எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யாசகம் ♥ 04

Nandhaki

Moderator

யாசகம் ♥ 04


சந்திரனில்லா அந்த அமாவாசை இரவின் வானத்தில் எங்களிடமும் வெளிச்சம் உள்ளது என நட்சத்திரங்கள் மினுமினுக்க அந்த வானத்தினை அப்படியே பிரதிபலித்தது அந்த சிறிய நீர் தடாகம். சில்லென்று வீசிய மெல்லிய காற்று உருவாக்கிய அலை அந்த வானமே அசைவது போல் தோன்றவே கைகளினை மார்புக்கு குறுக்காக கட்டியவாறே சற்று அண்ணாந்து வானத்தினை நோக்கினான் அச்சுத கேசவன். வானத்தினை போன்ற அவன் மனத்தினையும் அசைத்தது அவள் குரல், சன்விதா, முதல் முதலாக அசையாத அவன் மனதினை அசைத்து பார்த்த பெண்.

"நான் உங்களை கல்யாணம் செய்ய முடியாது இன்னொருத்தரை காதலிக்கிறான் Mr. அச்சுத கேசவன்..." மீண்டும் மீண்டும் சன்விதாவின் குரல் மனதில் எதிரொலித்தது. AK ஒருத்தியை பைத்தியம் போல் காதலிக்கின்றேன் என்று சொன்னால் இன்னொருத்தனைக் காதலிப்பதாக சொல்வதற்கு அவளுக்கு எவ்வளவு தைரியம்.

சிறுவயதில் விபத்தொன்றில் அச்சுத கேசவனின் பெற்றோர் இறந்துவிட தனியாக நின்ற அக்காவையும் தம்பியையும் மனைவியை இழந்த மாமா கவனித்து காலாகாலத்தில் அக்காவுக்கு தன் மகனை திருமணமும் செய்து கொடுத்திருந்தார். ஆனால் அச்சுத கேசவன் பிடிவாதத்தின் மறுவடிவமாக வளர்ந்தான். அவன் ஒன்று நினைத்தால் சாதித்தே ஆகவேண்டும். நினைத்ததை முடிக்காமல் உறங்கவேமாட்டான். நூறு வீதம் தொழிலில் வெற்றியீட்டித் தந்த இந்த குணம் அவன் தனிப்பட்ட வாழ்வில் நூறு வீதம் சரிவினையே கொடுத்தது.

மாமாவின் பின்னர் அக்கா சுபத்ரா கண்டித்து பார்த்தாள். தோளுக்கு மேல் வளர்ந்தவனை ஓரளவிற்கு மேல் அவளாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் விளையாட்டு பிள்ளையாகவே இருந்தான். (அதாங்க play boy).

அவளை சந்திக்கும் நாள்வரை அவனுக்கு அது தப்பாக தெரியவில்லை. அவனை கண்டிக்கும் போது அக்கா கேட்ட கேள்வி இப்போது அவன் காதில் எதிரொலித்தது "உன் எதிர்கால மனைவி நீ ராமனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால், அப்போது எதையும் மாற்ற முடியாது கண்ணா". அக்காவின் சொல்லினை ஒரு கணமாவது கேட்டிருந்தால்.... இனி வருத்தப்பட்டு எதுவும் ஆகப் போவதில்லை.

அதுவும் பெண்கள் விரும்பும் அழகன், பணம் மிடுக்கு என அத்தனை கொட்டிக் கிடக்க அவனறிந்த பெண்கள் அனைவரும் அவன் கண் பார்வைக்காக தவம் கிடந்தனர். ஆனால் அவள்... சன்விதா..... முதல் முதலாக அவனை மறுக்கும் பெண்.

கண்களினை ஒரு கணம் மூடி திறந்தவன் அவ்வளவு நேரம் மார்பு கூட்டினுள் அடைத்திருந்த காற்றினை வாய் வழியே வெளியே ஊதினான்.

அவன் விரும்பிய நேரம் விரும்பிய பெண்ணுடன் நாளினை கழித்தான் ஆனால் குடும்ப பெண்களினையும் தன்னிடம் பணிபுரியும் பெண்களினையும் தன் எல்லைக்கு வெளியே வைத்திருந்தான். ஆனால் எந்த பெண்ணையும் வற்புறுத்தியதும் இல்லை இது போல் பின்னே அலைந்தும் இல்லை.

அவளை முதன் முதலாக பார்த்த கணம் அவன் நியாபகத்தில் நிழலாட, முகத்தில் புன்னகை நிழலாடியது. அது அவள் நினைவுக்கு மட்டும் இருக்கும் ஒரு தனித்துவம் எப்போது அவளைப் பற்றி நினைத்தாலும் அவன் முகத்தில் புன்னகையின் சாயல்.
♥♥♥♥♥

கம்பெனி வேலை சம்பந்தமாக டெல்லி சென்றிருந்த போது டெல்லியில் உள்ள லஷ்மி கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்று சுபத்ரா ஒற்றைக்காலில் நிற்க, பத்தினி சொல் தட்டாத கணவனாய் அர்ஜுன் மனைவி பின்னே சென்றுவிட்டான். அக்காவும் அத்தானும் இழுத்த இழுப்புக்கு அச்சுதனும் கூடவே சென்றான். அதில் எல்லாம் நல்ல பிள்ளைதான்....

அக்காவையும் அத்தானையும் முன்னே அனுப்பிவிட்டு காரை பார்க் செய்துவிட்டு படியேறி வந்தவன் கண்களில் விழுந்தது அந்த சுவாரஸ்யமான சம்பவம் இல்லை இல்லை குரல்.

அந்த குரலுக்கு சொந்தக்காரியின் முகம் மேல் இருந்த மணியை நோக்கி அண்ணாந்து இருந்தது. இடுப்பில் கைவைத்து "நீ எனக்கு எட்ட மாட்டியமே, அந்த குரங்கு கரன் சொல்றான், இன்று உன்னை அடிக்கல, என் பெயரை மாற்றி வைக்கிறான்" மணியுடன் சண்டைக்கு தயாராக பின் புறமாக சில அடிகள் எடுத்து வைக்க தொடங்கினாள் அந்த பெண்.

சிறுமுறுவலுடன் அவளுக்கும் கோவில் மணிக்கும் இடையேயான சண்டையை வேடிக்கை பார்த்த வண்ணம் ஏறியவன் மூளையில் அவள் செய்ய போகும் காரியத்தின் விபரீதம் உறைக்க படிகளினை வேகமாக கடந்தவனுக்கு அவளை தடுப்பது முடியாதது என தெளிவாக புரிய அவளை காப்பாற்ற முடியுமா என பார்த்தான். அவன் படி முடிந்து நிலத்தில் கால் வைக்கவும் அந்த பெண் ஓடி வந்து மணியை அடித்து பலன்ஸ் இன்றி முன்புறமாக விழவும் சரியாக இருந்தது.

பூமாலையாய் தன் மேல் விழுந்தவள் இடையை சட்டென இறுக பற்றி தன்னுடன் தூக்கி இரண்டு சுற்று சுற்றி இருவரையும் பாலன்ஸ் செய்தவாறு நின்றவன் அவனின் சட்டையினை இறுக பிடித்தபடி நெஞ்சில் பதிந்து இருந்த அவள் முகத்தினை சற்றே ஒரு புறமாக குனிந்து பார்த்தான்.

வெற்றிடயை இறுக பற்றியிருந்த உள்ளங்கையின் கீழ் கூசி சிலிர்த்த அவளின் சருமம் அவன் நரம்புகளின் ஊடே மின்சாரத்தை கடத்தி இரத்த நாளங்களில் பரவுவதினை உணர்ந்தவன் நம்ப முடியாது மீண்டும் அவள் முகத்தினை பார்த்தான். அவள் கைகள் மார்பில் இருக்க, குங்கும நிறத்தில் சிவந்திருந்த அந்த முகம் அவன் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிய எட்டாவது உலக அதிசயமாக அவளையே வைத்த கண் வாங்காது பார்திருந்தான் அச்சுதன்.

எத்தனை பெண்களிடம் பழகினான் என்ற கணக்கு அவனுக்கே தெரியாது. ஆனால் எந்த பெண்ணிடமும் இது போல் கூசி சிலிர்ப்பதை, ரத்த நாளங்களில் மின்சாரம் பாய்வதை எல்லாம் உணர்ந்ததில்லை. இந்த புதிய உணர்வு அவனுக்கு பிடித்திருந்ததுடன் எப்போதும் வேண்டும் என பேராவல் அவனுள் எழுந்தது. அவளது சிவந்த முகம், தாறுமாறாக போய் வந்த மூச்சு, சிவந்த மூக்கு நுனி, துடித்த அதரங்கள், முன் உச்சியில் விழுந்த முடிகற்றை என அவள் முகத்தில் அவன் தொலைந்து, தன்னை மறந்து வேட்கை வழியும் கண்களால் அவளை கொள்ளையிட்டான்.

மான் குட்டியாய் துள்ளி மணியை அடித்து முன்னே விழும் போதுதான் தான் செய்த முட்டாள்தனம் புரிய இறுக கண்களினை முடிய கொண்ட அந்த பெண் கீழே விழவில்லை என்பதுடன் யாரோ தனது இடையினை இறுக பற்றியிருக்க வெட்கத்திலும் இது வரை அறியாத புதிதான உணர்விலும் உடல் சிலிர்க்க முகம் சிவக்க நின்றவள், அதிர்விலிருந்து வெளியேறி அவன் அணைப்பிலிருந்து மெதுவே விலகினாள். அவனை தவிர அனைத்து இடத்தையும் பார்த்தவள் முகம் தக்காளியுடன் போட்டியிட்டது.

அவனை பொறுத்த மட்டில் பெண்கள் முகம் சிவப்பது தொட்டால் கூசி சிலிர்ப்பது எல்லாம் கடந்த நூற்றாண்டில் முடிந்த சமாசாரம். இதை வைத்து நண்பர்களுடன் கேலி செய்து சிரித்தும் இருக்கின்றான். ஆனால் உண்மை கண் முன்னே நிற்க நடப்பது கனவாய் தோன்றியது. அவளை காலம் முழுவதும் அப்படியே கைகளுக்குள் வைத்திருக்க மனம் ஏங்கியது.

நிமிர்ந்து அவனை தன் பெரிய கருவிழிகளால் ஒரு கணம் அவனை நோக்க, அக்கணத்தில் அச்சுத கேசவன் இறந்து மீண்டும் பிறந்தான். ஓர் கையினால் தலையை அழுந்தக் கோதியவன், இந்த ஒரு கணதிற்காகவே இவ்வளவு நாளும் காத்திருந்தது போல் உணர்ந்தவனாய் சற்றே முன்புறமாக குனிந்து அவள் முத்தினை பார்க்க முயன்றான். அவளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்க, பயந்தவாளய் ஓரடி பின்னே சென்றவள் மறுபடியும் நாடி நெஞ்சை தொடும் என்பது போல் தலையை குனிந்து கொண்டாள்.

சரண்டர் என்பது போல் கைகளினை உயர்த்தியவன் சற்றே கரகரத்த புன்னகை நிரம்பிய குரலில் "Hey.. hey..... relax" என்றவாறே ஜீன்ஸ் பொகெட்னுள் கைகளினை நுளைத்தவன் ஒருபுறம் நன்றாக சரிந்து குனிந்து அவள் முகத்தை பார்க்க முயற்சித்தான்.

"த... தா... தாங்யூ"

அது அவன் காதில் மெல்லிசையாய் ஒலிக்க ஆழ்ந்த குரலில் அவளை அழைத்தான்.

"Hi"

வெறுமே தலையை மட்டுமாய் அசைத்து வைத்தாள் பாவை.

ஆவலும் உற்சாகமும் நிரம்பிய முகத்துடன் அச்சுத கேசவன் மீண்டும் கேட்டான் "உன் பெயர் என்ன, பெண்ணே?"

அந்த இடத்தை விட்டு செல்ல திரும்பியவள், ஆழ்ந்த குரலில் வந்த அந்த கேள்விக்கு சிறிதே நடுங்கும் குரலில் பதிலளித்தவள் அங்கிருந்து திரும்பியும் பார்க்காமல் ஓடிவிட்டாள்.

"ச.. சச சன்விதா"

அவள் போன திசையை நோக்கி தடுப்பது போல் கை நீட்டியவன் அப்படியே மடக்கி பின் கழுத்தில் வைத்தவாறு சிறு பையனாய் தனக்கு தானே சிரித்தான்

அங்கிருந்து ஓடிய அந்த பெண்ணின் பின்னுருவத்தையே பார்த்துக் கொண்டிருந்த அச்சுதனுக்கு தான் தனியாக சிரித்து கொண்டிருப்பது அவனுக்கே தெரியவில்லை. யாரோ தோளினை தொட திரும்பியவன் கண்களில் விழுந்தார்கள் அவனது அக்காவும் அத்தானும்.

"என்னாச்சு, உன்னை கூப்பிட்டுட்டே இருக்கின்றோம், திரும்பி கூட பார்க்கல" அவன் பார்த்திருந்த திசையை ஆராய்ந்தவாறே கேட்டாள் அக்கா சுபத்ரா.

புன்னகையை உதட்டுக்குள் ஒளித்தவன் தலையசைத்தான் "ஒண்ணுமில்லக்கா, ஐ ஆம் பைன்".
♥♥♥♥♥

அன்றிரவு நண்பர்கள் பார்ட்டி ஒன்றிற்காக அழைக்க வழமை போல் சென்றிருந்தான். அது ஒரு வகையான பார்ட்டி, அங்கு வரும் அனைவரின் கருத்தும் ஒன்று மதுவும் மாதும்.

கையில் மது கின்னத்துடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தாலும் மதுவில் ஒரு துளிகூட உதடு தாண்டி செல்லவில்லை. பெண்களின் பக்கம் பார்வை மட்டுமல்ல மனமும் செல்லதிருக்க தனக்கு என்ன ஆச்சு என புரியாமல் விழித்து கொண்டிருந்த அச்சுதன் தன்பாட்டில் அமர்ந்து தன்னை சுற்றி நடப்பதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் நிலைமை புரியாமல் ஒரு பெண் வந்து அவன் மடியில் அமர்ந்ததுடன் கழுத்திலிருந்து கன்னம் வரை உதட்டால் கோடு இழுத்து தன் செய்கையால் அவனை வெளிப்படையாகவே அழைத்தாள். ஒரு கணம் தன் கைகளில் பூமாலையாய் ஏந்தியவளின் உடல் கூசி சிலிர்த்ததும் தன் உடலில் ஓடிய உணர்வும் நினைவில் வர அடுத்த கணம் சலீர் என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது கிடந்தாள் அந்தப் பெண்.

அவன் கையிலிருந்த வைன் கிளாஸ் உடைந்து தரையெங்கும் சிவப்பு வண்ணமாக இருந்து.

திடீரென அவ்விடமே நிசப்தமானது. அனைவரும் அதிர்ந்து அவனையே பார்த்தவாறு இருக்க, பின் கழுத்தை கையினால் தேய்த்தவன் ஒரு கட்டு பணத்தை அந்த பெண்ணை நோக்கி வீசிவிட்டு அருகில் அதிர்ந்து நின்ற பேரர் கையில் இருந்த ட்ரேயில் இருந்த இன்னொரு வைன் கிளாஸ்சினை எடுத்தவாறு வெளியே இருந்த நீச்சல் குளத்தின் அருகே சென்றான்.

அங்கிருந்த நீண்ட இருக்கையில், முழங்கால் மீது முழங்கையினையுன்றி ஒரு கையில் மது கோப்பையுடன் மறு கையை தொங்கப் போட்டபடி அமர்ந்து சற்று குனிந்து சிறு அலையாய் அசைந்த நீரினை பார்த்து கொண்டிருந்தாவனுக்கு புரியவேயில்லை ஏன் எந்த பெண்ணை தொட்டாலும் மரக்கட்டையை தொட்டதை போல் உணர்கின்றான் என்று ஏன் அவளை தொட்ட போது வந்த உணர்வே வேண்டுமென்று மனம் ஏன் அடம் பிடிக்கிறது என்று.

பெண்கள் வெறுமனே பணத்திற்காக மட்டும் அவன் பின் சுற்றவில்லை, அவனது அழகு கம்பீரம் என்பதை தாண்டி ஆறுபத்து நான்கு கலைகளில் காம கலையிலும் வல்லவனாக இருந்தான்.

இப்போதெல்லாம் அவன் ஆண்மை அவளை தவிர வேறு யாருக்கும் பதிலளிக்க மறுப்பது ஏன் என புரியாமல் குழம்பினான் அந்த பிசினெஸ் டைகூன். பிஸினசில் எந்த பெரிய பிரச்சனையும் இமைக்கும் நொடியில் முடிக்கும் அவனால் இந்த குழப்பத்திற்கு தீர்வு காண முடியாத இயலாமை அவன் மீதே அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

கையிலிருந்த மது கோப்பையை ஆத்திரத்துடன் நீச்சல் குளத்தில் எறிந்தவன் மதுவின் கோல்டன் பிரவுன் நிறம் நீரில் கலந்து மறைவதை ஆழ்ந்த யோசனையுடன் அசையாமல் பார்த்தபடி இருந்தவனுக்கு புரிந்தது இனி தான் என்னதான் முயற்சித்தாலும் வேறு பெண்ணை தொட தன்னால் முடியாது

"உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளதினாலும் தொடமாட்டேன்....."

யாரோ உள்ளே தண்ணியை போட்டு விட்டு பாட மெலிதாக கசிந்த வார்தைகளில் இருந்த உண்மை புரியாமல் உள்ளங் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டான். ஒரு கணம் ஆழ காற்றை சுவாசித்தவன் பெருமூச்சுடன் அவள் பெயரையும் வெளியேற்றினான்

"சன்விதா..."

அணிந்திருந்த பிளாக் ஜாக்கெட் தோளில் அலட்சியமாக வீசப்பட்டிருக்க, வெள்ளை நிற போலோ நெக் டீஷிர்ட்டின் கைகளிணை முழங்கை வரை இழுத்து விட்டு கைக்களினை பண்ட் பாக்கெட்டினுள் விட்டவாறு ஆழ்ந்த சிந்தனையில் தலையை குனிந்தடி தனது SUV யினை நோக்கி நடந்தான் அச்சுத கேசவன்.

நிலவின் ஒளி போன்ற மெல்லிய வெள்ளை நிற மின்விளக்கின் ஒளியில் அந்த ஹோட்டலின் அவெனுயுவில் அச்சுத கேசவன் நடந்து போவதை திருப்தி கலந்த புன்னகையுடன் பார்த்தது ஒரு ஜோடி கண்கள். அங்கிருந்த அனைவரும் முதல் தடவையாக அச்சுத கேசவன் பார்ட்டி வேண்டாம் என போவதற்கு சட்சியானர்கள்.
♥♥♥♥♥

அதன் பிறகு வந்த இரவுகளில் இது போன்ற பார்ட்டிகளினை சுத்தமாக தவிர்த்துவிட்டான். ஆனால் போகும் இடமெல்லாம் மனம் ரகசியமாய் அவளின் சாயையை தேடியது.

இரவுகளில் அவனது அறையின் அருகே அமைந்திருந்த குட்டி குளத்தின் அருகே நட்சத்திர வானத்தினை பார்த்தபடி உறக்கமின்றி நிற்பதை பார்த்த அவனது அக்கா சுபத்ரா "இவன் திருந்திட்டனா இல்லை பொண்ணு கிடைக்கலயா?" என்று நினைத்தவள் "சீ..சீ.. என்ன பெண் நீ இப்படியா யோசிப்பாய், உன் நினைப்பை தூக்கி உடைப்பில் தான் போடணும் போடி" என்று தன்னை தானே திட்டியவள் "இல்லையே தூக்கமின்றி தவிக்கிறானே.... அப்ப என்னோவோ இருக்கு..."

"அப்படியே உன் மைண்ட் வாய்ஸ்சையும் போடுறது"

திடீரென காதருகே கேட்ட குரலில் துள்ளி திரும்ப கண்ணில் காதலுடனும் முகத்தில் கேலி புன்னகையுடனும் நின்றான் அவள் கணவன் அர்ஜுன்.

"அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு" என சிரித்தவள் கண்களில் கவலையை கண்டு சிறு முறுவலிலுடன் கேட்டான் "என்னம்மா..."

"இல்ல அர்ஜூ, கண்ணா ஒரு மாதத்திற்கு மேல ஒரு மாதிரி, இருக்கிறான் அதான்"

"கேட்டு பார்க்கிறது"

"கேட்டனே.... "

அதிர்ந்து போய் பார்த்தான் "என்னது கேட்டியா?"

அப்பாவியாய் தலையாட்டினாள். பொங்கி வந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியவன் கேட்டான் "என்....ன சொன்...னான்".

"வேறு என்ன, ஐ ஆம் பைன்க்கா" அச்சுதன் போலவே சொல்லி காட்டியவள் முக்கை பிடித்து திருகியவன்

கேட்டான் "நான் பேசிப் பார்க்கவா?"

சுபத்ரா வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாள். அச்சுதனின் பெண் தொடர்பு சம்பந்தமாக ஏற்கனவே இருவரும் பேசியதை பார்த்து சண்டை பிடிப்பர்களோ என பயந்து போய் கனவனுக்கு அன்புக் கட்டளை போட்டு விட்டாள் இனி இது சம்பந்தமாக இருவரும் பேசக் கூடாது என்று. உண்மையில் சண்டை போடும் அளவில் எல்லாம் அவர்கள் இல்லை ஆனால் இதுதான் சாக்கு என்று அச்சுதன் அப்படியே அதையே மெயின்டைன் செய்துவிட்டான்.

அர்ஜுன் கலகலவென சிரித்தான். அவனுக்கு ஓரளவு அச்சுதனின் பிரச்சனை புரிந்தே இருந்தது. அவனது பிரச்சனையை அக்காவிடம் சொல்ல முடியாது என்பதும் தெரிந்தே இருந்தது ஆனால் சுபத்ரா அவனிடம் கேட்டது தெரியாது. அன்று அந்த பார்ட்டியின் பின் வேலை விடயமாக வெளியூர் சென்றவன் இன்று காலை தான் வந்திருந்தான். அச்சுதனின் அதிர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவனின் உடல் குலுங்கியது. பின் அக்காவிடம் சொல்லவா முடியும் பெண்களை தொட முடியவில்லை என்று.

அவள் தோள்களில் இரு கைகளையும் போட்டு தன்னை நோக்கி திருப்பியவன் “என் மீது நம்பிக்கை இருக்கின்றது தானே” எனக் கேட்கவே தயக்கமின்றி தலையாட்டினாள்.

“இதை பற்றி மேற்கொண்டு நீ எதுவும் பேச வேண்டாம், நானே கண்ணனுடன் பேசுகிறேன் சரியா?”

ஒரு கணம் உதட்டை கடித்தவள் சரி என தலையசைத்தவளின் இதழை ஆள்காட்டி விரலால் விடுவித்தான் "அது என் வேலை".

எது என்பது போல முழித்தவளின் இதழை கடிப்பது போல பாவ்ல செய்தபடி குனிய "ஐயோ இது ஹால்" என்றவாறு மார்பில் கைவைத்து தள்ளி விட்டு ஒடியவளை துரத்தியது அவனின் சிரிப்பொலி.
♥♥♥♥♥

வழமை போல் அறை அருகே இருந்த சிறிய குளத்திற்கு அருகே நின்றாவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தான் அச்சுத கேசவன். டெல்லி என்ன பத்தடிக்கு பத்தடி ஊரா சட்டென அவளை கண்டுபிடிக்க, இந்தியாவின் தலைநகர், வெறும் பெயரை மட்டும் வைத்து ஒரு பெண்ணை தேடுவதற்கு வைக்கோல் போரில் ஊசியை தேடிவிடலாம். ஒரு நாளைக்கு வந்து போவோரின் எண்ணிக்கையே தலை சுற்ற வைத்தது. அதையும் மீறி கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றால் அவனால் முடியாதது இல்லை. சரி தேடி பிடித்தாகிவிட்டது அதற்கு பின் என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவனை பைத்தியம் பிடிக்க வைத்தாள் அந்தப் பெண் சன்விதா.

"யார்... அந்த நிலவு....." யாரோ அச்சுதனின் காதில் பாட திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தான்.

எப்போதும் போல் புன்னகையுடன் நின்றான் அவனது அத்தான் அர்ஜுன்.

"என்ன அத்தான் பாட்டு எல்லாம் பலமா இருக்கு அக்காவோட ஏதாவது சண்டையா"

"சண்டையா..... நான...., அதுவும் உன் அக்கவுடனா.... சே சேச்சே.."

"அதுதானே அக்கா தோப்புக்கரணம் என்று சொன்னாலே உடனே எண்ணிகொள் என்பீர்கள், இதுல சண்டை வேறா" அத்தானின் காலை வாரினான்.

"சரி சரி இன்னும் கொஞ்ச நாள் தானே பிழைச்சு போ மச்சான்" ஏதோ பாவம் போனால் போகட்டும் என்பது போல் பதிலளித்த அத்தானை குழப்பத்துடன் பார்த்தான்.

அவனைவிட குழம்பி போய் பார்த்தான் அவனது அத்தான், நாமதான் பிழையா நினச்சிட்டோமா இவன் காதலிக்கவில்லையா அப்ப வேற ஏதாவது பிரச்சனையா? எதுக்கும் நேரவே கேட்டுருவோம்.

"மச்சான்... கொஞ்ச நாளாவே நிறைய வித்தியாசம் நான் ஏதாவது உதவ முடியுமா?"

"....."

"அக்காவுக்கும் எனக்கும் சந்தோசம்தான், இருந்தாலும் வழமைக்கு விரோதமானது சந்தேகத்துக்குரியது"

"....."

"உனக்குள் ஏதோ ஒரு குழப்பம், எல்லாத்துக்கும் விடை நாமே கண்டு கொள்ள வேண்டும் என்று எந்த விதியும் இல்லை இன்னொருவரையும் கேட்கலாம்"

தலையசைத்த அச்சுத கேசவன் ஏதோ சொல்ல வர அதை இடைமறித்தான் அர்ஜூன் "பிளீஸ் இல்ல அத்தான் ஐம் பைன் என்று மட்டும் சொல்லாதே, இப்பெல்லாம் எவன் சொன்னாலும், அத கேட்டாலே கடுப்பாகுது".

வாய்விட்டே சிரித்தான் அச்சுத கேசவன் "இல்ல அத்தான், அப்படி சொல்லல ஆன எப்படி சொல்றது என்றும் தெரியல" பின் கழுத்தை கைகளால் அழுத்தியவன் ஒருவாறு வார்தைகளை தேடி பிடித்து கோர்த்து அவளை சந்தித்தது முதல் அத்தானிடம் சமர்ப்பித்தான்.

புரியாத குழந்தையாய் அத்தானின் முகம் பார்த்த அச்சுதன், அர்ஜூன்க்கு ஒரு குழந்தையாய் தோன்றினான். "ஹூறே........" என கத்தியவாறு அவனை அணைத்துக் கொண்டான் அர்ஜூன்.

"அத்தான்...." குழப்பத்துடன் அழைத்தான். அவனுக்கு புரியவில்லை தான் சொன்னதை கேட்டதும் அத்தானின் முகம் ஏன் மகிழ்ச்சியில் விகசித்தது ஏன் தன்னை கட்டிகொண்டு மகிழ்ச்சியில் குதிக்கின்றார் என்று.

அச்சுதனை தள்ளி நிறுத்திய அர்ஜுன் காற்றையக காற்றை வாய் வழியே ஊதியவன் "நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுடா" என்றவன் கேட்க தொடங்கினான்.

"வாட் எவர்" திடிரென அத்தானுக்கு என்ன நடந்தது என்பது புரியவேயில்லை அச்சுதனுக்கு.

"காலையில் எழும் போதும் படுக்க போகும் போதும் அவள் நினைவு வருகின்றதா?"

"ஹம்ம்...."

"எதையாவது சாதிக்கும் போது வெற்றி பெறும் போது அவள் நினைவு வருகின்றதா?"

"ஆம்...."

"அவள் நினைவில் வேறு பெண்களை தொட முடியவில்லையா....?"

முகம் சிவந்துவிட்டது அச்சுதனுக்கு "Yeah.."

"உன்னோட வேலைக்கு இடையூறாக இருக்கும் அவளின் நினைவே உனக்கு அமைதியும் தருகின்றது சரியா..."

"நம்பவே முடியாத ஒன்று ஆன அதுதான் உண்மை"

"அவளை பார்த்த அணைத்த கணம் எப்போதும் வேண்டுமென்று தோன்றுதா?"

"யெஸ்..."

"நீ விரும்புவது எல்லாம் அவளை பார்ப்பதும் அவளுடன் இருப்பதும்தான் சரியா?"

அச்சுதன் வெறுமே தலையசைத்தான்.

"டேய் மச்சான் ஒரு வழியா காதல் கடலில் தொபுகடீர் என்று விழுந்ததிட்டடா...."

கண்தட்டி விழித்த அச்சுதன் மென்மையாக கேட்டான் "காதல்..."

"காதலே தான்.... அந்த பெண்ணின் பெயர்...."

தன்னை மறந்த மயக்கத்தில் இருந்தவன் மென்மையாக உச்சரித்தான் அவள் பெயரை "சன்விதா...."

"அடடா பெயர் பொருத்தம் கூட நல்ல இருக்கே..."

"ஹம்... " என புரியாமல் பார்த்த அச்சுதனிடம் "சன்விதா லக்ஷ்மியின் பெயர், அர்த்தம்..."

"அமைதியானவள்...." எதிர்பாரா விதமாக அச்சுதனே சொன்னான். வேற லெவல் என்பது போல் கை விரித்து காட்டிய அர்ஜுன் "சரி... நான் அக்காவிடம் சொல்கின்றேன்" என்றவன் கேட்டான் "அந்த பெண் எங்கேயிருக்கின்றாள்"

இன்னும் மயக்கத்தில் இருந்த அச்சுதன் புன்னகையுடன் தலையசைத்தான் "தெரியாது... ஆனா சீக்கிரம் கண்டுபிடிச்சிருவன்"

சிரித்தவாறே தோளில் தட்டிவிட்டு சென்றான்.

அதே கிறக்கத்துடன் மெல்ல ஆங்கிலத்தில் தனக்குதானே கூறினான் "If it is love then I love this love"


யாசிப்பான்....
 
Top