Priya pandu
Moderator
அத்தியாயம்-5
சென்னையின் சோழிங்கநல்லூர் பக்கம்…….. லிஷா இறந்துக்கிடந்த இடம் அது………. அந்த பக்கமே பெரும் அதிர்ச்சியிலும், பரப்பரப்பிலும் காட்சியளித்தது…… பின் இருக்காதா இதுவரை இது போன்ற கொடூரமான கொலை அங்கு எங்கும் நடக்காதது போல அல்லவா இருந்தது அந்த பெண்ணின் கொலை……
ஒரு பக்கம் காவல்துறைகளின் கார்கள், ஒரு பக்கம் ஆம்புலன்ஸ்…… ஒரு பக்கம் டிவி ரிப்போட்டர்களின் வாகனங்கள் என்று அந்த பகுதியே நிறைந்து இருந்தது……
“யாருப்பா முதல பார்த்தது……….”என்று ஒரு காவலர் அங்கு சுத்தி கூட்டமாக நின்றவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்க…….
“யோவ் ஓரமா நில்லுய்யா……… இங்க என்ன சூட்டிங்கா எடுத்துட்டு இருக்காங்க……. கொலை நடந்துருக்கு…… போ….. போ……. ஓரமா போ…….. யோவ் சொல்லிட்டே இருக்கேன் கிளம்பு இங்க இருந்து………..”என்று ஒரு பக்கம் ஒரு காவலர் கூட்டத்தை கலைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருக்க…….
“யோவ் இன்னும் கூட்டத்தை கலைக்காம என்னய்யா பண்ற……. ஏசிபி வந்தாருனா நம்மள தான்ய்யா கத்துவாரு….. விரட்டுய்யா எல்லாரையும்…….”என்று அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்…. கான்ஸ்டபிளை அவசரப்படுத்த……..
அந்த கோபத்தை அங்கு காட்டியவாறே அங்கு நிற்பவர்களை குச்சியை கொண்டு அடிக்க பாய்ந்தார் கான்ஸ்டபிள்……….
“யோவ் அடிக்க கை ஓங்காதய்யா……… இப்போ வந்துருக்க புது ஏசிபி பத்தி தெரியும் இல்ல….. ஒழுங்கா பேசி அனுப்பு இல்ல நமக்கு தான் மண்டகப்பிடி கெடைக்கும்….. ம்ம்…. ம்ம்…. சீக்கரம்……….”என்று இன்ஸ்பெக்டர் கூற…….
“ம்ச்….. இவரால ரொம்ப ரோதனையா போச்சி…….. அனுப்புனுங்குறாரு…… அடிக்காதங்குறாரு….. பின்ன எப்டிதான் தொரத்துரதுனு தெரில…….. இந்த கொடுமையலா பாக்கதானா நான் போலீஸ் வேலைக்கி வந்தேன்…… இந்த புது ஏசிபி வேற….. யார்ட்டையும் கடுமையா நடந்துகிட்டா போதும் உடனே ஆக்ஸன் எடுத்துடுறாரு…… இவனுங்க தொல்லை தாங்காம தான் நாமளே குச்சிய கையில எடுக்குறோம்….. அதுக்கே இப்டி…… அடிக்காத…. புடிக்காதனு……..”என்று தன் போக்கில் புலம்பியவர்……..
“ஏய் நகரு…… சொல்றேன்ல…… போயா உங்களுக்குலா வீடே இல்லையா….. எப்போ பாரு ரோட்டுல எதாவது நடந்துட கூடாது உடனே வந்து நின்னுடனும்…… அதும் எதாவது பொண்ண எவனாவது எதாவது பண்ண வந்துட்டா ஓடிட வேண்டியது அதுவே எதாவது செஞ்சி முடிச்சதும் வேடிக்கை பாக்க வந்துடனும்…….. போங்கய்யா இங்க இருந்து………. “என்று கடுப்பாய் பேசிக்கொண்டு இருந்தார் அந்த கான்ஸ்டபிள்……..
இங்கோ…….. அந்த இன்ஸ்பெக்டர்……… அந்த ஏரியாவில் எங்கு எல்லாம் சிசிடிவி கேமிரா இருக்கிறது என்று கடுப்புடன் எண்ணிக்கொண்டு இருந்தார்……. பின் இருக்காதா……. பழைய ஏசிபி இருந்தவரை கான்ஸ்டபிளை வைத்து வேலை வாங்கியாயிற்று………
இப்போது வந்திருக்கும் ஏசிபி….. ஏதாவது வேலை சொன்னால் அதனை அவர்களே செய்து முடிக்க வேண்டும்…….. “ஆள் அனுப்புறேன் சார்……… கான்ஸ்டபிளை அனுப்புறேன் சார்"என்று சொன்னால் போதும்……. ஏதோ அவன் சொத்தை ஆட்டையை போட்ட மாதிரி அல்லவா அக்னி ஜுவாலையை கண்களில் வைத்து பார்க்கிறான்…….. அவனுக்கு பயந்தே தாமே இந்த வேலையில் இறங்கிவிட்டார் இந்த இன்ஸ்பெக்டர்…….
அதும் இந்த கேஸிற்கு முதலில் கன்ட்ரோல் ரூமிற்கு அழைக்கும் முன் எந்த படுபாவி பயலோ புது ஏசிபிக்கு அழைத்துவிட்டான்……..
“மிஸ்டர் ராஜேஷ்……… போனை எடுக்க இவ்வளவு நேரமா……..”என்று எடுத்த எடுப்பில் ஏசிபி கத்த………
“சார்……. சாரி சார் நைட் ட்யூட்டில இருக்கேன் சார்….. அதான் போன எடுக்கல…..”என்றான் ராஜேஷ் மலுப்பலாக
அதில் அந்த பக்கம் பல் கடிக்கும் சத்தம் நன்றாக கேட்க…….. அதில் எச்சிலை விழுங்கிக்கொண்டான் ராஜேஷ்……..
“நீங்க நைட் ட்யூட்டி பார்த்த லட்சணம் தான் சோழிங்கநல்லூர் ரோட்ல ஒரு பொண்ணு செத்து கிடக்குறதா நியூஸ் வந்துருக்கு போய் பாருங்க……. நான் பின்னாலையே வரேன்…….”என்றான் கடுமையாக
அதில் திக்கென்று அதிரும் முறை ராஜேஷின் முறை ஆனது………..
ஏனென்றால் அவன் தான் அவனுக்கு பார்த்திருக்கும் பெண்ணுடன் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கடலை வறுத்துக்கொண்டு அல்லவா இருந்தான்….. அவன் எங்கு நைட் ரோந்து சென்று இருந்தான்……. எப்போது அவனுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்களோ அப்போதில் இருந்தே நைட் ரோந்திற்கு லீவ் விட்டிருந்தான்… பாவம் அவனும் தான் என்ன செய்வான்……… போலீஸாக இருக்கும் ஒருவருக்கு பெண் கிடைப்பதே அரிது……. அதும் 34 வயதை தாண்டிய இவனுக்கு பெண் கிடைத்ததே அரிதிலும் அரிதாக போனதால்…….. அவனின் நைட் ரோந்திற்கு ஆப்பு……… இப்போது இவன் வேலைக்கும்………… ஆப்பாக போகுமோ என்னவோ………..
உடனே போனை வைத்தவன் அடித்து பிடித்து ஓடிவந்து பார்த்ததும்….. அவனுக்கு முன்னாலே டிவி ரிப்போட்டர்கள்……. பொது மக்கள் அனைவரும் குவிந்துவிட்டனர்…… அதில் இன்னும் நொந்து போனவன் தான்…… இப்போது கான்ஸ்டபிளை விரட்டிக்கொண்டிருக்கிறான்…….
அந்த ஏரியாவில் இருக்கும் ஒவ்வொரு சிசிடிவி கேமிராவை கண்காணித்துக்கொண்டே வந்தவனின் காதில் விழுந்தது……… ஏசிபி வந்த காரின் ஹாரன் சத்தம்…….
அதில் அவசரமாக அந்த காரின் பக்கம் ஓடிவந்த ராஜேஷ் பார்த்தது காரின் கதவை திறந்து தன் நீளமான காலினை ஸ்டைலாக தூக்கி வெளியில் வைத்தவாறே இறங்கிய சென்னையின் புதிய ஏசிபி…….. ரன்வீர் ரகோத்தமனை தான்……
ரன்வீர் ரகோத்மன்…….. ஒரு வடநாட்டை சேர்ந்தவன்…….. அதற்கு ஏற்றது போல தான் நல்ல சிவந்த நிறம்….. நல்ல அலை அலையான கேசம்….. அதனை அப்படியே கைகளால் கோதிக்கொண்டு நின்றிருந்தான்….. அதிலே அவனின் மேனரஸத்தில் இதும் ஒன்று என்று நமக்கு நன்றாக புரிந்தது……
நன்று அகலமான நெத்தி…….. அதில் நரம்புகள் அனைத்தும் புடைத்துக்கொண்டு நின்றது……. அவனுக்கு கோபம் என்று நினைக்கிறேன்……. நல்ல கூர்மையான கண்கள்……. அதிலே விழுந்தால் தப்பிக்க தான் வழி இல்லை……. இப்போது அதும் தன் முன்னால் நிற்கும் ராஜேஷை கோவத்துடன் முறைத்துப்பார்த்துக்கொண்டு இருந்தது……. நல்ல கூர்மையான நாசி…….. அதன் கீழ் நல்ல இறுகிப்போன உதடுகள்…… அதும் ஒன்றும் கரைப்பிடிக்காமல் இருப்பதை பார்த்தாலே நமக்கு தெரிந்தது…… புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் என்பதில் அதிகம் நம்பிக்கை கொண்டவன் என்று……..
தன்னுடைய 6பேக் தெரியும் அளவிற்கு இறுக்கிப்பிடித்த க்ரே கலர் டீசர்ட் போட்டிருந்தான்……… அதிலே அவன் நல்ல உடற்பயிற்சி செய்பவன் என்று நமக்கு தெரிகிறது…..நல்ல கருப்பு நிறத்தில் ட்ராக் பேண்ட் அணிந்து அதன் கீழே ஜாகிங் ஷூவை போட்டுக்கொண்டு வந்திருந்தான்……. இதிலே அவன் இரவு உறக்கத்தில் இருந்து அப்படியே வந்துவிட்டான் என்று நமக்கு நன்றாக தெரிகிறது………
அம்ரிஸ் பஞ்சாபை சேர்ந்தவன்……… நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் தான் அம்ரிஸ்……… அவன் அப்பா ஒரு ராணுவ வீரர்……. அவன் வீட்டில் இருப்பது அவனும் அவன் தாயும் தான்…….. ஏனென்றால் அம்ரிஸ் சிறுபிள்ளையாக இருக்கும் போதே தன் தந்தையை இழந்தவன்……..
அதும் அவனுக்கு 7வயது இருக்கும் போது 2வருடம் கழித்து லீவில் ஊருக்கு வந்த தந்தை அதன் பின் வராமல் போனது தான்…… ஏனென்றால் அப்போது தான் நாட்டின் எல்லையில் எதிரிகளின் ஊடுருவலை தடுக்க போராடியபோது…… கொல்லப்பட்டார் அவனது தந்தை குர்ஜித் ரகோத்மன்………
அப்போதில் இருந்தே அவனுக்கு ராணுவத்தின் மீது ஒரு இஷ்டம்………. படித்து முடித்த தானும் ராணுவத்தில் சேர விரும்புவதாக தன் தாயிடம் கூற…….. அவரோ அதிர்ந்து போனார்……
“வேணாம் ரகோ…… நீயும் உன் பப்பா மாறி ஆர்மில சேர்ந்து என்னை விட்டு போய்ட்டனா எனக்குனு யாரு இருக்கா……...”என்று அழுத சிம்ரனின் வார்த்தைகளில் அதிர்ந்து போனவன்………. தன்னுடைய ஆசையை மாற்றிக்கொண்டான்……. அது தான் எல்லையில் இருந்து போராடினால் தானா நாட்டை காக்கும் போராளி என்பார்கள்……. நாட்டின் உள்ளையே போராடுவோம்….. என்று அவன் எடுத்த முடிவு தான் ஐபிஎஸ்……..
தன் தந்தை இறந்ததற்கு வந்த பணத்தை வைத்து நன்றாக படித்தவன்…….. தன்னுடைய 24வது வயதில் ஐபிஎஸில் தேர்வானான்……….
அதன் பின் ட்ரைனிங் அதுவென்று முடித்து அடுத்த வருடமே முதன் முதலில் அவனை போஸ்டிங்கில் போட்டது மதுரையில் தான்…… 2வருடம் மதுரையில் தன் ஆட்டத்தை ஆடி தீர்த்துவிட்டான்……. அவனை மாற்ற பல பெரிய தலைகள் எவ்வளவோ போராட……. அவர்களின் ஆட்டத்தை தீர்த்துவிட்டு தான் மும்பையில் போஸ்டிங் வாங்கி சென்றான்……….
மும்பையிலும் அப்படிதான்……. பல பெண்களின் வாழ்வாதாரமான ரெட் லைட் ஏரியாவை தன் கன்ட்ரோலில் வைத்து அராஜகம் செய்துக்கொண்டிருந்த ராகேஷ் என்ற பிரபல ரவுடியை என்கவுன்டரில் போட்டுவிட்டு……. அந்த பெண்களுக்கு சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்தான்……. அவர்களை நல்வழிப்படுத்தினானா என்று கேட்டால் இல்லை தான்……. அவர்களின் வாழ்க்கை அவ்வாறு தான் என்று அவர்கள் மாற்றிக்கொண்டபின் இவனால் தான் என்ன செய்ய முடியும்…….
இப்படியாக 2வருடம் டெல்லி……. 2வருடம் கொல்கத்தா என்று மாறி மாறி தன் ஆளுமையை காட்டியவன்…… இப்போது அதாவது ஒரு மாதத்திற்கு முன்னால் தான் சென்னைக்கு வந்தான் அதும் ஏசிபியாக………
இவன் வருவதற்கு முன்னாலே பல மிரட்டல்கள் இவனுக்கு வர…….. அதை எல்லாம் போய்ட்டு வா என்று அனுப்பி வைத்துவிட்டு தான் சென்னை வந்தான்……… தன் அன்னை சிம்ரனுடன்……..
அவன் வந்த கொஞ்ச நாளிலே பல கேஸ்களை விசாரித்துக் கொண்டிருந்தவனுக்கு கிடைத்த அடுத்த கேஸ் தான் லிசாவினுடையது…….
அம்ரிஸ் தன் முன்னால் தன்னையே கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் ராஜேஷையே இமைக்காமல் பார்த்தவன்………
“சொல்லுங்க ராஜேஷ்………. சுமார் 3மணி நேரமா உங்கள கன்ட்ரோல் ரூம்ல இருந்து கனக்ட் பண்ண போராடிட்டு இருந்துருக்காங்க……. அப்போதும் நீங்க பிஸியா இருந்துருக்கீங்க……… எதனால……..”என்றான் தன் கம்பீரமான குரலில்
அதில் அதிர்ந்த ராஜேஷ் எச்சிலை விழுங்கியவாறே……. “சார் நான் நைட் ரோந்துல இருந்தேன் அதான்……..பிஸி…….”என்று அவன் இழுக்க……
“ஓஓ…… நான் சொன்னத தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கனு நினைக்கிறேன்……. அதாவது நான் சொன்ன பிஸி உங்க போன் பிஸினு வந்தத சொன்னேன்………. நீங்க பிஸினு சொல்லல……….”என்றவனது குரல் கடைசி வார்த்தையை சொல்லும்போது அரக்கத்தனமாய் ஒலித்தது……..
அதில் ராஜேஷ் கைகால்கள் நடுங்க துவங்கியது……… "இ..ல்ல… சார்…. அது…..”என்று அவன் தடுமாற……
அவனையே கண்கள் இடுங்க பார்த்தவன்……….. “இந்த கேஸ் பத்தி ரிப்போர்ட் இன்னிக்கி மார்னிங் டென் குள்ள என் டேபிளில் இருக்கனும்………. அப்புறம்……. உங்கள நான் பத்து நாளைக்கி சஸ்பென்ட் செய்றேன்…….”என்றான் கம்பீர குரலில்……..
அதில் அதிர்ந்தே போனான்.. ராஜேஷ்……… பின்ன இருக்காதா இன்னும் 10நாளில் அவனுக்கு திருமணம்………. அந்த நேரம் அவனை சஸ்பென்ட் செய்தால் அவனுக்கு அசிங்கமாய் போகாது…….. அதுமட்டும் இல்லாமல் உன்னை சஸ்பென்ட் செய்கிறேன்……… அதற்குள் உன் வேலை நடந்தாக வேண்டும் என்று கூறும் அம்ரிஸை பார்த்தால் அவனுக்கு ட்ராகனை போல அல்லவா தோன்றியது………
“சார்………...”என்று ராஜேஷ் எதோ கூற வர………… ஆனால் அதனை கேட்க தான் அங்கு அம்ரிஸ் இல்லை……….
அம்ரிஸ் தான் ஏற்கனவே இந்த கேஸை பார்க்க வேறு ஆளை தனக்கு நியமித்துவிட்டு தானே சம்பவ இடத்திற்கே வந்தான்………. அவன் எப்போதோ முடிவு செய்துவிட்டான்……. ராஜேஷை வேலையில் இருந்து தூக்க………..
இங்கு இப்படி இருக்க அங்கு ஒருத்தியோ தன் லேப்டாப்பில் முக்கியமாக எதையோ டைப் செய்துக்கொண்டிருக்க…….. அவளது மனம் தான் எதோ வித்தியாசமாக படப்படப்பாக இருந்தது….. அவள் மனம் சொல்படி அவள் கை டைப் அடிக்க…….. கொஞ்ச நேரத்தில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தவள் அதிர்ந்து போனாள்………….
அவள் முகத்திற்கு வெகு அருகில் யுகா முகம் இருக்க…….. அதில் ஒரு நிமிடம் அதிர்ந்து போனவள்………….
“என்ற அம்மே……...”என்று கத்தியவள் அவன் முதுகில் ஒரு போடு போட்டாள்……..
“அய்யோ அம்மா………….. ஏய் குந்தானி……. என் முதுகுல டின் கட்டிட்டாளே……...”என்று துள்ளியவாறே தன் முதுகை தடவிக்கொண்டவன் அவளை முறைக்க………
“ஏய்…. எரும….. இப்டியாடா என்னை நெருங்கி நிப்ப……… "என்று விழிகளை உருட்டியவாறே அவனை முறைக்க…….
“ஏய் முண்டக்கன்னி இப்டி முறைக்காத…….. உன்ன பார்த்தே பயமா இருக்கு…….. ஆமா……. என்னமோ சின்சியரா டைப் பண்ணிட்டு இருக்கியே…… என்ன எதாவது கதை கான்சப்ட் கிடைச்சிருக்கா……..”என்றான் அவள் அருகில் ஒட்டி உட்கார்ந்தவாறே…….
“ம்ம்…. ஆமா…. ஆமா…….. ஒரு வித்தியாசமான பேய்க்கதை ஒன்னு சிக்கிச்சி…….. அதான் அத டைப் பண்ணிட்டு இருக்கேன்…….”என்றாள்
அதில் மெல்ல ஜர்க் ஆனவன்……… "ஏன்டி இந்த லவ் அன்ட் லவ் ஒன்லினு எவ்வளவு நல்ல கான்சப்ட்லா இருக்கு அதலாம் விட்டுட்டு இந்த பேய பிடிச்சிட்டு ஏன்டி அத தொல்லபண்ற……..”என்றான் அவள் தோளில் கை போட்டுக்கொண்டு……..
“ம்ச்……… லவ் லவ்னு அத எழுத எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்காங்க……. அது மட்டும் இல்லாம எனக்கு அதுலலாம் இன்ட்ரஸ்ட் இல்ல…….. எனக்கு பிடிச்சது இந்த ஹாரர் தான்…….”என்று லேப்டாப்பில் டைப் செய்தவாறே அவனிடம் கூற………
“ஆமா ஆமா பேய்க்கு பேய தானே பிடிக்கும்……...”என்றான் அவன் கலாய்க்க…….
அதில் கண்களை ஸ்லோ மோசனில் அவன் பக்கம் திருப்பி முறைக்க……….
“அம்மா தாயே…… நாலு அடி வேணா அடி…. ஆனா இப்டி ஸ்லோ மோஷன்ல திரும்பாத……. மனசு பக்குனு இருக்குல…….”என்றவன் அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்தவாறே…….. தான் கையில் வைத்திருந்த பெரிய டைரிமில்க்கை கொடுக்க……
அதுவரை அவனை கோவமாக முறைத்துக்கொண்டிருந்தவள்……. டைரிமில்க்கை பார்த்ததும் அவளுக்கு உலகமே மறந்து போன்றதொரு நிலை……….
அதனை ஆசையாக பார்த்தவாறே ரொமான்டிக் லுக்குடன் அதனை வாங்கி….. பூபோல……. அதாவது கவருக்கே வலிக்காத அளவிற்கு அதனை பிரித்தவள்…….. ஆசையாக தன் அழகிய பற்களால் ஒரு பீஸை கடிக்க………. இதனை எல்லாம் யுகா ஸ்லோ மோஷனில் ரசித்துக்கொண்டிருந்தான்……….
“அப்பா……… யுகா….. ரொம்ப தாங்க்ஸ்டா…… என்னடா இன்னிக்கி கோட்டா இன்னும் சாப்டவே இல்லையே……. இவன் இன்னும் வாங்கித்தரவே இல்லையேனு யோசிச்சிட்டே இருந்தேன்……. இப்போதான் என் மனசு சந்தோஷமா இருக்கு…….. இப்போ நீ என்னை திட்டனும்னாலும் திட்டு……. நா உன்ன ஒன்னும் சொல்லமாட்டேன்……...”என்று வாயில் முழுதும் சாக்லேட்டை வைத்துக்கொண்டு பேச……..
அந்த அழகில் யுகா தான் கடுப்பாகி போனான்……….
“ஏன்டி ஒன்னு தின்னு இல்ல பேசு…….. இப்டி ரெண்டையும் ஒரே நேரத்துல பண்ற…..”என்று அவன் கத்த……….
அதை எல்லாம் எங்கு அவள் காதில் வாங்கினாள்……… அவள் சிந்தனை முழுதும் அந்த சாக்லேட்டில் தான் இருந்தது……… அதில் தன் தலையில் அடித்துக்கொண்டவன்……. இப்போதைக்கு இவளிடம் எந்த பதிலும் கிடைக்காது என்பதால் அவளையே பார்த்தவாறு அவள் சாப்பிடும் வரை காத்திருந்தான்……….
அம்ருவும் தன் சாக்லேட்டிலே கவனம் வைத்தவாறே இருக்க நொடியில் அதனை காலி செய்தவள்………. கவரை யுகா கையில் கொடுக்க……. அவனோ அவளை பார்த்து முறைத்தவாறே அவள் டேபிளின் கீழ் இருக்கும் டஸ்பீனில் போட்டான்………
சிறிது நேரம் அம்ரு தன் வேலையில் கவனமாக இருக்க……….. அப்போது வரை அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த யுகா………. திடீர் என்று……...
“ம்ச்….. ஆமா…….. உனக்கு நம்ம பேமிலி எதோ மறைக்கிறாங்கனு எப்டி தெரிஞ்சிது……...”என்று யுகா கேட்க…….
அவன் கேட்ட கேள்வியில் டைப் செய்துக்கொண்டு இருந்த அவள் கைகள் ஒரு நிமிடம் நின்று பின் தன் வேலையை செய்தவாறே…….“எனக்கு எப்டி தெரியும்…….. சும்மா உன்ட போட்டு வாங்குனேன்……..”என்று ஒரு குண்டை போட……….
அதில் அவளையே முறைத்தவன்………. “அடிப்பாவி குந்தானி……. எல்லாம் நடிப்பா……..”என்று சிவாஜி டோனில் கேட்க……….
“ஆமாம் கோபால் ஆமாம்……….”என்று இவளும் அதே பாணியில் பதில் சொன்னவாறே சிரிக்க………. அவனும் அவளுடன் இணைந்து சிரித்தான்………..
இதனை அந்த கருப்பு உருவம் வன்மத்துடன் பார்த்தது……….
“என்னை விட்ரு…….. ப்ளீஸ்………..”என்று ஒரு ஆண் குரல் கெஞ்ச……….
"அவர விடு………..."என்று அந்த ஆண் பக்கத்தில் இருந்த பெண் கதற……… ஆனால் அந்த கருப்பு உருவமோ……… அதனை கண்களில் ரசனையுடன் பார்த்தவாறே……….. அந்த ஆணின் உடலை தன் கூரிய நகங்களால் கீரியது………………….. ஆஆஆஆஆஆஆஆ………………..
“அய்யோ……… என்னங்க………...”என்று அந்த பெண் கத்தியவாறே அந்த உருவத்தை மிரட்சியுடன் பார்க்க……….. இப்போது கத்துவது அந்த பெண்ணின் முறை ஆனது………. ஆஆஆஆஅ……………. என்ற குரல் அந்த நடுநிசியில் அந்த நெடுஞ்சாலை பகுதியையே அலற வைத்தது………. ஆனால் பாவம் அதனை கேட்க தான் யாரும் அங்கு இல்லை……….
(நிழல்கள் தொடரும்……)
Last edited by a moderator: