எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 2

Lufa Novels

Moderator

சக்கரை தழுவிய நொடியல்லவா!

அத்தியாயம் 2

வருடம் 1994

பூபாலன், எழிலரசிக்கு திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பூபாலனின் பெற்றோர் இறந்துவிட, வயசுப்பெண்ணாய் நின்ற ஈகைச்செல்விக்கு தாயும், தகப்பனுமாய் ஆயினர் பூபாலனும், அவர் மனைவி எழிலும். அவர்கள் தான் முன்னே இருந்து ஈகைச்செல்விக்கும் அன்பழகனுக்கும் திருமணம் முடித்து வைத்தனர்.

அன்பழகனும் ஈகைசெல்வியை ராணி போலப் பார்த்துக்கொண்டார். ஈகையின் மாமியார் வைரமும் மருமகளை அவர் மகளாகத்தான் தாங்கினார். அது அன்பழகனின் தங்கை ஆனந்திக்கு பொறாமையை கிளப்பிவிட்டது. தங்களது வீட்டில் அவளை அவ்வாறு கவுரப்படுத்தவில்லையேயென.

தான் கர்ப்பமாக இருப்பதால் தாய்வீட்டிலிருந்த ஆனந்தி, தன்னால் ஆனமட்டும் ஈகையை படுத்திஎடுத்தாள். கர்ப்பத்தை காரணம் காட்டி அவளின் வேலைகள் அனைத்தையும் ஈகையைக் கொண்டே முடித்துக்கொள்வாள் அந்த அளவுக்குச் சோம்பேறி. அவளின் சோம்பேறித் தனத்தால் தான் தன் புகுந்த வீட்டில் தனக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பதை உணராமல் போனாள்.

அவளுக்குக் குழந்தை பிறப்பதற்கு முன்பே ஈகையும் கர்ப்பமாகிவிட, ஒரே வீட்டில் இரு கர்ப்பவதிகள் இருக்க வேண்டாமென ஈகையை அவளின் அண்ணன் பூபாலன் வீட்டிற்கு அனுப்ப, அவளுக்கு அங்க இராஜ உபசரிப்பு தான். தங்களுக்கு தான் கடவுள் அந்தப் பாக்கியத்தை தரவில்லை, அதனால் ஈகையை அவர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

1995 ம் வருடம் ஆனந்தியும், ஈகையும் ஆறுமாத இடைவெளியில் ஆளுக்கொரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தனர். ஆனந்தியின் மகன் சித்தார்த், ஈகையின் மகன் அஸ்வந்த் இருவரும் ஒரே வீட்டில் வளர ஆரம்பித்தனர். ஆம்! ஈகை குழந்தையுடன் புகுந்த வீடு திரும்பிய பின்னரும், ஆனந்தி புகுந்தவீடு திரும்பவில்லை. ஆனந்திக்கு மாமனார் மட்டுமே மாமியார் இல்லை, அதனால் சித்தார்த்தை தனியாகக் கையாள முடியாது என மறுத்து இங்கே தான் தங்கினாள்.

இரு குழந்தைகளும் ஒரு வருடம் ஒன்றாக வளர்ந்தனர். இனியும் தாய்வீட்டில் இருக்க ஆனந்தியின் கணவர் இளங்கோ அனுமதிக்காததால், மனமேயின்றி சித்தார்த்துடன் அவளுடைய வீட்டிற்கு கிளம்பினாள் ஆனந்தி. ஆனாலும் சித்தார்த்தை பெரும்பான்மையான நேரம் வைரமும், ஈகையுமே வைத்துக்கொள்வார்கள்.

அந்நேரம் தான் இத்தனை வருடம் குழந்தை இல்லாமல் இருந்த எழிலரசி கர்ப்பமாக இருக்க, அவருக்குத் துணையாக ஈகை அண்ணனின் வீட்டில் தங்கினார். தனக்கு தாயாய் இருந்த எழிலுக்கு தாயாய் மாறிச் சேவை செய்தாள் ஈகைச்செல்வி.

வைரம் தான் அனைத்து பக்குவங்களையும் இளைவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது. ஒற்றை பெரிய மனுஷியாக இருந்து அந்த வீட்டில் நல்லது, கெட்டது சொல்லிக்கொடுத்து வழிநடத்தி வந்தார் வைரம் பாட்டி. நாட்கள் மாதங்களாகக் கடந்து 1997ம் வருடம் எழிலுக்கு அழகான பெண்ணரசியாய் பிறந்தாள் அகிலா. அவள் பிறந்ததிலிருந்து அவள் தான் அஸ்வந்துக்கு விளையாட்டுப் பொம்மை.

அஸ்வந்த் “சித்து என் பாப்பாவ பாரு பொம்மைபோல இருக்கா” எனச் சொல்லிச் சொல்லி மகிழ்வான். சித்தார்த்துக்கும் அகிலாவை பிடிக்கும் ஆனால் அவன் குழந்தை அருகில் சென்றாலே அஸ்வந்த் சண்டைக்கு வருவான் “இது என் பாப்பா.. இது என் பாப்பானு”

இவனும் அவனுக்குச் சலைக்காமல் “அகிலா எனக்கும் தான் பாப்பா” என மல்லுக்கட்ட, வைரமோ “போங்கடா இது எழிலோட பாப்பா.. உங்களுக்குப் பாப்பா வேணும்னா உங்க அம்மாட்ட போய்க் கேளுங்க” என விளையாட்டுபோலக் கூற அன்றிலிருந்து சித்தார்த் ஆனந்தியிடம் “பாப்பா வேணும்” எனத் தினமும் அடம்பிடிக்க ஆரம்பித்தான்.

அஸ்வந்துக்கு அகிலாவே போதுமானவளாக ஆகிவிட்டாள். சித்தார்த்தின் தொடர் அழுகைக்கு கடவுளும் செவி சாய்க்க அடுத்த 10 மாதத்தில் 1998ம் ஆண்டு சித்தார்த்துக்கு அழகிய தங்கையாய் கிடைத்தாள் சிந்து.

சிந்து பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் எழில் கர்பமாக, 1999ம் ஆண்டு அவர்களுக்குப் பிறந்தவன் தான் ஆதவன். சித்தார்த் சிந்துவிடம் விளையாட, அகிலா ஆதவனுடன் ஒன்றிவிட தனித்து விடப்பட்டான் அஸ்வந்த். அவன் தனிமையை போக்க கடவுள் நினைத்து விட்டார் போலும் ஈகைக்குள் உருவானாள் மதுதாரா.

ஆனால் உருவான நாள் முதல் ஈகையை படுத்தி எடுத்துவிட்டாள். கர்ப்பகால சர்க்கரை நோயால் அவதியுற, சர்க்கரை காரணமாக இரத்தக்கொதிப்பும் சேர்ந்து கூடவே தைராய்டும். ஏகப்பட்ட பிரச்சனை. எழிலாலும் தன் இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஈகையை கவனிக்க முடியாத நிலை. அதனால் வைரமே அவர்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டார்.

ஈகைக்கு ஒன்பது மாதம் இருக்கும், அப்போது தான் ஆசிரியரக இருந்த அன்பழகனுக்கு வேலை தொடர்பாகப் பெங்களூர் செல்ல வேண்டிய கட்டாயம். ஈகையிடமும், வைரமிடமும் பல பத்திரங்களைச் சொல்லிச் சென்றார். பூபாலன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிய பிறகே சென்றார்.

அன்று இரவு வீட்டில் கூடத்தில் வைரம் இரு பேரன்களுடனும் படுத்திருக்க, ஈகை அவர்கள் அறையில் கட்டிலில் படுத்திருந்தாள். பூபாலன் அவர் வீட்டுக்கு அழைத்தும் செல்லவில்லை அவரின் அருமை தங்கை. தன் வீட்டிலேயெ தங்கிவிட்டாள்.

பூபாலன் வீடும் தூரமில்லை. தெருவின் தொடக்கத்தில் பூபாலன் வீடு, மத்தியில் அன்பழகன் வீடு, கடைசியில் ஆனந்தி வீடு. ஆக மூணு வீடும் ஒரே தெருவில் தான். அதனால் தான் தைரியமாகச் சென்றார் அன்பழகன். அறையில் படுத்திருந்த ஈகைக்கு அன்றிரவே வலி வந்துவிட்டது.

“அத்தை! அத்தை” என வலியால் வைரத்தை அழைக்க, அவரோ மாத்திரைகளின் உபயத்தால் நல்ல உறக்கத்தில் இருந்தார். முதலில் விழித்தது என்னவோ ஐந்து வயதான சித்தார்த் தான். அவன் தான்,

“அம்மாச்சி! அம்மாச்சி அத்தை அழறாங்க எந்திரி” என வைரத்தை அடித்து எழுப்பினான்.

அவன் அடித்த பிறகே வைரம் எழ, ஈகைக்கு வலி விட்டு விட்டு வர ஆரம்பித்தது. அவருக்கோ ஒன்றும் ஓட வில்லை.

“அத்தைய பார்த்துக்கோ. இந்தா வாரேன்” என வீட்டை விட்டு வெளியேறிப் பூபாலனை அழைக்கச் செல்ல, சித்தார்த் அஸ்வந்தையும் எழுப்பியிருந்தான். ஐந்து வயதான அஸ்வந்த் ஈகை அழுவதை பார்த்துக் கூடவே அழ, அஸ்வந்தை சமாதானம் செய்தான் சித்தார்த். ஏற்கனவே அவனுக்கு முன் அனுபவம் அவன் தங்கை பிறக்கும்போது இருந்ததால்.

“அழாத அஸூ சிந்து மாதிரிக் குட்டி பாப்பா வரப் போகுது. அழாத” எனகூறி சமாதப்படுத்த, பூபாலன் ஆட்டோவோடு வந்துவிட அனைவரும் மருத்துவமனை சென்றனர்.

பூபாலன் ஆட்டோவில் முதலில் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் மனைவியை அழைக்க வீட்டிற்கு சென்றார். இவர்கள் தான் பதட்டத்தில் எதுவுமே எடுத்து வரவில்லையே! அவர் எழிலை அழைக்கச் சென்றார்.

நடுநிசி நேரம் நிசப்தமான இரவில் பாட்டியுடன் அஸ்வந்த்தும், சித்தார்த்தும் வெளியே நிற்க, அந்த மருத்துவமனை முழுவதும் ஒலித்தது ஈகைச்செல்வியின் அழுகை சத்தம். அதைக்கேட்டு பயந்து நடுங்கிய அஸ்வந்த்க்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான் சித்தார்த்.

2000ஆம் ஆண்டு பிறக்க, வானில் வெடிசத்தம் நடுநிசியின் நிசப்தத்தை உடைக்க, தான் தாயின் அழுகை சத்தத்தையும் மீறி மகளின் அழுகை சத்தம் இவர்களின் காதில் ஒலிக்க, சித்தார்த்தின் மயிற்கால்கள் கூசிநின்றது. சிறிது நேரத்தில் செவிலியர் குழந்தையைக் கொண்டுவர வைரம் பாட்டிக்குக் கணவர் இல்லாமல் இருப்பதால் குழந்தையை முதலில் அவர் கைகளில் வாங்க மனம் இல்லாமல் அஸ்வந்திடம் தரக்கூறினார். என்ன தான் பெரியவராக இருந்தாலும் மூடநம்பிக்கையை அவர் விடவில்லை போலும்.

அஸ்வந்தோ தாயின் அழுகையில் பயந்திருந்தவன் தங்கையைக் கையில் வாங்க பயந்து ஒதுங்க, ஐந்து வயது சிறுவனான சித்தார்த் தான் முதலில் மதுதாராவை கையில் ஏந்தினான். அவனுக்குத் துணையாகப் பிடித்திருந்தார் வைரம்.

குழந்தையைத் தன் கையில் ஏந்திய நொடி அந்த ரோஜா வண்ண மொட்டின் அழகில் மயங்கித் தான் நின்றான் சித்தார்த். அவ்வளவு நேரம் அழுத குழந்தை, அவனைப் பார்த்துச் சிரிக்க, அந்தச் சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது. முதன் முதலாக ஒரு குழந்தையைக் கையில் வாங்கிய தருணம் அந்தச் சிறுவன் மனதில் அவள் தன்னவள், தனக்கான பொம்மை என்ற எண்ணம் மனதில் வேர் விட்டு வளர்ந்தது.

அவளை அருகிலேயே இருந்து தொட்டு தொட்டு பார்ப்பான். அவன் வீட்டிற்கே செல்ல மறுத்து, இங்கேயே தங்கிவிட்டான். ஆனந்தியோ சிந்துவை சமாளிப்பதே பெருசு எனச் சித்தார்த் பொறுப்பை அவள் பிறந்த வீட்டினரிடமே விட்டுவிட்டாள்.

பள்ளி முடிந்து வந்ததிலிருந்து மதுதாரா அவன்வசம் தான். அவளுடனேயே தான் இருப்பான். அவள் குப்புற கவிழும் போதும் கூட அவன் தான் முதலில் பார்த்தது. அவளுக்குத் தவழப் பழக்கினது, அமரப் பழக்கினது, நிற்கப் பழக்கினது, நடக்க பழக்கினது அனைத்தும் அவன் தான். ஏன் அவளுக்கு இனிப்பு மிட்டாய்களை பழக்கியது கூட அவன் தான். அவளும் அவன் கையைப் பிடித்தே இந்த உலகத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.

பள்ளியில் கூட அனைத்து குழந்தைகளும் ஒரே பள்ளி தான். அனைவரும் ஒன்றாக வளர்ந்தாலும் சித்தார்த்துக்கு அவனின் தாரா என்னைக்குமே ஒரு படி மேல தான். அச்சிறு வயதில் கூடத் தனக்கு கிடைக்கும் மிட்டாய்களை எல்லாம் அவன் தாராவுக்குத் தான் தருவான் அதில் அவன் தங்கை சிந்துக்கு கூடப் பொறாமை வரும். அது பிற்காலத்தில் வன்மமாக மாறுமென அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

ஆனால் மதுதாராவுக்கோவோ அவளுக்குக் கிடைக்கும் பொருளை அவள் பங்கீட்டு கொடுப்பத்கற்கும் ஆள் இருந்தது. ஆம் தனக்கு கிடைப்பதை தன்னுடனே இருக்கும் தன் நண்பனான ஆதவனுடன் அவள் பங்கீட்டுக் கொள்வாள். சித்தார்த்தும், அஸ்வஸ்ந்தும் மதுதாராவை குழந்தையாக நினைத்து நினைத்துப் பொத்தி பொத்தி பாதுகாத்தால் அவளுக்கு அத்தனை சேட்டைகளையும் சொல்லிக் கொடுத்து அவளுடைய வால் தனத்தை அதிகரித்தது ஆதவன்.

ஆதவனும், மதுதாராவும் ஒரு இடத்தில் இருந்தால் அவ்விடத்தில் இரணகளத்துக்கு குறைவிருக்காது. சுருங்க சொன்னால் இரண்டும் ஜாடிக்கு ஏத்த மூடி, வாலில்லா குரங்குகள். ஆதவன் இல்லா நாள் மதுதாராவுக்கு ஆரம்பமானதில்லை அவன் இல்லாமல் முடிந்ததுமில்லை. இருவரும் ஒரே வகுப்பில் படிப்பதால் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்போலத் தான் இருப்பார்கள்.

சிறு இடைவெளி கிடைத்தாலும் சித்தார்த் பறந்து வந்துவிடுவான் அவன் தாராவைக் காண. அவளுக்குச் சிற்றுண்டி வாங்கி கொடுப்பதிலிருந்து, ஏன் இயற்கை அழைப்பைக் கூட அவன் தான் சரியான நேரத்துக்குச் செய்யப் பழக்கப் படுத்துகிறான். ஆதவனையும் கவனித்துக் கொண்டாலும் அவனுக்கு தாரா தான் எல்லாமே.

பள்ளியில் அஸ்வந்த் கூட மதுவைப் பார்க்க வரமாட்டான் அவன் அவன் தோழர்கள் கூடவே பழக, சித்தார்த்தின் தோழன், தோழி அனைத்தும் அவன் தாரா தான். தாராவுடன் கூடவே இருக்கும் ஆதவனும் அவனுக்குப் பிடித்தமே!

சித்தார்த்தோட அன்பு ஒரு வகை என்றால், ஆதவனோட அன்பு ஒருவகை. இதில் எந்த அன்பில் அவள் காலம் முழுக்க சிக்கபோகிறார்? எந்த அன்பை கோபமாக மாற்றப் போகிறாள்?
 
Saranyakumar

Active member
சித்தார்த் மதுமீது அன்பாகத்தான் இருந்திருக்கிறான் பின் ஏன் கல்யாணம் நின்றது? மது மனசில் என்ன நினைக்கிறா?
 
Lufa Novels

Moderator
சித்தார்த் மதுமீது அன்பாகத்தான் இருந்திருக்கிறான் பின் ஏன் கல்யாணம் நின்றது? மது மனசில் என்ன நினைக்கிறா?
ஆமா சிஸ் சித்தார்த்து மது மேல அவ்வளவு அன்பு.. இந்த மது என்ன குட்டைய குழப்ப போறாளோ!

Thank you so much sis
 
admin

Administrator
Staff member

நிஜமா ஸ்டோரி சூப்பர் move டா
 
Mathykarthy

Well-known member
சித் தான் ஹீரோ வா 🤩🤩🤩🤩🤩

சித் சின்ன வயசுலயே மது மேல நிறைய அன்பு வச்சிருக்கான் 🤗🤗🤗

ஆதவ் நல்ல நண்பன் 😍

சித்தார்த்தோட அம்மாவும் தங்கச்சியும் தான் சதி பண்ணி பிரிச்சுருக்காங்க 😤😤😤😤
 
Lufa Novels

Moderator
சித் தான் ஹீரோ வா 🤩🤩🤩🤩🤩

சித் சின்ன வயசுலயே மது மேல நிறைய அன்பு வச்சிருக்கான் 🤗🤗🤗

ஆதவ் நல்ல நண்பன் 😍

சித்தார்த்தோட அம்மாவும் தங்கச்சியும் தான் சதி பண்ணி பிரிச்சுருக்காங்க 😤😤😤😤
Aama sis. Thank you so much🥰
 
Top