chitrasaraswathi
Member
நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK67 ன் பாற்கரனில் உருகும் பார்தவியே எனது பார்வையில். சங்கரன் வசந்தி தம்பதிகளின் மூத்த மகள் மிதிலா இரண்டாவது பெண் பவித்ரா. சங்கரனின் அம்மா வேதவள்ளிக்கு இரண்டாம் பெண் பவித்ராவை மட்டுமே பிடிக்கும். மிதிலாவை கண்டால் கரித்துக் கொட்டுவார். பெரிய தொழில் அதிபரான ரிஷியை சில முறை சந்திக்கும் மிதிலா அவனை விரும்புகிறாள். ஆனால் நண்பனைத் தவிர வேறு உறவுகள் இல்லாமல் வாழும் ரிஷி அவளை விரும்பினாலும் உறவுகளுடன் வாழும் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறான்.
வேத வள்ளி மூலம் மிதிலா பெற்றோர் யார் என்று தெரியாதவள் என்பது வெளியே வருவதால் பவித்ராவின் திருமணம் முதலில் நடக்க ஏற்பாடு செய்ய மாப்பிள்ளையின் உறவினருக்கு மிதிலாவைத் திருமணம் செய்ய முடிவாகிறது. மிதிலாவின் வாழ்க்கை வேதவள்ளியால் மாற்றம் அடைந்ததா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். வாழ்த்துகள்.