priya pandees
Moderator
அத்தியாயம் 11
"ஜமீன்தாரையா பேரனுக்கும், பேத்திக்கும் தான் ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கு. நேக்கே கண்ணுல ஒத்திக்கலாம் போலருக்கு, கால காலத்துல கல்யாணத்த முடிச்சுடுங்கோ. பிள்ளைகளுக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிச்சுருக்கும் போலிருக்கு பாருங்கோ" என்றார் பூஜையை முடித்துக் கொண்டு எழுந்த ஐயர்.
"ஆமாவா பல்கித்தான்?" என அவள் அவனை நெருங்கி நிமிர்ந்து டொய்ங் டொய்ங்கென புருவத்தை ஏற்றி இறக்க,
சிரித்துக் கொண்டவன், "அப்ப நீ என்ன லவ் பண்ணலையா?" என்றான் அவனும் அவள்புறம் லேசாக சரிந்து.
"எப்டி ட்விஸ்ட் பண்றீங்க நீங்க? என்னைக்கு எனக்கு நீங்க உங்க சீக்ரெட் எல்லாம் சொல்றீங்களோ அன்னைக்கு தான் நானும் எஸ் ஆர் நோ சொல்லுவேன்"
"அப்ப நாம லவ் சொல்லாமலே தான் எல்லாம் பண்ண போறோம்னு சொல்ற?"
"எல்லாம்னா?"
"எல்லாமே தான் அழகி"
"யூ நாட்டி பல்கித்தான்" என அவன் இடுப்பில் கிள்ள,
"நானும் கிள்ளவாடி அழகி" என்றவனை அவள் வியந்துப் பார்க்க,
"திரும்புடி" என ஆட்கள் இருந்த பக்கம் சிரித்துக் கொண்டே திருப்பிவிட்டான்.
"இவுங்க ரெண்டு பேரும் கடலை தானே போடுறாங்க?" என அவர்களைப் பார்த்து நின்ற சபரியிடம் வளர் கேட்கவும்,
"ஆமா நல்லா சுட சுட வறுக்குறாங்க" என்றான் ஜெயன்.
"பாத்தியா ஜெயனு, இந்த சபரி பல மாசமா கடல போடுதான். ஈஸ்வரன் அண்ணா கூட ஒரு பதினைஞ்சு நாளா கடல வறுக்காரு, ஆனா நாந்தான் பாவமா கடலைய இன்னும் காட்டுல இருந்தே பறிக்காம இருக்கேன்"
"பறிக்க வேண்டிய தான?"
"விட்டாதானடா? விடிஞ்சாலும் அடைஞ்சாலும் ஒட்டி பிறந்த பிறவிகளாட்டம் ஒட்டிட்டே திரிங்க நா நல்லா கடலைய வறுத்துருவேன்"
"அப்படி ஒன்னும் நீ எங்கள கழட்டி விட்டுட்டு எதையும் வறுக்க தேவையில்ல" என சபரி சொல்ல.
"விளங்கிடும்டா" என பேச மற்ற இருவரும் அவனைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஹரி மட்டுமே சிரித்துக் கொண்டு நின்றான்.
"அடுத்த விஷேசம் நம்ம வீட்ல ஈஸ்வரன் கல்யாணம் தான். சொல்லி அனுப்புவேன் தேதி குறிக்க வந்திடணும்" என தாத்தா சொல்லவும்,
"ஷேமமா வந்துடுறேன். எல்லா தேதியும் குறிச்சுத் தர வேண்டியது என் பொறுப்பு"
"இறந்த வீட்ல ஒரு வருஷத்துக்கு எதுவும் நல்லது செய்ய கூடாதுன்னுவாங்களே சாமி?" கௌரி தான் கேட்டார்.
"என்பது வயசு தாண்டிட்டாளே அவா எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சு தான் மேலோகம் போயிருக்கான்னு அர்த்தம். அதனால அவா இப்பவே கிட்டத்தட்ட மூதாதையருக்கு சமானம். நீங்க அவா ஆசிர்வாதத்தோட எல்லா நல்ல காரியமும் பண்ணலாம். தப்பே இல்லை"
"ரொம்ப சந்தோஷம் சாமி" என்றவருக்கு தட்டில் வேட்டி, சட்டை, புடவையோடு, தேங்காய், பழங்கள், கொஞ்சம் ரூபாயும் வைத்து கௌரி நீட்ட பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார் அவர். அனைத்தும் அவர் கையால் தான் நடந்தது. வினோதினி கூட எடுத்து மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்க, கௌரி தான் எல்லாவற்றிலும் முன் நின்றார். சங்கரி அதை தான் விடாமல் பார்த்து நின்றார். அவரால் இப்படி விஷயங்களை தான் எளிதாக கடந்துவிட முடியாது.
சாப்பாடு பரிமாறத் துவங்கினர். ஈஸ்வரன் வெளி வேலையில் இருக்க, நங்கைக்கு அவள் போனில் விடாமல் அழைப்பு வந்து கொண்டிருந்தது. முதலில் பிறகு பேசலாம் என கடந்தவள், மீண்டும் மீண்டும் வரவும், "சரியான இடியட், எடுக்லனா விடணும்னு மேனர்ஸ் தெரியுதா இந்த ரிச்சர்ட்டுக்கு, இப்ப தான அங்கு மார்னிங் எயிட்டே இருக்கும். ஆபிஸ் வந்ததும் கால் பண்ணிட்ருக்கான் இடியட் இடியட்" என திட்டிக் கொண்டே மாடி ஏறிவிட்டாள்.
மேலே ஏறுமுன் மறுபடியும் அழைப்பு வந்துவிட, "எஸ் ரிச்சர்ட்" என அழைப்பை ஏற்றுக் கொண்டு அவளறைக்குள் சென்று மறைய,
"உன் பாசமலர் எவனோ ரிச்சர்ட் ரிச்சர்ட்ன்னு அடிக்கடி பேசுறா, அவன்ட்ட பேசும்போதுலாம் ரூமுக்குள்ள போய் கதவ சாத்திகிடுதா. ஒருவேளை இந்த ரிச்சர்ட்டு தான் அந்த லண்டன் வில்லி சொன்ன ஃபாரீன் மாப்ளையா இருக்குமோ?" என தீவிரமாக ஆராய்ந்தான் சபரி.
"ஈஸ்வரண்ணா கூப்டதும் படக்குன்னு போய் நின்னுச்சுடா இந்த புள்ள. அன்னைக்கு எல்லார்ட்டையும் தான அங்க மாப்ளன்னு அம்மா பேசின விஷயம் தெரியாதுன்னு சொன்னா?"
"நீ என்ன ஓவரா உன் தங்கச்சிக்கு வக்காலத்து வாங்குற?"
"அப்படியாது உன் தங்கச்சிய என்னோட சேத்து வைக்க எதாது பண்ண மாட்டியான்னு ஒரு நப்பாசை தான்" என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இறங்கி சென்று விட்டான் சபரி.
"ஓடிட்டான். நா என்ன பத்தி பேசுனா மட்டும் ஓடிருவான் கோட்டி" என புலம்பிக் கொண்டே அவனும் இறங்கிச் சென்றான். எங்கு சுற்றினாலும் வளசர் அதிலேயே வந்து நிற்க, இப்போதெல்லாம் தெரித்து ஓடிவிடுகின்றனர் இளைஞர்கள்.
அங்கு அறைக்குள் நுழைந்தவள், "நா இன்னைக்கு ஆஃப்னு சொன்னேன் தானே ரிச்சர்ட்? அப்றமு விடாம கூப்பிட்டுட்டு இருந்தா என்ன அர்த்தம்?"
"நீ போன வேலைய விட்டுட்டு மத்த எல்லாம் பாக்குற தன்வி"
"என்ன நா வேலை பாக்கல? டெய்லி என்ன பண்றேன்னு ரிப்போர்ட் குடுக்குறேன். ஒவ்வொரு செக்ஷனும் எப்டி வேலை பண்றாங்கன்னு டீடெயில் ரிப்போர்ட் குடுத்துட்ருக்கேன். செக் பண்றியா இல்லையா நீ? அதுல எதும் சேஞ்சஸ் வேணுமா இல்ல இன்னும் டீட்டெயில் வேணுமா சொல்லு, வில் டு மை பெஸ்ட் ஆன் இட்"
"மொத ஃபீல்ட்ட முடின்னு சொன்னேன் உன்ட்ட"
"ஃபீல்ட் ஃபீல்டுன்னா? அங்க என்ன வேணும் உனக்கு எக்ஸாக்ட்டா சொல்லு. நா அப்ப தான் பெர்மிஷன் கேக்க முடியும். ஃபோட்டோ கேட்ட அனுப்பிட்டேன். மொத்த ஏரியா எவ்வளவு கேட்ட அதையும் அனுப்பிட்டேன், அங்க எப்டி கல்டிவேட் பண்றாங்க பிக்ஸ் கூட அனுப்பிட்டேன். இன்னும் என்ன மேன் வேணும் அதுல?"
"இன்னும் அங்க நிறையா இருக்கு உனக்கு தெரியலன்னு சொல்லு"
"வேற என்ன தெரியணும்னு நீ ட்ரைக்டா சொல்லு ரிச்சர்ட் அப்ப தான் என்னால அத என் கசின்ட்ட கன்வே பண்ண முடியும்"
"எல்லாமே கேட்டு தான் செய்வியா நீ? அது உங்க லேண்டும் தான?"
"எங்க லேண்டா? நா எப்ப உன்ட்ட அப்டி சொன்னேன்?"
"நீ எங்க போயிருக்க, அங்க உன்னோட சேஃப்டி எல்லாம் நா தான் பாக்கணும் தன்வி. நீ உன்னோட தாத்தா வீட்டுக்கு தான் போயிருக்கன்னு கூடவா எங்களுக்கு தெரியாது?"
"ரைட். பட் நா ப்ராஜெக்ட்டா தான் மில்லுக்கு போனேன், சோ அங்க நா ஜஸ்ட் எ கெஸ்ட் ரிப்போர்ட்டர். எல்லாமே ப்ராப்பரா செட்யூல் போட்டு தான் டீடெயில்ஸ் குடுக்குறாங்க, நீங்க இனி என்ன வேணும்னு சொன்னா தான் அதுக்கு தக்கன நா அவங்கட்ட பேசி டீட்டெயில்ஸ் வாங்க முடியும்"
"சரி நா சொல்றது போல செய். அவங்க கல்டிவேஷனுக்கு என்ன உரம் யூஸ் பண்றாங்க எப்டி யூஸ் பண்றாங்கன்னு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணு. காட்டன் மட்டுந்தான் பண்றாங்களா வேறெதுவும் பண்றாங்களான்னு பாரு"
"அதுலாம் எதுக்கு? இங்க உள்ள எதையும் அங்க கல்டிவேட் பண்ண முடியாதே?"
"அது தான் ஸ்டடீஸ்குன்னு அல்ரெடி சொல்லிட்டேனே. தேவையில்லாத கொஸ்டீன்ஸ் கேக்காம சொன்ன வேலை செய் தன்வி. பை" என அவன் இவள் பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.
"இவனோட பெரிய இம்சை" என புலம்பிக் கொண்டே வெளியே வர, எதிரிலிருந்த ஈஸ்வரனின் அறை திறந்திருக்கவும், அவனும் மேலே வந்திருக்கிறான் என நினைத்து அவள் அந்த அறைக்குள் செல்ல, உள்ளே தான் இருந்தான் சபரியுடன் ஏதோ பேசிக் கொண்டு.
"பல்கித்தான்" என அழைத்துக் கொண்டே வந்தவள், சபரியை கண்டதும், "என்ன ரகசியம் பேசுறீங்க?" என இருவருக்கும் நடுவில் செல்ல, ஈஸ்வரன் அவளைத் தோளோடு அணைத்து தன்னோடு இழுத்துக் கொண்டு, "அவங்க கூடவே போ வேலைய முடிச்சிட்டு ஈவ்னிங் வந்திடு, கோவிலுக்கு போகணும்" என சொல்ல,
"பிரச்சினை பண்ணா என்னண்ணா பண்ண?"
"அக்ரிமெண்ட்ட கேன்சல் பண்ணிட்டு வந்திடு. இனி அவனுக்கு நம்மட்ட பிஸ்னஸ் கிடையாதுன்னு சொல்லிடு. இந்த சரக்குக்குள்ள காச நம்ம கோர்ட்ல வசூல் பண்ணிக்கலாம். பட் நம்ம குடுக்குற ப்ளான்ல தான் இனி அவன் விவசாயம் பண்ணணும் அதுக்கு சைன் பண்றானான்னு மட்டும் பாரு"
"சரிண்ணா. இந்த அழகுநங்கை அடிக்கடி ரிச்சர்ட்னு யார் கூடவோ பேசுறா. என்னன்னு கேட்டுக்கோங்க" எனப் போட்டுக் கொடுத்தான்.
"வெரி பேட் ஹேபிட் சபரி" என்றாள் முறைத்துப் பார்த்து.
"பரவால்ல எங்க அண்ணன அலெர்ட் பண்றது என் கடமை"
"நானும் கனலிய அலர்ட் பண்ண வேண்டியிருக்கும் சபரி"
"சரிண்ணா நா கிளம்புறேன். இப்போ போனா தான் ரிட்டனாக சரியா இருக்கும்" என உடனே கிளம்பி விட்டான்.
அவன் வேகத்தைக் கண்டு சிரித்தவள், "உங்களுக்கு பயந்த மாறி அவர் நடிக்கறதும். நீங்களும் தெரியாத மாதிரி நடிக்றதும். ப்பா பிண்றீங்க போங்க" என்றவளைக் கழுத்தோடு இறுக்கி தன் முகத்தோடு நெருக்கியவன், அவள் காதில் முத்தம் பதிக்க, பெருவிரல் வரை சிலிர்த்தது அவளுக்கு.
"அழகி" அவள் காதினுள் அழைக்க,
"எஸ் பல்கித்தான்" என்றாள் நெளிந்து கொண்டே,
"வாசல்ல உங்கம்மா நம்மள பாத்துட்டே நிக்றாங்க, இதென்ன லண்டன் பழக்கமா ரெண்டு பேர் கிஸ் பண்றத நின்னு வேடிக்கைப் பாக்குறது?" என்றான் குறும்பாக, நங்கை சட்டென்று வாசலைத் திரும்பிப் பார்க்க, உண்மையாகவே தீயாக முறைத்து நின்றார் சங்கரி.
"நீங்க கிஸ் பண்ணும் போதே நா அலர்ட் ஆகிருக்கணும் பல்கித்தான்" என செல்லமாக முறைக்க,
"போடி" என்றான் அவனும் செல்லமாக,
"அந்த ரிச்சர்ட் கால் பண்ணி, ஃபீல்ட்டோட கல்டிவேஷனுக்கு என்ன உரம் போடுறோம், வேறெதுவும் கல்டிவேட் பண்றீங்களான்னு டீடெயில்ஸ் கேக்குறான். நாளைக்கு இந்த ரிப்போர்ட் தான் சப்மிட் பண்ணணும். அத சொல்ல தான் வந்தேன். எங்கம்மா முறைக்றத பாத்தா இன்னைக்கு நைட்டே ஃப்ளைட் தான் போல" என ரகசியம் போல வேகமாக சொல்லி நகர,
"மூணு மாசம்னு சைன் பண்ணிட்ட, இருந்து முடிச்சுட்டு தான் போக முடியும் ரிப்போர்ட்டர் மேடம்" என வெளியே நின்ற சங்கரேஸ்வரியை பார்த்தே சிரித்துக் கொண்டு சொன்னான்.
"இங்க வந்தப்றம் என் பேச்ச மீறி என்னலாமோ செய்றல்ல தன்வி நீ?" என வெளியே வந்தவளின் கையில் நறுக்கென்று கிள்ளி அழைத்துச் சென்றார் அவர்.
"ரதீஸ்" என லண்டனிலிருந்து அவனுக்கு உதவும் நண்பனுக்கு அழைத்தான்,
"சத்தியா, பிரச்சனை ரொம்ப பெருசுடா. நானே உனக்கு கூப்பிட தான் நினச்சேன். உங்கத்தைய தீவிரவாத லிஸ்ட்ல சேத்துவிட ப்ளான் பண்ணிருக்காங்க. உங்கத்த இங்க இருக்க உமன்ஸ் க்ளப் லீடர். சோ பொறுப்பேத்துட்டு பல இடத்துல இஷ்டம் போல கையெழுத்து போட்ருக்காங்க. அதுல ஒன்னு தீவிரவாதி ரெண்டு பேருக்கு பேயிங் கெஸ்ட்டா அடைக்களம் கொடுத்தது அதவச்சு தான் ப்ளான் பண்ணிருக்காங்க, ஆனா உனக்கு இதெப்படி தெரியாம போச்சு? நா இங்க மாட்டுற அன்னைக்கு என்னையும் தீவிரவாதி ஆக்கிருவானுங்க சத்தியா"
"ஒரு ஹெட் மாதிரி பேசுடா. அந்தம்மா தீவிரவாதின்னு தெரிஞ்சு தான் தங்க இடம் குடுத்தாங்களா?"
"அது தெரியல, ஆனா பேப்பர்லாம் க்ளியரா இருக்கு, உன் அத்த நல்லா தெரிஞ்சு அவங்கள சேஃப் பண்ணதான் தங்க வச்சுட்டதா, பட் அது கரெக்ட்டா நீ இங்கிருந்து கிளம்பின ஒன் மந்த்ல தான் நடந்துருக்கு"
"அவங்கள வச்சு என்ன லாக் பண்ண போறாங்களா?"
"இருக்கலாம்"
"பட் உன் லேண்ட் தான் அவங்க டார்கெட்னா? அவங்களால அத மீட்க முடியுமா?"
"டிரை பண்ணட்டுமே. இப்ப இங்க வந்துருக்க சங்கரிக்கு எல்லாம் தெரியுமா தெரியாதான்னு விசாரி ரதீஸ்"
"ஓ.கே சத்தியா, பாதிய நீ எனக்கும் சொல்ல மாட்டேங்குற மாட்டிட்டா காப்பாத்தி விட்ருவன்னு மட்டும் நம்புறேன்டா. உன் அத்த இதுல இருந்து எப்டி தப்பிக்க போறாங்க?"
"அது அவங்க பிரச்சினை. நமக்கு நம்ம பொருள் சேஃப்டி தான் முக்கியம்" என்றதும் ரதீஸ் சிரித்துக் கொண்டான். அவன் குணம் அறிந்தவனாகிற்றே, அதனால் வந்த சிரிப்பது. இருவரும் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தனர். அவன் அடுத்தும் அங்குள்ள ஓரிருவரிடம் பேசி வைத்தான்.
இவன் அடுத்ததாக இங்கு அழைத்து பேசியது விவசாய சங்கத் தலைவரைத் தான். "கூட்டம் போடுறது என்னாச்சு தலைவரே?"
"தம்பி இருக்குற பிரச்சினைல புதுசா ரிஸ்க்கெடுக்க முடியாதுன்னு யாரும் வர மாட்டேங்குறாங்க"
"நீங்களே இன்னும் ஸ்ட்ராங்கா இல்ல போல இருக்கே?"
"ஈசியா கிடைக்குற மகசூல விட்டுட்டு எவனாவது கஷ்டப்பட்டு கிடைக்குறதுக்கு தாவுவானா? அதான் எவனும் வர மாட்டேங்குறான்" என்றார் அவர்.
"நா சொல்றது உங்களுக்கு விளையாட்டா இருக்குள்ள? நீங்க உங்கள அழிச்சுக்கல அடுத்து வர்ற ஜெனரேஷனயே அழிக்கிறீங்க"
"தம்பி"
"கூட்டத்துக்கு ஏற்பாடு பண்றீங்க. பண்ணணும்"
அவருக்கும் வேறு வழியில்லை இவனையும் பகைத்துக் கொள்ள முடியவில்லை, அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை திண்டாடிக் கொண்டிருந்தார். யாருக்கும் தெரியாமல் அவன் திட்டமும் மிக ரகசியமாக தான் இருந்தது.
எல்லாம் முடித்து அவன் கீழே வர, இவனிடம் சொல்லிக் கொண்டுக் கிளம்பக் காத்திருந்த அனைவரும் ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு கிளம்பினர். எல்லோரும் கிளம்பிய பின்னர் தன் பஞ்சாயத்தை ஆரம்பித்தார் சங்கரி.
படம் பார்க்க அமர்ந்ததுபோல் கால்மேல் காலிட்டு அமர்ந்து விட்டான் ஈஸ்வரன்.
"அப்பா பதினாறு கழியணும்னு சொன்னீங்க கழிஞ்சாச்சு. இப்ப சொல்லுங்க என் பையனுக்கு மதுவ கட்டி தர உங்க மருமகள கேளுங்க"
"ம்மா ஐம் நாட் இன்ட்ரஸ்டட்" உடனே சொல்லிவிட்டான் ஹரிசுதன்.
"யு ஜஸ்ட் ஷட்டப். உங்கப்பா சொன்னாரா இப்படி பேச சொல்லி" என்றவர், "நேத்தே நா என்ன நிலைமை எல்லாம் சொன்னேன்ல இது நடந்தே ஆகணும்" என்றார் வைத்தியநாதனிடம் கண்ணை உருட்டிக் காண்பித்து. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு தான் நின்றனர்.
"என்ன மாமா இந்தம்மா இப்படி பேசுது?" என்ற ஜெயனுக்கு பதில் சொல்லாமல் மதுவை தான் பார்த்திருந்தான் வளர். அவள் பார்வை ஹரியிடமே இருப்பது அவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.
"ப்பா பேசுங்கப்பா" என நங்கை அப்பாவின் கையைச் சென்றுப் பிடிக்க,
"உங்கம்மா அங்க பெரிய பிரச்சினைய இழுத்துவிட்டுட்டு வந்துருக்காடாம்மா. அதுலயிருந்து எப்டி தப்பிக்க போறோம்னே தெரியல. ஆனா அவ இங்க ஈசியா பேசி விளையாண்டிட்ருக்கா"
"என்னப்பா சொல்றீங்க"
"எல்லாமே ப்ளான்ல நடந்துருக்குடா குட்டிமா"
"தெளிவா சொல்லுங்கப்பா"
"சோ எல்லாம் ப்ளான் தான் இல்லையா? ஃபர்ஸ்ட்டே ப்ளான் பண்ணிட்டு தான் கிளம்பி வந்துருக்கீங்க?" என எழுந்து நின்றான் ஈஸ்வரன்.
"ப்பா நா கேக்றதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. எனக்கு லண்டன்ல ஒரு பிரச்சினை. உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?" என்றார் சங்கரி.
"என்னம்மா பிரச்சினை?"
"அதெல்லாம் சொல்றதுக்கு முன்ன எனக்கு பதில் சொல்லுங்க, மதுவ கட்டி தர முடியுமா முடியாதா?"
"முடியாதுன்னு சொல்லுங்க தாத்தா" அவனிடம் எந்த பதட்டமும் இல்லை.
"ஏன் முடியாது? அவேன் என்ன சொல்றது? பொண்ணுக்கு பையனுக்கும் இஷ்டம்னா யாரும் எதும் சொல்ல முடியாது. ஏன்னா அவங்க மேஜர். ஆனா நா உங்கள மரியாதையா கேக்றேன் ப்பா"
"ஏன்மா அவசரபடுற? அவள கட்டிக்குடுக்க அவ அம்மாவும், அப்பாவும், அண்ணாவும் சம்மதிக்க வேணாமா? பொறுமையா பேசி கேளு சம்மதிக்க வச்சு சிறப்பா கல்யாணம் பண்ணலாம், பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்கோங்க" என்றார் தாத்தா.
"தாத்தா மதுவ நா வளசருக்கு தான் கட்டி குடுப்பேன்" என்றான் நிமிர்ந்து நின்று ஈஸ்வரன்.
"அவகிட்ட சண்டைன்றதுக்காக அப்டி பேசாத ஈஸ்வரா. மதுக்கு என்ன இஷ்டம்னு கேளு" என்றார் தாத்தா.
செந்தில்நாதனும், கௌரியும் ஈஸ்வரனின் வார்த்தைக்காக அமைதியாக நின்றனர். அவன் முன்பே சொல்லியிருந்தான் தான் பேசிக் கொள்வதாக, அதனால் தைரியமாகவே அமர்ந்திருந்தனர்.
"அண்ணா உன் பொண்ண எனக்கு மருமகளா தரமாட்டியா?" என்றார் சங்கரி இப்போது செந்தில்நாதனிடம்.
"நா சொல்றதுதான் ஃபைனல்" என்றான் இப்போதும் ஈஸ்வரன்.
"என் பையன் சொல்றது தான் சங்கரி எங்க முடிவும். நா அவன் பொறுப்பல என் பொறுப்ப குடுத்து பல வருஷமாச்சு" என்றார் செந்தில்நாதனும் நிதானமாக.
"ச்ச அப்பா அண்ணான்னு எப்பையும் உங்கள நம்பி நடுத்தெருவுல தான் நிக்கிறேன். இந்த வீட்ல தானே பொறந்தேன் நானும்? என் அம்மா இருந்துருந்தா எனக்கு இன்னைக்கு இந்த நிலமை வந்துருக்குமா? உங்கட்டலாம் இப்டி கெஞ்சிட்டு நின்னுருப்பேனா?"
"சங்கரி ஈஸ்வரன்ட்ட பொறுமையா கேளு. நீ வந்ததுல இருந்து அவன்ட்ட சண்டை பிடிக்குற அதான் அவன் தங்கச்சிய உனக்கு மருமகளாக்க யோசிக்கிறான்"
"இப்ப என்ன அவன் கால்ல விழ சொல்றீங்களா?"
"வேஸ்ட் வேஸ்ட் விழுந்தாலும் குடுக்க மாட்டேன்" என்றான் கையைத் தட்டிவிட்டு சாதாரணமாக.
"பாத்தீங்களாப்பா எப்டி பேசுறான்னு" என்றவர் அவன் அகங்காரத்தை உடைக்கவே, "இங்க வா மது" என அவள் கைபிடித்து இழுத்து வந்து எல்லார் முன்னும் விட்டவர், "உனக்கு ஹரிய கட்டிக்க சம்மதமா சொல்லு" என்க, வளசரவாக்கத்தின் உள்ளம் நடுங்கியேவிட்டது. இத்தனை நாட்கள் ஈஸ்வரன் சொல்லிவிட்டான் என்பதற்காக மட்டும் அவளை தன் வாழ்க்கையில் கொண்டு வர முடிவெடுத்திருந்ததாக நினைத்திருந்தவனின் உள்ளம் மதுவின் இருப்பிடத்தைத் தெளிவாகக் காட்ட, பயமாக இருந்தது அவனுக்கு இப்போது.
"சொல்லு மது" என கௌரியும் கூறினார், அண்ணனை எதிர்க்க மாட்டாள், வளசரும் அவளைச் சுற்றிச் சுற்றி வருவது அவளுக்குத் தெரியும் என்றே நினைத்து அவரும் அவளைப் பேச ஊக்கினார்.
"நா சொன்னதுலாம் நியாபகம் இருக்குல்ல? சொல்லு" என்றார் சங்கரி.
"ப்பா அம்மா என்னப்பா செய்றாங்க?" என நங்கை வளசரவாக்கத்தைப் பார்த்து வேதனையாகக் கேட்டாள்.
"என்ன யோசிக்க கூட விடலடா உங்கம்மா. எதாது பண்ணணும். நா ஈஸ்வரன்ட்ட பேசணும் நினைச்சேன். ஆனா அதுக்குள்ள இப்படி எல்லாரையும் நிக்க வச்சுருக்கா"
"அண்ணா" என்றாள் மது ஈஸ்வரனைப் பார்த்து, அவன் இப்போதும் சாதாரணமாக தான் நின்றான்.
"உன் அண்ணனுக்கு பயந்து வாழ்க்கைய தொலைச்சுடாத. உனக்கு என்ன வேணும்னு சொல்லு" என்றார் சங்கரி.
அவள் அப்பவும் அண்ணனைத் தான் பார்த்தாள், "அண்ணா" என்றாள் தேம்பிக் கொண்டு.
"உனக்கு என்ன இஷ்டம்னு சொல்லு மது" என்றான் அவன்.
"தெரியலண்ணா" என்றாள் இரு கைகளையும் குழந்தையாகப் பிரித்துக் காண்பித்து. வளசரவாக்கத்தின் கண்களும் கலங்கி சிவந்து விட்டது. அவன் கையைப் பிடித்துக் கொண்டான் ஜெயன்.
"ஏய் நா அவ்வளவு சொன்னேன் இப்ப கைய விரிக்குற நீ?" என்றார் சங்கரி கோவமாக.
"இரு சங்கரி பிள்ள அழுதுட்டுருக்கு நீ எதுக்கு திட்ற? உங்கிட்ட சொன்னாளா ஹரிய பிடிக்கும்னு?" எனத் தாத்தாக் கேட்க,
"ஆமா நேத்து நைட்டு கூட சொன்னேன் தலையாட்டுனா இப்ப நடிக்குறா"
"சரி சொன்னாளா? நல்லா யோசிங்க உங்கட்ட சரின்னு சொல்லிருந்தா எல்லார் முன்னவும் கூட அதையே தைரியமா சொல்லுவா என் தங்கச்சி. அவள குழப்பி விட்ருக்கீங்க குழம்பி நிக்கிறா அவ்வளவு தான்" என்றான் ஈஸ்வரன்.
"மது ஏன்டி அழுற" என்றார் கௌரி அவளை தன்புறம் இழுத்துப் பிடித்து.
"ம்மா உனக்கு நா வளரத்தான கட்டிக்கணும், அதனால அவர கட்டிக்கலாம்னு நினைச்சுருந்தேன். இவங்க ஹரி ரொம்ப ஹாண்டசம் உன் ஏஜ் உன்னோட நல்லா ப்ரண்டலியா இருப்பான்னு சொன்னாங்க, லண்டன் லைஃப் அது இதுன்னு சொல்லும் போது அதும் பிடிச்சுருந்தது போல இருந்தது அதான் அதையும் யோசிச்சு பாத்தேன். ஆனா அவங்க பையன் என்ன திரும்பி கூட பாக்க மாட்டாங்க, ஏன் நா அழகா இல்லையான்னு யோசிச்சு அவங்கள பாத்திருப்பேன், அப்பகூட ஹரி என்ன பாக்கவே மாட்டாங்க. ஆனா அண்ணா இவ்ளோ ஸ்டாராங்கா வேணாம்னு சொல்றாங்கன்னா கண்டிப்பா அது எனக்கு செட்டாகதுன்னும் தோணுதும்மா நா இப்ப என்ன செய்யட்டும். எல்லாமே பிடிக்குதுன்னா நா பேட் கேர்ளாம்மா?" எனக் கேட்டு அழ, அனைத்து பெரியவர்களுக்கும் புரிந்தது அவள் குழப்பத்தின் அளவு.
"இங்க பாரு மது. உன் மனசு இன்னும் தெளிவாகல. உனக்கு முடிவெடுக்க தெரியல அவ்வளவு தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இதுல நீ குட் கேர்ள் பேட் கேர்ள்ன்ற விஷயமே வர வேண்டியதில்ல" என கௌரி சொல்ல,
"மது இங்க பாரு" என்ற ஈஸ்வரனின் அதட்டலில் அவனிடம் திரும்பி நின்றாள்.
"உனக்கு எங்களோட இருக்கணுமா இல்ல தனியா எங்கையாது போய் இருக்கணுமா?"
"அப்படி எதுவும் இல்லண்ணா" என்றாள் பயந்து,
"வளசரவாக்கம், ஹரின்னு யாருமில்ல, படிக்க போ. வெளில போய் தங்கி படி, இந்த இயர் படிப்பு முடியவும் போ. அது லண்டனா இருந்தாலும் ஓ.கே தான். பட் நீ கண்டிப்பா ஒரு டூ இயர்ஸ் வெளில இருக்கணும். ப்ளேஸ் எதுன்னு சூஸ் பண்ணு" என முடித்து விட்டான்.
"டேய் ஜெயனு. அப்ப மதுவ நா பாக்க முடியாதாடா? அவ பாட்டுக்கு லண்டன் போய்ட்டா நா எப்டி அவள கரெக்ட் பண்ணடா" என்க,
"இவ்வளவு நேரமு அழுது வடிஞ்ச தான நீ?"
"இல்லையே அவள எல்லாரும் கேள்வியா கேக்றாங்களேன்னு பாவமா பாத்தேன்"
"நம்பிட்டேன் போ"
"தாத்தா மது பிரச்சினை முடிஞ்சது ரைட். இப்ப அழகுநங்கைய எனக்கு கட்டித் தர கேளுங்க. நாங்களும் மேஜர் தான் ஆனாலும் உங்களுக்காக அவங்கட்ட கேக்க சொல்றேன்" என்றான் கூர்மையாக சங்கரியைப் பார்த்து.
"இவங்க ரெண்டு பேரும் ஏன்டா இப்படி முட்டிக்குறாங்க செந்தில்நாதா?" என்றார் தாத்தா சலிப்புடன்.
"ஈஸ்வரா இத இன்னொரு நாள் பேசுவோமே? அவளுக்கு அங்க ஏதோ பிரச்சினைன்னு சொன்னா அத என்னன்னு கேட்டு சால்வ் பண்ண முடியுமா பாரேன். உனக்கு அங்க பழக்கமான ஆட்கள் உண்டு தானே?" என்றார் செந்தில்நாதன்.
"கிளிச்சான். அதென்ன காஞ்சிபுரமா? இல்ல அங்க இருக்கறவங்களையும் உங்களமாதிரி கண்ண மூடிட்டு இவன நம்புறளவுக்கு கோமாளிங்கன்னு நினச்சீங்களா?" என்றார் சங்கரி எரிச்சலோடு.
"கரெக்ட் ப்பா. அவங்க பிரச்சினைய அவங்களே பாத்துக்கட்டும். எனக்கு தேவை நங்கை மட்டுந்தான். அவள குடுத்துட்டுப் போய் அவங்கப் பிரச்சினையப் பாத்துக்க சொல்லுங்க"
"நீ யாருடா என்ன போ சொல்றதுக்கு. நா எங்கேயும் போ மாட்டேன்"
"போக முடியாதுன்னு சொல்லுங்க அதான் சரியா இருக்கும்" என்றவனைக் கண்டு விழித்தார், உண்மை தெரியுமோ என பயந்து பார்த்தார். அவரின் பலம் அவரை பற்றிய உண்மை தெரியும் வரை தானே? அதன்பின் மரியாதை எங்கிருந்து கிடைக்கும் என்றெண்ணினார்.
"பயமா இருக்கா?" என்றான் அவனாகவே,
"என்ன பயம்? நா ஏன் பயப்டணும்? என் பொண்ணுக்கு அங்க எவ்வளவு பெரிய சம்மந்தம் காத்துட்ருக்குன்னு தெரியுமா உனக்கு?"
"சொல்லுங்க தெரிஞ்சுக்குறேன்" என்றவனை முடிந்த மட்டும் முறைத்து பார்த்தார்.
"என்ன மாப்ள பிரச்சினை?" என்றார் தாத்தா வைத்தியநாதனிடம்.
"ஏதோ தீவிரவாதீங்கன்னு தெரியாம வீடு குடுத்து தங்க வச்சுட்டேன், அதுக்கு பதிலா நாம இங்க இருக்க லேண்ட குடுத்தா போதும்னு சொல்றா மாமா. அதுக்கு தான் மதுவ கல்யாணம் பண்ணி அத சீரா வாங்கலாம்னு சொல்றா, எனக்கும் ஒன்னும் புரியல"
"எடுக்குறது பிச்ச அதுல கூட ஈகோ தேவைபடுதுல்ல?" என்றான் ஈஸ்வரன் நின்ற இடத்திலிருந்து நகராமல்.
"ஏய் யார பாத்து பிச்சை கிச்சைன்ன?" என சங்கரி அவனிடம் எகிறிக் கொண்டு செல்ல,
"ஸ்டே தேர். கிட்ட வந்தா எதக் கொண்டு அடிப்பேன்னு தெரியாது" என்றான் அவன்.