வரம் 23
மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய யதுநந்தனுக்கு ஏதோ ஒரு மாற்றம் தனக்குள் நிகழ்ந்திருப்பது போலத் தோன்றியது. தனக்குள் தோன்றும் உணர்வு சந்தோசமா? நிறைவா? என்று அவனுக்கே புரியவில்லை. மனதின் உணர்வு மெல்லிய உற்சாகத்தைக் கொடுக்க விசிலடித்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த சந்திரமதி அவனையே இமைக்காமல் பார்த்தார்.
"என்னம்மா புதுசாவா என்னைப் பார்க்குறிங்க?"
"ஏன்? என் மகனை நான் பார்க்கக் கூடாதா?"
"பாருங்க, பாருங்க... நல்லாப் பாருங்க. யார் உங்களுக்குத் தடை போட முடியும். லக்கிக் குட்டியும் பானுக்குட்டியும் எங்கம்மா?"
"இலக்கியா இன்று ஸ்கூலுக்குப் போகலை என்றதும் அத்தையும் மருமகளுமா சேர்ந்து ஷொப்பிங் போயிட்டாங்க. அப்பாதான் கூட்டிட்டுப் போயிருக்கார். பேர்த்டே பார்ட்டிக்குப் பர்ச்சேஸ் பண்ணப் போயிருக்காங்க. நந்தும்மா, உனக்கு டிபன் எடுத்து வைக்கவா?"
"இல்லைம்மா, எல்லோரும் வந்திடட்டும்." என்றவன் புன்னகைத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த சந்திரமதிக்கு மனசு நிறைந்த மாதிரி இருந்தது. பல நாட்களாக அவன் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியாது போய்விட்டது. தன் மகளுடன் பேசும்போது கூட கண்களைத் தொடாத சிரிப்பு மட்டுமே அவனிடம் காணப்படும். எப்போதும் இறுக்கமாகவே இருப்பான். ஆனால், இன்று அவனின் முகத்தில் ஒரு திருப்தியான சந்தோசம். அதைக் காணவே அந்தத் தாயுள்ளத்திற்கு நிம்மதி ஏற்பட்டது.
தன் அறைக்குச் சென்ற யதுநந்தன் உடைகூட மாற்றாமல் கட்டிலில் சென்று விழுந்தான். கண்களை மூடினால் அவளின் முகம் தோன்றியது. அவளை அணைத்திருந்த கைகளில் இப்போதும் ஒரு குறுகுறுப்பு இருப்பது போல தோன்றியது. அவளை அணைத்த நிகழ்வு அவன் மனக்கண்முன் படமாக ஓடியது. அந்த நினைவுகள் அவன் இதழ்களில் சிறு புன்னகையைத் தோற்றுவித்தது. 'நானா இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? எனக்கு என்ன ஆகிவிட்டது? அவளின் நினைவுகள் எனக்கு ஏன் இடைவிடாது தோன்றுகின்றது?' என அவன் மனது அவனைக் கேள்விகள் பல கேட்டன. அதற்கான பதில்கள் தெரிந்திருந்தும் தெரியாத ஒரு மாயையாய் அவனுக்கு இருந்தன.
???
ஞாயிற்றுக்கிழமை காலை விடியல் அழகாகப் புலர்ந்தது. வாய்க்குள் விரலை வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷனா. கனவில் ஓர் அழகிய பூந்தோட்டம். அதில் பெரும் விருட்சமாய் ஒரு மாமரம். பரந்து விரிந்திருந்த கிளைகளில் ஒன்றில் ஊஞ்சல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில் அவள் உட்கார்ந்திருக்க பின்னாலிருந்து யதுநந்தன் ஊஞ்சலை ஆட்டுவித்தான். அவள் அவனருகில் செல்லும்போதெல்லாம் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு ஊஞ்சலைத் தள்ளி விட்டான். வெட்கத்தில் முகம் சிவக்க அவள் ஊஞ்சலில் மிதந்து கொண்டிருந்தாள். அந்த இனிமையான கனவில் லயித்திருந்தாள்.
திடீரென அவள்மீது மழை பெய்வது போலத் தோன்றியது. இல்லையில்லை, யாரோ தண்ணீரை ஊற்றுகின்றார்கள். என் கனவைக் கெடுத்த அந்த மாபாதகத்தைச் செய்தவர் யாரோ? என்று நெற்றிக் கண்ணைத் திறந்து கொண்டு எழுந்து அமர்ந்தாள். அவளையே பார்த்தபடி சிரிப்புடன் அவள்முன்னே அமர்ந்திருந்தாள் மஞ்சு. முகத்தைத் துடைத்தபடி "ஏண்டி எருமை இப்ப என் மேல தண்ணிய ஊத்தின? அறிவில்ல. கனவில் நிம்மதியா என் யதுகூட இருந்தன். கெடுத்திட்டியேடி" என்று கோபத்தில் கத்தியவள் அவள் முதுகில் பட்டென்று ஒன்று போட்டாள். "ஐயோ அம்மா" என்று பெரிய சத்தத்துடன் கத்தினாள் மஞ்சு.
"என்னடி அங்க சத்தம்?" என்று வெளியிலிருந்து கேட்டாள் மாலதி.
"பேசிட்டிருக்கோம் அம்மா..." என்று வடிவேலு பாணியில் உரக்க சொன்னாள் வர்ஷனா.
"அடிப்பாவி... உங்க ஊரில் இதுதான் பேசிட்டிருக்கிறதா? ரொம்ப வலிக்குதடி. ஏண்டி இப்போ அடிச்ச?"
"நீ எதுக்கு என் மேல் தண்ணிய ஊத்தினாய்?"
"நானும் உன்னை எவ்வளவு நேரம் எழுப்பினன். நீ எழுந்துக்கல. அதுதான் தண்ணிய ஊத்தினன். அதுக்கு இப்படி அடிச்சுப் போட்டியே"
"பின்ன என்னடி, நானும் என் யதுவும் சந்தோசமாய் இருக்கும்போது கெடுத்தால் எனக்குக் கோபம் வராதா?"
"வரும் வரும். ஆமா கனவுல அவர் உன்னை என்னடி பண்ணினார்? சம்திங் சம்திங்..." என்று கண்ணடித்துக் கேட்டாள்.
"அடச்சீ போடி. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லமுடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணு. பிரஷ் பண்ணிட்டு வாறன். டீ குடிப்போம்."
"நான் வந்தவுடன் முதல் வேலையாக அம்மாகிட்ட டீ வாங்கிக் குடிச்சிட்டு தான் உள்ள வந்தன். அம்மா ஆப்பம் சுடுறா. சோ, உன்னை எழுப்பிட்டு வாறன் என்று வந்தனான். நீ குளிச்சிட்டு வா. நான் போய் ஆப்பத்தை ஒரு கட்டு கட்டுறன்." என்றபடி வெளியே சென்றாள் மஞ்சு. "எனக்கும் கொஞ்சம் மிச்சம் வையடி." என்று கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள் வர்ஷனா.
காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியில் வந்தாள். அங்கே மஞ்சுவும் வருணியனும் கையில் ஆளுக்கொரு தட்டுடன் ஆப்பத்தை சாப்பிட்டபடி வம்பளந்து கொண்டிருந்தார்கள்.
"அடப்பாவிங்களா இன்னும் நீங்க சாப்பிட்டு முடிக்கலையா? அம்மா மாவு மிச்சமிருக்கா? இல்லை இரண்டு கழுதைங்களும் சேர்ந்து ஃபுல்லா காலி பண்ணிட்டுதுகளா?" என்று சமையலறையைப் பார்த்துக் கத்தினாள். "நாங்க எவ்வளவு வேணா சாப்பிடுவோம். இப்ப என்னாங்கிற." என்று தலையை சிலுப்பினாள் மஞ்சு.
"சண்டை போடாதிங்கடி. ஏண்டி நீ கத்துற. உனக்கு தாராளமாய் ஆப்பம் இருக்கு. பிள்ளைகள் சாப்பிடுறதைக் கண்ணு வைக்காத." என்றபடி ஒரு தட்டில் ஆப்பத்துடன் வந்தாள் மாலதி.
எல்லோரும் அமர்ந்து அரட்டையடித்தபடி உண்டனர்.
உண்டு முடித்ததும் பாத்திரங்களை ஒதுக்கிக் கொண்டு மாலதி சமையலறைக்குள் சென்றாள். வருணியன் தன் நண்பர்களைச் சந்திக்கப் போவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றான். நண்பிகள் இருவரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்து கலாய்த்துக் கொண்டிருந்தனர். திடீரென ஞாபகம் வந்தவளாய் தன்னை இலக்கியாவின் பிறந்தநாள் விழாவிற்கு யதுநந்தன் அழைத்ததை மஞ்சுவிடம் கூறினாள். சிவானந்தும் யதுநந்தன் அழைத்திருக்கிறான். எனவே கட்டாயம் விழாவிற்கு வரவேண்டும் என்று கூறியதையும் தெரிவித்தாள். மஞ்சுவும் தன்னையும் பானுமதி நேரில் வந்து அழைத்ததாகவும் கூறினாள். இருவரும் சேர்ந்து போவதற்குத் திட்டமிட்டனர்.
மாலை ஆறு மணிக்கு இருவரும் பிறந்தநாள் விழாவிற்கு தயாராகி வந்தனர். எப்போதும் போல் மிகவும் எளிமையாகவே தயாராகி வந்திருந்தாள் வர்ஷனா. இருவரும் இலக்கியாவுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களுடன் விழா நடைபெறும் ஹோட்டலைச் சென்றடைந்தனர்.
வாசலிலேயே கமலேஷ்வரும் சந்திரமதியும் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தனர் வர்ஷனாவும் மஞ்சுவும்.
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தில் காலியாக இருந்த இருக்கையைத் தேடி இருவரும் அமர்ந்தனர். அவர்கள் வந்ததைப் கண்ட பானுமதி அவர்களிடம் வந்து "வாங்க ரீச்சர், வாங்க..."என்று வரவேற்று விட்டு சில வார்த்தைகள் பேசினாள். அவர்களிடம் சொல்லிவிட்டு வந்து கொண்டிருந்த ஏனையவர்களையும் வரவேற்கச் சென்றுவிட்டாள். நண்பிகள் இருவரும் அங்கே வந்திருந்தவர்களை நோட்டம் விட்டவாறு கலகலவென தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
யதுநந்தன் ஹோட்டலின் அறையில் விழாவிற்குத் தயாராகியிருந்த மகளுடன் பேசிக் கொண்டிருந்தான். மண்டபத்துக்குள் வருமாறு வந்து அழைக்கவும் மகளை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான். அவர்கள் இருவரும் நடந்துவரும் அழகை வர்ஷனா கண்கொட்டாது பார்த்தாள்.
"போதும் டி ஆளையே முழுங்குற மாதிரி பார்க்கிற"
"வாவ்... ஹான்ட்ஸமாய் இருக்காருல்ல. இலக்கியாவும் ரொம்ப கியூட்டா பப்ளிமாஸ் மாதிரி இருக்கால்ல"
"இருக்கும் இருக்கும். சும்மாவே யதுநந்தன் சார் ஸ்மார்ட்டா, அழகா இருப்பார். நீ லவ் மூட்ல வேற பார்க்குற. சொல்லவா வேணும்."
மேடையில் உறவினர்கள், சிறுவர்கள் மத்தியில் அழகோவியமாய் நின்ற இலக்கியா கேக் வெட்டி தன் தந்தைக்கும் அத்தை, தாத்தா, பாட்டி எல்லோருக்கும் ஊட்டிவிட்டாள். தன் வயதொத்த குழந்தைகளுக்கும் கேக்கைப் பரிமாறிவிட்டு அவர்களுடன் விளையாடத் தொடங்கிவிட்டாள். பெரியவர்கள் விருந்தினர்களைக் கவனிக்கச் சென்றனர். தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த யதுநந்தன் சுற்று முற்றும் பார்வையை அலையவிட்டான். வர்ஷனாவைக் கண்டதும் அவன் முகத்தில் சந்தோசம் ஒரு பங்கு அதிகரித்தது. அவன் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த சிவானந்தின் கண்களில் அவனது அலைப்புறுதலும் வர்ஷனாவைக் கண்டதும் முகத்தில் தோன்றிய மாறுதலும் பட்டது. அந்த மாற்றம் அவனுக்கும் பெரும் சந்தோசத்தையே தந்தது.
அடிக்கடி வர்ஷனாவைப் பார்வையால் வருடியபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் கண்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தவரைக் கண்டது. மனமும் முகமும் மாற அவ்விடத்தை வெறித்து நோக்கினான்.