எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இடம்பகனின் இதி

NNK 101

Moderator
#NNK
#நிலாக்காலம்
#நறுமுகை
#இடம்பகனின்_இதி
#nnk22
#nnk101_review
குடிகார கணவன் இறந்து விட சூளும் சொந்தங்களில் சிலர் துணை நிற்க சிலர் சதி புரிய தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் இன்ஷித் இலஞ்சிதா கழுத்தில் தாலி கட்டுகின்றான்... ஏன் எப்படி எதனால் என்பது கதையில்...
அழகான கருத்து நிறைந்த
அழகான கதை
அன்றாட வாழ்வின் நிதர்சனங்களின் அடிப்படையில் கதை நகர்ந்து செல்கின்றது.
கதையை பற்றி எந்த மைனஸ் point சொல்லவும் விருப்பமில்லை. பட் சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றுது.
நிறைய இடத்தில் எழுத்துப் பிழை கதையின் போக்கை தடுக்குது. வசன அமைப்பு எழுவாய், வினை முற்றுக்கள் சரியா முடியாத feel. பேய் கதை என்ற ஃபீல் குறைவு.
பாத்திரங்கள் அதிகமாய் இருந்தாலும் நகர்த்தியிருக்கும் விதம் அழகாய் அமைந்து இருக்கு. சில இடங்களில் பாத்திரங்கள் தீடிரென்று முளைத்த உணர்வு.
நிச்சயமாய் வெற்றிக் கதைதான்.
குடிகார கணவன் அதனால் விளையும் தீமைகள் அனைத்தும் சொல்லியிருக்கும் விதம் சூப்பர்.
👏
👏
👏
அதிலும் மாமனார் மாமியார் மருமகளுக்கு support கொடுக்கிறது. உலகத்தில் கெட்டவர்கள் மட்டும் இல்லை நல்லவர்களும் உண்டு என்பதை சுட்டிக் காட்டி இருப்பதை போலிருக்கு. அதோடு மறுதிருமணம் என்றால் அவனவரும் எதிர்ப்பார்கள் என்பது போலில்லாமல் ஆதரிக்கவும் நபர்கள் உண்டு உண்மைதான்.
❤
❤
❤

இலஞ்சிதா அவள் உரிமைக்காக போராட தான் வேண்டும் பெண்ணுக்கு தாய் வீடு கணவன் இரண்டிலும் உரிமை உண்டு என்பது என் எண்ணம்.
😎
😎

இந்த இன்ஷித் சரியான அவசரக் குடுக்கையா இருக்கிறானே...
😳
😳

சில இடங்களில் சிரிக்க சில இடங்களில் வியக்க வைக்கிறான்.
❤
❤
❤

அது சரி ஒரு பெண் கழுத்தில் தாலி கட்டும் போது அவளின் சம்மதம் முக்கியமில்லையா ஸ்டு*பிட் உன் இஷ்டத்துக்கு கட்டுற.
இவனும் ஆன்டி ஹீரோவே.
இன்பா தன் பிழைகளை உணர்ந்த தருணம் அழகு
❤
❤
அதிலும் அந்த நடுக்கம் ஒவ்வொரு பெண்ணும் எதிர் கொள்வது
😔
😔

குழந்தைகள் ஊடாக உறவைப் பலபடுத்திய விதம் அருமை. உண்மையில் பெண்கள் தற்காப்பு கலை பயிலதான் வேண்டும்.
இரிகா இதினாவின் தயக்கம் முற்றிலும் உண்மை தந்தை குடிகாரனாய் இருந்தால் குழந்தைகளின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கு எழுத்தாளரின் எழுத்து வாழ்த்துக்கள்.
👏
👏

திருந்தியவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் தான் ஆனால் மன்னிப்பு என்பது அத்தனை இலகுவாக கிடைக்க கூடாது என்பது என் கருத்து அதுவும் தவறுகளின் அளவு பெரிதாய் இருக்கும் போது
அழகான முத்துகளை கோர்த்து அழகனா மாலை இடையிடையே சில முடிச்சுக்களுடன்...
வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்
 
Top