எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ என் காதல் கண்மணி (கதை திரி)

Kavisowmi

Well-known member
நீ என் காதல கண்மணி ்.
1

“என்னடா விஷ்வா 8 மணிக்கு இவ்வளவு இருட்டா இருக்குது. இந்த மாதிரி ஒரு ஊர்ல தான் உனக்கு பொண்ணு பார்க்கணுமா.”

நிதிஷ் விஷ்வாவின் உயிர் தோழன். சிறு வயதிலிருந்து ஒன்றாக படித்து ஒரே துறையில் வேலைக்கு சேர்ந்தவர்கள்.

“அப்பாவோட பிடிவாதம் இப்போ இங்க வந்து நிக்குது .நீ வேற ஏன்டா” என்று சொன்னபடியே..

“ ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு .

ஃபுல்லாவே இருட்டா இருக்கு. இதுல ஏதாவது விலங்குகள் மேல ஏத்திடாதே.”.

“ஆமா நீ சொல்றதும் சரிதான் இங்க மான் கூட்டம் யானை கூட்டம் எல்லாம் வரும்னு கேள்விப்பட்டு இருக்கிறேன்.

எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வண்டி ஓட்டுறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சட்டென எதிர்புறத்தில் இருந்த சிறு சாலையில் இருந்து ஒரு பெண் ஓடி வருவது தெரிந்தது.

“ ப்ளீஸ் வண்டியை நிறுத்துங்க.. காப்பாத்துங்க ப்ளீஸ் .உதவி செய்யுங்க “என்று கையை காட்டி வண்டியை நிறுத்த சற்று யோசனையோடு வண்டியை ஸ்லோவ் செய்தவன் நண்பனின் முகத்தைப் பார்த்தான்.

“ என்னடா இது? யாரோ ஹெல்ப் கேட்டு வராங்க. என்ன பண்றது”.

“ இந்த ராத்திரி நேரத்தில் இப்படியே விட்டுட்டு போக முடியாது” என்று சொல்லவும்.. விஷ்வா நண்பனை பார்த்தபடியே வண்டியை நிறுத்த..

“என்னன்னு கேளு” என்று கூறினான்.

விஷ்வா கையில் இருந்த மொபைலுக்கு வந்திருந்த மெசேஜ்களை படித்துக் கொண்டு இருந்தான்.

அப்போது தந்தையிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்தான்.

“ இத பாருடா.. உனக்கு பேசியிருக்கிற பொண்ணு இந்த பொண்ணுதான்.

ஃபோட்டோவை நல்லா பார்த்துக்கோ.. நாளைக்கு காலையில நிச்சயம் இருக்குது கரெக்டா அங்க வந்து சேர்ந்திடணும் .

நம்ம எஸ்டேட்டில் தங்கி இருக்கிறோம். நேரா அங்க வந்திடு “என்று வந்திருக்க அடுத்ததாக இருந்த போட்டோவில் கிளிக் செய்யவும்…சரியாக எதிரில் என்ற பெண்ணின் முன்னாள் வண்டி நிற்கவும் சரியாக இருந்தது.

போட்டோவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு எதிரில் பார்க்க இவனுக்கோ சற்று அதிர்ச்சி தான்.

எந்த பெண்ணை மணம் முடிக்க பேசியிருக்கிறார்களோ அந்த பெண்ணே எதிரில் நின்றிருந்தாள்.
கையில் சிறிய பேக்கோடு...

சற்று யோசனையோடு நண்பனின் முகத்தை பார்க்க.. அவனும் அவளை விசாரித்துக் கொண்டிருந்தான் .

“என்ன வேணும் ..யார் நீங்க.. எதுக்காக வண்டியை நிறுத்த சொன்னீங்க என்று கேட்க ..

“சாரி சார் ..எனக்கு ஒரு உதவி வேணும் .நான் ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகணும் என்னை கூட்டிட்டு போய் விட முடியுமா .ப்ளீஸ் ..ரொம்ப அவசரம் “என்று கூற ..

“யாருடா இது சரியான தத்தியா இருப்பா போல இருக்குது.” நண்பனிடம் திரும்பியவன் “ஊருக்குள்ள போற வண்டியை மறித்து திரும்ப ரயில்வே ஸ்டேஷன் வீடுன்னு சொல்றா‌.

ரொம்ப தெளிவான பொண்ணு தான் “என்று சிரிக்க..

“ கொஞ்சம் பேசாம இரு “என்று சொன்னவன் கையில் இருந்த மொபைலை அவனிடம் நீட்டினான்.

“ கொஞ்சம் இத பாரு “என்று சொல்ல..

மொபைல் பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு .”சரிதான் போ ..நாளைக்கு நிச்சயத்தை வச்சுக்கிட்டு விருப்பமே இல்லாமல் இந்த மாப்பிள்ளை பையன் ஊருக்கு வரான் .

அதே நேரத்துல அங்க பொண்ணு கல்யாணமே வேண்டாம்னு பேக்கோட புறப்பட்டுட்டா ..

நல்ல ஜோடி பொருத்தம் டா .இதைவிட பொருத்தம் எங்க தேடினாலும் கிடைக்காது.”

“ டேய் முதல்ல பேசாம இரு ..முதல்ல வண்டி ஓரமாக நிறுத்தி என்னன்னு கேளு “.

“என்னன்னு கேட்கிறது இரு. கேட்டு விசாரிச்சு சொல்றேன்”.

“ ஆமா நீ என்ன செய்ய போற..”

“ நான் என்ன செய்யறதா.. நான் என்ன செய்யணும். .
மாப்பிள்ளை வண்டியில் இருக்கிறேன்னு தெரிந்து மறுபடியும் அந்த பொண்ணு அந்த பக்கம் எங்கேயாவது ஓடிட்டா”.

“ டேய் வண்டியை நிறுத்துனதை பார்த்தால் தெரிஞ்ச மாதிரி எல்லாம் தெரியல .

எதுக்கும் நான் என்னை மறைச்ச மாதிரியே இருந்துக்கறேன். என்னன்னு டீடைல் விசாரி” என்று சொல்ல வண்டியை ஸ்லோ செய்து அவளுக்கு அருகில் நிறுத்தியவன்.

“ என்னம்மா என்ன பிரச்சனை” என்று கேட்க..

“நான் தான் சொன்னேனே ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் என்ன கொண்டு போய் விடனும். நான் அவசரமா போகணும்”.

“ சரி ரயில்வே ஸ்டேஷன் போகணும் ..ஆனா நாங்க அவசரமா ஊருக்குள்ள போயிட்டு இருக்கறமே .”

“இத பாருங்க சார் நீங்க இன்னும் ஒன் ஹவர் கழிச்சு கூட இங்கே திரும்ப வந்துக்கலாம்.

எனக்கு ரொம்ப அர்ஜென்ட்.. என்னை கண்டு பிடிச்சிட்டாங்கன்னா என்னை இங்கிருந்து போக விட மாட்டாங்க”.

“ சரிமா எதுக்காக இங்கிருந்து கிளம்புற ..தெரிஞ்சுக்கலாமா ஏதாவது லவ் மேட்டரா.. ஏதாவது பையனை விரும்பறியா .அதனால அந்த பையன் பின்னாடி போவதற்காக அவசரமா கிளம்பி இருக்கிறயா? “

“என்ன சார் என்னை பாத்தா எப்படி இருக்குது . லிஃப்ட் கேட்டா உங்க இஷ்டத்துக்கு யோசிக்காமல் பேசுவீங்களா..

நீங்க சொன்னது கரெக்ட் தான். கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ண போறாங்க .எனக்கு அது பிடிக்கல.

அதனாலதான் கிளம்பி வரேன் ..அதுக்காக லவ் பண்றேன் .இப்படி எல்லாம் பேசாதீங்க.

நான் அந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடையாது .”

“சரி அந்த மாதிரி பொண்ணு இல்ல ஆனா எந்த தைரியத்துல வர்ற வண்டியை இப்படி நிறுத்தற..

ஊருக்குள்ள வர்ற வண்டினா எல்லோரும் நல்லவங்களாவா இருப்பாங்க ..

கெட்டவங்க கூட இருப்பாங்க ஒருவேளை நாங்க தப்பான பசங்களா இருந்தா என்ன செய்வ..”

“ உங்க முகத்த பார்த்தாலே தெரியுது. அப்படி எல்லாம் தப்பு செய்ற மாதிரி தெரியல.

உங்களால உதவ முடியுமா இல்லையா .அத மட்டும் சொல்லுங்க “என்று சொல்ல யோசனையோடு அருகில் இருந்த நண்பனை பார்த்தான்.

அவன் இப்போது இறங்கி வந்திருந்தான்.

எதிரில் நின்றவளுக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை .

இவன் தான் தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்பதும் தெரியவில்லை .

“இவர் யாரு உங்க பிரண்டா” என்று கேட்க..

” ஆமா இவனை எங்கேயாவது பார்த்த மாதிரி தெரியுதா .”

“அது எப்படி? இப்பதான் நீங்க ஊருக்குள்ள வரீங்க .

ரொம்ப புத்திசாலின்னு நினைச்சா இப்படி லூசுத்தனமா கேள்வி கேக்குறீங்க.”

“ சரியா போச்சு ..கொஞ்சம் முன்னாடி நீ லூசுன்ன.. இப்ப அவ உன்னை லூசுங்குறா” என்று வாய்க்குள் முனங்க..

“ பேசாம இருக்கறயா “என்றவன்..” இப்ப என்ன உன்னை ரயில்வே ஸ்டேஷன்ல கொண்டு போய் விடணும் .

அவ்வளவு தானே வா .கொண்டு போய் விடறேன்” என்று சொன்னபடியே வண்டியில் பின் இருக்கையில் அமர வைத்து வண்டியை திருப்ப ..

“ஆமா இவ்வளவு தூரம் வந்து உன்னை அழைச்சிட்டு போறோம் .இதனால் எங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்திடுமா”.

“ அப்படியெல்லாம் எந்த பிரச்சனையும் வராது.

ஏன்னா நான் கைகாட்டி வண்டியை நிறுத்தும் போது இந்த ரோட்ல யாரும் இல்ல.
நான் சொன்னாதான் தெரியும்”

“ சரி தான் நாங்க தப்பானவங்களா இருந்தா என்ன பண்ணுவ ..”

“ஹலோ எனக்கும் சண்டை எல்லாம் தெரியும்.. கத்தி கூட கையில வச்சிருக்கேன் தெரியுமா “என்று சிறிய கத்தியை எடுத்து நீட்ட.. இருவருக்கும் வாய் கொள்ள முடியாத அளவிற்கு சிரிப்பு..

இருவருமே தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

“ எதுக்காக சிரிக்கிறீங்க.. இந்த கத்தியை பார்த்து சிரிக்கிறீர்களா.. இதை வச்சு என்ன வேணாலும் செய்ய முடியும் தெரியுமா .”

“அப்படியா கொலை பண்ண முடியுமா “.

“ஏன் முடியாதா”.

“ இல்லையே..இத வச்சு எப்படி கொலை பண்ண முடியும் “.

“ இத பாருங்க தேவையில்லாதது எல்லாம் பேச வேண்டாம் .

நீங்க ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் கூட விட வேண்டாம். பக்கத்துல பஸ் ஸ்டாப் இருக்குது .

அங்க கொண்டு போய் விட்டா கூட போதும். நான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வண்டி ஏறிக்குவேன் .”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஹெல்ப் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு .

முழுசாவே செய்துகறோம் .எங்க போகணும்னு மட்டும் கரெக்டா சொல்லு .

அங்க கொண்டு போய் விடறேன் “என்று சொன்னபடியே வண்டியில் செலுத்த…

இவ்ளோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.

“ என்னமா வாய்க்குள்ள முணு முணுத்திக்கிட்டு வர்ற.. ஒரு வேளை உனக்கு பைத்தியம் ஏதாவது பிடிச்சிருக்கறதோ..

தெரியாம நாங்க தான் வண்டியில் ஏத்திட்டமோ “.

“சும்மா இருங்க சார் நான் பாட்டுக்கு பேக்ல கொஞ்சம் துணி அள்ளி போட்டுட்டு வந்துட்டேன் .

அங்கே என் அப்பா அம்மா எல்லாரும் என்னை தேடிக்கிட்டு இருப்பாங்க .

அதை பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.”

“ இப்ப என்ன ? ரெயில்வே ஸ்டேஷன் போகணுமா .இல்ல திரும்ப உன்னோட வீட்டுக்கு வண்டியை விடனுமா”.

“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ரயில்வே ஸ்டேஷனுக்கு தான் போகணும்”.

“என்னமோ சொன்ன நிச்சயத்துக்கு பயந்து ஓடிக்கிட்டு இருக்கறேன்னு..

அதோட டீடைல் சொல்றியா..ரயில்வே ஸ்டேஷன் போற வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகணும்ல .”

“தாராளமா தெரிஞ்சுக்கலாம் எனக்கு இந்த போலீஸ்காரங்களே சுத்தமா ஆகாது”.

“ ஓ அப்படியா சரி அதுக்கு?”

“ ஆனா பாருங்க எனக்கு பார்த்திருக்கற மாப்பிள்ளை போலீஸ்ல தான் இருக்கிறாராம்.

சோ எனக்கு இந்த பையனை சுத்தமா பிடிக்கல .நானும் வீட்ல நிறைய சொல்லி பாத்துட்டேன்.
யாரும் கேட்கிற மாதிரி இல்ல”.

‘ ஆமா நீ என்ன படிச்சிருக்கற”. என்று விஷ்வா கேட்க..

“ நான் ப்ளஸ் டூ முடித்து இருக்கிறேன்.”

“ ஏன் அதுக்கு அப்புறம் படிக்கல..”

“ வந்து படிக்கும் போது ஒரு சின்ன இன்சிடென்ட் ஆயிடுச்சு அதுக்கு பிறகு எனக்கு படிக்க பிடிக்கலை .

நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டேன்..”

“ இல்லையே ஸ்கூல் முடிச்சிட்டியே.. அநேகமா நீ காலேஜ் தானே போயிருக்கணும் .”

“அதுதான்.. காலேஜுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டேன் .அப்பாவும் சரி வீட்ல இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டாங்க .”

“சரி உன் வீட்ல வேற யாரும் இல்லயா..நீ மட்டும் தானா”

“ இல்லையே எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறா.. பேரு நித்யா.

இப்போ காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கறா..”

“ நீ மட்டும் தான் தனியா பேசுவியா .. இல்ல உன் தங்கச்சியும் இப்படி தானா..”

“அவ நல்ல புத்திசாலி தனமா பேசுவா .”

“சரி அப்படி என்ன பேசினா..”

“ அவதான் சொன்னா நீ போலீஸ்காரனை பார்த்து பயந்து பயந்து ஓடுற ..

அப்பா உனக்கு போலீஸ் வேலையில இருக்குற பையனை மாப்பிள்ளையா கூட்டிட்டுட்டு வத்து இருக்கறாங்க .

அவர் பெரிய ஆபீஸர் ..இனி ஆபீஸர் அம்மாவை பாக்கணும்னா தனியா டைம் கேட்டு தான் வரணும் தெரியுமான்னு என்கிட்ட சொன்னா…

அதுக்கு பிறகு தான் புரிஞ்சுது.. ஓ.. எனக்கு தெரியாம இவங்க ஏதோ பெரிய வேலை செய்றாங்கன்னு ..

அதுதான் இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு எஸ்கேப் ஆகி வந்துட்டேன்.”

“ இதனால உன் அம்மா அப்பாவோட பேரு கெட்டுப்போகாதா .”

“அப்படி எல்லாம் கேட்டு போகாது .அவங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும் .

இன்னும் கொஞ்ச நாள் தேடுவாங்க பிறகு எப்படியும் நானே திரும்பி வந்துருவேன்.

உங்களுக்கு தெரியுமா.. இந்த கல்யாணம் இப்போதைக்கு நின்னுடும் .

இந்த பேச்சு வார்த்தையை நிறுத்திடுவாங்க.
அவ்வளவுதான் ..

எனக்கு அது தானே வேணும் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப வீட்டுக்கு போனா அவங்க கூப்பிட்டு வச்சிக்குவாங்க .

இப்போதைக்கு இந்த மாப்பிள்ளை பிரச்சனை முடிஞ்சா போதும்”.

“ புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா” என்று கேட்க..

“என்ன நீங்க? நான் பேசறது கரெக்ட் தானே .”

“பேசுவது கரெக்ட்டுன்னு சொல்ல மாட்டேன். லூசுத்தனமா தான் இருக்குது.

சரி ரயில்வே ஸ்டேஷனுக்கு போன பிறகு எங்க போறதா பிளான் .”

“அது எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும் .”

“யாராவது உறவுக்காரங்க வீட்டுக்கு போறியா இல்ல பிரண்ட்ங்க வீட்டுக்கு எங்கேயாவது போறியா”.

“ இதெல்லாம் தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க.”

“ நான் என்ன செய்யப் போறேன்.. ஒரு பொண்ணுக்கு லிப்ட் கொடுத்தேன் .

அந்த பொண்ணு பத்திரமா இருக்கிறாளா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா.
அந்த ஆர்வத்தில் கேட்கிறேன்”.

“ அது தான் எனக்கும் தெரியல சார் .எனக்கு பிரண்டுன்னு யாரும் கிடையாது.

அதே மாதிரி தான் உறவுக்காரங்களும் வெளியில யாரும் இல்ல.

என்ன செய்ய போறேன்னு தெரியல.. ஏதோ ஒரு தைரியத்துல வண்டி ஏறி கிளம்பி வந்துட்டேன் .

இப்பவும் கொஞ்சம் பயமா தான் இருக்குது .”

“அப்படின்னா வண்டியை ஊருக்கு திருப்பிடலாமா “.

“ஐயோ அதெல்லாம் முடியாது விடிஞ்சா அந்த போலீஸ்காரன் கூட எனக்கு நிச்சயம் பண்ணி முடிச்சிடுவாங்க.

அப்புறமா என்னால முடியாது. போலீஸ்காரனை பார்த்தாலே எனக்கு பயம் .

அவங்கள பார்த்தாலே அலர்ஜி யாருமே நல்லவங்க கிடையாது தெரியுமா .”

“இது என்ன ஒட்டு மொத்தமா இப்படி ஒரு வார்த்தை சொல்ற..”

“ உங்களுக்கு சொன்னா புரியாது சார் .நான் நிறைய பார்த்திருக்கிறேன் .

இந்த போலீஸ்காரங்க எந்த மாதிரி நடந்துக்குவாங்கன்னு..

நீங்க நியூஸ்ல எல்லாம் பாக்கறது இல்லையா ..

ரோட்ல போய் கிட்டு இருந்தா கூட சும்மா போறவங்கள கூட அடிப்பாங்க..

ஒரு நியூஸ்ல பார்த்தேன் அநியாயம் தெரியுமா..

ஒரு ரோட்டோரத்தில் ஒரு வயசான அம்மா இட்லி சுட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க.

சம்பந்தமே இல்லாம ஒரு போலீஸ்காரன் வந்து அந்த வண்டியை அடிச்சு நொறுக்கி அத்தனையையும் ரோட்டில் கொட்டி எவ்ளோ ஆச்சு தெரியுமா .

அந்த அம்மா பாவம் இல்ல.. இதெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு கோவம் வருது தெரியுமா .

அப்ப தான் முடிவு பண்ணினேன் இந்த போலீஸ்காரங்களை மட்டும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ..”

“அவ்வளவுதானா இன்னும் வேற ஏதாவது இருக்கா “.

“இன்னுமா..
இருக்கே.. என் பிரண்டு ஒருத்தி பேரு செல்வி ரொம்ப இன்னோசென்ட் ..

அந்த பொண்ண ஒரு போலீஸ்காரன் காதலிச்சு ஏமாத்தி விட்டுட்டு போயிட்டான்.

கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.

கடைசில அந்த பொண்ணு என்ன பண்ணினா தெரியுமா?”

“ என்ன பண்ணினா ?”

“சூசைட் பண்ணிக்கிட்டா.. அதுக்கு பிறகு தான் இந்த போலீஸ்காரர்களே ஆகாதுன்னு முடிவுக்கு வந்தேன் .

யாருமே நல்லவங்க கிடையாது சார் .இந்த போலீஸ்காரங்க லஞ்சம் வாங்குவாங்க .

சட்டத்தை மீறி எல்லா வேலையும் செய்வாங்க. இப்படி நிறைய கேட்டு கேட்டு எனக்கு சலிச்சு போச்சு .

அதனாலதான் இந்த முடிவு..”

“ ஹப்பா நிறைய ஆராய்ச்சி பண்ணி இருப்ப போல இருக்குது .”

“அதனால தான் இப்படி எல்லாம் முடிவு பண்ணி இருக்கிறேன்..”
 

Kavisowmi

Well-known member
2

“என்ன நான் முடிவு பண்ணியது தப்பா “.

“ஐயோ தப்புன்னு யாராவது சொல்லுவாங்களா ..

எவ்வளவு புத்திசாலி நீ.. எவ்வளவு யோசிச்சு அழகா முடிவு பண்ணி இருக்குற..

கரெக்ட்டா நிச்சயத்துக்கு முந்தின நாள் வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கிற..

இதெல்லாம் திறமை தானே.. இந்த மாதிரி திறமை எல்லாம் எல்லாத்துக்கும் வந்துடாதே..” விஷ்வா அமைதியாக இருக்க நிதிஷ் கிண்டலாக கூறினான்.

“ நீங்க என்னை பாராட்டுறீங்களா இல்ல கிண்டல் பண்றீங்களா.. எனக்கு சந்தேகமா இருக்குது”.

“ சந்தேககம் எல்லாம் படாதம்மா.. உண்மையிலேயே பாராட்டத்தான் செஞ்சேன் .

சரி இப்போ அங்க போற கரெட்டு ..எங்க போய் தங்குவ ..ஏதாவது பிளான் இருக்கா..”

“ இந்த நிமிஷம் வரைக்கும் எதுவுமே இல்ல .என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்குது .

அதை வைத்து தான் ஏதாவது மேனேஜ் பண்ணனும் .”

“ஒரு பத்தாயிரம் இருக்குமா..”

“அத எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும் . என்ன ஏமாற்றி காசு பிடுங்க பாக்கறீங்களா..”

“ உனக்கு லிஃப்ட் கொடுத்துட்டு உன் காசு வேற பிடுங்குவாங்களா ..

எங்கள பார்த்தா திருட்டு பசங்க மாதிரியா இருக்குது .”

“அப்படி தெரியல ஆனாலும் சந்தேகம் வருதே .”

“சரி சரி எப்படியோ பத்திரமா இருந்தா சரி. இன்னமும் பத்து நிமிஷத்துல ரயில்வே ஸ்டேஷன் வந்துரும்.

இறக்கி விடறோம் கரெக்ட்டா டிரெயினை பிடிச்சு போயிடு.

எந்த ஊருக்கு போறதா இருக்கற.. பிளான் ஏதாவது இருக்குதா .”

“அதுதான் சொன்னேனே இந்த நிமிஷம் வரைக்கும் எதுவுமே இல்லன்னு .”

“வேணும்னா நான் உனக்கு உதவி செய்யட்டுமா” இப்பொழுது விஷ்வா குரல் கொடுக்க ..யோசனையோடு திரும்பி அவ,னின் முகத்தைப் பார்த்தாள்.

“ என்ன ஹெல்ப் பண்ணுவீங்க சொல்லுங்க கேட்கலாம் .ஓகே ஆகுற மாதிரி இருந்தா சரிதான்”.

“ எனக்கு கோயம்புத்தூர்குள்ள ஒரு நல்ல ஹாஸ்டல் தெரியும்.

நிறைய பணம் எல்லாம் வாங்க மாட்டாங்க ..மாசம் 6000 வாங்குவாங்க.

சாப்பாடு மூணு வேளை கொடுத்திடுவாங்க. நீ ஏதாவது தங்கி வேலை செய்றதா சொல்லிட்டு அங்க போய் தங்கிக்கலாம்.

பாதுகாப்பாகவும் இருக்கும்.. என்ன சொல்ற “.

“கேக்க நல்லாத்தான் இருக்குது ஆனா 6000 ரொம்ப அதிகமா தெரியலையா..

அந்த 6000 ரூபாய் வச்சு ஒரு மாசத்துக்கு நாங்க குடும்பமே சாப்பிடுவோம் தெரியுமா.”

“ சரி தான் இப்படி எல்லாம் கணக்கு பார்க்கிறவ வீட்டை விட்டு வெளியே வந்திருக்கக் கூடாது .

உனக்கு பாதுகாப்பான இடம் வேணுமா.. வேணாமா …அத மட்டும் சொல்லு .”

“ எனக்கு நெஜமா வேணும்.. சொல்லுங்க எந்த இடம்” என்று கேட்க..

“ உன்கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்குது தானே”.

“ இருக்குது இதோ” என்று எடுத்துக்காட்ட ..

“சரி அதுல லொகேஷன் செட் பண்ணி அட்ரஸ் எழுதி தரட்டுமா..

அங்க போய் சொல்லு.. உனக்கு ரூம் தருவாங்க .பத்திரமா இரு.

எவ்வளவு நாள் இருப்பியோ இருந்துக்கோ அதிகபட்சம் ஒரு 15 நாள் ஒரு மாசத்துக்குள்ள ரிட்டன் உன் வீட்டுக்கு வர்ற வழியை பாரு .

இந்த மாதிரி வெளியே சுத்திக்கிட்டு இருக்காத எல்லாரும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க.

பின்னாடி ஏதாவது பிரச்சனையை ஆயிடுச்சுனா கஷ்டம் “.

“புரியுது.. நீங்க சொல்றது கரெக்ட் தான் .நான் எடுத்த முடிவு தப்பு தான் .

ஆனா எனக்கு வேற வழி தெரியலையே ..

எனக்கு போலீஸ்காரன் வேண்டாம்னு தானே சொல்றேன் .

வேற யாரையாவது இழுத்துட்டு வந்து நிறுத்தி இருந்தால் யோசிக்காமல் சரின்னுதானே சொல்லி இருப்பேன்.

இதுவரைக்கும் அப்பாவோட பேச்ச நான் தட்டினது எல்லாம் இல்லை தெரியுமா .”

“அதனாலதான் பெருசா அப்பாவுக்கு ஆப்பு வச்சிட்ட போல இருக்கு” என்று டிரைவிங் சீட்டில் இருந்த நிதீஷ் சொல்லி சிரிக்க ..

“சார் நீங்க பேசுறது எதுவுமே சரி இல்ல. ஆரம்பத்துல இருந்து ரொம்ப என்னை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு.

இன்னொரு முறை இது மாதிரி பேசாதீங்க.. இந்தாங்க சார் என்னோட போன்.. பாருங்க.. பாத்துட்டு எனக்கு சரியா அட்ரஸ் கொடுங்க ..

என்ன.. பக்கத்துல அந்த இடம் இருந்தா யோசிக்காமல் உங்களையே கொண்டு போய் என்னை அங்க விட்ருங்கன்னு சொல்லி இருப்பேன் .

இப்ப அதுக்கு தான் வழி இல்லையே ..”

“சரிதான் போனா போகட்டும்னு லிப்ட் கொடுத்தால் விட்டா எங்களையே கொண்டு விட சொல்லுவியா .

அதுக்கு எல்லாம் வேற ஆள பாருமா ..நாங்க திரும்பி ஊருக்குள்ள போயாகணும்.

எங்களுக்காக அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”

“ஆமா இதைக் கேட்கவே மறந்துட்டேன் .

எங்க ஊருக்குள்ளதான போறீங்க.. யார் வீட்டுக்கு போறீங்க .

அதை நீங்க சொல்லவே இல்லையே ..”

“அதுவா நீ தான் சொன்ன இல்ல .நாளைக்கு நிச்சயம் பண்ண வர போறாங்கன்னு..

அந்த மாப்பிள்ளையோட பிரண்டுங்க நாங்க ரெண்டு பேரும் ..”

“அச்சச்சோ கடைசியில் உங்க வண்டியிலேயா உதவி கேட்டு வந்தேன்.

நீங்க மாப்பிள்ளைகிட்டயோ இல்ல எங்க வீட்டுலயோ யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்க தானே..

லிப்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறோம் ..இதுக்கு அப்புறமா சொல்லவா போறோம்.

உன்னை கொண்டு போயி ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு நாங்க எங்க வேலைய பாத்துட்டு கிளம்ப போறோம்.

இனி அந்த ஊருக்குள்ள எங்களுக்கு வேலை இல்லையே.

நாளைக்கு தான் நிச்சயம் நடக்காதே..

பொண்ணு இல்லங்குறப்போ எப்படி நடக்கும் .”

“அதுதானே ரொம்ப தேங்க்ஸ்.. யார்கிட்டயும் மறந்து கூட சொல்லிடாதீங்க .

எனக்கு இப்படி ஒரு உதவியை செஞ்சத ..நானும் உங்கள எல்லாம் மறக்கவே மாட்டேன் .

நிச்சயமாக உங்களுக்கு என்னைக்காவது உதவி தேவைப்பட்டால் நான் வந்து செஞ்சு தருவேன்.”

“ யாரு நீ !!செஞ்சு தருவ!! சரிதான் .அப்படி ஒரு நிலைமை எங்களுக்கு வராது .

இதோ வந்தாச்சு இறங்கிக்கோ.. பத்திரமா போ .இத பாரு நான் கொடுத்த அந்த ஹாஸ்டலுக்கு போ ‌

ஹாஸ்டல் வார்டன் என்னோட ஃப்ரெண்டோட அம்மா தான் .

அவங்க உன்னை பத்திரமா பாத்துக்குவாங்க .

சீக்கிரமா வீட்டுக்கு கிளம்புற வழியை பாரு “என்று சொல்ல..

“ சரி சார் ரொம்ப நன்றி. இந்த உதவியை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன் .

டிரைவர் அண்ணா உங்களுக்கும்தான் “என்று சொல்ல ..

“யாரு நான் உனக்கு அண்ணனா ..பிச்சுடுவேன் ஒழுங்கா வழிய பார்த்து போற வழிய பாரு .”என்று சொன்னபடியே சிரிக்க.. வேகமாக உள்ளே ஓடினால் பவானி.

இவர்கள் வண்டியை திருப்புவதற்கு முன்பாகவே சில நொடிகளிலேயே பதறி அடித்து ஓடி வந்தாள்.

வேகமாக வண்டியில் முன்னாள் வந்து விழப்போவது போல் வந்து நின்றவளை பார்த்து சட்டென பிரேக்கை அழுத்தினான்.

“இப்ப என்ன ஆச்சு.. எதற்காக பதறி அடிச்சு ஓடி வர்ற..

யாராவது சொந்தக்காரங்களை பார்த்துட்டியா..”
விஷ்வா திரும்பி ரயில்வே ஸ்டேஷனை பார்த்தபடி கேட்க..

“ஆமா எதிர்ல ஒரு பொண்ணு வந்தா‌.அவ என்னோட தங்கச்சி போல இருக்கு .

ஆப்போசிட்ல வந்துகிட்டு இருக்கறா…நான் பார்த்து பயந்து ஓடி வந்துட்டேன் .”

“பயந்து ஓடி வந்துட்டியா உன் தங்கச்சின்னா உனக்கு அத்தனை பயமா “.

‘அப்படி இல்லை மறுபடியும் வழக்கம் போல அந்த மாப்பிள்ளைக்கு என்னை நிச்சயம் பண்ணி கொடுத்துடுவாங்களே..

அதனாலதான் பயந்து ஓடி வந்துட்டேன் “.

“சரி இப்ப என்ன செய்யணும்”.

“ எனக்கு தெரியல” என்று சொன்னவள் வேக வேகமாக கதவை திறந்து மறுபடியும் வண்டிக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.

“ஏய்.. என்ன உள்ள வந்து
உட்காருற.. நாங்க போக வேண்டாமா” என்று வேகமாக நிதீஷ் கேட்டான்.

“நீ கொஞ்சம் பேசாம இருடா. இப்ப என்ன செய்யணும் சொல்லு “என்று கேட்க..

“ எனக்கு தெரியலையே.. ஏதாவது ஐடியா கொடுங்க “என்று தலையை குனிந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் எல்லாம் இவள் சொன்ன இவளுடைய தங்கை கடந்து போக…

இவனுக்கு காட்டினாள்..இப்போதைய பெண்கள் போல ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு டீசர்ட் தலையில் ஒரு குல்லா என முற்றிலும் வேறு தோற்றத்தில் இருந்தாள்.

“என்ன உன்னோட தங்கச்சி உன்னை மாதிரி இல்லையா.. அப்படியே ஆப்போசிட்டா இருக்கறா..

நீ குடும்பப்பாங்க சேலை கட்டி இருக்கற.. உன்னோட தங்கச்சி அப்படியே ஆப்போசிட்டா இருக்கா..”

“ அவ டவுன்ல படிக்கிறால்ல அப்போ அது மாதிரி தானே இருக்கணும் .

ரொம்ப தைரியசாலி தெரியுமா”.

“ உன்னை விடவா “என்று விஷ்வா கேட்க..

“ஏன் கேட்கறீங்க”.

“ பின்ன இல்லையா.. வீட்டை விட்டு ஓடி வரணும்னா எந்த அளவுக்கு தைரியம் வேணும்.

நீ ஓடி வந்திருக்கறயே.. உன்னை விடவும் தங்கச்சி தைரியசாலின்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன் “என்று சொல்லும்போதே..

“ இப்ப நான் என்ன செய்யறது எங்க போகணும் ..எனக்கு ஏதாவது வழி சொல்லுங்களேன்” என்று இவர்களிடமே கேட்டாள்.

“உனக்கு நிறைய தைரியம் தான்..ஆனா இந்த அளவுக்கு இருக்க கூடாது.

வேற யார்கிட்டயாவது மாட்டி இருந்தால் இன்றைக்கு உன் நிலைமையே வேற மாதிரி ஆகி இருக்கும் .

சரியான இடத்துக்கு வந்ததால் தப்பிச்ச” மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் .

“இரு ஒரு நிமிஷம் .. நான் ஒரு போன் பண்ணிட்டு வந்த பிறகு உன்னை எங்க கொண்டு போய் விடறதுன்னு யோசிக்கிறேன்” என்று விஷ்வா இறங்கி வெளியே நகர்ந்தான்.
 

Kavisowmi

Well-known member
3

போனை எடுத்தவன் அழைத்தது தன்னுடைய தாய் தந்தைக்கு தான் .

“என்னமா என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .”

“நாளைக்கு நிச்சயத்துக்கு போகனும் இல்லையா .பூ தட்டுன்னு எல்லாத்தையுமே அரேஞ்ச் பண்ணிக்கிட்டு இருக்கோம் .

11 தட்டு ரெடி பண்ணி இருக்கிறோம் .ஊருக்குள்ள இருக்குற முக்கியமான சொந்தக்காரர்கள் எல்லாம் வர சொல்லியாச்சு .”

“சரிதான் அதுக்கு அங்கே பொண்ணு இருக்கணும்”.

“ என்னடா சொல்ற ..”

“அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல போல இருக்குது .

வீட்டை விட்டு வெளியே வந்துட்டா ..”

“அச்சச்சோ அப்படியா ..அந்த பொண்ணுக்கு உலகமே தெரியாதுடா..

என்னடா இப்படி குண்ட தூக்கி போடற ..அந்த பொண்ணோட பேச்சு ,சிரிப்பு அத்தனையுமே வெள்ளந்திதனமாக இருக்கும். அதனால தான் உனக்கு பேசி முடிவு பண்ணினோம் “.

“இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க “.

“நீ சொல்றது எனக்கு புரியலடா”.

“ அந்த பொண்ணு இப்போ என் பக்கத்துல தான் இருக்கறா.. என் வண்டில இருக்கறா..

அந்த பொண்ணு மனசுல யாரோ போலீஸ்காரங்க தப்பானவங்கன்னு சொல்லி வச்சிருப்பாங்க போல இருக்கு.

அந்த பொண்ணு ரொம்ப பயத்தோட இருக்கறா..

நீங்களே பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா கூட இந்த கல்யாணம் நாளைக்கு கஷ்டம் தான் .”

“என்னடா இது ..அதிகபட்சம் அரை மணி நேரம் பேசி இருப்பியா..

அதுக்குள்ள இப்படி ஒரு முடிவு சொல்லுவியா .அந்த பொண்ணு கிட்ட பேசும் போது தெரியலையா .

அந்த பொண்ணு எவ்வளவு வெள்ளந்திதனமாக இருக்கிறான்னு”.

“அதெல்லாம் கரெக்ட் மா.. அந்த ஒரு காரணத்தை வைத்து கல்யாணம் பண்ணிக்க முடியுமா .

நான் இருக்கிற வேலைக்கு புத்திசாலித்தனம் வேணும் .

நாளைக்கு இவள் பின்னாடியே இவளுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு என்னால சுத்திக்கிட்டு இருக்க முடியாது புரிஞ்சுதா .”

“அப்படி இல்லடா .நீ எதுக்காக பாதுகாப்பு கொடுத்து சுத்த போற ..

உனக்கு எப்படியும் குவாட்டர்ஸ்ல வீடு தர போறாங்க. அங்க தான நீ இருப்ப ..

இவ வீட்ல பத்திரமா இருக்க போறா.. இந்த மாதிரி பேசுறத நிப்பாட்டு விஷ்வா

எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம்னு ஒன்னு பண்ணினா அந்த பொண்ண தான் நீ பண்ணிக்கணும் .”

“ஏன் மா இப்படி பிடிவாதம் பண்றிங்க .சரி இப்ப நான் அந்த பொண்ண என்ன பண்றது”.

“ எனக்கு புரியல .”

“எங்க போறதுன்னு தெரியாம என் வண்டியில் தான் உட்கார்ந்து இருக்கிறா..

ஆண்டியோட ஹாஸ்டல் அட்ரஸ் கொடுத்தேன் .ஆனா இப்ப அங்கயும் போற மாதிரி தெரியல .

வேற எங்கேயாவது அழைச்சிட்டு போங்கன்னு வந்து நிக்குறா ..”

“ஒன்னு செய்யேன் ..பேசாமல் நம்ம எஸ்டேட்டிற்கு அழைச்சிட்டு போடா “.

“ஹலோ என்ன விளையாடுறீங்களா. வயசு பொண்ண கூட்டிட்டு போயி நான் என்ன செய்யறது.”

“ நீ ஏன்டா அப்படி யோசிக்கிற .வீட்டில வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி அந்த பொண்ண கூட்டிட்டு போ.

உன்ன பத்தி பக்கத்திலிருந்து பார்த்து புரிஞ்சுகிட்டான்னா உன் மேல வச்சிருக்கற அந்த நம்பிக்கை மாறிடாது.

போலீஸ்காரன்னா நல்லவன்னு அவ மனசுக்குள்ள வரும் தானே .
அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்”.

‘ சரிதான் அந்த பொண்ணோட அப்பா ,அம்மா கிட்ட என்ன சொல்லுவீங்க .”

“இத பாருடா உங்க அப்பாவோட பிரண்டு தான் அந்த பொண்ணோட அப்பா..

சொன்னா புரிஞ்சுக்கவார்.. நாளைக்கு நிச்சயம் வேண்டாம் இன்னொரு நாள் வச்சுக்கலாம்.
அது மட்டும் இல்ல..

பொண்ணு இந்த மாதிரி வீட்டை விட்டு வெளியே கிளம்பி போயிட்டாங்கறது இந்நேரத்துக்கு அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் .

நிச்சயமா இங்க கூப்பிட்டு என்னன்னு சொல்வாங்க .

அப்ப நாங்க சொல்லி புரிய வச்சிக்கிறோம்.

இல்லன்னா நீயே கூப்பிட்டு வேணும்னாலும் சொல்லிடு.

பொண்ணை பத்தின பயம் வேணாம் அவ பத்திரமாக இருக்கிறான்னு.

நான் பார்த்துக்கிறேன் இன்னொரு நாள் நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிடு புரிஞ்சுதா .”

“இப்ப அடுத்ததா அங்க நான் போன் பண்ணி பதில் சொல்லணும் .அதுதானே .”

“ஏன் சொல்ல மாட்டியா ..நீ போலீஸ்காரன் தானே.. எவ்வளவு அழகா போட்டு வாங்குவ .

அது மாதிரி ஏதாவது பேசி சமாதானம் சொல்லு..

எனக்கு அந்த பொண்ணு வேணும். அவ்வளவுதான் “.

“சரி சரி விடுங்க . ஃபோன்னை வைங்க .நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவன் அடுத்ததாக பவானியில் தந்தைக்கு அழைக்க..

ஏற்கனவே மகளை காணவில்லை என அரக்க பறக்க தேடிக் கொண்டிருந்தவர் சற்று பதட்டத்தோடு தான் போனை அட்டென் செய்தது .

“யார் பேசுறீங்க “.

“நான் தான் விஷ்வா அங்கிள் ..எப்படி இருக்கீங்க .நல்லா இருக்கீங்களா”.

“ தம்பி “சொல்லும் போதே குரல் கமர இவனுக்கு புரிந்தது .

“உங்க பொண்ணு அங்கே இருக்க மாட்டா தானே..

உங்க பொண்ணு ஊர விட்டு வெளியே போறதுக்கு ஹெல்ப் கேட்டது என்கிட்ட தான் .

உங்க பொண்ணு கிட்ட என்னோட போட்டோவை நீங்க காட்டலையா ..”

“இல்ல தம்பி போட்டோ கொடுத்தேன் .அவ பார்க்கலை போல இருக்கு .”

“சரி சரி பொண்ண பத்தின கவலை வேண்டாம். நாளைக்கு நிச்சயம் வேண்டாம் .

உங்க சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் சொல்லிடுங்க.

இன்னொரு நாள் நல்ல நாளா பார்த்து வச்சுக்கலாம்னு..

பொண்ணு பத்திரமா என்கிட்ட தான் இருக்கிறா..

என்ன பத்தி புரிய வைத்து விட்டு நானே உங்ககிட்ட அழைச்சிட்டு வரேன்.

அதுக்கு பிறகு நிச்சயம் பண்ணிக்கலாம் .சரியா “.

“தம்பி இது சரி வருமா ..இதெல்லாம் தப்பு இல்லையா. இது மாதிரி நான் யோசிச்சது கூட கிடையாது.

கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பையன் கூட எப்படி அனுப்பி வைக்க முடியும் .”

“நீங்க ஏன் அங்கிள் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க .நான் இப்போ எஸ்டேட்டுக்கு தான் போறேன் .

அங்க அம்மாவுமே வந்துடுவாங்க .அம்மாவுக்கு துணையா இருக்கட்டும்.

கொஞ்சம் பழகி பார்க்கட்டும் .நிச்சயமா உங்க பொண்ணு என்னை தேர்ந்தெடுப்பா.

இந்த பையன தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுவா..

அப்ப நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க சரியா .இப்போதைக்கு உங்க பொண்ணப்பத்தி யாராவது கேட்டா..

சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் இருக்கிறான்னு ஏதாவது சொல்லி சமாளிங்க .

என்ன அங்கிள் நான் சொல்றது கேக்குதா.. என்னைக்குனாலும் அம்மா விருப்பப்பட்டது உங்க பொண்ண தான் .

தனக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டது உங்க பொண்ணை தான்..

அதனால அவங்களோட ஆசையை நிச்சயமா நான் நிறைவேற்றி வைப்பேன்.

கவலை இல்லாமல் நிம்மதியா அடுத்த வேலையை கவனிங்க” சொல்லிவிட்டு போனை வைத்தவன்.

வேகமாக அருகே வந்து வழக்கம் போல தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.

“என்ன சார் நீங்க பேசி முடிச்சிட்டு வந்தாச்சா. நான் நல்லா யோசிச்சு பார்த்தேன்.

என்னை அந்த ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுடுங்க”.

“ அதைவிட பெஸ்டான ஐடியா என்கிட்ட இருக்குது .கேக்குறியா ..கேட்க தயார்னா சொல்லு .சொல்றேன் “என்று விஷ்வா கூற..

“ என்ன சொல்லுங்க கேட்கலாம்” என்று வேகமாக கேட்டாள்.

“என்னோட வீட்ல வேலைக்கு ஒரு ஆள் தேவை இருக்குது.. பயப்படாத என்னோட வீடுன்னா நான் மட்டும் இல்ல .

என்னோட வீட்ல எல்லாரும் இருப்பாங்க. அம்மா, அப்பா இன்னமும் கொஞ்சம் வேலைக்கு ஆட்கள் எல்லாருமே இருப்பாங்க.

நீ அங்க வேலை செய்யறையா.. உனக்கு சம்மதமா.. சம்மதம்னா நேரா அழைச்சிட்டு போறேன் பயப்பட வேண்டாம்.”

“ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்குது ஆனா இது சரி வருமா தெரியலையே..

ஒருவேளை நீங்க தப்பானவரா இருந்தா “.

“சரிதான் தப்பானவனா இருந்தா நம்பி மறுபடியும் இதே வண்டியில் ஏறி இருப்பியா..

பயப்படாதம்மா ..நீ எங்க வேலை செய்ய போறேங்கிறது உங்ககிட்ட சொல்றோம் .

போற இடத்தோட அட்ரஸ் கூட தெளிவா சொல்லிடறோம் .”

“சரி அப்படின்னா ஓகே தான்.
எனக்கு என்ன வேலை தருவீங்க “.

“உனக்கு என்ன வேலை தெரியும் .அத முதலில் சொல்”.

“நான் ரொம்ப நல்லா சமைப்பேன் .விதவிதமா என்ன குடுத்தாலும் சமைப்பேன் .

அப்புறமா இந்த ஆர்ட் அண்ட் கிராப்ட் எல்லாம் ரொம்ப நல்லா வரும் .

துணி தைக்க தெரியும் அப்புறமா தோட்டத்தை ரொம்ப அழகா பராமரிப்பேன்..

மொத்தத்துல வீட்டை ரொம்ப சத்தமா வச்சுக்குவேன் .”

“ஆக வீட்டு வேலை எல்லாம் பர்ஃபெக்ட்டா செய்வ அது தானே ..”

“ஆமாம்”.

“ அப்படின்னா சரி என்னோட அம்மாவுக்கு உதவியா நீ இருப்பியாம் .
என் அம்மா கிட்ட பேசறியா” என்று சொன்னவன் தாயாருக்கு போனில் அழைத்து..” அம்மா நான் சொன்னேன் இல்லையா .

வீட்டு வேலைக்கு ஒரு பொண்ணு அழைச்சிட்டு வரேன்னு .

அந்த பொண்ணு கிட்ட பேசுறீங்களா” என்று சொல்ல..

“ டேய் என்னடா நடக்குது அங்க..
என் மருமகளை பார்த்தா வீட்டு வேலை செய்ற மாதிரியா இருக்குது .

வீட்ல பத்துக்கு மேல வேலைக்காரங்க இருக்காங்க.

நீ என் மருமகளை வேலைக்காரி ,வீட்டு வேலை செய்யறவ சொல்லி வைக்கற” என கோபமாக கோபித்துக் கொள்ள ..

“அம்மா கோச்சுக்காதீங்க .இப்ப அந்த வேலை தான வீட்ல காலியா இருக்குது “என்று சொன்னபடியே ..இவளிடம் நீட்ட.. வாங்கி “ஹலோ நான் பவானி பேசுறேன்” என்று தயங்கி பேச..

“எப்படிமா இருக்கிற.. நல்லா இருக்கிறயா.. பயப்படாம வா. இப்பதான் என் பையன் சொன்னான் .

உனக்கு ஏத்த வேலை என் வீட்ல இருக்குது “என்று சொல்ல “சரிமா வரேன் “என்றாள்.
 

Kavisowmi

Well-known member
4

“இப்ப எங்கடா வண்டிய விடனும்” என்று நண்பன் கேட்க..

“ நேரா இப்போ எஸ்டேட்டுக்கு வண்டியை விடு. ஆல்ரெடி நாலஞ்சு வேலைக்காரங்க இருக்கிறாங்க தானே..”

“ அதெல்லாம் இருக்கிறாங்கடா அம்மா என்றைக்கு வராங்க”.

“ நாளைக்கு வந்துடறதா சொல்லி இருக்காங்க .நேரா அங்க வந்துடுவாங்க. “

“அப்படின்னா ..”

“அப்பாக்கு பிசினஸ் இருக்குது அதை பார்க்கணும் இல்லையா அவர் கிளம்பிடுவாரு .

இடையில ஒரு மாசம் கழிச்சு வந்து பார்க்கிறதா சொல்லி இருக்கிறார் .

”இவர்கள் பேசுவதை கவனித்தவள்.. திடீரென “ஆமா நான் இந்த கேள்வியை கேட்கவே இல்லையே ..”

“என்ன கேள்வியை ..”

“நீங்க ரெண்டு பேரும் என்ன வேலை செய்றீங்க .அதை சொல்லவே இல்லையே .”

“நாங்க ..எங்களுக்கு எஸ்டேட் இருக்குது .அங்க நிறைய காய்கறிகள் எல்லாம் விளையுது .

தோட்டம் இருக்குது .அததான் கவனிச்சிக்கிட்டு இருக்கிறோம்.

அப்புறம் நம்ம விஷ்வாவுக்கு கதை எழுதுறதுன்னா ரொம்ப பிடிக்கும் .

அவன் ஒரு பேமஸ் ரைட்டர்.. நிறைய புக்ஸ் எழுதியிருக்கிறான்.

அதுதான் அவனோட வேலை..”

“ கதை எழுதுவது கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் அதுல பெருசா பணம் வராதே”.

“அப்படின்னு யார் சொன்னாங்க.. அவனோட புக் தெரியுமா ..

பப்ளிஷ் பண்ணி அனுப்பினால் ஈஸியா அவ்வளவு வேகமாக விற்கும் .

உனக்கு அவனைப் பத்தி சொன்னா புரியாது” என்று சொல்ல ..

“டேய் கொஞ்சம் சும்மா இரு .ஏன் இப்ப நீ அந்த பொண்ண குழப்புற.. “

“இல்ல எனக்கும் கதை எல்லாம் படிக்க பிடிக்கும் .நானும் சில கதைகள் படிச்சிருக்கிறேன்.

நீங்க என்ன பேர்ல எழுதுறீங்க சொல்லுங்க.. “

‘ஏன்டா மாட்டி விடற’என்று மனதிற்குள் நினைத்தவன்..

‘கட்டுரைகள் மட்டும் அனுப்பிகிட்டு இருக்குறேன் .நான் இனி அடுத்ததா எழுதும் போது உனக்கு தரேன் .

நீ படிச்சு பாரு ..எழுதறது எல்லாமே ஆங்கில நாவல்கள்,ஆங்கில கட்டுரைகள் தமிழ்ல எனக்கு எழுத சரியா வராது”.

“ அப்படியா நான் தமிழ் கதைகள் மட்டும்தான் படித்திருக்கிறேன் .

ஆங்கிலம் எனக்கு சுத்தமா எழுத வராது .படிக்கவும் சரியா தெரியாது அதனால தான் எனக்கு தெரியல போல இருக்கு .எனிவே நீங்க நல்லா எழுதுங்க” என்று சொல்ல... முன்னிருக்கையில் அமர்ந்திருந்த விஷ்வா நண்பனின் தோளில் பட்டென அடித்தான்.

“ இன்னொரு தடவை ஏதாவது தேவையில்லாமல் உளறி என்னை சிக்க வச்சா கொன்னுடுவேன் .

ஒழுங்கா வீடு போய் சேர வரைக்கும் நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது” என்று சொல்ல ..”சரிடா” என்றபடியே ஒரு மணி நேரம் கழித்து இவர்கள் இருந்த பகுதிக்கு வந்தனர் .

பெரிய எஸ்டேட் அது..

சோலை வனம் என்ற பெயரோடு இவளை வரவேற்க.. பார்த்தவள் “ரொம்ப அழகா இருக்குது.. இதுதான் உங்களுடைய எஸ்டேட்டா “என்று கேட்டாள்

“ஆமா இதுதான் எங்களோட எஸ்டேட் ..அடுத்த ஆறு மாசம் இங்கதான் இருந்து வேலையை செஞ்சாகணும்.”

“ அப்படியா என்ன வேலை செய்வீர்கள் .”

“கட்டுரை எழுதுவது, கதை எழுதுவது அதைத்தான் செய்வேன். எப்பவுமே ரூம்ல வேலை இருக்கும்.

நீ பயப்படத் தேவையில்லை அங்க நிறைய வேலையாட்கள் இருக்கிறாங்க.

அறிமுகப்படுத்தறேன். சாப்பாடு செஞ்சு கொடுப்பதற்கு கூட ஆள் இருக்காங்க “என்று சொன்னபடியே இவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

வண்டியில் இருந்து இறங்கவுமே வயதான பெண்மணி ஒருவர் வேகமாக ஆரத்தி தட்டுடன் வந்தார்.

“ வாங்க தம்பி வாங்க” என்று அழைக்க..

‘ என்ன இது என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.”

“புதுசா வர்றீங்கல்ல ..அதுக்காக தான் “என்று அமைதியாக சொல்ல ..விஷ்வாவின் நண்பனுக்கு அத்தனை சிரிப்பு.

“ சரி தான் செமையா இருக்குதுடா .இத பார்த்தா நிச்சயம் பண்றதுக்கு போன மாதிரி தெரியல .

யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்த மாதிரி இருக்குது “என்று சிரிக்க..

“ வாய மூடிட்டு சும்மா இருடா” என்றவன் வேகமாக.. “முதல்ல இத அந்த பக்கம் கொண்டு போங்க .

நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. இந்த பொண்ணு வேலை செய்றதுக்கு வந்திருக்கிறா..”என்று சொல்ல ..
“அம்மா இப்பதான் போன் பண்ணி சொன்னாங்க .

எனக்கு எல்லாம் தெரியும் சும்மா கதை விடாதீங்க தம்பி” என்றவர்… ஆரத்தி தட்டை ஓரமாக வைத்துவிட்டு வேகமாக இவளுக்கு அருகே வந்தார் .

இந்த எஸ்டேட்டுக்கு யார் வந்தாலும் ஆரத்தி எடுத்து தான் உள்ள கூப்பிடுவோம்.

அதுக்காக தான் மா ..வா வந்து நில்லு “என்று இவளை நிற்க வைத்து..” என்ன தம்பி நீயும் வா..அந்த பக்கம் வேடிக்கை பார்த்தா என்ன அர்த்தம்.

ரெண்டு பேருமே பக்கத்துல வந்து நில்லுங்க.”.

விஷ்வா வரவும் இருவரையும் நிறுத்தி ஆரத்தி காட்ட இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை .சுற்றிப் பார்த்தபடியே சிரித்தாள்.

“ உங்க எஸ்டேட்டோட வழக்கம் எல்லாமே எனக்கு பிரமிப்பா இருக்குது.

சிரிப்பு சிரிப்பா வருது.. யாராவது இப்படி எடுப்பாங்களா .

பொண்ணு மாப்பிள்ளையை நிக்க வச்சு எடுக்குற மாதிரி இருக்கு “என விளையாட்டு போல சொல்லிவிட்டு போக.. தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான் விஷ்வா.

சற்று நேரத்தில் எல்லாம் உள்ளே நுழைந்த விஷ்வா இவளை அழைத்துக்கொண்டு அருகே இருந்த ஒரு அறையை கட்டினான்.

“ இதுதான் இனி உன்னோட ரூம் உனக்கு பிடிச்சிருக்கா” என்று கேட்க..வேகமாக உள்ளே நுழைந்து பார்த்தவள்.

“ ரொம்ப அழகா இருக்குது. என்னோட வீடு மாதிரியே இருக்குது .

எல்லா வசதியும் இருக்குது. இது ரூம் தான் எனக்கு அலாட் பண்ணி இருக்கீங்களா .

இந்த ரூம் தான் எனக்கு தர போறீங்களா.. உங்க தோட்டத்துல வேலைக்காரங்களுக்கெல்லாம் இது மாதிரி தான் ரூம் தருவீங்களா” என்று வேகமாக கேட்க ..

இப்போது இவனிடத்தில் பதில் இல்லை .

“அது வந்து நான் உன்னை வேலை செய்றதுக்காக இங்க கூட்டிட்டு வரல .

என்னோட அம்மா நாளைக்கு வந்துருவாங்க .அவங்களுக்கு உதவியா இருக்குறதுக்காக தான் அழைச்சிட்டு வந்திருக்கிறேன்.

அவங்களுக்கு உதவியா இருக்கணும்னா அவங்க பக்கத்தில் இருக்கணும் இல்லையா .

அதுக்காக தான் இந்த ரூம்பை உனக்கு செலக்ட் பண்ணி இருக்கிறேன் .

மத்தபடி வேலைக்காரங்களுக்கு எல்லாம் வீடு இங்க இல்லை. எஸ்டேட்டுக்கு பின்னாடி வரிசையா வீடு கட்டி கொடுத்திருக்கறோம்.

அங்க தான் இருக்காங்க எல்லாரும் “என்று சொல்ல ..

“ஓ அப்படியா சரி சரி .அம்மா நாளைக்கு காலையில வந்துருவாங்கல்ல .”

“அதெல்லாம் கரெக்டா வந்துருவாங்க .இந்நேரத்துக்கு கிளம்பி இருப்பாங்க” என்று சொன்னபடியே ..

“என்னோட ரூம் அதோ கடைசில இருக்குது .ஏதாவது உதவி வேணும்னா கூப்பிடு .விஷ்வான்னு கூப்பிட்டா வெளியே வந்திடுவேன்” என்று சொல்லிவிட்டு நகர.. கூடவே அவனது நண்பனை பார்த்தவன்.

“ நீயும் வா .உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்குது” என்று உள்ளே நுழைந்தான்.

“என்னடா இனி காதலிக்கவே நேரம் பத்தாது போல இருக்கு.

வேலையெல்லாம் செய்வியா” நண்பனை கிண்டல் செய்ய..

“ அடி வாங்க போற.. அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது .

நாளைக்கு நம்ம வேலையை தொடங்கிடனும் இங்கிருந்து நாம போக வேண்டிய ஸ்பாட் எவ்வளவு தூரம் இருக்குது.”

“ கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் ஆனா இந்த காட்டுக்குள்ள வந்து என்ன செய்யப் போறாங்க .

தீவிரவாதிகள் இங்க வந்து தாக்குற அளவுக்கு இங்க எதுவுமே கிடையாது .

என்னதான் நடக்க போகுதுன்னு ஒன்னும் புரியல.”

“நமக்கு கொடுத்திருக்கிற அசைன்மென்ட் அது தானே..

இன்னும் ஆறு மாசம் காலத்துல இங்க ஏதோ பெரிய தீவிரவாதிகளோட அட்டாக் நடக்க போறதா ரகசிய தகவல் கிடைச்சிருக்கு .

அதை கண்டுபிடிப்பதற்காக தான் நீயும் நானும் இங்க வந்திருக்கிறோம் .

வித்தியாசமாக யாராவது வருகிறார்களா ..தென்படுறாங்களா ..இது எல்லாமே கவனிக்கலாம் .”

“சரிடா”.

“ சரி நீ போய் தூங்கு.”

அடுத்த நாள் காலையில் தாய், தந்தை இருவருமே வந்திருந்தனர் .

வந்தவர் நேராக இவளை வந்து பார்க்க ..முதலில் பார்க்கவுமே பவானி அவருடைய காலில் விழுந்து எழுந்து நின்றாள்.

“வாம்மா.. வா..நல்லா இருக்கறையா” என்றவர் மகனை பார்க்க ..

“நான் தான் சொன்னேன்ல.. நேத்து வேலைக்கு எடுத்திருக்கிற பொண்ணு இந்த பொண்ணு தான்.

உங்களுக்கு ஹெல்ப்புக்கு வச்சுக்கோங்க .நான் இன்னைக்கு மதியத்துக்கு மேல கிளம்பிடுவேன் மா “என்று சொல்ல ..

“என்னடா உளர்ற.. நீ எதுக்காக கிளம்பனும் .இங்கேயோ இருந்து வேலையை பாரு “.

“ எனக்கு ரூம் தனியா கொடுத்து இருக்காங்க .அங்க தான் நான் தங்கணும் .”

“சும்மா இந்த கதை எல்லாம் இங்கே ஆகாது .எனக்கு தெரியும். நீ இங்கதான் இருக்கிற.. புரிஞ்சுதா..”

“நிதீஷ் நீ சொல்லக்கூடாதா”.

“ நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் .தாராளமா இங்கேயே பிடிச்சு வச்சுக்கோங்க.

தேவைப்படும்போது நான் வந்து அழைச்சிட்டு போறேன்” என்று சொல்ல நண்பனை பார்த்து முறைக்க ஆரம்பித்தான் விஷ்வா.
 

Kavisowmi

Well-known member
5

அன்றைக்கு முழுக்க விஷ்வா தன் தாயார் பூரணி உடனேயே சுற்றிக் கொண்டிருந்தான்.

பவானியை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் .

அதிலும் பவானியை அவருக்கு மிகவும் பிடித்தது.

அவளுடைய பேச்சு, சிறு சிறு செயல் அத்தனையுமே அவரை கவர்ந்து இருக்க.. தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் .

மாலை நேரமாகவும் “தோட்டத்தில் நிறைய மல்லிகைப் பூ இருக்கும் .

நம்ம ரெண்டு பேரும் போய் பரிச்சிட்டு வரலாமா “என்று கேட்க.. சரியென புறப்பட்டனர்.

அந்த மாலை வேலையில் சரியாக விஷ்வா அந்த வழியாக வந்து கொண்டிருந்தான்.

“என்னமா இந்த பக்கம் “என்று கேட்டபடியே வர.. “பூப்பறிக்கலாம்னு வந்தேன்டா “என்று பூக்கூடையைக் காட்ட.. அவனுமே தாய்க்காக வந்து நின்று கொண்டான் .

இருவருமே விளையாட்டு போல பேச ஆரம்பிக்க.. சற்று தொலைவில் நகர்ந்து நின்றவள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

“ஒழுங்கா வேலை செய்யுற இடத்துக்கு போறேன்னு சொன்னேன் .

அதுக்கும் விடலை.. இப்படி எஸ்டேட்க்குள்ள போட்டு அடைக்கறீங்கம்மா .

நல்ல வேளை இந்த அப்பா அப்பப்போ எஸ்கேப் ஆயிடறாங்க .”

“ஆமாண்டா உங்க அப்பாவுக்கு வேலை இருக்குது .ஏற்கனவே ஏலக்காய் எல்லாமே எக்ஸ்போர்ட் பண்ற நிலைமையில் இருக்கு.

அதுக்கெல்லாம் அவர் போனால் தானே வேலையாகும்.

அதுக்குன்னு ஒரு வாரமா.. அந்த ஒரு வாரமும் நான் இங்கதான் இருக்கணும்னு கண்டிஷன் வேற போட்டு போயிட்டாங்க.”

“ஏன்டா அது தான் காலைல போனா சாயங்காலம் தானே திரும்ப வர்ற.. அப்புறம் என்ன புலம்பல்” என்று பேசியபடி அப்போது தான் திரும்பி கவனித்தார் .

“ பவானி ஏன் அங்கே நின்னுட்ட இங்க வா “என்று அழைத்தார் .

“இல்லமா ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க .நீங்க பேசிக்கிட்டே இருங்க. நான் இப்படி ஓரமா நிற்கிறேன்.”

“ அப்படி எல்லாம் தப்பா நினைக்க மாட்டோம் வா .வந்து பக்கத்திலேயே நில்லு .

எந்த ரகசியமும் பேச போறது இல்ல “என்று சொல்ல..

“ அப்படி இல்லம்மா அம்மா பையணுக்குள்ள பேச்சு வார்த்தை நிறையவே இருக்கும் அத வந்து கவனிக்கிறது நல்லதா என்ன “ என்று சொன்னபடி நிற்க விஷ்வா இவர்களோடு நின்றவன் மெல்ல நகர்ந்தான்.

நாட்கள் நகர ஆரம்பித்தது. ஒரு வாரம் தாண்டிவிட்டது.

இது வரையிலுமே வீட்டிற்கு தகவல் சொல்லவில்லை.

அதுவே அவளது முகத்தில் சோர்வை தந்திருந்தது.

இதை கவனித்தவன் இவளை அழைத்தான்.

“ என்ன சார் சொல்லுங்க”.

“என்ன சாரா “என்றவன்..” சரி அம்மா எங்க ?”

“அம்மா கொஞ்ச நேரம் தூங்க போறேன்னு போனாங்க “.

“என்ன ஆச்சு ஏன் முகம் இப்படி டல் அடிக்குது”.

“அது வந்து.. இங்க வந்து ஒரு வாரம் ஆச்சு .அம்மா ,அப்பா பயந்துகிட்டு இருப்பாங்க.

அதுதான் யோசிச்சிகிட்டு இருக்கேன் .”

“அப்படின்னா போன் பண்ணி பேச வேண்டியதுதானே.”

“ போன் பண்ணினா.. கண்டு பிடிச்சு நேரா இங்க வந்துட்டாங்கன்னா..”

“நீ இடத்தை சொல்லாம எப்படி வருவாங்கன்னு நினைக்கிற. அதெல்லாம் வர மாட்டாங்க .போன் பண்ணி பேசு “.

“இல்ல எனக்கு பயமா இருக்கு “.

‘அப்படின்னா ஒன்னு செய் .போன் பண்ணி என்கிட்ட கொடு நான் பேசுறேன்..”

“அப்போவும் என்னை திட்டுவாங்களே ..”

“அதெல்லாம் திட்ட மாட்டாங்க கொடு “என்றவன் கையை நீட்ட தயங்கிய படிய போனை எடுத்து நீட்டினாள்.

வேகமாக அழைத்தவன் “ஹலோ “என்று சொன்னபடியே நகர்ந்து போக ..இவளோ சற்று பதட்டத்தோடு அவனை கவனித்தாள்.

தொலைவில் சென்றவன் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு நேராக கொண்டு வந்து ஃபோனை இவளிடம் நீட்டினான்.

“சமாதானமா பேசுறேன்னு சொல்லி இருக்காங்க .இந்தா அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளு” என்று நீட்ட..

வாங்கியவள்”அப்பா “என்று சொல்லவுமே ..”ஏன் இப்படி எல்லாம் செய்ற ..சரியான நேரத்தில் இப்படி ஓடிப்போய் எங்க எல்லாத்தையும் அசிங்கப்படுத்திட்ட” என்று கோபமாக சொல்ல ..

“நான் தான் சொன்னேன்ல அவர் திட்டுவார்.. இதோ பாருங்க திட்றாங்க” என்று இவனிடமே புகார் படித்தாள்.

இவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ பின்ன செஞ்சு வச்ச காரியம் சின்ன காரியமா.. திட்டாமல் என்ன செய்வாங்க.
என்னன்னு கேளு “என்று சொல்ல..

‘ இத பாரு இப்பதான் அந்த தம்பி சொன்னாரு.. சொல்லும் போது.. கேட்கும் போது கொஞ்சம் கோவம் வந்தாலுமே போனா போகட்டும் மகளா போயிட்ட ..அதனால சரின்னு சம்மதித்திருக்கிறேன் .

ஒழுங்கா இப்ப சொல்றது தான் கேட்டுக்கோ.

ரெண்டு மாசம் தான் டைம் அதுக்குள்ள நீ சீக்கிரமாக திரும்பி வந்தாகணும் .

அங்கேயே உட்கார்ந்து இருக்க கூடாது புரிஞ்சுதா .”

“சரிப்பா சரி”.

“ பயப்படாத நீ நினைக்கிற மாதிரி அந்த பையனுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் .சரியா .

உனக்கு பிடிச்ச மாதிரி வேற மாப்பிள்ளையை பார்த்துக்கலாம் .

அதுக்காக உடனே வர வேண்டாம் .ரெண்டு மாசம் உன்னை நம்பி வைத்திருக்கிறார்கள்.

அவர்களுக்காகவாவது அங்க இரு. உனக்கு தான் ரொம்ப நல்லா சமைக்க தெரியுமே.

அங்க இருக்குற வேலைக்காரங்க யாருக்குமே சரியா சமைக்க தெரியலையாம்.

நீ கொஞ்சம் சொல்லிக் கொடுத்துட்டு வா.. “

“ சரிப்பா சரி “என்று மகிழ்ச்சியாக முகம் மலர்ந்தாள்..

“ என்ன எல்லாம் ஓகே தானே அப்பா சரி சொல்லிட்டாங்க தானே . “

“ஆமா சார் எப்படி சார் ..எப்படி இந்த மேஜிக் நடந்தது. அவர் எவ்வளவு கோபக்காரர் தெரியுமா .

போன் பண்ணினா கத்து கத்துன்னு கத்துவார் என்று பயந்துக்கிட்டே இருந்தேன் .

நீங்க சரியா பேசி ஓகே சொல்ல வச்சுட்டீங்க .எப்படி”.

“ அதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும். அந்த திறமை உனக்கு கிடையாது. எனக்கு நிறைய இருக்குது .சரி இனியாவது நிம்மதியா ரிலாக்ஸ்டா இரு.

இப்படி முகத்தை தொங்க போட்டுக்கிட்டு இருக்காத.. பார்க்க நல்லாவே இல்ல “என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அதே மகிழ்ச்சியில் அன்றைக்கு மாலை அவளுடைய வேலையை ஆரம்பித்திருந்தாள்.

நேராக சமையல் கட்டுக்கு சென்றவள் மாலை நேரத்திற்கு சாப்பிடுவதற்கு போல சிறு ஸ்னாக்ஸ் இன்னமும் சில ஐட்டங்களை செய்ய ஆரம்பிக்க.. எழுந்து வந்த பூரணிக்கோ அத்தனை மகிழ்ச்சி .

“என்ன ஆச்சு ..என்ன பவானி உன்னை யார் இங்க வந்து சமையல் வேலை எல்லாம் செய்ய சொன்னாங்க “.

“அப்பா தான் சொன்னாங்க அத்தை..”

“அத்தையா..”

“ அப்பா தான் சொன்னாங்க.. அத்தைன்னு கூப்பிடு.. அவங்க நமக்கு சொந்தம் தான் வரணும்னு சொன்னாங்க.

உங்க பையன் கூட சொன்னாங்களே நிச்சயத்துக்கு தான் அங்கே போயிட்டு இருக்கிறதா..”

“ஓ அப்படியா சரி வேற என்ன சொன்னாங்க .”

“இங்க சரியா யாருக்குமே சமைக்க தெரியலையாம்.. என்னை செஞ்சு பழகிவிட சொன்னாங்க ‌”

“சரியா போச்சு இருக்கிற வேலைக்காரங்களுக்கு என்ன வேலையாம்.

அவங்க.. அவங்க வேலையை கரெக்டா செய்வாங்க .”என்று சொல்ல ..

“அதெல்லாம் இல்ல. நீங்க சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க” என்று செய்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களை நீட்ட..

“ எனக்கு மட்டும் தானா விஷ்வா ரூம்ல இருப்பான். அவனுக்கும் ஒரு டம்ளர் காபி எடுத்துட்டு இதையும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்துரு “என்று அனுப்பி வைத்தார்.

விஷ்வா இருக்கின்ற அறை கதவை தட்ட எந்த சத்தமும் கேட்கவில்லை.

“ சார் விஷ்வா சார் “என்று கதவைத் தள்ள..சரியாக அப்போதுதான் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து இடுப்பில் துண்டை கட்டியபடி வெளியே வந்தான்.

ஒரு நிமிடம் பார்த்தவள் திகைத்தபடி திரும்பி நின்று கொள்ள.. இவனுக்குமே சற்று பதட்டம் தான்.
சிறு கூச்சத்தோடு “இப்ப எதுக்காக இங்க வந்த..”என்று கேட்க ..

“அது வந்து சார் “என்று வேகமாக திரும்பியவள் மறுபடியும் திரும்பி நின்று கொண்டு ..”இந்த ஸ்நாக்ஸ், காப்பியை கொடுத்துட்டு வர சொன்னாங்க .

அதுதான் இங்கே எடுத்துட்டு வந்தேன்.”

“ வந்த சரி ..கதவை தட்டற பழக்கம் எல்லாம் இல்லையா”.

“தட்டினேன் சார்..சத்தம் எதுவும் இல்லை .அதனாலதான் திறந்தேன் ..சாரி சார் “.

“சரி சரி அப்படி அந்த டேபிளில் வைத்துவிட்டு போ.. சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்ல.. மெல்ல மெல்ல அவனை பார்க்காதவாறு கொண்டு வந்து வைத்தவள்.” ஓகே சார் நான் வரேன் “என்று சொல்லிவிட்டு சட்டென்று வெளியேறினாள்.

உடல் முழுக்க ஒரு சிறு பதட்டம் தோற்றிக் கொண்டது.

விஷ்வாவோடு நிறைய பேசியிருக்கிறாள்.

ஆனால் இப்படி ஒரு கோலத்தில் அவனை பார்த்தது இல்லை .

வெற்று மார்பில் அவன் வந்து நின்ற கோலமே கண் முன்னால் வந்து சென்றது.

சிக்ஸ் பேக் , ஆறடி உயரம் அவனுடைய அகன்ற தேகம்..தன்னை அறியாமல் தலைக்கு ஆட்டியவள்.” கிறுக்கு பிடிச்சிருச்சா உனக்கு.. எதுக்காக நீ அப்படி பார்த்த..

பார்த்தது மட்டுமல்லாமல் திரும்பத் திரும்ப அதையே யோசிக்கிற ..

இது தப்பு.. அவர் உனக்கு சம்பளம் கொடுக்க முதலாளி. இரண்டு மாதத்துக்கு சம்பளம் தர்றதா சொல்லி இருக்காரு புரிஞ்சுதா.

உன்னுடைய வேலையில கரெக்டா இரு.. இன்னொரு தடவை ரூமுக்கு கொண்டு போய் நீ தரக்கூடாது புரிஞ்சுதா.” என தனக்கு தானே அட்வைஸ் செய்து கொண்டாள்.

அதே நேரத்தில் விஷ்வா தன் தாயாரின் நம்பருக்கு அழைத்தவன் திட்டிக் கொண்டிருந்தான்.

“ உங்களுக்கு என்ன அறிவே இல்லையா.. எதுக்காக அந்த பொண்ண ரூம் வரைக்கும் அனுப்பி வைக்கிறீங்க.

இன்னொரு தடவை இது மாதிரி செய்யாதீங்கம்மா.. எனக்கு கோவம் வருது “.

“என்னடா ரொம்பத்தான் மிரட்டிட்டு இருக்கிற. நாளைக்கு அந்த பொண்ணுக்கும் உனக்கும் கல்யாணம் ஆச்சுன்னா ..

அந்த பொண்ணு அந்த ரூம்ல தான் இருப்பா .அது தெரியுமா இல்லையா ..

என்னமோ யாரோ மாதிரி பேசிக்கிட்டு இருக்கிற.. இப்ப என்னதான் ஆச்சு .

என்ன பிரச்சனையாம் உனக்கு..”

“ குளிச்சிட்டு டவளை கட்டிட்டு வந்தா முன்னாடி வந்து நிற்கிறா..

இதுல வேற.. எனக்கு தான் கூச்சம் பிச்சுக்கிட்டு போகுது. என்னவோ இதுவரைக்கும் பார்க்காத மாதிரி வேடிக்கை பாக்கறா..

என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது .பஞ்சுமிட்டாயை குழந்தை வெரிச்சு வெரிச்சு பார்க்குமே அந்த மாதிரி பார்க்கிறா..”
என்று சொல்ல..எதிர்முனையில் சிரிக்க ஆரம்பித்தார் .

“சரியா போச்சு .அவ சைட் அடிச்சிருக்கிறா.. அது கூட உனக்கு தெரியல.

நீ என்கிட்ட போன் பண்ணி கத்திக்கிட்டு இருக்குற .அவ சைட் அடிச்சா பதிலுக்கு நீயும் அடிடா. யார் வேண்டாம் என்று சொன்னாங்க .

அதை விட்டுட்டு என்கிட்ட வந்து கம்பிளைண்ட் பண்ணிக்கிட்டு இருக்குற..

எப்படியோ ஒன்னு ..சீக்கிரமா நல்லது நடந்தா சரி. அந்த பொண்ண பத்தி நீ என்ன நினைக்கிற விஷ்வா.”

“ இதுவரைக்கும் எதுவுமே நினைக்கல சரியா .. இனிமேலும் நினைக்க மாட்டேன் .”

“சும்மா கதை சொல்லாதடா ஆல்ரெடி அந்த பொண்ண உனக்கு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு.

இல்லாட்டி உன் வண்டில ஏத்திட்டு வந்து இருப்பியா.. யாரோ மாதிரி ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்து இருக்கலாம் .

அதை விட்டுட்டு தங்கச்சியை பார்த்து பயந்து இறங்கி ஓடி வந்தா.. கூப்பிட்டு வருவயா.. அப்பவே தெரியலையா..”

“ அம்மா அது மனிதாபிமானம் அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது ‌.”

‘சும்மா கதை சொல்லாத.. என்ன பெரிய மனிதாபிமானம் .

ஏன் இதுக்கு முன்னாடி யாரையுமே பார்த்ததில்லையா எத்தனை பேருக்கு இது மாதிரி உதவி செஞ்சிருக்கற..

இதுதான் முதல் முறை. அதுவும் உனக்கு பார்த்த பொண்ணுங்கறதால தானே..

அந்த பொண்ண பத்தி தெரிஞ்சுக்கறதுக்காக வண்டியில ஏத்தின.

அந்த பொண்ணோட இன்னோசென்ட் தெரிஞ்சு தானே நீ வீட்டுக்கு கூப்பிட்டு வந்த..”

“ சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு இருக்காதீங்க மா.. போனை வைங்க ..

நான் அப்புறமா வந்து பேசிக்கிறேன். அவளுக்கு இருக்குது .

இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் .வந்து வச்சிக்கிறேன் “என்று போனை வைக்க..

“ நீ வச்சுக்கணும்னு சொல்லி தானடா இங்க கூட்டிட்டு வந்திருக்கிற” என்று அதற்கும் கவுண்டர் கொடுத்த பிறகே ஃபோனை வைத்தார்.
 

Kavisowmi

Well-known member
6

மாலை ஆறு மணி தாண்டும் போது தோட்டத்திற்கு அருகே சென்றால் பவானி .

லேசாக மழை காற்று வீசிக்கொண்டிருந்தது .

மழை வருவதற்கான அறிகுறி நன்றாக தெரிந்தது.

பனியில் நனைந்தது போல புகைமண்டலம் போல அவ்வளவு அழகாக இருந்தது.

சற்று நேரத்தில் மழை தூற ஆரம்பித்தது.மழையில் நனைந்து என்றால் பவானிக்கு அத்தனை உயிர்.

எப்போது மழை வந்தாலுமே யோசிக்காமல் நனைந்து விடுவாள்.

இன்றைக்கும் அப்படியே நனைய ஆரம்பித்து இருந்தாள்.

கிட்டத்தட்ட பணியில் நனைந்த ரோஜாவை போல இவளும் இன்னொரு மலரை போல மழையில் நனைந்து கொண்டிருக்க..

வீட்டிற்கு உள்ளே செல்ல வேண்டும் என்ற எந்த எண்ணமும் அவளிடத்தில் இல்லை .

நீண்ட நேரம் வரைக்கும் மழையில் மகிழ்ச்சியாக நின்றிருந்தாள்.

எதற்காகவோ மாடிக்கு வந்தவன்.. சற்று நின்று பார்த்து வேகமாக படி இறங்கி வர ஆரம்பித்தான்.

“ இந்த பொண்ணு என்ன லூசா.. கோடை காலம் முடிஞ்சு இப்பதான் முதலில வர்ற மழை.. இதில் நனைந்தால் காய்ச்சல் வந்திடாது..”
வேகமாக இறங்கினான்.

அன்றைக்கு மாலையில் தான் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று சற்று முன்புதான் இவனுடைய தாயார் புறப்பட்டு சென்றிருந்தார் .

திரும்பி வர இரவு 10 மணி ஆகிடும் கரெக்டா பார்த்துக்கோ..

வீட்ல அந்த பொண்ணு இருக்கிறா.. மிச்ச வேலைக்காரங்களும் இருக்கிறார்கள் .

ஏதாவது வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடு “என்று சொல்லிவிட்டு தான் சென்றிருந்தார்.

இவனுக்கும் சில நாட்கள் விடுமுறை தந்திருந்தனர் .

நாளையிலிருந்து தான் வேலைக்கு செல்ல வேண்டும் அதுவும் நாளையிலிருந்து கிராமத்தில் சென்று தங்கி விடலாமா என்கின்ற யோசனைமில் இருந்தான்.

இவனுடைய தாயார் பூரணியின் பிடிவாதத்திற்காகவே இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான்.

வேகமாக வந்தவன்” என்ன செஞ்சுகிட்டு இருக்கிற.. எதுக்காக மழையில் நனையற முதல்ல உள்ள வா”என்று அவளது கரம் பற்றி இழுத்தான்.

“மழையில் நனைகின்றதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ரொம்ப நாள் கழிச்சு மழை வருது .அதனாலதான் யோசிக்காம இங்க வந்து நின்னுட்டேன்.”

“ உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு .வெயில் காலம் முடிந்து மழை காலம் இப்பதான் ஸ்டார்ட் ஆகுது.

இந்த மழையில் நனைஞ்சா கட்டாயமா உடம்பு சரி இல்லாம போகும்.”

“ அதெல்லாம் எதுவுமே ஆகாது. நான் நிறைய முறை நடந்து இருக்கிறேன் .”என்று முகத்தில் விழுந்த நீரை துடைத்தபடி சொல்ல..

இவனோ குடைக்குள் இருந்தவன் இவளது கையைப் பிடித்து இழுக்க.. சிறு போராட்டம் இருவருக்கும் நடுவே நடந்து கொண்டிருந்தது.

சற்று நேரம் விளையாடிக் கொண்டிருந்தவள் யோசிக்காமல் அவனுடைய குடையை பிடுங்கி வீசி இருக்க.. இப்போது அவனுமே நனைய ஆரம்பித்தான்.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு .மழையில நனைய கூடாதுன்னு உன்னை உள்ளே கூப்பிட வந்தா ..

நீ என்னையையும் சேர்த்து நனைச்சு விடுற .”.என கோபமாக திட்ட..

“ சார் மழை வர்றதே அதிசயம் என்கிற மாதிரி ஆகிப்போச்சு. மழையில யாராவது நனையாம இருப்பாங்களா” என்று சொன்னபடியே நனைய ஆரம்பிக்க ..

இப்போது இவனுக்கு கோபம் வந்திருந்தது .

“உன்ன நல்ல விதமா சொன்னா உனக்கு புரியவே புரியாது. முதலில் உள்ள வா”.

“ என்ன சார் செய்றீங்க. கைய விடுங்க .கை வலிக்குது” என்று சொல்ல ..

“நீ முதல்ல உள்ள வரியா இல்லையா “என கோபமாக சொன்னபடியே இழுத்துக் கொண்டு நடந்தான் .

வீட்டு வாசலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியவன் ..”இன்னமும் பத்து நிமிஷம் தான் டைம் .

துணியை மாத்திட்டு வெளியே வர்ற.. புரிஞ்சுதா. நீ என்ன நினைச்சுகிட்டு இருக்கற..

இங்க வேலைதான் செய்ய வந்திருக்கிற.. உனக்கு இங்கே யாரும் வேலை செஞ்சு தர மாட்டாங்க .

எதையாவது இழுத்து வச்சுக்காத “என்று சொல்ல..

“ எனக்கு நல்லா புரிஞ்சுது சார் எனக்காக யாரும் இங்கே வேலை என்ன செஞ்சு தர வேண்டாம்.

முடிஞ்சா வேலை செய்யறேன் .இல்ல முடியாம போச்சுனா எங்க அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்றேன். வந்தா நான் அவங்க பின்னாடி போயிடுவேன் .

எப்பவும் யாருக்கும் தொந்தரவா இருக்க மாட்டேன். எப்ப பாத்தாலும் என்னை பார்த்து திட்டிக்கிட்டே இருக்கீங்க .

நானும் கவனிச்சுக்கிட்டே தான் இருக்கிறேன். உங்கள் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க..”

“உன் கிட்ட பேசிட்டு இருக்க எனக்கு இப்ப நேரம் இல்ல .நான் போய் உடைமாற்றிட்டு வரேன் .

அதுக்குள்ள நீ துணியை மாத்தி ரெடியா வெளிய வர்ற.. “ என்று சொல்லிவிட்டு நகர.. இவளது ரூம்பிற்கு சென்றவள் அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள் .

நீண்ட நேரம் வரையிலும் அப்படியே அமர்ந்து இருக்க.. இவனோ வெளியே வந்து ஹாலில் அரை மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து பார்த்தான்.

இவள் வருவதற்கான அறிகுறியே இல்லை.

மறுபடியும்” இது சரியான லூசு உள்ள உக்காந்து என்ன செஞ்சுகிட்டு இருக்கறாலோ தெரியல .

துணி மாத்தாமல் உட்கார்ந்து சுவற்றை வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கிறாளோ.. “ என வாய்க்குள் திட்டியபடி மறுபடியும் வேகமாக அறை வாசலுக்கு வந்து கதவை தட்டினான்.

கதவு திறப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.

இரண்டு மூன்று முறை பவானி பவானி சத்தத்தோடு தட்ட ..சத்தம் கேட்காத காரணத்தினால் வேகமாக கதவைத் தள்ளினான்.

அது உடனே திறந்து கொண்டது உள்ளே.. எந்த இடத்தில் விட்டு சென்றானோ அப்படியே அமர்ந்திருந்தாள்.

எதிரில் இருந்த சுவற்றை வெறித்தபடி ..”நான் நினைச்ச மாதிரி தான் ஆகிப் போச்சு.” என வாய்க்குள் முனுமுனுத்தவன் “என்ன பண்ணிட்டு இருக்கற.. உன்னை என்ன சொன்னேன்.

துணியை மாத்திட்டு வெளியே வர சொன்னேன் ‌அப்படியே உக்காந்து இருந்தா என்ன அர்த்தம் .

வெயில் காலம் முடிஞ்சு வர்ற முதல் மழை.. ஈஸியா உடம்பு சரியில்லாமல் போகும் “என்று சொன்னபடியே அவளது தலை பின்னலை அவிழ்த்து விட.. சட்டென்று தட்டி விட்டாள் .

“இத பாருங்க.. இந்த வேலை இங்கே ஆகாது .எதுக்காக இப்போ என்கிட்ட வந்து தொட்டு பேசுறீங்க .

உங்களுக்கு தான் என்னை பார்த்தா பிடிக்கலையே .வந்த நேரத்தில் இருந்து ஏதாவது ஒரு விதத்துல ஏதாவது ஒரு நேரம் கோபமாதான பேசிகிட்டு இருக்கீங்க.

இப்ப மட்டும் என்ன பெரிய அக்கறை வந்திருச்சாம்..”

“ இத பாரு ..நீ இங்க தங்கி இருக்கிற .உனக்கு பொறுப்பா பாத்துக்குறது என்னோட வேலை தானே .”

“அது உங்க வேலை இல்ல சார் உங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க .

என்ன பார்த்துக்க எனக்கு தெரியும். “

“இந்த வாய்க்கு குறைச்சல் இல்ல. சொல்லிட்டு போய் எவ்வளவு நேரம் ஆச்சு.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகப்போகுது .

அப்படியே உட்கார்ந்து இருந்தால் என்ன அர்த்தம். நாளைக்கு உடம்பு சரியில்லாமல் போய் ..

அம்மா ஏதாவது கேட்டாங்கன்னா அவங்களுக்கு யார் பதில் சொல்றது .”

“நீங்க ஒன்னும் பதில் சொல்ல வேண்டாம் .எனக்கு சொல்லிக்க தெரியும் .”என்று சொன்னவள் சட்டென பாத்ரூமிற்கு நுழைந்து கொள்ள..

“ சரியான அராத்து.. எங்க இருந்ததோ தெரியல “என சொன்னபடி நகர்ந்து சென்றான்.

சொன்னது போலவே அடுத்த நாள் உடல் நிலை சரியில்லாமல் போய் இருந்தது .

காலையில் எழும்போது தலைவலியோடு தான் எழுந்தது.

நீண்ட நேரம் வரையிலுமே அமர்ந்திருந்ததின் விளைவு அது ..

“ஹச்.. ஹச்” என்று தும்மல் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க.. காலையிலேயே பூரணி வந்து பார்த்தவர் ..

“சரியா போச்சு உனக்கும் உடம்பு சரியில்லாமல் போச்சுதா.. ஹாஸ்பிடல் போகலாமா..”

“அதெல்லாம் வேண்டாம். கசாயம் செஞ்சு குடிச்சா சரியா போயிடும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“கசாயம் வைக்க போறியா அப்படின்னா ஒன்னு செய். அப்படியே விஷ்வாவுக்கும் சேர்த்து வச்சுடு.”

“ என்ன ஆச்சு.. சார் நல்லா தான இருந்தாரு .”

“ நேத்து அவனும் மழையில நனைஞ்சிருப்பான் போல இருக்கு .

அவனுக்கு எப்பவுமே மழையில் நனைந்தா சுத்தமா சேராது.
அதனால எப்பவுமே மழையில நனையறதில்லை” என்று சொல்ல..வேகமாக சமையல் அறைக்குள் சென்று கசாயம் வைக்கின்ற வேலையை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

ஏற்கனவே சமையல் அறையில் இன்னும் இரண்டு ஊழியர்கள் இருக்க.. இவளை பார்க்கவும் தயங்கி நிற்கவும்..

” கொஞ்ச நேரம் அவகிட்ட சமையல் அறையை கொடுத்திட்டு வெளியே போங்க.

அவ செஞ்சு முடிச்சு வெளிய வந்த பிறகு நீங்க வந்தா போதும் “என்று அனுப்பி வைத்து விட்டு அவள் செய்வதையே கவனிக்க ஆரம்பித்தார் .

“என்ன அத்தை அப்படி பார்
க்கறீங்க “.

“இல்ல நீ எப்படி செய்றேன்னு பார்க்கறேன். வேற ஒன்னும் இல்ல .எனக்கு இதெல்லாம் செய்யத் தெரியாது “என்று சொல்ல ..

“இது ரொம்ப ஈசியானது அத்தை “என்று சொன்னபடியே என்னென்ன பொருட்களை போட வேண்டும் என்பதை சொல்லிக்கொண்டு கசாயம் வைக்க ஆரம்பித்தாள்.

இவருக்கும் அத்தனை புன்னகை.. “பரவாயில்ல நான் டாக்டர்கிட்ட எல்லாம் ஓட தேவை இல்லை போல இருக்கு .

உன்ன பக்கத்துல வச்சிருந்தாலே போதும். எந்த நோயும் அண்டாது என்று நினைக்கிறேன்.”

“அப்படி எல்லாம் இல்ல அத்தை.. சின்ன சின்ன பிரச்சனைக்கு இது சரியா போகும் .

கொஞ்சம் பெருசா முடியாம போச்சுன்னா ஹாஸ்பிடலுக்கு தான் போய் ஆகணும்.

இது என்னோட பாட்டி எனக்கு சொல்லித் தந்தது .அப்புறம் அம்மாவும் ரொம்ப நல்லா வைப்பாங்க “என்று பேசிய படியே எடுத்துக் கொண்டு..

“முடிஞ்சது இந்தாங்க அத்தை”.

“சரி அப்படியே கொண்டு போய் அவன் கைல கொடுத்துட்டு வந்துரு . “

“நானா போகணும் “.

“பின்ன நானா போக முடியும் .மேல ஒரு ஆபீஸ் ரூம் இருக்கு தெரியுமா .அங்க கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
 

Kavisowmi

Well-known member
7

“ஏற்கனவே உடம்பு சரியில்லாம போயிடும்னு கத்தினார் .இப்ப இது கொண்டு போய் கொடுத்தா இன்னும் கத்த போறாரு” மனசுக்குள் சொன்னபடியே மாடிக்கு ஏற அங்கே மாடி அறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

எதையோ எழுதிக் கொண்டிருக்க.. கதவில் கை வைத்து சத்தம் கொடுக்க.. உள்ளே நுழைந்தவளை பார்க்கவுமே” இது என்ன..”என்று கேட்டான்.

“கசாயம் சார் குடிச்சா உடம்பு சரி ஆகிடும்.. நீங்க காலையிலிருந்து தும்மிகிட்டு இருக்கீங்களா.. அது சரியா போயிடும் .”

“சரிதான் உன்னால தான் இப்படி இருக்கிறேன் .அது உனக்கு தெரியுதா.

நேத்து சொன்னேன் ..சொன்னப்பவே ஒழுங்கா மழையில நனையாம உள்ள வந்திருந்தா இப்ப இவ்வளவு தூரம் பிரச்சனையாகி இருக்காது தெரியுமா”.

“ சரி சரி என் மேல தப்பு தான் அதனால தான் நானே உங்களுக்கு மருந்து செஞ்சு கொண்டு வந்திருக்கிறேன்.”

“ கொன்னுடுவேன் இது எல்லாம் குடிச்சது கிடையாது புரிஞ்சுதா .

ஆல்ரெடி நான் டேப்லெட் போட்டு இருக்கேன் அதுவே சரியாகிடும் .கிளம்பு”.

“ அதெல்லாம் இல்ல அம்மா சொன்னாங்க .இதை நீங்க குடிச்சு முடிக்கிற வரைக்கும் நின்னு வாங்கிட்டு வான்னு”.

“இங்க பேசுற வேலை எல்லாம் வேண்டாம் . யாராவது கசாயம் எல்லாம் குடிப்பாங்களா..”

“பின்ன கசாயம் குடிக்கிறவங்க எல்லாம் மனுஷங்க கிடையாதா என்ன..

எங்க ஊர்ல வந்து பாருங்க எல்லாத்துக்குமே கசாயம் தான்..

காய்ச்சல் வந்தா கூட கசாயம் தான் குடிப்போம் .ரொம்ப முடியலன்னா மட்டும்தான் இங்கிலீஷ் டாக்டர் கிட்ட போவோம் தெரியுமா .”

“சரிதான் ரொம்ப நல்ல பழக்கத்தை வைத்திருக்கறாங்க.. “

“அது தான் குடிக்க சொல்லி அத்தை கொடுத்து இருக்கறாங்க..குடிச்சிட்டு தாங்க”.

“இது வேறயா குடு” என்று வாங்கி வாயில் வைத்தவன்..”இவ்வளவு கசக்குது .”

“நான் இப்ப தான் இதுல ஒரு டம்ளர் குடிச்சிட்டு வந்தேன் .நான் நல்லா தானே இருக்கிறேன் .”

“சரிதான் நீ நல்லா இருப்ப ஆனா நான் நல்லா இருப்பேனா.. அது தான் தெரியல “என்று சொன்னபடியே வேகமாக வாயில் ஊற்றினான்.

“ இன்னொரு தடவை இது மாதிரி எதையாவது இங்க தூக்கிட்டு வந்துடாத..வந்தேன்னு வச்சுக்கோ என்ன செய்வேன்னு தெரியாது .”

“சும்மா மிரட்டாதிங்க மறுபடியும் எதையாவது எடுத்துட்டு வரத்தான் செய்வேன் .

இந்த கஷாயம் ஒரு நாளைக்கு ரெண்டு வேலை குடிக்கணும் .சாயங்காலம் மறுபடியும் எடுத்துட்டு வருவேன்..
குடிக்க ரெடியா இருங்க..”

“ இன்னொரு டைம் ஏதாவது கசாயம்னு சொல்லி இங்க கொண்டு வந்து வச்சுடாதே ”. என்று சொல்ல..

“இங்க கொண்டு வராமல் வேற யார்கிட்ட கொண்டு போய் வைக்கணும் .உன்கிட்ட தான் வச்சுக்க முடியும் என்ன வேணும்னாலும் பேசுங்க.

எனக்கு அதை பத்தி கவலை இல்லை. என்கிட்ட இந்த மிரட்டல் எல்லாம் ஆகாது .

எங்க தோட்டத்தில் கூட 100 பேருக்கு மேல வேலை செஞ்சிருக்காங்க.

அத்தனை பேரையுமே ஒத்த ஆளா நான் சமாளிச்சு இருக்கிறேன் .”

“அதுக்கு.. “

“அத்தனை பேரையும் சமாளிச்ச எனக்கு உங்களை சமாளிக்க தெரியாதா ..
அதான் சொல்ல வந்தேன் “என்று சொல்லிவிட்டு நகர..

“ ரொம்ப தான் வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு .இன்னொரு தடவை இங்கே வா .
அப்பறம் இருக்குது பார் “என்று சொன்னபடியே எழுத ஆரம்பித்தான் .

வாசல் வரைக்கும் சென்றவள் திரும்ப வந்து..” சார் இது என்னது? என்ன எழுதுறீங்க. ஏதோ ஸ்டோரி எழுதறேன்னு சொன்னீங்க.. காட்டறீங்களா நான் பார்க்குறேன் .”

‘உனக்கு படிக்க தெரியுமா இங்கிலீஷ்..”

“ இங்கிலீஷ் படிக்க தெரியாது ஆனா எழுத்துக்கூட்டி வாசிப்பேன் .”

“எங்க நாலு வார்த்தை வாசித்து காட்டு பாக்கலாம். எனக்கு எழுதற வேலை நிறைய இருக்குது .

தயவு செய்து நீ கிளம்பு இப்போ புரிஞ்சுதா..”

“சரி என்ன எழுதுறீங்க அதையாவது கோர்வையா சொல்லலாம்ல ..”

“அதெல்லாம் சொல்ல முடியாது இந்த வாரம் ஹிந்து பேப்பரில் இது முழுசா வரப்போகுது .அப்ப நான் உனக்கு படிச்சு காட்டுறேன் .”

“ஹிந்துலேயா ..அப்படின்னா நீங்க நெஜமாவே பெரிய ரைட்டர் தானா .. ஹிந்து பேப்பர்ல நான் நியூஸ் படிச்சது இல்ல தெரியுமா .”

“உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன செய்றதுன்னு தெரியல.
என்னை வேலை செய்ய விடு .

இன்னமும் ரெண்டு மணி நேரத்துல இந்த ரிப்போர்ட்டை நான் அனுப்பியாகணும். இல்லனா அவ்வளவுதான் .நேரா இங்க வந்துருவாங்க”.

“ அச்சச்சோ உங்கள கூட திட்டுவாங்களா .”

“ஏன் நான் என்ன ஸ்பெஷல் நான் ஒரு இடத்துல வேலை செய்யறேன் .

அப்ப நான் வேலையில் கரெக்டா இல்லைனா திட்டாமல் என்ன செய்வாங்க.”

“ பரவால்ல பரவால்ல திட்டலாம் ‌.அவங்க கிட்ட சொல்லுங்க நான் ரொம்ப சந்தோஷப்பட்டதாக..

உங்களை திட்ட கூட இன்னொரு ஆள் வந்திருக்கறாங்கன்னா அது சாதனை தானே..

நிஜமாகவே அவரை ஒருநாள் பார்க்கணும்னு சொல்லுங்க.”

“ ஏன் பார்த்தால் நீ என்ன செய்வ..”

“ அவருக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையும் செஞ்சு கொடுப்பேன் “என்று சொல்ல ..”அலும்பு பண்ணுகிற” என்றவன் மறுபடியும் எழுத ஆரம்பித்தான்.

மதியம் சாப்பிட அனைவருமே டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க.. ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தாள்.

மேக்சிமம் எல்லாமே எதிர்ப்பு சக்தியை தூண்ட கூடிய உணவுகள் .

சிலது கசப்பாகவும் சிலது நார்மலாகவும் இருக்க..” என்னது இது எல்லாமே இன்னைக்கு வேற மாதிரி இருக்குது.”

“ இன்றைக்கு சமையல் எல்லாமே நம்ம பவானி தான்..”

“வேலை காரங்க எங்க போனாங்கம்மா “.

“கேள்வி கேட்காத .. உனக்கு கொஞ்சம் சளி பிடித்த மாதிரி இருக்குதுல்ல .”

“அதுக்கு “.

‘அதுக்கு தான்.. அதுக்கு ஏத்த மாதிரி சத்தானதா சமைக்க போறேன்னு சொன்னா..”

“எனக்கு பாவக்காய் பொரியல் சுத்தமா ஆகாது .உங்களுக்கு தெரியுமா இல்லையா .

இது என்னது பாக்கவே நல்லா இல்ல “.

“ என்ன சார் சொல்ல வரீங்க ..இதெல்லாம் சத்தான உணவு உங்களுக்கு தெரியுமா..

இதை குறை சொல்லிட்டு இருக்கீங்க.”.

“ அம்மா ஏன் ம்மா இவளை கூட்டிட்டு வந்து இப்படி என்னை சாவடிக்கிற” என்று சொன்னபடியே உணவை எடுத்து வாயில் வைத்தான். அப்படியே நின்றுவிட்டான்..

“என்னடா என்ன அமைதியாயிட்ட ..ரொம்ப கேவலமா இருக்குதா.”

“அம்மா இது துளி கூட கசப்பே இல்ல. ஆமா பவானி இத எப்படி செஞ்ச .

இங்க இருக்கிற வேலைக்காரங்களும் அடிக்கடி இதை செஞ்சுருக்காங்க .அத அம்மா மட்டும் தான் சாப்பிடுவாங்க .ஏன்னா அவ்வளவு கசப்பா இருக்கும்.

வாயிலேயே வைக்க முடியாது.. ஆனா நீ செஞ்சது எதுவுமே கசப்பா இல்லையே.”

சார் அதெல்லாம் கம்பெனி ரகசியம்..சொல்லித் தரக்கூடாது.

இவங்க எல்லாம் சமைக்கிறதுக்கு படிச்சாங்களா.. இதெல்லாம் சொல்லித் தர்றது இல்லையா ..”

“தருவாங்க..சமைக்கிறதுக்கு சொல்லித்தர இங்க காலேஜ் இருக்கு தெரியுமா..”

“ஓ அப்படியா எனக்கு இதெல்லாம் தெரியாது . அம்மா சொல்வாங்க.. கண்ணு பார்த்தா கை ஆட்டோமேட்டிக்கா வேலை செய்யணும்னு..

எங்க பாட்டி எல்லாம் அப்படித்தான் சொல்லித்தந்து இருக்கிறார்கள் .

அம்மா கூட அது தான் சொல்லுவாங்க. கண்ணு பார்த்தது என்றால் கை அது வேகமா வேலை செய்யணும்னு.

ஒரு சாப்பாட்டை கையில கொடுத்தா அதுல என்னென்ன போட்டு இருக்கு‌. என்னென்ன போடணும் என்கிறது தெளிவா சொல்லணும் .

இவங்க அதெல்லாம் சொல்லிடுவாங்களா..”

“ ஏன் சொல்ல மாட்டாங்க அதுதானே படிச்சிருக்கிறாங்க.. “

“அப்படின்னா சரி நாம இன்னைக்கு ஒரு சேலஞ்ச் வச்சுக்கலாம் .

இன்னைக்கு எல்லா காய்கறிகளையும் போட்டு ஒரு பொரியல் வைக்கிறேன்.

அவங்க ரெண்டு பேரோட கண்ணையுமே கட்டிடறேன்..

கண்ணை கட்டிட்டு அதை டேஸ்ட் பார்த்து சொல்லணும் அதுல என்னென்ன போட்டு இருக்கு ..

என்னென்ன போடணும் .. இந்த மாதிரி தெளிவா சொல்லணும் அவங்களால சொல்ல முடியுமா”.

“ ஏன் அவங்க சொல்லாம எங்க போய்ட போறாங்க .”

“அப்படினா சரி சார் .நீங்க இவ்வளவு தூரம் சொல்லும்போது நாங்களும் இந்த போட்டிக்கு தயாரா இருக்கோம்.

நாங்களும் சமைச்சு கொடுக்கிறோம் .அதை அந்த பொண்ணு டேஸ்ட் பார்த்து கரெக்டா என்ன போட்டிருக்குன்னு சொல்லுவாங்களான்னு கேட்டு சொல்லுங்க .”

‘நல்ல போட்டி தான்.. சபாஷ் சரியான போட்டின்னு சொல்கிற மாதிரி தான் இருக்க போகுது .

ஓகே ..ஓகே ரெண்டு பேரும் போயி சமைங்க ..ஆளுக்கு ஒரு சமையல்கட்டை பிடிச்சுக்கோங்க .

சரியா நைட் டின்னருக்கு என்னென்ன சமைச்சீங்க அப்படிங்கறத கண்டுபிடிக்கலாம் .”என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

“ எனக்கு நல்லா தெரியும் பவானி நிச்சியமா நீ தான் ஜெயிப்ப..”என்று சொல்லியப்படியே பூரணி நகர..

“ம்மா எனக்கு துளி கூட நம்பிக்கை கிடையாது. கசப்பா கசாயம் வைக்க மட்டும் தான் இவளுக்கு தெரியும்” என்று நக்கல் அடித்து விட்டு நகர்ந்தான்.

சற்று நேரத்தில் எல்லாம் நிதிஷ் வந்திருந்தான்.

“ என்னடா.. வீட்லேயே உக்காந்து வேலை செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா .”

“ஏண்டா நீ வேற கடுப்பு அடிச்சிட்டு இருக்குற ..இந்த அம்மா வேற விடமாட்டேங்குறாங்க .”

“அம்மா விடலையா இல்ல வந்திருக்கிற பொண்ணை பார்த்ததுனால வர மனசு வரலையா “.

“டேய் இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம் .அந்த பொண்ணு கூட எனக்கு செட் ஆகாதுடா..

பாக்கும்போதெல்லாம் சண்டைதான் போட்டுக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்குது .

இவ வேற விதமா என்ன கொடுமை பண்ணிக்கிட்டு இருக்கிறா..”

“ கொடுமை பண்றாளா அப்படி என்ன பண்ணினா..”

“தினமும் கசாயம் வச்சு என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்கறா.. இதுல பத்தாதுக்கு நைட்டு சமையல் போட்டி வேற ஆரம்பிச்சு இருக்காங்க .

இங்க வேலை செய்ற ரெண்டு பேரு கூட ..”

“அப்போ நல்லா என்டர்டைன் பண்ற…நல்லா டைம் போகுது போல இருக்குது”.

“ சும்மா இருடா நீ வா.. நீ சொல்லு..உன்கிட்ட கொடுத்த வேலை என்ன ஆச்சு ..”

“நீ சொன்ன மாதிரி போய் எல்லாத்தையுமே விசாரிச்சுட்டேன்”.

“இரு இங்க வேண்டாம் .ரூமுக்கு வா .அங்க வச்சு பேசிக்கலாம் “என்று அழைத்தான்.

“என்ன தெரிஞ்சுகிட்ட.. ஏதாவது தெரிஞ்சுதா”.

“ நல்ல விசாரிச்சு பாத்துட்டேன். ஊருக்குள்ள யாரும் புதுசா வரல .ஆனா ஊருக்குள்ள இருந்து ஆடு மேய்க்க விறகு எடுக்க நிறைய பேர் காட்டுக்குள்ள போயிட்டு வராங்க .

ஒருவேளை காட்டுக்குள்ள ஏதாவது வித்தியாசமா வந்திருக்காங்களான்னு கவனிக்கணும் .

இந்த நிமிஷம் வரைக்கும் பிரச்சனை இல்ல .ஆனா நிச்சயமா அங்க வருவாங்கன்னு தான் தோணுது .”

“ஆனா அந்த இடத்தை செலக்ட் பண்ண என்ன காரணம்.. எதுக்காக அங்க அட்டாக் பண்ணனும் .”

“பிரச்சனை இருக்குது எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கிறது தெரியல .

எலக்சன் வருது இல்லையா.. அதனால நம்ம சிஎம் அங்க வந்து பேச போறதா பேசிக்கிறாங்க .ஒரு வேளை அவருக்கானதா கூட இருக்கலாம்.”
 

Kavisowmi

Well-known member
8

“ஒருவேளை அது தான் உண்மையான காரணமா இருந்தா நமக்கு பொறுப்பு அதிகமாகுது நிதிஷ் .”

‘ஆமாண்டா நானும் அத தான் யோசிச்சேன் .சரி நான் புறப்படட்டுமா ..”

“ஹலோ அவ்வளவு சீக்கிரம் அப்படி எல்லாம் ஓடிட முடியாது.

இன்னைக்கு நீ இங்கதான் தங்கற.. நைட்டு ஏதோ காம்படீசன் வச்சிருக்காங்க. நீயும் கலந்துக்கோ”.

“ நான் என்னடா செய்யப் போறேன் ..”

“என்ன சமைக்கிறார்களோ அதை சந்தோஷமா சாப்பிடு.

நாளைக்கு காலைல உன் கூட நானும் கிளம்பி வரேன். இனிமே அங்கே.. எப்படி என்னென்னு பார்த்துட்டு பொறுமையா இங்க வந்தா போதும்.”

‘ சரிடா நீ சொன்னா சரிதான்” என்று வெளியே வர ..இங்கு சமையல் கட்டு அல்லோலபட்டுக் கொண்டிருந்தது.

“ என்ன இருக்கிறதோ அதை எல்லாம் தேர்ந்தெடுத்து சமைக்க ஆரம்பத்து இருந்தால் பவானி .

இன்னொரு ஸ்டவ்வை எடுத்து வைத்து அங்கிருந்த ஊழியர்கள் சமைக்க பூரணி ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

7 மணி என்னும் போது அவரவர் சமைத்ததை எடுத்துக் கொண்டு வந்து டேபிளில் வைக்க ஆரம்பித்தனர்.

இருவருக்கும் கொடுக்கப்பட்டது ஒரு மணி நேரம் தான் .

அந்த ஒரு மணி நேரத்தில் எத்தனை செய்ய முடியுமோ செய்து கொண்டு வர வேண்டும் என்பது இவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் ..

இதில் பவானி எட்டு விதமான உணவுகளை தயாரித்திருந்தாள்.

அதே நேரத்தில் சமையல் செய்தவர்களோ ஐந்து உணவுகளை தயார் செய்தனர்.

இரண்டையும் அழகாக கொண்டு வந்து டேபிளில் வைக்க…சற்று நேரத்தில் எல்லாம் அனைவரும் வந்து அமர ஆரம்பித்தனர் .

“என்ன உணவு நன்றாக இருக்கிறது என சொல்வதற்கான பொறுப்பை பூரணியிடமும் நிதீசிடமும் கொடுக்கப்பட்டது .

பவானி விஷ்வாவை நம்ப மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.

“இருக்கிறது எறும்பு சைஸ் நீ என்ன நம்ப மாட்டியா” என்று கேட்க ..

“ஆமா சார் நான் உங்களை நம்ப மாட்டேன் .நீங்க சும்மாவே என்ன பார்க்கும்போதெல்லாம் திட்டுறீங்க .

இப்போ இதை கொடுத்தால் என்ன செய்வீங்க .

நிச்சயமா நல்லா இல்லைன்னு தான் சொல்லுவீங்க.

அதனாலதான்.. நிதீஷ் அண்ணா கரெக்டா டேஸ்ட் பார்த்து சொல்றீங்க .ஏதாவது கம்ப்ளைன்ட் இருந்தாலும் சொல்லலாம் .நான் ஏத்துக்குவேன் “என்று ஆர்வமாக சொன்னவள் இருவரையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

ஒரு ஓரமாக அமர்ந்த விஷ்வா இரண்டு உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்து சுவை பார்க்க ஆரம்பித்தான் .

உண்மையிலையே பவானியுடையது அவ்வளவு டேஸ்ட்டியாக சுவையாக இருந்தது .

வழக்கம் போல சமைக்கின்ற ஊழியர்கள் செய்ததை விடவும்..
மெச்சுதலான ஒரு பார்வையை பவானியின் மேல் செலுத்தியவன் .அமைதியாக சாப்பிட ..

நிதீஷோ” வாவ் அமேசிங் ..இதே மாதிரி அடிக்கடி நீங்க போட்டி போட்டு சமைங்க.

சமைக்கும் போது மட்டும் எனக்கு ஒரு வார்த்தை சொல்லிடுங்க .

நேரா வந்து இங்க உக்காந்துக்கறேன் .பூரணிமா செமையா சமைக்கறாங்க.

உங்க வீட்டில வேலை செய்றவங்க மட்டுமல்ல பவானி கூட “என்று சொன்னவன் வேகமாக எழுந்து விஷ்வாவிற்கு அருகே வந்தவன்.

“ உண்மையிலேயே செமையா சமைக்கறாடா ..உன்னோட பொண்டாட்டி “என்று சொல்வதற்கு வாயை எடுத்தவன் அப்படியே வாயை பொத்தியபடி விஷ்வாவை பார்க்க.. விஷ்வாவோ கண்ணால் அவனை மிரட்டிக் கொண்டிருந்தான் .

“ஒழுங்கா போய் ஓரமா உட்காரு ஏதாவது உளறி வச்ச.. என்ன செய்வேன்னு தெரியாது” என்ற கட்டளை கண்களில் தெரிய..

“ சாரிடா சாரி .என்னவோ ஏதோ ஒரு ஆர்வத்துல ஒரு ஃப்ளோல கிட்ட வந்துட்டேன் மன்னிச்சிடு” என்று சொன்னவன் வேகமா வந்து அமர..

“ என்னடா ஏன் அவன் கிட்ட போயி வம்பிலுக்கற எல்லாமே கால காலத்தில் நடக்கும்”.

“நிஜமாமா கட்டாயமாக நடத்தி வச்சிடுங்க. இதை விட அருமையான பொண்ணு கிடைக்கவே கிடைக்காது. ரகசியம் சொன்னவன் ..உணவு உண்ட பிறகு”ஓகே கைஸ் எல்லாருமே ரொம்ப நல்லா சமைச்சு இருந்தீங்க.

என்னோட டிப்ஸ் இது” என்று பர்சை திறந்து ஊழியர்களுக்கு ஆளுக்கு 500 கொடுத்தவன்.. அப்படியே திரும்பி இவளுக்கு ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினான்.

“ ஒன்னும் வேண்டாம் டா”.

“ இல்ல அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அதை சமைச்சு இருக்கிறாங்க.

நீ தனியா இத்தனையையும் செஞ்சிருக்கிற ..அதுவும் டேஸ்டியா அதுக்காக என்னோட பரிசு .

அப்பறமா இந்த மாதிரி சமைக்கும் போதெல்லாம் ஒரு போன் பண்ணி சொல்லிடு.

நான் எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவேன்” என்றவன்.

“ இப்போது போகலாமா உன் கூட இன்னமும் நிறைய பேச வேண்டியது இருக்கு “என்று சொன்னபடியே இருவரும் வெளியேறினர்.

அன்றைக்கு இரவு சரியாக பத்து மணிக்கு மேல் விஷ்வாவிற்கு போனில் அழைப்பு வந்தது.

“ சார் நீங்க சொன்ன மாதிரியே இந்த கிராமத்த கவனித்துக்கொண்டு இருக்கிறோம் .

புதுசா நாலஞ்சு பேர் ஒரு வீட்டுக்கு குடி வந்திருக்கிறாங்க இன்னைக்கு சாயங்காலம் தான் வந்தாங்க” என்று சொல்ல …

“யார் என்ன ஏதுன்னு விசாரிச்சி வை..”

“சரி விசாரிக்கறோம் சார் .அவங்கள பத்தி பெருசா எந்த தகவலும் இல்லை ..

அந்த வீட்டில் ஏற்கனவே குடியிருந்தவங்கன்னு கதை சொல்றாங்க பார்த்தா அப்படி தெரியல .

இப்போ ஒன்பது மணிக்கு மேல காட்டுக்குள்ள போயிருக்குறாங்க .

இதுவும் சந்தேகத்தை கிளப்புது அதனாலதான் உங்கள கூப்பிட்டோம் .”

“சரி ஓகே நாங்க இப்பவே அங்க புறப்பட்டு வருவோம் “என்று சொல்லியபடி விஷ்வா புறபட்டான்.

அவனோடு நிதீஷும் கிளம்பினான்.

தூக்கம் வராமல் வராண்டாவே சுற்றிக்கொண்டு இருந்தவள் சரியாக இவர்கள் இறங்கி வெளியே வருவதை பார்த்தாள்.

எங்க போகிறார்கள் என ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தாள் .

சத்தம் இல்லாமல் கேட்டை திறந்து வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்படவுமே இவள் ஆச்சரியத்தோடு வாயில் கையை வைத்துக்கொண்டாள்.

“ என்ன இது அத்தை கிட்ட கூட சொல்லல.. நட்ட நடு ராத்திரி எந்த சத்தமும் இல்லாமல் வெளியே போறாங்க .

இதெல்லாம் தப்பாச்சே இதுவே காடு..யானை இருக்கிற பகுதி இந்நேரத்துக்கு இவங்க ரெண்டு பேரும் எங்க போறாங்க..”
யோசனையோடு நீண்ட நேரம் வரையிலுமே தூங்காமல் சுற்றிக் கொண்டிருந்தாள்..

இரவு போனவர்கள் இருவருமே காலையில் தான் வந்தது .

ஒன்பது மணி என்னும் போது வழக்கம் போல வண்டியை உள்ளே செலுத்தி கொண்டு வர அப்போதுதான் பூரணி கூட எழுந்து வந்திருந்தார்.

“ என்னடா காலையில் எங்க போயிட்டு வரீங்க “என்று கேட்க..

“ அம்மா தோட்டத்தை சுத்தி பார்த்துட்டு வரோம் .அப்படியே கொஞ்சம் வேலை இருந்தது. அதை முடிச்சுட்டு வரோம் “என்று சொன்னபடி உள்ளே நுழைய.. அப்போதுதான் சரியாக இவளுமே வெளியே வந்தது .

இருவரின் முகத்தை பார்த்தவள் பூரணி நகரவுமுமே ..”ஒழுங்கா உண்மைய சொல்லுங்க .எங்க ஊர் சுத்திட்டு வரீங்க” என்று கேட்க ..

“என்னது ஊர் சுத்தினோமா.. உனக்கு என்ன தெரியும் எங்கள பத்தி “என்று கேட்டபடியே நடக்க..

“அண்ணா நீங்க சொல்லுங்க நான் பார்த்திட்டு தான் இருந்தேன்.

நைட் ரெண்டு பேரும் வண்டியில கிளம்பி போனத” என்று சொல்லவும் ..சட்டென்று நின்ற விஷ்வா வேகமாக இவளுக்கு அருகே வந்தான் .

“இத பாரு வேண்டாத வேலை எல்லாம் வச்சுகாத.. உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு. நீ வேலைக்கு தான் இருக்கிற ஞாபகம் இருக்குதா”என்று கேட்க..

“ஹலோ ஓவரா மிரட்டுற வேலை எல்லாம் இங்க வேண்டாம் .

நேரா அம்மா கிட்ட போய் சொல்லி கொடுத்துடுவேன்.

அத்தை இவங்க ரெண்டு பேரும் நைட்டு வெளியே போனாங்க .

இப்பதான் உள்ள வராங்க அப்படின்னு ..”

“இத பாரு இந்த வேலையெல்லாம் வச்சுக்காத..

இந்த மிரட்டுறதற்கெல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது.

இப்ப என்ன அம்மாகிட்ட சொல்லனுமா தாராளமா போய் சொல்லு.

எனக்கு எந்த பயமும் கிடையாது .எனக்கு என்ன செய்யணுமோ தெரியும் “என்று சொல்லிவிட்டு விஷ்வா நகர..இருவரையுமே விசித்திரமாக பார்த்தாள்.

“ என்னவோ தப்பு பண்றாங்க போல இருக்குது. ரெண்டு பேரும் வந்தாங்க …

குடிச்ச மாதிரி எந்த ஸ்மெல்லும் இல்ல ..ஒரு வேலை குடிக்கிறதுக்கு போய் இருக்காங்க அப்படின்னு நினைச்சா கூட அதுக்கும் வாய்ப்பு இல்ல .

ஆனா நைட் எல்லாம் காடு மேடை சுத்தின மாதிரி அழுக்கா வந்திருக்காங்க” என்று சொன்னபடியே நகர்ந்தாள்.

அன்றைக்கெல்லாம் நேரம் மெல்ல நகர்த்துக்கொண்டிருந்தது.

மதியம் எனும் போது தான் விஷ்வா சாப்பிடவே வந்து அமர்ந்தது.

“ என்னடா காலையில் சாப்பிட வரலையா..”

“ அம்மா வெளியே போய் சாப்பிட்டுட்டோம் மா . தூங்கி எழுந்து இப்ப தான் வரோம்..

எங்களுக்கு இன்றைக்கு வேலை இருக்கு. இனி நைட்டு தான் வருவேன்” என்று சொல்லி புறப்பட ..

“சரிடா மதியம் சாப்பிட்டுவிட்டு இரண்டு பேரும் கிளம்பி போங்க” என்று பூரணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சரியாக அந்த இடத்திற்கு வந்த பவானி “என்ன அத்தை எங்க போறாங்க இத எல்லாம் கேட்க மாட்டீங்களா.

எத்தனை மணிக்கு போறாங்க எப்ப திரும்பி வராங்க இதெல்லாம் கவனிக்கிறது இல்லையா..”

“ என்னடா என்ன ஆச்சு “.

“அவங்க நைட்டு இரண்டு பேரும் என்ன பண்ணினாங்கன்னு கேளுங்க” என்று கேட்கவுமே ..”அம்மா அவ சும்மா எதையாவது உளறிக்கிட்டு இருப்பா..

நீங்க அவ சொல்றான்னு கேட்டுட்டு இருப்பீங்களா .நாங்க எங்க போறோம் .

உங்களுக்கு தெரியாதா எங்களோட வேலை என்னன்னு உங்களுக்கு தெரியும் தானே..

நியாயமா இந்நேரத்துக்கு ஃபீல்டுல இருக்க வேண்டிய ஆட்கள் ..

நீங்க பிடிவாதமா பிடிச்சு நிறுத்துனதால இங்க வந்து இருக்கிறோம்”

“விடு பவானி அவங் வேலையை கவனிக்கட்டும்”.

“ அப்படின்ன பெரிய வேலை செய்றாங்க. நடு ராத்திரி வெளியே போகிற அளவுக்கு..”

“ஏன் நான் எழுதுவேன் உனக்கு தெரியாதா.. புதுசா நான் எழுதின கதையை படம் எடுக்கிறதா ஒரு புரொடியூசர் ஒத்துக்கிட்டு இருக்குறாங்க .

கதை சொல்றதுக்கு வான்னு கூப்பிட்டாங்க .அதனாலதான் அந்நேரத்துக்கு ரெண்டு பேரும் போணோம் .”

“ஆனா உங்கள பார்த்தா கதை சொல்லிட்டு வந்த மாதிரி தெரியலையே “.

“வேற எப்படி தெரியுது “.

‘யார் கூடயாவது சண்டை போட்ட மாதிரி தெரியுதா .”

“அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்க மாட்டேன் .நீங்க எல்லாம் பிட்டான ஆளுதான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்.

ஆனா பத்து பேர் வந்தால் அடிக்கிற தன்மை உங்களுக்கு இருக்கான்னு யோசிச்சா அப்படி எல்லாம் இல்லைன்னு தான் நினைக்கிறேன் .”

“நீ 10 பேர் அடிச்சிடுவியா என்ன?”.

“ ஏன் அடிக்க மாட்டேன்னு நினைக்கிறீர்களா அதெல்லாம் நல்லாவே அடிப்பேன் .

எனக்கு சிலம்பு தெரியும். கராத்தே தெரியும்.. என வரிசையாக பட்டியலிட அப்படியே ஸ்ட்ரக் ஆனவன் திரும்பி ..”இப்போ என்ன சொன்ன..”

“ என்ன சொல்லுவாங்க தற்காப்பு கலைகள் என்னென்ன தேவையோ அது எல்லாமே நான் கத்து வைத்திருக்கிறேன் என்று சொன்னேன் .

பின்ன எந்த தைரியத்துல வீட்டை விட்டு வெளியே வந்தேன்னு நினைக்கிறீங்க.

எனக்கு என் மேல நிறைய நம்பிக்கை உண்டு அதனாலதான் தைரியமா வெளிய வந்தேன் .

என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு நகர ..சற்று ஆச்சரியமாகத்தான் அவளை பார்த்தான்.

“ இன்னமும் என்னென்ன திறமை எல்லாம் உன்கிட்ட வைத்திருக்கிறேன்னு தெரியல.

படிப்பு மட்டும் ஒழுங்கா புடிக்கல மத்தபடி ஓகே தான் போல இருக்குது .

அம்மா சரியான பொண்ண தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். “மனதுக்குள் நினைக்க லேசான புன்னகை தொற்றிக் கொண்டது.
 

Kavisowmi

Well-known member

9

தோட்டத்தில் பூரணியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. அங்கே வேகமாக இரண்டு சிலம்பு குச்சிகளை எடுத்துக் கொண்டு விஷ்வா வந்தான்.

“ என்கிட்ட கதை சொன்ன இல்ல.. இப்ப வா நீயும் நானும் மோதிப் பார்த்திடலாம்.

யாருக்கு திறமை நிறைய இருக்குதுன்னு “ என்று கேட்க பூரணிக்கு அத்தனை சிரிப்பு..

“என்னடா என்னோட மருமகளோட திறமையை சோதிச்சு பார்க்கறியா. “

“என்ன அத்தை நீங்க வேற.. மருமகள்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க .”

“இல்லம்மா நீ என்ன அத்தைன்னு கூப்பிட்டா.. நீ எனக்கு மருமக தானே .
அத வச்சு சொல்ல வந்தேன்.. ‘

“போயும் போயும் உங்க பையன் கூட எல்லாம் என்னால சண்டை எல்லாம் போட முடியாது.

அவருக்கு அந்த அளவுக்கு திறமை எல்லாம் கிடையாது.”

“ அப்படியா சரி ஒரு தடவை தான் சண்டை போட்டு பாரேன்.யாருக்கு திறமை நிறைய இருக்குன்னு நான் பார்த்து சொல்றேன்” என்று சொல்ல ..

“இப்படி சொன்ன பிறகு நான் எதுக்காக விட்டுக் கொடுக்கணும் .

கொடுங்க சார் நீங்களா நானா பார்த்திடலாம் “என்று சிலம்பு குச்சியை எடுத்துக்கொண்டு வந்து அவனின் முன்னால் நின்றாள்.

“ஓகே ஸ்டார்ட் பண்ணலாமா” என்று கேட்டபடியே சிலம்பு சுழற்ற ஆரம்பிக்க ..பவானியோ சிலம்பத்தில் நன்றாகவே தேர்ச்சி பெற்றிருந்தாள்.

எளிதாக அவன் தன்னை தாக்க வரும்போதெல்லாம் தட்டி விட்டபடி இவளுமே பதிலுக்கு தாக்க முயற்சி செய்ய..

விஷ்வா விடுவதாக இல்லை. அவனும் முழு திறமையை காட்டினான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரைக்கும் போட்டி தொடர்ந்து கொண்டே இருந்தது.

யாருமே வெற்றி பெறவில்லை..

இருவருமே தங்களின் மேல் ஒரு சிறு காயம் கூட ஏற்படாதவாறு விளையாட ஒரு கட்டத்திற்கு மேல்..” ஓகே பவானி போட்டிய நிறுத்திக்கலாமா..”

“ அப்படின்னா நான் தான் ஜெயிச்சேன்னு நீங்க சொல்லணும். சம்மதம்னா சொல்லுங்க.

இல்லாட்டி யாரு ஜெயிக்கிறமோ அதுவரைக்கும் சண்டை போடலாம் “என்று சொல்ல..

“ ஓகே நானே தோத்திட்டதா ஒத்துக்கிறேன் .நீ ரொம்ப ரொம்ப திறமைசாலி .

உன்னை நான் குறைவா எடை போட்டுட்டேன் .அம்மாவோட தேர்வு இல்லையா” என்று சொன்னபடியே நடக்க..

“அம்மாவோட தேர்வா.. எனக்கு புரியல .”

“உனக்கு சொன்னா புரியாது இப்போ இத பத்தி பேசணுமா.. உன் கூட சண்டை போட்டு உண்மையிலேயே நான் டயர்டு ஆயிட்டேன் .

நான் முதல்ல போய் குளிச்சிட்டு வரேன். நீயும் லைட்டா ஒரு குளியல் போட்டுட்டு சாப்பிட வந்து சேரு .அம்மா சாப்பிட எடுத்து வைக்க சொல்லுங்கம்மா” என்று நகர்ந்தான்.

இரவு சாப்பாட்டு மேடையில் 8 மணிக்கு மறுபடியும் சந்தித்தனர் .

முதல் முறையாக பவானியை கவனிக்க ஆரம்பித்தான் விஷ்வா .

அவளுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க… அவனுக்குமே பிடிக்க ஆரம்பித்தது.

இத்தனை நாட்களாக ஏனோதானோ என தான் பேசியது.

உலகம் தெரியாதவள் அந்த கால பழக்க வழக்கங்களைக் கொண்டவள். இப்படி நினைத்திருக்க ..

இன்றைக்கு சிலம்பம் வரைக்கும் கற்று தேர்ந்தது மட்டுமில்லாமல் தன்னையே தோற்கடிக்கிறாள் என்றால் எத்தனை திறமையானவளாக இருப்பாள் என யோசிக்க மெல்ல சாப்பிட்டபடியே பேச்சு கொடுத்தான் .

“சரி பவானி நல்லா சமைக்கிற..
சிலம்பமும் நல்ல சுத்துற இன்னும் வேற என்னென்ன திறமை உன் கிட்ட இருக்குது.”

“இதையெல்லாம் திறமையே இல்லையே.. இதெல்லாம் நார்மலா கத்துகிறது .

எங்க ஊருக்கு வந்து பாருங்க ஒவ்வொரு பெண்களுமே கத்துக்குவாங்க .”

“சரி உங்க ஊர்ல எல்லா பெண்களும் இதை எல்லாம் கத்துக்குறாங்க ஒத்துக்குறேன் ஆனா இந்த அளவுக்கு திறமையா யாரெல்லாம் சண்டை போடுவாங்க .அத சொல்லு”.

“ என் அளவுக்கு யாருக்கும் சண்டை எல்லாம் போட வராது. எங்க ஊர்ல அஞ்சு வயசுல இருந்து போன வருஷம் வரைக்கும் நான் தான் சேம்பியன் .

ஒவ்வொரு வருஷமும் பொங்கல் டைம்ல திருவிழா டைம்ல இதுக்குன்னு தனியா போட்டி வைப்பாங்க .

என்கிட்ட யாருமே நிற்க முடியாது. பெரும்பாலும் ஆண்கள் எல்லாம் கூட சரிக்கு சரியா சண்டை போட்டு இருக்காங்க தெரியுமா.

என் அப்பாவுக்கு இதுல கர்மமே உண்டு. என் பொண்ண ஜெயிக்கிறதுக்கு யாராலயும் முடியாதுன்னு”.

“ ஓஹோ அந்த அளவுக்கு பெரிய ஆளா நீ ..எனக்கு தான் தெரியாம போயிடுச்சு .

நீ ஊரை தாண்டி வெளியே எங்கேயுமே போட்டிக்காக வெளியே போகலையா..”

“எதுக்காக போகணும் மத்தவங்களுக்கு என்னோட பெருமையை நிரூபித்து காட்டணும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை .

எனக்கு என்ன தேவையோ அதை நான் கத்துக்குவேன்.”

“ சரி ஓகே நீ சொல்றது கரெக்ட் தான். வேற என்ன தெரியும் அதை பத்தி சொல்லு.”

“நான் ரொம்ப நல்லாவே துணி தைப்பேன் .ஆர்ட் அண்ட் கிராப்ட் அழகு அழகா படம் வரைவேன்”.

“இதை சொன்ன பிறகுதான் ஞாபகம் வந்தது.நான் கேட்க மறந்துட்டேன் இங்க வந்து இத்தனை நாள் ஆச்சு.

இதுவரைக்கும் நீ வரஞ்சத நான் பார்க்கவே இல்லை. அப்படி என்ன வரைவ..”

“ வால்பேப்பர் மாதிரி கலர் பேப்பர் அது சம்பந்தமான பொருள்கள் எல்லாம் கிடைச்சதுனா
சுவற்றில் பெயின்டிங் பண்ணுவேன் .

நீங்க எங்க வீட்டு ரூம்பை வந்து பார்த்ததில்லையா “.

“சரிதான் எங்க பார்க்க விட்ட.. உன்னோட நிச்சயத்துக்குன்னு வந்தோம் .அதுதான் ஊருக்குள்ளேயே விடாமல் வண்டியை திருப்ப வச்சுட்டியே.. என்று விஷ்வா சொல்ல பூரணி சிரிக்க ஆரம்பித்தார்.

“நீ வேற ஏண்டா அந்த பொண்ண எப்ப பாத்தாலும் சொல்லி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கிற..

அப்பா ,அம்மா கிட்ட எல்லாம் எப்பவும் போல போன் பண்ணிக்கிட்டு தானே இருக்கிற..”

“ அம்மா கிட்ட டெய்லி நானுமே பேசிக்கிட்டு இருக்கிறேன்.”

ம்..

“அப்படின்னா ஒன்று செய் பவானி. நாளைக்கு என்னோட ரூம்ல மாடில இருக்குற என்னோட ரூம்போட ஹாலை டெகரேட் பண்ணி தரியா..

புல்லா பெயிண்டிங் மாத்தி பிடிச்ச மாதிரி அழகா டிசைன்ல படம் வரைந்து கொடு .
பார்க்க அழகா இருக்கணும்”.

“என்ன மாதிரி வேணும் சொல்லுங்க “.

“இப்போதைக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன். நான் பார்த்து ரசிக்கிற மாதிரி ஏதாவது சீனரிஸ் வரைஞ்சு கொடு .

பின்னாடி தேவைப்பட்டா மாத்திக்கலாம்..”

“ தேவைப்பட்டால் மாத்திக்கலாமா…பின்னாடி எப்படி மாத்திக்குவீங்களாம்.

எனக்குன்னு குடும்பம் குழந்தை வரும் போது குழந்தைக்காக சில படங்கள் எல்லாம் வரையலாம் .

இந்த அணில் ,முயல் இந்த மாதிரி..”

“ஆமா சார்..நீங்க சொல்றது கரெக்ட் தான் .ஏன் அத்தை கீழ ஒரு ரூம்பை காலியாக வச்சிருக்கீங்களே ..

அது எதுக்காக எப்பவுமே மூடி இருக்குது .”

“அதுவா நீயாவது கேட்டியே.. அந்த ரூம்பை பின்னாடி விஷ்வாவுக்கு கல்யாணம் முடிஞ்சதுன்னா..

எப்படியும் குழந்தை பிறக்கும் இல்லையா .அந்த குழந்தைக்காக அந்த ரூம்பை டெக்கரேட் பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்கிறோம்.

குழந்தை சம்பந்தப்பட்ட திங்க்ஸ் மட்டும் அங்க வைக்கிறதா பிளான்..”

“அப்படின்னா புரியல”.

“ அதாவது குழந்தை விளையாடுறதுக்காக அந்த ரூம்பை ரெடி பண்ணலாம்னு வச்சிருக்கோம் .

நிறைய திங்க்ஸ் நிறைய பொம்மைகள் எல்லாம் வாங்கணும் .

அந்த சுவர் முழுக்கவே குழந்தைங்க இருக்கிற மாதிரி படங்கள் ஃபுல்லா வரையணும்.

இப்படி சின்ன சின்னதா நிறைய ஆசை இருக்குது அதுக்கு முதல்ல இவன் கல்யாணம் பண்ணிக்கணும் .

இவன் தான் பிடி கொடுக்கவே மாட்டேங்குறானே..

அதனாலேயே அந்த ரூம்பை அப்படியே சாத்தி வைத்திருக்கிறேன்.”

“ அப்படின்னா ஒன்னு செய்யட்டுமா.. நான் வேணும்னா அந்த ரூம்பை ஃபுல்லா பெயிண்ட் பண்ணி நிறைய டிராயிங் வரைந்து தரட்டுமா .

அதாவது ஒரு குழந்தையோட ரூம்பில் என்னென்ன படம் வரையணுமோ அதெல்லாம் வரைஞ்சு தரேன் .என்ன சொல்றீங்க .’

“உனக்கு நேரம் இருக்கும்னா தாராளமா செய்யலாம்”.

“ என்ன அத்தை பெரிய வேலை இங்க பெருசா எந்த வேலையும் நான் செய்யறது இல்ல.

சமையல்காரங்க ,வீடு கூட்டரவங்க ,துடைக்கிறவங்க எல்லாரும் இருக்காங்க.

மேக்சிமம் உங்க கூட இருக்கணும் அது தானே எனக்கு கொடுத்த வேலை .

நீங்க மதிய நேரம் தூங்க போவீங்க இல்லையா .அந்த நேரத்துல அத ரெடி பண்ணி தரேன் “.

“அப்படின்னா சரி உன்னுடைய இஷ்டம் .பியூச்சர்ல உனக்கே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்காக என்னென்ன செய்யணும்னு யோசிப்பாயோ..

அது அத்தனையுமே செஞ்சுக்கலாம் .உனக்கு முழு பர்மிஷன் தரேன்..என்ன விஷ்வா சொல்றது கரெக்டா” என்று மகனை பார்க்க ..

“இந்த ஆட்டத்துக்கு நான் வரலை மா .எனக்கு வேலை இருக்குது.”

“என்ன எஸ்கேப் ஆக பார்க்கறியா.. எத்தனை நாளைக்கு இப்படி எஸ்கேப் ஆகுறன்னு நானும் பாக்குறேன்” என்று சொன்னபடியே நகர்ந்தார்.
 

Kavisowmi

Well-known member
10

அடுத்த நாள் காலையிலேயே நிதீஷ் இவனை காண வந்தான்.

“என்னடா காலையில இங்க வந்துட்ட ..”

“இல்லடா நம்ம இனி அந்த கிராமத்துல தான் போய் தங்கியாகணும் .

நமக்கான ரூம்ஸ் அங்க இருக்குது அங்க இருக்குற வேலை செய்றவங்கள நம்ம ஆர்கனைஸ் பண்ற வேலைதான் நமக்காக ஒதுக்கி இருக்கிறார்கள் .

நம்ம இனி அங்க இருந்தாதான் சரிப்பட்டு வரும்னு நினைக்கிறேன்”.

“ ஏன்டா என்ன ஆச்சு..”

“ நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகும் போல இருக்குதுடா .”

“புரியல நீ சொல்ல வர்றது”.

“ புதுசா இப்போ சினிமா ஷூட்டிங் எடுக்குறதுக்கு ஒரு குரூப் வந்து அங்க தங்கி இருக்கிறாங்க.

இப்ப ஆட்களோட எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருக்குது .

யார்யார் எப்படி என்ன எதுன்னு எதுவும் தெரியல .

நம்ம இன்னமும் கொஞ்சம் கவனமா இருக்கணும் .

எத்தனை நாள் இருப்பாங்க எப்ப போவாங்க இந்த டீடைல் எல்லாம் தெரியனும்னா..

நம்ம இங்க இருந்துட்டு அப்பப்ப போய் விசாரிச்சா சரி வராது.அங்கே இருந்து ஆகணும் “.

“எனக்கு சொல்றது புரியுதுடா நான் இன்னைக்கு கிளம்பிடறேன்.

அம்மா கிட்ட சொல்லிட்டு சனி ஞாயிறு மாதிரி லீவு நாள்ல வந்து இங்க பார்த்துக்கலாம் “.

“ஆமாண்டா எனக்கும் அதுதான் சரி என்று தோணுது .ஏன்னா இனி பக்கத்துல இருந்தா மட்டும் தான் நம்மளால கரெக்டா கவனிக்க முடியும்.

இவ்வளவு தூரத்தில் இருந்தோம்னா சரிப்பட்டு வராது .

நம்மளே கண்காணிக்கிறதுக்கும் இன்னொருத்தர் கிட்ட பொறுப்பை ஒப்படைக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது.”

“ நீ சொல்றது புரியுதுடா .நம்ம இப்பவே கிளம்பிக்கலாம்.

இங்க பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிச்சியா ..”

‘அதெல்லாம் விசாரிச்சிட்டேன்டா. புதுசா யார் வந்தாலுமே ஆதார் கார்டுல இருந்து ஐடி கார்டு எல்லாத்தையும் செக் பண்ணிட்டு தான் விடுறாங்க.

இன்னமும் ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா அப்பப்போ தகவல் சொல்லுவேன்னு சொல்லி இருக்காங்க .
ஒன்னும் பிரச்சனை இல்ல”.

“ சரிடா சரி நம்ம கிளம்பலாம்” என்றவன் அன்றைக்கு இருவருமே புறப்பட்டனர்.

ஒரு பேகில் துணியை அடுக்கியவன் புறப்பட்டு வெளியே வர ..பூரணி அப்போதுதான் கோவிலுக்கு சென்று விட்டு வந்திருந்தார் .

“என்னடா கிளம்புற “.

“அம்மா வேலைய பத்தி ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருக்கிறேன் .

நீங்க என்ன சொன்னீங்க.. இதுக்கு மேல இங்க தங்க முடியாது. இனி அடுத்த ஆறு மாசத்துக்கு நான் அந்த கிராமத்தில் தான் தங்கியாகணும் .

சொன்னா புரிஞ்சுக்கோங்க இனி ஞாயிற்றுக்கிழமை மாதிரி வந்து பார்க்கிறேன்.”

“ என்னடா நானும் என்னென்னவோ ஆசைப்பட்டேன் .

நீ என்னவென்றால் சட்டென்று வெளியே கிளம்புற ..எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை.

விஷ்வா உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்பட்டேன்.

நீ என்னடான்னா இங்க இருந்து எப்ப பிச்சுகிட்டு போகலாங்கறதையே யோசிக்கிற மாதிரி இருக்குது .”

“ஐயோ அம்மா அப்படி இல்ல.. என்னோட வேலை உங்களுக்கு தெரியும் இல்ல .

இது நாட்டோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.” என்றவன்..

“ அம்மா இந்த பவானி எங்கே போனா”என்று கேட்க..

“ என்னடா திடீர்னு அவளை கேக்குற .பாக்கணும் போல இருக்குதா “.

“அடி வாங்க போறீங்க” என்று சொன்னபடியே ..

“பவானியை எங்கே இருந்தாலும் கூப்பிட்டுட்டு வாங்க” என்று அருகில் நின்று இருந்த வேலைக்காரரிடம் சொல்லி அனுப்பினான்.

சில நிமிடங்களிலேயே வேகமாக வந்திருந்தால்.. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்பது அவளை பார்க்கும் போது புரிந்தது .

கையில் ஆங்காங்கே மண் துகள்கள் இருக்க ..”ஒரே நிமிஷம் சார் கையை கழுவிட்டு வந்துவிடுகிறேன் “என்று நகர..

கலைந்திருந்த தோற்றம் முகம் ஆங்காங்கே வேர்த்து இருந்ததை பார்த்தபடியே..

“ சும்மாவே இருக்க மாட்டாளா எப்பவுமே ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே தான் இருப்பாளா “என்று கேட்டான்.

“வேலை செஞ்சுகிட்டு இருக்கிறவங்க என்னைக்குமே நிறுத்த மாட்டாங்க .

எதையாவது செஞ்சுகிட்டு தான் இருப்பாங்க .இவ அந்த ரகம் விடு .இப்ப வந்துருவா” என்று சொல்லும் போது வேகமாக வந்திருந்தாள்.

“ புதுசா ரோஜா நாத்து நாலஞ்சு கொண்டு வந்தாங்க .இடம் பார்த்து நட்ட வைக்கலாம்னு கூட போய் நின்னேன் .”

“கூட போய் நின்னியா இல்ல நீயே பள்ளம் தோண்டி செடியை நட்ட வச்சியா ..”

“என்ன செஞ்சா என்ன சார்..நம்ம தோட்டத்துல நம்ம தானே வேலை செய்யணும் .”
பொதுவாக பதில் சொன்னவள்.

“ எதுக்காக அழைச்சீங்க அத்தை” என்று கேட்க ..

“நான் கூப்பிடலை மா விஷ்வா தான் கூப்பிட்டான்”.

“ என்ன சார் எதுக்காக கூப்பிட்டீங்க .”

“நான் வேலை விஷயமா வெளியில கிளம்புறேன் திரும்பி வருவதற்கு டைம் எடுக்கும் .

வாரத்துக்கு ஒரு நாள் வருவேன் அதுவும் கூட முடிஞ்சா தான் இல்லாட்டி வர்றதுக்கு வாய்ப்பு இல்ல .

நீ தான் அம்மாவ பத்திரமா பாத்துக்கணும் .அதுக்காக தான் உன்னை அழைத்தேன்”.

“ நிச்சயமா சார் நான் அம்மாவை பத்திரமா பாத்துக்குவேன் .ஆனா நீங்க என்ன வேலையா வெளியே போறீங்க “ஆர்வமாக கேட்க..

“ அதை தெரிந்து நீ என்ன செய்ய போற ..நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல..

படம் எடுக்குறதுக்காக என்னோட கதையை கேட்டிருக்கிறாங்க அப்படின்னு..

சோ நாங்க அது சம்பந்தமா பேசணும் .”

“அதுக்கு அவ்வளவு நாளாகுமா”.

“ பின்ன படம் எடுக்குறதுன்னா சும்மாவா.. டயலாக் எல்லாம் நான் தான் எழுதி தரணும் .

அப்ப நான் அங்கே இருக்கணும்ல “.

“ஓ அப்படியா சரி சரி ..ஓகே நீங்க போயிட்டு வாங்க .ஏதாவது அவசரம்னா உங்கள கூப்பிடலாம் தானே .

போன் அட்டென்ட் பண்ணுவீங்கல்ல..”

“ என்ன அர்ஜெண்டா இருந்தாலும் சரி .அந்த செகண்ட் நீ என்னை கூப்பிடு.

நான் உடனே பதில் சொல்லுவேன் .அம்மா பத்திரமா பாத்துக்கோ..

அப்பா அடுத்த வாரம் தான் வருவேன்னு சொன்னாங்க. அப்பா வந்த பிறகு தான் நானும் திரும்ப இங்க வருவேன்.”

“அம்மாவை நல்லா பாத்துக்குவேன் அதுல உங்களுக்கு எந்த சந்தேகம் வேண்டாம் .

ஆனால் ஏன் இப்படி தயங்கி தயங்கி பேசுறீங்க .வேலை விஷயமாக வெளியே போறீங்க சரி .

அதுக்கு ஏன் இத்தனை பயம் இங்கே என்ன அம்மாவுக்கு ஆபத்து வந்துட போகுது .”

“அப்படி கிடையாது பவானி யாரையும் எப்பவும் நம்ப முடியாது இல்லையா .

ஒரு அளவுக்கு நம்ம வசதியா இருக்கிறோம் .நாளைக்கு இங்க பணம் ,காசு ,நகை ஏதாவது இருக்குதுன்னு யாராவது திருடங்க கூட வரலாம்ல “.

“ஐயோ ஏன் இப்படி பயந்துக்கறீங்க .நீங்க தான் ஜெய்ஜான்டிக்கா நாலு நாய் வளத்துறீங்களே..

நைட்டு வேற அவிழ்த்து விடுறீங்க. அப்புறம் என்ன பயம்.”

“ஏன்னா இது காட்டுப்பகுதி.. இங்கே ஆபத்து எப்படி வேணும்னாலும் வரலாம் .

திடீர்னு ஒரு வேளை யானை கூட்டமோ இல்ல சிறுத்தை புலிகள் வந்தா கூட நம்மள பாதுகாக்கணும் இல்லையா. அதுக்காக சொல்றேன். “

“அம்மாவ நான் ரொம்ப ரொம்ப பத்திரமா பாத்துக்குவேன். யாராவது திருடங்க வந்தா கூட என்னோட மொத்த திறமையும் காட்டி அவங்கள அடிச்சு விரட்டிடுவேன் சரியா.

ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தா உடனே போன் பண்றேன்..

இல்ல ஏதாவது தகவல் வேணும்னாலும் நீங்க கேட்கலாம் .எனக்கு தெரிஞ்சதுனா நான் சொல்லுவேன் “என்று சொல்ல..

“ சரி சரி உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது நான் கிளம்புறேன் “என்று புறப்பட்டான்.

இருக்கும்போது தெரியவில்லை பவானிக்கு ..

அவன் சென்ற பிறகு நிறையவே வீட்டில் வெறுமை இவளுக்கு புரிய ஆரம்பித்தது.

பார்க்கும்போதெல்லாம் சரிக்கு சரியாக வாய் பேசிக்கொண்டு இருந்தவன் .

தற்போது இல்லை என்று ஆகவும் அந்த தனிமை இவளுக்கு புரிய ஆரம்பிக்க.. தன் எண்ணம் போகும் போக்கை புரிந்தபடி தன்னை மெல்ல தனக்குள் ஓளித்துக்கொண்டாள்.

அன்றைக்கு சென்றவன் அடுத்த நாள் மதிய வேளையில் அழைத்திருந்தான்.

தாயார் நம்பருக்கு அழைக்க தாயார் ஃபோனை எடுக்கவில்லை.

இவளுடைய நம்பருக்கு அழைக்க இவனது குரல் கேட்கவும் அப்படியே ஒரு நிமிடம் அமைதியாக நின்று விட்டாள்.

என்னவோ நீண்ட நாட்கள் காணாமல் இருந்த ஒருவனின் குரலை கேட்பது போல தோன்ற அவளையும் அறியாமல் லேசா கண்கள் கலங்கியது.

“என்ன சார் சொல்லுங்க”..

“என்ன இது வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்குது .அம்மா எங்க ?அம்மாவுக்கு கூப்பிட்டா போன் எடுக்கல .

அதனால தான் உனக்கு கூப்பிட்டேன்.”

“அம்மா தோட்டத்துல வேலை செய்றவங்க கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க .

போன் அவங்க ரூம்ல வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் .

நான் இப்போ ஃபோன்னை கொடுக்கிறேன்”என்று வேகமாக நகர..

“ இரு இரு அவசரப்படாதே உன்கிட்டயும் கொஞ்சம் பேச வேண்டியது இருக்குது .”

“என்ன சார் சொல்லுங்க என்ன பேசணும்..”

“வேலை இருக்குன்னு அவசரமா இங்கே கிளம்பி வந்துட்டேன் இங்க வந்த பிறகுதான் ரொம்ப மிஸ் பண்றேன் .”

“என்ன சார் சொல்றீங்க நீங்க சொல்றதோட அர்த்தம் எனக்கு புரியல “.

“அது வந்து.. உன்னோட சமையலை ரொம்பவே மிஸ் பண்றேன் .

என்ன இருந்தாலும் நேரா நேரத்துக்கு சரியா டேஸ்டியான சாப்பாடு அங்க இருந்தா கிடைச்சிடுமே .

அதுவும் நீ வந்த பிறகு வெரைட்டியா தினமும் ஏதாவது செஞ்சு தருவ..

அது எல்லாத்தையுமே மிஸ் பண்றேன் .”

“ஆக சாப்பாட்டுக்காக தான் என்னை தேடுறீங்க அப்படித்தானே.”

“ அப்படி கிடையாது அதையும் தாண்டி இருக்குது .

நிறைய பேசுவோமா ..இங்க பேசுறதுக்கு ஆள் இல்ல. ரொம்ப போர் அடிக்குது.

நீ இங்க வந்துடறீயா”.

“ சரியா போச்சு இங்க 50 பேருக்கு மேல வேலை செய்றாங்க .

அவங்களை யார் பார்த்துக்குவா நீங்களா ..உங்க அப்பாவும் வேற ஊர்ல இல்ல .

சும்மா கிண்டல் பண்ணாதீங்க சார் .இருங்க அம்மாகிட்ட கொடுக்கிறேன் .

அம்மாவை மிஸ் பண்றீங்கன்னு சொல்லிட்டு கொடுக்கிறேன்” என்று சொன்ன,வள் வேகமாக சென்று..” போரடிக்குதாம் உங்க மகனுக்கு..உங்ககிட்ட பேசணுமாம்..

நிறைய மிஸ் பண்றாராம் என்று சொல்ல..” யாரு அந்த போக்கிரியா ..அவன் அப்படித்தான் கதை சொல்லுவான் .

நீ அதையெல்லாம் நம்பாதே இவன பத்தி எனக்கு நல்லா தெரியும்.

இப்படித்தான் உருகி உருகி பேசுவான் .வெளில போயிட்டான்னா வேலையில் தான் கண்ணா இருப்பான்.

நம்மள பத்தி மறந்திடுவான்..உனக்கெல்லாம் சொன்னா புரியாது.

இப்ப எல்லாம் நம்மறத நிறையவே நிப்பாட்டிட்டேன்” என்று சொன்னபடியே போனை வாங்கியவர் மகனோடு பேசியபடியே நகர்ந்தார்.
 

Kavisowmi

Well-known member
11

பத்து நாட்கள் கடந்து இருந்தது.. விஷ்வா இங்கிருந்து சென்று அன்றைக்கு பேசியவன்.. அதன் பிறகு போனில் அழைக்கவே இல்லை.

பூரணியும் கூட கண்டு கொண்டது போல தெரியவில்லை .

ஒரு கட்டத்திற்கு மேல் இவளே பேச்சு கொடுத்தாள்.

“ என்ன அத்தை உங்க பையன் போயி பத்து நாளைக்கு மேல ஆகுது .

போன் பண்ணி கூட ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குது. ஏன் நீங்க அத பத்தி கவலை இல்லாம இருக்கீங்க.’

“ அவனை பத்தி உனக்கு தெரியாதுடா .. அவன் எங்க இருந்தாலுமே வேலையில் சின்சியரா இருப்பான்.

வேலை நேரத்துல நம்மள தேடுற ரகம் கிடையாது. நிச்சயமா ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

நிச்சயமாக கூப்பிடுவான்.. ஏன் திடீர்னு கேக்குற..”

“ இல்ல அத்தை திடீர்னு தோணுச்சு .அதனால தான் கேட்டேன் .”

“சரி நாம நம்ம தோட்டத்துல இன்னைக்கு நிறைய பூ பூத்திருக்கிறதா சொன்னாங்க..

நீ நட்டு வச்ச ரோஜா செடி கூட பூத்திட்டதா சொல்லிக்கிட்டு இருந்தாங்க வா போய் பார்த்துட்டு வரலாம் “என்று நகர்ந்தவர்..

நேராக தன்னுடைய அறைக்குச் சென்று போனில் மகனுக்கு அழைப்பு விடுத்தார்.

“ என்னடா கடைசில நான் நினைக்கிறது தான் நடந்திடும் போல இருக்கு”.

“என்ன மா” குரல் கொடுத்தவன் யாரிடமோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தான்.

“இன்றைக்கு 10 பேர் தானே வேலைக்கு போறதா சொல்லி இருந்தீங்க அப்புறம் என்ன?

12 பேர் வந்து இருக்கீங்க ..யாரு ரெண்டு பேரை எக்ஸ்ட்ரா அழைச்சிட்டு வந்தது .

இவங்க எங்க இருந்து வராங்க” என குரல் கொடுக்க ..

“டேய் பொறுமையா பக்கத்துல போய் பேசுடா. எதுக்கு இங்க நின்னே கத்துற.. முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”.

“ என்னமா என்ன தெரியணும் என்ன நடக்க போகுது..”

“ என்ன நடக்க போகுதா .அந்த பொண்ணு உன்ன தேடறா தெரியுமா .

பத்து நாளாச்சு இன்னும் போன் பண்ணலன்னு என்கிட்ட வந்து கேட்டுகிட்டு இருக்கறா”.

“அம்மா அவளுக்கு என்ன பிரச்சனையோ.. எதுக்கு இப்போ என்னை கூப்பிட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க .

அதுவும் வேலை நேரத்துல தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க .”

“அடி வாங்க போறடா நீ .அங்க போய் எத்தனை நாள் ஆச்சு நானும் சரி இன்றைக்கு கூப்பிடுவ.. நாளைக்கு கூப்பிடுவேன்னு பொறுமையா இருந்தா..

பேசுற ஐடியாவே உனக்கு இல்ல போல இருக்குது. நானே உன் மேல பயங்கர கோவத்துல இருக்கேன்.

உன் அப்பா நாளைக்கு வர்றதா சொல்லி இருக்கிறார். நீ எப்ப இங்க வரப்போற ..”

“அம்மா இப்போதைக்கு இங்க இருந்து அந்த பக்கம் எல்லாம் வர முடியாது .

இது கொஞ்சம் பெரிய பிரச்சனை.. இனி நான் இங்கதான் இருப்பேன்.”

“ வீட்டுக்கு வந்து அம்மாவை பார்க்க மாட்டியா.. சரிடா நீ வர வேண்டாம். எந்த இடத்துல இருக்கறேன்னு சொல்லு.
நான் வந்து பார்க்கிறேன்”.

“ அம்மா இங்கே வரவேண்டாம் புரிஞ்சுதா .ஏதாவது முக்கியமானதுன்னா கூப்பிடுங்க .

சும்மா சும்மா பேச எல்லாம் கூப்பிட்டு தொந்தரவு பண்ணக்கூடாது .”

“ரொம்பத்தான் ஓவரா பண்ணாத சரியா.. சரியா சாப்பிடறியா என்ன செய்யற.. ஒன்னும் புரியல .பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குது.

பேசாம ஒன்னு செய்றேன் நம்ம தோட்டத்திலிருந்து ரெண்டு பேரை அங்க வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் .

கூட சேர்த்துக்கோ.. அங்கே ஏதாவது இடம் பார்த்து தங்க வச்சுக்கோ..

ரெகுலரா அவங்கள கூடவே கூப்பிட்டுக்கோ ..அப்படின்னா உன் கிட்ட பேசாட்டி கூட அப்பப்ப அவங்ககிட்ட பேசி நீ எங்க எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்குவேன்.”

“ இதெல்லாம் டூ மச் மா .நான் வந்து இருக்கிறது சீக்ரெட் வேலைக்காக...

அத்தனை பேருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவியா..”

“சரிடா நிதிஷ் எங்க”.

“ அவனுக்கு வேற வேலை கொடுத்து இருக்கிறேன் .வெளியே போய் இருக்கிறான்.

இனி சாயங்காலம் தான் இங்கு வருவான் .”

“சரிடா ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க”.

“ அதெல்லாம் கவனமாய் இருப்போம் .நீங்க எங்கள பத்தி கவலைப்பட வேண்டாம்.

அப்புறமா முக்கியமான விஷயம் இன்னொரு தடவை இந்த நம்பருக்கு நீங்க அழைச்சு பேசக்கூடாது .”

“ ஏன்டா இப்படி இருக்கிற பத்து நாளா எந்த தகவலும் இல்லை .”

“அம்மா இந்த போன்ல தான் பேச வேண்டான்னு சொன்னேன் .

வீட்ல இன்னொரு போன் வச்சிருக்கேன் .அதுல இருக்கிற நம்பருக்கு நான் சாயங்காலமா ரூமுக்கு போனதும் கூப்பிடறேன்.அப்போ நீங்க பேசுவீங்களாம்”.

“ சரியா சாப்பிடறீங்களா இல்லையா .”

“அதெல்லாம் சாப்பிட்டோம்.. எனக்கு நல்லாவே சமைக்க தெரியும் உங்களுக்கு தெரியும் தானே ..

பின்னே எதுக்காக இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேக்குறீங்க.. நான் வேலை விஷயமா வெளியே போறது ஒன்னும் புதுசு இல்லையே .

ஏதோ இந்த தடவை கொஞ்சம் பக்கத்துல கிடைச்சிருக்கு. அதுக்காக தினமும் கூப்பிட்டு தொந்தரவு பண்ணுவீங்களா..”

“ ஐயோ டேய் உன்னை வெச்சிட்டு என்னதான் செய்யறதுன்னு தெரியல .

பத்து நாளைக்கு மேல ஆச்சு உன்கிட்ட பேசி..உன்னை தினமும் கூப்பிட்டு தொந்தரவு பண்றாங்களா..

காதுல ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சா ..ஏதாவது டாக்டர் கிட்ட போகணுமா சொல்லு நான் நேரா அங்க வரேன் .”

“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல .நான் ஜஸ்ட் கோவத்துல சொன்னேன் போனை வைக்கிறேன்..
அப்பா எப்ப வராங்க..”

‘ நாளைக்கு வர்றதா சொல்லி இருக்காங்க டா . வந்த உடனே உன்ன தான் பாக்கணும்னு ஆசைப்படுவாரு “.

“அம்மா அப்பா கிட்ட சொல்லுங்க. வேலை விஷயமாக வெளியே போனா திரும்ப அந்த வேலையை முடிக்காமல் உள்ள வரக்கூடாது.

அதனாலதான் எக்ஸ்ட்ரா பத்து நாள் லீவு போட்டு உன் கூட இருந்தேன். தொந்தரவு பண்ண கூடாது புரிஞ்சுதா .

அந்த பவானிகிட்டயும் சொல்லிடுங்க .”

“பவானிகிட்டயா அப்படின்னா ஒன்னு செய்யறேன் .இரு நான் நேரா போன்னை கொண்டு போய் அவகிட்ட கொடுக்கிறேன்.”

“ அம்மா இப்போ பேச முடியாது உங்ககிட்ட சொன்னேன்ல சாயங்காலமா ரூமுக்கு போன பிறகு அந்த போன்ல இருந்து கூப்பிடுறேன் .

அப்போ அந்த போன் நம்பரையுமே அவளுக்கு கொடுக்கிறேன்.

ரெண்டு நாளைக்கு ஒரு தடலங பேச முயற்சி பண்றேன் புரிஞ்சுதா “என்று போனை வைத்தான்.

வெளியே வந்தவர் பவானியை அழைத்து “சாயங்காலமா போன் பண்றதா சொல்லி இருக்கிறான் .

புதுசா ஏதோ ஒரு நம்பர் தரானாம்.. அதை சேவ் பண்ணி வச்சுக்க சொன்னான்.”

“ ஏன் இப்போ இந்த போன்ல இருந்து கூப்பிடக்கூடாதா. இந்த போன்ல என்ன பிரச்சனையாம்..”

“ இது ஆஃபீஸ் நம்பரா இருக்கும்”. .

“ஆனா இங்க இருக்கும் போது அந்த நம்பர் தானே வச்சிருந்தாரு .
அப்ப நல்லா கூட பேசினாரு”.

“ கரெக்ட்டுமா ..இப்ப ஆபீஸ் சம்பந்தப்பட்டது மட்டும்தான் பேசணுமாம் .விடு பார்த்துக்கலாம் .

நாளைக்கு காலையில மாமா வராங்க ..அவருக்கு வெண்டைக்காய் பொரியல்னா ரொம்ப இஷ்டம் .

அதனால நம்ம இப்போ போயி தோட்டத்துல வெண்டைக்காய் பறிச்சிட்டு வரலாமா .

இல்ல நாம இறங்கி பறிக்காட்டி கூட பரவாயில்லை. அங்க வேலை செய்றவங்க இருப்பாங்க .

அவங்க கிட்ட சொல்லி வாங்கிட்டு வரலாம் வா “என்று அழைத்துக் கொண்டு நகர்ந்தார்.

மாலை 7 மணி எனும் போது சரியாக விஷ்வா இவளை அழைத்திருந்தான்.

“என்ன மேடம் என்ன தேடுனீங்களாம்”.

“ ஹலோ நான் ஒன்னும் உங்கள தேடலை .உங்க அம்மா ரொம்ப வருத்தத்தோட இருந்த மாதிரி இருந்தது .

அதனாலதான் பேச சொன்னேன்..”

“ சரி சரி நீ தேட மாட்ட.. எனக்கு நல்லா தெரியும் .இந்த போன் நம்பர் சேவ் பண்ணி வச்சுக்கோ..

எப்ப வேணும்னாலும் இந்த போனுக்கு கூப்பிடலாம் .ஆறு மணிக்கு மேல புரிஞ்சுதா .

நீ பாட்டுக்கு பகல் நேரத்தில் கூப்பிட்டா நான் அட்டென்ட் பண்ண மாட்டேன்.”

“ ரொம்ப அவசரம்னா ஏற்கனவே முன்னாடி கொடுத்த நம்பருக்கு அழைக்கலாமா”.

‘ அது கட்டாயமா ..அவசியமா இருந்தா மட்டும் தான்..

தேவை இல்லாம ஏதாவது கூப்பிட்டு கதை பேசினா தேடி வந்து மண்டையில் கொட்டுவேன் .”

“ஐயோடா சார் கொட்டற வரைக்கும் நான் தலையை காட்டிக்கிட்டு இருப்பேன்னு நினைக்கிறீங்களா .”

“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை .சரி அங்கே எப்படி போய்கிட்டு இருக்குது.”

“ எல்லாமே ஸ்மூத்தா போயிட்டு இருக்கு. எந்த பிரச்சினையும் இல்லை.

வழக்கம் போல வேலைக்கு ஆள் வராங்க அம்மா எல்லாத்தையுமே கவனிச்சிக்கிறாங்க .

அம்மாவை நான் நல்லாவே கவனிச்சுக்குறேன்”.

“ சரி முக்கியமான விஷயம் நைட் நேரத்துல நாலு நாயையுமே அவிழ்த்து விடனும் அதை மறந்துடாத..

வேலைக்காரங்க கிட்ட சொல்லிடு சரியா .”

“சரி சொல்லிடுறேன் .”

“ஒரு வேலை மறந்துட்டா கூட நீ தினமும் எட்டு மணிக்கு திறந்து விடறத வாடிக்கையா வச்சுக்கோ .

ஏன்னா நீ அவங்ககிட்ட பழகிட்ட தானே ..”

“அதெல்லாம் பழகிட்டேன். ஒன்றும் பிரச்சனை இல்லை பார்த்துக்கிறேன் .

ஆனா ஏன் இப்படி பயந்துக்கறிங்கன்னு தெரியல”.

“ உனக்கு சொன்னா புரியாது நாய் இருக்கிறது ஒரு பாதுகாப்பு ..

ஏதாவது வித்தியாசமான விலங்குகள் வந்தாலோ.. பாம்பு வந்தா கூட அது கரெக்டா காட்டி தரும் .

அதுக்காக தான் அப்புறமா நாய் கத்துதுன்னு சட்டுன்னு வெளிய வந்துடாத ..

எப்பவுமே கொஞ்சம் கவனமா இரு “.

“என்னவோ போலீஸ்ல வேலை செய்யற மாதிரி அத்தனை அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்கீங்க .

இது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல. நீங்க ரைட்டர் தானே அதனால தான் கற்பனை சக்தி அதிகமா இருக்குது போல இருக்குது.

நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு ஏதோ நடந்துரும்னு நெனச்சு இதுபோல பேசுறீங்க தெரியுமா”.

“ அப்படியே இருந்துட்டு போறேன்..எனக்கு அத பத்தி பிரச்சனை இல்ல .

நான் சொன்னது மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணு..

உனக்கு ரொம்ப போர் அடிச்சுதா உன்னோட அம்மா அப்பாவை இங்க வர சொல்லி வேணும்னா பாத்துக்கோ .

இல்ல நீ கூட ஒருமுறை போயிட்டு வரலாம்.”

“. மூணு மாசம் இங்க இருக்கிறதா சொல்லி இருக்கிறேன் .

மூணு மாசம் முடியவும் நான் கிளம்புகிறேன். அதுக்குள்ள உங்க வேலை முடிஞ்சிடும் இல்ல. நீங்க இங்க வந்துடுவீங்களா..”

“முடிச்சதும் வந்துடுவேன் “என்று போனை வைத்தான் .

போனை வைக்கவும் ஞாபகம் பவானியை சுற்றி வர ஆரம்பித்தது .

தனக்குத்தானே தலையில் அடித்தவன் ..

இந்த மாதிரி எல்லாம் யோசிக்க கூடாது விஷ்வா .

அந்த பொண்ணு உன்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்றா..

அதிலும் அன்னிக்கு சிலம்பம் அவ கூட நீ போட்டி போட்ட பிறகு உன்னோட மனநிலை முழுக்க முழுக்க மாறிடுச்சு .

எப்பவுமே அவளை தான் யோசிச்சுகிட்டு இருக்குற..”

“ஆமா யோசிக்கிறேன் .அவள் திறமைசாலி .அதனாலதான் உன் மனசு அவளை நினைக்கும்”.வேகமாக உள் மனது குரல் கொடுக்க..

“ அப்படியா அது மட்டும் தான் காரணமா ..ஆனா அன்னைக்கு சண்டை போடணும்னு சொல்லி அந்த பொண்ண எங்கெங்கெல்லாம் டச் பண்ணின ஞாபகம் இருக்கா..”

“ஹலோ நான் ஒன்னும் பொறுக்கி கிடையாது.
தேவைப்படுகிறதுனால தான் இந்த பொண்ண தொட்டேன். .
மற்றபடி கிடையாது” என்று சொன்னவன்.

அந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டு நிதீசை தேடி நகர்ந்தான்.
 

Kavisowmi

Well-known member
12

“என்னடா ஏதாவது வித்தியாசமா நடக்குதா.. டைம் ரொம்ப கம்மியா இருக்குற மாதிரி தோணுது. இன்னமும் ஐந்து மாசம் தான் இருக்குது.”

“பெருசா எதுவும் தெரியல ஷூட்டிங் ஸ்பாட்ல ஷூட்டிங் காக ஒரு குரூப் வந்திருக்காங்க.

அங்கேயும் கூட போய் விசாரிச்சிட்டேன் .வித்தியாசமா எதுவும் தெரியல.

எப்பவுமே இருக்கறவங்க தான் வந்திருக்கிறதா சொல்றாங்க..

நான் டீப்பா வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். அன்றைக்கு நைட்டு நம்ம போய் காட்டுப்பகுதியில் பார்த்தோம் இல்லையா .

அதுக்கு பிறகு யாரும் வந்த மாதிரியும் தெரியல .ரொம்ப அமைதியா இருக்குது .”

“அதுதான் எனக்கும் சந்தேகத்தை தருது நிதீஷ். நார்மலா இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்ல.

ஆனா இந்த அமைதி ..புயலுக்கு பின்னாடி இருக்கிற அமைதி மாதிரி இருக்குது .

எப்ப என்ன மாதிரி பிரச்சினை வரும்னு தெரியல.

பொறுப்ப நம்ம கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. நிச்சயமா யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துட கூடாது.

உன்மேலையே அந்த இடத்துல தான் மீட்டிங் போடுறாங்களா..”

“ ஆமாண்டா நல்லா விசாரிச்சிட்டேன் .அந்த இடத்தில் தான் பிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்க .

ஏன்னா இந்த மலைப்பகுதியை சுற்றி கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கு.

ஒவ்வொரு கிராமத்திலேயுமே குறைந்தது 100-லிருந்து 200 வரை பேர் வரைக்கும் வசிக்கிறாங்க .

அதுவும் இல்லாம இது தனி தொகுதியில் வேற வருது. அப்போ இதை போக்கஸ் பண்ண தானே செய்வாங்க .”

“ஆனா இந்த கிராமத்துக்காரங்களுக்கு எதுவும் செஞ்ச மாதிரி தெரியலையே ..

அதே மாதிரி தான் இருக்கிறாங்க.. ரொம்ப தூரம் வரைக்கும் சரியான பஸ் கிடையாது .

போக வர கூட நிறைய சிரமம் தான்.. படிக்கிற பசங்களெல்லாம் சொல்லவே வேண்டாம் .

காட்டாறு வந்ததுன்னா அதை தாண்டி தான் ஸ்கூலுக்கு போகணும் .

ஸ்கூல் கூட பக்கத்துல யாருக்கும் இல்லை .”

“ஆயிரம் பிரச்சனை இருந்தாலுமே எல்லாருமே தேர்தல் என்று வரும் போது வந்து ஓட்டு போடுறாங்களே..

அதுமட்டுமல்ல இப்ப எல்லாம் ட்ரெண்ட் மாறிப்போச்சு.”

“ இதுல என்ன மாறுச்சு.. “

“என்ன மாறிச்சா.. நீ இந்த ஊர்ல தானே இருக்கிற.. தெரியாத மாதிரி கேக்குற ..

ஒவ்வொரு தேர்தலுக்குமே ஒவ்வொரு கட்சிகாரங்களும் ஆயிரத்திலிருந்து 2000 வரைக்குமே பணம் கொடுக்கிறார்கள் .

அந்த பணத்தை கூட வாங்குவதற்கு ஆர்வமா மக்கள் தயாராக இருக்கிறாங்க.

அதுமட்டுமல்ல இது கிராமம் இல்லையா ..இங்க மீட்டிங் நடந்தா கூட அதை திருவிழா மாதிரி கொண்டாடறாங்க.

அத்தனை பேருமே இங்க வந்தாங்கன்னா மூணு வேலையுமே சோறு போட்டு கையில 100 ல இருந்து 500 வரைக்கும் காசு கொடுத்து அனுப்புறாங்க .

அதுக்காகவே பெருசா கூட்டம் கூடும் என்று பேசுறாங்க”.

“ புரியுது புரியுது” என்றபடியே..

“ சரி இன்னைக்கு ஏதாவது லெட்டர்ஸ் வந்திருக்குதா” என்று வந்து அமர..

“ நீ வேற அப்படி எல்லாம் எதுவும் வந்த மாதிரி தெரியல. எதுக்கும் இரு வாசல்ல இருக்குற பெட்டியை செக் பண்ணிட்டு வந்துடறேன் “என்று வெளியேற ..

லேப்டாப்பை ஓபன் செய்து மெயில்களை செக் செய்ய ஆரம்பித்தான் .

அதே நேரத்தில் கையில் சில லெட்டர்களை எடுத்துக்கொண்டு நிதீஷ் வந்தான்.

“ வந்திருக்கறதே உன் பெயரில் மூன்று லெட்டர் “என்று நீட்ட வாங்கி பார்த்தான்.

“ரெண்டு புதுசா சிம் கார்டு கேட்டிருந்தேன்
அது வந்து இருக்குது..”

“இது என்னடா வெறும் பேப்பர்ல ஏதோ ஒன்னு வந்து இருக்குது.” என்று கவரை கிழித்து.. உள்ளே பார்த்தான்.

“அட்ரஸ் எதுவுமே வரல .யாரோ விளையாடுறாங்க போல இருக்கு” என்றபடி பிரிக்க படித்தவனின் முகம் அப்படியே யோசனையில் ஆழ்ந்தது.

எடுத்து நிதீஷிடம் தர நிதீஷ் அதை படித்து பார்த்தவன்.

“என்னடா இது.. இது எப்படி சாத்தியம் .நம்ம எதுக்காக வந்திருக்கிறோம் அப்படிங்கறது வரைக்கும் கரெக்டா எழுதி இருக்காங்க .

இது கிட்டத்தட்ட ஒரு மிரட்டல் கடிதம்”.

“ கரெக்ட் தான் ஆனா நாம என்ன வேலைக்காக வந்திருக்கிறோம் என்று இவ்ளோ தெளிவா தெரியுதுன்னா ..

எதிரிகள் ரொம்ப திறமைசாலியா இருக்காங்க .நம்ம இன்னமும் கவனமா இருக்கணும்.”

“இப்போ பிரச்சனை அது இல்ல விஷ்வா ..உன்ன பத்தி மட்டுமல்ல உன்னோட அம்மா அப்பா நீ இருக்கிற எஸ்டேட் வரைக்கும் தெளிவா எழுதி மிரட்டி இருக்கிறான் .

இதை பார்க்கும் போது தான் இன்னமும் பயம் வருது .”

“எஸ்டேட்டை பொருத்தவரைக்கும் அங்க தெரியாத ஆட்கள் யாருமே உள்ள நுழைய முடியாது.

அப்புறம் வீட்டு சுத்தியுமே பாதுகாப்பு பலப்படுத்தி இருக்கிறேன் .

உனக்கே தெரியுமே.. இந்த முறை அங்கே தங்கி இருக்கும் போது சிசிடிவி அங்கங்க செட் பண்ணி வச்சிருக்கறேன்.

சோ இங்கிருந்தே ஆக்சஸ் பண்ணி பார்க்க முடியும். அதனால எஸ்டேட் பத்தின பயம் தேவையில்லை .

அம்மா ,அப்பா இரண்டு பேரும் பாதுகாப்பா இருப்பாங்க .

அது பிரச்சனை இல்லை. ஆனால் இவ்வளவு தெளிவாக சொல்கிறார்கள் என்றால் நீ இதை பத்தி என்ன நினைக்கிற”..

“சொல்ல என்ன இருக்கு. பணம் எல்லா பக்கமுமே விளையாடுதுன்னு அர்த்தம்.

நம்ம கூட்டத்துக்குள்ளையே கருப்பாடு ஒன்னு இருக்குது .

நம்ம டிபார்ட்மெண்ட்லயே ஆட்கள் இருக்கிறாங்க தகவல் சொல்றதுக்கு.. அத தான் இது தெளிவா காட்டுது.”

“ இப்ப என்ன பண்ணலாம் சொல்லு .நம்ம பயந்து ஓடனும் இல்லையா விஷ்வா.”

“ நான் அப்படி சொல்லல ஆனா நாம இன்னமும் கவனமா இருக்கணும்னு தெரியுது.

முன்ன விடவும் கவனமா நம்மள சுத்தி கவனிக்கணும் ..இல்லனா கொஞ்சம் பிரச்சனை தான்.

நிதீஷ் நீயும் வெளியே தகவல்களை கலெக்ட் பண்ண போகும் போது கொஞ்சம் கவனமா இரு .

ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கிறேன் .அந்த சினிமா ஷூட்டிங்காக வந்தவங்க குரூப்லயே நீயும் போய் சேர்ந்துக்கோ ..

ஏதாவது ஒரு வேலையில ஜாயின்ட் ஆகிடு. அப்பப்போ ஏதாவது தெரிஞ்சா சொல்லு.

இனி நீ என்னை அடிக்கடி இங்க வந்து பார்க்க வேண்டாம் .

இந்த நிமிஷம் எனக்கு மட்டும் தான் மிரட்டல் வந்திருக்கிறது. உனக்கு ஏதாவதுன்னா உங்க வீட்டுக்கு பதில் சொல்ல முடியாது “.

“என்னடா பயப்படுறியா..”

“ பயப்படனும் நித்திஷ் இல்லனா பிரச்சனை தான் உனக்கு தெரியாது.

இதுபோல ஒரு பிரச்சனைல்ல நீயும் நானும் டெல்லிக்கு போனப்போ என்ன நடந்துச்சு தெரியுமா .

நம்மளோட உயிர் நண்பன அந்த ஆக்சிடென்ட்ல இழந்துட்டோம் .அதே மாதிரி மறுபடியும் யாருக்கும் எதுவும் ஆகிட கூடாது .

அதுல நான் தெளிவா இருக்கிறேன் .அவங்க என்னை தான் குறி வைத்து இருக்கிறார்கள்.

என்னதான் கண்டுபிடிக்க வந்த ஆள் என்று பிக்ஸ் பண்ணி இருக்காங்க .

உன்ன பத்தின எந்த டீடெயிலும் இல்ல. அப்படின்னா என்ன அர்த்தம் .

உன்ன பத்தி இன்னமும் தெரியலன்னு அர்த்தம் .இந்த மிஷனை நம்ப கரெக்ட்டா முடிச்சுட்டு நல்ல விதமாக கிளம்பனும் .

யாருக்கும் எந்த ஆபத்தும் வராத அளவிற்கு புரியுதா.

சரி நீ கிளம்பிக்கோ.. இனி எக்காரணத்தைக் கொண்டும் இந்த மாதிரி என்னை பார்ப்பதற்கு வராத..

தேவைப்பட்டால் நானே போன் பண்ணுறேன் .அப்ப வந்தா போதும் .”

“ஏன்டா ரொம்ப பயப்படுறியா”.

“ நிஜமாவே பயமா தான் இருக்குது. ஏன்னா இங்க யார் எப்படின்னு தெரியல .

நமக்கான ஒரு வேலை கொடுத்து இருக்காங்க .அந்த வேலையில நம்ம கவனமா கரெக்டா தான் இருக்கிறோம் .

ஆனால் அதையும் தாண்டி பிரச்சனைகளை பத்தியும் கவனிக்கனும் இல்ல .”

“சரிடா சரி நான் கிளம்புறேன். நீ சொன்ன மாதிரி அந்த ஷூட்டிங் கூட்டத்து கூட நான் போய் சேர்ந்துக்கறேன்.

அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகவோ இல்ல அங்க செய்ற ஏதாவது ஒரு வேலையை நான் போய் செஞ்சுகிறேன் .

அங்க இருக்கிறவங்களையும் கவனிக்கிறேன். அதைத்தாண்டி சூட்டிங் வர்ற வித்தியாசமான ஆட்களையும் கவனிக்கிறேன்”.

“ இந்த கிராமத்தில் இருந்து வந்தாலும் சரி புதுசா யாராவது வந்தாலும் சரி கண்டுபிடிக்கலாம் .
அதுக்காக தான் ..ஓகே போயிட்டு வா “என்று சொன்னவன் அடுத்ததாக நேராக பவானிக்கு தான் அழைத்து இருந்தான் .

“ஹலோ பவானி” என்று கூப்பிட “சொல்லுங்க சார் என்ன விஷயம்” என்று ஆர்வமாக பதில் அளித்தாள்..

“நான் ஒரு விஷயம் கன்பார்ம் பண்ணிக்கணும் .அதுக்காக தான் உனக்கு இப்ப போன் பண்ணினது.”

“ சொல்லுங்க சார் என்ன விஷயம் ..”

“வந்து புதுசா யாராவது தோட்டத்துல வேலைக்கு சேர்ந்திருக்காங்களா? “

“ஏன் சார் திடீர்னு இப்படி ஒரு கேள்வியை கேக்குறீங்க .”

“இல்ல கேக்குறதுக்கு பதில் சொல்லு .நம்ம எஸ்டேட்டிற்கு பின்னாடி ரூம்ஸ் எல்லாம் கட்டி கொடுத்து இருக்கிறோமே .

அந்த ரூம்ல தங்கி வேலை செய்ற மாதிரி யாராவது வந்திருக்காங்களா? “

“இல்ல சார் அப்படி யாருமே வரலையே..”

“ காலைல வந்துட்டு சாயங்காலம் வெளியே போற மாதிரி ஆட்கள் யாராவது சேர்ந்து இருக்காங்களா..”

“ ரெண்டு பேரை இன்னிக்கு அம்மா வேலைக்கு சேர்த்து இருக்கிறார்கள் .

காலையில் வந்துட்டு சாயங்காலம் கிளம்பிட மாதிரி.. பக்கத்து கிராமத்தில் குடியிருக்கிறார்களாம்.

அம்மாவுக்கு தெரிஞ்சவங்கன்னு பேசினாங்க”.

“ வேற ஏதாவது புதுசா ..நான் உனக்கு சொல்றது புரியுதா..”

“ நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது .வேற புதுசா வீட்டு வேலைக்கு ஒரு பொண்ணு சேர்ந்து இருக்கா..

ரொம்ப அமைதி யார்கிட்டயும் பெருசா பேசுறது எல்லாம் இல்ல.”

“ ம்…பொண்ணா அப்படின்னா சரி. நான் தான் தேவையில்லாம பயந்துக்கிறேன் போல இருக்கு” என்று சொன்னபடி போனை வைத்தான் .யோசனை எல்லாம் வீட்டிலேயே இருந்தது.

மொபைலை எடுத்தவன் இந்நேரத்திற்கு யார் யார் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தான் .

சிசிடிவி கேமரா பொதுவாக வரவேற்பு ஹாலில் வைத்திருக்க.. அங்கே இவனது தாயார் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது .

பேசிக் கொண்டிருப்பது பெண் என்று தெரிந்தது .

பின்புறத்தை மட்டுமே பார்க்க சற்று நேரத்தில் எல்லாம் பவானி இவனது தாயாருக்கு அருகே வந்து எதையோ பேசுவது தெரிய ..இவன் முகத்தில் சிறு புன்னகை தொற்றிக்கொண்டது .

சில நிமிடம் இருவரையும் பார்த்தவுடன் பிறகு வேறு வேறு இடத்தில் வைத்திருந்த கேமராவை செக் செய்ய ஆரம்பித்தான்.

பெரியதாக எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.

நிறைய கேமராக்கள் வைத்திருந்த இடத்தில் ஆட்கள் நடமாடுவதற்கான அடையாளமே இல்லை.

அங்கே எல்லோருமே பத்திரமாக இருக்கிறார்கள் என்று தோன்றவும்.. போனை ஆப் செய்தவன் .அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.
 

Kavisowmi

Well-known member
13
அன்றைக்கு இரவு ஏழு மணி ஆகவும்.. கையில் ஒரு டார்ச் லைட், சிறு பேனா கத்தி ஃபோனை கையில் எடுத்தவன் புறப்பட்டு இருந்தான் .

அருகில் இருந்த காட்டுப்பகுதியை பார்வையிடுவதற்காக..

செக்போஸ்டில் இருந்த போலீசாரிடம் தன்னுடைய ஐடி கார்டை காட்ட.. அவரும் இவனோடு உள்ளே நுழைந்தார்.

“ என்ன தம்பி ஏதாவது பிரச்சனையா.. உங்கள அவ்வளவு தூரத்திலிருந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றால் கொஞ்சம் பயம் வருது”.

“ இந்த காட்டுல எப்படி.. இந்த சந்தன மரம் இல்ல விலை உயர்ந்த மரங்களை வெட்டற பழக்கம் ஏதாவது இருக்குதா..

ஏன்னா இந்த காட்டுல நிறைய தேக்கு மரங்கள் இருக்குது .அது எனக்கு தெரியும்.”

“ முன்னாடி எல்லாம் நிறைய பிரச்சனை இருந்தது தம்பி. உண்மையிலேயே கொஞ்சம் கவனிக்காம இருந்தா கூட விடியறதுக்குள்ள வெட்டி கடத்திட்டு போயிடுவாங்க .

இந்த காடு இங்கே மட்டும் இல்லை இந்த வழியா இந்த பார்டர்ல போனா அடுத்த ஸ்டேட் குள்ள போய்விடலாம் .

அந்த பக்கம் போனா கர்நாடகா காட்டுப் பகுதிக்கு போயிடலாம். அதனாலேயே இந்த காடு எப்பவுமே பிரச்சனை தான்.”

“புரியுது ரொம்ப தூரம் போக வேண்டாம் கொஞ்ச தூரம் வரைக்கும் ஒரு குட்டி வாக் மாதிரி போய் செக் பண்ணிட்டு வந்துடலாம் .”

“ஓகே தம்பி போகலாம் .வாங்க ஜீப்பில் போய் பார்க்கலாம் “என்று சொன்னவர் ..ஜிப்பில் ஏறி அமர்ந்து கொள்ள.. கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் வரையிலுமே உள்ளே சென்றனர்.

பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக அங்க அங்க கேமராக்கள் பொருத்தி வைப்பாங்க இல்லையா .

அந்த மாதிரி எதுவும் இப்ப எங்க வச்சிருக்காங்களா..”

“ முன்னாடி ஒரு தடவை வச்சாங்க தம்பி .அதுக்கு பிறகு பெருசா எதுவும் செய்யல.

நிறைய கேமரா ஒர்க் ஆகுறது இல்ல .பேருக்கு தான் இருக்குது. நம்ம கவர்மெண்ட் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே .

ஒருமுறை கொண்டு வந்து மாட்டினாங்கன்னா அவ்வளவுதான். அதை அப்படியே மறந்துடுவாங்க.

அடுத்து ஏதாவது பிரச்சனை நடந்தால் மட்டும் தான் அந்த வேலையை கவனிப்பாங்க. இங்கேயும் அதுதான் நடக்குது.

ஊருக்குள்ளேயே இது போல நடக்கும் போது காட்டு பகுதிய கவனிக்கவா போறாங்க .”

“புரியுது உங்களோட ஆதங்கம்.. நீங்க இங்க பாரஸ்ட் ஆபீஸரா எவ்வளவு நாளா வேலை செய்றீங்க “.

“அது ஆச்சது தம்பி கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல ..இந்த பிரச்சனைகள் எல்லாம் பார்த்ததால இப்ப எல்லாம் நான் ரொம்ப தெளிவாகியாச்சு.

ராத்திரி நேரத்துல இதுபோல உள்ளே எல்லாம் போய் பார்க்கிறது இல்லை.

செக்போஸ்ட்டோட வேலை முடிஞ்சது. செக்போஸ்ட் வழியா மேக்சிமம் யாரும் வர்றது கிடையாது .

பகல் நேரங்கள்ல ஆடு மேய்க்க.. விறகு வெட்ட சிலர் வந்து கேட்டுட்டு உள்ள போவாங்க.

அவங்க கிட்ட கூட சொல்லித்தான் விடுவோம். ரொம்ப தூரம் போகக்கூடாது .

கொஞ்ச தூரம் வரைக்கும் தான் போகணும். ரெண்டு மணி நேரத்துல திரும்பி வந்துடனும்னு..

இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல .”

“சரி இப்போ புதுசா யாராவது இந்த பக்கம் பார்த்து இருக்கீங்களா..”

“ இந்த நிமிஷம் வரைக்கும் யாரும் புதுசா வரல .அப்படி யாராவது வந்தா நிச்சயமா உங்ககிட்ட இன்பார்ம் பண்றேன்.

போன் நம்பர் கொடுத்துட்டு போங்க .”

“ஆமா நான் சொல்ல மறந்துட்டேன். நீங்க கூட உங்களோட போன் நம்பர் எனக்கு கொடுங்க .
சேவ் பண்ணி வச்சுக்கிறேன்.

ஏதாவது எமர்ஜென்சினா உடனே கூப்பிடுங்க .அப்புறமா இந்த ஊர்ல ரொம்ப வருஷமா இருக்கிறேன் என்று சொன்னதால கேட்கிறேன் .

புதுசா யாராவது இங்க வந்து தங்கினா கூட எனக்கு தகவல் சொல்லுங்க .

இந்த ஊர்காரங்களாகவே இருந்தாலும் ..

வெளியூர்ல வேலைக்கு போனேன் இல்ல வெளியூரிலிருந்து இங்க இருக்கிற சொந்தக்காரங்களை பார்க்க வந்தேன் .

இது மாதிரி சொல்லிட்டு யார் வந்தாலும் சரி ..கொஞ்சம் தகவல் சொல்லணும் .”

“கட்டாயமா தம்பி கட்டாயமா சொல்றேன் “என்று கூற.. வண்டியை பழைய இடத்திற்கு திருப்பிக் கொண்டு வந்தனர்.

சரியாக பத்து மணி ஆகி இருந்தது .

“சரி நான் கிளம்புறேன் ஏதாவது இருந்தா கூப்பிடுங்க “என்று சொன்னபடியே வீட்டை நோக்கி புறப்பட்டான் .

வீட்டிற்கு அருகில் வந்த போதுதான் அந்த மாற்றம் அவனுக்கு தெரிந்தது..

அவன் வீட்டிற்குள் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை..

சட்டென சுதாரித்துக் கொண்டான். இவன் புறப்பட்டு வருகையில் கதவை பூட்டி இரவு விளக்கை ஒளிர விட்டு தான் வந்தது.

இப்போது எல்லா விளக்கும் எரிகிறது என்றால் என்ன அர்த்தம்..

புதியதாக உள்ளே யாரோ நுழைந்து இருக்கிறார்கள் என்று தெரிய.. வேகமாக கையில் கத்தியை எடுத்தபடி கதவுக்கு அருகே சென்றான்.

உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.

“ யாரது “என்று குரல் கொடுத்தான்.அடுத்த நொடியே பட்டென்று விளக்கு அனைந்து விட்டது.

அதே நேரத்தில் பின்புற கதவு திறக்கும் சத்தம் கேட்க.. வேகமாக விஷ்வா அங்கே சென்றான்.

அவன் செல்வதற்கு முன்பாகவே கதவு திறக்கப்பட.. சட்டென இவன் அருகே செல்லவும்.. இவனை வேகமாக தள்ளி விட்டு விட்டு வேகமாக அந்த உருவம் இருட்டில் கலந்தது .

இவனும் கையில் இருந்த டார்ச்சை அடித்தபடி அவனை துரத்த ..அவனின் வேகமும் அசாத்தியமானதாக இருந்தது.

அந்த இடம் அவனுக்கு பரிச்சயம் ஆனது போல தோன்றியது .

அந்த அளவிற்கு வேகமாக ஓடினான். சற்று தூரம் வரைக்கும் ஓடியவன் அதற்கு மேல் துரத்த முடியாது என புரியவும்.. அங்கேயே நின்று மூச்சு வாங்க ஆரம்பித்தான்.

விஷ்வா பிறகு மெல்ல நடந்து வந்தவன்.. ரூம்பிற்குள் சென்று பார்க்க ..இவனுடைய பொருட்கள் அனைத்துமே கலைந்து கிடந்தது.

யாரோ வந்து அனைத்தையுமே கலைத்து எதையோ தேடி இருக்கிறார்கள் என்று புரிந்தது.

இவன் தன்னைப் பற்றி மட்டும் அல்ல..வேறு எந்த தகவலுமே இந்த அறையில் வைத்துக் கொள்ளவில்லை .

அவ்வப்போது அனுப்ப வேண்டியது கூட மெயில் அனுப்பி விட்டு சற்று நேரத்தில் அனுப்பியதற்கான அடையாளம் இல்லாதவாறு டெலிட் செய்து விடுவான்.

வீட்டை சுற்றி வந்தவன் பிறகு எங்கேயாவது ஏதாவது கைரேகை மிச்சம் இருக்கிறதா என தேட ஆரம்பித்தான்.

எந்த பொருளையும் தொட வில்லை .நிதீசை அழைத்தவன் அடுத்ததாக கைரேகை நிபுணரையும் அங்கே வரவழைத்திருந்தான்.

சற்று நேரத்தில் எல்லாம் நிதிஷ் கூடவே இவன் அழைத்த அந்த நபரும் கூடவே வந்திருக்க.. “யாரோ வீட்டுக்குள்ள வந்து வீட்டு முழுக்க தலையில போட்டு செக் பண்ணி இருக்காங்க .

தடயம் ஏதாவது கிடைக்குதான்னு தேடு” என்று சொல்ல.. அந்த நபரோ எங்கெங்கே களைந்து இருக்கிறதோ அங்கே எல்லாம் கை ரேகை தென்படுகிறதா என பார்வையிட ஆரம்பித்தார் .

சற்று நேரம் வரைக்கும் பார்த்தவர் ..”சாரி விஷ்வா வந்தவன் ரொம்ப தெளிவா இருக்கிறான் .

கைல கிளவுஸ் போட்டுட்டு வந்திருக்கிறான்.”

சோ எந்த கைரேகையும் இங்க கிடைக்கல .”

“நான் எதிர்பார்த்தேன். சரி நீ புறப்படு” என்று சொல்ல ..நிதிஷ் யோசனையோடு நின்று இருந்தான் .

“என்னடா உனக்கு என்ன ஆச்சு”.

“ ஒன்னும் இல்ல நீ கூப்பிட்ட உடனே வேகமா வந்துட்டேன். நான் இன்னைக்கு உன்கூடவே தூங்கிக்கறேன்.”

“ ஏன்டா பயப்படுறியா ..”

“அப்படி இல்லடா நீ இங்க தனியா இருக்குற ..உனக்கும் பாதுகாப்பு வேணும்ல .”..

அதுக்கு..

“உதவிக்கு இன்னும் ரெண்டு பேரை கேட்கலாமா “.

“சரிதான் கண்டு பிடிக்க வந்துட்டு.. இன்னும் ரெண்டு பேரை பாதுகாப்புக்காக கூப்பிடுவாங்களா..

அதெல்லாம் சரிப்பட்டு வராது நான் கவனமாக இருக்கிறேன்”.

“ ஆமாம் உள்ள வந்து கலைச்சு போடுற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த.. எங்க போன” என்று கேட்க ..

“வழக்கம் போல தான் பக்கத்து காட்டுக்கு பகுதியை பத்தி போய் விசாரிக்க போயிட்டு வந்தேன் .

அது மட்டுமல்ல இங்க வந்து தங்கியாச்சு ..சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்கனும் இல்லையா .

அதனால அப்பப்போ வெளிய போயிட்டு தான் இருக்கிறேன்.”

“ புரியுது அதனாலதான் கரெக்டான நேரம் பார்த்து உள்ள நுழைந்து இருக்கிறாங்க.

நீ இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும் விஷ்வா .”

“சரிடா நான் கவனமாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்? அதை சொல்லு”.

“ நான் அசிஸ்டன்ட் டைரக்டர் கிட்ட சொல்லி சூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன்.

இப்போதைக்கு பெருசா வேலை எல்லாம் இல்ல. மேக்கப் மேனுக்கு உதவியாளர் வேலைதான்..

சும்மா டயலாக்கை தெளிவா சொல்லிக் கொடுக்கிற வேலை பார்க்கிறேன் .

அங்க யாருமே புதுசா இல்ல நான் தான் இப்போ புதுசா சேர்ந்திருக்கிறேன் .

ஷூட்டிங் பார்க்க வர்றவங்களை தான் கவனிக்கணும் .

அதை தாண்டி சுற்றுலாவுக்கு சுத்தி பாக்கறதுக்கு யாராவது வந்தா அவங்களையும் கவனிக்கணும் .”

“இந்த இடத்தில்.. சுத்தி பார்க்க வருவாங்களா என்ன ?”

“ஷூட்டிங் நடக்கும்போது வர வாய்ப்பு இருக்கு . ஏன்னா அவங்களுக்கு புடிச்ச கதாநாயகன் ,கதாநாயகி நடிக்கும் போது அவங்கள பார்க்கறதுக்காகவே சில நேரங்களில் கூட்டம் வரும்.

அவங்க கூட கலந்து வந்தா நமக்கு தெரியாது இல்லையா.”

“ நீ சொல்றதும் சரிதான் ..சரி நீ கிளம்பிக்கோ..”

“வெளிய வேலை இருக்கு காலையில தான் வருவேன்னு சொல்லிட்டு வந்தேன் .

இப்ப திரும்ப நான் அங்க போக முடியாது .காலைல போய்க்கிறேன்‌ நீ படு “என்று சொன்னவன்.. அருகே அமர “என்னடா.. என்னாச்சுது “என்று விசஷ்வா கேட்க ..

“மிரட்டல் கடிதம் வருது. இப்ப என்னடான்னா ரூம்பை வந்து செக் பண்ணி இருக்காங்க.

இதெல்லாம் சரியா படல.. நாம ஏன் உதவிக்கு இரண்டு பேரை இங்க வரச் சொல்லி கேட்க கூடாது‌”

“ கேட்கணும்னு சொல்றியா”.

“ கட்டாயமாக கேட்கணும்னு தான் தோணுது “.

“சரி நாளைக்கு மெயில் அனுப்பும் போது இந்த தகவலையும் சொல்லிடறேன். யாரை அனுப்புறாங்கலோ அனுப்பட்டும் .”

“நம்ம பாரதியை வர சொன்னா என்ன ?”என்று நிதீஷ் இருக்க..

“ என்ன சாருக்கு திடீர்னு பாரதி ஞாபகம் வருது ..”

“இல்ல விசாரிக்கறதுல அவளோட கோணம் வேற மாதிரி இருக்கும். அதனாலதான் சொன்னேன்”.

“ சரி சரி அவளோட பெயரையும் மென்ஷன் பண்ணிடுறேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தான் விஷ்வா.
 

Kavisowmi

Well-known member
15

கணேஷ் அன்றைக்கு வந்தவர் அடுத்த நாள் காலையிலேயே மறுபடியும் புறப்பட்டு இருந்தார்.

டெல்லியில் இயற்கை விவசாயம் சம்பந்தமா ஒரு மீட்டிங் இருக்குது .

அதுக்காக என்னையும் அழைத்து இருக்கிறார்கள். இந்த ஊர்ல நான் தானே தலைவராக இருக்கிறேன்.

அதனால் கட்டாயம் போய் ஆகணும் பூரணி.” என்று கிளம்பி இருக்க..

அன்றைக்கு மாலையில் மறுபடியும் விஷ்வாவிற்கு அழைப்பு வந்தது .தெரியாத நம்பரில் இருந்து…

“என்ன உன்னோட அப்பா நேத்து வந்தவரு அடுத்த நாள் காலையிலேயே புறப்பட்டு போயிட்டார் போல இருக்கு “என்று சொல்லவும்.. அப்போதுதான் அவனுக்குமே உண்மை நிலவரம் புரிந்தது.

தன்னை மட்டும் அல்ல தன் குடும்பத்தாரையுமே கவனிக்கிறார்கள் என்று புரிய முதல் முதலாக சற்று பயம் தோன்றியது .

வேகமாக அடுத்ததாக இவனின் தலைமை இடத்திற்கு அழைப்பு விடுத்தான்.

“இங்க பிராப்ளம் அதிகமாகும் போல இருக்குது. இன்னும் சீக்ரெட்டா சில விஷயங்கள கவனித்துக் கொள்ள ஆட்கள் வேணும் .

பாரதிய அனுப்புறதா சொல்லி இருந்தீங்க .எப்போ இங்க வர்றா” என்று கேட்க ..

“பாரதிக்கு வேற ஒரு மிஷன் கொடுத்திருக்கிறேன் .இன்னும் ரெண்டு நாள்ல அந்த வேலை முடிந்துவிடும் .

அது முடிஞ்சதும் அங்க வர சொல்லி இருக்கிறேன். இன்னும் ரெண்டு பேரை அனுப்பி வைக்கிறேன் “என்று சொல்ல ..

“கொஞ்சம் சீக்கிரமாவே அனுப்பி வைக்கணும் . ஏன்னா இங்க பிரச்சனை பெருசாகும் போல இருக்குது. இனி ரொம்ப கவனமா இருக்கணும்.”

“ஏன் என்னாச்சு விஷ்வா .”

“நான் இங்க எதுக்காக வந்திருக்கிறேன்னு எதிரிகளுக்கு தெரிஞ்சிருக்குது.

அவங்களோட தொந்தரவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது இந்த ஊர்ல இருக்க கூடாது அப்படிங்கிற மாதிரி அடுத்தடுத்து மெசேஜ் வந்துகிட்டு இருக்குது. கிட்டத்தட்ட மிரட்டல் விடுத்துக்கிட்டு இருக்காங்க.”

“ புரியுது உனக்கு பயமா இருக்குதா ..சொல்லு வேணும்னா வேற ஏதாவது வேலை தரேன் “.

“என்ன சார் விளையாடுறீங்களா.. பயம் எனக்கு கிடையவே கிடையாது..

இப்போ பிரச்சனை என்னன்னா என்னோட குடும்பமும் இங்க பக்கத்துல தான் இருக்குது .

அத நினைக்கும் போது தான் கொஞ்சம் பதட்டமா இருக்குது.

என்ன மட்டும் கவனிக்கல.. என் குடும்பத்தையுமே கவனிக்கிறது எனக்கு கவலையை தருகிறது.”

“.நீ சொல்றது புரியுது விஷ்வா வேணும்னா ஒன்னு செய்யலாம்..”

“ நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு தெரியுது. நிச்சயமா அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் .

நிச்சயமா எடுத்துகிட்ட வேலையை முடிக்காமல் நகர மாட்டேன் .”

“அது எனக்கு தெரியும் விஷ்வா இப்ப என்ன செய்யலாம் சொல்லு”.

“சாரி சார் நான் ஓகே தான்..
நான் ஒரு முறை என் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கிறேன் .

ரெண்டு நாள் தங்கி அங்க சிட்டுவேஷன் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு திரும்ப இங்க வந்து ஜாயிண்ட் பண்ணிக்கிறேன்.

அதுவரைக்கும் நம்பிக்கை ஆனவங்க கிட்ட இதோட பொறுப்பை ஒப்படைச்சிட்டு போறேன் “.

“சரி விஷ்வா பார்த்துக்கோங்க” என்று போனை வைக்க.. அன்று அடுத்தநாள் காலையில் வீட்டுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.

ஆனால் அன்றைக்கே வீட்டு நிலைமை தலைகீழாக மாறப்போவது தெரியாமல்..

எப்போதும் போல அன்றைக்கும் பூரணியோடு பேசிக்கொண்டிருந்தாள் பவானி.

இரவு 8 மணியை தொட்டுக் கொண்டிருந்தது .

“என்ன ஆச்சு பவானி தூக்கம் வரலையா ..ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்கிற..”

“ உங்களுக்கு தூக்கம் வருதா சொல்லுங்க .”

“அதெல்லாம் இல்லை..இப்படி உட்காரு ரொம்ப நாளாச்சுது.. உன்ன பத்தி சொல்லு . உன் வீட்டில் உனக்கு பிடிச்சது என்ன நிறைய கேட்டு தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன் .”

“என்ன அத்தை ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேனே.. பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல .”

“சரி மேல படிக்காமல் போனதற்கு என்ன காரணம். எதுக்காக நீ காலேஜ் போகல”.

“ அது கூட ஏற்கனவே சொன்னேனே ..நான் டென்த் படிக்கிற நேரத்துல இருந்து என்கூட படித்த ஒரு பையன் எப்பவுமே லவ் லெட்டரை கையில வச்சிக்கிட்டு பின்னாடியே துரத்திகிட்டு இருந்தான் .

அது எனக்கு ரொம்ப பயத்தை தந்தது .படிக்காமல் போறதுக்கு அதுவும் ஒரு வகையில காரணமாயிடுச்சு “.
சற்றே வருத்தத்தோடு சொல்ல..

“ ரொம்ப வருத்தப்படுறியா.. உனக்கு ஓகே னா சொல்லு இப்ப கூட படிக்கலாம் தெரியுமா.”

“ இல்லத்தை எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. என்னோடது எல்லாமே மாறிப்போச்சு.

இப்ப நான் அதை பத்தி எல்லாம் யோசிக்கிறதே இல்ல..”

நிறைய நிறைய அன்றைக்கு பேசினார்கள் ..பூரணிக்கு என்னவோ பவானியை அவ்வளவு பிடித்தது .

நிறைய கேட்டு பேசி சிரித்துக்கொண்டிருக்க இரவு 10 மணியை நெருங்கியிருந்தது.

“சரி நீ போய் தூங்கு.. நேரம் ஆயிடுச்சு .நானும் என்னோட ரூம்பிற்கு போய் தூங்க போறேன் “என்று சொல்லிவிட்டு செல்ல .. இவளும் மெல்ல வெளியே வந்தாள்.

தன்னுடைய அறைக்கு செல்ல நடக்கையில் வழக்கமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் நாய் இன்றைக்கு வெளியே வராதது போல தோன்ற.. யோசனையோடு வாசலுக்கு வந்தாள்.

கையில் இருந்த மொபைலை எடுத்தவள் வாசலில் நிற்கின்ற வாட்ச்மேனிற்கு அழைத்தாள்.

“என்னன்னா வழக்கமா நாயை அவிழ்த்து விடுவாங்க. இன்னைக்கு நாய் வெளியே வந்த மாதிரியே தெரியலையே.. நாயை அவிழ்த்து விடலையா” என்று கேட்க ..

“அது வந்து மா நாயை பாத்துக்குறதுக்காக இருந்த நம்ம மாணிக்கத்துக்கு உடம்பு சரியில்ல .

என்னவோ சாப்பிட்டது ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு போல இருக்கு .அவன் வரல. அதனாலதான் நாயை திறந்து விடவில்லை .

நைட் சாப்பாடு மட்டும் தான் வச்சாங்க”.

“ ஓ அப்படியா சரி அண்ணா.. சரி பார்த்துக்கோங்க “ என்று ரூமிற்கு செல்ல போகையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக தோன்ற ஆரம்பித்தது.

என்னவோ யாரோ அந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று தோன்றவும் ..தன்னுடைய அறைக்கு செல்லாமல் யோசனையோடு ஹாலில் அமர்ந்தாள்.

சுற்றிலும் அமைதி.. மயான அமைதி…

எந்த சத்தமும் இல்லை. காதை கூர்மையாக்கி கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க..

மெல்ல துணியின் சரசரக்கும் சத்தம் கேட்டது.
திரும்பி பார்த்தாள் எதுவும் இருப்பது போல தெரியவில்லை.

என்னவோ சரி இல்லையே என்று மனதிற்குள் தோன்றவும் வேகமாக கையில் இருந்த போனில் மெசேஜ் விஷ்வாவிற்கு தட்டி விட்டால்..

“ என்னவோ தெரியல..வீடு ரொம்ப அமைதியா இருக்கு.என்னவோ தப்பா நடக்கும் போல தோணுது.

அதற்கேற்ற மாதிரி நாயையும் இன்னைக்கு அவிழ்த்து விடல . வீட்டுக்குள்ள யாரோ மூன்றாவது நபர் நுழைந்து சுத்துற மாதிரியான ஒரு உணர்வு வந்துகிட்டே இருக்குது” என்று சொல்லவும் இங்கே விஷ்வாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ இத பாரு பவானி அம்மா கூட போய் இரு .கதவை லாக் பண்ணிட்டு இருங்க .நான் இப்பவே கிளம்புறேன் “என்று சொல்ல ..”வேண்டாம் நான் பாத்துக்குறேன் .நீங்க பயப்படாதீங்க .எனக்கு தேவையில்லாம கூட இது மாதிரி தோணலாம்.

அது நீங்க அடிக்கடி கவனமா இருன்னு சொன்னதால நானும் அப்படியே யோசிக்கிறேன் போல இருக்கு “என்று மெசேஜ் தட்டவும்..

இப்போது சத்தம் நன்றாக கேட்க சட்டென போனை வைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் .

சமையலறைக்குள் இருந்து சத்தம் வருவது போல தோன்ற மிக மிக அமைதியாக சென்று சட்டென கதவைத் திறக்க.. யாரும் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை .

ஆனால் அதே நேரத்தில் பூரணியின் அறை கதவு திறந்து இருப்பது தெரிய..வேகமாக அங்கே சென்றாள்.

உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து காட்சி இவளுக்கு பயத்தை அளித்தது.

புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்த அந்த பெண் பூரணியை இறுக பிடித்தபடி கத்தியை அவருக்கு நேராக ஓங்கிக் கொண்டிருக்க ..ஒரு நிமிடம் தான் திகைத்து நின்றது.

அடுத்த நொடியே வேகமாக செயல்பட ஆரம்பித்தால் பவானி.

“ஏய் என்று சத்தம் கொடுத்து கையில் கிடைத்த பொருளை எடுத்து அந்த பெண்ணின் மீது வீச ..கடைசி நிமிடத்தில் சுதாகரித்தவள். பூரணியை தள்ளி விட்டுவிட்டு இவளுக்கு அருகே வந்தாள்.

இவன் ஏற்கனவே திறமைசாலி. ஏற்கனவே தற்காப்பு கலைகள் கற்றிருக்க எளிதாக அவளை எதிர்க்க ஆரம்பித்தாள்.

அந்த பெண்ணும் கூட திறமைசாலியாக இருந்தாள்.

இவளை விடாமல் தாக்க ஆரம்பிக்க இருவருக்குமே சிறு கைகலப்பு ஏற்பட்டது .

பூரணியோ அதிர்ச்சியோடும் பயத்தோடும் நகர்ந்து நிற்க ..

“என்ன ஆனாலும் சரி அத்தை இந்த பக்கம் வந்துராதீங்க.’ என்று சொன்னபடியே தாக்க வந்தவளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நகர்ந்தபடி சண்டையிட ஆரம்பித்தாள்.

சில பல அடிகள் அந்த பெண்ணுக்கும் மட்டுமல்ல இவருக்குமே விழ எதிர்பாராத ஒரு நேரத்தில் சட்டென கையில் இருந்த கத்தியால் இவளது வயிற்றில் சட்டென இறக்கியவள் வேகமாக பவானியை கட்டிலில் தள்ளி விட்டு விட்டு கதவை திறந்து கொண்டு ஓடி இருந்தாள்.

அப்போதும் கூட பவானி விடவில்லை .பின்னோடு துரத்திக் கொண்டு ஓட.. பூரணி தான் பயத்தில் சத்தமிட ஆரம்பித்தார்.

இரவில் இவர்களை தவிர வேற்று ஆட்கள் யாரும் வீட்டுக்குள் தங்குவது கிடையாது .

வழக்கமாக நாய்களைத் திறந்து விடுவதினால் பயம் எதுவுமே இல்லாமல் இன்று வரை இருந்தனர் .

வேலை முடியவும் ஒன்பது மணி எனும் போது வீட்டு வேலை செய்பவர்கள் அனைவருமே பின்னால் இருக்கின்ற அவர்களது இருப்பிடத்திற்கு சென்று விடுவர்.

பவானி செல்லவும் பூரணி பதட்டத்தோடு பின்னால் ஓடி வந்தார்.

“ போகட்டும் விடு தெரியாம வீட்டுக்குள்ள வேலைக்கு சேர்த்தது தப்பு தான் .

அதற்கான தண்டனை தான் இது போல இருக்கு .நீ போகாத” என்று பதட்டத்தோடு இவளை நிறுத்தியவர் .

அப்போதுதான் கவனித்தார் பவானியை .. போட்டிருந்த உடை ரத்தத்தால் நனைந்து ரத்தம் சொட்டுவதை ..

“அய்யோ பவானி காயம் பட்டிருக்கு”என பதறினார் .

ஒரு நிமிடம் நின்று பார்த்தவள் வேகமாக தோளில் போட்டு இருந்த ஷாலை எடுத்து வயிற்றோடு இறுக கட்டியபடி அங்கிருந்த இருக்கையில் சோர்வாக அமர்ந்தால் பவானி.
 

Kavisowmi

Well-known member
16

மெசேஜை பார்த்தவன் அந்த நிமிடமே புறப்பட்டு இருக்க.. ஆனாலும் இவன் வருவதற்குள் தாமதமாக இருந்தது.

ஒரு ஓரமாக சற்றே முகம் சோர்ந்தபடி பவானி அமர்ந்திருக்க ..பதட்டத்தோடு பூரணி போனில் யாருக்கோ அழைத்துக் கொண்டிருந்தார்.

வண்டி சத்தம் கேட்கவும் போனை போட்டுவிட்டு வாசலுக்கு வர ..விஷ்வா வேகமாக உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தான்.

“ என்ன ஆச்சு ..என்னம்மா” என்று பதற்றத்தோடு கேட்க நேரடியாக பவானியை கைக்காட்டினர் .

“ஒருவேளை இன்னைக்கு இவ இங்கு இல்லனா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் .

நீ நிறைய முறை சொன்ன.. கவனமா இருக்க சொல்லி ..நான் தான் தப்பு பண்ணிட்டேன் .

இன்னைக்கு என்னோட சின்ன கவனக்குறைவால எவ்வளவு பெரிய விபரீதம் ஆயிடுச்சு” என்று கூறினார்.

பவானியை கவனிக்க அருகே ஓடி வந்தான். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டு இருக்க ‌.மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தால் பவானி.

பார்க்கவுமே சட்டென தங்களுடைய டிரைவருக்கு போனை அழைத்தவன்.. பவானியை கைகளில் ஏந்தியபடி அங்கிருந்து வெளியேறினான்.

இரண்டு மணி நேரம் கழித்து மெல்ல கண் திறந்தால் பவானி
.
ஹாஸ்பிடலில் இருப்பது புரிந்தது.

கையில் குளுக்கோஸ் இறங்கி கொண்டிருக்க.. சோர்வாக தன்னை சுற்றிலும் பார்த்தாள் .

சற்று தொலைவில் விஷ்வா பதறத்தோடு நின்று இருக்க.. அருகே பூரணி அதே பதட்டத்தோடு இவழது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

“ என்ன அத்தை பயந்துட்டீங்களா .எனக்கு ஒன்னும் இல்ல. லேசான காயம் தான் “என்று சொல்ல..

“ லேசான காயம்தானா ..நீ அங்க மயக்கமாயிட்ட தெரியுமா. எல்லாம் என்னால தான் நான் தான் கவனமாக இருந்திருக்கணும்.

தூங்கப்போனேன்.. கதவை வழக்கம் போல பூட்டி இருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்காது .’

“இல்ல அத்தை இன்னைக்கு ஒருவேளை பூட்டி இருந்தா நாளைக்கு வேற மாதிரி முயற்சி நடந்து இருக்கும் .”

“என்ன சொல்ற பவானி “.

“ஒருவேளை நீங்க ரூமுக்குள்ள போறதுக்கு முன்னாடியே யாராவது உள்ள போய் ஒளிஞ்சிருந்தா .. அந்த மாதிரி எதுவும் நடக்கல .

அந்த பொண்ணு யாரு .என்ன எதுன்னு விசாரிச்சிங்களா விஷ்வா “என்று சோர்ந்த குரலில் கேட்டாள்.

“வேலை செஞ்சவரோட பொண்ணுங்கற பேர்ல பொய்யா தான் உள்ளே நுழைந்து இருக்கறா ..

நம்ம தான் யாரையும் கவனிக்காமல் விட்டுட்டோம். நீ கூட சொன்னல்ல.. அன்னைக்கு நாய்க்கு அந்த பொண்ணு தான் சாப்பாடு வைக்கிறான்னு..

அன்றைக்கு நான் இன்னும் கொஞ்சம் கவனிச்சி இருக்கணும். தப்பு என்னோட பேர்ல தான் .”

“என்ன ஆச்சு ..*என்று சோர்வாக கேட்க ..

“நாய்களுக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கறா..நாலுமே சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடக்குது .

இப்பதான் தோட்டக்காரன் பார்த்துட்டு சொன்னான். வீட்டை சுத்தி வேற யாராவது வித்தியாசமா இருக்கிறார்களா “என்று கேட்க..

“அந்த பொண்ணு தவிர வித்தியாசமா யாருமே உள்ள வரல விஷ்வா சார் “என்று சொல்ல வேகமாக அவளுக்கு அருகே வந்தவன்.

“ பேசாத ரெஸ்ட் எடு பவானி. நான் ரொம்ப பயந்துட்டேன்” என்று அவளுடைய கைகளை பற்றிக் கொண்டான்.

“ நீ இன்னைக்கு எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கிற தெரியுமா .

என்னுடைய அம்மாவோட உயிரை நீ காப்பாற்றி இருக்கிற.. அந்த இடத்தில் நீ இல்லனா இன்னைக்கு என்ன நடந்திருக்கும் தெரியுமா.

அம்மாவை அந்த பொண்ணு ஈசியா குத்தி கொண்டுட்டு போய் இருப்பா..’

“எதுக்காக சார் அம்மாகிட்ட வரணும் .அவங்க என்ன தப்பு பண்ணினாங்க .

தோட்டத்துல வேலை செய்ற எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா நடந்துக்குவாங்க .

வீடு தேடி வர்ற யாரையுமே வெறுங்கையோட அனுப்பி வச்சது இல்ல. அம்மா மேல என்ன கோபம் இருக்க முடியும் அந்த பொண்ணுக்கு..”

“கோபம் அம்மா மேல இல்ல.. என் மேல”.

“ புரியல சார் நீங்க சொல்றது..”

“இன்னொரு நாள் சொல்றேன் .இப்போதைக்கு இத இப்படியே விட்டுடு “என்று சொல்லிவிட்டு தாயாருக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான் .

பூரணியோ” சாரிடா உன்ன ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேன்ல..

எப்பவுமே இது மாதிரி இருந்ததில்லை “.

“இல்லம்மா நான் தான் இன்னமுமே கொஞ்சம் கவனமா இருந்து இருக்கணும் .

நான் தப்பு பண்ணிட்டேன். அம்மா கிட்ட இருக்கலாம்னு இந்த வேலையை வாங்கிட்டு வந்தது ஏன் தப்பு தான் .

நான் இனி தாமதிக்க போறது இல்ல “

“என்னடா செய்யப் போற.. “

“இப்போதைக்கு இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிடலாம்னு இருக்கிறேன்.”

“இது நீ இல்லடா..”

அங்கே அவளையும் அறியாமல் பவானி தூங்க ஆரம்பித்திருந்தாள்.

“ சரிடா இப்ப என்ன செய்யப் போற ..பவானி வீட்டுக்கு சொல்லனும்ல..”

“இந்த நேரத்தில் வேண்டாம் மா. அவர்கள் பதறிடுவாங்க ‌நாளைக்கு காலையில பவானி கிட்ட சொல்லிட்டு கூப்பிட்டு சொல்லிடுறேன்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவளோட அப்பா கிட்ட பேசி கல்யாண வேலையை பாருங்க..

அந்த பொண்ணு இங்க கூட்டிட்டு வந்து வச்சு ..அந்த பொண்ணுக்கு ஏதாவது ஒன்னு ஆகிடுச்சுன்னா .
அது பெரிய தப்பா ஆயிடும் “.

“இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறது. இதெல்லாம் பார்த்துட்டு பவானியோட அப்பா.. பொண்ணு தர சமாதிப்பாரா”.

“ அதெல்லாம் சம்மதிபார் மா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஆனால் அடுத்த நாள் காலையில் பவானியிடம் சொல்லும் போது அவள் வேறு சொன்னாள்.

“ கோச்சுக்காதீங்க தயவு செய்து அப்பாகிட்டயோ, அம்மாகிட்டயோ இந்த விஷயத்தை சொல்லிடாதீங்க.

சொன்னா அவங்களால தாங்க முடியாது. என்னைக்குமே எனக்கு காயம் படும்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டாங்க.

இப்படின்னு சொன்னீங்கன்னா உடனே என்னை அழைத்து கொண்டு போயிருவாங்க .

அதுக்கப்புறம் எப்பவுமே நான் உங்களை பார்க்க முடியாது .

அவங்க சொன்ன டைம் முடிய இன்னமுமே நாலு இருக்குது அதனால அதுவரைக்கும் எதுவும் சொல்ல வேண்டாம்.

அவங்க எல்லாம் வந்தாங்கன்னா அப்ப பார்த்துக்கலாம் .

தேவை இல்லாம அவங்கள கவலை பட வைக்க வேண்டாம். டாக்டர் தான் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க இல்ல.

ஸ்டிச் போட்டு இருக்குது .ஒரு வாரத்தில் சரியாகிவிடும் .வேற என்ன? “என்று சமாளிக்க அவளையே யோசனையோடு பார்த்தான்.

“அவ சொல்றதும் கரெக்ட் தான் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் .

கொஞ்சம் வெயிட் பண்ணலாம்” என்று சொன்னவன் ..”நீங்க வேணும்னா வீட்டுக்கு போயிட்டு வாங்குமா .

நான் பவானிக்கு துணையா இங்கேயே இருக்கிறேன் .”

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல இங்கதான் நர்ஸ் இருக்காங்கல்ல .

நான் பார்த்துக்குறேன் “.

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பவானி .இனி உனக்கு சரியாகிற வரைக்கும் நான் தான் உன் பக்கத்துல இருந்து பாத்துக்க போறேன்”.
என்று அருகே வந்து அமர..

பூரணி”எனக்கு கொஞ்சம் வீட்டில் வேலை இருக்கு. குளிச்சிட்டு மதியம் சாப்பிட உங்க ரெண்டு பேருக்குமே எடுத்துட்டு வரேன் .

நீ பவானி கூட பேசிகிட்டு இரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

இவர் நகர்ந்த சில நிமிடங்களிலேயே நிதிஷ் வேகமாக உள்ளே வந்தான்.

“ என்னடா நடந்துகிட்டு இருக்குது ..எப்படி கவனிக்காமல் விட்ட..”

“சில நேரங்களில் கவனம் இல்லாமல் விட்டுடுவோம்ல அந்த மாதிரி ஒரு விஷயம் தான் அதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினையாகிவிட்டது .

ஆனால் இன்னொரு முறை இது மாதிரி ஆக விடமாட்டேன் .”

“சரி இப்போ என்ன செய்யலாம் என்று இருக்கிற ..”

“நான் பிரச்சினையை சுருக்கமாக மேல் இடத்துக்கு தகவல் அனுப்பிட்டேன் .”

“ஏன்டா அவசரப்பட்ட” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் அழைப்பு வர..

“நீ பவானி கூட பேசிகிட்டு இரு நிதீஷ் கால் பேசிட்டு வந்தேன்” என்று வெளியேறினான்.

“நடந்தத கேள்விப்பட்டேன் விஷ்வா .ரொம்ப வருத்தமா இருக்குது. இத பத்தி தான் காலையில் நாங்க மீட்டிங்ல பேசிணோம் .

எல்லாருமே ஒரே முடிவு தான் சொல்றாங்க .கொஞ்ச நாளைக்கு நீ இந்த வேலையில் இருந்து விலகி இருக்கலாம்னு.”.

“அவங்க என்னை மிரட்டி பாக்குறாங்க சார். அவங்களுக்கு பயம் வந்துருச்சு..

அதனால என்னை இப்படி மிரட்டினால் நான் விலகிடுவேன்னு நினைக்கிறாங்க ..இனி இத பத்தி விசாரிக்க மாட்டேன் என்று நினைக்கிறார்கள்.

அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் இப்படி சொன்னா எப்படி.”

“விஷ்வா ஏற்கனவே நீங்க இதுவரைக்கும் இரண்டு பேரை பிடிச்சு கொடுத்திருக்கீங்க.

அவங்க ரொம்ப கோவத்துல இருக்காங்க அவங்களோட கோபத்தோட வெளிப்பாடு தான் இது…”

“அது எனக்கும் தெரியுது சார் ஆனா..”

“கொஞ்ச நாளைக்கு நீங்க அங்க போக வேண்டாம் .உங்க வீட்டிலேயே இருங்க புரியுதா.

விஷ்வா நாங்க வேற ஏற்பாடு செஞ்சுகிறோம் .”

‘ஓகே சார் உங்க இஷ்டம்”.

‘ அதுக்காக உங்களை இந்த வேலையிலிருந்து தூக்கிட்டதா நினைக்க வேண்டாம் .

அதே டீம்ல தான் இருக்கீங்க அதே ஒர்க் உங்களுக்கு தொடரும் .உங்களோட கம்ப்யூட்டர்ல இருந்து வேலை பாருங்க. பில்ட் ஒர்க் வேண்டாம்.
பேக்ல வேலை செய்யுங்க.

சில கோட் வேர்ட்கள் நிறைய வருது .அதற்கான மீனிங் என்னன்னு கொஞ்சம் கண்டு பிடிச்சு குடுங்க. உங்களுக்கு அதுல நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு தெரியும்.”

“புரியுது சார் “.

“இனி அந்த வேலையை மட்டும் உங்க வீட்ல இருந்து கொஞ்ச நாளைக்கு செய்ங்க .

நாங்க சொல்லும்போது ஜாயிண்ட் ஆனா போதும்.”

“ஓகே சார் தேங்க்யூ சார் “என்று சொல்லிவிட்டு உள்ளே வர.. யோசனையோடு நிதீஷ் இவனை பார்த்தான்.

“ என்ன ஆச்சுது..”

“ இனி ஒர்க் எல்லாம் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.. அதை தான் சொன்னாங்க.நீ என்ன செய்ற “.

“எனக்கு இன்னமும் சிலர் மேல சந்தேகம் இருக்கு .

இன்னைக்கு அழைச்சிட்டு போய் விசாரிக்க முடிவு பண்ணி இருக்கிறோம் .

ஆல்ரெடி போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லியாச்சு. இந்நேரம் அவங்க கைது பண்ணி இருப்பாங்க ‌

உள்ள வச்சு விசாரிச்சிட்டு தகவல் சொல்றதா சொல்லி இருக்காங்க. “

“என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல…”

“பாரதியும் அவளோட டீம் ஆட்களும் நாளைக்கு வர்றதா சொல்லி இருக்காங்க .

பாரதிய உன் வீட்டிலேயே தங்க வச்சுக்கோயேன் .என்ன சொல்ற விஷ்வா “.

“தாராளமா தங்கட்டும் டா .அவ யாரு. என் பிரண்டு தானே. ஒன்னும் பிரச்சனை இல்ல”.

“ சரி நான் கிளம்புறேன். என்னை சூட்டிங் ஸ்பாட்டில் தேடிக்கிட்டு இருப்பாங்க .”

“இந்த ஊர் நம்ம ஊர் தான் .. ஆனாலும் பாதுகாப்பாக இரு டா.. இப்போதைக்கு அதுதான் முக்கியம் .”

“ஏதாவது முக்கிய தகவல் கிடைச்சதுன் உனக்கு அனுப்புறேன் ..அப்புறமா சில கோட் வேட் உன்னோட லேப்டாப் அனுப்பி வைத்திருக்கிறேன்.

அதற்கான அர்த்தம் என்னன்னு முடிஞ்சா தெரிஞ்சு வை.”

“ஓகேடா “என்று சொல்ல அவள் புறப்பட்டு இருந்தான்.

நேராக பவானி இருந்த அறைக்குள் வர.. அப்போதுதான் மெல்ல அசைய ஆரம்பித்து இருந்தாள் .

வேகமாக அருகே சென்றவன் கையை பிடித்தபடி மெல்ல தடவி கொடுக்க ..மெல்ல கண்விழித்தால் பவானி .

எதிரே இவனின் சோர்ந்த முகத்தை பார்த்தவள். லேசாக புன்னகைத்தாள்.

‘ என்ன சார் ரொம்ப பயந்துட்டீங்களா .”

“பின்ன பயமில்லாமல் இருக்குமா… என்னோட உயிரே என் கிட்ட இல்ல .‌”

“அம்மாவை சொல்றீங்களா..”

“ இல்ல உன்னை சொல்றேன் “என மனதிற்குள் நினைத்தவன் லேசான சிரிப்போடு தலையசைத்தான்.
 
Top