எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மைனரு மனசுல மச்சினி

NNK 101

Moderator
#நிலாக்காலம்
#நறுமுகை
#மைனரு_மனசுல_மச்சினி
#nnk13
#nnk101_review

மைனரு மனசுல மச்சினி
தாத்தாவின் செத்த வீட்டிற்கு வந்த இருவரும் எலியும் பூணையுமாய் சிலிர்த்துக் கொண்டு நிற்பார்கள். பிறகு பார்த்தால் இருவரும் கணவன் மனைவி.... அப்படி என்ன நடந்தது.... 🤔

அழகான குட்ட்ட்ட்டி ஆன்டி ஹீரோ கதை 😍
தொடங்கினதும் தெரியல முடிஞ்சதும் தெரியல அப்படி ஒரு நகர்வு கதையில். ❤❤❤

அத்த அந்த உலக்கையால மைனருக்கும் இரண்டு போட்டிருக்கலாம் நீங்க. மச்சினியின் அலப்பறைகள் சூப்பர் அதுவும் தண்ணி ஊத்துற ஸீன் புன்னகைக்க வைக்குது. உன்னை இந்த பாடுபடுத்தினவனுக்கே இவ்வளவு பொசசிவ்வா அவ்வா உனக்கு நல்ல புருஷன் கிடைச்சிட்டாலும். 😝😝🤭

நித்தியாவின் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் நடைமுறை யதார்த்தத்தினை ஏற்றுக் கொண்ட விதமும் அழகு 🤗

மச்சினி அம்மா சூப்பர் உலக்கையாலேயே போட்டுருக்க, இதை முதல்லயே செய்திருக்கலாம் அத்த.கொலையும் செய்வாள் பத்தினி சீச்சீ உலக்கையாலும் அடிப்பாள் பத்தினி. அதிலும் மருமகனுடன் கதைக்கும் விதம் ரசிக்க வைக்குது. அதிலும் ஏதாவது தப்பு பண்ணி அவளுட்ட மாட்டிட்டியா என்று இருவரிடமும் கேட்பது 🤣🤣

சோழன் அம்மா பாவம் அவரிடமும் போய் அலப்பறையை கூட்டுது இந்த மச்சினிச்சி. 🤦‍♀️

வீரமணி லட்சுமணன் தான் போங்க அண்ணன் ஒரு சொல்லு சொன்னதும் மன்னிப்பு கேட்டுட்டான்.

மைனரு மனசுல மச்சினி
எங்கள் மனதில் மைனரும் மச்சினியும் 🤗🤗
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி
 
Top