வரம் 35
தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரவும் இந்த அதிகாலையில் அழைப்பது யாராக இருக்கும் என்று யோசித்தாள் வர்ஷனா. ஒருவேளை யது தன் அலைபேசி நின்றுவிட்டதால் வேறு எண்ணிலிருந்து அழைக்கின்றானோ என நினைத்தவள் அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ யது..." என்றாள். மறுமுனையில் வேறு ஒரு ஆணின் குரல் கேட்டது.
"ஹலோ மேடம், நான் யது இல்லை. அவரது மானேஜர் பாலகிருஷ்ணா."
யதுநந்தனின் மானேஜர் பாலகிருஷ்ணாவை அவள் இரண்டு மூன்று தடவைகள் சந்தித்திருக்கிறாள். சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வயதுடையவர். யதுநந்தனின் நம்பிக்கைக்குரியவர். அவர் ஏன் இந்த நேரத்தில் அழைக்கின்றார். என் யதுவுக்கு.... அவளால் மேற்கொண்டு சிந்திக்கவே முடியவில்லை. மனதில் உண்டான பயத்தை ஒதுக்கிவிட்டு
"சொல்லுங்க சார். என்ன விஷயம். இந்த நேரத்தில் ஹோல் பண்ணியிருக்கிங்க?"
"மேடம் இன்று ஈவினிங் நம்ம ஃபக்டரியில் லேபர்ஸூக்கிடையில் சண்டை. அது கலவரமாக ஆயிடுச்சு. யாரோ ஃபக்டரிக்குத் தீ வைச்சிட்டாங்க. ஒரு சில லேபர்ஸ் நெருப்பில் மாட்டிக்கிட்டாங்க."
"அச்சச்சோ யார் உயிருக்கும் ஆபத்தில்லையே சார்."
"இல்லை மேடம். யார் உயிருக்கும் ஆபத்தில்லை. ஃபயர் சேர்விஸ் வரமுதலே நம்ம நந்தன் சார் அவர்களைக் காப்பாத்திட்டார். சின்னத் தீக்காயத்தோடு தப்பிட்டாங்க. ஆனால்..."
அவர் இழுக்கவும் வர்ஷனாவுக்கு மூச்சடைத்துப் போய்விட்டது.
"ஆனால், என்ன சொல்லுங்க சார்?" தவிப்புடன் கேட்டாள்.
"அவர்களைக் காப்பாற்ற போன நம்ம சாருக்குத் தான் தீக்காயம் பட்டிடுச்சு"
"ஐயோ யது.. யது.. யதுவுக்கு என்னாச்சு? அவர் இப்போ எ..ங்கே இருக்கிறார்?"
"பதட்டப்படாதிங்க மேடம். சின்னக் காயம்தான். ஹொஸ்பிடலில் சேர்த்திட்டோம். எந்தப் பயமும் இல்லை."
"நீங்க சொல்வது நிஜம்தானே. அவருக்குப் பெரிதாக எந்த ஆபத்துமில்லையே? எந்த ஹொஸ்பிடல் சொல்லுங்க? நான் இப்பவே அங்கே வாறன். அத்தை மாமாவுக்கு சொல்லி அவர்களையும் கூட்டி வாறன்."
"ஐயோ மேடம், சார் இதுக்காகத்தான் உங்களுக்குக் ஹோல் பண்ணச் சொன்னவர். அவருக்குப் பெரிய காயம் எதுவுமில்லை. இப்போதைக்கு வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் என்றார். இன்று மோர்னிங்கே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்திடுவாராம். வந்ததும் அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்று சொல்லச் சொன்னார்."
"நான் அவரை உடனேயே பார்க்கணும்."
"அதுதான் மேடம். சார் உங்களுக்காக கம்பனிக் காரை வீட்டிற்கு அனுப்பச் சொன்னார். இப்போ வந்திடும். உங்களைப் பார்க்கணுமாம். உங்களை உடனேயே வரச்சொன்னார். முக்கியமா வீட்டில் யாருக்கும் இப்போது எதுவும் தெரிய வேண்டாம் என்றார்."
"இப்பவே நான் வாறேன்"
என்றவள் உடனேயே உடையை மாற்றிக் கொண்டு புறப்பட்டாள். முகம் கழுவித் தலைவாரக்கூட அவள் நினைக்கவில்லை. அவசரத்தில் தனது அலைபேசியைக் கட்டிலில் வைத்துவிட்டு எடுக்க மறந்து விட்டாள்.
வீட்டினர் யாரும் இன்னும் எழும்பவில்லை. தோட்டத்தைத் தான்டி வெளிக் கேட்டிற்கு வந்தாள். அங்கே கடமையிலிருந்த வாட்ச்மேன் அவளைக் காணவும் திகைத்து விட்டார். இந்த நேரத்தில் இவர் எங்கே செல்கிறார். அதுவும் இந்தக் கோலத்தில்... வீட்டு எஜமானியிடம் எப்படிக் கேள்வி கேட்பது என்று தடுமாறி நின்றார். அவர் தடுமாற்றம் புரியவும்
"அண்ணா நம்ப ஃபாக்டரியில் ஃபயர் ஆக்ஸிடன்டாம்..."
"ஆமாம்மா.. எனக்கும் தெரியும். அங்கேதான் என் மச்சான் வேர்க் பண்றான்."
"ஓ... அதுதான்... சார் அவசரமாய் வரச் சொன்னார். கம்பனிக் கார் வரும். வந்ததும் போகணும்"
"சரியம்மா"
சில நிமிடங்களிலேயே கறுப்பு நிறக் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய டிரைவர்,
"மேடம், பாலகிருஷ்ணன் சார் அனுப்பினார்."
"ஓகே வாங்க" என்றவள் வாட்ச்மேனிடம் தலையாட்டிவிட்டு காரில் ஏறினாள். வாட்ச்மேன் வழமையாகச் செய்வதுபோல் புதிதாக வந்த அந்தக் காரின் எண்ணைப் பதிந்து வைத்தார்.
கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இன்னும் வானம் வெளுக்காததால் கார் செல்லும் பாதை தெரியவில்லை. அதைக் கவனிக்கும் மனநிலையிலும் வர்ஷனா இல்லை. மனம் முழுவதும் யது யது எனப் புலம்பிக் கொண்டேயிருந்தது. எப்போது அவனைப் பார்ப்போம் என்ற தவிப்பு மட்டுமே இருந்தது. ஓரளவு தூரம் செல்லவும் கார் நிறுத்தப்பட்டது.
"ஹொஸ்பிடல் வந்துவிட்டதா...?" என்று கேட்டுக் கொண்டே கார் கதவைத் திறக்க முயன்றாள். அவள் கதவில் கைவைக்கவும் மறுபக்கக் கதவைத் திறந்துகொண்டு ஒருவன் காரினுள் ஏறினான்.
"யார் நீங்க..." என்று அவள் கேட்க முனையும்போதே உள்ளே ஏறியவன் தன் கையிலிருந்த பாட்டிலில் இருந்து எதையோ ஸ்பிரே பண்ணினான். அதனை சுவாசித்தவள் அப்படியே மயங்கிப் போனாள்.
காலையில் ஆறு மணிக்கு யதுநந்தன் வீட்டிற்கு வந்தான். அவனது கார் வாசலில் வந்து ஹாரன் அடிக்கவும் கேட்டைத் திறந்து விட்டார் வாட்ச்மேன். உள்ளே சென்ற காரிலிருந்து அவன் மட்டும் இறங்குவதைப் பார்த்ததும் அவருக்கு யோசனையாக இருந்தது. இவரைக் காணச் சென்ற வர்ஷாம்மாவைக் காணவில்லையே என்று யோசித்தபடித் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
காலையில் குளித்து விட்டு பூஜையறைக்குச்
சென்றுகொண்டிருந்த சந்திரமதி, வெளியிலிருந்து உள்ளே வந்த யதுநந்தனைக் கண்டதும்,
"நந்தும்மா, இந்த நேரத்தில் எங்கே போய்விட்டு வருகின்றாய்?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தார். அவன் முகத்திலும் கைகளிலும் பட்டிருந்த தீக்காயத்தைப் பார்த்ததும் பதறி விட்டார்.
"நந்து... என்ன இது? உன் உடம்பெல்லாம் காயமாயிருக்கே?"
"அம்மா அதெல்லாம் ஒன்றும் இல்லை. சின்னக் காயம்தான்"
"இது சின்னக் காயமா?" என்று கலங்கியபடிக் கேட்டவர், "கனகா..." என்று உரக்க அழைத்தார். சமையலறையில் தாயுடன் நின்றிருந்த கனகா சத்தம் கேட்கவும் அவ்விடத்துக்கு ஓடி வந்தாள்.
"என் றூமில் மொபைல் இருக்கு. அதை உடனேயே எடுத்திட்டு வா. டாக்டருக்குப் ஃபோன் பண்ணனும். அப்படியே நந்து அப்பாவையும் எழுப்பி உடனேயே வரச் சொல்லிவிடு"
"வேண்டாம் கனகா" என்று அவளைத் தடுத்து நிறுத்தியவன்
"அம்மா... இது சின்னக் காயம் தான். ட்ரீட்மெண்ட் எடுத்திட்டன். ரெஸ்ட் எடுத்தாப் போதும். கனகா, நீ போய் எனக்கு ஒரு காஃபி மட்டும் எடுத்து வா" என்றான்.
"நந்தும்மா எதுக்கும் நம்ம டாக்டர்கிட்டயும் ஒரு தடவை காட்டுறது பெஸ்ட் தானே."
"அம்மா இன்று கட்டாயம் நம்ம டாக்டர்கிட்ட போறேன். ஓகே யா" எனவும் அங்கே வந்தார் ஈஸ்வர். இவனது காயத்தைக் கண்டதும் அவரும் பதறி விட்டார். அருகில் வந்து அமர்ந்தவர் அதற்கான காரணத்தைக் கேட்டார். சந்திரமதியும் "ஆமா நந்து எப்படித் தீக்காயம் ஆச்சு?"
"நேற்று ஈவினிங் ஆபிஸில் இருக்கும்போது
பக்டரியில் ப்ராப்ளம் என்று ஹோல் வந்திச்சு. அங்கே ஏற்கனவே யுனிட்டுகளுக்கிடையில் ப்ராப்ளம் இருந்திச்சு. நேற்று அது அதிகமாச்சு. ஃபோனில் பேசிப் பார்த்தன். சரியாகல. வர்ஷாவை வீட்டில் கொண்டுவந்து விட்டிட்டு நேரே ஃபக்டரிக்கே போயிட்டேன். நான் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்க மறுபக்கம் கைகலப்பாயிடுச்சு. அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸூக்கு இன்போர்ம் பண்ணியாச்சு. அதற்கிடையில் எவனோ ஃபக்டரி உள்ளே நெருப்பு வைச்சிட்டான். ஒருசிலர் உள்ளே மாட்டிட்டாங்க. அவங்களக் காப்பாற்றப் போய்தான் இந்தக் காயம் பட்டிச்சு."
"கடவுளே... யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே நந்தும்மா"
"ஐந்து பேர்க்குத்தான் லேசான காயம். அவங்களை ஹொஸ்பிடலில் அட்மிட் பண்ணியாச்சு. அவங்க கூட நம்ம மானேஜர் நிற்கிறார். தேவையான உதவிகளை அவர் செய்வார்."
"ஏன் நந்து, ரொம்ப சேதமா?" என்றார் ஈஸ்வர்.
"கொஞ்சம் அதிகம் தான்பா. இற்ஸ் ஓகேபா. இன்சூரன்ஸ் இருக்குத்தானே."
"நைட் ஃபுல்லா தூங்காம ஃபக்டரி, ஹொஸ்பிடல் என்று அலைஞ்சிருக்க. போம்மா, போய் கொஞ்ச நேரம் தூங்கு" என்று அவனை அறைக்கு அனுப்பி வைத்தார் சந்திரமதி.
அறைக்குள் வந்தவனது விழிகள் தனது மனையாளையே தேடியது. அவளை அங்கே காணவில்லை எனவும் சீக்கிரமே எழுத்திட்டாள் போல என்று நினைத்தான். சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்த தன் அலைபேசியை சார்ஜில் போட்டான். குளித்துவிட்டு வந்து படுத்தவன் அலுப்பில் உடனேயே தூங்கியும் விட்டான்.
ஒன்பது மணி போல் தூக்கம் கலைந்து எழுந்தவன் உடனேயே வர்ஷனாவைத் தேடினான். அவள் அறையில் இல்லை எனவும் ஏமாற்றமாக இருந்தது. 'என்மீது அவளுக்கு அன்பே இல்லை. இரவு முழுவதும் நான் வரவில்லை என்று என்னைத் தேடவேயில்லை. காயத்தோடு வந்த எனக்கு ஆறுதலுக்குக் கூட பக்கத்தில் வரவில்லையே. நான் நினைத்தது சரிதான். உண்மையான காதல் என்பதே பொய். பெண்களே ஏமாற்றுபவர்கள்தான்.' என்று புலம்பியவன் பசி எடுக்கவும் கீழே இறங்கிச் சென்றான். தாயை அழைத்தவன் தனக்கு டிபன் எடுத்துவைக்கக் கேட்டான். உணவைப் பரிமாறியபடி
"நந்தும்மா, வர்ஷாம்மா இன்னும் டீ கூட குடிக்கல. வரும்போது அவளையும் கூட்டி வந்திருக்கலாமே."
"என்னம்மா, அவ கீழதானே இருக்கா. இன்னும் பிரேக் பாஸ்ட் சாப்பிடலையா?"
"என்ன கண்ணா... அவ எங்க இங்கே இருக்கா? அவ் இன்னும் எழுந்து வரலையே"
"ஒரு வேளைக்கே எழுந்து வெளியில் எங்காவது போயிருப்பாளோ? கோயிலுக்கு...?"
அப்போது அங்கே உணவுடன் வந்த கனகா
"அக்கா வெள்ளனவே (வேளைக்கே) வெளியில் போனதா வாட்ச்மேன் அண்ணா சொன்னார். அதுவும் பெரியண்ணா வரச்சொல்லித்தான் போனாங்களாம்"
"இல்லையேம்மா அவளை நான் கூப்பிடலையே"
என்றவன் சாப்பாட்டை விட்டு உடனே எழுந்து வாட்ச்மேனைத் தேடி கேட்டுக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றான். அவரிடம் விவரத்தைக் கேட்டவன் குழம்பிப் போனான்.
அறைக்குச் சென்று அங்கே சார்ஜில் போட்டிருந்த தன் அலைபேசியை எடுத்தவன் வர்ஷனாவின் எண்ணுக்கு அழைத்தான். கட்டிலில் கிடந்த அவளது அலைபேசி சத்தமிட்டது. அப்போதுதான் அதனைக் கண்டவனுக்கு, அவள் அதனை அங்கேயே விட்டுச் சென்றது புரிந்தது.
நாள் முழுவதும் மானேஜர் அவருடனேயே நின்றிருந்தார். எனவே அவர் வர்ஷனாவுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். எனினும் மனச் சமாதானத்திற்காக அவருக்கு அழைத்து வினவினான். அவர் தான் வர்ஷனாவுக்கு அழைப்பு எதையும் மேற்கொள்ளவில்லை என்று கூறிவிட்டார். வீட்டிலிருந்த எல்லோருக்கும் பதட்டம் ஏற்பட்டது. எதற்கும் ஒரு சிறிய சந்தேகத்தில் ஈஸ்வர் அலைபேசியில் வர்ஷனா வீட்டினருடன் தொடர்பு கொண்டார். சாதாரணமாக நலம் விசாரிப்பது போல் அங்கே வர்ஷனா சென்றாளா என்பதை அறிய முயன்றார். அவர்களின் பேச்சில் அவள் அங்கே செல்லவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது.
எதுவும் புரியாது குழம்பி போய் விட்டான் யதுநந்தன். என்ன நடந்திருக்கும் என்று அவனால் ஊகிக்கவே முடியவில்லை. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாக வாட்ச்மேனைத் தேடிச் சென்றான்.
"அண்ணா, நீங்க நம்ம வீட்டுக்கு வர்ற வேகில்ஸ் நம்பர் எல்லாம் நோட் பண்ணி வைப்பிங்கதானே. மோர்னிங் வந்த அந்தக் காரின் நம்பரும் நோட் பண்ணிங்களா?"
"ஆமா தம்பி நோட் பண்ணியிருக்கன்." என்றவர் அந்தக் காரின் இலக்கத்தை பதிவுப் புத்தகத்தில் பார்த்துத் தெரிவித்தார்.