காதல் 5
அந்த பெண்ணின் அதட்டல் அவனைக் கோபப்படுத்தவில்லை. மாறாக வேடிக்கையாக இருந்தது. மேலும் அவள் ஏதோ சொல்லவும் அதனை கவனித்தான். “கோயிலுக்கு வந்தமா, சாமி கும்பிட்டமா என்று போகவேண்டியதுதானே. அதைவிட்டு நடுவழியில் நின்று ஃபோன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்.. விட்டால் கோயிலையே பட்டா எழுதி வாங்கிடுவார் போல.. ஹலோ சேர் போறிங்களா அங்கிட்டு” என்று படபடவென்று ஒரு மூச்சில் பேசி முடித்தாள்.
படபடவென பட்டாசாக வெடிக்கும் அவளை ஆராய்ந்து பார்த்தான். அவனது நெஞ்சளவே உயரமிருந்த அவள் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். இரட்டைப் பின்னல் பின்னி மல்லிகைச் சரம் சூடியிருந்தாள்.
'இந்தச் சிறு பெண் என்னவெல்லாம் பேசுது. நான் ஃபோன் பேசியது ஒரு குற்றமா? அதிலும் வெளிவீதியில் நின்றுதானே பேசினேன். இவள் என்னவோ நான் இந்தக் கோயிலையே எழுதி வாங்க வந்தவன் போல டீல் பண்ணுதே' என்று உள்ளூரக் குமைந்தவன்,
“இதோ பார் பாப்பா, நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல. இதோ இப்பவே..”
அவன் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தவள்,
“ ஹலோ ஹலோ, யார் இங்கு பாப்பா? நானா? நான் ஒன்னும் பாப்பா இல்லை. காலேஜ் போறனாக்கும்” என்று அறிவித்தாள்.
“ஓகே, ஓகே..சாரி பாப்பா… ஓ.. சாரி, சாரி மிஸ்… நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணல. நான் இப்பவே இங்கிருந்து போறேன். ஓகே” என்றுவிட்டு நகரப் போனான். அப்போது அவள் “அக்கா அவர் நகர்ந்திட்டார். நீ உன் வேண்டுதலைச் செய்து முடி.” என்று சொல்லவும்தான் அவன் திரும்பிப் பார்த்தான். அங்கே இன்னுமொரு பெண், கிட்டத்தட்ட அவனுடன் தர்க்கம் செய்த பெண்ணின் சாயலை ஒத்த பெண் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் அவன் புரிந்து கொண்டான், அவர்களின் பிரார்த்தனைக்குத் தான் இடையூறாக நின்றிருந்ததால்தான் அப்பெண் இந்தப் பேச்சு பேசியிருக்கென்று. மற்றைய பெண்ணிடமும் மன்னிப்பை வேண்டியவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். நடந்து சென்றவன் இடையில் ஏதோ தோன்றவும் திரும்பிப் பார்த்தான். அவளும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் பார்ப்பதைக் கண்டதும் வாயை சுழித்து விட்டு திரும்பிக் கொண்டாள். அதனைப் பார்த்ததும் மனதாரச் சிரித்துவிட்டு தன் காரை நோக்கி நடந்தான்.
தனது அடியழிக்கும் பிரார்த்தனையை முடித்துக் கொண்ட சுபாஷினி, தனது தங்கையை அழைத்துக் கொண்டு வெளியில் வந்ததும் திட்ட ஆரம்பித்தாள்.
“ஏன்டி உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? அந்த ஆளோட ஏன்டி வம்புக்கு போன? நம்ம நல்ல காலம் அவர் பேசாமல் போனார். அந்த நேரம் திரும்பி ஒரு அறை விட்டிருந்தா சுருண்டு போய் ஒரு மூலையில் கிடந்திருப்பாய்.”
“அடிச்சிடுவாரா எனக்கு…? அப்புறம் நான் சும்மா விடுவேனா?”
“கிழிச்சாய்… நம்ம வீட்டில் நடக்கிற அநியாயத்தையே ஒரு வார்த்தை கேட்கத் துப்பில்ல நமக்கு. சும்மா சிவனேன்னு நிக்கிறவர்கிட்ட போய் வம்பு வளர்க்கிறாய்?”
“நான் என்னக்கா பண்ண? எனக்கு சட்டென்று கோபம் வந்திடுது. அங்கே உனக்காக எல்லாவற்றையும் பொறுத்துப் போறன். இருவருக்கும் ஒரு நல்ல காலம் வரும். நீ யோசிக்காத அக்கா… நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதும் உன்ன நான் பார்த்துக்குவன்” என்று தன் தமக்கைக்கு ஆறுதல் சொன்னாள்.
“சரி வா நிஷா. நேரத்துக்கு வீட்டுக்குப் போகணும். உனக்கும் காலேஜுக்கு டைம் ஆகுது. அத்தையும் திட்டப் போறாங்க.” என்று கூறவும் எதுவும் பேசாமல் தமக்கையுடன் வீட்டிற்குச் சென்றாள்.
வீட்டிற்குள் நுழையும்போதே தனம் பெருங்குரலில் சத்தமிடுவது அவர்கள் காதைப் பிளந்தது. பயத்தில் தமக்கை தடுமாறுவதைக் கண்ட நிஷாந்தினி ஆதரவாக அவளது கைகளைப் பிடித்துக் கொண்டாள். தனம் வேறு யாருமல்ல. இவர்கள் இருவரினதும் அப்பாவின் தமக்கை. தற்போது சுபாஷினியின் மாமியார்.
இவர்களது பூர்வீகம் திருநெல்வேலியில் ஒரு கிராமம். நிஷாந்தினி பிறந்து ஒரு வருடத்திலேயே அவளது தந்தை இறந்துவிட்டார். தீராத குடிவெறியும் கெட்ட சகவாசமும் அவரைச் சிறு வயதிலேயே கொன்றது. சிறுவயதில் கணவரை இழந்த கௌரிக்கு உதவ யாருமே முன்வரவில்லை. இரு பெண்குழந்தைகளுடன் அநாதரவாக நின்றவர் தனக்குத் தெரிந்த தையலைத் தொழிலாக ஆரம்பித்து தன் பிள்ளைகளை ஆளாக்கினார். மூத்தவள் தனது படிப்பை இடையிலேயே நிறுத்தினாள். தனது தாயாருடன் சேர்ந்து தையலில் ஈடுபட்டாள்.
சுபாஷினிக்கு இருபது வயதாகும்போது திடீரென சொந்தம் கொண்டாடிக் கொண்டு வந்தார் தனம். தம்பி இறந்து அன்றைய நாள் காரியம் முடிந்ததும் புறப்பட்டவர்தான். பதினேழு வருடம் கழித்து வந்தார். கௌரியும் முகம் தோணாது வரவேற்று உபசரித்தார். இரண்டு நாட்கள் தங்கியவர் மூன்றாம் நாளே தான் வந்த காரியத்தில் கண்ணானார். தனது மகன் விக்னேஸ்வரனுக்கு சுபாஷினியைக் கல்யாணம் செய்து வைக்கக் கோரினார். கௌரி ஆரம்பத்தில் தயங்கியபோது நயமாகப் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார். அவரது மகன் வங்கியில் உதவி மானேஜர் என்பதால் கைநிறைய சம்பாதிக்கின்றான். எனவே சுபாஷினியை மகாராணி போல் வைத்திருப்பான் என்று ஆசை வார்த்தை கூறினார். அந்த ஏழைத் தாயும் தன் மகள் சிறப்பாக வாழ்வாள் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கு சம்மதித்தார். சம்மதம் கிடைத்ததும் அவசர அவசரமாகத் திருமணத்தை நடத்தி முடித்தார் தனம். திருமணமாகி மறுநாளே மணமக்களை அழைத்துக்கொண்டு சென்னை சென்று விட்டார்.
ஒருமாதம் கடந்த நிலையில் நிஷாந்தினி அக்காவைப் பார்க்க வேண்டும் என்று கூறவும் தாயும் மகளும் சென்னை சென்றனர். ராணி மாதிரி வாழும் மகளைக் காணச் சென்ற கௌரிக்கு நெஞ்சில் இடியே விழுந்தது. அங்கே அடிமையாக வாழ்ந்தாள் சுபாஷினி. அங்கங்கே கிழிந்ததை ஒட்டுப் போட்டு தைத்த புடவை ஜாக்கெட்டும் சாப்பாடின்றி ஒட்டி உலர்ந்த தோற்றமுமாக மகளைக் காணவும் ஓவென்று கதறி அழவே தோன்றியது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனத்திடம் கேட்கவும் “எனக்கு எந்த லாபமும் இல்லாமல் உன் மகளை என் பையனுக்குக் கட்டிவைக்க எனக்கு என்ன பைத்தியமா? வேலைக்காரி ஒருத்தியை சம்பளம் கொடுத்து வச்சிருக்க இந்தக் காலத்தில் முடியுமா? பிச்சைக்கார குடும்பத்தில் இருந்து வந்தவளுக்கு இதுவே அதிகம்” என்று விட்டார். அந்த வீட்டில் எல்லோருமே அவளை அடிமையாகவே நடத்தினர். அவளது கணவன் உட்பட.
அந்த ஏழைத் தாயால் எதுவுமே செய்ய முடியாத நிலை.
ஊருக்குச் சென்றவர் மகளை நினைத்து நினைத்து மனம் வெம்பி படுக்கையிலேயே விழுந்துவிட்டார். ஏற்கனவே பலவீனப்பட்டிருந்த அவரது இதயம் மேலும் தாக்கமடைந்தது. தன்னுடைய மற்றைய மகளைப் பற்றி யோசிக்க அவர் மறந்துவிட்டார்்.
ஆறு மாதங்களில் இந்த உலகத்தை விட்டே பிரிந்தார். நிஷாந்தினி ஆதரவுக்கு யாருமின்றி அநாதரவாக நின்றாள். காரியத்துக்கென வந்திருந்த தனம் குடும்பத்தினர் இன்னுமொரு வேலைக்காரி கிடைத்த சந்தோஷத்தில் அவளைத் தங்களுடனேயே அழைத்துச் சென்றனர்.
அந்த வீட்டில் எவ்வளவு துன்பப்பட்ட போதிலும் தன் தங்கையின் படிப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக நின்றாள் சுபாஷினி. இன்று வரை அதில் மட்டும் உறுதி குலையாமல் இருக்கின்றாள்.
இப்போது வீட்டிற்குள் அவர்கள் நுழைந்ததுமே தனத்தின் குரல் மேலும் ஓங்கியது. “வாங்கடி வாங்க.. மகாராணி கணக்கா மினுக்கிக் கொண்டு அக்காவும் தங்கச்சியும் எங்க எங்க ஊர் மேயப் போனிங்களோ. இங்கே போட்டது போட்டபடி அப்படியே எல்லாம் கிடக்குது. ஆடி அசைந்து வாறாள்கள்”
அவர் பக்கத்தில் அமர்ந்து தனது ல் நகங்களுக்கு நிறம் தீட்டிக் கொண்டிருந்த சஞ்யுக்தா “அம்மா என் ட்ரெஸ் கூட அயர்ன் பண்ணி வைக்கல. என் ரூம் கிளீன் பண்ணல. எல்லாம் அப்படியே கிடக்கு” என்று குற்றப் பத்திரிகை வாசித்தாள். நம் கதையில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் இவள். தனத்தின் மகள். பிளஸ் ரூவுடன் படிப்பு வரவில்லை. அதன் பிறகு அவளது முக்கியமான வேலையே தன்னை அழகுபடுத்துவதும், பணக்கார நண்பர்களாய் தேடிப்பிடித்து பழகுவதும் மட்டுமே. தான் ஒரு கோடிஸ்வரனையே திருமணம் செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள். அதற்காகவே அவள் பணக்காரர்கள் கூடும் இடங்களில் அதிக நேரத்தை செலவிடுவாள். தனமும் அதற்கு ஒத்து ஊதுவார்.
“உங்கள் இருவருக்கும் வெளியில அப்படி என்னதான் வேலையோ. போங்கடி போய் வேலையைப் பாருங்க. ஏய் சின்னக் கழுத. வழமைபோல வேலைக்கு டிமிக்கி கொடுத்துட்டு காலேஜுக்கு ஓடிடாத. சுதாட ரூமைக் கிளீன் பண்ணிட்டுத்தான் போகணும்.” என்று உத்தரவு போட்டார் தனம்.
சகோதரிகள் இருவரும் வழமைபோல செய்வதறியாது ஊமையாக நின்று தலையாட்டிவிட்டு உள்ளே சென்றனர்.