அத்தியாயம் 4
பதினைந்து நிமிடங்களாக தன் டிரேட்மில்லில் அதி வேகத்தில் ஓடி கொண்டு இருந்தான். அவனின் நாசிகள் சிவந்து, மேனி முழுவதும் அக்னி ஜிவாலையாய் கொதித்து, கண்கள் அனலை கக்கி கொண்டு இருந்தது. ஏதோ உடையும் சத்தம் கேட்டு தன் ப்ரத்யக உடற்பயிற்சியறையை விட்டு வெளியே வந்து பார்த்தவனின் கண்களில் விழந்தது என்னவோ அவனின் தந்தை அவனை கருவில் சுமந்தவளை ஏசிக்கொண்டிருக்கும் காட்சி தான். இந்த காட்சிகளை எல்லாம் பார்க்க கூடாது என்பதற்காகவே அவன் எட்டு ஆண்டுகளாக இந்த மண்ணில் கால் வைக்காமல் இருந்தான்.
'ராம்', என்ற சாந்தமான அழைப்பு அவனை நிதர்சனத்திற்கு கொண்டு வந்திருந்தது. இவ்வளவு நேரம் நெருப்பாய் தகித்து கொண்டு இருந்தவன், பனியாய் உருகிவிட்டான் அந்த ஒற்றை அழைப்பில்! டிரேட் மில்லை நிறுத்தி விட்டு அதில் இருந்து கீழே இறங்கி தன் அன்னையை பார்த்தான். "என்ன உங்க மாமியார் சொல்லி அனுப்புனாங்களா?", என்று கனிவுடன் அதே சமயத்தில் அழுத்தமாக கேட்டான். அவன் தான் பாட்டி தன்னை பார்த்து விட்டதை கவனித்து விட்டானே! அவர் தான் தாயிடம் சொல்லி தன்னை சமாதானம் செய்ய அனுப்பி இருப்பார் என்று யூகித்து கொண்டான்.
"உங்க அப்பா மாறியே உனக்கும் மூக்குக்கு மேல கோவம் வருதுடா', என்ற தன் அன்னையின் கூற்றில் மறுபடியும் கண்கள் சிவந்தன. அவனை ஈன்றவருக்கே அது கிலியை உண்டாக்க அவனின் மனநிலையை மாற்ற முயன்றார். 'சரி.. சரி... உன்ன உன் அப்பா கூட சேத்து வெச்சி பேசல. என் பெரிய மகன் கிட்ட பேசுனியா டா?", என்று கண்களில் நீர் தழும்ப கேட்டார்.
அவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து இல்லை என்று இருபக்கமும் தலை அசைத்தான். "இன்னைக்கு பேசுறேன் அம்மா", என்று நிறுத்தி கொண்டான். "என்ன இன்னைக்கு உன் ஸ்வீட் ஹார்ட்ட பாக்க போற போல?', என்று புன்முறுவலுடன் கேட்டார். "ஆமா இன்னைக்கு போய் பாக்கணும் இல்லனா என்னை வெச்சி செஞ்சிருவா", என்று தன் தலையை கோதிக்கொண்டான்.
"என்னை விட அவளைத்தான் புடிக்கும்ல?", என்று சற்று பொறாமையுடன் கேட்டார். அன்னையை பற்றி அறிந்தவன் அவன், கொஞ்சம் சீண்டி பார்க்க விரும்பினான். "ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?', என்று ஒரு பக்க புருவத்தை உயர்த்தி தன் இதழ் ஓரத்தில் மெல்லிய நக்கல் ததும்பும் புன்னகையோடு அவரை வினவினான்.
அதில் சற்று கடுப்பானவர், 'இதுக்கு தான் என் ஆரு வேணும்னு சொல்றது. அவன் கிட்ட இருந்து கத்துக்க, எப்படி மென்மையா இருக்கணும்னு", என்று கழுத்தை நொடித்து கொண்டார். "யாரு... நான்... அவன் கிட்ட இருந்து... கத்துக்கணுமா? சரி தான்', என்று தன் தாயை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தான்.
"என் உன் அண்ணண் தான?", என்று அவர் பதில் கொடுக்க, "அம்மா ப்ளீஸ் என்ன வேணா சொல்லுங்க அண்ணனு மட்டும் சொல்லாதீங்க, ஒரு வருஷம் எனக்கு முன்னாடி பொறந்துட்டா அண்ணனா?", என்று கத்தி விட்டான்.
கொற்றவை சத்தமாக சிரித்து விட்டு, "இன்னும் சின்ன பசங்க மாறியே இருக்கீங்க", என்று தன் தனையனின் தலையை வருட, "என் கிட்ட இவளோ பேசுறீங்க அந்த ஆள் கிட்ட பேசலாம்ல?", என்று சற்றே குரலை உயர்த்தி கேட்டான்.
"அறைஞ்சேன்னா பாரு, என்னடா ஆள் கீல்னு ஓழுங்க மரியாதையா அப்பானு கூப்டு இல்ல இந்த கொற்றவை காளியா மாறிடுவா", என்று அவரும் சீற, "இந்த பேச்சுலாம் என்கிட்ட வரைக்கும் தான், அங்க மிஸ்டர் ருத்ர தேவன பாத்தா ஒரு வார்த்தை சேத்து பேச முடியல", என்று முணுமுணுத்தது அவர் காதிலும் விழுந்தது.
"சரி போய் ரெடி ஆகிட்டு வா, உனக்கு புடிச்ச ரவா கிச்சடி தேங்கா சட்னி செஞ்சி வெச்சிருக்கா உன் மம்மி", என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கொற்றவை சென்ற திசையை பார்த்தவன், தன் அன்னையை நினைத்து நெஞ்சில் இருந்து குருதி வடிந்தது. எல்லாரிடமும் அன்பாக அரவணைப்பாக பேசும் அன்னை, தந்தை என்று வந்தால் மட்டும் நடுங்குவது ஏன் என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவனின் சிந்தனைகளை கலைத்தது அவனின் கைபேசியில் வந்த அழைப்புமணி. அதில் அழைத்தவர் யார் என்று பார்த்தவன், அதை எடுத்து காதில் வைத்தான். "குட் மார்னிங் சார், மீட்டிங் இஸ் அட் டென். ப்ளீஸ் கம் பிபோற் தட்", என்று மறுமுனையில் இருந்தவன் கூற, "ஓகே அர்னவ், ஐ வில் பி தேர் அரௌண்ட் நைன் தர்ட்டி", என்று அழைப்பை துண்டித்து இருந்தான்.
பின் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து தன் பிரமாண்ட அறையில் நுழைந்து கொண்டான். எவ்வளவு பெரிய அறை அது! இந்தியாவின் முன்னணி இண்டிரியர் டிசைனர் கொண்டு ப்ரேதேயகமாக அவனிற்காக அவன் செதுக்கிய சிறிய மாளிகையது! அவனின் அறையின் உள்ளேயே அவனிற்கான சிறிய அலுவலக அறை, வாக்-இன் கிலோசைட் என்று பிரமாண்டமாக வடிவமைத்து இருந்தான். எட்டு வருடங்கள் அவன் இங்கு இல்லை என்றாலும், துளி கூட அந்த அறையை மாற்றாமல் பார்த்துக்கொண்டாள் கொற்றவை என்று அவனுக்கு தெரியும்.
தன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டு, ஷவரின் கீழ் நின்றவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். தன்னையே சமன் செய்து கொண்டவன். குளித்து முடித்து, வாக்-இன் கிளாஸடில் உள்ளே சென்று நேவி ப்ளூ பாண்ட், வைட் ஷர்ட் மற்றும் அவனது நேவி ப்ளூ கோர்ட்டை அணிந்து கொண்டு அந்த பரம்பரைக்கே உரிய அரச தோரணையில் தயாராகிருந்தான். கீழே நேராக அவன் சென்றது டைனிங் ரூமிற்கு தான்.
அவன் வந்து அமர்ந்த அதே சமயம், அவனின் தந்தையும் அவனின் எதிரே வந்து அமர்ந்தார். ஒரு வினாடி இரு வேங்கைகளின் விழிகளும் மோதிக்கொண்டன. சட்டென தன் கண்களை திருப்பி கொண்டான். அவனின் தோள்களில் ஒரு கரம் படிந்தது. திரும்பி பார்த்தவனின் இதழில் அவனையும் மீறி விரிந்தன. "என்ன மகனே ஹீரோ மாதிரி ரெடி ஆகிருக்க... என் டார்லிங்க பாக்க போறியா?", என்று வினவியவர் அவருக்கு இரண்டு இட்லியை வைத்து விட்டு பின்பு கிச்சடியை எடுக்க வந்தவரின் கையில் படார் என்று கரண்டியாலயே அடித்து இருந்தார் அவரின் சரிபாதி.
"கிச்சடிய தொட்டிங்க கைய வெட்டிருவேன் பாத்துக்கோங்க", என்று விஷ்ணுவை மட்டுமின்றி ருத்ரனையும் பார்த்து சொன்னார். தன்னை மீறி அந்த வீட்டின் இளவரசனின் இதழும் விரிந்து கொண்டன. "என் பையனுக்காக தான் இதெல்லாம் சமைச்சேன். உங்களுக்கு இல்ல", என்று சொன்னவர் இட்லி கிச்சடி சாம்பார் சட்னி என்று விஷ்ணுவின் பட்கத்தில் அமர்ந்தவனின் தட்டில் நிறைத்துவிட்டார். விஷ்ணுவின் தட்டும் ருத்ரனின் தட்டும் வெறுமையாக இருந்தது.
கொற்றவை தான் வந்து விஷ்ணுவிற்கும் ருத்ரனிற்கும் பரிமாறினார். கிச்சடியை வைக்கும் பொது வித்யா தடுத்ததையும் மீறி விஷ்ணுவிற்கு பரிமாறினார். ஆனால் ருத்ரன் கிச்சடியை வேண்டாம் என்று மறுத்து விட்டார். "என்ன மகனே கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல? என் டார்லிங்க பாக்க போறியா இன்னைக்கு?", என்று மீண்டும் கேட்டார். "ம்ம்.. ஆமா", என்று இதழில் ஒரு புன்னகை அனைவரிடமும். "அவளை சீக்கிரம் இங்க வர சொல்லு அப்போ தான் எல்லாருக்கும் திமிரு குறையும்",, என்று மீண்டும் வித்யா ருத்ரனை பார்த்து கூற, அவருக்கு பொறுமை எங்கோ சென்று விட்டது. பாதி சாப்பிட்டு அப்படியே எழுந்தவரை விஷ்ணு தான் மீண்டும் அமர வைத்து சாப்பிட வைத்தார்.
"இந்தா அவளுக்கு புடிக்கும்னு கேரட் அல்வா பண்ணிருக்கேன் கொடுத்திரு", என்று கொற்றவை அவனிடம் நீட்ட, அதை வாங்கி கொண்டு எழுந்தவன், வித்யாவை பார்த்து "இன்னைக்கு அவன் கிட்ட பேசிடறேன் மம்மி நீங்க கவலை படாதீங்க", என்று உரைத்தவனின் உச்சி முகர்ந்தார் வித்யா. தான் சொல்லாமலேயே தன் மனதை படித்துவிட்டான் என்கிற உவகை அவர் முகத்தில் தெரிந்தது. "நீ எல்லாத்தையும் சரி பண்ணிடுவனு தெரியும் ராம்", என்று கண்ணீர் மல்க கூறியவரை தன் இடது கையால் அணைத்து கொண்டான்.
"மை சன் அது என்னோட பொண்டாட்டி", என்று விஷ்ணு மறுபடியும் வம்பிழுக்க, "டாடிய ஒரு வாரம் பெட் ரூம் உள்ள சேக்காதிங்க", என்று ஒரு போடு போட்டானே பார்க்கலாம், விஷ்ணுவின் கண்கள் வெளியே வந்து விடாத குறைதான்.
"ராம் எப்படி கார் டிரைவ் பண்ணுவ எட்டு வருஷம் ரைட் ஹாண்ட் டிரைவிங் பண்ணலல?", என்று அஞ்சனா வினவ, "இல்ல பாட்டி மாணிக்கம் அங்கிள கூட்டிட்டு போறேன். இனி கொஞ்சம் ரைட் ஹாண்ட் டிரைவிங் பழகணும்", என்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி எழுந்தவனை ஆர தழுவிக்கொண்டார். "நீ தான் எல்லாத்தையும் சரி பண்ணனும் ராம்", என்று கூறிவரின் கன்னத்தில் முத்தமிட்டவன், "சரி பண்ணிரலாம்", என்று கண்ணை சிமிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான். அங்கு அவனுக்காக அவனின் விலை உயர்ந்த ஜாகுவார் காரின் முன் நின்னிருந்தார் மாணிக்கம். அவரிடம் சிறு தலையசைப்பு கொடுத்து அவனின் காரினுள் ஏறி அமர்ந்துவிட்டு, அவனின் கைபேசியை எடுத்து ஒருவனுக்கு அழைத்தான்.
அவன் அழைத்த அடுத்த இரண்டாவது ரிங்கில் அடுத்த பக்கத்தில் இருந்தவன் எடுத்து இருந்தான். "சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க? பரவலையே என்னலாம் நியாபகம் இருக்கா?", என்றவனின் குரலில் நக்கல் ஒளிந்திருந்தது. "நீ ஏன்டா பேசமாட்ட ஜாலியா அய்ய்ம்ஸ் போபால்ல ஒர்க் பண்ற அதுவோம் பெஸ்ட் கார்டியோலோஜிஸ்ட் சொல்லவும் வேணுமா? வாழ்றடா", என்று சொன்னவன் முகத்தில் சற்று பொறாமை வந்து போனது. மறுபக்கத்தில் இருந்தவன் சத்தமாக சிரிக்க, "இது நான் ஜாலியா இருக்கறதுனால வந்த பொறாமை இல்ல அம்மா என்ன பத்தி நல்ல விதமா சொன்னதுனால வந்த பொறாமை", என்று சரியாக தன் சகோதரனை கணித்து இருந்தான்.
"ஆமாடா கண் முன்னாடி நான் கல்லு மாறி இருக்கேன், கண்ணு முன்னாடி இல்லாத உன்ன பத்தி கேட்டா எரியுமா எரியாதா?", என்று கேட்க, "அண்ணான்னு கூப்டுடா", என்று மறுபுறம் இருந்தவன் கூற, பொறுமை காற்றில் பறந்து போனது அவனிற்கு, "டேய் ஆரு என்ன அம்மா, புள்ள எல்லாம் சேத்து வெச்சி செயிரிங்களா? ஒரு வருஷம் முன்னாடி பொறந்துட்டா அண்ணாவா?", என்று கேட்டவனின் குரலில் கோவத்தை உணர்ந்தவன், தமையனை குளிர வைக்க, "சும்மா சொன்னேன்டா, நம்ம என்னைக்கு ப்ரதர்ஸ் மாரி பேசிருக்கோம் பிரண்ட்ஸ் மாறி தான இருக்கோம். உன்ன கலாய்க்க அப்படி சீண்டி பார்த்தேன்", என்று ஆரு சொல்லவும் தான் சற்று கோவம் மட்டுப்பட்டது.
"நல்லா பேசுற டாக்டரே, எப்போ வீட்டுக்கு வர்றதா உத்தேசம்", என்று ராம் கேட்டவுடன் அவனின் குரல் இறுகியது. "ஐ நீட் டைம்", என்று சொல்லி முடிப்பதற்குள், "ஒரு வருஷம் ஆச்சு நீ வீட்டுக்கு வந்து", என்று அவன் சீற, "எட்டு வருஷம் இந்தியா பக்கமே வராத நீ சொல்றியா அத", என்று இவனும் சீற, தன்னை ஆரு சமன் செய்து கொண்டு, "ராம் சாரி பட் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. கூடிய சீக்கிரம் வரேன்", என்று வைத்து விட்டான். ராமிற்கு இன்னும் கோவம் அடங்கிய பாடு இல்லை, "இவனுக்கு கால் பண்ண என்ன நானே செருப்பால அடிச்சிக்கணும்", என்று அவன் நினைத்து கொண்டு இருக்க கார் சட்டென்று நின்று விட்டது.
"என்ன ஆச்சு அங்கிள்?', என்று மணிகத்திடம் வினவியவன், "சாரி தம்பி ஒரு பாப்பா திடிர்னு பால் எடுக்க வண்டுச்சு சடன் பிரேக் போட்டுட்டேன். பின்னாடி வேற ஸ்குட்டில வந்த ஒரு பொண்ணு நம்ப கார இடிச்சிருச்சு", என்று அவர் கூறியவுடன், அவனுக்கு சுரென்று கோவம் வந்து விட்டது. அவனுக்கு மிகவும் பிடித்த கார் அவனை விட அவனின் ஸ்வீட் ஹார்ட்க்கு பிடிக்கும் என்று தான் அவன் வருவதற்குள் வாங்கி நிறுத்தி இருந்தான். கீழே இறங்கியவன் நேரே சென்று அந்த இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்தவள் முன் நின்று இவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் துவங்கி விட்டாள்.
"டோன்ட் யு ஹவ் காமன் சென்ஸ்?" என்று ஆரம்பித்தவள் தமிழில் பேச துவங்கினாள், "எனக்குன்னே வரானுங்க காலைல யாரு முகத்துல முழுச்செனோ இன்னைக்கு எல்லாம் என் உசுர எடுக்கவே வராங்க. மலை மாடு போல வளர்ந்து இருக்கான் அப்டியே புடிச்சு வெச்ச பிள்ளையார் மாரி நிக்குறான் பாரு. சாரி கேக்குறானா, ஆளு மட்டும் பாக்க ஆறு அடிக்கு மேல இருக்கான் அறிவு இருக்கா, சரியான சாவுக்கிராக்கி, நம்ப கழுத்தை அறுக்கவே காலைல வந்திருக்கான்", என்று அவனை பேசவே விடாமல் வார்த்தைகளை உதிர்த்தவள் நினைத்து கொண்டது என்னவோ அவனுக்கு தமிழ் தெரியாது என்று தான், ஆனால் அவன் அவளுக்கே தமிழ் பாடம் எடுக்கும் அளவிற்கு கரைத்து குடித்தவன் என்று தெரிந்து இருந்தால் இப்படி பேசிக்க மாட்டாளோ என்னவோ!
அவள் பேசுவதை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் அந்த சாணக்கியன். அவளை ஒரே நொடியில் முற்றிலுமாக அளந்து விட்டான். "என் ஹெட்லைட் ஒடஞ்சிருச்சு", என்று ஆர்ப்பரித்து கொண்டு அவனின் கோட்டை பிடிக்க வருபவளின் கையை பிடித்து மடக்கி இருந்தான் அவன். ஒற்றை கையில் அவளை முழுவதுமாக அடக்கி விட்டான். "என்ன பேச்சு பேசுற நீ", என்று பேச அவன் கர்ஜனையை ஆரம்பிக்கும் போதே அவளின் விழிகள் விரிந்து கொண்டன, ஆறடி ஒரு அங்குலத்தில், பார்ப்பதற்கு பாலிவுட் நடிகன் போல் இருக்கும் இவனுக்கு தமிழ் தெரியும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லையே! "உங்... உங்களுக்கு தமிழ் தெரியுமா", என்று கேட்டவளை, தன் கணல்களை கக்கும் கண்களை கொண்டு சுட்டு எரித்தவன். "இப்போ என்ன மொழில பேசுனேன்?", என்று அழுத்தத்தை குரலில் மட்டும் இல்லாமல் அவளை பிடித்து இருந்த கைகளிலும் கொடுத்தான்.
"என் ஷோல்டர் ஹெயிட் கூட இல்ல என்ன பேச்சி பேசுற? பொன்னாடி நீ? சரியான பஜேரி. யாரு நான் சாவுக்கிராக்கியா அப்போ நீ என்ன சொர்ணாக்காவா? பாக்கவோம் அப்படி தான் இருக்க? உனக்குலாம் யாரு டிரைவிங் லைசென்ஸ் கொடுத்தது? நியாயமா பாத்தா நான் தான் சண்டை போடணும் என்னோட புது கார டேமேஜ் பன்னிற்க. சரி நானும் போன பொது பொண்ணாச்சேனு பாத்தா ரொம்ப ஓவர் ஆஹ் பேசுற. வாயாடி அது, கூவ ஆறு. பாக்கறதுக்கு நல்லா சுண்டைக்காய் சைஸ்ல தர்பூசணி மாறி இருக்க.”, என்று மேலிருந்து கீழ் பார்த்து மீண்டும் தொடர்ந்தவன், “உன்ன சொல்லக்கூடாது, உன்ன பெத்தவங்கள சொல்லணும்.", என்று அவனும் பேச சட்டென்று அவளின் கண்கள் கலங்கி விட்டது. அவளின் முழு சக்தியையும் கொண்டு அவனை தள்ளி விட்டவள், "இங்க பாருடா என்ன பத்தி பேசுறதே தப்பு இதுல என் அப்பா அம்மாவை பத்தி பேசுன அப்பறோம் மரியாதை கேட்டுறோம். அப்பறோம் இந்த டி போட்டு பேசறதெல்லாம் வேற எவ கிட்டயாச்சு வெச்சிக்கோ.", என்று அவளும் சீற மாணிக்கம் இறங்கி வந்துவிட்டார்.
"தம்பி நேரம் ஆகுது கிளம்பலாம். இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு.", என்று அவனை திசை திருப்ப பார்த்தார். "இன்னைக்கு தப்பிச்சிட்டடி", என்று சொல்லி அவனின் காரில் அவன் ஏறுவதற்கு முன் அவள் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள். அப்படி போனவளின் அலுவலக ஐடி அவளின் பாக்கெட்டில் இருந்து விழுந்ததை அவள் இந்த வாக்கு வாதத்தில் கவனிக்கவில்லை. ஆனால் இது அந்த சாணாக்கியனின் கண்ணில் இருந்து தப்புமா, எடுத்து பார்த்தவனின் கண்களில் அவளின் பெயர் விழுந்தது. "யாழ்நிலா", என்று அவன் உதடுகள் அவனையும் மீறி அந்த பெயரை உதிர்த்தது. அந்த ஐடியை தன் பாக்கெட்டிற்குள் வைத்தவன் அப்படியே சென்று அவனின் காரில் ஏறிக்கொண்டான்.
"அங்கிள், எக்கோ பிளேட் ஆபீஸ்க்கு போங்க", என்று அவன் கூறிய அடுத்த இருபது நிமிடங்களில் அங்கே நிறுவனத்தை அடைந்தவன், நேரே சென்றது என்னவோ நான்காவது தலத்தில் இருக்கும் இயக்குனர் அறைக்கு தான்.