேன். உங்க அண்ணன் வந்து அந்த உறுதியில் மண்ணை அள்ளி போட்டுட்டாரு” என்று குறை பட்டுக்கொண்டாள்.

அதில் வதனாவின் புன்னகை துளைந்து போனது, அவள் முன்னே அருவமாய் தோன்றி மறைந்தான் குறளரசன்.

“அழாக தெரியுற எதுவும் அழகானது கிடையாது அண்ணி. உள்ளே கேவலமான அழுக்குகள் அதிகமா இருக்கும்” என்றாள் துக்கம் அடைத்தக்குரலில்.

“அடடா, எதுக்காக உன் முகத்தை இப்படி தூக்கி வச்சிருக்க? உங்க அண்ணனை நான் ஒன்னும் தப்பா சொல்லலை” என்று விளையாட்டாக தன் கழுத்தை வெட்டினாள்.

இப்போது தன் முகத்திற்கு சிரிப்பைக் கொண்டு வந்த வதனா, “நானும் உங்களை ஒன்னும் தப்பா சொல்லலை. ஆமா, கொரியன் டிராமா பார்ப்பீங்களா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“ம்.. இங்க உட்கார்ந்து வேலை மட்டும் பார்க்க மாட்டேன், டிராமாவும் பார்ப்பேன். ஹேய், வதனா நீயும் பார்பியா?” என்றாள் சந்தோஷக் கூச்சலிட்டு.

“காலேஜ் படிக்கும் போது பார்த்தேன் அண்ணி” என்றாள்.

“இப்ப நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பார்ப்போம்” என்று கூறி ஹைபை அடித்துக் கொண்டனர்.

“அதுமட்டும் இல்ல நான் பிடிஎஸ் ஆர்மி தெரியுமா?” என்றாள் மகா, தன் சட்டையில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டபடி.

“ஓ... அதனால் தான் அண்ணன் அன்னைக்கு பிடிஎஸ்ச திட்டுனாரா” என்று கூறி சிரிக்க ஆரம்பித்தாள்.

“அவர் எப்போதுமே அப்படி தான். சரி அதை விடு ரத்னா கூட்டிட்டு வந்த, அந்தப்பையன் பெயர் என்ன?” என்று ஆர்வமாக கேட்டாள்.

முகத்தை சாதரணமாக வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்ட வதனா, “குறளரசன் அண்ணி” என்று சொல்லும் போதே, வியப்பாக முகத்தை வைத்தவள், “கொரியன்னு சொன்ன?” என்று கேட்டாள்.

உடனே வதனா, அவன் பூர்விகத்தைக் கூற, அதனைக் கேட்டு மகா, “அப்ப கொரியன் மாதிரி இருக்க மாட்டானா?” என்றவள் குறளை விடுவதாக இல்லை.

ஆனால் அவனைப் பற்றி பேச விருப்பப்படாத வதனா, “நான் சரியா பார்க்கலை அண்ணி. சரி நாம இன்னைக்கு ஷாப்பிங் போவோமா?” என்று கேட்டு, தன் பேச்சை மாற்றினாள்.

“கண்டிப்பா போகலாம் வதனா. நானே இதை உன்கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். அப்படியே ஹோட்டல் போகலாம். நான் உங்க அண்ணன் கிட்டையும் சொல்லிடுறேன்” என்று குஷியாக பேசினாள் மகா.

பின் அவளிடம் இருந்து விடைபெற்ற, வதனா நேராக மெயின் பிராஞ்ச் குயின்ஸ் நகைக்கடைக்கு சென்றாள். இன்று மகாவுடன் பேசியதால் அவள் மனநிலை மிகவும் அமைதியாக இருந்தது.

உள்ளே சென்றதும், தனக்கு வணக்கம் வைத்த ஊழியர்களிடம் சிரிப்பு கலந்த தலையசைப்பைக் கொடுத்தவள், அங்கே இருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம், “நீங்க கம்மல் தானே பார்க்குறீங்க. உங்க வட்டமுகத்துக்கு இந்த ஜிமிக்கி அழகா இருக்கும்” என்று சொல்லிவிட்டு, அங்கே நகைகளைக் காட்டிக்கொண்டிருந்த பெண்ணிடம், “இந்த டிசைனை எடுத்து, இவங்களுக்குக் காட்டுங்க” என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு வாடிக்கையாளரிடம் சென்று பேசினாள்.

அமலாவின் திட்டங்களை எதுவும் அறியாத பெண்ணவளின் மனது அன்று முழுவதும் மகிழ்ச்சியுடன் தான் இருந்தது.

இங்கே அமலா, “சரியா ஆறு மணிக்கு, அவள் வண்டியில் தான், நான் சொன்ன இடம் வழியா வருவா. நீங்க தான் உங்க வேலையைப் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தவள், இப்போது வேறு ஒரு நபருக்கு அழைத்து, “நீ சொன்ன ஆள்கிட்ட இப்போ தான் எல்லாமே பேசுனேன். அவன் எல்லாத்தையும் சரியா செஞ்சிருவான் இல்ல” என்று மறுபடியும் கேட்டு உறுதி செய்துகொண்டாள் அமலா.

அந்தப்பக்கம் பேசிய ஒரு வாலிபன், “ஆனா அக்கா, அந்தப்பொண்ணு வரும் வழியில் எல்லாம் கடத்துறது ரொம்ப ரிஸ்க். அந்த சாலையில் எல்லாம் எப்போதுமே கூட்டம் அதிகமா இருக்கும். அதனால், அந்த ஆள் பேசுனதை விட காசு அதிகமா கேட்குறான் அக்கா” என்று கூறினான்.

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. அந்த வதனாவைக் கடத்தி ரெண்டு மூணு நாள் அடைச்சி வச்சி இருக்கணும் அவ்வளவு தான். அவளை அவனுங்க என்ன வேணாலும் செஞ்சிக்கலாம். அதுக்கு நான் அனுமதி தரேன்” என்று மிகவும் விஷத்தன்மையுடன் பேசிக்கொண்டு இருந்தாள் அமலா.

தான் ஒரு பெண் என்பதனை மறந்து, மிகவும் கொடூரமாக திட்டம் தீட்டி, ஒரு பெண்ணை அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே, அழிக்க நினைக்கும் அமலா போன்ற ஆட்கள் எல்லாம் இன்னும் உலகத்தில் உலாவிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

வதனா மேல் அமலாவிற்கு, ஏன் இவ்வளவு வன்மம் என்று கேட்டால், காரணம் ஒன்றும் அவ்வளவு பெரியதாக இருக்காது. வழக்கம் போல் கணவனின் தங்கையை பிடிக்கவில்லை. அவள் சொத்து எனக்கு வேண்டும் என்பது மட்டும் தான்.

பிடிக்கவில்லை என்றாலும், பேசாமல் கடந்துவிடுவது ஒரு ரகம் என்றால், இருக்கும் வன்மத்தை எல்லாம் கொட்டி பழிவாங்க நினைப்பது வேறு ஒரு ரகம். நல்ல அண்ணியாக இருப்பவருக்கு நல்ல நாத்தி கிடைப்பதில்லை. நல்ல நாத்தியாக இருப்பவருக்கு நல்ல அண்ணி கிடைப்பதில்லை. அப்படியும் ஒருவர் மகா போலும், வதனா போலும் புரிந்து கொண்டு பழகினால் அதிர்ஸ்டசாலிகள் தான்.

இங்கே சில கணக்குகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வதனா, நேரம் ஆறாக போவதைக் கண்டு ‘வீட்டுக்குப் போகலாம். அண்ணி வேற ஷாப்பிங் போகணும்னு ஆறு மணிக்கு வர சொன்னாங்களே!’ என்று அலைபேசியில் உள்ள மணியைப் பார்த்து கொண்டே எழுந்தாள்.

குயின்ஸ் நகைமாளிகை ஒன்பது மணிபோல் திறந்து, இரவு எட்டு மணிபோல் மூடுவார். வதனா இப்போது கர்ப்பமாக இருப்பதால், அவளால் அதிக நேரம் உட்காந்திருக்க முடிவதில்லை. அதனால் காலை பத்து மணி போல் கடைக்கு வருபவள், மாலை ஆறு மணிக்குவீட்டிற்கு செல்வதை வந்த நாளில் இருந்து பழக்கமாக வைத்திருந்தாள்.

இன்றும் அதே மாதிரி தான் தன் வீட்டிற்கு செல்ல எழுந்தாள். குயின்ஸ் நகைக்கடைக்கு வெளியே தான், அந்த மாருதி கார், வதனாவை கடத்துவதற்கு தக்க சமயத்தைப் பார்த்து காத்துக் கொண்டு நின்றது.

அதிக பணம் கிடைப்பதால், எப்படியேனும், பெண்ணை கடத்திவிடும் தீர்மானத்தில் இருந்தான், அந்தக் கூட்டத்தின் தலைவன்.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 28

வதனா சரியாக கடையை விட்டு வெளியேறும் போது, இவளைக் கடத்த காத்துக் கொண்டிருந்தவன், தன் அலைபேசியில் இருந்த வதனாவின் படத்தையும், தன் முன்னே நிற்கும் வதனாவையும் பார்த்துக் கொண்டே, “மீன் வெளிய வந்துருச்சுடா. எல்லாரும் அலெர்ட் ஆகுங்க” என்று அவன் உடன் வந்தவர்களிடம் கூறிக்கொண்டு இருந்தான்.

இதைப் பற்றி எதுவும் அறியாத வதனா, தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டிருக்க, சரியாக அவள் முன்னே தன் காரில் வந்து இறங்கினாள் மகா.

வந்ததும் வராததுமாக, “சீக்கிரம் வண்டியில் ஏறு வதனா. நாம ஷாப்பிங் போகலாம்” என்றாள் மகா.

“நான் தான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேனே அண்ணி. எதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வரீங்க” என்று அன்பால் சலித்துக் கொண்டாள்.

“அதெல்லாம் இருக்கட்டும் நீ முதலில் வண்டியில் ஏறு” என்று சொல்லி, வதனாவை அவசரப்படுத்தினாள்.

வதனாவும், “சரி அண்ணி” என்றவள் தன் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு, மகாவுடன் காரில் ஏறிக்கொண்டாள்.

வதனா காரில் ஏறியதும், வேகமாக வண்டியை செலுத்திக்கொண்டு இருந்த மகா, வதனாவிடம், “நாம முதலில் எங்க போகலாம் வதனா” என்று சிரித்தபடி கேட்டாள்.

“உங்க இஷ்டம் அண்ணி” என்று சொல்லிவிட்டு, ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு பெரிய வணிக வளாகத்தினுள் அவர்களது கார் சென்று நின்றது.

தன் சீட் பெல்ட்டை கழட்டிய மகா, “நீ உள்ள போ வதனா. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்” என்றாள்.

“இல்லை அண்ணி. நானும் உங்கக் கூடவே வரேன். ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்” என்றாள் வதனா.

“நீ போய் காபிடேரியாவில் எனக்காக காத்துக்கிட்டு இரு வதனா. எங்க அம்மாக்கிட்ட பேச வேண்டியது இருக்கு. நான் பேசிட்டு வரேன்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தவள், வேகமாக அலைபேசி மூலம் தன் கணவனை தொடர்பு கொண்டாள்.

“எல்லாம் ஓகே தான் மகா. அந்த பொறுக்கிங்களை பிடிச்சாச்சு. இப்ப தான் இன்ஸ்பேக்டரிடம் பேசிட்டு வரேன். எல்லாம் ஓகே தான். அவனுங்க வாயைத் திறந்து, இதுக்குக் காரணம் யாருன்னு சொல்றது மட்டும் தான் பாக்கி. அதையும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிச்சா எல்லா உண்மையும் வெளிய வந்துவிடும்” என்றான் முகத்தில் தோன்றிய கோபத்தைக் கட்டுப் படுத்தியபடி.

“இதுக்கு எல்லாம் காரணம் அமலா அக்கா தான்னு நான் சொன்னேனே. உடனே, அவனுங்க போனை வாங்கி செக் பண்ணுங்க” என்று மகாவும் கோபத்தில் பேசினாள்.

“அதெல்லாம் பார்த்துப்பாங்க. இப்ப தானே காவல்நிலையம் கூட்டிட்டுப் போயிருக்காங்க. கூடிய சீக்கிரம் அவங்களை கைது பண்ணிடலாம்” என்றவன் சிறிது இடைவெளிவிட்டு, “வதனா நல்லா தானே இருக்கா?” என்றவன் குரலில் இப்போது கனிவு மேலோங்கி இருந்தது.

“ம்.. நல்லா தான் இருக்கா. நான் அவளைப் பார்த்துக்குறேன். நீங்க அங்க என்னன்னு பாருங்க” என்று கூறினாள்.

“வதனாக்கு இது தெரிய வேண்டாம் மகா. அவள் ரொம்ப பயந்து போயிடுவா. அதுவும் இல்லாம தன் வீட்டு ஆளே தன்னைக் கடத்த நினைச்சாங்கன்னு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்று உடைந்த குரலில் விஜய் கூற, அதற்கு மறுப்பாக தன் தலையை அசைத்தவள், “நீங்க சொல்றது தப்பு விஜய். வதனாக்கு இதைப் பத்தி கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும். அப்ப தான் அவள் எப்போதுமே விழிப்புணர்வுடன் இருப்பா” என்று கூற.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இனி நான், வதனாவை தனியா எங்கையும் அனுப்புறதா இல்ல. இது அவளுக்கு தெரியவும் வேண்டாம்” என்று தான் பிடித்த இடத்திலையே நின்றான்.

“அதெல்லாம் சரிப்பட்டு வராது விஜய். அவளை ஒரு கூட்டிற்குள் அடைப்பது மாதிரி இருக்கும். ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளுங்க. ஒரு பெண்ணோட மனது ஒரு பெண்ணிற்கு தான் தெரியும்” என்று ஏதேதோ பேசி இறுதியாக அவனை ஒத்துக்கொள்ள வைத்தாள்.

இந்த உலகில் அமலா போல் சிலரும், மகா போல் சிலரும் இருக்கத் தான் செய்கின்றனர். உலகை சமநிலை படுத்துவதற்கு தான், இறைவன் இருவரையும் சேர்த்தே படைத்தானோ! இறைவன் கட்டமைப்பில் ஆச்சரியம் பலவும் இருக்கத் தான் செய்கின்றது.

அமலா கடத்தல் காரர்களிடம் அடிக்கடி அலைபேசியில் பேசிவந்தாள். யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்று மிகவும் பார்த்துப் பார்த்து தான் பேசிக்கொண்டிருந்தாள்.

ஆனால் அதை மகா கேட்டுவிட்டது, அமலாவின் துர்திஷ்டம், வதனாவின் அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

யாருக்கும் கேட்டு விடக்கூடாது என்று கருதி, அவள் யாரும் வராத பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறைக்குள் அடிக்கடி சென்று தான் பேசிக்கொண்டு இருந்தாள்.

எப்போதும் தன் அறைக்குள் அல்லது தோட்டத்தில் மட்டுமே இருக்கும் மகா, மதிய உணவை உண்டு விட்டு, திரும்ப தோட்டத்திற்குள் செல்லாமல், பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறைக்குள் சென்றாள்.

அங்கிருந்த பழைய சாமான்களை எல்லாம் பார்வையிட்டவள், அங்கிருந்த பூஜாடியைப் பார்த்து, ‘இதை அழகுக்கு வைக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அந்த அறைக்குள் வித்தியாசமாக பயந்து கொண்டே நுழைந்த அமலாவைப் பார்த்துவிட்டவள், “இவங்க என்ன ஏதோ கள்ளத்தனம் பண்ற மாதிரியே உள்ள வராங்க’ என்று நினைத்தவள், பழைய பீரோ ஒன்றின் பின்னே மறைந்து கொண்டாள்.

‘ஒருவேளை போதை மருந்து ஏதாவது மறைச்சி வச்சி இருக்காங்களா!’ என்று யோசித்தபடி, மெதுவாக பீரோவின் பின்னே நின்று எட்டிப் பார்த்த மகா, அவள் தன் அலைபேசியை எடுப்பதைப் பார்த்து, ‘ஒருவேளை கள்ளக்காதல் ஏதாச்சும் இருக்குமோ! அதனால் தான் அவங்க கணவரோட கள்ளக்காதலை கண்டுக்கலையா!’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் அதில் அமலா பேசிய பேச்சுக்களில், தன் நெஞ்சை பிடித்துவிட்ட மகா, ‘அடிப்பாவி நீயும் ஒரு பெண்ணா. உன்னை அந்தப்பொண்ணு என்னடி செஞ்சிச்சி’ என்று மனதினுள் கதற ஆரம்பித்தாள்.

பின் அமலா வெளியே சென்றதும், அவசரமாக தன் அறையை நோக்கிப் போனவள், வேகமாக அலைபேசி மூலம் விஜய்யை அழைத்து, தான் கேட்ட அனைத்து விசயங்களையும் கூறினாள்.

அதனைக் கேட்ட, விஜய், அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்கவில்லை. வேகமாக அவன் காவல் துறையில் இருக்கும் தன் நண்பனுக்கு அழைத்தவன், அனைத்தையும் சொல்லி, “ப்ளீஸ்டா அந்த கிட்னாப்பெர்ஸ் எல்லாத்தையும் பிடி. அவனுங்கள சும்மா விடாத” என்று விட்டால் அழுதுவிடும் குரலில் பேசினான்.

பின் அவன் நண்பன் எதுவோ சொல்ல, அதை அப்படியே தன் மனைவியிடம் சொல்ல, அவளோ, “சரிங்க. நான் வதனாவை கூட்டிட்டுப் போயிடுறேன்” என்றாள்.

இப்போது, வதனா இருக்கும் இடம் வந்தவள், “ஷாப்பிங் பண்ணலாமா வதனா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“ம்... போகலாம் அண்ணி” என்றவள், “ஏன் அண்ணி ஒரு மாதிரி இருக்கீங்க? அம்மாக்கிட்ட பேசணும்னு சொன்னீங்களே! உங்க வீட்ல ஏதாவது பிரச்சனையா அண்ணி” என்று அக்கறையுடன் கேட்டாள்.

‘இந்த அப்பாவியைப் போய் அப்படி பண்ண எப்படி தான் இந்த அமலா அக்காக்கு மனசு வந்துச்சோ. ஒரு மனிதாபிமானம் கூடவா இருக்காது’ என்று தன் மனதிற்குள் நினைத்த மகா, வெளியே சிறு புன்னகையுடன் “அதெல்லாம் ஒன்னும் இல்ல வதனா. நாம போகலாம்” என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.

பின் ஷாப்பிங் செய்துவிட்டு, இருவரும் புட் கோர்ட்டில் சென்று அமர்ந்தனர். “நீ ரொம்ப களைப்பா தெரியுற வதனா. உனக்கு நான் ஜூஸ் வாங்கிட்டு வரவா வதனா” என்று கேட்டு வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தவள், “உன்கிட்ட ஒன்னு சொல்லணும் வதனா” என்றாள்.

ஜூசை பருகிக்கொண்டே, “சொல்லுங்க அண்ணி” என்றாள் வதனா.

“இனி நீ ஜாக்கிரதையா இருக்கணும் வதனா” என்று மெதுவாக பேச ஆரம்பித்தாள் மகா.

அவள் பேசுவதைக் கேட்டு குழம்பிய வதனா, “என்ன அண்ணி சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“இன்னைக்கு உனக்கு மிகப்பெரிய ஆபத்து நடக்க இருந்தது” என்று சொல்லும் போதே, வதனாவின் கை தன்னைப் போல தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டது.

“என்ன அண்ணி சொல்றீங்க? ஆபத்தா...” என்று கேட்க, “ஆம்” என்று தன் தலையை ஆட்டிக் கொண்ட மகா, இன்று தான், அமலாவின் பேச்சைக் கேட்டது முதல், இப்போது நடந்தது வரை அனைத்தையும் கூறிவிட்டு, அவள் கையைப் பிடித்தவள், வதனாவின் வெளிறிய முகத்தை ஏறிட்டு, “இது உனக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா இது உனக்குத் தெரிய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்னு. யாருக்குத் தெரியும் இவ்வளவு நாள், நம்மக்கூட ஒரே வீட்டில், ஒன்னா சாப்பிட்டு, ஒன்னா வாழ்ந்தது மனுஷி இல்ல ராட்சசின்னு” என்று கோபமாக பேசினாள் மகா.

வதனாவின் கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது, பின் வேகமாக அதை உள்ளே இழுத்துக் கொண்டவள், “என்ன சொல்றதுன்னே தெரியல அண்ணி. நீங்க மட்டும் இல்லைன்னா என் நிலை என்ன ஆகிருக்கும்?” என்றவள் மகாவின் கையை எடுத்து தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டாள்.

“அதெல்லாம் உனக்கு ஒன்னும் ஆகியிருக்காது வதனா. ஒரு பெண்ணை அவ்வளவு சீக்கிரம் கடத்த முடியாது. அதுவும் அவ்வளவு கூட்டம் மிகுந்த சாலையில். நான் இல்லைன்னா உன் அண்ணன் உன்னைக் காப்பத்தி இருப்பாரு. உன் வண்டியில் உன் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் கருவி வச்சி இருக்கார். அவர் முன்னெல்லாம் உன்கிட்ட நல்ல படியா நடந்துக்கிட்டது கிடையாது. ஆனா இப்போ அப்படி இல்ல வதனா. அவர் நிஜமாவே ரொம்ப நல்லவர். அவர் நல்ல குணங்கள் எல்லாம் வேகமாவே வெளிய வந்துருச்சி. உனக்காக அம்மாவும் அப்பாவுமா நாங்க ரெண்டு பெரும் இருப்போம். இதை நினைச்சி நீ கவலைப் படக்கூடாது” என்று நெகிழ்ச்சியாக பேசினாள்.

மகாவின் பேச்சைக் கேட்டு, அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது. அவளின் கண்ணீரை துடைத்துவிட்ட மகா, “இனி எதுக்காவும் நீ அழக்கூடாது” என்று சொல்லிக் கொண்டே, வதனாவின் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

பின் சில கணங்கள் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்பிய வதனா, “ஆனா எதுக்காக அமலா அண்ணி இப்படி செஞ்சாங்க? அவங்களுக்கு நான் என்ன பாவம் பண்ணேன் அண்ணி” என்றாள் விரக்தியான குரலில்.

“அவங்களுக்கு உன்னோட சொத்து வேணும் வதனா. உன் கற்பை கேள்விக்குறி ஆக்குனா, ஊரில் இருக்கும் பெரியவங்களும் உனக்காக பேச மாட்டாங்கன்னு அவங்களுக்கு ஒரு எண்ணம். ஆனா என்ன ஆனாலும் நானும் விஜய்யும் உன்கூட இருப்போம்னு அவங்களுக்கு தெரியாம போச்சு” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, திடீரென்று, “நான் கர்ப்பமா இருக்கேன் அண்ணி” என்று கூறி பெரிய குண்டை மகாவின் தலையில் இறக்கினாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 29

வதனா கூறியது, தன் காதில் தான் தவறாக விழுந்துவிட்டதோ என்று நினைத்தோ மகா, “நீ இப்ப என்ன சொன்ன?” என்று திரும்பவும் கேட்டாள்.

தன் முகத்தில் எந்த வித பாவனையையும் காட்டாமல், முகத்தை நேராக வைத்துக் கொண்டு, “அமலா அண்ணி என் மானத்தை வாங்குறதுக்குத் தானே அப்படி செய்தாங்க. ஆனா என்னோட மானம் தான் ஏற்கனவே போயிடுச்சே!” என்றாள் விரக்தி அடைந்த குரலில்.

“வதனா, நீ என்கிட்ட விளையாட தானே செய்யுற. நீ சொல்றது உண்மை இல்லை தானே!” என்று தான் கேட்டது தவறாக இருந்துவிடாதா என்ற நினைப்பில் திரும்பவும் வதனாவிடம் கேட்டாள்.

அவளோ, “இதெல்லாம் உண்மை தான் அண்ணி. யாரும் இல்லாம, அநாதையா நான் நின்ன வேளையில், என்னைக் காதலிக்குறதா சொல்லி ஒருத்தன் வந்தான். கல்யாணமும் பண்ணான். ரெண்டு நாள் என்கூட வாழ்ந்துட்டு, நான் தேடி வந்தப் பெண் நீ கிடையாதுன்னு சொல்லிட்டும் போயிட்டான்” என்றாள் மரத்துப் போனக் குரலில்.

மகாவிற்கு தான் ஆத்திரம் தாங்க முடியவில்லை, “உன்னை ஏமாத்திட்டுப் போயிட்டான்னு சாதரணமா சொல்ற... யாரு அவன்? அவனை எப்படி நீ சும்மா விட்ட” என்று உரும்பினாள்.

“அவன் அதுக்கான காரணத்தைக் கூறினான் அண்ணி” என்றாள் மெதுவாக.

இப்போது மகாவின் கோபம் எல்லாம் அப்படியே வதனாவின் மீது இறங்கியது.

“பைத்தியமாடி நீ. அவன் உன்னை யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டு போயிருக்கான். இன்னும் இது மாதிரி எத்தனை பெண்களை ஏமாத்தி இருக்கானோ?” என்று நன்றாக திட்டினாள்.

“அவன் அப்படி பட்டவன் கிடையாது அண்ணி. ஆனா அவன், எனக்கு செஞ்சது மிகப்பெரிய தப்பு தான். ஆனா அவன் தேடி வந்த காதலி நான் இல்ல” என்றாள் ஏதோ இழந்துவிட்டதைப் போல.

சலிப்பாக தன் தலையில் கையை வைத்தவள், “நீ இவ்வளவு அப்பாவியா இருப்பன்னு எனக்குத் தெரியாது வதனா. இதுக்கு எல்லாம் நானும் ஒரு காரணம்” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள்.

“அண்ணி இதில் உங்க தப்பு என்ன இருக்கு? இதில் தப்பு எல்லாமே நான் செஞ்சது மட்டும் தான்” என்றாள் உணர்ந்தவளாக.

“நானும் உன் அண்ணனும் சுயநலவாதிகளா, இல்லாம இருந்திருந்தா, இப்படி ஒரு கஷ்டம் உனக்கு வந்திருக்காது வதனா” என்று அவள் தலையை தடவியவள், “நம்ம வீட்டில் இருக்கும் மனிதர்களே பலமாதிரி இருக்கும் போது, வெளிய இருக்கும் ஒருத்தனை நீ எப்படி நம்பலாம்?” என்றாள் வருத்தம் கொண்டவளாக.

“அது நடந்து முடிஞ்சா கதை அண்ணி. இனி அதை நாம பேச வேண்டாம்” என்றாள் கண்களில் தோன்றிய வலியுடன்.

“இப்ப உனக்கு எத்தனாவது மாசம்” என்று மகா கேட்க, “ஐந்து” என்று தன் கைவிரல்களை மடக்கிக் காட்டியவள், “இது அண்ணனுக்கு தெரிய வேண்டாம் அண்ணி” என்று கூறி மகாவின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

இங்கே மகாவிற்கு தான் தன் தலை எல்லாம் சுத்த ஆரம்பித்துவிட்டது.

“எப்படியும் தெரியத் தான் போகுது வதனா” என்று மகா கூற, “அதற்குள் நான் இங்க இருந்து போயிடுவேன் அண்ணி” என்று தன் மனதில் நினைத்தை எல்லாம் மகாவிடம் கூறிவிட்டாள்.

தன்னை அக்கறையுடன் தாயைப் போல் தோள் சாய்த்துக் கொள்ள ஒரு உறவு கிடைத்தவுடன், அவளால் இதை மகாவிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதுவும் இல்லாமல் தன்னையும் தன் குழந்தையையும் காக்க வந்த தெய்வமாக மகாவைப் பார்த்தாள் வதனா.

அதில் மொத்தமாக தன்னிலை இழந்த மகா, “அறை வாங்குவ வதனா. உன்னை எங்கையும் போக விடமாட்டேன். இந்த குழந்தைக்கு எவன் அப்பான்னு சொல்லு” என்று இருக்கும் இடம் கருதி மெதுவாகவும் அதே வேளையில் அழுத்தமாகவும் கேட்டாள்.

“அதை மட்டும் என்கிட்ட கேட்க்காதீங்க அண்ணி. என்னால எதுவும் சொல்ல முடியாது” என்று கூற, அவள் கையில் ஓங்கி அடித்தவள், “குழந்தை எப்படி அப்பா இல்லாம வளருமா?. நீ ஏமாந்ததுக்கு தண்டனை அந்த குழந்தை அனுபவிக்கணுமா?” என்று சீறினாள்.

தன் கையை தடவிக் கொண்டே, மகாவை இறுக்கமாக அணைத்தவள், “நீங்க அப்படியே எங்க அம்மா மாதிரியே பேசுறீங்க” என்றாள் கண்கள் கலங்க.

“அப்ப வீட்டுக்கு வா. வீட்டில் வச்சி இன்னும் பலமா ரெண்டு மூணு அடி சேர்த்தே கொடுக்குறேன்” என்றதும் வதனாக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஹேய், நான் உன்னை திட்டுறேன்டி எதுக்காக இப்படி சிரிக்குற” என்று கண்டனமாக பார்த்தாள் மகா.

“அது ஒன்னும் இல்லை அண்ணி. மிகப்பெரிய மனஅழுத்தத்தை என் மனசுல தேக்கி வச்சிருந்தேன். இப்ப நீங்க வந்ததும், பனிக்கட்டி போல் அதெல்லாம் கரைந்து போச்சு” என்றாள் லேசான மனதுடன்.

வதனாவின் தலையைத் தடவியவள், “உலகம் என்ன பேசும்னு கவலைப் படுற பிற்போக்குவாதி நான் இல்ல வதனா. ஆனா இதில் மிகவும் பாதிக்கப்படுறது நீயும் உன் குழந்தையும் மட்டும் தான். உனக்குக் குழந்தை கொடுத்த பொறம்போக்கு ஜாலியா வேற பொண்ணு கூட போயிருவான்” என்றாள்.

“அதுக்காக அவன் கிட்டப்போய் கெஞ்ச சொல்றீங்களா அண்ணி” என்றாள் விரக்தியான குரலில்.

“உன்னை கெஞ்ச சொல்லல வதனா. மாறாக ரெளத்திரம் பழகுன்னு சொல்றேன்” என்றாள்.

“நீங்க சொல்ற மாதிரி தான் அண்ணி நானும் செய்யுறேன். அவன் கிட்ட கர்ப்பமா இருக்கும் விஷயத்தை சொல்லிட்டேன். அவனை நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு தான் சொன்னேன்” என்றாள் வதனா.

“அதுக்கு அவன் என்ன சொன்னான்” என்று வேகமாக மகா கேட்க, “குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு, நீ உன் வாழ்க்கையை வாழுன்னு சொல்றான்.

“அதெல்லாம் விடு. உனக்கு முதலில் அவன் மேல காதல் இருக்கா?”

“ம்...” என்று தன் தலையை வதனா ஆட்ட, அவள் தலையில் நச்சென்று கொட்டு வைத்தவள், “இதுக்கு பிறகும் உன் காதல் போகலையா” என்றாள் அவள் வயிற்றை சுட்டிக்காட்டி.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள், “என்னை என்ன அண்ணி பண்ண சொல்றீங்க? என் மனசை என்னால கட்டுப்படுத்தவே முடியல. அது எப்போதும் அவனை மட்டும் தான் நினைக்குது அண்ணி” என்றாள் சோகமே வடிவாய்.

அதற்கு தன் தலையில் அடித்துக் கொண்டவள், “அதான் குழந்தைக்கு நான் பொறுப்புன்னு சொல்லிட்டானே! பின்ன ஏன் உன்னை கல்யாணம் பண்ண மாற்றான்” என்றாள் மகா.

“குழந்தை அவனோடதா இருந்தாலும், அவனோட காதலி நான் இல்லை அண்ணி” என்றாள் வதனா.

இடியாப்ப சிக்கல் போல் இவர்களின் கதையைக் கேட்ட மகாவிற்கு தலைவலி வந்தது மட்டும் தான் மிச்சம்.

“குழந்தை வேணும், அதைப் பெற்று தந்த நீ வேண்டாமா? யாரு அந்த அயோக்கியன். அவனைப் பார்த்தா நான் கண்டிப்பா அவன் மண்டையை ஓடச்சிருவேன்” என்றாள் மகா.

“குழந்தைக்காக மட்டும், நாங்க இணைவதில் எங்க ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லை அண்ணி. நான் அவன்கிட்ட காதல் இல்லைன்னு என்னை தைரியமா கட்டுறதுக்காக மட்டும் தான் சொன்னேன். ஆனா உள்ளுக்குள் தினமும் வெகுறேன். என்னால், அவன் இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்றதை பார்க்க முடியாது அண்ணி” என்று வருத்தம் தொணிக்கும் குரலில் கூறினாள்.

“உனக்கு இந்த குழந்தை கண்டிப்பா வேணுமா வதனா?” என்று மகா கேட்க, “கண்டிப்பா வேணும் அண்ணி. எனக்குன்னு எனக்கே என் ரத்தத்தில் உருவான குழந்தை இதை நிச்சயமா அவனிடம் கொடுக்கமாட்டேன்” என்று உறுதியான குரலில் வதனா கூற, தன் நெற்றியை தடவியபடி சிறிது யோசித்த மகா, “சரி. நான் வேற ஏதாவது வழி கிடைக்குதான்னு யோசிக்குறேன். அதுவரைக்கும் உன் அண்ணன் கிட்டையும் நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்று உறுதி அளித்தாள்.

பின் வதனாவின் கையை எடுத்து தன் தலைமேல் வைத்தவள், “நீ எங்கையும் வீட்டை விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்றாள் மகா.

சுற்றி உள்ள அனைவரும் தங்களைக் கவனிப்பதை உணர்ந்த வதனா, “அண்ணி எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க” என்றாள்.

ஆனால் அதைப் பற்றி மகா சிறிதும் கவலை கொள்ளாமல், “நீ முதலில் சத்தியம் பண்ணு” என்று தன் பிடியில் உறுதியாக இருந்தாள்.

வேறு வழி இல்லாமல், “நான் சத்தியம் பண்றேன் அண்ணி. நான் எங்கையும் போகமாட்டேன்” என்று சத்தியம் செய்தாள். அதற்குப் பின்னர் தான், வதனாவின் கையை விடுவித்தவள், “நீ ஒன்னும் கவலைப் படாத வதனா. உனக்கு நான் இருக்கேன். எந்த ஒரு துன்பமும் உன்னை அண்டாமல் பார்த்துக்குறேன்” என்று அண்ணியாக மட்டும் அல்லாமல் ஒரு அன்னையாக வதனாவை மடிதாங்கினாள்.

இங்கே அதிக கோபத்துடன் அஜய் முன்னால் வந்து நின்ற விஜய், “உன்னோட அருமை மனைவி இப்ப ஜெயிலில் இருக்காங்க தெரியுமா?” என்றான்.

“என்ன? அமலாவா? ஜெயிலில் இருக்காளா?” என்று கண்கள் வெறிக்கக் கேட்ட அஜய்க்கு அப்படி ஒன்றும் பதற்றம் வரவில்லை. மாறாக, ‘அங்கே எதுக்கு போனாள்’ என்ற பாவம் மட்டுமே இருந்தது.

“ஆமாம் ஜெயிலில் தான் இருக்காங்க. அவங்க மேல புகார் கொடுத்தது நான் தான். வதனாவை கிட்னாப் பண்ண ஆள் செட் பண்ணி இருக்காங்க” என்று சொல்லும் போதே, அஜய்யின் அலைபேசி அடிக்க ஆரம்பித்தது.

“எடு அஜய். அவங்க தான் கூப்பிடுறாங்க” என்றான் தன் கையை மார்பு அளவு கட்டிக் கொண்டு.

அவன் அலைபேசியை காதில் வைத்ததும், பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்த அமலா, என்னங்க என்னை உடனே வந்து காப்பாத்துங்க. எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு” என்று கூறி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

அஜய்யோ கலங்கவில்லை, பதற்றம் அடையவில்லை ஆக மொத்தம் எதுவுமே செய்யவில்லை “அதுக்காக என்னை என்ன பண்ண சொல்ற?. உன்னை யாரு இதை எல்லாம் பண்ண சொன்னா?” என்றான் மிகவும் சாதாரணமாக.

அதில் அதிர்ந்த அமலா, ஏங்க இப்படி பேசுறீங்க? விளையாடுறதுக்கு இது நேரம் இல்ல. உடனே நம்ம வக்கீலை கூட்டிட்டு வாங்க” என்று மிகவும் பயந்தபடி பேசினாள்.

தன் மணிக்கட்டில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்த அஜய், மிகவும் சாதாரண குரலில் “எனக்கு வேலை இருக்கு அமலா. என் வேலை எப்படியும் முடிய ஒரு மணி நேரம் இருக்கு. அதுக்குப் பிறகு நான் வரேன்” என்று சொல்லி இணைப்பை அணைத்தவனை, ‘இவன் என்ன மனிதன்’ என்பது போல் பார்த்து வைத்தான் விஜய்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 30

மறுநாள் காலையில், உணவு உண்டு விட்டு அஜய்யிடம் பேசுவதற்காக விஜய் சோபாவில் அமர்ந்திருக்க. விஜய்யின் அருகே வந்து அமர்ந்த மகா, “அமலா அக்கா மேல எப்ஐஆர் போட்டாச்சி தானே விஜய்” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டவன், “பின், போடாம எப்படி?. இதில் தப்பிச்சது யாருன்னா, அமலா அண்ணியோட தம்பி மட்டும் தான். அவன் தான் இந்த ஏற்பாட்டை எல்லாம் செய்திருக்கான். அமலா அண்ணியும் அவனைப் பத்தி எதுவும் வாய்திறக்கல. அவன் அப்படியே வெளியே அலையுறது வதனாக்கு செப் இல்ல” என்று சொல்லிவிட்டு, தன் மனைவியின் முகத்தை ஏறிட்டவன், “அதனால் நம்ம ஆட்கள் சிலர் அவனை கவனிச்சிக்கிட்டாங்க” என்று மெதுவாக கூறியவன், “ஆமாம் வதனா எங்க?” என்று கேட்டான்.

“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நேத்து நான் சொன்னதும் ரொம்ப டவுன் ஆகிட்டா. இன்னைக்கு காலையில் எழுத்திருக்கவே இல்ல. அதான் அவள் ரூமுக்கே போய் சாப்பாடு கொடுத்துட்டு வரேன்” என்றாள் மகா.

“அதில் கொஞ்சம் பதற்றம் அடைந்தவன், “நான் தான் எதுவும் அவளிடம் சொல்ல வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா?” என்று தன் மனைவியை முறைத்தவன், “சரி நான் போய் அவளை பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி எழப்போனவனை கடினப்பட்டு கையைப் பிடித்து இழுத்து, திரும்பவும் சோபாவில் அமர வைத்தவள், “எங்க போறீங்க? அவள் ரெஸ்ட் எடுக்குறாள். நான் தான் பார்த்துக்குறேன்னு சொல்றேனே!” என்று கண்டித்தாள்.

அதற்கு, “சரி” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டான்.

“உங்க அண்ணன் வெளியே வந்தாரா இல்லையா?” என்றாள் சலிப்பான குரலில்.

மறுப்பாக தன் தலையை ஆட்டியவன், “மணி பத்தை கடந்துருச்சி இன்னும் அவனைக் காணும்” என்றான்.

“ஆனாலும் பொண்டாட்டி மேல இவ்வளவு பாசம் அவனுக்கு இருக்கக்கூடாது” என்று சொல்லிக் கொண்டான்.

“நீங்க ஏன் அப்படி நினைக்குறீங்க? வதனா என்ன இருந்தாலும் அவர் தங்கை இல்லையா!. அவளோட சொத்துக்கு ஆசைப்பட்டாலும், அவர் இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் வதனா மேல பாசம் இல்லாமலையா போயிடும்?. வதனாவை கடத்த திட்டம் போட்டதால் தான் உங்க அண்ணன் அண்ணியை பெயிலில் எடுக்க லேட் பண்ணி இருக்கார்” என்று தான் நினைத்ததைக் கூறினாள் வதனா.

‘ஒருவேளை அப்படி கூட இருக்குமோ!’ என்று யோசனைக்குத் தாவினான் விஜய்.

இங்கே பூட்டிய தன் அறையில், சாய்வு இருக்கையில் கால் மேல் கால் போட்டு அஜய் அமர்ந்திருக்க, அவனின் காலின் கீழே ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் அமலா.

அவள் முகம் எல்லாம் சிவப்பாக இருந்தது, நேற்று இரவில் இருந்து இப்போது வரைக்கும் அழுது கொண்டே தான் இருக்கின்றாள். அவளிடம் பேசக் கூட திராணி இல்லை. வாயைத் திறந்தாள் வெறும் காற்றி மட்டுமே வந்து கொண்டிருந்தது.

“நீயும் எவ்வளவு நேரத்துக்குத் தான் இப்படி உட்காந்திருக்கன்னு நானும் பார்க்குறேன்” என்று அஜய்யும் அடமாக அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

“என்னங்க...” என்று கஷ்டப்பட்டு தன் வாயைத் திறந்தவள், “என்னால முடியலைங்க... நான் ரெஸ்ட் ரூம் வேற போகணும்” என்றாள் மிகவும் நலுங்கிய குரலில்.

“போக வேண்டாம்னு நான் ஒன்னும் உன் கையைப் பிடிக்கல அமலா. நீ தாராளமா போகலாம். ஆனா அது இங்க இல்ல. உன் அப்பன் வீட்ல” என்று கூறி தன் பல்லைக் கடித்தவன், எக்கி சென்று அவள் நாடியைப் பிடித்து, “நான் கட்டி வைத்திருந்த மானத்தை எல்லாம் ஒரே இரவில் முடிச்சிட்டடி நீ” என்று தன் கையில் அழுத்தத்தைக் கூட்ட, வலி பொறுக்க முடியாமல் கதறி துடித்த அமலா, “நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புன்னு எனக்கு தெரியலைங்க. என்ன இருந்தாலும், வதனா உங்க தங்கச்சி அவளை நான் அப்படி பண்ணி இருக்கக்கூடாதுங்க” என்றவள் அவ்வளவு வலியிலும் தான் பேச வேண்டியதை எல்லாம் பேசினாள்.

அவளின் நாடியை வெடுக்கென்று தள்ளிவிட, அதில் அமலா தரையோடு தரையாக விழுந்தாள்.

“உனக்கு அப்படி என்னடி வதனா மேல கோபம்? ஒரு கிழவனுக்கு அவளைக் கட்டி வைக்கணும்னு நீ திட்டம் போடும் போது கூட அமைதியா இருந்து, உன் பேச்சை தானே கேட்டுக்கிட்டு இருந்தேன்?. ஆனா நீ இந்த நிலைக்கு இறங்குவன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. எனக்கும் வதனாவைப் பிடிக்காது தான். மூத்தவன் நான் தொழில் எல்லாத்தையும் பார்க்க, ஸ்கூல்க்கு போய்கிட்டு இருந்த என் தங்கச்சி பெயரில் அதிகமான ஷேர்ஸ்சை என் அப்பாவும், அம்மாவும் எழுதி வச்சாங்க. அதில் என் கோபம் நியாயமானது தான். ஆனா உனக்கு எதுக்கு அவள் மேல அவ்வளவு ஆத்திரம்” என்று நீளமாக பேசிவிட்டு, அவளிடம் கேள்விகளை ஏழுப்பினான்.

“நான் சத்தியமா அறியாமையால் பண்ணிட்டேங்க. தயவுசெஞ்சி என்னை வீட்டை விட்டு அனுப்பிடாதீங்க” என்று நேற்று இரவு முழுவதும் பேசி பேசி புளித்துப் போன அதே மாவை தான் திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருந்தாள் அமலா.

அதில் எரிச்சல் அடைந்தவன், “அப்ப ஒன்னு செய்யலாம். நீ எப்படி வதனாவை கடத்த திட்டம் போட்டியோ, அதே மாதிரி நானும் உன்னை வச்சி ஒரு திட்டம் போடுறேன். ஐந்து ஆண்கள் மட்டும் வசிக்கும் இடத்தில் நீ ரெண்டு நாள் தங்கிட்டு வா. அது உன் தவறுக்கான சிறந்த தண்டனையா இருக்கும்” என்றான்.

அதில் மொத்தமாக உடைந்து போய் தன் நெஞ்சில் கைவைத்துவிட்டவள், “நான் அப்படிபட்ட பொண்ணு இல்லைங்க” என்று உடைந்து அழுதாள்.

“பின்ன என் தங்கச்சி மட்டும் அப்படிப்பட்ட பொண்ணா?” என்று கத்தினான்.

“ஐயோ... நீங்க பேசப் பேச எனக்கு நெஞ்சு வலியே வந்திரும்ங்க. எனக்கு நீங்க அவ்வளவு அழுத்தம் கொடுக்குறீங்க. இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சு விட்டுருங்க. அதுவும் இல்லாமல் இதெல்லாம் உங்களுக்காக மட்டும் தான் செய்தேன்” என்று அவள் கூறும் போதே, அவளது முடியை பிடறியுடன் சேர்த்து பிடித்தவன், “நீ பண்ண அசிங்கத்துல என்னையும் கோர்த்து விடப்பார்க்குறியா? கொன்றுவேன். எனக்காக எதுக்குடி அவளைக் கடத்த திட்டம் போட்ட?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

தன் வலியைப் பொறுத்துக் கொண்டே, “அவளுக்கு ஒன்னுனா ஊரில் இருந்து எல்லாரும் வந்துருவாங்க. பின்ன எப்படி அவள் பெயரில் இருக்கும் சொத்தை எல்லாம் வாங்குறது? அவள் மானம் போச்சுன்னா அவளுக்கு துணைக்கு யாரும் இருக்க மாட்டாங்கன்னு நினைச்சேன்ங்க. இதெல்லாம் உங்களுக்கு...” என்று சொல்லும் போதே, வெக்கென்று அவளது முடியைப் பிடித்து இழுத்தவன், “நீ இவ்வளவு பெரிய லூசுன்னு எனக்கு தெரியாம போச்சு. திங்குற நேரத்தையும், தூங்குற நேரத்தையும் தவிர மீதி இருக்கும் நேரத்தில் எல்லாம் மெகா சீரியல் பார்த்தா உன் புத்தி இப்படி தான் இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அவளது முடியில் இருந்து தன் கையை எடுத்தான்.

“நான் உன்னை அடிக்கடி, வதனாவைப் பார்க்காத உன் வேலையைப் பாருன்னு எச்சரிக்கை செய்துகிட்டு தானே இருந்தேன்” என்று தன் தலையைக் கோதியவன், “நல்ல குடும்பத்துப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா நீ ஒரு குடும்ப பெண் மாதிரியா நடந்துக்கிட்ட” என்றான் முகத்தை சுழித்துக் கொண்டு.

“என்னை மன்னிச்சிருங்க. நான் இந்த வீட்டில், இதே அறையில் ஒரு ஓரத்தில் இருந்துக்குறேன். உங்களை எதுவுமே கேட்க மாட்டேன்” என்று கெஞ்சி மன்றாடினாள்.

“நான் உன்னை விட்டாலும், விஜய் உன்னை விடுவான்னு நினைக்குறியா?. என் கணிப்பு சரியா இருந்தா, அவன் இன்னும் நகைக்கடைக்குப் போகாம எனக்காக தான் காத்துக்கிட்டு இருப்பான்” என்றவன், அமலாவின் பார்வையில், “என்னாச்சி? எதுக்காகன்னு பார்க்குறியா, உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப தான்” என்று மிகவும் சரியாக கணித்துக் கூறினான்.

உடனே வேகமாக அஜய்யின் அருகே தவழ்ந்து வந்தவள், அவன் கால்களை இறுக்கமாக கட்டிக்கொண்டு, “ப்ளீஸ்ங்க வேண்டாம்ங்க. நான் இந்த வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் அடிமை மாதிரி சேவை செய்வேன்ங்க” என்று மிகவும் தன்னிலை தாழ்ந்து பேசினாள்.

தன் இடையில் கைவைத்துக் கொண்டு கீழே குனிந்து, அமலாவைப் பார்த்த அஜய், “நான் உன்னை இவ்வளவு அவமானம் செய்யுறேன். உனக்கு கொஞ்சமும் சூடுசொரணை இல்லையா? ச்சே... உன்னை மாதிரி ஒருத்திய நான் பார்த்ததே இல்லை. பணத்துக்காக பிணத்தை தின்னும் அசிங்கமானவள் நீ” என்றான் வெறுப்பாக.

“நீங்க என்னை என்னவேணாலும் திட்டிக்கோங்க. ஆனா என்னை வீட்டை விட்டு மட்டும் அனுப்பிறாதீங்க” என்று அவன் கால்களை அவள் விடவே இல்லை.

****

இங்கே ஒரு காபி ஷாப்பில் குறளரசனும், ரத்னாவும் அமர்ந்திருந்தனர். மேஜையில் இருந்த குறளின் கையை அவள் மெதுவாக பிடிக்க வர, அதை உணர்ந்தவன், வேகமாக தன் கையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

அதில் ரத்னாவின் மனது அடிபட்டு தான் போனது. ‘கொரியன் டிராமாவில் வரும் கொரியன் பசங்க எல்லாம். தன்னோட கேர்ள்பிரண்ட்டை கிஸ் பண்றானுங்க. ஆனா நிஜத்தில் அவனுங்க கூச்ச சுபாவம் கொண்டவங்க போல’ என்று தனக்குத் தானே கூறி ஆறுதல் அடைந்து கொண்டாள்.

தன் அமைதியை கலைத்த குறள், “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு தான் கூப்பிட்டேன் ரத்னா. இது உனக்கு தெரிய வேண்டியது மிகவும் அவசியம்” என்றான் இறுக்கமான குரலில்.

‘ஏன் ஒரு மாதிரியா பேசுறான். ஒருவேளை பிரேக்அப் பண்ணப் போறானோ!’ என்று அவளின் மனது பதறியது.

இப்போது தமிழகத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம் தென் கொரிய ஆண்கள் மேல் ஆன்லைன் மூலம் தங்களது காதலை வளர்த்துக் கொள்ள, அச்சு அசலாக தென்கொரியன் தோற்றத்தில், தமிழகத்தில் வளைய வரும், தன் வருங்கால கணவன் குறளரசனை வைத்துக் கொண்டு, எந்த நேரம் எவள் கொத்திவிட்டுப் போய் விடுவாளோ, என்ற பயத்தில் தான் இப்போது எல்லாம் ரத்னாவின் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது.

சிறிது மௌனத்திற்குப் பின், “என்கிட்ட என்ன பேசணும் குறள்? நாம கல்யாணம் பண்ணிக்கப் போறது உறுதி தானே!” என்று பயத்துடன் கேட்டாள்.

“ஆமாம் ரத்னா. நான் உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன்” என்று அடிக்கடி உதிர்க்கும் அதே வார்த்தையை உதிர்த்தவன், “இது வேற விஷயம் ரத்னா. நான் சொல்லப்போற விஷயம் உனக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்” என்று கூறியவன், “நான் ஜாகியான்னு தப்பா....” என்று உண்மைகளை எல்லாம் சொல்லத் தயாரானான்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 31

குறள் ஏதோ சொல்ல வருவதைக் கேட்க, ஆர்வமாக அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரத்னா.

“நான் ஜாகியான்னு தப்பா...” என்று கூறும் போதே, அவனது அலைபேசி அடிக்க ஆரம்பித்தது. அவனது தாய் தான் அழைத்திருந்தார்.

“என்னோட அம்மா தான் கூப்பிடுறாங்க” என்று சொல்லிக் கொண்டே தன் அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன், ‘இப்போதாவது என்கிட்ட பேசணும்னு நினைப்பு வந்ததே’ என்று நினைத்துக் கொண்டே, “ஏபோசியோ(yeoboseyo)(ஹலோ) ஒம்மா” என்றான் மகிழ்ச்சியான குரலில்.

அதற்கு, “சீக்கே” என்று கொரியன் கெட்ட வார்த்தையில் அவனைத் திட்டினார் குறளின் தாய்.

“ஒம்மா...” என்று அவன் இழுக்க, “எங்கடா இருக்க?” என்று கேட்டார்.

“நான் காபி ஷாப்பில் இருக்கேன் ஒம்மா” என்று அவன் கூற.

தன் தலையில் அடித்துக் கொண்டவர், “எங்க தங்கி இருக்கன்னு கேட்டேன்” என்றார்.

“புதுசா பிளாட் ஒன்னு வாங்கிருக்கேன் ஒம்மா” என்றான். அவனுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நேற்றே அவனுக்கு வீடும் கிடைத்துவிட்டது. கடினப்பட்டு ஒரு நிலத்தை வாங்கி அதற்குப் பட்டா வாங்கி வீடு கட்ட மிகவும் சிரமப்படும் மக்கள் மத்தியில், ஒரே நாளில் வீட்டை தனக்கு சொந்தமாக்கி இருந்தான் குறள்.

“நானும் உன் அப்பாவும் சென்னைக்கு வந்துட்டோம்” என்று அவர் கூற, அதிர்ச்சியில் இருக்கையில் இருந்து எழுந்தவன், “என்ன? இங்கேயா! உண்மையாக தான் சொல்றீங்களா ஒம்மா” என்று திரும்பவும் கேட்டான்.

“ஆமாம் ஆமாம். நீ அதிகமா பிடிவாதம் பிடிக்குற. அதான் உன் இஷ்டப்படியே கல்யாணத்தை நடத்த தான் நாங்க வந்துருக்கோம்” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூறினார்.

“இதோ, நான் இப்பவே வந்துடுறேன் ஒம்மா” என்று சொல்லி இணைப்பை ரத்து செய்தவன், ரத்னாவைப் பார்த்து, “ஒரு முக்கியமான வேலை ரத்னா. அம்மாவும் அப்பாவும், நம்ம கல்யாணத்தைப் பத்தி பேச இங்க வந்துருக்காங்க” என்று சொல்லும் போதே அவளுள் மகிழ்ச்சி.

தொடர்ந்து பேசியவன், “நீ கோச்சுக்காத நான் அவங்களை பிக் பண்ணப்போறேன்” என்று அவன் சொல்லும் போதே, “இதில் கோவிக்க என்ன இருக்கு குறள். அவங்க எனக்கும் அப்பா அம்மா மாதிரி தானே! நானும் உங்களோடு வரேன்” என்றாள்.

“இல்ல வேண்டாம் ரத்னா. இப்ப நான், அவங்களை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஜெட்லாக் போனதும் நாம எல்லாம் உன் வீட்டில் வச்சி மீட் பண்ணலாம்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான்.

செல்லும் குறளரசனை ஆசையாக பார்த்தவள், ‘பைனலி நான் மிர்சஸ் குறளரசன் ஆகப் போறேன்’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.

***

“இந்த மாதிரியான ஒருத்தங்களை கூடவே வச்சிக்கிட்டா, எங்களுக்கு என்ன பாதுகாப்பு, நாளைக்குப் பிறக்கப் போற எங்க குழந்தைகளுக்கு எல்லாம் யார் பாதுகாப்பு அஜய் அண்ணா?” என்று அமலாவை சுட்டிக் காட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான் விஜய்.

தன் நெற்றியை நீவிவிட்ட அஜய், “அமலா மேல் கேஸ் இருக்கு விஜய். வீட்டில் யாருக்கு என்ன ஆனாலும் அமலாவை யாரும் சும்மா விடமாட்டாங்க. அவள் இங்க இருக்கட்டும். அவளுக்கு நான் பொறுப்பு” என்றான் அஜய்.

அமலாவும் ஒடுங்கிப் போய் குனிந்த தலை நிமிராமல் நின்றுகொண்டிருந்தாள்.

“அதெல்லாம் விடு அண்ணா, எனக்கு முதலில் உன் மேலையே சந்தேகமா இருக்கு” என்று விஜய் சொல்ல, இப்போது அஜய் தன் மனைவியைப் பார்த்து முறைத்தான்.

“என்னால் இங்கிருந்து எங்கயும் போக முடியாது விஜய். எனக்கும் இந்த வீட்டில் பங்கு இருக்கு” என்று அவன் கூறும் போதே, “அப்ப இந்த வீட்டின் பங்கை பிரிச்சிடலாம்” என்று விஜய் சாதரணமாக கூறினான்.

“நீ என்னனாலும் பண்ணு. ஆனா இந்த வீட்டை விட்டு நான் போகமாட்டேன்” என்றான் அடமாக.

“இந்த வீட்டை விட்டு யாரும் போகவேண்டாம்” என்று சொல்லியபடி, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் வதனா. அவளைப் பார்த்ததும் ஓடி சென்று அவள் காலில் கீழே விழுந்த அமலா, “என்னை மன்னிச்சிடு வதனா. உனக்கு நான் செஞ்சது மிகப்பெரிய பாவம்” என்று சொல்லி கதற ஆரம்பித்தாள்.

அவளைக் கண்டுகொள்ளாமல், இடப்பக்கமாக ஒதுங்கி, விஜய் முன்னே வந்து நின்றவள், “நம்ம அப்பா அம்மா, நாமெல்லம் ஒரே வீட்டில் ஒற்றுமையா இருக்கணும்னு தான் ஆசை பட்டாங்க. அமலா அண்ணியும் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகவும் தாழ்ந்து தன் மன்னிப்பை கேட்குறாங்க. அவங்களை நாம மன்னிக்கலாமே அண்ணா” என்றாள்.

“வதனா, புரியாம பேசாத. அவங்க உனக்குப் பண்ண சொன்னது மிகப்பெரிய ஈன செயல்” என்றான் கோபத்துடன்.

“அது என்னவோ உண்மை தான் அண்ணா. ஆனா இனி ஒரு தூசு என் மீது பட்டால் கூட அந்த தப்பு அமலா அண்ணியைச் சேரும். அதற்கு தண்டனை அவங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அப்படி இருக்கும் போது அவங்க இனி அந்த தப்பை செய்ய மாட்டாங்கன்னு நான் உறுதியா நம்புறேன்” என்று சொன்னவள், அஜய்யின் முன்னே வந்து, “உங்களுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லைன்னு யார் நம்பவில்லை என்றாலும், நான் நம்புறேன் அண்ணா” என்றாள்.

பின் மகாவின் கையைப் பிடித்து, “எனக்கு வீட்டில் இருக்க ஒரு மாதிரியா இருக்கு. நாம தோட்டத்திற்கு போவோம் அண்ணி” என்று சொல்லி அவளைக் கையேடு அழைத்துச் சென்றாள்.

அவர்கள் சென்றதும், அஜய்யைப் பார்த்த விஜய், “உன்னோட விஷயத்தை நடுவீட்டில் கடைபரப்புனதுக்கே மானம் எல்லாம் போய், தலைகுனிஞ்சு நின்ன. இப்ப உன் மனைவியால், உன் மானம் மொத்தமா போயிடுச்சி. இனி ஊருக்குள் உன்னையும், உன் மனைவியையும் வச்சி தான் பேசுவாங்க. சும்மா இருந்த வாய் கூட அவுல் மெல்லும். இதுக்கும் மேல எதுக்காக இவங்களுக்கு வக்காலத்து வாங்குற? பேசாம இவங்களை விவாகரத்து பண்ணிரு” என்று அமலாவைக் கைக்காட்டி அவன்கூற, அதில் அதிர்ந்த அமலா, அஜய்யை நோக்கி, “வேண்டாம்” என்பது போல் கெஞ்சினாள்.

“நான் எப்படியோ, அப்படி தான் என் மனைவியும். அவள் எதுவும் அறியாத அப்பாவி தான் விஜய்” என்று அஜய் சொல்லும் போதே, விஜயின் உதடு, இகழ்ச்சியாக வளைந்தது.

“கிட்னாப் பண்ண முயற்சி தான் நடந்ததே தவிர, அவள் கிட்னாப் பண்ணல. அதனால் தான் அமலா இப்ப வெளிய இருக்கா. ஒரு சீரியலில் வந்த சீனைப் பார்த்து, அதோட பாதிப்பு தெரியாம நடந்துக்கிட்டா. அதுக்கான தண்டனையையும் நான் அவளுக்கு கொடுத்துட்டேன். இதுக்கும் மேல, நீ அவளைப் பேசுறதை நான் விரும்பல’ என்று சொல்லிவிட்டு, அமலாவைப் பார்த்தவன், “நீ ரூமுக்குப் போ” என்று சொல்லிவிட்டு, வேலையாட்களிடம், அவளை கண்காணித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றான்.

விஜய்யும் தனக்கு நம்பிக்கையான பணியாளை அமர்த்திவிட்டு தான் சென்றான்.

தோட்டத்தில் அமர்ந்திருந்த மகா, “நீ நிஜமாவே அப்பாவி தான் வதனா. உலகம் தெரியாம இருக்கியே” என்றாள்.

“அமலா அண்ணியைப் பத்தி பேச வேண்டாம் அண்ணி. அவங்க தப்பை அவங்க உணர்ந்துட்டாங்க” என்றாள் வதனா.

“அதை எப்படி நீ நம்புற வதனா? இன்னைக்கே இவ்வளவு மோசமா திட்டம் தீட்டுறவங்க, நாளைக்கு எந்த எல்லைக்கு வேணாலும் போவாங்க. பாம்பு தன் சட்டையைக் கழட்டி போட்டாலும், அதன் குணம் மாறாது” என்று கூறிய மகாவிற்கு, அமலாவின் செயலை சிறிதும் ஜீரணிக்கவே முடியவில்லை.

“அவங்க மாறுவாங்கன்னு நானும் நினைக்கல அண்ணி. ஆனா பயம் இருக்கும் இல்லையா. இனி எனக்கு பிரச்சனை பண்ண மாட்டாங்க இல்லையா!” என்றாள்.

“நீ சொல்றது சரி தான். சரி என்னோட நெருங்கிய தோழியோட அக்கா, கைனகாலஜிஸ்ட்டா இருக்காங்க அவங்களைப் போய் பார்ப்போமா?” என்று மிகவும் ஆர்வமாக கேட்டாள் மகா.

அவள் பேச்சில், நெஞ்சில் பயத்துடன் சுற்றிமுற்றி பார்த்த வதனா, தங்களைச் சுற்றி யாரும் இல்லை என்பதனை உணர்ந்து பெருமூச்சி விட்டவளாக, “அண்ணி மெதுவா பேசுங்க” என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.

அவள் கேட்டுக்கொண்டதைப் போலவே, “சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் அண்ணி எனக்கு பயமா இருக்கு” என்றாள் பயத்துடன்.

“குழந்தை ஆரோக்கியமா இருக்கா இல்லையான்னு பார்க்க வேண்டாமா?. இப்பெல்லாம் கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கான்னு கண்டுபிச்சி, அது சரியாகுறதுக்கு மாத்திரையும் கொடுப்பாங்களாம். குழந்தை பிறக்கும் போது பிரச்சனை இருந்தாலும், சரியாகி பிறக்கும் போது ஆரோக்கியமா பிறக்குமாம்’ என்று நீண்ட விளக்கம் ஒன்றைத் தந்தாள் மகா.

மகாவின் பேச்சை கேட்டு, வதனாவுக்கும் குழந்தையைப் பார்க்க வேண்டும், அதன் சுவாசத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. மகாவின் கையைப் பிடித்துக் கொண்டவள், “எனக்கும் ஆசையா தான் இருக்கு அண்ணி. ஆனா அந்த டாக்டர் என்னை கேவலமா பார்ப்பாங்க இல்லையா. அதான் என் பயமே!” என்று தன் காரணத்தைக் கூறினாள்.

“அதெல்லாம் பார்க்க மாட்டாங்க. நான் தான் உன் கூடவே இருக்கேன் இல்லையா!” என்றாள் ஆதரவாக.

“சரி அண்ணி” என்று ஒருவழியாக ஒத்துக் கொண்டாள் வதனா.

“நானும் ஏதாவது யோசனை கிடைக்கும்னு பார்க்குறேன் வதனா. ஆனா இதுவரை ஒன்னுமே கிடைக்கல. உன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது யாருன்னாவது நீ சொன்னா, அதில் இருந்து ஏதவாது வழி கிடைக்குதான்னு பார்க்கலாம்” என்று சலித்துக் கொண்டாள் மகா.

“அதை மட்டும் என்கிட்ட கேட்காதீங்க அண்ணி. அவன், அவனோட பாதையில் போகட்டும்” என்றாள் வதனா.

“ஆமாம் பாதை பெரிய பாதை தான். உன்னை ஏமாத்துனவனை எப்படி நீ சும்மா விட்டன்னு எனக்கும் தெரியல. அவனை மட்டும் நான் பார்த்தா அவன் கன்னத்திலையே நாலு அறை கொடுப்பேன்” என்று கோபமாக பேசினாள்.

மகாவின் பேச்சு தோரணையில் சிரித்துக் கொண்டாள் வதனா.

உடனே வதனாவின் தோளில் தன் தோளை வைத்து மெதுவாக இடித்த மகா, “நீங்க கோவிலில் வச்சி கல்யாணம் பண்ணதை ஒரு போட்டோ கூடவா எடுக்கல?” என்றாள்.

“எடுத்தோம் அண்ணி. ஆனா அது அவனோட அலைபேசியில் இருக்கு” என்றாள்.

“அப்ப அதுக்கும் வழி இல்லையா?” என்று கூறி அவள் தலையில் கைவைத்துவிட்டாள்.

அப்போது அவர்களின் அருகே ஓடி வந்த பணிப்பெண் ஒருவர், “அம்மா சீக்கிரம் வாங்க வீட்டுக்கு விருந்தாளிங்க வந்து இருக்காங்க” என்றார்.

“விருந்தாளியா யாரு?” என்றனர் இருவருமே, “அந்த ரத்னா பொண்ணு, அது கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் அவங்க அப்பா அம்மாவோட வந்து இருக்கார்” என்று சொன்னதும், மிகவும் அதிர்ந்துவிட்டாள் வதனா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 32

குறளரசன் தங்கி இருந்த பிளாட்டை சுற்றும் முற்றம் பார்த்த அவனின் தாய் ஜெனி, “நீ மட்டுமா இங்க தங்கி இருக்க” என்று ஆச்சரியம் மிகுந்த குரலில் கேட்டார்.

ஜெனி முற்றிலுமாக தென்கொரியாவை சேர்ந்தவர். ருத்ராஜ் ஒரு முறை தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சம்சங் நிறுவனத்திற்கு தன் தொழில் விஷயமாகச் சென்றார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெனியின் மேல் பார்த்தவுடன் காதல். ஜெனிக்கும் அப்படித் தான். இருவீட்டு பெற்றோர்களும் அதற்கு எந்த வித எதிர்ப்பும் சொல்லாமல் போகவே, அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.

“ம்.. நான் மட்டும் தான் தங்கி இருக்கேன். இந்தியாவில் ஒரு பொண்ணுடன் தங்கி இருப்பது முறை கிடையாதாமே!” என்றான்.

தன் மகன் அவன் முடிவில் பிடிவாதமாக இருந்தாலும், ஒழுக்கத்தில் அவனை விட சிறந்தவன் யாரும் இல்லை என்பதனை நினைத்து கர்வப்படும் போதே அந்த இடத்திற்குள் வந்தார் ருத்ராஜ். குறளின் தந்தை.

தன் மகனைப் பார்த்தவர், “நீ இப்போதும் உன் முடிவில் உறுதியாக தான் இருக்கியா?” என்று கனத்த குரலில் கேட்டார்.

“ஆமாம் அப்பா. நான் ரத்னாவை தான் திருமணம் செஞ்சிக்கப்போறேன்” என்றான் குறள்.

“எதுக்காக, அந்த வயசான பெரியவர் சொன்னாருன்னா?” என்று கேள்வி எழுப்பினார் ருத்ராஜ்.

“அது மட்டும் இல்ல ஜாகியான்னா என்னோட உயிர்” என்று அவன் சொன்னதும், கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

குறளரசன் இந்தியாவில் இருந்து திரும்புவதாக இல்லை. அதனால் தாங்களே சென்னை சென்று என்னவென்று பார்த்துவிடலாம் என்று தான் தங்களது ப்ரைவேட் ஜெட்டை எடுத்துக் கொண்டு இங்கு வந்து இறங்கி இருந்தனர்.

“சரி அந்தப்பொண்ணோட கார்டியன் யாராவது இருக்காங்களா? அவங்கக்கிட்ட நான் பேசணும்” என்றார் ருத்ராஜ்.

“அவளுக்கு யாரும் இல்ல” என்று மறுப்பாக தலையசைத்துக் கூறினான்.

“அப்பா அம்மா இல்ல சரி. சொந்தக்காரங்க கூடவா இல்ல” என்று சொல்லும் போதே வீட்டின் அழைப்பு மணி கேட்டது.

குறள், “நான் யாருன்னு பார்க்குறேன்” என்று சொல்லி கதவைத் திறந்தவன், அங்கே ரத்னா நிற்பதைப் பார்த்து, உண்மையில் அதிர்ந்துவிட்டான்.

“உள்ள வா ரத்னா. எதுக்காக இவ்வளவு தூரம் வந்த?” என்று சொல்லிக் கொண்டே அவளுடன் உள்ளே நுழைந்தான்.

வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த ருத்ராஜின் காலில் வேகமாக சென்று விழுந்தவள், “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா” என்றாள்.

அவரும் பதறியபடி, “இருக்கட்டும் இருக்கட்டும்மா” என்றார்.

இப்போது ஜெனியின் காலில் விழப்போக, “இதெல்லாம் எனக்குப் பிடிக்காது” என்று முகத்தில் அறைந்ததைப் போல் பேசிவிட்டார்.

அதில் ரத்னாவின் முகம் சோர்வை தத்தெடுக்க, அவளைப் பார்த்து ஆறுதலாக தன் கண்கள் இரண்டையும் இறுக்கமாக மூடி திறந்தான் குறள்.

வீட்டை சுற்றி தன் கண்களை சூழல விட்ட ரத்னா, “இந்த வீட்டை தான் வாங்கி இருக்கியா குறள். வீடு ரொம்ப அழகா இருக்கு” என்று கூறி பாராட்டினாள்.

இப்போது தன் தொண்டையை சொறும்பிக் கொண்ட ஜெனி, “உன் சொந்தகாரங்க எல்லாம் எங்க இருக்காங்க?” என்றார்.

“அவங்க எல்லாம் இதே ஊரில் தான் இருக்காங்க அம்மா. எதுக்காக அம்மா கேட்குறீங்க” என்று அவள் கேட்கும் போதே, “எல்லாம் நம்ம கல்யாண விஷயத்தைப் பற்றி பேச தான்” முந்திக்கொண்டு பதில் கூறிய குறள், தன் தந்தையைப் பார்த்து, “ஆனா அதுக்கு முன்னாடி நான் ரத்னாக்கிட்ட கொஞ்சம் பேசணும். அதை நான் சொன்ன பிறகு, இந்த ஏற்பாட்டை எல்லாம் பண்ணலாம் அம்மா” என்றான்

முதலில் ஜெனி கேட்ட விஷயத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவள், ஜெனியை நோக்கி, “எனக்கு எல்லாமே எங்க அண்ணா அண்ணி தான். அவங்க வேற யாரும் இல்ல குயின்ஸ் நகைக்கடை முதலாளி” என்றாள்.

“சரி அவங்க வீட்டில் வச்சே எல்லாத்தையும் பேசிவிடலாம்” என்றார் ருத்ராஜ்.

“அப்பா நான் தான் இப்ப வேண்டாம்னு சொல்றேன்ல. இப்பவே என்ன அவசரம்? நாளைப்பின்ன பார்ப்போம். அதுக்குள்ள நான் ரத்னாக்கிட்ட பேசவேண்டியதை எல்லாம் பேசிடுறேன்” என்றான்.

ஆனால் அவனை சிறிதும் கண்டுகொள்ளாதவர், “நீ அவங்க வீட்டுக்கு எங்களைக் கூட்டிட்டுப் போறியாம்மா” என்று கேட்டார்.

“சரி அப்பா. ஆனா அண்ணன் ராத்திரி ஏழு மணிக்கு மேல தான் நகைக்கடையில் இருந்து வருவார். நான் அவர்க்கிட்ட தகவல் சொல்லிடுறேன்” என்று சொல்லிக் கொண்டே வேகமாக தன் அலைபேசியை எடுத்தாள் ரத்னா.

“அதெல்லாம் வேண்டாம்ம்மா. வீட்ல உன் அண்ணி இருப்பாங்களே! முதலில் அவங்களைப் பார்க்கலாம். பின்ன மெதுவா உங்க அண்ணனைப் பார்க்குறேன்” என்றார் ருத்ராஜ்.

ரத்னாவோ இப்போது விட்டால் வேறு எப்போதும் இல்லை என்பதை போல், அவளும் பணிந்து பணிந்து குறளின் பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தவள், குறளின் மறுப்புகளை சிறிதும் காதில் வாங்கவில்லை.

இனி தன் பேச்சை யாரும் கேட்கப்போவது இல்லை என்று நினைத்து அமைதியாகினான் குறள்.

“சரி அப்பா” என்றவள் அவர்களை எல்லாம் வதனாவின் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

மகாவும் வதனாவும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது தான் பணிப்பெண் ஒருவர் வந்து அவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கூறினாள்.

அதில் மிகவும் அதிர்ந்து போன வதனா, “இங்க எதுக்காக வந்தாங்க அண்ணி?” என்று கேட்டுக் கொண்டே மகாவைப் பார்த்தாள்.

“வா, என்னன்னு உள்ள போய் பார்க்கலாம்” என்று சொல்லியபடி மகா முன்னே செல்ல, இப்போது செல்வதா வேண்டாமா என்ற யோசனையுடன் மெதுவாக உள்ளே சென்றாள் வதனா.

அவர்கள் அனைவரையும் வரவேற்ற மகா, குரளரசனைப் பார்த்து, ‘பையன் நல்லாத் தான் இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டு, வேலையாட்கள் எடுத்து வந்த ஜூசை அவர்களுக்குப் பருக கொடுத்தாள்.

இங்கே நடப்பதை எல்லாம் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வதனா, ‘இவங்க தான் குறளோட அம்மா அப்பாவா, இவன் அப்படியே, அவனோட அம்மாவை உரிச்சி வச்சி பிறந்திருக்கான்” என்று தூரத்தில் இருந்தே குறளை, தன்னையும் அறியாமல் ரசித்துக் கொண்டு தான் இருந்தாள்.

மகாவை அங்கே எதிர்பார்க்காத ரத்னா, கொஞ்சம் தள்ளி இருந்த பணிப்பெண்ணைப் பார்த்து, அமலா அண்ணியை கூட்டிட்டு வா” என்று ஏவினாள்.

அந்த பெண்ணோ மகாவின் முகத்தைப் பார்க்க, அவளோ, “அவங்க இங்க இல்ல ரத்னா. நான் உன் அண்ணனுக்கு சொல்றேன். அவர் பக்கத்தில் தான் ஏதோ வேலை விஷயமா போயிருக்கார்” என்றவள் கொஞ்சம் தள்ளி நின்று விஜய்யிடம் விஷயத்தைக் கூறி அவனை வீட்டிற்கு அழைத்தாள்.

பின் அவர்கள் முன்பு வந்தவள், “அவரு இப்ப வந்துருவாரு” என்றாள் மகா.

ஜெனியோ, “தனக்கு ஒரு அண்ணன் அண்ணி தான் இருக்குறதா ரத்னா சொன்னா. இங்க வந்த பின்னாடி தான் தெரிஞ்சது நீங்களும் ரத்னாக்கு ஒரு அண்ணின்னு” என்றார் அவர்.

“ஆமாங்க ரத்னாக்கு ஒரு தங்கச்சி கூட இருக்கா” என்று சொல்லிக் கொண்டே வதனாவை தேடினாள்.

அவள் கொஞ்சம் தள்ளி நிற்பதைப் பார்த்து, “ஏன் வதனா அங்க நிக்குற. இங்க வா” என்று கூறி கையசைத்தாள்.

மெதுவாக பதுமை போல் நடந்து வந்து மகாவின் அருகே நின்றவள், “வணக்கம் ஆண்ட்டி” என்றாள்.

“ம்...” என்ற சிறு தலையசைப்பு மட்டுமே அவரிடம். ஜெனிக்கு முதலில் இருந்தே ரத்னாவை பிடிக்கவில்லை அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ரத்னாவால் அவளின் சொந்தத்தையும் சேர்த்தே வெறுத்தார்.

இங்கே வந்ததில் இருந்து மகாவையும் எடைபோடும் பார்வை தான் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே நிற்க மகாவிற்கு ஒரு மாதிரியாக இருக்கவே, வதனாவை தன் அருகில் அழைத்துக் கொண்டாள்.

பின் அங்கே மிகவும் அமைதி. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

மகாவோ, ‘தயவு செஞ்சி சீக்கிரம் வந்துருங்க விஜய்’ என்று மனதினுள் நினைத்துக்கொள்ள, ரத்னாவோ, ‘இந்த அமலா அண்ணி எங்க போனாங்க. போனையும் எடுக்க மாட்டேங்குறாங்க’ என்று நினைத்து எரிச்சல் அடைந்தாள்.

வதனா குனிந்த தலை நிமிரவே இல்லை. அனைவரும் இவளைத் தான் பெண் பார்க்க வந்தது போல் நின்றிருந்தாள். குறளின் கண்களோ அவனையும் அறியாமல் இஞ்ச் இன்ச்சாக வதனாவை அளவெடுத்துக் கொண்டு இருந்தது.

அவனது கண்கள் அவளது மனநிலைமை உடல் நிலைமை இரண்டையும் பார்த்து கொஞ்சம் திருப்தி அடைந்தது. அவனுமே அறிவான் வதனாக்கு நடக்க இருந்த துயரத்தை. அதில் மிகவும் பதறியவனும் இவன் தான். ஆனால் இது எதையும் அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை, ஏன் வதனாவிடம் கூட காட்டிக் கொள்ளவில்லை.

இதற்கு மேல் முடியாது என்று நினைத்த மகா, ருத்ராஜை நோக்கி, “உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா அங்கிள்” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம்மா. உங்களைப் பார்க்க தான் நானும் என் மனைவியும் கொரியாவில் இருந்து வந்திருக்கோம்” என்றார்.

“உங்களைப் பார்த்ததில் எங்களுக்கு சந்தோசம் அங்கிள். கொரியாவில் எங்க இருக்கீங்க?” என்று அவள் கேட்க.

அவர் ஏதோ சொல்ல வருவதற்குள், “சீயோல்ல இருக்கோம். காலையில் தான் இங்க வந்து இறங்கினோம். இந்த இடம் கொஞ்சம் அமைதியா இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்” என்று கத்தரித்து விடுவதைப் போல் பேசினார் ஜெனி.

அதில் வதனாவும், மகாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘என்ன இது கொஞ்சமும் சபை நாகரிகம் இல்லாம இந்த இப்படி அம்மா பேசுது. கிழவியா போனாலும் அழகா இருக்கோம்னு திமிரு’ என்று தன் மனதினுள் திட்டியவள், ஜெனியிடம் நேரடியாகவே பேச ஆரம்பித்தாள்.

“நீங்க எங்களைத் தேடி, எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க. உங்களை உபசரிச்சு பேசுறது தான் எங்க நாகரீக பண்பாடு மேடம். நீங்களும் இங்க கல்யாணம் பேசுறதுக்கு தானே வந்து இருக்கீங்க. நீங்க சீயோல்ல இருந்து வந்ததுனால எங்கப்பண்பாடு தெரியலைன்னு நினைக்குறேன்” என்று மகா சூடாக பதிலடி கொடுக்க, ருத்ராஜ் தான், “மன்னிச்சிடும்மா என் மனைவிக்கு ஜெட்லாக். அதனால் கொஞ்சம் கோபத்தில் பேசிட்டா..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவருக்கு முன்னாக பேசிய ரத்னா, “என்ன அண்ணி பேசுறீங்க. அவங்க எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?” என்று சிடுசிடுப்பாக பேசிவிட்டு, ஜெனியைப் பார்த்தவள், “அவங்க பேசுனதுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க்குறேன் அம்மா. எங்களுக்கு எங்க மூத்த அண்ணி தான் எல்லாமே. அவங்க இங்க இல்லாததுனால இவங்க கூடவெல்லாம் நீங்க பேச வேண்டியதாகிருச்சி” என்றாள் உள்ளே போன குரலில்.

இதில் மகாவின் கோபம் அதிகரிக்க, ஏதோ பேசப்போனவளின் கையைப் பிடித்து, “வேண்டாம் அண்ணி” என்பது போல் தன் தலையை ஆட்டினாள் வதனா.

அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம், திடீரென்று தன் இருக்கையில் இருந்து எழுந்த குறள், வதனாவின் முன்னே சென்று நின்றான். இவன் என்ன செய்கின்றான் என்று அனைவரும் பார்க்க, அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் வதனா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 33

அனைவரும் பார்க்கும் போதே வதனாவின் முன் சென்று நின்ற குறள், அவளின் அருகே நின்ற மகாவைப் பார்த்து, “உங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டே வதனாவையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.

மகாவோ, “எதற்கு” என்பது போல் பார்க்க, “எங்க எல்லாத்தையும் நல்லா கவனிச்சீங்க” என்று நிஜ காரணத்தை விடுத்து வேறு காரணத்தைக் கூறினான்.

தன் தந்தையைப் பார்த்து, “அவசரப்படாதன்னு என்னை சொல்லிட்டு, இப்ப நீங்க தான் அவசரம் காட்டுறீங்க அப்பா. எனக்கு சில பல வேலைகள் இருக்கு. முக்கியமா நான் இப்போதே சென்னை பிரான்ச்க்குப் போகணும்” என்று அழுத்தமாகவும் அதே நேரம் ஆளுமையாகவும் கூறிவிட்டு, “நான் வரேன்” என்று பொத்தம் பொதுவாய் சொல்லிவிட்டு, ரத்னா மற்றும் அவனது தாய் தந்தையை அதிரவைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.

அவன் பேச்சுக்கு யாராலும் எதிர் பேச்சு பேச முடியவில்லை. ரயில் வரப்போகும் அறிவிப்பை, யார் கேட்டுக்கொண்டாலும், கேட்டுக்கொள்ளவில்லை என்றாலும், தன் பாட்டிற்கு, தான் சொல்வதை எல்லாம் மைக்கில் ஒலிபரப்பிக் கொண்டு போகும் நபரைப் போல் தான் பேசிவிட்டு சென்றுவிட்டான் குறள்.

ருத்ராஜ்ஜிற்கு குறளின் செயல் எரிச்சலைக் கொடுக்க, நல்ல வேளை இது எப்படியோ தள்ளி போய் விட்டது’ என்று நினைத்து மகிழ்ச்சியில் இருந்தார் ஜெனி.

ரத்னாவோ மிகப்பெரிய கோபத்தில் இருந்தாள். ஆனால் அவளது கோபம் எல்லாம் மகாவின் மேல் மட்டும் தான் இருந்தது. ‘ம்ச்... இவ்வளவு பெரிய பணக்காரங்க முன்னாடி, இவளோட மிட்டில் கிளாஸ் புத்தியை காட்டிட்டா. எல்லாம் இவளால் வந்தது’ என்று தன் மனதிற்குள் மகாவை திட்டயபடி அவளை முறைத்துப் பார்த்தாள்.

வதனாவோ, ‘இப்ப எதுக்காக தேவை இல்லாம நன்றி சொல்லிட்டு போறான்’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

மகாவோ, ‘இப்ப என்ன பன்றது’ என்ற நினைப்பில் இருந்தாள்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நினைப்பிற்கு உள்ளாக்கி விட்டு, அவன் சாவகாசமாக அங்கிருந்து சென்றிருந்தான்.

அமைதியைக் கலைத்த ருத்ராஜ், மகாவைப் பார்த்து, “சரிம்மா நாங்க போயிட்டு வரோம். உங்களை தொல்லை பண்ணதுக்கு என்னை மன்னிச்சிருங்க. இங்க சென்னை சைட்டில் ஒரு பிரச்சனை அதான் குறள் வேகமாக போயிட்டான். நாங்க வேற ஒரு நாள் வரோம்” என்றார் இருக்கையில் இருந்து ஏழுந்தபடி.

“இதோ, இப்ப எங்க வீட்டுக்காரர் வந்துருவாங்க அங்கிள். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று என்றாள் மகா.

“இருக்கட்டும்மா நாங்க இன்னொரு நாள் வரோம்” என்று சொன்னவர் தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு தன் காரில் ஏறி சென்றார்.

அவர்களை அனுப்பிவிட்டு, மகாவைப் பார்த்து முறைத்த ரத்னா, “அமலா அண்ணி இங்க இருப்பாங்கன்னு நினைச்சு தான், நான் எல்லாரையும் கூட்டிட்டு இங்க வரவே செஞ்சேன். ஆனா நீங்க வந்து நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல” என்றாள் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி.

அப்போது மகாவின் அருகே வந்து நின்ற வதனா, “என்ன பேசுற அக்கா. மகா அண்ணியும் இந்த வீட்டு மருமகள் தான். இங்க வந்துட்டு ஏதேதோ பேசுற” என்றாள்.

“ஹேய் நான் உன்னிடம் பேசல” என்று சொல்லிவிட்டு, மகாவைப் பார்த்தவள் மிகவும் நக்கல் தொணிக்கும் குரலில், “எங்க அண்ணன் கூட சண்டை போட்டுட்டு உங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டீங்களே! அப்படியே அங்கையே தங்கிடுவீங்கன்னு நினைச்சேன்” என்று சொல்லிவிட்டு, புதியதாக ஏதோ யோசனை வந்தவள் போல் தன் தலையில் கைவைத்தவள், “அட, இதை எப்படி நான் மறந்து போனேன். இவ்வளவு பெரிய பங்களாவை விட்டுட்டு எப்படி போவீங்க நீங்க” என்று வீட்டை காட்டியபடி பேசினாள்.

“அதிகம் பேசாத அக்கா. அவங்க இந்த வீட்டின் ஆள். அண்ணனுக்கு உள்ள மரியாதை அண்ணிக்கும் இருக்கு. அவங்களை ஒழுங்கா பேசு” என்றாள் வதனா.

இப்போது வதனாவைப் பார்த்தவள், “பாருடா... நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேர்ந்தீங்க?. எனிவே இதெல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது” என்றாள் இகழ்ச்சியாக.

“அதை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம் ரத்னா. எங்களுக்கு, நீ வந்து கிளாஸ் எடுக்க வேண்டாம். என் அம்மா வீடு சின்ன வீடு தான். அதில் உனக்கு என்ன பிரச்சனை ஏதோ எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போற மாதிரி பேசுற. ரொம்ப சாரிம்மா, எனக்கு அண்ணனோ தம்பியோ கிடையாது” என்றாள் பதிலடி கொடுத்தபடி.

அதற்கு தன் கழுத்தை ஒடித்துக் கொண்டவள், “எனக்கு என் குறள் இருக்கான். அமலா அண்ணி இருந்தா பார்த்து பேசுவாங்க. ஆனா இன்னைக்கு நீங்க பேசுன பேச்சில் தான், குறள் கோபப்பட்டு இங்க இருந்து போயிட்டாரு” என்று பழியை மொத்தமும், மகாவின் மேல் சுமத்தினாள்.

“அப்படி என்ன நான் தப்பா பேசிட்டேன்?. என் சுயமரியாதையை சீண்டும் படி பேசுனா, நான் பேசத் தான் செய்வேன்” என்றாள் மகா.

“அதெப்படி வீட்டுக்கு வந்த விருந்தாளிகளைப் பேசுறது?” என்று ரத்னாவும் இதை விடுவதாகவே இல்லை.

குறளின் பெற்றோரை வழி அனுப்பி விட்டு, வாசலில் நின்று தான் மூவருமே பேசிக்கொண்டு இருந்தனர்.

நல்லவேளை தோட்டத்தில் யாரும் வேலை பார்க்கவில்லை. அதனால் சிறிது மானம் தப்பித்தது.

“நீயும் விருந்தாளி தான் அக்கா. உனக்கு வேலை இல்லையா. இன்னைக்கு நீ சண்டை போடுறதுக்கு, நாங்க தான் கிடைச்சோமா?” என்று சூடாக கேட்டாள் வதனா.

“ம்ச் என்று முகத்தை சுழித்த ரத்னா, “இங்கப்பாருங்க ரெண்டு பேரும்” என்று இருவரையும் பார்த்து, “கிங் நிறுவனத்தைப் பற்றி கேள்வி பட்டு இருப்பீங்கன்னு நினைக்குறேன். அதோட சொந்தக்காரர் தான குறள். அவரோட அம்மாவை நீங்க பேசுனது தப்பு தான். இனி அடுத்து நாங்க இங்க வரும் போது இதெல்லாம் நடக்காம பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு, தன் காரின் அருகே சென்றவள், ‘இந்த அமலா அண்ணி எங்கப்போனாங்க’ என்று யோசித்தபடி, தன் அலைபேசியை எடுத்து அஜய்க்கு அழைத்தவள், “ஹலோ அஜய் அண்ணா” என்று சொல்லிக் கொண்டே, தன் மகிழுந்தில் ஏறி அமர்ந்தவள், விதிகளை மீறி, அலைபேசியை பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.

வீட்டிற்குள் வந்த மகா, “ஷப்பா....” என்று பெருமூச்சு ஒன்றை விட்டபடி, அக்கடா என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள்.

அவளின் பின்னே வந்த வதனா, “ரத்னா அக்கா பேசுனதை எல்லாம் மனதில் வச்சிக்காதீங்க அண்ணி” என்றாள் அவளின் அருகே அமர்ந்தபடி

வதனாவை திரும்பி பார்த்த மகா, “அதை விடு வதனா. அதை எல்லாம் நான் கண்டுக்கவில்லை. ஆமாம், அந்த அம்மா ஏன் முகத்தை இந்த சுழி சுழிக்குது வதனா?” என்றாள்.

“எனக்கும் தெரியலை அண்ணி. ஆனா அவங்க வந்ததில் இருந்து நம்மையும் நம்ம வீட்டையும் ஒரு மாதிரியா பார்த்துக்கிட்டு இருந்தாங்க” என்றாள்.

“மாமியார்ன்னு எடுத்துக்கிட்டா, எல்லா நாட்டு மாமியாரும் ஒன்னு தான் போல” என்றாள் மகா.

“எங்க அம்மா அப்படி கிடையாது அண்ணி. அவங்க உயிரோட இருந்திருந்தா உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்” என்று வேகமாக கூறியவளைப் பார்த்து சிரித்த மகா, “இது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே!” என்றாள்.

“அது எப்படி தெரியும்?” என்றவள் பின் அவளே, தன் நெற்றியை நீவியபடி, “நான் ஒருத்தி, விஜய் அண்ணா உங்களிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்” என்று சொல்லிக் கொண்டாள்.

தொடர்ந்து பேசியவள், “ஆனா, மேரி மை ஹஸ்பண்ட் கொரியன் டிராமாவில், அந்த வில்லனோட அம்மா, கொடூரமான மாமியாராத் தான் இருக்கும் அண்ணி” என்றாள்.

“அட ஆமாம்” என்றவள், “ஆனா அந்தப்பையன் குறளைப் பார்க்க, நம்ம கே பாப் ஐடல் பிடிஎஸ் சுகா மாதிரியே இருக்கான்ல” என்றாள் ஆர்வம் ததும்பும் குரலில்.

அப்போது அங்கே வந்த விஜய், “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே!” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் எதிர் திசையில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.

“வர்ற நேரத்தைப் பாரு. அவங்க எல்லாம் எப்பவோ போயிட்டாங்க” என்று குறைபட்டுக்கொண்டாள்.

“இதை முன்னவே ஒரு போன் பண்ணி சொல்லமாட்டியா. நான் வீட்டுக்கு வந்திருக்க மாட்டேன் இல்லையா” என்று கடிந்து கொண்டான்.

“எங்க சொல்லவிட்டா இந்த ரத்னா பொண்ணு. அமலா அண்ணி இருந்திருந்த அப்படி, அமலா அண்ணி இருந்தா இப்படின்னு, என்னைப் போட்டு பாடாய்படுத்தி எடுத்துட்டா. விருந்தாளிங்க முன்னாடி நானும் அவளிடம் எதுவும் சொல்ல வேண்டாம்னு விட்டேன். பின்ன உங்க அண்ணனுக்கு போன் பண்ணிக்கிட்டே காரை எடுத்துட்டு போயிட்டா” என்றாள் சலித்தவளாக.

“ஆனா ஒன்னுங்க. அந்தப்பையன் குறள். பார்க்கவும் செமையா இருக்கான். ஆட்டிடுயூட்டும் செமையா இருக்கு. தமிழும் அழகா பேசுறான். ஆனா அவனோட அம்மாவுக்கு தான் தேள் நாக்கு போல. எப்ப பார்த்தாலும் கொட்டிக்கிட்டே இருக்கு...” என்று தொடர்ந்து பேசியவள், அவர்கள் வந்ததில் இருந்து சென்றது வரையும் அனைத்தையும் கூறினாள்.

அதனைக் கேட்டுக் கொண்டவன், “ஆனா அந்த சீனாக்காரன் அப்படி ஒன்னும் அழகில்லை” என்று தன் கருத்தைக் கூறினான். அதற்கு எதிர் கருத்துக் கூற ஆரம்பித்தாள் மகா.

‘ஐயோ! இவர்கள் குறளைப் பற்றி பேசுவதை நிறுத்த மாட்டார்களா!’ என்று பார்த்துக் கொண்டிருந்தாள் வதனா.

பின் ஒரு வழியாக கணவனும் மனைவியும் வாக்குவாதத்தை கைவிட்டனர்.

“சரி வாங்க சாப்பிடப்போகலாம்” என்று மகா கூற, அப்போது மணி ஒன்றை நெருங்கிக் கொண்டு இருந்ததால், அனைவரும் உணவு மேஜையில் சென்று அமர்ந்தனர்.

“இந்த அமலா அக்காக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுடேன்” என்று பொதுவாய் சொன்னவள், விஜய்யைப் பார்த்து, “இந்த அமலா அக்கா, தன்னோட தம்பியை ரத்னாக்கு கட்டி வைக்க அவளை ஐஸ் வச்சிக்கிட்டே திரிஞ்சாங்க. அதை உண்மைன்னு இந்த ரத்னா பொண்ணும் நம்பி இருக்கு பாருங்களேன்” என்றாள்.

அதற்கு சிரித்துக் கொண்ட விஜய், “அப்படி இல்லை மகா. ரத்னாக்கு இதைப் பத்தி நல்லாவே தெரிஞ்சிருக்கும். அவளை புகழ்ந்து தள்ளிக்கிட்டே இருக்குறது அவளுக்கு பிடிச்சதுனால இவளும் அவங்களை பெருசா கண்டுக்கல” என்றான்.

“ம்... இருக்கும் இருக்கும். ஏங்க எனக்கு ஒரு சந்தேகம், தன்னோட வருங்கால மாமியார் மாமனாரை, ரத்னா எதுக்காக அப்பா அம்மான்னு சொல்றா?” என்றாள் சந்தேகத்துடன்.

“இதென்ன கேள்வி என்பது போல் அவளைப் பார்த்தவன், “இப்போது எல்லாரும் அப்படி தானே சொல்றாங்க மகா” என்றான்.

“எல்லாம் ஐஸ் வைக்குறதுக்கு தாங்க. கணவனைப் பெத்தவங்களை, அம்மா அப்பான்னு கூப்பிடுற பொண்ணுங்க, தன்னோட அப்பா அம்மாவை, அத்தை மாமான்னா கூப்பிட முடியும்?. இதில் என்ன லாஜிக் இருக்குன்னு இப்படி செய்யுறாங்கன்னு தெரியல” என்று மகா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தலையைப் பிடித்துக் கொண்டு, உணவு மேஜையிலையே மயங்கி இருந்தாள் வதனா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 34

மகாவும், விஜய்யும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க, தன் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் வதனா.

மகாவோ, தன் கணவனைப் பார்த்தபடி, அமர்ந்து இருந்தவள், “ரத்னாவோட மாமியார் மெகா சீரியலில் வரும் மாமியார் மாதிரி இருக்காங்க விஜய். அவங்களை ஐஸ் வைக்கத்தான் ரத்னா, அம்மா அம்மான்னு உருகுறா.. இதெல்லாம் அந்த கொரியன் க்ளாஸ் ஸ்கின் கிழவிக்கு தெரியுமான்னு தெரியல” என்றாள் சிரித்துக் கொண்டே.

”மச்... என்னது இது மகா. புதுசா பார்க்குறவங்களை இப்படி தான் பேசுவாங்களா?” என்று சத்தம் போட்டான்.

“அதெல்லாம் அவங்க அவங்க தரும் மரியாதையில் தான் இருக்கு. அந்தம்மா, என்னைப் பார்த்து அமைதியா இருன்னு சொல்லிடுச்சு” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டபடி.

“நான் சொல்லாம விட்டதை அவங்க சொல்லி இருக்காங்க” என்று விஜய் விளையாட்டாக கூற, அவனது தோளில் அடியை வைத்தவள், “உங்களை முதலில் வெளுக்கணும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, உணவு மேஜையிலையே மயங்கி விழுந்தாள் வதனா.

அதனைப் பார்த்துப் பதறிய இருவருமே, “வதனா...” என்று அலறியபடி அவள் அருகே வந்தனர்.

வதனாவை தூக்கிக் கொண்டு சோபாவில் அமர வைத்த விஜய், மகா தந்த நீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்தான்.

அவள் மெதுவாக தன் கண்களைத் திறந்தது, “என்னாச்சி வதனா? உடம்புக்கு முடியலையா?” என்று கேட்டுக் கொண்டே மகாவைப் பார்த்தவன், “நம்ம டாக்டர்க்கு போன் பண்ணு” என்றதும் அவள் விழிக்கத் தொடங்கினாள்.

ஆனால் அதற்குள், “அதெல்லாம் வேண்டாம் அண்ணா. நேத்து சரியா தூங்கலை அதனால் தான்” என்றாள்.

“மயங்கி விழுற அளவுக்கு உன் உடம்பு போய் இருக்கு வதனா. கண்டிப்பா டாக்டரைப் பார்த்து தான் ஆகணும்” என்றவன் தன் மனைவியைப் பார்த்து, “நீ இன்னும் போன் பண்ணலையா?” என்று காய்ந்தான்.

தன் கையைப் பிசைந்த படி, “அதெல்லாம் வேண்டாங்க. நான் வதனாவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போறேன். சத்து இல்லாம மயங்கி விழுந்துருப்பா. வதனா சரியாக்கூட சாப்பிட மாட்டேங்குறா” என்று சொல்லிவிட்டு வதனாவைப் பார்த்தாள்.

“ஆமாம் அண்ணா. இப்பெல்லாம் நான் சரியா சாப்பிடுறது இல்ல” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, மேலே தன் அறையில் இருந்தபடி கீழே நடப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த அமலா, ‘ம்க்கும்... தினமும் காலையில் குறைஞ்சது ஐந்து இட்லியை விழுங்குறா. இவளுக்கு சரியா சாப்பிடமா மயக்கம் வந்துருச்சாம்’ என்று மனதிற்குள் நினைத்தவள், ‘ம்ச்... என்னோட மனசு ஒரு மானங்கெட்டது. இவள் விஷயத்தில் இனி தலையிடக்கூடாதுன்னு நினைச்சாலும் கேட்க மாட்டேங்குது’ என்று நினைத்துக் கொண்டது.

வதனாவின் பேச்சில் அவளை முறைத்துப் பார்த்தவன், “ஏன் சாப்பிட மாட்டேங்குற வதனா. பாரு இப்ப உடம்பு முடியாம கஷ்டப்படுறது நீ தான்” என்றவன் அவள் தலையைத் தடவிவிட்டு, “இதுக்கு முன்னாடி நீ பல தடவை வீட்டில் இருந்து சாப்பிடாம காலேஜ் போயிருக்கன்னு, நம்ம வீட்டில் வேலை செய்யும் பொன்னம்மா சொன்னாங்க. அந்த நேரத்தில் எதையும் கண்டுக்காத முட்டாளா இருந்துட்டேன். அதனால் தான் உனக்கு இப்போ இப்படி ஆகியிருச்சி போல” என்றான் வருந்திய குரலில்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா. எனக்கு ஒன்னும் இல்ல. இனி நான் நல்லா சாப்பிடுறேன்” என்றாள் அவசரமாக.

“சரி” என்றவன் மகாவைப் பார்த்து, “நீ வதனாவைப் பார்த்துக்கோ மகா. நான் நம்ம டாக்டர்கிட்ட பேசிடுறேன்” என்று அவன் கூறும் போதே, பதறிய மகா, “அதெல்லாம் வேண்டாம் விஜய். எனக்கு தெரிஞ்ச ஒரு லேடி டாக்டர் இருக்காங்க. அவங்க ரொம்ப நல்லா பார்ப்பாங்க. நான் வதனாவை அங்க கூட்டிட்டு போகலாம்னு நினைக்குறேன்” என்று சொல்ல, “சரி பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு, ஆயிரம் பத்திரம் வதனாவிடம் சொல்லி சென்றான்.

உடனே வேகமாக தன் அறைக்குள் வதனாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்ற மகா, “நீ இப்ப ஓகே தானே வதனா. உனக்கு உமட்டல் தலை சுத்தல் இப்படி ஏதாவது இருக்கா?” என்று கேட்டாள்.

“அப்படி எல்ல்லாம் ஒன்னும் இல்லை அண்ணி. முதல்ல ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்படி தான் இருந்தது. பிறகு அப்படியே அது சரியாகிடுச்சு” என்று சாதாரணமாக கூறிய வதனாவை வருத்தமாக பார்த்தவள், “தனி ஆளா ரொம்ப கஷ்டம் தான் வதனா. அது எல்லாத்தையும் நீ எப்படி தான் சமாளிச்சன்னு எனக்குத் தெரியல” என்றாள்.

“இப்ப அதெல்லாம் எதுக்கு அண்ணி” என்றாள்.

“அதில்லை வதனா. நாம உடனே ஹாஸ்பிடல் போய் செக் பண்ணனும். ஐந்தாவது மாதத்தில் மயக்கம் வருதுன்னா, உனக்கு உடம்பில் சத்து இல்லைன்னு நினைக்குறேன்” என்றாள் மகா.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அண்ணி. இப்போதெல்லாம் நான் நல்லா தான் சாப்பிடுறேன்” என்று வதனா கூற, “நல்லா சாப்பிட்டாலும், உடம்பில் சில நேரம் சத்து தங்காது வதனா. நீ ரெடியாகு நாம டாக்டரைப் போய் பாரக்கலாம்” என்றாள்.

மருத்துவரைப் பார்க்க தயக்கமாக இருந்தாலும், தன் பயத்தை கைவிட்டு, “சரி” என்று மகாவிடம் தன் தலையை ஆட்டிக்கொண்டாள்.

வதனா நினைத்து பயந்த கேள்விகளை எல்லாம் அந்த மருத்தவர் கேட்கவில்லை. மாறாக இவ்வளவு நாள் எந்த டாக்டரையும் பார்க்காமல் என்ன செய்தீர்கள்? என்ற கேள்வியை மட்டுமே முன் வைத்தார்.

மகா தான், “இந்த பொண்ணுக்கு இவ்வளவு நாள் இது தெரியவே இல்லை மேடம்” என்று கூறி சமாளித்தாள்.

பின் அங்கிருந்து கிளம்பிய மகாவும், வதனாவும் ஒரு பார்க்கில் இருந்த கல் இருக்கையில் சென்று அமர்ந்திருந்தனர்.

ஸ்கேன் எடுத்த கோப்பை தன் நெஞ்சோடு அழுத்திப் பிடித்தவள், “என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை அண்ணி” என்றாள்.

“எனக்கும் தான் வதனா, எனக்கு இப்போதே குழந்தையைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா இன்னும் அதுக்கு ஐந்து மாசம் இருக்கு இல்லையா?” என்றாள்.

தொடர்ந்து பேசிய மகா, “ஆனா உனக்கு இருக்கும் சந்தோசம் இந்தக் குழந்தையோட அப்பனுக்கும் கொஞ்சமாவது இருந்தா நல்லா இருந்திருக்கும்” என்றதும் வதனா அமைதியடைந்தாள்.

“என்ன வதனா எதுவும் பேச மாட்டேங்குற?. இந்தக்குழந்தை அப்பா இல்லாம தான் வளரப்போகுதா?. குழந்தை எதிர்காலம் நல்லா இருக்கணும்னு தானே! உனக்கு விருப்பம் இல்லை என்றாலும், நம்ம நகைக்கடையில் சேர்ந்து தொழில் கத்துக்குற! ஆனா குழந்தையை வளர்ப்பதற்கு பொருளாதார வசதியை விட, அது வளரும் சூழல் மிகவும் முக்கியம்னு உனக்கு தெரியல” என்றாள் ஏமாற்றக் குரலில்.

“என்னை என்ன அண்ணி பண்ண சொல்றீங்க?” என்றாள் ஒன்னும் செய்ய முடியாதவளாக.

“குழந்தையோட அப்பா யாருன்னு எனக்கு சொல்லு. அப்ப தான் நம்மாள ஏதாவது ஸ்டேப் எடுக்க முடியும். இப்படியே சும்மா இருந்தா ஒன்னும் கதைக்கு ஆகாது” என்றாள் கண்டிப்பான குரலில்.

“அண்ணி ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாமே!” என்றாள் தன் சத்து எல்லாம் வடிந்து உள்ளே போன குரலில்.

“உனக்கு நிஜமாவே என் மீது பாசம் இருந்தா நீ இதை என்னிடம் சொல்லு. இதில் உன்னோட தப்பு எதுவும் இல்லைன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். சூழ்நிலையால் மட்டும் தான் நீ கைதி ஆகியிருக்க வதனா. உண்மையான கல்ப்ரிட் குழந்தைக்கு அப்பன் மட்டும் தான். அவன் யாருன்னு சொல்றதுல உனக்கு எதுக்காக அவ்வளவு தயக்கம் வதனா” என்று எந்த ஒரு நம்பிக்கையும் வதனாவிடம் பிறந்துவிடாதா, என்ற நம்பிக்கையில் பேசிக் கொண்டு இருந்தாள் மகா.

“தயக்கம் இல்லை அண்ணி. எனக்கு அவன் வேண்டாம்னு தான்” என்றாள் உள்ளே போன குரலில்.

“நீ எதுக்காக சொல்ல மாட்டேங்குற? அவனை நான் என்ன கொலையா பண்ணிறப்போறேன்” என்றாள் வேறுபக்கம் திரும்பியபடி.

மகாவின் கையைப் பிடித்தவள், “அண்ணி, இதைப் பத்தி பேச வேண்டாமே!” என்று கேட்டுக்கொண்டாள்.

“இதைப் பத்தி எதுக்காக பேச வேண்டாம்னு சொல்ற வதனா. இதை பேசித் தான் ஆகணும். இது உன் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. கற்பு போயிருச்சி ம*று போயிருச்சின்னு ஒப்பாரி வைக்க நான் பிற்போக்கு வாதி கிடையாது. அதே நேரம் எவ்வளவு அடிச்சாலும் அசராம நிற்கும் உன்னை, அடிச்சாவது திருத்தவும் செய்வேன்” என்றாள் எச்சரிக்கையாக.

“அடடா... என்னை அடிப்பீங்களா?” என்று விளையாட்டாக கூறி பயந்தது போல் நடித்தாள் வதனா.

“பின்ன, உன் தியாகத்துக்கு சர் பட்டம்மா கிடைக்கப்போகுது?. எதுவும் இல்ல. குழந்தையோட அப்பா யாருன்னு நீ சொல்லலைன்னா உன் அண்ணன் வந்து கேட்பார், நீயே சொல்லிக்கோ” என்றாள் முகத்தை வெட்டியபடி.

“ஐயோ அண்ணி அப்படி மட்டும் பண்ணிறாதீங்க. விஜய் அண்ணா இப்ப தான் என்னிடம் நல்லாவே பேச ஆரம்பிச்சிருக்கார்” என்று பதறினாள்.

“இந்த விசயம் உன் அண்ணனுக்கு தெரிஞ்சா, உன்னை வெறுத்துருவாருன்னு பயப்படுறியா வதனா?” என்று மகா கேட்க, “ஆம் அண்ணி” என்றாள் தன் தலையை ஆட்டியபடி.

“நீ எதுக்கும் கவலைப்படாத. இதுக்கு ஒரு முடிவை எடுத்துட்டு, நானே உங்க அண்ணன் கிட்ட சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிடுறேன். நான் சொல்றேன், நிச்சயம் அவர் உன்னை வெறுக்க மாட்டார். ஆனா குழந்தையோட அப்பா யாருன்னு கண்டுபிடிச்சி அவனைக் கொலை பண்ணிடுவாருன்னு தான் எனக்குப் பயமா இருக்கு” என்றாள் தன் கணவனை நன்கு அறிந்தவளாக.

அதில் தன் கண்களை விரித்து, அதிர்ந்து பார்த்த வதனா, “அப்படி எல்லாம் விஜய் அண்ணா பண்ணப் போனா, நீங்க தான் அண்ணி அவரைத் தடுக்கணும்” என்றாள் பயந்தவளாக.

அதற்கு சிரித்துக் கொண்ட மகா, “பாருடா அவன் மேல உனக்கு அவ்வளவு லவ்வா” என்று கேட்டு அவள் ஒரு பக்க தோளை இடித்தாள்.

அதில் சிறிது வெட்கம் கொண்ட வதனா, “எனக்கு அவன் மேல ஆத்திரம் மட்டும் தான் இருக்கு அண்ணி. வேற எதுவும் இல்ல” என்க, “பாருடா, வாய் வார்த்தைகள் மட்டும் தான் தீயா வருது, முகமெல்லாம் வேறு ஏதோ கதை பேசுது” என்றாள்.

“ம்ச்... போங்க அண்ணி” என்று சலித்துக்கொள்ள, அப்போது ரத்னாவிடம் இருந்து வதனாவிற்கு அழைப்பு வந்தது.

“யார்?” என்று மகா தன் கண்களால் கேட்க, அவளிடம் தன் அலைபேசியைக் காட்டினாள். “நீ பேசு” என்பது போல் மகா பாவனை செய்தாள்.

அழைப்பை எடுத்து, வதனா காதில் வைத்ததும், “ஹேய் வதனா” என்று கோபக்குரலில் அவள் பேச, வதனாவோ, ‘ஒரு வேளை குறள் எல்லா உண்மையையும் ரத்னாக்காக் கிட்ட சொல்லிட்டானோ!’ என்று நினைத்தாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 35

ரத்னாவின் கோபக்குரலில், தன் கையில் இருக்கும் அலைபேசியை அழுத்தமாகப் பிடித்தவள், “சொல்லு அக்கா” என்றாள் மெதுவாக.

“அமலா அண்ணி ஜெயிலில் இருந்துட்டு வந்தாங்களாமே! இதை ஏன் முன்னாடியே நீ என்கிட்ட சொல்லல. இந்த லட்சணத்தில் எங்க வீட்டு ஆளுங்க முன்னாடி, அவங்களை இனி நான் எப்படி நிறுத்துவேன்? என்னோட மாமனார் வேற, ‘உன்னை நல்லா பார்த்துறதா நீ சொன்ன, உன்னோட அமலா அண்ணி எங்கம்மான்னு’ என்னைக் கேட்கிறார்.

அமலா அண்ணி விஷயம் மட்டும் தெரிஞ்சுது, அவங்க மானம் போகுறதும் இல்லாம என்னோட மானமும் சேர்ந்து தானே போகும்” என்று வதனாவைப் பேச விடாமல் அவளே பேசிக் கொண்டு இருந்தாள்.

‘ஓ... இதுக்குத்தானா!’ என்று வதனாவின் இதயம் சீராக துடித்தது.

மகா என்னவென்று தன் கண்களால் கேட்க, உடனே போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டாள் வதனா.

மற்றவர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்காமல், தானே பேசிக் கொண்டு இருந்த ரத்னா, “சரி நான் வைக்குறேன்” என்று சடவோடு சொல்லிவிட்டு வைத்தாள்.

அவள் இணைப்பை அணைத்ததும், “இதென்ன பொண்ணா இல்லை பிசாசா. இந்த பேச்சு பேசுது” என்றாள் மகா.

“ரத்னா அக்காக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு போல” என்று கூறி நகைத்தாள் வதனா.

“ஆமாம் ஆமாம் கொரியன் பைத்தியம் பிடிச்சிருச்சி. ஊரில் உள்ள பொண்ணுங்க எல்லாம், கொரியனைக் கல்யாணம் பண்ண ஆசைப்படுறாங்க. அவங்க எல்லாருக்கும் கிடைக்காத வரம், இவளுக்குக் கிடைச்சிருக்கு இல்லையா?” என்று சொல்லும் போதே வதனாவின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கம் உருவானது.

ஆனால் அதை நொடிப்பொழுதில் மாற்றியவள், “ஏன் அண்ணி உங்களுக்கு இதில் மிகவும் வருத்தம் போல” என்று விளையாட்டாக கேட்டாள்.

“இல்லையா பின்ன. ரத்னாவைப் பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் பொறாமையாத் தான் இருந்தது. ஆனா எப்ப அவளோட வருங்கால மாமியாரைப் பார்த்தேனோ, அப்போதே கொஞ்சம் இருந்த என் பொறாமையும் போய், ரத்னா மேல பச்சாதாபம் வந்துருச்சு” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ஆமா அவங்க டெரர் பீஸ் மாதிரி தான் இருக்காங்க” என்று ஒத்துக் கொண்டாள் வதனா.

“அவங்களுக்கு ரத்னாவைப் பிடிக்கலைன்னு நினைக்குறேன் வதனா. அதனால் தான் அவங்களுக்கு நம்மளையும் பிடிக்கல” என்று மிகவும் சரியாக கணித்தாள் மகா.

“எப்படி அண்ணி சொல்றீங்க? அவங்களும் காதல் திருமணம் தானே! கொரியாவில் இருந்துட்டு ஒரு இந்தியனை நேசிச்சு இருந்துருக்காங்க” என்று கேட்க, “எனக்கு பார்க்க அப்படி தான் தோணுது வதனா. இதோ அடுத்து வருவாங்களே அப்ப பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டாள்.

***

“எதுக்காக எங்க அண்ணன் வீட்டில் இருந்து வேகமா போன குறள்? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் ரத்னா.

குறளைப் பார்க்க, நேராக அவன் நிறுவனதிற்கே வந்திருந்தாள் ரத்னா. அங்கே வைத்து அவனது தனியறையில் தான் இருவருமே பேசிக் கொண்டு இருந்தனர்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை ரத்னா. எனக்கு உன்கூட சில விஷயங்கள் எல்லாம் பேசணும். அதுக்குப் பிறகு இந்த ஏற்பாட்டை பண்ணலாம்னு நினைச்சு தான் வந்தேன்” என்றான்.

“வேற எதுவும் பிரச்சனை இல்லையே குறள். எங்க அண்ணி, அம்மாவைப் பார்த்து அப்படி பேசி இருக்கக்கூடாது” என்று வருத்தம் கூறினாள்.

“அதனால் ஒன்னும் இல்லை ரத்னா. எங்க அம்மாவும் அப்படி பேசி இருக்கக் கூடாது” என்று பதிலுக்குக் கூறியவன், “உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் ரத்னா” என்றான் அவளை நேர்பார்வை பார்த்தபடி.

“சொல்லு குறள். காலையில் இருந்து ஏதோ என்கிட்ட சொல்லணும்னு சொன்னியே!” என்றாள்.

“வெல்” என்றவன் மேஜையில் வைத்திருந்த தன் இருகைகளையும் கோர்த்தபடி, “இந்த விஷயம் உனக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனா இது தான் நிதர்சனம்” என்று புதிர் போட்டான்.

“அப்படி என்ன அதிர்ச்சி எனக்கு வச்சி இருக்க குறள்?” என்று ஆர்வமுடன் கேட்டாள்.

“நாம ரெண்டு பேரும் திருமணம் செய்றதுக்கு முன்னாடி நமக்குள்ள எந்த ஒரு ஒழிவு, மறைவும் இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்குறேன்” என்று அவன் சொல்லும் போதே, ‘இவன் என்ன, என்னமோ சொல்றேன்னு சொல்லிட்டு, ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கான். ஒருவேளை என்கிட்ட ஏதாவது விஷயத்தை போட்டு வாங்க நினைக்குறானோ!’ என்று நினைத்து உஷாரானாள்.

“என்கிட்ட எந்த ஒரு ஒழிவும் கிடையாது குறள். உங்களை மாதிரியே நானும் எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லாத ஆள் தான்” என்று வாய் கூசாமல் பொய் கூறினாள்.

“ஆனா நான் அப்படி இல்ல ரத்னா. நான் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்றதும் அதிர்ந்தாள் ரத்னா.

“என்ன பேசுற? தப்பு பண்ணிட்டியா? புரியும் படி சொல்லு குறள். தண்ணின்னு நினைச்சு வோட்க்காவை குடிச்சிட்டியா” என்று தீவிரமாக கேட்பது போல் கேட்டு, தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

“ம்ச்... ஷட் அப் ரத்னா. என்ன பழக்கம் இது கொஞ்சம் கூட டீசன்சி இல்லாம. எனக்கு இதெல்லாம் பிடிக்காது” என்றான் அழுத்தமான குரலில்.

உடனா ரத்னாவின் புன்னகை மறைந்து போனது.’இப்ப நான் என்ன பேசிட்டேன்’ என்று நினைத்தவள், “என்னை மன்னிச்சிரு குறள். சும்மா தமாசுன்னு நினைச்சு ஏதோ பேசிட்டேன்” என்றாள் பவ்யமாக.

“உனக்கு என்னோட உயரம் இன்னும் சரியா தெரியலைன்னு நினைக்குறேன் ரத்னா. என்னோட இன்னொரு பெயர் கிங். கிங்ன்னு சொன்னா டெல்லியே அதிரும். இனி பார்த்துப் பேசு” என்றான் தோரணையாக.

‘உன்னைக் கைக்குள் போடுறது கொஞ்சம் கஷ்டம் தான் போல. பரவாயில்ல, அடக்கவே முடியாத பல ஆண்களை அடக்கின ஆள் நான். அதில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் கூட அடக்கம். அது மாதிரி தான் நீயும். என்னை முழுசா பார்த்த பின்னாடியும், நீ இப்படி பேசுவியான்னு பார்க்குறேன். அதற்குப் பிறகு காலம் முழுவதும் என் காலடியில் தான் கிடக்கப்போற’ என்று கர்வமாய் நினைத்துக் கொண்டாள் ரத்னா.

வெளியே, “சாரி குறள்” என்றாள் மன்னிப்பாக.

“ம்...” என்று தன் தலையை ஆட்டிக்கொண்ட குறள், பின் தான் சொல்ல வந்த விஷயத்தை ரத்னாவிடம் கூற ஆரம்பித்தான்.

“நான் இங்க சென்னை வந்ததும் ஒரு தப்பு பண்ணிட்டேன் ரத்னா. அதனால் இப்ப நான் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகப்போறேன்” என்று இறுதியில் கூறியேவிட்டான்.

அதில் ரத்னாவின் கண்கள் கீழே தெறித்து விடுவதைப் போல் இருந்தது. அவன் சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

****

“வதனாவை செக் பண்ண டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விஜய் கேட்க, “சத்து கம்மியா இருக்காம். அதுக்கு சில சத்து மாத்திரை எழுதி கொடுத்து இருக்காங்க” என்று அப்படியே உண்மையைத் தான் கூறிக் கொண்டிருந்தாள் மகா.

“வேற ஒன்னும் இல்லையே!” என்று விடாமல் அவன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா. நீ அண்ணியை தொல்லை பண்ணாத” என்று கூறியபடி அவன் அருகில் வந்து அமர்ந்தாள் வதனா.

“அவங்க கொடுத்த மாத்திரையை ஒழுங்கா சாப்பிடு வதனா” என்றான் அக்கறையாக.

“சரி அண்ணா. இன்னைக்கு வேலை எப்படி போச்சு. புது டிசைன்ஸ் கண்காட்சிக்கு, பாம்ப்லட், விளம்பரம் எல்லாம் தயாரா இருக்கா அண்ணா” என்று வேலைக்குத் தாவினாள் வதனா.

“எல்லாம் ஓகே தான் வதனா. ஆனா அதில் தான் ஒரு பிரச்சனை” என்றவன், “அஜய், காண்காட்சி மாடலுக்கு நடிகை சுஜியைத் தான் கூப்பிடணும்னு பிடிவாதம் பிடிக்குறான்” என்றான் தன் நெற்றியை நீவிவிட்டபடி.

“இதில் என்னங்க இருக்கு? சுஜியும் மாடல் தானே!” என்று மகா கூற, “ம்க்கும்.. ஏற்கனவே மானம் எல்லாம் போயிருச்சி இதில் இது வேறையா?” என்றான் தன் கையை விரித்துக் காட்டியபடி.

“இதில் என்ன அண்ணா இருக்கு? அண்ணி சொல்றதும் சரி தானே! இதுக்காக அஜய் அண்ணாக்கூட சண்டை போடாதீங்க அவரு செய்றதை செய்யட்டும்” என்றாள் முடிவாக.

“ரெண்டு பேரும் ஏதோ சொல்றீங்க சரி பார்ப்போம். அமலா அண்ணி ஏதவாது பிரச்சனை பண்ணாங்களா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை விஜய். அவங்க ரூமை விட்டு வெளிய வரவே இல்ல. உங்க அண்ணனும் இப்ப வரைக்கும் வீட்டுக்கு வரல” என்றாள் மகா.

“சுஜி வீட்டுக்கு அவன் எப்பவோ போயிட்டான்னு என் இன்பார்மர் சொன்னான். அவனைக் கண்காணிக்கவும் ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று விளக்கம் கொடுத்தான்.

“ஆனா, அமலா அக்கா, ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியல. இவ்வளவு அவமானத்தையும் பார்த்துட்டு, எப்படி தான் இதே வீட்டில் இருக்காங்களோ” என்று அவள் கூற, “சு...” என்று தன் வாயில் விரல் வைத்தவன், “இங்க இருந்து பேசுனா, மேல அவங்க அறையில் நல்லாவே கேட்கும். இனி பார்த்துப் பேசு மகா” என்று எச்சரிக்கை செய்தான்.

“ம்க்கும்... நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். கேட்டா கேட்டுட்டுப் போகுது” என்று தன் கழுத்தை வெட்டிக் கொண்டாள் மகா.

“நீ திருந்தவே மாட்ட. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொன்ன விஜய், வீட்டில் இருக்கும் தன் அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான்.

“நாம ரெண்டு பேரும் தோட்டத்தில் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம் வதனா” என்று கூறிய மகா, வதனாவின் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் சென்றாள்.

“நீ எனக்கு எப்ப தான், நான் கேட்ட உண்மையை சொல்லப் போறன்னு தெரியல வதனா” என்றாள் சலித்துக் கொண்டபடி.

“உங்களுக்கு தெரிஞ்சவன் தான் அண்ணி. நீங்க அவனைப் பார்த்து இருக்கீங்க” என்று சொல்லிவிட்டு அமைதியானாள்.

“எனக்கு தெரிஞ்சவானா? எவன் அந்த எடுபட்ட பயல்?” என்று கத்த ஆரம்பித்தாள்.

அந்த இரவு வேளையில், மகாவின் குரல் அதிகமாக கேட்க, “அண்ணி பொறுமை...” என்று அவள் முதுகைத் தடவிவிட்டாள் வதனா.

அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “குழந்தையோட அப்பன் எவன்னு வேகமா சொல்லு வதனா” என்று மகா அவசரப்படுத்த, “குறளரசன் தான் அண்ணி. ரத்னாவை கட்டிக்கப்போறவன்” என்றவள் பதிலைக் கேட்டு, மகாவிற்கு மயக்கம் வராத குறைமட்டுமே.

இங்கு இருக்கவே வேண்டாம். குழந்தையுடன் வேறு எங்கையாவது சென்று விடலாம் என்று நினைத்த வதனாவின் மனநிலையை மாற்றியது என்னவோ மகாவின் அன்பு தான். தன்னையும் காத்து தன் குழந்தையையும் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மகாவின் மேல் தன் தாயிற்கு நிகரான அன்பை வைத்திருந்தாள் வதனா. தோள் தாங்கும் தோழி போல் மகாவும் வதனாவுடன் நன்றாக பழக ஆரம்பித்தாள். அதில் தான் இதுவும் வெளிப்பட்டது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 36

வதனா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்த பின்னரும். அதைக் கவனமாக கையாண்ட மகா, சிலபல விசயங்கள் எல்லாம் தெரிந்த பின்னர், என்ன செய்யலாம் என்ற யோசனையில் தான் இருந்தாள்.

தனக்காக மகா ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய, இதற்கு மேல் உண்மையைக் கூறிவிடுவது நன்று, என்று நினைத்து தான் வதனா விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.

அதில் மூச்சு விடவும் மறந்தவள், “என்னடி சொல்ற? குறளரசனா? இன்னைக்கு காலையில் கூட அவனைப் பார்த்து, நல்ல பையன் மாதிரி தான் தெரியுதுன்னு நினைச்சேன். ஆனா அவன் இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பான்னு நான் நினைக்கவே இல்லை. அதெப்படி, ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிட்டு, அவள் வீட்டில் இருக்கும் இன்னொரு பொண்ணிடம் சம்பந்தம் பேச வந்தானோ! அவனுக்கு கொஞ்சமும் மனசாட்சியே இல்லையா?” என்று வெடித்துவிட்டாள்.

திடீரென்று ஏதோ யோசனை கொண்டவளாக தன் தலையில் கைவைத்துக் கொண்டவள், “அடக்கடவுளே நான் ஒரு பைத்தியம். இந்த விஷயம் தெரியாம அடிக்கடி அவனைப் பத்தி பேசி உன் மனசை ரொம்ப காயப்படுத்திட்டேன் பாரு” என்றாள் வருத்தம் கொண்டவளாக.

“ஐயோ அண்ணி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்றாள் வதனா.

நடந்து கொண்டிருந்தவள் வதனாவின் கையைப் பிடித்து நிறுத்தி, “நிஜமாவே உனக்கு அவன் மேல் காதல் இருக்குத் தானே வதனா! இல்லை இது வெறும் கவர்ச்சியால் வந்ததா?” என்று கேட்டாள் மகா.

“இல்லைன்னு சொல்லத் தான் ஆசை அண்ணி. ஆனா இந்தப் பாழாய் போன மனசு. அவனைத் தான் நினைச்சு தொலையுது. ரத்னா அக்கா கூட, அவனைப் பார்க்கும் போது, என் நெஞ்சமெல்லாம் பயங்கரமா எரியுது. ஆனா சுயமரியாதையை இழந்து அவன்கிட்ட கெஞ்ச எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை” என்றாள் கலங்கிய குரலில்.

“ரத்னாக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று கேட்டாள் மகா.

“எனக்கு தெரியல அண்ணி. ஆனா இதைப் பத்தி யார்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னு நான் குறளிடம் சத்தியம் வாங்கிட்டேன்” என்றாள் வதனா.

“உனக்கு ஒன்னு தெரியுமா வதனா, ரத்னாக்கு மத்தவங்க உபயோகப்படுத்துன எந்த ஒரு பொருளும் பிடிக்காது. அவளுக்கு எல்லாமே புதுசா வேணும். ரத்னா புதுசா கார் வாங்கும் போது அந்தக்கார் ஏற்கனவே, ஐந்து கிலோமீட்டர் ஓடி இருந்ததாம். அது தனக்கு வேண்டாம்னு சொல்லிட்டு, யாருமே ஓட்டி டெஸ்ட் பண்ணாத புது பீசை தான் தனக்காக தேர்ந்து எடுத்தாளாம்” என்ற மகாவின் பேச்சு வதனாவிற்கு புரியாமல் ஒன்றும் இல்லை.

“பொருளும், மனுசனும் ஒன்னு இல்லை அண்ணி” என்று எங்கோ பார்த்தபடி வதனா கூற, “ஆனா ரத்னாக்கு இதெல்லாம் ஒன்னு தான்” என்று அடித்துக் கூறினாள் மகா.

“வேண்டாம் அண்ணி அவங்க வாழ்க்கையில் என்னோட குறிக்கீடு வேண்டாம். ரத்னா அக்காக்கு சும்மாவே என்னைப் பிடிக்காது. நானும் அவள் முகத்தில் முழிக்காத இடமா பார்த்து போயிடுறேன். இங்க இருந்தா என்னோட மனநிலைக்கு நல்லது இல்ல” என்றாள் சோகமாக.

“அடிவாங்குவ வதனா. எங்கையும் போகமாட்டேன்னு எனக்கு பண்ண சத்தியத்தை மறந்துடாத. அதுவும் இல்லாம தப்பு செஞ்சவன், அவ்வளவு தைரியமா, பெரிய இவனாட்டும் நிற்கும் போது, நீ ஏன் ஓடி ஒழியனும்?” என்றவள் பேச்சு வதனாவை ரெளத்திரம் பொங்க வைத்தது.

அதே வேளை இங்கே பேசிக் கொண்டிருந்த குறளின் பேச்சில் அதிகமாக அதிர்ந்தாள் ரத்னா.

“என்ன சொல்ற குறள்? குழந்தைக்கு அப்பாவாகப் போறியா? இதெல்லாம் நிஜம் தானா?. என்னையவே நினைச்சுக்கிட்டு நீ இருந்தன்னு சொல்றது எல்லாம் பொய்யா?” என்று கேட்டவளுக்கு அவன் சொன்னது எல்லாம் பொய்யாக இருந்துவிடாத என்று மனது அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

“உண்மை தான் ரத்னா. இந்த விசயத்தை உன்கிட்ட இருந்து மறைக்க நினைக்க நான் விரும்பல” என்றான்.

அதிர்ச்சியில் தன் தலையைப் பிடித்துக் கொண்டாள் ரத்னா.

குறளரசனின் மனதோ, ‘ரத்னா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கக் கூடாது என்று அடித்துக் கொண்டது’

ரத்னாவை திருமணம் செய்ய முடிவு எடுத்து இருந்தாலும், அவன் மனது இதை சிறிதும் ஏற்கவில்லை. ‘நான் எதுக்காக இப்படி இருக்கேன்’ என்று தன்னைத் தானே பலமுறை கேட்டுக்கொண்டான் குறள். ஆனால் பதில் மட்டும் தான் அவனுக்குக் கிடைக்கவே இல்லை.

சிறுவயதில் ரத்னாவுடன் விளையாடிய நியாபகம் இருக்கின்றது, அதே வேலை அவளின் தாத்தா, “என் பேத்தி அம்மா அப்பா அரவணைப்பு இல்லாம தவிக்குறா. நீ தான் வாழ்க்கை முழுவதும் அவளைப் பார்த்துக்கணும்” என்று சொன்ன நியாபகம் கூட இருக்கின்றது.

அப்போது, “நான் என்னோட ஜாகியாவத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று அடிக்கடி சொன்னது கூட நியாபகம் இருக்கின்றது. அதன் பாடே அவன் தன் கொள்கையில் உறுதியாக இருந்தான். அதற்காக அவன் வதனாவை அப்படியே விட்டுவிடவும் எண்ணவில்லை. குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.

அப்படியுமே, வதனா இல்லாத வாழ்வு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ரத்னா தன்னை நிராகரிக்க வேண்டும் என்று அவனது உள்ளம் வெகுவாக விரும்பியது.

ரத்னா என்று நினைத்து, வதனாவின் குணநலன்களை அவனது டிடெக்ட்டிவ் சொன்னது அவனைக் கவர்ந்துவிட்டது. அதனால் தான் என்னவோ உண்மை தெரிந்த பிறகும் வதனாவையே அவன் மனது சுத்தி வருகின்றது. அதுமட்டும் இல்லாமல், அவள் அருகாமைக்கு அவனது மனது மிகவும் ஏங்கியது.

அவன் சொன்ன விஷயங்களை எல்லாம் வழக்கத்திற்கு மாறாக, அமைதியாக கேட்டுக் கொண்டவள், “சரி பரவாயில்ல. இதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல” என்று அவன் நினைத்ததற்கு மாறாக பேசினாள்.

“குழந்தை இன்னும் பிறக்கல. அது பிறந்ததும் அந்தக் குழந்தை என்கூட தான் இருக்கும். இது உனக்கு சம்மதமா ரத்னா” என்று நேரடியாகவே கேட்டான்.

அதில் இன்னும் இன்னும் அதிர்ந்து விருட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவள், “யாரு அது? கண்டிப்பா நல்ல பொம்பளையா இருக்காமாட்டா” என்றதும், “வார்த்தையை அளந்து பேசு ரத்னா. அவள் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல” என்று பரிந்து கொண்டு வந்தான்.

அதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன் கோபத்தை பெரிதும் கட்டுப் படுத்தியவள், “அவ்வளவு ஆகிருச்சா? நிஜாமவே அவள் வயிற்றில் உன் குழந்தை தான் வளருதுன்னு, உனக்கு கண்டிப்பா தெரியுமா?” என்றாள் ஆக்ரோஷமாக.

“அது நிச்சயம் என் குழந்தை தான் ரத்னா. இதுக்கும் மேல என்னைக் கல்யாணம் பண்ணனும்னு நீ விரும்புறியா?” என்று கேட்டான்.

“ச்சீ... பலபேரோட படுத்த உனக்கு நான் கேட்க்குதா?. சரி நீ வெர்ஜின் கிடையாது. பரவாயில்லைன்னு நான் விட்டா, குழந்தையையும் கூடவே கூட்டிட்டு வருவேன்னு சொல்ற” என்று கத்தினாள்.

“தப்பா பேசாத ரத்னா. நீ பேசுறதுக்கு எல்லாம் நான் சும்மா இருக்கேன்னா. தப்பு என் மேல் இருக்கு. அதனால் தான் என்னோட இன்னொரு முகத்தை உனக்கு காட்டாமல் இருக்கேன்” என்றவன், மூச்சை இழுத்து வெளியே விட்டு, “ஜாகியான்னு தப்பா வேற ஒரு பெண்ணை நினைச்சு தான், அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று முழுவதையும் சொல்லி முடித்தான்.

ஆனால் அந்தப்பெண் யாரென்ற உண்மையை மட்டும் அவன் மறைத்து விட்டான்.

“ஓ... கல்யாணமே பண்ணிட்டியா?. பின்ன எதுக்காக என்னையும் கல்யாணம் பண்ண நினைக்குற? எனக்கு இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டா?” என்று வரம்பு மீறி பேசினாள் ரத்னா.

அதற்கு இகழ்ச்சியாக சிரித்துக் கொண்டவன், “இந்த சொத்து எப்படி சேர்ந்ததுன்னு உங்க அப்பா அம்மா உன்கிட்ட சொல்லைன்னு நினைக்குறேன் ரத்னா. எங்க அப்பாவை ஏமாத்தி, கல்குவாரியை உங்க அப்பா, அவர் பெயரில் மாத்திக்கிட்டார். அதில் எங்க குடும்பமே நடுத் தெருவில் வந்துருச்சு. அதனால் தான் நாங்க இந்தியாவை விட்டு கொரியாவுக்குப் போனோம். ஆனா அவங்க செஞ்ச தப்புக்கு உன்னைப் பழிவாங்க நான் ஒரு போது நினைச்சது இல்ல. நீ போட்டு இருக்கும் வைர நெக்லஸ் தான் இந்த குழப்பத்திற்கு எல்லாம் காரணம். நீ தான் அஜய்யின் தங்கச்சி, குயின்ஸ் நகைக்கடை ஓனர் பாஸ்கர் பொண்ணுன்னு, இந்த நெக்லஸ் தான் தப்பா காட்டுச்சு.

அதுவும் இல்லாம, என் டிடெக்டிவ் நீ மோசமான வாழ்க்கை வாழறதா சொன்னான். இது எந்த இடத்தில் தப்பா போச்சுன்னு தெரியல. ஏன்னா ஷைனே கல்குவாரி முதலாளி, பொடிக் நடத்தும் பெண்ணுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கு. நான் சென்னைக்கு புதுசு அதனால் எனக்கு எதுவுமே தெரியல” என்று மிகவும் நீட்டமாக பேசிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து அவள் முன்பாக வந்து நின்றான்.

“உண்மையை சொல்லி உன் விருப்பத்தை தான் கேட்க நினைச்சேன். இப்ப கேட்டுட்டேன். இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல நீ போகலாம்” என்று சொல்லி, வெளியே செல்லுமாறு தன் கையைக் காட்டினான்.

“போறேன்... ஆனா அதுக்கு முன்னாடி, உன் குழந்தைக்கு அம்மாவான பொண்ணு யாருன்னு சொல்லு” என்றாள் தன் கைகளைக் கட்டிக் கொண்டபடி.

“உனக்கும் எனக்கும் இனி சம்பந்தம் இல்லை ரத்னா. இது உனக்கு தேவை இல்லைன்னு நினைக்குறேன்” என்று கத்தரித்து விடுவதைப் போல் பேசினான்.

“அதெல்லாம் சம்பந்தம் இருக்கு. சும்மா இருந்தவளை கல்யாண ஆசைக் கட்டிட்டு, திடீர்னு டாட்ட பைபை சொல்லிட்டு போவீங்க... நாங்க வாய்பொத்தி அழுதுட்டுப் போகணுமா?’ என்றாள் கோபக்குரலில்.

எரிச்சலுடன் தன் தலையைக் கொதியவன், “அப்படி எதுவும் நடந்துடக் கூடாதுன்னு தான், நான் உன்கிட்ட உண்மையை சொல்லிட்டேன். இதுக்கும் மேல் அவளோட பெயர் உனக்கு எதுக்கு. வெளியப் போ...” என்றான் முகத்தில் அடித்தபடி. இதுக்கும் மேல் இவனிடம் பேசுவது வீண் என்று நினைத்தவள், நிலத்தை தன் காலால் ஓங்கி மிதித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் தான், குறளுக்கு நிம்மதியே வந்தது. இதுவரை அவனை அழுத்தி வந்த சில முடிச்சுகள் அவன் மனதில் இருந்து கழண்டு போக, நிம்மதி பெருமூச்சி விட்டவனாக, தன் இருக்கையில் சென்று, சாய்ந்த படி கண்ணை மூடியவன், வெகு நாளைக்குப் பிறகு நன்றாக தூங்கினான்.

***

“இந்த ரூமில் எவ்வளவு நேரம் தான் இருக்குறது. சீரியல் கூட பார்க்க விடாம, இந்த மனுஷன் என் போனை பிடுங்கிட்டுப் போயிட்டார்’ என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள் அமலா.

‘எல்லாரும் தூங்க போயிருப்பாங்க... இவரை வேறக் காணும். அந்த சிறுக்கி வீட்டுக்குப் போயிட்டார். நாம கொஞ்சம் தோட்டத்துப் பக்கம் காலறா நடக்கலாம்’ என்று கருதி, வேலையாட்கள் வீட்டிற்கு சென்ற நேரமாகப் பார்த்து தோட்டத்திற்கு வந்தவள், மகா மற்றும் வதனாவின் பேச்சைக் கேட்டுவிட்டு, ‘என்னது... வதனா கர்ப்பமா இருக்காளா! அதுவும் குறளரசனின் குழந்தை இவள் வயிற்றிலா!’ என்று அதிர்ந்தாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 37

தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த மகாவும், வதனாவும் குழந்தையைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்க, அதை அப்படியே கேட்டுவிட்டாள் அமலா. அவர்கள் பேசியதில் இருந்து வதனா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து அதிர்ந்தவள், அவர்கள் அடுத்துப் பேசிய பேச்சில், குழந்தையின் தந்தை ரத்னாவின் வருங்கால கணவனாக வரப்போகும் குறளரசன் தான் என்பதை அறிந்தவுடன், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவள், தன் வாயில் கைவைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் தன் அறைக்குள் வந்தாள்.

‘எவ்வளவு பெரிய விஷயம் இது. அதான் அன்னைக்கு ஹோட்டலில் ரெண்டும் சந்திச்சதுங்களா! இது தெரியாம நான் தான் அவசரப்பட்டு, இந்த நிலையில் வந்து நிற்குறேன். அடியே மகா இந்த கேவலமான செயலுக்கு நீயும் உடந்தையா, இருடி பார்த்துக்குறேன். வீட்டின் கொத்து சாவி உன் கைக்கு வந்துருச்சுன்னு ஆட்டாம ஆடுற’ என்று வன்மமாக நினைத்துக் கொண்டாள்.

வதனாவின் வாழ்வில் இனி தலையிடுவது இல்லை என்ற முடிவை அமலா எடுத்து இருந்தாலும், தானே வந்து ரகசியம் எல்லாம் அவள் காதில் விழ, மீண்டும் பழைய அமலாவாக மாறியவள், ‘ஆனா இதை, நான் எப்படி ரத்னாக்கிட்ட சொல்லுவேன்! ரூமில் டிவியும் இல்ல, போனும் இல்ல. டெலிபோனில் பேசலாம்னு நினைச்சா, எனக்கு ரத்னா நம்பரும் நியாபகம் இல்ல’ என்று எந்த வழியில் ரத்னாவிடம் இதனைப் பகிரலாம் என்று தான் அமலாவின் யோசனையாக இருந்தது.

அவள் கணவனிடம் இந்த ரகசியத்தை சொல்லி எதுவும் ஆகப்போவது இல்லை. முதலில் அவன் அமலாவை நம்ப மாட்டான். இரண்டாவது வதனாவின் பெயர் அமலாவின் வாயில் இருந்து வந்தாளே, அவளை வீட்டை விட்டு அனுப்பிவிடுவதாக எச்சரிக்கையும் செய்திருந்தான். இந்த நிலையில் அஜய்யிடம் பேச முடியாது.

‘இவ்வளவு பெரிய ரகசியத்தை, ரத்னாவிடம் போட்டு உடைப்பதனால், வதனாவின் வாழ்வில் மிகப்பெரிய பூகம்பத்தை ரத்னா நிச்சயம் உருவாக்குவாள்’ என்ற நினைப்பே அமலாவிற்கு தித்திப்பைத் தர, “சூப்பர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இனி இந்த ரகசியம் தெரிஞ்சதும், ரத்னா அந்த குறளரசனை கல்யாணம் பண்ணிக்கப் போறதும் இல்ல, அவள் சோகத்தை எனக்கு சாதகமா பயன்படுத்தி, என் தம்பியை அவளுக்கு கட்டி வச்சிடுவேன்” என்று வாய்விட்டு தனக்குத் தானே பேசிக்கொண்டவள். சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் திக்காடி தான் போனாள்.

இங்கே தோட்டத்தில், “பார்க்குறதுக்கு பிடிஎஸ் சுகா மாதிரி அந்த குறளரசன் இருக்கான்னு, நீ அப்படியே காதலில் விழுந்துட்டியா?” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் மகா.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணி. பீச்சில் நான் நின்று இருக்கும் போது தான், என்கிட்ட வந்து மிகவும் ஆறுதலா பேசுனான். அதுவும் இல்லாமல் எனக்குப் பார்த்ததும் பிடிச்சது” என்றாள் உண்மையான நேசத்துடன்.

“நீ சொல்றதை எல்லாம் வச்சிப் பார்த்தா, அவனுக்கு நீயும் வேண்டாம், ரத்னாவும் வேண்டாம். ஜாகியான்னு பெயர் உள்ள ஒரு பொண்ணு தான் வேணும்” என்று சொல்லி தன் தன் நெற்றியை நீவிவிட்டவள், “அடக்கடவுளே! பெரிய தொழில் அதிபர்ன்னு வெளியே அவனைப் பத்தி என்னென்னவோ பேசிக்குறாங்க. ஆனா அவன் ஜாகியான்னு நமத்துப் போன பொறியை தூக்கிக்கிட்டு அலையுறான்” என்றாள் சலிப்பாக.

தொடந்து பேசியவள், “இங்கப்பாரு வதனா. அவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சி இருக்கு. நீ தான் அவனை ரெண்டு சாத்து சாத்தி அவன் பைத்தியத்தை தெளிய வைக்கணும்” என்றாள்.

“என்னால் என்ன அண்ணி செய்ய முடியும். அவன் என் மீது கொண்ட காதல் உண்மை தான். ஆனா அதெல்லாம் ஜாகியாவுக்குன்னு தெரிஞ்சதும் என் மனசு உடைஞ்சு போய், சொல்லமுடியாத வலியை கொடுக்க ஆரம்பிச்சிருச்சி” என்று சோகமான குரலில் கூறினாள் வதனா.

“சரி விடு. டாக்டர் கொடுத்த மாத்திரையை எல்லாம் சரியா சாப்பிடு. ரொம்ப லேட் ஆகிருச்சி நாம உள்ள போகலாம்” என்று சொல்லி அவளை அலைத்துச் சென்றாள் மகா.

மறுநாள் தன் வீட்டின் அருகே இருந்த காபி ஷாப் ஒன்றில் வதனா அமர்ந்து இருக்க, அவனுக்கு முன்னே அமர்ந்திருந்தான் குறளரசன்.

இன்று காலை அவளைப் பேச அழைத்திருந்தான். கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு வதனா தனியே செல்வதற்கு மறுப்பு தெரிவித்த மகா, “நீ தனியா போனா, உன் அண்ணன் என்னைத் தான் திட்டுவார்” என்று சொல்ல, “பக்கத்தில் தான் போறேன் அண்ணி. ப்ளீஸ் நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்று கெஞ்சி கூத்தாடி தான் இங்கே வந்தாள்.

தன் மௌனத்தைக் கலைத்த குறள், “எனக்கும் ரத்னாக்கும் நடக்க இருந்த கல்யாணம் கேன்சல் ஆகிடுச்சி” என்று அவன் சொல்ல, வதனாவின் மனதில் இருந்த பெரிய பாரம் ஒன்று கீழே இறங்கி சென்றது.

எப்படி, ஏன் என்ற கேள்விகளை எல்லாம் அவள் கேட்கவில்லை. அவன் சொன்ன வாக்கியத்திலையே வதனாவிற்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆனால் அது எல்லாம் வெளியே தெரியாத படி, பாவனைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.

பின் தன் மகிழ்ச்சியை மறைக்க, கோப்பையில் இருந்த தேநீரை ஒரு இடறு விழுங்கினாள்.

பிறகு தான், “எப்படி நின்றது” என்பது போல் குறளை நோக்கி தன் பார்வையை செலுத்தினாள்.

“நான் ரத்னாவிடம் எல்லாத்தையும் சொல்லிட்டேன்” என்று சொன்னதும் அவளுக்கு புரையேற ஆரம்பித்தது. அதில் பதறியவன் அவள் தலையை தட்டிவிட்டு, அவள் பருக நீரைக் கொடுத்தவன், “இதைக் குடி” என்றான்.

அதை மெதுவாக தள்ளியவள், “எனக்கு ஒன்னும் வேண்டாம். இதை நீ யார்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன் தானே” என்றாள் கோபமாக.

“எல்லாத்தையும் சொன்னேனே தவிர. அது நீன்னு சொல்லல” என்றான் பொறுமையாக. முன்பு தன்னிடம் கோபமாக பேசிய ரத்னாவை கண்டித்த அவனின் மனது, வதனாவை சிறிதும் கண்டிக்க விழயவிழல்லை. மாறாக அவள் முகத்தை சிறிது சிறிதாக ரசிக்க ஆரம்பித்தது.

அவன் சொன்னதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவள், “அடுத்து என்ன பண்ணப்போற?” என்றாள்.

“குழந்தை பிறந்ததும், அதை என்னோடவே கூட்டிட்டு போகபோறேன்” என்றான் மிகவும் சாதாரணமாக.

“அதெல்லாம் முடியாது. இது என் குழந்தை” என்றாள் கோபமாக.

“நான் இல்லாம இந்தக் குழந்தை உனக்கு எப்படி கிடைச்சதுன்னு, பழைய நமத்துப்போன டைலாக் எல்லாம் எனக்கு சொல்ல விருப்பம் இல்ல வதனா. நீ புரிஞ்சிக்கோ, உன் லைப்பில் ஒருத்தன் நிச்சயம் வருவான். அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா இரு. இடையில் இந்தக் குழந்தை உனக்கு சுமையா இருக்க வேண்டாம்” என்று அவன் சொல்ல சொல்ல, தன் பொறுமையை இழுத்து வைத்துப் பிடித்திருந்தாள் வதனா.

நாம் மறுபடியும் சேரலாம் என்ற வாக்கியம் அவன் வாயில் இருந்து வரவேயில்லை. அதனை வதனாவின் நெஞ்சம் எதிர்பார்த்து தான் கொண்டிருந்தது.

ஆனால் ரத்னாவிற்கும், வதனாவிற்கும் இடையே மாட்டிவிட்டு, வெளியே வந்த குறளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாமல் போனது என்னவோ உண்மை தான்.

‘இரு பெண்களுக்குமே நான் துரோகம் செஞ்சிட்டேன். அதுவும் நான் வதனாக்கு செஞ்சது எல்லாம் மிகப்பெரிய பாவம்’ என்று நினைத்தான்.

அவனது பேச்சை சுத்தமாக ரசிக்கும் மனநிலையில் வதனா இல்லை.

“அதை எல்லாம் நீ சொல்லாத. இப்போ என்ன செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுவும் இல்லாம குழந்தையை உன்னிடம் கொடுக்கும் எண்ணம் எல்லாம் என்னிடம் சிறிதும் இல்ல” என்றாள் ஆளுமையாக.

“சரி அது உன் இஷ்டம். இதுக்கும் மேல இந்தியாவில் இருக்க எனக்கு இஷ்டம் இல்ல. நான் கொரியாவுக்குப் போறேன்” என்றதும் அவளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

‘என்ன சொல்றான் இவன். அப்படின்னா இனி குறளை பார்க்கவே முடியாதா?’ என்று நினைத்து அடித்துக் கொண்டது அவளின் மனது.

தொடர்ந்து பேசிய குறள், “குழந்தை பிறந்ததும் குழந்தையை கூட்டுட்டுப் போயிறலாம்னு நினைச்சேன். ஆனா நீ அதுக்கு ஒத்து வரல. எனிவே, இனி அந்தக்கவலை எனக்கு இல்ல. நான் நாளைக்கே கொரியா போயிடுவேன்” என்றான் தன் தோள்களைக் குலுக்கியபடி.

‘குழந்தை முகத்தை பார்க்கணும்னு கூட இவனுக்கு தோணலையா?’ என்று நினைத்தவள், அதனைப் பற்றி அவள் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை.

‘குழந்தை எப்படி இருக்கு. ஹாஸ்பிடல் போனியா என்பதனைக் கூட அறியாதவனுக்கு பாசம் எப்படி வரும்’ என்று நினைத்து மருகினாள். ஆனால் அவள் பார்க்கும் மருத்துவரைப் பார்த்து, அனைத்தையும் அறிந்து தான் இருக்கின்றான் என்பதை அவள் அறியவில்லை.

தன் தவறால் வந்த குழந்தை. அதற்கு நான் பொறுப்பு என்று கடமையை நிறைவேற்றத் தான் பேசிக்கொண்டு இருந்தானே தவிர பாசத்தால், அவன் பேசவில்லை என்பதனை அப்போது தான் உணர்ந்தவள், தன் கண்களில் இருந்து விழப்போகும் கண்ணீரை தடுக்க, வேகமாக தன் இமைகளை இமைத்தாள்.

“ஹேய் வதனா அப்படி செய்யாத. கண்களில் இருக்கும் மெல்லிய நரம்புகள் இதனால் பாதிக்கப் படலாம்” என்றான் அக்கறையாக.

அதில் அவனை முறைத்தவள், “உன் திடீர் அக்கறை யாருக்கு வேணும்?” என்று கூறி தன் முகத்தை சுழித்தாள்.

“சரி அதைவிடு. நான் இறுதியா கேட்குறேன். குழந்தையை நீயே வளர்க்குறதுன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று மறுபடியும் அதே கேள்வியை அவன் கேட்க, அதில் கடுப்பான வதனா, “எத்தனை தடவை நான் சொல்றது. குழந்தை மேல் பாசம் உனக்கு இல்லைனாலும் எனக்கு அதிகமாவே இருக்கு. அதை நல்ல படியா நான் வளர்ப்பேன்” என்றாள் உறுதியான குரலில்.அதற்கு பெருமூச்சு ஒன்றைவிட்டவன், “அப்ப இதையும் நல்லா கேட்டுக்கோ. இது தான் பைனல். இனி எனக்கும் குழந்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்ல. இது மொத்தமும் உன் பொறுப்பு மட்டும் தான். எதிர்காலத்தில் உன்னால் வளர்க்க முடியலைன்னா, நீ என்கிட்ட வரவே கூடாது. அதுக்கு நான் பொறுப்பு ஆகாமாட்டேன்” என்று ஒரே போடாக போட்டான்.

அவளோ அவன் பேச்சைக் கேட்டு மொத்தமாக நொறுங்கி போனாள். அவள் இன்னும் நொறுங்குவது போல, தன் அலைபேசியை எடுத்து அவள் முன்னால் ஆட்டியவன், நீ சொன்னது எல்லாம் இதில் ரெகார்ட் ஆகி இருக்கு. சொன்ன சொல்லைக் காப்பாத்துவன்னு நினைக்குறேன்” என்ற குறளின் மனதிற்குள் இருந்த இரக்கமே காட்டாத கிங் என்பவன் வெளியே வந்தான்.

ரத்னாவை எப்படி தொடர்பு கொள்வது என்று யோசித்துக் கொண்டே இருந்த அமலா, நேரம் பார்த்து ஜன்னல் வழியாக, பைப் லைன் மூலம் கீழே இறங்கியவள், அங்கிருந்து வெளியேறி ரத்னாவிடம் அனைத்தையும் போட்டு உடைத்தாள்.

அனைத்தையும் குறள் சொல்லக் கேட்டு இருந்தவள், அது வதனா தான் என்பதனை அமலா சொல்ல கேட்டவள், பயங்கரமாக வந்த கோபத்துடன், வதனாவின் வீட்டிற்கு சென்றவள், அங்கே நடுக்கூடத்தில் இருந்த எவரையும் பொருட்படுத்தமால், “ஹேய் வதனா வெளியவாடி” என்று கத்தினாள்.

அஜய்யும் அங்கே தான் இருந்தான். மகாவோ, ‘உண்மை தெரிஞ்சி தான் இந்த கத்து கத்துறாளா?’ என்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, முன்னே வந்த விஜய், “எதுக்காக நடுவீட்டில் வந்து கத்துற?” என்று கண்டித்தான்.

“உன் குனிந்த தலை நிமிராத தங்கச்சி கர்ப்பமா இருக்கா தெரியுமா?. அதுவும் நான் கட்டிக்கப் போறவன் கூட சேர்ந்து தான் கர்ப்பம் ஆகி இருக்கா” என்பதனை நடுவிட்டில் ஒலிபரப்பிக்கொண்டு இருந்தாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 38

இரண்டு மாதங்களுக்குப் பிறகு...

“உனக்கு இடுப்பு வலிக்கும் அதனால், இந்த தலையணையை வச்சிக்கோ” என்று அக்கறையுடன் தலையணையை வதனாவின் முன்பாக நீட்டினான் குறளரசன்.

ஆம் அனைவராலும், கிங் என்ற அழைக்கப்பட்ட அதே குறள் தான்.

அதை வெடுக்கென்று பிடுங்கி தூரமாக எறிந்தவள், “எனக்கு ஒன்னும் வேண்டாம். ரொம்ப அக்கறையா இருப்பது மாதிரி நடிக்காத” என்றாள் முகத்தை சுழித்தபடி.

“ம்ச்... ஏழு மாசம் ஆகிடுச்சு. நான் தான் உன்னை கவனமா பார்த்துக்கணும்” என்றான் மெல்லிய குரலில்.

“அப்படின்னு யார் சொன்னாங்க. உன் அம்மா சொன்னாங்களா?. உனக்குன்னு மூளை இருக்கு இல்லையா! பின்ன ஏன் அவங்க சொல்றதை எல்லாம் கேட்டு, என் மேல அக்கறை இருக்குற மாதிரி நடிக்குற?” என்று அவன்பால் எரிந்து விழுந்த வதனாவின் வயிறு, ஏழு மாதங்கள் ஆகி இருந்ததால் சற்று பெரியதாகி இருந்தது.

“அவங்க சொன்னதால் மட்டும் இல்ல. எனக்கும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கு” என்று பதிலுக்கு கோபம் கொண்டான் குறள்.

“அதெல்லாம் எனக்கு தேவை இல்லாத ஒன்னு. உன்கூட இருக்கவே எனக்குப் பிடிக்கல. எங்க அண்ணன் அண்ணிக்காக மட்டும் தான் உன்னைக் கல்யாணம் பண்ணி இங்க வந்து கஷ்டப்படுறேன்” என்றாள் முகத்தை சுழித்தபடி.

“எனக்கும் ஆசை பாரு. உன்னை மாதிரி ஒரு பஜாரியைக் கல்யாணம் பண்ணனும்னு. நானும் என் அப்பா, அம்மாவுக்காக மட்டும் தான் உன்னைக் கட்டிக்கிட்டு இப்படி இருக்கேன். தினமும் நீ போடுற சண்டையால், என்னால் நிம்மதியா வேலை பார்க்க முடியல” என்று அவள் பேசிய ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பதில் வைத்து திருப்பி கொடுத்தவன், உண்மையிலையே அவளின் மேல் அன்பாக தான் இருக்கின்றான்.

முதலில் திருமணமே வேண்டாம் என்றவன். பின் அதற்குள் அடி எடுத்து வைத்ததும், தன் பொறுப்புகளை எல்லாம் உணர்ந்து வதனாவை நல்ல படியாக பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

ஆனால் வதனாவின் பார்வைக்கு அவன் செய்வது எல்லாம் காதலாக தெரியாமல் வெறும் கடமையாக மட்டுமே தெரிந்தது. அதனால் கிடைக்கும் சமயம் எல்லாம் அவனை தேனீ போல் தன் நாக்கால் கொட்ட ஆரம்பித்தாள்.

அவள் கோபம் நியாயம் தான் என்பதை அறிந்து முதலில் அவளுக்கு பதில் சொல் கொடுக்காமல் அமைதியாக தான் இருந்தான் குறள். ஆனால் சில நேரங்களில் திரும்பவும் கொடுத்துவிடுவான். ஆனால் அவள் திட்டுவதற்காக அவள் மேல் கொண்ட அக்கறையை அவன் ஒரு போதும் கைவிடுவதாக இல்லை.

இப்போதும் அப்படி தான் நடந்து கொண்டு இருந்தது. குறள் வாங்கி இருந்த பிளாட்டில் தான் இப்போது இவர்களது வாழ்க்கை சென்று கொண்டு இருக்கின்றது.

காலை உணவை அவனே சமைத்து அவளுக்கு பரிமாற, உணவு மேஜையில் இருந்த உணவுகள் அனைத்தையும் பார்த்து முகத்தை சுழித்தவள், “இன்னைக்கும் இது தானா?” என்றவள், கிம்ச்சி என்ற கொரிய உணவை சுட்டிக் காட்டி, “இது மட்டும் தான் எனக்குப் பிடிக்குது. வேற எதுவும் எனக்குப் பிடிக்கல” என்றாள்.

“அது ஒன்னும் மெயின் டிஸ் இல்ல வதனா. அது ஜஸ்ட் ஊறுகாய் தான்” என்றான்.

“இதுக்கு எங்க ஊரு நார்த்தங்காய் ஊறுகாய் எவ்வளவோ பெட்டர். ஆனா எனக்கு மாங்காய் ஊறுகாய் தான் பிடிக்கும்” என்றாள் உதட்டை குவித்தபடி.

அதில் திடீரென்று முத்தம் கொடுக்க சொல்லி குறளின் மனது வேண்ட, ‘வேற வினையே வேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டவன், “சுவற்றை பார்த்தபடி, “ஒழுங்கா சாப்பிடு. உனக்காக அம்மா சீ வீட் கிம்பாப் எல்லாம் கொடுத்து விட்டுருக்காங்க” என்றான்

“ம்ச்... வேகாத பச்சை காய்கறியை என்னால சாப்பிட முடியாது. அதுவும் இல்லாம பாலுன்னு சொல்லிட்டு சோயா பாலைக் கொடுக்குற” என்றாள் முகத்தை அஷ்ட்டகோணலாக வைத்தபடி.

“உனக்கு இப்ப என்ன தான் வேணும்” என்று அவன் கேட்க, “இட்லி வச்சி காரசட்னி வேணும்” என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.

“இதை தான் கொரியாவில் இருக்கும் பிரேக்னன்ட் லேடீஸ் எல்லாம் சாப்பிடுறாங்க. அப்ப தான் குழந்தை ஆரோக்கியமா இருக்கும்” என்றான் தன் முன்னே இருந்த உணவை சுட்டிக் காட்டி.

“ஆனா இங்க இருக்கும் எங்க இந்தியப் பெண்கள் இதை சாப்பிடாமலையே நல்லா ஆரோக்கியாமத் தான் இருக்காங்க” என்றாள்.

“எனக்கு இது தான் செய்யத் தெரியும். எங்க வீட்டில் தமிழ் பேசினாலும், நாங்க சாப்பிடுவது கொரியன் பூட் மட்டும் தான். எங்க அப்பாவே எதுவும் சொல்லாம எங்க ஒம்மா வைக்குறதை சாப்பிடுவாரு” என்றான் பெருமையாக.

“ம்க்கும்... உங்க ஒம்மாவை கட்டுன பாவத்துக்கு அவர் சாப்பிட வேண்டியது தான். ஆனா நான் எதுக்காக சாப்பிடணும்? என்றாள் எரிச்சலாக.

“இனி நீ இதைத் தான் சாப்பிடணும்னு ஒம்மா சொல்லி இருக்காங்க. அதை எதிர்த்தா உனக்கு நல்லது இல்ல. இப்ப இந்தியாவில் இருக்கும் போது ஒன்னும் தெரியல. கொரியா போனா உன் நிலைமை அவ்வளவு தான்” என்று அவளை பயமுறுத்தவும் செய்தான்.

அவன் கொடுத்த சாப்பட்டை வேறு வழி இல்லாமல் உண்ண ஆரம்பித்தாள். இது கடந்த இரண்டு மாதங்களாக தினமும் நடக்கும் கூத்து தான். அவளுக்கு கொரியனில் இருக்கும் ஆரோக்கிய உணவுகள் எதுவுமே பிடிக்கவில்லை. ஆனால் அதில் இருக்கும் ஜங் பூட்டான ராமியான் அவளுக்கு மிகவும் பிடித்தது. ஒரு நாள் அதை அவள் உண்ணும் போது பார்த்துவிட்டவன், “இதை எதுக்காக நீ சாப்பிடுற?” என்று கத்த ஆரம்பித்தான்.

எல்லாம் அவள் மேல் உள்ள அக்கறையில் தான் அப்படி கேட்டான். அதற்கு கொந்தளித்த வதனா, “ஓ... இனி இந்த வீட்டில் சாப்பிடுறதுக்குக் கூட உன்கிட்ட அனுமதி வாங்கனும்மா” என்றாள்.

“ம்ச்... புரியாமல் பேசாத வதனா. இது உடம்புக்கு நல்லது இல்ல” என்றான் அதனைக் காட்டி.

“அப்ப ஏன் வாங்கி வச்சிருக்க?” என்று காட்டமாய் கேட்டாள்.

“நான் சாப்பிட வங்கி வச்சி இருக்கேன்” என்று அவன் சொன்னதும் தான் தாமதம், “ஓ... உன்னோட சாப்பாட்டை எடுத்து திங்குறது தான் உனக்குக் கோபமா. இனி உன்னோட எந்த ஒரு பொருளையும் நான் எடுக்க மாட்டேன்” என்று சண்டை போட்டு வீண் பிடிவாதம் பிடித்தாள் அன்று.

இப்போது அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும், கட்டாயப்படுத்தி அனைத்தையும், அவளை உண்ண வைத்தவன், “வா என்னோட, உன்னை டிராப் பண்ணிட்டு சைட்க்குப் போறேன்” என்றான்.

“இல்ல வேண்டாம். நான் இன்னைக்கு எங்க அண்ணா வீட்டுக்குப் போறேன்” என்றாள்.

“சரி வா. அங்கையே போய் உன்னை டிராப் பண்றேன்” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

அங்கே சென்றதும், வாசலில் நின்று கொண்டிருந்த மகா, காரில் இருந்து இறங்கிய வதனாவை அணைத்து விடுவித்தவள், காரின் உள்ளையே அமர்ந்திருக்கும் குறளைப் பார்த்து, “உள்ள வாங்க தம்பி” என்றாள்.

“இல்ல வேண்டாம்” என்று அவன் மறுப்பு தெரிவிக்க, அவள் விடாமல் அழைக்க, வேறு வழி இல்லாமல் உள்ளே சென்றான்.

அவனுக்கு அங்கே செல்லவே பிடிக்கவில்லை. இருந்தும் மகாவின் நச்சரிப்பில் சென்றான்.

நடுக்கூடத்தில் தான் விஜய் அமர்ந்திருந்தான். தன் தங்கையைப் பார்த்தவன், “வதனா, வா வா... எப்படி இருக்க. நல்லா தானே சாப்பிடுற, ஆளே இளைச்சி போயிட்ட” என்றான் அன்பொழுக.

“அதெல்லாம் நல்லாத் தான் அண்ணா இருக்கேன்” என்று சொல்லியபடி அவன் அருகே அமர்ந்தாள் வதனா.

பின்னே வந்த குறளை அவன் சிறிதும் மதிக்கவில்லை. மகா தான், “கூப்பிடுங்க” என்று தன் கண்களால் விஜய்க்கு ஜாடை காட்டினாள்.

அவளின் நச்சரிப்பில் வெறுமனே, குறளை நோக்கி தலையசைப்பை கொடுத்தவன், வதனாவிடம் நகைக் கடையைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

இது எப்போதும் நடப்பது தான் என்றாலும், என்றாவது ஒருநாள் தன் கணவர் மாறமாட்டாரா என்ற நினைப்பு மகாவிற்கு.

வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையை வாசலோடு அனுப்பவும் அவள் வளர்ப்பு இடம் தரவில்லை. அதனால் குறள் வரும் நேரம் எல்லாம் அவனுடன் ஏதவாது பேசுவது மகா மட்டுமே.

இன்றும் அப்படி தான், “உங்க நாட்டில் நல்லா மழை பெய்யுதா?’ என்று ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

வதனாவை மிகப்பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றிய மகாவின் மேல் எப்போதும் குறளுக்கு அதிக மரியாதை உண்டு. அதனால் அவனும் மரியாதையுடனே அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

“சரி அக்கா. அப்ப நான் வரேன். வதனாவை பார்த்துக்கோங்க” என்று சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான்.

பின் விஜய்யும் கடைக்கு கிளம்பியதும், பெண்கள் இருவரும் தங்களுக்கே நேரத்தை எல்லாம் சொந்தமாக்கினர்.

வதனாவின் அறையில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

மகா, “குறள் உனக்கு நல்லா சமைச்சு போடுறாரு போல” என்றாள் கண் அடித்தபடி

“அட போங்க அண்ணி. அதெல்லாம் சாப்பாடா. பிடிக்காத சாப்பாட்டை வயிறு முட்ட முட்ட சாப்பிட்ட மனுஷி நான் மட்டுமாத் தான் இருக்கும்” என்றாள் சலிப்புடன்.

“உனக்குப் பிடிக்கலைன்னா, நீயே சிம்பிள்ளா ஏதாவது செஞ்சி சாப்பிடு வதனா. நான் உனக்கு தோசை மாவும், இட்லி பொடியும் கொடுத்து விடுறேன். தேங்காய் சட்னி வைக்குறது லேசான வேலை தான். தோசை சுடுறதுக்கு மட்டும் குறளை வச்சிக்கோ” என்றாள் மகா.

“அதெல்லாம் சரிப்பட்டு வராது அண்ணி. நான் என்ன சாப்பிடணும்னு முடிவு பண்றதே என் மாமியார் ராஜமாதா தான். எனக்குப் பிடிச்ச சாப்பாட்டை சாப்பிடக்கூட எனக்கு உரிமை இல்ல” என்று வருத்தம் கொண்டாள் வதனா.

“அப்ப குழந்தை பிறந்ததும், நீ கொரியா போகத் தான போறியா?” என்று சோகமான குரலில் கேட்டாள் மகா.

“அதெல்லாம் இல்லை அண்ணி. இங்க தான் நாங்க இனி இருக்கப்போறோம். குறளும் அவன் அம்மா கேட்டதுக்கு அப்படி தான் சொல்லிக்கிட்டு இருந்தான்” என்றாள்.

“அப்பாடா...நான் கூட கொஞ்சம் பயந்து தான் போயிட்டேன்” என்றதும், “உங்களை விட்டு எங்கயும் போகமாட்டேன் அண்ணி” என்று கூறி அவளை அணைத்து விடுவித்தாள்.

“அட ஆமாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவே மறந்துட்டேன் வதனா. அந்த சுஜி உன் அண்ணன் அஜய் குழந்தைக்கு தாயாகப் போறாளாம்” என்றாள் கண்களை பெரியதாக வைத்துக் கொண்டு.

“என்ன அண்ணி சொல்றீங்க? அப்ப அமலா அண்ணி?” என்று அமலாவிற்காக வதனா கவலைப்பட, அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், ரத்னாவின் முன்னே அமர்ந்து, வழக்கம் போல் விஷம திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருந்தாள் அமலா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 39

“போதும் ரத்னா, இதுக்கும் மேல குடுச்சி உன் உடம்பை பாழாக்காத. இப்போதே உனக்கு போதை அதிகமாகிடுச்சி” என்று அமலா அவளிடம் கெஞ்சிக்கொண்டு இருக்க, “என்னால் முடியல. என்னை பிரம்மிப்பாக பார்க்கும், என் தோழிகள் கூட, என்னைப் பார்த்து சிரிக்குறாங்க” என்றாள் கையில் ஏந்திய மது கோப்பையுடன்.

“ஒரு அழகான கொரியன் பையனைத் தான் கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்லிட்டேன். இதுவும் கிங் நிறுவனத்தின் வாரிசுன்னு சொன்னதும், எல்லாரும் வாயில் விரல் வைக்காத குறையா பார்த்தாங்க. ஆனா இப்போ எல்லாரும் என்னைப் பார்த்து சிரிக்குறாங்க” என்று சொல்லிக் கொண்டே முழு பாட்டிலை தன் வாயில் சரித்தாள்.

“அவன் இல்லைன்னா போறான் பாவிப்பய. அவன் போன ஜென்மத்தில் ஏதோ பாவம் பண்ணி இருக்கணும். அதான் அந்த வதனாவை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறான்” என்று பதிலுக்கு குறளை திட்டினாள் அமலா.

“நோ... நான் தான் அவன் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சேன். இப்ப கூட நான் கல்யாணத்திற்கு சரின்னு சொல்லி இருந்தா, அவனோட சாய்ஸ் நான் தான். நானுன்னு நினைச்சு தானே வதனாக்கிட்ட பழகுனான்” என்றாள் உதட்டை வளைத்தபடி.

“அப்படி பார்த்தா வதனா உன்கிட்ட தோத்து போயிட்டான்னு சொல்லு” என்றாள் சிரிப்புடன்.

“ஆமாம் அவள் தோத்து தான் போயிட்டா.... என்னோட பொருளை தவறுதலா அவள் அடைந்தாலும், அதில் அவளுக்கு எப்போதுமே நிம்மதி இருக்கவே இருக்காது” என்றாள் இப்போது மகிழ்ச்சியாக.

“ஆமாம்” என்று அவளது மகிழ்ச்சியில் பங்கு எடுத்தவள், “நீ கேட்குற மாப்பிள்ளை மாதிரியே தான் என் தம்பியும். அவனுக்கு பொண்ணுங்க சாவகாசமே கிடையாது” என்று தன் அடுத்த கொக்கி போடும் வேலையை ஆரம்பித்தாள்.

“ம்ச்... அதெல்லாம் எனக்கு வேண்டாம். அவன் எல்லாம் வெறும் ஒன் நைட் ஸ்டான்ட்டுக்கு தான் சரியா வருவான். என் வாழ்க்கைக்கு குறள் மாதிரி ஒருத்தன் தான் தேவை” என்றவள் பேசிய வார்த்தைகளில் அதிர்ந்தவள், ‘ம்க்கும்... இதுக்கு என் புருஷனே பரவாயில்ல போல’ என்று நினைத்துக் கொண்டவள் வேறு ஒரு திட்டம் ஒன்றை தீட்டினாள்.

‘நேரடியாக செய்து தான் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டோம்’ என்று நினைத்த அமலா, தன் சூழ்ச்சிகளை எல்லாம் ரத்னாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

“நீ அந்த வதனாவை நிம்மதியாகவே இருக்கவிடக்கூடாது ரத்னா. அக்காவின் காதலனை கல்யாணம் பண்ணிக்கிட்டதை நினைச்சு, அவள் தினமும் அழணும். அதுக்கு அவங்க ரெண்டு பேரும் நல்ல படியா வாழவே கூடாது” என்றவளுக்கு, வதனாவின் மேல் எதற்கு தான் இத்தனை வன்மம் என்று தெரியவில்லை.

“அதை நீங்க சொல்லணும்னு அவசியமே இல்லை அண்ணி. சின்ன வயசில் இருந்தே அவளிடம் இருந்து எல்லாத்தையும் அபகரித்தவள் நான். இப்போ வந்து என்னோட காதலனை அவள் கையில் தூக்கி கொடுத்துட்டு, நான் எப்படி அமைதியா இருப்பேன்?” என்று குடிபோதையில் உளறிக்கொட்டினாள்.

அதற்கு சிரித்துக் கொண்ட அமலா, தன் மனதின் உள்ளே, ‘என் திட்டம் சரியா வேலை செய்யுது. யார் என்ன பண்ணா எனக்கு என்ன மொத்தத்தில் அந்த வதனா நாசமா போகணும் அவ்வளவு தான்’ என்று விஷமமாக நினைத்துக் கொண்டாள்.

***

“சரி உன் மாமியார் போனில் உன் கூட நல்லா பேசுறாங்களா?” என்று மகா வதனாவிடம் கேட்டாள்.

“அது எங்க இங்க இருக்கு. அவங்க தான் ராஜமாதா வாச்சே அவங்க உத்தரவு மட்டும் தான் போடுவாங்க. அதுக்கு தலையை மட்டும் ஆட்டிக்கணும். ஆனா தமிழன் கூட இவ்வளவு அருமையா தமிழ் பேச மாட்டாங்க. எங்க அத்தை, எதுகை மோனைல எல்லாம் பேசி தமிழை வெளுத்து வாங்குறாங்க” என்றாள் வதனா.

“சரி அது இருக்கட்டும். நீ இன்னும் குறளை மன்னிக்கலையா?” என்று வருத்ததுடன் கேட்டாள் வதனா.

இப்போது முகத்தை வெறுமையாக வைத்துக் கொண்டு, “அதெப்படி அண்ணி மன்னிக்க முடியும். கல்யாணம் பண்ணதால எல்லாம் மாறிவிடுமா?. நான் ரெண்டாவது ஆப்சன் தானே அவனுக்கு. இப்ப ரத்னா, உண்மை தெரிஞ்சும் கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருந்திருந்தா, அவளைத் தானே கல்யாணம் பண்ணி இருப்பான்” என்றாள்.

“உன் துக்கம் தெரியுது வதனா. ஆனா இதைப் பத்தி, உன் மனசில் உள்ளதை எல்லாம் குறள்கிட்ட சொல்லு. அப்ப தான் அவர் பக்கம் இருக்கும் நியாயமும் உனக்குத் தெரியவரும்” என்றாள்.

உதட்டை சுழித்தவள், “அவன் பக்கம் எந்த ஒரு நியாயமும் இல்லை அண்ணி. அவன் வாயில் இருந்தே தான் இப்படி வந்துச்சு. அவன் அப்படியே என்னை அம்போன்னு விட்டுட்டு கொரியா போறதுக்கு தான் ப்ளான் பண்ணான். இடையில் அவனோட அப்பா வந்து எல்லாத்தையும் மாத்திட்டாரு” என்றாள் சோகமாக.

“எல்லாம் ஒரு நாள் மாறும் வதனா. ரத்னா மேல் குறளுக்கு காதல் எல்லாம் ஒன்னும் இல்லை. இதை நான் அடிச்சு சொல்லுவேன்” என்றாள் மகா.

அதற்கு சிரித்துக் கொண்ட வதனா, “அன்னைக்கு ரத்னா அக்கா, என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா அண்ணி!. குறளைக் காட்டி, ‘இவனை உன்கிட்டவே பிச்சையா போடுறேன். நான் தூக்கி போட்டதுனால தான் உன்னை கல்யாணம் பண்ணப்போறான். என்கிட்ட வந்து அவனைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சினான். எனக்கு எதுக்கு செகண்ட் ஹேன்ட்ன்னு, நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்னு’ சொன்னாள்” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

அவளின் கண்ணீரை துடைத்த மகா, “பிள்ளைத்தாச்சி பொண்ணு அழக்கூடாது வதனா. அவள் என்னவேணாலும் சொல்லிட்டுப் போகட்டும். அவள் பேச்சுக்கு எல்லாம் நீ மதிப்பு கொடுக்காத. இந்த காலத்தில் பல பிரேக்அப்பிற்குப் பிறகு தான் திருமணம் என்ற பந்தத்திற்குள் பசங்க வராங்க. அதெல்லாம் இப்ப சாதாரணம் ஆகிடுச்சு. இத்தனைக்கும் குறள், இப்ப இருக்கும் ரத்னாவை விரும்பவே இல்ல. அவர் விரும்பினது சின்ன வயசுல. நீ எதையாவது போட்டு குழப்பி, குறளோட சண்டை போட்டு, அமலா அக்கா மாதிரி உன் வாழ்க்கையை மாத்திடாதா” என்றதும் அதிர்ந்து விட்டாள் வதனா.

“என்ன அண்ணி சொல்றீங்க? நீங்க சொல்றதை எல்லாம் கேட்க எனக்கு பயமா இருக்கு” என்றாள் பதற்றமாக.

“ம்... பயமா இருக்கு இல்லையா! இந்த மாதிரி கசப்பு மருந்து வார்த்தைகளால் கொடுத்தா தான் உனக்கு தெரியும் வதனா. ஆம்பளைங்க எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க தான். எவனும் இராமன் இல்ல. அதை முதலில் தெரிஞ்சிக்கோ. நீ எப்போ பார்த்தாலும் உன் கணவனோட சண்டை போட்டா, அவருக்கு வீட்டுக்கு வரவே பிடிக்காது. குறள் செஞ்சது தப்புன்னு தான்னு நானும் சொல்றேன். ஆனா எப்போ பார்த்தாலும், ஒரு மனுசனை சீண்டுறதும் தப்பு தான். அதன் விளைவு எந்த மாதிரி ஆகும்னே தெரியாது” என்று மிகப்பெரிய அறிவுரையை வழங்கினாள்.

மகா சொல்வதைக் கேட்டு, வதனாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.

“இதை எப்போதும் உன்கிட்ட நான் சொல்லத் தான் நினைப்பேன் வதனா. ஆனா இதை நீ எப்படி எடுத்துப்பன்னு நான் நினைச்சு விட்டுருவேன். ஆனா இன்னைக்கு உன்கிட்ட இதைப் பத்தி சொல்லாம இருக்க முடியல” என்றாள், உடனே மகாவின் கைகளைப் பற்றிய வதனா, “அண்ணி, அப்படி சொல்லாதீங்க. வாழ்க்கையை வெறுத்துப் போய் வாழ்ந்த எனக்கு சிறந்த வழிகாட்டியா வந்தவங்க நீங்க. நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது. உங்களுக்கு என் மேல ஏதாவது கோபம் வந்தா, அதை அப்படியே என்கிட்ட காட்டுங்க. ஏன் ரெண்டு அடி கூட அடிங்க” என்றாள் வதனா.

“அப்படிங்குற, அப்ப குழந்தை பிறந்ததும், உனக்கு இருக்கு” என்று சிரித்து கொண்டே சொல்ல, அதில் தானும் இணைந்து கொண்டாள் வதனா.

“சரி குறள் கொரியன் மாதிரி தான் இருக்காரா இல்ல தமிழன் மாதிரி இருக்காரா?” என்று மகா கேட்டாள்.

“பெருசா எந்த வித்தியாசமும் கிடையாது அண்ணி. என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறான். ஆனா இதெல்லாம் அவன் அம்மா சொல்லி செய்யுறான்னு நினைக்கும் போது தான் எனக்கு கோபம் கோபமா வருது” என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.

“அதை எல்லாம் விடு வதனா. கொஞ்சம் விட்டுப்பிடி. உன் மாமியார் கிட்டையும் கொஞ்சம் கவனமா பேசு. அவங்க வெளிநாட்டுக்காரங்களா இருந்தாலும், மாமியார் தோரணை மட்டும் இங்க இந்தியாவில் இருக்குற மாதிரி இருக்கு. போனில் அவங்க பேசினாலும், சரி அத்த சரி அத்தன்னு கேட்டுக்கோ” என்றாள் மகா.

“அத்தை இல்லை அண்ணி ஒமோனிம்” என்று சொல்ல, மகாவின் புரியாத பார்வையில் சிரித்தவள், “கொரியன் மொழியில் மாமியாரை ஒமோனிம்னு சொல்லணும் அண்ணி. நான் எப்ப குரலைக் கல்யாணம் செய்தேனோ, அப்பாவே இதைப் பத்தி அவங்க என்கிட்ட சொல்லிட்டாங்க” என்றாள்.

“அட இத்தனை வருஷமா கொரியன் டிராமா பார்க்கும் எனக்கு இதைப் பத்தி தெரியாம போச்சு பாரேன், எனக்கு தெரிஞ்ச கொரியன் எல்லாம், அன்னியன்ஹாசியோ, குவேன்ச்சானா, சாராங்கே, ஹஜிமா, அப்பறம் ஒரே ஒரு கெட்ட வார்த்தை மட்டும் தான் வேற எதுவுமே தெரியாது” என்று கையை விரித்தாள்.

“சரி அமலா அண்ணிக்கு சுஜி ப்ரெக்னன்ட்டா இருக்கும் விஷயம் தெரியுமா அண்ணி” என்று தெரிந்து கொள்ள கேட்டாள்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது வதனா. அமலா அக்கா அடிக்கடி வெளிய போறாங்க. உன் அண்ணன் அஜய்யும் ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறார். ரெண்டு பேரும் வீட்டுக்கு வரும் நேரமும், போகும் நேரமும் எதுவுமே தெரிய மாட்டேங்குது. சுஜி கர்ப்பமா இருக்கும் விஷயத்தை உன் விஜய் அண்ணன் தான் சொன்னார் என்கிட்ட” என்றாள் மகா.

“சரி நீ வா. உனக்குப் பிடிச்ச காரசட்னி இருக்கு. நான் உனக்கு தோசை ஊத்தித் தரேன்” என்று சொல்லி வதனாவை அழைத்து சென்றாள் மகா.

***

“நான் கூப்பிட்டதும் ஒரு நல்ல நண்பனா இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி குறள்” என்று தன் பொட்டிக்கில் வைத்து குரளரசனுடன் பேசிக் கொண்டிருந்தாள் ரத்னா.

“ஹேய் இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி சொல்ற ரத்னா. உனக்கு எப்போதும் சிறந்த நண்பனா நான் இருப்பேன்” என்று அவன் சொல்லும் போதே, மேஜையில் இருந்த, அவனது கையைப் பற்றிய ரத்னா, “ரொம்ப நன்றி குறள்” என்றாள் நெகிழ்ச்சி கலந்த குரலில்.

‘இனி தான் இந்த ரத்னாவோட ஆட்டம் ஆரம்பம் வதனா. நீ எப்படி நல்லா இருக்கப்போறன்னு நானும் பார்க்கத் தானே போறேன்’ என்று மிகவும் வன்மமாக தன் மனதினுள் நினைத்துக் கொண்டாள் ரத்னா.