#NNK
#நிலாக்காலம்
#நறுமுகை
#வெய்யோனை_அயரிய_வெண்பனியே
#nnk01
#nnk101_review
வணக்கம் ரைட்டர்ஜி
நல்ல கூட்டு குடும்ப கதை, அதிகமில்லாத குடும்ப அரசியலுடன்
கனியரசன் இதயா இவர்களின் காதலுக்கும் குடும்ப பாச பிணைப்புகளுக்கும் இடையிலான போராட்டம் தான் கதை
ஏனோ டிவி சீரியல் ஞாபகம் வராத தடுக்க முடியவில்லை.
ஏன் ரைட்டரே இந்த ராஜி பிள்ளை மீது அப்படி என்ன கோபம் கடைசி எல்லாத்தையும் அவள் தலையில் கொண்டு வந்து போட்டு இருக்கிண்றீர்கள். லாஜிக் கொஞ்சம் இடிக்குது.
அவள் பாட்டி வெற்றியை மாப்பிள்ளை பார்த்ததார்.
அவள் ஆசைப்பட்டாள்.
நிச்சசயதார்த்ததில் வைத்து கோர்னெர் செய்தது பாட்டி...
அதற்கு துணை நின்றது பரிமளம்
பெரிய அப்பாடக்கர் மாதிரி கதைத்து கோபப்பட்டு பொறுமையை காற்றில் விட்டது வெற்றி
சண்டை போட்டது இரு குடும்பமும்
இதில் ராஜி என்ன செய்தாள்
கதையின் படி ராஜி பயந்த கூச்ச சுபாவம் கொண்டவள். வெற்றி வேண்டும் என்று ஒரு சதி கூட செய்யவில்லை புள்ளை பூச்சி ஜஸ்ட் சைட்டிங் மட்டும் தானே அதுவும் பாட்டியால்.
ஏதோ சதிகாரியை நடத்துவது போல் இதயா நடத்தியது சரியில்லை. ஆணோ பெண்ணோ நீதி நியாமாய் நடக்க வேண்டும் இல்லையா.என்ன நான் சொல்லுறது.
உண்மையில் வள்ளியம்மை வீரவேல் பாத்திரங்களை கையாண்ட விதத்தை வைத்து இதில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்த்தேன். அந்த ஏமாற்றமாய் இருக்கலாம்.
இதயா... ராஜி...
There is old saying தன் நம்பிக்கைக்கும் அகங்காரத்திற்கும் இடையிலான இடைவெளி நூலளவு என்று என்னை பொறுத்த மட்டில் இதயா அந்த நூலிழையை கடந்து விட்டாள். நீங்க போல்ட் கேரக்டர் என்று நினைத்து இதயாவின் பாத்திரத்தை அமைத்தீர்களா என்று தெரியவில்லை.
இதயா ஒரு மருத்துவரைப் போல் நடந்து கொள்ளவில்லை. ஏன் என்று சொல்கின்றேன்.
நீங்கள் உங்களை சுற்றி நடக்கும் அனுபவத்தை வைத்து இந்தக் கதையை எழுதியுள்ளீர்கள் அதுதான் ஒரு கதாசிரியருக்கு வேண்டியது. ஆனால் சிலதை சொன்னால் நல்லது என்று நினைக்கின்றேன். தப்பாக நினைக்க வேண்டாம்.
நீங்கள் குறிப்பிட்ட ராஜியின் நிலைமை overwhelming reaction to stress தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவள் இயல்பினால் ஏற்பட்ட அழுத்தம் எல்லாம் சேர்ந்த ஒரு emotional breakdown. இந்த நிலையில் என்ன கதைக்கிறோம் வைக்கிறோம் என்றே தெரியாது. mind ஒரு வித blank mode போயிரும். மூளை தன்னை தானே காத்துக் கொள்ள செய்யும் ஒரு வேலை. யாராவது இது போல் emotional breakdown ஆனால் அந்த நேரம் அவர்கள் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது.
இது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க தேவையில்லை. ஆனால் ஒரு மருத்துவராய் இதயாவிற்கு நிச்சயமாய் தெரிந்திருக்க வேண்டும். இந்த மாதிரி அடங்காபிடாரி மாதிரி குதிக்க கூடாது.
அதோடு இத்தனை நாள் கண்ணுக்குள் வைத்து வளர்த்த பிள்ளை ஒரு சொல் சொன்னதற்கு ஒதுக்கி வைத்து விட்டார்களே... அப்படியானால் அவர்கள் அன்பு எப்படிப்பட்டது. இந்த பகுதியை இன்னும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கையாண்டு இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். அப்படி ஒன்றைத்தான் எதிர்பார்த்தேன். எல்லாம் முதல் பாதி கதை செய்த வேலை.
இது ராஜி இதயா தொடர்பான என் பார்வை மட்டுமே all over கதை நன்றாகவே இருக்கின்றது.
வள்ளியம்மை வீரவேல் அருமையான மனிதர்கள்.
கனியரசன் காதல் அருமை
கதிர்வேல் சக்திவேல் அவர்கள் மனவியிடையேயான ஊடல் கோப தாபங்கள் பாசம் அதை கையாண்ட விதங்கள் அபாரம் .
பாத்திரங்களின் கோர்வை கடைசி வரை கதை நகர்ந்த விதம் அனைத்தும் அருமை,
அதிலும் சிறுகதையில் இத்தனை பாத்திரங்களை கொண்டு வந்து குழப்பாமல் கையாண்டு இருக்கின்றார் ரைட்டர்
அருமையான கிராமத்து கதை, கிராமத்து கதை தேடுபவர்கள் நம்பிப் போகலாம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
PS: உங்கள் மனம் நோக எதையும் சொல்லியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். ஒரு பிள்ளை பூச்சியை போய் வில்லி ஆக்கிவிட்டீர்களே என்ற ஒரு அங்கலாய்ப்பு தான்