வரம் 26
யதுநந்தனுடன் பேசிவிட்டுத் தன் அலுவலகத்துக்கு செல்லாமல் நேராக யதுநந்தனின் வீட்டுக்கே சென்றான் சிவானந்த். அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற சந்திரமதி, அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்குப் பிடித்த ஏலக்காய் டீ போட்டு எடுத்து வந்தாள். அதன் மணத்திலேயே ஈர்க்கப்பட்டவன், சிறுதுநேரம் எதுவும் பேசாது அந்த டீயை ரசித்து, ருசித்துக் குடித்தான்.
நேற்றைய பிறந்தநாள் ஆர்ப்பாட்டத்தால் சோர்வடைந்திருந்த இலக்கியா அன்று தன் சிறுவர் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டில் தன் அத்தையை ஒருவழி பண்ணி விட்டாள். தன்னால் முடியாமல் கீழே அழைத்துவந்த பானுமதி, "வாங்க சிவாண்ணா" என்று இன்முகத்துடன் சிவானந்தை வரவேற்று விட்டு சந்திரமதியிடம் "அம்மா இந்த இலக்கிய சமாளிக்க நான் ஒருத்தி போதாது. ரொம்ப வாலு." என்றாள். சந்திரமதி அவளுக்கு தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சி ஒன்றைப் போடவும் அமைதியாகி அதில் மூழ்கிப் போனாள் குழந்தை.
இலக்கியாவைக் காணவும்தான் சிவானந்துக்குத் தான் வந்த காரணமே நினைவுக்கு வந்தது.
"அம்மா... அப்பா எங்கே? அவரைக் காணல."
"ஆபிஸ் ரூமில்தான் இருக்கார்."
"அப்பாவைக் கூப்பிடுங்க. அப்பாகிட்டேயும் உங்ககிட்டேயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்."
"சிவாண்ணா, என்ன ஸ்பெஷல்...? உங்களுக்கு மேரேஜா?"
"மேரேஜ் தான். பட் எனக்கில்லை."
"என்னண்ணா புதிர் போடுறிங்க."
"அவசரக் குடுக்கை. கொஞ்சம் பொறுத்துக்கோ. அப்பாவும் அம்மாவும் வரட்டும்" என்றான்.
சந்திரமதி சென்று ஈஸ்வரை அழைத்து வந்தார்.
"என்ன சிவா ஆபிஸ் போகாம வீட்டுப் பக்கம் வந்திருக்க?"
"அப்பா உங்ககிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசத்தான் வந்தன்."
"ஓகோ... அப்படி என்னப்பா ரொம்ப முக்கிய விஷயம்?"
"வன் மினிட்பா..." என்றவன் கடகடவென மிகுதி டீயையும் ஒரே மடக்கில் குடித்தவன் "அம்மா, உங்க டீ குடிக்கவே தினமும் நம்ம வீட்டுக்கு வரனும். சூப்பரா இருக்கு." என்றான். "அப்பா, அம்மா... நம்ம நந்தனுக்கு மேரேஜ் பண்ணுற விஷயமாத்தான் பேச வந்தன்."
"நாங்களும் அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கத்தான் ஆசைப்படுகிறோம். எங்கப்பா..." என்றார் சந்திரமதி.
"கவலைப்படாதிங்கம்மா, சீக்கிரமே நம்ம நந்தனுக்குக் கல்யாணம் நடக்கும்."
"சிவாண்ணா, உண்மையாவா சொல்லுறிங்க?"
"என்னடா பானு, இப்படி அதிருப்தியாய் கேட்கிறாய். நந்தனுக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது. அதுவும் சீக்கிரமே"
"என்ன சிவா சொல்கிறாய்?"
"அம்மா உங்க மகனுக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்க நீங்க ரெடியா?"
"அதைவிட எனக்கு வேறு என்னடா வேலை."
"மருமகளை நாங்க பார்க்கணுமா? இல்லை ஏற்கனவே ரெடியா இருக்கா?" என்றார் ஈஸ்வர்.
"அப்பா நீங்க ரொம்ப ஸார்ப்" என்றான் சிவானந்த்.
"ஏங்க அப்படிக் கேட்குறிங்க?"
"சந்திரா, நேற்று உன் பையன் ராஜேஷ்கிட்ட சொன்னதைக் கவனிக்கலையா?"
"ஆமாங்க... இப்பதான் நினைவு வருது. நேற்று அவர்கிட்ட பொண்ணை நான் பார்த்திட்டேன் என்று சொன்னானே. அப்படியென்றால்..." அவரின் முகத்தில் சிறு பயம் தோன்றியது. அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சிவானந்துக்குக் காரணம் புரிந்தது. உடனேயே,
"அம்மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. அவன் ஒருதடவை தப்புசெய்து அதற்கு வேண்டியளவு தண்டனையும் அனுபவிச்சிட்டான். திரும்பவும் அதே தப்பை செய்யமாட்டான்." என்று அவன் கூறவும் தாயின் முகம் தெளிவடைந்தது. ஈஸ்வரோ அவனே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தார். வர்ஷாவைப் பற்றிய விவரங்களையும் யதுநந்தனுக்கு அவள்மீது அபிப்பிராயம் இருப்பதையும் கூறியவன் யதுநந்தனுக்கும் இலக்கியாவிற்கும் அவள் நல்லதொரு துணையாக இருப்பாள் என்பதையும் தெளிவுபடுத்தினான். உடனேயே கல்யாணத்தை முடிக்க வேண்டிய காரணத்தையும் கூறினான்.
ஹரிணி சொத்துக்கு ஆசைப்பட்டுக் குழந்தையைக் கேட்பதையும் வழக்குத் தொடரப் போவதாகக் கூறியதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினான்.
தாயுள்ளம் தன் மகன் கல்யாணம் செய்து பொண்டாட்டி, பிள்ளை என்று சந்தோசமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஏற்கனவே ஒருத்தியிடம் ஏமாந்ததால் இனியும் அப்படி நடக்கக்கூடாது என்று எண்ணினார். ஆனால், ஈஸ்வரோ வேறு கேட்டார். "ஏன் சிவா, நந்து ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு மகளும் இருக்கு. எப்படி அவர்கள் வீட்டில் சம்மதிப்பார்கள்? அந்தப் பெண்ணுக்கும் இதில் சம்மதமா?"
"அப்பா வர்ஷனாவுக்கும் நந்தன் மேல் ஈடுபாடு இருக்கு. அவங்க வீட்டில் பேசுற வேலைய நான் பார்த்துக்கிறேன். நீங்க பொண்ணு பார்க்கப் போக ரெடியாயிருங்க" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
யதுநந்தன் வீட்டிலிருந்து புறப்பட்ட
சிவானந்த் வேறு சில இடங்களுக்கும் சென்று விட்டுத் தன் அலுவலகம் வந்தான். அறைக்குள் வந்தவன் அங்கே தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து லாப்டாப்பில் எதையோ டைப் பண்ணிக் கொண்டிருந்த வர்ஷனாவைப் பார்த்தான். இவனைக் கண்டதும் "குட்மார்னிங் சார்" என்றவள் அதன்பிறகு அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. நேற்று நடந்த நிகழ்வால் வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது. அவளை சிறிதுநேரம் பார்த்தவன்,
"வர்ஷனா"
"சார்"
என்று கூறியபடி எழுந்து அவனருகில் சென்றாள்.
"உட்காருங்க" என்று தன் முன்னே இருந்த இருக்கையைக் கை காட்டினான். அவள் உட்கார்ந்ததும் "உங்ககிட்ட ஒன்று கேட்கிறேன். மறைக்காமல் சொல்லணும்"
"கே..கேளுங்க சார்"
"உங்களுக்கு நந்தனைப் பிடிச்சிருக்கா?"
அவன் இப்படி நேரடியாகக் கேட்பான் என்று எதிர்பார்க்காத வர்ஷனா அதிர்ச்சியில் விழிவிரித்து அவனைப் பார்த்தாள்.
"தப்பாக நினைக்கக் கூடாது.எதுவானாலும் சொல்லுங்க. பிடிக்கலையா?" என்று மாத்திக் கேட்டான். அவள் அதற்கும் பதில் இல்லாது போகவும் "ஓகே, டோன்ற் வொர்ரி. உங்களுக்குப் பிடிக்கலை என்று நந்தன் கிட்ட நான் சொல்லிடுறன்" என்றான். அதிர்ச்சியில் நிமிர்ந்தவள் "இல்லை... பிடிச்சிருக்கு..." என்றாள். எப்படிச் சொன்னால் உண்மையைச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்த்துச் சொன்னானோ அது பலன் தரவும், வெற்றிச் சிரிப்புடன் "ஓ காட்... ரொம்ப சந்தோஷம் வர்ஷனா. கூடிய சீக்கிரம் அவன் வீட்டிலிருந்து பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வருவாங்க. பட், நான்தான் ரொம்பக் கஷ்டப்படப் போறேன்." என்றான். கேள்வியாக அவனை நோக்கினாள். "என் பி.ஏ. மிஸ் வர்ஷனா, மிஸ்ஸிஸ் யதுநந்தனாகப் போகின்றா. என் கம்பனிக்குப் பார்ட்னர் வேறு... சோ, எனக்கு ஒரு பி.ஏ.வைத் தேடனுமே." என்றான் சோகம் போலக் காட்டி. அவள் வெட்கத்தில் மலர்ந்து சிரிக்கவும் "ஓகே வர்ஷனா, இப்போது வேலை செய்வதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே" என்றான். சந்தோசத்துடன் அவளை சென்று வேலைபார்க்குமாறு பணித்துவிட்டு தன் வேலையில் மூழ்கிப் போனான்.
மாலை நான்கு மணிக்கே வேலையை முடித்துவிட்டு அவளையும் வீட்டிற்குச் செல்லுமாறு கூறிவிட்டு சிவானந்த் சென்றுவிட்டான். வீட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த அம்மன் கோயிலில் தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் வர்ஷனா. கோயில் உள்ளே சென்று மூலஸ்தானத்தில் வீற்றிருந்த கருமாரியம்மனை மனமுருகி வேண்டினாள். 'தாயே, நான் ஆசைப்பட்டவனே என் வாழ்க்கைத் துணையாய் அமைய நீதான் அருள்புரிய வேண்டும்' என்று வேண்டியவள், கோயில் மண்டபத்தில் சிறிதுநேரம் அமர்ந்தாள். அப்போது அவள் மனதில் பயம் எட்டிப் பார்த்தது. 'யது ஒரு மகளுக்குத் தகப்பன் என்றால் வீட்டில் அம்மா, அப்பா என்ன சொல்வார்களோ? ஆனால், யது இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.' என்று சிந்தித்தவள், 'கருமாரியம்மனே, என் அம்மாவும் அப்பாவும் இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வேண்டும். என் கல்யாணம் யதுகூட நடந்தால் உன் சந்நிதியில் தீச்சட்டி ஏந்துறன் தாயே ' என்று வேண்டுதல் வைத்தாள். நேரத்தைப் பார்த்தாள். நான்கு நாற்பதைக் காட்டியது. தன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.
அங்கே வாசலிலேயே மஞ்சு நின்றிருந்தாள். "வர்ஷூ, இவ்வளவு நேரமும் எங்கே போனாய்? நான்கு மணிக்கே ஆபிஸில் இருந்து வெளிக்கிட்டாயே." என்றாள். “கோயிலுக்குப் போனேன்” என்று சொன்னவள் மஞ்சுவை ஆச்சரியமாகப் பார்த்தாள். தான் நான்கு மணிக்கே ஆஃபிஸில் இருந்து புறப்பட்டது அவளுக்கு எப்படித் தெரியும் என்று யோசித்தாள். அவளை மேற்கொண்டு பேசவிடாமல் உள்ளே அழைத்துச் சென்றாள் மஞ்சு. அங்கே தங்கா அத்தையின் குடும்பத்தினரும் அப்பாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். "ஹாய் அத்தை, என்ன விசேஷம்? குடும்பமே வந்திருக்கிறது."
"விசேஷம் தான் போய் ரெடியாகு" என்றாள் தங்கா. யோசனையுடன் அறைக்குள் சென்றாள் வர்ஷனா.