எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!! - கதைத் திரி

Status
Not open for further replies.

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 1

நீண்ட வராண்டாவில் தன் இரு பக்கமும் பார்வையைப் பதித்தவாறு, முகத்தில் என்றும் இருக்கும் மென் புன்னகையுடன், கழுத்தில் ஸ்டெதஸ்கோப் சகிதம் வலம் வந்தான் டாக்டர் துஷ்யந்த். முப்பது வயது விஷேட இளம் இதயநோய் நிபுணர்.

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கேறிய புஜங்கள், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என அடித்துக் கூறும் அழுத்தமான இளஞ்சிவப்பு இதழ்கள், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை, பாதி நெற்றியை மறைத்திருந்த முடியை ஜெல் பூசி கட்டுக்குள் வைத்திருந்தவனின் மீது பெண்களின் பார்வை விழாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

ரவுண்ட்ஸ் செல்லும் போது எதிரில் வலம் வந்தவர்கள் மரியாதை நிமித்தம் அவனுக்கு வணக்கம் கூற, அவற்றை மென் புன்னகையுடன் ஏற்றவாறு நடந்த துஷ்யந்தின் செவிகளை அடைந்தது ஒரு பதட்டமான பெண் குரல்.

நெற்றி சுருங்க, குரல் வந்த திசையை நோக்கியவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய, அவன் இதழ்களோ, 'சகுந்தலா' என முணுமுணுத்தன.

ப்ளஸ் டூ படிக்கும் போது இருவரும் ஒரே வகுப்பு. இதுவரை பேசிக்கொண்டது கிடையாது. ஆனால் அவர்கள் இருவரையும் வைத்து முழு வகுப்புமே கேலி கிண்டல் செய்து பேசிக் கொண்டனர்.

காரணம் இருவரின் பெயர்ப் பொருத்தம். 'துஷ்யந்த் - சகுந்தலா' காவியக் காதலர்கள்.

ஆனால் படிப்பில் மட்டும் கண்ணாக இருந்த துஷ்யந்த் அவர்களின் கேலிப் பேச்சைக் காதிலே வாங்வில்லை.

இருந்தும் ஓரிருமுறை சாதாரணமாக சகுந்தலாவின் முகம் நோக்கி இருந்தாலும் துஷ்யந்த்தின் மனதில் வேறு எண்ணங்கள் எழவில்லை.

அதன் பின் ப்ளஸ் டூ முடித்து இத்தனை வருடங்கள் கழிந்து பிரபல இதய மருத்துவன் ஆன பின் தான் மீண்டும் சகுந்தலாவைக் காண்கிறான் துஷ்யந்த்.

பள்ளிக் காலத்தில் சக மாணவி என சகுந்தலாவை சாதாரணமாகக் கடந்த துஷ்யந்த்தினால் ஏனோ இன்று அவளை விட்டுப் பார்வையை அகற்ற முடியவில்லை.

இத்தனை நாட்களாக அவனின் பெற்றோர் திருமணம் செய்யக் கூறி எவ்வளவோ வற்புறுத்தியும் அதனைத் தட்டிக் கழித்து வந்த துஷ்யந்த்திற்கு சகுந்தலாவைக் கண்டதும் மனம் அவள் பால் சரியத் தொடங்கியது.

எத்தனையோ பெண்கள் ஒவ்வொரு விதமாக அவனை அணுகியும் யாரையும் நிமிர்ந்து பார்த்திராதவன் இன்றோ இமைக்க மறந்து சகுந்தலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ப்ளஸ் டூ படிக்கும் போது சீருடை அணிந்து, இரட்டை ஜடை பிண்ணி, கோதுமை நிறத்தில் சற்று பூசிய உடல்வாகுடன் இருந்த சின்னப் பெண் இன்று அளவான உடல்வாகுடன் முன் இருந்ததை விட பல மடங்கு எழிலுடன் திடீரென அவன் முன் வந்து நின்றால் அவனும் என்ன தான் செய்வான்?

சகுந்தலா கைப்பேசியில் யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, நொடிக்கொரு முறை மாறும் அவளின் முக பாவனைகளையே தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான் துஷ்யந்த்.

'என்ன டா பண்ணிட்டு இருக்க? நீ ஒரு டாக்டர். அது ஞாபகம் இருக்கா? வெட்கமே இல்லாம நாழு பேரு போற வர இடத்துல நின்னு பச்சையா சைட் அடிச்சிட்டு இருக்க...' என துஷ்யந்த்தின் மனசாட்சி அவனைக் காரி உமிழவும் தன்னிலை அடைந்தவன் அவளை நோக்கி நடக்க காலை ஒரு அடி எடுத்து வைக்க, "டாக்டர்..." என அவனை நோக்கி ஓடி வந்தாள் ஒரு தாதி.

"டாக்டர்... உங்கள சீஃப் டாக்டர் அவசரமா கூப்பிடுறாங்க." என அத் தாதி வந்து கூறவும், "ஆஹ் ஓக்கே... நீங்க போங்க. நான் வரேன்." எனப் பதிலளித்து விட்டு மீண்டும் சகுந்தலா இருந்த திசையை நோக்க, அவளோ அங்கிருந்து சென்றிருந்தாள்.

'ஷிட்... மிஸ் பண்ணிட்டேன்.' என மனதில் எண்ணியவனைக் கடமை அழைக்கவும் சகுந்தலாவின் நினைவை மனதில் ஒரு ஓரமாக பூட்டி வைத்து விட்டு சீஃப் டாக்டரைக் காணச் சென்றான் துஷ்யந்த்.

துஷ்யந்த் சீஃப் டாக்டரைக் காணச் செல்லும் வழியில் எங்கிருந்தோ ஓடி வந்து அவனை மோதினான் ஒரு ஐந்து வயது சிறுவன்.

கீழே விழுந்த சிறுவனைத் தூக்கி நிறுத்திய துஷ்யந்த், "ஹேய்... ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்டான் பதட்டமாக.

ஆனால் அச் சிறுவனோ துஷ்யந்த்தின் கேள்விக்குப் பதிலளிக்காது துஷ்வந்தின் பின்னால் பார்த்து விட்டு அவனிடமிருந்து விடுபட்டு ஓட முயன்றான்.

"எங்க சேம்ப் ஓட பார்க்குறீங்க?" எனக் கேட்டான் துஷ்யந்த் குறும்புடன்.

அவனுக்கு ஏனோ அச் சிறுவனைக் காணும் போது ஒரு இனம் புரியா உணர்வு.

ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை.

துஷ்யந்த்தின் கேள்வியைப் பொருட்படுத்தாத அச் சிறுவன், "அங்கிள்... லீவ் மீ. அந்த பேட் ஆன்ட்டி வராங்க. அவங்க என்னைப் பார்த்துட்டா அப்புறம் டாக்டர் கிட்ட சொல்லி ஊசி போடுவாங்க." என்று திமிறினான்.

குழப்பத்துடன் திரும்பிப் பின்னால் பார்த்த துஷ்யந்த் ஒரு வயதான தாதி யாரையோ தேடியவாறு துஷ்யந்த் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தார்.

இவ்வளவு நேரமும் துஷ்யந்த்திடமிருந்து விடுபடத் திமிறிய அச் சிறுவன் சட்டெனக் குனிந்து துஷ்யந்தை அணைத்தவாறு ஒளிந்து கொள்ளவும் துஷ்யந்த்தின் முகத்தில் புன்னகை.

"ஓஹ்... அவங்கள பார்த்து தான் நீங்க பயப்படுறீங்களா?" என துஷ்யந்த் கேட்கவும் ஆம் எனத் தலையசைத்த சிறுவன், "ஷ்ஷ்ஷ்... நான் இங்க ஹைட் பண்ணிட்டு இருக்கேன்னு அவங்க கிட்ட சொல்லாதீங்க." என்றான் கிசுகிசுப்பாக.

அதே நேரம் அத் தாதி அச் சிறுவனைக் கண்டு அங்கு வந்து ஏதோ கூற வாய் திறக்க, கண்களால் அவரைப் பேச வேண்டாம் என சைகை காட்டிய துஷ்யந்த் தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தான்.

பின் அச் சிறுவனிடம் குனிந்து, "அந்த ஆன்ட்டி ஒன்னும் பேட் இல்ல சேம்ப். அவங்களுக்கு சின்ன பசங்கன்னா ரொம்ப பிடிக்கும். ஊசி எல்லாம் போட மாட்டாங்க. சாக்லெட் தருவாங்க." என்கவும் துஷ்யந்த்திடமிருந்து சட்டென விலகிய அச் சிறுவன், "ரியலி?" எனக் கேட்டான் ஆவலாக.

துஷ்யந்த் ஆம் எனத் தலையசைக்க, "ஹை... அப்போ ஜாலி... எங்க மம்மி எனக்கு சாக்லெட்டே வாங்கி தர மாட்டாங்க. சாக்லெட் சாப்பிட்டா கேவிட்டீஸ் வருமாம்." என்றான் சோகமாக.

"ம்ம்ம்... மம்மி பொய் சொல்ல மாட்டாங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்லி இருப்பாங்க. பட் ஒரு சாக்லெட் சாப்பிட்டா எதுவும் ஆகாது. டெய்லி நிறைய சாப்பிட்டா தான் கேவிட்டீஸ் வரும். மம்மிக்கு இது தெரியலயா இருக்கலாம். நீங்க சொல்லிக் கொடுங்க." என துஷ்யந்த் கூறவும் சிறுவனின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

பின் துஷ்யந்த் அத் தாதியிடம் கண் காட்டவும் அவர் அச் சிறுவனை நெருங்கி, "ஊசி எல்லாம் போட மாட்டேன் கண்ணா. ஆன்ட்டி கூட வந்தா உனக்கு சாக்லெட் தரேன். அங்க உன்ன போல இன்னும் நிறைய சின்னப் பசங்க இருக்காங்க. அவங்க கூட எல்லாம் ஜாலியா விளையாடலாம். வரியாப்பா?" எனக் கேட்டார் புன்னகையுடன்.

தாடையில் விரல் வைத்து யோசித்த அச் சிறுவன் துஷ்ய்ந்த்திடம் திரும்பி கேள்வியாக நோக்க, துஷ்யந்த் சரி எனத் தலையசைக்கவும் அத் தாதியிடம் சென்றான் சிறுவன்.

தாதியுடன் அங்கிருந்து கிளம்பிய சிறுவன் துஷ்யந்த்தைப் பார்த்து கை காட்டி விட்டு அவனுக்குப் பறக்கும் முத்தத்தை வழங்க, துஷ்யந்த்தும் பதிலுக்கு அவ்வாறே செய்தான்.

பின் நேரத்தைப் பார்த்தவன் அவசரமாக சீஃப் டாக்டரின் அறையை அடைந்து அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த சகுந்தலாவைக் கண்டு துஷ்யந்த்தின் முகத்தில் தௌசன்ட் வாட்ஸ் பல்ப் எரிந்தது.

ஆனால் சகுந்தலாவோ துஷ்யந்த்தை அங்கு எதிர்ப்பார்க்காது முதலில் அதிர்ந்தவளின் முகம் அதன் பின் ஏமாற்றம், வருத்தம், விரக்தி என பல பாவனைகளைக் காட்டி விட்டு இறுதியில் கண்களை எட்டாத புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

"சகுந்தலா... வாட் அ சர்ப்ரைஸ்? ஆஃப்டர் லோங் டைம்..." என்றவாறு துஷ்யந்த் அவளை நோக்கி நடக்க, சகுந்தலா பதில் கூற வாய் திறந்த சமயம் பார்த்து, "மம்மி..." என ஓடி வந்து அவளின் காலைக் கட்டிக் கொண்டான் சற்று முன்னர் துஷ்யந்த்துடன் மோதிய சிறுவன்.

அதனைக் கண்டு துஷ்யந்த்தின் முகத்தில் அதிர்ச்சி.

சகுந்தலாவோ தன் காலைக் கட்டிக்கொண்ட மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டவள், "மை சன்... பரத்." என துஷ்யந்த்துக்கு அறிமுகப்படுத்தினாள்.

அவனோ இன்னும் அதிர்ச்சி மாறாமல் அவர்களையே நோக்கிக் கொண்டிருக்க, "ஹை... சாக்லெட் அங்கிள்..." என துஷ்யந்த்தைப் பார்த்துக் கத்தினான் சிறுவன் பரத்.

பரத்தின் குரலில் தன்னிலை அடைந்த துஷ்யந்த் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், "ஓ... சோ க்யூட்." என்றான் பரத்தின் கன்னம் கிள்ளி.

இவர்களின் உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்த சீஃப் டாக்டர், "உங்க ரெண்டு பேருக்கும் ஆல்ரெடி பழக்கமா?" எனக் கேட்டார் குழப்பமாக.

துஷ்யந்த்தோ அவனின் மனதில் ஏற்பட்ட பிரளயத்தில் இருந்து மீள முடியாதவனாக தலையை மட்டும் அசைக்க, "ஜஸ்ட் க்ளாஸ்மேட்ஸ் டாக்டர்." என்றாள் சகுந்தலா.

இப்போது துஷ்யந்த்தின் முகத்தில் விரக்திப் புன்னகை.

'ஜஸ்ட் க்ளாஸ்மேட்ஸ்...' எனத் தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

"வாவ்... தெட்ஸ் குட்." என்ற சீஃப் டாக்டர் பரத்தைப் பார்த்து, "லிட்டில் ப்ரின்ஸ். நர்ஸ் ஆன்ட்டி கூட போய்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடுறீங்களா? டாக்டருக்கு அம்மா கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு." எனக் கேட்டார் புன்னகையுடன்.

பரத்தோ உடனே மறுப்பாகத் தலையசைக்கவும் சகுந்தலா, "பரத்..." என்றாள் அழுத்தமான குரலில்.

தாயின் அதட்டலில் உடனே முகம் வாடிய சிறுவன் உதடு பிதுக்கியவாறு இறங்கி தாதியுடன் வெளியே சென்றான்.

அவன் செல்லும் வரை காத்திருந்த சீஃப் டாக்டர், "துஷ்யந்த்... நான் உங்கள கூப்பிட்டது ஒரு முக்கியமான விஷயம் பேசுறதுக்காக தான்‌." எனப் புதிர் போடவும் இவ்வளவு நேரமும் தனக்குள் புழுங்கிய துஷ்யந்த் ஒரு சிறந்த மருத்துவராக தன் கவலையைப் புறம் தள்ளி விட்டு சீஃப் டாக்டரின் முகத்தை நோக்கினான் கேள்வியாக.

"இவங்க பையனுக்கு ஒரு ரேர் ஹார்ட் டிசீஸ்‌ இருக்கு. துஷ்யந்த்... நீங்க NDCM பத்தி கேள்விப்பட்டு இருப்பீங்க. பரத் பிறந்ததுமே அவருக்கு இந்த நோய் இருக்குறத டாக்டர்ஸ் கண்டு பிடிச்சிட்டாங்க. இத்தனை நாட்களா மெடிசின்ஸ் அன்ட் ட்ரீட்மென்ட்னால தான் இந்தளவுக்காவது ஆக்டிவ்வா இருக்கார். பட் இதே நிலை தொடருமாங்குறது கேள்விக்குறி தான்.

நியோனாட்டல் டிலேட்டட் கார்டியோமயோபதி. இது ரொம்ப ரேர் என்ட் உயிருக்கு ஆபத்தான ஒரு ஹார்ட் டிசீஸ். இது முதன்மையா குழந்தைகளையும் சின்ன பசங்களையும் தான் பாதிக்கிறது. இதயத்துல இருக்கும் நான்கு அறைகளும் விரிவடைந்து பலவீனமடைவதால ப்ளெட்ட திறம்பட பம்ப் செய்யும் இதயத்தோட திறன் பாதிக்கப்படுது.

NDCM உள்ள குழந்தைகளுக்கு வேகமான சுவாசம், ஃபீடிங் பண்ணுறது சிரமம், வெய்ட் கெய்ன் மற்றும் ஸ்கின் கலர் மாதிரி சிம்ப்டம்ஸ் அடிக்கடி காணப்படும். சில சந்தர்ப்பங்களில் இந்த நோய் இதய செயலிழப்ப கூட ஏற்படுத்தலாம்.

இந்த டிசீஸ் நிறைய காரணங்கள் காரணமா ஏற்படலாம். உதாரணத்துக்கு சொல்லப்போனா ஜெனட்டிக் ரீசன்ஸ், ப்ரெக்னென்சி டைம்ல ஏற்படுற வைரஸ் இன்ஃபெக்ஷன்ஸ் இப்படி நிறைய இருக்கு. இது வெர்ரி ரேர் டிசீஸ் என்பதால இந்த நோய்க்கான காரணத்தை கண்டு பிடிக்கிறதும் சக்சஸ்ஃபுல் ட்ரீட்மெண்ட்ட கொடுக்குறதும் ஒரு பெரிய சவால்.

NDCM ஒரு ரேர் டிசீஸ் என்பதனால அதைக் குணப்படுத்துறது ரொம்ப சவாலானது. என்ட் ட்ரீட்மெண்ட் ஆப்ஷன்ஸும் ரொம்ப குறைவு. இந்த நோயால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயத்தோட ஃபங்ஷன இன்க்ரீஸ் பண்ண மெடிசின்ஸ், மெஷின்ஸ் எல்லாம் கண்டிப்பா தேவை. ரொம்ப சிவியர் கேஸ்னா கண்டிப்பா ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணி ஆகணும்.

லைஃப் லாங் மெஷின்ஸோட வாழுறத விட ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் இஸ் அ பெட்டர் ஆப்ஷன். பட் இப்போ பிரச்சினை என்னன்னா பரத்தோட ப்ளெட் க்ரூப் ஓ நெகட்டிவ். சோ அதுக்கான டோனர கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்." என்று சீஃப் டாக்டர் கூறி முடிக்கவும் துஷ்யந்த்திற்கு அதிர்ச்சி என்றால் சகுந்தலாவின் கண்களிலோ கண்ணீர் குளம் கட்டியது.

தன் மகன் படும் துன்பத்தை இத்தனை நாட்களும் பார்த்து, முடியாமல் தான் இறுதியில் இதய சிகிச்சைக்கு இம் மருத்துவமனை சிறந்தது எனக் கேள்விப்பட்டு சென்னையில் இருந்து ஹைதராபாத் வரை வந்திருக்கிறாள் சகுந்தலா.


 
Last edited:

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 2

IMG_20240608_112409.jpg

சீஃப் டாக்டர் கூறிய செய்தியில் துஷ்யந்த் அதிர்ச்சியில் உறைய, சகுந்தலாவின் கண்களிலோ கண்ணீர் குளம் கட்டியது.

துஷ்யந்த், "அப்போ ட்ரீட்மெண்ட் மூலமா.....?" எனக் கேள்வியாக நிறுத்த, "கொஞ்சம் வருஷத்துக்கு கொண்டு போகலாம். இல்ல கொஞ்சம் மாசத்துக்கு... இல்ல சில வாரங்களுக்கு மட்டும்... எதையும் கன்ஃபார்மா சொல்ல முடியாது துஷ்யந்த். ஏஸ் அ டாக்டர் நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்." எனக் கையை விரித்தார் சீஃப் டாக்டர்.

'இதய மாற்று அறுவை சிகிச்சை நடாத்தாவிட்டால் எத்தனை நாட்களுக்கு மரணத்தைத் தள்ளி வைக்கலாம் என சொல்லாமல் சொல்கிறார். எதற்காக இச் சிறிய வயதில் இப்படி ஒரு தண்டனை? இவ்வளவு உற்சாகமாக மகிழ்ச்சியுடன் இருக்கும் பிள்ளைக்கா இந்த நிலை?' என்பது தான் துஷ்யந்த்தின் எண்ணமாக இருந்தது.

ஒரு மருத்துவராக சூழ்நிலையைப் புரிந்து கொண்டாலும் சகுந்தலாவின் கண்களில் இருந்து பெருக்கெடுத்த கண்ணீர் அவனையும் நிலை குலையச் செய்தது.

துளிர்த்து சில நொடிகளிலேயே கருகிப் போன தன் காதலை விட, தன் நெஞ்சில் குடி புகுந்தவளின் கண்ணீரைத் துடைப்பதே அவனுக்கு முக்கியமாகப் பட்டது.

ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்ட துஷ்யந்த், "ஓக்கே டாக்டர்... இப்போ நான் என்ன பண்ணணும்?" எனக் கேட்டான்.

"ட்ரீட்மெண்ட் மூலமா ஹன்ட்ரட் பர்சன்ட் குணப்படுத்த முடியலன்னாலும் அந்தப் பையனோட ஹெல்த்த நம்மளால முடிஞ்ச அளவு இம்ப்ரூவ் பண்ண முடியும். நீங்க அப்ரோட் போய் கார்டியோ டிசீஸ் பத்தி நிறைய ரீசர்ச் பண்ணி இருக்கீங்க. முக்கியமா NDCM பத்தி. யூ ஆர் அ கார்டியோலஜிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். நம்ம ஹாஸ்பிடல்ல இந்த டிசீஸ் பத்தி நல்லா தெரிஞ்சவரும் அதுக்குரிய ட்ரீட்மெண்ட் பத்தி நல்லா தெரிஞ்சவரும் நீங்க மட்டும் தான். சோ மத்த டாக்டர்ஸ விட இந்த ட்ரீட்மெண்ட்ட உங்களால தான் சக்சஸ்ஃபுல்லா பண்ண முடியும்னு நான் நம்புறேன். ஏன்னா நமக்கு மேட்ச்சிங் டோனர் கிடைச்சாலும் பரத்துக்கு அந்த ஹார்ட் பொருந்த அவர் ஹெல்த் ஓரளவாவது நல்லா இருக்கணும். அதனால தான் துஷ்யந்த்." என சீஃப் டாக்டர் கூறவும் அவனையே ஏக்கத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் நோக்கினாள் சகுந்தலா.

சில கணங்கள் யோசித்த துஷ்யந்த் ஒரு தெளிவான முடிவுடன், "ஷியுர் டாக்டர். என்னால முடிஞ்சத கண்டிப்பா நான் பண்ணுவேன்." என்றவன் சீஃப் டாக்டரிடம் சற்று நேரம் பேசி விட்டு வெளியேறினான்.

அவனைப் பின் தொடர்ந்து வந்த சகுந்தலா, "தேங்க் யூ..." என்றாள் துஷ்யந்த்திடம் கண்ணீருடன்.

அவளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த துஷ்யந்த், "ஒரு டாக்டரா இது என்னோட கடமை. டோன்ட் வொர்ரி சகுந்தலா. பரத்துக்கு எதுவும் ஆகாது. என்ட் ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சாரி என்ட் தேங்க்ஸ் எல்லாம் அவசியமா? ஃப்ரெண்ட்ஸ் தானே..." எனத் தன் கரத்தை நீட்டவும் பதிலுக்கு கை குலுக்கிய சகுந்தலா, "ஃப்ரெண்ட்ஸ்..." என்றாள் புன்னகையுடன்.

சகுந்தலாவின் முகத்தில் இருந்த புன்னகை துஷ்யந்த்தின் மனதில் இதத்தைப் பரப்பியது.

துஷ்யந்த் தன்னை மறந்து விழி அகற்றாமல் சகுந்தலாவையே நோக்க, "நீங்க இவ்வளவு எல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்." என்றாள் சகுந்தலா திடீரென்று.

அதில் தன்னிலை அடைந்த துஷ்யந்த், "அப்போ அப்படி இருந்ததனால தான் நான் இன்னைக்கு இந்த நிலைல இருக்கேன்." என்றவனின் குரலில் அப்படி ஒரு பெருமை.

இருவரும் சாதாரணமாகப் பேசியவாறே துஷயந்த்தின் அறையை அடைந்தனர்.

சகுந்தலாவுடன் பேசிக் கொண்டிருந்த துஷ்யந்த்திற்கு அப்போது தான் ஒன்று உரைத்தது.

சகுந்தலாவின் கழுத்தில் தாலியோ, நெற்றியில் குங்குமமோ, இல்லை ஒரு மோதிரம் கூட அணிந்து இருக்கவில்லை.

இக் காலத்தில் அது ஒரு பெரிய விஷயம் இல்லாவிடினும் துஷ்யந்த்தின் மனது அதை அறிய குறுகுறுத்தது.

"உன் ஹஸ்பன்ட் என்ன பண்ணுறார்?" எனக் கேட்ட துஷ்யந்த்தின் இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

ஆனால் துஷ்யந்த்தின் கேள்வியில் இவ்வளவு நேரமும் மலர்ந்திருந்த சகுந்தலாவின் முகம் இறுகிப் போனது.

தான் ஏதாவது தவறாகக் கேட்டு விட்டோமோ எனப் பதறிய துஷ்யந்த், "ஹேய் சாரி சாரி... நீ தனியா வந்ததால கேட்டேன்." என்றான் அவசரமாக.

"ஐம் அ டிவோர்சி. பரத்துக்கு அப்பா, அம்மா, ஃபேமிலி எல்லாம் நான் மட்டும் தான்." என்றாள் சகுந்தலா இறுகிய குரலில்.

சகுந்தலாவின் வாழ்வை எண்ணி துஷ்யந்த்தின் மனம் ஒரு புறம் வாடினாலும் இன்னொரு புறம் உள்ளுக்குள் குத்தாட்டம் போட வேண்டும் போல் இருந்தது.

துளிர்த்து சில நொடிகளில் கருகிய தன் காதல் மீண்டும் துளிர் விட்ட உணர்வு அவனுக்கு.

துஷ்யந்த் வேறு ஏதாவது கேட்கும் முன் முகத்தில் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், "உங்க வைஃப் என்ன பண்ணுறாங்க?" எனக் கேட்டாள்.

சகுந்தலா தன் கடந்தகாலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த் அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாது, "ஐம் அ ஃப்ரீ பர்ட்." என்றான் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து.

அவன் சொன்ன பாணியில் பக்கென வாய் விட்டுச் சிரித்தாள் சகுந்தலா.

துஷ்யந்த் தன்னை மறந்து சகுந்தலாவை நோக்க, "மம்மி..." எனக் கத்திக் கொண்டு பரத் அங்கு வரவும் இருவரும் தன்னிலை அடைந்தனர்.

ஓடி வந்து சகுந்தலாவின் மடியில் ஏறி அமர்ந்த பரத், "ஹை... சாக்லெட் அங்கிளும் இங்க தான் இருக்கீங்களா?" எனக் கேட்டான் ஆவலாக.

துஷ்யந்த் பரத்தின் மழலைப் பேச்சில் புன்னகைத்தான்.

"மம்மி... நம்ம வீட்டுக்கு போலாம். எனக்கு இங்க பிடிக்கவே இல்ல. பேட் ஸ்மெல்லா இருக்குது. டாக்டர்ஸ பார்த்தா பயமா இருக்கு." என பரத் சிணுங்க, அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட சகுந்தலா, "சீக்கிரம் நம்ம வீட்டுக்கு போலாம் கண்ணா. ஆனா அதுக்கு முன்னாடி பரத் கியூர் ஆகணும்ல. அப்போ தான் உன் ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா விளையாடலாம்." என மகனை சமாதானப்படுத்தினாள்.

ஆனால் பரத்தின் முகம் வாடிப் போயே இருக்கவும் தன் இருக்கையை விட்டு எழுந்த துஷ்யந்த் பரத்திடம் சென்று, "பரத்... உனக்கு ஒன்னு தெரியுமா? சேம்ப்ஸ் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரோங்கா இருப்பாங்க. யாருக்கும் பயப்பட மாட்டாங்க." என்க, "சூப்பர் ஹீரோஸ் போலவா?" எனக் கேட்டான் பரத் கண்கள் மின்ன.

பரத்தைத் தூக்கிய துஷ்யந்த், "யா. சூப்பர் ஹீரோஸ் போல ரொம்ப ஸ்ட்ரோங்கா இருப்பாங்க. யாருக்கும் பயப்பட மாட்டாங்க. தானும் சேஃபா இருந்து அவங்க மம்மீஸையும் சேஃபா வெச்சிப்பாங்க. மம்மீ கண் கலங்காம பார்த்துப்பாங்க. முக்கியமா ஹெல்த்தியா இருக்க என்ன வேணாலும் பண்ணுவாங்க. நிறைய ரிஸ்க் எடுப்பாங்க. குட் பாயா இருப்பாங்க. இப்போ சொல்லுங்க. பரத் சூப்பர் ஹீரோஸ் போல சேம்ப்பா இருக்க விரும்புறீங்களா? இல்ல கர்ள்ஸ் போல எல்லாத்துக்கும் பயந்து அழுதுட்டு இருக்க போறீங்களா?" என்றவன் பரத்தின் முடியைக் கலைத்து விட்டான்.

தாடையில் விரல் பதித்து சில நொடிகள் ஏதோ யோசித்த பரத், "ஐம் ஆல்சோ அ சேம்ப் சாக்லெட் அங்கிள். நானும் இனிமே குட் பாயா நடந்துப்பேன். டாக்டர்ஸ பார்த்து பயப்பட மாட்டேன். ஸ்மைல் பண்ணுவேன். சாக்லெட் அங்கிள். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? எங்க மம்மி டெய்லி அழுவாங்க. நான் இனிமே மம்மி அழாம பார்த்துப்பேன்." என்கவும் துஷ்யந்த்தின் மனம் வேதனைப்பட்டது.

சகுந்தலாவோ கலங்கிய கண்களுடன் அவர்களையே நோக்கினாள்.

துஷ்யந்த்தும் பரத்தும் பல நாள் பழகியது போல் சிரித்துப் பேசி மகிழ, தன் உதிரத்தின் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்து சகுந்தலாவின் மனம் குளிர்ந்தது.

ஆனால் இடையில் ஒரு எண்ணம் எழுந்து சகுந்தலாவின் முகத்தில் கசந்த புன்னகையை வரவழைத்தது.

துஷ்யந்த்துடன் பேசிக் கொண்டிருந்த பரத் தூங்கி வழியவும் அவனை சகுந்தலாவிடம் ஒப்படைத்த துஷ்யந்த், "நாளைக்கு சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு சகுந்தலா. மார்னிங்கே வந்துடுங்க. ஆமா... சென்னைல இருந்து ட்ரீட்மெண்ட்டுக்காக வந்திருக்கன்னு சொன்னேல்ல. எங்க தங்கி இருக்க இப்போ?" எனக் கேட்டான்.

"இப்போதைக்கு ஹாட்டல்ல தான் தங்கி இருக்கேன். சீக்கிரம் வீடு பார்க்கணும். ட்ரீட்மெண்ட் எவ்வளவு நாள் போகும்னு சொல்ல முடியாதே." எனத் தோளைக் குலுக்கினாள் சகுந்தலா.

"ம்ம்ம்... கரெக்ட் தான். ஹாட்டல்ல தங்குறது உங்க ரெண்டு பேருக்குமே சேஃபா இருக்காது. எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி நான் வீட்டுக்கு ஏற்பாடு பண்றேன். சோ அதைப் பத்தி வொரி பண்ணிக்க வேணாம். போய்ட்டு ரெண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுங்க." என துஷ்யந்த் கூறவும் பதிலுக்கு புன்னகைத்த சகுந்தலா, "தேங்க் யூ துஷ்யந்த்." என்றாள்

பின் தன் கைப்பேசி எண்ணை துஷ்யந்த்துடன் பறிமாறிக் கொண்டு சகுந்தலா விடை பெற, "சகுந்தலா..." என அவளை நிறுத்திய துஷ்யந்த்தை கேள்வியாக ஏறிட்டாள் அவள்.

"அது... பரத் கண்டிப்பா க்யூர் ஆவான். டோன்ட் லாஸ் யுவர் ஹோப்..." என துஷ்யந்த் தயக்கமாகக் கூறவும் புன்னகைத்த சகுந்தலா, "முன்னாடி கொஞ்சம் பயம் இருந்தது உண்மை தான். ஆனா எப்போ நீங்க தான் ட்ரீட்மெண்ட் பண்ண போறீங்கன்னு தெரிஞ்சிச்சோ அப்போவே எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு. என் பையனுக்கு எதுவும் ஆகாது." என்றாள் உறுதியாய்.

சகுந்தலா பரத்தை அழைத்துக்கொண்டு டாக்சி பிடித்து அங்கிருந்து கிளம்பி விட, அவர்கள் சென்ற திக்கையே சில நொடிகள் வெறித்தான் துஷ்யந்த்.

அவர்களைத் தன்னுடனே அழைத்துச் செல்லக் கூறியது அவன் மனம்.

ஆனால் அதிலுள்ள சாதக, பாதகங்களை அவன் மூளை எடுத்துரைக்க, துஷ்யந்த்தால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

_______________________________________________

தாம் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்த சகுந்தலா பரத்தை குளிக்க வைத்து உடை மாற்றி விட்டு உறங்கிய பின் தனக்கென சில மணித்துளிகள் எடுத்துக் கொண்டாள்.

திறந்திருந்த ஜன்னல் வழியாக நிலவொளி அவ் அறையெங்கும் பட்டுத் தெறிக்க, ஜன்னல் அருகே சென்று நின்ற சகுந்தலா கனத்த மனதுடன் நிலவை வெறித்தாள்.

பல வருடங்கள் கழித்து துஷ்யந்த்தைக் கண்டதும் அவளுள் ஏதேதோ உணர்வுகள்.

ப்ளஸ் டூ படிக்கும் போது இருவரின் பெயர்ப் பொருத்தத்தை வைத்து அவர்களின் வகுப்பில் உள்ள அனைவரும் அவர்களைக் கேலி செய்ய, முதலில் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத சகுந்தலாவை இவ்வளவு நடந்தும் படிப்பே கண்ணாக இருக்கும் துஷ்யந்த்தின் குறிக்கோளும் அவனின் கண்ணியமும் வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின் வந்த நாட்களில் சகுந்தலாவே தன்னை மறந்து அடிக்கடி துஷ்யந்த்தைப் பார்க்கலானாள்.

ஆனால் ஓரிரண்டு முறை தவிர துஷ்யந்த்தின் பார்வை சகுந்தலாவின் மீது படிந்ததில்லை.

அந் நாட்களின் நினைவில் மூழ்கி இருந்த சகுந்தலாவைக் கலைத்தது பரத்தின் சிணுங்கல்.

சட்டென தன்னிலை அடைந்தவள் தன் கன்னத்தைத் தொட்டுப் பார்க்க, அதுவோ ஈரமாக இருக்கவும் சகுந்தலாவின் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை.

பரத் மீண்டும் சிணுங்கவும் தன் மன வேதனைகளை ஒதுக்கித் தள்ளிய சகுந்தலா பரத்தின் அருகே சென்று அவனை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்.

ஆனால் உறக்கம் தான் வருவேனா என அடம் பிடித்தது.

_______________________________________________

மறுநாள் துஷ்யந்த் கூறிய நேரத்தில் பரத்துடன் மருத்துவமனையை அடைந்தாள் சகுந்தலா.

முன் தினம் போல் இல்லாது உற்சாகமாகக் காணப்பட்டான் பரத்.

அவர்கள் இருவரும் துஷ்யந்த்தைத் தேடிச் செல்லும் போதே முன் தினம் பரத்தைக் கவனித்துக் கொண்ட தாதி இடைப்பட்டார்.

சகுந்தலா அவரைக் கேள்வியாக நோக்க, "நீங்க ரெண்டு பேரும் வந்தா கூட்டிட்டுப் போய் தேவையான டெஸ்ட் எல்லாம் எடுக்க சொன்னார் டாக்டர். வாங்க." என்றார் அத் தாதி.

துஷ்யந்த்தைக் காணாதது ஏனோ சகுந்தலாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அத் தாதி கூறிய வழியில் பரத்துடன் அவரைப் பின் தொடர்ந்த சகுந்தலா, "அது... ம்ம்ம்... துஷ்... சாரி... டாக்டர் எங்க?" எனக் கேட்டாள் தன்னை மீறி தயக்கமாக.

"டாக்டருக்கு ஒரு இமர்ஜென்சி கேஸ் வந்திடுச்சு. அதனால தான் நீங்க வந்ததும் கையோட கூட்டிட்டுப் போய் டெஸ்ட் எடுக்க சொன்னார். ஃப்ரீ ஆனதும் வந்து பார்க்குறேன்னு சொன்னார்." என்கவும் தான் சகுந்தலாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

தான் எதற்காக துஷ்யந்த்தை எதிர்ப்பார்க்கிறோம் என மனசாட்சி வேறு அவளைக் கேள்வி கேட்க, சகுந்தலாவிற்கு தான் ஒரே குழப்பம்.

ஏதோ தவறு செய்து விட்டவள் போல் பரத்தின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்ட சகுந்தலா முயன்று துஷ்யந்த் பற்றிய எண்ணத்தை உள்ளுக்குள் பூட்டினாள்.

 

admin

Administrator
Staff member

IMG-20240610-WA0006.jpg

பரத்துக்கு நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.​

சிறுவனோ சில மணி நேத்திலேயே சோர்வுற, சகுந்தலாவுக்கு அதைக் காணும் போது நெஞ்சைக் கசக்கிப் போட்டது.​

"மம்மி... போதும்... ஐ வான்ட் டு கோ ஹோம்." என்றான் பரத் சிணுங்கலாக.​

சகுந்தலா மகனை சமாதானப்படுத்த முயன்ற சமயம், "ஹேய் சேம்ப்... வாட்சப்?" எனக் கேட்டவாறு அங்கு வந்தான் துஷ்யந்த்.​

துஷ்யந்த்தைக் கண்டதும் இவ்வளவு நேரமும் இருந்த சோர்வு நீங்கி, "சாக்லெட் அங்கிள்..." எனக் கத்தியவாறு துஷ்யந்த்தை நோக்கி ஓடினான் பரத்.​

சகுந்தலாவுக்கே பரத்தின் நடவடிக்கை ஆச்சர்யமாக இருந்தது.​

சிறு வயதில் இருந்தே யாரும் இன்றி, தனித்து, பெற்றோர், குடும்பம் எல்லாம் சகுந்தலாவே ஆகிப் போனதால் அவ்வளவு விரைவில் பரத் யாருடனும் ஒட்ட மாட்டான்.​

ஆனால் பார்த்த முதல் நாளில் இருந்தே துஷ்யந்த்துடன் இவ்வளவு நெருக்கமாக பரத் பழகுவது ஒரு பக்கம் தாயாக சகுந்தலாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிகிச்சை முடிந்து துஷ்யந்த்தைப் பிரிந்து செல்லும் போது தன் மகனின் மனம் பாதிப்படையுமோ என்ற பயமும் வந்தது.​

தன்னை நோக்கி ஓடி வந்த சிறுவனை அள்ளித் தூக்கிய துஷ்யந்த் பரத்தின் கன்னத்தில் அழுத்த முத்தமிட, பரத்தின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.​

"சாக்லெட் அங்கிள்... என் ஃப்ரெண்ட்ஸோட டேடீஸும் வர்க் முடிஞ்சு வரும் போது இப்படி தான் என் ஃப்ரெண்ட்ஸ் சீக்ல கிஸ் பண்ணுவாங்க." என பரத் கூறவும் துஷ்யந்த்தும் சகுந்தலாவும் ஒரு சேர அதிர்ந்தனர்.​

ஆனால் பரத்தின் ஒரு தந்தைக்கான ஏக்கத்தை இருவராலும் உணர முடிந்தது.​

துஷ்யந்த் சகுந்தலாவை நோக்க, சகுந்தலா தன் கலங்கிய விழிகளை மறைப்பதற்காக வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.​

பெருமூச்சு விட்ட துஷ்யந்த், "அதுக்கென்ன சேம்ப்? அங்கிளும் இனி பரத்த மீட் பண்ணும் போதெல்லாம் இப்படி டைட்டா ஹக் பண்ணி சீக்ல கிஸ் பண்றேன்." என்றவன் சொன்னபடியே பரத்தின் கன்னத்தில் மீண்டும் அழுத்தமாக முத்தமிட, வயிறு குலுங்கச் சிரித்தான் பாலகன்.​

பரத்துடன் சேர்ந்து துஷ்யந்த்தும் சிரிக்க, "அங்கிள்... டேடீஸ் தானே அப்படி கிஸ் பண்ணுவாங்க. அப்போ நீங்க தான் என் டேடியா?" என பரத் திடீரென கேட்கவும் துஷ்யந்த் அதிர, "ஷட்டப் பரத்..." என சத்தமிட்டாள் சகுந்தலா.​

தாய் திடீரென அதட்டவும் பயந்த சிறுவன் ஓ என அழத் தொடங்க, "ஸ்டாப் க்ரையிங் பரத்." என மீண்டும் சத்தமிட்டாள் சகுந்தலா.​

தன் தோளில் முகம் புதைத்து அழும் சிறுவனின் கண்ணீர் துஷ்யந்த்தின் மனதை வாட்ட, "ஜஸ்ட் ஸ்டாப் இட் சகுந்தலா. சின்ன பையன் சொல்றதுக்கு எல்லாம் எதுக்கு இவ்வளவு பெரிசா ரியாக்ட் பண்ணுற? பரத்தோட கண்டிஷன் என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்தும் பாரு குழந்தைக்கு என்ன பண்ணி வெச்சிருக்கன்னு." என்றான் துஷ்யந்த் கோபமாக.​

அப்போது தான் தன்னிலை அடைந்த சகுந்தலாவுக்கு அவளின் தவறு புரிந்தது.​

"துஷ்யந்த் நான்..." என சகுந்தலா ஏதோ கூற வர, அவன் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் சகுந்தலா.​

"சேம்ப்... இட்ஸ் ஓக்கே கண்ணா. மம்மி தானே திட்டினாங்க. அதுக்கு போய் அழலாமா? பரத் குட் பாய் தானே. சூப்பர் ஹீரோஸ் போல ப்ரேவ்வா இருப்பீங்கன்னு அங்கிள் கிட்ட சொன்னீங்க தானே. என்னாச்சு என் சூப்பர் ஹீரோவுக்கு?" என பரத்தை சமாதானப்படுத்தியவாறு துஷ்யந்த் அங்கிருந்து வெளியேற, தொப்பென அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் சகுந்தலா.​

தன்னை நினைத்தே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.​

சில மணித்துளிகள் கடந்து இருக்கையில் கண் மூடி சாய்ந்திருந்த சகுந்தலா தன் அருகே அரவம் கேட்டு விழி திறந்து பார்க்க, அவள் முன்னே ஒரு காஃபி கப்பை நீட்டினான் துஷ்யந்த்.​

அச் சமயம் அவளுக்கு அக் காஃபி தேவையாக இருக்க, நன்றி கூறி வாங்கிக் கொண்ட சகுந்தலா ஒரு மிடர் பருகி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.​

அவள் பரத்தைத் தேடுவதை உணர்ந்த துஷ்யந்த், "பரத் ரேணு ஆன்ட்டி கூட இருக்காங்க. சீஃப் நர்ஸ் அவங்க. சின்ன குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்." என்றான்.​

சரி எனத் தலையசைத்த சகுந்தலா காஃபியை மெது மெதுவாகப் பருக, சகுந்தலா காஃபியைப் பருகி முடிக்கும் வரை காத்திருந்த துஷ்யந்த் காலி கப்பை வாங்கி குப்பைக் கூடையில் போட்டு விட்டு வந்து சகுந்தலாவின் அருகே அமர்ந்தான்.​

சற்று நேரத்திற்கு முன் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு வேண்ட சகுந்தலா, "சாரி..." என வாய் திறக்க, அதே சமயம் துஷ்யந்த்தும், "சாரி..." என்றான்.​

இருவரின் முகத்திலும் புன்னகை.​

"சாரி சகுந்தலா. நான் அப்போ உன்ன அப்படி திட்டி இருக்கக் கூடாது. எனக்கு அதுக்கு எந்த ரைட்ஸும் இல்ல." என மன்னிப்புக் கேட்டான் துஷ்யந்த்.​

மறுப்பாகத் தலையசைத்த சகுந்தலா, "இல்ல துஷ்யந்த். இதுல எதுக்கு ரைட்ஸ் எல்லாம்? உங்க தப்பு எதுவும் இல்ல. பரத்தோட நல்லதுக்காக தானே சொன்னீங்க. அதுவும் இல்லாம நானும் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்." என்றாள் சகுந்தலா.​

"ம்ம்ம்.‌‌.. ஓக்கே... பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனி அதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்ல. இனிமே கேர்ஃபுல்லா நடந்தா சரி. பரத்தோட ஹார்ட் கண்டிஷன் உனக்கு ரொம்ப நல்லா தெரியும். அதனால அதுக்கேத்த மாதிரி பார்த்து நடந்துக்கணும். பரத்துக்கு இப்போ தான் ஐந்து வயசு. அந்த வயசுக்கு ஏத்தது போல தான் அவன் நடந்துப்பான். தான் ஒரு பேஷன்ட்டுன்னு நினைக்காம குழந்தை குழந்தைத்தனத்தோட இருக்குறது தான் பரத்தோட மென்ட்டல் ஹெல்த்துக்கு நல்லது. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதனால தான் நீ பையன திட்டவும் கொஞ்சம் கோவமா பேசிட்டேன். வன்ஸ் அகைன் சாரி." என்றான் துஷ்யந்த்.​

சகுந்தலா புரிந்ததாகத் தலையசைத்த நேரம், "மம்மி..." எனக் கத்திக் கொண்டு ஓடி வந்த பரத், "சாரி மம்மி. சாரி அங்கிள். இனி அப்படி பேச மாட்டேன்." என்கவும் அவனை வாரி அணைத்த சகுந்தலா, "மம்மியும் சாரி டா கண்ணா." என்றாள் கண் கலங்க.​

சில நொடிகள் அப்படியே மௌனமாய் கழிய, "இனாஃப்... இனாஃப்... க்ரையிங் சீன்ஸ் எல்லாம் முடிஞ்சதுன்னா நாம கொஞ்சம் ஹேப்பி மூடுக்கு போகலாமா?" என துஷ்யந்த் கேட்கவும் தனையனும் தாயும் ஒரு சேர துஷ்யந்த்தைக் குழப்பமாக நோக்கினர்.​

உடனே தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சாவியை வெளியே எடுத்து இருவருக்கும் காட்டிய துஷ்யந்த், "உங்க ரெண்டு பேருக்கும் ஸ்டே பண்ண வீடு பார்த்துட்டேன்." என்றான் புன்னகையுடன்.​

"ஹே... ஜாலி..." என பரத் துள்ளிக் குதிக்க, சகுந்தலாவின் முகத்திலும் புன்னகை.​

"தேங்க்ஸ் துஷ்யந்த். முன்ன பின்ன தெரியாத இடத்துக்கு வந்து சின்னப் பையன வெச்சிக்கிட்டு எப்படி சமாளிக்க போறேனோன்னு யோசனையா இருந்தது. அந்தக் கடவுளா பார்த்து உங்கள அனுப்பி வெச்சிருக்கார். எனக்காகவும் என் பையனுக்காகவும் நீங்க நிறைய பண்ணுறீங்க. இதுக்கெல்லாம் நான் எப்படி கைம்மாறு பண்ண போறேனோ தெரியல." என சகுந்தலா கூறவும், "ஒருத்தொருக்கொருத்தர் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம ஹெல்ப் பண்ணுறது தான் ஃப்ரெண்ட்ஷிப். அதுவும் இல்லாம உனக்கு கண்டிப்பா ஏதாவது பண்ணி தான் ஆகணும்னா அது ஒன்னும் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்ல. இன்னைக்கு உன்னோட புது வீட்டுல உன் கையால் எனக்கு வயிறு நிறைய சமைச்சி போட்டாலே போதும்." எனத் தோளைக் குலுக்கினான் துஷ்யந்த்.​

துஷ்யந்த் அவ்வாறு கூறி விட்டு குறும்புப் பார்வை பார்க்க, சட்டென வாய் விட்டுச் சிரித்தாள் சகுந்தலா.​

"வாவ் மம்மி. சாக்லெட் அங்கிள் நம்ம கூட வராரா? சூப்பர்." எனக் கத்தினான் பரத்.​

"ஆமா சேம்ப். நாம முதல்ல போய் ஹோட்டல்ல இருந்து உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு புது வீட்டுக்கு போகலாம்." என்ற துஷ்யந்த் பரத்துடன் முன்னே நடக்க, முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவர்களைப் பின் தொடர்ந்தாள் சகுந்தலா.​

முதலில் ஹோட்டலுக்கு சென்று இருவரின் பொருட்களையும் எடுத்தவர்கள் பின் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கினர்.​

அவற்றுக்கான செலவை துஷ்யந்த் ஏற்பதாக எவ்வளவோ கூறியும் உறுதியாக மறுத்து விட்டாள் சகுந்தலா.​

வேறு வழியின்றி அமைதியான துஷ்யந்த் அதற்குப் பதிலாக பரத்திற்கு விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிக்க, பரத் வானில் பறக்காத குறை.​

சகுந்தலாவுக்கோ பரத்தின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்ட பின் வேறு எதுவும் மறுத்துக் கூற முடியாத நிலை.​

பார்ப்பவர்கள் கண்ணுக்கு இவர்கள் மூவரும் மகிழ்ச்சியான ஒரு குடும்பம் போல் தெரிய, மாலுக்குள் நுழைந்ததில் இருந்தே இவர்களைக் கண்காணித்த ஒரு உருவம் யாருக்கோ கைப்பேசியில் அழைத்து ஏதோ கூறியது.​

பின் மூவரும் சேர்ந்து துஷ்யந்த் வாங்கிய வாடகை வீட்டுக்கு கிளம்பினர்.​

வீட்டைக் கண்ட சகுந்தலாவின் கண்களில் ஆச்சர்யம் என்றால் பரத்துக்கோ உற்சாகம்.​

பெரிய பங்களா போன்றும் இல்லாமல் குடிசை போன்றும் இல்லாமல் பொருத்தமான அளவில் கூடியது மூவருக்கேனும் வசிக்கக் கூடிய அளவில் அழகாக கட்டப்பட்டிருந்தது அவ் வீடு.​

ஒவ்வொரு மூலையையும் பார்த்துப் பார்த்து கட்டி இருந்தார்கள்.​

"வாவ்... பியூட்டிஃபுல். இனிமே இது தான் நம்ம வீடா மம்மி?" என்ற பரத்தின் குரலில் தன்னிலை அடைந்த சகுந்தலா, "ரொம்ப அழகா இருக்கு வீடு. வாடகை அதிகமோ?" எனக் கேட்டாள் துஷ்யந்த்திடம் தயக்கமாக.​

"வாடகை பத்தி எதுவும் கவலைப்பட வேணாம் சகுந்தலா. எனக்கு தெரிஞ்சவர் வீடு தான். அவங்க பையன் ஃபேமிலியோட ஃபாரின்ல இருக்காங்க. கொஞ்சம் நாள் முன்னாடி தான் அவங்க மருமகள் ப்ரெக்னென்ட்டா இருக்காங்கன்னு அங்கயே ஷிஃப்ட் ஆகிட்டாங்க. வாடகை எதுவுமே தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க. நானும் கேட்டேன். பட் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சோ எவ்வளவு நாள் வேணாலும் நீங்க இங்க இருக்கலாம்." என்றான் துஷ்யந்த்.​

மூவரும் உள்ளே சென்ற மறு நொடியே பரத் துஷ்யந்த் வாங்கித் தந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாட ஆரம்பிக்க, துஷ்யந்த்தின் உதவியுடன் வீட்டை தமக்கு ஏற்றபடி மாற்றி வைத்தாள் சகுந்தலா.​

சகுந்தலா மூவருக்கும் இரவுணவை சமைக்க தயாரான நேரம் பார்த்து துஷ்யந்த்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது.​

கைப்பேசியை எடுத்துப் பார்க்க, ஏகப்பட்ட தவறிய அழைப்புகள்.​

அப்போது தான் துஷ்யந்த்திற்கு அறுவை சிகிச்சையின் போது கைப்பேசியை சைலென்ட் மூடில் போட்டது நினைவு வந்தது.​

உடனே அழைப்பை ஏற்க, மறு முனையில் என்ன கூறப்பட்டதோ, "டென் மினிட்ஸ்ல வரேன்." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.​

துஷ்யந்த்தின் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கண்டு கொண்ட சகுந்தலா அவனைக் குழப்பமாக நோக்கினாள்.​

"என்னாச்சு துஷ்யந்த்? ஏதாவது இமர்ஜென்சியா?" எனக் கேட்டாள் சகுந்தலா.​

தன் முகத்தில் இருந்த பதட்டத்தை மறைத்து வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், "இமர்ஜென்சி இல்ல. பட் கொஞ்சம் அர்ஜென்ட்டா போய் ஆகணும்." என்றான் துஷ்யந்த்.​

அதற்கு சகுந்தலா பதிலளிக்கும் முன்பே தன் விளையாட்டை நிறுத்தி விட்டு ஓடி வந்த பரத், "கிளம்ப போறீங்களா சாக்லெட் அங்கிள்? பரத் கூடவும் மம்மி கூடவும் டின்னர் சாப்பிடுவேன்னு சொன்னீங்க." என துஷ்யந்த்தின் கால்களைக் கட்டிக்கொண்டு சிணுங்கினான்.​

பரத்தின் உயரத்துக்கு மண்டியிட்ட துஷ்யந்த, "நீங்க இன்னைக்கு மம்மி கூட சாப்பிடுவீங்களாம். அங்கிள் இன்னொரு நாள் கண்டிப்பா பரத் கூட சேர்ந்து சாப்பிடுவேன்." என சமாதானப்படுத்தினான்.​

முகம் வாடிய பரத் மறுப்பாகத் தலையசைக்க, "பரத்... அது தான் அங்கிள் சொல்றார்ல. ஏன் அடம் பிடிக்கிற?" எனக் கேட்டாள் சகுந்தலா.​

"பரத்தின் முகமோ களையிழந்து காணப்பட, அவனின் முகத்தை தன் கைகளில் ஏந்திய துஷ்யந்த், "பரத் குட் பாய் தானே. அங்கிள் சொன்னா சேம்ப் கேட்டுப்பீங்க தானே. பரத் மம்மி பேச்ச மீறுவீங்களா?" என துஷ்யந்த் கேட்கவும் உடனே இல்லை எனத் தலையாட்டினான் பரத்.​

"குட். அப்போ அங்கிளும் அங்கிளோட மம்மி பேச்சை கேட்கணும்ல. சோ நான் இன்னைக்கு கிளம்புறேன். பட் ஐ ப்ராமிஸ் யூ. கண்டிப்பா இன்னொரு நாளைக்கு அங்கிள் ஃப்ரீயா இருந்தா நாம சேர்ந்து டின்னர் சாப்பிடலாம். இப்போ பரத் குட் பாயா மம்மிக்கு டிஸ்டர்ப் பண்ணாம சாப்பிட்டு தூங்குவீங்களாம். நாம நாளைக்கு மீட் பண்ணலாம்." என்ற துஷ்யந்த் பரத்தின் இரு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தமிட, சிறுவனின் முகத்தில் லேசான புன்னகை.​

அவன் எந்தளவு தந்தைப் பாசத்துக்கு ஏங்குகிறான் எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த்திற்கு தன்னால் அவனின் வருத்தத்தை நீக்க முடியவில்லையே என்ற எண்ணம் மனதைப் பிசைந்தது.​

சகுந்தலா வாசல் வரை சென்று துஷ்யந்தை வழியனுப்பினாள்.​

"இன்னைக்கு எடுத்த டெஸ்ட் ரிச்ல்ட்ஸ் எல்லாம் நாளைக்கே வந்துடும் சகுந்தலா. நான் பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்றேன்." என்ற துஷ்யந்திடம், "தேங்க்ஸ்." என்றாள் சகுந்தலா.​

அவளைப் பார்த்து புன்னகைத்த துஷ்யந்த், "பாய். டேக் கேர். ஏதாவது தேவைன்னா எந்த நேரம்னாலும் கால் பண்ணு." என்றவன் தன் வண்டியில் ஏறிக் கிளம்பிச் சென்றான்.​

துஷ்யந்த் சென்றதும் கதவை சாத்தி விட்டு உள்ளே வந்த சகுந்தலாவிற்கு பல நாட்கள் கழித்து மனதில் ஒருவித நிம்மதி.​

 

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 4

IMG_20240612_094909.jpg
'சந்திர பவனம்' என வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த அவ் உயர் நடுத்தர வர்க்க வீட்டின் கேட்டை திறந்து விட்ட வாட்ச்மென்னுக்கு மென் புன்னகையுடன் தலையசைத்து விட்டு காரை வீட்டு வாயிலில் நிறுத்தினான் துஷ்யந்த்.

துஷ்யந்த் சகுந்தலாவின் வீட்டில் இருக்கும் போது கைப்பேசியில் அழைத்த அவனின் தாய் பரிமளம் உடனே அவனை வீட்டுக்கு வரக் கூறவும் என்னவோ ஏதோவென வந்து சேர்ந்தான் துஷ்யந்த்.

வெளியுலகத்துக்கு பிரபல மருத்துவனாக இருந்தாலும் தாய்க்கு பிள்ளை தானே. அதனால் தான் அவரின் பேச்சைத் தட்டாது உடனே கிளம்பி வந்தான்.

முகத்தில் என்றும் இருக்கும் புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் ஹால் சோஃபாவில் அமர்ந்து இவன் வருகைக்காக காத்திருந்த பெற்றோரை குழப்பமாக நோக்கினான்.

"அம்மா... அவசரமா வர சொன்னீங்க. என்ன விஷயம்?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

துஷ்யந்த்தின் தந்தை, டாக்டர் சந்திரசேகரன், தனையனின் ரோல் மாடல், பிரபல நரம்பியல் நிபுணர்.

தாய் பரிமளம். ஒரு பெரிய ‌NGO வைத்து நடாத்தி வருகிறார்.

சந்திரசேகரன் துஷ்யந்த்தையே வெறிக்க, "நான் ஒரு பொண்ணு ஃபோட்டோ, பயோ டேட்டா அன்ட் கான்டாக்ட் நம்பர் அனுப்பி இருந்தேனே துஷ்யந்த். அந்தப் பொண்ணு கூட பேசினியா?" எனக் கேட்டார் பரிமளம்

"ஷிட்..." என துஷ்யந்த் தலையில் அடித்துக்கொள்ள, அவனின் செய்கையே அவன் தான் சொன்ன காரியத்தை செய்யவில்லை என பரிமளத்துக்கு எடுத்துரைத்தது.

"சாரி மா... மறந்துட்டேன். கொஞ்சம் இமர்ஜென்சி கேஸ்ல மாட்டிக்கிட்டேன்." என்றான் துஷ்யந்த் தயக்கமாக.

"எது? ஊரே வேடிக்கை பார்க்க எவனோ பெத்த பிள்ளைக்கு டாய்ஸ் வாங்கி கொடுக்குறதும் அந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு பாடிகார்ட் வேலை பார்க்குறதும் தான் சாரோட இமர்ஜென்சி கேஸா?" எனக் கேட்டார் சந்திரசேகரன் நக்கலாக.

"வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு திரும்ப வில்லை அடைய முடியாது. அது போல தான் ஒரு தடவை விட்ட வார்த்தைய திரும்ப பெற முடியாது ப்பா." என்றான் துஷ்யந்த் அமைதியாக ஆனால் அழுத்தமான குரலில்.

"பின்ன இதுக்கு என்ன டா சொல்ல போற?" எனக் கோபமாகக் கேட்டவாறு எழுந்த சந்திரசேகரன் தன் கைப்பேசியை எடுத்து துஷ்யந்த்திடம் காட்ட, அதனை வாங்கிப் பார்த்த துஷ்யந்த்திற்கு முதலில் தோன்றியது, 'எவ்வளவு அழகான ஃபேமிலி ஃபோட்டோ.' என்பது தான்.

ஆனால் அதை வாய் விட்டுக் கூறி யார் அவனின் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது?

ஏனெனில் அப் புகைப்படத்தில் இருந்தது துஷ்யந்த்தின் இடுப்பில் இருந்த பரத் அவன் வாங்கித் தந்த விளையாட்டுப் பொருளை வைத்து சிரித்துக் கொண்டிருக்க, கூடவே முகத்தில் பெரிய புன்னகையுடன் பரத்தின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தாள் சகுந்தலா.

சில நொடிகள் கழித்து தான் துஷ்யந்த்தின் எண்ணம் அவன் மண்டையில் உரைக்க, தன் பெற்றோரின் மனநிலை புரிந்தது.

சம்பந்தப்பட்ட தானே அவ்வாறு எண்ணும் போது யாராக இருந்தாலும் அவ்வாறு தானே எண்ணி இருப்பார்கள். இதில் அவர்களது தவறு என்ன இருக்கிறது?

போதாக்குறைக்கு முன் கோபக்காரரான அவனின் தந்தையிடம் இப் புகைப்படத்தை எடுத்து அனுப்பியவர் என்னென்ன கதை கட்டினாரோ?

சந்திரசேகரனிடம் கைப்பேசியை திரும்ப ஒப்படைத்த துஷ்யந்த் நீண்ட பெருமூச்சுடன் கணவனுக்கு குறையாத கோபத்துடன் அமர்ந்திருந்த பரிமளத்தின் அருகே அமர்ந்து, "இதுக்கு தான் ரெண்டு பேரும் இவ்வளவு ரியாக்ட் பண்ணுறீங்களா?" எனக் கேட்டான்.

கணவன் மனைவி இருவரிடமும் பதில் இல்லை. ஆனால் துஷ்யந்த்தின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, "நிஜமாவே இன்னைக்கு மார்னிங்ல இருந்து மூணு இமர்ஜென்சி கேஸஸ்." என்கவும், "அப்போ இந்த ஃபோட்டோ மாஃபிங்னு சொல்ல வரியா?" எனக் கேட்டார் பரிமளம் எரிச்சலாக.

"இல்ல." என்றான் துஷ்யந்த் புன்னகையுடன்.

துஷ்யந்த்தின் பதிலாலும் அவனின் முகத்தில் இருந்த புன்னகையினாலும் அவனது பெற்றோரின் இரத்த அழுத்தம் எகிற தொடங்க, "ஷீ இஸ் மை ஸ்கூல்மேட். சகுந்தலா." என்றான் துஷ்யந்த்.

அதன் பின் தான் அவனின் பெற்றோரின் முகத்தில் இருந்த இறுக்கம் லேசாகத் தளர்ந்தது.

"அவ பையன் தான் பரத். அப்பா... நீங்க ஒரு டாக்டர். NDCM டிசீஸ் பத்தி கண்டிப்பா கேள்விப்பட்டு இருப்பீங்க. பரத் இஸ் அ ஹார்ட் பேஷன்ட். என் ஃப்ரெண்டோட பையன் அவன்." என்றவன் சகுந்தலாவைப் பற்றியும் அவளை சந்தித்த நிகழ்வையும் பரத்தின் உடல்நிலையையும் தெளிவாக விபரித்து விட்டு, "ஒரு டாக்டரா நான் பரத்துக்கு கண்டிப்பா தேவை. அதை விட ஒரு வெல்விஷரா அவனோட மென்ட்டல் ஹெல்த்தையும் நான் பார்க்கணும். டாக்டர்னா மனிதாபிமானத்தோட இருக்குறது முக்கியம். சகுந்தலா என்னோட ஃப்ரெண்ட். ஒரு சிங்கிள் மதரா தெரியாத ஒரு ஊர்ல ஹார்ட் பேஷன்ட் மகனோட தனியா வந்து இருக்குற ஒரு பொண்ணுக்கு, என் ஃப்ரெண்டுக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. அது தப்பா? சொல்லுங்க அப்பா. சொல்லுங்க அம்மா. பார்க்குறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு முக்கியம் இல்ல. ஆனா என்னோட பேரன்ட்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னுறது எனக்கு முக்கியம் தான்." என்றான் துஷ்யந்த்.

மறு நொடியே அவனை அணைத்துக் கொண்ட பரிமளம், "சாரி டா கண்ணா. அப்பாவும் அம்மாவும் உன்ன அப்படி பேசி இருக்கக் கூடாது. அப்பாவோட ஃப்ரெண்ட் ராகவ் தான் மால்ல உங்கள பார்த்துட்டு ஃபோட்டோ எடுத்து அப்பாவுக்கு அனுப்பி ஏதேதோ சொல்லிட்டார். பையனுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு பெரிய பையன் இருந்தும் யாருக்கும் தெரியாம மறைக்கிறோமாம் அது இதுன்னு பேசவும் தான் அப்பாவுக்கும் கோவம். ஒன்னும் தப்பா எடுத்துக்க வேணாம் கண்ணா." என்கவும் புன்னகைத்த துஷ்யந்த், "அம்மா... நான் எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் நான் பையன் தான். என்னைத் திட்டவும் கண்டிக்கவும் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. சரி இப்போ சொல்லுங்க. சகுந்தலாவுக்கும் பரத்துக்கும் நான் ஹெல்ப் பண்ணணுமா? வேணாமா?" எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

பரிமளம் தன் கணவனை நோக்க, துஷ்யந்த்தின் தோளில் தட்டிக் கொடுத்த சந்திரசேகரன், "ஐம் சாரி மை சன். உனக்கு தான் என் கோவம் பத்தி தெரியுமே. அந்தப் பையனுக்கு நீ தான் ட்ரீட்மெண்ட் பண்ணி ஆகணும். அது உன்னோட கடமை. அந்த ப்ளேடி ராகவோட நம்பர முதல்ல ப்ளாக் பண்ணணும். சும்மா கண்டதையும் பேசி என் பீ.பி ஏத்திட்டான்." என்றார் எரிச்சலாக.

சந்திரசேகரன் அவ்வாறு கூறவும் துஷ்யந்த்தும் பரிமளமும் பக்கென சிரிக்க, சந்திரசேகரனின் முகத்திலும் புன்னகை.

"சரி சரி... போதும் சிரிச்சது. துஷ்யந்த்... போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்." என்று விட்டு பரிமளம் எழுந்து செல்ல, மனைவியைத் தொடர்ந்து எழுந்த சந்திரசேகரன், "துஷ்யந்த்... ஒரு டாக்டருக்கு மனிதாபிமானம் ரொம்ப முக்கியம் தான். இல்லன்னு சொல்லல. அதுவும் அந்தப் பொண்ணு உன்னோட ஃப்ரெண்ட். நீ தாராளமா என்ன உதவி வேணாலும் செய்யலாம். ஆனா உன்னோட மனிதாபிமானமும் இரக்க குணமும் ஒரு லிமிட்டோட இருக்குறது நல்லது. நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்." என்றவர் துஷ்யந்த்தின் தோளை அழுத்தி விட்டு கிளம்பினார்.

என்ன இருந்தாலும் பெற்றவர் அல்லவா?

தந்தை சொன்னதைக் கேட்ட துஷ்யந்த்தின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

'ரொம்ப நல்லாவே புரிஞ்சதுப்பா. என் பேரன்ட்ஸ பத்தி எனக்கு தெரியும் பா. அவங்க நல்லவங்க தான். ரொம்பவே நல்லவங்க. ஆனா சொந்த பையன்னு வரும் போது சுயநலமா இருந்தாலும் எனக்கு நல்லதையும் சிறந்ததையும் மட்டும் தான் யோசிப்பீங்க. என்ட் சகுந்தலாவோட சூழ்நிலையையும் நான் நிச்சயமா மிஸ்யூஸ் பண்ண மாட்டேன். நீங்க எல்லாரும் இப்போ இருக்குற இடத்துலயே இருக்குறது தான் எல்லாருக்கும் நல்லது. என்னோட சுயநலத்துக்காக என் பேரன்ட்ஸுக்கு என்னோட ஆசைய மறுத்த கல்நெஞ்சக்காரங்கன்னுற பெயர நிச்சயம் வாங்கி தர மாட்டேன். உங்கள கெட்டவங்களாக்கவும் எனக்கு விருப்பம் இல்ல. காணுற எல்லா கனவுமே நனவாகுறது இல்லயே. அது போலவே ஒரு நிறைவேறாத, நிறைவேறவே முடியாத கை சேரா கனவா போகட்டும் என்னோட காதல்.' என்றான் துஷ்யந்த் மனதுக்குள் விரக்தியாக.

துஷ்யந்த் குளித்து உடை மாற்றி வந்ததும் பரிமளம் மூவருக்கும் உணவைப் பரிமாறினார்.

சில நொடிகள் மௌனமாகக் கழிய, "துஷ்யந்த்... அந்தப் பொண்ணு ஃபோட்டோ பார்த்தியா? எப்படி இருக்கா? அவ கூட டாக்டர் தான்." எனக் கேட்டார் பரிமளம்.

"ம்ம்ம்... பார்த்தேன். நல்லா தான் இருக்காங்க." என்றான் துஷ்யந்த் உணவுத் தட்டை விட்டு தலையை உயர்த்தாமல்.

"அப்போ அம்மா மேற்கொண்டு பேசட்டுமா?" என ஆவலாகக் கேட்ட தாயை புன்னகையுடன் நோக்கிய துஷ்யந்த், "அம்மா... அந்தப் பொண்ணு நல்லா இருக்காங்க. ஆனா எனக்கு சரிப்பட்டு வராது மா." எனக் கூறவும் முகம் வாடினார் பரிமளம்.

துஷ்யந்த், "அம்மா... ஹஸ்பன்ட் அன்ட் வைஃப் ரெண்டு பேருமே டாக்டரா இருக்குறது சரிப்பட்டு வராது மா. அதுக்காக நான் ஒன்னும் பொண்டாட்டி வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்ற பிற்போக்குவாதி எல்லாம் கிடையாது. என் பொண்டாட்டிக்கு நிச்சயம் அவளுக்கு பிடிச்ச வேலைய பார்க்க நான் சப்போர்ட்டா இருப்பேன்." என்க, "அப்போ ஏன் இந்தப் பொண்ண வேணாம்ங்குற?" எனக் கேட்டார் சந்திரசேகரன் மகனை எடை போட்டவாறு.

தந்தையின் பார்வையின் பொருளை உணர்ந்த துஷ்யந்த் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கினான்.

பரிமளம் துஷ்யந்த்தின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்க, "நானும் அப்பாவும் டாக்டர்ஸ். எங்க வர்க்கிங் டைம் காலைல ஆரம்பிச்சு சாய்ங்காலத்துக்குள்ள முடியிறதுன்னு இல்ல. நீங்களே பார்க்குறீங்க தானே. சம்டைம் நைட் ஷிஃப்ட். இல்லன்னா மிட் நைட்ல கூட இமர்ஜென்சின்னு வந்தா போய் ஆகணும். இது எல்லாம் முடிஞ்சு நான் டயர்டாவோ, ஸ்ட்ரெஸ்ஸாவோ வீட்டுக்கு வரும் போது உங்களுக்கு அடுத்ததா எனக்கு ரிலீஃபா இருக்க போறது என் மனைவி தான். ஆனா என் வைஃப் டாக்டரா இருந்தா என்னைப் போலவே நேரம் காலம் பார்க்காம போய் ஆகணும். நான் ஓவர் டயர்டா வரும் போது அவ வீட்டுல இல்லன்னா கல்யாணம் ஆன புதுசுல வேணா எதுவும் பெரிசா தோணாது. ஆனா கொஞ்சம் நாள் போனா என்னை விட வேலை முக்கியமான்னு ஒரு எண்ணம் எனக்கு வரும். மனுஷ மனசு குரங்கும்மா. அது எப்போ வேணா எப்படி வேணா மாறலாம். அப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் இடைல ஈகோ அது இதுன்னு சண்டை வந்து கடைசியில டிவோர்ஸ்ல போய் நிற்க வேண்டி வரும். அதனால தான் மா சொல்றேன். எனக்கு வரப் போற மனைவி வேலைக்கு போகலாம். அதுவும் பிடிச்ச வேலைக்கு போகலாம். பட் நான் வேலை விட்டு வரும் போது வீட்டுல இருக்குறது போல, உங்களுக்கு அடுத்ததா இந்த குடும்பத்த எடுத்து நடத்த கூடிய மனைவியா வேணும். அப்படி ஒரு பொண்ணா பாருங்க." என்றான் துஷ்யந்த்.

பரிமளம் துஷ்யந்த் கூறியதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, "அம்மா... பயப்படாதீங்க. நீங்க தாராளமா பொண்ணு பாருங்க. நீங்க பார்க்குற பொண்ண தான் நான் நிச்சயம் கட்டிப்பேன்." என துஷ்யந்த் பரிமளத்திடம் கூறினாலும் பார்வை என்னவோ சந்திரசேகரனிடம் இருந்தது.
_______________________________________________

மருத்துவமனையில் துஷ்யந்த் தன் அறையில் சில மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அறைக் கதவு தட்டப்படும் ஓசையில், "கம் இன்." என்றான் தலையை உயர்த்தாமலே.

மறு நொடியே, "சாக்லெட் அங்கிள்..." எனக் கத்திக் கொண்டு உள்ளே வந்தான் பரத். அவனைத் தொடர்ந்து சகுந்தலாவும்.

இருவரையும் கண்டதும் துஷ்யந்த்தின் முகம் பளிச்சிட்டது.

"ஹேய்... சேம்ப்... ஹவ் ஆர் யூ?" எனப் புன்னகையுடன் கேட்டவாறு பரத்தைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் துஷ்யந்த்.

"பிஸியா இருந்தீங்களா துஷ்யந்த்?" எனக் கேட்ட சகுந்தலாவுக்கு, "இல்ல சகுந்தலா. பரத்தோட ரிப்போர்ட்ஸ் தான் பார்த்துட்டு இருந்தேன்." எனப் பதிலளித்த துஷ்யந்த், "சேம்ப். என் கப்போர்ட்ல ஸ்கெட்ச் புக் என்ட் பென்சில் இருக்கு. எடுத்து உங்களுக்கு பிடிச்சதா வரைங்க பார்க்கலாம்." என பரத்திடம் கூறவும் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினான் சிறுவன்.

பரத் அங்கிருந்து சென்றதும், "ரி...ரிப்போர்ட் எல்லாம் ஓக்கே தானே." எனக் கேட்டாள் சகுந்தலா பயத்துடன்.

"ம்ம்ம்... ஏஸ் யூ ஆல்ரெடி நோ, ஓக்கேன்னு சொல்ல முடியாது. உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணி ஆகணும். பட் கண்டிப்பா குணப்படுத்தலாம்." என சகுந்தலாவை சமாதானப்படுத்திய துஷ்யந்த்துக்கு பரத்தின் உண்மையான நிலையைக் கூறி அவளை வருத்தப்பட வைக்க முடியவில்லை.

உண்மையைக் கூறின் பரத்துக்கு சிகிச்சை கொடுக்காமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து.

இன்னுமே அவனுக்கு பொருத்தமான இதயம் கிடைக்காததால் குறைந்த பட்சம் மற்ற சிகிச்சைகளையாவது அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

துஷ்யந்த் அவ்வாறு கூறவும் சகுந்தலாவின் முகத்தில் மலர்ச்சி.

"நிஜமாவா சொல்றீங்க துஷ்யந்த்? எ...என் பையன் குணமாகுவான்ல." என ஆசையாகக் கேட்ட சகுந்தலாவின் கண்களில் கண்ணீர்.

தன் நெஞ்சம் புகுந்தவளின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் தோளில் சாய்த்து அவளுக்காக தான் இருக்கிறேன் எனக் கூற துஷ்யந்த்தின் கைகள் பரபரத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் சகுந்தலாவிடம் டிஷு பாக்ஸை நகர்த்தி விட்டு, "கண்டிப்பா சகுந்தலா. கடவுள் மேல நம்பிக்கை வை. பரத்துக்கு எதுவும் ஆகாது. இன்னைக்கே நாம ட்ரீட்மென்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணலாம். பட் ஃபர்ஸ்ட் ஒரு அம்மாவா நீ மென்டலி தயார் ஆகணும். அதுக்கு நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்." என அறிவுறுத்தவும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சம்மதமாகத் தலையசைத்தாள் சகுந்தலா.

"குட்... முதல் வேலையா நாம மெடிகேஷன்ஸ் ஆரம்பிக்கலாம். பரத் ஆல்ரெடி யூஸ் பண்ணிட்டு இருக்குற மெடிசின்ஸ் இனி கன்ட்னியூ பண்ண வேணாம். நான் புதுசா எழுதி தரேன். முதல்ல பரத்தோட ப்ளெட் ப்ரஷர நார்மல்ல வெச்சிக்கணும். நெக்ஸ்ட் ஹெல்த்தி டயட் ப்ளேன். NDCM ஆல பாதிக்கப்பட்ட அநேகமான பசங்க சாப்பாட்ட விட்டு கொஞ்சம் தூரமா இருப்பாங்க. பட் நான் பார்த்த வரைக்கும் பரத்துக்கு அந்தப் பிரச்சினை இல்ல. அது போக அவன் இன்னும் சின்ன பையன். சோ அதுக்கேத்தது போல நான் நியூட்ரிஷனிஸ்ட் கிட்ட ரிஃபர் பண்ணிட்டு டயட் ப்ளேன் ரெடி பண்ணி தரேன். முடிஞ்ச அளவுக்கு அதையே ஃபாலோ பண்ணுங்க. இருந்துட்டு நின்னு எக்செப்ஷன் இருக்கலாம். தப்பில்ல. அவன் ஆசைப்பட்டு ஏதாவது கேட்டா, ஐ மீன் ரொம்ப அன்ஹெல்த்தியா இல்லாத ஃபூட் எதுவா இருந்தாலும் பண்ணி கொடுங்க. பிரச்சினை இல்ல. பட் எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு மைனர் சர்ஜரி பண்ணி ஆகணும்." என்றான் துஷ்யந்த்.

"சர்ஜரியா?" என அதிர்ந்தாள் சகுந்தலா.

"எதுக்கு இவ்வளவு ஷாக் சகுந்தலா? டெக்னாலஜி இப்போ எவ்வளவோ வளர்ந்து இருக்கு. ஒரு சின்ன சர்ஜரி தான். அவ்வளவா வலி கூட இருக்காது. பரத்தோட ஹார்ட் ஆக்டிவிட்டிய மானிட்டர் பண்ணுறதுக்காக ஒரு மினி கார்டியக் மானிட்டர் அவன் செஸ்ட்ல இம்ப்ளான்ட் பண்ணுவோம். அது மூலமா பரத்தோட கண்டிஷன டாக்டர்ஸால உடனுக்குடன் தெரிஞ்சிக்க முடியும்." என்றான் துஷ்யந்த்.

"ம்ம்ம்... எப்போ சர்ஜரி?" எனக் கேட்டாள் சகுந்தலா இரு மனதாக சம்மதித்தபடி.

"மைனர் சர்ஜரி தானே. நாளைக்கே பண்ணலாம்." என்ற துஷ்யந்த் சகுந்தலாவின் முகம் வாடியே இருக்கவும், "சகுந்தலா. இப்பவே இந்த சின்ன சர்ஜரிக்காக ஃபீல் பண்ண ஆரம்பிச்சா எப்படி? பரத்தோட கண்டிஷன் உனக்கு நல்லாவே தெரியும். பரத்துக்கு பொருத்தமான டோனர் கிடைச்சதும் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் சர்ஜரி பண்ண வேண்டி இருக்கு. நீயே இப்படி அழுது ஃபீல் பண்ணிட்டு இருந்தா பரத் எப்படி சம்மதிப்பான்?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

"என்ன இருந்தாலும் நான் பெத்தவ இல்லையா? நீங்க டாக்டர். டெய்லி இதை மாதிரி நிறைய சர்ஜரி பண்ணுவீங்க. அதனால இதெல்லாம் பெரிசா தெரியாது. ஆனா எனக்கு அப்படியா? பரத் உங்களுக்கு ஜஸ்ட் பேஷன்ட் தான். ஆனா என்னோட பையன்." என்றாள் சகுந்தலா கண்ணீருடன்.

சகுந்தலாவின் மன அழுத்தம் அவளை அவ்வாறு பேச வைக்கிறது எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த் எதுவும் கூறாது சகுந்தலாவையே அழுத்தமாக நோக்கினான்.

அதன் பின் தான் சகுந்தலாவுக்கு அவளின் வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.

"சாரி..." எனத் தயக்கமாக கூறிய சகுந்தலாவிடம், "ஓக்கே கூல். ஐ ப்ராமிஸ் யூ. பரத்த குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. இப்போ போய் இந்த மெடிசின்ஸ வாங்கிட்டு வா. பரத்த நான் பார்த்துக்குறேன்." என அனுப்பி வைத்தான் துஷ்யந்த்.
 

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 4

IMG_20240612_094909.jpg
'சந்திர பவனம்' என வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த அவ் உயர் நடுத்தர வர்க்க வீட்டின் கேட்டை திறந்து விட்ட வாட்ச்மென்னுக்கு மென் புன்னகையுடன் தலையசைத்து விட்டு காரை வீட்டு வாயிலில் நிறுத்தினான் துஷ்யந்த்.

துஷ்யந்த் சகுந்தலாவின் வீட்டில் இருக்கும் போது கைப்பேசியில் அழைத்த அவனின் தாய் பரிமளம் உடனே அவனை வீட்டுக்கு வரக் கூறவும் என்னவோ ஏதோவென வந்து சேர்ந்தான் துஷ்யந்த்.

வெளியுலகத்துக்கு பிரபல மருத்துவனாக இருந்தாலும் தாய்க்கு பிள்ளை தானே. அதனால் தான் அவரின் பேச்சைத் தட்டாது உடனே கிளம்பி வந்தான்.

முகத்தில் என்றும் இருக்கும் புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் ஹால் சோஃபாவில் அமர்ந்து இவன் வருகைக்காக காத்திருந்த பெற்றோரை குழப்பமாக நோக்கினான்.

"அம்மா... அவசரமா வர சொன்னீங்க. என்ன விஷயம்?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

துஷ்யந்த்தின் தந்தை, டாக்டர் சந்திரசேகரன், தனையனின் ரோல் மாடல், பிரபல நரம்பியல் நிபுணர்.

தாய் பரிமளம். ஒரு பெரிய ‌NGO வைத்து நடாத்தி வருகிறார்.

சந்திரசேகரன் துஷ்யந்த்தையே வெறிக்க, "நான் ஒரு பொண்ணு ஃபோட்டோ, பயோ டேட்டா அன்ட் கான்டாக்ட் நம்பர் அனுப்பி இருந்தேனே துஷ்யந்த். அந்தப் பொண்ணு கூட பேசினியா?" எனக் கேட்டார் பரிமளம்

"ஷிட்..." என துஷ்யந்த் தலையில் அடித்துக்கொள்ள, அவனின் செய்கையே அவன் தான் சொன்ன காரியத்தை செய்யவில்லை என பரிமளத்துக்கு எடுத்துரைத்தது.

"சாரி மா... மறந்துட்டேன். கொஞ்சம் இமர்ஜென்சி கேஸ்ல மாட்டிக்கிட்டேன்." என்றான் துஷ்யந்த் தயக்கமாக.

"எது? ஊரே வேடிக்கை பார்க்க எவனோ பெத்த பிள்ளைக்கு டாய்ஸ் வாங்கி கொடுக்குறதும் அந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு பாடிகார்ட் வேலை பார்க்குறதும் தான் சாரோட இமர்ஜென்சி கேஸா?" எனக் கேட்டார் சந்திரசேகரன் நக்கலாக.

"வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு திரும்ப வில்லை அடைய முடியாது. அது போல தான் ஒரு தடவை விட்ட வார்த்தைய திரும்ப பெற முடியாது ப்பா." என்றான் துஷ்யந்த் அமைதியாக ஆனால் அழுத்தமான குரலில்.

"பின்ன இதுக்கு என்ன டா சொல்ல போற?" எனக் கோபமாகக் கேட்டவாறு எழுந்த சந்திரசேகரன் தன் கைப்பேசியை எடுத்து துஷ்யந்த்திடம் காட்ட, அதனை வாங்கிப் பார்த்த துஷ்யந்த்திற்கு முதலில் தோன்றியது, 'எவ்வளவு அழகான ஃபேமிலி ஃபோட்டோ.' என்பது தான்.

ஆனால் அதை வாய் விட்டுக் கூறி யார் அவனின் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது?

ஏனெனில் அப் புகைப்படத்தில் இருந்தது துஷ்யந்த்தின் இடுப்பில் இருந்த பரத் அவன் வாங்கித் தந்த விளையாட்டுப் பொருளை வைத்து சிரித்துக் கொண்டிருக்க, கூடவே முகத்தில் பெரிய புன்னகையுடன் பரத்தின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தாள் சகுந்தலா.

சில நொடிகள் கழித்து தான் துஷ்யந்த்தின் எண்ணம் அவன் மண்டையில் உரைக்க, தன் பெற்றோரின் மனநிலை புரிந்தது.

சம்பந்தப்பட்ட தானே அவ்வாறு எண்ணும் போது யாராக இருந்தாலும் அவ்வாறு தானே எண்ணி இருப்பார்கள். இதில் அவர்களது தவறு என்ன இருக்கிறது?

போதாக்குறைக்கு முன் கோபக்காரரான அவனின் தந்தையிடம் இப் புகைப்படத்தை எடுத்து அனுப்பியவர் என்னென்ன கதை கட்டினாரோ?

சந்திரசேகரனிடம் கைப்பேசியை திரும்ப ஒப்படைத்த துஷ்யந்த் நீண்ட பெருமூச்சுடன் கணவனுக்கு குறையாத கோபத்துடன் அமர்ந்திருந்த பரிமளத்தின் அருகே அமர்ந்து, "இதுக்கு தான் ரெண்டு பேரும் இவ்வளவு ரியாக்ட் பண்ணுறீங்களா?" எனக் கேட்டான்.

கணவன் மனைவி இருவரிடமும் பதில் இல்லை. ஆனால் துஷ்யந்த்தின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, "நிஜமாவே இன்னைக்கு மார்னிங்ல இருந்து மூணு இமர்ஜென்சி கேஸஸ்." என்கவும், "அப்போ இந்த ஃபோட்டோ மாஃபிங்னு சொல்ல வரியா?" எனக் கேட்டார் பரிமளம் எரிச்சலாக.

"இல்ல." என்றான் துஷ்யந்த் புன்னகையுடன்.

துஷ்யந்த்தின் பதிலாலும் அவனின் முகத்தில் இருந்த புன்னகையினாலும் அவனது பெற்றோரின் இரத்த அழுத்தம் எகிற தொடங்க, "ஷீ இஸ் மை ஸ்கூல்மேட். சகுந்தலா." என்றான் துஷ்யந்த்.

அதன் பின் தான் அவனின் பெற்றோரின் முகத்தில் இருந்த இறுக்கம் லேசாகத் தளர்ந்தது.

"அவ பையன் தான் பரத். அப்பா... நீங்க ஒரு டாக்டர். NDCM டிசீஸ் பத்தி கண்டிப்பா கேள்விப்பட்டு இருப்பீங்க. பரத் இஸ் அ ஹார்ட் பேஷன்ட். என் ஃப்ரெண்டோட பையன் அவன்." என்றவன் சகுந்தலாவைப் பற்றியும் அவளை சந்தித்த நிகழ்வையும் பரத்தின் உடல்நிலையையும் தெளிவாக விபரித்து விட்டு, "ஒரு டாக்டரா நான் பரத்துக்கு கண்டிப்பா தேவை. அதை விட ஒரு வெல்விஷரா அவனோட மென்ட்டல் ஹெல்த்தையும் நான் பார்க்கணும். டாக்டர்னா மனிதாபிமானத்தோட இருக்குறது முக்கியம். சகுந்தலா என்னோட ஃப்ரெண்ட். ஒரு சிங்கிள் மதரா தெரியாத ஒரு ஊர்ல ஹார்ட் பேஷன்ட் மகனோட தனியா வந்து இருக்குற ஒரு பொண்ணுக்கு, என் ஃப்ரெண்டுக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. அது தப்பா? சொல்லுங்க அப்பா. சொல்லுங்க அம்மா. பார்க்குறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு முக்கியம் இல்ல. ஆனா என்னோட பேரன்ட்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னுறது எனக்கு முக்கியம் தான்." என்றான் துஷ்யந்த்.

மறு நொடியே அவனை அணைத்துக் கொண்ட பரிமளம், "சாரி டா கண்ணா. அப்பாவும் அம்மாவும் உன்ன அப்படி பேசி இருக்கக் கூடாது. அப்பாவோட ஃப்ரெண்ட் ராகவ் தான் மால்ல உங்கள பார்த்துட்டு ஃபோட்டோ எடுத்து அப்பாவுக்கு அனுப்பி ஏதேதோ சொல்லிட்டார். பையனுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு பெரிய பையன் இருந்தும் யாருக்கும் தெரியாம மறைக்கிறோமாம் அது இதுன்னு பேசவும் தான் அப்பாவுக்கும் கோவம். ஒன்னும் தப்பா எடுத்துக்க வேணாம் கண்ணா." என்கவும் புன்னகைத்த துஷ்யந்த், "அம்மா... நான் எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் நான் பையன் தான். என்னைத் திட்டவும் கண்டிக்கவும் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. சரி இப்போ சொல்லுங்க. சகுந்தலாவுக்கும் பரத்துக்கும் நான் ஹெல்ப் பண்ணணுமா? வேணாமா?" எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

பரிமளம் தன் கணவனை நோக்க, துஷ்யந்த்தின் தோளில் தட்டிக் கொடுத்த சந்திரசேகரன், "ஐம் சாரி மை சன். உனக்கு தான் என் கோவம் பத்தி தெரியுமே. அந்தப் பையனுக்கு நீ தான் ட்ரீட்மெண்ட் பண்ணி ஆகணும். அது உன்னோட கடமை. அந்த ப்ளேடி ராகவோட நம்பர முதல்ல ப்ளாக் பண்ணணும். சும்மா கண்டதையும் பேசி என் பீ.பி ஏத்திட்டான்." என்றார் எரிச்சலாக.

சந்திரசேகரன் அவ்வாறு கூறவும் துஷ்யந்த்தும் பரிமளமும் பக்கென சிரிக்க, சந்திரசேகரனின் முகத்திலும் புன்னகை.

"சரி சரி... போதும் சிரிச்சது. துஷ்யந்த்... போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்." என்று விட்டு பரிமளம் எழுந்து செல்ல, மனைவியைத் தொடர்ந்து எழுந்த சந்திரசேகரன், "துஷ்யந்த்... ஒரு டாக்டருக்கு மனிதாபிமானம் ரொம்ப முக்கியம் தான். இல்லன்னு சொல்லல. அதுவும் அந்தப் பொண்ணு உன்னோட ஃப்ரெண்ட். நீ தாராளமா என்ன உதவி வேணாலும் செய்யலாம். ஆனா உன்னோட மனிதாபிமானமும் இரக்க குணமும் ஒரு லிமிட்டோட இருக்குறது நல்லது. நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்." என்றவர் துஷ்யந்த்தின் தோளை அழுத்தி விட்டு கிளம்பினார்.

என்ன இருந்தாலும் பெற்றவர் அல்லவா?

தந்தை சொன்னதைக் கேட்ட துஷ்யந்த்தின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

'ரொம்ப நல்லாவே புரிஞ்சதுப்பா. என் பேரன்ட்ஸ பத்தி எனக்கு தெரியும் பா. அவங்க நல்லவங்க தான். ரொம்பவே நல்லவங்க. ஆனா சொந்த பையன்னு வரும் போது சுயநலமா இருந்தாலும் எனக்கு நல்லதையும் சிறந்ததையும் மட்டும் தான் யோசிப்பீங்க. என்ட் சகுந்தலாவோட சூழ்நிலையையும் நான் நிச்சயமா மிஸ்யூஸ் பண்ண மாட்டேன். நீங்க எல்லாரும் இப்போ இருக்குற இடத்துலயே இருக்குறது தான் எல்லாருக்கும் நல்லது. என்னோட சுயநலத்துக்காக என் பேரன்ட்ஸுக்கு என்னோட ஆசைய மறுத்த கல்நெஞ்சக்காரங்கன்னுற பெயர நிச்சயம் வாங்கி தர மாட்டேன். உங்கள கெட்டவங்களாக்கவும் எனக்கு விருப்பம் இல்ல. காணுற எல்லா கனவுமே நனவாகுறது இல்லயே. அது போலவே ஒரு நிறைவேறாத, நிறைவேறவே முடியாத கை சேரா கனவா போகட்டும் என்னோட காதல்.' என்றான் துஷ்யந்த் மனதுக்குள் விரக்தியாக.

துஷ்யந்த் குளித்து உடை மாற்றி வந்ததும் பரிமளம் மூவருக்கும் உணவைப் பரிமாறினார்.

சில நொடிகள் மௌனமாகக் கழிய, "துஷ்யந்த்... அந்தப் பொண்ணு ஃபோட்டோ பார்த்தியா? எப்படி இருக்கா? அவ கூட டாக்டர் தான்." எனக் கேட்டார் பரிமளம்.

"ம்ம்ம்... பார்த்தேன். நல்லா தான் இருக்காங்க." என்றான் துஷ்யந்த் உணவுத் தட்டை விட்டு தலையை உயர்த்தாமல்.

"அப்போ அம்மா மேற்கொண்டு பேசட்டுமா?" என ஆவலாகக் கேட்ட தாயை புன்னகையுடன் நோக்கிய துஷ்யந்த், "அம்மா... அந்தப் பொண்ணு நல்லா இருக்காங்க. ஆனா எனக்கு சரிப்பட்டு வராது மா." எனக் கூறவும் முகம் வாடினார் பரிமளம்.

துஷ்யந்த், "அம்மா... ஹஸ்பன்ட் அன்ட் வைஃப் ரெண்டு பேருமே டாக்டரா இருக்குறது சரிப்பட்டு வராது மா. அதுக்காக நான் ஒன்னும் பொண்டாட்டி வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்ற பிற்போக்குவாதி எல்லாம் கிடையாது. என் பொண்டாட்டிக்கு நிச்சயம் அவளுக்கு பிடிச்ச வேலைய பார்க்க நான் சப்போர்ட்டா இருப்பேன்." என்க, "அப்போ ஏன் இந்தப் பொண்ண வேணாம்ங்குற?" எனக் கேட்டார் சந்திரசேகரன் மகனை எடை போட்டவாறு.

தந்தையின் பார்வையின் பொருளை உணர்ந்த துஷ்யந்த் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கினான்.

பரிமளம் துஷ்யந்த்தின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்க, "நானும் அப்பாவும் டாக்டர்ஸ். எங்க வர்க்கிங் டைம் காலைல ஆரம்பிச்சு சாய்ங்காலத்துக்குள்ள முடியிறதுன்னு இல்ல. நீங்களே பார்க்குறீங்க தானே. சம்டைம் நைட் ஷிஃப்ட். இல்லன்னா மிட் நைட்ல கூட இமர்ஜென்சின்னு வந்தா போய் ஆகணும். இது எல்லாம் முடிஞ்சு நான் டயர்டாவோ, ஸ்ட்ரெஸ்ஸாவோ வீட்டுக்கு வரும் போது உங்களுக்கு அடுத்ததா எனக்கு ரிலீஃபா இருக்க போறது என் மனைவி தான். ஆனா என் வைஃப் டாக்டரா இருந்தா என்னைப் போலவே நேரம் காலம் பார்க்காம போய் ஆகணும். நான் ஓவர் டயர்டா வரும் போது அவ வீட்டுல இல்லன்னா கல்யாணம் ஆன புதுசுல வேணா எதுவும் பெரிசா தோணாது. ஆனா கொஞ்சம் நாள் போனா என்னை விட வேலை முக்கியமான்னு ஒரு எண்ணம் எனக்கு வரும். மனுஷ மனசு குரங்கும்மா. அது எப்போ வேணா எப்படி வேணா மாறலாம். அப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் இடைல ஈகோ அது இதுன்னு சண்டை வந்து கடைசியில டிவோர்ஸ்ல போய் நிற்க வேண்டி வரும். அதனால தான் மா சொல்றேன். எனக்கு வரப் போற மனைவி வேலைக்கு போகலாம். அதுவும் பிடிச்ச வேலைக்கு போகலாம். பட் நான் வேலை விட்டு வரும் போது வீட்டுல இருக்குறது போல, உங்களுக்கு அடுத்ததா இந்த குடும்பத்த எடுத்து நடத்த கூடிய மனைவியா வேணும். அப்படி ஒரு பொண்ணா பாருங்க." என்றான் துஷ்யந்த்.

பரிமளம் துஷ்யந்த் கூறியதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, "அம்மா... பயப்படாதீங்க. நீங்க தாராளமா பொண்ணு பாருங்க. நீங்க பார்க்குற பொண்ண தான் நான் நிச்சயம் கட்டிப்பேன்." என துஷ்யந்த் பரிமளத்திடம் கூறினாலும் பார்வை என்னவோ சந்திரசேகரனிடம் இருந்தது.
_______________________________________________

மருத்துவமனையில் துஷ்யந்த் தன் அறையில் சில மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அறைக் கதவு தட்டப்படும் ஓசையில், "கம் இன்." என்றான் தலையை உயர்த்தாமலே.

மறு நொடியே, "சாக்லெட் அங்கிள்..." எனக் கத்திக் கொண்டு உள்ளே வந்தான் பரத். அவனைத் தொடர்ந்து சகுந்தலாவும்.

இருவரையும் கண்டதும் துஷ்யந்த்தின் முகம் பளிச்சிட்டது.

"ஹேய்... சேம்ப்... ஹவ் ஆர் யூ?" எனப் புன்னகையுடன் கேட்டவாறு பரத்தைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் துஷ்யந்த்.

"பிஸியா இருந்தீங்களா துஷ்யந்த்?" எனக் கேட்ட சகுந்தலாவுக்கு, "இல்ல சகுந்தலா. பரத்தோட ரிப்போர்ட்ஸ் தான் பார்த்துட்டு இருந்தேன்." எனப் பதிலளித்த துஷ்யந்த், "சேம்ப். என் கப்போர்ட்ல ஸ்கெட்ச் புக் என்ட் பென்சில் இருக்கு. எடுத்து உங்களுக்கு பிடிச்சதா வரைங்க பார்க்கலாம்." என பரத்திடம் கூறவும் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினான் சிறுவன்.

பரத் அங்கிருந்து சென்றதும், "ரி...ரிப்போர்ட் எல்லாம் ஓக்கே தானே." எனக் கேட்டாள் சகுந்தலா பயத்துடன்.

"ம்ம்ம்... ஏஸ் யூ ஆல்ரெடி நோ, ஓக்கேன்னு சொல்ல முடியாது. உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணி ஆகணும். பட் கண்டிப்பா குணப்படுத்தலாம்." என சகுந்தலாவை சமாதானப்படுத்திய துஷ்யந்த்துக்கு பரத்தின் உண்மையான நிலையைக் கூறி அவளை வருத்தப்பட வைக்க முடியவில்லை.

உண்மையைக் கூறின் பரத்துக்கு சிகிச்சை கொடுக்காமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து.

இன்னுமே அவனுக்கு பொருத்தமான இதயம் கிடைக்காததால் குறைந்த பட்சம் மற்ற சிகிச்சைகளையாவது அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

துஷ்யந்த் அவ்வாறு கூறவும் சகுந்தலாவின் முகத்தில் மலர்ச்சி.

"நிஜமாவா சொல்றீங்க துஷ்யந்த்? எ...என் பையன் குணமாகுவான்ல." என ஆசையாகக் கேட்ட சகுந்தலாவின் கண்களில் கண்ணீர்.

தன் நெஞ்சம் புகுந்தவளின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் தோளில் சாய்த்து அவளுக்காக தான் இருக்கிறேன் எனக் கூற துஷ்யந்த்தின் கைகள் பரபரத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் சகுந்தலாவிடம் டிஷு பாக்ஸை நகர்த்தி விட்டு, "கண்டிப்பா சகுந்தலா. கடவுள் மேல நம்பிக்கை வை. பரத்துக்கு எதுவும் ஆகாது. இன்னைக்கே நாம ட்ரீட்மென்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணலாம். பட் ஃபர்ஸ்ட் ஒரு அம்மாவா நீ மென்டலி தயார் ஆகணும். அதுக்கு நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்." என அறிவுறுத்தவும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சம்மதமாகத் தலையசைத்தாள் சகுந்தலா.

"குட்... முதல் வேலையா நாம மெடிகேஷன்ஸ் ஆரம்பிக்கலாம். பரத் ஆல்ரெடி யூஸ் பண்ணிட்டு இருக்குற மெடிசின்ஸ் இனி கன்ட்னியூ பண்ண வேணாம். நான் புதுசா எழுதி தரேன். முதல்ல பரத்தோட ப்ளெட் ப்ரஷர நார்மல்ல வெச்சிக்கணும். நெக்ஸ்ட் ஹெல்த்தி டயட் ப்ளேன். NDCM ஆல பாதிக்கப்பட்ட அநேகமான பசங்க சாப்பாட்ட விட்டு கொஞ்சம் தூரமா இருப்பாங்க. பட் நான் பார்த்த வரைக்கும் பரத்துக்கு அந்தப் பிரச்சினை இல்ல. அது போக அவன் இன்னும் சின்ன பையன். சோ அதுக்கேத்தது போல நான் நியூட்ரிஷனிஸ்ட் கிட்ட ரிஃபர் பண்ணிட்டு டயட் ப்ளேன் ரெடி பண்ணி தரேன். முடிஞ்ச அளவுக்கு அதையே ஃபாலோ பண்ணுங்க. இருந்துட்டு நின்னு எக்செப்ஷன் இருக்கலாம். தப்பில்ல. அவன் ஆசைப்பட்டு ஏதாவது கேட்டா, ஐ மீன் ரொம்ப அன்ஹெல்த்தியா இல்லாத ஃபூட் எதுவா இருந்தாலும் பண்ணி கொடுங்க. பிரச்சினை இல்ல. பட் எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு மைனர் சர்ஜரி பண்ணி ஆகணும்." என்றான் துஷ்யந்த்.

"சர்ஜரியா?" என அதிர்ந்தாள் சகுந்தலா.

"எதுக்கு இவ்வளவு ஷாக் சகுந்தலா? டெக்னாலஜி இப்போ எவ்வளவோ வளர்ந்து இருக்கு. ஒரு சின்ன சர்ஜரி தான். அவ்வளவா வலி கூட இருக்காது. பரத்தோட ஹார்ட் ஆக்டிவிட்டிய மானிட்டர் பண்ணுறதுக்காக ஒரு மினி கார்டியக் மானிட்டர் அவன் செஸ்ட்ல இம்ப்ளான்ட் பண்ணுவோம். அது மூலமா பரத்தோட கண்டிஷன டாக்டர்ஸால உடனுக்குடன் தெரிஞ்சிக்க முடியும்." என்றான் துஷ்யந்த்.

"ம்ம்ம்... எப்போ சர்ஜரி?" எனக் கேட்டாள் சகுந்தலா இரு மனதாக சம்மதித்தபடி.

"மைனர் சர்ஜரி தானே. நாளைக்கே பண்ணலாம்." என்ற துஷ்யந்த் சகுந்தலாவின் முகம் வாடியே இருக்கவும், "சகுந்தலா. இப்பவே இந்த சின்ன சர்ஜரிக்காக ஃபீல் பண்ண ஆரம்பிச்சா எப்படி? பரத்தோட கண்டிஷன் உனக்கு நல்லாவே தெரியும். பரத்துக்கு பொருத்தமான டோனர் கிடைச்சதும் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் சர்ஜரி பண்ண வேண்டி இருக்கு. நீயே இப்படி அழுது ஃபீல் பண்ணிட்டு இருந்தா பரத் எப்படி சம்மதிப்பான்?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

"என்ன இருந்தாலும் நான் பெத்தவ இல்லையா? நீங்க டாக்டர். டெய்லி இதை மாதிரி நிறைய சர்ஜரி பண்ணுவீங்க. அதனால இதெல்லாம் பெரிசா தெரியாது. ஆனா எனக்கு அப்படியா? பரத் உங்களுக்கு ஜஸ்ட் பேஷன்ட் தான். ஆனா என்னோட பையன்." என்றாள் சகுந்தலா கண்ணீருடன்.

சகுந்தலாவின் மன அழுத்தம் அவளை அவ்வாறு பேச வைக்கிறது எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த் எதுவும் கூறாது சகுந்தலாவையே அழுத்தமாக நோக்கினான்.

அதன் பின் தான் சகுந்தலாவுக்கு அவளின் வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.

"சாரி..." எனத் தயக்கமாக கூறிய சகுந்தலாவிடம், "ஓக்கே கூல். ஐ ப்ராமிஸ் யூ. பரத்த குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. இப்போ போய் இந்த மெடிசின்ஸ வாங்கிட்டு வா. பரத்த நான் பார்த்துக்குறேன்." என அனுப்பி வைத்தான் துஷ்யந்த்.


 

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 5

IMG_20240610_095321.jpg

சகுந்தலாவை மருந்துகளை வாங்க கீழே அனுப்பி வைத்து விட்டு பரத்தின் அருகே சென்றான் துஷ்யந்த்.

"அங்கிள்... இங்க பாருங்க. நல்லா இருக்கா?" என தான் வரைந்த சித்திரத்தைக் காட்டிக் கேட்டான் பரத்.

ஒரு இளம் பெண்ணும் அவளின் மகனும் தனியாக விளையாடிக் கொண்டிருக்க, தூரத்தில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி அவர்களை நோக்கி நடந்து வந்தான் ஒருவன்.

அச் சித்திரத்தைப் பார்க்கும் போதே பரத் தம்மைத் தான் சித்திரமாக வரைந்துள்ளான் என்று புரிந்து கொண்ட துஷ்யந்த்தின் மனதில் என்னவென புரிந்து கொள்ள முடியாத ஒரு ஏக்கம் வந்து சென்றது.

அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன், "வாவ் சேம்ப். சோ பியூட்டிஃபுல். உனக்கு ட்ராவிங் ரொம்ப பிடிக்குமா?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

"ஆமா அங்கிள். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விட நான் தான் சூப்பரா ட்ராவிங் பண்ணுவேன்னு எங்க டீச்சர் சொல்லுவாங்க." என உற்சாகமாகக் கூறிய பரத் மறு நொடியே முகம் வாடிப் போய், "ஐ மிஸ் மை ஃப்ரெண்ட்ஸ் அங்கிள். எனக்கும் அவங்கள போல திரும்ப ஸ்கூல் போக ஆசையா இருக்கு. பட் மம்மி நோ சொல்லிட்டாங்க." என்றான் வருத்தமாக.

பரத்தைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்ட துஷ்யந்த், "மம்மி பரத்தோட நல்லதுக்கு தானே சொல்லி இருப்பாங்க. பரத் ரொம்ப இன்டலிஜென்ட் தானே. சோ மத்த பசங்க போல ப்ரீ ஸ்கூல் எல்லாம் போக வேண்டிய அவசியம் இல்ல. பரத்தோட ஹெல்த் ரெகவர் ஆனதும் டேரெக்டா ஸ்கூலுக்கே போகலாம்." என்கவும் பரத்தின் கண்கள் அகல விரிந்தன.

"நிஜமாவா சாக்லெட் அங்கிள்?" என ஆவலாகக் கேட்ட பரத்திடம், "ஆமா சேம்ப். பட் அதுக்கு பரத் ஹெல்த்தியா இருந்தா தானே மம்மி ஓக்கே சொல்லுவாங்க. ஹெல்த்தியா இருக்க என்ன பண்ணணும்? ஹெல்த்தி ஃபூட்ஸ் சாப்பிடணும். ட்ரீட்மென்ட்ஸ் எல்லாம் குட் பாய் போல எடுத்துக்கணும்." என்றான் துஷ்யந்த்.

"ட்ரீட்மென்ட்டா? வேணாம் அங்கிள். எனக்கு மெடிசின்ஸ் எல்லாம் பிடிக்கல. ஆப்பரேஷன் பண்ணா வலிக்குமாம். என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க." என்றான் பரத் பிடிவாதமாக.

துஷ்யந்த், "மெடிசின்ஸ் சாப்பிடலன்னா, ட்ரீட்மெண்ட் சரியா எடுத்துக்கலன்னா எப்படி பரத் க்யூர் ஆவீங்க? அப்போ உங்க ஃப்ரெண்ட்ஸ் போல ஸ்கூல் போக வேணாமா?" எனக் கேட்கவும், "போகணும் தான். பட் ட்ரீட்மென்ட் வேணாம் அங்கிள்." என சிணுங்கினான்.

"பரத் மெடிசின்ஸ், ட்ரீட்மென்ட் சரியா எடுத்துக்கலன்னா மம்மி எப்படி உங்கள ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாட விடுவாங்க? மம்மி பாவம் இல்லையா? பரத் க்யூர் ஆனா தானே மம்மி ஹேப்பியா இருப்பாங்க." என்ற துஷ்யந்த் அறிந்திருந்தான்‌ பரத் தன் தாயின் மீது வைத்துள்ள பாசம் பற்றி.

சில நிமிட யோசனைக்கு பின் மனமேயின்றி பரத் சம்மதமாகத் தலையாட்டவும், "குட் பாய்..." என்ற துஷ்யந்த் பரத்தின் இரு கன்னத்தில் மாறி மாறி முத்தமிட, சிறுவனின் முகத்தில் புன்னகை.

அதே நேரம் சகுந்தலாவும் மருந்துடன் வர, துஷ்யந்த்தைப் பார்த்து கண்களால் பரத்தைப் பற்றிக் கேட்க, தன் கண்களை மூடித் திறந்து அவளை ஆறுதல் படுத்தினான் துஷ்யந்த்.

மறுநாளே பரத்துக்கு கார்டியக் மானிட்டரைப் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏதேதோ கூறி பரத்தின் மனதை மாற்றி சம்மதிக்க வைத்த துஷ்யந்த்துக்கு சகுந்தலாவை சமாதானப்படுத்தும் வழி தான் தெரியவில்லை.

மாலை அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, அன்று காலை முதல் பரத்தை நொடி நேரம் கூட பிரியாது அவனை அணைத்தவாறே கவலையுடன் காணப்பட்டாள் சகுந்தலா.

"சகுந்தலா. நீயே இப்படி இருந்தா பரத் எப்படி தைரியமா இருப்பான்? உன்ன பார்த்து அவன் பயப்பட மாட்டானா?" எனக் கேட்டான் துஷ்யந்த் சற்று அதட்டலாக.

"துஷ்யந்த். பரத்துக்கு எதுவும் ஆகாது இல்லயா?" எனப் பதட்டமாகக் கேட்ட சகுந்தலாவை முறைத்த துஷ்யந்த், "இது ஜஸ்ட் ஒரு சின்ன சர்ஜரி தான் சகுந்தலா. அவ்வளவு நேரம் கூட எடுக்காது. இதுக்கே இப்படி பண்ணா நெக்ஸ்ட் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணுறது எப்படி?" எனக் கேட்டான்.

எவ்வளவு சமாதானம் கூறியும் சகுந்தலாவின் மனம் திருப்தி அடையவில்லை.

ஒருவித பயத்துடனே காணப்பட்டாள். இறுதியில் துஷ்யந்த்தே சலிப்படைந்து சகுந்தலாவை அவள் போக்கில் விட்டு விட்டான்.

அறுவை சிகிச்சை ஆரம்பமானதும் எங்கும் நகராமல் ஒரு இடத்திலேயே அமர்ந்து தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடமும் தன் மகனுக்காக வேண்டுதல் வைத்தாள் சகுந்தலா.

முதலில் பரத்திற்கு அனஸ்டீசியா கொடுத்து விட்டு அவனை மயக்கமடையச் செய்தனர்.

தோள்பட்டை எலும்புக்கு சற்று கீழே மானிட்டரை பொருத்துவதற்காக ஒரு அங்குல நீளமான கீறல் போட்டு அதனுள் மினி கார்டியக் மானிட்டரைப் பொருத்தினர்.

இதயத்தில் இருந்து வரும் சமிக்ஞைகள் உடனுக்குடன் இம் மானிட்டருக்கு அனுப்பப்படும்.

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததும் பரத்தை வார்டுக்கு மாற்றினர்.

சகுந்தலா பரத் கண் விழிக்கும் வரை அவனுடனே இருந்தாள்.

சற்று நேரத்தில் கண் விழித்த பரத் ஒரே அழுகை. மருத்துவமனையையே இரண்டாக்கி விட்டான்.

அனஸ்டீசியா கொடுத்த பின்னர் நோயாளிகள் மூன்று விதமாக நடந்து கொள்வர்.

முதல் வகையினர் உறங்கிக் கொண்டே இருப்பர். இரண்டாவது வகையினர் வளவளத்துக்கொண்டு திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைக் கூறிக் கொண்டிருப்பர். மூன்றாவது வகையினர் எதற்கெடுத்தாலும் அழுவர். அழுது கொண்டே இருப்பர்.

பரத்தும் மூன்றாவது வகையினர் போல் அழுது கொண்டே இருந்தான்.

நல்ல வேளை தனியார் மருத்துவமனை என்பதால் தனியறை கிடைத்திருந்தது.

இல்லாவிடில் பரத் அழுத அழுகைக்கு மற்ற நோயாளிகள் என்னவோ ஏதோவென அச்சம் அடைந்திருப்பர்.

சகுந்தலா எவ்வளவோ பரத்தின் அழுகையை நிறுத்த முயன்றும் எதுவும் பயனளிக்கவில்லை. இறுதியில் தன் மகன் படும் வேதனையைப் பார்த்து அவளும் பரத்துடன் சேர்ந்து கண் கலங்கினாள்.

சகுந்தலாவை பார்வையால் அதட்டிய துஷ்யந்த் பரத்திடம் பேச்சுக் கொடுத்தவாறு அவனை சமாதானப்படுத்த முயல, எதற்கும் மசியவில்லை சிறுவன்.

துஷ்யந்த் நீட்டிய சாக்லெட்டையும் வாங்கிக்கொண்டு பரத் தன் அழுகையைத் தொடர, ஐயோ என்றானது துஷ்யந்த்திற்கு.

ஒரு கட்டத்தில் அழுது அழுதே களைத்துப் போய் உறங்கி விட்டான் பரத்.

அதன் பின் தான் துஷ்யந்த்தாலும் சகுந்தலாவாலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

பரத் உறங்கிய நேரம் பார்த்து அவனின் மானிட்டர் சரியாக வேலை செய்கிறதா எனப் பரிசோதித்தான் துஷ்யந்த்.

சகுந்தலா உறங்கும் மகனையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, "இனிமே இன்னும் கேர்ஃபுல்லா இருக்கணும் சகுந்தலா. பரத்துக்கு நல்ல ரெஸ்ட் தேவை. அதே நேரம் எனர்ஜிய ரொம்ப வேஸ்ட் பண்ணக் கூடாது. அவன் கூடவே இருந்து எல்லாம் பார்த்துக்கணும்." என்ற துஷ்யந்த்திடம் சரி எனத் தலையசைத்த சகுந்தலா பரத்திடமிருந்து பார்வையைத் திருப்பவே இல்லை.

சகுந்தலாவின் முகத்தில் இருந்த கவலை துஷ்யந்த்தின் மனதை வதைத்தது. அவளை அணைத்து ஆறுதலளிக்க பரபரத்த கைகளை பாக்கெட்டுக்குள் போட்டு அடக்கினான்.

தாய்க்கும் தனையனுக்கும் தனிமையைக் கொடுத்து விட்டு வெளியேறிய துஷ்யந்த் மற்ற நோயாளிகளைக் காணச் சென்றான்.

சில மணி நேரங்கள் பரத்தின் அருகேயே அமர்ந்திருந்த சகுந்தலாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளவும் பரத்தின் அருகே தாதி ஒருவரை காவலுக்கு வைத்து விட்டு கேன்டினுக்கு செல்ல வேண்டி வெளியே வந்தாள்.

அதே சமயம் அவளை விட்டு சற்றுத் தள்ளி ஒரு தாதியிடம் துஷ்யந்த் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

சகுந்தலாவைக் கவனிக்காத துஷ்யந்த் தாதியிடம் ஏதோ கட்டளைகள் இட்டுக் கொண்டிருக்க, சகுந்தலாவின் பார்வை துஷ்யந்த்தின் மீது நிலைத்திருந்தது.

'ஃபேர்வெல் அன்னைக்கு மட்டும் நான் கூப்பிட்டப்போ நீங்க வந்திருந்தீங்கன்னா இன்னைக்கு நம்ம கதையே வேற மாதிரி இருந்து இருக்கும்ல துஷ்யந்த்.' என்றாள் சகுந்தலா மனதுக்குள்.

சகுந்தலாவையும் மீறி அவளின் கண்கள் லேசாகக் கலங்கின.

_______________________________________________

வகுப்புத் தோழர்கள் அனைவரும் துஷ்யந்த்தையும் சகுந்தலாவையும் சேர்த்து வைத்து கேலி செய்ய, அதனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் படிப்பே கண்ணாக இருந்த துஷ்யந்தின் குணம் சகுந்தலாவை வெகுவாகக் கவர்ந்தது.

பெண்களிடம் அவன் காட்டும் கண்ணியம் முதற்கொண்டு ஆசிரியர்களை மதிக்கும் விதம், சந்தேகம் கேட்டு வருபவர்களை நடத்தும் விதம் என துஷ்யந்த்தின் ஒவ்வொரு அசைவும் சகுந்தலாவை அவன் பக்கம் சாய்த்தது.

யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக அவனை ரசிக்க ஆரம்பித்தாள் சகுந்தலா.

துஷ்யந்த்தின் ஒவ்வொரு அசைவும் அவளின் மனதில் கல் மேல் எழுதிய எழுத்துப் போல் பதிந்தது.

சில சமயங்களில் தன்னையே மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

துஷ்யந்த் பார்க்கும் சமயம் சட்டென தலையைக் குனித்துக் கொள்வாள்.

வேறு ஆண்களாக இருப்பின் சகுந்தலாவின் பார்வையையும் அவளின் கள்ளத்தனத்தையும் வைத்து அவள் தன்னை விரும்புவதை இலகுவாகவே உணர்ந்திருப்பர்.

ஆனால் பெண்களுடன் அவ்வளவு பழகாத, பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்ந்து, படிப்பில் மட்டுமே கண்ணாக இருந்த துஷ்யந்த்தை சகுந்தலாவின் பார்வை எதையும் உணர்த்தவில்லை.

சகுந்தலாவின் மனதைப் பற்றி அவளைச் சுற்றி இருந்த யாருமே அறியாமல் போனது தான் விந்தை‌.

அவ்வளவு கமுக்கமாக தன் மனதை மறைத்தாள் சகுந்தலா.

_______________________________________________

"இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்குற சகுந்தலா?" என்ற துஷ்யந்த்தின் குரலில் தன் கடந்த காலத்தை விட்டு வெளியே வந்த சகுந்தலாவுக்கு அவனின் கேள்வி புரியவே சில கணங்கள் எடுத்தது.

"அ...அது... அது... சாப்பிடலாம்னு..." எனத் தடுமாறினாள் சகுந்தலா.

தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்த துஷ்யந்த், "ஓக்கே... எனக்கும் ஃப்ரீ தான் இப்போ. ரெண்டு பேரும் கேன்டினுக்கு போலாம்." என்று விட்டு முன்னே நடக்கவும் தலையாட்டி பொம்மையாய் அவனைப் பின் தொடர்ந்தாள் சகுந்தலா.

துஷ்யந்த்தே இருவருக்குமான உணவை எடுத்து வரச் செல்ல, சகுந்தலா சுற்றியும் வேடிக்கை பார்த்தாள்.

உணவு வரவும் இருவரும் அமைதியாக சாப்பிட, அம் மௌனத்தைக் கலைத்தான் துஷ்யந்த்.

"சகுந்தலா... கேட்குறேன்னு தப்பா நினைக்காதே. பரத் ரெகவர் ஆகணும்னா அவன் மென்டலியும் ஹெல்த்தியா ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கணும். அது... அவன் மனசுல ஒரு அப்பாவுக்கான ஏக்கம் இருக்குறத நேத்து வந்தவன் என்னாலயே புரிஞ்சிக்க முடியுது. உனக்கு புரியுதா?" எனக் கேட்டான் துஷ்யந்த் தயக்கமாக.

அவனை வெட்டும் பார்வை பார்த்த சகுந்தலா, "பரத்துக்கு அப்பா, அம்மா, குடும்பம் எல்லாம் நான் மட்டும் தான். வேற எந்தக் கொம்பனும் என் பையனுக்கு அவசியம் இல்ல." என்றாள் ஆவேசத்துடன்.

"பெரியவங்களுக்கு இடைல இருக்குற பிரச்சினையால அந்தச் சின்னப் பையன் எதுக்கு அவஸ்தைப்படணும்? அட்லீஸ்ட் அவனோட அப்பா நல்லவனோ, கெட்டவனோ அதைப் பத்தி தெரிஞ்சிக்கிற முழு உரிமை பரத்துக்கு இருக்கு." என அழுத்தமாகக் கூறியவனுக்கு பரத்தின் ஏக்கத்தை போக்க முடிந்தால் என்ற எண்ணம் மட்டுமே அச் சமயம் இருந்தது.

அதனால் சகுந்தலாவின் பக்கம் யோசிக்கத் தவறினான்.

ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த சகுந்தலா, "புருஷனோட வர சின்ன சண்டைக்கு புருஷனே வேணாம்னு கையில குழந்தையோட வாழாவெட்டியா வரவன்னு என்னை நினைக்கிறீங்களா? எதுக்கு அந்தக் கேடு கெட்டவன பத்தி என் பையன் தெரிஞ்சிக்கணும்? அப்படியே நான் அந்த ஆள பத்தி சொன்னா பரத் எ..என்னை விட்டுட்டு அவன் கூட போயிட்டா?" எனக் கேட்டவளுக்கு குரல் நடுங்கியது.

"அப்படி இல்ல சகுந்தலா. சரி இதை சொல்லு. இப்போ நீ பரத் கிட்ட உண்மைய மறைக்கலாம். ஆனா அவன் பெரியவனானதுக்கு அப்புறம் சுயமா அவன் அப்பாவ பத்தி தெரிஞ்சிக்கிட்டு இத்தனை வருஷமா நீ அவன் அப்பா கிட்ட இருந்து அவன பிரிச்சி வெச்சிட்டதா நினைச்சி அப்போ உன்ன விட்டு போய்ட்டா என்ன பண்ணுவ?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

துஷ்யந்த்தின் கேள்வியில் அப்பட்டமாக முகத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்திய சகுந்தலாவின் கண்கள் கண்ணீரை சிந்தத் தயாராக இருந்தன.

தன் மனம் கவர்ந்தவளின் கண்ணீர் துஷ்யந்த்தின் மனதை வாட்டினாலும் பரத்தின் நலம் தான் அப்போது அவனுக்கு முக்கியமாகப் பட்டது.

"சகுந்தலா... உன் எக்ஸ் ஹஸ்பன்ட் மோசமானவனா இருந்தா பரத்துக்கு புரியும் படி அவனுக்கு உண்மைய எடுத்து சொல்லு. அதை விட்டுட்டு அவன திட்டியும் கண்டிச்சும் உண்மைய மறைக்க பார்த்தா பரத்துக்கு அவன் அப்பாவ பத்தி எப்படியாவது தெரிஞ்சிக்க வேணும்ங்குற வைராக்கியம் வரும். அது உங்க ரெண்டு பேரோட ரிலேஷன்ஷிப்புக்கும் நல்லதில்ல. உண்மை தெரிஞ்சா கண்டிப்பா அவன் உன்ன புரிஞ்சிப்பான். பரத் சின்ன வயசுல இருந்து நீ தான் தனியாளா அவன வளர்க்குற. இவ்வளவு மோசமான அப்பனுக்காக நிச்சயம் அவன் உன்ன விட்டு கொடுக்க மாட்டான்." என ஆறுதல் அளித்தான் துஷ்யந்த்.

சில நொடிகள் மௌனம் காத்த சகுந்தலா தன்னை சமன் செய்து கொண்டு, "அ...அவன் என்...னை ரொம்பவே டார்ச்சர் பண்ணான். பிஸிக்கலி, மென்டலி அபியூஸ் பண்ணான்." என்றவளுக்கு அச் சம்பவங்களை நினைக்கும் போதே உடல் நடுங்கியது.

"ஹே சகுந்தலா... கூல் கூல்... பயப்படாதே... நான் இருக்கேன் உன் கூட. உனக்கு சொல்லப் பிடிக்கலன்னா விடு. இட்ஸ் ஓக்கே." என்ற சகுந்தலா அவசரமாக தண்ணீரை எடுத்து அவளுக்கு குடிக்கக் கொடுத்தான்.

இவ்வளவு நேரமும் பரத்திடம் உண்மையைக் கூறச் சொல்லி கட்டாயப்படுத்தியவனுக்கு சகுந்தலாவின் நடவடிக்கையைப் பார்த்ததும் எங்கு தான் அவளைப் புரிந்து கொள்ளாமல் பேசி விட்டோமோ என வருத்தப்பட்டான்.

துஷ்யந்த் தந்த தண்ணீரைக் குடித்து தன்னை சமன் செய்து கொண்ட சகுந்தலா, "அவன் பெயர் ரிஷிகேஷ். கல்யாணம் ஆன நாள்ல இருந்து ஒவ்வொரு நொடியும் எனக்கு நரக வேதனைய மட்டும் தான் காட்டினான். பிஸிக்கலா, மென்ட்டலா என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணான். பல முறை என் சம்மதமே இல்லாம எ...என்னை ரே....ப் பண்ணான்." என சகுந்தலா குரல் நடுங்கக் கூற, துஷ்யந்த்தின் நரம்புகள் ஆத்திரத்தில் முறுக்கேறின.

தன் கரத்தை இறுக்கிய துஷ்யந்த்துக்கு அந் நொடியே சென்று ரிஷிகேஷை கொன்று போடும் வெறி வந்தது.

சகுந்தலா யாரைப் பற்றி இவ்வளவு அச்சத்துடன் பேசிக் கொண்டிருக்கிறாளோ அவனே சகுந்தலாவைத் தேடி லண்டனில் இருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தான்.

_______________________________________________

ப்ளஸ் டூ முடிந்ததும் சிறந்த மதிப்பெண்களை எடுத்து துஷ்யந்த் மருத்துவ கல்லூரியில் சேர, ஓரளவு நல்ல மதிப்பெண்களை எடுத்த சகுந்தலா ஒரு கலைக் கல்லூரியில் சேர்ந்தாள்.

துஷ்யந்த்தை விட்டுப் பிரிந்தாலும் மனம் முழுவதும் நிறைந்திருந்த அவன் மீதான காதல் மட்டும் அப்படியே இருந்தது.

ஆனால் தன் நிறைவேறாத காதலுக்காக பெற்றோரைக் கஷ்டப்படுத்த விரும்பாது படிப்பு முடிந்ததும் பெற்றோர் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்க, அவர்களை மறுத்துப் பேசவில்லை அவள்.

இருந்தும் ஏதாவது அதிசயம் நடந்து பெற்றோர் பார்க்கும் மணாளன் துஷ்யந்த்தாக இருக்க மாட்டானா என்ற ஏக்கமும் வந்து சென்றது.

ஒருநாள் தன்னைப் பெண் பார்க்க வருவதாக அவளின் பெற்றோர் கூறவும் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தயாரானாள் சகுந்தலா.

சொன்னபடியே தன் பெற்றோருடன் பெண் பார்க்க வந்த ரிஷிகேஷிற்கு சகுந்தலாவின் அழகு ஆளை மயக்க, உடனே தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

சகுந்தலாவின் பெற்றோருக்கும் கை நிறைய லட்சங்களில் சம்பாதிக்கும் வரன் கிடைக்கவும் மறுப்பதற்கு மனமில்லை.

சகுந்தலாவின் விருப்பத்தைக் கேட்க, பெற்றோருக்கு ஏற்கனவே சம்மதம் என்பதால் அவர்கள் ஆசைப்பட்டதாவது நடக்கட்டும் என்று தன் காதலை மனதுக்குள் பூட்டி வைத்து விட்டு திருமணத்துக்கு சம்மதித்தாள்.

இனிமேல் தன் காதல் நிச்சயம் கை கூடப் போவதில்லை என்று முடிவான பின் மனதில் ஒருவனை எண்ணி இன்னொருவருடன் வாழும் கேடு கெட்ட வாழ்வை விரும்பாது தன் எதிர்க்காலக் கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று துஷ்யந்த் மீதான காதலுக்கு மனதுக்குள்ளேயே சமாதி கட்டினாள்.

சரியாக ஒரு மாதத்தில் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.

சகுந்தலாவின் பெற்றோருக்கே எதற்காக இவ்வளவு அவசரம் என்ற கேள்வி எழ, மணமகனின் ஜாதகத்தில் ஒரு மாதத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என்றுள்ளதாக ரிஷிகேஷின் பெற்றோர் கூறினர்.

அதன் பின்னர் திருமண வேலைகள் துரிதமாக நடைபெற, சகுந்தலாவின் தோழி ஒருத்தி அவளை சந்திக்க வந்தாள்.

 

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 6

IMG_20240608_112409.jpg

சகுந்தலா துஷ்யந்த்திடம் தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த நேரம் துஷ்யந்த்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

பரத்துக்கு காவலாக இருந்த தாதி தான் அழைத்திருந்தார்.

துஷ்யந்த் அழைப்பை ஏற்றதும் கேட்டதும் மறு முனையில் பரத்தின் அழுகை தான்.

கைப்பேசியையும் தாண்டி பரத்தின் குரல் சகுந்தலாவின் காதுகளை எட்ட, சட்டென எழுந்து பரத் இருந்த அறைக்கு ஓடினாள்.

தாதியுடன் பேசி விட்டு துஷ்யந்த்தும் அவளைப் பின் தொடர்ந்தான்.

இருவரும் பரத் இருந்த அறையை நெருங்கும் போதே பரத்தின் அழுகைச் சத்தம் காதைக் கிழித்தது.

சகுந்தா உள்ளே சென்ற மறு நொடியே அவளைக் கண்டு கொண்ட பரத்தின் அழுகை அதிகமாகியது.

அழுது கொண்டிருந்த பிள்ளையை அவசரமாகத் தூக்கி சகுந்தலா சமாதானம் செய்ய முயல, அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைத்து அழுதான் பரத்.

"ஷ்ஷ்ஷ்... ஷ்ஷ்... என் பரத் குட்டி குட் பாய் தானே. அழக் கூடாது. அதான் அம்மா வந்துட்டேன்ல." என சகுந்தலா சமாதானப்படுத்த, "வீட்டுக்கு போகணும்..." எனக் கதறினான் சிறுவன்.

சகுந்தலா துஷ்யந்த்தைக் கவலையாக நோக்க, கண்களை மூடித் திறந்து தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்த துஷ்யந்த், "சேம்ப்... ஃபர்ஸ்ட் நீங்க அழாம இருந்தா தான் வீட்டுக்கு போகலாம். நீங்க அழுதா டாக்டர்ஸ் பயந்து உங்கள வீட்டுக்கு போக விட மாட்டாங்க." என்கவுமே சகுந்தலாவின் தோளில் முகம் புதைத்திருந்த பரத்தின் அழுகை முழுதாக நிற்காவிடிலும் ஓரளவு குறைந்தது.

சற்று நேரத்தில் பரத்தின் அழுகை குறைந்து கேவலாக மாறியது.

சகுந்தலாவிடம் இருந்து பரத்தை வாங்கிக் கொண்ட துஷ்யந்த், "சகுந்தலா... அனஸ்டீசியா போட்டதால இன்னைக்கு ஃபுல் டே பரத் இப்படி தான் அழுதுட்டே இருப்பான். நான் பரத்த கூட்டிட்டு வெளியே போறேன். நீ பரத்தோட திங்க்ஸ எடுத்துக்கிட்டு வா. நான் உங்க ரெண்டு பேரையும் வீட்டுல ட்ராப் பண்ணுறேன். இன்னைக்கு ஈவ்னிங் வரை நான் ஃப்ரீ தான்." என்கவும் சரி எனத் தலையசைத்தாள் சகுந்தலா.

பரத்துடன் வெளியே வந்த துஷ்யந்த் அவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருக்க, விம்மிக் கொண்டிருந்த சிறுவன் முதலில் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு பின் துஷ்யந்த்தின் பேச்சை செவிமடுக்கலானான்.

துஷ்யந்த் பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களைக் காட்டி ஒவ்வொன்று கூறவும் பரத் அவற்றை ஆவலாக நோக்கினான்.

பரத் ஓரளவு சமாதானம் அடைந்து விட்டதை உணர்ந்த துஷ்யந்த் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகளைக் காட்டி அவர்களைப் பற்றி கூற, பிஞ்சு நெஞ்சத்தில் அவர்களை நினைத்து பரிதாபம் தோன்றியது.

சகுந்தலா வந்ததும் மூவரும் சேர்ந்து சகுந்தலாவின் வீட்டுக்கு கிளம்பினர்.

பரத் பாதி வழியிலேயே உறங்கி விட, வீடு வந்ததும் தானே அவனைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினான் துஷ்யந்த்.

கதவருகில் நின்று இவற்றை கவனித்த சகுந்தலாவின் கண்களில் ஈரம்.

ஏதோ ஒரு பாரம் நெஞ்சை அழுத்தியது.

பரத்தைத் தூங்க வைத்து விட்டு வெளியே வந்த துஷ்யந்த், "இன்னைக்கு மட்டும் பரத்தோட அழுகைய அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சகுந்தலா. கோவப்பட்டு குழந்தைய திட்ட வேணாம்.‌ அது அவனுக்கு நல்லதில்ல. நாளைக்குள்ள ஓக்கே ஆகிடுவான். நான் அப்போ வரேன்." என்று விடை பெற்றான்.

"ஏதாவது குடிச்சிட்டாவது போகலாமே." என சகுந்தலா கூறவும் அவளைப் பார்த்து புன்னகைத்த துஷ்யந்த், "இன்னொரு நாளைக்கு பார்க்கலாம் சகுந்தலா." என்று விட்டு கிளம்பினான்.

_______________________________________________

அன்று இரவு எதுவும் இமர்ஜென்சி இல்லாததால் வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துஷ்யந்த்தின் கரத்தில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் நள்ளிரவில் திடீரென அலாரம் அடிக்கவும் பட்டென விழித்த துஷ்யந்த் தன் கைக் கடிகாரத்தைப் பரிசோதித்தான்.

பரத்துக்கு பொருத்திய மானிட்டரில் இருந்து தான் தகவல் வந்திருந்தது.

அதில் பரத்தின் இதயத் துடிப்பு வீதம் அதிகரித்திருப்பதாகக் காட்டவும் பதட்டமடைந்த துஷ்யந்த் சகுந்தலாவுக்கு அழைக்க, பல முறை அழைப்பு விடுத்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

எதைப் பற்றியும் சிந்திக்காது கையில் கிடைத்த டீ ஷர்ட்டை அணிந்து தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு யாரிடமும் கூறாது துஷ்யந்த் வீட்டில் இருந்து வெளியேற, கீழே தண்ணீர் எடுக்க வந்த சந்திரசேகரன் வேகமாகச் செல்லும் மகனைக் குழப்பமாக நோக்கினார்.

சகுந்தலாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தவாறே காரை ஓட்டிய துஷ்யந்த் சகுந்தலாவின் வீட்டை அடைந்ததும் அவசரமாக சென்று கதவைத் தட்ட, யாரோ கதவின் அருகே ஓடி வருவதை உணர்ந்த துஷ்யந்த்தின் மனம் பரத்துக்கு என்னவோ ஏதோவென அடித்துக் கொண்டது.

சில நொடிகள் கழித்து கதவு திறக்கப்பட, துஷ்யந்த் கண்டதும் முகத்தில் பெரிய புன்னகையுடன் மூச்சு வாங்க நின்றிருந்த சகுந்தலாவைத் தான்.

"பரத்..." என துஷ்யந்த் பதட்டமாகக் கேட்கும் போதே, "யாரு மம்மி வந்திருக்காங்க?" எனக் கேட்டவாறு வந்த பரத்தின் முகத்தில் ஆங்காங்கே கேக் பூசப்பட்டிருந்தது.

துஷ்யந்த்துக்கு குழப்பமாக இருந்தது.

அவசரமாக பரத்தின் உயரத்துக்கு குனிந்தவன், "சேம்ப்... உனக்கு ஒன்னும் இல்லல்ல. வலிக்கிதா இங்க?" என நெஞ்சைத் தொட்டுக் காட்டி பதட்டமாகக் கேட்டான்.

பரத்தோ துஷ்யந்த்தைக் கண்டதும் மேலும் உற்சாகமாகி, "ஹை சாக்லெட் அங்கிள்... நீங்களும் எங்க கூட சேர்ந்து என்னோட பர்த் டே செலிப்ரேட் பண்ண வந்தீங்களா? ஹே ஜாலி ஜாலி... அங்கிள் வாங்க சீக்கிரம். நான் உங்களுக்கு என்னோட சூப்பர் ஹீரோ கேக்க காட்டுறேன்." என துஷ்யந்தின் கேள்விக்குப் பதிலளிக்காது அவனின் கைப் பிடித்து உள்ளே இழுத்தான் பரத்.

"பரத் கண்ணா... நீ உள்ளே போய் விளையாடு. அங்கிள மம்மி கூட்டிட்டு வரேன்." என சகுந்தலா கூறவும் பரத் துள்ளிக் குதித்துக்கொண்டு உள்ளே ஓடி விட, மௌனமாய் மண்டியிட்டிருந்த துஷ்ய்ந்திடம், "என்னாச்சு துஷ்யந்த்? ஏன் இந்த நேரத்துல வந்து இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா?" எனக் கேட்டாள்.

சகுந்தலாவின் கேள்வியில் சட்டென எழுந்து நின்ற துஷ்யந்த், "என்ன நடக்குது இங்க சகுந்தலா?" எனக் கேட்ட துஷ்யந்த்தின் குரலில் லேசாகக் கோபம் எட்டிப் பார்த்தது.

அது பரத்தின் நிலையை எண்ணி ஒரு மருத்துவனாக அவனுக்கு ஏற்பட்ட நியாயமான கோபம்.

"இ...இன்னைக்கு பரத்தோட பர்த் டே... சாரி துஷ்யந்த். இருந்த டென்ஷன்ல உங்க கிட்ட சொல்ல முடியல. அப்புறம் நைட் ரொம்ப லேட்டாச்சேன்னு சொல்லல." என்றாள் தயக்கமாக.

"நான் அதைக் கேட்கல சகுந்தலா. இந்த மிட் நைட்ல பரத்தோட ஹார்ட் பீட் அதிகமாகிடுச்சுன்னு எனக்கு அலாரம் அடிக்கவும் நான் எவ்வளவு பயந்து போய்ட்டேன்னு புரியுதா? என்ன டேஷுக்கு ஃபோன் வெச்சிருக்க. ஆயிரம் வாட்டி கால் பண்ணேன். அதைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு என்ன வேலை?" எனக் கேட்டான் துஷயந்த் அதட்டலாக.

அவனுக்கு மட்டும் தானே தெரியும் பரத்தின் உண்மையான நிலையும் தற்போது நடந்த அசம்பாவிதத்தில் அவன் பரத்தை நினைத்து எந்த அளவுக்கு பயந்தான் என்று.

அதன் பின்னர் தான் தன் தவறை உணர்ந்த சகுந்தலா, "சாரி துஷ்யந்த். பரத் கேம் விளையாடிட்டு என் மொபைல சைலன்ட்ல போட்டு இருப்பான்னு நினைக்கிறேன். நான் கவனிக்கல. கேக் வெட்டி பர்த் டே செலிப்ரேட் பண்ணதுக்கு அப்புறம் பரத்துக்கு ஜாலி ஆகி ஓடி பிடிச்சு விளையாட ஆரம்பிச்சுட்டான். நானும்..." என இழுத்தவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

"ப்ச்..." என நெற்றியை அழுத்தப் பிடித்த துஷ்யந்த், "இன்னைக்கு மார்னிங் தான் அவனுக்கு சர்ஜரி நடந்தது. மைனர் சர்ஜரியா இருந்தாலும் ஜஸ்ட் ஒரு நாளாவது ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கணும். காலைல இருந்தே அழுத களைப்பு வேற. இதுல இந்த மிட் நைட் ஓடிப் பிடிச்சு விளையாடினா அப்புறம்..." என்றவன் சட்டென தன் பேச்சை நிறுத்தினான்.

சகுந்தலா துஷ்யந்த்தைக் குழப்பமாக நோக்க, "லீவ் இட்... முடிஞ்சத பத்தி இனி பேசி பிரயோஜனம் இல்ல. இனிமேலாவது கேர்ஃபுல்லா இரு. நான் வரேன்." என்ற துஷ்யந்த் வெளியே செல்ல சில அடிகள் நடந்து விட்டு ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி வந்து சகுந்தலாவைக் கடந்து வீட்டினுள் சென்றான்.

சகுந்தலாவும் தயக்கத்துடனே அவனைப் பின் தொடர, விளையாடிக் கொண்டிருந்த பரத்திடம் சென்ற துஷ்யந்த், "சேம்ப்... அங்கிள் ஒன்னு சொன்னா கேப்பீங்களா?" எனக் கேட்டான்.

"அஃப்கோர்ஸ் அங்கிள். மம்மிக்கு அப்புறம் எனக்கு ரொம்ப ரொம்.......ப பிடிச்ச பர்சன் நீங்க தான். எனக்கு உங்கள இவ்......வளவு பிடிக்கும்." என மறு நொடியே எதையும் யோசிக்காது தன் கரங்களை இயன்றவரை அகல விரித்து பரத் கூறவும் துஷ்யந்த்தின் கண்களில் லேசான நீர்ப் படலம்.

பரத்தை தூக்கி அவன் கன்னங்களில் அழுத்தமாக முத்தமிட்ட துஷ்யந்த், "அங்கிளுக்கும் சேம்ப்ப ரொம்....ப பிடிக்கும். இவ்......வளவு பிடிக்கும்." என பரத் போலவே செய்து காட்டவும் குலுங்கிச் சிரித்தான் சிறுவன்.

அதனைக் கண்டு சகுந்தலாவின் முகத்திலும் புன்னகை.

"சரி அப்போ சேம்ப் இப்போ ரொம்ப நேரம் விளையாடுனீங்க தானே. மிட் நைட் வேற ஆகிடுச்சு. சூப்பர் ஹீரோஸ் போல ஸ்ட்ரோங்கா இருக்கணும்னா ஹெல்த்தியா இருக்கணும்ல. அதுக்கு கரெக்ட் டைமுக்கு தூங்கணும்ல. இல்லன்னா சேம்ப்போட கண்ண சுத்தி டார்க் சர்க்கிள் வந்து டிமோன் போல இருப்பீங்க." என்கவும், "பரத் ஆல்ரெடி தூஙகிட்டான் அங்கிள்." எனக் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு துஷ்யந்த்த் தோளில் முகம் புதைக்கவும் துஷ்யந்த்தின் முகத்தில் புன்னகை அரும்பியது.

பரத்தை தூக்கிச் சென்று சகுந்தலாவிடம் கொடுத்த துஷ்யந்த், "குட் பாய். பரத் இப்போ மம்மி கூட தூங்குவீங்களாம். அங்கிள் இப்போ வீட்டுக்கு போவேனாம். நாளைக்கு அங்கிளும் பரத்தும் சேம்ப்போட பர்த் டேய க்ரேன்ட்டா செலிப்ரேட் பண்டுவோமாம்." என்கவும், "ஹே ஜாலி..." என சகுந்தலாவின் கையில் இருந்தவாறே துள்ளிக் குதித்தான் பரத்.

பின் சகுந்தலாவிடம் கூறிக் கொண்டு துஷ்யந்த் வெளியேற, அவனை வழி அனுப்ப வாசல் வரை வந்த சகுந்தலா, "சாரி துஷ்யந்த். என்னால உங்களுக்கு ரொம்ப டிஸ்டர்ப்." என மன்னிப்பு வேண்டவும் லேசாகப் புன்னகைத்த துஷ்யந்த், "டேக் கேர். பாய்..." என்று விட்டு கிளம்பினான்.

துஷ்யந்த்தின் கார் மறையும் வரை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா.

வீட்டுக்கு வந்த துஷ்யந்த்தை வரவேற்றது சந்திரசேகரனின் சந்தேகப் பார்வை தான்.

ஹால் சோஃபாவிலேயே காத்திருந்தவர் துஷ்யந்த்தைக் கண்டதும், "இந்த நேரத்துல அவ்வளவு அவசரமா எங்க துஷ்யந்த் போய்ட்டு வர?" எனக் கேட்டார் அழுத்தமாக.

துஷ்ய்ந்த் பதிலளிக்க வாயைத் திறக்கும் முன்னே, "ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி விசாரிச்சேன். எந்த இமர்ஜென்சி கேஸும் வரலன்னு சொன்னாங்க. என்ட் நீ அங்க போகவே இல்லன்னாங்க." என்றார் சந்திரசேகரன்.

பதிலுக்கு தந்தையை அழுத்தமாக நோக்கிய துஷ்யந்த், "முதல் விஷயம்... நான் போனது ஒரு இமர்ஜென்சி கேஸ் தான். பட் ஹாஸ்பிடலுக்கு இல்ல. சகுந்தலா வீட்டுக்கு. பரத்தோட ஹார்ட் பீட் சடன்னா ரெய்ஸ் ஆகவும் எனக்கு அலாரம் அடிச்சது. அதான் போனேன். அவன் நல்லா இருக்கான்னு தெரிஞ்சதும் நான் திரும்பி வந்துட்டேன். அடுத்த விஷயம்... நான் அம்மாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன். அதை நினைச்சு நீங்க ஒன்னும் பயப்பட வேண்டியது இல்ல. சகுந்தலா இஸ் ஜஸ்ட் மை ஃப்ரெண்ட். புரிஞ்சதா?" எனக் கேட்டான்.

தன்‌‌ தவறை உணர்ந்த சந்திரசேகரன், "எல்லாம் சரி துஷ்யந்த். உன் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்குது. அந்தப் பொண்ணு‌ தனியா இருக்கா. நீ இப்படி நடு ராத்திரியில போய் நின்னா ஒரு‌ டாக்டராவே இருந்தாலும் அந்தப் பொண்ணோட பெயர் தான் கெட்டுப் போகும். புரியும்னு நினைக்கிறேன். சரி...‌ ரொம்ப லேட் ஆகிடுச்சு.‌ போய் தூங்கு. குட் நைட்." என்றவர் அத்துடன் பேச்சு முடிந்ததாக அங்கிருந்து அகன்றார்.

_______________________________________________

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, எந்தப் இமர்ஜென்சி கேஸும் வராததால் துஷ்யந்த் விடுமுறை எடுத்திருந்தான்.

காலையிலேயே துஷ்யந்த்தை தன் வீட்டு வாசலில் கண்டதும் பரத்திற்கு சந்தோஷம் தாளவில்லை.

பரத்தை வாக்களித்தவாறே வெளியே அழைத்துச் செல்ல வந்திருந்தான் துஷ்யந்த்.

பரத் முதல் ஆளாக காரில் ஏறிக்கொள்ள, சகுந்தலாவோ துஷ்யந்த் எவ்வளவோ அழைத்தும் தனக்கு வேலை இருப்பதாக கூறி வர மறுத்து விட்டாள்.

வேறு வழியின்றி துஷய்ந்த் பரத்தை மட்டும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

முதலில் ஒரு ஷாப்பிங் மாலிற்கு சென்று பரத்துக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோஸ் உடையை வாங்கி அணிவித்தவன் இன்னும் இதர பொருட்களை பரத்துக்காக வாங்கினான்.

அன்று முழுவதையும் பரத்துடன் அவனுக்கு பிடித்தவாறு செலவிட்டு, அவனின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட துஷ்யந்த் எண்ணியிருக்க, இங்கோ துஷ்யந்த் பரத்துடன் கிளம்பி அரை மணி நேரம் கழித்து சகுந்தலாவின் வீட்டு வாசலில் தன் காரை நிறுத்தினான் ரிஷிகேஷ்.

 

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 7

IMG_20240608_112409.jpg

துஷ்யந்த்தும் பரத்தும் சென்று சரியாக அரை மணி நேரத்தில் வாசல் கதவு தட்டப்படும் சத்தத்தில், 'சென்றவர்கள் இவ்வளவு விரைவாக வந்து விட்டார்களா?' என்ற குழப்பத்துடன் சென்று கதவைத் திறந்த சகுந்தலா வெளியே சுவரில் சாய்ந்து ஸ்டைலாக நின்றிருந்த ரிஷிகேஷை அங்கு சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.

சகுந்தலாவின் முகம் அப்பட்டமான அதிர்ச்சியைக் காட்ட, "ஹாய் மை டியர் வைஃபீ..." என்றான் ரிஷிகேஷ் நக்கலாக.

அவனின் குரலில் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த சகுந்தலா, "நீ... நீ... நீ இங்க என்ன பண்ணுற?" எனப் பதட்டமாகக் கேட்டவள் அவசரமாக உள்ளே திரும்பி கதவை சாத்த முயல, அவளைத் தள்ளிக் கொண்டு வலுக்கட்டாயமாக வீட்டினுள் நுழைந்தான் ரிஷிகேஷ்.

சகுந்தலா அவனை அதிர்ந்து நோக்க, சோஃபாவில் வாகாக அமர்ந்த ரிஷிகேஷ் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாறு, "என் பையன் எங்க?" எனக் கேட்டான் அதிகாரமாக.

பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிய சகுந்தலா, "யா...யா...யார் பையன்?" எனக் கேட்டாள் தன் பயத்தை மறைத்துக் கொண்டு.

சகுந்தலா அவ்வாறு கேட்கவும் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் அவ் இடமே அதிர சத்தமாகச் சிரித்தான் ரிஷிகேஷ்.

இரு மடங்கு வேகத்தில் துடித்த இதயத்துடன் அவனை சகுந்தலா அச்சத்துடன் நோக்க, தன் சிரிப்பை நிறுத்தி விட்டு இருக்கையை விட்டு எழுந்த ரிஷிகேஷ் முகத்தில் விஷமப் புன்னகையுடன் அடி மேல் அடி எடுத்து வைத்து சகுந்தலாவை நெருங்கினான்.

ரிஷிகேஷ் ஒவ்வொரு அடியாக சகுந்தலாவை நோக்கி எடுத்து வைக்கவும் சகுந்தலாவின் கால்கள் தன்னால் பின்னோக்கி நகர்ந்தன.

ஒரு கட்டத்துக்கு மேல் சகுந்தலாவால் அதற்கு மேல் நகர முடியாதவாறு சுவர் தடையாக இருக்க, வெற்றிக் களிப்புடன் அவளை நெருங்கினான் ரிஷிகேஷ்.

பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட நின்ற சகுந்தலாவிற்கு ரிஷிகேஷால் அவள் அனுபவித்த பாலியல் வன்முறைகள் ஒவ்வொன்றாக நினைவு வர, கண்கள் கண்ணீரால் குளம் கட்டின.

சகுந்தலாவை நன்றாக நெருங்கி நின்ற ரிஷிகேஷ் அவளின் இரு பக்கமும் சுவற்றில் கரங்களை ஊன்றி அவளை சிறை செய்ய, "இ...இங்க இருந்து போயிடு." என்றாள் சகுந்தலா முயன்று வரவழைத்த குரலில்.

அதனைக் காதில் வாங்காத ரிஷிகேஷோ, "என்ன? பயம் விட்டுப் போச்சா?" எனக் கேட்டான் சகுந்தலாவின் காதருகே குனிந்து.

ரிஷிகேஷின் நெருக்கத்தினால் சகுந்தலா உடல் முழுவதும் புழுக்கள் ஊர்வது போல் அவ்வளவு அருவருப்பாக உணர்ந்தாள்.

போதாக்குறைக்கு அவனிடமிருந்து வந்த மது வாடை அவளுக்கு ஏதேதோ கசப்பான நினைவுகளை வரவழைத்து பயத்தில் குளிர் பரப்பியது.

ஆழ்ந்த மூச்சை இழுத்து தன்னை சமன் செய்து கொண்ட சகுந்தலா தன் மொத்த பலத்தையும் திரட்டி பட்டென ரிஷிகேஷைத் தள்ளி விட்டாள்.

இதனை எதிர்ப்பாராத ரிஷிகேஷ் ஒரு நொடி தடுமாறி அவசரமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

ரிஷிகேஷ் சகுந்தலாவை வெறியுடன் நோக்க, "மரியாதையா இங்க இருந்து போயிடு. இல்லன்னா இப்பவே போலீஸை கூப்பிடுவேன்." என விரல் நீட்டி எச்சரித்தாள் சகுந்தலா.

சகுந்தலாவின் திடீர் தைரியம் ரிஷிகேஷிற்கே ஆச்சர்யமாக இருந்தது.

சகுந்தலாவின் பயத்தை அறிந்திருந்தால் அதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இருப்பானோ என்னவோ?

ஆனால் தான் வந்த வேலையே ரிஷிகேஷிற்கு முக்கியமாகப்பட, "என் பையன் எங்கன்னு சொல்லு." எனக் கேட்டான் முகம் இறுக.

"யாருக்கு யார் பையன்? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிடு. இல்ல போலீஸ கூப்பிடுவேன்." என விரல் நீட்டி எச்சரித்தாள் சகுந்தலா.

அவளை உதடு சுழித்து மேலிருந்து கீழாக இளக்காரமாக நோக்கிய ரிஷிகேஷ், "போலீஸ்னு சொன்னா பயந்துடுவேனா? லண்டன் போலீஸ் கிட்ட இருந்தே தப்பிச்சு வந்துட்டேன். நம்ம நாட்டு போலீஸ் எல்லாம் எம் மாத்திரம்? பணத்த தூக்கிப் போட்டா நாய் மாதிரி என் ஷூவ நக்குவானுங்க." என்றான் நக்கலாக.

ரிஷிகேஷை முறைத்த சகுந்தலா மேசை மீதிருந்த தன் கைப்பேசியை எடுத்து அவசரமாக யாருக்கோ அழைப்பு விடுக்க, நொடியில் சுதாகரித்த ரிஷிகேஷ் சகுந்தலாவின் கரத்தில் இருந்த கைப்பேசியை வேகமாகத் தட்டி விடவும் அது அங்கேயே உயிரை விட்டிருந்தது.

சகுந்தலா அவனை அதிர்ச்சியாக நோக்க, விஷமச் சிரிப்புடன் அவளை நெருங்கிய ரிஷிகேஷ் சகுந்தலா எதிர்ப்பாராத நேரம் அவளின் தலை முடியைக் கொத்தாகப் பற்றி கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

இதழ்கள் கிழிந்து இரத்தம் கசிய, அவனின் பிடியில் இருந்து விடுபடப் போராடினாள் சகுந்தலா.

"உனக்கு அவ்வளவு ஆகிப் போச்சா? என் மேல இருந்த பயம் விட்டுப் போச்சுல்ல. என்ன டி? எல்லாம் மறந்துடுச்சா? டிவோர்ஸ் வாங்கிட்டா என் கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நினைச்சியா? நான் பட்ட அவமானத்துக்கு எல்லாம் பழி தீர்க்க வேணாமா?" என வன்மமாகக் கேட்ட ரிஷிகேஷ் தன் பிடியை மேலும் இறுக்கியவாறு சகுந்தலாவை நன்றாக உரசியவாறு நின்று அவளின் கூந்தலில் முகம் புதைத்தான்.

ரிஷிகேஷின் நெருக்கம் சகுந்தலாவிற்கு தீயினால் சுடுவது போல் இருக்க, தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட முயன்றாள்.

ஆனால் ரிஷிகேஷிற்கு அவளை விட மனமில்லாமல், "சும்மா சொல்லக் கூடாது டி... அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எப்படி கிக்கு ஏத்துனியோ இப்போவும் அதே போலவே இருக்க..." என்றவன் இன்னும் வாய் கூசாமல் ஏதேதோ கூறவும் சகுந்தலா தான் கண்ணீருடன் காதை மூடிக் கொண்டாள்.

"ப்ளீஸ் ரிஷி... விட்டுரு என்னை..." என சகுந்தலா அதற்கு மேல் போராட சக்தியின்றி கையெடுத்து மன்றாடிக் கெஞ்ச, அவளின் நல்ல நேரம் ரிஷிகேஷின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

ஒரு கரத்தால் சகுந்தலாவின் முடியைப் பற்றியவாறே மறு கரத்தால் கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறு முனையில் என்ன கூறப்பட்டதோ, "ம்ம்ம்... நான் வரேன்." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

சகுந்தலா கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட, அவளின் தாடையை அழுத்தமாகப் பற்றிய ரிஷிகேஷ், "இப்போ உன்ன விடுறேன். ஆனா இனி அடிக்கடி வருவேன். திரும்பவும் மாமாவ சந்தோஷப்படுத்த தயார் ஆகு. பாய் பேபி." என்றவன் சகுந்தலாவைக் கீழே தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

கீழே விழுந்த சகுந்தலாவோ ரிஷிகேஷின் நெருக்கத்தால் கூசிய உடலை வெறுத்தவாறு பயத்தில் தன்னையே கட்டிக் கொண்டு தன் கையாலாகாத நிலையை எண்ணிக் குமுறி அழுதாள்.

ரிஷிகேஷ் சகுந்தலாவின் வீட்டை விட்டு வெளியேறி தன் காரில் ஏறிக் கிளம்பும் சமயம் அவ் இடத்தை அடைந்த துஷ்யந்த் அங்கிருந்து கிளம்பிய ரிஷிகேஷின் காரைக் குழப்பத்துடன் நோக்கினான்.

அவனுக்குப் பக்கத்து இருக்கையில் பரத் உறங்கிப் போய் இருக்க, காரை விட்டு இறங்கியவன் மறு பக்கம் சுற்றி வந்து பரத்தின் உறக்கம் கலையாதவாறு அவனைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.

கதவு திறந்தே இருக்க, சகுந்தலாவின் வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் வீடு இருந்த கோலத்தைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

வீடே அலங்கோலப்பட்டுக் கிடக்க, அவசரமாக பார்வையை சுழற்றி சகுந்தலாவைத் தேடினான் துஷ்யந்த்.

அவளோ ஒரு மூலையில் சுவரோடு ஒட்டியவாறு‌ கால்களைக் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்துப் படுத்திருப்பதைக் கண்டு துஷ்யந்தின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

ஏதோ தவறாகப்பட, விரைவாக செயற்பட்ட துஷ்யந்த் பரத்தின் உறக்கம் கலையாதவாறு அவனை அறையில் படுக்க வைத்து விட்டு வேகமாக சகுந்தலாவிடம் வந்தான்.

"சகுந்தலா..." என துஷ்யந்த் அழைத்த மறு நொடியே தலையை நிமிர்த்தி துஷ்ய்ந்தை நோக்கிய சகுந்தலாவோ கண்கள் கண்ணீரால் குளம் கட்ட, அவனை வேதனையுடன் நோக்கினாள்.

இதழ்களில் இரத்தம் கசிய, தலைவிரி கோலமாக இருந்தவளைக் கண்டு பதட்டமடைந்த துஷ்யந்த், "என்னாச்சு சகுந்தலா? ஏன் இப்படி இருக்க? யார் அது வந்துட்டு போனது?" என சகுந்தலாவின் தோளைப் பற்றி உலுக்கினான்.

துஷ்யந்த்தின் கேள்வியில் ரிஷிகேஷ் அவளிடம் நடந்து கொண்ட முறை மீண்டும் ஞாபகம் வரப் பெற்ற சகுந்தலாவோ சட்டென தன்னை இரு கரங்களாலும் மறைத்துக் கொண்டு முகம் வெளிறிப் போய் சுவரோடு ஒட்டிக் கொள்ளவும் அதிர்ந்தான் துஷ்யந்த்.

ஒரு மருத்துவனாக அவளின் நிலையைக் கணித்த துஷ்யந்த், "ச...சகுந்தலா... ஐம் துஷ்யந்த்..." என சகுந்தாவிற்கு தன் இருப்பை உணர்த்த முயன்றான்.

சகுந்தலாவோ வாயில் கதவையும் துஷ்யந்தையும் மாறி மாறி பயத்துடன் ஏறிட, "யாரும் இல்ல சகுந்தலா. நான் மட்டும் தான் இருக்கேன். டோன்ட் வொரி. என்னாச்சு‌ம்மா?" என துஷ்யந்த் கேட்ட மறு நொடியே பாய்ந்து அவன் மார்பில் முகத்தைப் புதைத்த சகுந்தலா கதறி அழுதாள்.

ஒரு நொடி அதிர்ந்த துஷ்யந்த் அவசரமாக பரத் உறங்கிக் கொண்டிருந்த அறையை நோட்டமிட, அதுவோ மூடப்பட்டு இருக்கவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன்‌ குனிந்து தன்னை அணைத்து இருந்தவளை நோக்கினான்.

அவளோ தோள் சாயவும் தோள் கொடுக்கவும் ஒரு தோழன் கிடைக்கவும் அடக்கி வைத்திருந்த கண்ணீரையும் வாய் விட்டு அழுது வெளியேற்றினாள்.

சகுந்தலாவின் தலையைப் பரிவாக வருடி விட்ட துஷ்யந்த், "என்னாச்சும்மா?" எனக் கேட்டான் மென்மையான குரலில்.

"அ...அ... அவன் வ...வந்துட்டான்... வந்துட்டான். எனக்...குப் பயமா இ...ருக்கு." என சகுந்தலா திக்கித் திணறிக் கூறவும் புரியாமல் முழித்த துஷ்யந்த், "யாரு சகுந்தலா? யார் வந்தான்?" எனக் கேட்டான்.

"அந்த ரிஷிகேஷ்..." என்ற சகுந்தலா கஷ்டப்பட்டு நடந்ததைக் கூற, துஷ்யந்தின் கழுத்து நரம்புகள் புடைத்தன கோபத்தில்.

சகுந்தலாவிற்காக வேண்டி பல்லைக் கடித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

திடீரென ஏதோ நினைவு வந்தவளாக துஷ்யந்திடமிருந்து விலகிய சகுந்தலா, "இ...இல்ல... இல்ல... விட மாட்டேன். நான் விட மாட்டேன். என் பையன என் கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது." என வெறி வந்தது போல் உளறியவள் அவசரமாக தன் அறைக்குள் நுழைந்து உடைகளைப் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

அவளைத் தொடர்ந்து சென்ற துஷ்யந்த், "என்ன பண்ணிட்டு இருக்க சகுந்தலா?" எனக் கேட்டான் கோபமாக.

"அந்த ரிஷிகேஷ் ரொம்ப மோசமானவன். என்ன வேணாலும் பண்ணத் தயங்க மாட்டான். அவன் என் பையன என் கிட்ட இருந்து பிரிச்சிடுவான். நான் விட மாட்டேன். விட மாட்டேன். நானும் என் பையனும் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறோம்." என துஷ்யந்தின் முகத்தைக் கூடப் பார்க்காது தன் வேலையைத் தொடர்ந்தாள் சகுந்தலா.

"எவ்வளவு தூரம் உன்னால ஓடி ஒளிய முடியும்? ஹைதராபாத் வரை உன்னைத் தேடிக் கண்டு பிடிச்சு வந்தவனுக்கு நீ இன்னொரு இடத்துக்கு போனா கண்டு பிடிக்கிறது அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன?" என துஷ்யந்த் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிக் கொண்டு அழுத்தமாகக் கேட்கவும் அவன் பக்கம் திரும்பிய சகுந்தலா, "நான் அப்போ என்ன தான் பண்ணுறது?" எனக் கத்திக் கேட்டாள் ஆதங்கமாக.

நீண்ட பெருமூச்சை வெளி விட்ட துஷ்யந்த் சகுந்தலாவை நெருங்கி, "முதல்ல இங்க வந்து உட்கார்." என்றவாறு சகுந்தலாவின் தோள்களைப் பற்றி அவளைக் கட்டிலில் அமர வைத்தான்.

சகுந்தலா மௌனமாக துஷ்யந்தை நோக்க, முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த துஷ்யந்த் பஞ்சை எடுத்து சகுந்தலாவின் இதழ்களில் இருந்து கசிந்த இரத்தத்தை துடைக்க கரத்தை நீட்ட, அவன் கரத்தைப் பிடித்த சகுந்தலா, "நான் பண்ணிக்குறேன்." என்றாள் தயக்கமாக.

ஓரளவு நிதானத்திற்கு வந்த பின் தான் சகுந்தலாவிற்கு தான் துஷ்யந்திடம் அளவுக்கதிகமான உரிமையை எடுத்து விட்டோம் என்று புரிய, அவளுக்கு தன் மீதே எரிச்சலாக வந்தது.

சகுந்தலா அவ்வாறு கூறவும் துஷ்யந்த் அவளை அழுத்தமாக நோக்க, சட்டென கரத்தை விலக்கிக் கொண்டாள் சகுந்தலா.

"ஐம் அ டாக்டர்..." எனக் கோபமாகக் கூறிய துஷ்யந்த் சகுந்தலாவின் காயங்களுக்கு முதலுதவி அளித்து விட்டே நின்றான்.

"ஏன் அவசரமா ரெண்டு பேரும் போய்ட்டு கொஞ்சம் நேரத்துலயே திரும்பி வந்தீங்க?" எனக் கேட்ட சகுந்தலாவிடம், "நானும் பரத்தும் அவன் சில்ட்ரன் பார்க்க போக ஆசைப்படவும் அங்க போனோம் முதல்ல. கொஞ்சம் நேரம் விளையாடும் போதே அவன் டயர்ட் ஆகிட்டான். அது அவன் ஹெல்த்துக்கு நல்லதில்லன்னு வேற எங்கயாவது போகலாம்னு நினைச்ச நேரம் தான் உன் கிட்டால கால் வந்தது. நீ கால் பண்ணிட்டு நான் ஆன்சர் பண்ண முன்னாடியே கட் பண்ணிட்ட. அப்புறம் நான் நிறைய தடவை உனக்கு ட்ரை பண்ணியும் கால் ரீச் ஆகல. மனசுக்கு ஏதோ தப்பா பட்டது. அதான் எதுவும் யோசிக்காம திரும்ப வந்துட்டேன். பரத்தும் வர வழில தூங்கிட்டான். நான் வந்ததும் நல்லதாப் போச்சு." என்றான் துஷ்யந்த் பெருமூச்சுடன்.

"ம்ம்ம்..." என்று மட்டும் கூறிய சகுந்தலா எங்கோ வெறித்த வண்ணமே அமர்ந்திருக்க, அவள் அருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்த துஷ்யந்த், "உன் லைஃப்ல அப்படி என்ன தான் ஆச்சு சகுந்தலா?" எனக் கேட்டான் அமைதியாக.​

 

Nuha Maryam

Moderator
வலி - அத்தியாயம் 8

IMG_20240610_095321.jpg

Very sorry மக்களே... இந்த ரெண்டு வாரமா ஈத் பெருநாள் அது இதுன்னு பர்சனல் வர்க்ஸ்ல கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். கூடவே ரைட்டர் ப்ளாக்கும். 😖😖😖 இனிமே யூடி ஒழுங்கா வரும்.
_______________________________________________

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் சகுந்தலாவை சந்திக்க அவளின் தோழி ஒருத்தி வந்தாள்.

"ஹே கமலி... வா வா... உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. இப்போ தான் இந்தப் பக்கம் எல்லாம் உனக்கு வரணும்னு தோணுதா?" எனக் கேட்டவாறு சென்று தன் தோழியை அணைத்துக் கொண்டாள் சகுந்தலா.

"சாரி டி... ஹயர் ஸ்டடீஸுக்கு அவுட் ஆஃப் ஸ்டேஷன் போனேன். யார் கூடவும் கான்டெக்ட்ல இருக்கல. ஒரு வாரம் முன்னாடி தான் ஊருக்கு வந்தேன். உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். அதான் உன்ன அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்." என்றாள் சகுந்தலாவின் பள்ளிக் காலத் தோழியான கமலி.

திருமணம் என்றதும் ஒரு நொடி முகம் மாறிய சகுந்தலா உடனே தன்னை மீட்டுக் கொண்டு, "ஆ...ஆமா டி. சடன்னா டிசைட் பண்ணது. சரி நீ வா நாம மேல போகலாம்." என்ற சகுந்தலா, "அம்மா... கமலி வந்திருக்கா." எனக் குரல் கொடுத்து விட்டு கமலியுடன் மாடிக்குச் சென்றாள்.

தோழிகள் இருவரும் வெகுநேரம் பழைய கதைகள் பேசிக் கொண்டிருக்க, இடையில் சகுந்தலாவின் தாய் ரேகா இருவருக்கும் பழரசம் கொண்டு வந்து கொடுத்து விட்டு கமலியின் நலம் விசாரித்து விட்டு சென்றார்.

"ஹேய் உன் ஃபியான்சி ஃபோட்டோ காட்டு டி." எனக் கமலி கேட்கவும், "ஃபோ...ட்டோவா?" என முழித்தாள் சகுந்தலா.

அவள் தான் திருமணம் பேசியதில் இருந்தே இதுவரை ரிஷிகேஷுடன் ஒரு வார்த்தை பேசியதில்லை.

அவளின் நல்ல நேரமோ என்னவோ சகுந்தலாவிற்கு சங்கடம் தராமல் ரிஷிகேஷும் அவளுக்கு அழைக்கவே இல்லை.

அதுவே சகுந்தலாவிற்கு நிம்மதியாக இருந்தது.

"என்ன டி இப்படி முழிக்குற? ஃபோட்டோ கூட இல்லையா? இராத்திரி எல்லாம் நிச்சயம் கடலை போட்டுட்டு இருப்ப. ஃபோட்டோ கேட்டா இப்படி முழிக்குற." எனக் கமலி கேட்கவும் அதற்கும் சகுந்தலா திருட்டு முழி முழிக்க, "ஏய்... என்ன டி? அப்போ இதுவரை பேசினது கூட இல்லையா?" எனக் கேட்டாள் கமலி அதிர்ச்சியாக.

சகுந்தலா இல்லை எனத் தலையசைக்க, தலையில் அடித்துக் கொண்ட கமலி, "அவன் அவன் எப்படி எல்லாம் கடலை போடுறான். நீயும் தான் இருக்கியே. சரி விடு. சரி டி நான் அப்போ கிளம்புறேன். வந்து ரொம்ப நேரமாச்சு. மத்த ஃப்ரெண்ட்ஸையும் பார்க்கணும்." என்றவாறு எழுந்து கொண்டாள்.

"கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடு டி." என சகுந்தலா தோழியை அணைத்து விடுவிக்க, "ட்ரை பண்ணுறேன் டி. ஆனா ஷியுர் பண்ண முடியாது. சாரி டி. ஒன்னும் நினைக்காதே." என்றாள் கமலி.

ஆனால் அன்றே ரிஷிகேஷின் புகைப்படத்தை கமலி பார்த்து இருந்தால் சகுந்தலாவின் வாழ்வில் பெரும் புயல் அடிக்காமல் தடுத்து இருக்கலாமோ என்னவோ?

கமலி சென்றதும் தன் அறைக்குள் நுழைந்து கொண்ட சகுந்தலா கண்ணாடி முன் நின்று தன் விம்பத்தை வெறித்துப் பார்த்தாள்.

சகுந்தலாவையும் மீறி ஒரு ஏக்கப் பெருமூச்சு அவளிடம்.

கண்களை மூடிக் கொண்டவளின் மனக் கண்ணில் துஷ்யந்தின் முகம் வந்து போக, பட்டென அதிர்ச்சியில் இமைகளைப் பிரித்தாள் சகுந்தலா.

அதிர்ச்சியாக இமை பிரித்தவள் கண்ணாடியை நோக்க, அதிலும் துஷ்யந்தின் விம்பம்.

"நோ... நோ... இது தப்பு... தப்பு..." என்றவாறு கரங்கள் கொண்டு கண்களை அழுத்த மூடிக்கொண்டு மறுப்பாகத் தலையசைத்தாள் சகுந்தலா.

"தப்பு... தப்பு..." எனத் தனக்கே பல முறை கூறிக் கொண்டு நீண்ட பெருமூச்சுடன் இமைகளைப் பிரித்தவளுக்கு கண்ணாடியில் தன் விம்பம் தெரியவும் தான் நிம்மதியாக இருந்தது.

அடுத்து வந்த ஒரு மாதமும் அவசர அவசரமாக நடந்த திருமண ஏற்பாடுகளில் கண் மூடித் திறப்பதற்குள் கடந்து விட, சரியாக திருமணத்துக்கு முன் தினம் நிச்சயதார்த்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமணம் பேசி முடித்து பெண் பார்க்கும் சடங்கு அன்று பார்த்ததன் பின் இன்று தான் சகுந்தலா மீண்டும் மணமகனான ரிஷிகேஷைக் காண்கிறாள்.

ஆனால் சகுந்தலாவுக்கோ மணமகனைக் காணும் போது கல்யாணப் பெண்ணிற்கு வரும் எந்த உணர்வுகளுமே ரிஷிகேஷைக் காணும் போது எழவில்லை.

மாறாக ஏதோ ஒரு அந்நிய உணர்வில் சிக்கித் தவித்தாள்.

நிச்சயதார்த்த நிகழ்வின் போது ரிஷிகேஷ் சகுந்தலாவின் விரல் பிடித்து மோதிரம் அணிவிக்கும் போது அவளின் உடல் அவனின் தொடுகையில் கூசியது.

முயன்று தன் முக மாற்றத்தை மறைத்தாள்.

போதாக்குறைக்கு ரிஷிகேஷின் பார்வை வேறு உரிமையாக சகுந்தலாவின் உடலை மொய்க்க, அருவருப்பில் உடல் கூசி நின்றாள் சகுந்தலா.

ரிஷிகேஷின் பார்வையையே ஏற்க முடியாமல் தவித்த சகுந்தலாவிற்கு அவனுடன் தான் இனி வாழ்க்கை என எண்ணும் போதே மலைப்பாக இருந்தது.

இன்னுமே சகுந்தலா ரிஷிகேஷுடன் ஒரு வார்த்தை பேசி இருக்கவில்லை.

திருமணத்திற்கான உடை முதல் நகை வரை அனைத்துமே அவளது பெற்றோரின் தெரிவு.

ஏனோ அவளுக்கு எதிலும் நாட்டம் இருக்கவில்லை.

ரிஷிகேஷும் வேலை விடயமாக வெளிநாடு சென்றிருந்தவன் அன்று காலை தான் வந்து சேர்ந்திருந்தான்‌.

போதாக்குறைக்கு இன்னும் இரண்டு நாட்களில் அவளும் அவனுடன் வெளிநாடு செல்ல வேண்டும்.

வீசா, கடவுச்சீட்டு எல்லாம் அவசர அவசரமாகத் தயார் செய்திருந்தனர்.

பெற்றோர் ஆசைக்காக மனமேயின்றி செய்யப் போகும் திருமணம் ஒரு பக்கம் வலி என்றால் இனி பெற்றோர், உற்றார் அனைவரையும் பிரிந்து கண் காணா தேசத்தில் வாழ வேண்டும் என எண்ணும் போதே சகுந்தலாவின் நெஞ்செல்லாம் பாரம் ஏறியது.

மறுநாள் காலையில் திருமணம்.

மணமகள் அறையில் படுத்திருந்த சகுந்தலாவுக்கு உறக்கம் வருவேனா என அடம் பிடித்தது.

அருகே படுத்திருந்த தாயைத் திரும்பிப் பார்த்தவள் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும் சத்தம் வராது ஜன்னல் அருகே சென்று நின்று நிலவை வெறித்தாள்.

திருமணம் என எண்ணும் போதே துஷ்யந்தின் முகம் தான் அவளது மனக்கண்ணில் தோன்றியது.

கூடவே இரு துளி கண்ணீரும் கன்னம் வழியே இறங்கியது.

ஏதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவளின் கரமோ தன்னையும் அறியாமல் கைப்பேசியில் சேமித்து வைத்திருந்த துஷ்யந்தின் எண்ணை அழுத்தியது.

பள்ளிக் காலத்தில் அவனின் கைப்பேசி எண்ணை எடுப்பதற்கு என்னவெல்லாமோ திருகுதாளம் செய்திருந்தாள்.

ஆனால் இன்றோ அவை எதற்கும் பயனே இல்லாமல் போயிற்று.

"ஹலோ... துஷ்யந்த் ஹியர்..." என்ற ஆளுமையான குரல் சகுந்தலாவின் செவி வழியே பாயவும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் தன்னிலையை அடைந்த சகுந்தலா அப்போது தான் அவளின் கையில் இருந்த கைப்பேசித் திரையைக் கவனித்தாள்.

தன்னையும் அறியாமல் அவளின் கைகள் துஷ்யந்தின் எண்ணுக்கு அழைத்து இருக்க, ஒரு பக்கம் உச்சகட்ட அதிர்ச்சி, இன்னொரு பக்கம் மனமெங்கும் நிறைந்திருந்த துஷ்யந்தின் மீதான காதல் அவன் குரலைக் கேட்டதும் மீண்டும் கரைபுரண்டு ஓட முயற்சிக்க, மறுமுனையில் இருந்த துஷயந்தோ, "ஹலோ... ஹலோ... ஹூ இஸ் திஸ்?" எனக் கேட்கவும் சட்டென அழைப்பைத் துண்டித்து விட்டு கைப்பேசியை நெஞ்சோடு அணைத்து மௌனமாக கண்ணீர் சிந்தினாள் சகுந்தலா.

சகுந்தலாவின் சொல்லாக் காதல் உடையவனுக்கும் கூடத் தெரியாமல் அவளுள்ளேயே சமாதி ஆக்கப்பட்டது மறுநாள் ரிஷிகேஷின் கரத்தால் அவள் கழுத்தில் ஏறிய தாலி மூலம்.

அடுத்தடுத்த சடங்குகள் தொடர்ந்து நடைபெற, சகுந்தலாவோ சாவி கொடுத்த பொம்மை போல அனைத்திலும் கலந்துகொண்டாள்.

மண்டபத்தில் இருந்த சனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, மணமக்களும் வீடு செல்லத் தயார் ஆகினர்.

"சம்பந்தி... எங்க குடும்ப வழக்கப்படி பொண்ணு வீட்டுல தான் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணுவோம். எல்லாரும் நேரா கிளம்பி உங்க வீட்டுல மிச்ச சம்பிரதாயம் எல்லாம் முடிச்சிட்டு பொண்ணையும் மாப்பிள்ளையும் நாங்க அழைச்சிட்டு போயிடுறோம். நாளைக்கு நல்ல நேரம் பார்த்து உங்க வீட்டுல திரும்ப கொண்டு வந்து விடுறோம்." என சகுந்தலாவின் தந்தை சக்திவேல் கூறவும் ரிஷிகேஷின் தந்தை ஏதோ கூற வாய் திறக்க, அதற்குள் இடையிட்ட ரிஷிகேஷ், "நோ அங்கிள்... சாரி... எங்க கம்பனில எனக்கும் சகுந்தலாவுக்கும் மேரேஜ் சர்ப்ரைஸா ஊட்டில ஹனிமூன் சூட் புக் பண்ணி இருக்காங்க. சோ நாங்க ரெண்டு பேரும் நேரா அங்க தான் கிளம்பப் போறோம். டூ டேய்ஸ்ல ரிட்டர்ன் வந்திடுவோம்." எனத் தகவல் தெரிவித்தான்.

ரிஷிகேஷ் அனுமதி வாங்காமல் கடமைக்கு தகவல் தெரிவித்தது சகுந்தலாவின் பெற்றோருக்கு ஏதோ போல் இருக்க, ஆனால் பெண்ணைப் பெற்றவர்களாக அமைதியாக இருந்தனர்.

சகுந்தலாவோ இதனைக் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்காது அதிர்ச்சியில் உறைந்து இருந்தாள்.

ஒரு வாரத்துக்குப் பின்னர் கணவனாகப்பட்டவனுடன் எவ்வாறு தனியே இருக்கப் போகிறோம் என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு திருமணம் முடிந்த அன்றே தாம் இருவரும் மட்டும் தனியே செல்லப் போகும் பயணம் பற்றி அறிந்ததுமே வேப்பங்காயாய் கசிந்தது.

இருவரின் பெற்றோரிடம் தான் கூறவில்லை.

சம்பந்தப்பட்ட தன்னிடமாவது ஒரு வார்த்தை கூறி இருக்கலாமே என மிகுந்த ஏமாற்றம் அடைந்தாள்.

சகுந்தலா அதிர்ச்சியாகவும் கேள்வியாகவும் ரிஷிகேஷின் முகத்தை நோக்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

அடுத்த சில மணி நேரங்களில் மணமக்கள் இருவரும் ஊட்டியை அடைந்திருந்தனர்.

திருமணக் களைப்பில் சகுந்தலா காரிலேயே உறங்கி விட, ஹோட்டலை அடையும் வரை சகுந்தலாவை ரிஷிகேஷும் தொந்தரவு செய்யவில்லை.

திடீரென ப்ரேக் அடிக்கவும் சகுந்தலாவின் உறக்கம் கலைந்து விட, படபடப்பான மனதுடன் வெளியே பார்த்தாள்.

அவர்களின் கார் ஹோட்டலை அடைந்திருக்க, ரிஷிகேஷ் எதுவும் கூறாமல் வண்டியை விட்டு இறங்க, அவனைத் தொடர்ந்து சகுந்தலாவும் இறங்கிக் கொண்டாள்.

வெகுநேரம் பயணம் செய்ததால் உடல் அடித்துப் போட்டது போல் வலிக்க, களைப்பு தீர ஒரு நீண்ட, அமைதியான உறக்கத்தை ஆவலாக எதிர்ப்பார்த்தாள் சகுந்தலா.

அப்போது தான் அவளுக்கு ஊட்டி வந்த நோக்கமே சட்டென நினைவு வர, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இதயம் படபடவென அடித்துக்கொள்ள, முகமெல்லாம் வியர்த்து வழிந்தது.

ஏனோ ரிஷிகேஷுடன் தனிமையில் இருக்கப் போகிறோம் என நினைக்கும் போதே அவளது உடல் முழுவதும் ஏதோ ஒவ்வாமை போல் கூசியது.

ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டிடம் தம் அறைச் சாவியை வாங்கிக் கொண்ட ரிஷிகேஷ் சகுந்தலாவிடம் கண் காட்டி விட்டு முன்னே நடக்க, அவனின் வேகத்திற்கு ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொடர்ந்தாள் சகுந்தலா.

அறையை அடைந்ததும் சகுந்தலாவிடம் சாவியைக் கொடுத்த ரிஷிகேஷ், "சகுந்தலா... நீ ரூம்ல இரு. எனக்கு சின்ன வேலை ஒன்னு முடிக்க வேண்டி இருக்கு. நான் சீக்கிரம் வரேன்." என்றவன் அவளின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது சகுந்தலாவின் கரத்தில் சாவியைத் திணித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

கணவனாகப்பட்டவன் இவ்வளவு நாட்களுக்கும் முதல் தடவை அவளது முகம் பார்த்து அப்போது தான் பேசி இருக்க, அதனை ரசிக்க வேண்டிய பெண் மனமோ அவனின் அழுத்தமான, கட்டளை போன்ற அடக்குமுறையான பேச்சில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தாள்.

கட்டிய பரையை அடித்துத் தானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுடன் தான் இனிமேல் தன் வாழ்வு என ரிஷிகேஷின் கரத்தால் தாலியை வாங்கிய மறு நொடியே முடிவெடுத்து இருந்ததால் நீண்ட பெருமூச்சுடன் அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு அறையின் அலங்காரம் நெஞ்சில் பயப்பந்தை உருளச் செய்தது.

என்ன தான் இத் திருமணத்தை முழு மனதாக ஏற்றுக்கொண்டு இருந்தாலும் திருமணமான முதல் நாளே கடவனுடனாக உடலளவு நெருக்கத்தை சகுந்தலாவால் ஏற்க முடியவில்லை.

ரிஷிகேஷ் வந்தவுடன் அவனுடன் மனம் விட்டுப் பேசி தனக்கு இவ் வாழ்வை ஏற்க சற்று அவகாசம் கேட்க வேண்டும் என முடிவெடுத்த பின்னர் தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

அதன் பின் தான் அறையில் செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களை அவளது ரசிக மனதால் ரசிக்க முடிந்தது.

அது பிரத்தியேகமான ஹனிமூன் சூட் என்பதால் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற விதத்தில் முழு அலங்காரங்களுடனும் அனைத்து வசதிகளுடனும் பளிச்சென இருந்தது அவ் அறை‌.

பல அடுக்குமாடிகளைக் கொண்ட அவ் ஹோட்டலில் பால்கனி வேறு இருக்க, இயற்கை காற்றை நுரையீரலினுள் உட்சுவாசித்தவாறு வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்த வெளி அழகை ரசித்தாள் சகுந்தாள்.

சற்று நேரம் கழித்து அறைக் கதவு திறக்கப்பட, ரிஷிகேஷ் வந்து விட்டதை உணர்ந்த சகுந்தலா அவனிடம் பேசி ஆக வேண்டும் என்பதால் அவனை நோக்கி நடக்க, உள்ளே வந்த ரிஷிகேஷும் சகுந்தலாவின் முகத்திலிருந்து பார்வையை அகற்றாமல் அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தான்.

"அது வந்துங்க எனக்கு..." என்ற வார்த்தைகள் மட்டும் தான் சகுந்தலாவின் வாயிலிருந்து வெளி வந்தது.

மறு நொடியே சகுந்தலாவின் முகத்தைப் பற்றி அவளின் வார்த்தைகளைத் தனக்குள் விழுங்கிக் கொண்டான் ரிஷிகேஷ்.

இதனை எதிர்ப்பார்க்காத சகுந்தலா ரிஷிகேஷின் மார்பில் கை வைத்து அவனை விலக்கப் போராடினாள்.

போதாக்குறைக்கு அவனிடம் இருந்து வந்த மது வாடை வேறு அவளை குமட்டச் செய்தது.

சகுந்தலாவின் முயற்சிகள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் போலானது.

ஆடவன் பலத்திற்கு முன்னால் பெண்ணவளின் போராட்டம் எல்லாம் பலமிழந்து போயின.

சகுந்தலாவின் போராட்டம் புரிந்த ரிஷிகேஷ் அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை உணர்ந்த சகுந்தலா எப்பாடுபட்டாவது ரிஷிகேஷிடமிருந்து தப்பிக்க, தன் இரு கரங்களாலும் அவனின் மார்பில் ஓங்கிக் குத்தத் தொடங்கினாள்.

போதையின் பிடியில் இருந்தவனுக்கு சகுந்தலாவின் முயற்சிகள் எரிச்சலூட்டவும் அவளின் இதழ்களுக்கு ஒரு நொடி சட்டென விடுதலை கொடுக்க, மறு நொடியே சகுந்தலாவின் ஐந்து விரல்களும் அவனின் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

ரிஷிகேஷின் உண்மை முகத்தை அறியாத சகுந்தலாவோ பெரும் தவறு செய்து விட, போதை முற்றாக வடிந்து விட, கன்னத்தில் கை வைத்தவாறு அவளை பார்வையாலேயே சுட்டெரித்தான் ரிஷிகேஷ்.

ரிஷிகேஷ் முத்தமிட்டதில் அருவருப்பில் நெளிந்த சகுந்தலா தன் இதழ்களை அழுந்தத் துடைத்தவாறு, "ச்சீ... என்ன மாதிரியான மனுஷன் நீங்க? பொண்டாட்டியா இருந்தாலும் அவ அனுமதி இல்லாம அவ மேல கை வைக்கக் கூடாது. அதுவும் குடிச்சிட்டு வந்து இப்படி நடந்துக்குறீங்க. உங்களுக்கே இது அசிங்கமா இல்லையா?" எனக் கேட்டாள் ஆவேசமாக.

ரிஷிகேஷோ பதிலேதும் கூறாமல் தன் மோக வலைகள் அறுபட்ட கடுப்பில் இன்னுமே அவளை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருக்க, "என் முழு சம்மதத்தோட தான் இந்தக் கல்யாணம் நடந்தது. ஆனா எனக்கு இந்த வாழ்க்கைக்கு தயாராக கொஞ்சம் டைம் வேணும். உடலால நெருங்க முன்னாடி ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு மனசால ரெண்டு பேரும் நெருங்கணும்னு நினைக்கிறேன் நான்." என்றாள் சகுந்தலா.

அதனைக் கேட்டதும் அவ் அறையே அதிரச் சிரித்த ரிஷிகேஷ், "என்ன டி? பேசி முடிச்சிட்டியா? இப்போ நம்ம வேலையப் பார்க்கலாமா?" என ஒரு மாதிரி குரலில் கேட்கவும், "நான் இவ்வளவு சொல்லியும் திரும்ப அதுக்கே வரீங்க. ச்சே..." எனக் கோபமாகக் கூறியவாறு சகுந்தலா அங்கிருந்து நகர முயல, சட்டென அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ரிஷிகேஷ்.

அதில் கீழே விழுந்த சகுந்தலாவின் உதடு கிழிந்து இரத்தம் கசிய, ரிஷிகேஷை அதிர்ச்சியாக நோக்கினாள்.

சகுந்தாவின் அருகே குனிந்து அவளின் தலைமுடியை கொத்தாகப் பற்றிய ரிஷிகேஷ் வலியில் துடித்தவளைக் கண்டுகொள்ளாது, "என்ன டி நானும் பார்க்குறேன் ரொம்பத் தான் பேசுற? உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது பூஜையறைல வெச்சி சாம்பிராணி பிடிக்கன்னு நினைச்சியா? மனுஷனோட ஆத்திர அவசரம் புரியாம நொய் நொய்னு பேசிட்டு... ச்சே... நானும் கொஞ்சம் நாளைக்கு நல்லவனா நடிக்கலாம்னு தான் பார்த்தேன். ஆனா உன் கிட்ட அதெல்லாம் சரிப்பட்டு வராது போல. ரொம்பத் தான் துள்ளுற. ஆனா உன்ன போல அழகான பொண்ணுங்க இப்படி எல்லாம் சீன் போடலன்னா தான் அதிசயம். இதுவும் நல்லா தான் இருக்கு. ரொம்பத் திமிருற குதிரைய அடக்குறதுல தானே கிக்கே இருக்கு." என்றான் நக்கலாக.

"விடுடா..." எனக் கத்தியவாறு சகுந்தலா ரிஷிகேஷின் பிடியை விலக்கப் போராட, அவளின் முடியைப் பற்றியவாறு இழுத்துச் சென்று அங்கிருந்த கதிரை ஒன்றில் அவளை அமர்த்திய ரிஷிகேஷ் கட்டிலில் இருந்த போர்வையை இழுத்து சகுந்தலா நகர முடியாதவாறு கதிரையுடன் சேர்த்து அவளை இறுக்கக் கட்டி வைத்தான்.

"ஏய்... விடுடா... என்னப் பண்ணுற?" எனக் கோபமாகக் கேட்ட சகுந்தலா தன்னை விடுவிக்கப் போராட, "என்ன அவசரம் பேபி? கொஞ்சம் வெய்ட் பண்ணு. நீ அடிச்சதுல மொத்தப் போதையும் இறங்கிடுச்சு. சோ நான் போய் ரெண்டு பாட்டில கவுத்திட்டு வரேன். அப்போ தானே ஜாலியா இருக்கும்." என விஷமமாகப் புன்னகைத்தபடி கூறிய ரிஷிகேஷ் தன் சூட்கேஸில் இருந்து இரண்டு வெளிநாட்டு சரக்கு போத்தல்களை எடுத்து சகுந்தலாவைப் பார்த்துக் கொண்டே அவற்றை மொத்தமாகக் காலி செய்தான்.

ரிஷிகேஷிற்கு போதை தலைக்கேறி உச்சத்தைத் தொட, அடி மேல் அடி எடுத்து வைத்து சகுந்தலாவை நெருங்கினான்.

அவனின் பார்வையில் சகுந்தலாவின் நெஞ்சாங்கூட்டில் நீர் வற்றிப் போனது.

சகுந்தலாவை நெருங்கிய ரிஷிகேஷ் அவளின் கட்டுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்க, அவன் விரல்களோ கட்டுகளை அவிழ்க்கும் சாக்கில் அவள் உடலை நன்றாகவே தீண்டின.

தன் கட்டுக்கள் அவிழ்க்கப்படும் வரை பொறுமை காத்த சகுந்தலா மறு நொடியே ரிஷிகேஷை அறைய ஆவேசமாகக் கரம் நீட்ட, அதனை வாகாகத் தடுத்தவனோ அவளின் கரங்களை முதுகோடு சேர்த்து வளைத்து அசைய முடியாதவாறு தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

"வேண்டாம் ரிஷி... விடுங்க... இது ரொம்ப தப்பு..." எனக் கெஞ்சிய சகுந்தலா அவனின் பிடியில் இருந்து விலகப் போராட, போதையில் இருந்தவனின் பிடியோ உடும்புப் பிடியாக இருந்தது.

திமிறியவளின் இதழ்களை தன் இதழ்களைக் கொண்டு அடைத்தவன் ஒரு கரத்தால் சகுந்தலாவின் கரங்களை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு மறு கரத்தால் அவளின் மாராப்பை விலக்க, சகுந்தலாவோ ரிஷிகேஷைத் தடுக்க முடியாத தன் நிலையை எண்ணி மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.

சகுந்தலாவின் இதழ்களை இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்திய ரிஷிகேஷ் சில நிமிடங்கள் கழித்து தான் அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்தான்‌.

ரிஷிகேஷ் விட்டதும் நீண்ட பெருமூச்சுக்களை இழுத்து விட்டவள் இன்னுமே ரிஷிகேஷின் பிடியில் தான் இருந்தாள்.

"ப்ளீஸ் ரிஷி... என்னை விட்டுடுங்க." எனக் கெஞ்சிய சகுந்தலாவை ஏளனமாகப் பார்த்த ரிஷிகேஷோ, "உன்ன சும்மா விடவா கல்யாணம் பண்ணேன். இதுக்கே இப்படி துள்ளுற. இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு." எனக் குளறலாகக் கூறிய ரிஷிகேஷ் அவளை இழுத்துக் கொண்டு மேசை அருகே சென்றான்.

அவன் குடித்து விட்டு மிச்சம் வைத்திருந்த மதுக் கிண்ணத்தைக் கையில் எடுத்த ரிஷிகேஷ் அதனை ஒரு பார்வை பார்த்து விட்டு சகுந்தலாவை விஷமமாகப் பார்த்தான்.

ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்த சகுந்தலாம் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்துக் கொண்டு, "வேணாம் ரிஷி... விடுங்க..." என வாயைத் திறந்த மறு நொடியே அவளின் கரங்களை விடுவித்து விட்டு தாடையை இறுகப் பற்றி சகுந்தலாவின் வாய்க்குள் மதுவை சரித்தான்.

ரிஷிகேஷின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட முயன்ற சகுந்தலாவோ ரிஷிகேஷ் பருக்கிய மதுவைத் துப்பப் போராட, ஆனால் சகுந்தலாவின் தொண்ணையைத் தாண்டி மது கீழிறங்கும் வரை ரிஷிகேஷ் அவளை விடவே இல்லை.

முதல் முறை அதுவும் பழக்கமே இல்லாத மது உள்ளே சென்றதும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களால் துவண்டு போயிருந்த சகுந்தலாவிற்கோ தலை எல்லாம் கிறுகிறுத்தது.

இருந்த கொஞ்சம் பலத்தையும் மொத்தமாக இழந்து விட்டவள் ரிஷிகேஷின் கரங்களிலேயே துவண்டு சரிய, ஒரு விஷமப் புன்னகையுடன் அவளை கைகளில் ஏந்திச் சென்று மஞ்சத்தில் கிடத்தியவன் மறு நொடியே சகுந்தலாவின் மானம் போக்க உடுத்தி இருந்த சேலையை வெறி கொண்ட வேங்கையாய் கிழித்து வீசினான்‌.

கணவனாகப்பட்டவனின் ஈனச் செயலைத் தடுக்கக் கூடத் திராணியற்று அரை மயக்கத்தில் இருந்த சகுந்தலாவோ, "ப்....ளீஸ்... வேணாம்..‌. விட்டுரு..." எனக் கெஞ்சினாள் கண்களில் நீர் வழிய.

அதனைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத ரிஷிகேஷோ சகுந்தலாவின் இதழ்களை வன்மையாகக் கொய்து அவளின் பெண்மையை முரட்டுத்தனமாக கையாண்டு வென்றான்.

"வ...லிக்கிது... விட்டுரு... ப்...ளீஸ்..." என சகுந்தலா ஒவ்வொரு முறையும் கெஞ்சியது எல்லாம் ரிஷிகேஷின் முரட்டு இதழ்களுக்குள் தான் அடங்கிப் போயின.

மென்மையாகக் கையாள வேண்டிய பெண்மையை வன்மையாக, முரட்டுத்தனமாக, சகுந்தலாவின் மேனி எங்கும் தன் மோக வெறி அடங்கும் வரை அவள் கதறக் கதற தடம் பதித்து விட்டு விடிந்த பின் தான் பெண்ணவளுக்கு விடுதலை அளித்தான் ரிஷிகேஷ்.

விடிய விடிய ரிஷிகேஷ் ஆட்கொண்டதில் சகுந்தலா எப்போதோ முற்றாக சுய நினைவை இழந்திருக்க, அது கூடத் தெரியாது போதையில் இருந்தவன் தன் உடற் பசியைத் தீர்த்துக் கொண்டான்.


 
Status
Not open for further replies.
Top