பிரபலமான அந்த மல்டி ஸ்பெஷல் மருத்துவமனையை சுற்றி மழைச்சாரல்கள் மணல் துகள்கள் போல சிதறிக் கொண்டிருக்க மருத்துவமனையின் உள்ளே அடை மழை போல் தன் அப்பாவிடம் கத்திக் கொண்டிருந்தான் நம் நாயகன், உடன் பணி புரிபவர்களால் அஜ்ஜூ என்று அழைக்கப்படும் அர்ஜுன்.
" அப்பாஆஆஆஆ, அம்மாவுக்கு நெஞ்சு வலின்னு சொன்னதால வேலைல இருந்து பதறி அடிச்சு ஓடி வந்திருக்கேன்."
" நீ என்னன்னா என்னை இங்க சைக்காடிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் போய் பாருங்கற."
"லூசாப்பா நீ? உனக்கு பிள்ளையா பிறந்ததுக்காக என்னையும் பைத்தியம்னே நெனச்சிட்டியா?"
"டேய் மகனே முப்பது வயசுக்கு மேல ஆகியும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க"
"இதுக்கு உன்ன வேற டாக்டர் கிட்ட தான் காட்டணு......"
"யோவ் தகப்பா."
" அட இருடா, அப்படி செஞ்சா பத்து குழந்தை பெத்த என் தாத்தன் பரம்பரைக்கே கேவலம், அதனாலதா உன்ன இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்."
"அதுக்குன்னு சைக்காடிஸ்ட் கிட்டயா கூட்டிட்டு வருவ?"
"அட இது உங்க அம்மா ஏற்பாடு டா"
"ஒருவேளை நீ இதுக்கு ஒத்துக்கலன்னா, அப்பனும் புள்ளையும் வீட்டுப் பக்கமே வந்துடாதீங்கன்னு விரட்டி விட்டுட்டா டா."
"என்னால எல்லாம் உள்ள போக முடியாது போப்பா."
"டேய் டேய் என் தங்கம் இல்ல, வயசான காலத்துல என்னால வீதியில எல்லாம் தங்க முடியாது டா . இந்த அப்பாவுக்காக ஒரே ஒரு தடவை போயிட்டு வாடா. என் ராஜா இல்ல."
அர்ஜுன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே
"போய் தொலையறேன். ஆனா இந்த ஒரு தடவை மட்டும் தான்"
" சரிப்பா, அடுத்து இந்த மாதிரி எதுவும் நடக்காம நான் பாத்துக்குறேன். இதோ உன்னை தான் கூப்பிடுறாங்க உள்ள போ நான் வெளியவே இருக்கேன்."
தன் தந்தையை முறைத்துக் கொண்டே கதவைத் தட்டி அனுமதி பெற்று கொண்டு உள்ளே சென்றான்
உள்ளே டாக்டர் உடையுடன் எளிமையின் உருவமாக அப்பழுக்கில்லா தேவதையாக புன்னகை முகத்துடன் அவனை வரவேற்றாள் வைஷ்ணவி தேவி.
"வாங்க உள்ள வாங்க ப்ளீஸ் டேக் யுவர் சீட்."
சிறிது சங்கடத்துடன் தான் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்
" ஏன் சார் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க ,பி ப்ரீ."
"எப்படி மத்த டாக்டர் கிட்ட உங்க உடம்புல உள்ள பாதிப்புகளை சொல்லி குணப்படுத்திகறீங்களோ, அதுபோலத்தான் உங்க மனசுல ஏற்படற பாதிப்புக்கு எங்களால முடிஞ்ச சொல்யூஷன்ஸ் கொடுக்கிறோம் அவ்வளவுதான்."
" என்னை டாக்டரா பாக்காம ஒரு பிரண்டா பாருங்க. இப்ப சைக்காடிஸ் கிட்ட வர்றதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. உங்க மன அழுத்தத்தை குறைக்கிறது தான் எங்க வேலை."
"சாரி மேடம் திடீர்னு வீட்ல இப்படி ஏற்பாடு பண்ணிட்டாங்க அதுதான் கொஞ்சம்..... அதுக்காக உங்க வேலைய பத்தி எல்லாம் நான் எதுவும் தப்பா நினைக்கல."
"ஓகே, மிஸ்டர் அர்ஜுன் உங்க பேரன்ட்ஸ் உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க. அதுல ஒரு விஷயம் பத்தி நீங்க கிளியரா சொல்ல முடியுமா"
" நீங்க மழை காலத்துல தனியா உங்களோடவே பேசுவீங்களாமே உண்மையா?"
"தனியா எல்லாம் இல்லைங்க என் ஃப்ரெண்டோட பேசுவேன்."
" ஃப்ரெண்டா? அது யாரு? பட் உங்க பேரன்ட்ஸ் நீங்க தனியா பேசறதா சொல்றாங்க? ஒரு வேலை கண்ணுக்கு தெரியாத ஃப்ரெண்டோ?
"அது எல்லாம் கண்ணுக்கு தெரியிற பிரண்டு தான்."
"அப்படியா யாரது? என்னங்க மேல கைய காட்றீங்க? கடவுளா இல்ல பேயா?"
"மழைய தாங்க சொன்ன."
"இத பத்தி சொல்லனும்னா ஒரு பிளாஷ்பேக் போகணும் நீங்க ரெடியா, அச்சோ முறைக்காதீங்க மேடம் பிளாஷ்பேக் கேட்கறதுக்கு நீங்க ரெடியான்னு தான் கேட்டேன்."
" நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது, என் பாட்டி மழை வரும்போது, இடி சத்தத்தை கேட்டால் பயப்படாம இருக்க, அர்ஜுனா அர்ஜுனான்னு சொல்ல சொல்லுவாங்க."
" அது ஏன்னு என் பாட்டிகிட்ட நான் கேட்டா, மழையோட பிரண்டு பேரு அர்ஜுனா, அதனால அந்த பேர சொன்னா இடி நம்மள ஒன்னும் பண்ணாதுன்னு சொன்னாங்க."
"அந்த சின்ன வயசுல நமக்கு என்னங்க தெரியும், அப்ப என் பேரும் அர்ஜுன் தானே நானும் மழைக்கு பிரண்டா இருக்கிறேன்னு சொல்லி அப்ப இருந்து மழையோட பேச ஆரம்பிச்சேன்."
"நான் எங்க வீட்டில ஒரே பையங்க. நான் பிறக்கும்போது அம்மாக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டேனாம்."
" அதனால எங்க அப்பா என்னோட போதும்முன்னு நிறுத்திட்டாரு. எங்க அம்மா மேல அவ்வளவு லவ்வு."
" நான் வளர்ந்ததும் யார் கூட என்னோட பீலிங்ஸ் ஷேர் பண்ணிக்கறதுன்னு தெரியல ."
"என் பிரண்ட்ஸ்ங்க எல்லாம் அவங்க கூடப்பிறந்தவர்களோட அதை எல்லாம் ஷேர் பண்ணும் போது நான், மழை நண்பனோட என் எல்லா ஃபீலிங்ஸையும் ஷேர் பண்ணிக்க ஆரம்பிச்சேன்."
வைஷ்ணவியின் கண்களில் சுவாரசியம் கூடியது.
"ம்ம்ம்,அப்புறம்?"
"அப்புறம் என்னங்க அதுவே இன்னும் தொடர்ந்துட்டு வருது அவ்வளவுதான் கதை முடிஞ்சு போச்சு."
அவன் சொன்ன தொனியில் வைஷ்ணவி சிரித்து விட்டால் முத்து பற்கள் மின்ன தேவதையாய் சிரிக்கும் இவளை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் அர்ஜுன்.
"ஏன் நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க? யாரையாச்சும் லவ் பண்றீங்களா?"
"லவ்வா? அதெல்லாம் எனக்கு செட்டே ஆகலங்க."
" செட்டாகலையா அப்போ ட்ரை பண்ணி பார்த்து இருக்கீங்க,ம்ம்ம் சொல்லுங்க அடுத்து உங்க லவ் ஸ்டோரிய."
"நான் ஸ்கூல் படிக்கும் போது அமுதான்னு ஒரு பொண்ண லவ் பண்ணேங்க."
"அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு. அவளுக்காகவே அவ டியூஷன்ல நான் போய் சேர்ந்தேங்க".
"ஒரு நாள் நான்,என் பிரண்டு, அவ எல்லாரும் ஒரே டெஸ்க்குல டெஸ்ட் எழுத உக்கார்ந்தோம்."
"இதுதான் நல்ல சான்ஸ்னு, ஐ லவ் யூ ன்னு ஒரு பேப்பர்ல எழுதி என் பிரண்டு மூலமா அவளுக்கு பாஸ் பண்ணுனேன். அடுத்த நாள் பிப்ரவரி 14 அவளோட சேர்ந்து செலிப்ரேட் பண்ணலாம்னு."
"ஆனா அடுத்த நாள் அவளும் என் பிரண்டும் தான் ஒண்ணா செலிப்ரேட் பண்ணாங்க."
"என்னங்க சொல்றீங்க?"
"அட ஆமாங்க நான் அந்த பேப்பர்ல ஐ லவ் யூ ன்னு மட்டும் தான் எழுதி இருந்தேன், என் பேரை எழுதவே இல்ல."
" சோ என் ஃப்ரெண்டு தா இந்த லெட்டரை கொடுத்ததா அந்த பொண்ணு நினைச்சிடுச்சு."
"அய்யய்யோ அப்புறம்?"
"அப்புறம் என்ன இந்த பொண்ணு உனக்கு ஏத்த அல்லிராணி இல்லடா அர்ஜுனான்னு அந்தப் பொண்ணையும் பத்தோட பதினொன்னா என்னோட தங்கச்சி லிஸ்ட்ல சேத்துகிட்டேன்."
"ஏங்க அதெல்லாம் பப்பி லவ்ங்க. அதோட இந்த காதல்ல மீடியேட்டரே இருக்கக் கூடாது. எதுவானாலும் ஸ்ட்ரைட்டா அந்த பொண்ணுகிட்டயே சொல்லி இருக்கணும் நீங்க"
"அப்படி தாங்க நானும் நெனச்சு ஒர்க் பண்ற இடத்துல புதுசா வந்த ஒரு பொண்ண லவ் பண்ணி, அவகிட்ட ஸ்ட்ரைட்டா நானே என் வாயால லவ்வ சொல்லலாம்னு, டைரி மில்க் சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு அவளை பார்க்க அவ வீட்டுக்கு போனேங்க"
வைஷ்ணவி அதிர்ச்சியில் உறைந்திருந்த தன்னை சுதரித்துக்கொண்டு அவனிடம் பேசினால்
" ஹம்ம்ம் அடுத்த காதலி பேர் என்னவோ?"
"ஷப்னாங்க நார்த் இந்தியன் பட் தமிழ் நல்லா தெரியும்."
" ம்ம்ம், அப்பறம் மேல சொல்லுங்க?"
" நான் போய் காலிங் பெல் அழுத்தினதும் அவதாங்க வந்து கதவ திறந்தா."
"நான் தைரியத்தை வரவழைச்சுட்டு அவகிட்ட ஐ ன்னு ஆரம்பிக்கும் போது உள்ள இருந்து ஒரு குழந்தை ஓடி வந்து அம்மான்னு சொல்லி அவ கால கட்டி பிடிச்சிதுங்க."
" இந்த குழந்தை யாருதுன்னு கேட்டதுக்கு என்னோட குழந்தை தான்னு சொன்னாங்க ஷப்னா."
"அப்போ அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
" இதே கேள்வியை தாங்க நானும் அவகிட்ட கேட்டேன் ஆனா அவ போடா லூசு கல்யாணம் ஆகாம குழந்தை எப்படி வரும்னு சொல்லிட்டு என்ன பாத்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க."
" அப்புறம் வேற என்ன பண்ண அந்த சாக்லேட்ட அந்த குழந்தை கையில கொடுத்துட்டு நான் அப்படியே திரும்பி வந்துட்டாங்க."
வைஷ்ணவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை கஷ்டப்பட்டு இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தால் பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு
"சரி உங்களுக்குத்தான் லவ் மேரேஜ் செட் ஆகலையே அரேஞ்ச் மேரேஜ் ட்ரை பண்ணலாம் இல்ல, அதுக்கு ஏன் கல்யாணமே வேண்டாமுன்னு சொல்றீங்க?"
"ஐயோ நா கல்யாணம் வேண்டாம்னு சொல்லலைங்க, கல்யாணம் தான் என்னை வேண்டாம்னு பின்னங்கால் பிடரியில பட ஓடிக்கிட்டு இருக்கு."
"புரியலையே?"
"அதெல்லாம் நிறைய பொண்ணுங்க வீட்டுக்கு போய் பஜ்ஜி சுச்சி எல்லாம் சாப்பிட்டாச்சுங்க ஒன்னும் ஒர்க்அவுட் ஆகல. எல்லா பொண்ணுங்களும் சொல்ற ஒரே பதில் நோ மட்டும் தான்"
"ஏன்? எதனால?"
"மோஸ்ட்லி எல்லாரும் என் வேலையை காரணமா வச்சு தான் நோ சொன்னாங்க."
" நான் ஒரு அகழ்வாராய்ச்சியாளர் இது சில பேருக்கு பிடிக்கல சில பேர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணல."
" அவங்களுக்காக என்னோட வேலைய மாத்திக்க முடியாது. இது என்னோட லட்சியம்,சின்ன வயசுல இருந்து எனக்குள்ள நான் கட்டுன கனவு கோட்டை."
"மத்தவங்களுக்காக என் வாழ்க்கையோட உயிர்ப்ப இழக்க முடியுமாங்க?"
"பட் ரீசண்டா ஒரு பொண்ண பார்த்து அவங்கள நீங்க தான் வேண்டான்னு சொன்னீங்கலாமே?"
"அந்தப் பொண்ணு என்ன விட பத்து பதினோரு வயசு சின்னப் பொண்ணுங்க.இத எதிர்த்து கேள்வி கேட்டா எல்லாரும் என்னை வித்தியாசமான பார்க்கறாங்க இது எல்லாம் ஒரு விஷயமான்னு."
"அந்த பொண்ணு முப்பது வயச தொடும் போது நா அரை கிழவன் ஆயிடுவங்க"
"அவங்க குடும்ப சூழ்நிலைய பயன்படுத்தி குழந்தை திருமணம் பன்ற மாறிதாங்க எனக்கு தோனிச்சு."
"அந்த பொண்ண என்னால பொண்டாட்டியா நினைச்சு கூட பார்க்க முடியலங்க."
"அதனாலதான் எங்க அம்மா பேச்சையும் மீறி கல்யாணத்தை நிறுத்தினேன்."
"சரிரிரிரி என்ன பார்க்கும்போது உங்களுக்கு எப்படி தோணுது."
"டாக்டர் நீங்க ஏதோ சொல்லறீங்க அது என் காதுல தப்பா கேக்குது."
"காது சரியா தான் வேலை பாக்குது. உங்க மூளை தான், வேலையே பாக்க மாட்டேங்குது."
அப்போது அர்ஜுனுக்கு தன் அன்னையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அவன் அதை ஏற்கும் முன்பே வைஷ்ணவி அவன் தொலைபேசியை பறித்துக்கொண்டாள்.
"ஏங்க ஏங்க என்னங்க பண்றீங்க, அச்சோ ஆன் பண்ணிராதீங்க, போச்சு இன்னைக்கு விளக்கமாத்து அடி கன்ஃபார்ம்."
அவள் சிரித்துக் கொண்டே தொலைபேசியை ஆன் செய்தால்
"ஹலோ அத்தை நான் வைஷ்ணவி பேசுறேன்."
"எது அத்தையா?"
"முதல்ல உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் அத்தை. என்னோட பிஸி ஷெட்யூல் தெரிஞ்சுகிட்டு ஹாஸ்பிடல்லையே பொண்ணு பாக்குற பங்க்ஷன் வச்சதுக்கு."
"எதே பொண்ணு பாக்குற ஃபங்ஷனா?தகப்பாஆஆஆஆஆ இரு உன்ன வந்து பேசிக்கிறேன்."
"எனக்கு உங்க பையன ரொம்ப பிடிச்சிருக்கு."
அவளின் இந்த ஒரு வார்த்தையிலேயே அர்ஜுனின் உடல் மட்டும் இங்கு இருக்க, மனதானது பூமியிலிருந்து வானை நோக்கி சிறகில்லாமல் பறக்க ஆரம்பித்தது.
மறுபுறம் தொலைபேசி இணைப்பில் இருந்த அர்ஜுனின் தாய் மகிழ்ச்சியுடன் தொலைபேசியை வைத்துவிட்டு நாள் குறிக்க ஜோசியர் வீடு நோக்கி செல்ல என்று கல்யாண வேலையில் மும்மரமானார்.
"அத்தை எனக்கு என்னவோ உங்க புள்ளைக்கு என்னை புடிக்கலைன்னு நினைக்கிறேன்."
"அவருக்கு பிடிக்காத கல்யாணத்தை வற்புறுத்தி நாம செய்ய வேண்டாம். விட்டுடுங்க."
அவ்வளவுதான்,.. ஏர்ல டிராவல் ஆயிட்டு இருந்த அர்ஜுன், ஹாஸ்பிடல் ரூம்குள்ள வந்து விழுந்தான்.
அவளிடமிருந்து தொலைபேசியை பிடுங்கிக் கொண்டு, கத்த தொடங்கினான்.
" அய்யய்யோ, அம்மா,.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்கு இவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.
ஹலோ...... ஹலோ அம்மா, நான் பேசுறது கேக்குதா?"
தொலைபேசியை உற்றுப் பார்த்த போது தான் தெரிந்தது அது இணைப்பில் இல்லாதது.
அவள் கலகலவென்று என்று சிரிக்க இவன் அசடு வழிந்து கொண்டு நின்றான் அவள் முன்.
"எந்த ஊர்ல டாக்டர்ஸ் உங்களுக்கு இவ்வளவு நேரம் உட்கார்ந்து கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க."
" என்னோட அப்பா உங்க அம்மாக்கு தூரத்து சொந்தம். உங்க வீட்டிலிருந்து மேரேஜ் ப்ரோபோசல் வந்துச்சு,இஷ்டம் இல்லாம தான் உங்கள பாக்க ஒத்துக்கிட்டேன். ஆனா எனக்கு நெஜமாவே உங்களை பிடிச்சிருக்கு."
"ஏங்க நிஜமா தான் சொல்றீங்களா?இது ஒன்னும் பிராங்க் ஷோ கிடையாதே?சுத்தி எங்கயும் கேமரா ஒளிச்சுவச்சிருகீங்களா? "
"யோவ் இவ்வளவு தூரம் ஒரு பொண்ணு நானே இறங்கி வந்து பிடிச்சிருக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன்."
" இதுக்கும் மேலயும் கேள்வியா கேட்டு கொன்னுட்டு இருக்க."
" நீ எல்லாம் கடைசி வரைக்கும் சிங்கிள் தான் இந்த ஜென்மத்துல மிங்கிள் ஆகவே முடியாது."
" நீ எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டய்யா நீ அதுக்கு சரிபட்டே வரமாட்ட, போ போய் உன் பிரண்டு கிட்டயே கேளு போ."
அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட இவன் பின்னாலே சென்றான் அவளை சமாதானப்படுத்திக் கொண்டு.
மணமேடைதனில் பட்டு வேஷ்டி பட்டு சட்டை சகிதம் மாப்பிள்ளை தோரணையில் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
அவன் பக்கத்தில் மணப்பெண்ணாக முகம் கொள்ளா புன்னகையுடன் நாணம் போட்டியிட தேவதையாக அமர்ந்திருந்தால் வைஷ்ணவி தேவி.
தேவியவள் தம், மனங்கவர்ந்த மன்னவன் திருகரங்களால், பொன் தாலிதனை சொந்தங்கள் புடை சூழ கழுத்தினால் பூட்டிக் கொண்டால்.
அர்ஜுன் இந்த அல்லிராணியை தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான்.
தன் உயிர் தோழனின் திருமணத்தில் இடி மின்னலுடன் வந்து, மழை துளிகள் என்னும் பூக்களை பூமிதனில் தூவி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார் மழை தேவன்.