ஒரு விஷயம் மறந்துட்ட , அவள் கல்யாணம் பண்ணறதே நம்ம ஆருயிர் தோழன் தான் என்பதை மறந்துறாத ”
என்றான் .
தன் சினத்தைக் கட்டுப்படுத்தியபடி .
இப்படித் தன் சினத்தையும் , பிடித்தமின்னமையும் வெளிப்படுத்தும் நண்பனிடம்
"எதுக்கு இந்தக் கோபம் உனக்கு , அவள் எனக்கு அத்தைப்பெண் மட்டுமல்ல, உன்னோட தங்கச்சி என்பதை மறந்து வார்த்தைகளை விடாதே சொல்லிட்டேன் , இந்தக் கல்யாணத்தில் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை..
அதே போல் அவங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை . அப்பறம் உனக்கு ஏன்டா இவ்வளவு கோபமும் டென்ஷனும். இது தேவையில்லாதது தருண் . இந்தக் கல்யாணம் நடக்கனும் சொல்லப் போனால். உனக்குத் தான் எதுவும் புரியவில்லை" என்றான் ஆழ்ந்த அமைதியான குரலில்
அதன் பேதம் உணர்ந்தவன்.
"அவள் வேற ஒருத்தனைக் காதலிக்கிறேன் சொல்லி , இந்தக் கல்யாணம் நிறுத்தி இருந்தால் கூட எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது , வேண்டாம் சொன்னது கூட ஒகே தான் டா ,ஆனால் அதுக்கு ஒரு காரணம் சொன்னாப்பாரு அது தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கதிர் ".
இதைக் கேட்டதும் " ஓ, அது தான் உனக்கு இவ்வளவு கோபமா ? " . என்றவாறே சத்தமாகச் சிரித்தான் கதிர் வேந்தன் .
" விடுடா மச்சான் பார்த்துக்கலாம்" என்றவனை.
"எப்படி , கல்யாணம் பண்ணி ஹனிமூன் எங்கே போறாங்க என்பதையா " . என்ற தருணிண் குரலில் எரிச்சல் நிறைந்திருந்தது .
அதைக் கேட்டதும் கதிருக்குத் பழைய நினைவுகள் மெல்ல ஆனந்த ராகம் மீட்டியதில் அவன் மனக்கண்ணில் 'கலைந்த உடையோடு, தன் உணர்வுகளை ஏற்க முடியாமல், கண்களில் நீரோடு தன்னிடம் போராடியவளின் உருவம் தோன்றியது.
அவனிடம் எதிர்த்து அவள் போராடிய விதம் , அவனுக்கான கூடலின் அழைப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அவளின் நிலையை உணர்ந்து இதழில் புன்னகையோடு அவளை விட்டவனிடம் அவள் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்னும் காதில் எதிரொலிக்கிறது.
'இதற்குத் தானடி இத்தனை நாளாகக் காத்திருந்தேன் . இனி என்னிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்' என முணு முணுத்தவன் செயலில்.
"என்னடா , எதாவது ப்ளான் இருக்கோ கல்யாணத்தை நிறுத்த "என்றான் தருண் .
இவன் வேற, என்று மனதில் நினைத்தவன் "ஏன்டா நீ " என்றபடி "நாம நாளைக்குக்கிளம்பறோம் அவ்வளவுதான்" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் கதிர் வேந்தன் .
மனதில் பல எண்ணங்களின் அலை மோத நாளைய விடியலுக்காகக் காத்திருந்தான் நம் நாயகன் கதிர்வேந்தன்
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குவது காதல் .
அவனைப் புதிய மனிதனாக உருவாக்கியது அவளும், மனதில் அவளுக்கான காதலும் தான். அவளின் நினைவுகள் மனதில் வலம் வரவும் , குற்றாலச்சாரல் போல் தோன்றிய , சில்லென்ற உணர்வுகளை அனுபவித்தவாறே , தன் இடபக்க மார்பைத் தடவியவன் , ' என்னை நியாபகம் இருக்குமாடி உனக்கு ?, மறந்து இருக்க வாய்ப்பில்லை தான், நமக்குள் நடந்த விஷயம் அப்படி , இல்லை என்னிடம் சொன்னது போல அந்த விஷயத்தையும் மறந்து இருப்பியோ' என்று தனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டவன் , பின் மெதுவாக அதற்கான பதிலாக , 'அதெப்படி மறப்பாய்' என்ற புன்னகையோடு படுக்கையில் அவள் நினைவுகளோடு புரண்டான். கண்களிலிருந்து உறக்கம் விலகிச்செல்ல, காதல் மயக்கம் அவனை ஆட்கொண்டது.

Last edited: