வரம் 33
வீடு வந்து சேர்ந்த சிவானந்துக்கு கட்டுக்கடங்காத கோபம் உண்டானது. 'இந்தக் ஹரிணி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாள். என் நந்தனின் வாழ்வை ஏற்கனவே பாழாக்கியது போதாதென்று அவனின் எதிர்கால வாழ்வையும் கெடுக்க நினைக்கின்றாளே. இவளை இப்படியே விட்டால் சரிவராது. ஏதாவது செய்யணுமே' என்றவன் மனதினுள் புதுத் திட்டம் ஒன்று உருவானது. அதற்கு முதல் நந்தனை சந்தித்து வருவோம் என்று நினைத்தவன் புறப்பட்டு யதுநந்தன் வீட்டிற்குச் சென்றான். ஆனால், அவனிடம் அன்று நடந்த சம்பவங்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை.
மறுநாளே தன் தந்தையின் நண்பரான பொலிஸ் கமிஷனரைச் சென்று சந்தித்தான். நேற்று நடந்தவற்றை அவரிடம் கூறினான். தன் பெற்றோரிடம் எதுவும் கூற வேண்டாம் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டான். இடத்தின் அடையாளம், ஆட்களின் அடையாளம் என்பவற்றைக் கேட்டவர் தம்மிடம் இருந்த குற்றவாளிகளில் அவன் குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் ஒத்துப்போகும் புகைப்படங்களைக் காட்டினார். அதில் இவனைக் கடத்திய இருவரின் புகைப்படங்களும் இருந்தன. அவர்கள் இருவருக்கும் வேறு குற்றங்களுக்குமான காரணங்கள் இருப்பதால் கைது செய்ய உடனேயே நடவடிக்கை எடுத்தார். அவருக்கு நன்றி தெரிவித்தவன் ஹரிணி விடயத்தைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டு வந்தான்.
அடுத்து இரு தினங்களுக்குள்ளேயே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எந்த நிறுவனத்துடனும் அவளுக்கு மாடலுக்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் செய்துவிட்டான். கிடைத்தவற்றையும் இடைநிறுத்த வைத்தான். அத்தோடு அவளைத் தமிழ்நாட்டிலேயே இருக்காமல் செய்யும் நோக்கில் பெங்களூரில் ஒரு நிறுவனத்துடன் அவள் ஒப்பந்தம் செய்யுமாறு ஏற்பாடு செய்து விட்டான். அதன் பிறகே அவன் ஓய்ந்தான்.
நடந்த அனைத்தையும் யதுநந்தனிடம் கூறிமுடித்தான் சிவானந்த். எழுந்து வந்து தன் நண்பனைக் கட்டித் தழுவினான்.
"மச்சி..., இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கு. எனக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லையே?"
"அந்த நேரம் உன்னிடம் சொன்னால் நீ ரென்ஷனாகியிருப்பாய். நீ சந்தோஷமாய் இருக்கணும். அதுக்காக நான் எதுவும் செய்வன்."
"மச்சி, இவ்வளவு நாளாக இந்த விசயத்தை சொல்லாத நீ இன்று வந்து சொல்லக் காரணம் என்ன? திரும்பவும் அவளால் ஏதாவது ப்ராப்ளமா?"
"கரக்டா கெஸ் பண்ணிட்ட மச்சி. அவள் திரும்பவும் சென்னை வந்திட்டாள். எனக்கு ஏனோ மனசுக்கு சரியாகப் படவில்லை. உறுத்தலாவே இருக்கு. என்னவென்று தெரியல. நீ எதுக்கும் கொஞ்சம் , கேர் ஃபுல்லா இருந்துகொள்."
"ஏன் மச்சி அவள் திரும்ப சென்னைக்கு வந்தது உனக்கெப்படித் தெரியும்?"
"அவளை பெங்களூருக்கு போகுமாறு செய்தபின்னும் எனக்கு என்னவோ ஒரு உறுத்தல் இருந்தது. எனவே நம்ம கம்பனிக்கு செக்யூரிட்டி சேர்விஸ் செய்யும் நிறுவனம் மூலம் அங்கும் அவளை சில காலம் கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்தன். இவள் மாடலிங் செய்யப் போற இடத்தில் ஏதோ பிரச்சினை ஆகியிருக்கு. அதிலிருந்து விலத்திட்டாங்க. பிறகு அவள் அங்கேயே பல நிறுவனங்களிடம் சான்ஸ் கேட்டிருக்கிறாள். பெரிய அளவில் கிடைக்கலையாம். சினிமா சான்சுக்கும் ட்ரை பண்ணியிருக்கிறாள். பட் அதுவும் இவளுக்கு சரியா அமையல. திடீரென புறப்பட்டு இங்கே வந்துவிட்டாள். அதுதான் எனக்கு டவுட்டா இருக்கு. என்ன பிளான் போட்டு வந்திருக்கிறாளோ."
"ரொம்ப தாங்ஸ்டா மச்சி."
"எதுக்கு தாங்ஸ்?"
"எனக்காகப் பார்த்துப் பார்த்து எவ்வளவோ செய்திருக்காய்."
"மச்சி நீ என் பெஸ்டிடா. உனக்காக நான் எதுவும் செய்வன்"
இருவரும் கட்டியணைத்துத் தம் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
"மச்சி, எதுக்கும் நீ கொஞ்சம் கேர் ஃபுல்லா இருந்துக்க"
என்றவன் அவனுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்திவிட்டுச் சென்றான்.
மாமரத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து வானத்து நிலவை ரசித்துக்கொண்டு இருந்தாள் வர்ஷனா. அலுவலகத்தில் அதிக வேலை இருப்பதால் வர தாமதமாகும் என்று யதுநந்தன் கூறியிருந்தான். தோட்டத்திற்கு வந்தவள் நிலவின் ஒளியிலும் விளக்குகளின் ஒளியிலும் ஜொலித்த தோட்டத்தை ரசித்தவாறு அங்கேயே இரவு வரை இருந்து விட்டாள். சாப்பிட வந்து அழைத்த சந்திரமதியிடமும் யதுநந்தன் வந்த பிறகு சாப்பிடுவதாகக் கூறி அவரைத் தூங்குமாறு சொல்லி அனுப்பிவிட்டாள்.
மேகத்துக்கு பின் மறைந்த நிலவைப் பார்த்து 'என்னைப் பார்க்க உனக்கும்கூடப் பிடிக்கலையா? மேகத்துக்குப் பின்னால் போய் ஒளிந்து கொள்கிறாய். யதுவுக்கும் என்னைப் பிடிக்கவில்லை. என் காதலில் ஒரு துளி கூட யதுவுக்கு நம்பிக்கையில்லை. நான் அவர் மீது கொண்ட காதலை எப்படி அவருக்கு நிரூபிக்க முடியும். காதலை உணரத்தான் முடியும். அதற்கு அவருக்கு எங்கே நேரமிருக்கிறது. எப்பவும் ஆபிஸையே கட்டிக்கிட்டு அழட்டும். அவருக்கு என் மேல் அன்பில்லை.' என்று நிலவைப் பார்த்துப் புலம்பினாள்.
'அன்பில்லாமல்தானா தினமும் காலையில் உன் நெற்றியில் முத்தமிடுகின்றார்'
என்று மனச்சாட்சி அவளிடம் கேள்வி கேட்டது.
'என்னவோ... நான் முழித்திருக்கும்போது அவர் முத்தம் தந்தாரா? இல்லையே... அப்படியே தந்திட்டாலும். நான் தூங்கும்போதுதானே தருகின்றார்.'
'அதிலும் நீ சரியான கள்ளிடி. தினமும் அவன் எழும்புவதற்கு முதலே எழுந்தாலும், தூங்குவது போல் பாசாங்கு செய்து அவன் முத்தமிடுவதை கள்ளத்தனமாய் ரசிக்கின்றாயே."
'ஆமா, அப்புறம் நான் எழுந்தது தெரிந்தால் அந்த ஒரு முத்தமும் இல்லாமல் போய்விடும்.'
'அவன் தினமும் தரும் அந்த முத்தத்திற்கு அர்த்தம் காதல் இல்லாமல் வேறென்னவாம்'
'ம்ச்... நீ வேற அடிக்கடி வந்து என்னை கன்ப்யூஸ் பண்ணுறாய்'
என்று தன் மனசாட்சியோடு பேசியவள் கண்களை மூடி அந்தக் கதிரையில் தலைசாய்த்தாள். மனக்கண்முன் அவளின் யது வந்தான். அவன் நினைவு தந்த சுகத்தில் வாய்விட்டுத் தனக்குப் பிடித்த பாடலைப் பாடினாள்.
"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை..
என் கண்களைத் திருடிக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை..
ஆளான ஒரு சேதி அறியாமலே.. அலைபாயும் சிறு பேதை நானோ...
உன் பேரும் என் பேரும் தெரியாமலே.. உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ..
வாய் பேசவே.. வாய்ப்பில்லையே..
வலி தீர வழியென்னவோ"
என்று மிகவும் மெதுவான குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.
பாட்டு முழுவதையும் பாடி முடித்ததும் கண்களைத் திறந்தாள். அவள் எதிரே அவள் பாடலின் நாயகனே கைகளைக் கட்டியபடி நின்றான்.
அவனை அங்கு எதிர்பார்க்கவேயில்லை. திணறிப் போய் எழுந்து நின்றுவிட்டாள். இவன் எப்போது வந்தான். வந்ததே தெரியவில்லையே. காரின் சத்தம் கூடக் கேட்கவில்லையே. 'எப்படிக் கேட்கும், இல்லை எப்படிக் கேட்கும்கிறன். உன்னையே மறந்து ஏதோ சித்திராவுக்குத் தங்கச்சி என்ற நினைப்பில் பாடிக்கொண்டிருந்தால் எப்படிக் கேட்கும்கிறன்' என்று அவள் மனச்சாட்சி குத்திக் காட்டியது.
"நல்லாயிருக்கு. மிக இனிமையான குரல் உனக்கு." என்றான் அவன்.
'பார்த்தாயா... என் குரலை நக்கல் பண்ணினாய். என் யதுவே இனிமையான குரல் என்று சொல்லிவிட்டார்.' என்று தன் மனசாட்சிக்கு ஒரு குட்டு வைத்தவள், அவனுக்கு வெட்கப் புன்னகை ஒன்றை சிந்தினாள்.
தன் கையிலிருந்த கடிகாரத்தைப் திருப்பி நேரத்தைப் பார்த்தான். நேரம் பத்து மணி பதினைந்து நிமிடத்தைக் காட்டியது.
"ஏன் இந்த டைமில் இங்க உட்கார்ந்திருக்காய். தூங்கலையா?"
"நீங்க வருவிங்கன்னு பார்த்திட்டு இருந்தன்"
"ஏன்மா... நான் ஹோல் பண்ணிச் சொன்னேன் தானே. வர லேட் ஆகும் என்று. ஆபிஸில் வேலை முடிய லேட் ஆகிட்டு. இந்த பனியில் வந்து உட்கார்ந்திருக்காயே. உள்ளே வாம்மா..."
என்றவன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அறைக்குள் சென்றவன் ஃபிரஷ் ஆகி வந்தான். அறையில் அவளைக் இல்லை. எங்கே சென்றுவிட்டாள் என்று நினைத்தவன் கீழே இறங்கி வந்தான். வரவேற்பறையிலும் அவளைக் காணவில்லை. சமையலறையில் வெளிச்சம் தெரியவும் அங்கே சென்று பார்த்தான். அங்கே அவளைக் காணவும்,
"இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுறாய்?"
"உங்களுக்காகத்தான் சாப்பாட்டைச் சூடாக்குறன்"
"எனக்கு எதுவும் வேணாம். போய் படு. நான் பிரட்டும் ஜாமும் சாப்பிட்டுக்கிறன்"
அவளுக்குக் கோபம் வந்தது.
'இவனுக்காக இவ்வளவு நேரம் சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இவர் என்னடாவென்றால் வெள்ளைக்காரன் ஸ்டைலில் பிரட்டாம் ஜாமாம். யாருக்கு வேணும் அதெல்லாம்' என்று மனதுக்குள் அவனோடு சண்டை பிடித்தவள் வெளியில்,
"நானும் இன்னும் சாப்பிடல.... எனக்கு ரொம்பப் பசிக்குது..." என்று முணுமுணுத்தாள்.
"ஏய்... நீ இன்னும் சாப்பிடலையா? சரி, சரி. சாப்பாட்டை எடுத்து வை நானும் சாப்பிடுறேன்" என்றவன், ஓவனில் அவள் சூடாக்கி வைப்பதை எடுத்து சாப்பாட்டு மேசையில் வைத்தான். இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
அவள் மிக வேகமாக உண்பதைப் பார்த்ததும் அவனுக்கு மனம் தவித்தது. பாவம் பசி பொறுக்கமாட்டாள். இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கிறாளே என்று உருகினான். ஆனாலும் அவன் மனதின் ஒரு ஓரத்தில் மெல்லிய சந்தோஷமும் எட்டிப் பார்த்தது. 'எனக்காகக் காத்திருக்கின்றாளே. என்மீது அன்பிருப்பதால்தானே தன் பசியையும் எனக்காகப் பொறுத்திருக்கின்றாள்.' என்ற எண்ணமே அவனுக்கு சந்தோஷத்தைத் தந்தது. அவன் அவளையே பார்த்துக் கொண்டே அவளைப் பற்றி நினைத்ததாலோ, அல்லது அவசரம் அவசரமாக சாப்பிட்டதாலோ அவளுக்குப் புரைக்கேறியது. அவள் புரைக்கேறித் தவித்ததைப் பார்த்தவன் பதறி எழுந்து அவள் தலையில் இடது கரத்தால் மெதுவாகத் தட்டிவிட்டுப் பருகுவதற்குத் தண்ணீரை எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான். அதனை வாங்கிப் பருகியவள் அவனின் கரிசனையில் மனம் நெகிழ்ந்து போனாள்.
படுக்கையில் வந்து படுத்ததும் அலுப்பில் தூங்கிப் போனான் யதுநந்தன். அவன் முகத்தையே பார்த்தவாறு படுத்திருந்தாள். சிறிதுநேரத்தில் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றான் என்பதைக் கண்டதும் வழமை போல் மெல்ல அவனருகில் நெருங்கிப் படுத்தவள் அவன் அருகாமை தந்த இதத்தில் தானும் துயில் கொண்டாள்.