எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கார்முகில்‌ 6


கார்முகில் 6 :

கடந்துப் போன நாட்கள் எல்லாம் காலண்டரில் ஒரு தேதியாய் மாறிவிடுகின்றன.

அன்றைய உடை எடுக்கும் சம்பவம் வருணாக்ஷி வீட்டினரின் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மை.

அதையும் விட வருணாக்ஷியை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாய் போயிற்று முகிலனுக்கு.

அவனுடன் உடை எடுக்கும் இடத்திற்கு சென்றாலும் அவ்வளவு எளிதாக உடையை அவள் தேர்ந்தெடுத்திடவில்லை. அவளின் பிடிவாதம் அதிலேயே நன்றாக தெரிந்து விட்டது கார்முகிலனுக்கு.

எனவே திருமண உடையில் எதற்கு வீண் மனஸ்தாபம் என காஞ்சிபுரத்தில் இருவருக்குமான உடையை நெய்ய சொல்லிவிட்டான். இவர்கள் இங்கிருந்து என்ன விதமான டிசைன் வேண்டும் என மாடல் மட்டும் அனுப்புவதாக ஏற்பாடு.

இதனை அறிந்த சங்கவியின் மனதில் வருணாக்ஷியின் மேல் இருந்த மனத்தாங்கல் சிறு கோபமாக மாறிற்று. அன்று உடை எடுத்து விட்டு வீட்டிற்கு வந்து விக்ரமின் அர்ச்சனைகள் அவளைத் தொடரத்தான் செய்தன.

திருமணமாகிய இத்தனை வருடங்களில் இந்தளவு அவளிடம் அவன் பேசியதே இல்லை.‌முதல் முறை அதுவும் வருணாக்ஷியினால் எனும் போது அவள் மீதிருந்த கோபத்தில் பாலில் கலந்து விஷயமாய் சிறு வெறுப்பு அவள் மனதில் வருணாவின் மீது ஊடுருவியது.

அதனை அணைய விடாது பாத்துக் கொண்டார் லட்சுமி.

*******************

அன்றைக்கான வேலையை முடித்தவன் மணியை பார்க்க வருணாக்ஷி பள்ளியில் இருந்து வரும் நேரம் தான் என்பதை அறிந்தவன் அடுத்த நொடி அவளுக்கு அழைத்திருந்தான்.

அந்த பக்கம் எடுத்ததும் “ஓய்!!!!!” என்றழைப்பு,ஆனால் அதில் சிறு மாற்றமாக எப்போதும் அவள் அழைப்பவள் அன்றைய சம்பவத்திற்கு பிறகு இவன் அழைக்க ஆரம்பித்தது பின் அதுவே தொடர்கதையாகிற்று.

“என்னவாம்?” அவள்.

“என்ன என்னவாம்??” அவன்.

“இல்லை அதிசயமா திடீர்னு கூப்பிட்டு இருக்கீங்களா அதான் என்ன விஷயம்னு கேட்டேன்?”

“ஏன் இதுக்கு முன்னாடி நான் உனக்கு கூப்பிட்டதில்லையா? சொல்லப்போனா அன்னைக்கு டிரஸ் எடுத்துட்டுப் போனதுல இருந்து நான் தானே கூப்பிட்டு இருக்கேன்!”

“ஏன் கூப்பிட்டா என்னவாம் உங்களுக்கு! நான் மட்டுமே உங்களை கூப்பிடணுமா? நீங்க திரும்பி கூப்பிட்டா ஆகாதா? இல்லை இதுக்கும் உங்க அண்ணி பெர்மிஷன் வேணுமா!” எவ்வளவு தடுத்தும் அவளை மீறி வார்த்தைகள் வந்துவிட அடுத்த நொடி லைன் கட்டானது.

லைன் கட்டானதை உணர்ந்தவள் “ச்சூ” என்ற சொல்லோடு தன்னைத் தானே அடித்துக் கொண்டவள்,
“வருணா நீ இருக்கியே இந்த வாய் தான் டி உனக்கு பிரச்சனை??” தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் அவனிற்கு அழைக்க முழு ரிங் சென்று கட்டானது.

“போச்சு கோவமாகிட்டாறு??” என்றவள் மீண்டும் மீண்டும் அவனிற்கு அழைப்பு விடுக்க அவன் எடுக்கவில்லை.

தன்னைத் தானோ நொந்துக் கொள்வதை தவிர அவளுக்கு வேறு‌வழி இருக்கவில்லை.

அன்றைய சம்பவம் அவள் மனதை நன்கு பாதித்திருந்தது.‌ எவ்வளவு முயன்றும் அதன்‌ பாதிப்பிலிருந்து முழுதாக அவளால் வெளிவர இயலிவில்லை.

தன்னை விட அவஙனது அண்ணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாரோ என்ற எண்ணம் அவளே அறியாது மனதில் மூலையில் விழுந்துவிட்டது போல அதன் வெளிப்பாடு அவ்வப் போது இப்படி வார்த்தைகளாக வெளிவந்து விடுகிறது.

அவளும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள தான்‌ நினைக்கிறாள் ஆனால் ஏதோ ஒரு இடத்தில் சங்கவியின் பேச்சை எடுத்து விடுகிறாள் அதன் பொருட்டு இருவருக்கும் இப்போதெல்லாம் அதிகமாக முட்டிக் கொள்ள ஆரம்பிக்கிறது.

விடாது அழைப்பு ஒலி வந்த வண்ணம் இருக்க அதனை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் கார்முகில்.

அவன் எடுக்கும் வரை அவளும் விட மாட்டாள் என‌ அவனுக்கு நன்கு தெரியும். எப்போதும் இரண்டாம் முறை அவள் அழைக்கும் போது கோபத்தை மறந்து எடுத்து விடுபவனுக்கு இன்று ஏனோ எடுக்க மனம் வராதுப் போக போனை அணைத்துப் போட்டவன்‌ கடைப் பையயனிடம் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

ஏனோ அவன் மனம் இதற்கு மேலும் வேலையில் ஈடுபடும் என தோன்றவில்லை.

செல்லும் வழி எங்கும் வருணாக்ஷியின் நினைவுகளே!!!!

இப்போதெல்லாம் அடிக்கடி அவர்கள் இடையே சங்கவியின் பேச்சு வருகிறது. அன்றைய நிகழ்வு வருணாக்ஷியின் மனதை பாதித்து இருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான்.

தான் செய்தது தவறு என உண்ர்ந்திருந்தவன் யோசிக்காது அடுத்த நிமிடம் அவளிடம் மன்னிப்பும் கேட்டிருந்தானே அப்புடி இருந்தும் இவள் இன்னமும் விடாது அந்த பேச்சினை அவர்களிடையே கொண்டு வருவது அவனிற்கு இப்போதெல்லாம் சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது.

இன்னமும் தான் செய்தது அவ்வளவு பெரிய தவறாக அவன் மனதிருக்கு படவில்லை.

வீட்டின் மூத்த மருமகளாய் இருக்கும் அண்ணிக்கு மரியாதையை தானே கொடுத்தான்‌. ஆனால் அதை தவறென்று அவன் குடும்பமே கூறுவதை அவனால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விக்ரமின் வார்த்தைகளில் வருணாக்ஷியின் மனநிலை புரிந்தது தான் அதற்காக அவன் செய்தது மாபெரும் தவறு என்ற‌ ரீதியில் அனைவரும் அவனை பார்த்ததில் பிடித்தம் இல்லை அவனிற்கு.

வீட்டிற்கு வந்தவனின் ஃபோன் இன்னமும் வைஃப்ரேட் ஆக அவனுக்கு தெரியும் அவள் தான் அழைக்கிறாள் என.

‘எடுத்திடாத முகிலா அவளுக்கு அவ செஞ்ச தப்பு நல்லா உரைக்கட்டும். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் தான் இன்னமும் எத்தனை நாளைக்கு இவ அண்ணி பேச்சை எடுத்திட்டு இருப்பா. அவகிட்ட கோபத்தை மெயின்டெயின் பண்ணு அப்போ தான் வாய்த்துடுக்கு கொஞ்சமாச்சும் கொறையும்’ என தனக்கு தானே பேசி அவளை திட்டியவன் அழைப்பை எடுக்கவே இல்லை.

அவன் தன்‌ அழைப்பை ஏற்கவில்லை என்றதும் ஓய்ந்துப் போனவள் அடுத்து வாட்சப்பில் அவனுக்கு செய்திகளை அனுப்ப ஆரம்பித்தாள்.

“வாடா வேலை முடிஞ்சா? டீ போடவா” என்ற அன்னையின் கேள்விக்கு.

“ம்ம் போடுங்க வேலை இருக்கும்மா ஆனா அவசரமில்லை. தலைவலிக்குது” என்று சோஃபாவில் சரிந்து அமர்ந்தவன் போனை எடுக்க வாட்சாப்பில் 30 செய்திகள் வந்ததிற்கான நோட்டிபிக்கேஷன் வந்திருக்க ‘யாராது!’ என எண்ணிய அவன் அதனை திறக்க வரிசையாய் ஸ்மைலிகளை போட்டு சாரி என் அனுப்பியிருந்தாள் வருணாக்ஷி.

அதனை பார்த்தவனின் இதழ்கள் புன்னகையை பூச, “அதிகப்பிரசங்கி” என செல்லமாக திட்ட,

“இந்தா முகிலா டீ” என்ற அன்னையிடம் அதனை வாங்கி கொண்டான்.

“கல்யாண புடவைக்கு டிசைன்ஸ் பாத்து அனுப்பிட்டீங்களா மருமக செலக்ட் பண்ணிடுச்சா?” என கேட்க,

அவளிடம் பேசுவதற்கு வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தவன் “இந்தா போன் போட்டுக் கொடுக்கிறேன் நீயே கேளும்மா!” என்றவன் அவளிற்கு அழைக்க கையிலேயே வைத்திருப்பாள் போலும் ஒரு‌ ரிங் சென்றதும் எடுத்துவிட்டாள்.

“அம்மா உன்கிட்ட பேசணுமாம் கொடுக்கிறேன் பேசு” என ஏதோ அவன் அவனது அம்மாவிற்காக தான் இவளிடம் பேசுவது போல் காமித்து கொண்டவன் தான் கோபமாக இருப்பதே போல் கெத்துக் காட்டி கொண்டான்.

“அம்மாடி வருணா நல்லாருக்கியா?”

“ஹாங் அத்தை நல்லா இருக்கேன் நீங்க எப்பேடி இருக்கீங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்கீங்களா?”

“இருக்கோம் ம்மா இன்னும் கல்யாண புடவை டிசைன் செலக்ட் பண்ணலையா நீயி? இப்பவே கொடுத்தா தான் நெய்ய வசதியா இருக்கம் வருணா”

“அத்தை ரெண்டு எடுத்து வச்சிருக்கேன் ரெண்டுமே பிடிச்சிருக்கு நல்லாவும் இருக்கு எதை எடுக்கின்றது தெரியலை குழப்பமா இருக்கு த்தை. இங்க வீட்டுல கேட்டா உனக்கு பிடிச்சதையே எடுன்னு சொல்றாங்க ஆனா இரண்டுமே பிடிக்குதே த்தை” என்றவள்,

“த்தை நான் உங்களுக்கு அனுப்புறேன் நீங்க பாத்து சொல்லுங்க அப்படியே அவர்கிட்டயும் காட்டுங்கத்தை” என அவனிடம் ‌பேசு‌ம் வாய்ப்பை இழுத்துப் பிடிக்க,

“சரி ம்மா நீ அனுப்பி விடு” என்றவர் அழைப்பை துண்டித்து விட,

“என்னவா ம்மா?” என அவன் கேட்ட நொடி மீண்டும் அவளிடமிருந்து வாட்சப் மெசேஜ் வந்து குதித்தது.

“வருணாவுக்கு ரெண்டு டிசைன் பிடிச்சிருக்காம் எதை எடுக்கன்னு தெரியலையாம் அதான் உனக்கு அனேப்புறேன் பாத்து சொல்லுங்கத்தைன்னு சொன்னாப்பா” என்க,

“ஓஹோ ஏனாம் என்கிட்ட அதை இவ கேட்கமாட்டாளாமா?” என கடைசி வரிகளை தனக்குள் முனங்கியவன், அவள் அனுப்பியதை எடுத்து பார்த்தவன்‌ அதனை வனஜாவிடம் காட்டிக் கொண்டிருக்க,

அப்போது சங்கவி வீட்டினுள் வந்தாள் உடன் குழந்தை மற்றும் அம்மாவுடன்.

காலையில் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தவள் இப்போது தான் திரும்புகிறாள். அபர்ணா காலேஜில் இருந்து டூர் சென்றிருக்க லட்சுமிக்கு வேறு காலையிலயே லோ ப்ரசராகி மயக்கம் வரும் அளவிற்கு சென்றிருக்க அடித்து பிடித்து ஓடியிருந்தவள் ஹாஸ்பிடல் சென்று காட்டி விட்டு தாயை தனியே விட பயந்து உடன் அழைத்து வந்திருந்தாள்.

“வாங்க சம்பந்தி உடம்பு இப்போ பரவாயில்லையா?” வனஜா வினவ,

“ம்ம்ம் ஏதோ பரவாயில்லைங்க” என்றபடி சோபவின் மறுபக்கம் அவர்‌ அமர அவருக்கு போட வேண்டிய மாத்திரைகளை எடுத்து கொடுத்து விட்டு சங்கவியும் அமர்ந்துக் கொண்டாள்.

“என்ன பண்றது வயசானலே நம்மளை கேட்காமலே பலதும் வந்து நம்மளை ஒட்டிக்குது” என்ற வனஜா,

“முகிலா வருணா சொன்ன மாதிரி இரண்டும் நல்லா தான் இருக்கு ரெண்டையும் நெய்ய சொல்லிடுங்க மூகூர்தத்துக்கு ஒண்ணு ரிஷப்சனுக்கே ஒண்ணு வச்சுக்கலாமா?” என்க,

“ரிஷப்சனுக்கு உங்க மருமக வேற ஏதோ பாத்து வச்சிருந்தாம்மா!”

“அப்படியா சரி நீ இரண்டையும் நெய்ய சொல்லிடு தேவைப்படும்” என மேலோட்டமாக அவர் கூற அதனை புரிந்துக் கொண்டவன் “ம்ம்ம்” என்ற சொல்லோடு நிறுத்தியவன் தங்கள் எதிரே அமர்ந்திருந்த சங்கவியை கண்டதும்,

“அண்ணி கல்யாண புடவை டிசைன்ஸ் பாக்குறீங்களா? வருணாக்ஷிக்கு இரண்டுமே பிடிச்சிருக்காம் எது எடுக்கன்னு கேட்குறா” என்றபடி போனை அவளிடம் நீட்ட,

“வேண்டாம் ப்பா என் பொண்ணை இதுல இழுத்து விட்டு அவமானப்படுத்தாதீங்க” என்ற லட்சுமியின் குரலில் அவன் அவரைப் பார்க்க,

“ஏற்கனவே உங்க நிச்சய டிரஸ் எடுக்க போன இடத்துல இப்புடி தான் அவளை எடுக்க சொன்னீங்க கடைசியில மருமகன் கிட்ட திட்டு வாங்கி எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நின்னது என் பொண்ணு தான். திரும்பவும் அது மாதிரி செஞ்சு அவளை அவமானப்படுத்தாதீங்க” என பட்டென கூறி விட,

‘என்ன பேச்சிது!!!’ என்பது போல் அம்மா மகன் இருவரும் அவரை பார்க்க சங்கவியோ தாயின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதையும் கவனித்து தான் இருந்தனர்.

“என்ன சம்பந்தி பேசுறீங்க அவமானம் அது இதுன்னு சங்கவி என்ன உங்கம்மா பேசுறாங்க பாத்துட்டு இருங்க அப்போ உங்கம்மா சொன்னது உண்மையின்னு சொல்லாம சொல்லுறியா??” என்க,

“அம்மா என் நல்லதுக்குத்தானே த்தை சொல்றாங்க. எதுக்கு எனக்கு சம்பந்தமில்லாத விஷயத்துல தலை கொடுத்துட்டு பின்னாடி கஷ்டப்படணும்.
அன்னைக்கும் முகிலன் தம்பிக்காக தானே நான் போனேன் கடைசியில நான் என்னமோ தப்பு பண்ண மாதிரி தானே பாத்தீங்க எல்லாரும். அதான் எதுக்கு நான் பேச்சு வாங்கணும்னு தான் அம்மா சொல்றாங்க இதுல தப்பில்லையே த்தை” என்றவள்,

“அம்மா வாங்க கொஞ்ச நேரம் படுங்க மாத்திரை போட்டிருக்கீங்க வேற” என்றபடி அவரை அழைத்துக் கொண்டு அறைக்கு செல்ல திரும்பியவள்,

தன்னையே பார்த்திருந்த வனஜா விடம்,

“அன்னைக்கு அம்மா சாதரணாமா தானே கேட்டாங்க நிச்சயத்துக்கு இவ்வளவு விலையான்னு அதுக்கு பொண்ணு வீட்டுக்காரங்க எங்க ஆளுங்க அப்புடி தான் எடுப்பாங்க அது தான் பழக்கம்னு நான் வேற ஆளுங்கன்னு குத்தி காட்டுற மாதிரி பேசுனாங்க நீங்களும் அமைதியா தானே த்தை இருந்தீங்க. அப்போ‌‌ உங்களுக்கும் அந்த எண்ணம் மனசுல இருக்குது தானே‌‌த்தை” என்றவள் அவர் பதிலுக்கு எதிர்பாராது அ
றையினுள் சென்று விட்டாள்.

சங்கவியின் நடவடிக்கைகளையும் வருணாவின் விஷயத்தில் ஒட்டாத பேச்சினையும் கவனித்த முகிலன் யோசனையானான்.


படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைக் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே. 

jeeona

Moderator
சங்கவி பேசாம நீ உங்க அம்மா விட்ட போய் இரு அது தான் எல்லாருக்கும் நல்லது 😒
 
Top