எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கார்முகில் 7

கார்முகில் 7 :🌧️🌧️🌧️

லட்சுமி சங்கவியின் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று. உடல்நிலை இரண்டு நாளில் சரியாகி விட்டாலும் இன்னும் அபர்ணா வரததாலும் கார்முகிலனின் நிச்சயத்திற்கும் ஒரு வாரம் மட்டும் இருந்ததால் எதற்கு வீண் அலைச்சல் என்று அவர் இங்கேயே தங்கி விட்டிருந்தார்.

விக்ரமும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாததால் குடும்பத்தினரும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை.

“விக்ரம் மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சா??” என்றபடி பரணிதரன் வர,

“இல்ல ப்பா இன்னைக்கு கொடுத்துடுறேன்”

“டேய் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு? இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு நிச்சயம் என்னத்தான் உன் ப்ரெண்டோட தம்பி மண்டபமா இருந்தாலும் இப்புடி தான் இழுத்தடிப்பியா? வேற ஆள் அட்வான்ஸ் தந்தாங்கன்னா அவன் அவுங்களுக்கு தானே கொடுப்பான்?”

“இல்ல ப்பா நான் சொல்லித்தான் வச்சுருக்கேன்”

“காசு கொடுத்து சொல்லி வச்சியா? வெறும் வாய் வார்த்தைக்கெல்லாம் இங்க மதிப்பு கெடையாது. இவ்வளவு படிச்சு அரசு உத்யோகத்தில இருக்க இந்த சின்ன விஷயம் கூட தெரியலை போ போ மொதல்ல அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணு கல்யாணத்துக்கும் அந்த மண்டபத்தையே பேசிட்டு அதுக்கும் சேர்த்து இப்பவே அட்வான்ஸ்ஸை கொடுத்திட்டு வந்திடு” என,

“சரிப்பா” என்றவன் அறைக்கு செல்ல அத்தனை நேரம் இவர்களின் சம்பாஷணையை வீட்டில் கார்முகில் ரை தவிர அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க விக்ரமின் பின்னயே சங்கவி எழுந்துச் சென்றாள்.

சென்ற வேகத்தில் கதவை அறைந்து சாற்றியவள்,
“என்னங்க நெனைச்சுட்டு இருக்காரு உங்க அப்பா? இப்புடி தான் நடு வீட்டுல வச்சு பேசுவாங்களா உங்களை? நீங்க என்ன இன்னும் சின்னக் கொழந்தையா இப்புடி பேசுவாரு எல்லார் முன்னே நீங்க இப்போ வி.ஏ.ஓ! அவருக்கு அவ்வளவு அவசரம்னா அவரே நேரே போய் ஒரு மாசத்துக்கு முன்னாடியே அட்வான்ஸ் கொடுத்திருக்க வேண்டியது தானே!!” என பேசிக் கொண்டே சென்றவளை விக்ரம் திரும்பி ஒரு பார்வை பார்க்க அவன் பார்வையில் தெரிந்த வித்யாசத்தில் மெல்ல தனது பேச்சின் ஸ்ருதியை குறைத்துக் கொண்டு அவனைப் பார்க்க,

அவள் அருகே வந்தவன்,
“எப்ப இருந்து மாமா எங்க அப்பாவா ஆனாரு?” என்றவனின் நிதானமான கேள்வியில் அவளுக்கு அடிவயிறு ஒரு நொடி பிரட்டி பின் நின்றது(ஹி ஹி எத்தனை நாள் தான் இதயம் நின்றதுன்னு போடுறது ஒரு மாற்றத்துக்கு அடிவயிறுன்னு போடுவோம்🏃🏻‍♀️🏃🏻‍♀️)

“இல்ல…அது வந்து!!!”

“ம்ம்ம்..சொல்லு கவி”

“அது…அது.. ப்ச் என்னங்க இப்போ உங்களை பேசிட்டாங்களேன்ற ஒரு கோவத்துல வேகத்துல பேசிட்டேன்.”

“எவ்வளவு கோபத்துலயும் சரி வேகத்துலயும் சரி வார்த்தையை விடக் கூடாது பாத்துப் பேசணும். அவுங்களுக்கான மரியாதை எப்பவும் கொறையக் கூடாது! புரியுதா?” என,

“ப்ச் இது இப்போ ரொம்ப முக்கியமாங்க”

“எனக்கு இது தான் முக்கியம்! இதே மாதிரி கோவத்துல நானும் அத்தைய உங்கம்மான்னு சொல்லி பேசுனா நீ ஒத்துப்பியா?”

“அய்யோ அது ஏதோ கோபத்துல!!!”

“அப்புடி கோபத்துல வார்த்தையை விடுற அளவுக்கு இங்க இப்போ என்ன நடந்திடுச்சு”

“ஏன் உங்களுக்கு தெரியாதா?”

“ம்ஹூம் தெரியலை!!!”

“அது உங்க அப்….” அப்பா என கூற வந்தவள் விக்ரமின் முறைப்பில்,
“இல்லை மாமா கீழ உங்களை பேசுறாரு நீங்களும் கேட்டுட்டு!!!” என அவள் தயங்கி நிறுத்த,

“பேசுனது ஏன் அப்பா தானே!”
என்றவனின் வார்த்தையில் அடுத்து என்ன பேசிட முடியும் ஆனாலும் சங்கவி பேசினால்.

“அப்பா தான் நான் இல்லைன்னு சொல்லலையே? ஆனா நீங்க ஒன்னும் சின்னக் கொழுந்தை இல்லையே வி.ஏ.ஓ கவர்மெண்ட் ஆபிசர்”

“அது ஊருக்கு என் அப்பாக்கு நான் எப்பவும் பிள்ளை தான்.”

“இருக்கட்டுமே அதுக்காக…”

“இப்போ நான் என்ன பண்ணிருக்கனும் கவி எங்கப்பாவ எதிர்த்து பேசி இருக்கணுமா? இல்லை நான் கவர்மெண்ட் வேலைக்காரன்ற திமிரை எங்கப்பாக்கிட்ட காட்டியிருக்கணுமா?? அப்போ எங்கப்பாவோட நிறுத்த மாட்டேன் அத்தை கிட்டயும் அபர்ணாக் கிட்டயும் காட்டுவேன் பரவாயில்லையா? சரின்னா சொல்லு இப்பவே நான் போய் எங்கப்பா கிட்ட சண்டைப் போடுறேன்”

இதற்கு சரி எனக் கூற முடியுமா அவளால்???

“நான் உங்க நல்லதுக்குத்தானே சொன்னேன். நீங்க அப்புடி எல்லார் முன்னாடியும் பேச்சு வாங்க கூடாதுன்னு தானே பேசுறேன்”

“எது நல்லது எங்கப்பா என்னை பேசுனா அதை நான் கேட்டுட்டு நிக்காம அவரை எதித்துப் பேசியிருக்கணும் அப்பிடி தானே இது தான் நீ சொல்ற நல்லதா? மொதல்ல இந்த விஷயத்தை எதுக்கு நீ இவ்வளவு பெருசாக்குற? என்னை தானே பேசுனாரு அதுவும் அவர் பேசுறதுல உண்மை இருக்குத் தானே?
ஏன்? உன் அம்மா உன்னை திட்டுனதே இல்லையே??” என்றவனின் கேள்விக்கு அவள் மெளனமாவதாய் தவிர வேறு வழியிருக்கவில்லை.

அவளின் அமைதியை பொருட்படுத்தாது அவன் வெளியேறி விட எரிச்சலாகிப் போனாள்.

வர வர அந்த வீட்டில் அவளின் மரியாதையும் முக்கியத்துவமும் கொஞ்ச கொஞ்சமாக தேய்ந்து குறைந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பது அவளின் எண்ணம்.

அதற்கு முழுமுதல் காரணம் லட்சுமி என்றால் மிகையாகாது. இருந்த ஒரு வாரமும் முடிந்த அளவு அவளின் மண்டையை கழுவியிருந்தார்.

அதற்கு தோது போல் சில சம்பவங்களும் அவ்வீட்டில் நடைபெற கண்ணை மூடிக் கொண்டு தாய் செல்வதை நம்ப ஆரம்பித்து விட்டாள்‌ சங்கவி.

இதோ இப்போதுக்‌ கூட வருணாக்ஷி மற்றும் கார்முகிலனின் நிச்சயம் மண்டபத்தில் நடைபெற இருப்பது அவளிற்கு பொறாமையையும் எரிச்சலையையும் அதிகப்படுத்தியிருந்தது.

அவளிற்கும் அவளின் திருமணத்தை பற்றி அத்தனை கனவுகள் இருந்தன. ஆனால் அவையனைத்தும் சரிந்து தரைமட்டமாகி இருந்தது.

சரி திருமணம் தான் யாருமில்லாமல் நடந்து விட்டது ரிஷப்ஷனாவது வைத்துக் கொள்ளலாம் என அவள் நினைத்திருக்க அதிலும் மண் விழுந்தது பரணிதரனின் கோபத்தினால்.

இப்போது கார்முகிலன் மற்றும் வருணாக்ஷியின் திருமணம் கொண்டாட்டமாகவும் கோலகாலமாகவும் நடைபெற இருக்க அதை கண்டுக் கொண்டிருப்பவளுக்கு தனக்கு இப்படி ஒரு திருமண நடைபெறவில்லையே என்ற எண்ணம் போக போக ஆதங்கமாகவும் வயுத்தமாகவும் மாறி இப்போது கோபமாகவும் பொறாமையாகவும் உருமாறி நிற்கிறது சங்கவியிடம்.

அதனை மேலும் உருவேற்றும் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தார் லட்சுமி.

முகத்தில் இருந்த எரிச்சலை மறைக்காது கீழிறங்கி வந்தவளை பிடித்துக் கொண்டார் லட்சுமி.


“உன்னை எல்லாம் தண்டத்துக்கு தான் பெத்து விட்டுறுக்கேன்‌ போல” எடுத்ததும் அவர் அவளை பேச,

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவள்,
“என்னம்மா பிரச்சினை உனக்கு?? என்ன நிம்மதியாவே இருக்க விடமாட்டியா?” என கத்தி விட்டிருக்க,

அதற்கெல்லாம் அசருபவரா லட்சுமி.

“இந்த வீணா போன கோபத்துக்கு ஒண்ணும் குறைசச்சலில்லை. பேச வேண்டிய இடத்துல பேசமா என்கிட்ட வந்து கத்துற? உன் கோபம் எல்லாம் என்கிட்ட மட்டும் தான்”

“ச்சூ ம்மா என்னம்மா வேணும் உனக்கு ஏற்கனவே உன் மாப்பிள்ளை என்னை நல்லா எரிச்சல் படுத்திட்டு தான் போயிருக்காறு இது நீ வேற ஆரம்பிக்காத?”

“ஏன் உன் புருஷனோட சண்டையா?”

“ப்ச் ஆமா அதுக்கென்ன இப்போ மாமா அவரை எல்லார் முன்னாடியும் பேசிட்டாறேன்ற கோபத்துல அவர் கிட்ட போனேன் ஏதோ கோபத்துல வாய் தவறி மாமாவா உங்க அப்பான்னு சொல்லிட்டேன் அதுக்குப் போயி என்கிட்ட எகிறிட்டுப் போறாரு?”

“அடியே உனக்கு புத்திக்கிறது கொஞ்சம் கூட இல்லையேன்னு அடிக்கடி நிருபிக்கிறே. மாப்பிள்ளைக்கு அவர் குடும்பத்து மேல உள்ள பாசமும் அப்பா மேல உள்ள மரியாதையும் தெரியாதா? அவருக்கிட்டவே போய் அவுங்கப்பாவே பேசியிருக்கியே அறிவுக் கெட்டவளே. அவர் அப்பாவுக்கு பாத்து தானே உங்களுக்கு ரிப்பன் கூட வேண்டாம்னு சொன்னாரு”

“அம்மா அமைதியா இரும்மா! ஏற்கனவே நான் அந்த கோபத்துல தான் இருக்கேன்”

“ம்ஹூம் உனக்கு காரியம் சாதிக்க துப்பில்லைன்னு சொல்லு ஆனா வர்றவ சரியான மேனாமினுக்கி தான் எப்புடியோ வீட்டுல நடக்க இருந்த நிச்சயத்தை உன் அத்தைக்காரி கிட்ட நயமா பேசியே மண்டபத்துல வைச்சுக்கலாம்னு உன் மாயமானார் மாமியார் வாயாலேயே சொல்ல வச்சிட்டாப் பாத்தியா? காரியவாதி தான் அவ இப்பவே மாமியாக்காரிய காக்கா பிடிச்சு வேணும்கிறதை நடத்திக்கிறா நீயும் தான் இருக்கியே இத்தனை வருஷம் ஒண்ணாவே இருந்தும் அபர்ணாவே இந்த வீட்டுக்கு கொண்டு வர முடியலை. புத்தியில்லாத உன்னை பெத்ததுக்கு பேசாம ஒரு கருங்கல்லை பெத்துருக்கலாம் அதாவது உபயோகமா இருந்திருக்கும்” என அவளை கழுவி ஊத்தியவர் ஹாலிற்கு சென்று விட அவர் பின்னே அடக்கப்பட்ட கோபத்துடன் சென்றாள் சங்கவி.

“என்ன விக்ரம் மண்டபத்துக்கு அலங்காரம் பண்ணனுமா??” வனஜாவின் குரல் ஹாலை வந்தடைந்த இருவரின் காதுகளிலும் விழ லட்சுமி வேகவேகமாக அங்கே சென்றவர் அவருக்கு சற்று தள்ளி அமர்ந்துக் கொள்ள,

அவரை பார்த்து புன்னகையை சிந்திய வனஜ பேச்சில் கவனமாக அவர்கள் பேச்சு நன்றாக காதில் விழும் தூரத்தில் நகர்ந்து அமர்ந்துக் கொண்டார் லட்சுமி.

சங்கவியிற்கும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரிய வேண்டி இருப்பதால் அங்கேயே அன்னைக்கு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

“அப்படியா சரி விக்ரம் நீ முகிலன் கிட்ட விஷயத்தை சொல்லு அவனும் வருணாவும் பேசிட்டு உனக்கு சொல்லுவாங்க”
போன் பேசி முடித்தவர்,
“என்ன சம்பந்தி உடம்பு இப்போ எப்புடி இருக்கு?” என்க,

“ம்ம்ம் ஏதே பரவாயில்லங்க.”

“இன்னம் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுங்க சரியாகிடும்”

“ஆமாங்க எடுக்கணும். நிச்சய வேலை எல்லாம் எப்புடிங்க சம்பந்தி போகுது? மாப்பிள்ளை வேற மண்டபத்துக்கு இன்னைக்குத் தான் அட்வான்ஸ் கொடுக்க போயிருக்காறு மண்டபம் கிடைக்குமோ என்னமோ பேசாம நீங்க மொத யோசிச்ச மாதிரி வீட்டுலயே பண்ணிருக்கலாம். அந்த பிள்ளை தான் யோசனை இல்லாம சொல்லிச்சுன்னா நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க” என அவர் மறைமுகமாக குத்த,

“ஏன் சம்பந்தி நான் பேசுனது உங்களுக்கு இப்போ கேட்டுச்சு தானே?” என வனஜா கேட்க,

“ஹான் ஏதோ அலங்காரம்னு கேட்டுச்சு சம்பந்தி”

“ஆங் அதே தான் உங்க மாப்பிள்ளை தான் பேசுவாரு மண்டபம் கிடைச்சிடுச்சாம். ஏதோ அலங்காரம் எல்லாம் பண்ணா நல்லா இருக்குமாமே அதான் விக்ரம் கேட்டான்”

“டெக்கரேஷன் எல்லாம் பண்ணா அதுக்கு சேர்த்துல்ல அத்தை பில் போடுவாங்க. ஏற்கனவே அந்த மண்டபத்துக்கு வாடகை அதிகம்” என சங்கவி வாய்திறக்க,

“அதானே ஒரு நாள் கூத்துக்கு இது எல்லாம் அவசியம் தானா சம்பந்தி சிம்பிளா வீட்டுலயே வச்சிருக்கலாம்” லட்சுமி கூற

“என்னங்க செய்யுறது இந்த காலத்துப் பிள்ளைங்க ஆசைப்படுதுங்களே‌. இது எல்லாம் வாழ்க்கையில ஒரு தரம் வர்றது அதுங்களுக்கு பிடிச்ச மாதியி இருந்துட்டு போகட்டுமே, பொண்ணு வீட்டுலயும் பாதி பணம் கொடுத்துட்டாங்க.

அதுவும் இல்லாம எங்க ஆளுங்க ஜனக்கட்டு அதிகம் வருணா வீட்டு பக்கமும் அதிகம் அதுக்கெல்லாம் வீடு பத்தாதுங்க. மண்டபமே நிரம்பி வழியும் வந்துப்
பாருங்க அந்தளவு எங்க ஆளுங்க வருவாங்க” என எதார்த்தமாக அவர் கூறி விட,

தாய் மகளின் முகம் நொடியில் மாறி சிறுத்து விட்டிருந்தது.

படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைக் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே.
 
Top