எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கள்வனின் கனவுகள் விமர்சனம்

#Nnk80

#கள்வனின்_கனவுகள்


வாவ்!!! வாவ்!!! ஆத்தரே எங்கயா இருகீங்க?? பின்னிட்டிங்க போங்கய்யா!!


வழக்காமான கதை களம் இல்லை!!! வித்தியாசமான முயற்சி அதுல நீங்க ஜெயிச்சுட்டீங்க!!!!


அனந்தன் தனக்கு வர்ற கனவுகளோட ஆரம்பிக்குது கதை. கதை முழுக்க அவனே அங்கங்க சொல்ற மாதிரி இருக்கு. பொதுவா இந்த மாதிரி கதையா இல்லாம ஒருத்தரே பேசிட்டு கதையை சொல்லுற மாதிரி இருந்தா நிச்சயம் அங்க கொஞ்சம் திருப்தி இல்லாத பீல் எரிச்சல் மனநிலை வரும் (எனக்கு).


ஆனா இந்த கதை என்னை அசையவே விடலை உங்க எழுத்து என்னை அதிகமாவே ஈர்த்துடுச்சு!!!!


சரி கதைக்கு வருவோம் அனந்தன் தனக்கு நடக்குறதை முன்கூட்டியே கனவா வருது (உடனே உங்களுக்கு அழகிய தமிழ் மகன் விஜய் கேரக்டர் வருமே!!பயப்படாதீங்க எனக்கு வந்துச்சு ஆனா அதுக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)


அனந்தனோட அம்மா ப்பா இறக்குறது அவனுக்கே முன்கூட்டியே தெரிஞ்சும் அவுங்களை காப்பாத்த முடியாத சுழல் அவனுக்கு. அதுக்கப்பறம் அவன் வந்து சேர்ற இடம் யாசோதா விஷ்ணு கிட்ட.


யசோதா விஷ்ணு அம்மா பையன் மெயின் திருடங்க!!!


இவுங்ககிட்ட வந்த அப்றம் அனந்தனோட வாழ்க்கை எப்புடி போச்சு??? அவன் கனவால அவனுக்கு என்னன்ன நடந்தது?? எல்லா கேள்விககும் விடை கதைல!


ஆர்வம் தாங்காம கடைசி பார்ட் படிச்சுட்டு முதல் பாகம் முற்றும்னு சொன்னதும் நிச்சயம் டிஸ்ஸாபாயிண்ட் ஆயிட்டேன். என்னடா இது கதையை முழுசா குடுக்கலையேன்னு!! ஆனா கதையை முழுசா படிச்சப்பிறகு நிச்சயம் என்னோட கருத்து தப்புன்னு உணர்ந்துட்டேன் ஏன்னா அவ்வளவு அழகா இன்னும் நிறைய கேள்விகளுக்கு விடை தெரியலனாலும் கதை முழைமையடைந்த திருப்தி.


ஒரு சின்ன சஜெஸ்ஸன் அடுத்தடுத்த சீன்ஸ் மாறுற போது *** இந்த சிம்பள் யூஸ் பண்ணியிருந்தீங்கன்னா ரீடர்ஸ்க்கு புரிய ஈசியா இருக்கும்.


பி‌‌.கு: நிச்சயம் இந்த கதை எல்லாரும் டிரை பண்ணுங்க. என் ஒரு வோட் நிச்சயம் இந்த கதைக்கு தான்!!!


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!
 
Top