எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஸ்ரீராஜ் விமர்சனங்கள் - NNK 35 தித்திக்கும் தேனருவி

Sriraj

Moderator

ஸ்ரீராஜ்_விமர்சனங்கள்

அன்பு தோழமைக்கு,

NNK 35 - தித்திக்கும் தேனருவி

தித்திக்கும் தேனருவி தித்திப்பாய் இருந்ததா அல்ல பல சுவைகளுடன் இருந்ததா என வாசிக்கும் நோக்கில் தித்திக்கும் தேனருவியை வாசித்தேன்.

உண்மையில் பல சுவைகளுடன் இருந்தது இத்தேனருவி..

மிக அதீதமாய் உப்பு நீரின் சுவையையே இக்கதை எனக்கு தந்தது.

காதலின் ஆழத்தை பார்ப்போம் என நினைத்து அதனின் மறு பக்க ரகசியத்தை கண்டேன்..

காதல் உணர்ச்சியோடு ஒரு வாழ்க்கையா அல்ல
காதல் உணர்வோடு ஒரு வாழ்க்கையா
இவர்கள் வாழ்ந்தது உணர்வோடு..

அருகே இல்லாத அருகாமையோடு வாழ்ந்த வாழ்வு..
இரு மனம் சார்ந்த வாழ்வில் சுகம் உள்ளது என நினையாது
பலர் மனம் சார்ந்த வாழ்வில் தான் அதிகம் சுகம் உள்ளது என நினைத்த அவர்களை என்னவென்று சொல்ல..

அழகனவனின் உணர்வுகளும்
அழகியவளின் தவிப்புகளும்
என ஒன்றை ஒன்று ஈர்க்க
பல உற்றங்களின் உதவியால் காத்திருப்பால் புரிதலால் என அழகாய் இணைந்தது கரங்கள்..

இரு கரங்கள் இணையும் பாலமாய் அவர்களின் நட்பும் சகோதரத்துவமும் செய்தவை யாவும் ரசனைக்குரியதே..

தேவதீரனின் காதல் தேனருவியின் வசம் வந்து தித்திக்கும் தேனாய் சுவைத்தது.

அழகிய கதையை அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

அன்புடன்
ஸ்ரீராஜ்..

நாள்: 05 June 2024.
 
Top