எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - [email protected]

மிஞ்சியின் முத்தங்கள்

NNK 101

Moderator
#NNK101_review
மிஞ்சியின் முத்தங்கள்
#nnk50
என் மூன்றாவது review இன்னும் 56 ஸ்டோரீஸ் இருக்கு அதில் குடும்ப அரசியல் எத்தனை என்று தெரியல
பிகாஸ் குடும்ப அரசியல் நோ நோ
பிறகு பொங்கிருவேன்
அப்படியே அநோநியம்ஸ் போஸ்ட்க்கு காரணம் சொல்றேன். என் கதை தான் பேமஸ் ஆகல ரெவியூஸ் ஆவது அந்த நம்பரில் பேமஸ் ஆகட்டும் என்றுதான்
வழமை போல் மைனஸ் பெர்ஸ்ட்
ஏபிஸ் தனிதனியா போட்டிருக்கிறது பொல்லொவ் இல்லமால் செய்யுது,
முருகேசனுடன் ஆதிலட்சுமி சென்றதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, அவனும் அவன் உருப்படாத காரணமும் அவனுடன் சேர்த்து உங்களையும் மொட்டைமாடியில் இருந்து தள்ளிவிடனும்
அதிவீரன் அப்பா அந்த பாத்திரம் மட்டும் எனக்குப் பிடிக்கவேயில்லை. ஆணோ பெண்ணோ யாராய் இருந்தாலும் உறவில் சீட்டிங் தப்பு ஆனால் கடைசியில் தனியாய் தள்ளிவிட்டதால் மன்னித்து விடுகின்றேன்.
😤


அப்படியே அந்த இரண்டாவது மனைவியையும் எங்காவது பாலத்தில் வைத்து தள்ளி விட்டிருக்கலாம். இன்னொருத்தி கணவன் என்று தெரிந்தும் அவருடன் சேர்ந்து இருந்தாள் இல்லையா.

அதே போல் நிர்மலா ஆதவன் நிலை அடுத்தவர் சொத்தைக் களவடினால் இது தான் நிலை என்பதையும் அழகாய் சொல்லி இருக்கீன்றீர்கள்.

கொடிமலர் - அன்பான தங்கை, இனிமையான பெண், அண்ணனுக்கு பெண் பார்க்க போய் விழிப்பதும் அழுவதும் அழகு.
❤

அதிவீரன் - கிராமத்தில் சுற்றித் திரியும் கட்டிளம் காளை, வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இளைய தலைமுறையின் பிரதி பிம்பம், மும்பை சென்று பணம் கொடுத்தது. சொந்த வீடு கட்டும் வரை தள்ளியிருந்தது என மனதை கொள்ளையடிக்கின்றான்.
❤


பார்த்திபன் - நல்ல தாய் மாமன், நல்ல மனிதர், இந்த அதிவீரன் ஏன் அவரைத் தடுத்தான். அதிவீரன் அடித்ததை விட தாய் மாமன் அடித்தாக காட்டியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்.

கொடி மலர் குடும்பம் சூப்பர் குடும்பம், உறவுகளின்றி இருந்த அதிவீரனுக்கு உறவாய் வந்தவர்கள்
🤗

ஆதவன் நிர்மலா - சுயநலத்தின் பிரதிபிம்பங்கள்

அதிவீரன் அம்மா: சுப்பர் லேடி, அப்பாவியாய் நிறைய சகித்துக் கொண்டாலும் கடைசியில் தாலியை கழட்டியது அருமை
🤗

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் வீட்டிற்கு வந்ததும் தாய் மடி தேடுவது, மனைவியுடன் பேச சந்தர்ப்பம் தேடுவது தான் வாழ்கையின் நிஜம்
சமூகத்தில் இருக்கும் மனிதர்கள், அவர்களிடையே நடக்கும் நிகழ்வுகளை அழகாய் எழுதி இருக்கீன்றீர்கள். கதை நகர்வு அருமை
❤

கொடி அதிவீரன் காதல் அழகோ அழகு
❤

வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
❤
❤
❤
❤
 
Top