எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழியா நினைவின் அழகிய நிதர்சனமே - கதை திரி

Status
Not open for further replies.

Asha Evander

Moderator

அழியா நினைவின் அழகிய நிதர்சனமே!

(கதை முழுவதும் கற்பனை காட்சிகளே. பெயரோ, கதையில் குறிப்பிட்ட இடங்களோ நிஜத்தில் யாரையும் குறிப்பிட்டு உருவாக்க பட்டவை அல்ல)

அத்தியாயம் 1

“தோற்றங்கள் மாறிப்போகும்

தோல் நிறம் மாறிப் போகும்

மாற்றங்கள் வந்து போகும்

மறுபடி மாறிப் போகும்

ஆற்றிலே வெள்ளம் வந்தால்

அடையாளம் மாறிப் போகும்

போற்றிய காதல் மட்டும்

புயலிலும் மாறாதம்மா!”

தமிழ்நாடு எல்லையில் சோலையம்மன் வீற்றிருக்கும் ஊர் சோலையூர். எவரும் சீக்கிரத்தில் சென்று விட முடியாதபடி பல கட்டுப்பாடுகளை கொண்ட சிறிய கிராமம். பார்க்க கிராமம் என்றாலும் பேச்சு வழக்கிலும் சரி, அவர்களின் பழக்க வழக்கங்களிலும் சரி நகர்புற அளவிற்கு தோரணை இருக்கும். அவர்களின் குலதெய்வம் சோலையம்மன் எந்த குறையும் வைக்காமல் அவர்களை கருத்தாய் பாதுக்காப்பதால் இன்னும் வறுமை எனும் சொல் அவர்களை நெருங்காமல் செழிப்புடன் அவ்வூர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த கிராமத்தில், தனது சிறிய ஓட்டு வீட்டில் சமையலறைக்குள் புளி பானைக்குள் தலையை விட்டு தேடிக் கொண்டிருந்தாள் அலர்மேல் வள்ளி.

“இங்க தானே வச்சேன். மச்சான் போகும் போது கூட எடுத்து பார்த்தேனே. அதுக்குள்ள எங்க போச்சு?” என தனது குட்டி தலையால் அந்த பெரிய பானை முழுவதும் தேய்த்து தேடி அலசியும் அவள் தேடியது கிடைக்காமல் போகவே மனம் சுணங்கியது.

“என்னோட ரொம்ப பிடிச்ச எள்ளு உருண்டையை இந்த மச்சான் தான் தூக்கிட்டு போயிருக்கணும்” என அவனை திட்டியவள், நிமிர்ந்து மணியை பார்க்க ஒன்பதரையை காட்டியது.

“அச்சோ மச்சான் காலை சாப்பாடு இன்னும் சாப்பிடலையே” என பதறியவள் அவளின் மச்சானுக்கு பிடித்த உணவை எடுத்து கொண்டு வயலுக்கு போகும் வழி நோக்கி நடந்தாள்.

மனதில் எள்ளு உருண்டை உறுத்தினாலும், இன்னும் சில நாட்களே அவளின் மாதவிடாய் வர இருப்பதால் அவன் ஒளித்து வைத்திருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டாள்.

"மாமனே உன்னை தாங்காம

மத்தியில் சோறும் பொங்காம

பாவி நான் பருத்தி நாரா போனேனே

காகம் தான் கத்தி போனாலும்

கதவு தான் சத்தம் போட்டாலும்

உன் முகம் பாக்க ஓடி வந்தேனே

ஒத்தையில் ஓடைக்கரையோரம்

கத்தியே உன் பேர் சொன்னேனே

ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்

கத்தியே உன் பேர் சொன்னேனே

அந்த இரயில் தூரம் போனதும்

நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே"

பாடலை பாடிக் கொண்டே வயல் வரப்பில் கையில் தன் மச்சானுக்கான காலை உணவை கூடையில் வைத்து கொண்டு நடந்தாள் அலர்மேல் வள்ளி. அனைவருக்கும் "வள்ளி". அவளின் மச்சானுக்கு மட்டும் "அலர்".

"நாரா போனது போலயா இருக்க? நல்லா உன் மச்சான் வாங்கி போட்டத தின்னு தின்னு பத்து கிலோ கூடி இல்ல இருக்க"

அவளின் பாட்டை கேட்ட ஒரு பாட்டி சொல்லிவிட்டு போக,

"என் மச்சான் வாங்கி குடுக்குறார். நான் சாப்பிடுறேன். உனக்கென்ன கிழவி" என்று கத்தியவள் குடுகுடுவென தங்கள் வயலுக்கு ஓடினாள்.

அவளின் சத்தத்தை தூரத்தில் இருந்தே கண்டுக்கொண்டவன் அவள் ஓடவும் பதற்றத்தில் கையில் இருந்த மண்வெட்டியை கீழே போட்டு விட்டு அவசரமாக வரப்பில் ஏறினான் அவளின் மச்சான், இளந்திரை மாறன்.

“ஒரு வார்த்தை சொன்னா கேட்க மாட்டா” என புலம்பியவன்,

"அடியே! மெதுவா வாடி. எந்த கோட்டையை பிடிக்க இத்தனை வேகமா ஓடுற. அலரு மெதுவா நட" என தூரத்தில் இருந்தே கத்த, அவனுக்காக மெதுவாக நடந்தாள் அலர்மேல் வள்ளி.

முகத்தில் களைப்பு இருந்தாலும் தங்கமென ஜொலித்து நடந்து வந்தவளை அவன் கண்கள் ரசனையாய் படம் பிடித்துக் கொண்டது.

அவளோ மாமரத்து நிழலில் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்து மூச்சு வாங்க, வேகமாக அவளின் அருகில் வந்தான் இளந்திரை மாறன். அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

அவளோ வயலில் இத்தனை நேரம் வேலை செய்ததால் உடல் வேர்த்து, கால்களில் சகதியுடன் நின்றவனை ஆசையாக பார்த்தாள்.

“என்னடி பார்வை இது? எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்ட, அப்படி தானே? இதுல திருட்டுதனமா எள்ளு வேற சாப்பிடுற” அவன் கோபத்தில் பல்லை கடிக்க,

"வாசமா இருக்க மச்சான்" என்று அவனை தன்னருகில் அமர்த்திக் கொண்டாள் அலர்.

"எது? இந்த வேர்வை நாற்றம் உனக்கு வாசமா இருக்கா? பைத்தியம் தான் நீ" என்றவன் முகத்தை கழுவி விட்டு, மரத்தில் கழட்டி போட்டிருந்த சட்டைக்கு அருகில் இருந்த துண்டை எடுத்து முகத்தையும் உடலையும் துடைத்து விட்டு கட்டிலில் அதை போட்டான்.

"உனக்கு நிறைய தடவை சொல்லிட்டேன் அலரு. இப்படி ஓடி வரது உன் உடம்புக்கு நல்லது இல்ல. என் பேச்சை கேட்கவே மாட்டியாடி?"

அவன் திட்ட அவளோ அவன் போட்ட துண்டில் வாசம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

"நான் என்ன சொல்லுறேன் நீ என்ன பண்ணுற அலரு. புள்ளை வேணும்னு அழுதா மட்டும் போதாது. சில விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும்"

"ம்ம் சரி மச்சான். இனி ஓடல போதுமா? இப்போ நீங்க சாப்பிடுங்க. வழக்கம் போல பழைய கஞ்சி தான்" என்றவள், பழைய கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கருவாட்டு குழம்பை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தாள்.

"சமையல்ல நல்லா தேறிட்டடி" அவளின் கைபக்குவத்தை ரசித்து உண்ண,

“ஹ்ம், எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டது தான் மச்சான். இந்த ஏழு வருசத்துல இது கூட பண்ண தெரியாம இருந்தா நான் வேஸ்ட் தான்” என சிரித்தவள்,

“எள்ளு உருண்டைய எங்க வச்சீங்க மச்சான்?” என மெதுவாக அவனின் காதருகில் கேட்டாள்.

“எங்க வச்சா உனக்கு என்ன? கொஞ்சமாச்சும் புத்தி வேணும் உனக்கு. ஏழு வருஷமா குழந்தை வேணும்னு சோலையம்மன் கிட்ட வேண்டிக்க தெரியுது தானே. அப்போ பொறுப்பாகவும் இருக்கணும். எள்ளு சாப்பிடுறதுல பிரச்சனை இல்ல. ஆனா இப்போ ஒரு பாதுகாப்புக்காக வேண்டாம் சொல்லுறேன் அவ்ளோ தான். புரிஞ்சு நடந்துக்கோ அலரு” அவன் தீவிரமாக எடுத்துச் சொல்ல,

அவளோ "மச்சான் நான் வயல்ல இறங்கவா?" என்று கெஞ்சலாக கேட்டு எழும்பினாள்.

"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்?” என சீறியவன், பின் அவளின் முகத்தை பார்த்து, “நாளைக்கு பார்க்கலாம் அலரு. இன்னைக்கு வீட்டுக்கு போ" என்றான்.

சாப்பிட்டு தட்டை கழுவி அவளிடம் கொடுத்தவன், "மதிய சாப்பாட்டுக்கு நானே வீட்டுக்கு வருவேன். நீ வெயில்ல அலையாதடி" என அவளின் உச்சி முகர்ந்தான்.

அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.

"என்னை விட நீ தான் வாசம்டி"

"ஆமா ஆமா இனி உன் வாசனை திரவியத்துக்கு பதில் என்னை யூஸ் பண்ணிக்கோ" என்று நொடித்துக் கொண்டாள்.

"தினமும் ராத்திரி அதானே பண்ணுறேன். நாளைக்கு கண்டிப்பா வயல்ல இறங்க விடுவேன். நீ ஓடாமல் நடந்து வரணும். இன்னைக்கு இவளோ நேரத்துல எத்தனை முறை மூச்சு விட கஷ்ட பட்டிருக்க. இனியும் உன்னை இறங்க விட்டா இந்த இடத்தையே அதகளம் பண்ணிடுவ. கிளம்பு"

அவனை முறைத்துக் கொண்டே வீட்டுக்கு நடந்தாள் அலர். அவளையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.

அவர்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் முடிந்து விட்டது. சில பிரச்சனைகளால் திருமணம் முடிந்த உடனேயே இந்த ஊருக்கு வந்தவர்கள், தங்கள் உழைப்பால் சிறு நிலத்தை வாங்கி விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தனை வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தையை கையில் ஏந்தும் பாக்கியம் முழுமையாக கிட்டவில்லை. இரண்டு முறை கரு கலைந்து விட, அடுத்து அவள் கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருப்பதால் இப்போதைக்கு கர்ப்பமாக கூடாது என்று மருத்துவர் கூறி விட்டார்.

இத்தனை வருடங்களாக அவள் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனாலும் மீண்டும் கருவுற முடியவில்லை.

அவளை விட அவனுக்கு அதன் வலி அதிகமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாள்கள் தள்ளி போனால் கர்ப்ப சோதனை செய்யும் கருவியை வாங்கி வர சொல்லி, சோதனை செய்து அதில் எதிர்மறையான முடிவு வந்தால் அவளை சமாதானப்படுத்துவது இவனுக்கு பெரிய வேலை.

நாள் முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் சோலையம்மன் கோவிலில் தவம் கிடப்பாள். அவளை பற்றி ஊருக்கே தெரியும் என்பதால் பெரிதாக கண்டுக் கொள்ள மாட்டார்கள்.

இருபத்தியெட்டு வயது ஆனாலும் இன்னும் சின்ன குழந்தை தான் அவள். வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இன்னும் அவள் செயலில் வந்திருக்கவில்லை. அவளுக்கும் சேர்த்து மாறன் தான் முதிர்ச்சியுடன் நடந்துக் கொள்வான். அவளை பற்றிய யோசனையிலேயே மீண்டும் வயலில் இறங்கியவன் பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தான்.

வீட்டிற்கு வந்த அலர் சிறிது நேரம் சோர்வாக அமர்ந்தவள், பின் சாப்பிட்டு அன்றைய மாத்திரையை போட்டு விட்டு மதிய உணவிற்கான வேலையை தொடங்கினாள். முழுநேர மனைவி பதவி தான் அவளுக்கு அவன் கொடுத்திருந்தான். அலரும் படித்த பெண் தான். ஆனால் சில காரணத்தால் அவளால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

திருமணம் முடிந்த இரண்டு வருடங்கள் அவனுடன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தவளுக்கு அதன் பின் குழந்தை பற்றிய ஏக்கம் வர, அவர்களும் முயற்சித்து இரண்டு முறை கரு கலைந்த போது தான் மன அழுத்தத்திற்கு ஆளானாள் அலர். அவளை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வர வேலைக்கு போக சொன்னான். ஆனால் அவளுக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. எனவே கணவனுடன் வயல் வேலைகளில் உதவ ஆரம்பித்து முழுநேரமும் அவனுக்காக வாழ ஆரம்பித்து, இப்போது தன் ஏக்கத்தை அவனுள் கரைத்துக் கொண்டிருக்கிறாள்.

அனைத்தையும் ஒதுக்கி விட்டு கணவனுக்காக மதியம் சாப்பாட்டை தயார் செய்ய துவங்கினாள். அவன் எப்போதும் காய்கறி உணவுகளையே அதிகம் உண்பதால் சாதம், ரசம், புடலங்காய் பருப்பு கூட்டு, வெண்டைக்காய் பொரியல், அப்பளம் என முடித்தவள் அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள். ஆனாலும் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு தான் இருந்தது.

எத்தனை வருட காத்திருப்பு! ஆனாலும் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை போலும்.

மதியம் வீட்டிற்கு வந்த மாறன் சமையலறைக்குள் அவளை தேட அங்கு தான் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அலர்.

"இன்னைக்கு எத்தனை மணி நேரம் அழுத?"

அவனின் கேள்வியில் முறைத்தவள், "உனக்கு கஷ்டமாவே இல்லையா மச்சான்?" எனக் கேட்டாள்.

"நான் அழுதா சரியா போகுமா இல்ல உடனே குழந்தை வருமா? அது என்ன கடையில் ஆர்டர் போட்டு வாங்குற பொருளா? கடவுள் குடுக்கும் வரம். கிடைக்குற நேரத்தில் கிடைக்கும். வா வந்து சாப்பிடு" என்று முன்னறைக்கு சென்று விட்டான்.

"மச்சான் நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்போமா?" தயங்கி தான் கேட்டாள்.

"அதை விட எனக்கு இன்னொரு கல்யாணம் நீயே பண்ணி வச்சிடேன்" அவனின் பதிலில் சட்டென அவனின் கன்னத்தில் அறைந்தாள்.

"என் கையால் சாக ஆசைன்னா சொல்லுங்க. நானே விஷம் தரேன். இனி இப்படி ஒரு நினைப்பு உங்க மனசுல வர கூடாது மச்சான்" அழுத்தமாக சொல்ல,

"உனக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்த பிறகு எத்தனை குழந்தை வேணும்னாலும் தத்து எடுக்கலாம்" என்று கூறிவிட்டு உணவை உண்டான் மாறன்.

அவளுக்கும் ஊட்டி விட வாங்கிக் கொண்டவள் அவனையே கட்டிக் கொண்டாள்.

அவளை ஒரு கையால் வாகாக அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை பார்த்தான்.

“என்ன மச்சான்?” அவனின் பார்வையில் வெட்கம் வந்தது.

“என் பொண்டாட்டி. நான் ரசிக்கிறேன்”

“யாரு வேணாம்னு சொன்னா? ஆசை தீர பார்க்கலாம். இப்போ சாப்பிடுங்க” என்றவள் அவனுக்கு பிடித்த வெண்டைக்காய் பொரியலை இன்னும் கொஞ்சம் வைத்தாள்.

“போதும் அலர்” என்றவன் மிச்சத்தை அவளுக்கு ஊட்டினான்.

"இப்போ வேலைக்கு போகணுமா மச்சான்" அவனின் கன்னத்தில் முத்தம் பதித்தவாறே கேட்க,

"உனக்கு வேண்டாம்னா நானும் போகல" என்றவன் கழுவாத கையால் அவள் இடுப்பை கிள்ளி விட்டான்.

"இளா" அவளின் குரல் கரைய,

எழுந்து சென்று கையை கழுவி விட்டு வந்தவன் அப்படியே அவளையும் தழுவிக் கொண்டான்.

"இளா"

"என்னடா?"

"இளந்தீரா"

அவளின் அழைப்பில் சட்டென எழுந்தமர்ந்தவனுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.

"இப்போ என்ன சொன்ன அலர்?"

"என்ன சொன்னேன்?" அவள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் சொன்ன வார்த்தை. இப்போது அவளுக்கே மறந்து போய் விட்டது.

"ஒன்னும் இல்லைடா" என்று அவளுக்கு தட்டி கொடுத்தவன் மனமெல்லாம் அழியாத நினைவலைகள்.

எங்கெங்கோ நினைவுகள் பயணிக்க, அவளின் காதல் பார்வைகளும், கோப விழிகளும் கண்ணுக்குள் இம்சிக்க அவனால் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

சட்டென அவள் மேல் படர்ந்திருந்தவன் எழும்ப, ஒன்றும் புரியாமல் “மச்சான்” என அவனை இழுக்க,

“சாரி அலரு. ஒரு வேலையை மறந்துட்டேன்” என்றவன் அவளை விட்டு விலகி எழும்பினான்.

அவனையே புரியாமல் பார்த்து நின்றாள் அலர்மேல்வள்ளி. ஆனால் அவளை விட்டு விலகியவனோ மனதின் நினைவுகள் கொடுத்த வலியை மறக்க முடியாமல் வயலை நோக்கி நடந்தான்.

 
Last edited:

Asha Evander

Moderator

அத்தியாயம் 2

வயலை நோக்கி நடந்து கொண்டிருந்தவன் மனம் முழுவதும் ரணமாய் வலித்தது. அவன் அலரை முதன் முதலில் பார்க்கும் போது அவளுக்கு பத்தொன்பது வயது. பட்டாம்பூச்சியாய் கல்லூரி செல்ல கிளம்பி வந்தவளின் தோற்றம் இன்னும் அவன் கண்ணை விட்டு மறையவில்லை.

அழகிய ஆகாய நீல வண்ணப் புடவையில் தேவதையாக வந்தவள் தோற்றத்தை கண்டு, கண்ணெடுக்க முடியாமல் போனது இன்றும் அவன் நினைவில் உண்டு. அத்தனை சுறுசுறுப்பாக இருந்த பெண் இன்று கலக்கமே உருவாய் இருப்பதை காண்கையில் அவன் உயிரை யாரோ உருவி எடுத்தது போல வலித்தது.

சூழ்நிலை காரணமாக அவளின் இருபத்தி ஒன்றாம் வயதில் திருமணம் செய்துக் கொண்டவர்கள், அவசரம் அவசரமாக இந்த ஊருக்கு வந்து அடைக்கலம் புகுந்தனர். அதன் பிறகு அவளை சமாளிப்பது மட்டும் தான் அவனின் வேலை. அழகான குறும்புக்கார ராட்சசி!

இதை நினைக்கும் போதே அவனின் முகத்தில் புன்னகை பூத்தது. இத்தனை நாள் அவனை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் அவள் தானே!

வலியை மனதினுள் புதைத்து விட்டு நடந்துக் கொண்டிருந்தவன், அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்த ஊர் தலைவர் முருகனை பார்த்து நின்றான்.

அவரும் அவனருகில் வந்தவர், “உன்னை பார்க்க தான் மாறா வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். நல்லவேளை இங்கேயே பார்த்துட்டேன்” என்று கூற,

“என்ன விஷயம் ஐயா?” என கேட்டபடியே அவருடன் பக்கத்தில் இருந்த மாமரத்து நிழலில் ஒதுங்கினான்.

“நம்ம வியாபார சங்க கூட்டம் திருநெல்வேலியில் நடக்க போகுது மாறா. நீயும் கூட வந்தா நல்லா இருக்கும். நீ அன்னைக்கு சொன்னது போல கடன், விவசாயிகள் நலத்திட்டங்கள் பற்றி கேட்கலாம். நீ கூட இருந்தா தெளிவா பேசுவ” என்று கூற,

“ஐயா” எனத் தயங்கினான் இளந்திரை மாறன்.

“என்னப்பா மாறா?”

“ஐயா! நான் இந்த ஊரை விட்டு வெளில வர மாட்டேன்னு உங்களுக்கு தெரியுமே”

“நீயும் எத்தனை வருஷத்துக்கு மாறா இப்படி ஊருக்குள்ளேயே அடைஞ்சு கிடக்க போற? நிறைய திறமை இருந்தும் யாருக்காக இந்த ஊருக்குள் அடைஞ்சு கிடக்குற?”

“ஐயா! அதை சொல்ல முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன். ஆனா இந்த ஊரை விட்டு நான் வெளில வரது என் அலர் உயிரை காவு கொடுக்குறதுக்கு சமம். வேண்டாம் ஐயா, இந்த பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம்” என்றவன்,

பின் “நான் கதிரவனை உங்க கூட வர சொல்லுறேன் ஐயா. அவனுக்கு என்னை விட நல்லாவே பேசும் திறமை இருக்கு. அவன் எடுத்து சொல்லுவான்” என்றான்.

“என்னவோ சொல்லுற, ஆனா எங்க சோலையம்மன் உங்களுக்கு காவலா இருக்குறான்னா, நீ இங்க இருக்கிறது தான் பாதுகாப்பு” என்றவர் அவனிடம் விடைபெற்று சென்றார்.

அவனும் போகும் வழியிலேயே கதிரவனுக்கு அழைத்து விஷயத்தை கூறிட, அவனும் கூட செல்வதாக ஒப்புக்கொண்டான்.

மாறன் மனதை சமன்படுத்த வயல்வேலையில் இறங்கி விட, அவனின் மனையாளோ அவன் எந்த நிலைமையில் விட்டு சென்றிருந்தானோ அதே நிலையில் மாறாமல் படுத்துக் கிடந்தாள். தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டவளுக்கு கசங்கிய சேலையும் கலைந்த தலைமுடியும் அவனுடைய ஆசையையும் காதலையும் எடுத்துச் சொன்னாலும் அவன் பாதியில் உதறி சென்றதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“நான் என்ன தப்பு பண்ணினேன் மச்சான்? சில நேரம் நெருங்கி வரீங்க. ஆனா பாதிக்கு மேல் உங்களால் முன்னேற முடியல. எனக்காக என்னோட வாழ்ந்தாலும் அதில் ஒரு முழுமையான அன்பை என்னால உணர முடியலையே” வாய்விட்டு அவள் அழ,

வயலில் மாறனோ “சாரி அலர். எல்லாத்தையும் சரி பண்ணிட்டு முழுமனசா உன்னோட வாழணும்னு ஏங்குறேன். ஆனா எதையுமே என்னால இப்போ வரை சரி பண்ண முடியலயேடி. உன்னோட சந்தோஷமான ஒரு வாழ்க்கை, எந்த உறுத்தலும் இல்லாம வாழ ஆசைப்படுறேன். ஆனா உன் கூட சேருற ஒவ்வொரு நொடியும் எனக்கு நீ பத்தொன்பது வயசு அலரா வேணும்னு மனசு ஏங்குது. கிடைக்காதுன்னு தெரிஞ்சும் அதை தானே இந்த பாழாப்போன மனசு எதிர்பார்க்குது. சீக்கிரம் உன் இளந்தீராவை தேடி வா அலரு” என கண்ணீர் பொங்க சொல்லிக் கொண்டான்.

அவளை முழுதாய் எடுக்கும் ஒவ்வொரு நொடியும் மனம் தேடும் தேடலை அவனும் தானே அறிவான்!

உடல் களைக்க வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவனுக்கு அவளின் ஒடுங்கிய தோற்றம் மனதை வருத்தியது. ஆனாலும் மனதை தேற்றியவன்,

“அலரு! சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாடா. செம பசி” என கை, கால் அலம்பி கொண்டு வந்து பாயில் அமர்ந்தான்.

அவனுக்காக செய்த வெங்காய பக்கோடாவை வைத்தவள் அதனுடன் தேநீர் குவளையையும் வைத்தாள். பின் அமைதியாக சமையலறை சென்று விட, மாறனின் முகம் மாறியது.

எப்போதும் அவனோடு அமர்ந்து தேநீர் குடித்து, அவளின் “மச்சான்” என்ற சொல்லை ஆயிரம் முறையேனும் சொல்லி காதல் செய்யும் மனைவியை மிகவும் வருத்தி விட்டோம் என புரிந்தது. திருமணம் முடிந்த ஏழு வருடங்களில் முதல் முறையாக மனைவியின் முகத்திருப்பல் அவனுக்குள் வேதனையை விதைத்தது.

“அலரு” அவன் அழைக்க,

சமையலறையில் இருந்து எட்டிபார்த்தவள் “என்னங்க? எதுவும் வேணுமா?” எனக் கேட்டாள்.

முதல் முறையாக அவனின் முதிர்ச்சியான பேச்சை அடியோடு வெறுத்தான் இளந்திரை மாறன்.

“என்னடி யாரோ போல பேசுற?” அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து விட்டான்.

அவளும் அவன் பசியோடு எழும்பியதை பொறுக்க முடியாமல், “சாப்பிடுங்க மச்சான்” என வெளியே வர,

“உயிர்ப்பே இல்லாம பண்ணிட்டேன்ல அலரு” அவனின் கேள்வியில் பொறுக்க முடியாமல் கதறி விட்டாள்.

“என்னை பிடிக்கலையா மச்சான்? நான் அழகா இல்லையா? எனக்கு எதுவும் குறையா? இத்தனை வருஷம் உங்க விலகல் பல நேரம் புரியாமல் இருந்திருக்கேன். ஆனா இன்னைக்கு?” என கேவியவள்,

“ஒரு வேளை நானா கேட்டதால் என்னை தப்பா நினச்சீங்களா மச்சான்? நான் தப்பான பொண்ணு போல ஃபீல் ஆகுது எனக்கு. உங்களுக்கு என்னை எதனால் பிடிக்கலன்னு யோசிச்சு யோசிச்சு தலை எல்லாம் வலிக்குது. மரண வலியா இருக்கு. சொல்லுங்க மச்சான், எதனால் இன்னைக்கு அப்படி பண்ணுனீங்க? வலிக்குது. ரொம்ப ரொம்ப வலிக்குது. புரியாம இருந்த பலதும் குழம்பி இப்போ உங்க காதலை சந்தேகப்பட வைக்குது” எனக் கூற,

அவளின் கடைசி வார்த்தையில் அதிர்ந்தவன் அவளை பளாரென அறைந்தான்.

“மச்சான்!” கன்னத்தை பிடித்துக் கொண்டு அதிர்ந்து நின்றவளின் தோற்றத்தை அதற்குமேல் காணப் பொறுக்காமல் இழுத்து அணைத்து கொண்டவனுக்கு பதற்றத்தில் கை நடுங்கியது.

“என்ன வார்த்தை சொல்லிட்டடி? என் காதல் பொய்யானதா? உனக்காக, உன் மேல நான் வச்ச காதலுக்காகத் தான்டி இத்தனை போராட்டம். அது உனக்கு புரியலையே. எனக்குள் புதைந்து இருக்குற விஷயங்கள் உனக்கு தெரியவே வேண்டாம் அலர். கொஞ்ச நாள் டைம் குடுடி. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நமக்கான வாழ்க்கையை முழு மனசா அனுபவிக்கலாம்” என்று கூற, அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

“எனக்கு ஏதாவது பிரச்சனையா மச்சான்?”

“என்ன பிரச்சனைடா? அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ வேணும்னா பாரு, இன்னும் ரெண்டு வருஷத்தில் நம்ம கைல ஒரு குழந்தை இருக்கும்”

“ஆமா இப்போவே உங்களுக்கு அரைக் கிழவன் வயசு ஆக போகுது. இதுல இன்னும் ரெண்டு வருஷமா?” என சலித்துக் கொண்டாலும் அவள் மனதின் கலக்கம் ஓயவில்லை.

“ஏய்! எனக்கு முப்பத்தியாறு வயசு தான் ஆகுது. ரொம்ப பேசுற” என்று அவளின் வாயில் பக்கத்தில் இருந்த வெங்காய பக்கோடாவை திணித்தவன்,

“எதையும் யோசிக்காத அலர். உன்னையும் என்னையும் பார்த்துக்க நான் இருக்கேன். இன்னைக்கு ரொம்ப டென்ஷன் ஆகிட்ட நீ. அதனால் போய் அமைதியா ரெஸ்ட் எடு. இரவு சாப்பாடு எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று அவளை அறைக்குள் அனுப்பி விட்டு, சமையல் வேலையை முடித்தான்.

பின் விவசாய சங்கத்தில் வைக்க வேண்டிய கோரிக்கைகளை கதிரவனுக்கு அலைபேசி வழியாக சொல்லி முடித்தான். அனைத்தையும் முடித்து விட்டு அறைக்கு வரும் போது அலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவளை பார்க்க பார்க்க மனதில் ஓர் ஓரத்தில் வலித்தாலும் அவளுக்காக அனைத்தையும் முடிக்க வேண்டும் என்ற வெறி வந்தது.

இன்னும் உணவு உண்ணும் நேரம் வரவில்லை என்பதால் அவனும் அவளின் அருகில் படுத்துக் கொண்டான். அவனின் ஸ்பரிசத்தில் திரும்பி படுத்தாள் அலர்.

‘எங்க இருந்தாலும் வாசம் பிடிச்சிடுறா’ என சலித்துக் கொண்டாலும் விருப்பப்பட்டே அவளுள் புதைந்துக் கொண்டான் இளந்திரை மாறன்.

இரவு உணவை அவளை எழுப்பி கொடுத்து அனைத்தையும் கழுவி வைத்தவன், வெளி வராண்டாவில் அமர, அவனின் அலைபேசி ஒலித்தது.

அழைப்பில் காண்பித்த எண்ணை பார்த்தவன் திரும்பி அலரை பார்க்க, அவளோ தொலைக்காட்சியில் ஏதோ ஒரு பாட்டில் மூழ்கியிருந்தாள்.

அழைப்பை எடுத்தவன், “சொல்லு” என்க,

“சார்! அவங்க இப்போ வட மாநிலங்களில் தான் உங்களை தேடிட்டு இருக்காங்க. அதுவும் உங்க ரெண்டு பேரையும் கையில் கிடைச்ச உடனே கொலை பண்ண சொல்லியிருக்கார்” என்றான்.

“நீயும் அவங்க கூட தான் இருக்கியா?”

“ஆமா சார். ஆனா எனக்கும் நீங்க இருக்குற இடம் தெரியாது தானே. மாட்டினால் கூட ஒரு பிரயோஜனமும் இல்ல”

“உனக்கு குடும்பம் இருக்கு ஹரி” என்றவன் அவர்களிடம் மாட்டாமல் தனக்கு தகவலை அனுப்பும் படி கூறினான்.

“கண்டிப்பா சார். இவங்க வெட்டி வீராப்புக்காகவும், ஒன்னும் இல்லாத கௌரவத்துக்காகவும் ரெண்டு உயிர் போக நான் அனுமதிக்க மாட்டேன்” என ஹரி கூற,

“தேங்க்ஸ் ஹரி” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

நாளை அவன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொண்டு போய் மொத்த விலைக்கு கொடுத்து வர வேண்டும். பொதுவாக அவன் சோலையூரை விட்டு வெளியே போக மாட்டான் என்பதால் கதிரவன் மற்றும் சிலர் மாறனுடையதையும் சேர்த்து எடுத்து செல்வர். அதற்கான வேலைகளையும் முடித்தவன், அலைபேசியில் யாருக்கு கொடுக்க வேண்டும், விலை, எத்தனை மூட்டை என அனைத்தையும் விளக்கி விட்டு உள்ளே வர, அலர் எழும்பினாள்.

“மரியாதையா?” அவன் சிரிக்க,

“உன் தலை” என முறைத்து விட்டு அறைக்குள் சென்று விட,

“கஷ்டம்டா. ராட்சசி அடிக்கடி வச்சு செய்யுறா” என புலம்பினான்.

அடுத்த நாள் காலையிலேயே மாறன் பரபரப்பாக கிளம்ப, அவனுக்கு எந்த உதவியும் செய்யாமல் உள் முற்றத்தில் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் அலர்.

"காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா"

பாடல் ஒலிக்க, கை அதன் பாட்டிற்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்க, மனமோ அந்த பாடலில் தான் லயித்திருந்தது.

எங்கோ கேட்ட பாடல். மனதிற்கு மிகவும் நெருக்கமான உணர்வு. ஆனால் நியாபகம் வரவில்லை.

"அலர்! அலரு!" அவன் இரண்டு முறை தட்டி எழுப்பிய பிறகே தன்னிலைக்கு வந்தவள்,

"என்ன மச்சான்?" என்று கேட்டாள்.

"இன்னைக்கு நெல் மூட்டையை டவுனுக்கு கொண்டு போய் வித்துட்டு வரேன். அதுவரை எங்கேயும் ஓடி ஆடாம பத்திரமா இருடி" என்ற மாறன் தன் பட்டன் போனை எடுத்துக் கொண்டு நகரவும், அலர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"குரலில் ஏதோ வித்தியாசம், அவசரம், கண்களில் பொய் சொன்ன குற்ற உணர்ச்சி, மச்சான் என்ன தப்பு பண்ணுறீங்க? நீங்க டவுனுக்கு போக மாட்டீங்களே" என சந்தேகமாக கேட்க,

‘அலார்ட் ஆகிட்டா ராட்சசி’ என மனதுக்குள் திட்டியவன்,

"என்னடி போலீஸ் போல கேள்வி கேக்குற? நான் ஒரு தப்பும் பண்ணல" என்றவன்,

"கிளம்ப சொல்லுடா. நான் பின்னாடியே வரேன்" என்று அலைபேசியில் பேசியவன், தன் புல்லட்டை கிளம்பினான்.

“மச்சான்!” அலர் அழுத்தமாக கூப்பிட,

“ரொம்ப வித்தியாசமா நடந்துக்குற அலர். நேத்து நீ கேட்ட கேள்வியை நான் திருப்பி கேட்கிறேன். உனக்கு என் காதல் மேலயும் என் மேலயும் நம்பிக்கை இருந்தா இன்னொரு முறை இப்படி வந்து நிற்காத” என்று கோபத்துடன் கூறி விட்டு கிளம்பினான்.

அலர் தான் அவனின் கோபத்தில் அதிர்ந்து நின்றாள்.

இத்தனை வருடங்களில் முதல் முறையாக தனது கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தி இருக்கிறான். மனம் கலங்கி போனது.

அவளை திட்டி விட்டு சென்ற மாறனுக்கும் மனம் வருந்த, திரும்ப வீட்டிற்கு புல்லட்டை திருப்பினான். அவன் போகும் போது நின்ற இடத்திலேயே தான் கண்கள் கலங்க நின்றிருந்தாள்.

“ஏன்டி?” என முணுமுணுத்தவன், “என்னை பைத்தியக்காரன் ஆக்காம விட மாட்டல்ல” என திட்டியாவாறே அவளை நெருங்கினான்.

“சாரி அலரு, மச்சான் பாவம் தானே” என அவள் கன்னம் பற்ற,

“எனக்கு எதுவோ சரி இல்ல தானே மச்சான். என்னையும் சமாளிக்க முடியாம, பிரச்சனையும் சமாளிக்க முடியாம கஷ்ட படுறீங்களே. நான் எங்கயாவது போயிடவா?” என அழுகையுடன் கேட்க,

“கூடவே உன் மச்சானையும் கூட்டிட்டு போடி. நீ இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையே இல்ல. உன்னை முதன் முதலில் பார்த்ததில் இருந்து இங்க” என தன் நெஞ்சை காட்டியவன்,

“இங்க வச்சிருக்கேன். நீ என்னை விட்டு போனா அதுவும் துடிப்பை நிறுத்திடும். ஏதோ கோபம், அதை உன் மேல காட்டிட்டேன். இனி எப்போவும் என் அலர் பாப்பா மேல இந்த மச்சான் கோபப்படவே மாட்டேன்” என அவளின் நெற்றி முட்டி, முத்தமிட்டான்.

அவள் உருகி நிற்க, “நான் கொஞ்சம் வெளி வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் வருவேன்டா. எதையும் யோசிக்காமல் நல்லா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்” எனக் கூறி விட்டு கிளம்பினான்.

 

Asha Evander

Moderator

அத்தியாயம் 3

ஊரின் எல்லையில் உள்ள உணவகத்தில் மாறன் மற்றும் அவனோடு கூட நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் முகத்திலும் எதையோ தீவிரமாக சிந்திக்கும் பாவனை இருந்தது. மாறன் முன் இருந்தவர்களில் ஒருவன் தான் கொண்டு வந்திருந்த கோப்பை அவன் முன் வைத்தான்.

அதை எடுத்து திறந்து பார்த்த மாறன் “நான் கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் இருக்கு தானே?” என்று கேட்க,

“அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டோம் சார். இனிமேல் இதை கொண்டு சப்மிட் பண்றது மட்டும் தான் நம்ம வேலை. இந்த முறை அந்த வைத்தியநாதன் தப்பிக்கவே கூடாது. அவன் தான் அந்த கல்யாணத்தை நடத்தி வெச்சான்னு ஆதாரபூர்வமாக நிரூபிச்சா மட்டும் தான் அவனுக்கு தண்டனை கிடைக்கும்” என்றான் மற்றவன்.

“ஓகே பிரசாத், இதுல ஒரு காப்பி என்கிட்ட இருக்கட்டும் இன்னொரு காப்பிய நம்ம ஆபீஸ்ல ஹேன்ட் ஓவர் பண்ணிடு”

“சரி சார், ஆனால் இப்போ அவர் உங்களை தேடிக்கிட்டு இருக்கிறதா எங்களுக்கு நியூஸ் வந்துச்சு. நீங்க சேப் ஆன இடத்தில் தானே இருக்கீங்க?” என்றான் அவனுடன் இருந்த வசந்த்.

“ரொம்ப சேஃபா தான் இருக்கேன். இத்தனை வருஷமா அவருக்கு தண்ணி காட்டிட்டு தானே இருக்கோம். இனிமேலும் கொஞ்ச நாள் அவருக்கு தண்ணி காட்டுவோம். அவரும் எவ்வளவு தூரம் போறாருன்னு நாமளும் பார்க்கலாம்” என்றவன் தன் கையில் இருந்த பைலை எடுத்துக் கொண்டு எழும்ப,

“சார் அலர் மேடம் எப்படி இருக்காங்க? அவங்களுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்துச்சா? உங்களை யாருன்னு அவங்களுக்கு ஞாபகம் வந்திருச்சா?” என ஆர்வமாக கேட்டான் வசந்த்.

சிரித்துக் கொண்டவன், “இதுவரைக்கும் ஞாபகம் வரல. ஒரு வேளை ஞாபகம் வந்தால் முதலில் உன் பேரு அவளுக்கு ஞாபகப்படுத்துறேன் சரியா? அப்பதான் பண்ணின வேலைக்கு அவ நல்ல தரமா உன்ன வச்சி செய்வா. கொஞ்சம் இல்ல ராசா, நீ தான் அவள அவ அப்பாகிட்ட இருந்து கூட்டிட்டு வந்ததுன்னு தெரிய வந்தா உன்ன கொலை பண்ண கூட அவ தயங்க மாட்டா” என்று கூற வசந்த் அதிர்ந்தான்.

“சார் ஒய் திஸ் கொலவெறி? நானே பாவம். என்னை போய் இப்படி மாட்டி விட்டு கொலை பண்ண பார்க்கிறீங்களே?” என்று அலற மற்றவர்களும் சிரித்தனர்.

அவர்கள் சிரித்ததை பார்த்த கடையின் உரிமையாளர் கணேசன் “என்ன மாறன் தம்பி, இவங்க எல்லாம் யாரு? இது வரைக்கும் பார்த்ததே இல்லையே” என்று அவர்கள் அருகில் உணவுடன் வர,

மாறன் “இவங்க எல்லாம் என்னோட ஃப்ரெண்ட்ஸ் அண்ணே. ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா இன்னைக்கு தான் நாங்க பார்க்கிறோம். இங்க அடிக்கடி வராததுனால உங்களுக்கு அவங்கள பத்தி தெரிய வாய்ப்பில்லை” என்று கூறியவன் மற்றவர்களிடம் உணவை உண்ணுமாறு கண்களை காட்டினான்.

சாப்பிட்டு முடித்து எழுந்தவன் “அண்ணே இந்த தடவை சோலை அம்மன் கோவில் திருவிழாக்கு நீங்க தான் சாப்பாடு ஸ்பான்சரா?” என்று பேச்சை மாற்றினான்.

“ஆமா மாறா, முருகன் ஐயாகிட்ட பேசி பார்க்கணும்” என கூற, சரி என்றவன் அவர்கள் உண்டதற்கான பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினான்.

அவனின் டெம்போ அருகே நெருங்கவும் அலரிடமிருந்து அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

எடுத்தவன் “சொல்லுமா” என்க,

“மச்சான் எப்ப வீட்டுக்கு வருவீங்க?” எனக் கேட்டதும், மாறனின் முகத்தில் புன்முறுவல்.

“இப்பதானே அங்க இருந்து வந்தேன்?”

“ஆனாலும்” அவள் இழுக்க,

“அடியே! வர லேட் ஆகும்டி. இன்னும் நான் கொண்டு போய் நெல் மூட்டையை இறக்கல. முடிச்சிட்டு திரும்ப கூப்பிடுறேன், என்னன்ன வேணும்னு லிஸ்ட் போட்டு வை. வரும்போது வாங்கிட்டு வரேன்” என்று சொன்னவன் பக்கத்தில் இருந்த நண்பர்களை திரும்பிப் பார்த்தான்.

அவர்கள் நமட்டு சிரிப்புடன் அவனே பார்த்திருந்தனர்.

“உங்களுக்கு என்னடா, இன்னும் கிளம்பலையா?” என்று சொன்னவன் இதழ்கள் வெட்கத்தில் சிரித்தது.

“சார் சரண்டர் போலயே” பிரசாத் கேலி பண்ண, “ஏன் உனக்கு தெரியாதா?” என அவனின் தோளில் ஒரு அடி போட்டவன் “போய் வேலையை பாருங்கடா. சீக்கிரமா இந்த கேஸ் முடிச்சா தான் நான் சென்னைக்கு வர முடியும்” என கூற,

மற்றவர்களும் “எஸ் சார்” என கோரசாக சொல்லிவிட்டு தங்களது வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

“அராத்துங்க!” என சிரித்துக் கொண்டவன் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு வண்டியை செலுத்தினான்.

அங்கு சென்று பதிவு செய்து கொண்டவன் கொடுத்த நெல்லுக்கான எடை அதன் தரத்தை எல்லாம் ஆராய்ந்து கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டான். இந்த பணம் முழுவதும் அவன் மனைவியின் மருத்துவ செலவுக்கானது. எனவே அதை வங்கியில் பத்திரப்படுத்தியவன் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

அவன் வீட்டை அடைந்த நேரம் இரவில் நிலா வெளியில எட்டிப் பார்த்திருந்தது. வீட்டில் வெளியில் திண்ணையிலேயே அவனுக்காக காத்திருந்தாள் அலர்.

“இந்த குளிர்ல வெளியில இருக்காதன்னு சொன்னா கேட்கிறதே இல்லைல நீ” என முறைத்துக் கொண்டே அவளின் அருகில் வந்தவன் அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.

“விடு மச்சான்” என்று திமிறியவளை ஒற்றை செயலில் அடக்கியவன், “காட்டுக்குள்ள போகலாமாடி?” என அவளின் இடுப்பில் தன் கை அழுந்த பற்றினான்.

“உண்மையாவா மச்சான்!” அவள் கண்கள் சாசர் போல் விரிய,

அதில் விரும்பியே வீழ்ந்தவன், “கூட்டிட்டு போகலாம்னு தான் நினைச்சேன். ஆனா இப்படி கண்ண விரிச்சு பார்த்தா இங்கே மொத்தமாக கொள்ளையடிச்சிடுவேன்” என்று அவளின் முகத்தில் தன் கைகளால் கோலம் போட, வெட்கத்தில் சிவந்தவள் சட்டென அவனை விட்டு இறங்கினாள்.

“கிளம்பலாம் வா மச்சான்” என்றவள் வெளியே செல்ல, கருநீல சேலையில் அவனுள் மோகத்தை கிளப்பி விடும் அவளின் அழகை ரசித்தவாறே அவளுடன் நடந்தான்.

சோலையூர் கிராமத்தின் மறுபுறத்தில் ஓர் அழகிய வனம் இருந்தது. அதிக ஆபத்து இல்லாத காட்டு விலங்குகளும் அதிகம் இல்லாத வனம் தான் அது. மூலிகை தாவரங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் அடிக்கடி ஆள் நடமாட்டங்களும் அங்கே உண்டு. அதனால் எந்த பயமும் இன்றி அந்த இரவு நேரத்திலும் வனத்திற்குள் நுழைந்தனர் இந்த அழகிய தம்பதிகள்.

அவனின் கரம் கோர்த்து நடந்து கொண்டிருந்தவள், “என்ன மச்சான் இன்னைக்கு காட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து இருக்கீங்க?” என்று கேட்க,

“வீட்டுக்குள்ளேயே ரொமான்ஸ் பண்ணி போர் அடிச்சிருச்சு, அதனாலதான் இன்னைக்கு காட்டுக்குள்ள” என்று அவன் முடிக்கும் முன் அவனின் வாயை தன் கைகளால் பொத்தி இருந்தாள்.

“என்ன பேச்சு இது?” அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.

“நீ தானடி உன்னை கவனிக்கவில்லை என்று சத்தம் போட்ட. அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கவனிக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்”

“அதுக்கு?” என கேள்வியா கேட்டவள் சுதாரிக்கும் முன் பக்கத்தில் இருந்த மரத்தில் அவளை சாய்த்திருந்தான் மாறன்.

“மச்சான்!” அவளின் கண்கள் விரிய,

“என்னடி?” என அவளின் குரலில் கிறங்கியவனும் அவள் இதழ்களை நெருங்கினான்.

“மச்சான், காடு இது” என தயங்கியவளை “அப்புறம் நான் என்ன வீடுன்னா சொன்னேன்? நேரம் தெரியாம மனுஷனை கடுப்பேத்திட்டு” என்றவன் அவள் இதழ்களைக் கொய்து கொண்டான்.

அவனின் அழுத்தத்தில் இடுப்பில் அவன் கை விரல்கள் பதிய, இதழ்களை சுவிம்கம் போல சுவைத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அவனின் ஆசைக்கு வழி விட்டவள் அவளும் அதில் உருகி பின் அவன் அழுத்தம் குறையவில்லை எனவும் “வலிக்குது விடு மச்சான்” என்று தள்ளினாள்.

“ஏன்டி?” அழுத்தமாக தன் தலையை கோதி கொண்டவன் அவள் இடுப்பில் கிள்ளிவிட்டே நகர்ந்தான்.

“நீ இன்னைக்கு சரியில்ல மச்சான், வா வீட்டுக்கு கிளம்பலாம்” என அவள் வீட்டிற்கு செல்லும் வழியில் திரும்ப,

“ஒன்னும் பண்ண மாட்டேன் இருடி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவன் அந்த மரத்தின் அடியிலே அவளுடன் அமர்ந்தான்.

“என்ன சொல்லுங்க மச்சான்”

“அடுத்த வாரம் நம்ம ஹாஸ்பிடல் போகணும். ஞாபகம் இருக்குல்ல?”

“ஆமா மச்சான், இந்த முறை அந்த ஹாஸ்பிடல் போகும்போது டாக்டர் கிட்ட கேக்கணும் இத்தனை வருஷம் டிரீட்மென்ட் எடுத்தும் எதனால இன்னும் எனக்கு குழந்தை தங்கலைன்னு”

“ப்ச் அலர் குழந்தை வரும்போது வரும். அதனால் இன்னும் உன்னை டென்ஷன் ஏத்திக்காத. நான் சொல்ல வந்ததே அத பத்தி தான்”

“என்ன மச்சான், சுத்தி வளைக்காமல் நேரடியாக விஷயத்தை சொல்லுங்க”

“இந்த முறை ஹாஸ்பிடல்ல நீ எப்படியும் ஒரு ரெண்டு மாசம் தங்கற மாதிரி இருக்கும் அலர். உனக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் இருக்கு”

“என்ன!” அதிர்ந்து எழும்பி விட்டாள் அலர்.

அவளின் அதிர்ச்சியில் அவனுக்கே கஷ்டமாக போய்விட்டது. இத்தனை வருடங்கள் இதை நினைத்து தானே அவனும் குழந்தை பிறப்பை தள்ளி போட்டான். இந்த அறுவை சிகிச்சை முடிந்தால் தான் அவளின் பழைய நினைவுகள் திரும்ப வருமா அல்லது இந்த நினைவிலேயே அவள் வாழ்ந்து விடுவாளா என்பது தெரிய வரும்.

அவளின் கரம் பிடித்து தன் அருகே மீண்டும் அமர்த்தியவன் “சொல்லுறத முழுசா கேளு அலர். இது உனக்கு இன்னும் கொஞ்சம் லேட்டா தெரிய வரலாம்னு தான் நினைச்சேன். ஆனா நீ குழந்தைக்காக ஏங்கறதை பார்த்தா இந்த விஷயத்தை கண்டிப்பா இப்பவே சொல்லி ஆகணும்னு தோணுச்சு. இத்தனை வருஷம் உனக்கு குழந்தை தங்கலையேன்னு அழுதுகிட்டு இருக்கியே, அதுக்கு முழு காரணமும் நான்தான். நான் தான் இப்ப குழந்தை வேண்டாம் என்று அதுக்கான தடை யூஸ் பண்ணிட்டு இருந்தேன்” எனக் கூறவும் அவனின் கன்னத்தில் பளார் என அறைந்தாள்.

“யு யு சீட்டர், என்னை இப்படி ஏமாத்திட்டியே. உன்ன தானே சுத்தி சுத்தி வந்தேன். ஏதாவது பிரச்சனைனா முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானே. இத்தனை வருஷம் எதுக்காக என்னை இப்படி பொய் சொல்லி ஏங்க வச்ச?” எனச் சீற பதில் பேசாமல் அமைதியாக இருந்தான் மாறன்.

“பேசு மச்சான், வாய தொறந்து ஏதாவது பேசு” அவனை தள்ளி விட்டவள் அவன் மேலே அமர்ந்து அவன் நெஞ்சில் பட் பட்டென அடித்தாள்.

அத்தனை அடியையும் அமைதியாக வாங்கியவன் கண்கள் மட்டும் கலங்கியிருந்தது. அதை அவள் உணர்ந்து கொண்டாலும் அவளின் சீற்றம் குறையாமல் மேலும் அவனை வதைக்க, சட்டென அவள் கைகளை பற்றிக் கொண்டான்.

“ப்ளீஸ் அலர் சொல்லுறத கேளுமா”

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், என்னை விடு” என்றவள் எழும்பி வந்த வழியே நடக்க தொடங்கினாள்.

“அலர்! அலர்!” என்று அவளின் பின்னாலேயே கத்திக் கொண்டே சென்றவன், அவள் மயங்கி சரியவும் சட்டென அவளை கையில் ஏந்தி கொண்டான்.

“ஏன்டி இப்படி பண்ணுற?” மனம் முழுவதும் வலி, ரணத்துடன் அவளிடம் கேட்டுக் கொண்டவன் அவளை அள்ளிக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

கடைசி வரை அவன் பேச நினைத்த வார்த்தைகளை பேசவும் இல்லை, அவள் அதைக் கேட்க தயாராகவும் இல்லை. அவன் மனம் முழுவதும் இந்த அறுவை சிகிச்சைக்கு அவளை எப்படி ஒத்துக்கொள்ள வைப்பது என்றே யோசித்தது.

உண்மையைச் சொன்னால் அவனை விட்டு விலகி விடும் அபாயம் கூட இருக்கிறது. அவளை ஒரு நாளும் அவன் விட்டு விலகி விட அனுமதிக்க மாட்டான்.

“உனக்கு எப்படி இதை புரிய வைக்க போகிறேன்?” என்று மயங்கி இருந்த அவளிடம் பேசியவன் அவளை கட்டிலில் படுக்க வைத்து வெளியில் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான்.

அவன் கையில் அன்று காலை அவனை நண்பர்கள் தந்து சென்ற கோப்பு இருந்தது. அதில் அமைச்சர் வைத்தியநாதன் பற்றிய விவரங்களும் அவருடைய ஒரே மகளான அலர்மேல்வள்ளி பற்றிய மருத்துவ குறிப்புகளும் அடங்கி இருந்தது.

என்றோ ஒரு நாள் நடந்த விபத்தில் தன் சுயநினைவு இழந்து இருந்த அலர்மேல் வள்ளிக்கு அவள் தலையில் ஏற்பட்ட பிரச்சனையை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதை மாறன் அவளிடம் வெளிப்படுத்தவும் இல்லை. ஆனாலும் அவளின் தலையில் இருக்கும் ரத்தக்கட்டி இன்னும் இறுகிக் கொண்டே போவதற்கு முன் அதை அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றுவதே நல்லது என்று கூறிய மருத்துவர்கள் அடுத்த வாரம் தான் அறுவை சிகிச்சைக்கான நாளை கொடுத்திருந்தனர்.

பல வருடங்களாக அவளின் உடல் நிலையில் சரியான முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தான் இந்த அறுவை சிகிச்சை இத்தனை வருடங்கள் தள்ளிப் போய்விட்டன. ஆனால் இப்போதாவது இதை எடுத்து விடவில்லை என்றால் அவள் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதை பொறுமையாக கேட்கும் நிலையில் அவளும் இல்லை. அவளின் மனம் முழுவதும் குழந்தை பற்றிய எண்ணம் மட்டுமே வியாபித்து இருந்தது.

ஒரு பெருமூச்சுடன் அந்த கோப்பை கீழே வைத்தவன் ஹரிக்கு அழைப்பு விடுத்தான்.

“என்னாச்சு ஹரி இப்ப எங்க இருக்கீங்க? இன்னும் உங்களோட தேடுதல் வேட்டை குறையலையா?” மாறன் கேட்க,

“உங்க ரெண்டு பேரையும் கண்ணால பார்க்கிற வரைக்கும் இவங்க உலகம் முழுக்க தேடிட்டு தான் இருப்பாங்க சார். அவங்களுக்கும் ரெஸ்ட் இல்ல, எனக்கும் ரெஸ்ட் இல்ல” என்றவன் தற்போது அவர்கள் இருக்கும் இடத்தின் விவரத்தை அவனுக்கு சொன்னான்.

“இன்னும் பீகாரே முடியலையா? அப்படியே பக்கத்துல இருக்க நாலு நாட்டுக்கும் போய் தேட சொல்லுங்க. எங்க தேடினாலும் இவங்களுக்கு கிடைக்கப் போறது கிடையாது. அப்புறம் உங்க மந்திரி என்ன சொல்லுறாரு?”

“அவருக்கு இப்ப பொண்ணு மேல பாசம் எல்லாம் இல்ல சார். அவருக்கு உங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிச்சு கொலை பண்ணனும். அதுதான் ஒரே நோக்கமா இப்ப தேடிட்டு இருக்காங்க” என்றவன்,

“அந்த சின்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்ச கேஸ் விட இப்ப அவருக்கு ஜாதி கௌரவம் இதுதான் முக்கியமா இருக்கு சார். எப்படியும் ரெண்டு பேரையும் கண்டுபிடிச்சு கொன்னே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காரு” என சிரித்தான்.

“கட்டட்டும், கட்டட்டும்” என்ற மாறன், “எனக்கு திருநெல்வேலில ஒரு சின்ன வேலை இருக்கு. ஒரு ரெண்டு மாசம் தங்கற மாதிரி வீட அரேஞ்ச் பண்ணி தர முடியுமா? யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமா உங்க கூட இருக்க ஆளுங்களுக்கு நீங்க இப்படி யாரோ ஒருத்தருக்கு வீடு பார்த்து கொடுக்குறீங்கன்னு விவரம் தெரியவே கூடாது” என்றான்.

“உடனே வா சார்? ஆனா உங்க டிபார்ட்மெண்ட்ல உள்ள உள்ளவங்க கிட்ட யாருகிட்டயாச்சும் கேட்கலாம்ல சார், நான் எப்படியும் அரேஞ்ச் பண்றதுக்கு ரெண்டு வாரம் ஆச்சும் ஆகும்” எனக் கூற,

“பரவாயில்ல எனக்கு எங்க டிபார்ட்மென்ட் வழியா உதவி கேட்க முடியாத நிலைமை. சோ உங்களுக்கு தெரிஞ்ச யாராச்சும் இருந்தாங்கன்னா எனக்கு கேட்டு சொல்லுங்க” என்றவன் அவன் கேட்டு சொல்வதாக உறுதி அளிக்கவும் அழைப்பைத் துண்டித்தான்.

அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டினுள் வந்தவன் இரவு சமைத்து வைத்திருந்த உணவுகளை பார்த்தான். வழக்கம்போல் அவனுக்கு பிடித்ததாக தான் சமைத்து இருந்தாள். அலர் அனைத்தையும் எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்தவன் தானும் ஒரு பாயை விரித்து அவளின் அருகிலேயே கீழே படுத்தான்.

 
Last edited:

Asha Evander

Moderator

அத்தியாயம் 4

அடுத்த நாள் காலையில் நான்கு மணிக்கு சேவல் கூவும் சத்தத்தில் விழித்து எழும்பியவன் கட்டிலை பார்க்க அலரை காணவில்லை. ஒரு பெருமூச்சுடன் பாயை மடித்து கட்டிலில் வைத்தவன் குளியல் அறைக்கு சென்று பல் துலக்கி விட்டு குளித்து வந்தான். அதுவரையிலும் அலர் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

“சொல்லுற பேச்சைக் கேட்காம காலையிலேயே சோலையம்மன்கிட்ட போய் உட்கார்ந்து இருக்க வேண்டியது” என புலம்பியவன் வேட்டியை மடித்து கட்டி விட்டு சட்டையை மாற்றியவன் சோலையம்மன் கோவிலுக்கு கிளம்பினான்.

அவன் நினைத்தது போலவே அம்மன் வாசலில் தலை வைத்து படுத்து இருந்தால் அலர்மேல்வள்ளி. அதில் இன்னும் அவன் மனம் பாரமாக, அவளின் அருகில் போய் அமர்ந்து அம்மனை பார்த்தான்.

‘எல்லாருக்கும் கேட்கிற வரத்தை கொடுக்கிற நீ எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கஷ்டத்தை கொடுத்த? அவளோட மனசுல எவ்வளவு குழந்தை பத்தின ஆசை இருக்கும்னு தெரிஞ்சும் இப்படி ஒரு நிலைமையில் இருக்க வச்சுட்டியே. தினமும் உன்னைத்தானே விடியற்காலையிலேயே தேடி வருவா. இத்தனை வருஷம் உனக்காக விரதம் இருந்து உன்னையே நினைச்சுகிட்டு இருந்தவளை நீ இப்படி கலங்கி நிக்க வைக்கலாமா? அவளுக்கான மன தைரியத்தை நீ தான் கொடுக்கணும் தாயே. இப்போ எங்களுக்கு உறவுன்னு இருக்கிறது நீ மட்டும் தான். உன்னை மட்டுமே தான் நம்பி இருக்கிறோம். இந்த ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம அவ என்கிட்ட என்னோட அலரா திரும்பி வரணும். என்னையும் என்னோட வாழ்ந்த வாழ்க்கையும் மறக்காம திரும்பவும் என்கிட்ட வர நீ தான் அருள் புரியணும் அம்மா’ என மனதில் வேண்டிக் கொண்டவன் அலரை எழுப்பினான்.

“அலர், அலர்” என அழைத்தவனின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அம்மனை மனமார வேண்டிக் கொண்டவள் அவனைத் திரும்பியும் பாராமல் எழும்பி நடக்க, அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் மாறன்.

“அலர் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”

“கைய விடுங்க ப்ளீஸ்” என்றவள் அவன் கைகளை உதற பார்க்க, இறுக்கமாக பற்றி கொண்டவன் எழும்பினான்.

“பேசணும்னு ஒருமுறை தான் சொல்ல முடியும் அலர். நீ கேட்டு தான் ஆகணும்”

“நீங்க பண்ணுன காரியத்தை நியாயப்படுத்த பார்க்கிறீங்களா?”

“கண்டிப்பா என் பக்கம் நியாயத்தையும் நீ கேட்டு தானே ஆகணும். இங்க உட்காரு, நாம பேசி முடிச்சுட்டே வீட்டுக்கு போகலாம்” என்றவன் அவளுடன் மீண்டும் அதே வாசலில் அமர, அவள் அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”

“உங்ககிட்ட எல்லாம் குறைச்சல் தான்”

அவளை முறைத்தவன் “உனக்கு ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் நடந்தது ஞாபகம் இருக்குதா?” எனக் கேட்க, அவளுக்கு விபத்து நடந்தது நினைவில்லை என்றாலும் மருத்துவமனையில் இருந்தது நினைவுக்கு வந்தது.

“நான் ஹாஸ்பிடல்ல தான் முதல் முறையா உங்கள பார்த்தேன். அது மட்டும் நினைவிருக்கு” என்றாள்.

“உனக்கு அதுக்கு முன்னாடி ஒரு பெரிய ஆக்சிடென்ட் ஆச்சு. தலையில் பயங்கர அடி, நிறைய ரத்தப்போக்கு, உயிர் பிழைக்கிறதே கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. ஆனாலும் போராடித் தான் உன்னை காப்பாத்த முடிஞ்சது. அன்னைக்கு தான் நம்மளோட கல்யாணமும் முடிந்த நாள்” என்று கூற அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவர்களின் திருமண நாள் அவளுக்கு தெரியும். ஆனால் அதே நாள்தான் விபத்தில் மாட்டிக் கொண்டாள் என்பது இப்போது மாறன் சொல்லி தான் தெரியும். அவளின் அதிர்ச்சியில் இப்போதைய மனநிலையை அவனும் புரிந்து கொண்டான்.

அவளை நெருங்கி அமர்ந்தவன், “உன்ன போராடி காப்பாத்தின டாக்டர்ஸ்க்கு உன் தலையில் இருந்த ரத்த கட்டியை எடுத்து நீக்க அந்த நேரம் உன்னோட உடல்நிலை காரணமா முடியல. அடுத்து இத்தனை வருஷம், கிட்டத்தட்ட ஏழு வருஷமா உன்னோட தலையில் இருக்கிற அந்த ரத்தக்கட்டியை அகற்ற நினைச்சாலும் உன்னோட உடல்நிலை ஒத்துழைக்கல.

இந்த நிலைமையில குழந்தை உருவானா அதோட அழுத்தமும் சேர்த்து உன்னோட உடல்நிலையை இன்னும் மோசமாக்கலாம் அப்படின்னு தான் இதுவரைக்கும் நான் உன் கூட சேரும்போதெல்லாம் தடை யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். உனக்கு அடிக்கடி தலை வலி, மயக்கம் வருவது எல்லாமே இந்த ரத்தக் கட்டியின் பாதிப்பால் தான்.

இத்தனை வருஷம் குழந்தைக்காகன்னு நீ எடுத்துக்கிற ஒவ்வொரு மாத்திரையும் உன்ன ஆப்பரேஷனுக்காக தயார் படுத்துற மாத்திரைகள் தான். இந்த உண்மைய உன்கிட்ட சொல்லணும்னு எத்தனையோ முறை நினைத்தாலும், உனக்காக மட்டுமே என் மனசுல இருந்து அந்த வார்த்தைகள் வெளியில் வராது. இப்போவும் உனக்காக மட்டும் தான் நான் சொல்றேன்.

நீ ஆபரேஷன் முடிச்சிட்டு நல்லபடியா திரும்ப வந்தாலே எனக்கு போதும். அதுக்கு அப்புறமா நம்ம குழந்தையை பற்றி யோசிக்கலாம். அதுவரைக்கும் நீ என்னையும் புரிஞ்சுகிட்டு உன்னையும் பத்திரமா பாத்துக்கோ”

என கூறிவிட்டு எழும்ப, அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“என்ன அலர்?”

“நாம ஏன் மச்சான் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் இந்த ஆபரேஷன் பற்றி யோசிக்க கூடாது?”

“பைத்தியமாடி நீ?” இருக்கும் இடம் உணர்ந்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டவன் அழுத்தமாக அவளைப் பார்த்தான்.

“அத்தனை மாசம் நீ தாங்கிக்க மாட்டடி. உன் உடம்பும் அதுக்கு ரெடியா இல்லை. குழந்தையை பெத்து போட்டுட்டு நீ போய் சேர்ந்துட்டா அந்த குழந்தையை யார் பார்த்துக்குறது? இல்ல உன்னையே சுத்தி சுத்தி வந்த எனக்கு யாரு தான் இருக்கா? எனக்கு நீ தான் முக்கியம். நீ நல்லா இருந்தா மட்டும் தான் ஆரோக்கியமாக குழந்தை பிறக்கும். அதுக்கு முதல்ல உன்னை நீயே ரெடி பண்ணிக்கோ. அதுக்கப்புறம் மத்ததெல்லாம் யோசிக்கலாம்” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்தான்.

வீட்டிற்கு வந்தவள் தன் அறைக்குள் அடைந்து கொள்ள, அவளின் மனம் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதை அவனால் உணர முடிந்தது. எனவே அவளை தொந்தரவு செய்யாமல் தனக்கும் அவளுக்குமான காலை உணவை சமைத்தவன் மதியத்திற்கு குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவுகளை எடுத்து சூடுப்படுத்திக் கொள்ளுமாறு குறிப்பை எழுதி வைத்துவிட்டு வயலுக்கு கிளம்பினான்.

அங்கே சென்றவனும் வேலை செய்ய மனதில்லாமல் மாமரத்தின் நிழலில் கட்டிலில் படுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் தன்முன் புடவையின் முந்தானை காற்றிலாட, கண்களை திறந்து பார்த்தான்.

அவன் முன் கையில் உணவு கூடையுடன் நின்றிருந்தாள் மலர்.

சட்டென எழுந்தவன் “உனக்கே முடியல தானே. இப்போ இதை நடந்து எடுத்து கொண்டு வரணுமா? ஒரு போன் பண்ணி இருந்தா நானே வந்துருப்பேன்ல” என கடிந்து கொள்ள,

அவனைப் பார்க்காதவள் உணவு கூடையை கட்டிலில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கினாள்.

“அலர் சொன்னா கேளு மேல வா” என அவளின் அருகில் நெருங்க செல்ல,

“பக்கத்துல வந்தா சும்மா நிற்கிற நான் ஐம்பது தடவை குதிப்பேன்” என காலை தூக்கினாள்.

“ஸ்டாப் இட். இப்ப மேல வர போறியா இல்லையா?” என கர்ஜிக்க, அவனின் குரலில் அவள் உடல் நடுங்கியது.

“மச்சான்!”

“வயலுக்குள்ள இருந்து வெளியில வர சொன்னேன் அலர்”

அவனின் அழுத்தத்தில் மறுபேச்சு பேசாமல் மேலே ஏறி வந்தாள் அலர்.

அவளை நெருங்கியவன், “உனக்கு கோவம்னா அத என்கிட்ட நேரடியா காட்டணும். அதுக்காக உன்னையே நீ வருத்திக்கிட்டா அதைப் பார்க்க இனி நான் இருக்க மாட்டேன்” என்று கூறியவன் உணவை எடுத்து வெளியில் வைத்தான்.

“சாப்பிட்டியா?”

“ஹ்ம்”

சரி என்றவன் அவனுக்கான உணவை தட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டான்.

“நாளைக்கு நம்ம ஹாஸ்பிடல் போகணும்”

“அடுத்த வாரம் தானே சொன்னீங்க மச்சான்?”

“சீக்கிரம் முடிஞ்சா உனக்கு நல்லது தானே” என ஒரு மாதிரியான குரலில் கூறியவன் அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே சாப்பிட்டு முடித்தான்.

கை கழுவி விட்டு வந்தவன் முன் நின்றாள் அலர். “நமக்காக தான் மச்சான் நான் நிறைய யோசிக்கிறேன். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது?”

“எனக்கு என்ன புரியணும்னு எதிர்பார்க்கிற அலர்? உனக்காக, உன்னோட சந்தோஷத்துக்காக மட்டும் தான் ரிஸ்க் எடுத்து உன் கூட சேர்ந்தேன். ஆனா ரெண்டு முறையும் குழந்தை கலைஞ்சு போச்சு. அதுக்கப்புறம் எனக்கு உன்ன விட குழந்தை பெரிசா தெரியல. நீ நல்லா இருந்தா மட்டும் தான் இன்னொரு குழந்தை பெத்துக்க முடியும். அதனால்தான் இத்தனை வருஷம் தடை யூஸ் பண்ணினேன். இத்தனை வருஷம் டவுனுக்கு வெளில போகாத நான் இந்த முறை நம்ம வாழ்க்கைக்காக தான் நெல்லை கொடுக்க வெளியில் போனேன்.

ஒரு தடவையாவது நாம ஏன் இந்த ஊரை விட்டு வெளில போகலைன்னு யோசிச்சிருக்கியா? உன்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகவே நான் அத்தனை பாதுகாப்போடு வெளியில் போக வேண்டி இருக்கு. இதெல்லாம் நிறைய கடந்து வர வேண்டிய விஷயங்கள். அதனால்தான் உன்னையும் பயப்படுத்தாமல் எல்லாத்தையும் சீக்கிரம் செய்து முடிக்கலாம்னு நினைச்சு நான் ஒரு பிளான் பண்ணுனா நீ இப்போ அதுக்கு எதிரா வந்து நிற்கிற.

உனக்கு நான் சொல்லுற விஷயங்கள் பல புரியாமல் இருக்கலாம். புரியாமலேயே இருக்கிறது தான் இப்போ உனக்கு நிம்மதியும் கூட. குழந்தை குழந்தைன்னு அதை மட்டுமே நினைக்காமல் உன்னோட உடல்நிலையில் கொஞ்சம் கவனத்தை காட்டு. கண்டிப்பா எல்லாம் சரியாகிடும்” என்றவன் அவளை தாண்டி செல்ல, அவள் குழப்பத்தோடு நின்றாள்.

“மச்சான் எனக்கு ஒன்னும் புரியல”

“புரியாமலேயே இருக்கிறது தான் உனக்கும் எனக்கும் நல்லது. சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு”

“மச்சான்!” என சிணுங்கியவள் அவனின் பேச்சை மீற முடியாமல் வீட்டிற்கு கிளம்பினாள்.

அடுத்த வாரத்தில் சோலையம்மன் கோவில் திருவிழா ஆரம்பிக்கவிருக்கிறது. எல்லா வருடமும் அம்மனுக்கு விரதம் இருந்து பூக்குழி இறங்குவதை வழக்கமாக வைத்திருந்தாள் அலர்மேல் வள்ளி. இந்த வருடம் அவளின் அறுவை சிகிச்சை அடுத்த வாரம் இருப்பதால் அம்மனுக்கு விரதம் இருக்க முடியாமல் போவது மனதில் பாரமாக இருந்தது.

‘அம்மா தாயே! எந்த பிரச்சனையும் இல்லாம நீ தான் என்னோட உடல்நிலையை சரி பண்ணனும். என் மச்சான் என்னென்னவோ சொல்றாங்க, ஆனா பெரிய பிரச்சனை மட்டும் எனக்கு புரியுது. அது எல்லாத்திலேயும் இருந்து நீ தான் எங்களை காப்பாத்தணும். உன் மேல பாரத்தை போட்டுட்டு தான் அடுத்த வாரம் ஹாஸ்பிடல் போகப்போறேன். நல்லபடியா குணமாகி வந்து உனக்கு பூக்குழி மிதிக்கிறேன்’ என வேண்டிக் கொண்டவள் தன் மனதை திடப்படுத்தினாள்.

வயலில் இருந்து அலர் கிளம்பியதும் தானும் ஊர் தலைவர் முருகன் வீட்டிற்கு சென்றான் மாறன். அவனை வாசலில் பார்த்ததுமே அரவணைத்து வரவேற்றுக் கொண்டார் முருகன்.

“என்னப்பா வீட்டுக்கு வராத பிள்ளை வந்திருக்க?” என்றவர் தன் மனைவியை அழைத்து காபி போட சொல்ல,

அதை மறுத்த மாறன் “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ஐயா” என்றவன் அடுத்த வாரம் மருத்துவமனை செல்வதை பற்றியும் திருவிழாவில் அவனால் பங்கு கொள்ள முடியாது என்பதையும் விளக்கினான்.

“என்ன மாறா இதுக்கெல்லாம் போய் விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க, இதுதான் விஷயம்னு சொன்னா நான் என்ன மறுக்கவா போறேன்? திருவிழா வருஷாவருஷம் வருது. ஒரு வருஷம் நீ வராமல் இருந்தால் எதுவும் பிரச்சனையாகாது. நீ முதல்ல வள்ளியோட ஆபரேஷனை பாரு. இத்தனை வருஷம் குழந்தைக்காக அவ தவிக்கிற தவிப்பை நாங்களும் பார்த்துக்கிட்டு தானே இருக்கோம். இனிமேலாவது அவளுக்கு அந்த அம்மன் ஒரு நல்ல வழியை காட்டட்டும். சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்” என்றார்.

அதற்குள் முருகனின் மனைவி காப்பி போட்டுக் கொண்டு வரவும் அதை குடித்தவன், தன்னால் முடிந்த உதவிகளை திருவிழாவிற்கு செய்வேன் என்று உறுதி கொடுத்துவிட்டே கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவன் அலரை தேட, வீட்டின் கொல்லைப்புறத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள் அவள்.

‘ரொம்ப கோபமா இருப்பாளோ?’ மனதில் நினைத்தவன் அவளின் பின்புறமாக சென்று அணைத்தான்.

“ப்ச் மச்சான் விடுங்க, வேலை இருக்கு” எந்தவள் அவனின் கைகளை தட்டி விட்டு எழுந்தாள்.

“என்னடி பிரச்சனை உனக்கு?” கடுப்பாகி விட்டான் மாறன்.

“எனக்கு பிரச்சனையே இல்லை. ஆனா என்னை கொஞ்சம் தனியா விடுங்க”

“அலர்!” அவனின் அழுத்தத்தில் “என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டு இப்ப இந்த அழுத்தம் தேவையில்லாதது மச்சான்” என்று வீட்டிற்குள் சென்றாள்.

“உனக்காக மட்டும் இல்ல அலர் எனக்காகவும் சேர்த்து தான் சில உண்மைகளை உன்கிட்ட நான் மறைச்சேன். அந்த உண்மைகள் உனக்கு தெரிய வரும் போது நீ எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவேன்னு எனக்கே எனக்குள்ள ஒரு பயம். அதனால் மட்டும்தான் இப்போ வரைக்கும் உனக்கு நான் எதுவும் தெளிவா சொல்லல. நீ ஆப்பரேஷனை நல்லபடியா முடிச்சுட்டு வா. அதுக்கு அப்புறமா எல்லா விஷயத்தையும் உனக்கு பொறுமையா நான் சொல்றேன்”

“சரி, அந்த உண்மைகள் எனக்கு மெதுவா தெரிய வரட்டும். இத்தனை வருஷம் என்னை ஏமாத்தி ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கீங்களே, அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“உன்னை ஏமாத்தல அலர். அது உன்னோட நல்லதுக்காக”

“நீங்க என் கூட வாழ கூடாது, எனக்கு குழந்தை தங்கக்கூடாதுன்னு எப்படி தனியா முடிவு எடுக்கலாம்? எங்கிட்டயும் பேசி தானே நீங்க அந்த முடிவை எடுத்து இருக்கணும்? ஆனா இத்தனை வருஷமா ஒரு குழந்தைக்காக ஏங்கி ஏங்கி வாழ்ந்த நான் பைத்தியக்காரில?” கண்கள் கலங்கி சிவந்திருக்க, கோபமாக கேட்டவளிடம் பதில் சொல்ல முடியாமல் திணறினான் மாறன்.

“அலர்!” என அவளை நெருங்கி வர,

“கிட்ட வராதீங்க மச்சான். நீங்க என்னை தொடக்கூடாது” எனச் சீறினாள்.

“அதை நீ சொல்லக்கூடாதுடி. நீ என்னோட அலர். எனக்கானவள் மட்டுமே. உன்னை நான் என்ன வேணாலும் பண்ணுவேன்” என்றவன் அவள் கையை பிடித்து இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“விடுங்க, என்னை விடுங்க” அவள் திமிற, இடையில் அழுத்தத்தை கூட்டியவன், “இத்தனை நாள் நான் பொய்யா உன் கூட வாழ்ந்தேன்னு சொன்னேல்ல. அது உண்மை இல்லைன்னு இப்போ உனக்கு அதை நிரூபிக்க போறேன்” என்று அவளை தூக்கி கொண்டு அறைக்குள் செல்ல, கண்களை விரித்தாள் அலர்.

“இந்தக் கண்ணு, இந்த கண்ணு தான் என்னை அப்போதிலிருந்து இப்போ வர தூண்டி விட்டுகிட்டே இருக்கு. இன்னைக்கு அதுக்கு ரெஸ்ட் எடுக்க கூடாது” என்றவன் அவள் கண்கள் மீது தன் இதழ்களை பதிக்க, அவள் உதடு விரிந்தது.

“ஸ்ஸ் மச்சான் கூசுது” அவனை விலக்கப் போராட,

“என் காதல், அது உனக்கு புரியலையே அலர். நான் உன் கூட பொய்யா வாழ்ந்தேன்னு ஒரே வார்த்தையில் என் மனச மொத்தமா சிதறடிச்சிட்டியே. உன் கூட கடைசி வரைக்கும் வாழணும்னு தான்டி இத்தனை போராட்டம். நான் காரணங்கள் சொல்லியும் அது உனக்கு புரியலைன்னா உனக்கு புரியிற மாதிரி விளக்க வேண்டியது என் கடமை இல்லையா? அதான் இன்னைக்கு மொத்தமா விளக்கிடுறேன்” என்று அவள் மீது படர்ந்தவன், எந்த தடையும் இல்லாமல் அவளுள் மூழ்க, அவள் தான் சுவாசத்திற்கு ஏங்க வேண்டியிருந்தது.

 

Asha Evander

Moderator

அத்தியாயம் 5

சென்னையில் தொழில்துறை அமைச்சர் வைத்தியநாதனின் வீடு பரபரப்பாக இருந்தது. சொத்துக்குவிப்பு சம்பந்தமாக சிபிஐ, வெளிநாட்டு பண பரிமாற்றத்தின் பெயரில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை என ஒரே நாளில் அவரின் வீடே தலை கீழாக மாறி இருந்தது.

அவரின் மனைவி முருகாம்பாள் சில பெண் பாதுகாவலர்களின் பாதுகாப்பில் சோபாவில் அமர்ந்திருக்க, வைத்தியநாதன் மற்ற அதிகாரிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சில ஆவணங்கள் சரியாக இருந்தது தான் என்றாலும் பல முறைகேடான செயல்களில் அவர் ஈடுபட்டிருந்தது தெரிய வர, அவரைக் கைது செய்ய ஆணையுடன் காத்திருந்தனர் காவலர்கள்.

“பிரேக்கிங் நியூஸ்: தொழில்துறை அமைச்சர் வைத்திய நாதனின் வீட்டில் திடீர் சோதனை. சொத்து குவிப்பு வழக்கு, அளவுக்கு மீறிய வெளிநாட்டு பண பரிவர்த்தனை மற்றும் வருமான வரி மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு. அமைச்சர் வைத்தியநாதன் அவரது வீட்டில் வைத்தே கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது”

அனைத்து தொலைக்காட்சிகளிலும் முதன்மை செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, வைத்தியநாதன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

“என்னடா இந்த மனுஷன் இதுக்கே தலையில் கைய வச்சுட்டு உக்காந்துட்டாரு? இன்னும் எவ்வளவோ இருக்கே” வசந்த் பிரசாத்திடம் கிசுகிசுக்க, பக்கத்தில் நின்ற மணி அவனின் காலில் மிதித்தான்.

“வாய மூடிட்டு வந்த வேலைய பாருடா குரங்கு” என்றவன் அங்கிருந்த ஆவணங்களை எல்லாம் சேகரித்து வைத்தான்.

“மனுஷன் ஒரு அடி அடிச்சாலும் ரொம்ப ஸ்ட்ராங்கா அடிச்சிருக்காருடா”

“பின்னே இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் சும்மாவா விடுவாங்க? இது ட்ரைலர் மச்சி, மெயின் பிக்சர் இனி தான் இருக்கு” வசந்த் சொல்ல மீண்டும் மணியிடம் ஒரு மிதி வாங்கிக் கொண்டான்.

ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லாததால் அப்போதே கைது செய்யப்பட்டார் வைத்தியநாதன். அவர் ஆளும் கட்சியின் அமைச்சர் என்பதால் உடனே அனைத்து மீடியாக்களும் அவரின் வீட்டின் முன்னே குவிந்தனர்.

முகத்தை ஒரு கையால் மறைத்தபடியே வெளியே வந்த வைத்தியநாதனை மீடியாக்கள் சூழ்ந்து கொண்டனர்.

“இந்த வழக்கு தொடர்பா நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?”

“இது முறையே ஆதாரம் இல்லாத வழக்கு. இதிலிருந்து கண்டிப்பா நான் வெளியே வருவேன்” என்றவர் நகர பார்க்க,

“சார் வெளிநாட்டு பண பரிவர்த்தனை நிறைய பண்ணி இருக்கிறதா சொல்றாங்களே. உங்க பொண்ணு கூட கடந்த ஏழு வருஷமா வெளிநாட்டில் இருக்கிறதா தானே நீங்க சொல்லிட்டு இருக்கீங்க. ஒருவேளை இந்த பணம் முழுவதும் உங்க பொண்ணுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி விட்டுட்டீங்களா?” என்ன ஒரு நிருபர் கேட்க,

“என் பொண்ணு வெளிநாட்டில் இருந்தா மக்களோட பணத்த நான் எடுத்து அவளுக்கு அனுப்பிட முடியுமா? எத்தனை ப்ரோசிஜர், எத்தனை தடைகள் இருக்கு. எல்லாத்தையும் மீறி நான் அனுப்பினேன்னு ஆதாரம் இருந்தால் மட்டும் அதை பற்றி பேசுங்க. மத்தபடி உங்க வாய்க்கு வந்த மாதிரி ஒரு கதையை சொல்லாதீங்க” என காட்டமாக கூடியவர் காவல்துறை வாகனத்தில் ஏறினார்.

“என்னடா இந்த மனுஷன் இப்படி பச்சையா பொய் சொல்லிட்டு போறாரு? பொண்ணு வெளிநாட்டில் இருக்காம், அப்போ நம்ம சார் கல்யாணம் பண்ணினது யாரடா?” வசந்த் கேட்க,

இளங்கோ “இவனுக்கு ஒரு மிதி எல்லாம் போதாது மணி. மாறன் சார் முன்னாடி நிக்க வச்சு இதே கேள்வி அவர் கிட்ட கேளுடா பார்ப்போம்” என வசந்த் தலையில் கொட்டினான்.

“என்ன கொலை பண்றதுலயே குறியா இருக்கீங்களேடா. வாங்க மிச்ச வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்” என்றவன் அவர்கள் சேகரித்த ஆவணங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்க கிளம்பினான்.

அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் வருமான வரித்துறை ஆகியவை பொதுவாக இரவில் சோதனைகள் நடத்துவதில்லை. ஏனெனில் இந்திய சட்டப்படி விசாரணைகள் மற்றும் சோதனைகள் பொதுவாக அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் நடத்தப்பட வேண்டும்.

இன்று வைத்தியநாதன் வெளிநாடு கிளம்புவதாக தகவல் வரவும் மதியத்திற்கு மேல் வந்தவர்கள் சோதனையை தொடங்க, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களின் சோதனை இரவு எட்டு மணி வரை நடந்தது. அனைத்தையும் முடித்தவர்கள் அலுவலகத்திற்கு கிளம்பும் போது இரவு பத்து மணியை தாண்டி இருந்தது.

வசந்த் புலம்பிக்கொண்டே வேலையை பார்க்க, அவர்களின் புலம்பலுக்கு காரணமானவனோ மனைவியுடன் அழகிய கூடலில் ஈடுபட்டிருந்தான்.

“மச்சான்” அவனின் நெஞ்சில் தலையை வைத்து வந்தவள் கூப்பிட, “என்னடி?” எனக் கேட்டான்.

“இப்போ நீங்க எதுவும் தடை யூஸ் பண்ணல தானே?”

“ஏன் இதுவரைக்கும் ப்ரூஃப் பண்ணது பத்தலையா? உனக்கு சந்தேகம் மட்டும் குறையவே மாட்டேங்குது” என்றவன் அவள் தலை முடியை பற்றி இழுக்க, நெஞ்சில் படுத்திருந்தவள் அவன் முகத்தில் வந்து மோதினாள்.

“யோவ் வலிக்குது மச்சான்”

“உனக்கு வலிக்காத வரைக்கும் நீ திருந்தவே மாட்டடி” என்றவன் மீண்டும் அவளுடன் கூடலில் ஈடுபட, அலர் தான் சோர்ந்து போனாள்.

“இதோட முடிச்சுக்கலாம். நான் நம்பிட்டேன்” அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக தன்னை பிரித்துக் கொண்டவள், எழும்ப அதே நேரம் அவனின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வந்தது.

எட்டி அலைபேசி எடுத்தவன் குறுஞ்செய்தியை திறக்க, ‘சக்சஸ், வைத்தியநாதன் அரஸ்டட்’ என்ற செய்தியுடன் யூட்யூபில் இருந்த பிரேக்கிங் நியூஸ் மற்றும் நிருபர்கள் கேட்ட கேள்வி தொகுப்பு அனைத்தின் இணைப்பையும் அனுப்பி வைத்திருந்தான் வசந்த்.

‘கடைசியில் வைத்தியநாதனுக்கு ஒரு பிரேக் விட்டாச்சு’ என்ன மனதில் நினைத்த மாறன் மனைவியை பார்த்தான். கலைந்து கிடந்த துணிகளை எல்லாம் மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் அலர்.

‘இவளுக்கு எல்லாம் ஞாபகம் வரும் போது இதையும் எப்படி சமாளிக்க போறேனோ ஆண்டவா!’ பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

“மச்சான் நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு என்ன எல்லாம் எடுத்து வைக்கணும்?” அவனின் கவனத்தை திசை திருப்பினாள் அலர்.

“ரிப்போர்ட் மட்டும் தான், அது நாளைக்கு நான் எடுத்து வைக்கிறேன். நீ இங்க வா” என அவளை தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

“என்னாச்சு?”

“ஒன்னும் இல்ல, உன்னை இப்படியே அணைச்சுகிட்டு இருக்கணும்னு தோணுச்சு. ஆப்ரேஷன் முடிஞ்சும் கொஞ்சம் மாசத்துக்கு உன்னை நெருங்கவே முடியாதுல” என்றவன் மனதில் பல யோசனைகள்.

“மச்சான் நம்ம ஹாஸ்பிடல் போன பிறகு நிலம் சும்மாவா இருக்கும்? நெல் அறுவடை செஞ்சே ரெண்டு மாசத்துக்கு கிட்ட ஆயிடுச்சுல. வேற எதுவும் பயிரிடலையா?”

“கதிரவன் கிட்ட பேசி இருக்கேன் அலர். ஏதாச்சும் கடலை பயிர் வகைகள் போடணும். அடுத்த ஆறு மாசம் அவனுக்கு குத்தகைக்கு மாதிரி கொடுத்து இருக்கேன். நம்ம ஹாஸ்பிடல்ல திரும்பி வர நேரம் எல்லாம் சரியா இருக்கும்”

“ஓ சரி மச்சான். வாங்க சாப்பிடலாம், ரொம்ப பசிக்குது” என எழுப்பினாள்.

“என் பசியே வேறடி” என அவளை அணைத்து விடுவித்தவன் தானும் எழும்பினான்.

சிபிஐ அலுவலகத்தில் வசந்த், பிரசாத், மணி, இளங்கோ நான்கு பேரும் வைத்தியநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்களை எடுத்துக் கொண்டு அவர்களின் தலைமை அதிகாரியை சந்தித்தனர்.

“என்னங்கடா உங்க மாறன் சார் எப்போ தான் வந்து ஜாயின் பண்றதா இருக்கிறார்? ஆபீஸ்க்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. அவனை இந்த பதவியை விட்டு தூக்க கூட எனக்கு அதிகாரம் இருக்கு தெரியும்ல. அவன் இருக்கிற இடத்தை டிராக் பண்ண தெரியாம இல்ல, பண்ண வேண்டாம்னு தான் அமைதியா இருக்கேன். சீக்கிரம் ஆபீஸ் வந்து சேர வழியை பார்க்க சொல்லுங்க” அவர்களின் தலைமை அதிகாரியும் குருவும் ஆன கௌரவ் சர்மா சொல்ல,

“நாங்களா சார் வர வேண்டாம்னு சொல்றோம்? அவரை சுத்தி இருக்கிற ஆபத்து உங்களுக்கும் தெரியும் தானே. அவர் அவருக்கு ஒன்னுனா கூட தாங்கிப்பார். ஆனா அலர் மேடத்துக்கு ஒரு பிரச்சனைனா எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் போய்டுவார். அவங்கள சரி பண்ணிட்டு சீக்கிரமே வந்து ஜாயின் பண்ணுவார்” என்ற மணி தாங்கள் கொண்டு வந்திருந்த பைலை அவர் முன் வைத்தான்.

“ம்ம் எல்லா ஆதாரமும் பக்காவா இருக்கு தானே”

“எல்லாமே கரெக்டா இருக்கு சார். நிறைய பேர் கிட்ட இருந்து வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கிட்டு அதை சொத்தா மாத்தி போட்டு இருக்கார். சில தொழிலதிபர்கள் கிட்ட இருந்து தமிழ்நாட்டில் முதலீடு பண்ண உதவி செய்யறதா சொல்லி முன்பணம் வாங்கி இருக்கார். வாங்கின பணத்துல பாதிய நிறைய சொத்தா வாங்கி சேர்த்து போட்டு இருக்கார். எதுக்குமே தகுந்த ஆவணங்கள் இல்லை”

“அமலாக்க துறையில நாளைக்கு பதினைந்து நாள் கஸ்டடி கேட்டு இருக்காங்க. அவங்க கிட்ட இருக்க ஆதாரங்கள், சிபிஐ அண்ட் வருமான வரி சார்பா கொடுக்கிற ஆதாரங்கள் எல்லாத்தையும் வைத்து ஜெயில் கஸ்டடி கேட்கலாம்” என்றான்.

“சரிங்கடா, மொத்த ஆபீசும் மாறனை தான் ரொம்ப மிஸ் பண்ணுது. அவன் சீக்கிரம் வந்து சார்ஜ் எடுத்தா நல்லா இருக்கும்” என கௌரவ் சர்மா கூற,

“சார் உங்க செல்ல பிள்ளைக்கு சட்ட ரீதியா வெளியிலிருந்து சிபிஐ வேலையை பார்க்க அப்ரூவல் வாங்கி கொடுத்ததே நீங்கதான். இத்தனை வருஷம் அண்டர்கவர் ஆப்பரேஷன் அப்படிங்கற பேர்ல அவர் ஜாலியா விவசாயம் பண்ணி நெல்லு வித்துட்டு இருக்காரு. இங்க நாங்க மண்டைய காய விட்டு வேலை பார்த்துட்டு இருந்தா அவரு செல்லப்பிள்ளையை மிஸ் பண்றாராம்ல” வசந்த் குதிக்க,

“அடங்குடா” என அவனின் தலையில் கொட்டினார் கௌரவ் சர்மா.

“இவன் நாக்குல இன்னைக்கு சனி நாட்டியமாடுதுடா” மற்றவர்கள் சிரித்துக் கொண்டனர்.

“ஓகே பாய்ஸ் நீங்க கிளம்புங்க, வைத்தியநாதனுக்கு மொத்தமா முடிவை கட்டிக்கிட்டு நாம என்ஜாய் பண்ணலாம்”

“கண்டிப்பா சார்” என வருடம் விடை பெற்று மற்றவர்கள் வெளியே வர, பிரசாத் “அடுத்து என்னடா?” என்றான்.

“அடுத்தது என்ன பெர்சனல் இன்வெஸ்டிகேஷன் தான்”

“யாருக்கு?”

“மாறன் சாருக்கு தான். ஏழு வருஷம் முன்னாடி நடந்த விபத்து இப்பவும் ஒரு மர்மகதையாக தான் இருக்கு. ஞாபகம் இருக்குல்ல?”

“அதுக்கும் இந்த வைத்தியநாதனுக்கும் சம்பந்தம் இருக்கும்னு சொல்ல வரியா?” பிரசாத் கேட்க,

“இருக்கலாம்னு ஒரு சந்தேகம் தான். அன்னைக்கு அலர் மேடம் சார் கூட இருந்தது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் சாரை மட்டும் கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கலாம்” என்றான் மணி.

“முதல்ல இத முடிச்சு விடுங்கடா. அந்த சின்ன பொண்ணு கல்யாண விஷயத்தை கூட முடிச்சு போட்டு விடுறேன். மொத்தமா ஜெயில்ல களி தின்னுட்டு வரட்டும். இப்போ என்னை கொஞ்சம் தூங்க விடுங்கடா” வசந்த் கெஞ்ச,

“முதல்ல இவன முடிக்கணும்டா. சீரியஸா பேசுற நேரமெல்லாம் இடையில் தலைய விடுறான். சரி கிளம்பு, நாளைக்கு காலைல வந்து மிச்ச வேலையை பார்க்கலாம்” எனக் கிளம்பினர்.

 

Asha Evander

Moderator

அத்தியாயம் 6

“அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ

ஆள்கின்ற அரசியும் நீ

கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ

கருணைக்கு எல்லையும் நீ

விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ

வேதத்தின் மூலமும் நீ

பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ

பாருக்கு அன்னையும் நீ

அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே

அன்புவடி வான உமையே

அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற

ஆதிசிவ சக்தி தாயே!”

சோலையம்மன் கோவிலில் பாடல் ஒலிக்க, அந்த சத்தத்தில் மெதுவாக தன் கண்களை திறந்தாள் அலர். மாறனின் நெஞ்சில் தலைவைத்து படுத்திருந்தவள் மெதுவாக விழிகளை உயர்த்தி அவன் முகம் பார்க்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன்.

“ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பல்ல மச்சான். இத்தனை வருஷம் என்கிட்ட சொல்ல முடியாம மனசுக்குள் வச்சு வேதனை பட்டது போதாதுன்னு நானும் உன்னை கஷ்டபடுத்திட்டு இருக்கேன்” என வருந்தியவள் மெதுவாக எழுந்தமர்ந்தாள்.

கண்களை அழுந்த துடைத்தவள் அவசரமாக குளித்து விட்டு கோவிலுக்கு சென்றாள்.

“வாம்மா வள்ளி, இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போறதா மாறன் சொன்னான். கிளம்பியாச்சா?” என கேட்டுக் கொண்டே வந்த பூசாரி அவளின் கையில் குங்குமம், திருநீர் கொடுத்தார்.

“கிளம்பும் போது அம்மாகிட்ட சொல்லிட்டு போக வருவேன் ஐயா. இனி தான் கிளம்பணும்” என்றவள் அம்மனின் முன் படியில் அமர்ந்தாள்.

“எல்லாமே சரியா நடந்து முடியணும் அம்மா. என்னவோ பெரிய பிரச்சனைன்னு மட்டும் தெரியுது. ஆனா என்னன்னு தான் மச்சான் சொல்ல மாட்டேங்குறார். எதுவா இருந்தாலும் எல்லாமே சுமூகமாக முடியணும். அதுக்கு நீ தானே தாயே அருள் புரியணும்” என வேண்டிக் கொண்டாள்.

பூசாரியிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு கிளம்ப, அங்கே மாறன் இன்னும் தூக்கத்தில் தான் இருந்தான்.

‘என்னாச்சு இவருக்கு? இந்நேரம் வயலுக்கு கிளம்பி போயிருக்கணுமே’ என்றெண்ணியவள் அவனை தொந்தரவு செய்யாமல் காலை உணவிற்காக களி கிண்டி தொட்டுக் கொள்ள கருவாட்டுக் குழம்பை செய்தாள்.

அனைத்தையும் அவள் முடித்து பாயை விரித்து, உணவுகளை எடுத்து வைக்கும் நேரம் மாறன் எழும்பினான். பின்பக்கம் கொல்லைக்கு சென்று குளித்து முடித்து வேட்டியை கட்டிக் கொண்டவன் சட்டை போடாமல் ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வந்தமர்ந்தான்.

“வயலுக்கு போகலையா மச்சான்?” கேட்டுக்கொண்டே அவனுக்கு உணவை பரிமாறினாள் அலர்.

“இன்னைக்கு போகல அலரு. கதிர் வரேன்னு சொன்னான், அவனுக்காக தான் இங்க இருக்கேன்” என்றவன் உணவை உண்டு முடித்து அவளுக்கும் உணவை எடுத்து தட்டில் வைத்து கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.

கதிரும் அப்போது வர, வயலுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அவனுக்கு சொன்னான் மாறன்.

“நீங்க வர ஆறு மாசம் ஆகுமாண்ணா?” கதிர் கேட்க,

“ஆபரேஷன் முடிஞ்சு எப்படியும் ஊருக்குள் வர ஒரு மாசம் எடுக்கும் கதிர். அடுத்து அவளை கவனிக்கவே சில மாதங்கள் தேவை படலாம். அதனால் நீ ஆறு மாசம் குத்தகைக்கு எடுத்துக்கோ. அடுத்து அறுவடை முடிஞ்சு நான் திரும்ப எடுக்கிறேன்” என்றான்.

“சரிண்ணா, திருவிழா நேரம் இன்னும் நிறய வேலைகள் இருக்கும். எல்லாம் சமாளிக்கணும்” என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.

அவனை அனுப்பி விட்டு வீட்டிற்குள் வர, அலர் உணவை முடித்து விட்டு மருத்துவமனை கிளம்ப வேறு புடவை எடுத்து கட்டிக் கொண்டிருந்தாள். அவனை பார்த்தவள் ஒன்றும் கேட்காமல் கட்டி முடிக்க, அவனும் அவளின் பரிசோதனை முடிவுகள் அடங்கிய கோப்பை மற்றும் தேவையான பொருட்களை ஒரு பையில் எடுத்து வைத்தான்.

பின் அவனும் ஒரு சட்டை, பேன்ட் போட்டு கிளம்ப இருவரும் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சென்ற நேரம் திருவிழா பற்றி பேச ஊர் தலைவர் மற்றும் சில பெரியவர்கள், ஊர் பெண்கள் என இருக்க இவர்களை கண்டதும் பெண்கள் அலரை சுற்றிக் கொண்டனர்.

“வள்ளி பொண்ணு, நீ நல்ல படியா ஆபரேஷன் முடிச்சு வந்தா ஆத்தாவுக்கு நூறு நெய் விளக்கு ஏத்துறதா வேண்டி இருக்கேன். ஒரு பிரச்சனையும் இல்லாம நீ திரும்பி வருவ கண்ணு” ஒரு பாட்டி அவளின் கன்னம் பற்றி சொல்ல, அலர் கலங்கி நின்றாள்.

“நானும் உனக்காக, உன்னோட விரதத்தை இந்த திருவிழாவில் நிறைவேற்ற, பூக்குழி மிதிக்குறதா வேண்டி இருக்கேன் வள்ளி” இன்னொரு பெண் அவளிடம் சொல்ல,

“அக்கா!” என அவளை கட்டி பிடித்து அழுதே விட்டாள்.

“என்னடி நீ? இத்தனை வருஷம் உன்னை பார்த்து இருக்கோம். யார்கிட்டேயும் வம்பு தும்பு போகாம உன் மச்சான் தான் உயிருன்னு வாழ்ந்துட்டு இருக்க. உன் உயிருக்கு ஒரு ஆபத்துன்னா நாங்க வேண்டாம யார் இருக்கா? அந்த அம்மா எங்க எல்லார் வேண்டுதலையும் கேட்டு உன்னை முழுசா எங்க பழைய வள்ளியா திரும்ப இங்கேயே அனுப்பி விடுவா பாரு. தலையில் ஆபரேஷன்னு சொன்னாங்க, அந்த ஆத்தா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம திரும்ப உன் மச்சானுக்கே திருப்பி கொடுப்பா. போய்ட்டு வா பொண்ணு” என அவளின் கன்னம் பற்றி முத்தியவள் அம்மனின் காலடியில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைத்து விட்டார்.

மாறனுக்கும் ஒவ்வொரு நொடியும் பயமாக தான் இருந்தது. ஆனாலும் இந்த அம்மன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் திருவிழாவுக்கு ஆகும் செலவில் தன் பங்கை தலைவரிடம் கொடுத்து விட்டு அவளுடன் கிளம்பினான்.

திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தவளை நினைத்து அவன் மனம் கலங்கியது. இந்த அறுவைசிகிச்சை முடிந்தால் அவளுக்கு இப்போதைய நினைவுகள் அப்படியே இருக்குமா என்று கேட்டால் கேள்விக்குறி தான்.

மிக நுண்ணிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதால் அறுவைசிகிச்சையின் போது அவளுக்கு பழைய நினைவுகள் வரும் வாய்ப்பும் அதிகம். அதே நேரம் வராமலும் போகலாம். ஒருவேளை அப்படி நினைவு வந்தால் அவள் அவனை உதறித் தள்ளி விடுவாள் என்றெல்லாம் இல்லை. ஆனால் அவளின் தந்தையை பற்றிய நினைவு வந்தால் அவளின் கட்டுப்பாடு அவளிடம் இருக்காது என்பதே உண்மை.

மனதில் அதைக் குறித்து பயம் எழுந்தாலும் அதை சாவகாசமாக மறைத்துக் கொண்டவன் தனது ஜீப்பில் ஏறி அமர, மறுபக்கம் அவனோடு இணைந்துக் கொண்டாள் அலர்.

ஏழு வருடங்கள் கழித்து அந்த ஊரை தவிர்த்து பல மாதங்கள் வெளி உலகம் காணப் போகிறாள் அலர். இதுவரை மாத பரிசோதனைக்கு சென்றாலும் வேறு எவரும் அவளை காணாதபடி யாரும் இல்லாத நேரத்தில், இடத்தில் தான் மருத்துவர் அவளை பரிசோதிப்பார். அவர்களை குறித்து அவரும் உண்மையை அறிவார் என்பதால் இந்த முக்கிய ஏற்பாடு.

இனியும் தனியாக அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் மருத்துவமனையில் தான் தங்க வேண்டும். அவனின் நண்பர்களை உதவிக்கு அழைத்தாலும் அவர்களை பின்தொடர்ந்து யாராவது அவர்களின் இருப்பிடத்தை அறிந்துக் கொண்டால் இன்னும் விபரீதம் ஆகி விடும். எனவே அவர்களின் உதவி இல்லாமல் தான் அவளின் உடல்நிலையை சரியாக்க வேண்டும்.

இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முன் அவன் ஜீப் நின்றது. அலர் கையில் ஒரு துப்பட்டாவை கொடுத்தவன் அவளின் முகத்தை மறைத்துக் கட்டிக் கொள்ள சொல்ல, என்னவென்று புரியாவிட்டாலும் அவன் சொன்னதை செய்தாள்.

அவனும் ஒரு தொப்பியை முகத்தை மறைக்கும் வண்ணம் போட்டுக் கொண்டவன், மருத்துவருக்கு அழைப்பு விடுத்தான். அது அவரின் மருத்துவமனை என்பதால் மற்றவர்கள் கேள்வி கேட்கும் வண்ணம் எதுவும் இருக்காது.

அவனின் அழைப்பை ஏற்றவர், அனைத்தும் ஏற்பாடாகி விட்டது என கூறி ஓர் அறையின் எண்ணை கூற, அலரை அழைத்துக் கொண்டு அங்கு விரைந்தான் மாறன்.

அவனின் நடையில் வேகத்தில் “ஏதோ கொலை, கொள்ளை பண்ண போறது போல இத்தனை பில்டப் தேவையா மச்சான்?” என்று கேட்டுக் கொண்டே நடந்தாள்.

“வாயை மூடிட்டு வாடி மனுஷன் அவஸ்தை புரியாம” என அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே நடக்க,

அவனை நெருங்கியவள் “பாத்ரூம் அவசரமா?” என கிசுகிசுத்தாள்.

திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான். அதில் இருந்த அனலில் அலர் அரண்டு வாயை மூடிக் கொண்டாள்.

மருத்துவர் சொன்ன அறை வரவும் அவசரமாக அவளை உள்ளே அனுப்பியவன் மருத்துவரிடம் கூறி விட்டு வருவதாக சென்றான்.

அவனின் பதட்டத்தில் அலர் எதுவும் சொல்லாமல் அந்த அறைக்குள் அமர, சிறிது நேரத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் சில செவிலியர்களுடன் அந்த அறைக்குள் வந்தான் மாறன்.

அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர்.காயத்ரி அவளை மற்ற மருத்துவர்களிடம் நேரில் அறிமுகப்படுத்தி அவளின் பாதுகாப்பை பற்றியும் எடுத்துரைத்தார்.

“டாக்டர்.கென்னடி இவங்க தான் மிசஸ்.அலர்மேல் வள்ளி. நீங்க இவங்களோட ரிப்போர்ட் எல்லாம் பார்த்திருப்பீங்க அண்ட் இப்போ இவங்க உயிருக்கு வெளியில் இருந்தும் ஆபத்து இருக்கிறதால் இங்க ரொம்ப கவனமா இருக்க வேண்டி இருக்கு. உங்க யார் மூலமாகவும் இவங்க ரெண்டு பேரும் இங்க இருக்கிறது வெளில போகாதுன்னு நம்புறேன்” என்றவர் இளந்திரை மாறன் பக்கம் திரும்பினார்.

“மாறன் திஸ் இஸ் டாக்டர். கென்னடி அண்ட் திஸ் இஸ் டாக்டர். ஜெனிலா ஃப்ரம் லண்டன். அலரோட ஆபரேஷன்காகவே இங்க வந்திருக்காங்க. ரெண்டு பேரும் நரம்பியல்ல பெஸ்ட் டாக்டர்ஸ். கண்டிப்பா அலர் சரி ஆகிடுவா. ரெண்டு நாள் எங்க கண்காணிப்பில் இருந்துட்டு சில டெஸ்ட் எடுத்துட்டு அடுத்து ஆபரேஷன் பண்ணிடலாம்” என்றவர் கூட இருந்த செவிலியர்களிடமும் அவர்களின் பாதுகாப்பை பற்றி கூறிவிட்டு கிளம்பினார்.

அவர்கள் கிளம்பியதும் இதுவரை அவர்களின் பேச்சு புரியாமல் முழித்து கொண்டிருந்த அலர் மாறனிடம் திரும்பினாள்.

“மச்சான் என்னன்னவோ பேசிட்டு போறாங்க. நாம என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? யார் நம்மள கொலை பண்ண போறா?” நக்கலாக கேட்டாலும் உள்ளுக்குள் பயம் வந்திருந்தது.

“நீ அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் இல்ல. நான் தான் பெரிய ஆளு. ஒழுங்கா மனசை ரிலாக்ஸ் ஆக வச்சிட்டு இரு. தேவையில்லாம எதையும் யோசிச்சு நீயும் செத்து என்னையும் சாகடிக்காத” அவனின் கடுப்பில் இவளுக்கு கஷ்டமாக இருந்தது.

“சாரி மச்சான், டென்ஷன் ஆகாதீங்க”

“ச்ச, ச்ச ஒன்னும் இல்லைடா. நான் தெளிவா இருக்கேன். நீயும் குழம்பிக்காம இரு” என்றவன் ஹரிக்கு அழைப்பு விடுத்தான்.

“ஹலோ சார்” இரண்டு முறை அழைத்த பின், மூன்றாவது முறை பதில் அளித்தான்.

“எல்லாம் ஓகே தானே ஹரி?”

“சார் நாங்க ஊருக்கு வந்துட்டு இருக்கோம். முருகாம்பாள் மேடம் வைத்தியநாதன் சார் அரெஸ்ட் பத்தி சொல்லவும் எல்லாரும் கிளம்பிட்டாங்க. இப்போ மும்பையில் இருக்கோம். அடுத்து சென்னை ஃப்ளைட்”

‘அட இதை எப்படி மறந்தேன்?’ என நினைத்தவன் “இங்க வந்தாலும் அவங்க கொஞ்ச மாசத்துக்கு எங்களை தேடாத மாதிரி திசை திருப்பி விடு ஹரி. உன்னால முடியும். நாங்க இப்போ திருநெல்வேலியில் தான் இருக்கோம். வீடு பார்த்துட்டியா?” எனக் கேட்டான்.

“ரெண்டு நாள்ல உங்களுக்கு ரெடி பண்ணி குடுத்துடுறேன் சார். என்னோட அண்ணாக்குன்னு சொல்லி தான் கேட்டு இருக்கேன். சீக்கிரம் ரெடி ஆகிடும்”

“ஓகே தேங்க்ஸ் ஹரி. நீ சென்னை ரீச் ஆனதும் எனக்கு மெசேஜ் மட்டும் பண்ணி விடு. இனி கால் பண்ண வேண்டாம்” என்று அழைப்பை துண்டித்தவன் தன்னையே விழி எடுக்காமல் பார்க்கும் அலரை பார்த்து சிரித்தான்.

“என்னடி சைட் அடிக்குறியா?”

“அடிச்சிட்டாலும்” என முணுமுணுத்தவள் “நீ எதுவும் திருட்டு வேலை பாக்குறியா மச்சான்?” எனத் தீவிரமாக கேட்டாள்.

“திருடனை புடிக்குற வேலை” என்றவன் “எல்லாமே உனக்கு பொறுமையா சொல்லுவேன் அலரு. அதுவரை வாயை மூடவும்” என சைகை செய்ய, சிணுங்கி கொண்டே திரும்பினாள்.

செவிலியர் வந்து அவளுக்கு சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ, ஈசிஜி, மற்றும் இரத்த பரிசோதனை செய்ய அழைத்து செல்லவும் மாறனும் கூட சென்றான். அனைத்தையும் முடித்து விட்டு சோர்வாக வந்து படுத்தவளுக்கு உறக்கம் தான் அண்டவில்லை.

“மச்சான்” என அவனின் கையை சுரண்ட, “என்னமா?” என அவளின் அருகில் அமர்ந்தான் மாறன்.

“இந்த ஆபரேஷன் முடிஞ்சு நான் நல்லபடியா வந்துடுவேன்ல” மனதின் பயம் வார்த்தைகளாக வெளி வந்திருந்தது.

“கண்டிப்பா அலரு. ரெண்டு பேருமே தி பெஸ்ட் டாக்டர்ஸ். உன்னை கண்டிப்பா காப்பாத்தி என் கையில் குடுத்துடுவாங்க. அடுத்து வருசம் ஒன்னு வச்சு ரிலீஸ் பண்ணுறோம். குடும்பத்தை விரிவு படுத்துறோம்” என அவளின் தலை கோத வெட்கத்தில் முகம் சிவந்தது.

“போங்க மச்சான்” என முகத்தை மூடியவள் பின் மருந்தின் வீரியத்தில் தூங்கினாள். அவள் தூங்கவும் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்தவன் மனம் துடித்தது.

அமலாக்கதுறை அலுவலகம். வைத்தியநாதன் ஆளுங்கட்சி அமைச்சர் என்பதால் பெரிதாக அவரை கேள்வி கேட்கவில்லை என்றாலும் அவரின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் திரட்டிக் கொண்டிருந்தனர்.

முதல்கட்ட விசாரணையாக இருந்த ஆதாரங்களை வைத்து, அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்தனர். வைத்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து, வங்கி கணக்குகள், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை ஆராய்ந்து, சட்டத்தின் அடிப்படையில் வருமானத்தை ஒப்பிட வேண்டும்.

அவரிடம் என்ன கேள்விகள் கேட்டாலும் ஒழுங்கான பதில் வராமல் போகவே, அவர்களுக்கு வேறு வழியில் ஆதாரங்கள் சேகரிக்க வேண்டிய சூழ்நிலை. சிபிஐ சம்பந்தமாகவும் புகார் இருந்ததால் அவர்களிடம் இருந்தும் ஆதாரங்களை பெற்றுக் கொண்டனர்.

வைத்தியநாதன் தனது கட்சியின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எப்படியாவது தன்னை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள் என வேறு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்தார்.

நேரடியாக அரசு தலையிட முடியாது. ஆனால் சட்ட ஆலோசகர்கள் வைத்தோ அல்லது ஊடகங்களில் இவரின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிர் வாக்கு வைத்தோ திசை திருப்ப வாய்ப்பு உண்டு. அதையே தான் வைத்தியநாதன் நம்பி கொண்டிருந்தார். ஆனால் மாட்ட வைத்தது சிங்கத்தின் குகையில் என்பதும் அத்தனை சீக்கிரம் சிங்கம் அவரை வெளியேற விடாது என்பதையும் அவர் கவனிக்க தவறி விட்டார்.

ஒன்பது வருடங்களாக வைத்தியநாதனை பின் தொடர்ந்து அவரின் அத்தனை ரகசியங்களையும் அறிந்து, எந்த இடத்தில் சொத்து இருக்கிறது, எவ்வளவு கோடி ரூபாய் எந்த வங்கியில் இருக்கிறது என்பது வரை சரியான கணக்கில் வைத்து அவரை கைது செய்ய வைத்திருந்தான் இளந்திரை மாறன்.

அவன் இத்தனை தூரம் போவான் என அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். கைது செய்யப்பட்ட அன்று தான் சுவிட்சர்லாந்து செல்ல கிளம்பியிருந்தார். ஆனால் அவரின் திட்டத்தை அறிந்தே அன்றைய தினம் கைது செய்ய வைத்தான் மாறன்.

எதுவும் அறியாமல் தன் கட்சியினர் காப்பாற்றுவார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார் வைத்தியநாதன். இந்த அடிக்கே இப்படி என்றால் பின்னால் வரும் பெரும் அடிக்கு எங்கே வலிக்குமோ?

இவரின் நிலமை இப்படியிருக்க மாறன் அங்கு மனைவியின் அருகில் துடித்துக் கொண்டிருந்தான்.

 

Asha Evander

Moderator
அத்தியாயம் 7

காயத்ரி மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல். அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாறனும் தன் மனைவி அலர் உடன் அதே அறையில் தங்கி கொள்ள அனுமதி உண்டென்பதால் இரவு உணவு முடித்து விட்டு அங்கேயே தங்கினான்.

இரண்டு நாள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால் அவளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அனைத்தும் சீராக இருக்க பரிசோதனை அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருந்தது. மாறனும் அலர் தூங்கியதும் கண்ணயர்ந்து விட, திடீரென பாட்டில் கீழே விழும் சத்தத்தில் விழித்தவன் அவள் நிலை கண்டு அதிர்ந்தான்.

கண்கள் மேலேறி சொருக, அவளின் உடல் தூக்கி தூக்கி போட்டது. அவளின் நிலையை கணித்தவன் உடனே பக்கத்து அறையில் இருந்த செவிலியருக்கு சொல்ல, வந்து பரிசோதித்தவர் மருத்துவருக்கு அழைத்தார்.

வந்து பரிசோதித்த மருத்துவர் ஜெனிலா “ஃபிக்ஸ் வர வாய்ப்பே இல்ல. எல்லாமே நம்ம கண்ட்ரோல்ல தானே இருக்கு. ஏதாவது ரொம்ப கஷ்டமா அல்லது ஆப்ரேஷன் பற்றி பயமா இருந்தாங்களா?” எனக் கேட்டார்.

“இல்லயே டாக்டர். அவ அப்படி பேசும் போது கூட நான் வேற பேச்சு பேசி அவளை டைவர்ட் பண்ணி விட்டேனே” என்று சொன்ன மாறன் கலங்கி நின்றான்.

“ஓகே மாறன். எதையோ ரொம்ப ஆழமா யோசிச்சு அதை பற்றிய அழுத்தம் தான் இப்படி ஆகிருக்கு. ஒருவேளை தூக்கத்தில் அவங்க பழைய நினைவுகள் ஏதாவது தாக்கியிருக்கலாம். இல்லன்னா உங்ககிட்ட நார்மல்லா இருக்கிற போல காட்டிக்கிட்டு மனசுக்குள் ஒரு அழுத்தம், பயம் இருந்திருக்கலாம். டோண்ட் வொரி மிஸ்டர். மாறன், மெடிசின் குடுத்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் சரி ஆகிடுவாங்க. டேக் கேர்” என்று கூறி விட்டு நகர்ந்தார்.

அவர் சென்றதும் அவளின் அருகில் வந்து கையை பற்றிக் கொண்டவன் “என்னை விட்டு அவ்ளோ சீக்கிரம் போக நினைக்காத அலர். நெஞ்செல்லாம் வலிக்குது. நீ உயிரோட இருந்து என்னை விட்டு தூரமா இருந்தாலும் என்னால் தாங்க முடியாது. என் உயிரே உன் நெஞ்சுகூட்டுக்குள்ள தான் இருக்கு. நீ இல்லாத வாழ்க்கை நான் இருந்தும் இல்லாத மாதிரி தான்” என அவளின் கையில் முத்தமிட்டான்.

நொடி நேரத்தில் அவனுக்கு மரண பயத்தை அல்லவா காட்டி விட்டாள்!

“பி ஸ்ட்ராங் மாறா. அவளால் உன்னை விட்டு எங்கேயும் போக முடியாது. போகவும் மாட்டா” தன்னையே தேற்றிக் கொண்டவன் அவளின் அருகிலேயே தலை வைத்து படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் காலையில் வைத்தியநாதன் வீடே பரபரப்பாக இருந்தது. மாறன் மற்றும் அலரை தேடி சென்றவர்கள் அனைவரும் வீடு திரும்பியிருந்தனர்.

“அவங்க ரெண்டு பேரையும் இன்னும் எத்தனை வருசம் தேடுவீங்கடா?” எனக் கேட்டுக் கொண்டே வரவேற்பறையில் இருந்த மர நாற்காலியில் வந்தமர்ந்தார் முருகாம்பாள், வைத்தியநாதன் மனைவி.

“இந்தியாவிலேயே இல்ல போல அக்கா. நாங்களும் தேடாத மாநிலம் இல்ல, ஏரியா இல்ல. ஆனாலும் எங்க கண்ணுல சிக்கவே மாட்டேங்குது ரெண்டும். சிபிஐ ல நம்ம ஆளை வச்சு விசாரிச்சா அவன் அந்த ஆபீஸ் வந்தே ஏழு வருசம் ஆகுதாம். எங்க மறைஞ்சு வாழுறான்னு தான் தெரியல. அவன் இருக்குற இடம் மட்டும் தெரிஞ்சா அவனை வெட்டி போட்டு நம்ம பாப்பாவை தூக்கிட்டு வந்துடுவோம்” என ஒருவன் சொல்ல, அவனின் கன்னத்தில் பளாரென அறைந்தார் முருகாம்பாள்.

“அக்கா!” அவன் அதிர்ச்சியில் கன்னத்தை பிடிக்க,

“அவளை திரும்ப கூட்டிட்டு வரேன்னு என்கிட்டயே சொல்லுவியா நீ? எங்க பார்த்தாலும் ரெண்டு பேரையும் காலி பண்ணிட்டு வந்து சொல்லுற நீ” என அவனை எச்சரிக்க,

“சரிங்க அக்கா, சரிங்க அக்கா” என உடனே தலை ஆட்டினான் அவன்.

“எல்லாருக்கும் தான். இத்தனை வருசம் அவன் வாழ்ந்து குழந்தை குட்டின்னு இருந்தா கூட ஈவு இரக்கம் பார்க்காம குடும்பத்தோட வேரறுத்துட்டு வந்து தான் பேசணும் நீங்க” என கூற மற்றவர்கள் தலையாட்டினர்.

“அக்கா இப்போ தலைவரை எப்படி வெளியில் கொண்டு வரது?” ஹரி தான் கேட்டான்.

பேச்சை மாற்ற வேண்டும் என தொடங்க, மற்றவர்களும் அவரை பார்த்தனர்.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். இங்க நம்ம பேசுனது வெளில யாருக்கும் முக்கியமா தலைவருக்கு தெரிய கூடாது. மீறி தெரிஞ்சா உன் குடும்பத்தோட அழிச்சிடுவேன்” என அவர்களை கிளப்பினார்.

ஹரி யோசனையுடன் வெளியே வந்தான். ‘அப்போ வைத்தியநாதன் இந்த பிளான்ல இல்லையா? இந்த அம்மா தானே எல்லாம் பண்ணிட்டு அவர் மேல பழியை போடுதோ’ என யோசித்தவன் தாங்கள் வந்து விட்டதையும் இன்று நடந்ததையும் சுருக்கமாக மாறனுக்கு செய்தி அனுப்பி விட்டு வீட்டிற்கு சென்றான்.

காலையில் மாறன் விழித்த நேரம் செவிலியர் வந்து விட, அலரை எழுப்பி விட்டவன் அன்றைய பரிசோதனைகளை முடித்து விட்டு உணவு வாங்க கிளம்பினான்.

“சாருக்கு உங்க மேல செம்ம லவ்ல மேடம். நேத்து உங்களுக்கு முடியாம போனதும் நெஞ்சை பிடிச்சுட்டாங்க. டாக்டர் ஒன்னும் இல்லன்னு சொல்லுற வரை அவர் உயிர் அவர்கிட்ட இருந்திருக்காது. நீங்க ரொம்ப லக்கி” என்று சிலாகிக்க, அலர் மென்னகை புரிந்தாள்.

அவளுக்கு தான் அவனின் காதல் அளவு தெரியுமே.

செவிலியர் வெளியேறவும் காலை உணவுடன் வந்தான் மாறன். இட்லி, சட்னி, சாம்பார் இருக்க பல் துலக்கி விட்டு அதை எடுத்து உண்டாள்.

“நேத்து ரொம்ப கஷ்டப்பட்டீங்களா மச்சான்? நர்ஸ் எல்லாம் உங்களை பெருமையா சொல்லிட்டு போறாங்க” அவனை சீண்ட,

“அதை பற்றி பேசாதடி, சாப்பிடு” என்றவன் பின் வேறு பேச்சில் திசை திருப்பி விட்டான்.

காலையில் தான் அவன் ஹரி அனுப்பின குறுஞ்செய்தியை பார்த்தான். அவனுக்கும் குழப்பம் தான். அவன் சேகரித்த வரை முருகாம்பாள் வைத்தியநாதனின் இரண்டாவது மனைவி. அதுவும் அவரின் முதல் மனைவி வைதேகியின் சொந்த தங்கை. அலர்மேல்வள்ளி பிறந்த இரண்டு மாதத்தில் விஷக்காய்ச்சல் வந்து வைதேகி இறந்து விட, அப்போது தான் முப்பது வயதாகியிருந்த வைத்தியநாதனுக்கு குழந்தையை கவனித்துக் கொள்ள முருகாம்பாளை திருமணம் செய்து வைத்தனர்.

அவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு. அவள் படிப்பிற்காக லண்டனில் இருப்பதாக செய்தி. அலர் தன் தந்தைக்கு பிடிக்காமல் காதலித்ததால் அது அவளை ஆணவக்கொலை செய்ய தூண்டியது என்றே இதுவரை நினைத்திருந்தனர். காரணமும் உண்டு. முருகாம்பாள் அமைதியின் திருவுருவம். கணவன் சொல்லை மீறாத மனைவி என்று பெயர் எடுத்தவர்.

ஆனால் இன்று அவரின் இன்னொரு முகத்தை பார்த்தால் அதிர்ச்சி தான். இன்னும் தீர விசாரிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன் தனக்கு தெரிந்தவற்றை மணிமாறனுக்கு அனுப்பி விட்டு மனைவியை கவனித்தான்.

இப்போது அவனின் கவனம் முழுவதும் அவள் மீது தான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சோலையூரில் இருந்த மாறனுக்கும் இப்போது இருக்கும் மாறனுக்கும் இடையே ஐம்பது வித்தியாசம் கண்டுபிடித்து விடுவாள் போலும்.

“என்னடி லுக் எல்லாம் பயங்கரமா இருக்கு?”

“என் புருஷனை நான் பார்க்கிறேன். உனக்கு என்ன?” என்றவள் மனதில் இன்னும் பயம் நீங்கவில்லை.

“இன்னும் ரெண்டு நாளில் ஆபரேஷன் முடிஞ்சு ஒரு மாசம் இங்க இருந்து ஊருக்கு போகுறதுக்குள்ள எல்லா புதிருக்கும் விடை சொல்லிடு மச்சான்” என்றாள்.

“உனக்கே தெரிஞ்சிடும்” என்றவன் வேறு சில பேச, அவர்களின் காதலில் வந்து நின்றது.

“மச்சான் எனக்கு கல்யாணம் ஆனது தான் நியாபகம் இருக்கு. நாம எப்போ காதலிச்சோம்? எத்தனை மாசம் காதலிச்சோம்?”

அவர்களின் காதல், அவள் அவனின் மொத்த உறவாக வந்த நேரம், நாட்கள் இதெல்லாம் அவனின் வாழ்வில் அழிக்க முடியாத நினைவுகள்.

அவள் கேட்ட கேள்வியில் சிரித்தவன் “உன்னோட பத்தொன்பதாவது வயதில் உன்னை முதன் முதலா பார்த்தேன். புடவை கட்டிட்டு வந்தாலும் அந்த பால்மணம் மாறாத குழந்தை முகம் தான் உன்கிட்ட என்னை கட்டி இழுத்தது. அப்புறம் லவ் பண்ணி உன் இருபத்தியோராம் வயதில் கல்யாணம் பண்ணிக்கிட்டு வரும் போது ஒரு பெரிய விபத்து. அதில் தான் உனக்கு தலையில் அடிபட்டு சில விஷயங்கள் மறந்து போச்சு. அவ்ளோ தான். வேற எதுவும் கேட்க கூடாது” என்று கண்டிப்பாக கூற, முழுவதும் புரியா விட்டாலும் அந்த வயதிலேயே காதலித்தது அவளுக்கு சின்ன வெட்கத்தை உண்டு பண்ணியது.

“அவ்ளோ சின்ன வயசில லவ் பண்ணினேனா?”

“லவ் பண்ண வச்சேன் நான். அந்த கதை எல்லாம் உன் பிரச்சனை முடியவும் சொல்லுறேன். இப்போ ரெஸ்ட் எடு என் பட்டர் பிஸ்கட்” என்றான்.

சட்டென அவளின் முகத்தில் ஒரு மாற்றம். ‘பட்டர் பிஸ்கட்’ இந்த வார்த்தையை எங்கேயோ கேட்ட நினைவு. மனதிற்கு பிடித்த நிகழ்வு.

“ஹே பட்டர் பிஸ்கட், நாளைக்கும் இதே நேரம் இதே இடம்” யாரோ பேசியது காதில் கேட்டது.

“உனக்கென்ன ஒரு பட்டர் பிஸ்கட்ல லஞ்ச் முடிக்கிற. எனக்கு போதலையே. இந்த பட்டர் பிஸ்கட்டை மொத்தமா சாப்பிடுற நாளுக்காக காத்து கிடக்கிறேன்” ஒருவனின் காதல் பேச்சில் முகம் சிவந்த நிகழ்வு.

“அப்பா, அவர் ரொம்ப நல்லவர்பா” யாரிடமோ கெஞ்சும் நினைவு.

என்ன இதெல்லாம்? ஒரு பட்டர் பிஸ்கட் இத்தனை பாதிப்பா? மனம் குழம்பினாலும் மீண்டும் மீண்டும் யோசிக்க சொன்னாலும் அந்த நொடியில் தன்னை மீட்டெடுத்தாள்.

‘எல்லாம் நல்ல படியா முடியட்டும். மச்சான் எல்லாம் சொல்லுவாங்க’ அவன் மீதிருந்த நம்பிக்கையில் புன்னகை செய்தாள்.

அவள் யோசிக்க யோசிக்க முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் சஞ்சலங்கள்.

அழியாத நினைவுகள் அவளுக்கு சந்தோசத்தையும் சோகத்தையும் கோபத்தையும் வெறுப்பையும் சேர்த்தல்லவா கொண்டு வரும்!

‘ கடவுளே! அவளுக்கு எல்லா நியாபகங்கள் வந்தாலும் என்னையும் புரிந்து கொள்ளும் மன நிலையை நீங்க தான் கொடுக்கணும்’ வேண்டிக் கொண்டவன் மருத்துவர் ரவுண்ட்ஸ் வரவும் எழும்பினான்.

மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு அறுவைசிகிச்சைக்கான தேதியை சொல்லி விட்டு செல்ல மாறன் அடுத்து தேவையானவற்றை யோசித்தான். அறுவை சிகிச்சை முடியும் வரை அவன் மருத்துவமனையில் இருக்கலாம். ஆனால் அதன் பிறகு அவனுக்கு வெளியில் ஒரு வீடு கண்டிப்பாக தேவை. அது தான் பாதுகாப்பும் கூட. ஆனால் இப்போது வைத்தியநாதன் வீட்டில் அவனை தேடினவர்கள் தங்கியிருக்க, வெளியில் செல்வதும் ஆபத்து.

ஹரியிடம் வீட்டிற்கு கேட்டாலும் தன் உயர் அதிகாரி கௌரவ் சர்மா ஏதாவது உதவ முடியுமா என்று கேட்க வேண்டும். அவளிடம் சொல்லி விட்டு வெளியே வந்தவன் பல மாதங்களுக்கு பிறகு தனது சிபிஐ அலுவலக எண்ணை அலைபேசியில் அழுத்தி விட்டு அந்த பக்கம் எடுக்க காத்திருந்தான். அது நேரடியாக கௌரவ் சர்மா இணைப்புக்கு சென்று விட, அவர் தான் எடுத்தார்.

சில அழைப்புகள் பாதுகாப்பு கருதி நேரடியாக அவருக்கு இணைக்க பட்டிருக்கும். அழைப்பை எடுத்தவர், “ஹலோ” எனவும், “குட் மார்னிங் சார். இளந்திரை மாறன் ஸ்பீக்கிங்” என்றான்.

“ஹே மை பாய்! எப்படி இருக்க மேன்? எத்தனை மாசத்துக்கு அப்புறம் எனக்கு கால் பண்ணுற? ஹோப் யூ ஆர் குட்”

“குட் சார். எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும் சார். இப்போ திருநெல்வேலியில் காயத்ரி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலில் தான் இருக்கேன். அலருக்கு ஒரு மேஜர் ஆபரேஷன்” என்று கூற,

“என்ன ஆச்சு மாறன்? நான் கிளம்பி வரேன். வந்து பேசலாம்” என்றார்.

“சார் மிஸ்டர் வைத்தியநாதன் ஆளுங்க உங்களை ஃபாலோ பண்ணி வர சான்ஸ் இருக்கு. நான் வெளியில் வரேன். பட் உங்க வீட்டிற்கு வரலாமா? இப்போதைக்கு பாதுகாப்பான இடம் அது தான்” எனக் கேட்டான்.

“இதுக்கு எல்லாம் பெர்மிஷன் வேறயா? நீ கிளம்பி வா மேன். நானும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துடுவேன். என் மனைவிகிட்ட நீ வருவன்னு சொல்லி வைக்கிறேன். உனக்கு அங்க ஹெல்ப் ஆள் வேணும்னா என்னோட பொண்ணை அனுப்பி விடுறேன். அவளை யாருக்கும் தெரியாது அண்ட் ஃபாலோ பண்ண சான்ஸ் இல்ல” என்றார்.

அவர் மகள் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு சில நாட்களுக்கு முன்பு தான் வீடு வந்திருந்தாள். மேலும் கௌரவ் சர்மா மாறனுக்கு உதவி பண்ணுவார் என்று யாரும் இதுவரை யோசித்ததும் இல்லை. எனவே தைரியமாக கூறினார்.

அவருக்கு நன்றியை கூறியவன் அலரிடம் அவனுடைய ஒரு நண்பனின் தங்கை துணைக்கு வருவதாக கூறி, அதையே மருத்துவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் கௌரவ் சர்மா மகள் நிகிதா சர்மா வந்து சேர்ந்தாள்.

கௌரவ் சர்மா இல்லம். அவன் வந்து அரை மணி நேரத்தில் வீடு வந்திருந்தார் அவர். வந்ததும் அவனை கட்டிபிடித்து வரவேற்றார்.

“வாவ் வாட் அ சேஞ்ச் மேன்! இத்தனை வருஷம் எங்க போய் ஒளிஞ்சிகிட்ட நீ? உன்னை பற்றி உன் பேட்ச் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டா கூட தெரியல. மிஸ் யூ சோ மச் இன் அவர் டீம் மேன்”

“அலரோட பாதுகாப்புக்காக தான் இத்தனை வருட ஓட்டம் சார். உங்களுக்கே தெரியும்ல நாங்க எப்படி காதலிச்சு கல்யாணம் பண்ணினோம்னு. பட் அந்த ஆக்சிடென்ட் அப்புறம் அவளுக்கு தலையில் இரத்தம் உறைந்து அதை சரி பண்ணுற அளவுக்கு அவளோட ஹெல்த் சப்போர்ட் பண்ணல. அடுத்தடுத்து ரெண்டு அபார்ஷன். அதில் இருந்து மீட்டுக் கொண்டு வரவே இத்தனை வருஷம் ஆகிடுச்சு. இன்னும் அவளுக்கு பழைய நினைவுகள் ஒழுங்கா வரல. ஆனாலும் என்னவோ சொல்லி சமாளிச்சு இந்த ஆபரேஷனுக்கு ரெடி ஆகிருக்கா” என்றவன் குரலில் பலவித உணர்வுகள்.

“அப்போ இன்னும் அவளோட அப்பா தான் மிஸ்டர் வைத்தியநாதன்னு அவளுக்கு தெரியாதா?”

“நோ சார்”

“தெரிஞ்சா உன் பாடு கஷ்டம் தான் போலயே. அந்த பொண்ணு அவ அப்பா மேல வச்சிருக்க பாசத்தை கண்கூடாக பார்த்தவன் நான். அப்பான்னா உயிர் அவளுக்கு. எப்படி சமாளிக்க போற?”

“அதெல்லாம் பார்த்துக்கலாம் சார். என் மேல அவ வச்ச காதலும் அளவுக்கு அதிகம் தான்” என சிரித்தான்.

“அது சரி. இப்போ என்ன ஹெல்ப் உனக்கு வேணும்? மினிஸ்டர் எப்படியும் சீக்கிரம் வெளியில் வர மாட்டார். வேற என்ன வழியில் உனக்கு பிரச்சனை?”

“அவரோட மனைவி முருகாம்பாள் மேல சில சந்தேகம் சார்” என்றவன் ஹரி அனுப்பியிருந்த செய்திகளை சொன்னான்.

அவருக்கும் குழப்பம் தான். “அப்போ மினிஸ்டர் மனைவி தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு சொல்ல வரியா மாறன்? ஆனால் சொத்து எல்லாமே மினிஸ்டர் பெயரில் அண்ட் சிலது பினாமி பெயரில் இருக்கு. எங்கேயும் முருகாம்பாள் பெயர் வரல. ஆதாரம் இல்லாமல் நாம எதுவும் பண்ண முடியாது”

“எஸ் சார். ஆதாரம் அது பொறுமையா தேடலாம். இப்போ அலர் இங்க இருக்கிறது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. வெளியில் வீடு பார்க்க சொல்லியிருக்கேன். ஆனா அங்க அவளை தங்க வைக்க விருப்பம் இல்ல. நாங்க மறுபடியும் ஊருக்கு போகும் வரை ஆபரேஷன் முடிஞ்சு உங்க வீட்டில் அவளை கவனிச்சிக்க முடியுமா? என் டீம் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஹெல்ப் கேட்டாலும் அவங்களை வச்சு இவளை டிராப் பண்ண சான்ஸ் இருக்கு. உங்களை சந்தேகப்பட வாய்ப்பு குறைவு. அதனால் தான் கேட்கிறேன். உங்க பொண்ணு கூட டாக்டர் தானே. எதுவும் மெடிக்கல் எமர்ஜென்சிக்கு கேர் பண்ணிப்பாங்களா?”

“எதுக்கு மேன் இத்தனை தயக்கம்? கண்டிப்பா இங்க இருக்கட்டும். நிகிதா நல்லபடியா பார்த்துப்பா. அவ படிச்ச படிப்புக்கு ஒரு பிராக்டீஸ் ஆக கூட இருக்கட்டும்” என சிரித்தார்.

“என் அலர் பொம்மையா?” அவன் செல்லமாய் முறைக்க,

“பார்ரா பொண்டாட்டியை சொன்னதும் வரும் கோபத்தை. நீ தான் அந்த பொண்ணை முதல்ல பாடா படுத்தின, நியாபகம் இருக்கட்டும்” என அவனின் தோளில் அடித்தவர், அன்றைய தினம் அவர்களுக்கான உணவை மனைவியிடம் தயாரிக்க சொன்னார்.

“அவளுக்கு ஆபரேஷன் முடியும் வரை நிகிதா வந்து வந்து பார்த்துப்பா. நீயும் டென்ஷன் இல்லாம வேற வேலை பாரு. இப்போவாவது உனக்கு என் நியாபகம் வந்துச்சே அதுவே பெரிசு” என்றவர் பின் அவனை பழைய வழக்குகளில் கூட சில ஆலோசனையை கொடுத்து விட்டு, உணவுடன் அனுப்பி வைத்தார்.

“சாப்பிட வச்சே அனுப்பி இருப்பேன். உனக்காக ஒருத்தி அங்க சாப்பிடாம காத்து இருப்பால்ல. அதனால் அங்கேயே அவ கூட சாப்பிடு” என்று கிளப்பி விட்டார்.

அவன் மருத்துவமனை வரும் முன் நிகிதாவுடன் நல்ல தோழமையை ஏற்படுத்திக் கொண்டாள் அலர். மாறன் இங்கு வந்ததில் இருந்தே ஒருவித பதற்றத்துடன் இருப்பது போல தோன்றியது. எனவே அவளும் அவனுடன் பேச்சை குறைத்துக் கொண்டாள். இப்போது பேச்சு துணைக்கு ஓர் ஆள் கிடைக்கவும் வழக்கம்போல பேச ஆரம்பித்து விட்டாள்.

மாறன் அவர்கள் அறைக்கு வரும் போது அவளின் சிரிப்பொலியே அவனை வரவேற்றது. நிகிதாவின் கையில் தட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்ததும் அவன் மனம் கனிந்தது.

இங்கு வந்த பின் அவனின் மனநிலை மாறியிருப்பது அவனுக்கே புரிந்தது. ஆனாலும் அவளுக்காக தான் அந்த பதற்றம். இப்போது அவளின் சிரிப்பை பார்த்ததும் மனதில் ஒரு நிம்மதி.

அவனை முதலில் கவனித்த நிகிதா “உங்க ஆள் வந்தாச்சு. நான் கிளம்புறேன் வள்ளி அக்கா” என்று எழும்பினாள்.

“உட்காரு நிகிதா. உனக்கும் சேர்த்து தான் சார் சாப்பாடு கொடுத்து விட்டு இருக்கார். இனி நீ வீடு போய் சாப்பிட லேட் ஆகும்” என்று அவளுக்கும் பரிமாறினான்.

“மை மம்மி சாப்பாடு ஆல்வேஸ் டேஸ்ட்டி. நம்பி சாப்பிடுங்க” என்று ஒரு தட்டை நிகிதா எடுக்க, அலர் சிரித்தாள்.

“டாக்டர் போலவா பேசுற நீ?”

“டாக்டர் எப்போவும் முகத்தை உம்முன்னு வச்சிட்டு இருக்கணுமா என்ன? நான் ஜாலி டாக்டர். உங்க ஆளு போல டெரர் இல்ல” என்றாள்.

“என் மச்சான் கூட ஜாலியான ஆள் தான்”

“யாரு உங்க மச்சான்? ஜாலியான ஆளு? எங்க அந்த திருமுகத்தை திருப்ப சொல்லுங்களேன். இப்போ முகத்தை மாத்திட்டாரான்னு பாக்குறேன்” என நிகிதா சொல்ல,

“இவங்களை உனக்கு முன்னாடியே தெரியுமா?” அலர் கேட்க, மாறன் நிகிதாவை முறைத்தான்.

“தெரியாதா பின்னே?”

“எப்படி தெரியும்?”

“அவளை தான் என் பிரெண்ட் தங்கச்சின்னு சொன்னேன்ல. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். அவ என்னை பார்த்துருக்கா. அதை வச்சு சொல்லுறா” மாறன் பேச்சை மாற்ற, நிகிதா சுதாரித்துக் கொண்டாள்.

“ஆமா ஆமா அக்கா. அதை வச்சு தான் சொல்லுறேன்”

“ஓ சரி, உங்க அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா சுவையா இருக்கு. சொல்லிடுங்க” என்று ருசித்து சாப்பிட்டாள்.

“என் மம்மி சாப்பாட்டுக்கு அடுத்த அடிமை மாட்டிகிச்சு”

“ஹாஸ்பிட்டல ஹோட்டல் ஆக்கிடுவீங்க போல” மாறன் உண்டு முடித்து, அலருக்கும் கழுவ தண்ணீர் எடுத்து கொடுத்தவன் நிகிதாவை கிளப்பி விட்டான்.

“சீக்கிரம் வீடு போய் சேரு. டைம் இருக்கும் போது வந்து இவளையும் கொஞ்சம் சிரிக்க வை” என்றான்.

“கண்டிப்பா பிரதர். ஆபரேஷன் முடிஞ்சதும் எங்க வீட்டில கொண்டு வந்து விடுங்க. பை அக்கா, பை ப்ரோ” என கிளம்பினாள்.

“அவங்க வீட்டுக்கா போக போறோம்?”

“பார்க்கலாம்டி, டேக் ரெஸ்ட். நாளைக்கு மதியம் டைம் குடுத்துருக்காங்கல” என அவளின் தலை கோத அவனின் மடி சாய்ந்துக் கொண்டாள்.
 

Asha Evander

Moderator

அத்தியாயம் 8

அன்றைய இரவு மாறன் மற்றும் அலர் இருவர் மனதிலும் ஒருவித பயத்தை உருவாக்கியிருந்தது. மாறன் மிகவும் தைரியசாலி. எந்த வேலையை கொடுத்தாலும் அச்சு பிசகாமல் சரியாக செய்து முடிப்பதில் வல்லவன். ஆனால் அவனின் அலர் என வரும் போது மட்டும் பலவீனமாகி விடுவான். காதலிக்கும் போது இருந்த மனதிடம் அவளின் இந்த நிலமைக்கு பிறகு மொத்தமாக சரிந்து விட்டது என்றே கூறலாம்.

இப்போதும் அவனின் மனதில் உள்ள ஒரே பயம் அவனைப் பற்றிய உண்மை அறிந்தால் அவள் அதை ஏற்றுக் கொள்வாளா? அவளுக்கு பழைய நினைவுகள் வந்தால் அவனை விட்டு பிரிந்து விடுவாளா என்பது தான்.

ஒருவேளை இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவளின் பழைய நினைவுகள் திரும்பவும் இப்போதைய நினைவுகள் மறக்கவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் முன்பே கூறி விட்டார். அந்த பயம் தான் இன்னும் அவளை தன்னுள் புதைத்து வைக்க தூண்டுகிறது.

அமைதியாக அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் “மச்சான்!” என்ற அவளின் அழைப்பில் உணர்வுக்கு வந்தான்.

“என்ன அலரு எதுவும் வேணுமா? பாத்ரூம் போகணுமா?” என கேட்க,

“பாத்ரூம் எல்லாம் நானே போயிடுவேன். என்ன தீவிர யோசனை உங்களுக்கு?” என கேட்டாள்.

“ஒன்னும் இல்லடி”

“மச்சான்!” அவளின் அழுத்தத்தில், மெதுவாக அவளின் அருகில் வந்து அமர்ந்து தன் கரங்களோடு அவளின் ஒரு கையை எடுத்து பொத்தி வைத்துக் கொண்டான்.

“அலரு”

“என்ன மச்சான்?”

“என்னை விட்டு எங்கேயும் போயிட மாட்டியே?”

“நான் எங்க போக போறேன்? எனக்கு யார் இருக்கா?” அவனின் கண்களை கூர்ந்து பார்த்தாள். அவன் எதற்கோ தயங்குவது தெரிந்தது.

“உனக்கு பயம் காட்ட இல்லடி, ஆனாலும் சொல்லுறேன். இந்த ஆபரேஷன் முடிஞ்சா உனக்கு இப்போ நினைவுகள் சிலது மறக்க கூட சான்ஸ் இருக்கு. அப்போ அதுல என்னை பற்றிய நினைவுகளும் இருந்தா என்ன பண்ணுவ?”

“லூசா மச்சான் நீ? உன்னை மறந்துட்டா என்ன பண்ணுவன்னு கேட்டா என்ன சொல்லுறது? எனக்கு தான் உன்னை நியாபகமே இருக்காதே”

“ஆமால” என தன் தலையில் அடித்துக் கொண்டவனை பார்க்க அவளுக்கு விசித்திரமாக இருந்தது.

மாறன் எப்போதும் இப்படி தடுமாறி அவள் பார்த்தது இல்லை. எதிலும் அவனை திடமாக பார்த்தவள் இன்று அவனின் வேறு பக்கத்தை பார்க்கிறாள்.

“என் மச்சான் தானா நீ? நான் வரும் போது வேற யார் கூடவும் மாத்தி வந்துடலயே?”

“என்னடி?”

“என்ன என்னடி? சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருக்கீங்க. எனக்கு மறந்து போனா நான் தான் உன் புருஷன்னு எனக்கு நியாபகபடுத்துங்க. அப்படியும் நியாபகம் வரலைன்னா” என்றவள் அவளின் அலைபேசியை எடுத்து கேமராவை ஆன் செய்தவள், அவனின் இதழில் ஆழ்ந்த முத்தமொன்றை வைத்து அதை புகைப்படமாக எடுத்துக் கொண்டாள்.

அவளின் செய்கையில் கண்கள் விரிய பார்த்தான் மாறன்.

“எனக்கு நியாபகம் வரலைன்னா இந்த போட்டோவை காட்டுங்க. நம்புறேன்” என்றாள்.

“ராட்சசிடி நீ” அவளை கட்டிக் கொண்டவன் கண்கள் கலங்கியது.

அது எதனால் என அலருக்கு புரியவும் இல்லை. அதை இப்போது கேட்டு அவனை சங்கடபடுத்தவும் அவள் விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் அவனே சொல்லட்டும் என அமைதியாக இருந்தாள்.

“கூல் மச்சான், என் தீரா இப்படி அழலாமா?” என அவனை பிரித்து தலையில் கொட்டினாள்.

“தேங்க்ஸ்டி”

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு நான் தான் ராட்சசி பொண்டாட்டியா வருவேன். கவலை படாத”

“உன்னை தவிர எனக்கு யாரும் வேண்டாம் அலரு” என்றவன் அவளின் அருகிலேயே தலைவைத்து படுத்துக் கொண்டான்.

அடுத்த நாளும் யாருக்காகவும் நிற்காமல் விடிந்து விட, நிகிதா காலையிலேயே உணவுடன் வந்து விட்டாள். பின் மதியம் அலரை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு போய் விட, கதவுக்கு அருகில் செல்லும் வரை அவளின் விரலை பிடித்துக் கொண்டான் மாறன்.

“உனக்காக காத்துட்டு இருப்பேன் அலரு, மச்சானை அழ வைக்காம சீக்கிரம் என்கிட்ட வந்துடணும்” எனக் கூறியே அனுப்பினான்.

“உங்க லவ் ஓவர் தொல்லைப்பா” நிகிதா இருக்கையில் அமர,

“உன் லவ் மேட்டரை நான் சர்மா சார்கிட்ட போட்டு கொடுக்கிறேன்” என்றவன் மனைவிக்காக அறைக்கு வெளியே நின்றான்.

அவர்களின் பாதுகாப்புக்காக சகலவித உபகரணங்களுடன் தனி அறையே உருவாக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை. அவளுக்கு லேசர் முறையில் செய்வதை விட திறந்த வழி அறுவை சிகிச்சையே நலம் என கூறி விட, அதை தான் பின்பற்றினர்.

அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து தலையில் பாதிக்கப்பட்ட பகுதியை அடைவதற்காக, சிறிய ஓரத்தை வெட்டினர். இந்த வெட்டலின் அடிப்படையில், மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை வெளியில் இருந்து பார்க்கலாம். தலையில் வெட்டிய இடத்தின் வழியாக இரத்தம் உறைந்திருந்த இடத்தை பார்த்த மருத்துவர்கள் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவளின் உடல் நிலையையும் அடிக்கடி அங்கிருந்த மானிட்டரில் கவனித்துக் கொண்டனர்.

அவளுக்கு இருந்த இரத்தக்கட்டி மூளை நரம்பில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததால் மிகவும் கவனத்துடன் அதை அகற்றினர்.

பல உபகரணங்களை கொண்டு ஒருவழியாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த மருத்துவர்கள், வெட்டிய பகுதியில் தையலிட்டு அனைத்தையும் முடித்தவர்கள் அவளை சிறிது நேரம் மானிட்டரில் வைத்து விட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற சொன்னார்கள்.

அறுவை சிகிச்சையை முடித்து வெளியே வந்த டாக்டர் கென்னடி மற்றும் டாக்டர் ஜெனிலா அருகில் அவசரமாக வந்தான் மாறன். நிகிதாவும் எழும்பி விட்டாள்.

“டாக்டர் அலர் எப்படி இருக்கா?” அவனின் பதட்டத்தில்,

“ஆபரேஷன் சக்சஸ் மிஸ்டர் மாறன். அவங்க கண் விழித்த பிறகு தான் மற்ற ரிப்போர்ட் சொல்ல முடியும். இப்போ அவங்களோட மூளை நரம்புகளை அதிகம் தாக்காத மாதிரி தான் பண்ணிருக்கோம் அண்ட் அந்த இரத்த கட்டியை முழுமையாக அகற்றியாச்சு. ஆனாலும் இனி நீங்கதான் ரொம்ப பத்திரமா அவங்கள கேர் பண்ணிக்கணும். மறுபடியும் வர நிறைய சான்ஸ் உண்டு. ஆனால் அதை தடுக்கவும் முடியும். அது உங்க கையில் தான். டேக் கேர் மேன்” என அவனின் தோளில் தட்டி விட்டு தன்னறைக்கு சென்றார்.

மாறன் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான். மனதில் பாரம் நீங்கிய உணர்வு. இந்த முறை அவள் தப்பித்து விட்டால் இனி கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வான்.

“ப்ரோ!” நிகிதா பதறி வர, “ஒன்னும் இல்ல, ஐ ஆம் ஆல்ரைட்” என்றவன் அடுத்து மனைவியை பார்க்கும் நொடிக்காக தவமிருக்க ஆரம்பித்து விட்டான்.

அவனை கதிகலங்க வைத்து விட்டு நடு இரவில் தான் கண்விழித்தாள் அலர். ஆனால் அவளால் பேசவும் முடியவில்லை. மாறனை பார்த்தவள் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் கண் மூடி விட்டாள். மாறன் தான் பதறி விட்டான்.

“நத்திங் டு வொரி மாறன். அவங்க இப்போ கண் விழிச்சதே நார்மல் தான். தலையில் அதிக அழுத்தம் இல்லாமல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறது ஓகே தான்” என்றார்.

“டாக்டர் அவ என்னை பார்த்து எந்த ரியாக்ஷனும் பண்ணலையே” மனம் கலங்கி கேட்டான்.

“கொஞ்சம் டைம் எடுக்கலாம் மாறன். அவங்க கட்டி மூளை நரம்புகளை தொட்டுட்டு இருந்தது. அதனால் உங்களை அடையாளம் காண கொஞ்சம் திணறுறாங்க. நாளைக்கு சரி ஆகிடும்” என்றவர் அவளின் அப்போதைய உடல்நிலையை பரிசோதித்து குறித்து விட்டு சென்றார்.

அவன் அவசர சிகிச்சை பிரிவுக்கு உள்ளே செல்ல முடியாது என்பதால் வெளியில் அமர்ந்தான். ஆனாலும் ஆயிரம் யோசனைகள் தலையில் குடைந்தது. அந்த நேரம் கௌரவ் சர்மா அழைப்பு விடுக்கவும் எடுத்து பேசினான்.

“அலர் கண் விழிச்சிட்டாளா மாறன்?”

“ஆமா சார், கொஞ்சம் முன்னாடி தான். மறுபடியும் தூங்குறா”

“எல்லாம் ஓகே தானே. உனக்கு ஹெல்ப்க்கு நான் ஆள் அனுப்பவா?”

“வேண்டாம் சார், நாளைக்கு நான் வெளில தங்குற போல இடம் பார்த்துட்டேன். நிகிதா மட்டும் நேரம் கிடைக்குற நேரம் அலர் பக்கத்தில் இருந்தால் கொஞ்சம் நிம்மதியா இருக்கும் சார்”

“அவளுக்கு வீட்டில் வேற ஒரு வேலையும் இல்ல மேன். கண்டிப்பா காலையில் அங்க இருப்பா. டேக் கேர் மேன்” என்றவர் அழைப்பை துண்டிக்க, அடுத்து சோலையூர் ஊர் தலைவர், கதிரவன் என அழைத்தனர்.

அனைவருக்கும் பதில் சொல்லி விட்டு ஹரியின் குறுஞ்செய்தியை பார்த்தான்.

“வீடு ரெடி சார்” என அனுப்பி இருந்தான்.

நாளைக்கு நிகிதா வந்ததும் வீட்டில் போய் குளித்து விட்டு வர வேண்டும் என நினைத்துக் கொண்டவன் மீண்டும் மனைவியின் நினைவில் மூழ்கி விடியும் தருவாயில் கண்ணயர்ந்தான்.

காலை ஐந்து மணிக்கே ஒரு செவிலியர் வந்து அவனை எழுப்பினார்.

“சார் இந்த மருந்து கொஞ்சம் சீக்கிரம் வாங்கிட்டு வாங்க சார், இப்போ அவங்களுக்கு கொடுக்கணும்” எனக் கூற, போய் வாங்கி வந்தான்.

அவன் மனைவியை பார்க்க முடியுமா எனக் கேட்க, “டாக்டர் காலையில் எட்டு மணிக்கு ரவுண்ட்ஸ் வருவாங்க. அப்போ கேட்டு பாருங்க சார். இப்போ பார்க்க முடியாது” என மருந்துகளை வாங்கி விட்டு உள்ளே சென்றார்.

“அலரு!” நெஞ்சை நீவிக் கொண்டான். அவளின் ‘மச்சான்’ என்ற குரலை கேட்க மனம் ஏங்கியது.

மருத்துவர் வரவும் அவன் அனுமதி கேட்க, அவளின் உடல்நிலையை பரிசோதித்தவர் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதி அழிக்க, முகத்தில் மாஸ்க் அணிந்துக் கொண்டவன் அவளின் அருகே சென்றான்.

அறுவை சிகிச்சைக்காக முடி வெட்டப்பட்டு, தலையில் பெரிய கட்டு போட்டிருந்தார்கள். கையில் பல வயர்கள் பொருத்தப்பட்டு கண் மூடி படுத்திருந்தாள் அலர்.

அவளை தொடாமல் கண்களால் நிரப்பிக் கொண்டவன், “மிஸ் யூ டி. என்னை நியாபகம் வச்சிருக்கியா தெரியல, உன் அப்பா நியாபகம் வந்தாலும் எனக்கு பரவாயில்லை. என்னை மறந்து மட்டும் எனக்கு மரண வலியை குடுத்துடாதடி. என்னால தாங்க முடியாது. உன் பத்தொன்பது வயசில் இருந்து நெஞ்சில் உன்னை சுமக்கிறேன். எத்தனை கோபம், ஏமாற்றம் வந்தாலும் இந்த மச்சானை அடிக்கவாவது நீ கூட இருந்து தான் ஆகணும்” என்று கூற, அவனுக்கு தெரியவில்லை இனி தான் அனுபவிக்க போகிறான் என்பது.

கொடுத்த நிமிடங்கள் முடிய வெளியே வந்தவன் நிகிதாவை பார்த்து அவளை அங்கே இருக்குமாறு கூறி விட்டு வீட்டிற்கு சென்றான். வீடு பெரிய விசாலமாக இல்லை என்றாலும் ஒற்றை அறை அவனுக்கு சரியாகத் தான் இருந்தது. அவசரத்திற்கு வேறு எந்த வீடும் கிடைக்காமல் இந்த ஒற்றை அறை வீடு தான் கிடைத்திருந்தது.

சிறிய சமையலறை, ஒரே ஒரு அறை, ஒரு கழிவறை. அவனுக்கு இதுவே போதும் என்பதால் ஹரிக்கு செய்தி அனுப்பியவன் அதற்கு அட்வான்ஸ் பணத்தையும் போட்டு விட்டான். பின் குளித்து அலருக்கு தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்.

சிபிஐ அலுவலகம், மணிமாறன் தனது அலைபேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருக்க, வசந்த் மெதுவாக எட்டி பார்த்தான்.

“மை லவ்” என சேமித்து வைத்திருந்த எண்ணிற்கு அவன் செய்தி அனுப்பிக் கொண்டிருக்க, “அய்யய்யோ!” எனக் கத்தினான் வசந்த்.

“என்னாச்சுடா?” மணி பதற,

“உனக்கு எல்லாம் லவ் செட் ஆகுதே. யாருடா அந்த பொண்ணு?” எனக் கேட்டான்.

உடனே அவனின் நண்பர்கள் மற்ற இருவரும் கூட அவனை சூழ்ந்து கொள்ள, மணிக்கு இப்போது வியர்த்து வழிந்தது.

“என்னடா இவளோ நெர்வஸ் ஆகுற? என்ன பிரச்சனை?” இளங்கோ கேட்க,

“அவன் லவ் பண்ணுறான்டா” என்றான் வசந்த்.

“வாயை மூடுடா குரங்கு” என அவனின் காலில் மிதித்த பிரசாத்,

“யாருடா அந்த பொண்ணு? எதுக்கு இவளோ தயக்கம்?” என்று கேட்டான்.

“மச்சி அது வந்து” அவன் தயங்க,

“எதுவும் தப்பு பண்ணுறாங்க போல” வசந்த் வாயை விட்டான்.

“வாயை உடைப்பேன். அது நம்ம சார் பொண்ணுடா” மணி நெளிந்து கொண்டே கூற, மற்றவர்கள் மண்டையில் மணி அடித்தது.

“யூ மீன் நிகிதா?” மூவரும் கேட்க,

“அவளே தான்” என்றான் மணி.

“இது சாருக்கு தெரியுமா?”

“தெரியல”

“தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”

“என்ன ஆகும்?” மணி பதறி கேட்க,

“ஷூட் பண்ணிடுவார்” என வசந்த் சைகை செய்ய, அவனின் வாயில் அடித்தான் இளங்கோ.

“வொய் ஆல்வேஸ் மீ?” வசந்த் பாவமாக முகத்தை வைக்க, “நீ தான்டா எங்களுக்கு கிடைச்ச அடிமை” என சிரித்தான்.

பின் சர்மாவுக்கு விஷயம் தெரிந்தால் தொலைத்து விடுவார் என மணியை பயமுறுத்தி, அவர்களின் வேலையை பார்க்க செல்ல ‘லவ் பண்ணினது குத்தமாடா?’ என விழித்தான்.

“லவ் பண்ணின இடம் தப்பு ராசா” என சிரித்த வசந்த் அடுத்த அடி வாங்கும் முன் ஓடியிருந்தான்.

அன்றைய வழக்குகளை முடித்து விட்டு வெளியே வரும் நேரம் சிலர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

 

Asha Evander

Moderator

அத்தியாயம் 9

வசந்த் மற்றும் மணி இருவரும் ஒரே வீட்டில் தங்குவதால் ஒரே பைக்கில் தான் செல்வர். இளங்கோ மற்றும் பிரசாத் அவர்களின் வாகனங்களை கிளப்பும் நேரம் ஒரு டாடா சுமோ கார் வந்து வழிமறித்து நின்றது.

“எவன்டா தூங்க கிளம்புற நேரத்தில் வண்டியை இடைல விடுறது?” வசந்த் கடுப்பில் பைக்கை உதைக்க, சுமோவில் இருந்து ஐந்து பேர் இறங்கினர்.

பார்க்க நல்லவர்கள் மாதிரி இருந்தாலும் கையில் கத்தி, அரிவாள் இருக்க வசந்த் பீதியில் இறங்கி விட்டான்.

“அண்ணே! என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க அண்ணே. நான் ஒரு புள்ளை பூச்சி. வேணும்னா இவனை பிடிச்சிட்டு போங்க” என கூறிக் கொண்டே மணியை தள்ளி விட,

“அட கிராதகா!” என முறைத்து நின்றான் மணி.

இவர்களை பார்த்து இளங்கோ மற்றும் பிரசாத் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி வர ஐவரும் சூழ்ந்து கொண்டனர்.

“என்னடா பிரச்சனை?” இளங்கோ கேட்க,

“கையில் கத்தி, கடப்பாரை” வசந்த் உளற, மணி அவனை பார்த்து விட்டு “இன்னைக்கு கோட்டா நம்மகிட்ட இருந்து வாங்க வந்துருக்காங்கடா” என்றான்.

“அது சரி, என்ன வேணும் பாய்ஸ்?” அவர்களை பார்த்துக் கேட்டான் பிரசாத்.

“என்னங்கடா பயமே இல்லாம நிக்குறீங்க? சரி எங்களுக்கு பெருசா ஒன்னும் தேவை இல்ல. உங்க கூட கொஞ்சம் வருசம் முன்னாடி வேலை செய்தான்ல மாறன், அவன் எங்க இருக்கான்னு தகவல் மட்டும் சொல்லுங்க போதும்” என்றான் அவர்களின் தலைவன் போல இருந்தவன்.

“மாறன் சாரா? அவர் எப்போடா நம்மகிட்ட பேசினார்? அவர் வேலையை விட்டு போயே ஏழு வருசம் ஆச்சு. எங்க இருக்கார், என்ன பண்ணுறார் எதுவுமே நமக்கு தெரியாதே. இவனுங்க நம்மகிட்ட கேக்குறாங்க பாரேன்” என வசந்த் சத்தமாக மணியிடம் கேட்க,

“அதை நாங்க பாத்துக்குறோம், உன் போனை குடு. இல்லன்னா இப்போவே கொன்னுட்டு போய்ட்டே இருப்போம்” என்றான் அவர்களை தாக்க வந்தவன்.

பிரசாத் மணியை பார்த்து கண்ணடிக்க, அவன் சட்டென வசந்த் பாக்கெட்டில் இருந்து அவனின் அலைபேசியை எடுத்தான்.

“டேய் என்னோட நாற்பதாயிரம் ரூபா போன் டா” வசந்த் கதற, அதை ஜிபிஸ் அவர்களுக்கே தெரியாமல் ஆன் பண்ணி, மாறனின் எண்ணை அழித்து விட்டு வந்தவர்களிடம் தூக்கி போட்டான். அவன் வசந்துக்கு பின்னால் இருந்ததால் அவன் செய்கையை மற்றவர்கள் கவனிக்கவில்லை.

“இந்தா பிரதர்ஸ், இவனோடது தான் நாப்பது ஆயிரம் ரூவா போன். எடுத்துட்டு கிளம்புங்க. மனுஷன் வேலையை முடிச்சிட்டு வீட்டுல போய் நிம்மதியா தூங்கலாம்னா இப்படி நந்தி மாதிரி குறுக்க கேட் போட்டுட்டு நிக்குறீங்க” என சலித்து விட்டு கிளம்ப எத்தனிக்க,

“ஏய் அவன் ஒருத்தன் போன் தான் குடுக்குற, மத்தவங்களோடது எங்க?” என்றான் ஒருவன்.

“அட முட்டாளே! உனக்கு எல்லார் போனையும் குடுத்துட்டு எங்களுக்கு கேஸ் விஷயமா எதுவும் பேசணும்னா யார் தருவா? போன் வேணும்னா அதை எடுத்துட்டு போ, இல்லன்னா அதையும் குடுத்துட்டு கிளம்பு. மூளை இல்லாத பசங்க” என படபடவென பொரிந்து விட்டு பைக்கை கிளப்ப,

“என் ஆத்தா வையும்” என ஏறாமல் நின்றான் வசந்த்.

“ஏறுடா எருமை”

“என் போன்” மீண்டும் கேட்க,

“ஹலோ பிரதர்ஸ் இவனையும் உங்க கூட இலவச இணைப்பா கூட்டிட்டு போங்க” என பைக்கை கிளப்பி விட்டான்.

“டேய்! என்னையும் கூட்டிட்டு போடா” வசந்த் கத்த, கேட்க அங்கு மணி இல்லையே.

மற்ற இருவரையும் பாவமாக பார்க்க, இளங்கோ தனது காரில் ஏற்றிக் கொண்டான். இடையில் ஒரு இடத்தில் மணி காத்திருக்க, மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

“என்னடா இன்னும் வீடு போகலையா?” இளங்கோ சிரிக்க,

“ராத்திரி கூட நிம்மதியா தூங்க விடாம டார்ச்சர் பண்ணுறாங்க மை லார்ட்” என சிரித்தவன் வசந்த் முகம் பார்க்க, அவனோ முறைத்துக் கொண்டு நின்றான்.

“நாம அவனுங்களை பிடிக்க போகும் போது உன் போனை வாங்கி தரேன்டா”

“சரி சரி, அவன் லொகேஷன் ட்ராக் பண்ணு. மாறன் சாருக்கு கால் பண்ணி இனி வசந்த் போனுக்கு எந்த மெசேஜ் அண்ட் கால் பண்ண வேண்டாம்னு சொல்லு” என மணி கூற, பிரசாத் மாறனுக்கு அழைத்தான்.

அப்போது தான் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த மாறன் அவனின் அழைப்பை எடுக்கவும், நடந்த விஷயங்களை கூறினான் பிரசாத்.

“அவனுங்க உங்க போன் மூலமா என்னை ட்ராக் பண்ண முயற்சி பண்ணுறாங்கடா. ஆனாலும் ஒரு போனை மட்டும் சரின்னு வாங்கிட்டு போயிட்டான். உங்க மேல அவ்ளோ நம்பிக்கையா?” என சிரித்த மாறன், அந்த அலைபேசி பயணிக்கும் இடத்தை கண்காணிக்க சொல்லி விட்டு அதை ரெகார்ட் செய்யவும் கூறினான்.

“கண்டிப்பா சார், வீட்டுக்கு போயிட்டு அந்த வேலை தான். அலர் மேடம் எப்படி இருக்காங்க?”

“ஆபரேஷன் முடிஞ்சது. இன்னும் தெளிவா சுயநினைவு வரல”

“வந்தா தானே தெரியும் சார் நிலமை” வசந்த் வாயை விட, இளங்கோ பளாரென அறைந்தான்.

“டேய்!”

“இளங்கோ!”

பல குரல்கள் வர, வசந்த் அசால்டாக கன்னத்தை தடவினான்.

“ஐ டிசெர்வ் இட். சாரி மாறன் சார்”

“விடுடா. நானும் பலமடங்கு பயத்தில் தான் சுத்திட்டு இருக்கேன். எல்லாமே சரி ஆகிடும்”

“அலர் மேடம் உங்களை மறக்க சான்ஸ் இல்லவே இல்ல. அவங்க இளந்தீராவை மறந்தா வாழ்க்கையில் ஒன்னும் இல்லாத ஃபீல் தான்” வசந்த் சிரிக்க, மாறனும் சிரித்தான்.

“எனக்கும் என் பட்டர் பிஸ்கட் தானே எல்லாம்டா”

“சரி சரி நோ ஃபீல். கண்டிப்பா நாளைக்கு அலர் மேடம் கண்ணை விழிச்சு பார்த்து இளந்தீரான்னு கூப்பிடுவாங்க பாருங்க”

“நடந்தா உனக்கு ஸ்பெஷல் ட்ரீட் டா” என்றவன் அழைப்பை துண்டிக்க, வசந்த் அலைபேசி வைத்தியநாதன் வீட்டை அடைந்திருந்தது.

வீட்டிற்கு சென்றவர்கள் எதிர்பார்த்த விஷயம் தான் என்றாலும் முருகாம்பாள் என்பதில் அதிர்ச்சி. அத்தனை சாந்தமான முகமா இந்த செயலை செய்தது?

இல்லையென்றால் இதற்கு பின் வேறு எவரும் அவரை மிரட்டி செய்ய வைக்கிறார்களா என சந்தேகமாக இருந்தது. முருகாம்பாள் அத்தனை சாந்தமான பெண்மணி என்பதாலேயே இன்னும் அவரின் மீது குறை சொல்ல வரவில்லை.

அன்று இரவு அலர் மீண்டும் கண் விழித்தாள். பக்கத்தில் இருந்த செவிலியர் அவர் அசைவதை உணர்ந்து மருத்துவரை அழைக்க, டாக்டர் கென்னடி வந்து பரிசோதித்தார். அனைத்தும் நார்மலாக இருக்கவே, “அலர்” என அழைக்க, மெதுவாக கண்களை திறந்தாள் அலர்.

சுற்றி இருந்த எதுவும் சிறிது நேரத்திற்கு அவள் கருத்தில் படவில்லை. மூட எத்தனித்த கண்களை சிறிது அழுத்தம் கொடுத்து திறந்தவள் வலியில் முகத்தை சுருக்கினாள்.

“ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க மிசஸ் அலர். மெதுவா கண்ணை திறந்தால் போதும். யூ ஆர் ஆல்ரைட்” என டாக்டர் கென்னடி கூற, அதே போல் கண்களை மூடி திறந்தவள் சுற்றி பார்க்க, மருத்துவமனை என புரிந்தது. ஆனால் ஏன் என புரியவில்லை.

“டாக்டர் நான் இங்க எப்படி?” என அவள் கேட்க, கென்னடி புருவம் சுருக்கினார்.

“நீங்க மிசஸ் அலர் ரைட்?” எனக் கேட்க,

“இல்ல, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நீங்க ஏன் அப்படி சொல்லுறீங்க?” எனப் பதறினாள்.

“கூல் கூல் அலர். ரொம்ப அழுத்தம் குடுத்தால் மீண்டும் தலை வலி வரலாம். ஏற்கனவே ரொம்ப அதிகமான நரம்புகள் பாதிக்க பட்டு தான் இந்த ஆபரேஷன் பண்ணிருக்கோம்” என்றவர் செவிலியரிடம் கூறி மாறனை அழைத்து வர சொன்னார்.

அவர் சொன்ன பெயரிலேயே அவளின் இதயம் நின்று துடித்தது.

“மாறன்! என்னோட இளந்தீரா!”

அவளின் ஆர்வத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பதறும் இதயத்துடன் உள்ளே வந்தான் மாறன்.

“டாக்டர்”

“மாறன், அலர் உங்களை பார்க்க தான் வர சொன்னேன்” என்றவர், அலரிடம் “இவரை தெரியுதா அலர்?” எனக் கேட்டார்.

“இளந்தீரா!” அவளின் காதல் குரலிலேயே தெரிய மருத்துவர் புன்னகை புரிந்தார்.

என்னவோ அவருக்கு மாறனை மறந்து விட்டாளோ என்ற சிறு உறுத்தல் இருந்தது. அவளின் அழைப்பில் புன்னகைத்தார்.

“எஸ், திஸ் இஸ் யுவர் இளந்தீரா. இப்போ உங்க வயசு எத்தனை?”

“இருபது” சிரித்தவளின் உதட்டை பிடித்து கிள்ள தோன்றினாலும் அவள் பதிலில் மனம் உறைந்தது.

“டாக்டர்!” அவன் பதற,

“என் ரூம்ல போய் பேசலாம் மாறன். அவங்களுக்கு உங்களை நியாபகம் இருக்கு, அது போதாதா?” என்றவர், “கால் மணி நேரம் தான் டைம். பேசிட்டு வாங்க” என தனது அறைக்கு சென்றார்.

அவர் வெளியே சென்றதும் செவிலியரும் எதுவும் தேவை என்றால் அழைக்கும் படி கூறியவர் வெளியே சென்றார்.

“அலரு!” அவன் குரல் ஏங்க, “தீரா!” என கையை நீட்டினாள் அலர்.

அவளின் ‘மச்சான்’ எனும் அழைப்பிற்கு மனம் ஏங்கி தவித்தது. ஆனாலும் அதை அடக்கியவன் அவளின் அருகில் சென்று அமர்ந்தான்.

“வலிக்குதாடா?”

“ரொம்ப வலிக்குது தீரா, ஆனா எனக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சுன்னு நியாபகம் வரலையே”

“அதெல்லாம் சீக்கிரம் நியாபகம் வரும். எதையும் நினைச்சு மனசு குழப்பிக்காத” என்று அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

“ச்சீ விடுடா, இதெல்லாம் கல்யாணம் அப்புறம் தான் குடுக்கணும்” அவனை தள்ளி விட, அவனின் அலைபேசியை எடுத்து அறுவை சிகிச்சைக்கு முன் அவள் முத்தம் கொடுத்து எடுத்த புகைப்படத்தை காட்டினான்.

“பட்டா போட்டுட்ட நீ” அவன் சிரிக்க, அந்த புகைப்படத்தை அதிர்ந்து பார்த்தாள் அலர்.

“இதுல நான்.. நான் உன்னை” அவள் திணற,

“இது எதுவும் நமக்குள்ள தப்பில்லைடி. சீக்கிரமே சொல்லுறேன். இப்போ டாக்டரை பார்த்திட்டு வரேன்” என எழும்பினான்.

ஆனாலும் அவள் முகம் தெளியாததை கண்டு குனிந்தவன், “உனக்கு ஒரு இரகசியம் சொல்லவா? உனக்கு வயசு இருப்பத்தெட்டு” என்றான்.

“என்னது?” அவள் அதிர,

“மிச்சத்தை உன்னை ரூமுக்கு மாத்தினதும் விவரமா சொல்லுறேன் என் பட்டர் பிஸ்கட்” என வெளியே சென்றான்.

“எனக்கு என்னாச்சு?” அதிலேயே தேங்கி நின்றாள் அலர்.

இளந்திரை மாறன் மருத்துவர் கென்னடியின் அறைக்குள் செல்ல, அவனை பார்த்து புன்னகைத்தார் அவர்.

“பேசியாச்சா?”

“எஸ் டாக்டர், அவ வயசு இது இல்லன்னு சொன்னேன். ஆனாலும் பெருசா ரியாக்ட் பண்ணின போல தெரியல” என்றான்.

“அவங்க எதையும் ஈசியா எடுக்குற நபரா இருக்கிறதால் இதையும் நார்மலா எடுத்துருப்பாங்க. உங்க கல்யாணம் பற்றி சொன்னாலும் அதை ஏத்துக்க சான்ஸ் இருக்கு. எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா நியாபகம் வந்துடும். வேற எதுவும் ரொம்ப எமோஷனலா தாக்குற விஷயங்கள் மட்டும் இப்போ சொல்ல வேண்டாம். அதாவது அவங்க ரொம்ப பாசமா இருந்த பொருள், நபர் பற்றி அண்ட் அவங்களுக்கு ஏற்கனவே ரெண்டு தடவை அபார்ஷன் ஆகிருக்குன்னு ரிப்போர்ட் இருக்கு. அதையும் சொல்லிடாதீங்க” என எச்சரிக்க, அவனின் மனதில் வைத்தியநாதன் வந்து போனார்.

அவளின் உயிருக்கும் மேலான தந்தை அல்லவா? சும்மாவே அவரை பற்றி ஒரு வார்த்தை பேச விட மாட்டாள். இப்போது அவரை கைது செய்ய வகைசெய்து கொடுத்ததே அவன் தான் என அறிந்தால் அடுத்த நொடி அவனை விட்டு விலகி விடுவாள்.

மருத்துவர் கூறிய அறிவுரைகளை கேட்டுக் கொண்டவன் அவளை எப்போது அறைக்கு மாற்றுவார்கள் என கேட்டான்.

“இன்னும் ஒரு நாள் எங்க கண்காணிப்பில் ஐசியூல இருக்கட்டும். அடுத்த நாள் நார்மல் அறைக்கு மாற்றிடலாம்” என்றார்.

“தேங்க்யூ டாக்டர்”

“டேக் கேர் ஆஃப் ஹெர்” என்றவர் அவனை அனுப்பி விட, வெளியே வந்தவன் கதிருக்கு அழைப்பு விடுத்தான்.

அடுத்த வாரத்தில் சோலையம்மனுக்கு திருவிழா தொடங்க இருப்பதால் தேவையான பண உதவிகளை மாறன் செய்வது தொடர்பாகவும் அடுத்து அவனின் நிலத்தில் என்ன பயிரிட போகிறான் எனவும் விசாரிக்க அழைத்தான்.

அவன் அழைப்பை எடுத்ததும், “அண்ணா, வள்ளி எப்படி இருக்காங்க?” என்று தான் கேட்டான்.

“இன்னைக்கு தெளிவா கண் முழிச்சு பார்த்தாடா, ஆனா இருபது வயசுலேயே நின்னுட்டா, மெதுவா எல்லாமே நியாபகம் வந்துடும்னு டாக்டர் சொல்லிருக்கார்” என்றான்.

“அதெல்லாம் இங்க கூட்டிட்டு வாங்க, நாங்க நியாபக படுத்தி விடுறோம்” என சிரித்தான்.

“நானே பார்த்துக்கிறேன்டா. தலைவர்கிட்ட அலரோட நிலமையை சொல்லிடு கதிர். நிலத்தில் என்ன பயறு போட போற?”

“கடலை வகை தான் போடணும் அண்ணா. அடுத்த முறை நெல் போட்டா தானே சரியா இருக்கும்”

“சரிடா, எதுவும் ஹெல்ப் வேணும்னா போன் பண்ணு” என வைத்தான்.

மீண்டும் நிகிதாவுக்கு அழைத்து அவளின் நிலைமையை சொல்ல, அவளும் நாளை காலை கிளம்பி வருவதாக சொன்னாள். இருக்கையில் அமர்ந்தவன் அப்படியே உறங்க, நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றது.

 

Asha Evander

Moderator

அத்தியாயம் 10

ஒன்பது வருடங்களுக்கு முன்பு, தனது இருபத்து ஏழாவது வயதில் தான் சிபிஐ பொறுப்பில் வந்தமர்ந்தான் இளந்திரை மாறன்.

சிவில் சர்வீஸ் முடித்து நேரடியாக வேலைக்கு அமர்த்தபட்டான். அவனது துணிச்சல் மற்றும் புத்தி கூர்மையால் கௌரவ் சர்மா அவனை தன் மகன் போலவே நினைத்தார். மாறன் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவன். என்ன காரணமோ தெரியவில்லை, அவனின் தாய் அங்கிருந்த தொட்டிலில் அவன் நான்கு மாதமாக இருக்கும் போது விட்டுச் செல்ல, அங்கிருந்த அனைவருக்கும் அவன் செல்ல பிள்ளையாக வளர்ந்தான். கல்லூரியில் எம்பிஏ வரை முடித்தவன் பின் சிவில் சர்வீஸ் எழுதி இரண்டாவது முறையே வேலையை வாங்கி விட்டான்.

பொதுவாக சிபிஐ பலவிதமான வழக்குகளை சந்தித்தாலும் ஊழல் தொடர்பான வழக்குகளில் மிகவும் கவனம் செலுத்துவான் மாறன். ஊழலை தடுத்தாலே நாடு நன்றாகி விடும் என்ற எண்ணம் அவன் மனதில் எப்போதும் உண்டு.

அன்று ஒரு நாள் கௌரவ் சர்மா அவனை தனது அறைக்கு அழைத்தார். கூடவே அவனுடன் வேலை செய்யும் அவன் நண்பர்களும்.

அவர்களிடம் ஒரு கோப்பை கொடுத்தவர், “இவர் தான் நம்ம தொழில் துறை அமைச்சர் வைத்தியநாதன். ரொம்ப கண்ணியமானவர், நாணயமானவர்னு வெளியில் பேச்சு. ஆனா சில சொத்து குவிப்பு கேஸ், பண பரிமாற்ற கேஸ்னு நம்ம சைட் புகார் வந்திருக்கு. தெளிவா விசாரிக்கணும். அப்புறம் அவருக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பொண்ணு இங்க தான் காலேஜ்ல படிக்குறா. ஒரு பொண்ணு பிறந்ததில் இருந்தே வெளிநாட்டில் தான் இருக்கிறா. ஆனா அந்த பொண்ணு இருக்கிறது கூட இங்க யாருக்கும் தெரியாது. ஒருவேளை பணம் கூட அந்த பொண்ணுக்கு போய்டுதான்னு நீங்க தான் விசாரிச்சு ரிப்போர்ட் சொல்லணும்” என்றார்.

“சார் கேஸ் ரொம்ப சிம்பிள் தானே. இதுல இவளோ குழம்பிக்குற அளவுக்கு என்ன?” மணி தான் கேட்டான்.

“இருக்கு மணி. அவர் பினாமி பெயரில் சில சொத்துக்கள் இருக்கு. அதை அவங்ககிட்ட இருந்து கட்டாயபடுத்தி வாங்கி இருக்கிறார். அதில் ரெண்டு கொலையும் பண்ணிருக்காங்க. ஆனா இவர் தான் கொலை பண்ண சொன்னதாக சாட்சி, ஆதாரம் இல்லை. பினாமி யாருன்னு கூட தெளிவா தெரியல. அதனால் அந்த கொலை கேஸ் கூட நம்ம சைட் தான் விசாரிக்க ஆர்டர் வந்திருக்கு. இப்போ உங்களுக்கு இது தான் புது டாஸ்க்”

“சார், அவரை சந்தேகபட்டு விசாரிக்க அனுமதி இருக்கா?”

“எஸ் இளங்கோ. அதுக்கான ஆர்டரையும் அந்த ஃபைல்ல தான் வச்சிருக்கேன். முதலில் அந்த கொலை கேஸ் சால்வ் பண்ணுங்க. அடுத்து அவரோட சொத்து குவிப்பு பிரச்சனைக்குள்ள போகலாம்”

அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் மாறன்.

“மாறா என்ன யோசனை?”

“எப்படி அவர் வீட்டுக்குள் போறதுன்னு தான் யோசிக்கிறேன்”

“உன் கையிலேயே விசாரிக்க அனுமதி இருக்கு. சீக்கிரம் முடிக்கணும் மாறா. ரெண்டு மர்டர் கேஸ் கொஞ்சம் பெரிய இடம். அதிக பிரஸர் நமக்கு தான் வருது” என்றார் சர்மா.

“கண்டிப்பா சார், இன்னும் ஒரு மாசத்துக்குள்ள முடிச்சுடலாம் சார்” என்றவன் கோப்பை கையில் எடுத்து கொண்டான்.

வெளியில் வந்தவர்களில் மணி மற்றும் பிரசாத்தை தன்னுடன் வருமாறு சொன்னவன், வசந்த் மற்றும் இளங்கோவிடம் பினாமி பற்றிய விவரங்களை விசாரிக்க சொன்னான்.

“என்னடா காலையிலேயே விசாரணை மூட்?” மணி கேட்க,

“இந்த வைத்தியநாதன் எத்தனை வருஷமா இதே பதவியில் இருக்கிறார்?” மாறன் கேட்டான்.

“இவங்க ஆட்சி தான் மூன்றாவது முறையாக இருக்காங்க. இவர் வந்ததுல இருந்தே தொழில் துறை அமைச்சர் தான்”

“அப்போ நிறைய சேர்த்து வச்சிருப்பார்ல”

“ஆமா, அவர் பொண்ணு காலேஜ் போகவே தினமும் ஒரு கார்ல தான் போகுது. மாளிகை மாதிரி வீடு, அனுசரிச்சு போற பொண்டாட்டி, உயிரா இருக்குற பொண்ணு. வேற என்ன வேணும் அவருக்கு? ஆனாலும் கோடி கணக்குல சேர்த்து வச்சிருக்கார்” என்றான் பிரசாத்.

“இதெல்லாம் எங்க இருந்துடா எடுத்த?” மாறன் சிரிக்க,

“வயித்தெரிச்சல் டா, அதான் சேகரிச்சு வச்சு பொறாமை பட்டுக்குறேன்” என்றவன் அடுத்து அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

“அடை மழை

வரும் அதில் நனைவோமே

குளிா் காய்ச்சலோடு சிநேகம்

ஒரு போா்வைக்குள் இரு தூக்கம்

குளு குளு பொய்கள் சொல்லி

என்னை வெல்வாய் அது

தொிந்தும் கூட அன்பே மனம்

அதையேதான் எதிா்பாா்க்கும்

எங்கேயும் போகாமல் தினம்

வீட்டிலேயே நீ வேண்டும்

சில சமயம் விளையாட்டாய்

உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என்

நெஞ்சினிக்க உன் பொன்

மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா

முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்”

அறையில் அலைபேசியில் பாடல் ஒலிக்க, பாடிக்கொண்டே புடவைக்கு மடிப்பு எடுத்து அயன் பண்ணிக் கொண்டிருந்தாள் அலர்மேல்வள்ளி.

பத்தொன்பது வயது கோதுமை நிறத்து அழகி, நீண்ட கூந்தல் அவளுக்கு இன்னும் அழகு. அப்போது தான் குளித்து விட்டு வந்தவள் பாடலை சிறிது சத்தம் கூட்டி வைத்து விட்டு அன்றைய விழாவிற்கு அணிந்து செல்ல மடிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்.

“பாப்பா பாட்டு சத்தத்தை குறைச்சு வை. எனக்கு அவசரமா ஒரு போன் பேசணும்” வைத்தியநாதன் கீழிருந்து குரல் கொடுக்க,

மாடி அறையில் இருந்த அவளோ, “சவுண்ட் ப்ரூப் ரூமுக்குள்ள போய் பேசுங்க அப்பா. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” எனக் கத்தி விட்டு அவளின் வேலையை தொடர்ந்தாள்.

மறுபேச்சு பேசாமல் அவள் சொன்ன படியே அந்த அறைக்கு சென்று பேசினார் வைத்தியநாதன்.

அவரின் செல்ல மகள் தான் அலர். அவளின் தாய் வைதேகி அவரின் உயிர். ஆனால் அலர் பிறந்து சில மாதத்தில் வைதேகியும் இறந்து விட குடும்பத்தினரின் கட்டாயத்தால் முருகாம்பாளை திருமணம் செய்து வாழ்ந்தாலும் அலர் மேல் அவருக்கு அளவிடமுடியாத அளவுக்கு பாசம். அவரின் உயிர் மூச்சு கூட அவள் தான்.

அவள் தினமும் பாடலை ஒலிக்க விட்டு தான் வேலைகளை செய்வாள். அதே நேரம் அவருக்கும் அலைபேசி அழைப்புகள் வரும் என்பதால் சவுண்ட் ப்ரூப் போட்ட அறை அந்த வீட்டில் உருவாகியது.

அவர் அழைப்பை முடித்து விட்டு உணவருந்த வர, முருகாம்பாள் காலை உணவை எடுத்து வைத்தார்.

“நீங்களாவது அவளை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லலாம்ல? நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு வாழப் போற பொண்ணு. அங்கேயும் போய் இப்படி தான் வீட்டை அலற விடுவாளா?”

அவரை ஒரு பார்வை தான் பார்த்தார் வைத்தியநாதன். ஆனால் அந்த பார்வை சொன்னதன் அர்த்தம் அவரின் முதுகுத்தண்டு சில்லிட்டது.

“இல்லங்க நான்” அவர் ஏதோ பேச வர,

“அவளை பற்றி எதுவும் பேசாம இருந்தா தான் இந்த வீட்டில் உனக்கு இடம் இருப்பதாக நான் சொன்ன நியாபகம். கல்யாணம் ஆன அன்னைக்கே சொல்லிட்டேன் தானே” எனக் கேட்க,

“அது.. சாரிங்க” என்றார் அவர் மனைவி.

“இது அவளோட வீடு. அவ விருப்பத்துக்கு தான் இருப்பா. அவளுக்கு என்ன வயசாகிடுச்சுன்னு இப்போவே கல்யாணம் பற்றி பேசுற நீ?” அவர் சீற, முருகாம்பாள் அமைதியாகி விட்டார்.

அதற்கு மேல் பேசினால் வைத்தியநாதன் இடம் பார்க்காமல் கையை நீட்டி விடுவார். எனவே அமைதியாக பரிமாற, அவர் எதுவும் பேசாமல் உண்டார்.

“ஜனனி எப்போ இங்க வருவாங்க?” அவரின் மகள், அதாவது வைத்தியநாதன் முருகாம்பாள் இருவருக்கும் பிறந்த பெண் பற்றி கேட்க,

“அவ இங்க வந்து என்ன பண்ண போறா? இப்போ தானே ஸ்கூல் முடிச்சு இருக்கா. காலேஜ் எல்லாம் முடிச்சிட்டு மெதுவா வருவா. அவ்ளோ அவசரமா உனக்கு?” என கேட்க அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை முருகாம்பாள்.

அவர்களின் மகள் ஜனனி பிறந்த ஒரு வருடத்தில் இருந்தே சுவிட்சர்லாந்து நாட்டில் தான் வளர்கிறாள். அங்கு ஒரு தம்பதியினருக்கு பணம் கொடுத்து மகளை பார்க்க சொன்னவர், பெற்ற தாயை வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் எனும் கணக்கில் அழைத்துக் கொண்டு போய் காட்டுவார். அந்த ஒரு வாரம் தான் முருகாம்பாள் நிம்மதியாக இருக்கும் நாட்கள். மீண்டும் இந்தியா வந்தால் ஒட்டாத உறவு முறை.

வைத்தியநாதன் எதை மனதில் வைத்து அவர்களை பிரித்தார் என்பது இன்னமும் முருகாம்பாளுக்கு தெரியாது. தெரிய அனுமதிக்கவும் இல்லை அவரின் கணவர்.

உணவை முடித்து அவர் எழும்பும் நேரம் அந்த வீட்டிற்குள் மாறன் தன் நண்பர்களுடன் காலடி எடுத்து வைத்தான்.

“உன்னை முதல் முறை

முதல் முறை பார்த்தேன்

நீயும் எனக்கென

பிறந்ததை உணர்ந்தேன்

நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்

என்னை உனக்கென

கொடுத்திட துணிந்தேன்

நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்

நிபுணா நிபுணா என் நிபுணா

மனம் படித்திடும் புது நிபுணா

மதனா மதனா மன்மதனா

என்னை மடக்கிய மந்திரனா”

பாடல் வரிகளில் மனம் லேசாக, சிரித்தபடியே உள்ளே நுழைந்தான்.

“யாரை பார்க்கணும் நீங்க?” அவ்வீட்டின் வேலையாள் கேட்க,

“அமைச்சரை பார்க்கணும். சிபிஐல இருந்து வந்திருக்கிறதா சொல்லுங்க” எனக் கூற அவனும் வைத்தியநாதன் அறைக்கு சென்று கூறினான்.

படபடப்பாக வெளியே வந்தார் வைத்தியநாதன். அதேநேரம் “அப்பா நான் ரெடி” என சந்தோசமாக கூவி கொண்டே வந்தவளை பார்த்த மாறன் மனதில் மெல்லிய சாரல்.

ஆகாய நீல நிற புடவையில் தலையை தளர பின்னி மல்லிகை பூவை தாராளமாக வைத்திருந்தவளை பார்க்கும் போது ஒரு மகாராணியின் தோற்றம் ஆக அவன் மனதில் பதிந்தது.

பெண்களுக்கு மட்டும் தான் காதல் உணர்வு பட்டாம்பூச்சியை வரவழைக்குமா? இங்கே மாறன் அடிவயிற்றில் இருந்து ஒரு உணர்வு எழ, சிலிர்த்து அடங்கினான்.

அவளை கட்டி அணைக்க எழுந்த உணர்வை சிரமப்பட்டு அடக்கியவன், மணியின் காதில் ஏதோ சொல்ல, அவன் அதிர்ந்து பின் சிரித்துக் கொண்டான்.

“அப்பா நான் கிளம்புறேன். பிரணி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவளையும் நம்ம கார்ல தான் கூட்டிட்டு போக போறேன்” என்றவள் கரம் பற்றி, “சாப்பிட்டு போடா” என்றார் வைத்தியநாதன்.

“பட்டர் பிஸ்கட் இருக்கு அப்பா, கேண்டீன்ல சாப்பிடுறேன். இப்போ டைம் ஆச்சு, பை அப்பா, பை சித்தி” என்றவள் சிட்டாய் பறந்திருந்தாள்.

அவள் சென்றதும் மாறனின் மனம் எதையோ இழந்தது போல தவித்தது. மணி அவன் சொன்ன விவரங்களை சேகரிக்க அவளின் பின்னால் கிளம்ப, மாறன் இப்போது வைத்தியநாதன் முன் அமர்ந்தான்.

“ஹலோ மினிஸ்டர் சார், எங்களுக்கு உங்க மேல சில சந்தேகங்கள் அண்ட் உங்க மேல சில வழக்கு பதியபட்டிருக்கு. அதுக்கான விளக்கங்கள் கேட்டுட்டு போகலாம்னு தான் வந்தோம்” என்றான்.

அவனின் பதவியின் நிமித்தம் அமைதிக் காத்தவர், “என்ன விளக்கம் வேணும்?” என்று கேட்டார்.

“சமீபத்தில் ரெண்டு கொலை சொத்து சம்பந்தமா நடந்திருக்கு. அதில் உங்க தரப்பில் சம்மந்தம் இருக்கிறதா எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு. அந்த சொத்து உங்க பெயரில் இல்ல தான். ஆனா செத்து போனவங்க குடும்பத்தில் உங்க பெயரை தான் சொல்லுறாங்க. அதனால் எங்களுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும்” என்றான்.

“கண்டிப்பா, அதில் என்னோட தொடர்பு எந்த வகையிலும் இல்ல” என்றார்.

“கொலை நடந்த அன்னைக்கு நீங்க எங்க இருந்தீங்க?”

“என்னோட ஃபார்ம் ஹவுசில் தான் இருந்தேன். அன்னைக்கு என் பொண்ணு பிறந்தநாள். அங்க தான் கொண்டாடினோம்”

“கொண்டாடினோம்னா யார் எல்லாம்?”

“நானும் என் பொண்ணும்”

“உங்க மனைவி?”

“அவ என் பொண்ணு மட்டும் தானே” அழுத்தமாக சொன்னவர் “இத்தனை வருஷத்தில் நாங்க அப்படி தான் கொண்டாடுவோம். அப்புறம் அந்த நாள் நான் வெளியில் எங்கேயும் போகவும் மாட்டேன்” என்றார்.

“ஓ!”

“நீங்க சொல்லுற கொலைகள் எனக்கு அடுத்த நாள் காலையில் தான் தெரியும். அவங்களுக்கு நேர்ல போய் அஞ்சலி செலுத்திட்டு தான் வந்தேன்” என்றார்.

“உங்க சொத்து சம்மந்தமான எல்லா டாக்குமெண்ட் எங்களுக்கு வேணும். நாங்களா வந்து சர்ச் பண்ணவா இல்லைன்னா நீங்களே அதை எங்களுக்கு சப்மிட் பண்ணுறீங்களா?”

“அதெல்லாம் எதுக்கு?” என தடுமாறியவர் பின் “நானே கொண்டு வரேன்” என்றார்.

“ஒகே சார் தேங்க் யூ. ஏதாவது தேவைபட்டால் நாங்க மறுபடியும் உங்களை விசாரிக்க வருவோம்” என்றவன் பிரசாத்துடன் வெளியேறினான். வெளியே வந்தவனை பிரசாத் பிடித்துக் கொண்டான்.

“மணியை எங்க அனுப்புனீங்க சார்?”

“என் பட்டர் பிஸ்கட்டை ஃபாலோ பண்ண”

“என்ன? ஒரு சிபிஐ ஆபீசர் பொண்ணை பத்தி தெரிஞ்சிக்க அனுப்பினது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?”

“அப்படியா? அவன் விசாரிக்க போயிருக்கான் அவளை பத்தி. அதாவது அவளையும் கேஸ்குள்ள கொண்டு வந்துட்டேன்”

“இதெல்லாம் அநியாயம், பாவம் அந்த பொண்ணு”

“உனக்கு அண்ணி முறைடா” மாறன் சிரிக்க,

“பார்த்து பத்து செகண்ட்ல லவ்வா?” என முறைத்தான் பிரசாத்.

“வர கூடாதா என்ன? பார்த்ததும் பட்டர்ப்ளை எல்லாம் பறந்துச்சு டா, மொழி படத்தில் பிரித்வி ராஜ்க்கு பல்ப் எரிஞ்சது போல எனக்கு பட்டர்பிளை பறந்திச்சு அவ்ளோ தான்”

“சர்மா சார்கிட்ட சொல்லுறேன் இரு”

“நீ என்ன சொல்லுறது மேன்? அவருக்கு அப்போவே மெசேஜ் பண்ணிட்டேன். சரி கிளம்புவோம். என் பட்டர் பிஸ்கட் சாப்பிட வேற இல்ல. அவளுக்கு கம்பெனி குடுக்க போறேன்” என்றவன் தன் பைக்கை உதைக்க, பிரசாத் பின்னால் ஏறி அமர்ந்தான். அவர்களின் பைக் அலர் படிக்கும் கல்லூரியை நோக்கி பறந்தது.

 

Asha Evander

Moderator
அத்தியாயம் 11

அலர்மேல்வள்ளி பி.காம் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை என்றாலும் படு சுட்டி. எனவே மதிப்பெண்கள் எப்போதும் நல்லபடியாக வருவதால் அவள் வகுப்பிலும் அவளுக்கு நல்ல பெயர் உண்டு. இன்னொன்று அமைச்சர் மகள் என்ற மரியாதை கூடவும் உண்டு.

அன்று அவர்களின் கல்லூரி ஆண்டு விழா. அதற்காக தான் காலையில் புடவையில் கிளம்பி வந்திருந்தாள் அலர். மணி அவளை பின் தொடர்ந்து வந்தவன் வாசலில் நின்ற பாதுகாவலரிடம் தன் அடையாள அட்டையை காட்டி விட்டு இன்னும் இருவர் வருவார்கள் என தகவல் கூறி விட்டு உள்ளே நுழைந்தான்.

நேரடியாக கல்லூரி அதிபர் அறைக்கு சென்றவன் அலர் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டு வெளியே வரும் நேரம் மாறன் பிரசாத்துடன் பைக்கில் வந்து இறங்கினான்.

“செம்ம ஸ்பீட் தான் மாறா” என்றவன் பின் தான் சேகரித்த விவரங்களை கூறினான்.

“அலர்மேல்வள்ளி, பிகாம் செகண்ட் இயர். காலேஜ் டாப்பர் அண்ட் ஸ்டூடன்ட் சேர்மேன் கூட அவங்க தான். ஓவர் வாலுப்பொண்ணு. அதே நேரம் பொறுப்பான பொண்ணும் கூட. அவங்க அப்பா மாதிரி எந்த கெத்தும் காட்டாம அமைதியாக வாழுற பொண்ணு”

மணி கூறும் போதே அவளை பற்றி அளவெடுத்து விட்டான் மாறன்.

“அவ அம்மா இல்லாததால் இந்த அமைதி வந்திருக்கலாம். பேசி பார்த்தால் தானே தெரியும்” என்றவன் அவளை கண்களால் தேட ஒரு கூட்டத்தில் மாணவர்களுக்கு இடையில் கையில் ஒரு பேப்பரை வைத்து என்னவோ பேசிக் கொண்டிருந்தாள்.

“சாப்பிட்ட மாதிரி கூட தெரியலையே. வர சொல்லுடா” என்றவன் நேராக கேண்டீன் சென்று இரண்டு செட் பூரி வாங்கி வைத்தான்.

“எனக்கா மாறா?” பிரசாத் ஆர்வமாக கேட்க,

“எனக்கும் என் பட்டர் பிஸ்கட்டுக்கும். உனக்கு வேணும்னா தனியா வாங்கி தனி டேபிளில் உக்கார்ந்து சாப்பிடுடா” என்றான்.

“எல்லாம் என் நேரம்” என்று முனகிக் கொண்டே பிரசாத் நகர, அலர் வேகமாக நடந்து வந்தாள்.

அவன் முன் மூச்சு வாங்க நின்றவள் “என்ன பிரச்சனை சார்? யார் என்ன பண்ணினாங்க? கம்ப்ளைன்ட் எல்லாம் வேண்டாம் சார். படிக்கிற பசங்க” என்று கூற,

“என்ன சொல்லி கூட்டிட்டு வந்த?” என மணியை முறைத்தான்.

“போலீஸ்னு சொன்னேன். உடனே எதுவும் கேட்காமல் ஓடி வந்தாச்சு. இனி நீயாச்சு, அவங்க ஆச்சு” என்றவன் பிரசாத் இருந்த இருக்கைக்கு சென்றான்.

“உட்காரு பட்டர் பிஸ்கட். காலையில் சாப்பிடாம வேற வந்துட்ட, பசிக்கும்ல அதான் உனக்கு நானே ஆர்டர் போட்டு வாங்கிட்டேன். வந்து சாப்பிடு” என ஒரு தட்டை அவள் புறம் நகர்த்த முறைத்து நின்றாள்.

“யார் சார் நீங்க?”

“சிபிஐ”

சட்டென இருக்கையில் அமர்ந்தாள் அலர். முகத்தில் பதட்டம் தொற்றிக் கொள்ள புடவை முந்தானையால் முகத்தை துடைக்க எடுத்தாள்.

“அதை எதுக்கு அழுக்காக்குற? இந்தா இதை வச்சு துடை” என தன் கைக்குட்டையை நீட்ட அவள் வாங்கவில்லை.

“என்ன பிரச்சனை சார்?”

“நீ சாப்பிடாதது தான்”

“சார்!” அவள் தயங்க,

“சாப்பிட்ட பிறகு பேசலாம்” என்றான். அவனும் ஒரு தட்டில் இருந்ததை சாப்பிட அவளும் மறுக்காமல் உண்டாள்.

கைகழுவி விட்டு வந்தவளை அமர்த்தி மீண்டும் அதிகாரியாக விசாரணையை தொடங்கினான்.

“உனக்கே தெரிஞ்சிருக்கும் ரெண்டு கொலை சமீபத்தில் நடந்ததை பற்றி. அது நடந்த நாள் போன மாசம் பதினாறாம் நாள். அன்னைக்கு நீ எங்க இருந்த?”

“போன மாசம் என்னோட பிறந்த நாள். நானும் அப்பாவும் ஃபார்ம் ஹவுசில் தான் இருந்தோம். அன்னைக்கு முழுசா அப்பா என் கூட தான் இருந்தாங்க”

“ஓகே. அப்போ உன் அப்பாவுக்கு ஏதாவது போன் கால் வந்துச்சா? அதாவது அடிக்கடி போன் வந்ததா?”

“இல்லயே. அன்னைக்கு அப்பா போன் சைலண்டில் போட்டுடுவாங்க. அந்த நாள் ஒரு தடங்கலும் இருக்க கூடாதுன்னு நான் தான் சொல்லி இருக்கேன்”

“ஓ! ஓகே. உன்னோட சித்தி கூட ஏன் பிறந்த நாள் கொண்டாட மாட்ட?”

“அது.. அப்பாவுக்கு பிடிக்காது. சித்திக்கு ஜனனி பிறந்ததில் இருந்து என்னவோ பிரச்சனை வந்து ஜனனியை வெளிநாடு அனுப்பிட்டாங்க அப்பா. அதில் இருந்து சித்தி என்னோட எந்த விஷயத்திலும் தலை இடக் கூடாதுன்னு அப்பாவோட கட்டளை. இதுவரை அப்படி தான்”

“சரி, இன்னைக்கு போதும். இனி தேவை பட்டால் உன்னை விசாரிக்க நான் வருவேன். நாளைக்கு இதே நேரம் இதே இடத்தில் மீண்டும் சந்திக்கலாம்” என்று எழும்பினான்.

“நாளைக்கு எதுக்கு மீட் பண்ணனும்? நீங்க எதுக்காக என்கிட்ட கேள்வி கேட்டீங்க?”

“அந்த கொலைக்கும் உன் அப்பாவுக்கும் சம்மந்தம் இருக்கலாம்னு ஒரு சின்ன சந்தேகம். இப்போ கிளியர் ஆகிடுச்சு” என அவன் கூற,

“அப்பாவை ஒன்னும் பண்ண மாட்டீங்க தானே. அப்பா ரொம்ப நல்லவர்” அவள் குரலில் அதீத பயம் தெரிந்தது. கால்கள் நடுங்க இருக்கையை அழுந்த பிடித்தவளை பதறி பிடித்து உட்கார வைத்தான்.

“சில் மா, உங்க அப்பா தப்பு பண்ணலைன்னா எந்த பிரச்சனையும் இல்ல”

“அப்பா தப்பு பண்ண மாட்டாங்க” அவள் உறுதியாக சொல்ல,

“அத்தனை நம்பிக்கையா!” ஆச்சரியமாக கேட்டான்.

“ஆமா அவருக்கு நான்னா உயிர், எனக்கும் என் அப்பா மட்டும் தான் எல்லாமே. அதனால் என்னை விட்டு பிரியுற மாதிரி ஒரு காரியம் பண்ண மாட்டார்”

“அதான் பினாமி வச்சு எல்லாம் முடிக்கிறார்” என முணுமுணுத்தான்.

“என்ன சொல்லுறீங்க?”

“உன்னை லவ் பண்ணுறேன்னு சொல்றேன் என் பட்டர் பிஸ்கட்” அவன் சிரிக்க, அவள் அதிர்ந்தாள்.

“அதெல்லாம் தப்பு”

“எல்லாம் சரியா வரும். வரட்டா? நாளைக்கு பார்க்கலாம்” என்றவன் அவளை அதிர வைத்து விட்டு கிளம்பினான்.

அவள் தெளிந்து விழாவை முடித்து வீடு வந்து சேரும் போது இரவு ஆகியிருந்தது. முருகாம்பாள் சோபாவில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் வரும் அரவம் கேட்டதும் “ஊர் சுத்திட்டு வர நேரத்தை பாரு. இதுல இவளுக்கு சப்போர்ட்டுக்கு ஆள் வேற” என அவளின் காது கேட்கவே சொன்னவர், மீண்டும் சீரியலில் மூழ்கி விட்டார்.

அவர் பேசியதை எப்போதும் கண்டுக் கொள்ளாத அலர் அப்போதும் அசட்டை செய்து மாடியேற,

“சொரணை இருக்கா பாரு. இந்த நேரத்துக்கு எவன் வீட்டுக்கு போயிட்டு வராளோ? காலேஜ் முடிஞ்சா வீட்டுக்கு வரணும்னு இல்ல. இனி ஒரு நாள் வயித்தில் வாங்கிட்டு வரும் போது தான் இங்க இருக்குற மனுசனுக்கு கூட புத்தி வரும்” என்று கூற, அலர் அதிர்ந்து நின்று விட்டாள்.

பொதுவாக அவர் என்ன பேசினாலும் சாதாரணமாக எடுத்து விலகி செல்பவளுக்கு இன்று கண்ணீர் முட்டியது. இது தானே அவருக்கும் வேண்டும். அவள் கண்ணீர்.

பெற்ற மகளை விட்டு பிரிந்து இருப்பவருக்கு அக்காவின் மகள் மீது அத்தனை எரிச்சல். அது வைத்தியநாதன் இல்லாத நேரத்தில் இப்படி வெளிப்படும். அதை அலர் தந்தையிடம் சொல்ல மாட்டாள் என்ற தைரியம் தான் இத்தனை பேச வைத்தது.

அலர் கண்களில் நீரோடு அவரை பார்க்க, “போய் எதுவும் இருந்தா மொத்தமா தலை முழுகு. உங்க அப்பா வரும் நேரம் அழுது என்னையும் என் பொண்ணை மாதிரி அனாதை ஆக்கிடாத” எனக் கூற, அமைதியாக அறைக்கு சென்றாள் அலர்.

அடுத்து வைத்தியநாதன் வரும் நேரம் அவள் சாப்பிட்டு தூங்கியிருந்தாள். எனவே அவரும் மகளை ஒரு முறை பார்த்து விட்டு தனது அறைக்கு சென்றார்.

அடுத்த நாள் காலையில் உற்சாகம் இல்லாமல் கல்லூரி கிளம்பியவளை வைத்தியநாதன் என்னவென்று கேட்க, தலைவலி என சமாளித்தவள் சாப்பிட்டு விட்டு கிளம்பினாள். கல்லூரி வாசலிலேயே மாறன் அவளுக்காக காத்து நின்றான். மற்றவர்கள் ஆதாரங்கள் சேர்க்க ஒரு இடத்திற்கு சென்றிருக்க மாறன் தனியாக வந்திருந்தான்.

‘இன்னும் ரெண்டு நாளில் உங்க அப்பா தான் கொலை செய்தார் அப்படின்னு நிரூபிக்கிறேன்’ என மனதில் நினைத்தவன் அவளை நோக்கி நடந்தான்.

“ஹாய் பட்டர் பிஸ்கட்! எதுக்கு உன் முகம் டல் அடிக்குது?”

அவள் அவனின் முகம் பார்க்காது நடக்க, “ஹே பட்டர் பிஸ்கட்! உன்னைத் தான்” என்று அவள் முன் நின்றான்.

“பிளீஸ் இப்படி எல்லாம் முன்னாடி வந்து என்னை சங்கடப்படுத்தாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு” என்றவள் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு நடக்க மாறன் சிந்தனையுடன் நின்றான்.

“என்னாச்சு இவளுக்கு?” வாய்விட்டு கூறியவன் மணி அழைப்பு விடுக்கவும் உடனே கிளம்பினான்.

அவர்கள் அனைவரும் ஒரு வீட்டின் உள்ளே இருவருக்கு முன் அமர்ந்திருந்தனர்.

“சொல்லு அன்னைக்கு என்னாச்சு?”

“அவங்க ரெண்டு பேரும் ரொம்ப பெரிய பணக்காரங்க. அவங்க புதுசா நிலம் வாங்குறது பத்தி தகவல் வந்துச்சு. எங்களுக்கு வர வேண்டிய கமிஷன் கேட்டும் தரல. அதனால் கோவத்தில் ரெண்டு பேரையும் கொலை பண்ணிட்டோம்” தாங்களே கொலை செய்ததை ஒத்துக் கொள்ளவும் இவர்கள் யோசித்தனர்.

“இவங்க ரெண்டு பேரும் தான் கொலை பண்ணினதுக்கு ஆதாரம் இருக்கா மணி?”

“இருக்கு மாறன். கைரேகை, அப்புறம் இவங்களோட துணியின் துண்டு ஒன்னு கிடைச்சுது. அதுலயும் இவங்க தான்னு உறுதியாக தெரிஞ்சுடுச்சு”

“அப்போ இதுக்கும் அமைச்சர் வைத்தியநாதனுக்கும் தொடர்பு இல்ல, ரைட்?”

“அப்படி தான் ஆதாரங்கள் சொல்லுது”

“அன்னைக்கு அவரோட போன் ட்ராக் பண்ணினீங்களா? அவரோட சமீபத்திய கால் ரெக்கார்ட்?”

“எஸ் மாறன். நோ சஸ்பெக்ட்” பிரசாத் கூற, மாறனுக்கு தலை வலித்தது.

“எப்படி இவளோ பக்காவா பண்ண முடியுது? எங்கேயாவது ஒரு விஷயம் விட்டு போயிருக்காம அத்தனை பிரில்லியன்ட் ஆக பண்ணிட்டாரா?”

“போன்ல பேசாம நேரடியா அசைன் பண்ணி இருக்கலாம்” இளங்கோ கூற,

“அப்படியும் இவங்க ரெண்டு பேரும் நம்ம வட்டத்துக்குள் வரவே இல்லையே. நாம அவர் ஆபீஸ் வரை விசாரிச்சோம்ல” என்றவன் அவர்களை பார்க்க, அவர்கள் முகத்தில் நக்கல் சிரிப்பு.

“இல்லடா, இதுல கண்டிப்பா அமைச்சர் தலையீடு இருக்கு. ஆனா நிரூபிக்கணும்” மாறன் கூற மற்றவர்கள் யோசித்தபடி நிற்க,

“மாறா இப்போ இவங்க தான் கொலை செய்ததுக்கு நேரடி சாட்சி வரை இருக்கு. அதனால் இவங்களை தான் அரெஸ்ட் பண்ணனும். இவங்க தான் அவங்களை கொலை பண்ணினாங்க. அமைச்சர் மாட்டாம போயிட மாட்டார்” என்ற வசந்த் உடனே அவர்களை காவலில் எடுத்து வழக்கு பதிவு செய்து, ஆதாரங்களை இணைத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தான்.

இது நடந்து இரண்டு வாரங்கள் கடந்திருக்க, வைத்தியநாதன் தன் வீட்டில் கையில் செய்தி தாளுடன் அமர்ந்திருக்க, அலர் ஒரு கிப்ட் பாக்ஸ் உடன் வெளியே வந்தாள்.

“எங்கடா போற?” அவர் கேட்க,

“ஃப்ரெண்ட் மேரேஜ் ரிஷப்சன் அப்பா. நேத்தே சொன்னேன் தானே” என்றாள்.

மஞ்சள் கலர் லெகங்காவில் அழகு தேவதையாக ஜொலித்தாள்.

“சரிடா நம்ம கார்லயே போ. நான் கார்ட்ஸ் ரெண்டு பேர் வர சொல்லுறேன்” என்றவரை தடுத்து,

“இல்லப்பா, ஃப்ரெண்ட்ஸ் கூட கொஞ்சம் என்ஜாய் பண்ணிட்டு வரேன். உங்க கார்ட்ஸ் என்ஜாய் பண்ண விட மாட்டாங்க” என சிரித்து விட்டு தனியாக கிளம்பினாள்.

அவள் சென்று சேர்ந்த நேரம் மற்ற நண்பர்களும் வர ஒன்றாக மேடை ஏறினர். அலர் தன் கையில் இருந்த பரிசை கொடுக்கவும் அவளின் தோழி புன்னகையோடு பெற்றுக் கொண்டு கணவனுக்கும் அறிமுகப்படுத்தினாள்.

“ஓ! மினிஸ்டர் சார் பொண்ணு நீங்க தானா?” என அவன் கேட்க,

“ஆமா அண்ணா” என புன்னகையுடன் பதில் அளித்தாள்.

அவனோ கீழே இருக்கையில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தான்.

அலர் மேடையில் இருந்து இறங்கவும் மாறன் கூட்டம் மேடை ஏறியது. அவர்களின் நண்பன் வினய் தான் மணமகன். அவர்களின் அலப்பறையில் திரும்பி பார்த்த அலர் மாறனின் புன்னகை முகத்தில் சிலிர்த்து நின்றாள்.

அவன் புன்னகை இவளை இங்கு சிலிர்க்க வைத்ததென்றால் அவனின் பார்வை இவளைத் தான் நோக்கியது. சிவப்புநிற சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அழகாக நின்றவனை அவள் கண்கள் மெதுவாக சைட் அடித்தது.

முதல் முறை அவனின் பார்வை இவளை உள்ளத்தின் ஆழம் வரை தீண்ட, மெதுவாக புன்னகைத்தாள். அவனும் பரிசை கொடுத்து விட்டு இறங்க, இவர்கள் கூட்டம் உணவு உண்ண சென்றனர்.

பிரசாத் மணியிடம் கண் காட்ட, “இன்னைக்கு இவன் நம்மள பட்டினி போட முன்னாடி நாமளே சாப்பிட்டு கிளம்புவோம் டா” என அவர்கள் வயிற்றை கவனிக்க செல்ல, மாறன் அலர் அருகில் அமர்ந்தான்.

“சார் அது என் ப்ரண்ட்” ஒருத்தி சொல்ல,

“இந்த இடம் ஒன்னும் உன் பெயர்ல எழுதி வைக்கல. போ அந்த பக்கம்” என அமர்ந்தான்.

அலர் எதுவும் சொல்லாமல் உண்ண ஆரம்பிக்க, “எதுக்கு சிரிச்ச?” என மெதுவாக கிசுகிசுத்தான்.

“தெரிஞ்ச முகம் போல இருந்துச்சு. அப்புறம் தான் தெரிஞ்சது இது தப்பான முகம்னு”

“என் முகம் தெரியாதா உனக்கு?” என மெதுவாக அவளின் கையில் கிள்ளியவன், “உன்னை அள்ளிக்கணும் போல இருக்குடி. ஆனா இப்போ கிள்ள கூட முடியல” என அவளின் உடை மறைக்காத இடையில் கண் வைத்து கூற, அலர் முறைத்து பார்த்தாள்.

“கண்ணு காக்காக்கு சாப்பாடா போய்டும். எதுக்கு பின்னாடி வரீங்க?”

“நீ எதுக்கு அன்னைக்கு அழுத?” என கேட்க அன்றைய நாள் அவளின் நினைவில் இன்றும் இருந்தது.

“ஒன்னும் இல்ல. வீட்ல சின்ன பிரச்சனை”

“உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே. அவருக்கு தான் நீன்னா உயிர் ஆச்சே”

“ஹம், அது தான் பிரச்சனை. என்னை கண்டுக்குற அளவுக்கு கூட என் சித்தியை கண்டுக்கல. அவங்க பொண்ணை கவனிக்கல. இது சில நேரம் என் மேல கோபமா பாயும்”

எதற்காக அவனிடம் சொல்கிறாள் என தெரியவில்லை. ஆனால் சொல்லிக் கொண்டே போனாள். அவளின் பேச்சில் அவன் முகம் இறுகியது.

“என் அம்மா இறந்து சில மாசத்தில் சித்தி வீட்டுக்கு வந்துட்டாங்க. எனக்கு விவரம் தெரியுற வரை நான் அம்மா தான் சொல்லுவேன். ஆனா அப்புறம் சித்திக்கு ஜனனி பிறந்ததும் என்னை கண்டுக்க மாட்டாங்க. நானும் அப்பா கூடவே இருந்துப்பேன். ஒரு நாள் ஜனனியை அப்பா எங்கேயோ கூட்டிட்டு போனாங்க. திரும்ப அவ இந்த நாட்டுக்கு வரவே இல்ல. ஆனா அந்த கோபத்தை என் அப்பா மேல காட்ட முடியாம சித்தி என்னை தான் காயப்படுத்துவாங்க. அன்னைக்கு கூட நான் தப்பா போயிடுவேன் அப்படிங்கிற அர்த்தத்தில் பேசுறாங்க. எனக்கு தாங்க முடியல. அதான் அழுதேன்” என்றாள்.

“உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே அலர்” அவளின் கரங்களை பற்றிக் கொள்ள,

“அப்பா ரொம்ப பெரிய தண்டனையா குடுத்துட்டா பாவம் அவங்க எங்க போவாங்க? அதனால் நான் எதையும் எப்போவும் சொல்ல மாட்டேன்” என்றாள்.

“ஓகே இனி என்ன பேசினாலும் நீ கண்டுக்காம உனக்கு கஷ்டமா இருந்தா எனக்கு கால் பண்ணு” என்றான்.

“உங்களுக்கு எதுக்கு கால் பண்ணனும்?” அவள் புரியாமல் கேட்க,

“உனக்கு நான் ப்ரப்போஸ் பண்ணினேன் தானே” என்றான்.

“அதுக்கு நான் இன்னும் பதில் சொல்லல”

“ஆனா உனக்கும் என்னை பிடிக்குதே. உன் கண்ணு அதை சொல்லுது”

“ஆமா, நல்ல மனுஷன் அப்படிங்கிற லெவல்ல பிடிக்கும். அதுக்காக இது காதல் இல்ல”

“சரி சாப்பிட்டுட்டு கார் பார்க்கிங் வா”

“வர முடியாது. நான் கிளம்பிடுவேன்” என்றவள் சிறிது நேரத்தில் கார் பார்க்கிங்கில் அவனுக்காக காத்து நின்றாள்.

“வர முடியாது சொன்ன” அவன் சிரிக்க,

“என்ன தான் சொல்லுறீங்கன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்றாள். ஆனால் பார்வை அவனை விட்டு தள்ளி எங்கேயோ இருந்தது.

“என்னை பாரு அலர்”

“ஹ்ம்”

“நிமிர்ந்து பார்த்து சொல்லு, என் கண்ணில் காதல் தெரியலையா? உனக்கு என்னை பிடிக்கலையா?”

நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வை வீச்சில் இமை தாழ்த்தினாள்.

“எனக்கு மட்டும் பிடிச்சா போதாது. என் அப்பாவுக்கும் பிடிக்கணும்”

“போச்சு போ” என சலித்தவன், “உனக்கும் என் மேல காதல் வரல, ஆனா பிடிக்குது” என்றான்.

“ஹ்ம்”

“சரி அப்போ காதலிப்போமா?”

“அது எப்படி?”

“நான் சொல்லி தரேன். ஆனா அடுத்த முறை நீ சொல்லி தரணும்” என்றவன் அவள் இதழ் நோக்கி குனிய, “இது தப்பு” என தள்ளி விட பார்த்தாள்.

“ஹ்ம் தப்பு தான்” என்றவன் அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

அவனின் ஸ்பரிசத்தில் அவள் மனம் எங்கோ பயணிக்க, “லவ் யூ பட்டர் பிஸ்கட். என்னை பத்தி போதுமான அளவுக்கு நான் உனக்கு சொல்லுறேன்” என்றவன் தன்னை பற்றி முழுவதுமாக கூறினான்.

“இது தான் நான். என்னோட வேலை, ஃப்ரெண்ட்ஸ், இப்போ அவங்க கூட நீயும் எனக்காக இருக்க. உனக்கும் லவ் வரும் போது சொல்லு. உன் அப்பாகிட்ட பேசலாம். இல்லன்னா ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என சிரித்தான்.

“அதெல்லாம் அப்பா சம்மதிப்பார்” அவள் கூறி விட்டு காரை எடுக்க செல்ல,

“உன் அப்பா சம்மதிக்கலைன்னா கூட உன் புருஷன் நான் தான்” என்றவன் அவளுக்கு வழி விட்டு நகர்ந்தான்.

அவளோ ஒரு புது உறவு கிடைத்த சந்தோஷத்தில் காரை கிளப்பினாள். மனதில் இன்னும் காதல் உதித்ததோ என்னவோ, அவன் அவளை கொள்ளையிட்டது உண்மை.
 

Asha Evander

Moderator

அத்தியாயம் 12

இளந்திரை மாறன் அமைச்சர் வைத்தியநாதனின் வழக்கில் விசாரணையை துவங்கி நான்கு மாதங்கள் முடிந்திருந்தன. வைத்தியநாதன் அவர் தனிப்பட்ட செயலாளர் மூலமாக சொத்து சம்மந்தமான கோப்புகளை சிபிஐ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் சந்தேகப்பட்டது போல அவரின் சொத்துக்கள் எதுவும் வில்லங்கமானதாக இல்லை. அனைத்திற்கும் சரியான வரி கட்டி வருகிறார். எங்கேயும் தவறு நடந்தது போல இல்லை. ஆனால் அவர் தவறு செய்கிறார் என்பது மட்டும் இவர்களுக்கு உறுத்தி கொண்டே இருந்தது.

அவர் நேரடியாக எதிலும் தலையிட மாட்டார். அனைத்தையும் தன் தொண்டர்கள், தனக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் முடித்துக் கொள்வார். அதே போல அனைத்து வருமானங்களும் வேறு ஒருவரின் பெயரில் பத்திரமாக சேமிக்கப்பட்டு வந்தது. இதை கண்டு பிடித்தவர்களுக்கு அதை ஆதாரமாக எடுக்க முடியாமல் தவிக்க விட்டார் வைத்தியநாதன்.

“இந்த மனுஷன் சரியான வில்லன்டா. எல்லாமே அவர் தான் பண்ணுறார். ஆனா அதுக்கான ஆதாரங்கள் ஒன்னு கூட அவர் பெயரில் இல்ல” இளங்கோ தான் புலம்பினான்.

“பயம் தான் காரணம்” மாறன் கூற, மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர்.

“பயமா? ஏன்?”

“அவருக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. அதுவும் அவர் உயிரே அவ தான். அவளை தனியா விட்டுட்டு எங்கேயும் போய் மாட்டிக்க கூடாதுன்னு தெளிவா அரசியல் பண்ணுறார்”

“அதுக்கு நேர்மையா இருந்துட்டு போகலாமே” மணி கேட்க,

“இருக்கலாம் தான். ஆனா ஆசை யாரை விட்டது? அவருக்கும் ஆசை தான் இந்த அளவுக்கு வில்லனா மாத்தி வச்சிருக்கு. பார்க்கலாம், என்னைக்காவது ஒருநாள் மாட்டாமலா போவார்?” என்ற மாறனும் அடுத்து அவரின் வழக்கை சிறிது நாட்கள் கிடப்பில் தான் போட்டான்.

ஆதாரங்கள் இல்லாத வழக்கு அது. அதையே பிடித்து கொண்டு இருந்தால் மற்ற வழக்குகள் பின் சென்று விடும் என சில நாட்கள் அதை விட்டவன் அடுத்து தனது வாழ்க்கை துணையை தேடி வர ஆரம்பித்தான்.

இதோ, அவன் காதலை சொல்லி நான்கு மாதங்கள் அவள் கண்ணில் படவே இல்லை. அவளுக்கும் புரிந்து கொள்ள அவகாசம் கொடுத்தானோ என்னவோ, இதுவரை அவன் அவளின் முன் வராததே அவளுக்கு மூச்சடைத்தது.

ஒவ்வொரு நாளும் அவனின் தரிசனம் தேடி தேடி இளைத்து தான் போனாள். காதல் வரவில்லை என்று கூறியவள் இதயம் மட்டும் அவன் பெயரையே சொல்லி துடித்துக் கொண்டிருந்தது. இன்றும் அவன் வருவானா என்ற எதிர்பார்ப்பில் கல்லூரி வந்தவள் நிச்சயமாக வாசலில் அவனை எதிர்பார்க்கவில்லை.

கண்கள் கலங்க, காரை நிறுத்தியவள் கைகள் நடுங்கின. வார்த்தைகள் வர மறுக்க பார்வையால் அவனை கொள்ளை கொண்டாள் அவனின் பட்டர் பிஸ்கட்.

அவளும் இறங்காமல் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, அவளை நோக்கி வந்தவன் கார் கதவை திறந்தான்.

“கீழே இறங்குற ஐடியா இல்லையா?”

“இல்ல” என்றவள் முறைப்புடன் திரும்பிக் கொண்டாள்.

“சரி அப்போ நான் உன் கூட ஒட்டிக்குறேன். தள்ளி உட்காரு” என்றவன் காரை திருப்பிக் கொண்டு வெளியேறி விட்டான்.

“எங்க போறீங்க?”

“ஆள் இல்லாத இடத்துக்கு போய் உன்னை ஸ்வாகா பண்ண போறேன்”

“பண்ணிட்டாலும்” அவள் முணுமுணுக்க,

“அப்போ ஆசை இருக்கோ?” என்று சிரித்தான்.

“நான் உங்களை லவ் பண்ணல, தேடல, உங்க கூட வாழ ஆசை படல. ஆனா இது எல்லாம் நடக்க ஆசை படுவேன்னு பயமா இருக்கு” அவள் கூற, கண்ணில் காதல் ஜொலித்ததை அவனும் கவனித்தான்.

“பட டயலாக்கை எப்போ தான் விட போறீங்களோ?” சிரித்து விட்டு தன் வீட்டிற்கு முன் நிறுத்தினான்.

“இறங்கு”

“யார் வீடு இது?”

“என் வீடு தான். இப்போ உனக்கு இது தான் பாதுகாப்பு”

“என்னை கடத்தவா போறாங்க? பயம் காட்டாதீங்க மாறன்” என்றவள் காரில் இருந்து இறங்க, அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

“வலது கால் எடுத்து வைக்கவா? இடது கால் எடுத்து வைக்கவா? இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் இல்லையா?”

“உன் கால் அது, எதை எடுத்து வச்சு உள்ளே வந்தா என்ன? உள்ளே வாடி. இல்லன்னா வாசல்னு கூட பார்க்காம கடிச்சு வச்சிருவேன்”

“கெட்ட பையன் சார் நீங்க”

“இனி தான் கெட்ட பையன் ஆக போறேன்” என்றவன் அவள் முன்னேயே வைத்தியநாதனுக்கு அழைப்பு விடுத்தான்.

“என்ன பண்ணறீங்க நீங்க?” அலர் பதறி அவன் அலைபேசியை வாங்க முயற்சிக்க, அதற்குள் அந்த பக்கம் அவளின் தந்தை அழைப்பை எடுத்திருந்தார்.

“ஹலோ மாறன்!”

“நான் இல்ல” மெதுவாக அவனின் பின்பக்கம் சென்று மறைந்தாள்.

“இது ஆடியோ கால்டி” என்றவன் “ஹலோ சார், நான் கொஞ்சம் பெர்சனல் விஷயமா உங்ககிட்ட பேசணும். எப்போ பேசலாம்?” என்று கேட்டான்.

“நேர்ல மீட் பண்ணனுமா?”

“தேவை படாது சார்”

“அப்போ சரி, என்ன விஷயம்னு இப்போவே சொல்லுங்க. நான் ஃப்ரீ தான்”

“ரொம்ப சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேன் சார். நானும் உங்க பொண்ணும் காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்க உங்க சம்மதம் வேண்டும்” என்று கூற அந்த பக்கம் பெரும் அமைதி.

அவரின் அமைதியில் இன்னும் காதலை சொல்லாமல் அவனுடன் வந்திருந்த அலருக்கு நெஞ்சில் பயம் குடியேறியது.

வியர்வை பிசுபிசுத்த கரங்களை அவனின் சட்டையில் அழுந்த பதித்தவள் மெதுவாக எட்டி பார்த்தாள். மாறன் அவளின் ஒவ்வொரு உணர்வையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

“சார்!” மாறன் மீண்டும் அழைக்க,

வைத்தியநாதன் “இது என் பொண்ணோட வாழ்க்கை மாறன். கண்டிப்பா நான் யோசிக்கணும். உங்களோட நேர்மை, நியாயம் எல்லாம் சரி தான். ஆனா என் பொண்ணு விஷயத்தில் அது சரியா வருமான்னு பார்க்கணும். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில். எங்க, யார், என்ன பண்ணுவாங்கன்னு தெரியாம ஒவ்வொரு நாளும் பயந்து வாழ முடியாதே. என் பொண்ணை அப்படி ஒரு நிலைமையில் நான் பார்க்க விரும்பல” என்றார்.

அவரின் ஒவ்வொரு பேச்சும் பின்னாடி நின்றவள் மனதில் ஆழமாக பதிந்துக் கொண்டிருந்தது. அவனை இறுக பற்றிக் கொண்டவளின் நடுக்கத்தில் அதை உணர்ந்துக் கொண்டவனும்,

“உங்க பொண்ணு விரும்பினா கூட எதிர்க்க தான் செய்வீங்களா சார்?” என்று கேட்டான். அவனுக்கு அவரின் உறுதியான பதில் தேவையாக இருந்தது.

“கண்டிப்பா, அவளோட வாழ்க்கைக்கு பாதகமா முடியுற எந்த காரியமா இருந்தாலும் எதிர்க்க தான் செய்வேன்” என்றவர், பின் “அவ உங்ககிட்ட இப்போ இருந்தாலும் தெளிவா சொல்லுறேன். எனக்கு உங்க பிரபோசல் யோசிக்கணும். அவளுக்கு சாதகமா வருமான்னு தெரியல. ஆனா பாதகமா வர நிறைய வாய்ப்புகள் உண்டு” என்றார்.

“அப்பா அவர் நல்லவர்பா” மெதுவாக மகளின் குரல் கேட்க, வைத்தியநாதன் மனதில் சிறு வலி.

அவரை மீறி சென்று விட்டாள் என்ற வருத்தம் தான் அந்த வலி. ஆனாலும் மகளுக்காக நெஞ்சை நீவிக் கொண்டவர்,

“உன் நல்லதுக்கு தான் அப்பா சொல்லுவேன்டா, அவர் ரொம்ப நல்லவர் தான். அதுவே தான் அவருக்கு ஆபத்தும் கூட” என்றவர் பின் அழைப்பை துண்டித்து விட்டார்.

பதில் தெரிந்துகொண்ட மாறன் தெளிவாகி விட்டான். ஆனால் தந்தையின் குரலில் தெரிந்த வலியை உணர்ந்து கொண்ட மகள் மடங்கி அமர்ந்து விட்டாள். வழிந்த கண்ணீரும் நிற்கவில்லை. அவனின் சமாதானங்களும் அவளை ஆறுதல் படுத்தவில்லை.

“உங்களுக்கு எதையும் பொறுமையா செய்து பழக்கமே இல்லையா? இது என் அப்பாவை ஹர்ட் பண்ணியிருக்கும் தெரியுமா?” என்று விசும்பலூடே கேட்க,

“எப்படியும் இன்னைக்கு நீ காலேஜ் போகலன்னு உன் அப்பாக்கு தகவல் போகும். அவருக்கு நம்ம விஷயம் தெரிய வரும். அதுக்கு முன்னாடி நானே சொல்லி அவரை மனசளவில் தயார் பண்ணிக்கிட்டேன்” என்றான்.

அவனுக்கு அது சாதாரணம் போலத் தான் தோன்றியது. உறவுகளுக்கு இடையே வரும் வலியை அவன் உணர்ந்தவன் இல்லையே. ஆனால் அலருக்கு அது பெரும் தவறாகப் பட்டது.

“நான் இன்னும் உங்களை லவ் பண்ணுறேன்னு சொல்லல” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

“சோ?”

“எனக்கு நீங்க வேண்டாம். என் அப்பாவை காயப்படுத்தும் எதுவும் வேண்டாம்” என்று வாசல் பக்கம் சென்றாள்.

“ஓ! அப்போ உன் அப்பா சொல்லுற பையனை கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்தி ரெண்டு பிள்ளை பெத்துகிட்டு என் முன்னாடியே வாழுவ. அப்படி தானே?” அவன் குரல் மாற்றத்தை அவளும் உணரவில்லை.

“உங்களை பிடிச்சது. இனி மறக்க முயற்சிக்கிறேன். என் அப்பா சொன்ன வாழ்க்கையை வாழ போறேன்”

“அப்படின்னா எதுக்குடி என்னை லவ் பண்ணின?”

“நான் அப்படி சொல்லலையே” அவன் கண்களை பார்க்க மறுத்தாள்.

“நீ வார்த்தையாக சொல்லலைன்னாலும் உன் கண் சொல்லுச்சுடி. கார்ல என்னை பார்த்ததும் கண்கள் கலங்க, கை நடுங்க நீ அனுபவிச்ச அந்த நொடி வலி சொல்லுச்சு உனக்கு என் மேல வந்த காதலை” என்றவன் அவளை நெருங்க, அவன் பின்னோக்கி நகர்ந்தாள்.

“உனக்கு என்னை விட உன் அப்பா முக்கியமான்னு கேட்க மாட்டேன். உங்க அன்பை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். ஆனா என்னை நீ விலக்கி நிறுத்துற இந்த நிமிஷம் உன்னை மொத்தமா எடுத்து, நீ மதியம் சாப்பிடுற பட்டர் பிஸ்கட் போல கடிச்சு சாப்பிட தான் ஆசை. ஆனா உன் விருப்பம் இல்லாம உன்னை தொடவே மாட்டேன். மொத்தமா இல்ல இனி ஒரு முத்தம் கூட உனக்கு என் மேல முழுசா நம்பிக்கை வராமல் தர மாட்டேன். நீயா வரணும், வர வைப்பேன் நான். இப்போ கிளம்பு” என வாசலைக் காட்ட அவனை திரும்பி பார்த்துக் கொண்டே வெளியே சென்றாள்.

அவள் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டவன் தொப்பென அந்த சோபாவில் விழுந்தான். மனம் முழுவதும் ரண வலி. அவள் சொல்லாத காதல் என்றாலும் அவன் அதை உணர்ந்தானே. இப்போது கண்முன்னே கருகி போவதை நினைக்கும் போது உயிர் உருவும் வலி.

“நான் உனக்கு அவ்ளோ தானாடி? உன் அப்பா சொன்னா என்னை விட்டுட்டு போயிடுவியா?” வாய் விட்டு புலம்பியவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

“உன்னை போக விட மாட்டேன். என்னைக்கா இருந்தாலும் நீ எனக்கு தான்” மனதில் உறுதி கொண்டவன், அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அவன் முகத்தை பார்த்ததுமே எதுவோ சரியில்லை என புரிந்து கொண்டனர் அவன் உடன் வேலை செய்பவர்கள்.

“என்னாச்சு மாறா? ஃபேஸ் டல் அடிக்குதே” சர்மா அவன் தோள் தொட,

“ப்ச், என் லவ்வர் அவ டேடி தான் வேணும்னு என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டா சார்” என்றான். கிண்டலாக சொல்ல முயன்றாலும் வலி தெரிந்தது.

“சரி விடு, அதுக்காக அவளை விட்டுடுவியா என்ன?”

“அதெப்படி முடியும்? கொஞ்ச மாசமா இருந்தாலும் என் நெஞ்சு முழுசா அவளை தான் சுமந்துட்டு இருக்கேன். அவ்ளோ சீக்கிரம் வேற எவனுக்கும் விட்டு குடுக்க மாட்டேன்”

“அப்புறம் என்ன மேன்? மூடிட்டு வேலைய பாரு. எப்படியும் நீ தான் அவ அப்பாவுக்கு சொல்லி ஆரம்பிச்சு வச்சிருப்ப. அதை நீயே முடிச்சு வை. அவனவன் லவ் பண்ணுறத வீட்டில சொல்லவே பாடா படுவான். நீ என்னடான்னா அசால்ட்டா அந்த பொண்ணையும் அவ அப்பாகிட்ட கோர்த்து விட்டு வந்துட்டு இங்க ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா ஓடுதா? கிளம்பு மேன். அடுத்த கேஸ் அப்டேட் என்னன்னு பாரு” என்று அனுப்பி விட்டார்.

‘அவசரபட்டுட்டோமோ?’ என்று அப்போது தான் அவனுக்கும் தோன்றியது. வைத்தியநாதன் பெண்ணை அடித்து துன்புறுத்த மாட்டார் என்றாலும் அவர் சிறிது விலகி நின்றாலே அலர் துவண்டு போய் விடுவாளே. எனவே அவன் தான் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்றெண்ணியவன் அடுத்து சில நாட்கள் அலரையும் தொந்தரவு பண்ணவில்லை.

தினமும் அவள் தரிசனம் இல்லாது அவன் நாட்கள் தொடங்கவும் செய்யாது. அவளை பார்க்காமல் அவன் நாள் முடியவும் செய்யாது. தூரத்தில் இருந்தே அவளை ரசித்து கொண்டிருந்தான் மாறன். இவன் பார்ப்பதை அவள் கவனித்தாலும் கண்டுக் கொள்ள மாட்டாள். காரணம் முருகாம்பாளுக்கு தந்தை மகளின் விலகல் புரிய ஆரம்பித்திருந்தது.

வைத்தியநாதன் எப்போதும் போல தன்னை காட்டிக் கொண்டிருந்தாலும் அலரை அவர் சிறிது தள்ளி தான் வைத்திருந்தார். அவரின் வேலை பளு கூட காரணமாக இருக்கலாம். ஆனால் அலர் மனதில் அவர் தான் மாறனை பிடிக்கும் என கூறியதால் தான் விலகி இருக்கிறார் என புரிந்து தவித்தாள். அதையே முருகாம்பாள் பிடித்துக் கொண்டு தினமும் அவளை வார்த்தையால் வதைத்தார்.

ஏற்கனவே அவரின் வார்த்தைகளில் நொந்து போய் இருந்தவள் இப்போது தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வாழ்க்கையே வெறுமையாக உணர்ந்தாள். அவளின் வித்தியாசம் மாறன் கண்ணிலும் படத்தான் செய்தது. ஆனால் தந்தை மகளுக்கு இடையே தான் எப்படி செல்வது என தவித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளின் மனநிலை சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதை அறிந்திருந்தால் அப்போதே வைத்தியநாதனிடம் பேசி இருப்பான். அவன் அதை உணரும் நேரம் காலம் கடந்திருந்தது.

 

Asha Evander

Moderator
அத்தியாயம் 13

மாறன், அலர் பேசியே மாதங்கள் கடந்து விட்டன. காதலிக்க ஆரம்பித்தான், காதலிக்கிறான், காதலித்துக் கொண்டே தான் இருப்பான். அவன் வாழ்வில் அவளை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் இடம் இல்லை. ஆனால் இப்படி அவளை மாதக்கணக்கில் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் காதலா?

விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்தில் நாட்களை கடத்தியவன் இப்போது மிகவும் சாதாரணமாக இருந்தான். அவள் அவனை விட்டு எங்கும் சென்று விட மாட்டாள் என்ற நம்பிக்கை. அங்கு தான் அவன் பெரும் தவறு செய்தான்.

அலர் தந்தையை எதிர்பார்த்த அளவிற்கு மாறனையும் எதிர்பார்த்தாள். தந்தையின் விலகலை இவன் சரி செய்ய மாட்டானா என ஏங்கினாள். ஆனால் மாறனும் அவளை தூரத்தில் இருந்தே பார்ப்பதை அறிந்த பின் மனதில் அவன் காதல் மீது வெறுப்பு தான் வந்தது. அவன் நெருங்கி வந்திருந்தால் அவளுக்கு இத்தனை அழுத்தங்கள் வந்திருக்காது. தினமும் வீட்டில் முருகாம்பாள் அவளின் நடத்தையையும், அவளின் பென்மையையும் கேவலமாக பேசி சிதைத்தார் என்றால் அவளின் தந்தையும் காதலனும் விலகி நின்று மொத்தமாக அவளை சிதைத்து விட்டனர்.

படிப்பில் மட்டும் தீவிரமாக கவனத்தை செலுத்தியவள் பின் தந்தையையும் எதிர்பார்க்கவில்லை. இதோ மாறன் காதல் சொல்லியே வருடங்கள் ஒன்றரை ஓடி விட்டது. ஒரே ஒரு நாள் காதலை சொல்லியவன் நான்கு மாதங்கள் அவளை தவிக்க விட்டு, அவளின் காதலையும் உணர்த்தி, அவனும் உணர்ந்து பின் தனியாக மீண்டும் வெறுமையை கொடுத்து விட்டான்.

மன அழுத்தம் ஏற ஏற எல்லாவற்றிலும் வெறுப்பு, காண்பவர் மீதெல்லாம் கோபம். அதை அவளே உணர்ந்தாளோ என்னவோ அவளையே பின் தொடர்ந்த மாறன் உணர்ந்து கொண்டான். அவனும் இந்த ஒரு வருடத்தில் வைத்தியநாதனை விசாரணையில் பேரில் பலமுறை சந்தித்தாலும் அவளை பற்றிய பேச்சை எடுக்க அவர் அனுமதிப்பதில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் மகளின் வாழ்க்கையில் அவனை இணைக்க விரும்பவில்லை.

காரணம் அதே நேர்மை. அவன் உயிருக்கு இல்லாத உத்திரவாதம். அதே காரணம் தான் மகளின் முகத்தை பார்க்கவும் தயங்க வைத்தது. அவளின் மீது சிறிய வருத்தம் தான். ஆனால் அவள் மீண்டும் வந்து அவன் தான் வேண்டும் என்று கேட்டால் அவரால் மறுக்க முடியாது.

அவரவர்க்கு அவரவர் நியாயம். ஆனால் மொத்தமாக அவரின் மகள் படும் பாட்டை தான் அவர் அறியவில்லை. அன்றும் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வரும் போது மாறன் அவர் வீட்டு வாசலில் காத்திருந்தான்.

“என்ன மிஸ்டர் மாறன், இன்னும் கேஸ் டீடெயில் தேவை படுதா? ஆபீஸ் வந்திருக்கலாமே” என்றவர் அவனை தாண்டி செல்ல,

“நான் எதுக்கு வந்திருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் சார். உங்க பொண்ணை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ண எனக்கு தெரியாமல் இல்லை. அவ உங்க மேல வச்சிருக்க அன்புக்காக மட்டும் தான் உங்க பதிலுக்காக காத்து இருக்கிறேன். இனியும் அவளை நீங்க மனசு நோக வைக்க விருப்பமா?” என்று கேட்டான்.

“அவ உங்களை மறந்துட்டான்னு நினைக்கிறேன் மாறன். இப்போ படிப்பில் தான் முழுக்கவனம் செலுத்துறா”

“அப்படி அவ உங்ககிட்ட சொன்னாளா சார்?”

“என் பொண்ணு பற்றி எனக்கு தெரியாதா?”

“அதனால் தான் இந்த ஒரு வருஷமா அவகிட்ட பேசாம ஒதுங்கி போறீங்களா சார்? உங்க மேல எனக்கு கேஸ் சம்பந்தமா சந்தேகம் உண்டு தான். ஆனா அப்பாவா உங்களை முழுசா நம்பினேன். நீங்களும் அவளை விட்டுட்டீங்க சார். அவகிட்ட நெருங்க தெரியாமல் இல்ல. ஆனா உங்களுக்கும் கஷ்டம் ஆகிட கூடாதேன்னு தான் நானும் அவளை விட்டு தள்ளியே இருந்தேன். ஆனால் இப்போ அது எவ்ளோ பெரிய தப்புன்னு எனக்கு புரியுது”

அவனை புரியாமல் பார்த்தார் அவர்.

“என்ன சொல்லுறீங்க மாறன்?”

“சார் அலர் நார்மலா இல்ல. அதிகபட்ச மன அழுத்தத்தில் இருக்கிறா. இந்த வீட்டில் அவளுக்கு என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமான்னு தெரியல. ஆனா எனக்கு அவ முதலில் சொன்ன ஒரு விஷயம் இப்போது வரை நெருடல் தான். உங்க இரண்டாவது மனைவிக்கு அவளை பிடிக்கல”

“அது எனக்கே தெரியும் மாறன். அதனால் தான் அவளை நான் ரொம்ப பாதுகாத்தேன்”

“அப்புறம் எப்படி சார் இப்போ தனியா விட்டீங்க?”

“வாட்?”

“இதோ உங்க பின்னாடியே நாம பேசுறது கேட்டுட்டு நிக்குற உங்க இரண்டாவது மனைவிகிட்டயே கேளுங்க. என்னன்னு அவங்க சொல்லுவாங்க. ஆனா தயவு செய்து எனக்கு அலரை கொடுத்துடுங்க” என்று கெஞ்ச அந்நேரம் அலர் வெளியே வந்தாள்.

அவளை பார்த்த வைத்தியநாதனுக்கு அதிர்ச்சி. உடல் இளைத்து, முகத்தில் இருந்த புன்னகை மறைந்து இறுக்கத்துடன் இருந்தாள்.

“பாப்பா!” அவர் அழைக்க,

“என்னப்பா?” என நின்றவள், முகத்தில் அவர் முன்பு கூப்பிடும் போது இருக்கும் புன்னகை துளியளவும் இல்லை.

“ஏன்டா இப்படி இருக்க?” என்றவர் அவளை நெருங்கி தோளோடு அணைத்துக் கொள்ள, அவள் உடல் விறைத்தது.

“அப்பா டா” அவர் மனம் வலிக்க கூற,

“நான் தேடினப்போ இந்த பாசம் கிடைக்கலையேப்பா” என்றவள் மாறன் பக்கம் கூட திரும்பவில்லை.

“சாரி டா, இனி அப்பா பழையது போலவே உன் கூட பேசுவேன். நீ கேட்டு அதை உனக்கு கொடுக்க முடியாம போனா உன்னை விட எனக்கு வலிக்கும் பாப்பா. அதனால் தான் தள்ளி நின்னேன். இனியும் இவர் தான் வேணும்னா அப்பா எல்லாத்தையும் பாத்துக்கிறேன் டா” என்றார்.

“எனக்கு புருஷன்னா அது அவர் மட்டும் தான் அப்பா. அது என்னைக்கும் மாறாது” என்றவள் கல்லூரி கிளம்பி விட்டாள்.

“தேங்க்ஸ் சார்” என்ற மாறனும் அவளின் பின்னே சென்று விட, வைத்தியநாதன் மீண்டும் வீட்டிற்குள் சென்றார்.

“முருகாம்பாள்!” அவரின் கர்ஜனை அந்த வீட்டில் வேலை செய்பவர்களை கூட நடுங்க வைத்தது.

அவரின் குரலில் முருகாம்பாள் நடுங்கியே விட, “என் பொண்ணுகிட்ட என்ன சொன்ன?” என்று கேட்டார்.

“நான் ஒன்னும் சொல்லலைங்க” அவர் பதற,

“நீ ஒன்னும் சொல்லாமல் இருக்குற ஆளும் கிடையாது. அது எனக்கு தெரியும். இப்போ நீயா உண்மையை சொல்லலைன்னா சுவிட்சர்லாந்துல இருக்குற உன் பொண்ணு தான் கஷ்டபடுவா. என்னால என்ன பண்ண முடியும்னு காட்டவா?” என அழுத்தமாக கேட்க,

“அவ நல்லதுக்கு தான் சொன்னேன். வேற ஒன்னும் இல்லைங்க” என்றார் நடுக்கத்துடன்.

இல்லையென்றால் துன்பபட போவது ஜனனி தானே.

“நீ என்ன சொன்னன்னு சொன்னால் அது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு நான் முடிவு பண்ணிக்குறேன்”

“அது இப்போ காலம் கெட்டு கிடக்குதுங்க. அதனால் ஒழுக்கமா இருக்க சொன்னேன்” என்று முடிக்கவில்லை, அவர் கன்னங்கள் இரண்டும் தீயாய் எரிந்தது.

“ஒழுக்கத்தை பற்றி நீ பேசுறியா? என் பொண்ணுக்கு கெட்டு போன நீ கிளாஸ் எடுக்குறியா?” என மாறி மாறி அறைய, முருகாம்பாள் விக்கித்து நின்றார்.

அதுவும் வேலைக்காரர்கள் முன்னால் அத்தனை அவமானமாக இருந்தது. அவர்கள் பார்த்த பார்வையில் உடல் கூசியது.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் மாமன் முத்தரசு கூட குடும்பம் நடத்தி ஒரு பெண்ணை பெத்துகிட்டியே. நீ என் பொண்ணு ஒழுக்கத்தை பற்றி பேசுறியா? என் பொண்ணு காதலிச்சாலும் என் சம்மதத்துக்காகவே இன்னும் அவளோட காதலன்கிட்ட கூட காதலை சொல்லாமல் இருக்கா. ஆனா நீ? அக்கா புருஷன் என்னை பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு, காதலிச்ச அவன் கூட குடும்பம் நடத்தி இருக்க. இதுக்கு இடையில் உன் பொண்ணு மட்டும் தான் இங்க வாரிசா இருக்கணும்னு என் பெண்ணை கொலை பண்ண பார்த்து இருக்க. எதுவும் தெரியாமல் தான் வாழுறேன்னு நினைச்சியா? எல்லாம் தெரிஞ்சு தான் பாம்பை கூடவே வச்சு இருக்கேன்” என்றவர், அவரின் அதிர்ச்சியை பார்த்து சிரித்தார்.

“என்கூட கல்யாணம் ஆன சில மாதத்திலேயே உன் காதலனை பற்றி நான் தெரிஞ்சுகிட்டேன். உண்மையை சொல்லணும்னா மனசார நான் உங்களை சேர்த்து வைக்க நினைச்சேன். ஆனா அவன் கூட வாழ்ந்து குழந்தை பிறந்த அப்புறமும் என் பொண்ணு அலரை கொலை பண்ண பிளான் போட்டீங்களோ அப்போவே உங்க மூணு பேரையும் பிரிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவர் சோபாவில் நிமிர்ந்து அமர்ந்தார்.

“ரொம்ப ஷாக் எல்லாம் ஆகாத. உன் பொண்ணுக்கு ஒரு வயசு வரை தாய்ப்பால் முக்கியம்னு தான் இங்க இருக்க விட்டேன். அடுத்து அவளை சுவிட்சர்லாந்து அனுப்பிட்டேன். உன் காதலன் முத்தரசு இதுவரை என்ன தப்பு பண்ணினான்னு கூட தெரியாம ஸ்விட்சர்லாந்து ஜெயில்ல இருக்கான். தினமும் ராஜ உபசாரம் தான். நீ என் கண் பார்வையில் இருக்கணும்னு தான் இத்தனை வருஷங்கள் இங்கேயே விட்டு வச்சிருக்கேன். ஆனா தனியா இருந்தும் உனக்கு புத்தி வந்த பாடில்லையே”

அவரின் பேச்சில் உறைந்து நின்றது முருகாம்பாள் தான். அவருக்கு தெரியாத விஷயங்கள் என அவர்கள் நினைத்திருக்க, ஒவ்வொன்றையும் தெளிவாக சொல்லி விட்டாரே.

“என் பொண்ணு ஜனனி?” இப்போது தான் அந்த சந்தேகம் வந்தது.

“என் பிரென்ட் வீட்டுல தான் இதுவரை வளர்ந்தாள். அவ எந்த தப்புமே செய்யல. அந்த ஒரு காரணத்துக்காக தான் என் மகளா வளர்த்தேன். ஆனால் இனி நீ பண்ணின பாவத்துக்கு அவ அனுபவிக்கட்டுமே” என்றவர் தன் நண்பனுக்கு அழைப்பு விடுத்து செய்ய வேண்டியதை சொல்ல, அடுத்த நிமிடம் ஜனனி தனியாளாக்க பட்டிருந்தாள்.

“என் பொண்ணை விட்டுடுங்க பிளீஸ்” முருகாம்பாள் அவர் காலில் விழுந்தும் பலன் இல்லை. தனது கட்சி அலுவலகம் கிளம்பி விட்டார். நல்லவர்களே அவரிடத்தில் மாட்டும் போது கெட்டவர்களுக்கு தான் அவர் எமன் ஆயிற்றே!

அலர் கல்லூரிக்குள் நுழையும் போது அவளின் காரை வழிமறித்து நிறுத்தியிருந்தான் மாறன். அவள் அவனை முறைக்கவும் கூலாக தன் பைக்கை நிறுத்தி விட்டு அவளின் காரில் வந்து ஏறினான்.

“இறங்குங்க முதல்ல”

“ஏன்டி?”

“எனக்கு உங்களை பார்க்க கூட பிடிக்கல. இதுல கார்ல வேற கூட்டிட்டு போவாங்களா?”

“இப்போ பிடிக்காது தான், என்னை கல்யாணம் பண்ணிக்கோ. பிடிக்க வச்சிடுறேன்” என அவளின் விரல்களை பற்ற,

“என் விருப்பம் இல்லாம தொட மாட்டேன் சொன்னீங்க” என்று விலகினாள்.

“முத்தம் தரதும், மொத்தமா எடுக்குறதும் தான் உன் விருப்பத்தோடு நடக்கும். இதெல்லாம் என் விருப்பம் தான்” என்றவன் அவளை அலேக்காக தூக்கி மடியில் அமர்த்தி மற்றைய இருக்கையில் அமர்த்தியவன் தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

“என்னால காலேஜ் கட் அடிக்க முடியாது. நீங்க கிளம்புங்க” என்றாள்.

“சரி எங்க வச்சு பேசலாம்னு சொல்லு. அங்க உனக்காக வெயிட் பண்ணுறேன். கண்டிப்பா பேசியே ஆகணும்”

“நான் பேச நினைச்சப்போ நீங்க என்னை தேடி வரலையே. உங்க மேல இருந்த கொஞ்ச காதலும் காணாம போயிடுச்சு. பிளீஸ் என்னை தொந்தரவு பண்ணாதீங்க” என தலையை கைகளால் பற்றிக் கொண்டவள், நிமிரும் போது அவளை பார்த்தவன் அதிர்ந்தான்.

“என்னடி இது மூக்குல இருந்து இரத்தம்? வா ஹாஸ்பிட்டல் போகலாம்” அவன் வண்டியை திருப்ப,

“ஓவரா டென்ஷன் ஆகிட்டேன் போல. இது சாதாரணம் தான். இனியும் என்னை இந்த நிலைமையில் பார்க்க வேணாம்னு நினைச்சா பார்க்கவே வராதீங்க” என்று கைக்குட்டையால் இரத்தத்தை துடைக்க, அவளின் கரம் பற்றியவன் திருப்பி அவளின் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.

ஆழ்ந்த முத்தம், இருவருக்கும் இடையேயான முதல் இதழ் முத்தம். அவன் ரசித்து சுவைக்க, அவளோ அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் தன் உதட்டை தண்டிக்கும் வகை தெரியாமல் அவனின் தலை முடியை பற்றி இழுத்தாள்.

வலித்தாலும் அவளின் உதட்டை விடாதவன் அதில் இரத்த சுவையை உணர்ந்த பின்பே விட்டான்.

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் அலர். நீ எனக்கானவள், உன்னை பார்க்க கூடாதுன்னு சொல்ல உனக்கு கூட உரிமை இல்லை. உன் அப்பா பாசத்துக்காக மட்டும் தான் உன்னை விட்டு விலகி நின்னேன். உன்னை முதன் முதலில் உன் வீட்டில் பார்த்ததில் இருந்து இந்த நொடி வரை என் இதயத்தில் பத்திரமா வச்சிருக்கேன். இனியும் என் உயிர் மூச்சு நின்னா தான் அதில் இருந்து உனக்கு விடுதலை. அதுக்கு தான் ஆசை படுறன்னா தாராளமா நீ போகலாம்” என்று கூற கன்னத்தில் சுளீர் என வலி.

“அடிச்சியா பட்டர் பிஸ்கட்?” கன்னத்தை மெதுவாக தடவிக் கொண்டே கேட்க,

“உன் வாய்க்கு வந்தது எல்லாம் பேசுவியா நீ? நீ போய் சேர்ந்துட்டா நான் எதுக்கு உயிரோட இருக்கணும்? வா ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்” என்று காரை இயக்க முயற்சிக்க,

“விடுடி, நீ மட்டும் கொஞ்சமா பேசுனியா? ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணுவோம் முதல்ல. அடுத்து மத்த விஷயங்களை பேசலாம்” என்றான்.

“அதெல்லாம் செக் பண்ணிட்டேன். ஒரு வருஷமா இப்படி தானே இருக்கேன். ரொம்ப டென்ஷன் ஆனா சில நேரம் இப்படி ஆகும். இனி டென்ஷன் ஆகாம இருக்க டிரை பண்ணுறேன்” என்றவள் காரை அவனிடமே விட்டு விட்டு கல்லூரிக்குள் சென்று விட்டாள்.

அவனை காயப்படுத்தவும் மனம் வரவில்லை. அவன் செய்ததை மன்னிக்கவும் முடியவில்லை. மறக்க முயற்சி செய்தால் தான் உண்டு.

வைத்தியநாதன் பேசி விட்டு சென்றதும் வேலையாட்களை வெளியேற்றிய முருகாம்பாள் தன் பிறந்த வீட்டிற்கு அழைப்பு விடுத்தார். அவருக்கு இரண்டு தம்பிகள் உண்டு. இருவரும் எதிர்க்கட்சியில் எம்எல்ஏவாக பதவியில் இருந்தனர்.

“சொல்லுக்கா” மூத்தவன் விநாயகம் கேட்க,

“நம்ம திருட்டுதனம் எல்லாம் என் புருஷன் தெரிஞ்சு வச்சிட்டு தான் கூட இருந்திருக்கார்டா. இப்போ கூட பொண்ணுக்கு கல்யாணத்துக்கு ஒரு சிபிஐ ஆபீசர் பார்த்திருக்கார். ஆனா அவனே இவரை அரெஸ்ட் பண்ணுற போல விஷயங்களை நீங்க நடத்தணும்”

“உன் புருஷன் தான் ஆதாரமே இல்லாம காரியத்தை முடிக்கிற ஆள் ஆச்சே. நீ வலை போட்டு தேடினாலும் மீன் சிக்காது” விநாயகம் சொல்ல,

“எப்படியாவது அவரை ஆஃப் பண்ணுங்கடா, என் பொண்ணு ஜனனி இப்போ தனியா கஷ்டபட இவரும் இவர் பொண்ணும் தான் காரணம்”

“அப்போ அந்த சிபிஐ ஆபீசரை காலி பண்ணிடலாம். இப்போ வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும். சந்தேகம் வராதது போல முடிக்கலாம்” என்றவர் முருகாம்பாளை சமாதானப்படுத்தி விட்டு அடுத்த வேலையில் இறங்கினார்.

அலர் கல்லூரி முடித்து வெளியே வரும் வரை அவளது காரில் தான் இருந்தான் மாறன்.

“இன்னைக்கு வேலைக்கு லீவ் விட்டுட்டார் போல” என்று முணுமுணுத்தவள், கார் கதவை தட்டினாள்.

“சீக்கிரம் உள்ளே வாடி, யாராவது பார்த்து உன் அப்பாகிட்ட பத்த வச்சிட போறாங்க” என்றான்.

“அதுக்கு முதல்ல கார் கதவை திறங்க” என்றவள் உள்ளே ஏறி அமரவும் மின்னல் வேகத்தில் காரை கிளப்பிக் கொண்டு ஒரு உணவகம் வந்தான்.

“இன்னும் சாப்பிடலையா நீங்க?”

“உனக்கென்னமா ஒரு பட்டர் பிஸ்கட் பாக்கெட் போதும். எனக்கு அப்படியா?” என்றவன் இருவருக்கும் உணவு ஆர்டர் செய்தான்.

அவனை முறைத்துக் கொண்டே வந்த உணவுகளை உண்டவள், “வீட்டுக்கு போகலாம்” என்றாள்.

“உன்னை பாதி பிச்சு சாப்பிடுற ஐடியா எனக்கு இல்ல. எனக்கு முழுசா தான் வேணும். எப்போ கல்யாணம் பண்ணலாம் சொல்லு. வீட்டுக்கு கிளம்பலாம்” என்றான்.

“என் காதல் அப்போ வேண்டாமா?”

“அது உன்கிட்ட நிறைய இருக்கு. உனக்கு அதை காட்ட தான் வீம்பு”

“ஹ்க்கும்”

“எல்லா ஹ்க்கும் தான், நீ ரெடின்னு சொன்னா உன் அப்பாகிட்ட பேசலாம்”

“அப்பாகிட்ட கேட்டு நாள் பாருங்க”

“அப்போ உனக்கு ஓகே தானே?”

“இல்லன்னா மட்டும் விட்டுடவா போறீங்க?”

“கண்டிப்பா கிடையாது மை டியர் பட்டர் பிஸ்கட்”

“அப்புறம் என்ன? எல்லாம் முடிவு பண்ணிட்டு சொன்னா வந்து கழுத்தை நீட்டுறேன். தாலியை கட்டுங்க” அவள் வீம்பாக சொல்ல,

“எனக்கு நீ என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து, உன் உதட்டு சிரிப்போட, முழு மனசா தான் கல்யாணம் பண்ணிக்கணும். தாலி கட்டுற நிமிஷத்தில் இருந்து என்னை காதலா பார்க்கிற கண்கள் மட்டும் தான் எனக்கு வேணும்” என்று அவளின் கன்னத்தை வருடி சொல்ல, அவன் தீண்டலில் அவள் உடல் சிலிர்த்தது.

“ஹ்ம்” அவள் கைகள் அவன் விரல்களை பற்ற, அதையே அழுத்தமாக பிடித்துக் கொண்டவன்,

“என்னோட காதலை உனக்கு சரியா வெளிப்படுத்தலன்னு எனக்கு தெரியும். ஆனாலும் என் கூட வாழ்ந்து உணர்ந்துக்கோ. என்னோட உயிரே நீ தான்னு ஒவ்வொரு நொடியும் உனக்கு உணர்த்துவேன். என் அம்மா, அப்பாவை நான் பார்த்ததே இல்ல. என் மனைவி ஸ்தானத்தில் நீ எனக்கு எல்லாமுமாக இருக்கணும்னு ஆசை படுறேன். கடைசி வரை என் கூடவே இருப்பியா?” என்று கேட்க,

கண்கள் கலங்க “ஐ லவ் யூ இளந்தீரா, எப்போவும் உங்களுக்காக நான் இருக்கேன்” என்று அவனின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

அடுத்த நாளே வைத்தியநாதனை நேரடியாக சந்தித்து திருமண நாளை குறிக்க கேட்டான் மாறன். அவருக்கு இன்னமும் நெருடல் தான். ஆனால் மகளின் சந்தோஷத்தை கெடுக்கவும் மனம் வராமல் சரி என்றார்.

இரண்டு வாரங்கள் கழித்து ஒரு சுபயோகதினத்தில் எளிமையாக ஒரு கோவிலில் வைத்து அவனின் நண்பர்கள், மற்றும் வைத்தியநாதன் கலந்து கொள்ள அலர்மேல்வள்ளியை மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கிக் கொண்டான் இளந்திரை மாறன்.

அவர்களின் திருமணத்தை வெளியே சொல்வதில் வைத்தியநாதனுக்கு விருப்பம் இல்லை. முருகாம்பாள் எதுவும் பிரச்சனையை கிளப்பி விடுவாரோ என்ற ஐயத்தில் தான் எளிமையாக நடத்த சொன்னார் அவர். ஆனால் அடுத்து நடந்த அசாம்பாவிதத்தில் அவரே மாட்டிக் கொண்டார்.

திருமணம் முடிந்த உடனே வைத்தியநாதன் வீட்டிற்கு கிளம்பி விட, மாறன் மற்றும் அலர் அவனின் வீட்டிற்கு கிளம்பினர். எதையுமே முறையாக செய்ய முடியாத நிலை. எனவே எதையும் பெரிது படுத்தாமல் மாறன் கிளம்ப, காரில் செல்லும் போது அவனுக்கு ஓர் அலைபேசி அழைப்பு வந்தது.

அதில் சொல்ல பட்ட செய்தியில் அதிர்ந்து அலரை திரும்பி பார்க்கும் முன் அவளின் பக்கமாக ஒரு லாரி இடித்து விட்டு செல்ல, மாறன் சுதாரித்து அவளை இழுக்கும் முன் சீட் பெல்ட் போடாததால் முன் கண்ணாடியை உடைத்து தூக்கி எறியப்பட்டாள். மாறன் சீட் பெல்ட் போட்டு இருந்தும் சில காயங்களுடன் வெளியே வர, இரத்த வெள்ளத்தில் கிடந்த அலரை கண்டவன் அதற்கு மேல் முடியாமல் மயங்கி சரிந்தான்.
 

Asha Evander

Moderator

அத்தியாயம் 14

அடுத்த நாள் அவன் கண் விழிக்கும் போது ஒரு மருத்துவமனை அறையில் இருந்தான். அவன் விழித்ததும் நர்ஸ் மருத்துவரை கூப்பிட செல்ல, “சிஸ்டர்” என அழைத்தான்.

“என்னாச்சு சார்? எங்கேயாவது வலி இருக்கா?” என கேட்டார் அவர்.

“என்னோட வைஃப் எப்படி இருக்கா? எங்க இருக்கா?” பதற்றத்துடன் கேட்க,

“அவங்களுக்கு கொஞ்சம் பலமான அடி தான். ஐசியுல இருக்காங்க. டாக்டர் வந்ததும் உங்க செக்அப் முடிச்சிட்டு அவங்களை பார்க்க போகலாம்” என்றார்.

சரியென்றவன் அடுத்து மருத்துவர் வந்து அவனை பரிசோதித்து முடியவும் மனைவியை பற்றி கேட்க, “கொஞ்சம் கிரிட்டிகல் தான். அவங்களை இங்க கொண்டு வந்து சேர்க்கும் போதே தலையில் பலமான அடி பட்டிருந்தது. உயிரை காப்பாற்றி விட்டோம். இனி அவங்க கண் விழித்து பார்த்தா தான் அடுத்த ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்” என்றார்.

“எப்போ கண் விழிப்பா டாக்டர்?”

“இன்னும் எட்டு மணி நேரம் பார்ப்போம். அதுக்கு முன்னாடி கண் விழித்தால் பிரச்சனை இல்லை. நீங்களும் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணாதீங்க” என்றவர் அடுத்த நோயாளியை பார்க்க கிளம்பினார்.

அவர் சென்றதும் நர்ஸ் அலைபேசியை வாங்கி கௌரவ் சர்மாவை தான் அழைத்தான். வேறு எவருக்கும் விஷயம் தெரிய வருவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.

பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த சர்மாவும் இந்த நிலமையில் அவனை எதிர்பார்க்கவில்லை.

“என்ன ஆச்சு மேன்?”

“வைத்தியநாதன் ஆள் வச்சு கொலை பண்ண சொல்லி இருக்கிறார் சார்” அவன் கண்களில் அத்தனை கோபம்.

“கண்டிப்பா இருக்காது மாறன். அவரோட பொண்ணு மேல இருக்கிற பாசம் உனக்கு தெரியாததா? இதில் வேற என்னவோ இருக்கு” சர்மா எடுத்துக் கூற, அதை கேட்கும் நிலையில் மாறன் இல்லை.

காரில் இருக்கும் போது அவனுக்கு வந்த அழைப்பில் சொல்லப்பட்ட விஷயம் இது தான்.

“உன் மாமனார் ரொம்ப நல்லவர் மாதிரி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு காரில் நீ அவரோட பொண்ணு கூட ஏறும் முன்னமே உன்னை கொலை பண்ண ஆள் அனுப்பி இருக்கார். பார்த்து பத்திரமா இரு”

அவன் சொன்னதை சர்மா நம்பவே இல்லை. ஆனாலும் அவனின் போக்கில் விட்டார். அலர் கண் விழிக்கும் வரை அவன் ஒரு நிலையிலேயே இல்லை. அடுத்து அவள் விழித்து, அவனை மறந்து விட்டதாக மருத்துவர் சொன்னதும் மீண்டும் ஒரு முறை மரித்து விட்டான் அவன்.

“யார் நீங்க?” அவளின் ஒற்றை கேள்வி அவனின் உயிரையே பிடுங்கி எறிந்து விட்டதே.

சர்மா தான் அவனை தேற்றினார். “அவ இப்போ பிறந்த குழந்தை மாதிரி மாறா. நீ என்ன சொன்னாலும் அது அவளுக்கு சரியா புரியும். உனக்காக வாழுவா. பழைய கோபங்கள், பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் புதிதா ஒரு வாழ்க்கையை தொடங்கு. சிபிஐ எப்போவும் உனக்கு துணையா இருக்கும். ஆனால் இப்போ இந்த ஊரில் நீ இருக்க வேண்டாம். எனக்கு கூட நீ இருக்கும் இடம் தெரிய கூடாது. மொத்தமா இந்த உறவை விட்டுட்டு புதுசா அவ கூட தொடங்கு. வைத்தியநாதன் மகளை தேடுவார் தான். ஆனா அது உங்களை கொலை பண்ண இருக்காதுன்னு தான் நான் நம்புறேன். எங்கேயோ தப்பு நடந்திருக்கு. அதை சரி பண்ணலாம். இப்போ நீ கிளம்பு” என்று கூற,

அவளின் முன் நின்றவன் “நான் உன் புருஷன் அலர்மா, நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது. ஒரு விபத்தில் மாட்டி இங்க வந்துட்டோம். இனி நம்ம வீட்டுக்கு கிளம்புவோம்” என்று அவன் கூட்டிக் கொண்டு வந்த ஊர் தான் சோலையூர்.

சோலையூரில் தாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்றும் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டதால் இங்கே வந்ததாகவும் அவனும் விவசாயம் செய்வான் என கூற அந்த ஊரில் இடம் கிடைத்தது. சில நாட்களில் அலருக்கு தலைவலி அதிகமாகவும் பரிசோதித்த மருத்துவர் அவள் தலையில் இரத்தம் உறைந்து இருப்பதாகவும், அதை சரி செய்யும் வரை குடும்ப வாழ்வில் ஈடுபட வேண்டாம் எனவும் கூற சில வருடங்கள் காத்து இருந்தான்.

அலருக்கு அவளின் பழைய நினைவுகள் எதுவும் இல்லாததால் அவள் மாறனை காதலிக்க ஆரம்பித்த நேரம் அவன் அவளை விட்டு தள்ளி போகவும், மன அழுத்தத்திற்கு உள்ளாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டும் இரண்டு முறை கருசிதைவு ஆகி விடவும் அவளின் நலனுக்காக, அடுத்து பல வருடங்கள் தடை உபயோகித்து கரு தங்காமல் பார்த்துக் கொண்டான்.

ஏழு வருடங்கள் வெளியூர் வாசமே இல்லாமல், மறுபடியும் வைத்தியநாதன் கண்ணில் மாட்டி விடுவோமோ என்ற ஐயத்துடன் வாழ்ந்து வந்தவனுக்கு இவர்களுக்கு நடந்த விபத்து பற்றியே அவருக்கு தெரியாது என்பதை அறிய வாய்ப்பில்லை தான். அவரும் இவர்களை மறைமுகமாக தேடிக் கொண்டு தான் இருக்கிறார்.

நினைவுகள் அவனை அமிழ்த்திக் கொள்ள, அதில் மூழ்கி இருந்தவன் செவிலியர் வந்து அழைக்கவும் தான் நிகழ்காலத்திற்கு வந்தான்.

“என்னாச்சு சிஸ்டர்?”

“இதுல இருக்குற மெடிசின் எல்லாம் கொஞ்சம் ஃபார்மசியில் இருந்து வாங்கிட்டு வாங்க சார். நாளைக்கு உங்க மனைவியை ரூமுக்கு மாத்திடலாம்னு டாக்டர் சொன்னாங்க” என்றார்.

“சரி சிஸ்டர்” என வாங்கிக் கொண்டு நகர்ந்தவன் மனதில் இனி வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்றே ஓடியது.

அடுத்த நாளும் வந்து விட, அலர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டாள். அவளின் உடலில் அவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருந்த காரணத்தால் அன்றே மாற்றினர்.

அவன் நிகிதாவுடன் அந்த அறைக்கு வரும் நேரம் அலர் அவனை எதிர்பார்த்து விழித்து இருந்தாள்.

“என்னமா நீ இன்னும் தூங்காம இருக்க? உனக்கு நல்ல ரெஸ்ட் வேணும்டா” என அவளின் அருகில் வந்து அமர, அலர் நிகிதாவை பார்த்தாள்.

“என் ஹெட் சர்மா சாரோட பொண்ணு. அவளும் டாக்டர் தான். உனக்கு உதவியா இருக்கும்ன்னு கூட்டிட்டு வந்தேன்” என்று கூற அவளை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள்.

“அப்பா இன்னும் வரலையா தீரா? இத்தனை வருஷம் ஆகி இருக்கு. அப்பாவை தேடுறேன், காணலை”

“அவர் வந்துட்டு தான் போனார் அலர். கட்சி ஆபீஸில் கூப்பிட்டாங்கன்னு உடனே கிளம்பிட்டார். தொடர்ந்து அமைச்சராக இருக்கிறது கூட சாதாரண விஷயம் இல்லையே. எல்லா வேலைகளும் முடியவும் வருவார்” என்றான்.

வார்த்தைகள் தடுமாறினாலும் அதை சாமர்த்தியமாக மறைத்தவன் உண்மை போல கூற அவனை நம்பினாள் அலர்.

“கல்யாணம் முடிஞ்சு ஏழு வருஷம் ஆகிடுச்சுல தீரா. வருஷங்கள் போனதே தெரியல” என மென்மையாக கூறியவள் ட்ரிப்ஸ் ஏறாத மறுகையால் அவனின் விரல்களை பற்றிக் கொள்ள, நிகிதா அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வெளியே சென்றாள்.

“ஆமாடி, ரொம்ப சீக்கிரமா, அழகா, புரிதலோடு நம்ம நாட்கள் போயிடுச்சு. கண்டிப்பா அந்த அலரை நான் மிஸ் பண்ணுவேன்”

“ஏன் தீரா? அவ தான் அவ்ளோ பிடிக்குமா?”

“அவளுக்கு மட்டும் தான் என் மேல கோபப்பட தெரியாது. எந்த வருத்தமும் இல்லாம எப்போவும் என் பின்னாடி மச்சான்னு ஓடி வர அலரை யாருக்கு தான் பிடிக்காது? ரொம்ப காதலோட வாழ்ந்த நாட்கள் அது” அவன் கண்மூடி ரசித்து சொல்ல அவனையே புன்னகையுடன் பார்த்தாள் அலர்.

“கண்டிப்பா அவ உங்களுக்கு திரும்ப கிடைப்பா” அவள் கூற,

“நீ தான் என்னோட நிரந்தரம் அலர். அவளோட இருந்த நாட்களில் உன்னோட இளந்தீரா அழைப்புக்காக ரொம்ப ஏங்கினேன். இப்போ அது கிடைத்தும் மச்சான் அழைப்புக்காக ஆசை படுறேன். குரங்கு புத்தி தான் போல எனக்கு” என சிரித்தான்.

“குரங்கு புத்தி தான், அதான் ஒழுங்கா காதலிக்காம கல்யாணமும் பண்ணியாச்சு” அவள் சிரிக்க, அவனும் சிரித்தான்.

அவளின் குழந்தைத்தன பேச்சுக்கள் பல மறைந்து, முதிர்ச்சியடைந்த பெண்ணாக காட்ட, ‘இதுவும் நல்லா தான் இருக்கு’ என நினைத்துக் கொண்டான்.

அடுத்து இரண்டு வாரங்கள் மருத்துவமனை வாசம் தான் அவர்களுக்கு. காலையில் நிகிதா அவளுக்கு துணையாக வந்து விட, இரவில் மாறன் அவளுடன் தங்கினான்.

வைத்தியநாதன் அவர் மீது இருந்த குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களை இன்னும் சமர்ப்பிக்காததால் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

மாறன் கெளரவ் சர்மாவின் வீட்டில் அதிகபட்ச கோபத்துடன் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

“எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற மாறா? இன்னும் டைம் இருக்கு. அவர் மொத்தமா விடுதலை ஆகி வெளியில் வரல. ஜாமீனில் தான் வந்து இருக்கார்” சர்மா சொல்ல,

“எப்படி சார்? சின்னதா கூட மிஸ் ஆக கூடாதுன்னு தான் எல்லாமே ஆதாரத்தோடு இங்க குடுத்தேன். அவரோட பேங்க் டீடெயில்ல இருந்து பினாமி டீடெயில் வரைக்கும் தெளிவா கலெக்ட் பண்ணி குடுத்தும் இப்படி ஜாமீன் வாங்குற அளவுக்கு வீக்கா மாத்தி வச்சிருக்காங்க” அவன் கத்தினான்.

“மாறா அமைதியா இரு. உன்னோட அலர் இங்க தான் இருக்கிறா. இப்போ அவளோட ஹெல்த் நம்ம பார்க்கணும். மினிஸ்டர் ஜெயில்ல இருந்தா உன் பொண்டாட்டியை எப்படி சமாளிப்ப? அவர் வெளியில் இருந்தா தான் உனக்கும் நல்லது” அவரின் சமாதானங்கள் எதுவும் எடுபடவில்லை.

“முடியாது சார், அவர் பொண்ணையே தான் கொலை பண்ண ஆள் அனுப்பினார்”

“அது அவர் இல்லன்னு உனக்கு தெரியும் மாறா”

“நம்ப முடியல சார். இன்னமும் அவர் எங்களை தேடிட்டு தான் இருக்கிறார்”

“கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு கிளம்பின அவரோட பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வரலைன்னா தேட தான் செய்வாங்க. அதுவும் இத்தனை வருஷமா நீங்க உயிரோட இருந்துட மாட்டீங்களான்னு நம்பிக்கையில் தேடுறார். அவர் செய்யும் வேலையில் நேர்மை இல்லைன்னாலும் அவர் நல்ல அப்பா. அதை நீ மறுக்கவே முடியாது மேன்”

மாறன் முழுவதும் அவரை நம்பவில்லை என்றாலும் இப்போது முருகாம்பாள் பற்றி தெரிய வந்ததால் வைத்தியநாதன் மீது நம்பிக்கை வந்தது.

“இப்போ என்ன பண்ணுறது சார்?”

“நீ எப்போ சோலையூர் போக போற?”

“இரண்டு மாதங்கள் இங்க தான். அடுத்து தான் போகனும்”

“ஓகே. நாம மினிஸ்டர்க்கு நீங்க உயிரோட இருக்கிறதை தெரிய படுத்துவோம். அவர் வரட்டும். பேசிக்கலாம்”

“சார் அவரை ட்ராக் பண்ண மட்டும் சான்ஸ் இல்லையா?”

“நம்ம ஆபீஸ் வர சொல்லுவோம். விசாரணை போய்ட்டு இருக்குல்ல” என்றவர் அவரே வைத்தியநாதனுக்கு அழைப்பு விடுத்து மறுநாள் சிபிஐ அலுவலகம் வர கேட்டார்.

என்ன தான் இருந்தாலும் அவர் அமைச்சர். எனவே அந்த மரியாதையுடன் தான் அழைத்தார்.

“ஓகே சார், வரேன்” என்ற வைத்தியநாதன் மகளின் அறையில் அவளின் புகைப்படத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“எங்க இருக்கீங்க பாப்பா? உங்களை தேடாத இடம் இல்ல. நல்லா இருக்கீங்களா? உயிரோடவாவது இருக்கீங்களா?”

அவரின் கேள்விக்கு படத்தில் புன்னகைத்துக் கொண்டாள் அலர்.

அன்று இரவு அலருடன் தங்கினான் மாறன். ஊர் திருவிழா ஆரம்பித்து இருந்ததை முருகன் அவனுக்கு அழைத்து சொல்ல, தேவையான பண உதவிகளை அனுப்பி விட்டு கதிருக்கும் பேசி விட்டு வந்தான்.

சட்டையை கழற்றி ஆங்கரில் மாட்டி விட்டு பனியனுடன் அருகில் வந்தவனை ரசித்துப் பார்த்தாள் அலர்.

“என்னமா கண்ணு வைக்கிற?”

“இப்போ அதை தான் பண்ண முடியும்” என்றவள் அருகில் அவனை அமர வைத்து, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“லவ் பண்ணவும் நேரம் இல்ல, கல்யாணமும் அவசரத்தில் நடந்துச்சு. நம்ம பண்ணினது லவ்வான்னே எனக்கு சந்தேகம் தான். ஆனாலும் இப்போ இப்படி ஒரு சூழலில் ரொம்ப நல்லா இருக்கு உங்க அணைப்பு”

“சொல்லுவடி, அப்போ மட்டும் தான் ஒழுங்கா லவ் பண்ண தெரியாம இருந்தேன். அப்புறம் பாரேன், என்னை விட நீ ஜெட் ஸ்பீட்ல போயிட்ட. இந்த ஏழு வருஷத்தில் காதல்னா என்னன்னு எனக்கு சொல்லி குடுத்ததே நீ தான். வெறும் கிஸ் அண்ட் செக்ஸ் தான் காதல் இல்ல. உன்னோட வாழுற ஒவ்வொரு நொடியையும் ரசிச்சு, நிதானமா உன்னை ருசிச்சு வாழ சொல்லி குடுத்தது நீ தான்” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“கிஸ் இங்க வேணும்” அவள் உதட்டை காட்ட,

“தொடங்கினா முடிக்க மாட்டேன். அதனால் அது எல்லாம் உனக்கு சரியான பிறகு தான்” என்றான்.

“சரியான கஞ்சன் நீங்க”

“நான் தாராளபிரபுடி. ஆனா நேரம், காலம் எல்லாம் பார்த்து கொடுக்குற பிரபு” என்று சிரித்தவன் அவள் கேட்ட முத்தத்தையும் கொடுத்து விட்டு,

“நான் வெஜ் ஆக இருந்தாலும் இது எல்லாம் எனக்கு பத்தாது. அதனால் இப்படி தூண்டி விடுற வேலை எல்லாம் வச்சிக்க கூடாது” என கண்டித்தான்.

“இல்லன்னா மட்டும் அப்படியே பாஞ்சிடுற ஆளு போல பேச்சு மட்டும் தான்” என்றவள் அவன் நெஞ்சில் பற்கள் பதிய கடித்து விட்டே நகர்ந்தாள்.

“ஸ்ஸ்.. வலிக்குது டி”

“சுகமான வலி, அப்படி சொல்லணும்” அவள் மீண்டும் கடிக்க வர,

“தூங்குடி. காலையில் எனக்கு வேலை இருக்கு” என்றவன் கட்டிலின் மறுபக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான்.

 

Asha Evander

Moderator

அத்தியாயம் 15

அடுத்த நாள் அலருக்கு தேவையான அனைத்தையும் செய்து முடித்து, அவளை குளிக்க வைத்து, சாப்பிட வைத்து விட்டு தான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிற்கு கிளம்பினான்.

“இங்கிருந்தே கிளம்பலாம்ல?” அவள் கேட்க,

“நாம உயிரோட இருக்கிறதே இங்க யாருக்கும் தெரியாது அலர்மா. கல்யாணம் ஆன நாள்ல இருந்து ஓடிட்டு தான் இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள் ஓடுவோம். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்தே வெளில கூட போகலாம்” என்றான்.

“இன்னும் புரியல எனக்கு, நம்மள யார் கொல்ல போறா? ஓவர் பில்டப் தான்” என்று சிணுங்கினாலும் அவனை தடுக்கவில்லை.

“சீக்கிரம் வந்துடுவேன்டா” என்றவன் அவள் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டு விட்டு வெளியே வந்தான்.

சர்மா அவனுக்காக காத்திருக்க, அவரை அலுவலகம் போக சொன்னவன் வீட்டிற்கு சென்று குளித்து விட்டு முகத்தை கைக்குட்டையால் மறைத்து கட்டி, தலையில் தொப்பியை வைத்து விட்டு பைக்கில் சிபிஐ அலுவலகம் கிளம்பினான்.

ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தான். அந்த நொடியில் அவன் உடம்பே சிலிர்த்தது. மீண்டும் தாய் வீடு வந்து சேர்ந்த உணர்வு.

ஆழ்ந்த மூச்செடுத்து அனுபவித்து நின்றவனை பின்னாலிருந்து கட்டிக் கொண்டான் வசந்த்.

“மிஸ்ட் யூ மாறன்” என்றவனை முன்னால் பிடித்து இழுத்தவன்,

“நான் உன் லவ்வரா டா? என் பொண்டாட்டி மட்டும் பார்க்கணும். உன்னை உப்புகண்டம் போட்டுடுவா” என சிரித்தாலும் இறுக அணைத்துக் கொண்டான்.

“வேற எல்லாரும் எங்க?”

“அவங்க எல்லாம் அதிர்ச்சியில் உறைந்து பனிக்கட்டி ஆகிட்டாங்க” என ஒரு இடத்தை காட்ட, அவனின் நண்பர்கள் மற்றும் கூட வேலை செய்தவர்கள் அனைவரும் அவனையே ‘ஆ!’ வென பார்த்து நின்றனர்.

“என்னடா இப்படி ஒரு லுக்கு?” வசந்திடம் கேட்க,

“ஷாக்காம்ல ஷாக்! அடச்சை எல்லாரும் இங்க வாங்க” என கூப்பிட அவனின் நண்பர்கள் “ஹூரே!” எனக் கத்திக் கொண்டே வந்து அணைத்தனர்.

“வெல்கம் பேக் மாறன்” அனைவரின் அன்பான வார்த்தைகளை பெற்றுக் கொண்டவன் அறைக்குள் நுழையும் நேரம் வைத்தியநாதன் வாசலில் அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

“மாறன்!” அதிர்ச்சியில் அடுத்த வார்த்தை அவருக்கு வரவில்லை.

“வாங்க சார், சர்மா சார் உங்களுக்காக தான் வெயிட்டிங்” என்றவன் சாதாரணமாக அவரை அழைத்து சென்றான்.

“மாறன் நீங்க.. என் பாப்பா.. நல்லா இருக்கீங்களா?” அவர் கேட்க பதில் சொல்லாதவன், சர்மா அறையில் அவரை விட்டான்.

“மாறன் நீயும் இரு” சர்மா சொல்ல, சரியென்று மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.

சர்மா தான் அவனை முறைத்து பார்த்தார். அவருக்கு வைத்தியநாதனின் தவிப்பு ஒரு தந்தையாக புரிந்தது.

“மினிஸ்டர் சார், உங்களுக்கு ஒரு விஷயத்தை தெரிய படுத்த தான் இங்க வர சொன்னேன். அதுக்குள்ள நீங்களே பார்த்துட்டீங்க” சர்மா சொல்ல,

“எனக்கு இது நிஜம் தானான்னு சந்தேகமா இருக்கு. அதே நேரம் அத்தனை சந்தோஷம் கூட” என்றார்.

அவருக்கு மாறனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால் அவனின் ஒதுக்கம் வித்தியாசமாக பட்டது.

“இது எப்படி?”

“எப்படி உயிரோட இருக்கன்னு கேக்குறீங்களா சார்?” மாறன் கேட்க,

“மாறன் ஸ்டாப் இட்” சர்மா கத்தியே விட்டார்.

“எதனால் நான் அமைதியா இருக்கணும் சார்? அன்னைக்கு அந்த விபத்து இவர் சொல்லி பண்ணல சரி. ஆனா இவர் வீட்டில் இருக்கும் ஒருத்தங்க பண்ணினது தானே. அவருக்கு இன்னும் அவர்களை பற்றி தெரியாமலா இருக்கும்?” என்று கோபமாக கேட்க,

“என்ன விபத்து? யார் பண்ணினது?” வைத்தியநாதன் தான் பதறினார்.

“தெரியாத மாதிரி கேட்காதீங்க சார். ஒன்னும் தெரியாமலா எங்களை இன்னும் தேடிட்டு இருக்கீங்க?”

“நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியல மாறன். ஆனா அன்னைக்கு வீட்டுக்கு கிளம்பின நீங்க உங்க வீட்டுக்கு போய் சேரலன்னு தகவல் வரவும் பதறி போய் உங்க வீட்டில் தேடினா வீடு பூட்டியே இருந்தது. அடுத்து இத்தனை வருஷங்கள் உங்க ரெண்டு பேரையும் காணல. அதனால் தான் இதுவரை தேடிட்டு இருக்கேன்”

“எங்க கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு காரில் போகும் போது ஆக்சிடென்ட் ஆகி அலருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய், தலையில் இரத்தம் உறைந்து, இத்தனை வருஷம் நாங்க பட்ட கஷ்டத்துக்கு காரணம் உங்க வீட்டில் இருக்கும் உங்க இரண்டாவது மனைவி தான்” என்று சொல்ல, வைத்தியநாதன் நெஞ்சை பிடித்துக் கொண்டார்.

“என் பாப்பா.. பாப்பா நல்லா இருக்கா தானே?” குரல் தழுதழுக்க கேட்க,

“இப்போ நல்லா இருக்கா” என்றான்.

“எங்க இருக்கா? நான் பார்க்க வரட்டுமா?”

“நீங்க பார்க்க வந்தா பின்னாடியே உங்க மனைவியோட அடியாட்கள் எங்களை கொலை பண்ண வருவாங்க. அவங்க கண்ணுல மண்ணை தூவிட்டு தான் வரணும்” என்றான் மாறன்.

“அந்த ராட்சசி இன்னும் திருந்தலையா? கொஞ்ச நாள் அமைதியா இருக்கவும் மனசுக்குள் வஞ்சம் இருந்தாலும் வெளியில் அமைதியா இருக்காளேன்னு நினைச்சேன். ஆனா காத்திருந்து விஷம் கக்குற பாம்பா இல்ல இருந்திருக்கா. அவளுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என எழும்ப,

“அதெல்லாம் அப்புறம், முதல்ல உங்க பொண்ணை பார்க்க வாங்க. அடுத்து உங்களுக்கும் நான் வச்சிருக்கேன் ஆப்பு” என முறைக்க, சர்மா சிரித்தே விட்டார்.

“சார்!” அவன் பல்லை கடிக்க, வைத்தியநாதன் முகத்திலும் புன்னகை.

மகளும் மருமகனும் இத்தனை வருடங்கள் கழித்து நலமாக வந்ததில் தான் அவரின் உயிரே திரும்பியது.

“எனக்கு வைக்கிற ஆப்பை சரி பண்ண எனக்கு தெரியும் சிபிஐ சார்”

“என்னத் தெரியும்? பணம் குடுத்து எல்லா ஆதாரத்தையும் இல்லன்னு சொல்ல தானே?” மாறன் முகம் கோபத்தில் சிவந்தது.

“உங்களால முடியுற விஷயத்தை நீங்க பண்ணுங்க. அதில் இருந்து எப்படி தப்பிக்கணும்னு தானே நான் பார்ப்பேன். அது எந்த வழியா இருந்தா என்ன?”

“மினிஸ்டர் சார்” மாறன் கத்த,

“நீங்க இப்போ என் மருமகன் கூட. அதனால் தான் அமைதியா பேசுறேன். நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான். நானா நேரடியா எதிலும் இறங்க மாட்டேன். அதுக்குன்னு ஆளுங்க இருக்காங்க. நீங்க முதலில் விசாரிச்ச ரெண்டு கொலை கேஸ் கூட என் ஆள் பண்ணினது தான். ஆனா அதில் எனக்கு எதிராக என்ன ஆதாரம் கிடைச்சது?” எனக் கேட்டார்.

“அதனால் தான் அப்போவே தப்பிச்சிட்டீங்க” என்றான் மாறன்.

“ஆமா, ஆனா அவங்களை மாதிரி ஆட்களை உயிரோட விட்டு வச்சிருந்தா இந்நேரம் உங்க அலர் உங்களோட இருந்திருக்க மாட்டா” என்று கூற, மாறன் புரியாமல் பார்த்தான்.

“அவங்ககிட்ட எனக்கு எந்த டீலிங்கும் இல்லை. ஆனா அவனுங்களுக்கு என் பொண்ணு மேல கண்ணு. அவனோட கெஸ்ட் ஹவுஸ்ல வச்சு ரெண்டு பேரும் என் பொண்ணை நாசம் பண்ணிட்டு அதை வச்சு என் அரசியலை கெடுக்க பார்த்திருக்காங்க. எனக்கு அரசியல் ரெண்டாவது பட்சம் தான். ஆனா என் பொண்ணு மேல ஒருத்தன் கையை வைக்க நினைச்சிட்டு உயிரோட இருந்திட முடியுமா? அப்போ நான் என்ன நல்ல அப்பா? அதனால் தான் அவனுங்க ரெண்டு பேரையும் கொலை பண்ண சொன்னேன். ஒரு இடத்தில் கூட உங்களால் நான் தான் பண்ணினேன்னு கண்டு பிடிக்கவே முடியாது. எதுவுமே நான் நேரடியா அல்லது என்னை சார்ந்தவர்களை வச்சு முடிக்கல. ஆதாரம் கிடைச்சா சொல்லுங்க. நானும் நிறைய ஆதாரங்கள் வச்சிருக்கேன்” என்றவர்,

“நாளைக்கு நான் என் பொண்ணை பார்க்க வரேன் சர்மா சார். யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. அதுக்கு முன்னாடி வீட்டில் ஒரு முக்கியமான வேலை இருக்கு” என மாறனை பார்த்து புன்னகைத்து விட்டு கிளம்பி விட்டார்.

சர்மா மாறனை பார்த்து நக்கலாக சிரித்தார். அவன் முறைக்க,

“உன் மாமனார் அரசியல்ல தான் வில்லன் நினைச்சேன். உனக்கு வாழ்க்கையில் கூட முரட்டு வில்லனாகிடுவார் போலயே” என்றார்.

“எவ்ளோ நியாயம் சொன்னாலும் அவர் பண்ணினது தப்பு தான்”

“ஆமா தப்பு தான். ஆனா உன் மனைவியை யாராவது இப்படி பண்ண நினைச்சா என்ன பண்ணுவ?”

“ரெண்டா பிளந்துடுவேன்”

“அவர் நேரடியா செய்யாம, வேற ஆளை வச்சு ரெண்டா பிளந்துட்டார். சட்டத்துக்கு முன்னாடி தப்பு தான். ஆனா நமக்கு ஆதாரம் முக்கியம். கிடைக்கட்டும், கிடைச்சதும் அவருக்கான தண்டனையை வாங்கி கொடுக்கலாம்”

“நீங்க வர வர அவர் பக்கம் சாஞ்சிடுறீங்க சார்”

“அந்த பக்கம் சில விஷயத்தில் நியாயம் இருக்குதோ என்னவோ? நீ வேலையை பாரு. இன்னும் அபிஷியல் ஆக ஆபீஸ் வர முடியாது உனக்கு. வழக்கம் போல கண்ணாமூச்சி தான். அதனால் வீட்டுக்கு கிளம்பு. உன் பொண்டாட்டி அடுத்து எனக்கு திட்ட போறா” என்று அனுப்பி வைத்தார்.

வைத்தியநாதன் பெயர் வழக்கில் இருப்பதால் அவர் கட்சி அலுவலகம் செல்லவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை. நேரடியாக தனது பண்ணை வீடு சென்றவர், தனது செயலாளரை கூப்பிட்டார்.

“சார்!” அந்தப்பக்கம் குரல் கேட்டதும்,

“எனக்கு ஒரு ஆக்சிடென்ட் பத்தி விசாரிச்சு முழு விவரம் வேணும் தயாளன். ஏழு வருஷம் முன்னாடி நடந்த விபத்து, ஆனா கொஞ்சம் ரகசியமா விசாரிக்க சொல்லுங்க. விவரங்கள் நான் அனுப்புறேன்” என்றார்.

“சரி சார்” என்ற தயாளன் அப்போதே ஒரு காவல் துறையை சார்ந்த நபரிடம் சொல்லி விசாரிக்க சொன்னார்.

அவரும் விசாரிப்பதாக சொல்லவும் மாறனுக்கு அழைத்தார் அமைச்சர்.

அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்திருந்த மாறன் அவரின் அழைப்பை கண்டதும் தோட்டத்திற்கு சென்றான்.

“என்ன சார் கால் பண்ணிருக்கீங்க?”

“உங்க கூட கொஞ்சி பேச நீங்க என் லவ்வரா என்ன? உங்களுக்கு ஹெல்ப் பண்ணுற ஆள் ஒருத்தர் முருகாம்பாள் க்ரூப்ல உண்டே. அவர் நம்பர் வேணும்” என்றார்.

“எதுக்கு அவரையும் போட்டு தள்ளவா? அவருக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கு சார்”

“மாறன் எனக்கு சில உண்மைகள் தெரியணும். முருகாம்பாள் இன்னும் உங்களை தேடிட்டு தான் இருக்கா. அன்னைக்கு விபத்து நடந்தது அவ சொல்லி தான்னா இப்போ வரை உங்களை தேட மாட்டா. எனக்கு இதில் வேற யாரோ சம்மந்த பட்டிருப்பதாக தோணுது. கண்டுபிடிச்ச பிறகு தான் உங்களுக்கும் நிம்மதி, எனக்கும் நிம்மதி”

“என்ன சார் உங்க வீட்டம்மாவை காப்பாத்த அடுத்த பிளானா?” மாறன் நக்கலாக கேட்க, வைத்தியநாதன் பெருங்குரலெடுத்து சிரித்தார்.

“அந்த நாயை நான் காப்பாத்த போறேனா? அவளை முடிக்க எனக்கு ஒரு செக்கண்ட் போதும். ஆனா அவளோட பொண்ணு ஜனனிக்காக மட்டும் தான் இதுவரை உயிரோடு இருக்கா. அவ என் பேர்ல அவ தம்பிங்க துணையோடு சொத்தை வாங்கி அதை எனக்கே திருப்பி விட்டு இருக்கா. எல்லாம் தெரிஞ்சும் தான் அமைதியா இருக்கேன். நான் அரசியல்வாதி தான். ஆனா கேடுகெட்டவன் இல்ல. எனக்கும் ஒரு பெண் இருக்கா. நேரம் வரும் போது அவளையும் சமாதி கட்டிட்டு தான் எனக்கான தண்டனையை தேடி போவேன்” என்றவரை நினைத்து பிரமித்தது இவன் தான்.

“ஐஸ் வைக்குறீங்க மாமனாரே!”

“அப்படியே குளிர்ந்து போயிட்டீங்களாக்கும்”

“அவ்ளோ சீக்கிரம் உருகிட மாட்டேன். பண்ணின தப்புக்கு அனுபவிக்கனும்ல”

“நானும் ரெடி தான். இந்த கேஸ் முடிய எப்படியும் ரெண்டு வருஷம் ஆகிடாதா? அதுக்குள்ள ஒரு பேரப்பிள்ளையை பார்த்துட்டா நிம்மதியா ஜெயிலுக்கு போயிடுவேன்”

“அப்போ அரசியல்?”

“நாலாவது முறையா தொழில் துறை அமைச்சர் நான். இன்னமும் பார்க்கணுமா என்ன?”

“அது சரி, ஹரி நம்பர் இப்போ உங்ககிட்ட கொடுத்தாலும் வில்லங்கம் தான். எதுவா இருந்தாலும் என்கிட்ட டீல் பண்ணுங்க. நானே பதில் கேட்டு அனுப்புறேன். இப்போ வீட்டுக்குள்ள போகலைன்னா உங்க பொண்ணு அடுத்து துரத்தி விட்டுடுவா” என சிரித்தான்.

மகளை பற்றி பேச்சு வந்ததும் அவளை இப்போதே பார்க்க மனம் பரபரத்தது.

“நான் இப்போ வரவா வீட்டுக்கு?” மெதுவாக கேட்டார்.

அவரின் கெஞ்சலில் அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் அவர்களின் பாசத்தை கண்கூடாக பார்த்தவன் ஆயிற்றே!

அதனால் “சர்மா சார் ஆறு மணிக்கு வந்திடுவார். அப்புறம் வாங்க, யாருக்கும் தெரியாம வரணும்” என கட்டளையிட்டு விட்டு திரும்ப அவனின் மனைவி முறைத்துக் கொண்டு நின்றாள்.

‘அய்யயோ! இவ எப்போ வந்தான்னு தெரியலையே’ மனம் பதற,

“என்னமா வெளில வந்து நிக்குற, உடம்பு சரி இல்லாதவ இப்படியா வெயில்ல நிக்குறது?” என்று அவளை நகர்த்த,

“யார்கிட்ட பேசினீங்க?” என்று கேட்டாள்.

“அது ஒரு கேஸ் விஷயம் டா. நீ உள்ளே வா, மச்சானுக்கு சில்லுன்னு ஒரு கிஸ் குடு பார்க்கலாம்” என்று அறைக்குள் அழைத்து சென்று கட்டிலில் அமர்த்தியவன்,

“ரொம்ப நேரம் வெளியில் நிற்காத அலர். தலை வலி வந்துட போகுது” என கூற,

“உங்களை தேடி தான் வந்தேன். ஒரு ரொமான்ஸ் இல்லாம சப்புன்னு வாழ்க்கை போன ஃபீல். அதான் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்னு கூப்பிட வந்தேன்” என்றாள் சிரித்த படி.

“இந்த நிலைமையில் உனக்கு ரொமான்ஸ் வேறயா? நானே காஞ்சு போய் கிடைக்குறேன். உசுப்பேத்தி விட்டு என்னை காயப்படுத்தாதமா” என்று கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.

“நான் ரொம்ப டல் அடிக்கிறேனா?” பாவமாக கேட்டாள்.

“சத்தியமா இல்லடி. நீ இல்லாத ஒரு லைஃப் தான் எனக்கு வெறுமை. உன்கூட இருந்தாலே அது எனக்கு சொர்க்கம் ஃபீல் தான். உனக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் என்னை ஒரு அந்நிய பார்வை பார்த்த பாரு. அந்த நிமிஷம் இப்படியே புதைஞ்சு போயிட மாட்டோமான்னு இருந்துச்சு. உனக்கு பழைய நினைவு வரலன்னாலும் என் கூட அலரா இருந்துட்டு போகட்டும் தான் நினைச்சேன். ஆனா இளந்தீரான்னு கூப்பிட்டு மறுபடியும் உயிர் குடுத்த. நீ பார்க்குற பார்வையே எனக்கு உயிர் கொடுக்கும் போது நீ இல்லாத வாழ்க்கை வேஸ்ட் தான்” அவளின் கால்களை எடுத்து தன் வயிற்றில் போட்டுக் கொண்டான்.

 

Asha Evander

Moderator
அத்தியாயம் 16

அவளின் பாதங்களை அழுத்தி கொடுத்தவன், மெதுவாக சொடக்கு எடுத்து விட, அந்த சுகத்தில் கட்டிலில் நன்றாக சாய்ந்தமர்ந்தாள் அலர்.

“வாவ்! ரொம்ப ரிலாக்ஸ் ஃபீல் தீரா”

“ஹ்ம், எல்லாம் சரி ஆகட்டும். மொத்தமா உன்னை ரிலாக்ஸ் ஆக்குறேன்”

“அதுக்கு தானே நானும் வெயிட்டிங்” அவள் சிரிக்க,

“வெட்கமே இல்லல?”

“இதுக்கெல்லாம் வெட்கபட்டா உங்களை வச்சிட்டு ஒரு ஊறுகாய் கூட போட முடியாது. நான் குறைந்தது நாலு பிள்ளைக்கு கணக்கு வச்சிருக்கேன். அதெல்லாம் எப்போ வரதாம்?”

“இன்னும் ரெண்டு மாசம் தான்டி, அடுத்து வரிசையா உன்னை அதுக்கு தான் ரெடி பண்ணுவேன்”

“பண்ணுங்க, அப்புறம் பார்க்கலாம்” என்றவள் இப்போது கால்களை அவன் வயிற்றில் இருந்து எடுத்து நீட்டி படுத்துக் கொண்டாள்.

“சரி கதையை சொல்லுங்க”

“என்ன கதைமா?”

“நம்ம கல்யாணம் முடிஞ்சு ஏழு வருஷம் காணாம போன கதை” அவனின் நெஞ்சில் அடிக்க,

“நான் சொன்னதும் உனக்கு ஞாபகம் வந்துடுமா என்ன?” என்றாலும் அனைத்தையும் அவளிடம் கூறினான்.

மலைத்து போனாள் அலர்மேல்வள்ளி. “சித்தி இவ்ளோ பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியலையே தீரா. எனக்கு அவங்க அம்மா இல்லைன்னாலும் நான் வெறுக்கல. ஜனனியை என் சொந்த தங்கச்சியா தான் நினைப்பேன். ஆனா இவங்களுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண எப்படி மனசு வந்துச்சு?” அவள் படபடவென பேச,

“ஹேய் அலர்! அமைதியாகுடி, நீ எதையும் நினைச்சு டென்ஷன் ஆக கூடாது. அது உன்னோட உடம்புக்கு நல்லது இல்ல. நான் இப்போ சொன்னது கூட இனி அவங்களை நம்பி வெளில கூட போக கூடாதுன்னு தான். நீ நல்லா இல்லன்னா நானும் நல்லா இருக்க மாட்டேன் அலர். அதனால் எனக்காக அதை கடந்து போயிடு” என்றான்.

அவளை விட அவன் அதீத படபடப்பில் இருந்தான். அவனுக்காக அவளும் அமைதியானாள். ஆனாலும் தலையில் லேசாக வலி எடுக்க, அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் கரம் பற்றினாள்.

“எனக்கு ஒன்னும் ஆகாது தீரா”

“ஒன்னும் ஆக நான் விடவும் மாட்டேன். உன் அப்பா வரேன் சொல்லியிருக்கார். நீ அவர்கிட்ட இதை பற்றி பேசி இன்னும் டென்ஷன் ஆகாத” எனவும்,

“அப்பாவா! எப்போ வராங்க?” ஆர்வமாக கேட்டாள்.

“சர்மா சார் வந்த அப்புறம் தான் வர சொன்னேன். அவரும் இத்தனை வருஷமா நம்மள தேடிட்டு தான் இருந்தாராம்” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான்.

தந்தையின் மீது அதீத பாசம் கொண்டவள் அவரை ஜெயிலுக்கு அனுப்பின விஷயம் தெரிந்தால் எப்படி ஏற்றுக் கொள்வாள்?

இரவு ஏழு மணிக்கு தான் வைத்தியநாதன் கௌரவ் சர்மா வீட்டிற்கு வந்தார். மனதெங்கும் ஒரு படபடப்பு. கையில் ஏந்திய இரண்டு மாதங்களில் மனைவியை இழந்தாலும் அடுத்து அவளின் இருபத்தியோரு வயது வரை அவளை பொத்தி பொத்தி தான் வளர்த்தார்.

ஒருநாள் அவள் காதலை சொன்னதும், அவளுக்காக மட்டுமே யோசித்தவர் மாறன் நல்லவன் என்பதாலேயே திருமணம் செய்துக் கொடுத்தார். அதே நாளில் அவர்களை தொலைத்தும் விட்டார்.

இதோ, இப்போது பல வருடங்கள் கழித்து மகளை பார்க்க போகும் ஆர்வம் அவரை சிறு குழந்தை போல் காட்டியது. தனியாகத் தான் வந்திருந்தார். எனவே சர்மா அவரை வரவேற்று உபசரித்து, மாறன் அறைக்கு கொண்டு போய் விட்டார். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளை அனைவரும் பார்ப்பதும் நல்லது இல்லையே.

அங்கு மாறன் அலருக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்க, அவளோ அவனிடம் கதை பேசிக் கொண்டே உணவை வாங்கினாள். பார்த்த படி அப்படியே நின்று விட்டார் வைத்தியநாதன்.

மகளை அள்ளிக் கொள்ள தவித்த உணர்வை அடக்கியவர், கண்களில் கண்ணீருடன் கதவில் சாய்ந்து நின்றார்.

“ரெண்டு வாய், ரெண்டு வாய்ன்னு எத்தனை வாய் உள்ளே தள்ளிட்ட நீ?” மாறனிடம் செல்ல சண்டை போட்டு கொண்டிருந்தவள் கதவில் சாய்ந்து நின்றவரை பார்த்து அதிர்ந்து, ஆச்சர்யமாக கூச்சலிட்டாள்.

“ப்பா!” அவளின் சத்தம் உயரவும்,

திரும்பி பார்த்த மாறன், “அலர் மெதுவா பேசுடா” என்று அதட்டி விட்டு மாமனாரை பார்த்தான். அவரின் நிலையில் மாற்றம் இல்லை.

அவளின் வாயை தண்ணீரால் கழுவி, டவலை வைத்து துடைத்தவன் தட்டுடன் எழும்பினான்.

“வாங்க சார்” என்ற அழைப்பில் மெதுவாக மகளின் அருகில் வந்தார்.

“பாப்பா!” குரல் வெளியே வராமல், தொண்டையை செருமியவர் அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.

மாறன் அதிர்ந்து அவரை எழுப்ப முயற்சிக்க, “வேண்டாம் மாறன், இத்தனை வருஷம் அழுத்துற வலியை இப்படி தான் கொட்ட முடியும்” என்று மகளின் கன்னத்தை வருடினார்.

“நல்லா இருக்கியா பாப்பா?”

“நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க? எங்களை காணாம ரொம்ப தவிச்சு போயிட்டீங்களா?” என்றதும் தான் தாமதம் அவளின் கைகளை பிடித்து கதறி விட்டார் அவர்.

“ப்பா! அழாதீங்க” அவளின் கண்கள் கலங்க, மாறனை பார்த்தாள்.

அவனும் எதிர்பார்க்கவில்லை. காலையில் அவனை பார்த்த நொடி கூட இப்படி ஒரு எதிர்வினை இல்லையே. ஆனால் மகளை பார்த்ததும் தன் வயதை மறந்தும் அவளின் காலுக்கு கீழே அமர்ந்து கதறுகிறாரே.

“சார், ரிலாக்ஸ் ஆகுங்க. உங்களை பார்த்து அலர் அழுறா. அவளும் இந்த நேரம் எமோஷனல் ஆக கூடாது” என்று எழுப்ப, உடனே கண்களை துடைத்துக் கொண்டார்.

“சாரி பாப்பா, அப்பா உன்னை பார்த்த சந்தோஷத்தில் கட்டுபடுத்த முடியாம கலங்கிட்டேன். நீ அழாத” என்றார்.

அலர் மாறனை முறைக்க, “உனக்கு என்னடி? அவர் அழுதாலும், சாரி கேட்டாலும் என்னை முறைக்குற. கண்ணை நொண்டிடுவேன்” என்று கூற,

“போ மச்சான்” என முகத்தை திருப்பினாள்.

“அடியே! இப்போ என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?” தந்தையின் தோளில் வாகாக சரிந்துக் கொண்டாள்.

“மச்சான்னு சொன்ன, அப்போ உனக்கு எதுவும் மறக்கலயா?”

“நான் எப்போ மறந்துட்டுன்னு சொன்னேன்? பழசு எல்லாம் ஞாபகம் தான் வந்துச்சு. பாருங்க ப்பா, இவங்க குழம்பிட்டு என்னை குறை சொல்லுறத” என சிணுங்க,

“அதானே, என் பொண்ணு சரியா தான் பேசுறா” என்றார் அவர்.

“ஆமா, உங்க பொண்ணு என்ன பேசினாலும் பண்ணினாலும் உங்களுக்கு சரி தான்” என சலித்தவன், “இன்னும் கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணிக்கோங்க. அடுத்து நான் அவளை கடத்திட்டு போயிடுவேன்” என்றான்.

“எங்க? எங்க போறோம்? நான் எங்கேயும் வர மாட்டேன். இங்க தான் நாம இனி இருக்கணும்” என்று பட படவென பேசியவளை அழுத்தமாக பார்த்தவன் எதுவும் பேசாமல் வெளியேறினான். அவனின் பார்வையில் உறைந்து போனாள் அலர்.

“என்ன பாப்பா இது? உங்களால இங்க இருக்க முடியாதுடா. அவர் தானே உன்னோட வாழ்க்கை. உனக்காக மட்டுமே அவரோட வேலையை கூட கவனிக்காம இத்தனை வருஷம் தனியா மறைஞ்சு வாழ்ந்தார். இப்போது கூட உனக்காக மட்டும் தான் யோசிக்கிறார். உங்களுக்கு இங்க ஆபத்து அதிகம் டா. நான் எவ்ளோ தான் உன் சித்தியை கண்டிச்சாலும், ஜெயிலுக்கு தள்ளினாலும் கூட அவளோட தம்பிகள் சும்மா இருக்க மாட்டாங்க. நீ எல்லாத்தையும் புரிஞ்சிக்கணும் பாப்பா” என்று எடுத்து கூற, அமைதியாக இருந்தாள்.

“என்னடா அப்பா இவ்ளோ சொல்லுறேன், அமைதியா இருக்க”

“நீங்க தனியா இருப்பீங்களே அப்பா, சித்தி உங்களை கவனிக்க மாட்டாங்களே”

“அவளா இதுவரை என்னை பார்த்துகிட்டா? என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் பாப்பா, நீ மாறன் கூட இதுக்கெல்லாம் சண்டை போட கூடாது”

“சரிப்பா” என்றவள் மாறனை எதிர்பார்க்க, அவனோ இரவு தூங்க கூட அவள் இருக்கும் அறைக்கு வரவில்லை. வைத்தியநாதன் சிறிது நேரத்தில் கிளம்பி விட்டார்.

நிகிதா வரவும் “அவர் எங்க நிகிதா?” என்று கேட்டாள்.

“வேலை இருக்குன்னு அந்த வீட்டில் தங்கிக்க போறதா சொன்னாங்க. அதான் நான் உங்க கூட தூங்க வந்தேன்” என்றாள்.

“ஒரு அரை மணி நேரம் கழிச்சு வரியா?”

“ஓ லவ்ஸா! நீங்க பண்ணுங்க”

வெட்கத்தில் முகம் சிவந்தவள், அவள் வெளியே சென்றதும் மாறனுக்கு அழைப்பு விடுத்தாள். இரண்டு முறை துண்டிக்க பட்டு, மூன்றாவது முறை தான் எடுத்தான்.

“என்னாச்சு அலர்?”

“நீங்க வேணும், வர முடியுமா முடியாதா?” எடுத்த உடன் அதை தான் கேட்டாள்.

“உன் அப்பா கிளம்பியாச்சா?”

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு பேசுவதிலேயே அவனின் மனநிலையை அறிந்துக் கொண்டவள், “சாரி மச்சான். உங்க அலர் தானே, மன்னிக்க கூடாதா?” என்று மன்னிப்பு கேட்க,

அந்த பக்கம் அவன் தளர்ந்தான். தொப்பென தரையில் அமர்ந்தவன் “உனக்கு புரியுதா அலர்?” என்று கேட்க,

“அப்போ ஏதோ லூசு தனமா சொல்லிட்டேன். மண்டையில் ரெண்டு தட்டு தட்டி புரிய வைக்குறதை விட்டுட்டு கிளம்பி போய்டுவீங்களா? அப்போ அலர் அவ்ளோ தானா உங்களுக்கு?” அவளின் கோபம் அவளுக்கு தானே தெரியும்.

“உன்னை விட்டுட்டு போற ஐடியா எல்லாம் இல்ல. உன் அப்பா முன்னாடி அடிக்க வேண்டாம்னு தான் கிளம்பிட்டேன். ஒரு விஷயம் புரிஞ்சிக்க அலர், என்னோட வேலை சிபிஐ ல தான். ஆனா இப்போ என்னோட வாழ்வாதாரம் சோலையூர் தான். என் வேலை முடிந்த பிறகு அந்த ஊர் காற்றை சுவாசிச்சா தான் எனக்கு நிம்மதி. நமக்கு மறுஜென்மம் கொடுத்த ஊர் அது. அவ்ளோ சீக்கிரம் விட்டுட்டு போக மாட்டேன். இன்னும் ரெண்டு மாசத்தில் அங்க தான் வாழ போறோம். ரெடியா இரு”

“ரொம்ப நீளமா பேசி போர் அடிக்காத தீரா. இப்போ வர மாட்டியா?”

“இனி வர முடியாது. சமத்து பொண்ணா தூங்குடி, நாளைக்கு காலையில அங்க இருப்பேன்”

“போ மச்சான்” சிணுங்கியவாறே முத்தத்துடன் அழைப்பை துண்டிக்க, முத்த சத்தத்தில் அவன் மொத்தமும் சிலிர்த்தது.

“ராட்சசி பக்கத்தில் இருந்தும், ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சும் சாகடிக்குறா” அப்படியே தரையில் படுத்தவன் அவளுடன் டூயட் பாட ஆரம்பித்து விட்டான்.

அடுத்த நாள் காலையில் அவள் எழும்பும் நேரம் அவனும் வைத்தியநாதனும் அவள் முன் நின்றிருந்தனர்.

“என்னப்பா? ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க” என்றவள் மெதுவாக எழ, மாறன் உதவி செய்தவன் அவளை குளிக்க அனுப்பி விட்டு மாமனார் பக்கம் திரும்பினான்.

“காட்டிக் கொடுக்கவே காலையில் தரிசனம் கொடுக்குறீங்களா?”

“என் பொண்ணை பார்க்க நான் வரேன். உங்களுக்கு எங்க வலிக்குது மருமகனே”

பல்லைக் கடித்தவன் “பின்னாடியே உங்க பொண்டாட்டி வச்சிருக்க அடியாட்கள் வருவாங்க. அப்படியே எங்களையும் மாட்டி விட நல்லா இருக்கும்” என்று கூற,

“என்னை அவ்ளோ ஈசியா ஜட்ஜ் பண்ண கூடாது மாறன். அவனுங்க எல்லாம் இப்போ தன்னோட குடும்பத்தை பார்க்க முடியாம தவிச்சிட்டு இருக்கானுங்க. இதுல இனி என் பொண்டாட்டி பேச்சு வேற கேப்பானுங்களா?” நக்கலாக சிரித்தார்.

“கேடி வேலை பார்க்க உங்களுக்கு சொல்லியா தரணும்?”

“நான் நல்லது பண்ணினாலும் உங்களுக்கு வில்லதனமா தெரிஞ்சா என்னால ஒன்னும் பண்ண முடியாது ஆபீசர்”

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவர், தன் செயலாளர் தயாளனுக்கு அழைப்பு விடுத்தார்.

“நீங்க சொன்னது கன்பார்ம் தானா தயாளன்?”

“நூறு சதவீதம் உண்மை சார், அன்னைக்கு விபத்து நடந்தது உங்க மனைவி சொல்லி இல்ல. நம்ம எதிர்கட்சி தலைவரோட மச்சான் தான் ஆள் வச்சு பண்ணி இருக்கார்”

“அவருக்கு ஒரு பையன் உண்டே. ஸ்வீடன்ல படிக்குறான்ல”

“இல்ல சார், படிச்சு முடிச்சிட்டு பிசினஸ் பண்ணுறான்”

“அச்சோ! அடி பலமோ? உயிர் போயிடுச்சா?” வார்த்தையில் இருந்த பதட்டம் குரலில் சிறிதும் இல்லை.

“ஆமா சார், உயிர் போயிடுச்சு போல” என்றவர் அவர்களின் குறியீடு புரிந்ததாக அழைப்பை துண்டித்தார். மாறன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

“என்னாச்சு மருமகனே?”

“ஒரு உயிர கொல்லுறது அவ்ளோ ஈசியா உங்களுக்கு?”

“நான் எப்போ அப்படி சொன்னேன். எதிர்கட்சி தலைவரோட மச்சான் பையன் ஸ்வீடன்ல விபத்துல இறந்துட்டானாம். அதைத்தான் என் பிஏ கிட்ட கேட்டுட்டு இருந்தேன்” சர்வசாதாரணமாக சொல்லி விட்டு வெளியில் ஹாலில் சென்று அமர்ந்து கொண்டார்.

மாறன் தலையைப் பிடித்த படி கட்டிலில் அமர்ந்து விட்டான். இது தான் வைத்தியநாதனின் ரகசியம். அவர் சொல்லும் முன்பே முடிக்க ஆள், அதை ஒரு தகவலாக அவருக்கு சொல்லும் போது அங்கு சரியாக காரியம் நடந்து முடிந்திருக்கும். அதில் இவர் சம்பந்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இருக்காது. இவரும் இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி, விசாரித்து விட்டு வருவார்.

அவன் தலை வலிக்க, பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன் நைட்டி போட்டு கொண்டு வந்த அலரை பார்த்து மனதை திடமாக்கினான்.

“அழகு கூடிட்டே போகுது டி” என்றவன் அவளுக்கான உணவை ஊட்டி விட,

“மாமனார், மருமகன் ரொம்ப நேரமா என்ன டிஸ்கஸ் பண்ணினீங்க?” என்று உணவை வாங்கினாள்.

“ஒன்னும் இல்ல, உன்னோட அடுத்த செக்கப் பத்தி பேசினோம்” என்றவன் மாத்திரைகளையும் எடுத்துக் கொடுக்க, அதை வாயில் போட்டவள் தண்ணீரை குடித்து விழுங்கி விட்டு அவன் தலையை மெதுவாக பற்றினாள்.

“என்னடி பண்ண போற?”

“உங்களை திருட போறேன்” என்றவள் மெதுவாக அவன் முகம் நோக்கி நிமிர்ந்து, அவனின் உதட்டை கடித்து வைக்க, அவனின் உடல் மொத்தமும் தளர்ந்து அருகில் இருந்த கட்டிலை பற்றிக் கொண்டான்.

அவளிடம் மொத்தமாக தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு நின்றான். அவள் மட்டுமே அவனை திருடினாள். உதட்டில் முத்தமிட்டு அவன் முகத்தை கையில் தாங்கியவள் அவனின் கன்னத்தில் இதழ் ஒற்ற கண்களை மூடி, அதை அனுபவித்தான் மாறன்.

மற்ற கன்னத்திலும் முத்தமிட, கண்களை திறந்தவன் “உருக வைக்குறடி” என்று கூற,

“நீங்க என்கிட்ட தானே உருகி ஆகணும்” என அவனின் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டு, “இப்போ டென்ஷன் குறைஞ்சுதா?” என்றாள்.

“ஹ்ம், ஃபீலிங் பெட்டர்”

“இனியும் வேணும்னா தாராளமா கேட்கலாம்” சிரிக்க,

“எனக்கு இந்த பிட்டு எல்லாம் வேண்டாம். முழுசா வேணும். ஆனாலும் இந்த பிட்டு கூட கொஞ்சம் கிக்கா தான் இருக்குடி” என்றவன் அவளின் தலையை மெதுவாக வருடி நெற்றியில் முத்தமிட்டான்.

“கோடி ரூபாய்க்கு சமம் இந்த ஒரு முத்தம்” என்றவளும், அவனுடன் கரம் கோர்த்து வெளியே வந்தாள். அதை பார்த்த அவளின் தந்தையின் கண்களும் பனித்தது.

 

Asha Evander

Moderator
அத்தியாயம் 17

இரண்டு மாதங்கள் வேகமாக கடந்து விட்டன. அன்று தான் அலர் கடைசி பரிசோதனைக்காக மருத்துவமனை வந்திருந்தாள். மாறன் வழக்கம் போல கைக்குட்டையால் முகத்தை கட்டி மறைத்து தலையில் தொப்பியுடன் வர, அலர் சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மூடி இருந்தாள்.

டாக்டர். ஜெனிலா வேறு ஒரு அறுவைசிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு மீண்டும் வந்திருந்ததால் அவரையே பார்க்கலாம் என்று வந்திருந்தனர். முழு பரிசோதனை முடிந்ததும் மருத்துவர் அவர்களை பார்த்து புன்னகைத்தார்.

“யூ ஆர் பெர்பெக்டலி ஆல்ரைட் மிசஸ் மாறன். நான் குடுக்குற மாத்திரைகளை இன்னும் ரெண்டு மாசம் தொடர்ந்து எடுங்க. ரொம்ப வேலைகளில் அழுத்தம் கொடுக்காதீங்க. மனசை ரிலாக்ஸ் ஆக வைங்க. டென்ஷன் தான் இன்னும் உங்களுக்கு ஆபத்தாக முடியும்” டாக்டர் ஜெனிலா கூற மாறன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அலர் அவனை பார்த்து கண்ணசைக்க, அவனோ அவளை கேட்க சொன்னான். ஜெனிலா இருவரையும் பார்த்து சிரித்த படி, “உங்க குடும்ப வாழ்க்கையை தாராளமா ஆரம்பிக்கலாம். அவங்களை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்” என்று கூற இருவரும் அசடு வழிந்தனர்.

ஜெனிலா எத்தனையோ நோயாளிகளை பார்த்த அனுபவத்தால் கூற, இருவரும் புன்னகையுடன் விடை பெற்றனர்.

வெளியில் வந்து ஜீப்பை கிளப்பும் நேரம் “ஏய்! நீ மாறன் தானே. உன்னை தான் இத்தனை வருஷமா நாங்க தேடிட்டு இருக்கோம்” என்று அவனை பிடிக்க வர, திரும்பி அவனின் மூக்கில் ஒரு குத்து விட்டான் மாறன்.

“நீ என்னை பிடிக்க அலையுறியா? நான் தான்டா உங்களுக்கு நேரம் குறிச்சு வச்சிருக்கேன். ஒருத்தன் அமைதியா போன உடனே உங்க இஷ்டத்துக்கு ஆட்டம் காட்டுவீங்களா?” என மீண்டும் அடிக்க வர,

“சார் விடுங்க அவனை, நாங்க பார்த்துக்குறோம்” என்று ஒருவர் இடையில் வந்தார்.

அவரை முறைத்து பார்த்தான் மாறன். “உங்ககிட்ட நான் ஹெல்ப் கேட்டேனா?”

அலர் மாறனை இறுக பற்றிக் கொண்டாள். “வேண்டாம் தீரா, கிளம்பலாம்”

“நீங்க திட்டினாலும் இது எங்க டியூட்டி” வந்தவர் அவனை பார்த்து சொல்ல,

“இதுவும் அவர் வேலை தானே. நிம்மதியா இருக்க முடியுதா மனுசனுக்கு” என்று புலம்பியவன் அடி வாங்கியவனிடம் திரும்பி, “உன் மேடம்கிட்ட சொல்லி வைடா. திடீர்னு ஆக்சிடென்ட் ஆகி செத்து போயிடுவாங்க. ஆனா காரணமான ஆளு முடிஞ்ச அப்புறம் தான் அப்படியான்னு கேட்டுட்டு வருவார்” என்று கூற, அலைபேசியில் கேட்டு கொண்டிருந்த வைத்தியநாதன் சிரித்தார்.

அவரின் செயலாளர் தயாளன் புரியாமல் பார்க்க, “என் மருமகன் என் பொண்ணை பார்க்காத வரை நல்லா இருந்தார். இப்போ அடிக்கடி லூஸ் டாக் விடுறார்” என்று கூற, தயாளன் சிரித்தார்.

“அவருக்கு அலர் பாப்பா மேல அளவுகடந்த பாசம் சார்”

“அது தான் உண்மை தயாளன். அவளுக்காக மட்டுமே இத்தனை வருஷ வனவாசம் அவருக்கு. இனி தான் எல்லாத்துக்கும் சேர்த்து குடுப்பார், என்னையும் சேர்த்து தான்”

“நீங்க உண்மையை சொல்லலாமே சார்”

“நான் ஏமாந்து போன கதையா தயாளன்? அதை சொல்லி அவமானப்படுறதுக்கு நான் தண்டனை அனுபவிக்கலாம்”

“சார்!”

“அதை விடுங்க, அந்த கே.வி கன்ஸ்ட்ரக்சன் டீலிங் பத்தி விசாரிச்சு வைங்க. அவங்க தான் டெண்டர்க்கு அப்ளை பண்ணி இருக்காங்க. ஆயிரம் வீடு ப்ராஜெக்ட். ஒழுங்கா எல்லாம் நடக்கணும்” என்றவர், மாறன் கிளம்பி விட்டான் என அறிந்து அவனின் பாதுகாப்பிற்கு அனுப்பியிருந்தவருக்கு அழைத்தார்.

“எல்லாம் கிளியரா வினீத்?”

“எஸ் சார், அந்த அடியாள நம்ம கஸ்டடியில் எடுத்துட்டோம்”

“ஓகே வினீத். இன்னும் கொஞ்ச நாள் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. அடுத்து அவங்க ஊருக்கு போனதும் தேவை இல்லை” என்றவர் அழைப்பை துண்டித்தார்.

வீட்டில் முருகாம்பாள் தனது மகளுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து விடுத்து ஓய்ந்தார். அத்தனை அழைப்புகளும் துண்டிக்க பட்டுக் கொண்டே இருந்தது.

“ஜனனி!” பல்லைக் கடித்தவர் கோபம் அனைத்தும் வைத்தியநாதன் மீது தான் திரும்பியது.

“என் பொண்ணையே எனக்கு எதிராக திருப்பி விட்ட உன்னை சும்மா விட மாட்டேன்யா” வாய் விட்டு சொன்னவர் தன் தம்பிகளிடம் தான் புலம்ப முடிந்தது.

சோலையூர் ஊரில் சோலையம்மன் கோவிலில் ஊர்மக்கள் குழுமியிருக்க மாறன் மற்றும் அலரை அனைவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

“உனக்காக பண்ணின வேண்டுதல் எதுவும் வீண் போகல வள்ளி. அந்த சோலையம்மன் உன்னை பத்திரமா திருப்பி குடுத்துட்டா” ஒரு பெண் சொல்ல,

“நீ போய் அம்மனுக்கு நன்றி சொல்லிட்டு வா வள்ளி. நீயும் போ மாறன்” பாட்டி ஒருவர் கூற, இருவரும் மனமார நன்றி கூறினர்.

“எனக்கு என்னோட சந்தோசம், காதல் எல்லாமே திரும்ப குடுத்துட்டீங்க அம்மா. இது எப்போவும் நிலைத்திருக்க நீங்க தான் அருள் புரியணும்” மாறன் கைகூப்பி வேண்ட, அலரும் வேண்டினாள்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த ஊர்த் தலைவர், “உனக்கு குணமாக வேண்டி தான் இந்த முறை திருவிழா செலவை மாறன் ஏத்துகிட்டான் வள்ளி. அவனோட வேண்டுதல் வீண் போகல. எப்போவும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும். சீக்கிரமே பிள்ளை செல்வத்தை கூட அந்த அம்மன் உங்களுக்கு கொடுப்பா” என்றவர் கிளம்ப, மற்றவர்களும் கிளம்பினர்.

வீட்டிற்கு வந்ததும் அவளை கட்டிலில் அமர வைத்தவன், வீட்டை பெருக்கி, துணிகளை எடுத்துக் கொடுத்து விட்டு சமையல் செய்ய சென்றான். போகும் அவனையே இமை கொட்டாமல் பார்த்தாள் அலர்.

“என்னடி பார்வை?” கை வேலை செய்தாலும் ஒரு கண் அவள் மீது வைத்ததால் கேட்டான்.

“நான் ரொம்ப லக்கி தீரா” உணர்ந்து கூறினாள்.

“நான் தான் லக்கி அலர். உன்னை போல ஒரு தேவதை என் வாழ்க்கையில் வரலைன்னா எப்போவும் என் வாழ்க்கை வெறுமையாக தான் இருந்திருக்கும். அதை வசந்தமா மாத்தினதே நீ தான்” புன்னகையுடன் கூற,

“ஆனா இப்போ என்னை எனக்கே பிடிக்கல தீரா. பாருங்களேன் முடி இல்லாம, தலையில் ஆபரேஷன் பண்ணின தையல் தடம் எல்லாம் இருக்குல்ல”

கையில் எடுத்த பாத்திரத்தை கீழே வைத்தவன் அவள் அருகில் வந்து, “அழகு வெளித்தோற்றம் இல்லமா. உன்னோட மனசு தான் அழகு. இந்த முடி இன்னும் கொஞ்ச நாளில் வளர்ந்துடும். அப்போ தையல் தடம் மறைந்துடும். ஆனா உன் மனசும் என் மீதான காதலும் எப்போவும் மாறாதே. அது தான் எனக்கு வேணும்” எனக் கூற,

“லவ் யூ மச்சான், லவ் யூ சோ மச்” என அவனின் உதட்டில் முத்தமிட்டாள்.

“என்னை தூண்டி விடாத பட்டர் பிஸ்கட். அப்புறம் நீ தான் கஷ்டபடணும்”

“உங்க வாயில் இருந்து பட்டர் பிஸ்கட்டுன்னு கூப்பிட வைக்கவே நான் தான் பாடாபட வேண்டி இருக்கு” சலித்து கொள்ள,

“உனக்கு கொழுப்பு அதிகம்டி” என்றவன் மெதுவாக அவளை சரித்து அவள் மேல் படர,

“ரொம்ப லேட் பிக்கப் மச்சான் நீங்க” என மீண்டும் கிளப்பி விட்டாள்.

“அடியே உன்னை!” என்றவன் அவளின் இதழோடு இதழ் தீண்ட, அவனின் பின்னந்தலையை இறுக பற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டாள் அவன் மனைவி.

“நீ ஓகே தானே அலர்?”

“கேட்டுட்டே இருந்தா வேலைக்காகாது மச்சான். ஸ்டார்ட் பிஜிஎம்” என சிரிக்க,

“உன் வாய் இருக்கே” என அதை மீண்டும் கடித்து இழுத்தவன் அவள்
ஆடைகளுக்கும் விடுதலை கொடுத்தான்.

அவன் அவளை தீண்ட தயங்கும் போதெல்லாம் அவனை சீண்டியே அவனின் தேவைக்கும் இடம் வகுத்துக் கொடுத்தாள் அலர்.

அவனே அவளுக்கு ஆடையாக மாற, வெட்கத்தில் அவன் நெஞ்சில் முகத்தை மறைக்க, அதை நிமிர்த்தி அவளின் ஆசைக்கும் தூண்டில் வீசியவன் கடைசியில் அந்த தூண்டிலில் அவனே போய் மாட்டிக் கொண்டான்.

மென்மையான ஒரு கூடல். அவளுக்கு வலிக்குமோ என பார்த்து பார்த்து அவளை எடுத்துக் கொண்டவனின் காதலில் அலர் மதிமயங்கியே விட்டாள்.

“நீங்க ஒழுங்கா காதலிக்கலன்னு சொன்னா இந்த உலகம் கூட நம்பாது தீரா. உங்க காதலில் என்னை மூழ்க வைக்குறீங்க” என்று அவனின் சிகை கோதி கூற,

“நீ ஒத்துகிட்டா சரி தான்” என்று அவளின் மூழ்கியவன் அவன் உயிரணுவை அவளில் சேர்ப்பித்து விட்டே விலகினான்.

“கஷ்டமா இருக்கா டி?”

“இன்னொரு ரவுண்ட் போகலாமா?” அவளின் கேள்வியில் முறைத்து பின் சிரித்தவன், “இன்னும் கொஞ்சம் உடம்பு சரி ஆகட்டும். நீயே வேண்டாம் சொல்லுற அளவுக்கு உன்னை பாடா படுத்துறேன் பாரு” என எழும்பினான்.

“படுங்க தீரா”

“இது பகல் மேடம். சாப்பிட ஏதாவது பண்ணனும்ல. நீ இப்போ ரெஸ்ட் எடு. மிச்சத்தை நைட் தொடரலாம்” என கண்ணடிக்க, தன்னை பார்த்தவள் அவசரமாக போர்வையை தேடினாள்.

“இருந்தா தானே போர்த்துவ?”

“தீரா பிளீஸ்!” அவளின் கெஞ்சலில் ரசனையாக பார்த்தவன் “சாயங்காலம் வனத்துக்கு போகலாம். ரெடியா இரு” என சிரித்து கொண்டே சமையலை கவனிக்க சென்று விட்டான்.

“அய்யயோ அங்கேயா!” வெட்கத்தில் முகம் சிவக்க, எழும்பி உடையை மாற்றினாள்.

வைத்தியநாதன் வீட்டில் முருகாம்பாளை தேட, அவர் தம்பி வீட்டிற்கு சென்று விட்டார். “இவளுக்கு இதே வேலையா போச்சு” என்றவர் ஜனனியின் கணவனுக்கு அழைப்பு விடுத்தார்.

“ஹலோ அங்கிள், எப்படி இருக்கீங்க?” விஷ்வா, ஜனனியின் கணவன் கேட்க,

“நல்லா இருக்கேன் விஷ்வா, ஜனனி கண்டிசன் என்ன?” எனக் கேட்டார்.

“ரொம்ப மோசம் தான் அங்கிள். உங்க கண்காணிப்பில் இருந்தும் அலரை காயப்படுத்த முயற்சி பண்ணி இருக்கா. அது என்னவோ அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே நினைப்பு”

“அது நல்லதா இருந்தா தானே ஆச்சர்யம்”

“நானும் அதனால் தான் கொஞ்சம் ஓவர் டோஸ் குடுத்து படுக்க வச்சிட்டேன் அங்கிள்”

“ஹே என்ன விஷ்வா? உனக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுக்கும் போதே நல்லா கவனிக்கணும்னு சொல்லி தான் குடுத்தேன். அவளுக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாம். இப்போ அலர் கூட நல்லா இருக்கா” என்றார்.

“வாவ்! கிரேட் நியூஸ் அங்கிள். அதுக்காக இவளை நான் பாவம் பார்க்க மாட்டேன். உங்க பொண்ணு இல்ல, என் பொண்டாட்டி அவ. நானே திருத்திக்கிறேன்” என்று கூறி துண்டித்து விட,

“அம்மாவை போல பொண்ணு” என பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

விஷ்வா அவரின் நண்பர் மகன் தான். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜனனியை கவனிக்க சொல்லி இருந்த நண்பரின் மகன். அவனும் அவளும் காதலித்து தான் திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆனால் அது இன்று வரை முருகாம்பாளுக்கே தெரியாது. ஜனனிக்கும் அலர் மீது பெரும் வஞ்சம் உண்டு. தான் மட்டும் தனியாக வாழ, அலர் குடும்பத்துடன் வாழும் பொறாமை. அதனால் இரண்டு முறை அவளை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்து மாட்டிக் கொண்டாள். விஷ்வா ஒரு மருத்துவன். உயிரை காப்பாற்ற துடிக்கும் அவனின் மனைவி ஒரு உயிரை கொல்ல துணிவதா? அதனால் அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆழ்ந்த மயக்கத்திற்கு அனுப்பி விட்டான் சில நாட்களுக்கு மட்டுமே.

மாலை ஆகவும் மாறன் அலரை கூட்டிக் கொண்டு வனத்திற்கு சென்றான்.

“வாவ்! இது என்ன செட்டப்?” என ஒரு குடிலை பார்த்துக் கேட்க,

“இன்னைக்கு நாம இங்க தான்” என்றவன் அதற்குள் அழைத்து சென்றான்.

“அப்போ பக்காவா ரெடி ஆகி தான் வந்திருக்கீங்க?”

“இன்னும் ஒரு வாரத்துக்கு நைட் நாம இங்க தான். கதிரவனை வச்சு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்” என சிரிக்க,

“ஐயோ!” என வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.

அன்றைய இரவுக்கான உணவும் அங்கே இருந்தது. அனைத்தையும் பார்த்தவள் “வெளிச்சத்துக்கு ஒன்னும் இல்லயே” என்று கூற,

“வெளிச்சம் உனக்கு தேவையா என்ன?” அவளின் உடலை ரசனையாக தீண்ட, “தீரா!” என சிணுங்கினாள்.

பல கதைகள் பேசினர். அவளின் அப்பா பாசம், அவர்களின் ஏழு வருட வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என பலதும் பேசி சிரித்து இரவு உணவையும் முடித்து விட்டு பாயில் படுக்கும் நேரம் இதுவரை இல்லாத வெட்க உணர்வு அவளை பிடித்துக் கொண்டது.

“மச்சான்!” மெதுவாக அவனின் கையை சுரண்ட,

“நான் ரொம்ப எதிர்பார்ப்பில் இருக்கேன். இப்போ கேட் போட்டா கடிச்சு வச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று கூற, அவளை அணைக்க,

அதன்பிறகு அவனின் ஆசைக்கும் தடை சொல்லுவாளா என்ன? ஈருடல் ஓர் உயிராக எடுத்தும், கொடுத்தும் இல்லற வாழ்க்கையை அனுபவித்தவர்கள் மீண்டும் மீண்டும் ஆசை எனும் கடலில் மூழ்கி தான் போயினர்.

அவனின் ஆசையும் தீரவில்லை. அவளின் ஆசையும் தீரவில்லை. விடியும் வரை தூங்காமல் மூழ்கி முத்தெடுத்தவன் சூரியன் உதிக்கும் முன் அவளை தூக்கி கொண்டு வீட்டிற்கு நடந்தான். அவர்கள் வீட்டிற்கு பின்னால் தான் வனம் என்பதால் பெரிதாக எவரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை.

ஒரு வாரம் அவர்களின் காதல் வனத்தில் கொண்டாடப்பட, அடுத்த ஒரு மாதத்தில் அவனிடம் நல்ல செய்தியை கூற வந்தவள் அவனின் அலைபேசியில் யூடியூபில் ஒளிபரப்பான செய்தியில் அதிர்ந்து நின்று விட்டாள்.

“தொழில் அமைச்சர் வைத்தியநாதன் சொத்து குவிப்பு, வெளிநாட்டு பண பரிமாற்ற வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிறார். குற்றங்கள் நிரூபிக்க பட்டால் சில வருட சிறைத்தண்டனையுடன் அவரின் சொத்துக்களும் பறிக்க படும்”

செய்தியில் அதிர்ந்து அலைபேசியை எட்டிப் பார்க்க, அவளின் நிழலில் திரும்பி பார்த்த மாறனுக்கும் அதிர்ச்சி.

அந்நேரம் “நம்ம பிளான் சக்சஸ். அமைச்சர் கேஸ் இன்னையோட முடிவுக்கு வர போகுது” என்று வசந்து குறுஞ்செய்தி அனுப்ப, அதையும் பார்த்த அலர் பார்வையில் என்ன இருந்தது என்பதை மாறன் உணரவே முடியவில்லை.

“தேங்க்ஸ் மாறன்” என்றவள் திரும்பி நடக்க,

“அலர் எங்க போற?” என அவளின் கைபிடித்து தடுத்து நிறுத்தினான்.

“என்னோட அப்பா கிட்ட” அவனை தீர்க்கமாக பார்த்தாள்.

“கொன்னுடுவேன், என்னை விட்டுட்டு எங்கேயும் போக முடியாது நீ” என கர்ஜிக்க,

“எதையும் விசாரிக்காமல் முடிவெடுக்கும் உன் கூட வாழுறது அர்த்தம் இல்லாத வாழ்க்கை” என திரும்பி நடந்தாள்.

“ஹே அவர் பண்ணின தப்புக்கு ஆதாரங்கள் இருக்கு. அதையும் விலை கொடுத்து வாங்கிட்டார் உன் அப்பா. என்னை பொறுத்தவரை தப்பு யார் செய்தாலும் தண்டனை உண்டு” என்றான்.

“என் அப்பா நேர்மை இல்லாதவர் தான். ஆனா அடுத்தவன் சொத்துக்கும் பணத்துக்கும் ஆசை படுற ஆள் இல்ல. இந்த அமைச்சர் பதவி கூட அவரை தேடி வந்ததே தவிர அவரா தேடி போனது இல்ல. ஆதாரங்கள் மட்டும் தேடின நீங்க அதோட பின்னணி எதையும் ஆராயாமல் இருந்து இப்போ என் அப்பாக்கு தண்டனை வாங்கி கொடுக்க போறீங்க. தப்பு பண்ணின உங்களுக்கும் தண்டனை வேணும்ல. நான் என் அப்பாகிட்ட போறேன். என் சித்தி என்னை ஒன்னும் பண்ணாம இருக்க என்ன பண்ணனுமோ அதை என் அப்பா பண்ணுவார்” என்றவள் அவன் கையில் ஒரு பொருளை வைத்து விட்டு கிளம்பினாள்.

வெளியேறும் அவளையே வெறித்துப் பார்த்தான் மாறன். அவள் சென்றதும் கையில் இருந்ததை பார்க்க, “அலர்!” என்று அதிர்ச்சியில், சந்தோஷத்தில் கூவினான். ஆனால் அவனின் குரலை கேட்க மறுத்து பஸ் ஏறி விட்டாள் அலர்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 18

அவனின் கையில் அவள் கொடுத்து சென்றது கர்ப்பத்தை உறுதி படுத்தும் சாதனம். அவர்களின் காதலுக்கு கடவுள் கொடுத்த பரிசை அவனிடம் காட்டிக் கொண்டாட வந்தவளுக்கு அவன் கொடுத்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. மாறனுக்கு எங்கேயும் தவறு நடந்து விட்டதோ என்று இப்போது மனம் உறுத்தியது. அவன் விசாரித்த வரை அனைத்திலும் வைத்தியநாதன் பெயர் தான் இருந்தது. அவர் அவனின் விபத்துக்கு காரணம் ஆகி விட்டார் என அவரின் அடி ஆழம் வரை தோண்டியவன், அனைத்து ஆதாரங்களையும் சேகரித்த போது அவர் மட்டுமே அதில் இருந்தார்.

ஆனால் அலர் சொல்லுவதை வைத்து அவனால் உடனடியாக அவரின் மீது நம்பிக்கையை கொண்டு வர முடியவில்லை. கர்ப்பமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர ஒரே வழி, வைத்தியநாதன் பற்றி அவளுக்கு நிரூபிப்பது தான். எனவே ஹரிக்கு அழைத்தான்.

ஹரி அன்று வீட்டில் தான் இருந்தான். எனவே அழைப்பை எடுத்தவன் மாறனின் சந்தேகத்தை கேட்டு குழப்பமடைந்தான்.

“சார், அமைச்சர் இதில் சம்மந்த பட்டிருப்பாரா இல்ல, அவரை உள்ளே தள்ளி விட்டிருக்காங்களான்னு எனக்கே சந்தேகம் வருது. உங்க சைட் நல்லா விசாரிச்சு தானே ஆக்க்ஷன் எடுத்து இருப்பீங்க?”

“எனக்கு வந்த தகவல் படி எல்லாமே அவரோட ஒரிஜினல் கையெழுத்து அண்ட் பத்திரப்பதிவு கூட அவரோட கையெழுத்தோட தான் நடந்து இருக்கு”

“குழப்பமா இருக்கே சார்”

“முருகாம்பாள் இதில் சம்மந்த பட்டிருப்பாங்களோ?” ஹரி கேட்க,

“இருக்கலாம் ஹரி, இப்போ அவங்களும் டார்கெட்ல இருக்காங்களே” என்றவன் பின் அவர்களின் தேடல் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் கேட்டுக் கொண்டான்.

பின் வசந்துக்கு அழைத்து தற்போதைய சந்தேகத்தை கூறி விசாரிக்க சொன்னவன், ஏற்கனவே தகவல் தந்தவனையும் விசாரிக்க சொன்னான்.

அடுத்து கதிருக்கு அழைக்க, “மாறா, வள்ளி பஸ்ல தனியா போறாங்க. என்ன ஆச்சு?” என்று தான் முதலில் கேட்டான்.

“அவங்க அப்பாவை பார்க்க கிளம்பி போனா, நானும் கிளம்பிட்டேன். எனக்கு வயலை நெல் போட்டுட்டு சொல்லு. நான் வந்து கவனிக்கிறேன்” என்று கூறினான்.

“சரி மாறா”

அடுத்து தன் மாமனாருக்கு தான் அழைத்தான்.

“என்ன மருமகனே, என்கிட்ட பேசாம இருக்க முடியலயா?” அவர் நக்கலாக சிரிக்க,

“நேர்ல வந்தேன்னா அமைச்சர்னு கூட பார்க்க மாட்டேன். என் பொண்டாட்டிக்கு உங்க மேல பாசம் கூடி அங்க தான் வந்துட்டு இருக்கா. கர்ப்பமா இருக்கா. பாதுகாப்பு கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு அண்ட் உங்களை நேர்ல வந்து கவனிச்சிக்குறேன்” என திட்டியவன், அடுத்த பேருந்தில் கிளம்பி விட்டான்.

“என் பொழைப்பு ஒரு இடத்தில் ஒழுங்கா இருக்குதா பாரு” என புலம்பிக் கொண்டே தான் சென்றான்.

அவன் அலர் வீடு போய் சேரும் முன், பண்ணை வீட்டிற்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் வைத்தியநாதன்.

அவன் சென்ற நேரம் தந்தையை முறைத்துக் கொண்டு நின்றாள் அலர்.

“உக்காரு பட்டர் பிஸ்கட். உன் அப்பா பாவம்ல, எவ்ளோ நேரம் தான் கெஞ்சுவார்?” சிரிப்புடன் உள்ளே செல்ல இப்போது தந்தையும் மகளும் முறைத்தனர்.

“நான் இல்லப்பா” என்று சரண்டர் ஆனவன் மனைவியை நகர்த்தி ஒரு நாற்காலியில் அமர வைத்தான்.

“கர்ப்பமா இருக்க பொண்ணு ரொம்ப நேரம் நிற்க கூடாது”

“என்ன பிரச்சனை மாறன்?” வைத்தியநாதனுக்கு இருக்கும் பிரச்சனையில் இது வேற சமாளிக்க வேண்டுமா என்ற மலைப்பு இருந்தது.

“உங்க பாச பொண்ணுக்கு நான் உங்க மேல கேஸ் குடுத்து உள்ளே தள்ளினது தெரிஞ்சு போச்சு. அதான் எனக்கு தண்டனை கொடுக்கணும்னு பிரிஞ்சு வந்துட்டாங்களாம்”

அலர் அவனை கண்களால் எரிக்க, “ஒன் மினிட் பட்டர் பிஸ்கட்” என்றவன் மாமனார் பக்கம் திரும்பி, “பத்து நிமிடத்தில் என் ஃப்ரெண்ட்ஸ் வந்துடுவாங்க. நீங்க உண்மையை மட்டும் தான் சொல்லணும். அதுவரை எனக்கும் உங்க பொண்ணுக்குமான நேரம்” என்றவன் நாற்காலியோடு தள்ளிக் கொண்டு உள் அறைக்கு சென்றான்.

வைத்தியநாதன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

“விடுங்க தீரா” அவள் எரிச்சலுடன் கூற,

“உன்னை விடுற ஐடியாவே இல்ல எனக்கு. எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியா கூட இருந்து பழி வாங்கணும். இப்படி தனியா விட்டுட்டு வரகூடாது அலர். இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்” என்றான்.

“எனக்கு உங்க முகத்தை கூட பார்க்க பிடிக்கல”

“பேசாத அலர்” என சீறியவன், “எனக்கு வந்த தகவல் அத்தனையும் உண்மை. எல்லா இடத்துலயும் உன் அப்பா கையெழுத்து தான் இருக்கு. வேற என்ன நான் எதிர்பார்க்கணும்? உங்க வீட்டுக்குள் போய் ஆதாரம் எடுக்குற அளவுக்கு என்ன அதிகாரம் இருக்கு எனக்கு? உன் அப்பாவே குடுத்த சொத்து விவரங்கள் வைத்து தான் நடவடிக்கை எடுத்தோம்” என்று கூற அவனை புரியாமல் பார்த்தாள்.

“உன் அப்பா யாரையோ காப்பாத்த நினைச்சு அவரே மாட்டிகிட்டார். அவ்ளோ தான்”

“எதுக்கு அப்படி செய்யணும்?”

“அதை அவர்கிட்ட கேளு. இப்போ என் பிள்ளையை தொட விடு” என்று மண்டியிட்டு அவளின் வயிற்றில் கை வைத்தான்.

“நாற்பது நாள் தான் ஆகுது”

“ஹ்ம், எனக்கே எனக்கான புது உறவு. நம்ம குழந்தை” வயிற்றில் வருட, அவன் கண்களோ லேசாக கலங்கியது.

“இந்த பிள்ளையும் கூட்டிட்டு நீ போயிட்டா மறுபடியும் நான் அனாதை தான்”

“ம்ப்ச் என்ன வார்த்தை இது?”

“நீ அப்படி தான்டி என்னை விட்டுட்டு போன?”

“நியாயப்படி நான் தான் கோபப்படணும். இங்க எல்லாம் தலை கீழா இருக்கு” என்று சலித்தவள், “ஏதோ கோபத்தில் கிளம்பி வந்துட்டேன். இன்னைக்கே வீட்டுக்கு போகலாம்” என்று சமாதானப்படுத்தினாள்.

“வரணும் நீ” என்றவன் அவள் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டு நிமிர, அவள் மேனி சிலிர்க்க நின்றாள்.

“ஐஸ் வைக்குறீங்க”

“நீ உருகிட்டாலும்” என்றவன் அவளை எழுப்பி ஹாலுக்கு அழைத்து வந்தான். அவனின் மாமனார் அதே நிலையில் தான் இருந்தார்.

“பாவம்லா பார்க்க மாட்டேன். உண்மையை சொல்லுங்க” என்றவன் எதிர் நாற்காலியில் அமர, அலர் தான் இருந்தால் அவர் சொல்ல மாட்டாரோ என்ற தயக்கத்தில் உள்ளே சென்றாள்.

சிறிது நேரத்தில் இளங்கோவும் பிரசாத்தும் வர, வைத்தியநாதன் நிமிர்ந்து அமர்ந்தார். அவர்கள் விடியோ எடுக்க அனைத்தையும் ஏற்பாடு செய்ய, அவரோ மாறனை பார்த்தார்.

“உங்க பொண்ணுக்கு நிம்மதி கொடுக்கணும்னு நினைச்சா உண்மையை சொல்லுங்க”

இத்தனை வருடங்களாக மனதில் அழுத்தி கொண்டிருப்பதை வெளியில் சொன்னால் அவருக்கும் நிம்மதி தான். ஆனால் தான் ஏமாற்றப்பட்டதை ஒருவர் தெரிந்து கொள்வது தான் அவமானமாக நினைத்தார். ஆனாலும் இனியும் அவர்களை விட்டு வைப்பதில் பலன் இல்லை என நினைத்தவர் அனைத்தையும் சொல்ல தொடங்கினார்.

வைத்தியநாதன் கிட்டத்தட்ட இருபத்தியோரு வருடங்களாக ஏமாற்றப்பட்டு வந்தார். அலர் பிறந்த நேரம் அவர் எம்எல்ஏ பதவியில் இருந்தார். அப்போதும் அவர்கள் ஆளுங்கட்சி தான். நேர்மையானவர் என்று சொல்லி விட முடியாது. அவரின் லாபத்திற்காக சில வேலைகள் செய்தாலும் ஒழுக்கமாகவே இருந்தார்.

அவரின் குணத்தை பார்த்தே முருகாம்பாளை அவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தனர். முருகாம்பாள் அவரின் காதலனுடன் வாழ்வது தெரிந்தாலும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் முருகாம்பாளின் தம்பிகள் விநாயகம் மற்றும் வினயன் இருவருக்கும் வைத்தியநாதன் பதவி மேலும் அவர் சொத்துக்கள் மேலும் ஒரு பார்வை இருந்தது.

எனவே அதற்காக அவர்களின் அக்காவை பயன்படுத்திக் கொண்டனர். வைத்தியநாதன் தூங்கும் நேரம் அவருக்கே தெரியாமல் போதை மாத்திரைகளை தண்ணீர் பாட்டிலில் கலக்கி வைத்து விடுவர். வீரியம் குறைந்த மருந்து என்றாலும் சில மணி நேரத்திற்கு அதன் செயல்பாடு இருக்கும். அந்த நேரத்தில் தான் அவர்களுக்கு தேவையான கையெழுத்து, விரல் அடையாளம் என வாங்கிக் கொண்டனர்.

பின் அவர் தொழில் துறை அமைச்சர் ஆனதும் மற்றவர்களை மிரட்டியோ, லஞ்சமாகவோ பணத்தை வாங்கி, சொத்துகளாக மாற்ற ஆரம்பித்தனர். பத்திரப்பதிவு கூட அலுவலர் நேரடியாக அவரின் வீட்டிற்கே வந்து பண்ணி கொடுத்தனர். அதற்கான பணமும் அவர்களுக்கு போய் சேர்ந்தது.

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் மட்டும் தனக்கு எதுவோ நடப்பதை உணர்ந்த வைத்தியநாதன், ஒரு நாள் எதுவும் சாப்பிடாமல் குடிக்காமல் தூங்க முயற்சிக்க, அந்நேரம் அவரின் அறைக்கு வந்தார் முருகாம்பாள். பொதுவாக அவர் கணவனின் அறைக்கு வருவதில்லை.

இந்த நேரத்தில் வருவது சந்தேகத்தை ஏற்படுத்த, தூங்குவதை போல நடித்தவருக்கு அவரின் வாயாலேயே அனைத்து உண்மைகளும் தெரிய வர எரிச்சலும், தன் மீது கோபமும் வந்தது.

இவரின் பெயரை வைத்து அவர்கள் பல கோடி சம்பாதித்து விட்டனர். ஆனால் அனைவரின் மனதிலும் வைத்தியநாதன் அமைச்சர் பதவியை தவறாக உபயோகித்துக் கொண்டார் என்றே பதிய வைத்தனர்.

அதை அறியும் நேரம் காலம் கடந்து விட்டது. அதைவிட அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது. எனவே எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை அவர். கட்சி பொறுப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டு தனக்கு எதிராக வந்த அத்தனை வழக்குகளையும் சமாளித்தார்.

அவர் சொல்லி முடிக்கவும் “இவர் பெரிய தியாக செம்மல், அப்படியே அடுத்தவங்களுக்கு பாவம் பார்க்கிறாராம்” மாறன் கடுகடுக்க, வைத்தியநாதன் சிரித்தார்.

“சிரிக்காதீங்க நீங்க”

“அடுத்த கேஸ் ஹியரிங்ல இதை கொடுத்து என்னை ரிலீஸ் பண்ணிடுவீங்க தானே” சிரித்துக் கொண்டே கேட்க,

“உங்களை!” எனப் பல்லைக் கடித்தவன், “இதெல்லாம் அவங்க தான் பண்ணினாங்கன்னு என்ன ஆதாரம் இருக்கு?” என்று கேட்டான்.

அவன் ஒரு வழக்கில் தவறான முடிவை எடுத்ததை நினைத்து அவனுக்கே கோபம் வந்தது. யார் மீது காட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“அவங்க பண்ணின எல்லாத்துக்கும் இப்போ என்கிட்ட ஆதாரம் இருக்கு. பணம் எல்லாம் ஜனனி பெயரில் இருக்கு. சொத்து என் பெயரில் இல்லை. ஆனா எல்லாம் அவங்க பினாமி பெயரில் இருக்கு. உண்மையை சொல்ல போனா எனக்கு என்னை தவிர பினாமின்னு யாரும் இல்ல” சிரித்தார்.

“இதை எல்லாம் முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல”

“எனக்கு அவமானமாக இருந்தது. அதனால் தான் சொல்லல. இனியும் அவங்களை ஏன் விட்டு வைக்கணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன். நானும் சில தப்பு பண்ணி இருக்கேன். அடிச்சு பிடிச்சு வாங்கலன்னாலும் சில சொத்துக்கள் என் பெயரிலேயே இருக்கு. அதையும் திருப்பி கொடுக்கணும். என் பொண்ணுக்கு பாவம் சேர்க்க வேண்டாம் நான்”

“சரி நான் உங்க ஸ்டேட்மென்ட் கோர்ட்ல குடுக்கிறேன். அமலாக்கதுறையில் கேட்கும் போது உங்க கிட்ட இருக்கும் ஆதாரங்களை கொடுங்க” என்றான் மாறன்.

“சரி” என்றவர் மகளிடம் சொல்லி விட்டு கிளம்ப, “உங்க இரண்டாவது மனைவியை என்ன பண்ணுறதா ஐடியா?” மாறன் கேட்டான்.

“கண்டிப்பா தெரியணுமா?”

“வேண்டவே வேண்டாம். உயிரோட விட்டு வைங்க போதும்” என்றவன் அதிர்ந்து நின்ற மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அடுத்த நாளே வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜராக, வழக்கு வினயன், விநாயகம் பக்கம் திரும்பியது. அவர்கள் அதை எதிர்பார்க்கவே இல்லை.

எதிர்கட்சி என்றாலும் தங்கள் கட்சிக்கு பாதகம் வந்து விட கூடாது என உடனே அவர்களை பதவியை விட்டு தூக்கினர்.

வைத்தியநாதன் சட்டத்துக்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்து வைத்ததால் அந்த சொத்துக்கள் அரசுடமையாக்க பட்டது. அவரின் பதவி தற்காலிகமாக பறிக்க பட்டது. அவரின் பணி சிரத்தை காரணமாக மீண்டும் அவரின் கட்சியில் அவரை சேர்த்துக் கொள்ளவும் வலியுறுத்த பட்டது. இது அனைத்தும் கட்சி முடிவு என்பதால் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டார் வைத்தியநாதன்.

வீட்டில் முருகாம்பாள் கடும் கோபத்தில் இருந்தார். அவருக்கு அரணாக இருந்த தம்பிகள் இருவரும் இப்போது வழக்கு விசாரணையில் இருப்பதால் கணவனையும் அலரையும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவர் தன் ஆட்களை கூப்பிட அவர்களோ தங்கள் குடும்பத்தையே சமாளிக்க முடியாமல் திணற, இவரின் அழைப்பை எடுக்கவில்லை.

“சரியான பயந்தாகொள்ளி பசங்க” எரிச்சலுடன் ஒருவனுக்கு அழைத்து பேச, அவன் ஒத்துக் கொண்டான்.

வைத்தியநாதன் இவரின் அனைத்து செயல்பாடுகளையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் ஒன்றும் தடுக்கவில்லை.

மாறன் அன்று வயலில் வேலை செய்து கொண்டிருக்க, “மச்சான்” என்றழைத்தவாறே தனது ஏழு மாத மேடிட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு வயல் வரப்பில் நடந்து வந்தாள் அலர்.

“அலர்!” கண்டிப்பான பார்வையை செலுத்தியவன், வேகமாக அவள் அருகில் சென்றான்.

“சொன்னா கேக்குற பழக்கம் இல்லவே இல்ல உனக்கு” கடிந்துக் கொள்ள,

“தெரிஞ்சும் அதை தானே பண்ணுறீங்க” என புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

“பாரு எவ்ளோ வேர்த்து இருக்குன்னு. இங்க வந்து உட்காரு” என்றவன் மாமரத்து நிழலில் கட்டிலில் அமர வைத்தான்.

அவன் கரங்களை பற்றி மெதுவாக அமர்ந்தவள், “நாளைக்கு எப்போ ஆபீஸ் போகணும்?” என கேட்டாள்.

“காலையில் கேஸ் விஷயமா ஒருத்தரை பார்க்க போகணும். ராத்திரி வந்துடுவேன். நீ பத்திரமா இரு, துணைக்கு பாட்டியை கூப்பிட்டு வச்சுக்கோ. எதுவும் வலிச்சா கதிர்கிட்ட காருக்கு சொல்லி இருக்கேன். கூட்டிகிட்டு போவான்”

“சரி, சரி இன்னும் மாசம் இருக்கு. எதுவும் பிரச்சனை இல்ல” என்றவள் அவன் தோளில் சாய்ந்தாள்.

அவளின் தாலியை மெதுவாக வெளியில் எடுத்தவன் அதில் பொருத்தியிருந்த ஜிபிஎஸ் கருவியை தடவி பார்த்தான். அலர் ஒரு பெருமூச்சுடன் அவனை நோக்கினாள்.

“சித்தி அப்படி பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல மச்சான்” அன்றைய நினைவில் இப்போதும் உடல் நடுங்கியது.

அவள் மூன்று மாத கர்ப்பமாக இருக்கும் போது தந்தையை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தாள். பொதுவாக வைத்தியநாதன் பண்ணை வீட்டில் வைத்து தான் அவளை சந்திப்பார். ஆனால் அன்று அவர்களின் பழைய வீட்டிற்கு அவள் வந்த நேரம் எங்கிருந்தோ ஒரு கத்தி அவளை நோக்கி பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் குனிந்து தப்பித்து கொண்டாள்.

நிமிர்ந்து பார்க்க அவள் முன் பெரிய உடலுடன் ஒரு ஆணும் முருகாம்பாகளும் நின்றிருந்தனர்.

“சித்தி!” அவள் அதிர்ச்சியாக,

“உன்னை எனக்கு பார்க்கவே பிடிக்கலடி. உன்னால தான் என் காதலை, என் பெண்ணை, எங்க வாழ்க்கையை இழந்தோம். எங்களுக்கு கிடைக்காத வாழ்க்கை உனக்கு கிடைக்க கூடாதுன்னு தான் உன் கல்யாணம் அன்னைக்கே கொலை பண்ண நினைச்சோம். ஆனா அதுக்கு முன்னாடி எவனோ முந்திகிட்டான். ஆனாலும் நீங்க உயிரோட இருப்பீங்கன்னு நம்பிக்கையில் கொலை பண்ண இத்தனை வருஷமா தேடினேன். கண்டுபிடிச்ச பிறகும் உன்னை கொல்ல முடியல. ஆனா இப்போ நீயா வந்து மாட்டிகிட்ட” என்றவர் அருகில் நின்றவனின் கையில் இருந்த கத்தியை வாங்கி குத்த போகும் நேரம்,

“அம்மா!” என்ற அலரின் கதறலில் வேகமாக அவளை தன்னை நோக்கி இழுத்தார் வைத்தியநாதன்.

“தனியா எதுக்கு வந்த பாப்பா?” கடிந்து கொண்டவர், மனைவியை பார்த்து முறைக்க அவரின் பின்னால் இரண்டு காவலர்கள் வந்தனர்.

அமைச்சர் வீட்டில் அத்தனை பாதுகாப்பு இருந்தாலும் முருகாம்பாள் விட்டாள் எனும் போர்வையில் இதுவரை தப்பித்து வந்தார்.

“அரெஸ்ட் பண்ணுங்க இவங்க ரெண்டு பேரையும்” என்றவர் அருகில் நின்ற ஆணை பார்த்து,

“இத்தனை வருஷம் வெளிநாட்டு ஜெயில் நல்லா இல்லன்னு இந்தியா ஜெயில்ல இருக்க ஆசைபட்டிருக்க போல முத்தரசு. உன்னை நான் இங்க கூட்டிட்டு வந்ததும் அவளுக்கு உன்னை அடையாளம் காட்டினதும் இனியாவது நல்லா வாழுவீங்கன்னு தான். ஆனா நீங்க எப்போவும் மாற மாட்டீங்கன்னு தெளிவா காட்டிடீங்க. இனி ஜோடியா ஜெயிலுக்கு போங்க” என்றவர் காவலர்களுக்கு கண்காட்டி விட்டு மகளை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.

முருகாம்பாள் கெஞ்சி, கதறியும் ஒரு பலனும் இல்லாமல் போயிற்று. தகவல் அறிந்து வந்த மாறன் அவரை அடிக்கவே போய் விட்டான். அவனை தடுத்து நிறுத்துவதே பெரும் பாடாகி போனது.

அடுத்து தனியாக வந்ததற்கு அலர் மற்றும் தனியாக அனுப்பியதுக்கு மாறன் என தனியாக வைத்தியநாதனிடம் வாங்கி கட்டினர். அன்றைய ஊடகமே இவர்களை வைத்து தான் பொழுது போக்கியது. மாறன் அன்றே அவளின் தாலியில் ஜிபிஎஸ் பொருத்தி விட்டான்.

அனைத்தையும் நினைத்து பார்த்தவன் மனைவியை பார்க்க, அவளோ பேசியே அவன் தோளில் தூங்கி விட்டிருந்தாள். மெதுவாக அவளை சரித்து படுக்க வைத்தவன், பக்கத்தில் இருந்த வேலைகளை கவனித்தான்.
 
Status
Not open for further replies.
Top