மதுரை ராஜூ
Moderator
இதுவரை ஆல்பா…
3050ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் மணி தன்னுடன் பணிபுரியும் சக ஆராய்ச்சியாளர் மேகலாவிடம் தன் காதலை தெரியப்படுத்த அவளும் ஏற்றுக் கொள்கின்றாள். மணி ஏதோ சொல்ல மேகலா இடைமறித்து பேசும் முன் ரஷ்ய ஆராய்ச்சியாளர் டேவ் உள்ளே நுழைகின்றார். இனி……
அரசியல் ஆல்பா (1)… பாகம் 10
“ மன்னிக்கவும், நீங்க இரண்டு பேரும் முக்கியமா ஏதாவது பேசிகிட்டு இருக்கும் போது நான் தொந்தரவு பண்ணிட்டேனா?”
டேவின் குரல் கேட்டதும் மணியும் மேகலாவும் நிதானத்துக்கு வந்தார்கள். இருவரின் முக மாற்றத்தைக் கண்ட டேவ் மீண்டும் கேட்டார்.
” திடீரென மல்கோத்ரா கூப்பிட்டதனால நான் அவசரத்துல என்னோட பிட் கருவியை மறந்து வச்சிட்டு போயிட்டேன். அதனால்தான் நான் திரும்ப வந்தேன். நீங்க ஏதுவும் அந்த கருவியை வைச்சு புதிசா ஏதும் கண்டு பிடிச்சிங்களா ? இரண்டு பேர் முகங்களும் கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கே !”
அப்பொழுதுதான் மேகலா கவனித்தாள். டேவ் விட்டுச் சென்ற பிட் கருவி அநாதையாக கிடந்தததை. மணியும் கவனித்தான்.
” டேவ் சார் நீங்க விட்டுப் போன கருவியை மறக்கற அளவுக்கு இங்க அதை விட முக்கியமான வேலை போய்கிட்டு இருக்கு”
மணி சொன்னதைக் கேட்டு மேகலாதடுமாறினாள். . பின் மணியைப் பார்த்து கோபித்து ஏதும் சொல்ல வேண்டாம் என கண்ணால் ஜாடைக் காட்டினாள்.
மணி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“எது எதுவோ கண்டுபிடிக்க சொல்றாங்க. இந்த பொண்ணுக கண்ணால பேசற மொழியை கண்டுபிடிக்க சொல்றாகளா ?”
”காதல் கண்ணை மறைக்கும்தான், அதுக்காக டேவ் விட்டுப் போன கருவியை கூட கவனிக்காம நாம இருந்திருக்கிறோம். சே ! காய்ச்சலை விட மோசமான வியாதி இந்தக் காதல் இருக்கும் போல…” மேகலா தனக்குள் நினைத்து நொந்துக் கொண்டாள்
டேவ் தனக்குள் சிரித்துக் கொண்டார். அவரும் காதலிக்கிற வயதைக் கடந்தவர்தானே. இருந்தாலும் வெளிகாட்டவில்லை.
மணி நிதானத்திற்கு வந்தான்.
“ சார் ஏதோ ஒரு ரகசியம் இந்த ஆராய்ச்சியில ஒளிஞ்சிருக்குன்னு சொன்னீங்களே, அது என்ன ?”
”உண்மைதான் மணி. ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒரு விசயத்தை தெளிவுப்படுத்த விரும்புறேன். உங்க இந்திய அரசும் என்னோட ரஷ்ய அரசும் இணைந்து இந்த ஆராய்ச்சிக்கு செலவழிக்கிறாங்க. இதுக்கு இடையில ஒரு தனிப்பட்ட அரசியல் அமைப்பு பிரிவு சில நாடுகளோட சேர்ந்து ரகசியமா தங்களுடைய திட்டத்தையும் இணைச்சு ஒரு விசயத்தை கண்டுப்பிடிக்க நிறைய பணம் இறக்கியிருக்காங்க. இதுல நானும் உங்க தலைவரும் அந்த அமைப்பு சொல்றபடி வேலை செய்ய தயாரா இருக்கோம்.”
மேகலாவும் மணியும் திகைத்துப் போனார்கள். மேகலா கோபம் தலைக்கு ஏறியது.
“ டேவ் சார், இது என்ன அநியாயம் ? அவங்க அவங்க நாட்டுக்கு துரோகம் இழைக்கிறதா? மனசாட்சி இல்லையா ? நீங்க ரகசியத்தையும் சொல்ல மாட்டேங்கிறிங்க. இந்த இடத்துல எனக்கு வேலை செய்ய பிடிக்கலை”
மணி குறுக்கிட்டான்.” ஆமா சார், எனக்கும் இஷ்டமில்லை. நாங்க வெளியே போறோம்.”
டேவ் அமைதியாக இருவரையும் பார்த்தார்.
“மேகலா, மணி உங்க கோபம் புரியுது. நானும் மல்கோத்ராவும் விருப்பமில்லாமதான் இதுல இருக்கோம். ஒவ்வொரு நிமிசமும் கண்காணிக்கப்படுறோம். இதுல ஒரு மறைமுக பயங்கர அரசியல் இருக்கு. நாங்க மட்டுமல்ல . நீங்களும்தான் கண்காணிக்கப்படுறிங்க.”
மேகலாவும் மணியும் சற்றே குழம்பி போனார்கள்.
டேவ் தொடர்ந்தார், “ உண்மைதான், உங்க குழப்பம் எனக்கு புரியுது. போன மாதம் இந்த ஆராய்ச்சி விசயமா சில டாக்குமெண்ட்ஸ்ல இடையில உங்களுக்கு தெரியாம ஒரு பேப்பர்ல உங்க கையெழுத்து வாங்கியிருக்காங்க. உங்க கவனத்தை திசை திருப்பி நடந்த இந்த விசயத்துல நீங்க வசமா மாட்டியிருக்கீங்க”
“அப்படின்னா நாங்க….” மேகலா இழுக்க டேவ் தொடர்ந்தார்.
“ ஆமா மேகலா நாம நாலு பேரும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மரணக் கயிறால சுருக்கு மாட்டப்பட்டிருக்கிறோம். எப்ப வேணுமானலும் கயிறு இழுக்கப்படலாம். அது தவிர…..”
டேவ் சற்று நிறுத்த மணியும் , மேகலாவும் அவர் முகத்தை பார்த்தார்கள்.
மேகலா மனதிற்குள் மருகினாள்.
‘ இப்பதான் காதல் ஆரம்பிச்சு அதுவும் பாதியிலேயே தொங்குது. வாழ்க்கயில சந்தோசத்தை பார்க்க முடியாதா ? இவரு வேற என்ன என்னமோ சொல்லி பயமுறுத்தறாரு. இங்கிட்டு இந்த மணி பைய தொந்தரவு, அந்த பக்கம் இவரு தொந்தரவு , ஒரே குழப்பமா இருக்கே.’
மணியும் மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பத்துடன் நின்றான்.
‘நல்லாதான் போயிட்டு இருந்துச்சு, இவரு வேற நடுவுல. நானே கஷ்டப்பட்டு இவ மனசை மாத்தி இப்பதான் காதலை ஆரம்பிச்சா, இவ சாமி நம்பிக்கையை வைத்து நம்மளை ஆட்டம் காண வைக்கிறா, அந்த பக்கம் இவரு ஏதோ தலையை சுத்தி மூக்கை தொடுறது மாதிரி என்ன என்னமோ சொல்லி பயமுறுத்துறாரு. இது எங்க போயி முடியும்னு தெரியலையே. பேசாம எங்கேயாவது ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சு நிம்மதியா இருக்கலாம் போல’
டேவ் அவர்கள் இருவரின் முகத்தைப் பார்த்தார். அவர்கள் முகத்தில் குழப்பமும், பயமும் மாறி மாறி நிழலிடுவதை கண்டார்.
” உங்களை பயமுறுத்தறுக்காக இதை நான் சொல்லலை. இதுதான் உண்மை நிலவரம். கண்ணுக்கு தெரியாது வைரஸ் கிருமி நம்மை சுத்துவது போல விதி நம்மை சுத்தி பின்னியிருக்கு. தப்பிக்க முடியாது”.
“டேவ் சார் உண்மையிலேயே மிக பெரிய வேலையா இல்லை செய்ய முடியாத வேலையா ? இதுல நாங்க பயப்படற அளவுக்கு என்ன வேலை ?
மேகலா கேட்க மணி ஆரம்பித்தான்.
“ எவ்வளவு சிரமமான வேலை இருந்தாலும் அதை சமாளிக்க எங்களால முடியும். ஆனா நீங்க சொல்றதைப் பார்த்தா ரொம்ப பெரிய மர்மமான வேலையா இருக்கும் போல. எங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியலை”.
டேவ் சொல்ல ஆரம்பித்தார்.
டேவ் சொல்ல வந்தது என்ன ?
அந்த பயங்கர அரசியல் விளையாட்டு என்ன ?
விதியின் தோளில் அரசியல் உப்பு மூட்டை ஏற…. அடுத்து….. காத்திருங்கள்…