Mr D devil
Moderator
பாரதத்தில் அம்பானி, அதானி ரத்தன் டாடா ஆகியோரைக் பின்தொடர்பவர்களும் அவர்களுக்கான ரசிகர்களும் இருப்பார்கள் அல்லவா... அதே போல் இந்தியாவின் பெண் பணக்காரர்களில் ஒருவராக திகழும் தேவி நாச்சியாருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்...
அவருக்கு மட்டுமல்ல இளம் வயதிலயே தேவி அண்ட் தேவின் நிறுவனத்திற்கு உறுதுணையாக... தந்தையின் தொழிலை திறம்பட நடத்தி வரும் ஆகாஷிற்கும் பல ரசிகர்கள் உண்டு...
ஆண்மையும், அழகும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் இளம் தொழிலதிபர் மேல் பல மீடியாக்களின் பார்வை மட்டுமல்லாமல் பல இளம் பெண்களின் பார்வையும் விழுந்து கொண்டு தான் இருக்கிறது..
(இவையனைத்தும் இந்திய பணக்கார பட்டியலில் தேவி நாச்சியார் இடம் பெற்ற பிறகே...அதற்கு முன் தேவி நாச்சியார் என்பவரும் சரி ஆகாஷ் வானவராயன் என்பவனும் சரி தங்களை அதிகம் வெளி உலகத்திற்கு வெளிக்காட்டிக் கொண்டதில்லை...)
தேவி நாச்சியாரின் குடும்பத்தில் தேவிக்கு அடுத்து சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்படுபவன் தான் ஆகாஷ் வானவாரயன்... இப்படியான சூழ்நிலையில் இன்று காலை ஐந்து மணியளவில் வெளியான ஆகாஷை பற்றிய காணொளி தீயாக பரவி வருகிறது... அது வெளியான சில மணி நேரங்களிலேயே தேவி அக்காணொளியை முடக்கி விட்டாலும் இப்போது வரையிலும் சில செய்திகளும்,பேச்சுகளும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஆகாஷ் மட்டுமல்ல அவனுடன் இணைந்து சென்ற சாதாரண விளம்பர மாடல் அழகி இப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டாள்... கிட்டதட்ட தேவியின் வீட்டில் தான் முகில் தங்கியிருக்கிறாள் என்பது வரை வெளிவர தொடங்கி இருந்தது...
*****
தற்போது தேவியின் இல்லத்தில்
ஆகாசின் கவனமின்மையால் இப்படியானதென தேவராஜ் கடிந்து கொண்டிருக்க தேவியோ அனைத்து வீடியோக்களையும் முடக்கி விட்டதாக சமாதானம் செய்து கொண்டிருந்த நேரம் தன் அறையிலிருந்து வெளி வந்தாள் முகில்
நேராக தேவியின் முன் நின்றவள் சிறு கேலி புன்னகையுடன்
"வாவ்... பக்கா பிஸ்னஸ் மைண்ட் மிசஸ் பிறை...ஆனா பாருங்க நீங்க பதினாறடி பாய ரெடியா இருந்தா... நான் நாற்பதடி பாய ரெடியா இருப்பேன்...நீங்க இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சி தான் இன்னொரு வீடியோ ஸ்ட்ராங்கா எடுத்து வைச்சு இருக்கேன்..." என்றவள் தன் அலைபேசியிலிருந்த காணொளியை ஓட விட்டாள்.
நேற்று அவளின் அறையில் அவன் கட்டியணைத்த காணொளியை தான் அவரிடம் காட்டிக் கொண்டிருந்தாள். அக்காணொளியை கண்ட மற்றவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்றால் ஆகாஷின் இதயம் தன் மேகத்தின் செயலால் நின்று துடித்தது..
அவன் காதலை கூறிய நாளிலிருந்து இன்றுவரை அவள் நடந்துக்கொள்ளும் முறையும் பேச்சும் அவனுக்கு கோபத்தைக் கொடுத்திருக்கிறது என்றாலும் வெறுப்பைக் கொடுத்ததில்லை... இன்றைய செயல் அவள் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுமோ என பயந்தான்... தன் நினைவில் சுழன்று கொண்டிருந்தவனை நடப்பிற்கு கொண்டு வந்தது அவளின் குரல்...
"இப்ப இந்த வீடியோவை லீக் பண்ணா என்ன ஆகும்னு நினைக்கிறீங்க மிஸஸ் பிறை..." எனக் கேட்டவளிடம் பதில் கூறவில்லை என்றாலும் ஏளனப் புன்னகையுடன் பார்த்தார் தேவி... அந்த சிரிப்பேக் கூறியது இதை விட பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்து இருக்கிறேன் என்று.
அவரின் சிரிப்பை வேறு விதமாக புரிந்துக் கொண்டவளோ "ஃபர்ஸ்ட் லீக் ஆனா வீடியோவை வைரலாகாம பார்த்துக்கிட்டது மாதிரி
இதையும் வைரலாகாம பாத்துக்க போறீங்களோ மிஸஸ் பிறை..." எனக் கேட்டவளிடம் அத்தனைக் கேலி விரவியிருந்தது...
"நோப் நெக்ஸ்ட் வீடியோவை உன் ஃபோன்ல இருந்து லீக் ஆகவே விட மாட்டேன். தட்ஸ் இட்..." என தோள் குலுக்க... பல்லைக்கடித்து எதிரில் நின்றவரை பார்த்தாள்.
" என்ன பாக்குற? ஃபர்ஸ்ட் வீடியோ லீக் பண்ண சொன்னது நீன்னு தெரிஞ்சும் சும்மா இருந்த மாதிரி இந்த டைமும் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கா மாட்டேன்... இனி நீ என்ன பண்றயோ அதுக்கு ஈக்வால உனக்கு கிடைக்கும். அண்ட் இத்தனை நாள் நீ பேசனதுக்கெல்லாம் அமைதியாயிருந்தது போல இனியும் அமைதியா இருப்பேன்னு மட்டும் நினைக்காத... பதிலுக்கு பதில் திருப்பி தந்துட்டே இருப்பேன்.. எல்லாத்துக்கும் ரெடியா இரு..." என கடுமையாகவே எச்சரித்தார்.
இத்தனை நாட்கள் முகில் பேசிய பேச்சைப் பொறுத்துக் கொண்டிருந்தற்கு காரணம் பிறையும், தேவாவும் தான். ஆம் சிறு பெண் ஏதோ விவரம் இல்லாது இப்படி செய்துக் கொண்டிருக்கிறாள் போக போக நம்மை பற்றி புரிந்து கொள்வாள் எனக் கூறி இருவரும் தேவியை அடக்கி விட்டனர். ஆனால் இன்று அவள் நடந்துக் கொண்ட முறையும் சரி செய்த செயல்களும் சரி சற்றே அதிகப்படி என்பதால் அவளை நேரடியாகவே எச்சரித்தார் தேவி.
அவரின் எச்சரிக்கை தன்னை எள்ளளவுக் கூட பாதிக்கவில்லை என்பதை போல் சத்தமிட்டு சிரித்தவள்
"அச்சோ மிஸஸ் பிறை நான் ரொம்ப பயந்துட்டேன். நீங்க என்னை மிரட்ட மிரட்ட எனக்கும் இன்னும் வெறியாகுது. சட்டுன்னு இந்த வீடியோவை லீக் பண்ணா என்னனு தோணுது..." என ஒரு வித உடல் மொழியுடன் கூறினாள்...
அவளின் உடல் மொழி தேவிக்கு ஏதோதோ நினைவினை கொடுக்க கண்களை இறுக மூடி த்திறந்தவர்
"நீ ஒன்னு பண்ணா உனக்கு நாலா திருப்பிக் கொடுப்பேன். இனியும் நீ செய்யறதுக்கு எல்லாம் நான் அமைதியா போவேன்னு மட்டும் நினைக்காத..." எனக் கடினமான குரலில் எரிச்சரிக்க... அதனை துளியும் கண்டுகொள்ளவில்லை அவள்... அவர் எச்சரிக்கை செய்ததை சுலபமாக கடந்திருக்க கூடாதோ? பின் வரும் விளைவுகளை யோசித்து இருக்க வேண்டுமோ?
முகிலை எச்சரித்து விட்டு திரும்பியவர் தனக்கு எதிரில் முகம் இறுக நின்றிருந்தவனைப் பார்த்தார்.
"எங்கே... எங்கே விட்டேன்..." என நேற்றைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனுக்கு சட்டென நேற்று முகில், ஓர் ஆடவனின் தோள் சாய்ந்து சென்றது நினைவு வந்தது...
'நிச்சியம் இவன் தான் காணொளியை பதிவு செய்த ஆளாக இருப்பான்...' என மனம் அடித்து கூறியது 'எப்படி அவனை கவனிக்காமல் விட்டோம்...' என நினைத்தவனின் முகம் இன்னும் இன்னும் சீற்றத்தில் இறுகியது... தன் சீற்றத்தை அடக்க கரத்தை மடக்கி ஒவ்வொரு விரலாக சொடக்கெடுத்தான்.
முகம் இறுக தன் நினைவில் மிதந்து கொண்டிருந்தவனின் தோளில் கைவைத்தார் தேவி... தேவியின் ஸ்பரிசத்தில் தன் நினைவுக்கு வந்தவன் அவரைப் பார்க்க... அவரோ கண்களை மூடித் திறந்து புன்முறுவல் பூத்தார்... அது இன்னும் இவனுக்கு சங்கடத்தை கொடுக்க தன் பார்வையை தளர்த்திக் கொண்டான். அவனின் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்தவர் எதுவும் பேசாது தன் அறையினுள் நுழைந்துக் கொண்டார். அவரின் பின்னாலயே இறுகிய முகத்துடன் பிறை சென்று விட தேவராஜோ மகனையும், முகிலையும் முறைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார்... இளையவர்கள் மூவரும் அவரவர் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டனர்... மீதம் ஆகாஷ் முகில், மற்றும் தேவம்மாள் மட்டுமே அங்கு நின்றிருந்தனர்.
தேவம்மாளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியே இவர் தானே... முகிலை அழைத்து வர ஆகாசை அனுப்பாது இருந்திருந்தால் இன்று இவனுக்கு இந்த பெயர் வந்திருக்காது அல்லவா... இவள் இப்படி செய்வாள் என எண்ணியிருந்தாள் நிச்சியம் ஆகாசை அவளிடத்தில் அனுப்பி வைத்திருக்கவே மாட்டார்..
"என்ன கெழவி யோசனை எல்லாம் பலமா இருக்கு..." தன் அருகில் கேட்ட முகிலின் குரலில் நிமிர்ந்தார் தேவா...
அவரின் பார்வையில் ஒற்றை புருவத்தை உயர்த்தி "என்ன..." என்றாள் மீண்டும்.
"ஏன் இப்படி பண்ண..." அழுத்தமானக் குரலில் கேட்டார். அவளின் தோளில் கை போட்டுக் கொண்டவள்
"ஆக்ஸிவலி டார்லி ( actually) என் டார்கெட் உன் பேரன் மிஸ்டர் ஆகாஷ் வானவராயனே இல்லை. நான் வேற பிளேன் தான் பண்ணேன்... ஆனால் தெய்வம்(?) இந்தா டி அல்வா பழமுன்னு உன் பேரனை என்கிட்ட கோர்த்து விட்ருச்சு. சோ யூஸ் பண்ணிக்கிட்டேன். பட் நான் போட்ட பிளனை விட இது சூப்பர் பிளேன் தெரியுமா... நான் ஜஸ்ட் போதையில போயி என்னோட மெடிக்கல் சர்டிஃபிகேட்டை மீடியா முன்னாடி காட்ட நினைச்சேன்... ஆனா அடிச்சுது பாரு சிக்ஸர்.
அவரை அங்க பார்த்ததும் தான் இந்த பிளேனே எனக்கு தோணுச்சு சோ எக்ஸ்க்யூட்(executed) பண்ணிட்டேன். (Suddenly) சடன்லி எக்ஸ்க்யூட் பண்ண பிளேனா இருந்தாலும் சிக்ஸர் அடிச்சிருச்சு..." என கர்வ புன்னகையுடன் கூறியவள் மீண்டும்
"இனி நானா போயி தேவி நாச்சியார் பொண்ணு நான்னு எல்லார்கிட்டயும் சொல்ல வேணும்னு இல்லை... அவங்களே நான் யாரு? என்னன்னு கண்டுப் புடுச்சு சொல்லிருவாங்க..." என சந்தோசம் சிரிப்பொடு கூறியவளுக்கு பதில் கூறாது பக்கவாட்டில் நின்றிருந்த ஆகாசை அழுத்தமாகப் பார்த்தார்...
அவரின் பார்வையே மாலில் சந்தித்த போதே அவளை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தால் இத்தனை நடந்திருக்குமா? எனக் கேட்காமல் கேட்டது... இதற்கு என்ன பதில் கூறுவான் அவன். அவள் மேலிருந்த தனிப்பட்ட கோபத்தில் வந்துவிட்டேன் என்றா கூறுவான்... அவரின் பார்வைக்கு சற்றே தயங்கி பதில் பார்வை பார்த்தான்.
இத்தனை வருடங்களில் ஆகாஷ் இப்படி தலைக் குனிந்து தயங்கி நின்று பார்த்திராதவருக்கு இன்றைய அவனின் தயக்கமும்,பார்வையும் ஏதோ போல் இருக்க எதுவும் பேசாது தன் அறையை நோக்கி நடந்தார்.
"அடேங்கப்பா... அரண்மனை கிழவியோட வாயைக் கூட வெறும் பத்தே பத்து வரியில அடக்கிட்டனே.. க்ரேட் முகில் நீ..."ஆகாஷ் என்ற ஒருவன் அங்கு நிற்பதை கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாமல் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டவள் மாடிப்படியை நோக்கி நடந்தாள்.
அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் மாடிப்படியை நெருங்கியதும் நான்கே எட்டில் அவளை நெருங்கி இடையோடு வளைத்து தூக்கி இருந்தான்...
"என்ன பண்றீங்க மிஸ்டர் வானவராயன்...என்னை விடுங்க., யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க விடுங்க என்னைஐஐ..." என திணறி திமிறி மெல்லிய குரலில் கத்தியதெல்லாம் அவனுக்கு துளியும் கருத்தில் பதியவில்லை போலும்.. இரண்டே எட்டில் மாடிப்படிக்கு அடியில் இருந்த ஸ்டோர் ரூமை அடைந்தவன் அவளை கீழ் இறக்கினான்.. அடுத்த நொடி அங்கிருந்து விலகி செல்ல முற்பட... மின்னல் வேகத்தில் ஸ்டோர் ரூமின் கதவை சாற்றியவன் அவளை வெளி விடாது வழி மறைத்து நின்றான்.
"இங்க பாரு ஆகாஷ்.. நீ பண்றது சுத்தமா சரியில்ல யாரவது ப்பாத்தா என்ன நினைப்பாங்க..." மீண்டுமொரு முறை கூற அவனின் கண்கள் வஞ்சினத்தில் பளபளத்தது.
அவன் பதில் பேசாது நிற்கவும்
"இப்ப என்னை விடல.. கண்டிப்பா கத்தி கூச்சல் போடுவேன்...." என எச்சரிக்கையாக கூறினாலும் குரலில் லேசான நடுக்கம் இருக்க தான் செய்தது...
அவளின் நடுக்கத்தை ரசித்தப்படியே
பேண்ட் பாக்கட்டில் கைவிட்டு தன் தொலைபேசியை எடுத்தவன் கேமராவை ஆன் செய்து இருவரும் நன்றாக தெரியுமாறு அருகிலிருந்த செல்ஃப்பில் வைத்தான்... அவனின் செய்கையில் நறுமுகிலின் மான் விழி இரண்டும் தெறித்து விடும் அளவிற்கு விரிந்தது...
####
அஷ்க்கு புஷ்க்கு கிஸ் சீன் தானே எதிர் பார்த்தீங்க... இன்னைக்கு அது வாய்ப்பு இல்லையே...
ஒரு டாஸ்க்...
நாளைக்கு அப்டேட் வேணும்னா மோர் தென் டென் லைக்ஸ் வந்து இருக்கணும்
PS: இங்க சைட்ல டென் லைக்ஸ் வந்து இருக்கணும்...