எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உணர்வை பறித்தாய் கதிரொளியே! - Series 01 கதை திரி

1-3.jpg1-1.jpg1-2.jpg

அத்தியாயம் 1


அதிகாலை ஏழு மணி!

எப்போதும் பரபரப்பிற்கு குறைவே இல்லாத மும்பை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஸ்வஸ்திக்(Swastik) அபார்ட்மெண்ட்ஸ் இன்றும் அதே பரபரப்புடன் காணப்பட்டது. அதுவும் இன்று திங்கட்கிழமை என்பதால் சொல்லவும் வேண்டுமா, வேலைக்கு செல்பவர்கள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை அனைவரும் அவர்களின் அன்றாட வாழ்வின் அவசரத்தில் மூழ்கிக்கொண்டு இருந்தனர். நம் அனைவரின் வாழ்வும் இன்று அதிவேகத்திலேயே சென்று கொண்டு இருக்கின்றதே! மூச்சு விட கூட நேரமில்லாமல் எதை நோக்கி, எதற்காக பயணம் செய்கிறோம் என்று நம்மில் எத்தனை பேர் அறிவோம்!

ஓம் நமோ வெங்கடேசாய! ஓம் நமோ வெங்கடேசாய! எனும் மந்திரம் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பன்னிரெண்டாவது தளத்தில் உள்ள 12பி எனும் இரண்டு படுக்கையறைக் கொண்ட குடியிருப்பில் ஒலித்துக் கொண்டிருந்தது. பறைவைகளின் கீச்சிடும் ஒலியும் வெய்யோனின் கதிர் ஒளியும் சேர்ந்து அந்த 12பி பிளாட்டில் ஒரு படுக்கையறையில் துயில் கொண்டு இருக்கும் கும்பகர்ணியை தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சித்து கொண்டு இருந்தனர். ஒரு வழியாக அதில் வெற்றியும் கண்டனர்.

தன் படுக்கையில் இருந்து எழுந்து அவளுடைய மீன் போன்று இருக்கும் விழிகளை மிகமிக கடினப்பட்டு திறந்தாள் அந்த இளம் யுவதி. ஒருத்தியால் கனிவையும், கர்வத்தையும், கோபத்தையும் இருவிழிகளால் மட்டும் காட்ட முடியுமா என்று கேட்டால், முடியும் என்று நிரூபித்து கொண்டு இருக்கிறாள் இந்த நவீன மங்கை. அவளிடம் நேசம் காட்டும் மக்களிடம் கனிவை காட்டும் அதே கண்கள், அவளுக்கு கீழ் வேலை செய்யும் மக்களிடம் கர்வத்தையும் கோபத்தையும் காட்ட தவறுவதில்லை.

மெல்ல திறந்த தன் இமைகளை நன்றாக திறந்து அவள் படுக்கையின் பக்கத்திலுள்ள கடிகாரத்தைப் பார்த்தாள். அது ஏழரை மணியை காட்டியது. அவள் வீட்டை விட்டு கிளம்புவதற்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருந்தது. நிதானமாக எழுந்து அவள் படுக்கையின் வலதுபுறம் இருக்கும் ஆளுயர கண்ணாடியில் அவளையே பார்த்தாள்.

ஐந்தடி இரண்டு அங்குல உயரம், கோதுமை நிறத்தில் இருக்கும் மாசு மருவற்ற சருமம், சற்று பழுப்பு கலந்த கருமை விழிகள், இடுப்பு வரை அடர்த்தியான கூந்தல், சற்றே பூசிய உடல்வாகு, என்று பக்கத்து வீட்டு பெண் போல தமிழ் மனம் மாறாமல் இருப்பவள் அவள். சில நேரம் அவளை 'டெட்டி பியர்' என்று அவளுக்கு நெருக்கமானவர்கள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுவதும் உண்டு.

அவள் யாழ்நிலா!

அவள் எழுந்த நேரம் அவளுக்கும் அவளின் அபார்ட்மெண்டில் அந்த மந்திரம் காதில் விழுந்தது. 'எப்படி தான் இவங்க மட்டும் ஆறு மணிக்கு தினமும் எழுந்துக்குறாங்களோ' என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் தருவாயில் அவளின் கைபேசி அலறியது.

'சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே', என்ற பாடல் அலறியது. உண்மையான சிங்கப்பெண் தான் அவளும் கிட்டத்தட்ட ஆயிரம் மையில்களை தாண்டி தன் பாசமிகு குடும்பத்தை விட்டு வந்து இதோ மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தனியாக அவள் இந்த மும்பை மாநகரத்தில் காலடி எடுத்து வைத்த நாளை அவளால் வாழ்நாளில் மறக்கமுடியுமா என்ன!

தன் சிந்தனைகளைப் புறம் தள்ளிவைத்துவிட்டுக் கைபேசியை கையில் எடுத்தாள். யார் திங்கட்கிழமை காலை அவளுக்கு அழைப்பார்கள் என்று தெரியும், அதனால் யார் என்று பார்க்காமலேயே கைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தாள். மறுமுனையில் உள்ளவர் பேசும் முன், "எல்லாம் ஓகே தானடி? எதுவோம் பிரச்னை இல்லல உனக்கு? வேலை எல்லாம் செட் ஆயிருச்சுல? வெதர்லாம் இப்போ ஒத்துக்குதுல? நீ இங்க இருந்து போய் ஆறு மாசம் ஆயிருச்சுனு நம்பவே முடியல என்னால!" என்று மறுமுனையில் உள்ள நபரை பேசவே விடாமல் பேசிக்கொண்டிருந்தாள் யாழ்.

"என்னடி நான் பேசிட்டே இருக்கேன் நீ எதுமே பேச மாற்ற", என்று அதற்குள் நொடித்து கொண்டாள். மறுபக்கத்தில் இருந்து மெல்லிய சிரிப்பொலி கேட்டது. "நீ இன்னும் மாறவே இல்ல கொஞ்சம் கூட", என்று காற்றுக்கே வலிக்காத மென்மையான குரலில் பதில் வந்ததது. "நான்லாம் என்னைக்குமே மாற மாட்டேன்டி என் ரசகுல்லா", என்று அவளே அவளின் டீ-ஷர்டின் இல்லாத காலாரை தூக்கி விட்டுக்கொண்டாள். மறுபக்கம் இருந்தவளோ சலிப்பாக தலை ஆட்டிக்கொண்டு அவளுக்கு பதில் கொடுக்க துவங்கினாள்.

"நான் நல்லா தான் இருக்கேன்… என் குலாப் ஜாமுன், இப்போ எல்லாம் இங்க செட் ஆயிருச்சு. கொஞ்சம் உன்னோட அப்பறோம்… நம்ப லேடி ஹிட்லரோட சமையல ரொம்ப மிஸ் பண்றேன்... அத விட உன்னோட ஒன்னுத்துக்கும் உதவாத ஜோக்ஸோட தொல்லை இல்லாம கொஞ்சம் நிம்மதியா கூட சில நேரம் இருக்கு", என்று அவளின் கண்ணீரை மறைத்துக் கொண்டு நிறுத்தி நிதானமாக பதில் கொடுத்தாள்.

"சரி தான் மேடம் இப்போ அமெரிக்கால இருக்கீங்க இப்டி தான் பேசுவீங்க, எனக்கும் நேரம் வரும் அப்போ பாத்துக்குறேன். ஆனாலும்... எனக்கு நீ எதையோ மறைக்குற போலவே தோணுதுடி ரசகுல்லா", என்று சற்று குரலை நிறுத்தி குரலை தீவிரமாக மாற்றினாள் யாழ்.

"ஹே... அப்படி எல்லாம் இல்ல ஜாமுன்… உங்கிட்ட பேசுனாலே… கொஞ்சம் எமோஷனல் ஆய்டுறேன்… அவளோ தான். சரி நான் போய் டின்னர் ரெடி பண்றேன், பசிக்குது. அடுத்த வாரம் பேசுறேன்", என்று திக்கித்திணறி பேசிவிட்டு அவளின் மறுமொழி கேட்காமல் அழைப்பை துண்டித்திருந்தாள். கண்களில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. அவளின் வெற்று உடலை வெள்ளை போர்வையால் மூடி தன் பக்கத்தில் உள்ள அரக்கனை பார்த்தாள். தினமும் அவளை படுக்கையில் மட்டும் இல்லாது வார்த்தையாலும் அவளின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கொன்று கொண்டு இருக்கும் அவனை ஒன்றும் செய்ய இயலாத கையாலாகாத தனத்தை என்ன செய்தால் தகும் என்று அவளையே பழிச்சொல்லி, 'எனக்கு இந்த அரக்கனிடம் இருந்து ஒன்று விடுதலை கொடு இல்லையேல் உயிரை மாய்த்துவிடு’ என்று அவள் ஒவ்வொரு நொடியும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறாள்.

அவள் தளிர்மதி!

ரசகுல்லா என்று யாழ் அழைப்பது போல் பால் நிறம். கிள்ளிவிட்டால் ரத்தமாக சிவந்துவிடும் அவளது மேனி, ஐந்தரை அடி தங்க சிலை அவள்! தோள்பட்டை தாண்டி சற்றே இறங்கி ஆடும் அவளின் சுருள் மூடி கூட ஒருவரை திரும்பிப் பார்க்க செய்யும். அவளது பிரவுன் நிற விழிகளுக்கு அனைவரையும் ஈர்க்கும் சக்தியை கொடுத்து இருந்தான் அவளை படைத்தவன். பேஷன் ஷோவில் நாம் பார்க்கும் மங்கைகளை போல் அவளின் உடல்வாகு என்று சொன்னால் கூட மிகையாகாது. இவ்வளவு அழகு இருந்தும் ‘தைரியம்’ என்பது துளி கூட இல்லாத பெண் அவள்.

அமெரிக்கா அவள் செல்லவே மாட்டாள் என்று சொல்லியும் யாழ் தான் அவளை விடாப்பிடியாக இங்கே அனுப்பியது. தன் உயிர் தோழியை இப்படி ஒரு இரக்கமற்ற அசுரன் தினம்தினம் சித்திரவதை செய்ய போகிறான் என்று தெரிந்திருந்தால் மலரினும் மெல்லிய இவளை இப்படி தனியே அனுப்பி இருக்கமாட்டாளோ என்னவோ! இப்பவும் தளிரால் யாழிடம் உண்மையை சொல்ல முடியும், ஆனால் இந்த அரக்கன் மறுகணம் யாழை கொன்று விடுவானோ என்கிற அவளின் பயமே அவளை யாழிடம் உண்மையை கூற முடியாமல் செய்துவிடுகிறது. அவளின் சிந்தனை ஓட்டங்களை தகர்த்து ஒரே இழுவையில் அவளை மறுபடி சூறையாட கட்டிலில் இழுத்து அவள் மேல் படர்ந்தான், அந்த கல்நெஞ்சக்காரன். தளிர் துளிர்க்குமா இல்லை துவளுமா?

யாழின் நினைவு முழுக்க தளிர் நிறைந்து இருந்தாள். "என்ன இவ பேச பேச பை கூட சொல்லாம போனை வெச்சிட்டா. கொஞ்ச நாளாவே இவ சரி இல்ல. அடுத்த தடவை பேசும் போது மிரட்டி ஆச்சு என்னனு சொல்ல வெச்சிரணும்", என்று அவளே அவளுக்கு பேசிக்கொண்டு மணியை பார்த்தாள். அது எட்டு என்று காட்டியது. "ஆத்தி… சீக்கிரம் ரெடி ஆகணும் இல்லனா நம்ப லேடி ஹிட்லர் வேற கொச்சிப்பாங்களே!", என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்து, காலை கடன்களை முடித்து, அவளின் இண்டிகோ கலர் பேண்டும் லிலியாக் கலர் ஷர்டும் அணிந்து, அதற்கு ஏற்ப அவளின் நீண்ட கூந்தலை குதிரைவால் போட்டு முடிந்து கொண்டு, சிறிது ஒப்பனைகளை செய்து கொண்டு அவளின் அறையை பூட்டிக்கொண்டு இருக்கும் சமையத்தில், "இப்போ மணி என்ன ஆகுது ?", என்ற கணீர் குரல் அந்த நுழைவு அறை அதிர ஒலித்தது.

அந்த குரலின் கம்பிரத்தை வைத்தே அது யார் என்று கண்டு கொண்டாலும் பயத்தை முகத்தில் இருந்து மறைத்து இல்லாத புன்னைகையை வரவழைத்து திரும்பினாள். "ஹி... ஹி... அக்கா அது வந்து...", அவள் சொல்லி முடிக்கும் முன், "உனக்கு கொஞ்சமாச்சு பொறுப்பு இருக்கா? இருபத்தி ஆறு வயசு ஆகுது, மாடு மாறி வளந்திருக்க, உனக்கு வீட்ல மாப்பிள்ளை வேற பாத்துட்டு இருக்காங்க, இப்படி கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம இருக்க. பத்து மணிக்கு ஆபீஸ், இங்க இருந்து ஒன்பது மணிக்கு புறப்படணும் மேடம் ஆடி அசைஞ்சி எட்டே முக்கால்க்கு தான் வெளிய வரீங்க. என்னைக்காச்சு எழுந்து சமைச்சிருக்கியா நீ?", என்று பொரித்து தள்ளிவிட்டாள்.

"அக்கா அதான் நீங்க இருக்கீங்களே அப்பறோம் நான் எதுக்கு தனியா சமைக்கணும்? அதுவோம் உங்க கையாள சாப்பிட நான் கொடுத்து வெச்சிருக்கணும்", என்று கொஞ்சி கொண்டே இன்றைக்கு என்ன சமையல் என்று பார்க்க சமையலறை சென்று விட்டாள். "வாவ் இன்னைக்கு இட்லி தக்காளி சட்னியா காலைல சாப்பிட! செம்ம செம்ம", என்று சொல்லிக்கொண்டே மதியத்திற்கு அவள் செய்து வைத்திருக்கும் தக்காளி சாதத்தையும் முட்டை வறுவலையும் அவளின் டிபனில் போட்டு எடுத்துக்கொண்டாள். "நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன பன்னிட்டு இருக்க", என்று அவள் மீண்டும் சீற, "மிஸ் சாந்தினி கொஞ்சம் கூல் அவுங்க. சாந்தினினு பேரு வெச்சிட்டு எப்போ பாரு எரிமலை மாறி இருக்கீங்க ஹிட்லர் மேடம்", என்று சொல்லிக்கொண்டே இரண்டு இட்லியை சாப்பிட்டு விட்டாள். சாப்பிடும் போது பேசிக்கொண்டு இருந்ததால் சற்று பொறையேற, உடனே அவளுக்கு தண்ணி கொடுத்து தலையை தட்டி விட்டாள்.

அவள் சாந்தினி!

ஐந்திரரை அடிக்கும் சற்று குறைவான உயரம், மாநிறத்திற்கும் வெள்ளை நிறத்திற்கும் இடைப்பட்ட நிறம், சத்தியம் செய்து சொன்னால் கூட அவளுக்கு இருபத்தி ஒன்பது வயது என்று யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஒல்லி என்றும் சொல்லமுடியாத குண்டு என்றும் சொல்லமுடியாத சரியான அவளில் அவளுக்கு அனைத்தையும் கொடுத்திருந்தார் பிரம்மன். ஒன்றை தவிர!

தண்ணீரை குடித்துவிட்டு அவளை ஏறிட்டு பார்த்தாள். அவளின் விழிகள் எரிமலை குழம்பாய் கொதித்து கொண்டு இருந்தது. அப்போது தான் ஹிட்லர் என்று அவளுக்கு அவர்கள் வைத்திருக்கும் பட்டப்பெயரை உளறிக்கொட்டியது நினைவுக்கு வந்தது. "ஹி... ஹி சாரி.. அக்கா அது ... ஒரு வேகத்துல", என்று என்ன சொல்லி சமாளிப்பது என்பது தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள்.

"ரொம்ப நடிக்காத, நீ யாரு என்னனு எனக்கு தெரியும். உன் கூட மூணு வருஷமா குப்பை கொட்டறேனே எனக்கு தெரியாது நீ எவளோ பெரிய கேடினு. என்ன சொன்னா உன் உயிர் தோழி?", என்று வினவிய படி அவளும் சாப்பிட அமர்ந்தாள். "அது என்ன என் உயிர் தோழி, உங்களுக்கும் தான அவ தங்கச்சி. நீங்களே பேசலாம்ல பாவம் அவ. நீங்க அவ கிட்ட பேசி ஏழு மாசம் ஆகுது அக்கா", என்று பவ்யமா பேசுவது போல் பாவனை செய்தாள். இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவளுக்கும் தெரியும் ஆனாலும் எப்படியாவது சாந்தினியையும் தளிரையும் பேச வைத்து விட வேண்டும் என்று முயற்சித்து கொண்டு இருக்கிறாள்.

எதற்கும் சாந்தினியிடம் இருந்து பதில் இல்லை. எல்லா திங்கட்கிழமை நடக்கும் ஒன்று தான் இது என்பதால், பெரிதாக யாழும் அலட்டிக்கொள்ள வில்லை. "இன்னைக்கு நீங்க புது ப்ராஜெக்ட்காக எக்கோ பிளேட் (Eco Plate) எம்டிய மீட் பண்ணப்போறீங்கள?", என்று மீண்டும் யாழே பேச்சை ஆரம்பித்தாள். "ம்ம்", என்று மட்டும் தான் பதில் வந்ததது. அதற்கு மேல் இருவரும் பெரிதாக ஏதும் பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்களின் அலுவலக பையையும் மதிய உணவிற்கான உணவையும் எடுத்துகொண்டு வீட்டு வாசலுக்கு வந்து பூட்டிவிட்டனர்.

அப்போது பார்த்து வந்த எதிர்வீட்டு பெண் சொன்ன வார்த்தை இருவரின் மனதையும் சுக்குநூறாக கிழித்தது.​
 

Saranyakumar

Active member
உங்களின் முதல் கதைக்கு வாழ்த்துகள் சிஸ் 🤩யாழ்நிலா, தளிர்மதி பேரு அழகாக இருக்கு. தளிர் வேலைக்கு போன இடத்துல எப்படி அவன்கிட்ட மாட்டுனா யாரு அவன் யாழை வைத்து தளிரை மிரட்டுறான் 🤔எதிர் வீட்டுப் பெண் என்ன சொன்னால் இருவரும் அதிர்ச்சியாகும்மாறு 🙄😬
 

1723895777016.jpeg1723895777007 (1).jpeg

அத்தியாயம் 2



அதிகாலை ஆறரை மணி!

மும்பையில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதி அது. அப்பகுதியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரே வீடு 'செந்தளிர் இல்லம்'. தமிழ்நாட்டில் இருந்து இங்கே குடிபெயர்ந்து இப்பொது தொழில் சம்பிராஜ்யத்தின் இந்தியாவின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜ பார்த்திபன் அவரின் அரண்மனை அது! ஆம் அரண்மனை தான்! கிட்டத்தட்ட இருபதாயிரம் சதுர அடியில் ஆறு மாடிகள் இருபது படுக்கையறை, மூன்று உடற்பயிற்சியறை, இருபத்தி ஐந்து பேர் அமர்ந்து பார்க்க கூடிய சிறிய திரையரங்கம், இரண்டு நீச்சல் குளம், அதிநவீன வசதிகள் கொண்ட ஹைடெக் அரண்மணை என்று சொன்னால் மிகையாகாது.

‘ராஜ பார்த்திபன்’ அந்த வீட்டின் தலைவர், வயது எழுபத்தி எட்டு. அவரின் ஆளுமையும் கம்பீரமும் கொஞ்சமும் இந்த வயதிலும் இம்மியளவும் குறையவில்லை. அவர் மும்பைக்கு வந்து ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிருக்கும். மதுரையை பூர்விககமாக கொண்டவர் அவர். பிழப்புக்காக இங்கே வந்து பின்பு அவரின் புத்தி கூர்மையினாலும் கடின உழைப்பாலும் இந்த தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தார். அவர்களின் ஆர். ஏ குரூப்ஸ் (R.A. Groups) இன்று இந்தியாவின் முன்னணி குழு நிறுவனங்களில் ஒன்று. அவர்கள் அனேக தொழில்கள் நடத்திக்கொண்டு வந்தபோதிலும், அவர்களின் அழகுசாதனம் மற்றும் ஆடைகள் சார்ந்த நிறுவனமும், வன்பொருள் (hardware) நிறுவனமும் தான் அதிக வருவாய் ஈட்டி தருபவை. அவர்களின் சொத்து மதிப்புகள் பல்லாயிரம் கோடியில் இவ்விரு தொழில்களும் எழுபது சதவீத வருவாயை ஈட்டி தந்தது.

இதை எல்லாம் அவர் ஒரே நாளில் செய்திட இது ஒன்றும் திரைப்படம் அல்லவே! எத்தனை அவமானங்கள், எத்தனை தோல்விகள், எத்தனை தூக்கமில்லா நாட்கள், இத்தனை துன்பங்களிலும் அவரின் துணையாய் அவரின் துயரை தீர்த்தது அவரின் துணைவி அஞ்சனா தேவி! வயது எழுபத்தி நான்கு. அவரின் அஞ்சலை!

திருமணமாகி ஐம்பத்தி எட்டு வருடங்களும் அவரை அப்படி தான் அழைத்துக் கொண்டு இருக்கிறார். யார் சொன்னது காலம் செல்லச் செல்ல காதல் கரைந்து விடும் என்று! இந்த முதிர் காதல் பறவைகள் இளம் ஜோடிகளுக்கே பாடம் கற்றுக்கொடுப்பார்கள் காதல் செய்வதற்கு! ராஜ பார்த்தித்திபனுக்கே உரிய அஞ்சனா தேவி, அந்த வீட்டின் குடும்பத்தலைவி! அழகும் குணமும் பொருந்திய அழகு ராணி. இந்த வயதிலும் இந்த வீட்டின் அனைத்து வேலைகளையும் மேல் பார்வை பார்ப்பது அவர் தான். தன்னவருக்கு சிறந்த துணைவியாக, மகன்களுக்கு நேசமிகு அன்னையாக, மருமகள்களுக்கு மாடர்ன் மாமியாராக, பேரன் பேத்திகளுக்கு செல்ல பாட்டியாக இருக்கும் தேவதை என்றே கூறலாம்! காலத்திற்கு ஏற்றார் போல் அஞ்சனாவும் அவரை மாற்றிக்கொண்டார். அவர் மருமகள்கள் கூட கொஞ்சம் பழமைவாதிகள் என்று சொல்லலாம் ஆனால் அஞ்சனா அப்படி இல்லை அதனாலேயே பார்த்திபனுக்கு தன் மனைவியை பார்த்து தனி கர்வம் உண்டு.

இப்பொது பார்த்திபன் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார். தற்போது அவரின் அத்தனை தொழில்களையும் கவனித்து கொள்வது அவர் பெற்ற இரட்டை வேங்கைகள் தான். இன்று தொழில் சாம்ராஜ்யம் மட்டும் இல்லாமல் அரசியலையும் ஆட்டி வைத்து கொண்டிருக்கும் இரண்டு வேங்கைகள். கடவுளே அவர்களின் காதலை பார்த்து பிரமித்து இரட்டை பிறப்புகளாக கொடுத்திருந்தார். ஆனால் இருவரின் முகமைப்பிலும் மட்டும் அல்லாமல் குணத்திலும் வேற்றுமை இருந்தன அவர்களின் பெயருக்கு ஏற்றார் போல. ருத்ர தேவன் மட்டும் விஷ்ணு தேவன்!

ருத்ர தேவன் இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர். வயது ஐம்பத்தி ஏழு. ருத்ரன் என்ற பெயருக்கு பொருத்தமானவர். கோவத்தின் உச்சம் அவர், தந்தையையும் தாயையும் தவிர வேறு எவரிடமும் அவர் அடங்கிப்போனதாக சரித்திரம் இல்லை. அன்னை தந்தை மீது அளவற்ற அன்பு உண்டு ஆனால் முப்பத்தி ஒரு வருடங்களாக அவர்கள் மீது சிறு மனக்கசப்பும் உண்டு.

அன்று அவர் அவ்வளவு சொல்லியும் பிடிக்காத திருமணப்பந்தத்தில் இணைத்த ஒரு பிணக்கு. வெளிப்படையாக கூறியது இல்லை என்றாலும் குடும்பத்தில் அனைவரும் அறிந்த ஒன்று தான் இது! இரண்டு பிள்ளைகள் பெற்ற பின்பும் தன் மனையாளிடம் தினமும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் பேசுவார் சில நாட்களில் அது கூட கிடையாது.

விஷ்ணுவுக்கும் இவருக்கும் ஒன்றாக தான் திருமணம் ஆகியது, சகோதரன் மனைவி கர்பந்தரித்து முதல் குழந்தையையும் ஈன்று விட, அடுத்து நம் மக்கள் என்ன பேசுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமா, தன் மனைவியை ‘மலடி’ என்று பிறர் சொல்வதை கேட்டு அவருக்கு பிள்ளை பாக்கியத்தை வழங்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிள்ளைகளிடம் பாசமிகு அப்பா தான், அதுவும் அவரது பெண் பிள்ளை மீது பாசம் அருவியாய் கொட்டும். இதை பார்த்து அவரின் மனைவியே இதில் ஒரு சதவீதம் எனக்கு தரமாட்டையா என்று ஏங்கிய கணங்கள் பல! சிவபெருமானை அடைய பார்வதி தேவி தவம் செய்தது போல் இந்த ருத்ரனின் காதலிற்காக முப்பத்தி ஒரு வருடங்களாக தவம் செய்து கொண்டிருக்கிறாள் இந்த கொற்றவை.

ருத்ரனின் ருத்ரத்தை அடக்குவாள் என்று நினைத்து கொற்றவையை மனம் முடித்து இருந்தார்கள். ஆனால் அவள் பெயரளவில் மட்டும் தான் கொற்றவை, உண்மையில் சாந்தஸ்வரூபிணி. இன்றளவில் வீட்டில் உள்ள ஒருவரை கூட சத்தம் போட்டு பேசியது கிடையாது. கொற்றைவையின் பெரியப்பா மகள் வித்யா லட்சுமியை தான் மனம் முடிக்க வந்தார்கள் ஆனால் அன்று ருத்ரன் பெண் பார்க்க வராமல் விஷ்ணு வந்திருந்ததால் வித்யாவிற்கு விஷ்ணுவை பிடித்திருப்பதாக கூறிவிட்டார்.

வித்யாவின் அப்பா சுவாமிநாதன், தன் பாதுகாப்பில் வளர்ந்து வரும் தன் தம்பியின் மகளான கொற்றவையை ருத்ரனிற்கு பேசி இருந்தார். வித்யாவிற்கும் கொற்றைவைக்கும் அப்போது இருபத்தி மூன்று வயது. ருத்ரன் இதற்கு சம்மதிக்கவே இல்லை, அவரின் மனதை வேறு ஒருத்தி ஆட்டிவைத்து கொண்டிருக்க, இருந்தாலும் அவரின் பெற்றோரின் மன திருப்திகாகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் ஒப்புக்கொண்டார். ருத்ரன் அப்போது தான் அரசியலில் கால்பதித்து இருந்தார். சுவாமிநாதன் மதுரையின் எம்.எல்.ஏ வாக இருந்து கொண்டு இருந்தார். கொற்றவைக்கு சிறுவயதிலேயே தாய் தந்தை இறந்து விட்டனர். இருந்தாலும் சுவாமிநாதன் வித்யாவையும் கொற்றவையாயும் வெவ்வேறாக பார்த்ததே இல்லை. இருவருக்கும் ஒரே அளவு சீர் செய்து திருமணம் நடத்தினார். இத்தனை மனக்கசப்பிலும் கொற்றவை மிகச்சிறந்தத் தாரமாக மருமகளாக அன்னையாக தன் கடமைகளை சரிவர செய்தார். வித்யாவின் பிள்ளைகள் கூட இவரைத்தான் ‘அம்மா’ என்று அழைப்பார்கள். சிறுவயதில் இருந்தே அப்படி பழகி இருந்தார்கள். கொற்றவையும் ருத்ரனையும் அம்மா அப்பா எனவும், விஷ்ணு மற்றும் வித்யாவை டாடி மம்மி எனவும் அழைப்பார்கள் அவர்கள் பெற்ற நான்கு மணிச்செல்வங்கள்.

அடுத்து விஷ்ணு தேவனை காண்போம். பெயர்க்கு ஏற்றார் போல் அமைதியும் குறும்பும் மிளிரும் ஒருவர். இன்றும் அவரை துரத்தும் பெண்கள் கூட்டம் உண்டு. இந்த வீட்டில் கேலியும் குறும்பும் இன்றும் அரும்பக்காரணம் விஷ்ணு தான். எவ்வளவு குறும்பு இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் தான். அவரின் நிறுவனித்தில் அவருக்கு வைத்திருக்கும் பெயர் 'சிடுமூஞ்சி'. எல்லாம் நிறுவனம் வரையில், வீட்டில் காதல் மன்னன். வித்யாவே பலமுறை அவரின் மாமியாரிடம் கூறியது உண்டு 'உங்கள் மகனிற்கு கிருஷ்ணன் என்று பெயர் வைத்திருக்கலாம்' என்று. ஆனால் இன்று அவர் சிரித்து ஒரு வருடம் ஆகிறது அவர் மட்டுமா அந்த வீட்டில் உள்ள எந்த நபரும் சிரித்து பேசி ஒரு வருடம் ஆகிறது. அந்த நாள் அவர்களின் வாழ்க்கையில் வந்தே இருக்க வேண்டாம் என்று தினம்தினம் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். தினம்தினம் கலகல வென்று சிரிப்புச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் இந்த மாளிகை இன்று இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

வித்யாலட்சுமியை பற்றி சொல்லவும் வேண்டுமா செல்வச்செழிப்பில் வளர்ந்து இன்று தன் கணவனுக்கு ராணியாக வளம் வருபவர். கொற்றவையின் சரிபாதி செய்ய தவறிய கடமைகளையும் அவளுக்கு அவர் தர மறுத்த காதலுக்கு பதில் பல கோடி அவளுக்கு நேசத்தையும் பாசத்தையும் வாரி வழங்கும் அன்பு சகோதரி. இந்த முகம் வெறும் கணவன், சகோதரி, மட்டும் மாமியாரிடம் மட்டும் தான்.

ருத்ரனிடமும் மாமனாரிடமும் என்றும் பாரா முகம் தான். கொற்றவையின் வாழ்வில் மகிழ்ச்சி இல்லாமல் போனதிற்கு இவர்கள் இருவர் தான் காரணம் என்று அவர்களிடம் அதிகமாக பேசமாட்டார். தன் தந்தையிடமே பேசுவதில்லை என்றால் அப்படி ஒரு பாசம் கொற்றவை மேல்! வித்யாவிற்கு அன்னை கிடையாது ஆனால் ஒரு அன்னையின் அன்பை கொற்றவை கொடுத்தார், அவருக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு கூட அவரை கண்ணின் மணியாய் பார்த்துக் கொண்டது கொற்றவை தான். கொற்றவை இல்லையேல் வித்யா இல்லை என்று சொல்லிவிடலாம். இன்று அவர் வாயில் உணவு வைப்பது கூட கொற்றவை கொடுத்தால் தான்! அவர் இறுதியாக சிரித்து பேசி மகிழ்ந்து ஒரு வருடம் ஆகிறது. காலங்களும் கதிரவனும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதை உணர்ந்து இவர்களும் வாழ பழகிக்கொண்டனர்.

அங்கே அவர்களின் காலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வந்தார்கள் மூன்று ஆண்களும். வாரத்தில் ஓரிரு நாட்கள் ஒன்றாக இப்படி நடைப்பயிற்சி செய்வது வழக்கம். மீதி நாட்களில் ருத்ரன் வீட்டிலே உள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்து கொள்வார். விஷ்ணுவும் வாரம் ஒன்று இரண்டு நாட்கள் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்வது உண்டு.

“அஞ்சல, அந்த அருகம்புல் ஜூஸ் எடுத்துட்டு வாமா”, என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே அவரிடம் கோப்பையை நீட்டியிருந்தார் கொற்றவை. மாமனாரை பார்த்து மென்மையாக புன்னகைத்து, 'அத்தை சாமியறைல இருகாங்க மாமா. நீங்க வந்ததும் உங்களுக்கு குடுக்க சொன்னாங்க', என்று மென்மையாக கூறினார். அவர் தலையசைத்திட, அடுத்து இருந்த இருவருக்கும் காபியை கொடுத்தார். ருத்ரன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, அவரின் கையில் உள்ள செய்தித்தாளைத் தான் வசித்து கொண்டு இருந்தார். விஷ்ணு இருபுறமும் தலையசைத்து, காபி கோப்பையை வாங்கி ஒரு பருக்கை அருந்தியவுடன் , “காபி ரொம்ப நல்லா இருக்கு கொற்றவை”, என்று என்றைக்கும் போல் இன்றைக்கும் பாராட்ட தவறவில்லை. “தேங்க்ஸ் மா’ம', என்று மறுபடியும் சமையல்கட்டிற்கு செல்லும் முன், “எங்க அவன்?”, என்ற குரல் அந்த அறை அதிர ஒலித்தது. அந்த குரல் அவரின் உயிர்நாடியையே அசைத்து பார்த்தது உண்மை தான்.

அப்படியே திரும்பி ருத்ரனை பார்த்தார் இன்னும் செய்தித்தாளில் தான் அவரின் பார்வை இருந்தது. விஷ்ணுவும் பார்த்திபனும் ஏதோ உரையாடிக்கொண்டு இருக்க, அவருக்கு ஏதோ மனப்பிரமையோ என்று கூட ஒரு நொடி யோசித்து மறுபடியும் திரும்ப எத்தனிக்கும் முன், “உன்னைத்தான் கேட்டேன் அவன் எங்கனு?”, என்று அதே குரல் ஒலிக்க, அவர் திரும்பும் பொது பார்த்திபனும் விஷ்ணுவும் அங்கே இருந்து நகர்ந்து சென்று இருந்தனர். திரும்பியே கொற்றவைக்கோ உலகமே நின்ற உணர்வு. ருத்ரன் அவரையே துளைத்து எடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

“எ.. எ .. என்னை.. என்னையா கேட்டி.. கேட்டிங்க?”, என்று திக்கித்திணறி ஒருவழியாக ஒன்றாக வார்த்தைகளை கோர்த்து கேட்டுவிட்டார். “உன்னைத்தான். நீதான கொற்றவை ருத்ர தேவன், அப்போ உங்கிட்ட தான நம்ப மகனை பத்தி கேட்க முடியும்”, என்று குரலின் கம்பீரம் சற்றும் குறையாமல் பதில் அளித்தார். “அவன்... அவனோட... அறையில தாங்க... இன்னும் இருக்கான். அப்படித்...தான் நினைக்..குறேன்”, என்று மெல்லிய குரலில் இந்த தடவையும் திக்கித்திணறி பதில் வந்தது. ருத்ரனோ சிறிது கடுப்புடனேயே அவரை பார்த்து, “அவன் என்ன பண்ரான்னு கூட பக்கமா அப்படி என்ன பண்ணிட்டு இருக்க? நாலு பேர்ல அவன் ஒருத்தன் தான் இப்போ நம்ப கண்ணு முன்னாடி நடமாடிட்டு இருக்கான் அவன் என்ன பண்ரான்னு கூட பாக்க மேடம்க்கு நேரம் இல்லை அப்படித்தானா?", என்று கர்ஜிதே விட்டார். அதில் கொற்றவையின் முழு உடம்பும் அதிர்ந்ததில் அவர் கையில் வைத்திருந்த பீங்கான் தட்டு கீழே விழுந்து உடைந்து விட்டது. சத்தம் கேட்டு சமையலறையின் உள்ளே இருந்து வெளியே வந்தார் வித்யா. “என்ன ஆச்சு கொற்றவை?”, என்று கேட்டுக்கொண்டே வந்தவர் கீழே உடைந்து கிடந்த தட்டை பார்த்து என்ன நடந்திருக்கும் என்று சற்று யூகித்து கொண்டார். “அவள இன்னைக்கு என்ன பேசி மனச காயப்படுத்துனீங்க மாமா?”, ஆதங்கமாக சத்தம்போட்டு கேட்டேவிட்டார்.

வித்யாவின் சத்தம் கேட்டு பார்த்திபனும் விஷ்ணுவும் அங்கே வந்து விட, “என்னடி ஆச்சு இப்போ என் இப்படி காலைலயே கத்துற?”, விஷ்ணு அவரின் மனையாட்டியை வினவ, அவரோ கண்ணாலேயே ருத்ரனை காட்ட, “என்னடா பண்ண இப்போ?”, என்று விஷ்ணு ருத்ரனை கேட்க, அவரோ நடந்ததை கூற, வித்யாவினால் பொறுக்க முடியவில்லை. “இவளோ பேசுற நீங்க ரொம்ப அக்கறையா பாத்துக்குறிங்களா உங்க பசங்கள? உங்க பொண்ணு என்ன படிக்கிற இப்போ சொல்லுங்க பாப்போம் இல்ல என் பொண்ணு என்ன படிக்கிறா? இந்த வீட்ல மாசம் எவளோ செலவு பண்றோம்? ம்… சொல்லுங்க, இதெல்லாம் விடுங்க, உங்க அப்பா அம்மா என்னென்ன மருந்து மாத்திரை எத்தனை மணிக்கு சாப்பிடுறாங்க? இதுல ஒரு கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியுமா? இல்லைதானே ஆனா இதெல்லாம் இதோ இங்க நிக்குறாளே இவளுக்கு தெரியும். இவ்ளோ ஏன் என்னோட பொண்ணுகிட்ட நானே சரியா பேசறதில்ல, ஆனா இவ தினமும் பேசுறா. இவ இல்லனா இன்னைக்கு இந்த வீடு வீடா இருக்காது. என்னைக்கோ நம்மளும் இங்க இருக்குற உயிரற்ற பொருட்களை போலத்தான் இருந்துருப்போம். நீங்க கேக்குறீங்களே உங்க மகன் அவன் கூட இவ சொன்னதுனால தான் லண்டன்ல இருந்து இந்தியா வர ஒத்துக்குட்டான். உங்களுக்கு நியாபகம் இல்லனா மறுபடியும் நியாபகம் படுத்துறன் உங்களால தான் இந்த வீட்டை விட்டு அவன் போனான். இப்போ தீடரினு பிள்ளை பாசமா? வீட்டை பாக்க வக்கு இல்ல இவரு நாட்ட எங்க இருந்து பக்க போறாரு”, என்று கடைசி வார்த்தையை முணுமுணுத்தாலும் அனைவருக்கும் நன்றாகவே கேட்டது.

"வித்யா, என்ன பேச்சு பேசுற நீ, உள்ள போ ருத்ரனை பத்தி பேசறதுக்கு நீ யாரு?', என்று வீடே அதிரும் படி கர்ஜித்து இருந்தார் விஷ்ணு. மனைவி மேல் காதல் இருந்தாலும் சகோதரின் மேல் அவருக்கு இருக்கும் அன்பு அன்னை தந்தையை விட ஒருபடி மேல் தான். ஒரே வயிறில் ஒரே கருவறையில் ஒரே நேரத்தில் இருந்தவர்கள், அவர்களின் பாசத்தை பற்றி பேசினால் சொல்லிமாளாது.

வித்யா தன்னவனை முறைத்துவிட்டு அவர்களின் அறைக்குள் சென்றுவிட, விஷ்ணுவும் அவரின் பின்னே சென்றுவிட, கொற்றவையும் கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து இருந்தார். ருத்ரன் மௌனத்தை மட்டும் தான் பதிலாக கொடுத்துவிட்டு அவரின் வீட்டில் உள்ள அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டார். இது எதுவுமே அறியாமல் அஞ்சனா கையில் ஆரத்தி தட்டோட பூஜையறையில் இருந்து வெளியே வந்தார். துணைவனின் கண்பார்வையை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று யூகித்து விட்டார், இது ஒன்றும் இந்த வீட்டில் புதிதல்லவே, ஆரத்தி தட்டை பார்த்திபனின் முன் நீட்டினார்.

'நீங்க எதுவும் கவலை படாதீங்க. கூடிய சீக்கிரம் இருண்டு இருக்குற இந்த வீட்ல கதிரொளி வீசும். எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்', என்று மேலே கண்ணாலேயே சைகை செய்ய! அங்கே நடந்த அனைத்தையும் முதல் தளத்திருந்து பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வீட்டின் இளவரசன்!

ஒரு இளவரசன் எப்படி இருக்க வேண்டும் என்று நம்மிடம் கேட்டால் நாம் சங்ககாலத்து இளவசர்கள் அல்லது ராஜாக்களை எடுத்துக்காட்டாக சொல்லுவோம், ஆனால் அவர்கள் யாவரையும் மிஞ்ச கூடியவன் இவன்! சாணக்கியனின் புத்திக்கூர்மையையும், அதே சமையம் சிறுத்தையின் வேகத்தையும் கொண்டவன். வில்லுக்கு விஜயனையும் தோற்கடிக்கும் சாமர்த்தியம் கொண்டவன். இவன் குறிவைத்தால் அது தப்பவே தப்பாது. இன்று வரை தோல்வி என்ற ஒன்றை இவன் சந்தித்ததே இல்லை. தன் அன்னைக்காக தன் தேசம் திரும்பியவன் தன்னவர்களின் உணர்வில் கதிரொளியை ஏற்றுவனா இல்லை கதிரொளியை தன்னை அறியாமல் பறிக்கப்போகிறானா?​
 
1724065855906.jpeg1724065855900.jpegஅத்தியாயம் 3

யாழும் சாந்தினியும் வீட்டை பூட்டிக்கொண்டு இருந்த சமயம் பார்த்து அவர்களின் வீட்டின் எதிரே உள்ள ஐந்து வயது சின்னஞ்சிட்டு அவர்களை பார்த்து சிரித்தது. அவர்களும் தமிழ் குடும்பம் தான். தினமும் காலையில் இவர்கள் போகும்போது டாட்டா காட்டுவாள். இவர்களுடன் பேசுவது அந்த சின்ன பதுமையின் குடுபத்தினருக்கு பிடிக்காது. இன்றும் அதேபோல அந்த சிட்டு டாட்டா காட்ட எத்தனிக்க அவளின் தாய் அங்கு வந்துவிட்டார்.

வந்தவர் அவரின் வாயிலிருந்து உதிர்த்த அத்தனையும் நஞ்சு தான். 'இதுங்க ரெண்டுங்களோட முஞ்சுல முழிச்சா நாள் விளங்குமா? ரெண்டுல ஒன்னாச்சு உருப்படியா இருக்கனும் இங்க ரெண்டுமேல குப்பையா இருக்கு. இதுங்களும் இதுங்க உடுப்பும், இப்பவே இப்படி ஆடுதுங்க இன்னும் இதுங்களுக்குலாம் நல்ல வாழ்க்கையும் ஒழுக்கமும் இருந்தா என்ன ஆட்டம் ஆடுவாளுங்களோ? இவளுங்க கிட்ட பேசக்கூடாதுனு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன், இவளுங்கள ஒருத்தி கண்ணு பட்டா கூட நீ வெளங்கமாட்ட", என்று நாக்கில் நஞ்சு தடவி பேசிக்கொண்டே அவரின் குழந்தையை தூக்கிக்கொண்டு திரும்பினார். அவருக்கு யாழ் பதில் கொடுக்க வாயை திறக்கும் முன் அவளின் கையை பிடித்து அழுத்தி அவளை அடக்கினாள் சாந்தினி.

அந்த பெண்மணி கழுத்தை திருப்பிக்கொண்டு போவதை பார்த்த யாழ், அவள் உள்ளே சென்ற பிறகு, சாந்தினியை திரும்பி பார்த்தாள். இன்னும் அவள் யாழின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு இருந்தாள். அவளின் விழிகள் பிரதிபலிக்கும் உணர்வுகள் என்னவென்று யாழினால் அறிய முடியவில்லை. 'ஏன் அக்கா என்ன பேசவிடல, என்ன பேச்சு பேசுது அந்த லேடி. நம்ப ஒழுக்கம் இல்லயாம் இவங்க புருஷன் ரொம்ப ஒழுக்கமோ சரியான பொம்பள பொறுக்கி இந்த அபராட்மெண்ட்ல இருக்க ஒரு பொண்ணுங்கள விடறது இல்ல. அவன அடக்க துப்பில்லை நம்மல வந்து பேசுறாங்க', என்று ஆக்ரோஷமாக பேசினாள். இது எதற்கும் சாந்தினி ஒன்றுமே சொல்லவில்லை. அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு மட்டுமே.

'வா போகலாம்', என்று தன் குரலின் ஆளுமை குறையாமல் சொன்னவள் பின்னால் யாழ் வருகிறாளா என்று கூட பார்க்காமல் மின்தூக்கி நோக்கி சென்று விட்டாள். அவளுக்கும் கோவம் இருந்தது தான், யாருக்கு தான் இருக்காது நாக்கு உள்ளது என்று எதையும் யோசிக்காமல் யாரை பற்றி வேண்டுமானால் அவர்கள் முன்னாடியே பேசும் மக்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர். அவர்களுக்கு பதில் கொடுத்தால் நம் நேரம் தான் வீண் ஆகும் என்று கடந்து செல்ல பழகியிருந்தாள். அவள் பின்னே யாழ் வந்து நிற்கவும் மின்தூக்கியின் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

யாழால் நடந்ததில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. அந்த பெண்மணி எப்போது இவர்களை பார்த்தாலும் பேசுமொன்று தான் இது. இருந்தாலும் இன்று அவளுக்கு இன்னும் வலியை கொடுத்தது. அவர்கள் என்ன பிழை செய்தார்கள், இப்படி ஒரு இழிநிலை எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது என்று அவளால் நினைத்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது. சற்றே தன்னை சமாதனம் செய்துகொண்டு கடைசி தளம் வந்தவுடன் இருவரும் கீழே இறங்கினர். அங்கே அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் யாழின் இருசக்கர வாகனமும் சாந்தினியின் நான்கு சக்கர வாகனமும் இருந்தது. சாந்தினி யாழையும் கார் வாங்க சொல்லி கொண்டு இருக்கிறாள் ஆனால் யாழிற்கு தான் அவளது இரண்டு சக்கர வாகனத்தின் மேல் உயிர், ஆதலால் இன்றளவும் அவள் அதை பற்றி யோசிக்கவில்லை. பல நேரம் இருவரும் சாந்தினியுடைய வாகனத்திலேயே சென்று விடுவார்கள். இன்று யாழ் அவர்களது அலுவலகத்திற்கும் சாந்தினி தனியாக மீட்டிங்கிற்கும் செல்ல வேண்டிய நிலைமையில் இருவரும் தனித்தனியே பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது.

'இன்னைக்கு ஆடிட்டர் வராரு நீ தான் எல்லாத்தயும் பாத்துக்கணும்', என்று யாழிற்கு கட்டளையிட, அவள் எங்கே அதையெல்லாம் கவனித்தாள், இன்னும் அந்த பெண்மணியின் பேச்சையே மனதில் அசைபோட்டு கொண்டு இருந்தாள். சாந்தினிக்கு கோவமாக வந்ததது, இப்படியே ஒருவர் பேசியதை நினைத்து கொண்டு இருந்தால் அப்படியே அதே இடத்தில் நாம் நின்று வேண்டியது தான். அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கொள்ளாமல் நம் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் சாந்தினியின் கொள்கை. வாழ்க்கை அவளுக்கு இருபத்தி ஒன்பது வயதிலேயே எண்ணிலடங்கா பாடங்களை கற்றுத்தந்துள்ளது. எத்தனை இழப்புகள், எத்தனை பேச்சுக்கள், அவற்றையே தாங்கியவளுக்கு இதெல்லாம் பொருட்டேயில்லை!

'அவங்க பேசுவதையே நினைச்சிட்டு இரு இன்னைக்கு வேலை உறுப்பற்றோம்', என்று கடுப்புடன் கூறினாள். அப்போது தான் சுயநினைவுக்கு வந்திருந்தாள் யாழ். தன்னை நிலைப்படுத்திக்கொண்டு 'சாரி... அக்கா', அவளின் குரல் தழுதழுத்தது. அவளின் கண்களில் நீர்த்துளிகள் எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழ காத்துக்கொண்டிருந்தனர். சாந்தினி அவளை மெதுவாக சென்று அணைத்து கொண்டாள். அந்த அணைப்பு அவளுக்கும் அச்சமயம் தேவைப்பட்டது. 'எல்லாம் சரி ஆய்டும். இந்த உலகம் நம்ப எப்படி இருந்தாலும் குறை சொல்லும் ஏனா அவங்களுக்கு அது தான் தெரியும். நம்ப தான் நம்மல மோட்டிவேட் பண்ணிக்காணோம். உன்னோட வெற்றி தான் அவங்களோட பேச்சு எல்லாத்துக்கும் நீ கொடுக்குற பதில். ஜஸ்ட் கீப் தட் இன் யுவர் மைண்ட் (Just keep that in your mind)', என்று அவளை தேற்றினாள். அவளின் தேற்றலின் போது கூட அவளின் குரலின் கம்பீரம் குறையவேயில்லை. ஐந்து வருடங்களுக்கு முன் ஆளுமையா அப்படி என்றால் என்ன என்று கேட்க்கும் பெண் இன்று ஆளுமையின் உச்சமாக இருக்கிறாள். நான்கு வருடங்களுக்கு முன் அவள் துவங்கிய கிரீன் எர்த் ப்ரீசெர்வ் (Green Earth Preserve) இன்று வளர்ந்து வரும் ஊறுகாய் சிறுதொழில் நிறுவனம். அந்த நிறுவனத்தை அவள் தனிமையில் உள்ள பெண்களுக்காகவும் வாழ்வில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் முன்னுரிமை கொடுத்து நடத்தி வருகிறாள். அந்த ஊறுகாய் நிறுவனம் இன்று நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன் அவள் ஒரு நிறுவனத்தின் தலைவியாக இருப்பாள் என்று யாரும் சத்தியம் செய்து சொல்லிருந்தாலும் நம்பி இருக்கமாட்டாள். ஆனால் இன்று, நடந்து கொண்டு இருக்கிறதே. அதே நிறுவனத்தில் தான் யாழும் எச்.ஆர் ஆக பணிபுரிந்து வருகிறாள்.

மும்பை வந்த புதிதில் சாந்தினி மட்டும் இல்லையேல் இன்று யாழ் உயருடன் இருந்திருப்பாளா என்பதே சந்தேகம் தான். அவளின் திறமை அறிந்து சாந்தினி அவளின் நிறுவனத்திலேயே ஒரு பதவியும் கொடுத்துவிட்டாள். அப்போது இந்த நிறுவனம் துவங்கி ஒரு வருடம் தான் முடிந்திருக்கும். யாழின் புத்திக்கூர்மையையும் இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் இந்தளவு வளர்ச்சி அடைய காரணம் என்று சொன்னால் மிகையாது. இருவரும் சிறுதலையசைப்புடன் விடைபெற்று சென்றனர்.

என்னதான் யாழை சமாதானம் செய்து விட்டு வந்தாலும் சாந்தினிக்கு தெரியும் இன்று முழுவதும் யாழின் நினைவுகள் எதை சுற்றி இருக்கும் என்று! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிகழ்வு நடவாமலேயே இருந்திருக்கலாமோ என்று இன்றளவும் அவள் நினைத்து கொண்டிருக்கிறாள். இப்படியே நினைவுகளின் சுழற்சியில் வாகனத்தை செலுத்திக்கொண்டு இருந்தவள் எப்படியோ அவள் செல்ல வேண்டிய எக்கோ பிளேட் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள். 'எக்கோ பிளேட்' இந்த நிறுவனம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இயற்கை உணவு பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் இந்த நிறுவனத்தின் சிறப்பம்சம். இதில் காய்கறி வகைகள், இயற்கையாக செய்யும் ஊறுகாய் மற்றும் காயவைத்து அரைக்கும் பொடிகள் என அனைத்தும் அடக்கம். இந்தியா அளவில் மட்டும் இல்லாமல் இன்று உலகளவில் அவர்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் இன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் இந்நிறுவனத்தின் கிளைகளும் உண்டு. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை பற்றி பேசினால் வாய் வலித்து விடும் ஹிமாலய வளர்ச்சி என்று சொன்னால் கூட ஈடாகாது. இப்பொது தான் சமீபத்தில் அவர்கள் சிறு தொழில் நிறுவனங்களையும் அவர்களுடன் சேர்த்துக்கொள்வதாக ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளனர். அதற்காக விண்ணப்பித்த எழுபத்தி ஆறு விண்ணப்பதாரர்களில் இருந்து வெறும் ஐந்தே பேரை தேர்வு செய்து இன்று அவர்களின் நிறுவனத்தின் இயக்குனர் முன்பு அவர்களை தங்கள் நிறுவனத்தை பற்றியும் அவர்களுக்கு ஏன் இந்த நிறுவனத்துடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் மற்றும் இரு நிறுவனங்களுக்கும் இதனால் கிடைக்க போகும் லாபங்கள் குறித்து பேச வேண்டும். அதில் இயக்குனருக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவர்களுக்கு தான் இந்த எக்கோ பிளேட் உடன் பார்ட்னெர்ஷிப் கிடைக்கப்போகிறது.

எப்படியாவது இந்த நிறுவனத்தின் பார்ட்னெர்ஷிப் கிடைத்துவிட்டால் அவர்களின் கிரீன் எர்த் ப்ரீசெர்வ் நிறுவனமும் பத்து படி உயர போவது உறுதி. தன் மனதில் நடக்கும் அத்தனை போராட்டங்களையும் ஒதுக்கி விட்டு தன் முழு சிந்தனையையும் இன்று அவள் செய்ய போகும் விளக்கக்காட்சியில் வைக்க தன்னையே தயார் படுத்தி கொன்றிருந்தாள். காரில் இருந்து வெளியே தன் மடிக்கணினி பையுடன் வந்தவள் நேரே வரவேற்பறையில் வரவேற்பாளர் முன் சென்று தான் வந்த காரணத்தை கூற அவளை மேல் இருந்து கீழ் பார்த்த வரவேற்பாளர் பெண் அவளை அந்த ஆறு மாடி கட்டிடத்தில் நான்காவது தளத்திற்கு போகச்சொன்னாள். போகும் போதும் அவளை ஒரு கேலி தோரணையில் பார்த்தாள்.

‘இந்த பொண்ணு ஏன் நம்மல இப்படி பார்க்குது’ என்று மனதில் நினைத்து கொண்டே சென்றவளுக்கு அவள் தன்னை ஏன் அப்படி பார்த்தாள் என்பதற்கு காரணம் நான்காம் தளத்திற்கு வந்ததும் தெரிந்து விட்டது. சாந்தினிக்கு இது எல்லாம் பழகிய விசயம் தான், வந்தததில் அவள் மட்டும் தான் பெண் மீதி நால்வரும் ஆண்கள். சாந்தினி அன்று கருப்பு பேண்டும் வெள்ளை ஷர்ட் மட்டும் மேலே ஒரு கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்தாள். அவளின் அழகிற்கு கூடுதல் அழகு அவளின் மிடுக்கு. வந்தவள் இறுதியாக இருந்த இருக்கையில் அமர அவளின் பக்கத்தில் இருந்த பெண் பித்தன் வேண்டுமென்ற அவளை இடிக்க, ஒரே பார்வை தான் பார்த்தாள் அப்பார்வையிலேயே பொசுக்கிவிட்டாள், அவள் கண்ணிற்கு நெருப்பை கக்கும் சக்தி மட்டும் தான் இல்லை, அப்படியே சென்று எதிர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான் அந்த அர்பன்.

இதை அனைத்தையும் தன் கணினி முன் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் அவன்! “இன்டெரெஸ்ட்டிங்” என்று அவன் இதழ்கள் அவனையும் மீறி முணுமுணுத்தது.

“அர்னவ், டேக் எவரிவொன் டு காணபாரன்ஸ் ரூம் (Arnav, take everyone to conference room)”, என்று ஆங்கிலத்தில் ஒலித்த அவனின் அதிகார குரலில் அவனின் தனிப்பட்ட உதவியாளர் அர்னவ் கூட ஒரு நொடி அதிர்ந்து தான் போனான். 'எஸ் சார்', என்று அவனிடம் பணிவுடன் விடை பெற்று அங்கே காத்துகொண்டு இருக்கும் ஐந்து பேரையும் காணபாரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்று அமரவைத்தான்.

அனைவரின் முன்னைலையில் பேச வேண்டும் எதிர் நிறுவனத்திரனரும் கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் அவர்களுக்கு முன்கூட்டையே அறிவிக்க பட்ட ஒன்று தான் இருந்தாலும் கடைசி நிமிடத்தில் சிறு பதட்டம் சாந்தினிக்கு இருக்கத்தான் செய்தது. இது எல்லாம் மனதுக்குள் தான், வெளியே சிறு உணர்ச்சியை கூட அவள் காட்டவில்லை. அப்போது உள்ளே வந்தான் அந்த நிறுவனத்தின் இயக்குனர். ஆறடி ஒரு அங்குல ஆண்மகன் அவன்! பின் இருபதுகளில் இருப்பது போல் தோற்றம் என்றாலும் முப்பது வயது ஆகிறது. பார்த்தால் ஒருவருக்கும் தெரியாது. அவனின் கூறிய வாள் விழிகளுக்கு யாரையும் வீழ்த்தும் ஆற்றலை அவனை படைத்தவன் அவனுக்கு கொடுத்து இருந்தான். சிவந்த மேனி பழுப்பு கண்கள் ட்ரிம் செய்யப்பட்ட தாடி, உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாய் வைத்த தேகம் என்று நடிகர்களே பொறாமை கொள்ளும் பேரழகன் தான்! மன்மதனை மிஞ்சிய மந்திரன் அவன்! அவனின் ஆளுமையில் தான் இந்த மொத்த நிறுவனமும் உயர்ந்து கொண்டே போய்க்கொண்டு இருக்கிறது. அனைத்தையும் கட்டி ஆளும் அதிபதி அவன்!

வந்தவுடன் தன் நாற்காலியில் அமர்ந்தவன், 'அர்னவ் லெட்ஸ் ஸ்டார்ட் (Arnav lets start)', என்ற குரலிலேயே அனைவருக்கும் கிலி எடுக்க ஆரம்பித்து விட்டது. 'சார், மிஸ்டர் அரோரா வில் ப்ரெசென்ட் பர்ஸ்ட் (Sir mister arora will present first)', என்றவனை கண் பார்வையாலேயே நிறுத்திவிட்டான். 'லேடீஸ் பர்ஸ்ட், அர்னவ் (Lady’s first Arnav)', என்றவனின் சொல்லில் லேடீஸ் என்பதில் அழுத்தம் இருந்தது. யாரும் கண்டுகொள்ள முடியாத இதழின் ஓரத்தில் சிறு புன்னைகையும் இருந்தது. அந்த புன்னகை எதற்கு என்பது அந்த அதிபதிக்கு மட்டும் தான் தெரியும். சாந்தினி முகத்தில் எதையும் காட்டவில்லை என்றாலும் மனதில் பதற்றம். ஆனாலும் தன் விளக்கக்காட்சியை துவங்கினாள். இருபது நிமிடங்கள் அவள் பேசியதில் அந்த அறையில் இருந்த அத்தனை ஆண்மகன்களும் அவளின் பேச்சை கண்டு பிரமித்து போனது என்னவோ உண்மை தான் அவன் ஒருவனை தவிர! அவளின் உரை முடிந்ததும் கேள்வி நேரம் ஆரம்பமானது. முதலில் இயக்குனர் தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதால், அனைவரின் கண்களும் ஒருசேர அவனை தான் பார்த்தது.

'மிஸ் சாந்தினி ரைட்? யுவர் ஸ்மால் ஸ்டார்ட் அப் ஹஸ் பின் ஒர்கிங் வித் டூ த்ரீ கம்பனிஸ் ஆல்ரெடி. வித் ஹொவ் மென் ஹவ் யு ஸ்லேப்ட் டு கெட் தீஸ் ப்ரொஜெக்ட்ஸ் (Miss Chandini right? your small start up has been working with two three big companies already. with how many men have you slept with to get these projects?) (உங்கள் சிறிய தொடக்கம் ஏற்கனவே இரண்டு மூன்று பெரிய நிறுவனங்களுடன் வேலை செய்து வருகிறது. இந்தத் திட்டங்களைப் பெற நீங்கள் எத்தனை ஆண்களுடன் உறங்கினீர்கள்?), என்று கொஞ்சம் கூட லஜ்ஜையே இன்றி கேட்டான். இதை கேட்டவுடன் அறையில் இருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர். ஆனால் சாந்தினியின் பதில் அந்த அறையில் உள்ள அனைவரின் கண்களையும் வெளியே வந்து விடும் அளவிற்கு இருந்தது. அந்த அதிபதியையே அசைத்து பார்த்தது அந்த பதில்!​
 

Saranyakumar

Active member
ஏன்டா ஒரு பொண்ணு தனியாக தொழில் தொடங்கி வளர்ச்சியடைந்தா உன்ன மாதிரி ஆண்கள் எல்லாம் இப்படித்தான் யோசிப்பிங்களா 😡
 
1724306438807.jpeg
1724306438815.jpeg
அத்தியாயம் 4

பதினைந்து நிமிடங்களாக தன் டிரேட்மில்லில் அதி வேகத்தில் ஓடி கொண்டு இருந்தான். அவனின் நாசிகள் சிவந்து, மேனி முழுவதும் அக்னி ஜிவாலையாய் கொதித்து, கண்கள் அனலை கக்கி கொண்டு இருந்தது. ஏதோ உடையும் சத்தம் கேட்டு தன் ப்ரத்யக உடற்பயிற்சியறையை விட்டு வெளியே வந்து பார்த்தவனின் கண்களில் விழந்தது என்னவோ அவனின் தந்தை அவனை கருவில் சுமந்தவளை ஏசிக்கொண்டிருக்கும் காட்சி தான். இந்த காட்சிகளை எல்லாம் பார்க்க கூடாது என்பதற்காகவே அவன் எட்டு ஆண்டுகளாக இந்த மண்ணில் கால் வைக்காமல் இருந்தான்.

'ராம்', என்ற சாந்தமான அழைப்பு அவனை நிதர்சனத்திற்கு கொண்டு வந்திருந்தது. இவ்வளவு நேரம் நெருப்பாய் தகித்து கொண்டு இருந்தவன், பனியாய் உருகிவிட்டான் அந்த ஒற்றை அழைப்பில்! டிரேட் மில்லை நிறுத்தி விட்டு அதில் இருந்து கீழே இறங்கி தன் அன்னையை பார்த்தான். "என்ன உங்க மாமியார் சொல்லி அனுப்புனாங்களா?", என்று கனிவுடன் அதே சமயத்தில் அழுத்தமாக கேட்டான். அவன் தான் பாட்டி தன்னை பார்த்து விட்டதை கவனித்து விட்டானே! அவர் தான் தாயிடம் சொல்லி தன்னை சமாதானம் செய்ய அனுப்பி இருப்பார் என்று யூகித்து கொண்டான்.

"உங்க அப்பா மாறியே உனக்கும் மூக்குக்கு மேல கோவம் வருதுடா', என்ற தன் அன்னையின் கூற்றில் மறுபடியும் கண்கள் சிவந்தன. அவனை ஈன்றவருக்கே அது கிலியை உண்டாக்க அவனின் மனநிலையை மாற்ற முயன்றார். 'சரி.. சரி... உன்ன உன் அப்பா கூட சேத்து வெச்சி பேசல. என் பெரிய மகன் கிட்ட பேசுனியா டா?", என்று கண்களில் நீர் தழும்ப கேட்டார்.

அவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து இல்லை என்று இருபக்கமும் தலை அசைத்தான். "இன்னைக்கு பேசுறேன் அம்மா", என்று நிறுத்தி கொண்டான். "என்ன இன்னைக்கு உன் ஸ்வீட் ஹார்ட்ட பாக்க போற போல?', என்று புன்முறுவலுடன் கேட்டார். "ஆமா இன்னைக்கு போய் பாக்கணும் இல்லனா என்னை வெச்சி செஞ்சிருவா", என்று தன் தலையை கோதிக்கொண்டான்.

"என்னை விட அவளைத்தான் புடிக்கும்ல?", என்று சற்று பொறாமையுடன் கேட்டார். அன்னையை பற்றி அறிந்தவன் அவன், கொஞ்சம் சீண்டி பார்க்க விரும்பினான். "ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?', என்று ஒரு பக்க புருவத்தை உயர்த்தி தன் இதழ் ஓரத்தில் மெல்லிய நக்கல் ததும்பும் புன்னகையோடு அவரை வினவினான்.

அதில் சற்று கடுப்பானவர், 'இதுக்கு தான் என் ஆரு வேணும்னு சொல்றது. அவன் கிட்ட இருந்து கத்துக்க, எப்படி மென்மையா இருக்கணும்னு", என்று கழுத்தை நொடித்து கொண்டார். "யாரு... நான்... அவன் கிட்ட இருந்து... கத்துக்கணுமா? சரி தான்', என்று தன் தாயை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தான்.

"என் உன் அண்ணண் தான?", என்று அவர் பதில் கொடுக்க, "அம்மா ப்ளீஸ் என்ன வேணா சொல்லுங்க அண்ணனு மட்டும் சொல்லாதீங்க, ஒரு வருஷம் எனக்கு முன்னாடி பொறந்துட்டா அண்ணனா?", என்று கத்தி விட்டான்.

கொற்றவை சத்தமாக சிரித்து விட்டு, "இன்னும் சின்ன பசங்க மாறியே இருக்கீங்க", என்று தன் தனையனின் தலையை வருட, "என் கிட்ட இவளோ பேசுறீங்க அந்த ஆள் கிட்ட பேசலாம்ல?", என்று சற்றே குரலை உயர்த்தி கேட்டான்.

"அறைஞ்சேன்னா பாரு, என்னடா ஆள் கீல்னு ஓழுங்க மரியாதையா அப்பானு கூப்டு இல்ல இந்த கொற்றவை காளியா மாறிடுவா", என்று அவரும் சீற, "இந்த பேச்சுலாம் என்கிட்ட வரைக்கும் தான், அங்க மிஸ்டர் ருத்ர தேவன பாத்தா ஒரு வார்த்தை சேத்து பேச முடியல", என்று முணுமுணுத்தது அவர் காதிலும் விழுந்தது.

"சரி போய் ரெடி ஆகிட்டு வா, உனக்கு புடிச்ச ரவா கிச்சடி தேங்கா சட்னி செஞ்சி வெச்சிருக்கா உன் மம்மி", என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கொற்றவை சென்ற திசையை பார்த்தவன், தன் அன்னையை நினைத்து நெஞ்சில் இருந்து குருதி வடிந்தது. எல்லாரிடமும் அன்பாக அரவணைப்பாக பேசும் அன்னை, தந்தை என்று வந்தால் மட்டும் நடுங்குவது ஏன் என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவனின் சிந்தனைகளை கலைத்தது அவனின் கைபேசியில் வந்த அழைப்புமணி. அதில் அழைத்தவர் யார் என்று பார்த்தவன், அதை எடுத்து காதில் வைத்தான். "குட் மார்னிங் சார், மீட்டிங் இஸ் அட் டென். ப்ளீஸ் கம் பிபோற் தட்", என்று மறுமுனையில் இருந்தவன் கூற, "ஓகே அர்னவ், ஐ வில் பி தேர் அரௌண்ட் நைன் தர்ட்டி", என்று அழைப்பை துண்டித்து இருந்தான்.

பின் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து தன் பிரமாண்ட அறையில் நுழைந்து கொண்டான். எவ்வளவு பெரிய அறை அது! இந்தியாவின் முன்னணி இண்டிரியர் டிசைனர் கொண்டு ப்ரேதேயகமாக அவனிற்காக அவன் செதுக்கிய சிறிய மாளிகையது! அவனின் அறையின் உள்ளேயே அவனிற்கான சிறிய அலுவலக அறை, வாக்-இன் கிலோசைட் என்று பிரமாண்டமாக வடிவமைத்து இருந்தான். எட்டு வருடங்கள் அவன் இங்கு இல்லை என்றாலும், துளி கூட அந்த அறையை மாற்றாமல் பார்த்துக்கொண்டாள் கொற்றவை என்று அவனுக்கு தெரியும்.

தன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டு, ஷவரின் கீழ் நின்றவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். தன்னையே சமன் செய்து கொண்டவன். குளித்து முடித்து, வாக்-இன் கிளாஸடில் உள்ளே சென்று நேவி ப்ளூ பாண்ட், வைட் ஷர்ட் மற்றும் அவனது நேவி ப்ளூ கோர்ட்டை அணிந்து கொண்டு அந்த பரம்பரைக்கே உரிய அரச தோரணையில் தயாராகிருந்தான். கீழே நேராக அவன் சென்றது டைனிங் ரூமிற்கு தான்.

அவன் வந்து அமர்ந்த அதே சமயம், அவனின் தந்தையும் அவனின் எதிரே வந்து அமர்ந்தார். ஒரு வினாடி இரு வேங்கைகளின் விழிகளும் மோதிக்கொண்டன. சட்டென தன் கண்களை திருப்பி கொண்டான். அவனின் தோள்களில் ஒரு கரம் படிந்தது. திரும்பி பார்த்தவனின் இதழில் அவனையும் மீறி விரிந்தன. "என்ன மகனே ஹீரோ மாதிரி ரெடி ஆகிருக்க... என் டார்லிங்க பாக்க போறியா?", என்று வினவியவர் அவருக்கு இரண்டு இட்லியை வைத்து விட்டு பின்பு கிச்சடியை எடுக்க வந்தவரின் கையில் படார் என்று கரண்டியாலயே அடித்து இருந்தார் அவரின் சரிபாதி.

"கிச்சடிய தொட்டிங்க கைய வெட்டிருவேன் பாத்துக்கோங்க", என்று விஷ்ணுவை மட்டுமின்றி ருத்ரனையும் பார்த்து சொன்னார். தன்னை மீறி அந்த வீட்டின் இளவரசனின் இதழும் விரிந்து கொண்டன. "என் பையனுக்காக தான் இதெல்லாம் சமைச்சேன். உங்களுக்கு இல்ல", என்று சொன்னவர் இட்லி கிச்சடி சாம்பார் சட்னி என்று விஷ்ணுவின் பட்கத்தில் அமர்ந்தவனின் தட்டில் நிறைத்துவிட்டார். விஷ்ணுவின் தட்டும் ருத்ரனின் தட்டும் வெறுமையாக இருந்தது.

கொற்றவை தான் வந்து விஷ்ணுவிற்கும் ருத்ரனிற்கும் பரிமாறினார். கிச்சடியை வைக்கும் பொது வித்யா தடுத்ததையும் மீறி விஷ்ணுவிற்கு பரிமாறினார். ஆனால் ருத்ரன் கிச்சடியை வேண்டாம் என்று மறுத்து விட்டார். "என்ன மகனே கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல? என் டார்லிங்க பாக்க போறியா இன்னைக்கு?", என்று மீண்டும் கேட்டார். "ம்ம்.. ஆமா", என்று இதழில் ஒரு புன்னகை அனைவரிடமும். "அவளை சீக்கிரம் இங்க வர சொல்லு அப்போ தான் எல்லாருக்கும் திமிரு குறையும்",, என்று மீண்டும் வித்யா ருத்ரனை பார்த்து கூற, அவருக்கு பொறுமை எங்கோ சென்று விட்டது. பாதி சாப்பிட்டு அப்படியே எழுந்தவரை விஷ்ணு தான் மீண்டும் அமர வைத்து சாப்பிட வைத்தார்.

"இந்தா அவளுக்கு புடிக்கும்னு கேரட் அல்வா பண்ணிருக்கேன் கொடுத்திரு", என்று கொற்றவை அவனிடம் நீட்ட, அதை வாங்கி கொண்டு எழுந்தவன், வித்யாவை பார்த்து "இன்னைக்கு அவன் கிட்ட பேசிடறேன் மம்மி நீங்க கவலை படாதீங்க", என்று உரைத்தவனின் உச்சி முகர்ந்தார் வித்யா. தான் சொல்லாமலேயே தன் மனதை படித்துவிட்டான் என்கிற உவகை அவர் முகத்தில் தெரிந்தது. "நீ எல்லாத்தையும் சரி பண்ணிடுவனு தெரியும் ராம்", என்று கண்ணீர் மல்க கூறியவரை தன் இடது கையால் அணைத்து கொண்டான்.

"மை சன் அது என்னோட பொண்டாட்டி", என்று விஷ்ணு மறுபடியும் வம்பிழுக்க, "டாடிய ஒரு வாரம் பெட் ரூம் உள்ள சேக்காதிங்க", என்று ஒரு போடு போட்டானே பார்க்கலாம், விஷ்ணுவின் கண்கள் வெளியே வந்து விடாத குறைதான்.

"ராம் எப்படி கார் டிரைவ் பண்ணுவ எட்டு வருஷம் ரைட் ஹாண்ட் டிரைவிங் பண்ணலல?", என்று அஞ்சனா வினவ, "இல்ல பாட்டி மாணிக்கம் அங்கிள கூட்டிட்டு போறேன். இனி கொஞ்சம் ரைட் ஹாண்ட் டிரைவிங் பழகணும்", என்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி எழுந்தவனை ஆர தழுவிக்கொண்டார். "நீ தான் எல்லாத்தையும் சரி பண்ணனும் ராம்", என்று கூறிவரின் கன்னத்தில் முத்தமிட்டவன், "சரி பண்ணிரலாம்", என்று கண்ணை சிமிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான். அங்கு அவனுக்காக அவனின் விலை உயர்ந்த ஜாகுவார் காரின் முன் நின்னிருந்தார் மாணிக்கம். அவரிடம் சிறு தலையசைப்பு கொடுத்து அவனின் காரினுள் ஏறி அமர்ந்துவிட்டு, அவனின் கைபேசியை எடுத்து ஒருவனுக்கு அழைத்தான்.

அவன் அழைத்த அடுத்த இரண்டாவது ரிங்கில் அடுத்த பக்கத்தில் இருந்தவன் எடுத்து இருந்தான். "சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க? பரவலையே என்னலாம் நியாபகம் இருக்கா?", என்றவனின் குரலில் நக்கல் ஒளிந்திருந்தது. "நீ ஏன்டா பேசமாட்ட ஜாலியா அய்ய்ம்ஸ் போபால்ல ஒர்க் பண்ற அதுவோம் பெஸ்ட் கார்டியோலோஜிஸ்ட் சொல்லவும் வேணுமா? வாழ்றடா", என்று சொன்னவன் முகத்தில் சற்று பொறாமை வந்து போனது. மறுபக்கத்தில் இருந்தவன் சத்தமாக சிரிக்க, "இது நான் ஜாலியா இருக்கறதுனால வந்த பொறாமை இல்ல அம்மா என்ன பத்தி நல்ல விதமா சொன்னதுனால வந்த பொறாமை", என்று சரியாக தன் சகோதரனை கணித்து இருந்தான்.

"ஆமாடா கண் முன்னாடி நான் கல்லு மாறி இருக்கேன், கண்ணு முன்னாடி இல்லாத உன்ன பத்தி கேட்டா எரியுமா எரியாதா?", என்று கேட்க, "அண்ணான்னு கூப்டுடா", என்று மறுபுறம் இருந்தவன் கூற, பொறுமை காற்றில் பறந்து போனது அவனிற்கு, "டேய் ஆரு என்ன அம்மா, புள்ள எல்லாம் சேத்து வெச்சி செயிரிங்களா? ஒரு வருஷம் முன்னாடி பொறந்துட்டா அண்ணாவா?", என்று கேட்டவனின் குரலில் கோவத்தை உணர்ந்தவன், தமையனை குளிர வைக்க, "சும்மா சொன்னேன்டா, நம்ம என்னைக்கு ப்ரதர்ஸ் மாரி பேசிருக்கோம் பிரண்ட்ஸ் மாறி தான இருக்கோம். உன்ன கலாய்க்க அப்படி சீண்டி பார்த்தேன்", என்று ஆரு சொல்லவும் தான் சற்று கோவம் மட்டுப்பட்டது.

"நல்லா பேசுற டாக்டரே, எப்போ வீட்டுக்கு வர்றதா உத்தேசம்", என்று ராம் கேட்டவுடன் அவனின் குரல் இறுகியது. "ஐ நீட் டைம்", என்று சொல்லி முடிப்பதற்குள், "ஒரு வருஷம் ஆச்சு நீ வீட்டுக்கு வந்து", என்று அவன் சீற, "எட்டு வருஷம் இந்தியா பக்கமே வராத நீ சொல்றியா அத", என்று இவனும் சீற, தன்னை ஆரு சமன் செய்து கொண்டு, "ராம் சாரி பட் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. கூடிய சீக்கிரம் வரேன்", என்று வைத்து விட்டான். ராமிற்கு இன்னும் கோவம் அடங்கிய பாடு இல்லை, "இவனுக்கு கால் பண்ண என்ன நானே செருப்பால அடிச்சிக்கணும்", என்று அவன் நினைத்து கொண்டு இருக்க கார் சட்டென்று நின்று விட்டது.

"என்ன ஆச்சு அங்கிள்?', என்று மணிகத்திடம் வினவியவன், "சாரி தம்பி ஒரு பாப்பா திடிர்னு பால் எடுக்க வண்டுச்சு சடன் பிரேக் போட்டுட்டேன். பின்னாடி வேற ஸ்குட்டில வந்த ஒரு பொண்ணு நம்ப கார இடிச்சிருச்சு", என்று அவர் கூறியவுடன், அவனுக்கு சுரென்று கோவம் வந்து விட்டது. அவனுக்கு மிகவும் பிடித்த கார் அவனை விட அவனின் ஸ்வீட் ஹார்ட்க்கு பிடிக்கும் என்று தான் அவன் வருவதற்குள் வாங்கி நிறுத்தி இருந்தான். கீழே இறங்கியவன் நேரே சென்று அந்த இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்தவள் முன் நின்று இவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் துவங்கி விட்டாள்.

"டோன்ட் யு ஹவ் காமன் சென்ஸ்?" என்று ஆரம்பித்தவள் தமிழில் பேச துவங்கினாள், "எனக்குன்னே வரானுங்க காலைல யாரு முகத்துல முழுச்செனோ இன்னைக்கு எல்லாம் என் உசுர எடுக்கவே வராங்க. மலை மாடு போல வளர்ந்து இருக்கான் அப்டியே புடிச்சு வெச்ச பிள்ளையார் மாரி நிக்குறான் பாரு. சாரி கேக்குறானா, ஆளு மட்டும் பாக்க ஆறு அடிக்கு மேல இருக்கான் அறிவு இருக்கா, சரியான சாவுக்கிராக்கி, நம்ப கழுத்தை அறுக்கவே காலைல வந்திருக்கான்", என்று அவனை பேசவே விடாமல் வார்த்தைகளை உதிர்த்தவள் நினைத்து கொண்டது என்னவோ அவனுக்கு தமிழ் தெரியாது என்று தான், ஆனால் அவன் அவளுக்கே தமிழ் பாடம் எடுக்கும் அளவிற்கு கரைத்து குடித்தவன் என்று தெரிந்து இருந்தால் இப்படி பேசிக்க மாட்டாளோ என்னவோ!

அவள் பேசுவதை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் அந்த சாணக்கியன். அவளை ஒரே நொடியில் முற்றிலுமாக அளந்து விட்டான். "என் ஹெட்லைட் ஒடஞ்சிருச்சு", என்று ஆர்ப்பரித்து கொண்டு அவனின் கோட்டை பிடிக்க வருபவளின் கையை பிடித்து மடக்கி இருந்தான் அவன். ஒற்றை கையில் அவளை முழுவதுமாக அடக்கி விட்டான். "என்ன பேச்சு பேசுற நீ", என்று பேச அவன் கர்ஜனையை ஆரம்பிக்கும் போதே அவளின் விழிகள் விரிந்து கொண்டன, ஆறடி ஒரு அங்குலத்தில், பார்ப்பதற்கு பாலிவுட் நடிகன் போல் இருக்கும் இவனுக்கு தமிழ் தெரியும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லையே! "உங்... உங்களுக்கு தமிழ் தெரியுமா", என்று கேட்டவளை, தன் கணல்களை கக்கும் கண்களை கொண்டு சுட்டு எரித்தவன். "இப்போ என்ன மொழில பேசுனேன்?", என்று அழுத்தத்தை குரலில் மட்டும் இல்லாமல் அவளை பிடித்து இருந்த கைகளிலும் கொடுத்தான்.

"என் ஷோல்டர் ஹெயிட் கூட இல்ல என்ன பேச்சி பேசுற? பொன்னாடி நீ? சரியான பஜேரி. யாரு நான் சாவுக்கிராக்கியா அப்போ நீ என்ன சொர்ணாக்காவா? பாக்கவோம் அப்படி தான் இருக்க? உனக்குலாம் யாரு டிரைவிங் லைசென்ஸ் கொடுத்தது? நியாயமா பாத்தா நான் தான் சண்டை போடணும் என்னோட புது கார டேமேஜ் பன்னிற்க. சரி நானும் போன பொது பொண்ணாச்சேனு பாத்தா ரொம்ப ஓவர் ஆஹ் பேசுற. வாயாடி அது, கூவ ஆறு. பாக்கறதுக்கு நல்லா சுண்டைக்காய் சைஸ்ல தர்பூசணி மாறி இருக்க.”, என்று மேலிருந்து கீழ் பார்த்து மீண்டும் தொடர்ந்தவன், “உன்ன சொல்லக்கூடாது, உன்ன பெத்தவங்கள சொல்லணும்.", என்று அவனும் பேச சட்டென்று அவளின் கண்கள் கலங்கி விட்டது. அவளின் முழு சக்தியையும் கொண்டு அவனை தள்ளி விட்டவள், "இங்க பாருடா என்ன பத்தி பேசுறதே தப்பு இதுல என் அப்பா அம்மாவை பத்தி பேசுன அப்பறோம் மரியாதை கேட்டுறோம். அப்பறோம் இந்த டி போட்டு பேசறதெல்லாம் வேற எவ கிட்டயாச்சு வெச்சிக்கோ.", என்று அவளும் சீற மாணிக்கம் இறங்கி வந்துவிட்டார்.

"தம்பி நேரம் ஆகுது கிளம்பலாம். இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு.", என்று அவனை திசை திருப்ப பார்த்தார். "இன்னைக்கு தப்பிச்சிட்டடி", என்று சொல்லி அவனின் காரில் அவன் ஏறுவதற்கு முன் அவள் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள். அப்படி போனவளின் அலுவலக ஐடி அவளின் பாக்கெட்டில் இருந்து விழுந்ததை அவள் இந்த வாக்கு வாதத்தில் கவனிக்கவில்லை. ஆனால் இது அந்த சாணாக்கியனின் கண்ணில் இருந்து தப்புமா, எடுத்து பார்த்தவனின் கண்களில் அவளின் பெயர் விழுந்தது. "யாழ்நிலா", என்று அவன் உதடுகள் அவனையும் மீறி அந்த பெயரை உதிர்த்தது. அந்த ஐடியை தன் பாக்கெட்டிற்குள் வைத்தவன் அப்படியே சென்று அவனின் காரில் ஏறிக்கொண்டான்.

"அங்கிள், எக்கோ பிளேட் ஆபீஸ்க்கு போங்க", என்று அவன் கூறிய அடுத்த இருபது நிமிடங்களில் அங்கே நிறுவனத்தை அடைந்தவன், நேரே சென்றது என்னவோ நான்காவது தலத்தில் இருக்கும் இயக்குனர் அறைக்கு தான்.​
 

Saranyakumar

Active member
அருமை 🥰எழுத்து சைஸ் இன்னும் கொஞ்சம் பெரிசாக இருந்தா நல்லாயிருக்கும்
 
5-1.jpg
1724491766601.jpeg
அத்தியாயம் 5

சாந்தினி அவனின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்து விட்டாள். எந்த பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியும்? இத்தனை பேர் மத்தியில் இப்படி ஒரு கேள்வி! “ஒரு பெண் உயர்ந்தால் அதற்கு அவள் ஆண்களுக்கு உடன்பட்டால் தான் முன்னேற முடியுமா? ஏன் சுய உழைப்பு என்பது பெண்களுக்கு இல்லையா ஆண்களுக்கு தானா?” என்று அவளின் மனதில் ரத்தம் கொதித்து கொண்டு இருந்தது. ஆழந்த மூச்சு ஒன்றுவிட்டு அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள், சாந்தினியின் கண்களில் சூரியன் குடிகொண்டு இருப்பது போல் இருந்தது.

(அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது தமிழில்)

"ரொம்ப நல்ல கேள்வி சார், இதுக்கு நான் பதில் சொல்றத விட நீங்க முதல்ல சொல்லுங்க, உங்க கம்பெனில என்ன விட அதிகமான நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு வேலை செஞ்சிருக்கீங்க. எத்தனை பொண்ணுங்களோட நீங்க படுத்து அந்த ஒப்பந்தத்தை கொடுத்தீங்க?", என்று கேட்டாலே பார்க்கலாம் அந்த அறையில் உள்ள அனைவருக்கும் மயக்கம் வராத குறைதான். "நீங்க உங்க நம்பர் சொன்னா நானும் என்னோட நம்பர் சொல்றேன்", என்று முடித்து விட்டாள்.

அந்த அரசனையே ஆட்டம் காண வைத்துவிட்டாள். இப்பொது அவன் ஆம் என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது அல்லவா? ஆம் என்று சொன்னால் அவன் தவறானவன் ஆகிவிடுவான், இல்லை என்று சொன்னால் இத்தனை பேருடன் வேலை செய்யும் நீ எதுவும் செய்ய வில்லை என்றால் நானும் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம் ஆயிற்றே!

அந்த அறை முழுதும் ஒரு நிமிட நிசப்தம், பின்பு அவளே அதை கலைத்தாள், "என்ன மிஸ்டர் ராம் இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? நீங்க கேள்வி கேட்டு முடிச்சா தான அடுத்த உள்ளவங்கலாம் கேட்க முடியும்", என்று தன் வலது புருவத்தை உயர்த்தி இதழில் யாருக்கும் தெரியா புன்னகை உதிர்த்தாள்.

"ரொம்ப ஸ்மார்ட்டா பதில் சொல்லிட்டீங்க மிஸ் சாந்தினி! இம்ப்ரெஸ்ஸிவ்!", என்று தொடர்ந்தவன், "நிறைய பொண்ணுங்க இந்த மாறி கேள்வி கேட்டா ஒன்னு அழுவாங்க இல்ல கோவப்படுவாங்க ஆனா நிதானமா யோசிச்சி பதில் சொல்லிருக்கிங்க. உங்களுக்கு சமயோஜித புத்தி ரொம்ப அதிகம் போல! இது உங்களோட எமோஷனல் ஸ்டேபிளிட்டிய சோதிக்க தான் இப்படி ஒரு கேள்வி. உங்க கம்பெனி கூட வேலை செய்ய நாங்க ஒத்துக்குறோம். காங்கிரகுலஷன்ஸ்!", என்று வாழ்த்து கூறி முடித்துவிட்டான்.

"இது என்ன சார் அநியாயமா இருக்கு பொண்ணுனதும் அவளுக்கு தூக்கி குடுக்குறீங்களா இந்த பார்ட்னெர்ஷிப்ப?", என்று கேட்டது வேறு யாரும் அல்ல சாந்தினியை உரசிய அதே அர்பன் தான்.

"நீங்க எவ்வளோ நியாயம்னு நான் தான் சிசிடிவில பாத்தேனே, உண்ணலாம் உள்ளேயே விட்ருக்க கூடாது", என்று உறுமியவனின் குரலில் அங்கு உள்ள அனைவரும் அதிர்ந்து விட்டனர். அவனின் பிஏ அர்னவை ஒரு பார்வை பார்த்தான். உடனே அவன் யாருக்கோ அழைக்க அடுத்த முப்பது வினாடிகளில் வாயிற்காவலிகள் வந்து அவனை இழுத்து சென்று விட்டனர்.

அதற்கு பின் அங்குள்ள யாருக்கும் அவனை எதிர்த்து பேசும் த்ராணி இல்லை. அவன் கூறுவதற்கு முன்பே அங்கே இருந்து அகன்று விட்டனர். "எப்போ ப்ராஜெக்ட் சைன் பண்லாம் மிஸ் சாந்தினி?", என்று அவளை பார்த்து அவன் முடிப்பதற்குள், "நான் இந்த ப்ராஜெக்ட் சைன் பண்றத பத்தி கொஞ்சம் யோசிக்கணும்", என்று அவள் முடித்து விட்டாள்.

"மிஸ் சாந்தினி, உங்களுக்கு தமிழ் தெரியும்ல", என்று புருவம் இரண்டும் இடுங்க கேட்டான். அவளிடம் தலையசைப்பு மட்டும் தான். "அர்னவ் ப்ளீஸ் லீவ்", என்று கூறியவன் மீண்டும் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவனால் ஏன் அவள் இந்த ஒப்பந்தம் வேண்டாம் என்கிறாள் என்பதை ஓரளவு யூகித்து இருந்தான்.

அர்னவ் வெளிய சென்ற உடன், "மிஸ் சாந்தினி தமிழ்லயே பேசலாம் நினைக்கிறன், உட்காருங்க", என்று கண்ணாலேயே அவளை அவளின் இருக்கையில் அமர்க்கச்சொன்னான். அவளும் அமர்ந்த உடன், அவனே தொடர்ந்தான், "இங்க பாருங்க மிஸ் சாந்தினி, உங்க அப்ளிகேஷன் ரொம்ப நல்லா இருந்துது அதனால தான் உங்கள முதல்ல பேச சொன்னேன். உங்கள அப்படி கேள்வி கேட்டது கூட உங்களோட ஸ்ட்ரோங் மைண்ட் செட் செக் பண்ண தான். உங்க கம்பெனில நீங்க பொண்ணுங்களுக்கு நிறைய முக்கியத்துவம் குடுக்குறீங்கன்னு தெரியும். நான் பிராமிஸ் பண்றேன் இந்த ப்ராஜெக்ட் ஆல கண்டிப்பா உங்க கம்பனிக்கும்", என்று ஒரு நொடி நிறுத்தியவன், அவளின் கயல்விழிகளை நோக்கி, "உங்களுக்கும் உங்க எம்பலோயீஸ்கும் ஒரு பிரச்னையும் வராது. இதுக்கு நான் காரண்டீ. கண்டிப்பா ஒரு பொண்ணா நீங்க நிறைய உங்க அனுபவத்துல பேஸ் பன்னிருப்பிங்க, ஒப்பானா சொல்லனும்னா சில ஈன பிறவிங்க நான் உங்கள கேள்வியா கேட்டத பண்ண சொல்லி கூட கேட்டு இருப்பாங்க இல்லையா?", என்றவன் அவனின் கூர் விழிகளை கொண்டு அவளின் ஆன்மாவை அலசி அறையும் பார்வை பார்த்தான். அவன் கேட்டவுடன் சாந்தினியின் கண்களில் ஒரு சிறு கண்ணீர் துளி சுரந்தாலும் அதை உடனே உள்வாங்கி கொண்டவளிடம் இருந்து, ஆமோதிப்பாக சிறு தலையசைப்பு மட்டுமே.

"ஓகே நான் போர்ஸ் பண்ண விரும்பல உங்கள மிஸ் சாந்தினி, இன்னைக்கு மண்டே, இந்த வெள்ளிக்கிழமை எங்க கம்பெனி அன்னிவெர்சரி ஒரு சின்ன பார்ட்டி வெச்சிருக்கோம். அன்னைக்கு உங்க டெசிஷன் சொல்லுங்க. நீங்க பார்ட்டிக்கு வந்தா எஸ்னு நான் எடுத்துக்குறேன் இல்லனா இட்ஸ் ஓகே", என்றவனின் வதனத்தில் ஆளுமையை பார்த்தாள், இவ்வளவு பேசியவனின் கண் சிறிது கூட அவளின் கண்ணின் கீழ் செல்லவில்லை. இப்படி எல்லாம் ஆண்மகனை காண்பது இன்றைய உலகத்தில் அரிதான ஒன்றாயிற்றே!

அதுவும் இது போன்ற பெரிய பதவியில் இருக்கும் தொண்ணூறு சதவீதம் ஆண்கள் அவர்களின் கீழ் வேலே பார்க்கும் பெண்களிடமே எத்தனை பாலியில் சீண்டல்கள் செய்கின்றனர் என்று அவள் பார்த்திருக்கிறாள் அல்லவா! அவளின் நிறுவனத்தில் வேலை பார்த்த பதினான்கு பெயரை அவளே வேலையைவிட்டு நிறுத்தி இருந்தாள் இது போன்ற பாலியல் சீண்டல்களால்! அவள் இப்பொது யோசிப்பதும் அவளிடம் வேலை செய்யும் பெண்களை பற்றித்தான். ஆனால் அவளின் மனதில் இருப்பதை அப்படியே படித்து சொல்லிவிட்டானே! அவளின் மனதில் யாழிடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்பது தான் அவளின் நிலைப்பாடு.

"எதாச்சு சொல்லுங்க மிஸ் சாந்தினி", என்று சொல்லிக்கொண்டே அவளிடம் அழைப்பிதழை நீட்டினான். அதை பெற்றுக்கொண்டவள், "நான் என்னோட கம்பெனில சில பேர் கிட்ட பேசிட்டு சொல்றேன் மிஸ்டர் ராம். மை ஹார்ட்டி விஷஸ் உங்க கம்பெனியோட செவென்த் இயர் அன்னிவெர்சரிக்கு", என்று மென்மையான புன்னகையுடன் அந்த அழைப்பிதழை வாங்கிகொண்டாள்.

அதை பிரித்து பார்த்தவளின் கண்கள் விரிந்தன, "ஹோட்டல் எமரால்டு பேலஸ்லயா உங்க கம்பெனியோட அன்னிவெர்சரி?", என்ற கேட்டவளின் கண்கள் வெளியே வந்து விடும் அளவிற்கு விரிந்துகொண்டன. “அந்த ஹோட்டலின் உள்ளே நுழையவே கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டுமே, அதிலும் இவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்றால் எத்தனை கோடிகள் செலவழித்திருக்க வேண்டும், ஒரு அறை பெறவே ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று கேள்வி பட்டு இருக்கிறாள். அப்பொழுது இந்த கொண்டாத்திற்கு ஒரு ஆண்டிற்கு முன்னாடி சொல்லிவைத்திருப்பார்களோ” என்று அவளின் மனதில் ஆயிரம் எண்ணம் சுழன்று கொண்டு இருப்பதாய் உணர்ந்து கொண்டான்.

"மிஸ் சாந்தினி, கம் அவுட் ஒப் யுவர் தாட்ஸ்", என்று அவளின் முன் சொடக்கிட்டவன், "நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு எனக்கு புரியுது அந்த ஹோட்டல் ஓட வோனேர் என்னோட கிளோஸ் ரிலேட்டிவ் அதனால தான் எனக்கு புக்கிங் ஈசியா கிடைச்சிது.", என்று அவளின் மனதின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து விட்டான்.

"நீங்க மனோதத்துவம் ஏதாச்சு படிச்சிருக்கீங்களா மிஸ்டர் ராம்?", என்று கேட்டேவிட்டாள். அவனது முத்து பற்கள் தெரிய சிரித்தவனின் கன்னங்களில் கன்னக்குழியும் விழுந்தது. அவனோ இரு பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டு, இல்லை என்பது போல் செய்ய, அவளையும் மீறி, "சிரிக்கும் போது அழகா தான் இருக்கார்", என்று அவளின் மனது அவனை ரசிக்கவும் தவறவில்லை.

"நிறைய மனுஷங்களா பாத்துருக்கேன் என்னோட அனுபவத்துல அதுவே அவங்கள படிக்கவும் கத்துக்கொடுத்திருச்சு", என்றான். அவளோ இப்பொது புன்னகை சிந்த, "சிரிச்சா அழகா இருக்கீங்க", என்று சொல்லி விட்டான். சட்டென அவனை பார்த்தவள், "ஹே நீங்க நினைக்கிற மாரி இல்ல ஒரு காம்ப்ளிமென்ட் அவ்ளோ தான்.", என்று சொன்னவனை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே அவளுக்கு தெரியவில்லை. அறைக்குள் வரும் போது அத்தனை ஆளுமை. அவனின் கேள்வியில் சற்று மனக்கசப்பு வந்தாலும், அவளின் மனதை படித்து மிருதுவாக பேசுகிறானே என்று நினைத்து கொள்ள மட்டும் தான் அவளால் முடிந்தது.

"ஓகே ஐ வில் லீவ் நௌ மிஸ்டர் ராம்", என்று அவனிடம் விடைபெற்று கைகுலுக்கும் அவளை பார்த்து அவன், "ஒன்", என்று சொன்னான். சாந்தினியின் கண்கள் புருவம் சுருங்கிட அவனை பார்த்தன. "எத்தனை பேரோட படுத்து இருக்கீங்கன்னு கேட்டிங்களே அதுக்கு தான் பதில் ஒன். ஆனா அது ஒர்க்காக இல்ல ரிலேஷனஷன்ஷிப்ல இருக்கும் பொது தான். நான் இதை சொல்லணும்னு அவசியம் இல்லை ஆனா என்னைக்கும் நான் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வின்னு இருக்கவே கூடாது அப்படி ஒரு கேள்வி யாராச்சு கேட்டா, நான் தோத்துட்டேன்னு அர்த்தம் எனக்கு தோத்து பழக்கம் இல்ல. இப்போ உங்க டர்ன்", என்று கண் சிமிட்டி அவன் சொன்னதும் ஸ்தம்பித்து விட்டாள்.

அவனை பதில் கேள்வி கேட்டு வாய் அடைக்க வைக்க வேண்டும் என்று அவள் கேட்ட கேள்விக்கு அவன் விடை அளிப்பான் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை, அதுவோம் இப்பொது தன்னிடமே பதில் கேப்பான் என்று அவள் யோசிக்கவேவில்லை. "அட... சில் மா நான் சும்மா தான் கேட்டேன்", என்று சொல்லியவன், நிலைமையை கொஞ்சம் சரிசெய்யும் பொருட்டு, "ஒன்னு முறைக்கிறீங்க இல்ல சிலை ஆகிடுறிங்க", என்று சொன்னவுடன் அவளும் நிதானத்திற்கு வந்து இருந்தாள். "ஓகே பை மிஸ் சாந்தினி" என்று அவன் சொல்லி முடிக்கும் முன், "ஸிரோ", என்று அவளிடம் இருந்து பதில் வந்தது. "நீங்க கேட்டதுக்கு பதில். பை மிஸ்டர் ராம்", என்று சொல்லி வெளியே வந்தவள் நேரே சென்றது அவள் அலுவகத்திற்கு தான்.

அன்று முழுவதும் சாந்தினியால் யாழை சந்திக்க முடியவில்லை இருவருக்கும் தனித்தனி வேலைகள் அவர்களின் கழுத்து வரை இருந்தமையால் மதியம் ஒன்றாக சாப்பிடக்கூட அவர்களால் முடியவில்லை.

சாந்தினி ஆறு மணி அளவில் வீட்டிற்கு வந்திருக்க, யாழ் ஏழு மணியளவில் வந்து சேர்ந்தாள். அவளின் முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது. "என்ன ஆடிட்டிங் ஓவர் ஆஹ்? ரொம்ப பிஸி போல மேடம்?", என்று சாந்தினி கேட்க அவளிடம் இருந்து மௌனம் மட்டுமே!

"என்னடி ஆச்சு என் இப்படி இருக்க?", என்று கேட்டுக்கொண்டே சமையல் செய்வதை நிறுத்தி விட்டு வந்து விட்டாள். "ஒன்னும் இல்ல", என்று ஆரம்பித்தவள் முடித்தது என்னவோ இன்று அவளை வசை பாடியவனின் முழு கதையை சொல்லி முடித்தவுடன் தான்.

அவள் முடித்தவுடன் சாந்தினியிடம் இருந்து அப்படி ஒரு சிரிப்பலை, அவள் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.யாழின் கண்களிலோ நெருப்பலை! "அக்கா...", என்று அவள் பற்களை கடிக்க, "சாரி சாரி... உண்மையா முடியல எப்பவோம் நீ தான் பேசி பேசி கொல்லுவ உன்னையே ஒருத்தன் ஓட வெச்சிருக்கானே. அதுவோம் அந்த சொர்ணாக்கான்னு சொன்னது ஹயிலைட்", என்று அவள் முடித்த உடன், யாழ் அவள் கழுத்தை திருப்பி கொண்டு அவளின் அறையில் நுழைந்து கொண்டாள். அப்படியும் சாந்தினி நிறுத்தவில்லை, "உனக்கு சரியானவன் அவன் தான் டி அடுத்த வாட்டி பாத்தா இன்ட்ரோ குடு", என்று சாந்தினி சொல்ல, அறையின் வாயிலை திறந்தவள், "அடுத்த வாட்டி பாத்தா அவனை அம்மில வெச்சி அரைச்சிடுவேன்", என்று சொல்லிவிட்டு சென்றாள்.

பின் இருவரும் சாப்பிட அமர்ந்த சமையம், "அக்கா...", என்று கம்மிய குரலில் இழுத்தாள். "என்ன?" என்று அவளிடம் முறைப்பு மட்டுமே அவள் இப்படி பேசுகிறாள் என்றால் அது தளிரை பற்றி அவளிடம் பேசுவரத்துக்கு என்று சாந்தினி அறிவாள். "அக்கா நீங்க தளிர் கிட்ட", என்று ஆரம்பிக்கும் போதே இருக்கையில் இருந்து எழுந்தவள் செல்லும்முன், "அவளுக்கு ஏதோ பிரச்னைனு நினைக்கிறேன்", என்று முடித்து இருந்தாள். சாந்தினி நின்று விட்டாள். யாழை தான் பார்த்தாள். "அவ சரியாவே பேசறது இல்ல கொஞ்ச நாளா ஏதோ சரி இல்லனு தோணுது. நீங்க ஒரு வாட்டி பேசி பாருங்களேன்.", என்றாள். சாந்தினிக்கு தெரியும் யாழ் தன்னிடம் உதவியை நாடுகிறாள் என்றால் ஏதோ தவறு என்று. தன் கைபேசியை எடுத்தவள் அடுத்த வினாடியே அழைத்திருந்தாள் தளிருக்கு!

அங்கோ அமெரிக்காவில் தளிரை இன்றைக்காவது துளிர்விக்க வெய்யோன் தன் கதிரொளிகளை படரவிட்டு உதையமானான். இக்கதிர் தளிரை துளிர்க்குமா இல்லை அவள் உணர்வை சுட்டெரிக்குமா?
 
Last edited:

Saranyakumar

Active member
சாந்தினியோட பதில் அதிரடி 🫡🫡தளிர் எப்படி அவனிடம் மாட்டினாள் அவளை காப்பாற்ற போவது யார்?
 
1724734030045.jpeg
1724734030039.jpeg
அத்தியாயம் 6

அமெரிக்காவில் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வெய்யோன் தன் கதிர்களை உதிர்க்க துவங்கினான். அக்கதிர் தளிரையும் துளிர்த்தது. தன் மலர் போன்ற கண்களை அம்மலரினும் மெல்லியவள் திறந்தாள். அவள் கண்கள் கண்டது என்னவோ தன்னை அந்த கயவன் அணைத்து கொண்டு அவளின் கழுத்தில் முகத்தை புதைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் காட்சி தான். தன்னை அவனில் இருந்து பிரித்து எடுக்கவே பெரும்பாடாகி போனது. அவளின் வெற்றுடலை வெள்ளை போர்வையால் மறைத்து கொண்டு எழுந்து அவனையே பார்த்தாள்.

சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள், இவன் தான் மூன்று மாதங்களாக அவளின் உணர்வுகளை தினம் தினம் கொன்று அதை பூசித்து கொண்டு இருக்கிறான் என்று! தூங்கிக்கொண்டு இருக்கும் அவனின் அழகிய தேஜஸான முகத்தில் அப்படி ஒரு சாந்தம், ஆறடி இரண்டு அடி ஆண்மகன் அவன், ஆஜானுபாகுவான உடல்வாகு கொண்டவன் , ஒரே கையால் அவளை அடக்கி விடும் அளவிற்கு கைகளை உடையவன், அழகன் என்று வார்த்தையால் சொல்லிவிட்டால் போதாது. அவளுடன் தான் ஆறு மாதங்களாக வேலை செய்கிறான், ஆனால் வேறு பிரிவில்! முதல் மூன்று மாதங்கள் அவளிடம் நன்றாக பழகிக்கொண்டு இருந்தான். அவனும் தமிழ் என்பதால் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இவளே அவனிடம் மயங்க ஆரம்பித்த தருணம் அது! அனைவரையும் மயக்கும் மாயக்கண்ணன் அவன் என்று தான் நினைத்து இருந்தாள். ஆனால் அவன் ஒரே நாளில் அவளின் ஆன்மாவையே குத்தி கிழிக்கும் காலனாவான் என்று பாவை அவை நினைக்காதது தான் விதி போல! அவளின் நன்றியுணர்வு இன்று அவளின் சுயஉணர்வையே பதம்பார்த்து கொண்டு இருக்கிறது.

தன் சிந்தனைகளை புறம் தள்ளி விட்டு குளியலறைக்குள் நுழைந்தவளை தண்ணீர் தழுவும் முன் அவள் கண்ணீர் கண்களில் இருந்து மேனிகளை தழுவியது. எப்போது தான் இந்த சிறையில் இருந்து எனக்கு விடுதலையோ என்று இறைவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தாள். குளியல் முடித்து வெளியே வந்து தன் அலுவலக உடைகளை அணிந்தவள், நேரே சென்றது என்னவோ சமயலறைக்குள் தான். சமைக்க வில்லை என்றால் அதற்கும் அந்த அரக்கன் இவளை சொற்களால் வதைத்து விடுவானே! சமைக்க ஆரம்பிக்கும் போது தான் அவளின் அலைபேசி அவளை அழைத்தது. யார் அழைத்து இருக்கிறார் என்று பார்த்தவளின் கண்கள் தாராளமாக விரிந்து கொண்டது. அவளின் சகோதரி ஏழு மாதங்கள் கழித்து அவளை அழைக்கிறாள், அவள் இங்கே வரும் போது கூட ஏர்போர்ட்டிற்கு அவளை வழி அனுப்ப வரவில்லை. அதை எடுத்து காதில் வைத்தவுடன், "அ ... அக்கா", என்று நா தழுதழுக்க பேச, மறுமுனையில் ஒரே கேள்வி தான், "என்ன ஆச்சு தளிர்?", என்று கணீர் என்று ஒலித்தது சாந்தினியின் குரல். தளிர்க்கு புரிந்தது யாழ் சாந்தினிடம் ஏதோ சொல்லிருக்கிறாள் ஆகையால் தான் இவ்வளவு நாட்கள் அழைக்காத தமக்கை இன்று அழைத்துஇருக்கிறாள் என்று. "அக்.. அக்கா ஏதும்..", என்று அவள் ஆரம்பிக்கும் போது அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அவளின் கழுத்தில் முகம் பபுதைத்து சிறு சிறு முத்தங்களாக வழங்கிக் கொண்டிருந்தான் அந்த அசுரன். உடனே திரும்பியவள், "ப்ளீஸ்", என்று கண்ணீருடன் உதட்டில் முணுமுணுக்க, அவனின் இதழின் ஓரத்தில் ஒரு நக்கல் புன்னகை. கண்களாலேயே கைபேசியை வைக்க ஆணை பிறப்பித்தான்.

அவளுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. ஏழு மதங்கள் கடந்து பேசும் சகோதரி ஒரு புறம், தன் கண்முன்னே மிரட்டும் மிருகம் ஒரு புறம், இருவருக்கும் நடுவில் புள்ளிமானை அவள். "ப்ளீஸ் ஒரு நிமிஷம்", என்று கண்களில் கண்ணீர் வடிய அவனிடம் உதட்டசைத்து மன்றாடினாள். அதற்கெல்லாம் அசைபவனா அவன், நெஞ்சில் ஈரம் இல்லா அரக்கனாயிர்றே, "கால்ல கட் பண்றியா இல்ல கத்தவா?", என்று அவனும் கேட்க, அவளுக்கோ தூக்கிவாரி போட்டது. "தளிர் ஆர் யு தேர் ?", என்று சாந்தினி ஒரு புறம் கத்த அவளின் கண்களில் இதற்கு மேல் அழுவதற்கு கூட கண்ணீர் மீதமில்லை. தன் மனதை கல்லாக்கி கொண்டாள். இப்படி ஒரு கயவனிடம் மாட்டி சீரழிவது தன் தமக்கைக்கும் தோழிக்கும் தெரிந்தால் அவர்களால் நிச்சயம் நிம்மதியா இருக்க முடியாது அதுவும் யாழ் மொத்தமாக உடைந்து விடுவாள் என்று அவளுக்கு நன்றாக தெரியும்.

"இப்போ எதுக்கு கால் பண்ணீங்க? இவளோ நாள் இருக்கேனா செத்தேனானு ஒரு வாட்டி யோசிச்சீங்களா? இல்ல தானே, அப்போ இனியும் செத்துட்டேன்னு நினைச்சுக்கோங்க. நான் யாழ் கிட்ட வர மண்டே பேசிக்குறேன்", என்று சொல்லி முடித்தது மட்டும் தான் அவளுக்கு நியாபகம் இருந்தது. தரையில் முட்டிபோட்டு அமர்ந்தவள், கதறிய கதறலில் கல்லும் கண்ணீர் வடிக்கும் அப்படி ஒரு கதறல். ஆனால் அவளின் முன் நிற்பவன் கல் அல்லவே கயவன், கொடூரன் அவனுக்கு பொட்டு அளவும் இதயத்தில் ஈரம் இல்லையே. இதயம் இருந்தால் தானே ஈரம் இருக்கும் அப்படி பட்ட ஒருவனை இன்று தான் தளிர் பார்க்கிறாள்.

"அச்சோ.. என்ன ஆச்சு மதி?", என்று கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் கேட்ப்பவனை அவளால், முறைக்கத்தான் முடிந்தது. "ஏய்... இந்த கண்ணகி மாறி முறைக்கிற வேளை எல்லாம் வேற எவன் கிட்டயாச்சு வெச்சிக்க. கோ அண்ட் மேக் தி பிரேக்பாஸ்ட்", என்று அவளுக்கு கர்ஜனையாக ஆணை பிறப்பித்து சென்றவன் நேரே சென்று குளியலறையில் நுழைந்து கொண்டான். தண்ணீருக்கு கீழ் நின்ருந்தவனின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். குளியலறை சுவரை குத்தியவன், "என்ன இப்படி மிருகமா மாத்திட்டியேடி", என்று அவனின் கண்ணிலும் நிற்காமல் கண்ணீர் வடிந்தது. அரக்கனுக்கும் கண்ணீர் சுரக்கும் என்று அவன் குளியலறைக்கு மட்டும் தான் தெரியும்.

தளிர் தன்னையே ஒரு வழியாக சமாதானம் செய்து கொண்டு எழும்பினாள். சமையலறையில் நுழைந்து சமைத்து முடித்தவளின் முகத்தில் கடுகு அளவிற்கும் முகத்தில் உணர்வுகள் இல்லை. அவளை மொத்தமாக உணர்ச்சியற்றவள் ஆக்கி விட்டான். அவனிற்காக சமைத்து முடித்து அனைத்தையும் உணவு உண்ணும் மேசையில் வைக்கும் போது அவனும் வேளைக்கு ஆயுத்தமாகி வந்திருந்தான்.

மேசையில் வந்து அமர்ந்தவனுக்கு அவள் உணவை பரிமாற, அவளிடம் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை. உணர்ச்சி இருந்தால் தானே மேலும் வதைப்பாய் என்று அவள் எண்ணியிருக்க, அவளை மொத்தமாக மறிப்பது தானே இவனின் எண்ணம். "நீயும் உட்காந்து சாப்பிடு", என்று அவளுக்கு ஒரு தட்டை எடுத்து வைக்கும் போதே, "எனக்கு பசிக்கல", என்று அவள் சொல்லி விட்டாள்.

"பசிக்கலயா இல்ல சாப்பாட்டுல விஷம் வெச்சிருக்கியா?", என்று ஆலகால விஷத்திலும் கொடிய விஷமான அவனின் நாக்கை கொண்டு வார்த்தைகளை வீசினான். அவன் வீசிய வார்த்தைகள் ஒரு நாள் அவனிற்கே திரும்பினால் என்ன ஆகும் என்று அவன் யோசிக்காமல் விட்டது தான் விதியின் சதியோ?

"உங்களுக்கு விஷம் வச்சிட்டா அப்பறோம் எனக்கு பணம் யாரு தருவா வீர் சார்? தங்க வாத்தை அறுத்து போட்டுட்டா அப்பறோம் ஒன்னுமே இருக்காதே?", என்று அவனிற்கு அவனின் தோணியிலேயே பதில் அளித்தாள். பதில் அளிக்க பழக்கி இருந்தான். தளிர் இன்று வரை ஒருவரையும் மனக்கசப்பு ஆகும் படி பேசியது இல்லை அவளை அவளின் சொந்த சகோதரியிடமே இப்படி பேசவைத்துவிட்டானே என்கிற ஆதங்கம் அவளின் தோணியில் தெரிந்தது.



"சபாஷ், உன்ன வாய் இல்லாத பூச்சினு நினைச்சிருந்தேன், ஆனா இப்போல்லாம் நல்லா பேச கத்துகிட்ட போல", என்று அவனின் ஒற்றை புருவத்தை உயர்த்தி நக்கலுடன் வினவ, "எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்தது தான் வீர்", என்று அவனின் முகத்தை கூட பார்க்காமல் பதில் அளித்தாள்.

"வெறும் பேச மட்டும் நான் உனக்கு சொல்லித்தராலேயே", என்று நிறுத்தியவன் அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான், அந்த பார்வையை பார்த்தவளுக்கு சீ.. என்று ஆகி போனது. அதற்கு மேல் அவளுக்கு அவனிடம் வாதிட உடலளவிலும் மனதளவிலும் தெம்பு இருக்கவில்லை. ஆகையால் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

அவனிடம் உயிருடன் வாழவாவது அவளுக்கு சக்தி வேண்டுமே! "டிட் யு கெட் யுவர் பிரியட்ஸ்?", என்று அவளின் உள்ளே ஊடுருவிச்செல்லும் ஒரு பார்வை பார்த்தான். "எஸ் டுடே மோர்னிங்", என்று கண்ணீர் உருண்டோட அவனுக்கு பதில் அளித்தான்.

அவளுக்கு இன்றும் நினைவிருக்கிறது அவளை முதன்முதலில் மொத்தமாக கொள்ளையிட்ட பின் அவன் கூறிய வார்த்தைகள். "உன் வைத்தூல எப்பவோமே என் பிள்ளை புருவாக கூடாது. அப்படி மட்டும் உருவாச்சு அது என் இரத்தமா இருந்தாலும் பரவாயில்ல நானே என் கையால கொன்னுடுவேன் டி", என்று அவன் அடிக்குரலில் உறுமியது அவளின் செவிகளில் இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது.

"அப்போ பைவ் டேஸ்க்கு ஒன்னுமே இல்லல", என்று மனசாட்சியே இல்லாமல் கேட்ப்பவனை என்ன செய்தால் தகும் என்று அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. "நீங்களா இப்படி எல்லாம் பேசுறீங்க வீர்? நாலு மாசத்துக்கு முன்னாடி என் பர்த்டே வந்ததுபோ நீ எப்பவோமே சிரிச்சிட்டே இருக்கனும் மதி அந்த முழுமதி போலன்னு பேசுன நீங்களா என்ன இப்படி ட்ரீட் பண்றீங்க? நான் சிரிச்சி மூணு மாசம் ஆச்சு வீர் உங்களுக்கு நான் கடைசியா எப்போ சிரிச்சேனு நியாபகம் இருக்கா?", என்று மனபாரத்தை யாரிடமாவது கொட்ட வேண்டும் என்று அவனிடமே கொட்டிவிட்டாள். ஆம் உண்மை தான் மூன்று மாதங்களில் அவள் எத்தனை முறை சிரித்தாள் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். அவனிற்கே ஒரு மாறி ஆகிவிட்டது அவள் கேட்ட விதம்.

"மதி", மெல்லிய குரலில் மூன்று மாதங்களுக்கு முன் எப்படி அவளை அழைத்தேனோ அதே தோணியில் அழைத்திருந்தான். அவளும் அவனை கூர்ந்து பார்த்தாள், "நான் நாளைக்கு அவுட் ஒப் ஸ்டேஷன் கிளம்புறேன் போர் எ வீக். பாத்துக்கோ", என்று சொல்லி மேசையைவிட்டு நகர்த்தவன் பின்பு என்ன நினைத்தானோ அவளின் முகத்திற்கு மிக நெருக்கமாக வந்து, "நான் இல்லாதபோ உன் அக்கா இல்ல யாழ்க்கு கால் பண்ணி ஏதாச்சு சொன்ன அவங்களும் இருக்க மாட்டாங்க நீயும் இருக்க மாட்ட", என்று மிரட்டிவிட்டு தான் சென்றான்.

அவன் வேலைக்கு கிளம்பி இருக்க, உடனே குளியலயறையில் புகுந்து கொண்டு அவள் நேற்று இரவு இந்த கயவனுக்கே தெரியாமல் செய்த பிரேக்னன்சி கிட்யை எடுத்தாள். ஆம் கர்பமாக இருக்கிறாள். நேற்றே உறுதிசெய்து கொண்டாள். அவளால் இந்த சிறு மொட்டை இந்த அரக்கனின் குழந்தையாக பார்க்க முடியவில்லை. தன்னுள் தனக்காக உதித்த துளிராக தான் பார்க்க தோன்றியது. அக்கணமே முடிவெடுத்து விட்டாள். எப்பாடு பட்டாவது இக்குழந்தையை இப்பூவுலகில் ஜனித்திட வேண்டும் என்று!

"அம்மா எப்டியாச்சு உன்ன அந்த ராட்ஷன் கிட்ட இருந்து காப்பாத்திடுவேன். என்னைக்குனு இப்போதைக்கு கடவுள் குடுத்த கிப்ட் ஆஹ் தான் நான் உன்ன பாக்குறேன். ஐ வில் நாட் லேட் யூ டௌன்", என்று ஒரு மாதமே ஆன அவளின் மகவுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.

"எனக்கு நம்பிக்கை இருக்கு உன் பெரியம்மா ஒன்னும் முட்டாள் இல்லை. உன் அப்பா... ச்ச... அவன்லாம் உனக்கு அப்பா இல்ல உனக்கு வெறும் அம்மா மட்டும் தான். உன் பெரியம்மா இந்நேரத்துக்கு கண்டிப்பா கண்டு புடிச்சிருப்பாங்க நான் பிரச்சனைல இருக்கேனு. இந்த அரக்கனை விட ரொம்ப ரொம்ப புத்திசாலி உன் பெரியம்மா.", என்று அவளின் குழந்தையிடம் பேசிக்கொண்டிருந்தவள், "அக்கா ப்ளீஸ் சேவ் மீ", என்று மானசீகமாக சாந்தினியிடம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தாள்.

தளிரினுள் துளிர்த்த உயிர் அவள் கைகளில் முழுமையாக கிடைக்குமா? இல்லை வீர் எனும் வேடனிடம் அவனின் வாரிசும் சேர்த்து வேட்டையாடப்பட போகிறதா? சாந்தினி தளிரை தழைக்க செய்வாளா?

இனியாவது தளிர் துளிர்க்குமா?
 

Saranyakumar

Active member
வீர் ஏன் தளிரை இவ்வளவு கஷ்டப்படுத்துறான்? சாந்தினி தளிரை காப்பாத்திருவாளா 😒😒
 
1725013107133.jpeg
1725013818806.jpeg
அத்தியாயம் 7

இங்கே தளிர் அவளின் அழைப்பை துண்டித்தவுடன், சாந்தினியின் விழிகள் அவளையும் மீறி கண்ணீர் சிந்தின, யாழ் அவளின் கண்களை பார்த்து ஒரு நொடி அதிர்ந்துவிட்டாள். சாந்தியின் கண்களில் கண்ணீரா? அவள் சாந்தினியுடன் இருந்த மூன்று வருடங்களில் இரண்டே முறை தான் அவள் கண்ணீர் வடித்து பார்த்திருக்கிறாள். முன்றாவது முறையாக இன்று பார்க்கிறாள். "அக்கா என்ன ஆச்சு? தளிர்க்கு...", என்று அவள் முடிக்கும்முன், "அவ எங்கயோ மாட்டிற்கா அதுவோம் மாட்டவே கூடாத இடத்துல", என்று முடித்திருந்தாள் சாந்தினி.

யாழின் கண்களில் சட்டென நீர் உருண்டோட, "ஹே இப்போ எதுக்கு அழுகுற? நம்ப இரண்டு பேரோட யூஸ் விசா இன்னும் வேலிட் ரைட்?", என்று யாழை பார்த்து வினவ, "இன்னும்... எயிட் யெர்ஸ்... வேலிடிட்டி இருக்கு", என்று அவள் விசும்பலுடன் பதில் அளிக்க, சாந்தினிக்கு பொறுமை காற்றில் பறந்து போய் விட்டது.

"இதுக்கு மேல அழுதா வாயிலேயே போடுவேன் பாத்துக்க. இப்போ என்ன உனக்கு, நீ தான் அவளை வற்புறுத்தி கலிபோர்னியா அனுப்பி வைச்ச அந்த குற்ற உணர்ச்சியா? இல்லனா மட்டும் உன் நண்பி அப்படியே தைரியசாலி எல்லாத்தையும் தனியா சமாளிச்சிருவா அப்படித்தானா?", என்று அவளிடம் கோவத்தை காட்ட, யாழ் பயத்தில் மேலும் கீழும் தலையை ஆட்ட அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. "உன்ன என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல டி உனக்கு காலைல பாத்த அந்த நல்லவன் தான் கரெக்ட்", என்று அவள் சொல்லியவுடன், கண்ணீர் ததும்பிய கண்கள் இப்பொது கனலை கக்கியது.

"இப்போ எதுக்கு அந்த நாதாரிய பத்தி பேசுறீங்க? கடுப்பா இருக்குது பனமரம் சைஸ்ல வளந்து இருந்தான் ஆனா கொஞ்சம் கூட அறிவு இல்லை. பொண்ணு கிட்ட எப்படி பேசணும்னே தெரியல. என்ன சொர்ணாக்கான்னு சொல்றான். பரதேசி", என்று மூச்சு விடமால் அவள் திட்ட, "போதும் போதும் இந்தா தண்ணி குடி", என்று அவளிடம் அவள் தண்ணீர் பாட்டிலை நீட்ட, அதை யாழ் அருந்தி கொண்டிருக்கையில், "நீ மட்டும் என்ன கம்மியவா பேசிற்க?", என்று அவளும் வினவ, "அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன் அவன் என்னடானா எனக்கே கிளாஸ் எடுக்குறான், மறுமடியும் அவனை பாத்தேன் கைமா தான்", என்று அவளும் பொருமிக் கொண்டாள்.

"சரி அத விடு, அடுத்த மாசம் கலிபோர்னியா போக இரண்டு பேருக்கும் டிக்கெட் போடு", என்று சாந்தினி கட்டளையிட, "வாவ் அப்போ இரண்டு பேரும் போக போறோமா? நான் தளிர் கிட்ட சொல்லட்டுமா?", என்று அவள் வெகுளியாய் கேட்க, "உனக்கு அறிவு இருக்கா இல்ல இருந்தும் இல்லாத மாரி நடிக்கிறியா? அவளே ஏதோ பிரச்சினையில்ல இருக்கா இதுல அவ கிட்ட போய் சொல்லு இன்னும் மட்டமா ஆகிடும் அவ நிலைமை. கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி, யாருக்கும் சொல்லவேணாம் புரியுதா?", என்று சாந்தினி முறைக்க, அவளிடம் இருந்து வெறும் தலையசைப்பு மட்டும் தான்.

"மூஞ்ச தூக்கி வச்சிக்காம போய் டிக்கெட் புக் பண்ணு. உனக்கு கலிபோர்னியா ரொம்ப புடிக்கும்ல?", என்று அவள் சற்று சகஜமாக பேச இவளும் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருந்தாள். "ஆமாம் ரொம்ப ரொம்ப புடிக்கும். அக்கா லாஸ்ட் டைம் நம்ப நியூயார்க் தான் போனோம் அதுவோம் டூ யெர்ஸ் முன்னாடி, எனக்கு கலிபோர்னியா போக ரொம்ப ஆர்வமா இருக்கு. சின்ன வயசுல இருந்தே லாஸ் ஏஞ்சல்ஸ் போனும்னு ஆசை.. படம்லாம் பாத்து இப்போ என் கனவு நினைவு ஆகப்போகுது", என்று துள்ளிக் குதித்தவளுக்கு தெரியவில்லை பாவம் அவள் நினைத்தாலும் அவள் கனவான கலிபோர்னியா போக போவதில்லை என்று!

இவ்வாறாக அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு உறங்கிவிட, அடுத்த நாள் காலையில் எழுந்தவர்கள் எப்போதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பினர். இன்று இருவரும் ஒன்றாக சாந்தினியின் காரிலேயே சென்றனர். உள்ளே நுழைந்ததும், "யாழ் கம் டு மை கேபின்", என்று அவள் கட்டளையிட, யாழும் அவளின் பின்னால் அவளின் அறையில் நுழைந்தாள். "எஸ் மேம்", என்று அவள் வந்து முன் இருக்கையில் அமர்ந்தாள். வெளியே எப்படியோ ஆனால் அலுவலகத்தில் யாழ் எப்பொழுதும் சாந்தினியை மேம் என்று தான் அழைக்க வேண்டும் தெரியாமல் அக்கா என்று அழைத்தால் கூட அன்று அவளுக்கு அர்ச்சனை செய்து விடுவாள்.

"யாழ் நேத்து எக்கோ பிளேட் போயிருந்தேன்ல", என்று ஆரம்பித்தவள் நடந்த அத்தனையும் கூற எதிர் அமர்ந்து இருந்தவளின் விழிகளோ கூர்மையாக சாந்தினியின் கண்களை தான் ஆராய்ந்து கொண்டு இருந்தன.

அங்கு நடந்ததை அச்சு பிசக்காம சாந்தினி சொல்லிக் கொண்டிருக்கையில், யாழ் அவளின் ஒவ்வொரு வார்த்தைகளைகயும் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். "நீ என்ன நினைக்கிற? டூ வி ஹவ் டு டேக் திஸ் ப்ராஜெக்ட்?", என்று அவள் வினவ, "நீங்க ரொம்ப நாள் கழிச்சி ஒரு ஆம்பளைய பத்தி நல்ல விதமா சொல்லி நான் கேட்குறேன். நீங்க முதல்ல சொன்ன அப்போ எனக்கே கோவம் வந்துச்சு எப்படி அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்னு ஆனா அவரு சொன்னதும் கரெக்ட் தான, சில பொண்ணுங்க இப்படி அட்ஜஸ்ட் பண்ணி ப்ராஜெக்ட் வாங்கறத நம்பலே எத்தனையோ தடவை பாத்திருக்கோம். மோர் ஓவர், அவரு உங்களுக்கு இவளோ தூரம் எல்லாத்தையும் விளக்கி சொல்லிருக்காரு, அதை அவரு பண்ணனும்னு அவசியமும் இல்லை. ஐ திங்க் வி கேன் டேக் திஸ் ப்ராஜெக்ட். ஃப்ரைடே பார்ட்டிக்கு போய்ட்டு வாங்க மேம்", என்று பதில் அளித்தாள்.

"போறேன் இல்ல போறோம். யு ஆர் கோயிங் டு கம் வித் மீ", என்று அவள் ஆணையிட, அதற்கு மறுபேச்சு ஏது? அவளும் தலையை அசைத்து விடை பெற போகும் முன், "யாழ் இன்னைக்கு கோவில் போகலாம்", என்று அவள் சொல்வது நாம் கோவில் போகிறோம் என்ற செய்தி மட்டுமே, வருகிறாயா என்று கேட்கவெல்லாம் இல்லை. அவளுக்கு தெரியுமே யாழிற்கு கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை போய் மூன்று வருடங்கள் ஆகிறது. ஆகையால் இவ்வாறு போக வேண்டும் என்றால் அழைப்பது இல்லை, நீ வருகிறாய் என்ற கட்டளை அவ்வளவே!

"வரலன்னு சொன்ன விடவா போறீங்க", என்று முணுமுணுத்து கொண்டு அறையை விட்டு வெளியே சென்றவளை பார்த்து சிறு புன்முறுவல் செய்தாள்.

இவ்வாறு அவர்களின் நாள் நகர, அன்று மாலை வீட்டிற்கு வந்து உடையை மாற்றிக்கொண்டு இருவரும் ஸ்குட்டியில் கோவில் சென்றனர். "என்ன வேணா சொல்லுங்க அக்கா சுகுட்டில வர்றது தான் பெஸ்ட் பார்க்கிங்லாம் கொஞ்சம் ஈசி. கார்ல வந்தா அதுவோம் இந்த மாறி செவ்வாய், வியாழன், வெள்ளி நாள்ல எவ்ளோ கூட்டம்", என்று அவள் சலித்துக்கொள்ள, இருபக்கமும் தலையசைத்து சாந்தினி கோவிலை நோக்கி நடந்தாள்.

கோவிலின் உள்ளே நுழைந்ததும், "சரி அக்கா நீங்க போய்ட்டு வாங்க நான் அப்படியே காத்து வாங்கிட்டு வரேன்", என்று அவள் சாக்கு சொல்லி அகல முயற்ச்சி செய்ய, "கோவில்க்கு காத்து வாங்க வர ஒரே ஆள் நீயேதான்டி இருப்ப", என்று சலித்து கொண்டு சாந்தினியும் சுவாமி தரிசனம் செய்ய நுழைந்து கொண்டாள்.

யாழ் கோவிலை சுற்றிக்கொண்டிருக்கையில், அங்கே ஒரு கலவரம் வெடித்து கொண்டிருப்பது போல் இருந்தது. போய் சென்று என்ன என்று அங்கே அவள் பார்க்கையில், "எவ்ளோ தைரியம் இருந்தா என்னை பார்த்து கிழவின்னு சொல்லுவ", என்று எழுவது வயது மதிக்க தக்க பெண்மணி ஒருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார். அவரின் அருகில் இன்னோரு அதே வயதில் உள்ள பெண்மணி அவரை சண்டையை நிறுத்த போராடிக்கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவளுக்கு இப்பொது இங்கே கூட்டம் கூடுவது உசிதமாக பட வில்லை. "அவனை விட்ருங்க பாவம், ஏதோ கண்ணு தெரியாம சொல்லிட்டு இருப்பான். இல்லனா உங்கள மாறி யங் லேடிய பார்த்து யாராச்சு இப்படி சொல்லுவாங்களா", என்று அவருக்கு ஐஸ் மலையை தூக்கி தலையை வைக்க அப்போது தான் அவர் சண்டை இடுவதை நிறுத்தினார். "அதான் சண்டை முடிஞ்சிருச்சுல எல்லாரும் போங்க', என்று அவள் ஹிந்தியில் கூற, கூட்டம் களைந்து சென்றது.

"நல்ல வேலை இந்த பொண்ணு வந்துது இல்லனா நீ சண்டைல அந்த பையன் மண்டைய ஒடச்சிட்டு இருப்ப அஞ்சனா", என்று பக்கத்தில் உள்ள பெண்மணி கேலி செய்திட, "உண்மையா இந்த தங்கம் மட்டும் வரலனா இன்னைக்கு அவனை உண்டு இல்லனு பண்ணிட்டு இருப்பேன் திலகம்', என்று அவர் பதில் கூற அப்போது தான் யாழை நன்றாக பார்த்தார்கள். பார்த்த உடன் தெரிந்து கொண்டனர் தமிழச்சி என்று! "தமிழா கண்ணு நீ?", என்று அவளிடம் முதலில் வினவியது திலகம் தான். "ஆமாம் பாட்டி", என்று அவள் புன்முறுவலுடன் தன்மையாக பதில் அளித்தாள்.

"ஹாய், நான் அஞ்சனா. என்ன பாட்டினுலாம் கூப்பிடாத, பேர சொல்லியே கூப்பிடு", என்று அவர் எங்கே அவரை பாட்டி என்று கூறிவிடுவாளோ என்று முந்தி கொண்டு பேச, யாழோ மனதிற்குள், "சரிதான்", என்று புலம்பிக்கொண்டு, "அஞ்சுன்னு கூப்பிடுறேன் பியூட்டி", என்று அடுத்த ஹிமாலய ஐஸ் மலையை எடுத்து வைக்க, அதற்கு மேல் என்ன அஞ்சனா மற்றும் திலத்திடம் பேச்சடிக்க ஆரம்பித்து விட்டாள்.

"உன் பெரு என்ன மா?", என்று திலகம் தான் பெயர் கூட வினவினார் அதற்குள் அஞ்சனா அவர் தற்போது பார்த்த அமேசான் சீரிஸ் பற்றி அவளிடம் பேச துவங்கி இருந்தார். "யாழ்.. யாழ்நிலா பாட்டி", என்று அவள் கூற, "நைஸ் நேம் என்று பதில் அஞ்சனாவிடம் இருந்து வந்தது.

"நீங்க இரண்டு பேரும் சிப்லிங் ஆஹ்?", என்று அவள் அவர்களிடம் மறு கேள்வி கேட்க, "இல்ல மூன், அவ என்னோட பிரதர் இன் லா ஓட வைப்", என்று கூறினார். "மூன் ஆஹ்?", என்று அவள் புருவம் சுருங்கிட, "நிலா தான உன் பேரு அப்போ மூன் தான?", என்று அவரும் கேட்க, "அது சரி, ஆனா உங்கள பாத்தா ரொம்ப கிளோஸ் ஆஹ் இருக்கீங்க அதான் சிஸ்டேர்ஸ்ன்னு நினைச்சேன்",, என்று அவள் கூற, "சின்ன வயசுல இருந்து பக்கத்து வீடு தான்மா இரண்டு பேரும், அதான் இப்பவோம் ரொம்ப நெருக்கம்", என்று பதில் வந்தது திலகத்திடம் இருந்து.

"செம்மமம இரண்டு பிரண்ட்ஸ் அண்ணன் தம்பிய கல்யாணம் பண்ணிக்கறது ஜாலில? இந்த மாரி எனக்கும் என் பிரண்ட்கும் அமைஞ்சா நல்லா இருக்குமே", ,என்று அவள் உற்சாகத்துடன் சொல்ல, "ம்ம்க்கும் நீ தான் வச்சுக்கணும் மூன், எங்க இரண்டு பேரோட புருஷர்களும் பேசிகிட்டு முப்பது வருஷத்துக்கு மேல ஆகுது. நாங்களே அவங்களுக்கு தெரியாம இப்படி கோவில்ல பாத்துக்கிட்டா உண்டு இல்லனா அதுவோம் இல்ல", என்று அவர் நொடித்து கொள்ள, "கஷ்டம் தான். தனியாவா வந்திங்க இரண்டு பேரும்?", என்று அவளிற்கு கேட்க தோணியது. வயதானவர்கள் தனியாக வந்துவிட்டார்களோ என்று அவள் மனம் சட்டென்று யோசிக்க, "இல்ல மா, எங்க மருமகளுங்க மூணு பெரும் வந்திருக்காங்க, உள்ள சாமி கும்பிட போயிருக்காங்க", என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கையில், அங்கே எதிரில் சாந்தினி ஒரு பெண்மணியை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு அருகில் இன்னும் இரண்டு பெண்மணிகள் வந்துகொண்டு இருந்தார்கள். கண்டிப்பாக மூவருக்கும் ஐம்பது வயதிற்கும் மேல் இருக்கும் ஆனால் அவ்வளவு அழகு. "அம்மா கொற்றவை", என்று திலகவதி பதறி சாந்தினி தாங்கி கொண்டு வந்த கொற்றவையை அவர் தாங்கிக்கொண்டார். "என்ன ஆச்சு அக்கா?", என்று யாழும் வினவ, "ஒன்னும் இல்ல லோ பிபி தீடிர்னு சன்னிதானத்துல மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. இப்போ ஓகே தான் தண்ணியும் பஞ்சாமிர்தமும் கொடுத்திருக்கோம். வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆய்டுவாங்க", என்று சாந்தினி பதில் உரைக்க, "இந்த பொண்ணு தான் உடனே உதவி செஞ்சுது அத்தை நாங்க கூட பயந்துட்டோம்", என்று திலகவாதியின் மருமகள் கூறினார். "இதுக்கு தான் டைம்க்கு சாப்பிடணும்னு சொல்றது கேட்டா தான", என்று வித்யா ஒரு பக்கம் முணுமுணுக்க, அது அனைவர்க்கும் கேட்க செய்தது.

"தேங்க்ஸ் மா", என்று திலகா கூற, "ஐயோ பாட்டி தேங்க்ஸ் லாம் வேணாம்", என்று மறுத்து விட்டாள். "ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ், என்ன பாட்டினு கூப்பிடாத, என் மூன் மாரி அஞ்சுன்னு கூப்பிடு"என்று சொன்னவரை கண்கள் விரித்து பார்த்தாள் சாந்தினி. "எல்லாருக்கும் டிஸ்கிளைமேற் கொடுப்பாங்க போல", என்று ,மனதில் நினைத்து யாழ் தன் சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

"இவங்க தான் மா எங்க மருமகள்ங்க, இது கொற்றவை அப்பறோம் வித்யா, அஞ்சனா வோட மருமகளுங்க, இவ வைஷ்ணவி என்னோட மருமக", என்று அவர் யாழிற்கு அறிமுகம் செய்ய, அவளும் அனைவரையும் பார்த்து சிறு புன்னகை செய்தாள். "இது தான் மூன்", என்று அஞ்சனா அறிமுகம் செய்ய, "மூனா?", என்று சாந்தினி கேட்டே விட்டாள். "யாழ்நிலா தான நிலாவை இங்கிலிஷ்ல மூன் தான சொல்லுவாங்க?", என்று அவர் மறு கேள்வி அவளிடம் கேட்க அவளுக்கு அவரை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. "மாடர்ன் பாட்டி போல", என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள்.

"எப்படி தனியா போவீங்க?", என்று சாந்தினி கேட்க, "தனியா இல்லாம என் பையன் ராம் இப்போ வருவான்", என்று கொற்றவை கூறி முடிக்கும் முதல், "வருவான் இல்ல வந்துட்டான்", என்று முடித்திருந்தார் அஞ்சனா.

அவரின் விழிகள் பார்த்த திசையை நோக்கிய அங்கு இருந்த அனைத்து பெண்களின் கண்களும் விரிந்து கொண்டன.
 
1725254221896.jpeg
1725254221902.jpeg
அத்தியாயம் 8

அங்கே இருந்த அனைத்து பெண்களின் கண்களும் விரிந்து கொண்டன. ஆனால் ஒவ்வொரு பெண்களின் விழிகளும் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபதித்து கொண்டிருந்தன. சாந்தினியின் கண்களில் அதிர்ச்சி, யாழின் விழிகளில் ரௌத்திரம், மற்ற பெண்களின் கண்களிலோ அன்பு, பாசம், தவிப்பு, ஏக்கம் என்று சொல்லிலடங்கா உணர்ச்சிகள். அவர்கள் விழிகள் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களின் அருகே வந்த அந்த குடும்பத்தின் இளவரசன், "என்ன பாட்டி சொன்ன மாறியே உங்க பெரிய பேரனை கூட்டிட்டு வந்துட்டேன் பாருங்க?", என்று அஞ்சனாவிடம் கூறியவன் அவருக்கு பின்னே நின்றிருந்த யாழை அப்போது கவனிக்க வில்லை. அவரை அணைத்த உடன் தான் யாழை பார்த்தான். அவனின் கண்களும் சாசர் போல் விரிந்து கொண்டது. "இந்த ராங்கி என்ன பண்ரா இங்க?", என்று அவன் மனதிற்குள் பேசிக்கொள்ள, "என் பேரன் ஆதித்யராம் சொல்லி நடக்காததுனு ஒன்னு இருக்கா என்ன?", என்று அவரும் அவர் பேரனை நெட்டி முறித்தார்.

"நானும் இங்க தான் இருக்கேன் நினைவு இருக்கா?", என்று நக்கலாக கூறினான் அந்த வீட்டின் அதிபதி. "நீ மட்டும் என் கிட்ட பேசாதடா... ஒரு வருஷம்.. நாங்க இருக்குமா செத்தோமான்னு கூட... பாக்க உனக்கு தோணலல?", என்றவரின் கண்களில் கோவமும் கண்ணீரும் ஒருசேர வழிந்தது. "பியூட்டி நீங்க முதல்ல அழாதீங்க ப்ளீஸ்", என்றவன் நேரே சென்று அவரின் கண்ணீரை துடைத்து விட்டு தான் நிமிர்ந்து சுற்றி இருப்பவரை பார்த்தான்.

அவனின் கண்கள் நின்றது என்னவோ சாந்தினியிடம் தான், "மிஸ் சாந்தினி நீங்க இவங்க கூட என்ன பண்றீங்க?", என்று கேட்டவனை தான் சாந்தினியும் பார்த்து கொண்டு இருந்தாள். "கோவிலுக்கு யாரு வேணாலும் வரலாம் பொது சொத்து தான் மிஸ்டர் ராம்", என்று அன்று அவனிற்கு பதில் கூறிய அதே தோணியில் தான் கூறினாள். "ஆதர்ஷ்.. ஆதர்ஷராம் இந்த மிஸ்டர்லாம் வெளிய வேண்டாம்", என்று மென்புன்னகையுடன் கூறியவனுக்கு அவளும் புன்னகையை தான் பதிலாக கொடுத்தாள். "உனக்கு இந்த பொண்ண தெரியுமா?", என்று அஞ்சனா வினவ, "என்னோட பார்ட்னர் பாட்டி", என்று அவன் கூற, "இன்னும் நம்ப பார்ட்னர் ஆகல",, என்று அவள் முடித்து இருந்தாள். "சீக்கிரம் பார்ட்னர் ஆயிருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு", என்று கண்சிமிட்டி அழுத்தமாய் சொன்னவனிடம், "அது என்னோட டெசிஷன், ஃப்ரைடே பாப்போம்", என்று சொல்லி விட்டாள். இவர்களின் பேச்சில் அங்கே இருவர் கண்களால் ஒருவரையொருவர் எரிமலையை கக்கி எரித்து கொண்டு இருப்பதை யாரும் கவனிக்கவில்லை.

"ஃப்ரைடே ஈக்கோ பிளேட் ஓட அன்னிவெர்சரி பார்ட்டிக்கு எல்லாரும் வருவீங்கன்னு நம்புறேன்", என்று அனைவரையும் பார்த்து சொன்னவன் அப்போது தான் யாழை பார்த்தான். "இவங்க?", என்று தன் பாட்டியை பார்த்து கேட்டவனிடம், "என்னோட தங்கச்சி மாறி அவ, என் கம்பெனி ஓட எச்.ஆர்", என்று பதில் கூறியது என்னவோ சாந்தினி தான். "ஹலோ, ஐ அம் ஆதர்ஷராம்", என்று அவனை அறிமுகம் செய்து கொண்டான். "ஹாய் ஐ அம் யாழ்நிலா", என்று அவன் முடிக்கும் பொது அவனின் பார்வை நேரே சென்றது என்னவோ அவனின் சகோதரிடம் தான். அவனின் கண்களை வைத்தே அவள் யார் என்பதை அறிந்து கொண்டவன், யாழையும் ஆதியையும் பார்த்து ஒரு கேலி புன்னைகை உதிர்த்தான். அவனின் செயலை சாந்தினியும் கவனிக்க தவறவில்லை. அப்போது தான் அவளும் யாழை நோக்கினாள், அவளின் கண்கள் ஆதித்யனை பொசிக்கிவிடும் அளவிற்கு அக்னி பிழம்பை கக்கி இருந்தது, அவளாலும் யூகிக்க முடிந்தது அவன் யாராக இருக்க கூடும் என்று!

"நாங்க கிளம்புறோம் பாட்டி", என்று சாந்தினி அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி நகர்ந்திட, "சரி மா ரொம்ப நன்றி கண்டிப்பா வெள்ளிக்கிழமை பார்ட்டிக்கு வந்திரு", என்று திலகவதி அவளுக்கு அவரின் சார்பில் அழைப்பு விடுக்க, அவர்களிடம் புன்னகை சிந்தியவள், யாழை பார்த்தாள். "நாங்க கிளம்புறோம் அஞ்சு", என்று அஞ்சனாவை அணைக்கும் போது, "ஆஆஆஆ", என்று ஆதித்யன் அலறி விட்டான்.

வேண்டுமென்றே யாழ் தான் அவனின் காலை பதம் பார்த்து இருந்தாள். அவனால் முறைக்க மட்டும் தான் முடிந்தது, பெரியவர்கள் முன் அவனால் அவளை ஒன்றும் செய்யமுடியாத நிலை. "தனியா மாட்டுவடி ஒரு நாள் அன்னைக்கு இருக்கு", என்று மனதில் பொறுமியனின் கவனத்தை அவனின் சகோதரனின் சிரிப்பொலி தான் நிதானத்திற்கு கொண்டு வந்ததது. "யாழ் உண்மையா உங்கள பாராட்டணும் ஆதித்யராமையே ஆட்டம்காண வெச்சிட்டீங்க", என்று சொன்னவனை கண்களுக்கு சக்தி இருந்தால் எரித்திருப்பான் அந்த வீட்டின் இளவரசன்.

"உனக்கு ஜோக் ஆஹ் இருக்காடா?", என்று ஆங்காரமாய் கேட்டவனை, "டேய் அவன் உன் அண்ணா மரியாதையா பேசு", என்று அடக்கநினைத்தார் கொற்றவை. அதற்கெல்லாம் அடங்குபவனா அவன்? "ஒரே ஒரு வருஷம் தான் முன்னாடி பொறந்துட்டான். சும்மா அண்ணான்னு கூப்பிட சொல்லி சாவடிக்காதிங்க", என்று கர்ஜித்தவனுக்கே அதிரடியாக அடுத்த சொல் இருந்தது. "ஆமா ஆண்ட்டி அதெல்லாம் மரியாதை தெரிஞ்சவங்க கிட்ட மரியாதையை எதிர்பாக்கலாம் அப்படினா எந்த கடைல விக்குதுனு கேக்குற ஜென்மத்து கிட்டலாம் என்ன எதிர்பாக்க முடியும்", என்று அவள் முடிக்குமுன், "யாழ்", என்று ஆங்காரமாய் ஒலித்தது சாந்தினியின் குரல்.

என்ன இருந்தாலும் குடும்பத்தினர் முன் ஆதித்யனை யாழ் அப்படி பேசியது சாந்தினிக்கு மிக அதிகமாக தோன்றியது. "மிஸ்டர் ஆதித்யனுக்கு சாரி சொல்லு", என்று கட்டளையாக வந்தது சாந்தினியின் குரல். அங்கு இருந்த அனைவரும் சாந்தினியின் அதிரடியான குரலில் அதிர்ந்து விட்டார்கள். யாழின் கண்களில் நீர் ததும்பி விட்டது. அவளுக்கு அது அவமானம் ஆயிர்றே! அவளை நடுரோட்டில் அவமான படுத்தியவனிடம் மன்னிப்பு அல்லவா கேட்க சொல்கிறாள்! "என்னால முடியாது", என்று சாந்தினிக்கு சற்றும் குறையாத சத்தத்தில் அவளின் குரலும் ஓங்கி ஒலித்தது.

"இப்போ சாரி கேட்க போறியா இல்லையா?", என்று அவள் மீண்டும் கேட்க, "அவ கேட்டதுல என்னமா தப்பு இருக்கு? இதையே நானும் எத்தனையோ தடவ சொல்லிற்கேன். சின்ன பொண்ணு தான மனசுல பட்டத பேசுறா", என்று அவளுக்கு ஆதரவு கரம் நீட்டியது என்னவோ கொற்றவை தான்!

சாந்தினியால் அதற்கு மேல் பேச முடியவில்லை, பெரியவர் ஒருவர் கூறும் போது அவளாலும் ஏதும் மறுபேச்சு பேச முடியாது அல்லவா! "சாந்தினி யாழ் ரொம்ப ஓபன் ஆஹ் பேசுறாங்க உள்ளங்களை மாதிரியே. நீங்களும் இப்படி மனசுல பட்டதை தான பேசுவீங்க", என்று யாழிற்கு முட்டு கொடுத்து பேசிய அரசனையும் மீறி அவளால் பேச முடியுமா என்ன?

"ஐயோ என்ன கண்ணு நீ, கண்ணுலாம் கலங்கிருச்சு அழாத தங்கம். உன் அக்கா தான", என்று அஞ்சனா அவளை சமாதானம் படுத்த இங்கோ ஒருவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. "விட்டா மடியில தூக்கி வச்சி சமாதானம் படுத்துவாங்க போல, என் குடும்பத்தையே எனக்கு எதிரா பேச வைக்குறா சரியான சூனியக்காரி போல", என்று மனதில் மட்டும் தான் அவனால் அவளை வறுத்து எடுக்க முடிந்தது.

"நாங்க கிளம்புறோம்", என்று விறுவிறு வென அங்கிருந்து செல்ல போனவளை ஒரே அழைப்பில் நிறுத்தி இருந்தான் அவன். "நிலா", என்று கர்ஜித்த அவனின் குரலில் யாழின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

இன்று வரைக்கும் அவளை நிலா என்று அவளின் அண்ணனும் தந்தையும் மட்டும் தான் அழைத்திருக்கிறார்கள். அவர்களை தாண்டி இன்று முதல் முறை ஒருவனின் அழைப்பு அதுவும் இத்தனை பேர் மத்தியில் உரிமையுடன் அழைக்கின்றான். "உன் ஐடி கார்டு ஆஹ் வாங்கிட்டு போ", என்று கட்டளை பிறப்பித்தவனை அதிர்ந்து பார்த்தாள்.

சட்டென அவனிடம் சென்றவள் ஐடியை அவனிடம் இருந்து பறித்து விருட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டாள். சாந்தினி பின் வருகிறாளா என்று கூட அவள் பார்க்கவில்லை பார்க்கவும் தோன்றவில்லை. அவள் தான் சாந்தினியின் மேல் கொலை வெறியில் இருக்கிறாளே!

சாந்தினியோ பெருமுச்சை ஒன்றை விட்டுக்கொண்டு, "சாரி மிஸ்டர் ஆதித்யன்", என்று அவள் முடிக்கும் முன்னே, "மிஸ்டர் லாம் வேணாம் ஆதி வில் டூ அண்ட் நீங்கலா பேசுனீங்க சாரி கேட்க. எப்படி தான் இவ கூடலாம் இருக்கீங்களோ அதுவோம் உங்க கம்பெனி எச்ஹர் வேற", என்று சலிப்புடன் அவன் சொல்ல, "ஆதி இப்படி ஒரு பொண்ணு கிட்ட பேச தான் நாங்க உனக்கு கத்து கொடுத்தோமா?", என்று அவனை சாடியது வித்யா தான். யாழை திட்டுவதற்கே ஆதியை கடிந்து கொள்பவர்கள் எதிர்காலத்தில் அவன் யாழை படுத்தப்போகும் பாட்டை தெரிந்தால் என்ன செய்வார்களோ?

"சாரி சாந்தினி நம்ப ஃப்ரைடே பாக்கலாம்", என்று ஆதர்ஷ் கூற, "நான் இன்னும் வரேன்னு சொல்லல", என்று அவனிடம் அவள் மறுமொழி உரைக்க, "வருவீங்கன்னு காணபிடென்ஸ் இருக்கு", என்று புன்னகையுடன் கூறினான்.

"உடம்ப பாத்துக்கோங்க", என்று கொற்றவையிடம் கூறியவள், அனைவரிடமும் சிறு தலையசைப்புடன் விடைபெற்று சென்றாள்.

அங்கிருந்து அவள் அகன்று சென்றபின், "என்னடா அந்த பாப்பா ஓட ஐடி உன்கிட்ட எப்படி வந்துது?", என்று வித்யா அவனிடம் கேட்க, "மம்மி அது செம்ம ஸ்டோரி நான் சொல்றேன்", என்று ஆதர்ஷ் வித்யாவின் தோளில் கையை போட அதை தட்டிவிட்டவர், "ஆதி இவனை என்கிட்ட பேசவேணான்னு சொல்லு. நம்பலாம் வேணான்னு போனவன் தான, இப்போ என்னவோ பாசம் வந்த மாறி நடிக்கிறான்", என்று அவர் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க, ஆதர்ஷிற்கோ குற்ற உணர்வில், தலையை தாழ்த்திக்கொண்டான். அவனால் என்ன பேசிவிட முடியும் தவறு அவன் பக்கம் அல்லவா இருக்கிறது.

"வந்த புள்ளய இப்படியா திட்டுவ. நீ அவளை விடு. எப்படி இருக்க?", என்று வைஷணவி அவனின் கன்னம் வருட, இரு சொட்டு கண்ணீர் அவரின் கைகளில் விழுந்தது. "சாரி மம்மா. நான்..", என்று அவன் ஆரம்பிக்கும் முன்னரே, "அதையெல்லாம் விடு ஆதர்ஷ். நடந்தத யாராலும் மாத்த முடியாது... என் தலையெழுத்து...", என்று கூறியவரின் குரலும் தழுதழுத்தது. "நீங்க கண்டிப்பா ஃப்ரைடே வரணும். உங்களுக்காக தான் பெரிய சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்", என்று கூறியவனின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. "அப்படி என்ன சர்பரைஸ் வச்சிருக்க?", என்று அவர் வினவ, "சொன்னா அதுக்கு பேரு சர்ப்ரைஸ் இல்ல", என்று முடித்து இருந்தான் ஆதித்யன்.

"இவனை எப்படி நீ இங்க கூட்டிட்டு வந்த?", என்று திலகவதி ஆதித்யனை பார்த்து வினவ, "அதெல்லாம் சொல்றேன். எனக்கு பசிக்குது ஆல்ரெடி செவென் தர்ட்டி. ஏதாச்சு நல்ல ரெஸ்ட்டாரெண்ட் பொய் சாப்டுட்டே பேசலாமா?", என்று ஆதித்யன் கூறியது அனைவருக்கும் சரியாக பட்டது. இன்னும் கொற்றவை மயங்கியதை யாரும் இவர்களிடம் சொல்லவில்லை, தெரிந்தால் பேய் ஆட்டம் போடுவார்கள் என்று தான் எல்லா பெண்மணிகளும் மௌனம் காத்தது.

மறுபுறம் சாந்தினி கோவிலின் வாயிலின் வெளியே செல்லும் முன், சன்னதியை திரும்பி பார்த்து "தளிரை நான் அவ கிட்ட போறவரைக்கும் காப்பாத்து ப்ளீஸ்", என்று அவள் மன்றாடியது கடவுளுக்கு கேட்க வில்லை போலும்.

இங்கே அமெரிக்காவில், தளிரின் கர்ப்பத்தை உறுதி செய்த ப்ரக்னென்சி ஸ்டிக் வீரின் கையில்!
 

Saranyakumar

Active member
இரண்டு பேரும் அண்ணன் தம்பியா அப்ப அமெரிக்கால இருக்கறவனுக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இருக்கா? தளிர் நிலமை என்ன ஆகும்?
 
1725428395281.jpeg
1725428395275.jpeg
அத்தியாயம் 9

ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தார்கள் அவர்கள் அனைவரும், அதுவும் அவர்களிடம் உள்ள வசதிக்கு சொல்லவும் வேண்டுமா, பெரிய செல்வந்தர்கள் வரும் செவென் ஸ்டார் ரெஸ்டாரண்ட் தான். அவர்களுக்கு என்று ப்ரெத்யேகமா டாப் கிளாஸ் பர்சனல் டைனிங் ஹால் கொடுக்க பட்டு இருந்தது.

"சரி இப்போ சொல்லு எப்படி இவனை இன்னைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு வந்த?", என்று அஞ்சனா தான் முதலில் பேச்சை துவங்கினார். அங்கே சூப் குடித்து கொண்டு இருண்டவனோ, "பசிக்குது பாட்டி அதான் உங்க செல்ல பேரன் இருக்கானே அவன் கிட்டயே கேளுங்க", என்று அவன் மீண்டும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான். அத்தனை சொத்துக்களையும் ஆளும் மன்னர்கள் இருவரும், ஆனால் வீட்டில் பெரியவர்களின் முன் இன்னும் மீசை வைத்த குழந்தை தான். '

"நானே சொல்றேன் பாட்டி, நேத்து என் மீட்டிங்க்கு முன்னாடியே சார் என் பிஎ அர்னவ்க்கு கால் பண்ணி நைன் தர்ட்டிக்கே வந்துட்டான். சரியான சாணக்கியன் இவன்", என்று மேலும் நேற்று நடந்ததை விவரிக்க துவங்கினான்.

நேற்று ஆதர்ஷின் இயக்குனர் அறைக்குள் ஆதித்யன் நுழைய, "யு ஷூட் க்நோக் தி டோர் பெபிபூர் யு கம் இன்சைட். இது கூட உங்களுக்கு தெரியாதா ஆர்.ஏ குரூப் ஒப் இண்டஸ்ட்ரீஸ் ஒட சிஇஓ மிஸ்டர் ஆதித்யன்", என்று புருவத்தை உயர்த்தி நக்கலுடன் வினவியவனை வெட்டவா குத்தவா எனும் பார்வை பார்த்தான்.

"நீ ஏண்டா பேச மாட்ட இதுவோம் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ… ஒரு வருஷம் ஆச்சு ஆதர்ஷ்... நீ வீட்டை விட்டு போய். நான் தான் இந்த வீட்ல இல்ல... நீ இருக்கியேன்னு தான்.. நான் நிம்மதியா லண்டன்ல இருந்தேன். நீ போனதுக்கு அப்பறோம் டெய்லி ஒரு பிரச்சனை வீட்ல. எங்க நிம்மதியா இருக்கறது. என்னையும் இந்தியா வர வச்சி தினமும் அந்த ஆளோட முகத்துல வேற முழிக்க வச்சிட்ட", என்று அவன் முடிக்க வில்லை. "ஆதி...", கர்ஜித்து விட்டான் அவன். "மைண்ட்.. யுவர்... ஒர்டஸ்..", என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாய் மிக அழுத்தமாய் கூறினான்.

"அவரை பத்தி பேசுனா எல்லாம் லைன் கட்டிட்டு வந்துருங்க... அங்க உன் அம்மா... இங்க நீ... எனக்கு வித்யா மம்மி தான் கரெக்ட். இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சனோ காலைல அம்மா திட்றாங்க, வெளிய கிளம்புனா ரோட்ல ஒருத்தி திட்றா.. இங்க வந்தா நீ... ", என்று புலம்பி கொண்டு செல்கையில், "ரோட்ல யாரு உன்ன திட்னா?", என்று புருவங்கள் இடுங்கிட கேட்டவனிடம் காலை நடந்ததை விவரிக்க துவங்கினான். அவன் யாழ் உடன் நடந்த கலவரத்தை சொல்ல, அவன் முடிக்கும் முன்னே அறையே அதிரும் வண்ணம் சிரிக்க ஆரம்பித்து விட்டான் ஆதர்ஷ்.

"டேய் நான் எவ்ளோ சீரியஸ் ஆஹ் பேசுறேன் நீ சிரிக்கிற?", என்று அனலாய் கொதித்து கேட்டவனிடன், "இல்ல எப்பவோமே நீ தான் இந்த வீட்லயே ஹண்ட்சம் அப்படினு சொல்லிட்டு இருப்பியே, ஆனா உன்னையே ஒருத்தி மலை மாடு, சவுகிராக்கினுலாம் திட்டிற்கான, அவ ஸ்பெஷல் தான்! ஆதி, பெட்டெர் கெட் மரிட் டு ஹேர்", என்று கண் சிமிட்டி விஷமமாய் சிரித்தவனை எதனை எடுத்து அடித்தால் தகும் என்று தான் அவனுக்கு தோன்றியது.

"இவ்வளோ சொல்ற நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான?", என்று அவன் முடிப்பதற்குள் அவனை பொசுக்கி விடும் பார்வை பார்த்தான். "இந்த முறைக்கிற வேலை எல்லாம் உன் எம்பலோயீஸ் இல்ல கிளைண்ட்ஸ் ஓட வச்சிக்கோ... இந்த ஆதித்யராம் கிட்ட ஒன்னும் நடக்காது. லீவ் தட் நாளைக்கு கோவிலுக்கு வா என் கூட எல்லாரும் உன்ன பாக்கணும்னு ஆசை பட்றாங்க", என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

"ஆதி..", என்று அவன் துவங்கும் முன்னே, "டேய் இவ்ளோ சுயநலமா இருக்காத... ஆல்ரெடி ஒருத்தன் போபால்ல இருந்து வர மாற்றானு வைஷ்ணவி மம்மாவும் திலகா பாட்டியும் புலம்பிட்டு இருகாங்க. அவன் வரவே ஒத்துக்க மாற்றான். நீயும் இப்படி இருந்தா எப்படி ஆதர்ஷ்? லீவ் யுவர் ஈகோ. நீ பண்ணதும் தப்பு தான", என்று பொரிந்து தள்ளிவிட்டான். அவனால் என்ன பேசி விட முடியும், ஆதி சொல்வது உண்மை, தவறு அவன் மேல் உள்ளது! அத்தனை நடந்தும் அவன் ஒரு வருட காலமாக வீட்டில் உள்ள ஒருவரிடத்தில் கூட பேசவில்லை, ஆதித்தியனை தவிர!

"நீ மட்டும் ஆரு கிட்ட பேசிருந்தா அவன் கண்டிப்பா வந்திருப்பான். ஒரு வருஷத்துக்கு முன்னாடி போனவன் தான் இன்னும் வீட்டு பக்கமே வரல.. வைஷ்ணவி மம்மாவ பாக்கவே பாவமா இருக்கு... எவ்ளோ தான்டா அவங்களும் தாங்குவாங்க. நீ அவங்க தூக்கத்துல கூட கலந்துகள... எனக்கு தான் அப்போ லண்டன்ல ஸ்டோரம்னு பிளை பண்ணி வர முடியாம போயிருச்சு உனக்கு என்ன கேடு வந்துது?", என்று அவன் அவனை வார்த்தைகளால் பதம் பார்க்க, ஆதர்ஷ் குற்ற உணர்வில் தலையை தாழ்த்தி கொண்டான். அவனால் நடந்ததை மாற்ற முடியாது அல்லவா!

ஒரு பெரு மூச்சை விட்டு கொண்டு மேலும் தொடர்ந்தவன், "இனியாவது நீ பண்ண தப்ப சரி பண்ணு ஆதர்ஷ் அவ்வளோ தான் என்னால சொல்ல முடியும். சாய்ஸ் இஸ் யூர்ஸ்", என்று முடித்து கொண்டான். அவனால் இதற்கு மேல் அவனை காயப்படுத்தவும் முடியாது. என்ன தான் சகோதரனின் மேல் கோவம் இருந்தாலும் அதையும் தாண்டி மலை அளவு பாசம் உள்ளதே!

ஆதர்ஷ் வாயை குவித்து ஊதி கொண்டு, "நான் பாத்துக்குறேன். ஃப்ரைடே ஈக்கோ பிளேட் ஓட அன்னிவெர்சரி. பப்பா ஓட எமரால்டு பேலஸ்ல தான் பார்ட்டி. நாளைக்கு நானே எல்லாரையும் இன்வைட் பண்றேன் போதுமா?", என்றவனின் கண்களில் ஆயிரம் உணர்ச்சிகள்.

ஆதித்யனாலும் அவனின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அனைத்தையும் கட்டி ஆள வேண்டியவன் இப்படி பொறுப்பில்லாமல் சுயநலத்துடன் வாழுகிறானே என்கிற ஆதங்கம் அவனை இப்படி எல்லாம் பேச வைத்து விட்டது. பின்பு அவனே என்ன நினைத்தானோ, "சாரி ஆதர்ஷ் உன்ன ஹர்ட் பண்ணனும்னு அப்படி பேசல, ஆனா நீயும் ஆருவோம் தான் எல்லாமே பாக்க வேண்டியது. ஐ பீல் யு போத் ஹவ் பீகம் செல்பிஷ். ப்ளீஸ் டூ சம்திங்", என்று சொன்னவனை தான் அவனும் பார்த்து கொண்டிருந்தான். "நான் பாத்துக்குறேன்", என்று சொன்னவனின் கண்ணில் அப்படி ஒரு உறுதி. ஆதித்யனுக்கு தெரியும் ஆதர்ஷ் நினைத்தால் முடித்து விடுவான், அவனை எப்படி தூண்டிவிட வேண்டும் என்று நன்கு அறிந்தவன் இந்த ஆதித்யன்! தந்திரக்காரன்! என்ன தான் ராஜாக்கள் ஆட்சி செய்தாலும் ஒரு தந்திரி இருக்கவேண்டுமே! அப்படி பட்ட தந்திரி இவன்!

"வந்த வேலை முடிஞ்சிதுல கிளம்பு", என்று அவன் ஆணையிட, "நான் ஒன்னும் உன் எம்ப்லாய் இல்ல", என்று அவனும் பேச, "எம்ப்லாய் இல்ல, தம்பி அதனால தான் இப்படி கதவை தட்டாம வந்ததுக்கு அப்பறோம் கூட உட்கார வச்சி பேசிட்டு இருக்கேன்", என்று அவன் முடிப்பதற்குள், "நான் உனக்கு தம்பியா?", என்று அவன் கோபத்துடன் வினவ, "இல்லையா?", என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, "ஒரே ஒரு வருஷம் முன்னாடி பொறந்துட்டு இவனுங்க இரண்டு பேரும் பண்ற அலப்பறை இருக்கே", என்று அவன் பொருமினான்.

ஆதர்ஷனோ தன் முத்து பற்கள் தெரிய சிரித்து, "ஒரு நாள் நீயே என்ன அண்ணான்னு கூப்டுவ", என்று அவன் சொல்ல, "அப்படி சொல்லும் பொது நீயே அப்படி எல்லாம் என்ன கூப்பிடாதன்னு சொல்லிருவடா", என்று அவன் கூறிய அதே நேரத்தில் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த கோவில் மணி அடித்தது. அவன் அண்ணா என்று கூறும் நேரம் வேண்டாம் என்று ஆதர்ஷ் மறுப்பது தான் விதியின் சதியோ?

"சரி நான் அப்போ கிளம்புறேன்", என்று எழ முற்பட்டவனிடம், "ஸ்டாப் ஸ்பாயிலிங் ஹெர்", என்று அடுத்த கட்டளை அந்த அரசனிடம் இருந்து, "ஷி இஸ் மை ஸ்வீட் ஹார்ட். எனக்கும் அவளுக்கும் நடுவுல நீ வராத", என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான். "இவனால தான் அவ ஆடுற. உனக்குலாம் அந்த ரோடுல பாத்த பொண்ணு தான்டா சரி. தேடி புடிச்சாச்சு உனக்கு அவளை கட்டிவச்சிரணும்", என்று அவன் கத்தியது காற்றில் தான் கரைந்து போனது. அதற்குள் தான் தளத்தை விட்டே சென்று விட்டானே! அதற்கு பின் தான் ஆதர்ஷ் சாந்தினியின் செயலை சிசிடிவியில் பார்த்தது.

இதை ஆதர்ஷ் பெரியவர்கள் முன் கூறி முடிய, "இதுக்கு தான் எங்களை இன்னைக்கு கோவிலுக்கு வர சொன்னியா? என் ராசா! என் பேரன் ஆதித்யன் இருக்கும் போது நான் கவலையே பட வேணாம்", என்று அஞ்சனா பெருமை பேச, "ஆதர்ஷ் இல்லனா அவனால ஒன்னும் பண்ண முடியாது அத்தை", என்று வைஷ்ணவியும் ஆதர்ஷுக்கு சாதகமா பேச, ஆதர்ஷிற்குள் மீண்டும் குற்ற உணர்வு துளிர் விட்டது. "வெரி... சாரி ... மம்மா", என்று அந்த அரசனும் அடிபணிந்து விட்டான். அன்னையர்கள் முன் அடிபணியாதவர்களும் உண்டோ?

"அதெல்லாம் விடு ஆதர்ஷ் நீ இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்ல " என்று அவர் ஆதர்ஷின் கன்னங்களை வருடிக்கொடுத்தார்.

"என் பெரிய பையனோட பார்ட்டிக்கு போக எல்லாம் ரெடி ஆகுங்க", கொற்றவை அனைவரையும் உற்சாகமாக்க, அவரை தான் பார்த்து கொண்டிருந்தான் ஆதர்ஷ். அவனிற்கு தெரியும் கொற்றவை எத்தனை சோகத்தை அவளுள் மறைத்து பேசி கொண்டிருக்கிறாள் என்று! அவன் வீட்டை விட்டு போயிருக்கலாம் ஆனால் வீட்டிலும் வீட்டு ஆட்களின் அத்தனை பேரும் என்ன செய்கிறார்கள், செல்கிறார்கள் என்று அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் இருக்கிறான். ஒரு முறை அவன் சறுக்கிய சறுக்கல் அவனுக்கு பல பாடங்களை கற்று கொடுத்து இருந்தது.

"அந்த பொண்ணு கிட்ட என்னடா பிரச்சனை உனக்கு எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா? உன் பாட்டிய சண்டை மோட்ல இருந்து சாந்த மோடுக்கு கொண்டு வந்த அதுவோம் சாமர்தியமா", என்று திலகவதி கூற, "அவளை பத்தி பேசாதீங்க பாட்டி", என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், இருவருக்கும் நடந்த சண்டையை சொல்லி விட்டான் ஆதர்ஷன். அவனுக்கும் இது தான் வாய்ப்பு அல்லவா சகோதரனை வம்பு இழுக்க!

"என்டா ஒரு பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவியா?", என்று கொற்றவை அவனின் தலையில் நங்நங் என்று கொட்ட, "அம்மாஆஆ", அலறிவிட்டான் அவன். "நான் ஒரு கம்பெனி ஓட சிஇஓ தெரியுமா? என்னை ஒரு குழந்தை மாறி ட்ரீட் பண்றீங்க", என்று முறைத்தவன் அவர்களுக்கு என்னவோ இன்னும் குழந்தையாக தான் தெரிந்தான். அவனின் அலுவலகத்தில் ஒற்றை கண்ணசைவில் அனைவரையும் ஆட்டி வைக்கும் தந்திரன், இங்கு தன் குடும்பத்தினரிடம் பெட்டி பாம்பாய் அடங்கி விடுவான்.

"விடுங்க அம்மா ஃப்ரைடே ரெண்டு பேரையும் சேத்து வச்சிரலாம்", என்று ஆதர்ஷ் கண் சிமிட்டி சொல்ல, அவன் சொல்ல வருவது இந்த சாணக்கியனுக்கு புரியாத என்ன!

"டேய் உன்ன கூட்டிட்டு வந்தேன் பாத்தியா எனக்கு இதுவோம் வேணும் இன்னுமும் வேணும்", என்று அவன் சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர். எத்தனை நாட்கள் கழித்து இப்படி மனம் விட்டு சிரிக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது!

அனைவரும் விடை பெரும் நேரம், "அம்மா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்", என்று ஆதர்ஷினி குரல் கணீர் என்று ஒலித்தது. அவனின் கண்ணசைவிலியே கொற்றவையை தவிர எல்லோரும் அங்கே இருந்து நகர்ந்து சென்றனர், ஆதித்யன் உட்பட! அடுத்து அவன் கேட்டதில் கொற்றவையின் மொத்த உடலிலும் வியர்வை துளிகளில் பூத்து விட்டது.

இங்கோ அமெரிக்காவில், தளிரின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. மருத்துமனையில் அனுமதிக்க பட்டு இருந்தாள். வெளியே வந்த மருத்துவர் நேரே சென்றது என்னவோ வீரிடம் தான். "நீங்க சொன்ன மாறியே செஞ்சிட்டோம் சார்", என்று ஆங்கிலத்தில் சொன்ன மருத்துவரின் கண்களிலேயே கண்ணீர் சுரந்து விட்டது.
 
1725615798835.jpeg
1725615798828.jpeg
அத்தியாயம் 10

தளிரின் முன் அமர்ந்திருந்தான் வீர். தளிருக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை? என்ன சொல்லிவிட முடியும் அவளால்? முன்கூட்டியே சொல்லிவிட்டான் குழந்தை கூடவே கூடாது என்று! அதையும் மீறி மறைத்தவள், ஆதாரத்தை குப்பை தொட்டியில் போட்டிருக்க, அவனின் லேசர் விழிகளில் இருந்து தப்புமா அது?

இன்று காலை வெளிநாட்டிற்கு செல்ல ஆயுதமானவனின் கண்களில் பட்டுவிட்டது அவள் குப்பையில் போட்டு இருந்த தடயம். அவனின் கண்களோ தீப்பிழம்பை தோற்கடிக்கும் அளவிற்கு சிவந்து விட்டது. வெளியே குளித்து விட்டு அப்போது வந்த தளிருக்கு தூக்கிவாரி போட்டது. மெதுவாக திரும்பி அவளை பார்த்தான். அந்த பார்வையில் என்ன அர்த்தம் என்று அவளால் கண்டு கொள்ள முடியவில்லை. "டிரஸ் செஞ் பன்னிட்டு வா, ஹாஸ்பிடல் போகணும்", என்று அவன் கூறிய பின் அவளின் ஆன்மாவே அவளை விட்டு போன உணர்வு.

"வீர் ப்ளீஸ் குழந்தைய..", என்று அவள் பேசும் முன் ஒற்றை கை கொண்டு அவளை நிறுத்தி விட்டான். அவளுக்கு இப்போதே மறித்து விட மாட்டோமா என்ற உணர்வு தான்! ஆனால் முடியாது என்று அவளுக்கும் தெரியும். அடுத்த ஒரு மணிநேரத்தில் மருத்துவமனையை அடைந்தது அவனின் ரோல்ஸ் ராய்ஸ் கார். கண்களையே அவளை இறங்க கட்டளை பிறப்பித்தவன், காரை பார்க் செய்து விட்டு அவனும் மருத்துவமனையில் நுழைந்து கொண்டான். அவனின் கண்களில் ஆயிரம் அல்ல லட்சம் அல்ல கோடி உணர்வுகள்.

நேரே மகப்பேறு மருத்துவரிடம் அப்பொய்ன்ட்மென்ட் வாங்கியவன், அவரிடம் சென்று அவளை பரிசோதித்து விட்டு, அவளுக்கு தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டான். அவன் அவரிடம் சொன்னது என்னவோ அவளின் கர்ப்பத்தை உறுதி செய்து தேவையான பரிசோதனைகளை செய்யத்தான் ஆனால் தளிரின் மனதில் தான் கர்ப்பத்தை கலைத்து விடுவானோ என்கிற அச்சத்தால் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது. பரிசோதனைகளை முடித்து வந்த மருத்துவர், நேரே வீரிடம் சென்று "நீங்க சொன்ன மாறியே செஞ்சிட்டோம் சார்", என்று ஆங்கிலத்தில் சொன்ன மருத்துவரின் கண்களிலேயே கண்ணீர் சுரந்து விட்டது. அவன் அவரிடம் கூறிய வார்த்தைகள் அவ்வாறு! இப்படியும் ஒருவனால் ஒருத்தியை காதல் செய்ய முடியுமா என்று நினைத்து கொள்ளும் அளவிற்கு அல்லவா பேசி இருந்தான். "ஷி இஸ் சோ லக்கி டு ஹவ் யு", என்று அவர் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

உள்ளே தளிர் இருக்கும் அறையின் உள்ளே நுழைந்தவனுக்கோ பொறுமை காற்றில் கரைந்து போனது. "இப்போ எதுக்கு டி அழுதுட்டே இருக்க? குழந்தையும் உன்ன மாரி அழு மூஞ்சியா பொறக்கணுமா?", என்று அவன் கேட்ட அடுத்த நொடி அவளின் கண்ணீர் நின்று விட்டது. "அப்போ குழந்தையை...", என்று ஆரம்பித்தவள், அவன் சொன்னதை கேட்டு சப்த நாடியும் ஒடுங்கி பொய் விட்டாள்.

"என்னோட குழந்தை தான, பெத்து கொடுத்துட்டு போயிரு", என்று சொன்னதும் தான் தாமதம், "என்ன பேசுறீங்க வீர்? குழந்தைய பெத்து கொடுத்துட்டு போயிரணுமா? வாட் டூ யூ மீன் பை தட்? என் குழந்தையை நான் கொடுக்க மாட்டென்", என்று சிம்மத்தை போல் சீரியவளை கண்டு வீரே அதிர்ந்து விட்டான். அவள் தளிராய் பேச வில்லை, தாயாய் பேசுகிறாள்! ஒரு பெண் தாயாக மாறிவிட்டால் அவளுடைய சேய்க்காக அண்டத்தையும் எதிர்க்க துணிவாளாம்! தளிர் தனக்காக இன்று வரை போராடியதில்லை, ஆனால் தன்னுள் துளிர்க்கும் உயிருக்காக இன்று போராட துணிந்து விட்டாள்!

"முடியாதுன்னு சொன்னா என்ன டி பண்ணுவ?", என்று அவன் கூறி முடிக்கும் முதல், அருகில் இருந்த கத்தியை எடுத்தவளை கண்டு அவனின் இருதயமே நின்று விட்டது. "மதிஇஇஇஇ...", என்று அலறியவன் காற்றை விட வேகமாய் அவளிடம் சென்று அவளிடம் இருந்து கத்தியை உருவியவன், காற்றும் உள்ளே புக முடியாத அளவு அனைத்தவன், "ப்லோஸ்ஸோம் (Blossom), என்று அழைத்ததும் தான் தாமதம் உடைந்து விட்டாள் பெண்ணவள்!

மூன்று மாதங்கள் கழித்து இந்த பெயரை, அவனவளுக்காக அவன் வைத்த பெயரில் அழைக்கின்றான். உடைந்து விட்டாள்! நொறுங்கி விட்டாள்! அவனிடமே அவன் கொடுத்த வலிகளுக்கு சரணாகதி அடைந்து விட்டாள்! அவளை அவனை தவிர ஒருவரால் தேற்ற முடியுமா? வாய்ப்பே இல்லை!

அழுதாள், கண்ணீர் வற்றும் வரை அழுதாள் தன்னவனின் நெஞ்சில் சரண் புகுந்து, எரிமலையாக இன்று அவளை சுட்டு பொசுக்கி கொண்டு இருக்கும் அவனின் நெஞ்சு அவளின் கண்ணீரால் அந்த அணைத்திட முடியுமா என்ற ஏக்கத்துடன் அழுதாள். விம்மி, வெடித்து, கதறி அழுதவள், இதற்கு மேல் அவளின் கண்களில் கண்ணீர் இல்லை என்பதால் கண்ணீர் நின்றுவிட்டது ஆனால் விம்மல் நிற்கவே இல்லை. அவனும் இவ்வளவு நேரமும் அவளின் தலையை கோதி, அவளின் காதுகளில் அன்பு வார்த்தைகள் பேசினான். மூன்று மாதங்களாக அவளை சித்திரவதை செய்யும் அரக்கனா இவன்? என்று தான் அவளுக்கும் தோன்றியது.

"ப்லோஸ்ஸோம், ப்ளீஸ் அழாத! ஐ அம் தேர் போர் யு. அழாத டா", என்று கூறியவன் அவளின் கண்ணீர் வடிந்து இருந்த தடம் பொருந்திய பட்டு போன்ற கன்னங்களை தன் பொற்கரத்தால் பற்றியவன், அழுத்தமான, மிக அழுத்தமான அவனின் முத்திரையை நெற்றியில் பதித்தான். அவளின் கண்கள் மெதுவாக மூடிக்கொள்ள, பின்பு நெற்றியில் இருந்து கீழே இறங்கி, தாமரை மலர் போல் உள்ள அவளின் இரண்டு விழிகளுக்கு முத்தமிட்டவன், அடுத்து கன்னங்களுக்கு அவனின் அச்சை பதித்து விட்டு, இதழில் தேன் பருக எத்தனிக்கும் சமையம், "ஐ எம் சாரி சார்", என்ற செவிலியரின் அழைப்பு தளிரை மோன நிலையில் இருந்து சுய நினைவுக்கு கொண்டு வந்தது.

சட்டென அவனிடம் இருந்து தளிர் விலக எத்தனிக்க, விடுவானா அவன், விடாக்கண்டன், அவளின் இடையை இன்னும் அவனுடன் இறுக்கி, "ப்ளீஸ் கிளோஸ் தி டோர்", என்று சொன்னவன், அந்த செவிலியர் வெளியே சென்றாளா இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை, அவளின் இதழை சிறை எடுத்துவிட்டான். முதலில் திமிறியவள், சற்று நேரத்தில் அடங்கினாள், என்றும் கொடுக்கும் ஆவேச முத்தம் இல்லை இது, உணர்ந்து உணர்வு பூர்வமாக அல்லவா கொடுக்கிறான். மனம் கவர்ந்தவன், முதல் முத்தத்தை தன் சம்மதத்துடன் கேட்டு பெற்றவன், அவள் இங்கு வந்த மூன்று மாதங்கள் அவளை குழந்தை போன்று பார்த்து கொண்டவன், தகப்பனின் பாசத்தை காண்பித்தவன், அவளுக்கு கிடைத்த முதல் ஆண் நண்பன், அவள் மேனியில் முதன்முதலில் பெண்மையை உணர வைத்தவன், இன்று மீண்டும் அவளை பூப்போல் கையால்கிறான்.

அவளின் மூளையோ, "அவன் ஒரு அரக்கன் உன்னை மூன்று மாதங்களாக சூறை ஆடியவன்", என்று எடுத்துரைக்க, ஆனால் அவளின் மேனியோ மயங்கி கொண்டு இருந்தது. ஒரு புறம் இதயமோ, "அவன் உன்னை பலவந்த படுத்த வில்லையே! விலையாக உன்னை கேட்டான் கொடுத்தது நீ தானே?", என்று அவளிடம் வாதாட அதற்கு மேல் அவளால் எதுவோம் செய்ய இயல வில்லை, ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல், இருவரும் இதழ்களை விளக்கினர். எனினும் வீரின் அணைப்பில் தான் நிண்டிருந்தாள் தளிர்.

"ஐ ஹவ் மை பிளையிட், கிளம்பலாம்", என்று சொன்னவன் அவளின் கையை பிடித்து செல்ல எத்தனிக்க, "எனக்கு பயமா இருக்கு வீர்... எது நிஜம்?... முதல் மூணு மாசமா என்ன பிரின்சஸ் மாறி பாத்துகிட்டே என்னோட வீரா?... இல்ல இந்த மூணு மாசமா என்ன கொடுமை படுத்துற அரக்கன் வீரா?... இல்ல இப்போ எனக்காக உருகி நிக்குற இந்த வீரா?", என்று அவள் வெதும்பி கேட்க, "நான் போய்ட்டு வந்து சொல்றேன்", என்றவன் அவளிற்காக காத்திராமல் விறுவிறு என்று பணத்தை செலுத்தி காரில் ஏறிக்கொண்டான்.

கண்களை முடியவனின் கண்களிலும் நீர் சுரந்தது. அவனை அரக்கன் என்று கூறிவிட்டாள் அல்லவா? "நீ தான் டி காரணம் எல்லாத்துக்கும். பட் ஐ ஹவ் டு எண்ட் திஸ். என் பேபி இதுல சபர் ஆக நான் விட மாட்டேன். ரெடி ஆஹ் இரு தளிர்மதி என் உன்ன நான் இப்படி செஞ்சேன்னு தெரிஞ்சிக்க", என்று மனதில் சூளுரைத்தவன், அவளை ஏற்றிக்கொண்டு அபார்ட்மெண்ட் சென்று விட்டான். அவனின் ட்ரோலியை எடுத்தவன், செல்லும்முன், "டேக் கேர் ஒப் யூர்செல்ப் அண்ட் மை ப்ரேஸியஸ் பேபி", என்று அவளின் முன்னே வந்தவன் மீண்டும் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியேறி விட்டான்.

"என்ன ரொம்ப படுத்துறீங்க வீர். நான் அப்படி உங்களுக்கு என்ன பண்ணிட்டேன்?", என்று அவளால் மனதில் மட்டும் தான் நினைக்க முடிந்தது. வீர் திரும்பி வந்து அவளின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொது தாங்கிக்கொள்வாளா தளிர்?

கொற்றவையின் முன் வந்த ஆதர்ஷ், "உங்களுக்கு உங்க புருஷன் அவரோட முன்னாள் காதலியை கடந்த ஆறு மாசமா பாக்க போறது தெரியுமா? தெரியாதா?", என்று கேட்கும் போதே அவரின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் அனைத்தையும் கூறி விட்டது.

அவரின் உடல் முழுவதும் வியர்வை. எசியிலும் அவருக்கு வேர்த்து விட்டது. எதை யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தாரோ அதை கண்டுபிடித்து விட்டானே இந்த கள்வன்! "இது மட்டும் ஆதிக்கு தெரிஞ்சா..", என்று அவன் சொல்லும் போதே அவனின் முன் கையை கூப்பி விட்டார் கொற்றவை. தூக்கிவாரி போட்டது அவனுக்கு!

தன்னை ஈன்ற தாயை விட மேலாக வளர்த்தவர், இன்று அவன் முன் கை கூப்புகிறார். "அம்மாஆஆ...", என்று அலறி விட்டு, அவரின் கையை இறக்கியவனிடம், "நான்.. இன்னைக்கு வரைக்கும்... உங்கிட்ட எதுவோம் கேட்டது இல்லை ஆதர்ஷ்... ப்ளீஸ் இத யாரு கிட்டயும் சொல்லாத..", என்று சொன்னவரை என்ன சொன்னால் தகும் என்று தான் அவன் பார்த்து கொண்டு இருந்தான். "உங்க புருஷனையும் ஃப்ரைடே கூட்டிட்டு வாங்க, அவருதான் நியாய செம்மல் ஆச்சே அவரு கிட்ட நம்ப நியாயம் கேட்போம்", என்றவனை அதிர்ந்து நோக்கியார், "ஆதர்ஷ்...", என்று அழைத்தவர், "நீங்க சொல்றத நான் செய்யணும்னா நான் சொல்றத நீங்க செய்ங்க", என்று அழுத்தமாக கூறினான். அவருக்கு தெரியும் இதற்கு மேல் பேசினால் நிச்சயம் விஷயம் ஆதியின் காதுகளை அடையும் இன்னும் அவன் தந்தையை வெறுத்து விடுவான் என்று!

சரி என்று தலையசைத்தவர் அங்கிருந்து நகர பார்க்க, "சாரி உங்கள ஹுர்ட் பன்னிருந்தா", என்று சொன்னவனை இருக அணைத்து இருந்தார் கொற்றவை. "சாரி லாம் வேணாம்", என்று அவனின் கன்னத்தை தட்டி விட்டு, இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

இங்கு யாழ் தான் தீயாக தகித்து கொண்டிருந்தாள். வீடு வந்து சேர்ந்த சாந்தினியும் யாழும் பேசிக்கொள்ளவே இல்லை. அடுத்த நாள் காலையில் சாந்தினிக்கு முன்னே யாழ் எழுந்து அவளின் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அலுவலகம் சென்று விட்டாள். நேற்று இரவில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை யாழ் என்பது சாந்தினியும் அறிவாள். அவளிற்கு சேர்த்து மதிய உணவை எடுத்து வந்தாள் ஆனால் அதை யாழ் தொட கூட இல்லை.

மாலை சாந்தினியே யாழின் அலுவலக அறைக்கு சென்றாள். அவள் வந்ததை பார்த்ததும், "சொல்லுங்க மேடம், அனிதிங் இம்போர்ட்டண்ட்?", என்று அவள் கேட்க, சாந்தினிக்கு புரிந்தது இன்னும் கோவத்தில் இருக்கிறாள் என்று! "யாழ் நான்.. ", என்று சாந்தினி ஆரம்பிக்கும் போதே, "சாரினு மட்டும்.... சொன்னிங்க கடுப்பாகிறுவன் பாத்துக்கோங்க... என்ன அவன் முன்னாடி அசிங்க படுத்திட்டிங்கள?.... உங்களுக்கு என்ன விட அவன் தான் முக்கியமா?....", என்று விம்மி விம்மி மனக்குமுறலை கொட்டிக்கொண்டே சென்றவளை பார்க்க சாந்தினிக்கே பாவமாக இருந்தது.

"சரி மா என் தப்பு தான் அதனால தான் உன்ன ஐஸ் கிரீம் பார்லர் கூட்டிட்டு போலாம்னு இருந்தேன். உனக்கு இவளோ கோவம் இருக்குன்னா பிரச்னை இல்லை நம்ப வேற ஒரு நாள் போகலாம்", என்று அவள் சொல்லி முடிக்கும் பொது, "யாரு சொன்னது எனக்கு கோவம்னு அதெல்லாம் இல்ல வாங்க ஐஸ் கிரீம் பார்லர் போலாம்”, என்று அவள் சாந்தினிக்கு முன்னால் வெளியே சென்று விட்டாள்.

ஐஸ் கிரீம் என்றால் உயிர் யாழிற்கு! அவளுக்கு கோவம், அழுகை, மகிழ்ச்சி என்று எந்த உணர்வு இருந்தாலும் ஐஸ் கிரீம் தான் சாப்பிடுவாள். சாந்தினிக்கு அவள் ஐஸ் கிரீம் சாப்பிடுவது பிடிக்காது என்றாலும் இப்படி கோவம் என்று வரும் பொது அவளே அதை வாங்கி கொடுத்து சமாதானம் செய்து விடுவாள்.

"சரி வா போகலாம்", என்று இருவரும் காரில் ஏறி ஐஸ் கிரீம் பார்லர் வந்து சேர்ந்து விட்டனர். யாழ் சாந்தினியை மதிக்க கூட வில்லை, நேராக சென்று கடைக்காரரிடம் நின்றவள், "டெவில்ஸ் சாக்லேட், டூ", என்று அவளுக்கு பிடித்த ஐஸ் கிரீமை சொல்ல, "மேம் டெவில்ஸ் சாக்லேட் இன்னும் ஒன்னு தான் இருக்கு", என்று அவன் பதில் அளிக்க, "எனக்கு ஸ்ட்ராபெர்ரி டிலைட் கொடுத்திருங்க", என்று சாந்தினி வேறு பிளவர் சொல்ல", "ஓகே மேம்", என்று கடைக்காரன் முடிக்கும் முன்னே, "எனக்கு தான் டெவில்ஸ் சாக்லேட்", என்று அந்த கடையே அதிரும் வண்ணம் ஒலித்தது அக்குரல்!
 

Saranyakumar

Active member
நல்ல வேளை குழந்தைய ஒன்னும் பண்ணல வீர்,தளிர்கிட்ட வீர் ஏன் மோசமாக நடந்தான் இப்ப ஏன் நல்லவன் மாதிரி பேசறான் 😒😒யாருடா அந்த புதுக்குரல் 🤔
 
1725702951123.jpeg
1725702951117.jpeg
1725702951128.jpeg
1725702951111.jpeg
அத்தியாயம் 11

"எனக்கு தான் டெவில்ஸ் சாக்லேட்", என்று அந்த கடையே அதிரும் வண்ணம் ஒலித்தது அக்குரல்! அக்குரலுக்கு சொந்தக்காரரை திரும்பி பார்த்தனர், சாந்தினியும் யாழும். தேவதை அவள், துறுதுறு கண்கள், நிலவே தோற்றுவிடும் பேரழகி தான், இருக்காதா பின்னே சூரியனிற்கு பிறந்த கதிரொளி அவள்! அழுத்தமும் ஆதிக்கமும் அவளின் குருதியிலேயே பிறந்த ஒன்றாயிர்றே!

"நாங்க தான் உனக்கு முன்னாடி ஆர்டர் பண்ணிட்டோமே", என்று சாந்தினி புன்னகையுடன் கூற, அதற்கெல்லாம் செவிமடுப்பவளா அந்த இளவரசி? "எனக்கு டெவில்ஸ் சாக்லேட் தான் வேணும். நீங்க வேற ஆர்டர் பண்ணுங்க", என்று அவளின் அழகிய குரலில் கூப்பாடு போட, யாழிற்கு கோவம் தலைக்கேறி விட்டது.

"ஹே சுண்டெலி! நாங்க தான் ஆர்டர் பண்ணிட்டோம்ல, நீ வேற சாப்பிட வேண்டியது தான! முதல்ல உன்னால முழுசா ஒரு டெவில்ஸ் சாக்லேட் சாப்பிட முடியுமா? ஆழாக்கு சைஸ்ல இருந்துட்டு என்ன பேச்சு பேசுற", என்று அவள் சொல்லி முடிக்கையில், "ஆமாம் மேடம் ஆறடி உயரமோ?", என்ற குரலில் ஸ்தம்பித்து விட்டார்கள் சந்தியினியும் யாழும். யாழின் கண்களோ கீழே இருந்து மேலே நகர, "அவனாக மட்டும் இருக்க கூடாது", என்று அவள் மனதில் நினைத்தது பொய்த்து போனது. அங்கே ஆறடிக்கு அதிகமான உயரத்தில், அசரடிக்கும் அழகில் நின்றிருந்தான் ஆதித்தியராம்.

"அப்பா", என்று தன் மழலை குரலில் அழைத்து கொண்டே அவனிடம் தஞ்சம் புகுந்து கொண்டாள் அந்த குட்டி தேவதை. "ஆத்தி இவனோட பொண்ணா இவ அதான் அவனை மாறியே அடாவடிய இருக்கா", என்று யாழ் மனதிற்குள் இருவருக்கும் அர்ச்சனை செய்ய, "உங்க பொண்ணா? ரொம்ப அழகா இருக்கா", என்று சாந்தினி சொல்லும் போதே, "என்னோட பொண்ணு அவ", என்று உரிமையாக சொல்லிக்கொண்டு வந்தான் ஆதர்ஷ். அவனின் கையிலோ அந்த தேவதையின் சாயலில் ஒரு குட்டி இளவரசன், அந்த வீட்டின் அடுத்த தலைமுறையின் அரசன் இருந்தான்.

"ஆனா என்னோட ஸ்வீட் ஹார்ட்", என்று தேவதையை தூக்கிக்கொண்டு அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான், ஆதித்யன். "எஸ், ஐ அம் அப்பாஸ் ஸ்வீட் ஹார்ட்", என்று அவளும் அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். "டெவில்ஸ் சாக்லேட் எனக்கு தான் வேணும்", என்று மீண்டும் அழுத்தமாக சிணுங்கி கொண்டு சொன்னவளை விடுவாளா யாழ்? மற்றவராக இருந்தாள் கூட விட்டுக்கொடுத்து விட்டு போயிருப்பாள், ஆதியின் ஸ்வீட் ஹார்ட் என்பதற்காகவே விட்டுக்கொடுக்க கூடாது என்கிற முடியவை எடுத்து விட்டாள்.

"நான் அதுக்கு பெ பண்ணிட்டேன். உனக்கெல்லாம் கொடுக்க முடியாது. வேணும்னா வேற கடைக்கு உன்னோட அப்பாவை கூட்டிட்டு போ சொல்லு. உன் அப்பா நினைச்சா பத்து கடை வாங்கலாமே", என்று ஒரே போடாக போட்டுவிட்டாள். சாந்தினிக்கும் ஆதர்ஷிற்கும் அய்யோடா என்று இருந்தது. எந்த குழந்தையை சமாதானம் செய்ய என்று தெரியாமல் நின்று இருந்தார்கள்.

"உன்னால தான் மொத்தமா சாப்பிட முடியாதுல...ஆண்ட்டியே அத வாங்கிக்கட்டோம்.... நீயும் நானும் லிச்சி ரஷ் வாங்கி சாப்பிடலாம் லயு", என்று கூறிய அந்த இளவரசனையும் யாருக்கும் பிடிக்காமல் போய் விடுமா என்ன? "நோ நோ நோ, உனக்கும் டெவில்ஸ் சாக்லேட் தான புடிக்கும் நம்ப அத தான் வாங்குறோம் அத ஷேர் பனிக்காலம்", என்று விடாப்பிடியாக நின்றாள் அந்த பூச்செண்டு.

"உங்க பையன் உங்கள மாறி ரொம்ப சமத்தா இருக்கான் மிஸ்டர் ஆதர்ஷ் ஆனா உங்க பொண்ணு...", என்று ஆதித்யனை முறைத்து கொண்டு யாழ் நிற்க, "ஹ்ம் ஹ்ம்", என்று தொண்டையை செறுமியவன், "அவ கொஞ்சம் ஆதி மாரி தான். நாங்களும் சொல்லிட்டோம் அவளை ஸ்பாயில் பண்ண வேணாம்னு கேட்க மாற்றான். நீங்களே வாங்கிக்கோங்க டெவில்ஸ் சாக்லேட்", என்று ஆதர்ஷன் கூறியதும் தான் தாமதம், சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டாள், அந்த அரசர்களையே ஆட்டி படைக்கும் இளவரசி.

"யாழ் குழந்தை அழறா பாரு", என்று சொல்லிக்கொண்டே ஆதித்யனிடம் சென்று கையை நீட்ட, சாணக்கியனின் கையில் வளர்பவளுக்கு சாணக்யத்தனத்தை சொல்லி கொடுக்க ஒருவர் வேண்டுமா என்ன? சாந்தினியால் மட்டுமே அவளுக்கு அவளின் டெவில்ஸ் சாக்லேட்டை பெற்று தர முடியும் என்று அவளுக்கு தெரிந்து விட்டது. ஆதித்யனிடம் இருந்து சாந்தினியின் கைகளுக்கு தாவினால் அந்த பூச்செண்டு.

"யாரு அவ குழந்தையா இவன் தான் குழந்தை எவளோ கியூட் பாருங்க", என்று ஆதர்ஷிடம் சென்றவள் போனதும் அவளின் கைகளுக்கு மாறினான் அந்த அதிபதியின் பாதி. தாவியவன் அவளுக்கு அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்து, அவளின் காதுகளில், "லயு பாவம் ஆண்ட்டி, எனக்காக டெவில்ஸ் சாக்லேட் அவளுக்கு கொடுத்திருங்களேன், ப்ளீஸ்", என்று கேட்டவனை மறுக்கவும் தோன்றுமா என்ன? அத்தனை அழகு அவனிடம், சற்று யோசிக்கும் படி பாசாங்கு காட்டியவள், "உனக்காக வேணா தரேன் ஆனா அவளுக்காக இல்ல. எனக்கு அதுக்கு பதில் என்ன தருவ?", என்று வினவியவள், "என்ன வேணும் சொல்லுங்க", என்று ஆசை ததும்ப கேட்டவனிடம், அவனின் அச்சு பதியாத இன்னோரு கன்னத்தை காட்ட, ஒன்றல்ல இரண்டல்ல பத்து முத்தங்கள் கொடுத்து விட்டான். அவனின் அன்பு மழையில் நனைந்தவள், "போதும் போதும் உங்க பேரு என்ன மை டியர் பிரின்ஸ் சார்மிங்?", என்று அவனின் குண்டு கன்னங்களை கிள்ளி கேட்க, "என்னோட பேரு லக்ஷித் அண்ட் என்னோட தங்கச்சி பேரு லயனிக்கா. நான் அவளை லயுன்னு தான் கூப்பிடுவேன்", என்று இருவருக்கும் அவன் ஒருவனே அறிமுகம் செய்து வைத்து விட்டான்.

அதுவரைக்கும் அவர்கள் இருவரின் சம்பாஷணைகளையும் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள், கடைக்காரன் வந்து டெவில்ஸ் சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி டிலைட் நீட்டவும், "அதை அந்த குட்டி ராட்ஷசிக்கே கொடுத்திருங்க, நானும் என் பிரின்ஸ் சார்மிங்கும் லிச்சி ரஷ் சாப்பிடறோம்", என்று யாழ் கூறியதும் அவளை இன்னும் இறுக அணைத்து கொண்டான் அந்த சின்ன அழகன். யாழ் அவன் லிச்சி ரஷ் என்று சொன்னதுமே அவனுக்கு அது தான் புடிக்கும் லயனிக்காவிற்காக டெவில்ஸ் சாக்லேட் சாப்பிடுகிறான் என்று கண்டு கொண்டாள். அவள் ஐஸ் கிரீம் வந்ததும் லயாவிற்கு தான் தருவதாக முதலில் நினைத்தாள், ஆதித்யனை கண்டதும் தான் மனம் மாறி விட்டது ஆனால் சாந்தினியும் அவள் பக்கம் சாய, குட்டி இளவரசனும் அவளிடம் கேட்க, அதற்கு பின் மறுக்க தோன்றவில்லை.

"அவ முழுசா சாப்பிட மாட்டா யாழ் நீங்க எடுத்துக்கோங்க", என்று ஆதர்ஷ் கூறி முடிக்கும் முன்னே, "நான் இந்த கியூட்டி ஓட சாப்பிடுறேன்", என்று சாந்தினியை பார்க்க, அவளுக்கு மறுக்க தோன்றுமா என்ன? அவளிற்கு தான் குழந்தைகள் என்றால் உயிர் ஆயிர்றே! அதுவும் பூக்குவியலாய் கையில் இருபவளின் ஆசையை நிராகரிக்க தோன்றவில்லை. "அப்போ ஸ்ட்ராபெர்ரி டிலைட் யாரு சாப்பிடுவா?", என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க, "நாங்க சாப்பிடுறோம்", என்று ஆதித்யனும் ஆதர்ஷனும் ஒன்று சேர்ந்து கூறினர்.

அவர்கள் ஆர்டர் செய்த லிச்சி ரஷ் அடுத்த இரண்டு நிமிடங்களில் வந்து விட, அனைவரும் சாப்பிட துவங்கினர். யாழும் அவளது பிரின்ஸ் சர்மிங்கின் வாயும் தான் ஓயவே இல்லை. கார்ட்டூன்ஸ், ஸ்கூல், திரைப்படம் என்று அனைத்தையும் பற்றி பேசிக்கொன்டு இருந்தனர்.

"சமாதானம் ஆயிட்டீங்களா?", ஆதர்ஷ் கேட்க, அவனை புருவம் சுருக்கி பார்த்தனர் சாந்தினியும் யாழும், "நேத்து கோவிச்சிக்கிட்டு யாழ் போய்ட்டாங்க, அதான் இரண்டு பேரும் சமாதானம் ஆயிட்டீங்களானு கேட்டேன்", என்று அவன் விளக்கமாக கூறியதும் இருவரின் புன்னகையே அவனுக்கு பதில் அளித்து விட்டது.

"நீங்க என்ன நீ வா போனே கூப்பிடுங்க உங்கள விட சின்ன பொண்ணு தான்", என்று யாழ் சொன்னதும், "அப்புறோம் மரியாதை தெரியாதுன்னு சொல்லுவாடா பாத்துக்கோ", என்று அவன் கூறியது தான் தாமதம் அவனை பார்வையிலேயே சுட்டெரித்து விட்டாள் யாழ்.

"அது நீ அவ கிட்ட நடந்துக்குற விதத்துல இருக்கு ஆதி. அவ ரொம்ப நல்ல பொண்ணு தான். அவனை விடு யாழ் , நீயும் என்ன மிஸ்டர் போடாம ஆதர்ஷ்ன்னு கூப்பிடலாம் அதான் பெட்டெர்", என்று அவனும் நட்புக்கரம் நீட்ட, "ஓகே இதோட நம்ப பிரண்ட்ஸ்", என்று கை குலுக்கி கொண்டனர்.

"அவங்க மட்டும் பிரண்ட்ஸ் ஆயிட்டாங்க, அப்பா நீங்களும் கியூட்டியும் பிரண்ட்ஸ் ஆகுங்க", என்று லயா ஆர்ப்பரிக்க, அவளுக்கு யாழ், ஆதர்ஷ் மற்றும் லக்ஷய் ஒரு குரூப் ஆகிவிட்டார்களோ என்று தோன்றியது. அவளுக்கும் அப்படி ஒரு குரூப் வேண்டும் என்கிற மழலை மாறாத எண்ணம் தான்.

"நாங்க ஏன் ஸ்வீட் ஹார்ட்?", என்று அவன் கேட்க, "அவங்க ஒரு குரூப் ஆகிட்டாங்க, நம்மளும் ஆவோம். ஹ்ம் பிரண்ட்ஸ் ஆகுங்க", என்று அவள் மீண்டும் கத்த, "அடேய் பிரண்ட்ஸ் ஆகி தொலைங்கடா அவ கத்துறத நிறுத்த மாட்டா இல்லனா", என்று ஆதர்ஷ் கூற, "சரி சரி பிரின்சஸ் பாரு நாங்க பிரண்ட்ஸ்", என்று சாந்தினி ஆதியிடம் கையை நீட்ட, அவனும் மென் புன்னகையுடன் கை குலுக்கி கொண்டான். இவர்கள் கை குலுக்குவதை பார்த்து புகைந்தது என்னவோ யாழிற்கு தான். "சரியான இம்சை அரசி இருபத்தி மூணாம் புலிகேசியா இருக்காளே! அப்பனுக்கு தப்பாம வளருறா", என்று மனதில் தான் புலம்பிக்கொண்டு இருந்தாள்.

"நான் இருக்கேன் உங்களுக்கு ஆண்ட்டி. உங்க பேரு என்னனு சொல்லலையே", என்று லக்ஷித் கேட்க, "யாழ்நிலா", என்று பதில் ஆதித்யன் கொடுத்து இருந்தான். "வாவ் அப்போ நீங்க மூன் ஆஹ்?", என்று அவன் வினவ, அனைவரும் சிரித்து விட்டனர்.

"சரி நாங்க கிளம்புறோம் டைம் ஆயிருச்சு", என்று சாந்தினி நகர, அவளை கெட்டியாக கட்டிக்கொண்டாள் லயா. ஏதோ இனம் புரியாத உறவு, அவளுக்கு சாந்தினியை பார்க்கையில் தோன்றியது.

"திரும்ப என்ன பார்க்க வருவீங்களா?", என்று அவள் கண்களில் நீர் ததும்ப கேட்க, "ஃப்ரைடே பார்ட்டில பார்க்கலாம்" என்று தன்னிலை மறந்து சாந்தினி கூற, ஆனால் ஆதர்ஷ் தன்னிலையோடு இருந்தானே, "அப்போ பார்ட்னர் ஆகிடுவீங்க?", என்று அவன் கேட்டதும் தான் என்ன சொன்னால் என்று அவளுக்கே விளங்கியது. பார்ட்டிக்கு வந்தால் பார்ட்னெர்ஷிப் உறுதி என்று அர்த்தம் அல்லவா? "ஹ்ம் ஆல்ரெடி நாங்க முடிவெடுத்தோம் அக்கா சொல்லலையா?", என்று யாழ் வினவ, ஆதர்ஷனின் இதழ்களில் நக்கல் கலந்த புன்னகை.

"சரி ஃப்ரைடே பாக்கலாம்", என்று சாந்தினி அவனை முறைத்து கொண்டே சென்று விட்டாள். யாழும் ஆதர்ஷனிடமும் அவளின் பிரின்ஸ் சர்மிங்கிடமும் பை சொன்னவள், மறந்தும் கூட மீதி இருக்கும் இருவரை பார்க்க வில்லை.

அவர்கள் போனதும் ஆதர்ஷன் ஆதியையும் லயாவையும் முறைக்க, அதை எல்லாம் சட்டை செய்பவர்களா அவர்கள், "நீ இவளை ரொம்ப அடைமண்ட் ஆக்கிட்டு இருக்க ஆதி. இப்படியே போச்சுனா ஐ வில் புட் ஹேர் இன் போர்டிங் ஸ்கூல் பாத்துக்கோ", என்று அவன் அடிக்குரலில் சொல்ல, "இங்க பாரு அவளுக்கு வெறும் நாலு வயசு தான். லேட் ஹேர் லிவ் ஹேர் சைல்டுஹுட் ஹாப்பிலி. அவ எங்கேயும் அவளோட அடமென்சி காட்டாம நான் பாத்துக்குறேன்", என்று ஆதித்யன் இறங்கி வந்து விட்டான். அவனுக்கு தான் தெரியுமே ஆதர்ஷ் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவன்.

"டாடி லயுவ போர்டிங் ஸ்கூல்ல போடாதீங்க ப்ளீஸ்", என்று அவனின் காலை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டான் லக்ஷித். "சரிடா போட மாட்டேன் அழாத. இரண்டு பேரும் அழுது காரியத்தை சாதிக்க கத்து வெச்சிருக்கீங்க", என்று அவனின் கன்னத்தை கிள்ளி முத்தம் பதித்தான். அவர்களும் அங்கிருந்து நகர, ஈக்கோ பிளேட் நிறுவனத்தின் பார்ட்டி நாளான வெள்ளிகிழமையும் வந்து சேர்ந்தது. அனைவரின் தலைவிதியையும் மாற்ற போகும் அந்த நாள்!

சாந்தினி ரெட் வைன் நிறத்தில் முழு கவுன் அணிந்திருக்க, யாழ் நேவி ப்ளூ நிறத்தில் கவுன் அணிந்திருந்தாள். இருவரும் சமயத்திற்கே அங்கே போய் சேர்ந்து விட்டனர். வாசலிலேயே அங்கு அவர்களுக்கு தென்பட்டது அன்று அவர்கள் ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்த இரு மலர்கள் தான்.

இருவரும் பொம்மை போன்று இருந்தனர். இவர்களை பார்த்ததும், லயா சாந்தினியின் காலையும், லக்ஷித் யாழின் காலையும் கட்டிக்கொள்ள, இருவரும் அவர்களுக்கு முத்தம் பதித்து உள்ளே சென்றனர். அங்கு ஆதியும், ஆதர்ஷும் ஒரு ஆண்மகனுடன் பேசி கொண்டிருக்க, சாந்தினியை பார்த்த ஆதர்ஷ் கண்களையே அவளை அருகில் அழைக்க, யாழை கூட்டிக்கொண்டு அவர்கள் அருகில் நடந்தாள்.

அவர்கள் அருகே வந்தவளை பார்த்தவன், "ஆருஷ் இவங்க சாந்தினி, என்னோட நியூ பார்ட்னர்", என்று அவளை அவனிற்கு அறிமுகம் படுத்தியவன், "இவன் தான் அன்னைக்கு நீ கோவில்ல பாத்தியே எங்க மம்மா வைஷ்ணவி, இந்த எமரால்டு பேலஸ் ஹோட்டல் ஓட ஓனர் அவங்களோட பையன், டாக்டர் ஆருஷ்", என்று ஆதர்ஷ் கூற, "டாக்டர் ஆருஷ் வீர்", என்று தன் முழு பெயரை சொல்லி முடித்திருந்தான் ஆருஷ் வீர்.
 
Last edited:
1725802944710.jpeg
1725802944681.jpeg1725802944655.jpeg
1725802944700.jpeg
அத்தியாயம் 12

அன்று பார்ட்டி துவங்கும் முன்,

ஆருஷை ஏர்போர்ட்டில் இருந்து பிக்அப் செய்திருந்தான் ஆதர்ஷ். "பரவலயே நான் சொன்னதும் யூஎஸ்ல இருந்து வந்துட்ட", என்று புருவம் உயர்த்தி வினவியவனிடம் மௌனம் மட்டுமே பதிலாக கொடுத்தான் ஆருஷ். அவன் கலிபோர்னியா போனது ஒருவருக்கும் சொல்லவில்லை, போபால் எய்ம்ஸ் மருத்துமனையில் வேலை செய்து கொண்டிருந்தவன் அவனின் சீனியரால் வந்த ஒரு வாய்ப்பின் மூலம் கலிபோர்னியாவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு வேலைக்காக குடி பெயர்ந்து விட்டான்.

அவனுக்கும் மன அமைதி தேவைப்பட்ட தருணம் அது! ஆகையால் குடும்பத்திடம் கூட சொல்லாமல் இந்தியாவில் இருந்து புறப்பட்டு விட்டான். எப்பொழுதும் வாட்ஸாப்பில் தான் ஆதித்யனிடமும் பேசுவதால் அவனுக்கும் ஆருஷின் மேல் சந்தேகம் எழவில்லை. சாணக்கியனையே ஏமாற்றிய ஜித்தன் அவன்! அப்பனுக்கும் அப்பன் என்று ஒருவன் இருப்பான் என்பதை ஆருஷ் மறந்து விட்டான். ஆதர்ஷ் அவனை கண்டு பிடித்து விட்டான், அவனின் நண்பன் ஒருவன் காலிபோர்னியாவில் இருப்பவன் தான் அவனுக்கு இத்தகவலை கொடுத்தது. முதலில் அதிர்ந்தாலும் அவனுக்கு ஆருஷின் மனநிலை புரிந்தது, ஆகையால் தான் இன்று வரை அவனை அழைக்கவில்லை. இப்பொது அழைக்க வேண்டிய கட்டாயம்.

"யாரு அந்த பொண்ணு?", என்று ஆதர்ஷ் கேட்டது தான் தாமதம், தண்ணி குடித்து கொண்டிருந்தவனுக்கு போரை ஏறி விட்டது. "டேய் என்ன ஸ்பை வச்சி பொல்லொவ் பண்றியா?", என்று கர்ஜித்து விட்டான்.

"அவளோ சீன் இல்ல உனக்கு, என்னோட கிளாஸ்மேட் ஒருத்தன் தான் நீ கலிபோர்னியால இருக்கறத சொன்னான் அஞ்சு மாசத்துக்கு முன்னாடி. அப்போ நீ ஒரு பொண்ணுக்கு வாபில்ஸ் ஊட்டி விட்டுட்டு இருந்திருக்க", என்று அவனின் புருவத்தை உயர்த்தி வினவியவனிடன் என்ன சொல்லி விட முடியும்.

"உன்கிட்ட தான் கேட்டுக்குறேன், இதுவே ஆதியா இருந்தா கேட்ருக்க கூட மாட்டேன், அவன்லாம் ஒரு பொண்ண டேட் பண்ணி ஒரு வாரம் வச்சிருந்தா அதிகம், ஆனா நீ அப்படி இல்லையே", என்று மீண்டும் காரை ஓடிக்கொண்டே அவனை பார்க்க, "என்னோட காலிக் அவ", என்றவனை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், "ஓஹ் இப்போல்லாம் காலிக்கு கூட ஊட்டிவிட ஆரம்பிச்சிட்ட இல்ல? என்ன பார்த்த உனக்கு எப்படி தெரியுது? லவ் பண்றியா?", என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

என்ன சொல்லிவிட முடியும் அவனால், உயிருக்குயிராக நேசிக்கிறான். ஆனால் அவளை உயிருடன் உணர்வையும் கொன்று கொண்டு இருக்கிறான். இப்பொது அவனின் உயிர் நீர் அவளின் கருவறையில் வளருகிறது. இதில் எதை என்று ஆதர்ஷிடம் சொல்வது?

"என்னடா அமைதியா இருக்க?", என்று அவன் மீண்டும் வினவ, "அவள பத்தி பேசறத விடுடா", என்று எரிச்சலுடன் சீறியவனை ஆச்சர்யமாக பார்த்தான். இப்படி பேசுபவன் இல்லை அவன், மிகவும் மென்மையானவன். அவனின் குடும்பத்திலேயே அமைதியாக அனைத்தையும் அணுகுபவனை இன்று தான் இப்படி ஒரு கோணத்தில் பார்க்கிறான். ஆதித்யனின் கண்கள் அவனை துளைத்து எடுக்கும் பார்வை பார்த்தது.

"ஏதாச்சு தப்பு பண்றியா ஆருஷ்?", என்று அவன் சட்டென கேட்க, ஆருஷும் அதிர்ந்து விட்டான். "ஹே நான் எதுவோம் தவறா கேட்கலடா, ஒர்க்ல ஏதாச்சு பண்ணிட்டியா?", என்று அவன் பிரித்து கூற, "அப்படிலாம் ஒன்னும் இல்லடா, ஜஸ்ட் ஒர்க் பிரஷர், சாரி உன்ன ஹார்ட் பண்ணி இருந்தா", என்று சொல்லி விட்டான். இது தான் ஆருஷ், ஒருவரை என்றுமே வார்த்தையால் கூட காயப்படுத்தி விட கூடாது என்கிற எண்ணம் கொண்டவன், அவர்கள் குடும்பத்தின் மென்மையான ஆண்மகன், இன்று தளிருக்கு அரக்கனாய் மாறியது தான் அவனின் விதி போல!

காரை அவனின் பங்களாவின் உள் நிறுத்தியவுடன், இருவரும் கீழே இறங்கி கொண்டனர். "என் வீட்லயே ரெடி ஆகி போகலாம். வைஷு மாக்கு சர்ப்ரைஸ் ஆஹ் இருக்கும்", என்று கண்ணைசிமிட்டி அவன் உள்ளே செல்ல, ஆருஷ் இருபுறமும் தலை ஆட்டி கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்ததுமே, இரு வானரங்களும் அவனின் தோளில் ஏறிக்கொண்டன. "பப்பா", என்று கத்திகொண்டே அவனின் செவிப்பறையை கிழித்து விட்டனர். ஆருஷிற்கு தீடிரென்று அவனின் புத்தம் புதிதாய் தளிரின் வயிறில் வளரும் மகவின் நியாபகம். "பப்பா எனக்கு என்ன வாங்கிட்டு வந்திங்க", என்று லயா கேட்க, "என்னோட டால்க்கு ஒரு பார்பி டால் ஹவுஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்", என்று அவன் கூறியதும் அவனின் கன்னத்தில் முத்தமழை பொழிந்து விட்டாள்.

"அப்போ எனக்கு", என்று லக்ஷித் வினவ, "உனக்கும் ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கிட்டு வந்திருக்கேன்", என்று அவனின் கன்னத்தில் முத்தம் பதித்தான். நால்வரும் விரைவிலேயே ஹோட்டல் எமரால்டு பேலஸ்சை அடைந்தனர். ஆதித்தியனிற்கு மட்டும் ஆருஷ் வந்ததை சொல்லிவிட்டான். அவன் இரு பாட்டி மார்கள் மற்றும் மூன்று அன்னையருடனும் அவனிற்காக காத்து கொண்டிருந்தான். ஐவரும் அவனை ஒரு வழி ஆக்கி விட்டனர். அப்போது தான் ஆதர்ஷின் கார் வந்து நின்றது.

ஆருஷை பார்த்த ஐவரும் அதிர்ந்து விட்டனர். முதலில் அஞ்சனா தான் சுயநினைவு பெற்றார். "நாங்கலாம் இன்னும் சாகல டாக்டர் சார், செத்தா சொல்லி அனுப்புறோம் வந்து வாய்க்கரிசி போட்டுட்டு போங்க", என்று அவர் அழுகையுடன் கூற, ஆருஷின் கண்களிலும் கண்ணீர் சுரந்தது. "பாட்டி ஏன் இப்படி பேசுறீங்க ? அவனே ஒரு வருஷம் கழிச்சி வந்திருக்கான்", என்று ஆதித்யன் அவனிற்கு வக்காலத்து வாங்க, பொங்கிவிட்டார் வித்யா. "என்ன உன் அண்ணனுக்கு சப்போர்ட்டா? நீங்க மூணு பேரும் தான் இந்த குடும்பத்தோட சூரியன் மாதிரின்னு தான் உங்களுக்கு சூரியன்னு அர்த்தம் வர பேரா ஆதர்ஷ், ஆருஷ், ஆதித்யன்னு வச்சோம். ஆனா இதுல ஒருத்தன் கூட இந்த வீட்டுக்கு ஒளிய தரலடா மொத்தமா எல்லாத்தயும் இருட்டாக்கிட்டிங்க", என்று ஆதங்கத்தை கொட்டி திருத்துவிட்டார்.

"மம்மி", ஆதர்ஷ் வாயை திறக்க, ஒரே பார்வை தான் பார்த்தார் வித்யா, கப்சிப் என்று ஆகிவிட்டான். "பாட்டி", என்று இரு வாண்டுகளும் வித்யாவின் காலையும் வைஷ்ணவியின் காலையும் கட்டிக்கொண்டனர். அவர்கள் இருவரையும் தூக்கி முத்தம் பதிக்க, அங்கே விஷ்ணுவும் வந்து சேர்ந்தார். "டார்லிங்", என்று அவர் லயாவை தூக்கி கொண்டார். "தாத்தா", என்று அவள் கூற, "தாத்தான்னு கூப்பிடாத என்னை டார்லிங் விஷுன்னு கூப்பிடு", என்று அவர் செல்லம் கொஞ்சி பேச, "அப்படியே வாயில கொஞ்சம் விஷத்தையும் ஊத்திரு நானாச்சு நிம்மதியா இருப்பேன்", என்று வித்யா சொன்னதும், மூன்று ஆண்மகன்களும் பக்கென்று சிறிது விட்டனர்.
"அடியேய் இவனுங்க முன்னாடி ஏன் டி அசிங்க படுத்துற அப்பறோம் என்னை வச்சி செய்வானுங்க", என்று அவர் நொடித்து கொள்ள, "இல்லனா மட்டும் உங்கள கலாய்க்க மாட்டோமா? நேத்து கூட மம்மி கால்ல விழுந்திங்கலாமே", ஆதர்ஷ் அனைவரின் முன்னிலையிலும் சொன்னானே பார்க்கலாம். விஷ்ணு வித்யா இருவரின் மானமும் கப்பல் ஏறிவிட்டது.

"டேய் நீ ஒருத்தன் போதும் டா வேற யாரும் வேணாம். என் பொண்ணுங்க இருந்திருக்கணும் நீங்கலாம் இப்படி பேசிட்டு இருக்க முடியுமா?", என்று அவர் புலம்ப, "உங்க பொண்ணுங்க இருந்திருந்தா இன்னும் வச்சி செஞ்சிருப்பாங்க நாங்களா இருக்கவே இதோட விட்டுட்டோம். ஒருத்தி என்னடானா எக்ஸாம்னு சொல்றா இனோரூத்தி என்னாடானா தீசிஸ் ரெவியூனு சொல்றா, கதை விட்ராலுங்க", என்று ஆதித்யன் அவனின் பங்கிற்கு கலாய்க்க, "இதெல்லாம் பரவால்ல இவளுங்கள கட்டிக்க போறவனுங்க நிலைமைய நினைச்சா தான் பாவமா இருக்கு", என்று முடித்து இருந்தான் ஆருஷ்.

"யாரு அது என் பொண்ணுங்கள பத்தி பேசுறது?", என்று அங்கு வந்து சேர்த்திருந்தார் விக்ரமன், வைஷ்னவியின் கணவன், ஆருஷின் தந்தை, ஹோட்டல் எமரால்டு பேலஸ் குரூப் ஒப் ஹோட்டலஸின் சிஇஓ.

"தாத்தா", என்று அவரிடம் ஓடிச்சென்றான் லக்ஷித். லக்ஷித் விக்ரமனின் செல்ல பேரன் என்றால், லயனிக்கா விஷ்ணுவின் செல்ல பேத்தி.

ஆனால் லக்ஷித் லயனிக்காவின் செல்ல தாத்தாவோ வேறு ஒருவர் ஆயிர்றே! "லயு லக்ஷ்", என்று அழைத்தது தான் தாமதம், இருவரும் புயலின் வேகத்தில் பொய் ருத்ரனின் காலை கட்டிக்கொண்டனர். இருவரையும் இரு கைகளில் ஏந்தி கொண்டார். "தாத்தா யு ஹவ் குட் ஆர்ம்ஸ்", என்று லக்ஷித் ருத்ரனின் கையை தடவி பார்க்க, "தாத்தா யு லுக் குட்", என்று அவர் கன்னத்தை வருடினாள் லயா. மூன்று ஆண்மகன்களின் விழிகளும் எந்த உணர்வுகளையும் காட்டவில்லை. அதற்குள் ஆருஷ் கொற்றவையை அணைத்து கொண்டான். "நீங்களாச்சு பேசுங்க அம்மா", என்று சொல்லும் போதே அவனின் கண்ணீர் அவரின் முந்தானையை நனைத்தது. "எல்லாம் சரி ஆய்டும்", என்று அவனின் தலையை வருடி விட்டார்.

தாத்தாக்கள் இருவரும் வரமாட்டார்கள் என்று தெரியும் அதனால் யாரும் அலட்டிக்கொள்ள வில்லை. பெரியவர்கள் யாவரும் உள்ளே செல்ல, திலகவதி பேசாதது ஆருஷை உறுத்தியது. "என்னடா திலகா பாட்டி பேசவே இல்ல", என்று குரல் கம்மி கூறியவனை, தோளோடு அணைத்து கொண்டு "பார்ட்டி முடியுறதுக்கு முன்னாடி பேசிருவங்க", என்று அழைத்து கொண்டு உள்ளே நுழைந்து கொண்டனர் மூவரும்.

அப்போது தான் அங்கு வந்தார்கள் சாந்தினியும் யாழும். அவர்கள் வரும் போதே ஆருஷின் விழிகள் அவர்களை அளவெடுத்து விட்டது. "இவங்க இரண்டு பேறும் இங்க என்ன பண்றாங்க?", என்று அவன் நினைத்து கொண்டிருக்கையில் தான், ஆதர்ஷ் அவர்களை அறிமுகம் செய்து வைத்தான். அப்போது ஆருஷ் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. இயல்பாக தான் பேசினான்.

"டாக்டர் ஆருஷ் வீர்", என்று தன் முழு பெயரை சொல்லி அறிமுகம் செய்ய, "உங்க குடும்பத்துல எல்லாரும் எவ்வளோ ஹெயிட்டா இருக்கீங்க", என்று யாழ் பட்டென்று கூற, "நீ குள்ளமா இருக்கன்னு சொல்லு", என்று முடித்தது என்னவோ ஆதித்யன் தான். ஆருஷின் புருவங்கள் இடுங்கியது, ஆதித்யன் இப்படி ஒரு பெண்ணுடன் பேசி இன்று தான் பார்க்கிறான். "என்னடா இப்படி பேசுறான்", என்று அவன் ஆதர்ஷின் காதுகளை கடிக்க, "டாம் அண்ட் ஜெர்ரி தான் இரண்டு பேறும். ஒன்னுத்துக்கு ஒன்னு சளச்சதே இல்ல. சொல்றேன்", என்று அவனின் காதுகளில் அவன் நடந்தவற்றை கூற, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "இப்படியா சண்டை போட்டுக்குட்டாங்க", என்று ஆச்சர்யமாக வினவ, "ஹ்ம்ம்", என்று பதில் அளித்திருந்தான்.

"லெட்ஸ் ஸ்டார்ட் தி பார்ட்டி வித் காப்பில் டான்ஸ்", என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மைக்கில் கத்த, "மே ஐ ஹவ் தி டான்ஸ்?", என்று ஆதர்ஷ் சாந்தினியை பார்க்க, சாந்தினிக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. "செ எஸ் கியூட்டி ", என்று ஆர்பரித்தாள் லயா.

அதற்குமேல் அவலாளாலும் இல்லை என்று மறுக்க முடியவில்லை. வேறு ஒருவர் என்றால் முடியாது என்று தான் சொல்லிருப்பாள். ஆனால் ஆதர்ஷின் மேல் உள்ள நம்பிக்கையில் ஆட துவங்கி விட்டாள். நம்பிக்கை உடையும் நாள் இன்றென்று அறிந்திருந்தால் ஆடிருக்க மாட்டாளோ என்னவோ!

"மூன் நீங்களும் போய் ஆடுங்க", என்று லக்ஷித் தள்ளிவிட, "நீ வேணா வா பிரின்ஸ் சார்மிங் நம்ப ஆடலாம்", என்று அவன் கன்னத்தை தட்ட, "இல்ல நீங்க ஆதி அப்பா கூட ஆடுங்க", என்று அவன் கூற, "என்னது அந்த ஜந்து கூட வா?", என்று அவள் மனதில் நினைக்க, "அவங்களால லாம் ஆதி அப்பா கூட ஆட முடியாது. அவரு எவ்வளோ சூப்பர் டான்சர்", என்று லயா அவளை சீண்டி விட, இதற்கு மேல் விடுவாளா அவள்? "ஹே சுண்டெலி, நான் ரெடி உன் அப்பா கிட்ட கேளு அவரு ரெடி ஆஹ்னு?", என்று அவள் சொடக்கிட்டு முடிக்கவில்லை, அவளின் இடையை பற்றி நடனமாடும் மேடைக்கு இரண்டு சுற்று சுற்றி ஆட ஆரம்பித்து விட்டான் ஆதித்யன். யாழ் அதிர்ந்து விட்டாள். "ஆதி", என்று அவள் ஆரம்பிக்கும் முன்னே, அவளின் மூச்சு கற்று பட நெருங்கியவன் "ஷ் லெட்ஸ் டான்ஸ்", என்று முனுமுனுக்க, இருவரும் இசைக்கேற்ப ஆட துவங்கினர். ஆதி உண்மையாகவே திறமையாக நடனம் ஆடினான், அவனின் அசைவுக்கேற்ப யாழையும் ஆட்டிவைத்தான்.

இங்கோ ஆதர்ஷ் மற்றும் சாந்தினி ஆடிக்கொண்டிருக்க, "ஆதி ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுறாரு", என்று அவள் சொல்லும் போதே, ஆதர்ஷின் வாட்சில் அவளின் ஜிப் மாட்டிக்கொண்டது. "அவன் ட்ரைனிட் டான்சர் என்று சொல்லிக்கொண்டு அவனின் கையை அகற்ற முயல, ஜிப் கீழே இறங்கி விட்டது. இருவருக்கும் தூக்கி வாரி போட்டது. "ஆதர்ஷ்", என்று சாந்தினி முடிக்கும் முதலே, அவளின் மொத்த முடியையும் பின் நோக்கி போட்டவன் மிகவும் சாமர்த்தியமாக அவளின் ஜிப்பை மெதுவாக மேலே உயர்த்த, அவனின் கைவிரல் அவளின் முதுகை சற்று உரசி செல்ல, இருவருக்கும் மின்சாரம் பாய்ந்த உணர்வு. சாந்தினியின் உடலோ சிலிர்த்து அடங்கியது. ஆதர்ஷிற்கோ ஹோர்மோன்கள் சுரக்க ஆரம்பித்தது. ஆதர்ஷ் அவனின் கையை எடுத்து தான் தாமதம், உடனே சாந்தினி அவனிடம் இருந்து பிரிந்து விட்டாள்.

சட்டென்று சென்றவள், நின்றது என்னவோ குழந்தைகளிடம் தான். இருவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார் புகைப்பட நிபுணர். மெழுகு பொம்மைபோல் இருப்பவர்களை பார்த்தால் யாருக்கு தான் ஆசை வராது.

"கியூட்டி நீங்களும் வாங்க", என்று லயா இழுக்க, "டாடி நீங்களும் வாங்க", என்று லக்ஷித் பக்கத்தில் நிறுத்தி கொண்டான். அதுவும் சாந்தினியின் ரெட் வைன் கலர் டிரஸ் நிறத்திலேயே லயாவும் அணிந்திருக்க, பார்ப்பவர்களுக்கு ஒரு குடும்பம் மாதிரி தான் தெரிவார்கள்.

நால்வரும் பக்கத்தில் நிற்க, "மேம் கொஞ்சம் பக்கத்துல வரிங்களா?", என்று புகைப்படம் எடுப்பவன் சொன்னதும், ஆதர்ஷ் சாந்தினியின் இடையை நெருக்கி இழுக்க அவள் அவனை அதிர்ந்து பார்க்க. அங்கே அழகான புகைப்படம் பிடிக்க பட்டது. இது போல் இனி ஒரு படம் எடுக்க வாய்ப்பு அமையாமல் போகலாம் அல்லவா!

யாழும் ஆதியும் நடனம் முடித்தவுடன் அங்கிருந்த அனைவரும் இருவருக்காகவும் கைதட்டி கொண்டிருந்தனர். அதே நேரம் தான் இந்த புகைப்படம் எடுக்க பட்டது. அதை பாட்டி இருவரும் பார்த்து விட, அவர்கள் இருவரும் தன் மூன்று மருமகளுக்கும் சைகை செய்ய, அவர்கள் பார்த்தவுடன் அனைவரின் இதழும் தாராளமாக விரிந்தது. "சூரியன் மாறி இருக்க என் பேரனுங்களுக்கு சந்திரன் மாறி இருக்க பேத்திங்கள கொண்டு வருவேன்னு சொல்லிட்டு இருந்திங்க. உண்மையாவே சந்திரன் தான் இரண்டு பேருக்கும். சாந்தினி, யாழ்நிலா", என்று வித்யா தான் முதலில் கூறியது.

"அடியேய் என் பேரன் ஆருஷ் மட்டும் என்ன நீ பாரு அவனுக்கு மதி போல பொண்ணு வருவா", என்று அஞ்சனா சொல்லிக்கொண்டார்.

இதை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த ஆருஷின் கண்களில் ஒரு ஜோடி தென்பட்டனர். அவரின் மனைவி கருவுற்றிருக்க, அவரோ மனைவிக்கு வாபில்ஸ் ஊட்டி கொன்றிருந்தார். அவனுக்கு நினைவுகள் பின்னோக்கி ஓட, அங்கிருந்து நகர்ந்து கழிப்பறைக்குள் சென்றவன், கண்ணாடியில் அவனின் பிம்பத்தை பார்த்தான்.

கண்கள் சிவந்து இருந்தது, தூங்கி எத்தனை நாட்கள் இருக்குமோ அவனுக்கே தெரியாது. தளிரை ஆண்டுவிட்டு உறங்கிவிடுவதாகத்தான் அவள் நினைத்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் அழும் அந்த குரலால் இவனும் அல்லவா தூக்கத்தை துளைத்து விட்டு இருக்கிறான்.

"ஏன் டி ஏன் இப்படி பண்ண? என்னால முடியல டி உன்ன பார்த்த முதல் நாள் இன்னுமும் நினைவு இருக்கு", என்று கண்களை முடியவனின் முன் தளிரை பார்த்த முதல் நாள் கட்சி படமாக ஓட துவங்கியது.

தளிர் மற்றும் ஆருஷ், அவர்களின், அவர்களுக்கான உலகத்தில் மதி மற்றும் வீராக வாழ்ந்த தருணங்கள் இனி அடுத்த அத்தியாயத்தில் இருந்து ...
 

Attachments

  • 1725802944681.jpeg
    1725802944681.jpeg
    136.1 KB · Views: 0

Saranyakumar

Active member
ஆதர்ஷ்,ஆதித்யா, ஆருஷ்வீர், மூனு பேரும் அண்ணன் தம்பிகள். ஆதர்ஷோட மனைவி எங்கே? ஆதிக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? ஆருஷ் ஏன் தளிர்கிட்ட மோசமாக நடந்து கிட்டான்?
 
_b99023b7-1e99-422a-8d26-72fe01907cc4.jpeg
1726044517221.jpeg
1726044517231.jpeg

அத்தியாயம் 13

ஆறு மாதங்களுக்கு முன்,

கதிரவன், அவனின் மெல்லிய கீற்றை கலிபோர்னியா மாகாணத்தில் பரப்ப துவங்கி இருந்தான். வீரும் அவனின் கண்களை திறந்தான். ஆயிற்று அவன் கலிபோர்னியா வந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. அவன் முதன் முறை இங்கு வரவில்லை நான்கு ஐந்து முறை அவனின் குடும்பத்தினருடன், ஏன் இரண்டு முறை ஆதர்ஷ் ஆதியுடன் வந்து இங்கு விடுமுறையை கொண்டாடி விட்டு சென்றுள்ளனர். பணத்திலேயே புரள்பவன் அவன் வெளிநாடு செல்வது அவனுக்கு ஒன்றும் புதிதல்லவே!

எவ்வளவு வசதி படைத்தவன் என்றாலும் சிறு வயதிலிருந்தே மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுள் இருந்தது. அவன் நினைத்திருந்தால் வசதியை வைத்து எந்த கல்லூரியிலும் சேர்ந்திருக்க முடியும். ஆனால் அவனின் சொந்த முயற்சியில் மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவம் சேர்ந்தான். படிப்பில் மட்டும் அல்ல விளையாட்டில் கூட நம்பர் ஒன் மாணவன் தான். சாணக்கியனும் சத்ரியனும் சேர்ந்த கலவை என்று அவனின் அணைத்து நண்பர்களும் ஆசியர்களும் கூறுமளவிற்கு அவனின் நடத்தை இருந்தது. ஆதர்ஷ் ஆதியை விட ஆருஷ் தான் வீட்டில் அத்தனை பெண்மணிகளுக்கு செல்ல பிள்ளை. நல்ல மகன், பெருமைக்குரிய பேரன், பாசமான அண்ணன், அவனின் நண்பர்கள் வாட்டாரத்திற்கு குறும்பான நண்பன், இப்படி பல பரிமாணங்களில் சிறந்து விளங்கியவன், காதலனாகவும் கணவனாகவும் தோற்று போகப்போவது தான் காலத்தின் கட்டளையோ!

கலிபோர்னியா வந்த ஒரு வாரத்தில் எல்லா இடமும் அவனுக்கு அத்துப்படி! இன்று சனிக்கிழமை, அவன் மருத்துவன் என்பதால் சில நேரம் வார விடுமுறையிலும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வரலாம், அதுவும் இதய நிபுணர் என்பதால் எப்போதும் அவனுக்கு வேலை இருக்கும். இன்று விடுமுறை என்று சொல்லி இருக்கின்றனர், அழைப்பு மணி வராத வரை விடுமுறை என்று நினைத்து கொண்டான். நேராக ஜிம் சென்றவன் இரண்டு மணி நேரம் முழுவதுமாக உடற்பயிற்சியில் ஈடுபடுத்தி கொண்டான். அங்கு வரும் மகளிர் அனைவரும் அவனை ஒரு முறையேனும் பார்த்து விட்டு தான் சென்றனர். அவனை பார்க்காத மங்கையரும் இப்புவியில் உள்ளனரா என்ன? மன்மதன் அவனில் தான் வாசம் செய்கிறானோ என்னவோ பெண்கள் விசிறிகள் அவனுக்கு ஏராளம். ஆனால் அவனை திரும்பி பார்க்க வைக்க போகும் பெண்ணை பார்க்கும் நாள் இது என்று அறியவில்லை அவன்.

ஜிம்மில் இருந்து அவனின் அபார்ட்மெண்ட் வந்தவன், நேரே குளியலறை சென்று குளித்து விட்டு குளிர்சாதன பெட்டியை திறந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உள்ளே அவன் தான் ஒன்றும் வாங்கி வைக்கவில்லையே, வேலையிலேயே மூழ்கி இருப்பவன், உணவை பாதி நேரம் மருத்துவமனையிலேயே சாப்பிட்டு விடுவான். ஆகையால் இப்போது அவனிற்கு காலை உணவை சாப்பிட கூட ஒன்றுமே கிடைக்கவில்லை. "டேய் ஆருஷ், என்னடா இப்படி இருக்க, வீட்ல என்ன இருக்கு இல்லனு கூட தெரியாம... ஐயோ பசிக்குதே", என்று புலம்பியவன் அவனின் வாலெட் எடுத்து கொண்டு சூப்பர் மார்க்கெட் சென்று விட்டான்.

அங்கே வந்தவன், பால், பிரட் மற்றும் சில பழம் காய்கறி வாங்கியவன, பில் கவுண்டரில் போய் நிற்க, அங்கோ சலசலப்பு, வார இறுதி என்பதால் கூட்டமும் இருக்க, ஒரு பெண் அங்கு ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தாள். "ஐயோ இது என்ன வம்பா போச்சு", என்று அவள் தமிழில் பேசியது அவன் காதுகளில் துல்லியமாக விழுந்தது. அவனால் அவளின் முகத்தை பார்க்க முடியவில்லை. கடைக்காரனோ அவளை தள்ளி நிற்க சொல்ல, அப்போது தான் அவளின் முகத்தை பார்த்தான். பிரம்மன் செதுக்கிய சிற்பம் அவள். பிளாக் டாப்ஸ் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அவளின் சுருள் கூந்தல் அவளின் தோலை தாண்டி இறங்கி ஆடும் போது அனைவரையும் பித்தம் கொள்ள செய்யும். ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. அவள் தமிழில் பேசியதாலா அல்ல அந்த அப்சரஸின் அழகினாலா என்று அவனுக்கே தெரியாது.

"ஏதாச்சு பிரச்னையா?", என்று அவளிடம் சென்று வினவ, தன் பின்னே தீடிரென்று கேட்ட குரலில் சற்று மிரண்டு தான் போய் விட்டாள். அவள் அவனை பார்க்க, ஆறடிக்கும் அதிகமான உயரத்தில், எந்த பெண்ணையும் வசீகரிக்கும் அழகில் நிற்பவனை பார்த்து சற்று அவள் மயங்கியது என்னவோ உண்மை தான். "ஹலோ ஏதாச்சு பிரெச்சனையா?", என்று மீண்டும் வினவ, "ஹான்.. அது வந்து... நான் நேத்து தான் இங்க வந்தேன். என்கிட்ட பைவ் ஹண்ட்ரேட் டாலர் ஒரே நோட்டா இருக்கு செஞ் இல்லன்னு சொல்ராங்க", என்று அவள் கூற, இது ஒன்றும் புதிதல்ல எப்போதும் வேற்று நாடு செல்பவருக்கு நடக்கும் பிரச்சனை தான். "சரி நான் பெ பண்றேன்", என்று அவன் பட்டென கூற, அவள் சட்டென அவனை பார்க்க, "இல்ல..", என்று அவள் ஆரம்பிக்கும் முன்னே, "இங்க பாரு நீ வாங்கிக்கறதெல்லாம் மொத்தமா சேர்த்தா ஒரு டுவெண்ட்டி டாலர்ஸ் வருமா மக்சிமம். இட் டஸ்ண்ட் மேட்டர் டு மீ", என்று அவன் அவள் பதிலுக்கு காத்திருக்காமல் அவள் வைத்திருந்த பையை பிடுங்கிக்கொண்டு பில் கவுண்டர் சென்றவன் அவனுடன் அவளின் பொருட்களுக்கும் பணம் செலுத்தி விட்டு அதை அவள் கையில் கொடுத்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் சார்", என்று அவள் கூற, "சார் ஆஹ்?", என்று அவன் புருவங்கள் மேலே செல்ல, "என்ன விட பெரியவர் தான் ல? அப்போ சார் தான இல்ல அண்ணான்னு..", என்று அவள் முடிக்கும் முதல், "ஸ்டாப் இட். நான் உனக்கு பெரியவனா என்ன ஒரு இரண்டு மூணு வயசு அதிகமா இருப்பேனா அதுக்கு இப்படி வயசானவன் மாறி பீல் பண்ண வைக்காத. பேரு சொல்லியே கூப்பிடு. ஐ அம் ஆருஷ் வீர்", என்று அவன் கைகளை நீட்ட, ஒரு நொடி யோசித்தவள், "ஐ அம் தளிர் மதி", என்று அறிமுகம் செய்து கொண்டாள்.

"ஸ்டுடென்ட் ஆர் ஒர்கிங்?", என்று அவன் புருவம் உயர்த்தி கேட்க, "ஒர்கிங் தான், நியூட்ரிஷன்ஸ்ட்", என்று அவள் வேலைக்கு செல்ல இருக்கும் மருத்துமனையின் பெயரை சொல்ல, அவன் விழிகள் விரிந்தன. அதே மருத்துவமனையில் தானே அவனும் வேலை செய்து கொண்டிருக்கிறான். "அங்க தான் நானும் ஒர்க் பண்றேன்", என்று அவன் சொல்ல அவளுக்கோ ஏதோ ஒரு புத்துணர்ச்சி. நம் மக்களை வேற்று நாட்டில் பார்க்கும் மகிழ்ச்சி தனி உத்வேகத்தை கொடுக்கும் அல்லவா!

"நீங்க டாக்டர் ஆஹ்?", என்று அவள் மறுகேள்வி கேட்க, "ஏன் என்ன பார்த்தா டாக்டர் போல இல்லையா?", என்று அவன் கண்சிமிட்டி அவளிடம் வம்பிழுக்க, "அப்படி இல்ல பார்க்க ஏதோ பிசினஸ் மேன் போல ஹண்ட்ஸம்மா இருக்கீங்க", என்று கூறியவள் தன் நாக்கை கடித்து கொள்ள, "அப்போ ஹண்ட்ஸம்மா இருக்கேன் ரைட்?", என்று மீண்டும் அவளை ஊடுறுவோம் பார்வை பார்த்தவனின் கண்களை தவிர்த்தவள், மீண்டும் பேச்சை தொடர்ந்தாள், "எனக்கு ஒரு அபார்ட்மெண்ட் ரெண்ட்க்கு கிடைக்குமா?", என்று அவனிடம் கேட்டாள்.

தளிர் இப்படி எவரோடும் பேசும் ஆள் கிடையாது, ஆனால் உதவி செய்திருக்கிறான், ஒரே மருத்துவமனையில் வேலை செய்கிறான், பார்க்கவும் நல்லவனாக இருக்கிறான் என்று தான் உதவி கேட்டாள். அவனிடம் இப்படி உதவி கேட்பது தான் ஒரு நாள் அவளின் வாழ்வையே புரட்டி போட போகிறது என்று தெரிந்திருந்தால் நிச்சயமாக அவனிடம் உதவி என்று இன்று கேட்டிருக்க மாட்டாள்.

"இப்போ எங்க ஸ்டே பன்னிருக்க?", என்று அவளை கேட்க, "ஒரு யூஎஸ் பொண்ணோட ஸ்டே பண்ணிருக்கேன் பட் நேத்தே அவளோட லவரோட ஒரே கூத்து அடிச்சிச்சுட்டா, அதான் வேற அபார்ட்மெண்ட் ஷிப்ட் ஆகலாம்னு தோணுது", என்று அவளும் பெரு மூச்சுடன் பதில் அளித்தாள்.

"நீயும் உன் லவ்வரோட பொய் என்ஜோய் பண்ண வேண்டியது தானே?", என்று நக்கலுடன் கேட்டவனை முறைத்து விட்டு, "நான் கிளம்புறேன்", என்று அவள் செல்ல எத்தனிக்க, அவளின் கையை பற்றி இழுத்தவன், "சாரி சும்மா உன்ன கலாய்க்க தான் அப்படி கேட்டேன், சில்", என்று புன்னைகையுடன் கூற, அவளோ அவனின் கையை பார்க்க, "ஓஹ் சாரி அகைன்", என்று அவளின் கையை விடுவித்தான்.

"சரி இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ நாளைக்கு உனக்கு வேற அபார்ட்மெண்ட் பாத்து நானே தரேன்", என்று கூறியவனிடன் தஞ்சாவூர் பொம்மை போல தலையை ஆட்டினாள். இருவரும் அவர்களின் கைபேசி என்னை மாற்றி கொண்டு புறப்பட தயாராக, "பக்கத்துல தான் இருக்கு உன் அபார்ட்மெண்ட் ரைட்?", என்று அவன் கேட்க, ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள். "மேடம் பேசுனா முத்து உதிருந்திருமோ? தலைய தான் ஆட்டுவீங்களோ", என்று அவன் சலித்து கொள்ள, "இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை", என்று அவள் பாட்டாக பாட, அவளை மேல் இருந்து கீழ் பார்த்தவன், "சரி தான் மா, கார்டியோலோஜிஸ்ட் எனக்கே இதயத்தின் மொழி பத்தி ஒருத்தி கிளாஸ் எடுப்பானு நான் நினைக்கல. இதோட இதையத்தோட மொழிய புரிஞ்சிக்க ட்ரை பண்றேன் மா", என்று சொன்னவனிற்கு சிரிப்பை பதிலாய் கொடுத்து விட்டு அவனும் அவளும் பிரிந்து சென்றனர்.

இப்படியே நாள் செல்ல, இரவு ஏழு மணியளவில் தளிரின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. "ஒரு அபார்ட்மெண்ட் இருக்கு, பக்கத்துல தான் வர முடியுமா?", என்று அவன் கேட்க, "கண்டிப்பா எத்தனை மணிக்கு?", என்று அவள் வினவ, "இப்பவே கூட ஓகே தான்", என்று அவன் சொல்லவும், "லொகேஷன் ஷேர் பண்றிங்களா?", என்று அவள் கேட்டவுடன், அவனும் உடனே அனுப்பி இருந்தான். கூகுளை பார்த்தவளுக்கு வெறும் பத்து நிமிடம் தான் நடந்து செல்ல காட்டியது. அவள் அடுத்த இருபது நிமிடங்களில் அங்கு வந்து விடுவாள் என்று கூறி விட்டு ஆயுத்தமாக ஆரம்பித்தாள். அவள் அறையை விட்டு வெளியே வந்த சமயம், அவள் ரூம் மேட்டின் லவ்வர் முழுதாக குடித்து விட்டு உள்ளே நுழைந்தான்.

அவள் அவனை தாண்டி செல்லும் எத்தனிக்கும் முன், அவளின் கையை பிடித்து இழுக்க, அவளுக்கோ தூக்கி வாரி போட்டது. "லீவ் மை ஹாண்ட்", என்று கத்தியவளை ஒரு பொருட்டாக கூட அந்த காமுகன் மதிக்கவில்லை. "லெட்ஸ் ஹவ் சம் பன் பேபி", என்று நா குழற உளறியவனை எவ்வளவு முயன்றும் அவளால் தள்ள முடியவில்லை. அந்த பலம் படைத்த ஆண்மகன் முன், மென்மையான இவளால் துளி கூட அசைய முடியவில்லை. கலிபோர்னியா வந்த முதல் நாளே அவளின் கற்பு பறிபோய்விடுமா என்று எண்ணி அவளால் கண்ணீர் சிந்த மட்டும் தான் முடிந்தது. "ப்ளீஸ் லீவ் மீ", என்று அவள் கெஞ்சியது அந்த குடிகாரனின் செவிமடல்களை அடைந்தாள் தானே! அவன் அவளின் மேல் ஆடையை கிழிக்க முயற்சிக்கும் போது, அபார்ட்மெண்ட் கதவுகளும் திறந்தது. அங்கு நின்றவரை பார்த்த இருவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தன. வந்த நபர் தளிரை காப்பாற்றுவாரா?
 
1726212103569.jpeg
1726212103563.jpeg
1726212516264.jpeg
அத்தியாயம் 14

கதவை திறந்தவளை பார்த்தவுடன், மின்னலை விடவும் வேகமா சென்று அவளுள் தஞ்சம் புகுந்து கொண்டாள். "உ தி ஹல் ஆர் யு?", என்று நா குழற உளறியவனின் முகத்திலேயே ஒரு குத்து விட்டாள் அந்த புதியவள். "யு ப்ளடி பேர்வேர்ட். ஹொவ் டெர் யு டச் ஹேர்?", என்று கர்ஜித்து இருந்தாள். பெண் சிங்கம் தான் அவள், தளிருக்கோ சாந்தினியை பார்ப்பது போல் இருந்தது.

அதே திமிர், கோவம், வேகம் எல்லாம் அவளிடத்திலேயும் இருந்தது. "போலீஸ்க்கு கால் பண்றேன்", என்று அவள் ஆங்கிலத்தில் சொல்ல ஓடியே விட்டான் அவன்.

பின்பு தான் தளிரை முழுவதுமாக அளந்தால் அந்த புதியவள். "இப்படி பயந்தா எப்படி வெளிய வந்து சர்வைவ் பண்ண போற? தைரியமா இருக்க வேணாம்?", என்று அவள் தமிழில் கூறியதும் தளிரின் கண்கள் விரிந்தன. அவள் இந்தியர் என்று வந்தவுடன் கண்டு பிடித்து விட்டாள் ஆனால் பார்ப்பதற்கு வட மாநிலத்தவர் போல தான் இருந்தாள்.

"என்ன பார்க்க நார்த் இந்தியன் மாரி இருக்கேன் தமிழ் நல்லா பேசுறேன்னு பாக்குற ரைட்? என்னோட அம்மா நார்த் இந்தியன் அப்பா தமிழ் இந்த விளக்கம் போதும்ல?", என்று அவளை மீண்டும் மேல் இருந்து கீழ் பார்க்க, தளிரின் உடல் இன்னும் வெடவெடத்து கொண்டு இருந்தது.

அவள் தளிரின் அருகில் சென்று அவளை அருகில் உள்ள மேஜையில் அமர வைத்து ஆசுவாசம் செய்யும் சமயத்தில் தான் கதவு மீண்டும் திறக்க பட்டது. அங்கு வீர் நின்றிருந்தான். அவள் இருவது நிமிடங்களில் வருகிறேன் என்று சொல்லி நாற்பது நிமிடம் ஆகியும் வராததால் அவனே அவனின் காரை எடுத்து கொண்டு வந்துவிட்டான்.

"என்ன ஆச்சு ஸ்ருஷ்டி? மதி என் அழுதுட்டு இருக்கா?", என்று அவன் கேட்டுக்கொண்டே தளிரின் முன் மண்டியிட்டு அமர, "இந்த பொண்ணு பேரு மதியா? உனக்கு இவளை தெரியுமா வீர்? இன்னைக்கு என் ரூம் மேட் சொல்லிட்டு இருந்தா மேல் மாடில புதுசா ஒரு தமிழ் பொண்ணு வந்திருக்கானு, நானும் சரி ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தா ஒரு பொறுக்கி மிஸ்பிஹவ் பன்னிட்டு இருக்கான் இவகிட்ட, பாவம் ரொம்ப பயந்த சுபாவம் உள்ள பொண்ணு போல", என்று சொல்லிக்கொண்டே தளிரின் தலையை வருட, வீருக்கோ கோவம் உச்சம் அடைந்தது.

"அவனை அப்படியே போக விட்டுட்டியா? போலீஸ்ல ஹண்ட் ஓவர் பன்னிருக்கணும்", என்று அவன் கர்ஜிக்க, அவனின் கர்ஜனையில், தளிரின் உடலும் ஆட்டம் கண்டது. "டேய் கொஞ்சம் கத்தமா இருடா, பாரு பிள்ளை பயப்படுது", என்று அவள் இதழில் புன்னகையை மறைத்து கூற, "நீ என்னை கலாய்க்கிறியா இல்ல அவளையா?", என்று அவனும் முறைத்து கொண்டு கேட்க, "ச்சா ச்சா தி கிரேட் ஆருஷ் வீரலாம் கலாய்க்க முடியுமா என்ன?", என்று அவள் சிரித்து கொண்டு கூறினாள். ஆனால் தளிரால் தான் அங்கு அவர்கள் சம்பாஷணைகள் எதையும் ரசிக்கும் மனப்பான்மை இல்லாமல் அமர்ந்து இருந்தாள்.

"மதி", என்று மிக மிக மென்மையாக அவன் அவளின் கையை பற்ற, அவனின் கைகளிலும் அவளின் முத்து போன்ற கண்ணீர் துளிகள் விழுந்தன.

"எவ்ளோ நேரம் மேடம் இப்படியே அழுதுட்டு இருக்க போறீங்க? கொஞ்சமாச்சு பிரேவ்வா இருக்கனும். அழறத கொஞ்சம் நிறுத்து ப்ளீஸ்", என்று எரிச்சலுடன் அவள் சொல்லியே விட்டாள். வீருக்கும் அதே தான் தோன்றியது, ஆனாலும் அழுபவளிடம் இன்னும் இப்படி பேசி சங்கட படுத்த வேண்டாம் என்று தான் அமைதி காத்தான். ஸ்ருஷ்டியால் அப்படி இருக்க முடிய வில்லை.

"விடு ஸ்ருஷ்டி, அவளே பாவம்", என்று வீர் அவளுக்காக பேச, "டேய் நீயா பேசுற, ஒரு நாள் எனக்கே பொண்ணுங்கனா தைரியமா இருக்கனும் இப்படி அழ கூடாதுனு சொன்னவன் தான நீ", என்று அவள் வீரின் முன் சண்டைக்கு நிற்க, "எனக்காக... சண்டை... போடாதீங்க... ப்ளீஸ்...", என்று விசும்பலுடன் பேசி இருந்தாள்.

"இப்பவாச்சு வாய திறந்தாங்க மேடம்", என்று அவள் சலித்துக்கொள்ள, "அடியேய் கொஞ்சம் பேசாம இருமா பரதேவதை. மதி அவ ஒன்னும் என் கூட உன்னால சண்டை போடல, அவளுக்கு யாருகிட்டயாச்சு வம்பு இழுதுட்டே இருக்கனும்", என்று வீர் சொல்லவும் தான் தளிர் சற்று ஆசுவாசம் அடைந்தாள்.

"உங்களுக்கு இவங்கள தெரியுமா?", என்று வீரை பார்த்து வினவ, "மேடம் எவளோ சீக்கிரம் கேட்டுட்டாங்கல?", என்று நக்கலுடன் வந்தது ஸ்ருஷ்டியின் வார்த்தைகள், "ஏன் டி?", என்று அவளை பார்த்து முறைத்தவன், தளிரை பார்த்து புன்முறுவலுடன், "இவ தான் நம்ப ஹோச்பிடலோட சீனியர் நியூட்ரிஷன்ஸ்ட் ஸ்ருஷ்டி. நீயே அவளுக்கு கீழ தான் ஒர்க் பண்ண போற", என்று சொன்னதும் தான் தாமதம், தளிர் அவள் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டாள்.

வீருக்கோ சிரிப்பு வந்து விட்டது, அடக்கி கொண்டான். "என்... என்ன சொல்றிங்க இவங்கள என்னோட சீனியர்?", என்று தளிர் கேட்கும் போதே ஸ்ருஷிட்டிக்கு பொறுமை காற்றில் பறந்து பொய் விட்டது. "ஏன் என்னை பார்த்த உனக்கு என்ன சிங்கம் புலி மாறியா தெரியுறேன். உன்ன காப்பத்திற்கேன் பாத்துக்கோ", என்று அவள் சீற கொஞ்சம் பயந்து விட்டாள் தளிர்.

"அடியேய் போதும் பாவம் அவ', என்று அவன் தான் பலமாக மாற வேண்டி இருந்தது. ஆனால் கூடிய விரைவில் அவனே அந்த பாலத்தை உடைத்து விடுவான் என்று அப்போது அவனுக்கு தெரியாது.

"சரி இப்போ என்ன பண்ண போற?", என்று தளிரை பார்த்து அவன் கேட்க, "நீங்க காட்டற அபார்ட்மெண்ட்கு இப்பவே ஷிபிட் ஆகிரலாம்னு தோணுது", என்று அவள் முடித்தது தான் தாமதம், "என் அபார்ட்மெண்ட்ல தான் ஸ்டே பண்ணனும் பரவலயா?", என்று அவன் சொன்னவுடன் அவளின் கண்கள் விரிந்து கொண்டன.

"டேய் என்னடா சொல்ற, உன் அபார்ட்மெண்ட்லயா?", என்று ஸ்ருஷ்டி அவள் பங்கிற்கு எகிற, "ஷி நீட்ஸ் டு பி செப் சம்வெர் ரைட்?", என்று அவன் இரு புருவங்களையும் தூக்கி கேட்க, ஸ்ருஷ்டிக்கும் வீர் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தது.

"ஆமா என் அபார்ட்மெண்ட்ல, என் ரூம் மேட் இருக்கா, நீ இவன் கூட போய் இருந்துக்கோ", என்று ஸ்ருஷ்டியும் சொன்னதும், தளிரால் இல்லை என்று மறுக்கவும் முடியவில்லை, ஆமாம் என்றும் சொல்ல இயலவில்லை. இரண்டும் கேட்டான் நிலையில் இருந்தது அவளின் மனநிலை.

"இங்க பாரு மதி, யு நீட் எ ப்ரொடெக்ட்டிவ் அபார்ட்மெண்ட். நான் உனக்கு அஸுரன்ஸ் கொடுக்குறேன். உன்னோட சேப்டிக்கு நான் பாதுகாப்பு அண்ட் நீ நல்லா சமைப்பனு இன்னைக்கு மோர்னிங் உன்னோட ஷாப்பிங் பக் பாக்கும் போதே தெரிஞ்சுது. எனக்கும் சேத்து சமைச்சிரு, நான் மோஸ்ட்லி வெளிய தான் சாப்பிடுறேன்", என்று அவன் முடிக்கவும், "எனக்கும் சேத்து சமைக்கணும்", என்று ஸ்ருஷ்டியும் சொல்ல, தளிரிக்கோ மயக்கம் வராத குறை தான்.

"உனக்கு ஏன் டி அவ சமைக்கணும்?", என்று அவன் சீற, "உனக்கு மட்டும் ஏன் டா சமைக்கணும்?", என்று இவள் பதிலுக்கு சீற, "என்னோட அபார்ட்மெண்ட் மேட் ஆஹ் இருக்க போறா அவ, எங்களுக்கு உள்ள இருக்க டீலிங் அது", என்று அவன் வாதாடினான்.

"என்னோட ஜூனியர் அதனால எனக்கும் சேர்த்து சமைப்பா", என்று அவளும் அவளின் வாதத்தை எடுத்துரைக்க,"நீ பண்றது ராக்கிங்", என்றவனிடன், "இன்னும் அவளும் உன்கூட இருக்க ஓகே சொல்லல சோ உன்னோட அபார்ட்மெண்ட் மேட் இல்ல", என்று ஏட்டிக்கு போட்டியாய் இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர்.

"நான் பேசலாமா?", என்று தளிர் கேட்க, இருவரும் அவளை பார்த்தனர். "உங்கள இன்னைக்கு தான் பார்த்தேன். அதுவோம் ஒரு பையன் கூட...", என்று அவள் இழுக்கும் போதே, "அவன் உன் மேல சுண்டு விறல் கூட வைக்க மாட்டான். நீ அவன் கூட இருக்கறது தான் உனக்கு பாதுகாப்பு", என்று சொன்னது என்னவோ ஸ்ருஷ்டி தான்.

யோசித்தால், நேற்று இருந்து நடந்த அனைத்தையும் யோசித்தால், இந்தியாவை விட்டு அவள் இங்கு நிம்மதியை தேடி தான் வந்திருந்தாள். அது இந்த அபார்ட்மெண்டில் கண்டிப்பாக அவளுக்கு கிடைக்காது. ஒரே நாளில் பார்த்தவனுடன், அவளுக்கு செல்ல விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லையே! ஹோட்டலில் தங்கலாம் தான் ஆனால் அங்கு எந்த புற்றில் இருந்து எந்த பாம்பு வரும் என்று அவளால் கணிக்க முடியவில்லை. தெரியாமல் ஒரு முறை ஒரு பாம்பிற்க்கு அவளுக்கே தெரியாமல் பால் ஊற்றி எத்தனை பெரிய பாவம் செய்து இருக்கிறாள். அதுவே அவளை உயிரோடு கொன்று கொண்டு இருக்கிறதே!

வேறு அபார்ட்மெண்ட்க்கு குடியேறும் வரை அவனுடன் தங்கி கொள்ளலாம் என்று முடிவெடுத்து கொண்டாள். அப்படி ஒன்று நடக்க போவதே இல்லை என்று பாவை அவள் அப்போது அறிய வில்லை!

காலையில் உதவி செய்திருக்கிறான், இப்போதும் நல்ல படியாக அவளுடன் நடந்து கொள்கிறான். அவளை காப்பாற்றிவளும் அவனை பற்றி நல்ல விதமாக தான் சொல்கிறாள். இதை எல்லாம் வைத்து எடுத்த தற்காலிக முடிவு என்று இப்பொது மனதை சமாதானம் செய்து கொண்டாள்.

"ஏதாச்சு சொல்லு மா", என்று அவன் மீண்டும் கேட்க, "உங்க அபார்ட்மெண்ட் மேட்டா இருக்க ஓகே தான், வேற ஒரு அபார்ட்மெண்ட் கிடைக்குற வரைக்கும்", என்றவளிடன், "நீயே போக மாட்ட அவனை விட்டு அவளோ நல்லவன் அவன்", என்று ஒரு மார்கமாக சொல்லிருந்தாள் ஸ்ருஷ்டி.

"நீ சொல்ற டோன் சரி இல்ல", என்று அவன் தலையசைக்க, "உண்மையா தான்டா சொல்றேன். உன்ன மாறி பையன எல்லாம் இப்போ பார்க்கறது ரேர். ரொம்ப நல்லவன், ஒரு லவர் இல்ல, டேட்டிங் இல்ல, ட்ரிங்கிங் இல்ல, ஸ்மோக்கிங் இல்ல, இதெல்லாம் விட நல்லா குக் பண்ற, ஸ்மார்ட் ஆஹ் இருக்க, நல்லா படிச்சிருக்க, செம்ம சலரி வாங்குற, இது இல்லாம நல்ல பேமிலி, ரொம்ப சாப்ட் ஆன பையன் இதெல்லாம் தாண்டி கொஞ்சமே கொஞ்சம் மேன்லி ஆஹ் இருக்க", என்று அவனை வர்ணித்து கொண்டே போக, தளிருக்கோ சிரிப்பு வந்து விட, வீருக்கோ வெட்கம், "தொ பாரு வெட்கம்லாம் படர, இதுவே போதும், பக்கா ஹஸ்பேண்ட் மேட்டரியல் நீ", என்றவளை பார்த்தவன், "போதும் முடியல, இப்படி வேற ஒருத்தர் சொன்ன பரவால ஆனா என்னோட நண்பி நீ சொல்றது கொஞ்சம் ஆகுவார்ட இருக்கு", என்று தலையை கொதி சொன்னவனை தான் இரு பெண்களும் பார்த்து கொண்டிருந்தனர்.

"வா பேக் பண்லாம்", என்று ஸ்ருஷ்டி அவளை இழுக்க, "பேக் பண்ண ஒன்னும் இல்ல, இன்னும் எதையும் அன்பாக் பண்ணல, அப்படியே கிளம்பலாம்", என்று சொன்னவளை இழுத்து கொண்டு அவளின் பேட்டிகளை தூக்கி கொண்டு வீரின் வீட்டிற்கு பறந்து விட்டனர்.

அவனின் வீட்டை சுற்றி பார்த்த இரு பெண்களின் பவள கண்களும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. கிளாஸியாக இருந்தது, அத்தனை சுத்தம். "டேய் உண்மையா சொல்லு தனியாவா இருக்க? இவளோ கிளீன் எப்படி டா? மொஸ்லி பசங்க ரூம் கேவலமா இருக்கும் அப்படினு கேள்வி பற்றுகேன் ஆனா ஆப்போசிட் ஆஹ் இருக்கு உன் கேஸ். ச்ச இப்போ பீல் பண்றேன் உன்ன பிரண்ட் சோன் பன்னிருக்க கூடாதுனு", என்று பொய்யாக நடித்தவளின் தலையை கொட்டியவன், "நீ போய் எப்படி தான் இவ்வளோ பெரிய பொசிஷன்ல இருக்கியோ? வாயாடி", என்று தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

அவர்களை பார்த்த தளிருக்கு ஆச்சரியமாக மட்டும் அல்ல கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது. இப்படி ஒரு நண்பன் நமக்கு இல்லையே என்று, கூடிய விரைவில் அவளுக்கு அப்படி ஒரு நண்பன் கிடைத்து தான் அவளுக்கு மோட்சம் அளிப்பான் என்று அப்போது பாவை அறியவில்லை.

"சரி நான் கிளம்புறேன். நாளைக்கு சண்டே தான வந்து பார்க்குறேன். எனக்கும் சேர்த்து லஞ்ச் பண்ணு மதி", என்று சொல்லி விட்டு அவளின் பதிலை கூட கேட்காமல் சிட்டாய் பறந்து விட்டாள்.

சாந்தினியும் யாழும் கலந்த கலவையாக ஸ்ருஷ்டியை பார்த்தாள் தளிர், சாந்தினியின் கோவம் மற்றும் தைரியம் இருக்கும் அதே இடத்தில் வீருடன் பேசும் பொது யாழின் குறும்பு அரும்புவதையும் கவனித்து கொண்டு தானே இருந்தாள்.

"ரொம்ப நல்லவங்க", என்று அவளின் வாய் தானாக முணுமுணுத்தது. "ரொம்ப ரொம்ப நல்லவ, உன்ன புடிச்சிருக்கு அதான் நாளைக்கும் பார்க்க வரேன்னு சொல்லிட்டு போறா", என்று சொன்னவனை யோசனையுடன் பார்க்க, "அவ இப்படி எல்லாம் என் வீட்டுக்கு வர கேரக்டர் கிடையாது. நீ தனியா இருப்பியேனு தான் வரேன்னு சொல்லிட்டு போயிருக்கா", என்றவன் அவளுக்கு அபார்ட்மெண்டை சுற்றி காட்டி விட்டு அவளின் அறையில் விட்டவன், "டின்னர் நான் ரெடி பண்றேன்", என்று சொல்லி கிளம்ப எத்தனிக்க, "நான் பண்ணட்டுமா?", என்று அவனை பார்க்க, "சேர்ந்து சமைக்கலாம்", என்று சொல்லிவிட்டு அறையை விட்டு அகன்றான்.

சிறிது நேரத்தில் அவன் உடை மாற்றி வர, அவளோ சமைக்க ஆரம்பித்து இருந்தாள். அவளை நோக்கி வந்தவன் அவளை பார்க்க, "என்ன சார் அப்படி பார்க்குறீங்க?", என்று கேட்டவளிடன் அவன் அளித்த பதிலில் அவளின் உடல் விறைத்து விட்டது.
 
1726308558950.jpeg
1726308558943.jpeg
அத்தியாயம் 15


இன்னும் அவனின் சிரிப்பு நின்ற பாடு இல்லை. சிரித்து சிரித்து அவனுக்கு வயிறு வலித்தது. "கொஞ்சம் சிரிக்காம இருக்கீங்களா?", என்று அவள் கடுப்புடன் அவனை பார்க்க, அவனால் அப்போதும் அவனை கட்டு படுத்த முடியவில்லை. "நான் போய் தூங்குறேன்", என்று சாப்பிடாமல் அவள் செல்லும் முன், அவளின் கையை பிடித்து இழுத்து இருக்கையில் அமர வைத்தான்.

"ரொம்ப சாதுவா இருக்க மாதிரி இருந்துட்டு ஆனா கோவம் மட்டும் மூக்கு மேல வருது", என்று மூக்கை பிடித்து ஆட்டியவன், "இருந்தாலும் நீ அப்படி ரியாக்ட் பன்னிருக்க வேண்டாம்", என்று அவன் மீண்டும் அவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

"நான் எவளோ பயந்துட்டேன் தெரியுமா?", என்றவளின் பால் வடியும் முகத்தை பார்த்து, அவனுக்கும் பாவமாக இருந்தது.

கொஞ்சம் நேரம் முன் நடந்தது இது தான்,

"என்ன சார் அப்படி பார்க்குறீங்க?", என்று கேட்டவளிடன், "உன்னோட தோள்பட்டைல ஒரு ஸ்பைடர் இருக்கு", அவன் சொன்னதும் தான் தாமதம், அவள் அப்போது சரியாக சப்பாத்தி செய்ய மாவு எடுத்து கொண்டு இருக்க அதை கவனிக்காமல் கத்தியவளின் மேலே மொத்த கோதுமை மாவும் விழுந்து கோதுமை அபிஷேகம் ஆகிவிட்டது.

"மதி", என்று வாயை திறப்பதற்குள் அத்தனையும் அரை நொடியில் நடந்து முடிந்திருக்க, அவனுக்கோ வடிவேல் காமெடி நியாபகம் வந்துவிட்டது. அப்போது சிரிக்க ஆரம்பித்தவன் தான், அவள் சுத்தம் செய்து வந்து ஏதோ சமைத்தும் ஆகி விட்டது இன்னும் நின்ற பாடு இல்லை.

"நான் ஸ்பைடர்னு சொன்னதும் நீ எடுத்துட்டு இருந்த மாவு டப்பாவை விட்டுடுவேன்னு நான் நினைக்கல", என்றவன் நிறுத்தி இருந்தால் பரவ இல்லை அதோடு சேர்ந்து, "முதல் முறை கோதுமை அபிஷேகம் லைவ் ஆஹ் பார்த்தேன்", என்று சொன்னானே பார்க்கலாம்.

அவளுக்கு சுரென்று கோவம் மீண்டும் தலைக்கு ஏற, பக்கத்தில் இருந்த ஆரஞ்சு ஜூஸ் எடுத்து அவனின் மேல் கொட்டிவிட்டாள். "நானும் முதல் முறை ஆரஞ்சு அபிஷேகம் பண்ணிருக்கேன் ஒருத்தருக்கு", என்று அவள் சிரிக்க ஆரம்பித்து விட, அங்கு உணவு போர் துவங்கி விட்டது. வாயிற்கு போக வேண்டிய அனைத்தும் அவர்களின் தலையிலும் உடைகளிலும் தான் இருந்தது.

தீடிரென்று நிதானத்திற்கு வந்த பிறகு தான், நிதர்சனம் நெற்றி பொட்டில் அறைந்தது. மணி பத்து ஆகிவிட்டது சமைத்த அத்தனை உணவுகளிலும் தான் அவர்கள் குளித்து இருந்தார்கள் அல்லவா!

"வீர் எனக்கு பசிக்குது", என்று அவள் சினுங்க, "எனக்கும் தான்", என்று அவனும் சலித்து கொண்டு சமையல் அறையில் நுழைய, அவர்கள் கடைசியில் சமைத்து சாப்பிட்டது என்னவோ, மேகி தான். "வீடே மட்டமா ஆயிருச்சு யாராச்சு வந்து பார்த்தா என்ன நினைப்பாங்க", என்று அவள் பாவமாக வினவ, "இந்த முகத்தை மட்டும் காட்டாத அப்படியே பாவ பட்ட பூனை மாறி இருந்துட்டு பண்றதெல்லாம் புலி வேலை. நாளைக்கு கிளீன் பண்ணிக்கலாம் லீவு தான யாரும் வர மாட்டாங்க", என்று தூங்க சென்றவர்கள் நாளை காலை அவர்களின் வீட்டின் முன் நடக்கவிருக்கும் கலவரத்தை அறியவில்லை.

காலை ஏதோ சத்தம் கேட்டு வீரும் தளிரும் வெளியே வர, இருவருக்கும் தூக்கிவாரி போட்டது. ஸ்ருஷ்டி போலீஸ் உடன் நின்றிருந்தாள்.

"ஸ்ருஷ்டி என்ன இது?", என்று வீர் கர்ஜிக்க, அவள் ஒன்று சேர வீரையும் தளிரையும் சேர்த்து அனைத்து கொன்டாள். "உங்களுக்கு ஏதும் ஆகல ரைட்? பயந்தே போய்ட்டேன். ஏதோ திருடன் வந்து இருக்கான் போல, பாரு வீடே எப்படி இருக்கு", என்று அவள் மேலும் பேச்சை தொடரும் முன்னே, "நாங்க தான் டி இத பண்ணது", என்று அவன் சொன்னதும் அவளுக்கு மயக்கமே வந்து விட்டது. ஸ்தம்பித்து சிலையாகி விட்டாள்.

வீர் ஒரு வழியாக ஏதோ சமாளித்து போலீசை வெளியேற்றி விட்டு வரும்வரை அப்படியே தான் நின்று இருந்தாள். "மேம்", என்று தளிர் அவளை குலுக்கவும் தான் சுய நினைவு பெற்றாள்.

"டேய் நீ உண்மையாவா சொல்ற? நீங்க இரண்டு பேருமா இத பண்ணது?", என்று கண்கள் விரித்து கேட்டவளை பார்த்து, ஆம் என்று தலை அசைத்தான்.

தளிரின் புறம் திரும்பியவள், "உண்மையா சொல்லு என்ன பிளாக் மாஜிக் பண்ண என் நண்பன் மேல?", என்று அவளின் கிட்டே சென்று கேட்க, அவன் முத்து பற்கள் தெரிய சிரித்து விட்டான்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நீ வா நம்ப லஞ்ச் சமைக்கலாம்", என்று அவளை இழுத்து கொண்டு செல்ல, அவள் தளிரை விட்ட பாடு இல்லை.

"உன்னோட முழு பேறே மதி தானா?", என்று அப்போது தான் கேட்டாள். இல்லை என்று தலை அசைத்தவள், "தளிர்மதி", என்று அவளின் முழு பெயரையும் சொல்ல, "அப்போ தளிர்னு கூப்பிடுறேன்", என்றவள், "நீ ஏன் டா அப்போ மதினு கூப்டுட்டு இருந்த?", என்று கேட்க, "பார்க்க அப்படி தான் இருக்கா, பிரகாசமான மதி போல ஆனா அவளை ப்லோஸ்ஸோம்னு இதோட கூப்பிடலாம் என்று இருக்கேன்", என்று சொல்லியவனை தான் இரு பெண்களும் பார்த்தார்கள்.

"எப்படி வேணாலும் கூப்பிடுங்க ஆனா எனக்கு பசிக்குது ஏதாச்சு செஞ்சி சாப்டுட்டே பேசலாமா?", என்று அவள் கூறியவுடன், "சோத்துக்கு செத்தவளா இருக்க நீ, நேத்து நைட் கூட சண்டை போட்டுட்டு பசிக்குதுன்னு சொல்றா டி", என்று ஸ்ருஷ்டியிடம் குற்ற பத்திரிக்கை வாசித்தான்.

"சாப்பிடுறது குத்தமா?", என்று அவள் மறு கேள்வி கேட்க, "அதனா அதுல என்னடா தப்பு இருக்கு", என்று ஸ்ருஷ்டியும் அவளுக்கு ஒத்து ஊத, "ஒன்னும் தப்பு இல்ல தாய் குலமே, நீங்க இருங்க நானே இரண்டு பேருக்கும் சேர்த்து சமைச்சு கொண்டு வரேன்", என்று சொன்னவனை கட்டி அனைத்து "சோ ஸ்வீட்", என்றாள் ஸ்ருஷ்டி.

"உங்க இரண்டு பேரோட பாண்ட் பார்க்கும் பொது பொறாமையா இருக்கு. எனக்கும் இப்படி ஒரு நண்பன் இருந்தா நல்லா இருக்கும்", என்றவளின் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது.

"நான் உன் நண்பன் இல்லையா அப்போ?", என்று அவன் புருவங்களை உயர்த்தி வினவ, "நோ நோ நீ வெறும் எனக்கு மட்டும் தான் நண்பன். உனக்கு வேற நண்பனை பாத்துக்கோ", என்று ஒற்றை விறல் நீட்டி தளிரை எச்சரித்தாள்.

"உங்க நண்பனை நீங்களே வச்சிக்கோங்க வீரை விட பெட்டெர் பெர்சன என் நண்பனாக்கி காட்டலை என் பேரு தளிர்மதி இல்லை", என்று எந்த நேரத்தில் சூளுரைத்தாலோ அவள் நண்பனாக வருபவன் வீரை விட எல்லா விதத்திலும் பெட்டெர் ஆக தான் வரப்போகிறான் கோவம் உட்பட என்று பாவை அறியவில்லை.

இப்படியே பேசிக்கொண்டு அவர்களின் நாள் நகர்ந்தது. அடுத்த நாள் காலை தான் தளிர் வேலையில் சேர போகும் முதல் நாள். வீர் தான் அவளை தன் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் விட்டான். அவளுக்கு ஸ்ருஷ்டியின் அறையையும் காட்டி விட்டு தான் சென்று இருந்தான்.

"எஸ்யூஸ் மீ மேம்", என்று கேட்டு உள்ளே நுழைந்தவளை, கண்களாலேயே அமரச் சொன்னவள், அவள் யாரின் கீழ் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி அனுப்பி விட்டாள்.

தளிருக்கு வேலை எல்லாம் நன்றாக பொய் கொண்டு இருந்தது. வீர் மற்றும் ஸ்ருஷ்டியுடன் அவளின் நாட்கள் மகிழ்ச்சையாக இருந்தது. அவள் செய்த ஒரே தவறு அவள் வீருடன் இருப்பதாய் யாழிடம் மறைத்தது தான். ஸ்ருஷ்டியுடன் இருப்பதாய் தான் சொல்லி இருந்தாள்.

வீர் என்ற அத்தியாயத்தை யாழிடம் மறைத்தாள், ஸ்ருஷ்டி தான் இரண்டு மூன்று முறை யாழுடன் கைபேசியில் உரையாடினாள். அவள் அப்போதே வீரை பற்றி யாழிற்கு சொல்லி இருந்தால் எதிர் காலத்தில் அவள் அனுப வைக்க போகும் பல துயர்களை தவிர்த்து இருக்கலாம்.

ஒரு முறை ஸ்ருஷ்டி கூட கேட்டிருந்தாள், "நீ ஏன் யாழ் கிட்ட வீர் பத்தி சொல்லல", "சொல்ல வேணாம்னு இல்ல அக்கா, என் அக்கா சாந்தினிக்கு தெரிஞ்சா கொஞ்சம் பிரச்சனை ஆகிடும்.. அதான்", என்று அவள் இழுத்த இழுவையில் இருந்து அவளும் பெரிதாக அவளிடம் இது பற்றி கேட்பது இல்லை.

தளிர் இங்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்த தருணம் அது, ஸ்ருஷ்டி அவளின் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக இரண்டு வாரம் விடுமுறை எடுத்து இந்தியா சென்று இருந்தாள்.

அது வார இறுதி இருவருக்கும் நாளை விடுமுறை என்பதால், மாலுக்கு சென்றிருந்தார்கள். வீருக்கு தளிரின் மேல் இனம் புரியாத ஈர்ப்பு துவங்கிய தருணம் அது!

சிரிக்கவே முடியாது என்று நினைத்து இருந்தவன், பல மாதங்கள் கழித்து மனம் விட்டு சிரித்தது அவள் அவனுடன் தங்க வந்து அவர்கள் உணவை வைத்து சண்டையிட்ட அந்த நாளில் தான், தன் துயரங்கள் அனைத்தையும் அந்த நிமிடங்கள் அவன் மறந்து விட்டான்.

தளிருக்கும் அதே நிலை தான், அவனிடம் மயங்க ஆரம்பித்து விட்டாள், அவள் கலிபோர்னியா வரும் பொது இருந்த மனநிலை இப்பொது இல்லை. அவளை புதிதாக பார்ப்பது போல் இருந்தது. அவனுடன் இருக்கும் தருணம் அன்பு அரவணைப்பு மட்டும் இல்லாமல் பாதுகாப்பாகவும் உணர செய்கிறானே! எத்தனை பெரிய உணர்வு அது பெண்களுக்கு என்று ஒவ்வொரு பெண்ணால் உணர முடியும்.

அவளுக்கு இந்த மாதம் வந்த மாதவிடாய் காலத்தில் அவளின் காலை கூட கீழே வைக்க அனுமதிக்க வில்லை அவன். அவனே அவளுக்கு சேவகனகினான், தந்தையாகினான், தாயுமானவன் ஆகினான்.

இப்படி ஒரு ஆண்மகனை அவள் கனவில் கூட கண்டதில்லை, இனி காணப்போவதும் இல்லை என்று நினைத்து கொண்டாள்.

இருவருக்கும் ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். அவள் ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை அவளுக்கு கொடுத்தவன், "என்னோட பிளவர் ட்ரை பண்ணு", என்று ஒரு ஸ்பூன் எடுத்து ஊட்டி விட்டான், இதை தான் ஆதர்ஷின் நண்பன் கண்ட காட்சி. ஆருஷை பார்த்தவன் உடனே ஆதர்ஷிற்கு அழைத்து அவன் கலிபோர்னியாவில் இருப்பதையும் அவன் ஒரு பெண்ணிற்கு வாபில்ஸ் ஊட்டி கொண்டிருப்பதையும் சொல்லி விட்டான்.

இது எதுவும் தெரியாமல், இந்த இரண்டு உள்ளங்களும் தங்கள் உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்தனர்.

"வீர் நீங்க ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கல?", என்று அவள் கேட்டவுடன், அவளை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன், "இதையே நானும் கேட்கலாம்", என்று பதில் அளித்தான்.

"என் அக்காக்கு மேரேஜ் ஆனா கண்டிப்பா நல்ல பையனா பார்த்து மேரேஜ் பண்ணிப்பேன்", என்று அவள் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டே கூற, "நானும் என் அண்ணாக்கு மேரேஜ் ஆனா பிறகு பணிக்குறேன்", என்று அவன் சொன்னவுடன் அவளின் கண்கள் விரிந்தது.

"உங்களுக்கு அண்ணா இருக்காங்களா? நீங்க ஒரே பையன்னு சொன்னிங்க", என்று அவள் தொடர, "கசின்", என்று முடித்து விட்டான். "நம்ப வேணா என் அக்காக்கும் உங்க அண்ணாகும் மேரேஜ் பண்ணி வச்சிரலாம் என்ன சொல்றிங்க?", என்று கண்ணடித்து அவள் சொன்ன வார்த்தைகளை தெய்வங்கள் கேட்டு ததாஸ்து சொல்லி விட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது.

இப்படியாக அவர்கள் இருவரும் வீடு வந்து உறங்கிய பின், காலை வீர் எழுந்தது என்னவோ தளிரின் அலறலில் தான்.

"மதி", என்று கத்தி கொண்டு அவன் அவளின் அறைக்கு செல்ல, அவன் கண்ட கட்சியில் அவன் இருதயம் நின்று விட்டது.
 

Saranyakumar

Active member
எல்லா எபியிலும கடைசியில ஒரு ட்விஸ்ட் வச்சுதான் முடிக்கிறிங்க 🙄
 
eiRAT7N2752.jpg
eiJTMGM2882.jpg
ei8X6IF14098.jpg


அத்தியாயம் 16

இருவராலும் ஒருவரின் முகத்தை பார்த்து கொள்ள முடியாத தர்ம சங்கடமான நிலையில் இருந்தனர். இருவரின் நெஞ்சிலும் ஏதோ சொல்ல முடியாத பதற்றம், தவிப்பு, இனம் புரியாத உணர்வு. இருவரின் விழிகளும் ஒரு முறை உரசி செல்ல சட்டென இருவரும் திரும்பி கொண்டனர்.


"டேய் ஆருஷ் இதெல்லாம் உன்னால தான், உன் கைய வச்சிட்டு நீ சும்மா இருந்திருக்கலாம். பெரிய டாக்டர் டால்டான்னு இப்போ பாரு உன்னால மதியோட முகத்தை கூட பார்க்க முடியல", என்று அவனின் மனசாட்சியே அவனை காரி துப்பி கொண்டு இருந்தது.


மறுபுறமோ, "தளிர் உனக்கு இதெல்லாம் தேவை தானா ஒழுங்கா அவரு டாக்டரா உன்ன செக் பண்ணிட்டு போயிருப்பாரு, ஆனா நீ பண்ண கூத்துல..", என்று அவளை திட்டிக்கொண்டே நடந்ததை நினைத்தவளுக்கு வெட்கம் பிடிங்கி தின்றது.


அப்போது அவள் ஏதோ ஒன்றை சமையல் அறையில் உள்ள ரேக்கில் இருந்து எடுக்கும் சமயம் அவளின் பின்னே திடீரென்று வீர் நிற்பதை உணர முடிந்தது.


சட்டென திரும்பியவள் முன்னே, சமையல் மேடையில் ஒரு கை ஊன்றி மற்றொரு கையால் எதையோ எடுத்து கொண்டு இருந்தான். அப்போது தான் அவள் திரும்பி அவனை பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தான். இது ஒன்றும் புதிதல்ல இந்த ஒரு மாதத்தில் எத்தனையோ முறை இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது.

ஆனால் இன்று இருவரின் மனதும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. விழிகள் பேசும் மொழிகளை இருவரும் உணர ஆரம்பித்து அவர்களின் உலகில் சஞ்சரிக்க துவங்கி இருந்தனர்.

சற்று முன் நடந்தவை அனைத்தும் இருவரின் விழிகளிலும் படமாக ஓடத் துவங்கியது.

"மதி", என்று கத்தி கொண்டு அவன் அவளின் அறைக்கு செல்ல, அங்கே அவளோ அவளின் படுக்கையில் இருந்து கீழே விழுந்து இருந்தாள். அப்படி விழுந்ததில் அவளின் இரவு உடையின் மேலாடை விலகி அவளின் இடையை அப்பட்டமாக காட்ட, அவனுக்கோ இருதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

மருத்துவன் அவனுக்கு பெண்ணுடல் ஒன்றும் புதிதல்ல, ஆனால் இன்று ஏனோ அவன் மனதில் ஒரு தடுமாற்றம். அவளின் மெல்லிடை அவனின் மனதை முதன் முறை தடுமாற செய்தது. அவனின் ஹோர்மோன்கள் அவனை மீறி சுரக்க ஆரம்பித்தது.

"டேய் ஆருஷ் என்னடா இப்படி ஆகிட்ட, நீ அவ்ளோ வீக் ஆஹ்?", என்று அவனையே காரி துப்பியவன், ஒரு மருத்துவனாக அவளை அணுகினான்.

"என்ன ஆச்சு?", என்று அவளை எழுப்ப அவளின் இடையை பிடிக்க, "ஆஹ்ஹ்ஹ்", என்று அவள் அலறிய அலறலில் அவன் மீண்டும் அவளை தொப் என்று போட, அவளின் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடியது. அப்போது தான் அவள் படுக்கையில் இருந்து விழுந்து சுளுக்கு பிடித்து கொண்டிருக்க வேண்டும் என்பதை யூகித்து கொண்டான்.

"ஹே ஸ்ப்ரைன் ஆகிருக்கு உன்னோட ஹிப்ல ரைட்? வா ஸ்பிரே அடிச்சா சரி ஆகிடும்", என்று அவளை ஒரு வழியாக எழுப்பியவன், ஸ்பிரே பாட்டில் எடுத்து வர, அவளுக்கோ மயக்கம் வராத குறை தான். அவள் இன்று வரை ஜலதோஷத்திற்கு கூட ஆண் மருத்துவரை அணுகியது இல்லை.

வீருடன் அவள் தங்கி இருக்கும் ஒரே வீட்டில் கூட இன்று வரை முழு உடையில் தான் இருப்பாள். இன்று அவன் அவளிற்கு அவளின் மெல்லிடையை மருத்துவம் பார்க்க விழைகிறான். அவளிற்கு ஒரு அச்சம் அவளையும் மீறி மனதில் துளிர்த்தது.

"ஷோ மீ யுவர் ஹிப்", என்று சொன்னானே பார்க்கலாம், அவ்வளவு வலியிலும் எழுந்து நின்று விட்டாள். "வேண்டாம் வீர்", என்று அவள் இடுப்பை பிடித்து கொண்டு பின்னே செல்ல, "என்ன வேண்டாம் ஸ்ப்ரைன் இருக்கு ஸ்பிரே அடிச்சி என்ன ஆச்சுனு பார்க்கணும் மதி", என்றவன் அவளை நெருங்க, அவளுக்கோ இதயம் நின்று துடித்தது.

"ஹாஸ்பிடல் போக தான போறோம், அங்க செக் பணிக்குறேன்", என்று அவள் மன்றாட, "லூசா நீ? நானே டாக்டர் தான். பேசிக் எம்.பி.பி.எஸ் படிச்சி தான் கார்டியோ படிச்சிருக்கேன். ஐ கேன் ட்ரீட் யு மைசெலிப்", என்று சொல்லி கொண்டே மேலும் முன்னேறினான்.

நெருங்கியும் விட்டான்.

"வேண்டாம்", என்றவளின் குரல் காற்றுக்கு கூட கேட்டு இருக்காது. அவன் தான் அவள் வேண்டாம் என்று வாயை திறக்கும் முன்னரே அவளின் மேலாடையை விலக்கி இடையை பற்றி விட்டானே!

அவளின் இதயம் நின்றே விட்டது, முதன் முதலில் ஒரு ஆணின் ஸ்பரிசம். அவளின் உடல் அவளையும் மீறி சிலிர்த்து அடங்கியது. ஈர்ப்பு என்று இதை கடந்து விட அவள் ஒன்றும் சிறு பெண் இல்லையே! இருபத்தி ஆறு வயது பெண்ணவள், மென்மையானவள் ஆனால் உலகம் தெரியாதவள் அல்லவே! அவன் அவளின் இடையில் ஸ்பிரே அடித்த தருணம் அவனின் தோள்களை இருக பற்றி கண்ணை மூடிக்கொண்டாள்.

ஏழு கடல் கடந்து, நாட்டை விட்டு, கண்டம் தாண்டி, எத்தனையோ மனிதர்களை பார்த்திருக்கிறாள். அதில் வீர் தனி ரகம் தான். வீரை அவளுக்கு பிடித்து இருந்தது. யாருக்கு தான் அவனை பிடிக்காது.

அன்று ஸ்ருஷ்டி சொன்னது உண்மை தான் என்று அடிக்கடி நினைத்து கொள்வாள். இப்படி பட்ட கணவன் அமைய யாருக்கு கொடுத்து வைத்து இருக்கிறதோ என்று அவள் நினைத்த தருணங்கள் பல!

"முடிஞ்சுது", என்று அவன் அவள் காதுகளில் சொல்லும் பொது, அவனின் இதழ்கள் அவளின் செவிமடலை தீண்டியது தற்செயலா அல்லது அவனே செய்தனா என்று அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் .

அவளை நெருங்கியவுடன், முதலில் மருத்துவனாக தான் அவளின் இடையை பற்றினான், மருத்துவனாகவே வைத்தியமும் பார்த்தான், முடித்து விட்டு அவனே விலகியும் இருக்கலாமோ என்னவோ, ஆனால் அவளின் முகத்தை பார்த்தவன் விழுந்தே விட்டான். அவளின் முகத்தில் வலிகளின் சாயல் மட்டும் இல்லை அதையும் தாண்டிய உணர்வையும் வெளிப்படுத்தி கொண்டிருந்தாள் அல்லவா!

பிறப்பிலேயே வர்த்தக குடும்பத்தில் பிறந்தவன், மனிதர்களை பார்த்தவுடன் எடை போடும் தன்மை அவனின் ரத்தத்திலேயே ஊறி இருந்ததது. அவனால் அவள் பிரதிபலித்த மொத்த உணர்வுகளையும் உள்வாங்கி கொள்ள முடிந்தது.

அவன் அவளின் காதுகளில் முடிந்தது என்று சொல்ல மட்டும் தான் சென்றான், ஆனால் அவனையும் தாண்டி அவனின் ஆண்மை அவனை அவளின் செவிமடல்களை தீண்ட வைத்து விட்டது. ஏதும் தெரியாதது போல் அவளிடம் இருந்து விளங்கியவன், விருட்டென்று அவனின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

இருவரும் வேலைக்கு செல்ல ஆயுத்தமாகி வெளியே வந்ததில் இருந்து இதே கூத்து தான். ஒருவரை ஒருவர் தவிர்த்து கொண்டு இருந்தனர். இருவரும் சந்தித்தது என்னவோ வீர் அவனின் கைகளை நீட்டி சமைக்க பொருட்களை எடுக்கும் போது தான்!

வீரின் கைபேசி அலற, இருவரும் நிதானத்திற்கு வந்து மருத்துவமனைக்கு கிளம்பி விட்டனர். அங்கு சென்று அடையும் வரை இருவரும் வாய் திறக்கவே இல்லை. அவன் காரை நிறுத்தியதும், கீழே இறங்கியவள், எப்பொழுதும் போல அவனுக்கு காத்திருக்காமல், அவளின் பிரிவிற்கு சென்று விட்டாள்.

அவனோ பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டு அவனின் பிரிவிற்கு சென்று விட்டான். இன்று அவனுக்கு இரவு வெகு நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய கட்டாயம், ஆகையால் வாட்சப்பில் தளிருக்கு அவன் தாமதமாக வருவதாக குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான்.

தளிருக்கு அது கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்தது. காலையில் நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பின், இன்று வீரை தவிர்ப்பது நல்லதாக பட்டது.

அன்று மாலை, அவளே தனியாக வெளியே சென்று சற்று சுற்றி பார்க்க நினைத்தவள், சென்றது என்னவோ சிறிது தொலைவில் உள்ள பூங்காவிற்கு தான்.

அங்கு சென்று அமர்ந்தவளின் காதுகளில் விழுந்தது அந்த அமிர்த கானம்.

"மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

எதை நா..ன் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்..கள் கேட்டேன்

எதை நான் கேட்பின்

உனையே.. தருவாய்



க க ம க ம ரி ம க ரி ஸ நி ரி ஸ

ப ம க ம த ம க ரி ஸ நி ரி ஸ

க ம ஸ நி ஸ த நி ம த க ம ரி க ஸ

நி ஸ த நி ஸ

நி ஸ ம க க

நி ஸ ப ம ம க

ஸ நி ஸக ம க

ரி நி த ம ம க க ம க க க ம

ரி க நி ரி நி க ரி ம க ரி ஸ

ப ம த ம நி த நி ம த க ம ரி க ஸ

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை"

என்று ஒரு ஆடவனின் குரலில் அவள் மதிமயங்கி அந்த குரல் வந்த திசையை நோக்கி நடந்தாள். அவள் இன்று பார்க்க போகிறவன் தான் அவள் வாழ்க்கையை மாற்ற போகிறவன் என்று அவள் அறியாமல் போனது தான் வாழ்க்கை அவளுக்குகாக வைத்து இருந்த மிகப் பெரிய திருப்பம். அது ஒரு ஓபன் மைக் நிகழ்ச்சி, யார் வேண்டுமானாலும் பாடலாம். பச்சை நிற சட்டை போட்டுகொண்டு, நில நிற ஜீன்ஸ் அணிந்து ஸ்மார்ட் ஆக இருந்தான்.

அவன் மேடையில் இருந்து நேராக தளிரிடன் தான் வந்தான். அவளுக்கோ அதிர்ச்சி. "தமிழா நீங்க?", என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

"ஆமா", என்று விரித்த கண்கள் இறங்காமல் பதில் அளித்தவளை பார்த்து சிரித்தவன், "ஹாய் ஐ அம் சிவம்", என்று அவனை அறிமுகம் செய்து கொண்டவனை தான் தளிரின் கண்கள் அளந்தன. ஆறடி உயரம் நிச்சயம் இருப்பான், கோதுமைக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட நிறத்தில், கூறிய விழிகளுடன் ராஜ கம்பீரமாக தான் இருந்தது அவனின் தோற்றம்.

"நீங்களும் உங்க நேம் சொல்லலாம் தப்பு இல்லை", என்று புன்னகை மாறாது சொன்னவனின் வார்த்தையில் உயிர் பெற்றவள். முன்பின் தெரியாத ஒருவருக்கு எப்படி அறிமுகம் செய்வது என்ற குழப்பம், "வீர் கூட முன்பின் தெரியாதவன் தான் அவனிடம் நீ ஒரு வசிக்க இடம் பார்த்து தர சொல்லி கேட்டு அப்பறோம் முதல் நாளே அவனுடன் குடியேறியதாக நியாபகம்", என்று அவளின் மூளை அவளிடம் வாதம் செய்தது.

"நீங்க நியூட்ரிஷனிஸ்ட் தான?", என்று கேட்டவன் அவள் வேலை செய்யும் மருத்துவமனை போரையும் சொல்ல அவளுக்கோ நெஞ்சு அடைத்து விட்டது.

அவளின் அத்தனை முக உணர்வுகளையும் உள் வாங்கிகொண்டவன், "அட நானும் அங்க தான் மா ஒர்க் பண்றேன். கைனகாலஜிஸ்ட்", என்று அவன் சொன்னவுடன் தான் அவள் புன்னகை சிந்தினாள்.

"தளிர்மதி", என்று அவளின் பேரை கூறியவளிடம், "உனக்கு ஏத்த பேரு தான். தளிர்னு கூப்பிடணுமா இல்ல மதினு கூப்பிடணுமா?", என்று கேட்டவனுக்கு, "நீ எதுவோம் அவளை கூப்பிடமா இருக்கறது தான் நல்லது", என்ற குரலில் திரும்பியவன் பார்த்தது என்னவோ. அங்கு பத்ர காளியாக நிற்கும் ஸ்ருஷ்டியை தான்.

"அவ வீர் அண்ட் என்னோட பிரண்ட் அவ கிட்ட பேசுற வேலை வச்சிக்காத", என்று சொன்னவள் தளிரின் கைகளையும் இழுத்து கொண்டு சென்று விட்டாள். அவள் இழுத்து கொண்டு சென்றால் மட்டும் அவர்களின் பந்தம் முறிந்து போகுமா என்ன? தளிருக்கு தோள் கொடுக்க துணையாய் இறைவனால் அனுப்ப பட்டவன், அவளுக்காக அஞ்சாமல் உயிரையும் துச்சமாக எண்ணி கொடுக்க துணிபவனை யாராலும் பிரிக்க முடியாது என்று அனைவரும் அறியும் காலம் விரைவில் வரும்.

"அவன் கிட்ட பேசாத", என்று சொன்ன ஸ்ருஷ்டியை விசித்திரமாக பார்த்தாள் அவள். ஸ்ருஷ்டி இப்படி நடப்பவள் அல்ல, "அவருக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்னையா?", என்று கேட்டவளிடன், ஏதோ சொல்ல வாய் எடுத்தவள், "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, பட் அவன் கேரக்டர் செட் ஆகாது. நீயும் டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணிக்கோ", என்பதுடன் நிறுத்தி கொண்டாள். அதற்கு மேல் அவளிடம் தோண்டி துருவ தளிர்க்கும் தோன்ற வில்லை.

இருவரும் தத்தமது அபார்ட்மெண்டிற்கு சென்று விட்டனர்.

வீர் இரவு பத்து மணியளவில் வீட்டிற்கு வர, அவன் கண்ட காட்சியில் அவனின் இதயமே வெளியே வந்து விட்டது.
 
ei6P22K2931.jpg
eiHRNNN14266.jpg

1726670975699.jpg
eiJNLM114195.jpg

1726670946002.jpgeiKHZ2R14124.jpg
eiUORXX2600.jpg

அத்தியாயம் 17

"வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால்தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…"

என்ற பாடல் அவளின் ஹெட்செட்டில் ஒலிக்க, அவளோ கடந்த இரு மாதங்களாக வீருடன் இருந்த அத்தனை தருணங்களும் அவளின் கண்முன்னே ஓடிக் கொண்டிருந்ததது.

அதுவும் ஒரு மாதத்திற்கு முன், அவன் தாமதமாக பதினோரு மணியளவில் வருவான் என்று சொன்னமையால், இவள் அவளின் அறையை திறந்து வைத்து கொண்டு, பேபி டால் பாட்டிற்கு வெள்ளை சட்டையில் நீல நிற ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கொண்டு இருக்கையில், அவன் பார்த்தது இன்றும் அவளின் நினைவில் அப்படியே நேற்று நடந்தது போல் இருந்தது.

அன்று வீர் அபார்ட்மென்ட்டினுள் நுழைய, அவனிற்கு கேட்டது என்னவோ பேபி டால் பாடல் தான், அதுவும் அவன் இல்லாததால் முழு சத்தத்தில் வீடே அதிரும் வண்ணம் பாடலை பாடி கொண்டு ஆடி கொண்டிருந்தாள் தளிர்மதி.

அவளின் பளிங்கு கால்கள் பளிச்சென்று அவனுக்கு விருந்தாக பல்லை காட்டி கொண்டு அவனை வசீகரிக்க, அவனும் சாதாரண மானுடன் தான் அல்லவா, முனிவன் அல்லவே! அப்படியே முனிவனாய் இருந்தாலும் விஸ்வாமித்ரனே மேனகையிடன் மயங்கிய போது, ஆருஷ் வீர் எம்மாத்திரம்?

அவளை ஆதியில் இருந்து அந்தம் முதல் கண்ணாலேயே அளந்து விட்டான். வெள்ளை நிற சட்டையில் ஆடிக் கொண்டிருந்தமையால் வியர்வை துளிகளில் அவளின் அங்க வணப்புகள் அத்தனையும் அவனுக்கு விருந்தாகி கொண்டு இருந்தது.

தீடிரென்று யாரோ அவளை பார்க்கும் உணர்வு, அவள் சட்டென்று திரும்ப, அவன் பட்டென்று சுவரின் பின் ஒளிந்து கொண்டான்.

இது எதுவும் தெரியாதவளோ அவள் உலகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தாள். அதுவும் பேபி டால் என்று பாட்டில் வரும் பொது அவளின் இடையை ஆட்ட, அவனையும் மீறி, "செம்ம செக்ஸியா இருக்க", என்று அவன் குரலை உயர்த்தி சொல்லி விட, பின்னே திரும்பி வீரை பார்த்தவளுக்கு உலகமே நின்ற உணர்வு.

அவன் வரமாட்டான் என்று சொன்ன தைரியத்தில் தான் கதவை சாத்தாமல் அவள் ஆடிக் கொண்டிருந்ததது. இப்படி தீடீரென்று மாயாவி போல் வந்து நிற்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?

அவள் நிற்கும் கோலம் உணர்ந்தவள், "கொஞ்சம் போறிங்களா?", என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கையில் அவளின் அறைக்குள் வந்து விட்டான்.

"வீர் ப்ளீஸ் வெளிய போங்க, ஏன் இப்படி ரூம் உள்ள எல்லாம் வரீங்க?", என்று சிணுங்கிக்கொண்டே பின்னே செல்ல, அவனோ மேலும் மேலும் முன்னேறினான்.

பின்னே சென்றவள் சுவரில் முட்டி விட, அவளுக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, அவனோ அவளின் செவிமடல்கள் கிட்டே வந்தவன், "அடுத்த தடவை நான் உன்ன இப்படி பார்த்தா....", என்று பெருமூச்சுடன் நிறுத்தி கொண்டான்.

"வீர்", என்று அவள் அவனை பார்க்க, "நான் இல்லாத மோது அப்போ இப்படி தான் டிரஸ் பண்ணிட்டு இருக்க ரைட்? இதோட நான் இருக்கும் போதும் இப்படி டிரஸ் பண்ணலாம் தப்பு இல்ல", என்று அவளை மறுபடியும் மேல் இருந்து கீழே பார்த்தவன், "உனக்கு குழந்தை பொறந்தா நியூட்ரிஷஸ் ஆஹ் தான் இருக்கும்", என்று கண்கள் சிமிட்டி சொன்னான்.

"இப்போ எதுக்கு குழந்தைய பத்தி பேசுறீங்க? முதல வெளிய போங்க", என்று அவனை ரூமை விட்டு அவளே வெளியே தள்ள, அப்போது தான் அவள் நிதானத்திற்கு வந்திருந்தாள்.

கண்ணாடியில் அவளின் பிம்பத்தை பார்த்தாள், அவன் சொல்லிய அர்த்தம் இப்பொது வெட்ட வெளிச்சமாக அவளிற்கு விளங்கியது. வெள்ளை சட்டைக்குள் அவள் போட்டிருந்த கருப்பு உள்ளாடை அப்பட்டமாக அவளின் முன்னழகை காட்டிக் கொடுத்து கொண்டு இருந்ததே!

"ஐயோ இதோட எப்படி நான் வீர பேஸ் பண்ணுவேன்?", என்று தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டாள். அடுத்த தடவை வெள்ளை சட்டை போடுவியா போடுவியா?", என்று அவளே அவளின் தலையை நங்நங் என்று கொட்டி கொண்டாள்.

இங்கோ, வீர் ஷவரின் கீழ் நின்றவன், அவனின் உடலை சூட்டை தணிக்க பெரும் பாடு பட்டுக்கொண்டு இருந்தான். "ச்சா என்ன இப்படி ஆயிட்டான்! அவ்ளோ அலஞ்சான நான்? இவ கூட இதோட ஒன் ஆர்ம் டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணனும்", என்று அவனை சமாதானம் செய்து கொண்டு சென்று விட்டான்.

இப்படியாக அவர்களின் நாட்கள் நகர, தளிர்க்கும் சிவமிருக்கும் நட்பு பெருகிக்கொண்டு இருந்தது. (அதை விவரமாக உயிரும் உறவும் இரண்டாவது கதையான "என் உயிரானவளே மதியழகே" வில் காண்போம்).

"தளிர் ஓட பர்த்டே வருது வீர்", என்று ஸ்ருஷ்டி சொல்ல, "தெரியும், அந்த சிவம் கூட எங்கயோ வெளிய போறாளாம்", என்று சொன்னவன் கையில் இருந்த கூல் ட்ரிங்க்ஸ் டின் நொறுங்கி விட்டது.

"பேசாத..", என்று அவள் இழுக்க, "பேசாத?", என்று புருவங்கள் சுருக்கி அவளை உற்று நோக்கினான்.

"நம்ப வேணா அவனையும் நம்ப பிளான்ல சேர்த்துக்கலாமா?", என்று ஒரு வழியாக கேட்டே விட்டாள்.

அவனிடம் பதில் இல்லை. "தளிர்க்காக தான வீர்", என்று மீண்டும் அவள் கொக்கி போட, அவனிடம் இருந்து, "ம்ம்", என்று மட்டும் தான் பதில் வந்ததது.

அதற்கு பிறகு ஒரு வழியாக ஸ்ருஷ்டி தான் சிவமிற்கும் அழைத்து, வீரின் அபார்ட்மெண்டிற்கு வர வைத்து இருந்தாள்.

சிவமோ தளிரிடம், அவனுக்கு அவசர கேஸ் ஒன்று வந்து விட்டதாக சொல்லி அவர்களின் வெளியே செல்லும் பிளானை நிறுத்தி விட்டான்.

"அவளுக்காக மட்டும் தான் இங்க வந்திருக்கேன்", என்று சிவம் கூற, "அவளுக்காக தான் நானும் உன்ன எல்லாம் என் வீட்டுக்குள்ள விட்ருக்கேன்", என்று வீரும் அவனின் பங்கிற்கு உறுமினான்.

இரு வேங்கைகளுக்கு நடுவிலும் மாட்டி கொண்டது என்னவோ ஸ்ருஷ்டி தான். "இரண்டு பேரும் கொஞ்சம் சீக்கிரமா டெகரேஷன் பண்றிங்களா? அவ அல்மோஸ்ட் வந்துட்டு இருப்பா", என்று அவள் சொல்லவும் தான் இந்த வாக்கு வாதத்தை விட்டனர்.

இது எதுவும் தெரியாமல், தளிர் பாட்டை கேட்டுக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர, கதவை திறந்தவளுக்கோ, அதிர்ச்சி!

வீரும் சிவமும் ஒரே வீட்டிலா? இத்தனை நாட்களில் அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரியும், சிவமும் வீரும் ஒரே மாதிரி "அவனை பற்றி பேசாதே", என்று ஒருவருக்கு ஒருவர் மாறாமல் சொல்லி விட்டார்கள்.

"உனக்காக மட்டும் தான் தளிர் நான் இங்க வந்தது", என்று சிவம் முதலில் கூற, "நான் கூட உனக்காக மட்டும் தான் இவன எல்லாம் என் வீட்டுக்குள்ள விட்ருக்கேன்", என்று வீரும் அவனின் பங்கிற்கு சீற, "ரெண்டு பேறும் உனக்காக தான் மா அவங்க ஈகோவ கொஞ்சம் தள்ளி வச்சிருக்காங்க. அடுத்து இவனுங்க அடிச்சி கேக் ஆஹ் நாசம் பண்றதுக்கு முன்னாடி நீ வந்து கேக் வெட்டு", என்று ஸ்ருஷ்டி தான் நிலையை சீர் ஆக்கியது.

நால்வரும் மகிழ்ச்சையாக இருந்தனர். வீரும் சிவமும் எதுவும் பேசாததே இரு பெண்களுக்கும் நிம்மதியாக இருக்க, ஸ்ருஷ்டி தளிருக்கு ஒரு வாட்ச் பரிசாக வழங்கினாள். சிவம் அவளிற்காக ப்ரீதியாகமாக ஒரு பிஎப்எப் (BFF) என்று போட்ட பென்டென்டை அணிவித்து விட்டான். வீரின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது, இருந்தும் அதை அப்பட்டமாக வெளி காட்டமுடியாத நிலை.

"இத எப்பவோமே நீ கழட்ட கூடாது தளிர், என்ன ஆனாலும் சரி", என்றவன் சொன்னது கட்டளையாக தான் தோன்றியது அனைவர்க்கும். "ஸ்டாப் ஓடேரிங் ஹேர்", என்று வீர் உறும, "இது ஆர்டர் இல்ல, அக்கறை", என்று அவனும் அவனின் பங்கிற்கு சீற, "நான் இத கழட்ட மாட்டேன் சிவம்", என்று சொல்லி விட்டாள் தளிர்.

சிவமின் முகத்திலோ புன்முறுவல், வீரின் முகத்திலோ அப்பட்டமான கோவம். "சரி நான் கிளம்புறேன்", என்று சிவம் சொல்ல, "நானும் கிளம்புறேன்", என்று ஸ்ருஷ்டியும் புறப்பட்டு விட்டாள்.

வீர் அவனின் அறைக்குள் நுழைய முற்பட, "சார் எனக்கு நீங்க இன்னும் கிப்ட் கொடுக்கல", என்று நக்கலாக கூறியவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவன், "அதான் உன் பெஸ்டி கொடுத்துட்டானே அப்புறோம் என்ன", என்று அவனின் அறைக்குள் மீண்டும் நுழைய முற்பட, "அப்போ உண்மையா எனக்கு கிபிட் இல்லையா?", என்று அவளின் முகம் வாடியது.

அவளின் கூம்பிய முகத்தை பார்ப்பதற்கு அவனால் இயலுமா என்ன? "சரி சரி கண்ண மூடு", என்று அவன் அவளிடம் சொல்ல, அவளும் அரை கண்ணை தான் மூடினாள். "சீட் பண்ணா கிப்ட் கிடைக்காது", என்று அவளை உருட்டி மிரட்டி கண்களை மூட வைத்து விட்டான்.

"இப்போ கண்ணை திற", என்று அவளின் முன் ஒரு ப்ரஸ்லட்டை நீட்டினான். "போட்டும் விடலாம்", என்று அவளின் கைகளை அவனை கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டே கூறினாள்.

வெள்ளை நிற உடையில் தேவதையாக அவனுக்கு காட்சி அளித்து கொண்டிருந்தாள். அவனும் அவளுக்கு தன்குந்தார் போல் வெள்ளை நிற சட்டையில் இருக்க, அவர்களை பார்த்து மன்மதனும் ரதியும் கூட பொறாமை கொண்டிருப்பார்கள்.

"ஹப்பி பர்த் டே", என்று அவன் சொல்லிக்கொண்டே அவளின் கைகளில் அவன் அணிவிக்க, அவனையே தான் அவள் கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அவனை கண்களாலேயே பருகிக்கொண்டு இருந்தாள்.

"பிரேஸ்லட்ல சூரியன் சந்திரன் ரெண்டுமே இருக்கே", என்று விழிகளை உயர்த்தி அவள் கேட்க, "ஆமா, என்னோட பேரு ஆருஷ் அப்படின்னா சூரியன்னு அர்த்தம், உன்னோட பெயர்ல மதி இருக்கு சோ சந்திரன், அதான் ரெண்டத்தையும் சேர்த்து உனக்கு ப்ரெசென்ட் பண்றேன். எப்படி சூரியன் சந்திரனுக்கு ஒளி குடுத்துட்டு இருக்கோ அதே மாறி இந்த ஆருஷ் வீரும் தளிர்மதியோட வாழ்க்கைய ப்ரகாசமாக்கிட்டே இருக்கனும்", என்று சொன்னவனுக்கு தெரியவில்லை இன்னும் ஒரு மாதத்தில் அவன் தான் அவளுக்கு அவள் வாழ்வில் நரகத்தை காட்ட போகிறான் என்று!

அவளின் கண்களில் நீர் தேங்கி விட்டது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை தான்.

மேலும் தொடர்ந்தவன், "நீ எப்பவோமே சிரிச்சிட்டே இருக்கனும் மதி அந்த முழுமதி போல, இந்த முகம் சிரிச்சா தான் அழகா இருக்கு. நோ மோர் டீயர்ஸ்", என்று நெற்றி முட்டி அவன் கூறி முடிய, அவனை இறுக அணைத்து இருந்தாள்.

இருவருக்குமான முதல் அணைப்பு அதுவும் தளிர் தானாக அணைத்தது இருவருக்குமே ஆச்சர்யம் தான் இருந்தாலும் அந்த அணைப்பில் காமம் இல்லை, காதல் இல்லை ஆனால் ஒரு வித நேசம் இருந்தது. தனக்காக ஒருவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கைக்குரிய அணைப்பு அது! ஆத்மார்த்தமான அழகிய அணைப்பு!

இப்படியாக அவர்களின் நாட்கள் நகர, தளிர் சிவம் மற்றும் வீர் இருவரின் வாழ்விலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டாள். (அவர்களின் முழு கதை இரண்டாம் பக்கத்தில் விரிவாக எடுத்துரைக்க படும்).

வீரும் தளிரும் காதலை சொல்லி கொள்ள வில்லையே தவிர அவர்களின் செயலின் மூலம் இருவருக்கும் ஒருவரின் மேல் மற்றவருக்கு இருக்கும் உணர்வு புரியத்தான் செய்தது.

சொன்னால் தான் காதலா? உணர்ந்து, புரிந்து, நேசித்து, சுவாசித்து கொண்டிருப்பதும் காதல் தானே! இருவரும் காதலை சொல்லும் நாள் விரைவில்! ஆனால் அந்த நாள் அவர்கள் உடையும் நாளும் என்று அவர்கள் அறியாமல் போனது தான் விதி ஆடும் விளையாட்டு.

இப்படியாக ஒரு நாள், அவர்களின் மருத்துவமனையில் வேலை செய்யும் அனைவர்க்கும் ஒரு பார்ட்டி கொடுக்க முடிவெடுத்து இருந்தனர். அதற்காக ஆயுத்தமாகி சென்று விட்டனர். பார்ட்டியில் அனைவரும் நன்றாக சிறிது பேசிக்கொண்டு இருந்தனர்.

தளிர் சிவமுடன் அவளின், நேரத்தை செலவழிக்க, "உன்ன வீர் லவ் பன்றான் தளிர்", என்று அவன் சொல்ல, அவளின் வாயில் இருந்த ஜூஸ் வெளியே வந்து விட்டது. நல்ல வேலையாக எதிரில் யாரும் வர வில்லை. "இப்படி நடிக்காத நீயும் அவனை லவ் பண்ற, இரண்டு பேரும் நல்ல பேர் தான்", என்று அவன் புன்னகைத்து கூறவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

பழகிய நாட்களில் சிவமும் அவளின் வாழ்வில் முக்கிய நபராகி விட்டான் அல்லவா, வீரை கூட அவள் யாழிடம் பேச வைத்தது இல்லை, ஆனால் சிவமை பேச வைத்திருக்கிறாள்.

"அவரு எங்க நான் எங்க", என்று அவள் ஆரம்பிக்க, "அதெல்லாம் அவன் பாக்குற ஆள் இல்ல", என்று அவன் முதல் முறையாக வீரிற்காக பேசினான்.

அவளின் கண்களோ விரிந்தன, "என்ன இன்னைக்கு அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறேன்னு பாக்குற? அவனும் நானும் ஸ்கூல்ல இருந்த எதிரிங்க தான் ஆனா எங்களுக்கு எதிக்ஸ் இருக்கு. என்னை பத்தி அவன் கிட்ட கேட்டு பாரு சொல்லுவான். இதுவே உன் பர்த்டே அன்னைக்கு வேற யாராச்சு உனக்கு செயின் போடு விட்டு இருந்த மூஞ்ச ஒடச்சிருப்பான். நானா இருக்கவே அமைதியா இருந்தான். பிகாஸ் ஹி க்னோஸ் தட் ஐ அம் யுவர் பெஸ்டி", என்று சொன்னவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

"எதிரிகளுக்கு கூட எதிக்ஸ் இருக்கா?", என்று நக்கலாக அவள் வார்த்தைகள் வர, "எஸ் ஹி இஸ் மை ஏத்திக்கல் எனிமி", என்று அவன் கண்களை சிமிட்ட அவளும் இருபுறம் தலையை ஆட்டிக் கொண்டாள்.

அங்கோ இதே சம்பாஷணை ஸ்ருஷ்டிக்கும் வீரனுக்கும் நடுவில் நடந்து கொண்டு இருந்தது. "நீ எப்போ டா தளிர் கிட்ட ப்ரொபோஸ் பண்ண போற", என்று ஸ்ருஷ்டி கேட்டு விட, "என்ன மோப்பம் புடிக்கிறிங்களா இரண்டு பேரும் சேர்ந்து", என்று அவன் சிவத்தை கண்களால் காட்டிய படி வினவ, "டேய் நான் அவன் கிட்ட ஏன் பேச போறேன், நீயும் அவளும் தான் கண்ணாலேயே காதல் பண்றிங்களே", என்று நமட்டு சிரிப்போடு அவள் சீண்ட, "அவ என்ன நினைக்கிறானு தெரியல", என்று முடித்து விட்டான்.

"என்ன தெரியல? இரண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் கூட போட்டுட்டு வந்திருக்கீங்க. நல்லா பஞ்சுமிட்டாய் மாறி இருக்கீங்க டா", என்று சொல்லிக்கொண்டே அவள் சிரிக்க, "எல்லாம் என் நேரம் டி", என்று அவனோ சலித்து கொண்டான்.

இப்படியாக பேசிக்கொண்டிருந்தவர்கள், பார்ட்டி முடிய அவர்களின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். வீரும் தளிரும் வீட்டிற்குள் நுழைய, "ஷால் வி டான்ஸ்?", என்று வீர் தளிரை நோக்கி கைகளை நீட்ட, "என்ன திடிர்னு", என்று அவள் வினவ, "ஆட பிடிக்கலைன்னா பிரச்சனை இல்ல", என்று அவன் கைகளை கீழே இறக்கும் முன், இருவரின் கைகளும் கோர்த்து கொண்டது.

அவளின் இடையை பற்றியவன், ஆழியிலே முக்குளிக்கும் அழகே என்ற பாடலுக்கு ஆட ஆரம்பிக்க பாட்டின் வரிகள் நீங்க நிஜமாகி கொண்டிருந்தது.

இப்படி ஆட ஆரம்பித்தவர்கள், எப்போது தளிரை சுவரின் மேல் வீர் சாய்த்தான் என்று இருவருக்குமே தெரியாது. இளமையின் மயக்கம், சொல்லிலடங்கா உணர்வுகளை தட்டி எழுப்ப, அவளின் கழுத்து வளைவுகளில் முகத்தை புதைத்து கொண்டான்.

பாடலின் வரி "உன் உம் என்ற
சொல்லுக்கும் இம்மென்ற
சொல்லுக்கும் இப்போதே
தடை வைக்கவா மவுனத்தில்
குடி வைக்கவா"

என்று ஒலிக்க, அவளும் உம் என்று முனங்க, தளிர் முதன் முறையாக தன்னிலை இழந்தாள்.
சொல்லாத காதல் அவளின் செல்லில் பல ஹார்மோன்களை சுரக்க வைத்து கொண்டிருந்ததது.
வீர் அவளின் செவியில் கேட்ட கேள்வியில் சுய நினைவுக்கு வந்தவளின் கண்கள் விரிந்து கொண்டன.
 

Attachments

  • eiJNLM114195.jpg
    eiJNLM114195.jpg
    388.8 KB · Views: 1

Saranyakumar

Active member
வீருக்கும் தளிருக்கும் இடையில நல்லாதான் போயிட்டுருக்கு என்ன தான் பிரச்சனை வீர் அப்படி என்ன கேட்டான்
 
ei8JRS471596.jpg
eiQGFY071762.jpg
eiX5K8N71724.jpg
1726819487672.jpg

அத்தியாயம் 18


தளிருக்கு நிலை கொள்ளவே முடிய வில்லை, அவளின் உதடுகளை அவளே ஒரு முறை வருடி பார்த்தாள். அவள் மேனி சிலிர்த்தது, இன்னும் அவனின் உதடுகள் அவளின் உதடுகளை எச்சில் செய்வது போல் ஒரு பிரம்மை.

அவள் இரவு உடையில் இருக்க, சற்று முன்னே நடந்த நிகழ்வுகள் அவளின் கண் முன்னே வந்து சென்றது.

அவள் உணர்வுகளின் உச்சத்தில் சென்று கொண்டு இருக்க, தன் வசத்தை இழந்து விட்டாள். அவன் என்ன செய்தாலும் உடன் படும் நிலை தான். அவளின் காதுகளுக்கு அருகே இதழை நகர்த்தி கொண்டு சென்றவனோ, "கேன் ஐ கிஸ் யு?", என்று கேட்கவும் தான் சுயநினைவு பெற்றாள்.

அவளின் கண்களோ விரிந்து கொண்டது, மனதும் விழித்து கொண்டது. என்ன நிலையில் இருந்திருக்கிறாள், அவளின் உடை ஒரு பக்கம் தோளில் இருந்து இறங்கி இருந்தது, அவளின் வெண்ணிற சங்கு கழுத்தில் அவன் தடம் பதிந்திருந்தது.

அவளை அவனவளாக்கிய ஒரு உணர்வு.

"கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே டி", என்று பெருமுச்சுடன் மோகம் கலந்த குரலில் பேசினான்.

ஆனால் அவளை போல மொத்தமாக மோகத்தின் பிடியில் சிக்கவில்லை இன்னும் சுய நினைவுடன் தான் இருக்கிறான். ஆகையால் தான் இந்த நிலையிலும் அவளின் அனுமதியை வேண்டுகிறான்.

அவனிடம் இன்னும் மரியாதை பெருகியது, நினைத்து இருந்தால் அனுமதி வேண்டாமலேயே அவளை ஆட்கொண்டே இருக்க முடியும்.

ஆனால் இதழை தீண்டவே அவளின் அனுமதி வேண்டுகிறான். இதற்குமேல் ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும்? உலகத்தில் உள்ள எல்லா பெண்களின் ஆசையே தன்னவன் தன் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது தான். அதை வீர் செய்து கொண்டே இருக்கிறானே!

"சொல்லு டி", என்று மீண்டும் அவன் மோகம் மட்டுப்படாமல் கேட்க, அவள் "ம்ம்", என்று சொல்லி முடிக்கும் முதல் அவளின் இதழை சிறை எடுத்துவிட்டான்.

இருவருக்குமான முதல் முத்தம். சிறு சிறு பிழைகள் இருந்ததது, இடையில் சிரித்தார்கள், சிலிர்த்தார்கள், சிவந்தார்கள், வெட்கினார்கள், வெட்டகையுடன் இருவரின் இதழும் இணைந்து கொண்டது.

காதலுடன் அவளின் இதழ்களை கடித்து விட்டான். "ஸ்ஸ்ஸ்", என்று அவளின் அலறலில் இருவரும் சுயத்தை அடைய இருவருக்குமே பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு.

"ரொம்ப வலிக்குதா?", என்று அவன் கேட்க, தளிருக்கோ நிலைகொள்ளவே முடியவில்லை.

"வலிச்சா சொல்லு, மருந்து போடலாம்", என்று அவன் சொல்லவும் அவனை சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவனோ இன்னும் அவளையே தான் உற்று நோக்கி கொண்டு இருந்தான்.

சரியாக சொல்ல வேண்டும் என்றால், இன்னும் அவளின் இதழ்களை தான் கண்களால் பருகிக்கொண்டு இருந்தான்.

"சொல்லு மருந்து போடட்டுமா டி", என்று மோகமாக அவன் கேட்க, வேகமாக இல்லை என்று இவள் தலையசைக்க, அவனோ சிரித்து கொண்டே, அவளை இன்னும் சீண்ட நினைத்தான்.

"நான் டாக்டர் தான் டி, வலிச்சா சொல்லு டிரீட்மென்ட் பாக்குறேன் என் ஸ்டைல்ல", என்று அவன் கண்சிமிட்டி சொல்ல, அவளுக்கோ நிலத்திற்குள் புதைந்து விடலாம் போல இருந்ததது.

அப்போது தான் அவள் ஒன்றை கவனித்தாள், வீர் அவளை “டி” என்று கூப்பிடுவதை, ஸ்ருஷ்டியிடம் இப்படி பேசுவான் தான் ஆனால் அதில் பாசம் மற்றும் நேசம் இருக்கும், ஆனால் தளிரிடம் அவன் டி என்று பேசும் பொது அவளால் ஒரு உரிமை உணர்வை உணர முடிந்தது.

ஆண் ஒருவன் தன்னை எந்த நோக்குடன் அணுகுகிறான் என்று உணரக்கூடிய தன்மை பல பெண்களுக்கு உண்டு. தளிராலும் கணிக்க முடிந்தது வீர் அவளை எந்த நோக்குடன் அணுகுகிறான் என்று!

மீண்டும் அவளை நெருங்கியவன், அவளின் கன்னத்தில் இதழ் பதித்து அவனின் அறையில் செல்ல முற்பட, "இதையே நினைச்சிட்டு இருக்காம கொஞ்சம் தூங்கு டி", என்று அவன் சொல்ல, இன்னும் அவளால் நிதர்சனித்திற்கு வர முடியவில்லை.

அவளின் அறையை அடைந்தவள், இரவு உடை மாற்றி வந்த பின்பும் அதையே தான் நினைத்து கொண்டு இருந்தாள். தீடீரென்று அவளுக்கு சாந்தினி மற்றும் யாழின் நினைவுகள், அவர்களிடம் இன்று வரை வீரை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. ஆனால் அவனிடம் இப்படி இழைந்து கொண்டிருக்கிறாள்.

ஏதோ ஒரு குற்றவுணர்வு மனதில் ஒரு ஓரத்தில் இருக்க தான் செய்தது. வீருடன் அவளின் உறவு போகிக்கொண்டிருக்கும் நிலையை பார்த்தால் கண்டிப்பாக கல்யாணம் வரை செல்லும் என்று தான் தோன்றியது.

"அவருகிட்ட காதலை சொல்ற அன்னைக்கு யாழ் கிட்ட எல்லாத்தயும் சொல்லிரனும்", என்று அவளின் மனதில் சொல்லிக்கொண்டாள். பாவம் பேதை அறிய வில்லை அந்த நாளில் தான் அவளவன் அவளின் உணர்வுகளை பறிக்க போகும் நாள் என்று!

அடுத்த நாள் காலையில் எழுந்தவர்கள், குளித்து முடித்து வெளியே வர, இருவரின் விழிகளிலும் காதல், காமம் இரண்டும் கலந்து இருந்தது. சிறுது வெட்கமும் தேங்கி இருந்தது.

இருவரும் ஒன்றாக சமைக்க ஆரம்பித்தனர். எப்போதும் தெரியாமல் உரசும் கைகள், இன்று தெரிந்தே உரசின, இருவரின் உடலும் சிலிர்த்தது, சிறு சிறு தீண்டல்கள் அவர்கள் இருவரின் உள்ளும் சொல்லிலடங்கா உணர்ச்சிககளை தூண்டி கொண்டு இருந்தது.

அவளின் உதடுகளில் காயமும் இருந்தது. "இன்னும் காயம் இருக்கா?", என்று அவன் கேட்க, அவன் எதற்கு அடி போடுகிறான் என்று அறிந்தவள், "அதெல்லாம் ஒன்னும் இல்ல", என்று சொல்லிக்கொண்டே நகர போனவள் கையை பிடித்து இழுத்தவன், அவளை சுவரில் சாய வைத்தான்.

"என்ன பண்றீங்க வீர்", என்று அவளின் குரல் கம்மி ஒலிக்க, "தாகமா இருக்கு", என்று சொன்னவின் குரலில் இருந்த வேற்றுமையை அவளால் உணர முடிந்தது. இருவரின் விழிகளும் ஆயிரம் வார்த்தைகள் பேசின.

தீடீரென்று அவளின் கைபேசி ஒலி அவர்களின் மோன நிலையை அறுக்க, அன்று யாழ் அவளிற்கு அழைப்பதாக சொல்லிருக்க, அவள் தான் என்று தளிருக்கு தெரிந்தது. "விடுங்க வீர்", என்று அவள் சொல்லிக்கொண்டே நழுவ பார்க்க, "யாழ் தான கூப்டுறா இன்னைக்கு நான் அவ கிட்ட பேசுறேன்", என்று சொன்னவன் புயல் வேகத்தில் அவளின் கைபேசியை எடுத்து இருந்தான்.

அவளோ, "வீர்", என்று சொல்லிக்கொண்டே ஓடி அவனிடம் இருந்து கைபேசியை பிடுங்க பார்க்க, இருவரும் விளையாடிக்கொண்டே சோபாவில் விழுந்து விட்டனர். தளிரின் மொத்த கவனமும் அவளின் கைபேசியை பிடுங்குவதிலேயே இருந்தமையால், அவள் இருந்த நிலை அவளிற்கு உரைக்க வில்லை,

ஆனால் வீரின் ஆண்மையோ பேய் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது.

"இந்த பொசிஷன் கூட நல்லா இருக்கு", என்று அவன் குரலை செருமி கொண்டு சொல்ல, அப்போது தான் அவளுக்கு அவர்கள் இருக்கும் நிலை நெற்றிப்பொட்டில் அறைந்தது.

அவன் சோபாவின் கீழே இருக்க, அவனின் மேலே அவள் அமர்ந்திருந்தாள். "அச்சோ", என்று சொல்லி அவள் விலக முற்பட, அவளை வளைத்து பிடித்து அவனின் கைவளைவுகளில் கொண்டு வந்தான்.

"செம்மையா இருக்க டி", என்று சொல்லிக்கொண்டே மேலும் அவன் நெருங்க முற்பட, மீண்டும் கைபேசி அலறியது.

அவனுக்கோ கோவம் வந்து விட்டது. "யாழ் தான் டி எனக்கு வில்லி", என்று சொன்னவனுக்கு தெரியாது ஒரு நாள் யாழிடம் தான் தளிருக்காக அவன் கெஞ்சும் நிலை ஏற்ப்பட போகிறது என்று!

அவளோ சிரித்து கொண்டே, யாழின் அழைப்பை உயிர்ப்பிக்க, விடுவானா அவன், விடாக்கண்டன் ஆயிர்றே, அவளை ஒரு வழி செய்து விட்டான். கழுத்தில் முத்தம் பதித்து கொண்டு அவளிற்கு தொந்தரவு கொடுத்து கொண்டு இருந்தவன், என்ன நினைத்தானோ, சட்டென்று கடித்து விட, அவளுக்கு வலித்தது, ஆனால் சுகமான வலி.

"அஹ்ஹ்ஹ", என்று அவள் முனங்க, "என்ன டி ரசகுல்லா முனங்குற", என்று யாழ் கேட்க, அவளிருக்கோ என்ன சொல்வது என்று தெரிய வில்லை.

அவனை தான் முறைத்தாள், அவனோ இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் நடந்து கொண்டான்.

"ஏதாச்சு சொல்லு டி", என்று யாழ் ஒரு பக்கம் கேட்க, "ஒன்னும் இல்ல டி ஜாமுன் கைய இடிச்சிகிட்டேன் அதான் வலியில கத்திட்டேன்", என்று வாயிற்கு வந்ததை அடித்து விட்டாள்.

காதல் வந்தாள் கள்ளமும் சேர்ந்து வந்து விடும் என்பதை காலம் தளிருக்கு காது கொடுத்து கொண்டு இருந்தது.

"வலியில முனங்குற மாரி தெரியலையே", என்று அவள் மீண்டும் கேட்க, "இவ இப்போ தான் சிஐடி வேலையெல்லாம் பார்ப்பா", என்று மனதில் யாழிற்கு அர்ச்சனை செய்து, "சொன்ன நம்பு டி இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்காத. கேள்வி கேக்கறது ஈசி பதில் சொல்றது தான் கஷ்டம்", என்று பதில் அளித்தாள்.

யாழும் சிறிது நேரம் பேசிவிட்டு, அழைப்பை துண்டித்து விட்டாள். அப்போது தான் தளிருக்கு மூச்சே வந்தது.

"உங்கள", என்று சொல்லிக்கொண்டே மீண்டும் சண்டை போட ஆரம்பித்து இருந்தனர்.

தெளிந்த நீரோடை போல அவர்களின் நாட்கள் சென்று கொண்டு இருந்தது. பார்க்கும் பொது அணைப்புகள் மற்றும் முத்தங்களை பரிமாறிக்கொண்டு இருந்தனர்.

இந்த உணர்வு உடைபடும் நாளும் வந்து சேர்ந்தது.

ஒரு நாள் இருவரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருக்க, இன்று வரை அவளிடம் கேட்க நினைத்த கேள்வியை கேட்டு விட்டான்.

"ப்ளாஸம்", என்று அவளை அழைத்தவன், இப்போதெல்லாம் அப்படி தான் அழைத்து கொண்டிருந்தான்.

"ம்ம் சொல்லுங்க", என்று அவனின் கை வளைவுகளில் இருந்து கொண்டே கேட்க, "ஏன் உன் அக்கா உன் கிட்ட பேசறது இல்ல?", என்று கேட்டு விட்டான்.

அவளுக்கோ என்ன சொல்லவது என்றே தெரியவில்லை. எப்படி சொல்வந்தென்றும் தெரியவில்லை.

"என்னால தான்", என்று ஆரம்பித்தவள் அவளிடம் சாந்தினி ஏன் பேசுவதில்லை என்று சொல்லி முடிக்க, வீரின் முகம் இறுகியது. என்ன உணர்வென்று கணிக்க முடியவில்லை.

"நான் பண்ணது தப்பு தான் வீர்", என்று சொல்லிக்கொண்டே அவனின் தோளில் சாய்ந்தவள், அவனின் உணர்ச்சிகள் மொத்தமும் போய்விட்டது என்று அவனின் முகத்தை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் .

"நாலு மாசமா குற்ற உணர்ச்சில இருக்கேன் வீர். என்னையே என்னால பேஸ் பண்ண முடியல. நீங்க தான் என்ன மறுபடியும் சிரிக்க வச்சீங்க" என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தி, "ஐ லவ் யு", என்று முடித்திருந்தாள்.

அவனிடம் மறுமொழி இல்லை. உணர்வே இல்லை. ஜடம் ஆகி விட்டான்.

அப்போது தான் அவனின் முகத்தை பார்த்தாள். "உங்களுக்கும் என் மேல கோவமா?", என்று கேட்டவுடன், நிதானத்திற்கு வந்தவன், "அப்படி எல்லாம் இல்ல மதி", என்று சொன்னவனை புருவம் சுருக்கி பார்த்தாள் ப்ளாஸம் என்ற அழைப்பு மதி என்று மாறி இருந்தது.

"எல்லாம் சரி ஆய்டும்", என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர முற்பட, "நான் சொன்னதுக்கு பதில் வரலையே", என்று அவள் அவனை ஆர்வமாக பார்க்க, "உன்னைக்கே சீக்கிரம் தெரியும்", என்று சொல்லிக்கொண்டு புன்னகைத்து நகர்ந்து விட்டான்.

அந்தோ பாவம் அந்த புன்னகையில் இருக்கும் வன்மத்தை தளிர் உணராமல் போனது தான் அவளுக்கு வினையாக முடிந்தது.

"ஹலோ சார்", என்று ஒருவன் அழைக்க, நிகழ்காலத்திற்கு வந்துவிட்டான் ஆருஷ் வீர். கண்ணாடி முன்னாடி இன்னும் அவனின் பிம்பம். வீராக இருந்தவன் ஆருஷாக மாறியது போல் தோன்றியது.

"சார் ஐ ஹவ் டு கிளீன் திஸ் ரெஸ்ட்ரூம்", என்று அந்த ஊழியன் சொல்ல, அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்தான்.

வந்தவன் மணியை பார்க்க, அவன் வந்த நேரத்தில் இருந்து இரண்டு மணிநேரம் ஆகி இருந்தது.

அவனிற்கு தெரியாது இந்த இரண்டு மணி நேரத்தில் அவன் இறந்த காலத்தை நினைத்திருக்க, இங்கு அவனின் சகோதர்களின் நிகழ் காலத்தில் அவர்களின் வாழ்வையே புரட்டி போட கூடிய அத்தனை நிகழ்வுகளும் நடந்து முடிந்திருந்தது.

"ச்ச இந்நேரம் எல்லாரும் என்ன தேடிட்டு இருப்பங்களே. பார்ட்டி முடிஞ்சே இருக்கும் அல்மோஸ்ட்", என்று சொல்லிக்கொண்டே அவன் கைபேசியை எடுத்து பார்க்க, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற் பட்ட மிஸ்ட் கால்கள் இருந்தது. அவனின் அத்தனை குடும்ப உறுப்பினர்களும் அல்லவா அவனிற்கு அழைத்து கொண்டிருந்தனர். அவன் பார்ட்டி ஹால்லிருக்கு செல்ல, அங்கு அவன் கண்ட காட்சியில் ஆருஷின் விழிகள் விரிந்தது.
 
1.jpg
3.jpg
5.jpg
அத்தியாயம் 19

மூன்று பெண்களின் கண்களில் இருந்தும், நீர் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது. கார் நின்றது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

"தளிர் உங்க அபார்ட்மெண்ட் வந்திருச்சு", என்று சிவம் சொல்லவும் தான் மூவருக்கும் வண்டி நின்றதே தெரிந்தது. யாரை சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர்.

மூவரையும் பார்த்த சிவமின் மனமும் கனத்தது. "இந்த பெண்களுக்கு தான் எத்தனை சோதனை? இன்னும் கடவுள் என்னவெல்லாம் வைத்து இருக்கிறாரோ", என்று சிவம் நினைத்து கொண்டான்.

அவனால் கூட சட்டென்று இறங்க முடியவில்லை, தத்தி தத்தி நடக்க வேண்டிய நிலை தான். நால்வரும் ஒன்றாக நடக்க, தீடீரென்று அவனின் கால் தடுக்கியது, மூன்று மாதங்களாக அவன் தான் நடக்கவில்லை அல்லவா!

அவனை தங்கியது என்னவோ சாந்தினி தான்.

தளிர் சுயநினைவிலேயே இல்லை. யாழ் சற்று நினைவில் இருந்தாள். ஆனாலும் அவள் மேனி நடுங்கியது, உடல் கூசியது. மூன்று வருடங்களுக்கு முன்னால் அவளுக்கு நடந்த கசப்பான, அவள் வாழ்வின் கருப்பு பக்கங்கள் அவளின் கண்ணின் முன்னே வந்து சென்றது போல இருந்தது.

"தேங்க்ஸ் சாந்தினி", என்று அவன் கூற, அவளிடம் தலை அசைப்பு மட்டுமே!

நால்வரும் அவர்களின் அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து கொண்டனர். என்ன பேசுவது என்றே தெரியாத நிலை.

சிவம் தான் ஆரம்பித்தது. "யாரும் இன்னும் சாப்பிடலல, நான் சமையல் செய்யட்டுமா?", என்று அவன் கேட்க, மூவரும் அவனை பார்த்தனர். மூவரின் கண்களிலும் உணர்வுகள் இல்லை. அவர்களின் உணர்வுகளை தான் மொத்தமாக அந்த மூன்று வேங்கைகளும் பறித்து விட்டனரே, இதற்கு மேல் அவர்களிடத்தில் உணர்வுகள் என்று ஒன்று இல்லவே இல்லை.

"ராட்சசனுங்க இந்த பொண்ணுங்கள என்ன பண்ணி வச்சிருக்கானுங்க. அவனுங்க இதயத்துல கொஞ்சம் கூட ஈரமே இல்ல போல", என்று அவன் மனதில் மூவருக்கும் அர்ச்சனை செய்ய, "உன் ஹெல்த்தை முதல பாரு சிவம்", என்று யாழ் தான் கூறினாள்.

சாந்தினி மற்றும் யாழ் கொஞ்சமாவது நிகழ் காலத்தில் இருக்க, தளிரால் இன்னும் கடந்த காலத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.

"இப்படியே இருந்தா எப்படி? எதுவோம் மாத்த முடியாது ஆனா நீங்க எல்லாரும் போராடலாம் இல்ல", என்று சிவம் அவர்களை ஊக்கு விக்க முயன்றான்.

அப்போது சரியாக யாழின் கைபேசி அலறியது, எடுத்து பார்த்தவளுக்கு உலகமே நின்ற உணர்வு.

அவளின் தந்தை தான் அழைத்திருந்தார். எதற்கு அழைக்கிறார் என்று தெரியும் என்பதால், இன்னும் அவளுக்கு கிலி எடுக்க துவங்கியது. கைகள் நடுங்கின, அவள் கைபேசியை தவற விட்டாள்.

அதை பிடித்தது என்னவோ சிவம் தான். அப்பா என்று அவளின் கைபேசியில் பெயர் வர, "எடுத்து பேசு", என்று சொன்னான் இல்லை கட்டளை இட்டான்.

"இல்.. இல்ல என்னால முடியாது", என்றவள் கண்ணில் மீண்டும் கண்ணீர். "இப்போ நீ எடுத்து பேசலனா உன் மேல தான் தப்புனு நினைப்பாங்க", என்று அவன் எவ்வளவு சொல்லியும் அவள் அழைப்பை ஏற்க வில்லை.

"தளிர் ஏதாச்சு நீ சாப்பிடு. கான்சிவ்வா இருக்க வேற", என்று ஒரு நண்பனாக மட்டும் இன்றி ஒரு மருத்துவனாகவும் கூறினான்.

ஆனால் அவளிடம் மௌனம் மட்டுமே. அவளின் முன், மண்டியிட்டு அமர்ந்தான். என்ன நினைத்தாளோ, கதறி விட்டாள்.

அவளை அணைத்து கொண்டான். அவளுக்கு தேவையான அணைப்பு. எத்தனை துன்பங்கள் தாங்கி இருக்கிறாள்.

"அவனை ஏதாச்சு பண்ணனும் சிவம்", சாந்தினி கர்ஜித்து விட்டாள். அவளுக்கு அவளின் வலியைவிட தளிரின் வலியை பார்க்கவே முடியவில்லை. தளிருக்காக எத்தனை தியாகங்கள் செய்தவள் அவள்!

"கண்டிப்பா", என்று சிவம் சொல்ல, " எதுவும் வேண்டாம்", என்று அவள் மறுக்க, மீதி மூவருக்கும் கோவத்தில் மூக்கு சிவந்து விட்டது.

"பைத்தியமா டி நீ அவன் உன்ன என்ன பன்னிருக்கான்? அவனை போய் எதுவும் பண்ண வேண்டாம் சொல்ற?", என்று சாந்தினி தன் ஆதங்கத்தை கொட்ட, "நீ பண்ணது தப்பு தான் ஆனா தெரிஞ்சி பண்ணலையே", என்று யாழின் குரலும் விமலுடன் வந்தது.

தளிர்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர்கள் இருவரே உயிர்ப்பில்லாமல் இருக்கும் போது கூட அவளை பற்றி எண்ணுகிறார்கள். எத்தனை பெரிய மனது அவர்களுக்கு என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சாந்தினி சற்று ஆசுவாசம் அடைந்தாள். "யாழ் அப்பா கிட்ட பேசு", என்று கட்டளை இட, அவளிடம் இருந்து மறுப்பாக தலை அசைந்தது.

"ப்ளீஸ் அக்கா", என்று அவள் இறைஞ்ச, அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.

"சாந்தினி நான் வேணா மறுபடியும் தளிரை கூட்டிட்டு கலிபோர்னியா போறேன்", என்று சிவம் சொல்ல, சாந்தினிக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன சொல்லற நீ? மறுபடியும் அந்த நரகத்துக்கு அவளை அனுப்ப சொல்றியா?", என்று சீறியவளின் உணர்வுகளை சிவம் புரிந்து கொண்டான்.

"என் மேல நம்பிக்கை இருந்தா அனுப்பு சாந்தினி. அவ இப்போ இங்கயே இருந்துட்டானா அவளோட காண்ட்ராக்ட் முடியாம வந்த மாறி ஆய்டும். இன்னும் ஆறு மாசம் தான அவ டெலிவரிக்கு முன்னாடி இந்தியா வந்துருவா. டிரஸ்ட் மீ", என்றவனின் டிரஸ்ட் மீயில் அவ்வளவு அழுத்தம்.

"ஹேர் சாய்ஸ்", என்று சாந்தினி சொல்லிக்கொண்டாள்.

"கலிபோர்னியா திரும்பி போறேன்", என்று தளிர் சொல்லும்போதே அவளை எரித்து விடும் பார்வை பார்த்தாள் சாந்தினி.

"நான் கொஞ்சம் தனியா இருக்கனும்", என்று யாழ் நகர போக, "யாழ்", என்று பதட்டமாக வந்தது சாந்தினியின் குரல்.

"மூணு வருஷத்துக்கு முன்னாடி பண்ண முட்டாள் தனத்தை பண்ணமாட்டேன் அக்கா", என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இங்கு நிலை இப்படி இருக்க, மறுபுறம் ஆதர்ஷின் வீட்டில் தான் ஆதர்ஷ், ஆருஷ் மற்றும் ஆதி கூடி இருந்தனர்.

"செம்ம அடி டா. அப்படியே அஞ்சு விரலும் பதிஞ்சிருக்கு இரண்டு கன்னத்துலயும்", என்று ஆதி ஆருஷின் கன்னத்தை பிடித்து கொண்டு கூற, "உன் கன்னத்துலயும் தான் டா அஞ்சு விரல் பதிஞ்சிருக்கு", என்று அவனோ ஆக்ரோஷமாக கத்த, "டேய் என்ன டா இப்படி ஆகிட்ட நீ? உனக்கு இவ்வளோ கோவம்லாம் வருமா ?", என்று ஆதி கேட்க, "அதான் பாக்குறியே", என்று மீண்டும் கத்தினான்.

"ஆருஷ்", என்று ஆதர்ஷ் உறும, அப்போது தான் நிதானத்திற்கு வந்திருந்தான். "நீ பண்ணது எவ்வளோ பெரிய பாவம் தெரியுமா?", என்று அவனை உற்று நோக்கி கேட்க, ஆருஷால் என்ன சொல்லி விட முடியும். அவனுக்கும் தெரியும் தானே, தலையை கீழே குனிந்து கொண்டான்.

"சார் நீங்க அவனை கேட்கறதுக்கு முன்னாடி உங்க லட்சணத்தை பத்தி பேசலாமா?", என்று ஆதியின் புறம் திரும்பினான். ஆதியின் முகம் இறுகியது. கோவத்தில் செய்த பிழை இப்பொது சுருக்கென்று தைத்தது.

யோசிக்காமல் செய்த பிழை, இப்பொது நினைக்கும் போது வலித்தது என்னவோ உண்மை தான்.

"ஐ நீட் டு பீ அலோன்", என்று சொல்லி அவனின் அறைக்கு சென்று விட்டான். ஆதர்ஷின் வீட்டிலும் ஆதிக்கு என்று ஒரு அறை இருந்தது.

உள்ளே சென்றவன், சில மணி நேரத்திற்கு முன்னே நடந்த அனைத்தையும் அசை போட துவங்கினான். கோவத்தில் சாணக்கியனும் சித்தம் கலங்கி விட்டான்.

"ச்ச கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்", என்று அவனே அவனை திட்டிக்கொண்டான்.

நினைவுகள் சில மணி நேரத்திற்கு முன்னே சென்றது, அவனிற்கு மட்டும் மல்ல யாழிற்கும் தான்.

பார்ட்டியில் இருவரும் ஆடி முடிய, கைதட்டல்கள் தாராளமாக ஒலித்தது. அவர்கள் தான் அந்த பார்ட்டியின் ஹைலைட் என்கிற அளவிற்கு இருந்தது அவர்களின் நடனம்.

ஆதிக்கு அவனின் பிசினஸ் நண்பன் ஒருவன் கீழே இருப்பதாக கூற, அவன் மின்தூக்கி ஏறிய அதே சமயம், யாழும் ஏறினாள். இருவரும் எதிர் எதிர் பக்கத்தில் நின்று கொண்டனர். இருவர் மட்டும் அந்த மின்தூக்கிக்குள் இருக்க, சட்டென்று மின்தூக்கி நின்று விட்டது.

யாழிற்கு பதட்டம் அவள் இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கி கொள்ள கூடாது என்று எப்போதும் ஆண்டவனிடம் வேண்டுவது உண்டு.

அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது. முதலில் ஆதி இதையெல்லாம் கவனிக்க வில்லை. அவனுக்கும் அவளுக்கும் தான் ஏழாம் பொருத்தம் ஆயிர்றே.

அவள், "யாராச்சு ஹெல்ப் பண்ணுங்க", என்று கத்தவும் தான் அவனிற்கு ஏதோ தவறாக பட்டது. அவளின் முகம் வெளிறி இருந்தது.

"ஹே எதுக்கு கத்திக்கிட்டு இருக்க, லிப்ட் இன்னும் மாக்ஸிமம் டூ த்ரீ மினிட்ஸ்ல ஸ்டார்ட் ஆகிரும்", என்று அவன் பேச, அதை அவள் காதில் வாங்கினால் தானே!

அவள் தான் இந்த உலகத்திலேயே இல்லையே, அவளின் கவனம் முழுதும் எப்போது லிப்ட் செயல் பட துவங்கும் என்பதில் மட்டும் தான் இருந்தது.

அவனுக்கு ஏதோ தவறாக பட்டது. "நிலா", என்று அவன் சொல்லிக்கொண்டே அவளின் கையை பிடித்து இழுக்க போக, அவள் எங்கு ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தாள்.

அவன் அவளை பின்னே இருந்து பிடிக்கவும், அவள் நகரவும் அவளின் ஆடை பின் பக்கம் கிழிந்து விட்டது.

அது நெட்டெட் டிரஸ் என்பதால் அவள் முடியை விரித்து தான் விட்டு இருந்தாள். இந்த பதட்டத்தில் அவள் முடி பாதி முன்புறம் வந்திருக்க, அவனின் கைபட்ட வேகத்தில், அவளின் உடை எளிதாக கிழிந்து விட்டது.

இருவருக்கும் ஒருநொடி உலகம் ஸ்தம்பித்த உணர்வு.

"நிலா சாரி", என்று அவன் சொல்லி முடிக்கும் முன், அவளின் ஐந்து கைவிரல் அவனின் கன்னத்தில் பதிந்தது.

"ஹொவ் டேர் யு?", என்று அவள் சீற, அவனுக்கோ கண்கள் சிவந்தது. பிறந்ததில் இருந்து அவனை ஒருவர் அதட்டி கூட பேசியதில்லை. வீட்டின் செல்ல பிள்ளை அவன்.

கண்களை இறுக முடி திருந்தவன், அவனில் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, முதலில் அவளின் நிலையை சரி செய்ய நினைத்தான். அவனும் இரு தங்கைகளுடன் பிறந்தவன் அல்லவா, அவனின் குடும்பத்திலும் அவனை அப்படி வளர்க்கவில்லையே.

அவளோ அவளின் கையை பின்னே கொண்டு சென்று அவளின் ஆடையை பற்ற, அரை நொடியில் அவளை அவளின் புறம் இழுத்து கொண்டான். அவளின் வெற்று முதுகு அவளின் சட்டையில் உரச, இருவருக்கும் உடல் கோவத்தில் பற்றி எரிந்தது.

அவர்கள் ஒன்றும் காதலர்கள் அல்லவே இந்நொடியை ரசிக்க, முதலில் கோணல் முற்றும் கோணல் என்பது இவர்கள் வாழ்வில் சரியாகி விட்டது.

அவளோ அவனில் இருந்து பிரிய திமிறினாள். ஆறடிக்கும் மேல உயரம் மட்டும் இல்லாமல் திடகார்த்திரமான உடல்வாகு ஆண்மகன் அவன், அவனிடம் இருந்து தப்பிக்க முடியுமா என்ன?

"ஜஸ்ட் ஹோல்டு ஆன் போர் எ செகண்ட்", என்று சொன்னவன், அவனின் நீல நிற கோர்ட்டை கழட்டி அவளிற்கு அணிவித்து விட்டான். அப்போது தான் அவளிற்கு அவள் செய்த முட்டாள் தானம் நெற்றி பொட்டில் அறைந்தது.

அவள் பதட்டத்தில் அவனை அறைந்து விட்டாள். அவன் ஒன்றும் காமுகன் இல்லையே, பத்து நிமிடங்களுக்கு முன்னே தான் அவனுடன் ஆடினாள். ஒரு தீண்டல் கூட அவன் தவறாக அவளை தொடவில்லை. இடையை பிடித்து ஆடினான் தான், ஆனால் அதில் காமம் இல்லை காதலும் இல்லை, அவன் நடனத்தில் வைத்திருந்த கலை உணர்வு தான் இருந்தது.

"ஆதி", முதன் முதலாக அவளின் செப்பிதழில் இருந்து அவனின் பெயரில் அழைத்தாள். ஆனால் அவளை ஒரு பொருட்டாக கூட அவன் மதிக்க வில்லை.

மின்தூக்கி மீண்டும் இயங்க ஆரம்பித்து விட்டது. அவர்கள் இறங்க வேண்டிய இறுதி தளமும் வந்து விட, கதவுகள் திறந்தன, அவள் தான் முதலில் வெளியே சென்றாள். அவளின் பின்னே அவனும் வர, இருவரின் விழிகளும் வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு விரிந்து கொண்டது.

ஆம் அவர்களை சுற்றிலும் பத்திரிகை நிருபர்கள் இருந்தனர், அது மட்டுமின்றி யாழை சுற்றி வளைத்து விட்டனர்.

அதிலும் ஒரு பத்திரிகை காரன் ஒரு படி மேலே சென்று, அவள் மேலே அணிந்து உள்ள கோர்ட்டில் கை வைத்து விட, அந்நியனின் தீண்டலில் அரண்டு விட்டாள் பெண் அவள்.

"அஹ்ஹ்ஹ", என்று அவள் அலற, அடுத்த நொடி சுருண்டு விழுந்து இருந்தான் அந்த அறிவுகெட்டவன்.

ஆதித்யன் தான் அடித்து இருந்தான்.

"ஹொவ் தீர் யு டச் ஹேர் யு ப்ளடி ஸ்கௌன்றல்?", என்று அவனின் கர்ஜனையில் அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர் அங்கிருந்த அனைவரும்.

யாழிற்கோ கோவம், அழுகை, எங்கேயோ வெற்று கிரகத்தில் மாட்டிக்கொண்ட எண்ணம்.

அங்கிருந்த பத்திரிகையாளர்களும் கதை கட்ட துவங்கினர். "அவ போற்றுகிறது ஆதி சார் ஓட கோட் தான?", என்று ஒரு பத்திரிகையாளர் இன்னொருவரை வினவ, "தனியா லிப்ட்ல இருந்து இந்த நிலைல இறங்கிருக்காங்க", என்று இன்னொருவர் ஹிந்தியில் பேச, யாழின் கோவம் மொத்தமும் ஆதியின் பக்கம் தான் திரும்பியது.

கோவத்தில் அவளும் தன்னிலை இழந்து விட்டாள்.

ஆதி அங்கிருந்தவர்களை சமாளிக்க முற்படும் முன், அவளின் சட்டையை பிடித்து மீண்டும் ஒரு அரை.

"எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்", என்று அவளின் உச்சபச்ச குரலில் கத்த, அவனிற்கோ அவள் அவனின் தன்மானத்தை சீண்டிவிட்டதாக தோன்றியது.

மின்தூக்கியில் அடித்து கொண்டதை பொறுத்து கொண்டவனால், இப்படி அதனை பேர் முன்னிலையிலும் அவள் அடித்ததை தாங்கி கொள்ளவே முடிய வில்லை.

சித்தம் இழந்தான். இதற்கு பின் அவன் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அவனே பொறுப்பு.
 
1.jpg
eiXYKBU63612.jpg
அத்தியாயம் 20


அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் இன்னும் யாழின் காதுகளில் கணீர் என்று ஒலித்து கொண்டே இருந்தது. காதுகளை மூடி கொண்டாள், என்னென்ன வார்த்தைகள் பேசிவிட்டேன். வார்த்தைகள் அல்ல அவை, அவன் வாயில் இருந்து உதிர்ந்த அனைத்தும் அவளுக்கு ஆலகால விஷமாக தான் தோன்றியது.

"என்ன டி பத்தினி மாறி சீன் போடற? அவளோ நல்லவளுக்கு என் கூட தனியா லிப்ட்ல என்ன வேலை? செடிக்கு தண்ணி உத்தவா ஏறுன?", என்று அவளை அனலாய் முறைத்தவன், பத்திரிகையாளர்களிடம் திரும்பி, "மேடம் என்ன டெம்ப்ட் பண்ண ட்ரை பண்ணாங்க, அவங்க டிரஸ் ஆஹ் கூட அவுக்குற அளவுக்கு", என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பேசுபவனை விழி விரித்து பார்த்தாள்.

நாக்கில் நஞ்சை தடவி பேசுகிறான். அவள் செய்தது தவறு என்று உணர்ந்து அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க தான் வாய் எடுத்தாள் அதற்குள் அவன் தான் வார்த்தைகளை வரைமுறை இன்றி கொட்டி விட்டானே!

அதிர்ச்சியில் சிலை ஆகி விட்டாள். அவனோ நிறுத்தாமல் தொடர்ந்தான், "என்ன டி இன்னும் நடிக்கிற? உன்ன மாரி எத்தனை பேரை பார்த்திருப்பேன், வசதியான பையன் வளச்சி போடலாம்னு தானே இந்த ட்ராமா", என்று ஆக்ரோஷமாக அவன் கத்த, இரண்டு அடி பின்னே சென்றாள்.

அவளின் தோலை அவனின் இரு முரட்டு கைகளால் பற்றியவன், "சொல்லு டி நீ தான மீடியாவ வர வெச்ச? இவங்களே தனியா என் கூட லிப்ட்ல மாட்டுவாங்கலாம், இவளே மீடியாவை கூப்பிடுவாளாம், இப்போ கண்ணீர் சிந்தி ட்ராமா வேற", என்று சொல்லிக்கொண்டே மேலும் அவனின் பிடியை இறுக்கினான்.

"இந்த பொழப்பு பொழைக்க...", என்று நிறுத்தியவன், அவளை அப்படியே தள்ளி விட அவள் பின்னே செல்ல, அவன் அவளிற்கு அணிவித்து விட்ட கோட் அவளின் வலது தோளில் இருந்து விலகியது.

அவளால் அதை கூட கவனிக்க முடியவில்லை. அவள் தான் நிதானத்தை மொத்தமாக இழந்து விட்டாலே!

நிதானத்தை மட்டும் அல்ல, அவளின் உணர்வுகளையும் தான்!

அவளின் உணர்வை பறித்த அதே வார்த்தைகள் இன்று அவளவன் வாயால் கேட்கிறாள்.

நெஞ்சமே இரண்டாக பிளந்து விட்டது. அப்போது தான் அங்கு இருந்தவர்கள் பேசுவதை உணர்ந்தான்.

சில தமிழ் பத்திரிகையிலும் இருந்து அல்லவா வந்திருந்தார்கள்.

கோவத்தில் அத்தனையும் பேசிவிட்டான். அங்கிருந்த ஒரு பத்திரிகை நிருபரோ, "இந்த மாறி பொண்ணுங்களாம் எப்படி தான் இருக்காங்களோ?", என்று கூற, "இவளுங்கள சொல்ல கூடாது இதுங்களலாம் பெத்து இப்படி மேய விட்ருக்காங்க பாருங்க அவங்கள சொல்லணும்", என்று இன்னோருவன் மறுமொழி கூறினான்.

ஆதித்தியனிற்கு அவன் செய்த முட்டாள் தனம் அப்போது தான் நெற்றி பொட்டில் அறைந்தது.

உணர்ச்சி வசத்தில் அவள் உணர்வுகளை அல்லவா பறித்து விட்டான். அப்போது தான் அவளை கண்கள் கீழ் நோக்கி பார்த்தான். அவளின் ஆடை இறங்கி இருந்தது. அதை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அவர்களின் டீஆர்பிக்காக புகை படம் எடுத்து கொண்டிருந்தனர் சிலர்.

"நிலா", என்று அவன் அவள் முன் மண்டியிட்டு அமர, அவளிடம் ஒரு உணர்வும் இல்லை. அழுகை கூட நின்று விட்டது. முதலில் அவளின் ஆடையை அவன் சரி செய்ய அப்போது கூட அவளிடம் ஒரு உணர்வும் இல்லை.

மரக்கட்டையாகி விட்டாள்.

"நிலா", என்று அவன் தோலை பற்றி குரலை உயர்த்த, அப்போது ஒரு கதறல் கதறினாலே பார்க்கலாம். அங்கிருந்த கல்லுக்கு கூட கண்ணீர் சுரந்திருக்கும். இந்த சாணக்கியன் எம்மாத்திரம்? அவளை அவனின் கைவளைவுக்குள் கொண்டு வந்து விட்டான்.

ஓர் குற்றவுணர்ச்சி அவனுக்குள் தோன்றியது. என்ன நினைத்தானோ, "செக்யூரிட்டி", என்று அவன் கர்ஜித்ததில் அந்த ஹோட்டலே ஆட்டம் கண்டது என்னவோ உண்மை தான்.

அவன் அழைத்த அடுத்த நொடி அந்த ஹோட்டலை சுற்றி இருந்த இருபது காவலாளிகளுக்கு மேல் அங்கு வந்து விட்டனர்.

"சென்ட் ஆல் தீஸ் பிப்பில் அவுட் அண்ட் மேக் சூர் டு டெலீட் ஆல் தி இமேஜ்ஸ் அண்ட் வீடியோ பிரோம் தேர் கேமராஸ்", என்று அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தவனின் கைவளைவில் தான் இன்னும் யாழ் இருந்தாள்.

அவளுக்கு அவன் கத்துவதை கூட உணர முடியாத நிலை.

அவனோ இதை எல்லாம் அழித்து விட நினைக்க, இங்கு நடந்த அனைத்தும் லைவ் நியூஸாக ஓடிக்கொண்டு இருப்பதை பாவம் அவன் அறியவில்லை.

இங்கு நிலமை இப்படி போய் கொண்டு இருக்க, விஷ்ணுவின் நண்பர் ஒருவர் இந்த செய்தியை காட்ட, அவர் கீழ் தளத்திற்கு வந்து விட்டார்.

அவர் ஆதித்யன் மேல் கொலைவெறியில் இருந்தார். என்னவெல்லாம் பேசிவிட்டான் அவன், அதுவும் ஒரு பெண்ணை பற்றி. யாழுடன் அவன் ஆடும் பொது வித்யா யாழை கோவிலில் பார்த்ததையும் அவள் எப்படி திறமையாக அஞ்சனாவை கையாண்டால் என்பதையும் கூறி இருந்தார்.

அப்போதே அவருக்கு யாழை ஏனோ பிடித்து விட்டது. பார்ப்பதற்கு துறுதுறு கண்களுடன் இருக்கும் அவளை யாருக்கு தான் பிடிக்காது ஆதித்யனை தவிர!

அதுவும் யாழ் ஆதித்யனை அரைந்ததை பார்த்தவருக்கு அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று தான் தோன்றியது. அவர் தான் சைக்கோலோஜிஸ்ட் ஆயிர்றே, தந்தைக்காக அவரின் தொழிலை எடுத்து நடத்திக்கொண்டு இருக்கிறார். தொழிலுக்கு வந்த பின் எம்பிஎ படித்து அவரை மேம்படுத்தி கொண்டார்.

ஆனால் ஆதி பேசிய வார்த்தைகள் அனைத்தையும் கேட்டவர் அங்கு ஒரு நொடி தாமதிக்காமல் கீழே இறங்கி வாங்கு விட்டார்.

அதே சமயம் தான் ஆதி காவலாளிகளுக்கு ஆணை விறப்பித்து கொண்டு இருந்தான்.

"நீ என்ன இமேஜ்ஸ் டெலீட் போனாலும் இட்ஸ் ஆப் நோ யூஸ். எல்லாம் லைவ் டெலிகாஸ்ட் ஆயிருச்சு ஆதித்தியராம்", என்று அவர் அடிக்குரலில் சீற, ஆதியால் முதல் முறை அவரை பார்க்க முடியாத நிலை.

"ஐ அம் ஹைலி டிசப்பொய்ன்டெட் ஆதி", என்றவர் அப்போது யாழை நோக்கினார். அவரின் கணிப்பு ஊர்ஜிதம் ஆனது. யாழின் முன் மண்டியிட்டவர், அவளை உற்று நோக்கினார். அவளிடம் விசும்பல் மட்டும் தான் வந்தது. அவளின் தலையை தாழ்த்தி கொண்டாள்.

அவளின் தோலை போற்றியவர், "எல்லாம் சரி ஆய்டும் மா. கவுன்செலிங் போறியா?", என்று பட்டென்று கேட்க, யாழ் ஆதி இருவருக்கும் அதிர்ச்சி.

அவளிடம் இருந்து ஆம் என்று தலை அசைப்பு மட்டும் தான். ஆதிக்கு மேலும் குற்றவுணர்ச்சி பெருகியது.

விஷ்ணு ஆதியை பார்வையாலேயே எரித்து விட்டார்.

"டாட்", என்று அவன் ஆரம்பிக்கும் போதே, அவனை கை காட்டி நிறுத்தியவர், யாழை ஆதியின் பிடியில் இருந்து விலக்கி நிற்க வைத்து, அவளை அவர் தாங்கி கொண்டார்.

அவர்கள் வீட்டிலும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அல்லவா? அவரால் யாழின் தற்போதய நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

"உன் அப்பா மாறியே இருக்க டா", என்று அவர் அடிக்குரலில் சீற, அவனின் கண்களோ நெருப்பு குழம்பாய் கொதித்தது.

"இந்த முறைக்கிறதுல கூட அப்பனும் மகனும் ஒரே மாதிரி இருக்கீங்க டா", என்று அவர் முணுமுணுக்க அவன் காதுகளில் இருந்து அது தவறுமா?

இப்பொது இருக்கும் சூழ்நிலையில் வாயை திறக்க முடியாதே.

யாழை விஷ்ணு ஒரு அறையில் அமர வைத்து வித்யாவை அழைத்து விஷயத்தை சொல்ல, அவரும் கொற்றவையை அழைத்து கொண்டு அந்த அறையில் நுழைந்தார்.

ருத்ரனிற்கும் இந்த செய்தி வந்து விட்டது. அவர் தான் இந்த செய்தியை எப்படியாவது ஒளிபரப்பாமல் இருக்க அவரால் ஆனா அத்தனை முயற்சிகளையும் எடுத்து கொண்டு இருந்தார்.

ஆருஷிற்கு அவர் அழைக்க, அவன் தான் கடந்த காலத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தானே!

ருத்ரன் அவனின் பதவியை வைத்து ஒரு வழியாக அந்த செய்தியை மும்பை அளவில் நிறுத்தினார். ஆனால் அதற்குள் தான் யாழின் குடும்பம் இந்த செய்தியை பார்த்து விட்டனரே.

அவளின் தலை விதியை மற்ற போகும் நாள் இதுவென்று பேதை அறியாமல் போனது தான் அவள் செய்த தவறு.

வித்யாவும் கொற்றவையும் அறையினுள் நுழைய, யாழை அவரின் தோல் மேல் சாய்த்து கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார் விஷ்ணு.

"நீ எல்லாம் என்ன மனுஷன் டா", என்று சீறிக்கொண்டு கொற்றவை ஆதியை அடிக்க கையை ஓங்க, வித்யா தான் அவரை தடுத்து விட்டார்.

"இப்போ அடிச்சி என்ன பிரயோஜனம் விடு பாத்துக்கலாம்", என்று அவர் அவரின் சகோதரியை சமாதானம் செய்ய, அவளால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை.

"ஒரு பொம்பள பிள்ளைய பத்தி என்ன பேசிருக்கான்?", என்று அவர் கத்த, "அவ என்ன அடிச்சிருக்கா எல்லார் முன்னாடியும் அது பரவலயா?", என்று அவனும் மாரு பேச்சு பேச, "டேய் அவ உன்ன அடிச்சது இன்னைக்கு நியூஸ், ஆனா அவளை பத்தி நீ பேசுனது கேரக்டர் அசாசினேஷன் தெரியுமா? அது அவ வாழ்க்கை முழுக்க அவ கூடவே வரும்", என்று வித்யா அவன் புத்திக்கு உரைக்கும் படி புரிய வைக்கவும் தான் அவனுக்கு நிதர்சனம் உரைத்தது.

"வேணும்னா மன்னிப்பு வீடியோ போடறேன்", என்று அவன் சொல்ல, "இதே மாறி உன் தங்கச்சிங்களுக்கு நடந்து ஒருத்தன் மன்னிப்பு வீடியோ போட்டா உனக்கு ஓகே வா?", என்று வித்யா கேள்வி எழுப்ப, "என் தங்கச்சிங்க ஒன்னும் இவளை மாறி கிடையாது", என்று சொல்பவனுக்கு அவனின் தங்கைகளின் சுய ரூபம் என்ன வென்று தெரியாது.

"இவனை.... நீ விடு டி எனக்கு ஆத்தரமா வருது", என்று மீண்டும் கொற்றவை போங்க, "இப்போ இவளோ பொங்குறவ சின்ன வயசிலேயே அவனை கண்டிச்சிருக்கணும்", என்று ருட்ரானின் குரல் கேட்டதும் அடங்கி விட்டார்.

ஆதியால் முறைக்க மட்டும் தான் முடிந்தது. மீதி நாட்கள் என்றால் நிச்சயமாக பதில் அளித்திருப்பான் ஆனால் இன்று முடியாதே!

ருத்ரன் யாழின் முன் மண்டியிட்டு அமர்ந்தார். அவருக்கு யாழை பார்க்கும் போது அந்த வீட்டின் இரு இளவரிசிகளை பார்ப்பது போல் தான் இருந்தது.

வித்யாவின் கண்களும் கொற்றவை கண்களும் கூட விரிந்தன. ருத்ரன் இப்படி அமர்ந்து பேசுவது அவர்களின் மகள்கள் மற்றும் லயனிக்கா விடம் மட்டும் தான், முதல் முறை குடும்பத்தை தாண்டி ஒரு பெண்ணின் முன் மண்டி இடுகிறார்.

அவளின் தலையில் கதையை அவர் வைக்க, என்ன உணர்ந்தாலோ, அவரின் கையை பற்றி அழுதுவிட்டாள். விஷ்ணுவும் ருத்ரனிடம் அவள் அவளாக உணர்ந்தாள்.

"நீ எதுவோம் கவலை படாத தங்கம், நான் பாத்துக்குறேன்", என்று அவர் கூற, "என் அப்பாக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்", என்று அவள் விசும்பலுடன் கூற, அவளை எப்படி சமாதானம் செய்வது என்று இரு சிங்ககளுக்கும் தெரியவில்லை.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, தீடீரென்று அறையில் நுழைந்தார் அஞ்சனா தேவி. அவரின் முகத்தில் பதற்றம்.

"ருத்ரா விஷ்ணு உடனே வாங்க", என்று அவர் கண்ணீர் மல்க அழைக்க அனைவரின் நெஞ்சிலும் நீர் வெற்றி போனது.
 
Picture1.jpg
Picture2.jpg

ei23VIU71458.jpg
eiXVAOF71534.jpg
அத்தியாயம் 21


சாந்தினி அவள் அறைக்குள் இருந்தாள். அவளுக்கு தான் கடவுள் இன்னும் எத்தனை சோதனைகள் வைத்து இருக்கிறாரோ என்று அவளுக்கு தெரியவில்லை. தொழில் அளவில் அவளுக்கு வந்த சோதனை யாவையும் தகர்த்த அவளுக்கு சொந்த வாழ்வில் எப்படி எதிர்கொள்ளவது என்று தெரியவில்லை.

இரவு உடை மாற்றி வந்தவள், கண்ணாடியின் முன் அவளின் பிம்பத்தை பார்த்தாள். அவளையும் அறியாமல், அவளின் நினைவுகள் முழுக்க இரு ஜீவன்கள் நிரம்பி இருந்தனர்.

"கொஞ்சம் கூட நான் சொல்றத கேட்காம எல்லாத்தையும் அவரே முடிவு பண்ணிக்கிட்டா நான் என்ன பண்றது. என் சூழ்நிலையால அப்படி ஒரு காரியம் பண்ணிட்டேன். ஆனா அது தான் இப்போ என் வாழ்க்கைல எனக்குன்னு இருக்குற ஒரே சந்தோசம். சட்டப்படி நான் கேக்கறது தப்பு தான் ஆனாலும்...", என்று அதற்க்கு மேல் அவளால் அவளிடமே கூட பேச முடியவில்லை.

லயனிக்கா மற்றும் லக்ஷித் உடன் புகைப்படம் எடுத்து கொண்டு ஆதர்ஷனை பார்த்தாள்.

"காண்ட்ராக்ட் இன்னைக்கே சைன் பண்ணிரலாமா?", என்று அவன் கேட்க, அவளும் சிறு தலையசைப்புடன் ஒரு அறையில் நுழைந்தனர். அவனின் பிஎ அர்னவ் அனைத்தையும் தயார் செய்து வைத்து இருந்தான்.

"எல்லா டாக்குமெண்ட்ஸும் ரெடி தான அர்னவ்?", என்று அவன் அதிகாரமாக கேட்க, "எஸ் சார்", என்று பதில் அளித்தான் அர்னவ். அவன் தான் எள் என்றால் எண்ணையாய் இருப்பவன் ஆயிர்றே!

"சிட்", என்று சாந்தினிக்காக அவனே இருக்கையும் இழுத்து போட, அவளும் அமர்ந்தாள்.

"படிச்சி பாத்துக்கோ", என்று அவளிடம் கான்ட்ராக்ட்டின் ஒரு காப்பியை நீட்ட, அவளுக்கு ஆதர்ஷின் மேல் இருந்த நம்பிக்கையையில், "எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு", என்றவளின் மொத்த நம்பிக்கையையும் இன்னும் சில நொடிகளில் சுக்கு நூறாய் உடைக்க போகிறான் என்று சொன்னவளுக்கு தெரியாது!

இருவரும் கான்ட்ராக்ட்டில் அவர்களின் கையெழுத்தை இட்டனர். அர்னவிற்கு தான் அவர்களை பார்க்க அழகான ஜோடி போல் தெரிந்தது.

"பாஸ் இவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்குமே", என்று எண்ணுபவனுக்கு தெரியாது அவன் தான் அந்த புனித காரியத்தை நடத்தியே வைக்க போகிறான் என்று!

கையொப்பம் இட்ட டாக்குமெண்ட்ஸை அவன் அர்னவிடம் நீட்டி, மீதி வேலைகளை விரைவாக செயல் படுத்த சொல்லி ஆணையிட்டான்.

"ஐ வில் லீவ் நொவ். பை சார் அண்ட் பை மேம். ஹவ் எ கிரேட் நைட்", என்று அவன் விடை பெற்று செல்ல, இருவரும் புன்முறுவலுடன் அவனுக்கு விடை கொடுத்தனர்.

அப்போது தான் ஆதர்ஷின் கைப்பேசி அலறியது. எடுத்து பேசியவன், "ஹலோ ஆண்ட்டி கண்டிப்பா நீங்க வாங்க உங்களுக்கு இன்னோரு பெர்சன் ஆஹ் இங்க இன்ட்ரோ தரேன்", என்று ரூம் நம்பர் மற்றும் வழியையும் சொல்லியவன், சாந்தினியிடம் திரும்பினான்.

"எங்க பேமிலி டாக்டர் ஒருத்தவங்க வந்திருக்காங்க சாந்தினி. ஷி இஸ் எ கைனோ. இன் பாக்ட் என்னோட ரெண்டு பேபீஸ் என் கைல உயிரோட இருக்க காரணம் அவங்க தான்", என்று அவளுக்கு வருபவரை பற்றி முன் அறிமுகம் செய்து வைத்தான்.

அப்போது தான் சாந்தினிக்கு சட்டென்று ஒரு கேள்வி. இப்பொது வரை ஆதர்ஷ் அவனின் மனைவியை பற்றி பேசவில்லை. அவள் உயிருடன் இல்லை என்பதை நேற்று தான் இந்த காண்ட்ராக்ட் பற்றி பேசும் பொது அர்னவ் சொல்லி இருந்தான்.

ஆனால் ஒரு வார்த்தை கூட மனைவியை பற்றி அவன் இப்பொது வரை பேசவில்லையே, அவர்கள் இந்த அறையை அடையும் வரை கூட ஆதி ஆருஷ் பற்றி பேசினான். இரு சகோதரிகள் செய்யும் குறும்பை கூட கூறினான்.

ஆனால் அவனுடன் வாழ்ந்த சரி பாதியை பற்றி மூச்சு கூட விடவில்லை.

"உங்க கிட்ட ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்காதீங்க...", என்று அவள் இழுக்கும் போதே, அவள் யாரை பற்றி கேட்க போகிறாள் என்று யூகித்து கொண்டான்.

"என்னோட வைப் பத்தி தான", என்று சொல்லும்போதே அவனின் முகம் இறுகியது.

"சாரி ஆதர்ஷ் சொல்ல வேணம்னா லெட்ஸ் நாட் டாக் அபௌட் தட்", என்று சொன்னவளை தான் பார்த்தான்.

"நத்திங் லைக் தட் சாந்தினி. அவளாம் பொன்னே இல்ல அவளை கூட மன்னிச்சிருவேன் அவளுக்கும் மேல ஒரு ராட்சசி இருக்கா அவளைலாம் என் வாழ்க்கைல பாத்துரவே கூடாதுனு இருக்கேன்", என்றவனின் கண்கள் எரிமலை போல் சிவந்து இருந்தது.

"அப்படி யாரு அந்த பொண்ணு", என்று அவள் கேட்டு முடிக்கும் போது தான் அவன் சொன்ன மருத்துவர் வந்து இருந்தார்.

உடனே அவனின் பழைய நிலைக்கு மாறியவன், "வாங்க ஆண்ட்டி, சாந்தினி இவங்க தான்..", என்று அவன் ஆரம்பித்து மட்டும் தான் இருந்தான், "டாக்டர் சந்திரலேகா", என்று முடித்து என்னவோ சாந்தினி தான்.

ஆதர்ஷின் கண்கள் விரிந்தது, "உனக்கு ஆல்ரெடி தெரியுமா?", என்று அவளை பார்த்தவன், டாக்டரின் விழிகளை பார்க்க வில்லை.

அவரின் கண்களிலும் அதே அதிர்ச்சி.

"நீ என்னமா இங்க பண்ற? இப்படி குழந்தைக்காக அவனை தேடி கண்டுபிடிச்சி வந்துட்டியா?", என்று அவர் கேட்டதும் இருவரின் கண்களும் விரிந்தது.

"என்.. என்ன சொல்றிங்க?", என்று சாந்தினியின் குரல் தழுதழுத்தது.

ஆதர்ஷிற்கு அவனின் குடும்ப டாக்டர் பேசுவது அதிர்ச்சி என்றால், சாந்தினியின் கண்களில் கண்ணீர் பார்ப்பது பேரதிர்ச்சி.

அவன் பார்த்த பெண் எப்போதும் கம்பீரமாக மிடுக்காக இருக்கும் சாந்தினியை தான், ஆனால் இப்பொது கண்ணீருடன் நிற்கும் பெண்ணை பார்க்க அவன் மனதின் ஓரத்தில் பிசைந்தாலும், அவனிற்கு டாக்டர் கூறிய சொற்களே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

"குழந்தையை தீட்டி வந்துட்டாளா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க", என்றவனின் குரலில் டாக்டர் சற்று மிரண்டு தான் போய் விட்டார்.

அவனின் குரலில் கோவம் இல்லை, ஆனால் நீ சொல்லி தான் ஆக வேண்டும் என்கிற கட்டளை இருந்தது.

"ஆதர்ஷ்... ", என்று அவர் சொல்ல தயங்க, "இப்போ சொல்ல போறிங்களா இல்லையா?", என்றவனின் குரல் அந்த அறையே அதிரும் வண்ணம் ஒலித்தது.

அவனின் குரலில் இரண்டு பெண்களும் அரண்டு விட்டனர்.

சாந்தினிக்கோ ஏதோ புதிய அரக்கனை பார்ப்பது போல் தான் இருந்தது. அப்படி தான் அவனும் நின்று கொண்டு இருந்தான்.

"லக்ஷித் அண்ட் லயனிக்கா ஓட சரோகேட் சாந்தினி தான்", என்று அவர் சொல்லி முடிக்கும் முதலே, "கெட் அவுட்", என்று வானே அதிரும் வண்ணம் சாந்தினியை நோக்கி கத்தி இருந்தான்.

சந்திரலேகாவின் உடல் கிடுகிடுத்து விட்டது.

ஆனால் சாந்தினி அசைய வில்லை.

"அப்போ எனக்கு ட்வின்ஸ் பொறந்தங்களா?", என்றவளின் கண்ணீர் அவள் கன்னத்தில் இருந்து இறங்கி, அவளின் கைகள் தானாக அவளின் மணிவயிற்றை தடவி கொண்டது.

"ஆனா ஒரு பேபி தான ஸ்கேன்ல பார்த்தோம்", என்று அவள் கேட்க, "இன்னோரு பேபி பின்னாடி இருந்ததுனால பார்க்க முடியல", என்று பதில் அளித்து இருந்தார் லேகா.

"வெளிய போடி", என்று அவளின் கைகளை பற்றி அறையை விட்டு வெளிய தள்ள முற்பட்டவனை, "கொஞ்சம் நிறுத்துறீங்களா?", என்று அவளின் கையை உதறி சீறினாள்.

"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க", என்று சாந்தினி அவனிடம் மன்றாட, அதையெல்லாம் கேட்கும் மனப்பான்மையில் அவன் இல்லையே!

"என்ன டி கேட்கணும், அவளும் நீயும் கூட்டு தான, நல்ல வேல அவ போய் சேர்ந்துட்டா இல்லனா நானே கொன்னுயிருப்பேன்", என்று எங்கோ பார்த்து கொண்டு கூற, இப்பொது அவளை பார்த்து, "அவளை கூட ஒரு விதத்துல மன்னிச்சிருவேன் ஆனா உன்னை... ச்சீ நீ எல்லாம் என்ன பொண்ணு டி... இரண்டு உயிரை கொல்ல ட்ரை பன்னிருக்க", என்று அவன் சொல்ல, சாந்தினியின் கண்கள் விரிந்தன.

"என்ன சொல்றிங்க? யாரு கொல்ல ட்ரை பண்ணா? நானா? முதல்ல உங்க வைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கோங்க", என்று அவளும் பேச, "என்ன அவளுக்கு சப்போர்ட்டா? அதான ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லையே. அவ அவளோட அழகுக்காக குழந்தையை சும்மாக மாட்டேன்னு சொல்லிட்டா, நீ பணத்துக்காக குழந்தையை சுமந்த, நீங்க ரெண்டு பேருமே பொண்ணா இருக்கவே தகுதி இல்லாத ஜென்மம். முதல்ல வெளிய போ டி. என் பசங்க மேல உன் நிழல் கூட பட கூடாது", என்று அவன் கர்ஜிக்க, லேகா தான் அரண்டார்.

சாந்தினி அவனுக்கு சமமாக தான் நின்று கொண்டு இருந்தாள்.

அப்போது திலகவாதியும் அஞ்சனாவும் தான் உள்ளே நுழைந்தனர். லேகா அவர் வருவதை கூறி இருக்க, திலகவாதியும் அஞ்சனாவும் அவரை பார்க்க தான் வந்திருந்தார்கள்.

வந்தவர்கள் கண்ட காட்சி என்னவோ, ஆதர்ஷ் சாந்தினியை தள்ளி கொண்டு இருப்பது தான்.

அவர்கள் லேகாவை பார்க்க வரும் சமயம், அவர்களுக்கு ஆதியின் விஷயமும் தெரிந்து விட, அதையும் ஆதரிஷிடம் சொல்ல தான் வந்தார்கள்.

ஆனால் இங்கோ அவனே ஒரு பஞ்சாயத்தை வைத்து கொண்டு இருந்தானே!

"டேய் என்னடா பண்ற? அந்த பொண்ணு கைய விடு ஆதர்ஷ்", என்று திலகவதி சீற, "ஆதர்ஷ் அங்க உன் தம்பி பிரச்சன்னை பன்னிட்டு இருக்கான் இங்க நீ இன்னோரு பிரச்சனைய ஆரம்பிக்காத", என்று அஞ்சனாவும் அவரின் பெரிய பேரனை அதட்டினார்.

"எல்லாம் நல்லா தான போய்ட்டு இருந்துது இப்போ என்ன ஆச்சு?", என்று திலகவதி கேட்க, "இவ தான் என் பசங்களோட சரோகேட்", என்ற வார்த்தையுடன் நிறுத்தி கொண்டான்.

இருவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதிர்ச்சி ஒரு புறம், ஆதர்ஷ் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரியும் என்பதால் அவர்களால் அடுத்த வார்த்தையும் பேச முடியவில்லை. ஆனால் சாந்தினியை கொஞ்சம் கணித்து இருந்தார்கள்.

அவர்கள் அனுபவ அறிவு அவர்களுக்கு அப்போது உதவியது.

"ஆதர்ஷ் முதல்ல அவ கிட்ட என்ன நடந்தது அப்படினு அவ சைடு கேளு", என்று திலகவதி பொறுமையுடன் கூற, "என்ன சொல்ல போறா எனக்கு பணம் தேவை பட்டது, அப்போ எவனும் படுக்க கிடைக்கல அதனால என்னோட கர்ப்ப பையை தனமா குடுத்தேன். இந்த கதை தானே", என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், "ஆதர்ஷ்", என்று சாந்தினி கத்தியதில் அனைவர்க்கும் இதயமே நின்று விட்டது.

“யு... ஹவ்... நோ... ரைட்ஸ்... டு... டாக்... அபௌட்... மை... கேரக்டர்....", என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி சொன்னாள்.

"ஓஹ் மேடம்க்கு கோவம் வருதா? உண்மை கசக்குதா? சொல்லு டி", என்று மறுமடியும் அவன் கத்த, "முதல்ல கத்துறத நிறுத்துங்க... அடுத்தவங்க பேசறத கேட்டுட்டு பேசுங்க", என்று அவளும் கண்ணீரை அடக்கி கொண்டு கூறினாள்.

"நீ போய் ருத்ரன், விஷ்ணுவை கூட்டிட்டு வா", என்று திலகவதி தான் அஞ்சனாவை அனுப்பி வைத்து இருந்தார்.

"என்ன டி கேக்கறது? முதல்ல வெளிய போ", என்று அவன் அடிக்குரலில் சீரும் சமயம் தான் அவனின் இரு மலர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

"டாடி", என்று லயனிக்கா அவளின் காலை கட்டிக்கொள்ள, "ஆண்ட்டி", என்று லக்ஷித் சாந்தினியிடம் செல்வதற்கு முன், அவனை ஆதர்ஷ் பிடித்து விட்டான்.

"அவ கிட்ட போக கூடாது", என்று அவன் லக்ஷித்திடம் கோவத்தை காட்ட, "எதுக்கு குழந்தை கிட்ட கோவத்தை காட்டுறிங்க?", என்று அவள் சீறிக்கொண்டு அவன் பிடியில் இருந்த லக்ஷித்தை அவள் வாங்கி கட்டி கொண்டாள்.

முதன்முறையாக தந்தை திட்டியதில், குழந்தையின் கண்களில் கண்களில் இருந்து நீர் வந்தது. லயாவும் ஆதர்ஷின் பிடியில் இருந்து சாந்தினியின் கைவளைவிற்குள் வந்து விட்டாள்.

அவனின் இந்த முகம் அவனின் குழந்தைகளுக்கும் புதிது. சாந்தினி அவர்களை சுமந்த தாய் என்று தெரியாமலேயே அடைக்கலம் தேடும் இந்த சீட்டுக்கள் அவள் தான் அன்னை என்று தெரிந்தால்?

"அவளை விடுங்க", என்று மீண்டும் சீறிக்கொண்டு, அவர்களை அவளின் பிடியில் இருந்து பறித்து விட்டான்.

பறித்தது அவர்களை மட்டும் அல்ல, அவளின் உணர்வுகளையும் தான்.

"டேய் குழந்தைகளை ஏன் டா இப்படி இழுக்குற", என்று திலகவதி கத்தியது கூட காற்றில் தான் கரைந்து போனது.

திலகவதி, சாந்தினி, லேகா அனைவரும் அவனின் பின்னால் ஓட, அதே சமயம் அஞ்சனா பதறியதை பார்த்து விஷ்ணு, ருத்ரன், வித்யா, கொற்றவை, யாழ் மற்றும் ஆதி அனைவரும் ஹால்லில் கூடி விட்டனர்.

இவர்கள் பண்ண அத்தனை கூத்தில் இந்த பார்ட்டியை முடித்து வைத்தது என்னவோ ஆருஷின் தந்தை விக்ரமனும் வைஷ்ணவியும் தான்.

அதே சமயம் தான் ஆருஷ் ஹால்லிற்கு வந்த சமயம். அவன் கண்டது என்னவோ லக்ஷித் மற்றும் லயனாவை ஆதர்ஷ் இழுத்து கொண்டு போவதை தான்.

"ஆதர்ஷ் எதுக்கு இப்படி ஹார்ஷ் ஆஹ் கிட்ஸ் கிட்ட பிஹேவ் பன்னிட்டு இருக்க?", என்று ஆருஷ் அவனை அதட்ட, "ஹார்ஷ் ஆஹ் பிஹேவ் பண்றத பத்தி யாரு பேசுறா பாரு", என்று அந்த ஹாலின் நுழைவாயில் நின்று இருந்தது என்னவோ சிவம் தான் அவனின் கையை பிடித்து கொண்டு நின்று இருந்தாள் தளிர்.

அங்கே அவளை பார்த்ததும் வைஷ்ணவியின் கண்கள் விரிந்தது. "இவளா?", என்று அவர் உதடுகள் அவரையும் மீறி முணுமுணுத்தது.
 

Attachments

  • 1727425086470.jpg
    1727425086470.jpg
    401 KB · Views: 1
Last edited:
1727592060619.jpg
1727592060627.jpg
அத்தியாயம் 22


தளிர் அவளின் அறையில் தான் அமர்ந்து கொண்டு இருந்தாள். சிவம் ஒரு கப்பில் பாலுடன் வந்தான்.


"முதல்ல இத குடி", என்று அவளின் கையில் அதை கொடுக்க, அவளுக்காக இல்லையென்றாலும் அவளின் வயிற்றில் வளரும் சிசுவிற்காக குடித்தாள்.


அவளின் உள்ளும் எவ்வளவு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.


"என் வாழ்க்கையே படம் மாறி இருக்கு சிவம்", என்றவள் குரலில் உயிர்ப்பு இல்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.


"சில நேரம் உண்மையான வாழ்க்கை படத்தை விட மோசமா ஆகிறுது", என்று அவன் முடிக்கவும், "என் வாழ்க்கை மாதிரி தானே", என்று அவள் சொல்லி விட்டாள்.


"அப்படி எல்லாம் நினைக்காத தளிர், எல்லாம் என்னால தான", என்றவனின் குரலும் கம்மியது.


அவளும் சட்டென்று உணர்வு பெற்று, "அப்படி எல்லாம் சொல்லாத நீ இல்லனா நான் இல்ல", என்றவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


"எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவனை", என்று அவன் இழுக்கையில், "அங்க ஒன்னும் பன்னிருக்க முடியாது சிவம்", என்றவள் கண்ணீர் அவனின் டிஷர்டை நனைத்தது.


"நீ சொல்லு என்னால அவனை என்னை வேணா பண்ண முடியும்", என்பவனின் குரலில் அழுத்தம் மட்டும் இல்லை அதிகாரமும் இருந்தது.


அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், "என்ன சொல்ற நீ" என்று அவள் புருவங்கள் உயர்த்தி கேட்க, "என் மேலயும் தப்பு இருக்கு தளிர், நான் யாருனு உனக்கு சொல்லிருக்கணும்", என்றவனை தான் இமைகள் அசையாமல் பார்த்து இருந்தாள்.


"அத விடு இன்னும் அங்க நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா?", என்று அவன் கேட்க, "மறக்குற மாரியான விஷயமா இதெல்லாம்", என்றவள் குரலில் அப்படி ஒரு வலி.


சிவமின் மனதிலும் அதே வலி தான்.


"அவன் உனக்கு பண்ணது பெரிய பாவம்", என்று பல்லை கடித்து அவன் கூற, "நான் அவங்களுக்கு பண்ணதும் பாவம் தான", என்று அவள் கூறும் போதே மீண்டும் உடைந்து விட்டாள்.


இருவரின் நினைவுகளும் வீர் கலிபோர்னியா விட்டு சென்ற நாளுக்கு சென்றது.


அவன் முதலில் போபாலிற்கு புதன்கிழமை வந்து இறங்கி அங்கு சில வேலைகளை முடித்து கொண்டு தான் வெள்ளிகிழமை காலை மும்பை வந்தான்.


ஆனால் அவன் கலிபோர்னியாவை தாண்டும் போதே சிவம் கண் விழித்து கொண்டான்.


விழித்தவன் முதலில் தளிரை பார்க்க, பார்த்ததும் யூகித்து விட்டான் ஏதோ தவறு என்று, அவளும் யாரிடமாவது எல்லாவற்றையும் கொட்டி விட மாட்டோமா என்ற மனநிலையில் இருக்க, "ஆருஷ் உன்ன என்ன பண்ணான்?", என்ற ஒரே கேள்வி தான் அனைத்தையும் ஒப்பித்து விட்டாள்.


"நம்ப இந்தியா கிளம்புறோம்", என்று அவன் சொல்ல, அவள் தான் அவனை தடுத்து விட்டாள். இரண்டு நாட்கள் கழித்து பிசினஸ் கிளாசில் இருவருக்கும் டிக்கெட்டை புக் செய்தவனை தான் ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருதாள்.


எப்படி இவனிற்கு உடனடியாக டிக்கெட் கிடைத்தது. அதுவும் பிசினஸ் கிளாஸ், அவனின் சேமிப்பை பயன் படுத்தினான் என்று தான் நினைத்தாள்.


"ஏன் இவளோ எனக்காக ஸ்பென்ட் பண்ற சிவம்", என்று அவள் கேட்க, "இதெல்லாம்...", என்று ஆரம்பித்தவன் மீதி வார்த்தைகளை முழுங்கி கொண்டு, "இதெல்லாம் இப்போ யோசிக்காத", என்று முடித்து அவளை அழைத்து கொண்டு மும்பை வந்தவன், நேரடியாக சென்றது என்னவோ எமரால்டு பேலஸ் ஹோட்டலிற்கு தான்.


"நம்ப எதுக்கு இங்க வந்துருக்கோம் ?", என்று அவள் அவனை புருவம் உயர்த்தி கேட்க, "ஆருஷ் ஆஹ் பாக்க வேணாமா?", என்று அவன் கேட்டதும் அவளுக்கு தூக்கிவாரி போட்டது.


"என்ன சொல்ற ஆரூஷையா? நீ இங்க என் அக்கா கிட்ட கொண்டு விட போறேன்னு நினைச்சேன்", என்று அவள் பேசிக்கொண்டு இருக்கையிலே, அவன் அவளின் கையை பற்றி அவளை பார்ட்டி நாடாகும் தளத்திற்கு அழைத்து வந்து விட்டான்.


"சிவம் ஏதாச்சு சொல்லு, உனக்கு எப்படி தெரியும் வீர் இங்க தான் இருக்காருன்னு", என்று அவள் கேட்டு கொண்டு இருப்பதெல்லாம் காற்றில் கரைந்து தான் போனது.


"நீ கேட்கறதுக்கு எல்லாத்துக்கும் நான் பதில் சொல்றேன் முதல்ல எனக்கு அவன முடிக்கணும்", என்று சிவம் அழுத்தி கூற, அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.


அங்கு பார்ட்டி ஹாலின் நுழைவாயில் இருவர் நிற்க, "சார் யுவர் இன்விடேஷன் ப்ளீஸ்", என்று அவர்கள் கேட்க, "சிவம் நரசிம்மன், கிங் ஆப் பாரடைஸ் ஹோட்டேல்ஸ்", என்று சொன்னதும் அதற்கு மேல் ஒரு கேள்வி இல்லை.


"சிவம் யாரு நீ?", என்று அவள் மீண்டும் கேட்க, அவனோ குற்ற உணர்வில் அல்லவா தவித்து கொண்டு இருக்கிறான்.


"நான் சொல்றேன் ஜஸ்ட் கிவ் மீ சம் டைம்", என்று அவள் உள்ளே நுழையும் சமயம் தான் அங்கே ஆருஷ் ஆதர்ஷனை கேள்வி கேட்டு கொண்டு இருந்தான்.


"ஆதர்ஷ் எதுக்கு இப்படி ஹார்ஷ் ஆஹ் கிட்ஸ் கிட்ட பிஹேவ் பன்னிட்டு இருக்க?", என்று ஆருஷ் அவனை அதட்ட, "ஹார்ஷ் ஆஹ் பிஹேவ் பண்றத பத்தி யாரு பேசுறா பாரு", என்று அந்த ஹாலின் நுழைவாயில் நின்று கேட்டான் சிவம்.


அவனை பார்த்ததால் மட்டும் அல்ல, அங்கே தளிரை பார்த்ததும் ஆருஷிற்கு அதிர்ச்சி தான்.


ஆனால் அதை விட வைஷ்ணவிக்கு தான் பேரதிர்ச்சி.


"இவளா", என்று அவரின் உதடுகள் முணுமுணுக்க, ஆருஷும் அவனின் தாயை தான் பார்த்தான். அவனுக்கு தெரிந்து விட்டது இன்று அவனின் சுயரூபம் அனைவருக்கும் தெரிய வர போகிறது, அதை எப்படி எதிர் கொள்வது என்று தான் இப்பொது யோசிக்க துவங்கி இருந்தான்.


"சிவம், நீ எங்க இங்க?", என்று விக்ரமன் கேட்க, "உங்க அருமை புதல்வனை கேளுங்க அங்கிள்", என்றவன் ஆருஷை பார்க்க, அவனோ பதில் பேச முடியாமல் தவித்து கொண்டிருந்தான்.


விக்ரமன் மகனின் முகம் பார்த்தே ஏதோ தவறு செய்து இருக்கிறான் என்று உறுதி செய்து கொண்டார். சிவமும் இப்படி பேசும் நபர் அல்ல என்று அவரும் அறிவார் அல்லவா!


"ஆருஷ்", என்று விக்ரமன் அரிமாவாக கர்ஜிக்க, ஆருஷ் அவனின் தந்தையின் முன் வந்து நின்றான்.


எது வந்தாலும் சந்திக்க அவன் மனதளவில் தயாராகி கொண்டான்.


"சிவம் என்ன சொல்றான்?", என்று அவர் கேட்க, அவனோ மௌனமாக நின்றான்.


"ஆருஷ் நீ தளிரை என்ன பண்ண?", என்று நேரடியாகவே கேட்டு விட்டார் வைஷ்ணவி.


விக்ரமனின் புருவம் சுருங்கியது.


"வைஷ்ணவி இந்த பொண்ணு யாரு? இவன் எதுக்கு அவளை ஏதாச்சு பண்ண போறான்", என்று அவர் கேட்டுக்கொண்டே இருக்கையில், "நான் தான் அங்கிள் உங்க ரெண்டாவது பையன் சூசைட் பண்ண காரணம்", என்று கூறி இருந்தாள் தளிர்.


இதை கேட்ட உடன் அங்கிருந்த அனைவரின் இருதயமும் ஒரு நொடி நின்று விட்டது, சாந்தினியையும் யாழையும் தவிர, அவர்களுக்கு தான் தெரியுமே ஆனால் அவன் வைஷ்ணவியின் மகன் என்பது புதிய தகவல்.


"என்ன பண்ணான் இவன் உன்ன", என்று சாந்தினி அந்த ஹாலே அதிரும் வண்ணம் கத்தினாள்.


தளிரின் கண்களோ சாந்தினியின் முகத்தை கூட பார்க்க வில்லை. பார்க்கவும் முடியவில்லை, அவளை தாயாக தந்தையாக பாசத்தை கொடுத்து வளர்த்த சகோதரியின் முன் இப்படி தாலியில்லால் வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு நிற்கிறாள் என்று சொல்வது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாதே!


"தி கிரேட் ஆருஷ் வீர் தளிரை மிரட்டி அவளுக்கு குழந்தை வரம் கொடுத்திருக்காரு", என்று சிவம் சொன்னவுடன், ஆருஷின் காதுகளில் ஜிவ் என்ற ஒரு ஒலி, ஆம் அவனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தால் யாழ்நிலா.


"ஹொவ் டெர் யு? அவ பண்ணதுக்கு நீ அவளை கொன்னுயிருந்தா கூட பரவால்ல ஆனா இப்படி ஒரு பொண்ணோட மாணத்தோட விளையாடிருக்க... ச்சீ நீங்கல்லாம் மனுஷனே இல்ல... உன் தம்பி இப்போ தான் என் மானத்தை வாங்குனான் ஆனா நீ ஒரு படி மேல போய் ஒரு பொண்ணோட வாழ்க்கையே சீரழிச்சிருக்க", என்றவள் அவனின் இன்னொரு கன்னத்தையும் பதம் பார்த்தாள்.


"ஏய்..", என்று ஆதி அவளை பிரித்து எடுக்க, "கை ரொம்ப நீளுது உனக்கு", என்று அவன் அவளை கடிய, விடுவாளா அவள், "ஆமா டா நீளும் தான் உங்கள மாறி பொண்ணுங்க வாழ்க்கைல விளையாட்ற பண பேய்ங்களுக்கு முன்னாடி எல்லா பொண்ணுங்களுக்கும் கையால மட்டும் இல்ல செருப்பால அடிக்கணும்", என்று அவள் மேலும் பேச, "யாழ்", என்று சாந்தினி தான் அவளை அடக்கினாள்.


யாழிற்கும் சாந்தினிக்கும் என்ன நடந்தது என்றே ஒருவருக்கு ஒருவர் தெரியாது. இதில் தளிர் வந்து நின்றதில் இருவருக்கும் அவர்களின் பிரச்சனையை சிறிது ஒதுக்கி வைத்து இருந்தனர்.


ஆதர்ஷிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது பார்த்து, "டாடி நான் ஆண்ட்டி கிட்ட போறேன்", என்று லக்ஷித் அடம்பிடிக்க, "அவ கிட்ட போன உன்ன கொன்றுவேன்", என்று அவன் மீண்டும் குழந்தையை திட்ட, சாந்தினிக்கோ கோவம் தலைக்கேறியது.


"உங்க குடும்பத்துல ஒருத்தருக்கும் அறிவு இல்லையா? இல்ல இல்லாத மாறி நடிக்கிறிங்களா? ஏன் இப்படி பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடறிங்க?", என்று அவள் அவனை சாட, "அக்கா என்ன சொல்றிங்க", என்று யாழ் அவள் பக்கத்தில் போய் நின்றாள்.


"அது என்னோட குழந்தைங்க யாழ்", என்று அவள் யாழை கட்டிக்கொண்டு கதறிவிட்டாள்.


தளிரின் கண்களிலோ அதிர்ச்சி.


"என்ன சொல்றிங்க அக்கா உங்களால தான் குழந்தையே...", என்று யாழ் ஆரம்பித்தவள், "உங்க செரோகேசில பொறந்த குழந்தைங்களா?", என்று தளிர் கேட்க, ஆம் என்று தலை அசைத்து இருந்தாள் சாந்தினி.


அப்போது சாந்தினி கவனித்தாள், யாழ் ஆதியின் கோர்ட்டை போட்டுகொண்டு இருப்பதை, "உனக்கு என்ன ஆச்சு? ஏன் நீ ஆதியோட கோர்ட்டை போட்டுட்டு இருக்க?", என்று அவள் கேட்க, அவளால் என்ன சொல்லிவிட முடியும்.


"சாந்தினி", என்று ஆரம்பித்த விஷ்ணு தான் அவளுக்கு அணைத்து விவரத்தையும் கூறினார்.


சாந்தினிக்கோ ஆத்திரமாக வந்தது. ஆனால் அடக்கி கொண்டாள். அடக்கி கொள்ள வேண்டிய கட்டாயம்.


சிவமிற்கோ ஆத்திரம் தலைக்கேறியது.


"ரொம்ப நல்லா பசங்கள வளத்து விட்டுஇருக்கீங்க", என்று சொல்லியே விட்டான்.


"டேய்… டோன்ட் யு டெர் டாக் டு மை பேமிலி லைக் திஸ்", என்று ஆருஷ் அவனிடம் மல்லுக்கு நிற்க, "வேற எப்படி பேசுவான்னு நினைக்கிற? அவன் மட்டும் இல்ல ஊரே அப்படி தான் பேசும்", என்று வைஷ்ணவி அவரின் மகனிற்கு எதிராக பேசினார்.


"மம்மா", என்று அவன் அவருக்கு விளக்கம் அளிக்க முன்னமே, "என்ன அப்படி கூப்பிடாத, உன்ன இப்படியா நான் வளர்த்தேன்? என்னோட வளர்பில தான் ஏதோ தப்பு போலம, என் இரண்டாவது பையன் நான் சொல்றத கேக்கல, என் முதல் பையன் அவனையும் மிஞ்சிட்டான்", என்ற வைஷ்ணவி தளிரின் பக்கம் திரும்பினார்.


"என் மகன் உனக்கு பண்ணது எல்லாமே தப்பு தான்", என்று நிறுத்தியவர், "அவனே உன்ன கல்யாணம் பண்ணிப்பான். ஆனா உன்ன மருமகளை எதுக்குற அளவுக்கு எனக்கு பெரிய மனசு கிடையாது", என்று முடித்து இருந்தார்.


ஆருஷ் நினைத்தது தான். அவனுக்கு தெரியும் அவனின் தாய் இந்த முடிவை தான் எடுப்பார் என்று மனதளவில் திருமணத்திற்கும் தயார் ஆகி விட்டான். ஆனால் அவனே எதிர்பார்க்காது தான் நடந்தது.


"ஆனா எனக்கு உங்க மகன் கூட கல்யாணம் வேண்டாம்", என்று தளிர் சொல்லியதும் அங்கு இருந்த அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர்.


"என்ன மா சொல்ற? வயித்துல பிள்ளையோட நிக்குற, கல்யாணம் வேணாம் சொல்ற", என்று திலகவதி தான் முதலில் பேசினார்.


"உங்களுக்கு இருக்கறது இப்போ ஒரே பேரன் என்ன கல்யாணம் பண்ணி நான் அவரை தனியா கூட்டிட்டு உங்கள விட்டு பிரிக்க விரும்பல, அதே மாறி அவரும் ஒன்னும் என்ன காதலிக்கல இட் வாஸ் ஜஸ்ட் எ பிஸிக்கல் அட்ரக்ஷன்", என்று நிறுத்திவயலின் வார்த்தைகள் ஆருஷின் நெஞ்சை குத்தி கிழித்தது.


அன்று முதல் கூடலின் போது அவன் சொன்ன அதே வார்த்தைகள் இன்று அவளின் வாயில் இருந்து கேட்கும் போது வலித்தது.


மேலும் தொடர்ந்தவள் வைஷ்ணவியை நோக்கி கையை உயர்த்தி கும்பிட்டு, "எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுங்க, உங்க மகன் கிட்ட இந்த குழந்தைக்காக என்னைக்கும் அவரு வர கூடாதுன்னு மட்டும் என்கிட்ட சொல்ல சொல்லுங்க. இது என்னோட குழந்தை மட்டும் தான். இத நான் யாருக்கும் கொடுக்க விரும்பல", என்றவளின் சொல்லில் இருந்த உறுதியை பார்த்து ஆருஷ் கூட அசையாமல் நின்று விட்டான்.


"என்னமா சொல்ற?", என்று திலகவதி அவளிடம் பேச போக, "இது தான் என்னோட முடிவு", என்று தளிர் முடித்து இருந்தாள்.


"என் குழந்தைங்க", என்று சாந்தினி அவர்களிடம் போக பார்க்கும் போதே, "லிகலி நீ கிட்ட கூட வர முடியாது", என்று ஆதர்ஷ் அவன் பிடித்த பிடியில் நிற்க, "அவங்க சொல்ல வரதயாச்சு கேளு டா", என்று சிவம் அவனிடம் சொல்ல, அதெல்லாம் கேட்பவனா அவன்.


"இவனுங்க கிட்ட பேசறதே வேஸ்ட், நீங்க வாங்க நம்ப கிளம்பலாம். இவனுங்கள என்ன பண்ணணுமோ நம்ப பண்ணலாம்", என்று சிவம் தான் மூன்று பெண்களுக்கும் அரனாய் அங்கு நின்றது.


"சிவம்", என்று விக்ரமன் அழைக்க, அவரை திரும்பி பார்த்தவன்.


"அந்த பொண்ணுங்கள பாத்துக்கோ", என்று மட்டும் கூறி இருந்தார்.


அவர்கள் போன பின்பு, அங்கிருந்த பெரியவர்களை பார்க்க முடியவில்லை அந்த குடும்பத்தின் வாரிசுகளால்.


"வீட்டு பக்கம் வந்திராதிங்க, கால ஒடச்சி சூப் வச்சிருவேன்", என்று வித்யா சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.


யாருக்கும் அவர்கள் மூவரிடமும் பேச கூட தோன்ற வில்லை.


அவர்களின் பாரா முகமே அவர்களுக்கு தண்டனை தான்.


"சரி வா உன் வீட்டுக்கு தான் போகணும்", என்று ஆதி கூற, ஆதர்ஷ் அவனை முறைத்தான்.


"அப்பா", என்று லயா அவனின் காலை கட்டிக்கொள்ள, அவளை தூக்கியவனிடம் புகார் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தாள்.


"வீட்டுக்கு போய் பேசிக்கலாம்", என்று ஆருஷ் சொல்ல, அவனுடன் அவர்களும் ஆதர்ஷின் வீட்டிற்கு சென்றனர்.


இதை எல்லாம் நினைத்து கொண்டே அனைவரும் தூங்கி போகினர்.


ஆனால் தூங்காமல் இருந்தது ஒருவனின், கண்கள். அவனின் வேங்கை விழிகள் இந்த சிங்கங்களின் வாழ்வையே புரட்டி போக போகிறது என்று அறியாமல் அவர்கள் உறங்கி விட்டனர். ஆனால் அவர்களின் உறக்கத்தை கெடுக்க அவனோ விழித்து கொண்டு இருந்தான்.


"வெற்றி, நம்ப பாப்பாவை பத்தி அவன் அப்படி பேசுனத்துக்கு அவன் உயிரோடவே இருக்க கூடாது", என்று அவனின் இளையசகோதரன் மாறன் சொல்ல, "அவன பண்ணி என்ன பிரயோஜனம்? நமக்கு எப்படி வலிக்குதா அவனுக்கும் அப்படி வலிக்கனும்", என்றவனின் கண்ணில் அத்தனை ரௌத்திரம் கலந்து இருந்தது.


வெற்றிவேந்தன், யாழ் நிலாவின் மூத்த அண்ணன்! தன் தமைக்காக மட்டும் இன்றி தன் உடன் பிறவா சகோதரிகளுக்காகவும் போராட தயாராகிக்கொண்டு இருந்தான்.
 
1727757169439.jpg
1727757169432.jpg
அத்தியாயம் 23

கோவிலில் கல்யாண மேடையில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் பொட்டுக்கும் சிரிப்பு இல்லை. அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த நடுத்தர வயதில் உள்ளவனின் முகத்தில் தான் அப்படி ஒரு மகிழ்ச்சி.




அவளின் மனத்திலோ, "ஐயோ என் வாழ்க்கை இப்படி ஒருத்தன் கிட்ட தான் சீரழிய போகுதா? எல்லாம் அந்த வளந்து கெட்டவனால வந்த வினை.... அவன் மட்டும் என் கைல கிடைச்சான் கைமா பண்ணிட்றேன்", என்று பாவம் யாழ் புலம்ப மட்டும் தான் முடிந்தது.



சாந்தினியோ ஒரு ஓரத்தில் தளிர் மற்றும் சிவமுடன் அமர்ந்து கொண்டு இருந்தாள்.



அவர்களின் முகத்திலோ துளி அளவு கூட சிரிப்பு இல்லை, ஆனால் மலை அளவு கவலை இருந்தது.



"நம்மளால ஒன்னுமே பண்ண முடியாதா அக்கா?", என்று இத்துடன் சேர்த்து ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டு விட்டாள் தளிர்.



"இது தொல்லையிரத்து தொண்ணூத்தி ஒன்பதாவது முறை கேக்குற இன்னும் ஒரு வாட்டி கேட்டா ஆயிரம் ரவுண்டு ஆப் ஆகிரும். ஏன் டி ஏதாச்சு பண்ண முடிஞ்சா பன்னிருக்க மாட்டேன். நேத்து என் கூட தான இருந்த அவங்க அப்பா பேசுனதெல்லாம் கேட்டல, நம்மளால ஒரு பதில் கொடுக்க முடிஞ்சிதா? வெற்றியும் மாறனும் எங்கனே தெரியல, அவனுங்க இருந்தாவாச்சு ஏதாச்சு பண்ணலாம். இப்போ ஒன்னும் பண்ண முடியாது, கடவுள் தான் காப்பாத்தணும்", என்று அவளும் புலம்பினாள்.



"நம்ப வேணா யாழ் பேபிய தப்பிக்க வெக்க ட்ரை பண்லாமா?", என்று சிவம் கேட்க, அவனை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தாள் சாந்தினி.



" கொஞ்சம் எத்தனை பேரு இருகாங்க பாரு, கிட்டத்தட்ட நூறு பேர காவலுக்கு போட்ருக்காரு அவளோட அப்பா", என்று அவள் சொல்லவும், "நீங்க வேணா சொல்லுங்க நான் ஆயிரம் பேர இறக்குறேன்", என்ற சொன்னவனின் கூற்றில் சிறிது கூட பொய் இல்லை.



"அப்போ சரி ஏதாச்சு பண்ணி இந்த கல்யாணத்த நிறுத்து சிவம். அவளுக்கு வெறும் இருபத்தி ஆறு வயசு தான், அந்த ஆளுக்கு நாற்பத்தி ஒரு வயசு, ஷி டிசர்வ் பெட்டெர். அதுவோம் அந்த ஆளுக்கு ஆல்ரெடி ஒரு கல்யாணம் ஆகி அவங்க இறந்துட்டாங்க. குழந்தை இல்லை. பாவம் யாழ்", என்று தளிர் தான் புலம்போ புலம்பு என்று பேசி கொண்டிருந்தாள்.



"நான் இப்போ கூட நினைச்சா நிறுத்திருவேன், ஆனா அவங்க அப்பா நேத்து ரொம்ப பேசிட்டாரு, வயசுக்கு மரியாதையை கொடுத்து அமைதியா இருக்கேன்.", என்று அவனும் அமைதியாகி விட்டான்.



சாந்தினியின் நினைவோ நேற்றைய நாள் நோக்கி ஓடியது.



காலையில் அவளின் அபார்ட்மென்டின் காலிங் பெல் அடிக்க அவள் தான் கதவை திறந்தாள். மீதி மூவரும் உறங்கி கொண்டு இருந்தனர்.



கதவை திறந்தவள் கண்கள் விரிந்தது. அங்கு யாழின் அப்பா சிதம்பரமும் அவரின் பக்கத்தில் அவரின் தர்மபத்தினி காத்யாயினியும் நின்றிருந்தனர்.



யாழின் தாயின் கன்னங்கள் வீங்கி இருந்தது. அழுது அழுது வீங்கிருக்கும் என்று யூகித்து கொண்டாள்.



"உள்ள வாங்க அப்பா",என்று அவரை உள்ளே அழைத்தவள், இருவருக்கும் வழியை விடும் போதே, "ஐயோ இன்னைக்கு எமகண்டம் தான் யாழுக்கு", என்று நினைத்து கொண்டாள். அவளுக்கு தெரியாது எமகண்டம் அல்ல அவர் யாழின் வாழ்க்கையை பணயம் வைக்க எமனையே அழைத்து கொண்டு வந்துள்ளார் என்று! தெரிந்திருந்தால் உள்ளே விட்டு இருக்கவே மாட்டாள்.



"அப்பா அது வந்து..", என்று அவள் ஆரம்பிக்கும் முன்னரே, "இங்க பாரு மா சாந்தினி நாளைக்கே நிலைக்கும் கேசவனுக்கும் கல்யாணம். என்னக்கு என் மனம் மருவாதைலாம் ரொம்ப முக்கியம். பொம்பள புள்ளையா போய்ட்டா இல்லனா வெட்டி போட்ருப்பேன்", என்று அவர் பொரிந்து தள்ளி கொண்டு இருக்கையிலே யாழ் அவளின் அறையை விட்டு வெளியே வந்து விட்டாள்.



"இதுக்கு தானா டி உன்ன பெத்து வளத்தேன். போறவன் வரவன்லாம் நல்ல புள்ளய வளத்து வச்சிருக்கீங்கனு காரி துப்பிட்டு போறாங்க", என்று அவளின் தாய் அழ, "அம்மா நேத்து ராத்திரி வந்த செய்தியை அதுக்குள்ள நீ தான் அழுதே டமாரம் அடிச்சிருப்ப, அண்ட் அடுத்தவன் பேசறதெல்லாம் கேட்டுகிட்டு என்னால வாழ முடியாது", என்று அவள் திட்டவட்டமாக கூறி விட்டாள்.



"நீ அடுத்தவனுக்காக வாழ வேணாம் இந்த அப்பனுக்காக கல்யாணம் பண்ணிக்க", என்று அவர் கூற, அவளின் விழிகள் விரிந்து கொண்டது.



"சரி நீங்க தான் மாப்பிளை பாத்துட்டு இருக்கிங்கள நல்ல பையன் கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்குறேன்", என்று அவள் சொல்லும் போதே, "அதான் நம்ப கேசவன் இருக்கானே", என்று சொல்லும் போதே, "அப்பா, அந்த ஆளு வயசு என்ன ஏன் வயசு என்ன?", என்று அவளும் கத்த ஆரம்பித்து விட்டாள்.



"அறஞ்சான பாரு, என்ன டி மாமனை போய் இப்படி பேசுற", என்று அவளின் தாய் தான் சீறினார். அவள் பேசுவது அவரின் தம்பியை பற்றி அல்லவா!



"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க அப்பா, நேத்து நடந்தது ஒரு ஆக்சிடென்ட், உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க நானே ஆதி கிட்ட பேசி உங்களுக்கு எடுத்து சொல்ல சொல்றேன்", என்று அவள் ஆதியிடன் பேச கூட தையராகி விட்டாள்.



அவளுக்கு கேசவனை திருமணம் செய்வதை விட ஆதியிடம் மன்றாடுவதே தேவலை என்று தான் அக்கணம் தோன்றியது.



"நாளைக்கு கல்யாணம் நடக்கணும் இல்லனா நான் உயிரோட இருக்க மாட்டேன் நிலா", என்று அவர் குரலை உயர்த்த, தளிர் மற்றும் சிவமும் வந்து சேர்ந்து விட்டார்கள். இருவரும் வெளியே கடைக்கு சென்றிருந்தார்கள்.



வந்தவர்களுக்கு யாழின் தந்தை கத்தும் காட்சி தான் பட்டது.



"அப்பா என்ன இப்படி பிளாக் மெயில் பண்றீங்க", என்று அவள் கேட்க, "நான் உண்மையா தான் சொல்றேன் நாளைக்கு உன் கழுத்துல தாலி ஏராள இந்த அப்பா கழுத்துல தூக்கு கயிறு ஏறும்", என்று அவர் சொல்லவும் அவளின் தாய் ஓப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்.



யாழிற்கோ தர்மசங்கடமான நிலை.



"அண்ணனுங்க எங்க?", என்று அவள் கேட்க, "அவனுங்க நேத்து இராத்திரியே எங்கயோ கிளம்பி போய்ட்டானுங்க. கால் பண்ண கூட எடுக்கல, ஆனா சொல்லி விட்ருக்கேன் நாளைக்கு உனக்கு கல்யாணம்னு", என்று அவளின் தந்தை தான் விளக்கமளித்தார்.



"அண்ணனுங்க வரட்டும் அப்பா அப்பறோம் பேசிக்கலாம்", என்று அவள் இந்த பேச்சை தள்ளி போட முயற்சித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு தான் தெரியுமே வெற்றி அல்லது மாறன் ஒருவர் இருந்தால் கூட இந்த திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று!



ஆனால் அதை எல்லாம் கேட்கும் மனப்பான்மையில் தான் சிதம்பரம் இல்லை.



"நாளைக்கு கல்யாணம் நடந்தே ஆகணும்", என்று ஒற்றை காலில் நின்று இதோ சாதித்தும் விட்டார்.



மணவறையில் அமர்ந்து இருந்தாள் யாழ் நிலா.



அவளுக்கோ கடைசி நிமிடத்தில் கூட ஏதாவது அதிசயம் நடந்து இவளை தேவதூதன் காப்பாற்றி விட மாட்டானா என்று கடவுளிடம் மானசீகமாக மன்றாடிக்கொண்டிருந்தாள்.



அய்யருக்கே பாவமாக இருந்தது. பொருத்தமே இல்லாத ஜோடி ஆயிர்றே ஆனாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.



இந்த கேசவனும் நல்லவன் எல்லாம் கிடையாது. ஊர் பஞ்சாயத்து செய்பவன் தான்.



"இந்தாங்கோ தாலியை பிடிங்கோ", என்று அய்யர் கூற, கேசவனும் தாலியை வாங்கினான்.



அவனின் இதழிலோ வன்மம் கலந்த புன்னகை.



யாழ் தான் மூன்று வருடங்களுக்கு முன்னாடி, "உன்னைய எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் டா பொம்பள பொறுக்கி", என்று ஊரின் முன்னிலையில் அவமானப்படுத்தியது இன்றும் அவனுள் வஞ்சகமாக இருந்தது.



"அன்னைக்கு என்ன எவளோ பேசுன, இதோட உனக்கு நரகத்தை காட்றேன் டி", என்று அவனுள் பொறுமியவன், அவளின் கழுத்திற்கு பக்கத்தில் தாலியை எடுத்து சென்றான்.



யாழின் விழிகளில் அவள் அடக்க முடிந்தும் முடியமால் கண்ணீர் வழித்து விட்டது. முடிந்தது இன்றுடன் எல்லாம் முடிந்தது. "என் வாழ்க்கை இப்படியா ஆகணும் கடவுளே, இதுக்கு நான் செத்து போயிருக்கலாம்", என்று அவள் கடவுளிடம் பேச, கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ அவளவனுக்கு கேட்டது.



"டேய் நீ தான டிவில பேசுனது", என்று கேசவன் கத்த, அப்போது தான் கண்களை திறந்து பார்த்தாள்.



அவளின் முன் ஆண்மையின் இலக்கணமாய் நின்றிருந்தான் அவன். அவளுக்கு தாலியை கட்டி சரிபாதியாக ஆக்கி கொண்டவன்.



கேசவன் தாலியை கழுத்து பக்கத்தில் எடுத்து மட்டும் தான் சென்றான். ஆனால் கட்டியது அவன் அல்ல!



அவனிடம் இருந்து நொடி பொழுதில் தாலியை பறித்து தாலியை கட்டி இருந்தான் அவளவன்! ஆதித்தியராம் ருத்ர தேவன்!



"ஆதி", என்று அவளின் உதடுகள் முணுமுணுக்க, "டேய் உன்ன", என்று அவனை அடிக்க வந்த கேசவனை ஒரே மிதி மிதித்து கீழே விழவைத்து இருந்தான் ஆதித்யன்.



"ஆதி", என்று அந்த இடமே அதிரும் வண்ணம் அவனை அழைத்தான் ஆதர்ஷ்.



ஆதர்ஷுடன் ஆருஷும் சேர்ந்து தான் வந்திருந்தான்.



"என்ன டா பண்ணிருக்க", என்று ஆதர்ஷ் அவனை பார்த்து கேட்க, "கல்யாணம் பண்ணிட்டேன்", என்று பதில் அளித்தவனின் முகத்தில் அத்தனை கோவம்.



"அது தான் எங்களுக்கு தெரியுதே, நாங்களே டென்ஷன்ல இருக்கோம் நீ இங்க கல்யாணம் பண்ணிக்க தான் எங்களை கூப்டியா", என்று ஆருஷ் கேட்டுவிட்டான்.



அவனிடம் பதில் இல்லை மௌனம் தான்.



"டேய் கேட்குறோம்ல அப்டியே கல்லு மாறி நிக்குற", என்று மீண்டும் ஆதர்ஷ் சீற, "ஆமா டா கல்யாணம் பண்ணிக்க தான் கூப்பிட்டேன்", என்று சிடுசிடுத்து விட்டான்.



யாழ் அப்போது தான் சுய நினைவு பெற்றாள். மணவறையில் இருந்து எழுந்தவள் அவனின் சட்டையை பிடித்தாள்.



"இப்போ எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுனீங்க? பண்ணது பத்தாதா இன்னும் என் வாழக்கையை நாசம் பண்ணிட்டீங்க", என்று அவனின் சட்டையை பிடித்து கொண்டு அவள் அழ, அவளின் கையை ஒரே உதறலில் அவளை இரண்டடி பின்னே தள்ளினான்.



யாழின் தந்தையும் தாயும் தான் அவளை வந்து தாங்கியது.



"ஏன் பா இரண்டு நாள் முன்னாடி நீ பேசுன பேச்சால தான் எல்லா பிரச்சனையும் ஆரம்பிச்சதே, இப்போவும் இப்படி பன்னிட்டு இருக்கியே", என்று அவர் ஆதங்கமாக கேட்க, அவனோ அவனின் கைகளின் முஷ்டிகளை மடக்கி அவனின் கோவத்தை அடக்கி கொண்டு பதில் அளிக்க துவங்கினான்.



"யாரு சார் பிரச்சனை பண்றது? நான் அக்செப்ட் பண்ணிக்குறேன் அன்னைக்கு உங்க பொண்ண பத்தி பேசுனது தப்பு தான். அதுக்கு உங்க கால்ல மட்டும் இல்ல உங்க பொண்ணு கால்ல கூட விழுந்து நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனா உங்க பையன் பண்ணதுக்கு நீங்க என்ன பண்ண போறீங்க?", என்று அவன் பதில் கேள்வி கேட்க, ஆதர்ஷ் மற்றும் ஆருஷின் புருவங்கள் சுருங்கின.



"என்ன புது கதை இது?", என்று காத்யாயனி கேட்க, "புது கதை தான் உங்க பையன் எழுத போறான்", என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலே, "பரவால்ல மச்சான் நான் சொன்ன படியே செஞ்சிட்ட", என்று அங்கு வந்து இறங்கினான் வெற்றி வேந்தன்.



அவனை பார்த்தவர்களின் கண்களும் அகண்டு விரிந்தது.
 
Last edited:
1727943888147.jpg
1727943888154.jpg
அத்தியாயம் 24


"டேய் வெற்றி என்ன டா பன்னிட்டு வந்திருக்க?", என்று சிதம்பரம் எகிறுகொண்டு வர, அவனோ கூலாக நின்றிருந்தான்.


"
வேந்தா என்னப்பா இதெல்லாம்", என்று அவனின் தாயும் கேட்க, "என்னை என்ன பண்ண சொல்றிங்க? என் தங்கச்சி தோ இந்த அரக்கிழவன கல்யாணம் பன்னிட்டு வாழ்க்கை முழுக்க கஷ்ட படணுமா?", என்று அவனும் சீறினான்.


"
அதுக்கு எதுக்கு டா நீ கல்யாணம் பன்னிட்டு வந்திருக்க?", என்று அவனின் தந்தை அவனிடம் வாதாட, "என் தங்கச்சி இந்த நிலைமைக்கு வர காரணம் தோ இந்தா நிக்குறாரே என் மச்சான் ஆதி தான். ஆனா என் மச்சான் எப்படின்னு எனக்கு தெரியுமே, இப்போ கல்யாணம் பண்ணிட்டு அப்பறோம் கொடுமை பண்ணா அதான் அவரோட தங்கச்சி அகல்யாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்", என்று அசால்ட்டாக பதில் அளித்தான்.


"
கட்டாய கல்யாணம் பன்னிருக்க நீ", என்று ஆருஷ் ஆக்ரோஷமாக கத்த, அவனோ காதுகளை குடைந்தவன், "கொஞ்சம் கத்தாம பேசு மச்சான்", என்று சொல்லிக்கொண்டே, "ஹான் என்ன சொன்ன கட்டாய கல்யாணமா? கல்யாணமே பண்ணாம கட்டாயப்படுத்தி ஒரு பொண்ணுக்கு புள்ள கொடுத்த வள்ளல் நீ பேசலாமா", என்று நக்கலாக பதில் அளித்தான்.


அவன் சொல்லும் போதே விசில் அடித்திருந்தான் சிவம்.


"
பாஸ் மாஸ் பண்றீங்க", என்று சிவம் உற்சாகமாக பேசினான்.

அதற்கு மேல் ஆருஷால் என்ன பேசிவிட முடியும். ஒரே கேள்வியில் அவனை மடக்கி விட்டானே.


"
நீ பன்னது எவளோ பெரிய பாவம் தெரியுமா? என் தங்கச்சியோட கால் தூசிக்கு நீ வருவியா டா?", என்று ஆதர்ஷ் சீற, "எப்பா டேய், உங்கள்ள ஒருதனுக்காச்சு பேச வக்கு இருக்கா? அப்பறோம் நீ என்ன சொன்ன மச்சான் , பாவம் தான? தாயையும் பிள்ளையும் பிரிச்சி வெக்கறதைவிட உலகத்தில எந்த பாவமும் இல்ல தெரியுமா? உன் தம்பி ஆருஷ் ஆச்சு அந்த புள்ள தளிர் கூட பத்து நிமிஷம் இருந்திருப்பான் ஆனா நீ தொடாமலேயே புள்ளையும் கொடுத்துட்டே, சாந்தினி பத்து மாசம் சுமந்திருக்கா, அத நினைச்சு பாத்தியா? அவளை பேச கூட விடலை நீ", என்று இறுதியாக அழுத்தி அவனின் ஆதங்கத்தை வெளி படுத்தினான்.


வெற்றியிடம் பேச முடியாது என்று மூவருக்கும் தெரிந்தது. அவன் தான் அவர்களை பாயிண்ட் வைத்து பந்தாடுகிறானே!


"
அகல் நீ சொல்லு இவன கம்பி எண்ண வெக்கலாம்", என்று ஆதி அகல்யாவின் பக்கம் தான் பார்வையை திருப்பினான்.


அகல்யா விஷ்ணு தேவன், விஷ்ணு மற்றும் வித்யாவின் தவப்புதல்வி.


ஐஐடி சென்னையில் பிஎச்டி படித்து கொண்டிருக்கிறாள். அழகிற்கு குறைவே இல்லாதவள். செல்வ செழிப்பில் தவழ்ந்த இளவரசி.


ஆதர்ஷின் உடன் பிறந்து இருந்தாலும், ஆதி தான் அவளின் ஆணிவேர்.


சிறுவயதில் இருந்தே, ஆதியும் அகல்யாவும் தான் ஒன்றாக இருப்பார்கள்.


அதை கன்னித்து கச்சிதமாக, அவளை தூக்கி இருந்தான் வெற்றி வேந்தன்.


அன்று யாழின் விடியோவை பார்த்தவன் வீட்டிற்கு சென்று பார்க்கும் போதே, கேசவன் உசுப்பேத்தி அவனின் அன்னையையும் தந்தையையும் மனம் மாற்றி யாழை திருமணம் செய்து கொள்ள தூண்டில் போடுவதை கேட்டான்.


அந்த சூழ்நிலையில் அவன் எண்ண சொன்னாலும் அவனின் தாய் தந்தை கேட்க மாட்டார்கள் என்று அறிந்தவன், ஆர்எ குரூப்ஸின் மொத்த வரலாறையும் எடுத்து விட்டான்.


உப்பு தின்றவன் தானே தண்ணீர் குடிக்க வேண்டும். ஆதியால் வந்த பிரச்சனைக்கும் அவன் தானே தீர்வாக முடியும்.


அப்பொழுதே ஸ்கெட்ச் போட்டுவிட்டான். அவனுக்கு கிடைத்த ஆயுதம் தான் அந்த வீட்டின் இரு இளவரசிகள்.


ஆதிக்கு அகல்யா தான் பிரியமானவள் என்று அறிந்து கொண்டு அவளை கடத்துவதற்கு அவனே சென்றான்.


ஜானவி ருத்ர தேவனை அவனின் நண்பன் அர்ஜுன் அபினவின் மூலம் சிறையெடுத்து இருந்தான்.


இதை அத்தனையும் அவனின் தாய் தந்தை மும்பை வந்த நேற்று காலையே நடத்தி இருந்தான் வேந்தன்.


இந்த மூன்று வேங்கைகளையும் ஆட்டி வைக்கவும் ஒருவன் உள்ளான் என்று ஒரே நாளில் காட்டி விட்டான்.


நேற்றிலிருந்து ஜானவி மற்றும் அகல்யா கொற்றவையின் அழைப்பை ஏற்காமல் இருக்க, அவர் அழைத்து விஷயத்தை ஆதரிஷிடம் சொல்ல, நேற்று மாலையில் இருந்து அவர்களின் தங்கைகளை தேடும் வேட்டையில் இறங்கி இருந்தனர்.


இன்று காலை அகல்யாவின் எண்ணில் இருந்து ஆதிக்கு கால் வந்திருந்தது. ஆனால் பேசியது என்னவோ வெற்றி தான், "என்ன மச்சான்? எப்படி இருக்க?", என்று அவன் கேட்க, "டேய் யாருடா நீ பொறுக்கி என் தங்கச்சிக்கு மட்டும் ஏதாச்சு ஆச்சு", என்று அவனை சாடும் முன்பே, "உன் தங்கச்சி செபாஹ் இருக்கா, இப்போ நீ என்ன பண்ற, போய் என் தங்கச்சிய கல்யாணம் பணிக்குற", என்று அவன் சொல்லவும் ஆதிக்கு தூக்கி வாரி போட்டது.


"
யாரு டா உன் தங்கச்சி?", என்று அவன் கத்த, "நிலா", என்றதும் ஆதியின் இதயம் ஒரு நொடி நின்று விட்டது என்று கூட கூறலாம்.


"
என்ன சொல்ற", என்று ஆதி கேட்க, அவனோ அந்த விடியோவால் அவனின் வீட்டில் நடந்த கலவரத்தை கூற, "உன் தங்கச்சிக்கு நடக்கறது அநியாயம் வேணா நான் கல்யாணத்த நிறுத்துறேன் ஆனா கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாது", என்று அவன் விடா பிடியாக நிற்க, "அப்போ உன் ரெண்டு தங்கச்சிங்களயும் மறந்திரு", என்றானே பார்க்கலாம்.


ஆதிக்கோ மூளையே வேலை செய்ய வில்லை. இரு தங்கைகளும் அவன் பிடியில். அவனின் வாழ்க்கையை அடமானமாக கேட்கிறான். அதுவும் அவனிற்கு பிடிக்காத பெண்ணுடன் திருமணம்.


அவனை அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானம் படுத்திருக்கிறாள். அவளையே திருமணம் செய்ய வேண்டுமா? தலையை பிடித்து அமர்த்தவனுக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வெற்றியை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. தங்கையை ஏதாவது செய்துவிட்டால் என்றெல்லாம் எண்ணம் வந்தது.


முடிவெடுத்து விட்டான். திருமணம் செய்ய போகிறான். வாழ்வானா என்று கேட்டால் அவனிடமே பதில் இல்லை. முதலில் தங்கைகளை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான் இப்பொது ஒரே குறிக்கோள்.


காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டவன், போகும் போதே ஆருஷ் மற்றும் ஆதர்ஷிற்கு இடத்தை குறிப்பிட்டு அங்கே வர சொன்னான். அவர்களுக்கு வேறு எதுவும் சொல்லவில்லை.


இங்கே வந்தால் அகல்யா கிடைப்பாள் என்று மட்டும் தான் சொல்லிருந்தான்.


ஆனால் வந்து பார்த்தவர்களுக்கு தென்பட்டது என்னவோ ஆதித்யன் யாழ்நிலாவிற்கு தலையை கட்டி கொண்டு இருக்கும் காட்சியை தான்.


அது முடிந்து திரும்பினால், இங்கே வேந்தன் மாலையும் கழுத்துமாக அகல்யாவுடன் நின்றிருந்தான்.


"
அகல் உன்ன தான் ஆதி கேட்குறான்", என்று ஆதர்ஷும் சீற, "அவர் ஒன்னும் என்ன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணல, விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எனக்காக ஏதாச்சு பண்ணனும்னு நீங்க நினைச்சா", என்று ஆதியின் முகத்தை பார்த்தவள், "அண்ணியை நல்லா பாத்துக்கோங்க. உங்களால அவங்களுக்கு எவளோ கஷ்டம் அண்ணா! உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பிஹேவியர் நான் எதிர் பாக்கல, இதையே என்னை ஒருத்தன் இப்படி பேசிருந்த நீங்க மூணு பேரும் இப்படி தான் இருந்திருப்பிங்களா?", என்று அவள் கேட்கும் போதே அவளின் மூன்று அண்ணன்களும் முகத்தை தாழ்த்தி கொண்டனர்.


"
நீங்க மூணு பேரும் என்ன எல்லாம் பனிருக்கிங்கன்னு இவரு சொன்னாரு, என்னால நம்பவே முடியல", என்றவள் கண்களில் கண்ணீர். ஒரு பெண்ணாக அழுகிறாள்.


"
ச்ச உங்களுக்குலாம் பொண்ணுங்கனா அவளோ சீப் ஆஹ் போய்ட்டோம்ல?", என்று கேட்கும் போதே அவளின் குரல் உடைந்து விட்டது.


"
நான் என் புருஷன் வீட்டுக்கு போறேன். அம்மாக்கு கால் பண்ணேன், அவங்க இந்நேரம் வந்துட்டு இருப்பாங்க", என்று அவள் சொல்லும்போதே, "அகல்யா", என்று அந்த இடமே அதிரும் வண்ணம் அவளை அழைத்து இருந்தார் விஷ்ணு.


"
என்ன இதெல்லாம்", என்று அவர் கேட்கும்போதே, "எதுவா இருந்தாலும் என்னை கேளுங்க", என்று அவளுக்கு முன் அரணாக வந்து நின்றான் வெற்றி.


"
நீ யாரு?", என்று அவர் கேட்க, "உங்க பொண்ணோட புருஷன் மாமா", என்று அவன் சொல்ல, அகல்யா சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தான்.


அவளை நோக்கி குனிந்து, "புருஷன் தானே?", என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க, அவளோ அவளின் முகத்தை திருப்பிக்கொண்டாள்.


"
என்ன பண்ணி வெச்சிருக்க", என்று வித்யாவும் அவளிடம் வர, "ஆதி", என்று கொற்றவை உள்ளே வந்தார்.


அனைவர்க்கும் சங்கடமான நிலை.


"
உங்க பையனுக்கு கல்யாணம் ஆயிருச்சு என் தங்கச்சியோட", என்று வெற்றி கொற்றவையை பார்த்து கூற, அப்போது தான் யாழ் பக்கத்தில் ஆதி நிற்பதை பார்த்தார்.


"
அம்மா", என்று ஆதி அழைக்கும் போதே, கையை உயர்த்தி அவனை நிறுத்தி விட்டார்.


யாழின் பெற்றோரரை பார்த்தவர், "எப்படியா இருந்தாலும் நான் யாழ தான் என் பையனுக்கு கேட்கலாம்னு இருந்தேன், எனக்கு எப்படி இந்த கல்யாணம் நடந்ததுன்னு தெரியாது அத நான் தெரிஞ்சிக்கவும் விரும்பல, உங்க பொண்ண நம்பி என் கூட அனுப்பி வைங்க. நான் பாத்துக்குறேன்", என்றவரை தான் அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.


ஒரு சண்டை இல்லை, கேள்வி இல்லை, எந்த பதற்றமும் இல்லை, நிதானமாக அந்த சூழ் நிலையை கையாண்டார்.


அப்போது தான் காத்யாயனிக்கு மூச்சே வந்தது. ஏதோ ஒரு அவசரத்தில் அவரின் தம்பி கேசவனுக்கு மணமுடித்து தர ஒப்புக்கொண்டார் தான் ஆனால் இன்று காலையில் இருந்து அவரின் மனம் அடித்து கொண்டு இருந்தது.


தாய் உள்ளம் அல்லவா? ஏதோ தவறு செய்வது போல் இருந்தது. திருமணம் நின்று விட்டால் நல்லா இருக்கும் என்று தான் நினைத்து இருந்தார்.


ஆதி வந்து தாலி கட்டவும் அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி தான்.


இளவரசன் போல மருமகன் என்றால் அவருக்கு கசக்குமா என்ன?


இப்பொது கொற்றவை பேசியதை கேட்டதும் இன்னும் நிம்மதி தான்.


"
நீங்களும் கவலை படாம உங்க பொண்ண எங்க வீட்டுக்கு அனுப்பலாம் சம்மந்தி, நான் பாத்துக்குறேன்", என்று அவரும் அவர் பங்கிற்கு சொல்ல, "அவ இன்னும் தீசிஸ் முடிகளல்ல, படிச்சிட்டு இருக்கா", என்று வித்யா கூறினார்.


"
உங்க பொண்ணு பிஎச்டி முடிக்க நான் கரண்டி", என்று வெற்றி கூறவும், ஏனோ அவனை அவரால் தவறாக நினைக்கவே முடியவில்லை.


அவரின் மனதில் வெற்றியின் மேல் ஒரு நல்ல எண்ணம் தான். ஏனென்று தெரியவில்லை ஆனால் அவரின் உள்மனது அடித்து கூறியது இவன் நல்லவன், உன் மகளை நன்றாக பார்த்து கொள்வான் என்று!


"
நம்ப பாப்பாவ அவங்க கூட அனுப்பி வெட்க்கலாம்", என்று வித்யா சொல்ல, விஷ்ணுவிற்கோ அதிர்ச்சி, "ருத்ரன் டெல்லி போயிருக்கான் டி", என்று அவர் சொல்ல, "வந்ததும் சொல்லிக்கலாம் இப்போ அனுப்பி வெக்கறது தான் நல்லது", என்று கொற்றவையும் சொல்ல, முடிவெடுத்து விட்டனர்.


இருவீட்டு இளவரசிகளும் இடம் மாறினார்.


யாழின் தலையை வருடிய அவளின் தாய், "பாத்து நடந்துக்கோ பாப்பா", என்று அவளை கட்டியணைத்து விடுவிக்க, அவளிடம் ஒரு உணர்வும் இல்லை.


கோவமாக இருக்கிறாள் என்று அவருக்கு புரிந்தது. அவளின் தந்தையின் முகத்தை கூட அவள் பார்க்க வில்லை.


வேந்தனிடம் வந்தவள், "ஏன் அண்ணா?", என்று கேட்டுக்கொண்டே அவனின் மார்பில் சாய்ந்து அழ, "எல்லாம் சரி ஆகிடும், உன் மாமியாரை நம்பு", என்று சொல்லி அவளின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான்.


அகல்யாவும் விஷ்ணுவை கட்டிக்கொண்டு அழ, "சாரி டாடி", என்று அவள் சொல்ல, அவருக்கோ ஒரு மாறி ஆகிவிட்டது.


"
அந்த பையன பார்த்தா நல்லவன் மாறி தான் தெரியுறான். இருந்தாலும் உனக்கு அங்க புடிக்கலான நீ எப்போ வேணாலும் நம்ப வீட்டுக்கு வந்துரலாம்", என்று அவர் சொல்ல, "அப்போ முதல்ல கொற்றவை தான் நம்ப வீட்டை விட்டு போகணும்", என்று கவுண்டர் கொடுத்தார் அவரின் தர்மபத்தினி.


அத்தனை இருக்கங்களையும் தாண்டி அகல்யா சிரித்து விட்டாள்.


"
இதே போல சிரிச்சிட்டே இரு, போற எடத்துல எங்க பேர காப்பாத்து", என்று வித்யாவும் அவளை அணைத்து விடுவிக்க, அவள் அடுத்து கொற்றவையிடம் செல்ல, "நீ எது பண்ணாலும் நலத்துக்குனு எனக்கு தெரியும். பிஎச்டி சீக்கிரம் முடி", என்றதுடன் அவளை அணைத்து விடுவிக்க, அவளும் வெற்றியுடன் அவனின் ஊருக்கு புறப்பட்டாள்.


ஆருஷ் அப்போது தான் தளிரின் முகத்தை பார்த்தான். அவன் மட்டும் தான் பார்த்தான், அவள் அவன் இருப்பதாய் நினைக்க கூட வில்லை, நினைக்கவும் அவள் விரும்பவில்லை. முடிவெடுத்து விட்டால் மொத்தமாக அவனை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்.


யாழுடன் ஆதி வந்து இறங்க, அவர்களுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்திருந்தார் கொற்றவை.


ராஜ பார்த்திபனும் அஞ்சனா தேவியும் ஒரு விஷேஷத்திற்காக வெளியே சென்றிருந்ததால் வீட்டில் விஷ்ணு, வித்யா மற்றும் கொற்றவை மட்டும் தான் இருந்தனர்.


"
ஆதி, யாழை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ", என்று கொற்றவை சொல்லவும், "வா", என்று அவளின் கையை இழுத்து கொண்டு அவன் போக, அதை பார்த்த மூவருக்குமே இவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகிறதோ என்று தான் இருந்தது.


இங்கோ அடுத்த பக்கத்தில், ஊருக்கு வந்து அகல்யா வெற்றியை ஆரத்தி சுற்றி உள்ளே அழைக்க, "வேந்தா உன் பொஞ்சாதிய உன் அறைக்கு கூட்டிட்டு போ", என்று காத்யாயனி சொல்லவும், அவளை அழைத்துக்கொண்டு அவன் போக, அறையினுள் நுழைந்ததும் அவள் செய்த செயலில் விக்கித்து நின்றான் வெற்றி வேந்தன்.
 
Top