நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது மிக வேகமாக ஓடி மாலையானது. சூரியனின் வெப்பக் கதிர்கள் தணிந்து இதமான காற்று வீசியது. அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அபிராமி எப்படி தன் பெற்றோரிடம் இதுகுறித்து பேசுவது என்று சிந்தித்துக் கொண்டே வந்தாள். அவளது சிந்தனையின் தீவிரத்தில் ஒரு இடத்தில் சிக்னலைக்கூட கவனிக்காது ஸ்கூட்டியை விட்டுவிட்டாள். விசிலடித்து நிறுத்திய போக்குவரத்து பொலிஸிடம் திட்டை வாங்கிக் கொண்டு அந்த எரிச்சலுடனே வீடு வந்து சேர்ந்தாள்.
அங்கே வந்தவளுக்கோ இன்னும் எரிச்சல் ஊட்டும் வகையில் வீடு பூட்டப்பட்டிருந்தது. வழமையாக சாவி வைக்கும் இடத்தில் தேடிப் பார்த்தாள். அங்கும் இல்லை எனவும் கோபத்தில் காலை உதறிவிட்டு முற்றத்தில் கிடந்த கல்லில் அமர்ந்தாள்.
'இந்த நேரத்தில் எல்லோரும் எங்கே தான் சென்றிருப்பார்கள். கோயிலுக்குப் போவதற்கு இன்று விசேஷ நாள்கூட இல்லையே? வேறு எங்கே சென்றிருப்பார்கள்....? அப்பா கூட இப்ப வந்திருக்கணுமே....? என்று குழம்பியவாறு தன் அலைபேசியில் தந்தையின் எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள். ஆனால், அழைப்பு ஏற்கப்படாமலேயே கட் ஆனது.
‘ம்ம்.. வரட்டும்.. பெத்த பொண்ணு மேல அக்கறையே இல்லாதவங்க. ம்ம்.. அதுவும் நல்லதுதான் கொஞ்சமாவது யோசிப்போம்… எப்படி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது? பேசாமல் உண்மையைச் சொல்லிடுவோம். அதுதான் சரி. நான் வேண்டாம் என்றால் அம்மா நிச்சயம் என்னை குதறி எடுத்திடுவார். மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றும் சொல்லமுடியாதே… காரணம் கேட்பாங்க. அதனால நேற்று அவர் என்கிட்ட சொன்னதை அப்படியே வீட்டில் சொல்ல வேண்டியதுதான்' என்று முடிவெடுத்தவள் தன் கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகா பாட்டி இவளை நோக்கி வந்தார். "அபிராமி..., வந்திட்டியாம்மா? இரண்டு தடவை வந்து பார்த்தேன். நீ வரல. இந்தாம்மா உங்க வீட்டு சாவி..." என்றார். ஆச்சரியமாகிவிட்டது அவளுக்கு. பாட்டியிடம் சாவியைக் கொடுத்து செல்லும் அளவுக்கு எங்கே போயிருப்பார்கள்?
“ஏன் பாட்டி வீட்டில் எல்லோரும் எங்கே போனார்கள்?" என்று வினவினாள்.
"அது வந்தும்மா.. உங்க அப்பாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல என்று கொஸ்பிடல் கூட்டி போனாங்க... நளாயினிதான் உனக்கு ஃபோன் பண்ணி ரென்சன்படுத்த வேண்டாம் என்றும் நீ ஆபிஸில் இருந்து வந்ததும் சொல்லச் சொன்னாள். சின்னப் பயல் நம்ம வீட்டில்தான் இருக்கான். என் பேத்தியோட விளையாடிட்டு இருக்கான்" என்றார்.
அவர் கூறியதைக் கேட்டதும் பதட்டமும் பயமும் அவளைத் தடுமாற வைத்தபோதும், ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நளாயினியின் எண்ணுக்கு உடனேயே அழைத்தாள். எடுத்ததும் "அக்கா.. அப்பா.. அப்பாவுக்கு என்னக்கா? எந்தக் கொஸ்பிடல் போயிருக்கிங்க.... நான் உடனே வாறன்” என்றாள்.
நளாயினி வைத்தியசாலை விவரம் கூறியதும் ஸ்ரவனை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து கொள்ளுமாறு கனகா பாட்டியிடம் கேட்டு கொண்டவள், உடனேயே தன் ஸ்கூட்டியில் வைத்தியசாலைக்கு விரைந்தாள்.
அங்கே சென்று தன் தந்தையை அனுமதித்திருந்த அறையை அடைந்தபோது வெளியில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த சரோஜாவைத்தான் கண்டாள். தன் முகத்தை கைகளில் புதைத்து விம்மிக் கொண்டிருந்தார். நளாயினியைக் காணவில்லை.
தன் தாயின் அருகே சென்றவள் அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவரின் கைகளைப் பிடித்து "அம்மா.... அப்பா எங்கம்மா...? என்னம்மா நடந்திச்சு..." என்று கேட்டாள். அவளைக் கண்டதும் கட்டியணைத்து அழத் தொடங்கிவிட்டார். சிறுபிள்ளை போல் அழுத தாயின் தோளைத் தட்டியவாறு "அப்பாவுக்கு ஒன்றுமில்லைம்மா… இப்போ சுகமாகிடுவார்.... ஆனால்.....". அதற்குமேல் பேசமுடியாது அழுகை அவளைத் தடுத்தது. இரும்புப் பெண்மணி, ஹிட்லர் என்று பட்டப் பெயர்கள் வைத்துத்தான் அபிராமி தன் தாயை அழைப்பாள். அவ்வளவுக்குத் திடமாக, எதற்கும் கலங்காமல் செயற்படும் சரோஜாவே, இன்று கலங்கி நிற்பதைக் கண்டவளுக்கு... தன்னையும் மீறி பெரும் பயம் ஆட்கொள்ள அவரிடம் எதுவும் பேசாது அணைத்தவாறே நளாயினியைக் கண்களால் தேடினாள்.
அப்போது வைத்தியர் ஒருவருடன் பேசியபடி வரும் தமக்கையைக் கண்டு தாயிடம் கூறிவிட்டு அவளிடம் விரைந்தாள். அருகில் வந்ததும் தான் வைத்தியரின் முகத்தை பார்த்தாள். பாலாதான் நளாயினியுடன் பேசியபடி வந்தார். அவளைக் கண்டதும் அருகில் வந்து அபிராமியின் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தவர் "எதுவும் யோசிக்காதம்மா..... அப்பாவுக்கு இப்போ எந்த ப்ராப்ளமும் இல்ல. மருந்தின் பலனால் கொஞ்சம் தூங்குறார். நான் பார்த்துக்கிறன்....." என்றுவிட்டு நளாயினியிடமும்
“ஓகேம்மா.. கொஞ்சம் கவனமாயிருந்தால் எந்த பிரச்சனையும் உங்க அப்பாவை அண்டாது. அப்பா எழுந்ததும் அம்மாவை கூட்டிச் சென்று பேச வைம்மா. பாவம் அவர் தான் ரொம்ப கலங்கிட்டார்” என்றவர் வேறு நோயாளியைப் பார்க்கப் போவதாகக் கூறிச் சென்றார்.
நளாயினியிடம் அப்பாவுக்கு திடீரென என்ன நடந்தது என கேட்டாள்.
“அப்பா இன்று நேரத்துக்கே வீட்டுக்கு வந்திட்டார். காலேஜில் இருந்து வரும்போதே சோர்ந்து போய்தான் வந்தார். மயக்கமாக இருக்கு கொஞ்சம் தூங்க போறேன் என்று சொல்லிவிட்டு படுத்தார். கொஞ்ச நேரத்தில் மூச்சு விட முடியாமல் கஸ்ரபட்டார். உடனே நாங்க கொஸ்பிடல் கூட்டி வந்துட்டம். வரும் வழியில நெஞ்சு வலியால் துடிச்சுக் கொண்டும் இருந்தார். இது அவங்க கொஸ்பிடல் என்று இங்க வந்ததும்தான் தெரியும். அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் செய்ததும் மாப்பிள்ளையோட அப்பாதான். அப்பாவுக்கு மைல்ட் அட்டாக் வந்திருக்கு..." என்றாள். அதைக் கேட்டதும் மனம் கலங்கியவள் அழத் தொடங்கினாள்
"ஸ்ஸ் அழாதடி.. நீ அழுதால் அதைப் பார்த்து அம்மா இன்னும் பயந்திடுவார். இப்போ அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது. இன்னும் கொஞ்ச
நேரத்தில் அப்பாவைப் பார்க்கலாமாம். வா.. அம்மாகிட்ட போவோம்" என்று விட்டு தாயிடம் சென்று இருவரும் அமர்ந்தனர்.
சற்று நேரத்தில் குமார் கண்விழிக்கவும் மூவரும் உள்ளே சென்று அவரைப் பார்த்தனர். "பயந்திற்றிங்களா...? எனக்கு இப்போ ஒன்றுமில்லட.. " என்ற குமார் சரோஜாவின் கைகளைப் பிடித்து ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார். "சரோ... என்னம்மா நீ பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்து, தைரியம் சொல்ல வேண்டிய நீயே இப்படிக் அழலாமா...? என் சரோவுக்கு அழத் தெரியும் என்று எனக்கு இப்போதான் தெரியுது எனக்கு எதுவுமே இல்ல. சின்னதா ஒரு வலி வந்திச்சு.. அவ்வளவு தான். சரோவை அழ வைக்கணும்னா நான் இப்படி வந்து படுத்திற்றா போதும் போல" என்றார். மகள்கள் இருவரும் அதிர்ந்து போய் “அப்பா..” என்று குரல் எழுப்பினர். சரோஜா அவரது வாயைத் தனது கையினால் பொத்தி,
“என்னங்க நீங்க இப்படி அபசகுணமா பேசுறிங்க..” என்று அழுதார்.
சிரித்துவிட்டு “உங்களையெல்லாம் விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் போகமாட்டேன்” என்றார்.
மறுநாள் குமாரை வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். அன்று அபிராமி அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தாள். தந்தையுடனேயே மதியம் வரை இருந்தவள், பிற்பகலில் தன் அறையில் அமர்ந்து பத்திரிகைக்கான கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தாள். ஏனைய மூவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஸ்ரவன் தன் விளையாட்டுப் பொருள்களுடன் ஐக்கியமாகி இருந்தான்.
உள்ளே எழுதிக்கொண்டு இருந்தவள் வெளியில் தன் பெயர் அடிபடவும் என்னவாக இருக்கும் என்று காது கொடுத்து கேட்டாள்.
"என்ன சரோ இன்னமும் உன் பயம் போகலையா? எனக்கு இப்போ ஒன்றுமில்லை. குட்டிமாவின் கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தால்தான் எனக்கு நிம்மதி..." என்றார் குமார்.
"எதைப்பற்றியும் ஜோசிக்காதிங்க... எல்லாம் நல்லபடியாகவே முடியும்." என்றார் சரோஜா.
"இந்த மாப்பிள்ளையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நாம் தேடினாலும் இப்படி ஒரு சம்பந்தம் கிடைச்சிருக்குமா? ராஜா கிட்ட சும்மாதான் சொல்லி வைச்சிருந்தேன். நல்ல பையனாயிருந்தா சொல்லுப்பா என்று. அவன் வைஃபின் சொந்தக்காரராம். அதுதான் அவனே முன்னின்று பேசி முடிப்பான். நான் தெரிஞ்சவங்க கிட்ட விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்ல சம்பந்தம். அவங்க ஃபேமிலியிலிருக்கிற எல்லோருமே தங்கமானவங்கதான்... நம்ம குட்டிமா அங்க எந்தக் குறையுமில்லாம சந்தோசமாய் இருப்பாள். எந்தத் தடையுமில்லாம இந்த கல்யாணம் நடந்தால் அதுவே எனக்கு பெரும் நிம்மதியைத் தரும்..." என்றார் குமார்.
“எந்தப் பிரச்சினையும் வராதப்பா... நம்ம அபிராமிக்கு பொருத்தமான மாப்பிள்ளைதான். எந்தக் குழப்பமும் இல்லாமல் கல்யாணம் நல்லபடியாக நடக்கும்... நீங்க அதிகமா யோசிக்காதிங்க உங்க உடம்புக்கு நல்லதில்ல" என்றாள் நளாயினி.
இவர்கள் பேசுவதைப் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி எழுதுவதை நிறுத்தி விட்டு பெரும் யோசனையில் ஆழ்ந்தாள். தன் தந்தையின் உடல் நிலை பாதிக்கும் வகையில் தான் எந்த முடிவையும் இப்போது எடுக்கவும் முடியாது... அப்பாவின் ஆசை நான் அந்த வீட்டிற்கு மருமகளாய் போவது. ஆனால் அவரோ இந்தக் கல்யாணத்தையே நிறுத்திவிடச் சொல்கிறார்... நான் என்னதான் செய்வது..... என்று செய்வதறியாது பெரும் தவிப்போடு இருந்தாள்.
தமக்கை இன்று காலையில் கூறிய விடயமும் பெரும் பயத்தையே தோற்றுவித்திருந்தது. குமாரின் இதயம் மிகவும் பலவீனமாய் இருப்பதால் அதிர்ச்சியான விடயம் எதுவும் அவரைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமாம். மீறினால் இன்னுமொரு அட்டாக்கை அவரது இதயம் தாங்காதாம்.
ஒரு வாரமாக தவிப்போடு யோசித்தவள் தன் தந்தைக்காக எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவோடு கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள்.
நிச்சயதார்த்தம் மிக எளிமையான முறையில் வீட்டிலேயே நடைபெற்றது. அவள் மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அது அவள் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. தமிழினியனோ அவளை ஒரு முறைப்போடு பார்த்துக்கொண்டு இருந்தான். இருவரும் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் "இப்பவும் உனக்கு நல்ல சந்தர்ப்பம் அபி. என்னைப் பிடிக்கவில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் சொல்லி விடு" என்றான் தமிழினியன். அபிராமி எதுவும் கூறாது குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.
பதட்டத்தில் அவன் தன்னை அபி என்று அழைத்ததைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.
இன்னும் இரண்டு வார

த்தில் திருமணம் என்று நாளும் குறிக்கப்பட்டது.