அந்த பிருந்தாவனம் கல்யாண மண்டபமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அந்த மண்டபம் முழுவதும் பூக்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. பார்ப்பவர் கண்களை அந்த அலங்காரம் கவர்ந்திழுத்தது. மண்டபம் உறவினர், நண்பர்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே கலகலவென பேசிச் சிரித்தபடி இருந்தனர்.
எல்லோரையும் விட மிக மிக மகிழ்ச்சியாக ஓடியாடி வந்தவர்களை வரவேற்றும் வேலைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணித்துக் கொண்டும் ஒரிடத்தில் நில்லாமல் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் சரோஜா.
பாலா தம்பதியினர் மண்டப வாசலில் நின்று வந்த விருந்தினரை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
குமார் சமையல்கூடத்தில் சாப்பாட்டு ஒழுங்குகள் சரியாக நடைபெறுகின்றதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
பெற்றோரின் சந்தோசத்தையும் உற்சாகத்தையும் கண்ணுற்ற அபிராமிக்கு தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என தோன்றியது. ‘என்னைப் பிடிக்காமல் தாலி கட்டுபவன் நிச்சயம் என் கூட சந்தோசமாக வாழப் போறதில்லை. என் விதி அனுபவிப்போம்' என்று பல யோசனைகளில் மூழ்கியிருந்தாள்.
வேறு ஒரு பயமும் அவளை இப்போது பாடாய் படுத்தியது. அது குறித்து அவள் யோசிக்கும் போது அறைக்குள் நுழைந்த நளாயினி அவள் தலை அலங்காரம் செய்யாமல் இருந்த கோலத்தைப் பார்த்ததும்
“அடியே இன்னும் நீ ரெடியாகலையா? எங்க இந்த சரஸ்வதி. அவள்தானே உனக்கு மேக்கப் போடுறன் என்று அமர்க்களப்படுத்தினாள்”
“அக்கா.. நான்தான் எனக்கு தாகமாயிருக்கு. ஜூஸ் எடுத்து வா என்று அனுப்பினன். இப்போ வந்திடுவாள். இன்னும் டைம் இருக்கு தானே”
“எங்கடி டைம் இருக்கு. மாப்பிள்ளை மணமேடை வந்து உட்கார்ந்தாச்சு. அடுத்து பொண்ணக் கூப்பிடுவாங்க. நீ இப்படி இருக்கியே”
அப்போது கையில் ஜூசுடன் உள்ளே வந்த சரஸ்வதி
“அக்கா.. கூல் கூல்.. ஒரு ஃபைவ் மினிட்ஸில் ரெடியாயிடுவாள். டோன்ட் வொர்ரி” என்றாள்.
அபிராமிக்கு தமக்கை சொன்ன தகவலால் பெருமளவு நிம்மதி உண்டானது.
இவ்வளவு தூரம் வந்தும் நான் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழினியன் கடைசி நேரத்தில் முடிவெடுத்து கல்யாணத்தை நிறுத்தி விடுவானோ என்று ஒரு பயமும் இருந்தது. அதனால் தந்தைக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று தவித்தாள். ஆனால், அவன் மணமேடை வந்து அமர்ந்து சடங்குகளை நடத்துகின்றான் எனவும் அப்பாடா என்று இருந்தது.
மணமேடை வந்து அமர்ந்தவள் கடைக்கண்ணால் தன்னவனைப் பார்த்தாள். பட்டு வேட்டி சட்டையில் ரோஜா மாலை அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவள் பார்த்தபோது அவனும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால், அவனது பார்வையில் இருந்தது. எதனையும் கண்டுபிடிக்க கொள்ள முடியாமல் அபிராமிக்கு மனதினுள் குளிர் பரவியது. தலையைக் குனிந்து அமர்ந்து விட்டாள்.
அவள் மரூன் நிறத்தில் தங்க சரிகை இழையோடிய பட்டுடுத்தி, அலங்கரித்ததில் மிக அழகாக இருந்தாள். இருவரது பொருத்தமும் பாந்தமாக அமைந்ததில் இரு பெற்றோருக்கும் பரம திருப்தியானது.
மெல்லப் பிறர் அறியாமல் மீண்டும் கடைக்கண்ணால் அவனது முகத்தை ஏறிட்டாள். அவனது முகத்தில் எந்தவித உணர்வையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. கோபம், எரிச்சல், வெறுப்பு என எந்தவித உணர்வும் அவன் முகத்தில் இல்லை. சூழவிருந்த உறவினர், நண்பர்களுக்காகத் தன் முகத்தை இயல்பாக வைத்திருக்கிறான் போலும் என சிந்தித்தபடி.... தன் உதடுகளில் புன்னகை மாறாமல் காத்து, திருமணச் சடங்குகளில் கலந்து கொண்டாள்.
திடீரென அவள் காதுக்கருகில் கேட்ட குரலில் சட்டெனத் தடுமாறிப் போனாள். அவனேதான்.. ஐயர் கூறிய சடங்குகளை ஒழுங்காகச் செய்வது போல் பாவ்லா செய்துகொண்டு அவள் காதருகில் குனிந்து எதுவோ கூறினான். ஆனால் அதனை சரிவரக் கேட்க முடியாமல் ஐயர் இடைபகுந்து ஏதோ மந்திரத்தை உச்சரிக்க சொல்லவும் அவன் அதில் சிரத்தையானான்.
மக்கள வாத்தியங்கள் முழங்க, ஐயர் கெட்டிமேளம்.... கெட்டிமேளம்.... என்று உரத்த குரலில் கூறியபடி தாலியைத் தூக்கி சூழ இருந்தவர்களிடம் காட்டிவிட்டு அவனின் கையில் கொடுத்தார்.
தாலியைக் கையில் வாங்கியதும் அவன் கண்களில் ஒருவித பளபளப்பு தோன்றி மறைந்தது. கைகளிலும் சிறு நடுக்கம் ஏற்பட்டது. தன் அருகில் அமர்ந்திருந்தவளை கண்கொட்டாமல் சில நொடி உற்றுப் பார்த்தான். அப்போது மணமகள் பின்னால் நின்றிருந்த சாவித்திரி "அண்ணியை அப்புறம் ரசிக்கலாம் அண்ணா.... இப்ப தாலியைக் கட்டுங்க..." என்றாள். அதைக் கேட்டதும் மேடையில் மணமக்கள் அருகில் நின்றிருந்தவர்கள் களுக்கெனச் சிரித்தனர்.
தன்னை நிதானப்படுத்திய தமிழினியன் பெண்ணவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன்னவள் ஆக்கிக்கொண்டான். எந்தவித தங்கு தடையுமின்றி திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
அவனது கைக்குள் தன் கையை வைத்து தாரை வார்த்து கொடுக்கும் போதும், மங்கல நாண் பூட்டி, பொட்டிடும்போதும் அவனது கைகள் தன் மேனியைத் தீண்டிய போது ஒரு மெல்லிய பரவசம் தன்னுள் படர்வதை உணர்ந்தாள் பேதையவள்.
தமிழினியன் ஆத்திரப்படுவானோ...? சபையில் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறிவிடுவானோ...? சபை நடுவே தன் பெற்றோர் அசிங்கப்பட நேரிடுமோ...? என்று அபிராமி பயந்தது போல எதுவும் நடைபெறாததும், அவன் சடங்குகளை இயல்பாகச் செய்ததும் அவளுக்குப் பெரும் ஆறுதலைத் தந்தன.
திருமணத்தன்றே வரவேற்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லா நிகழ்விலும் தனது பெற்றோர் பெரும் குதூகலத்துடன் ஓடியாடி வேலை செய்வதைப் பார்த்தாள். அதிலும் தன் தந்தையின் முகத்தில் இருந்த நிம்மதியும் சந்தோஷமும் அபிராமிக்கு போதும் என்று ஆனது.
தன் வாழ்வில் இனிவரும் காலங்களில் இந்தத் திருமணத்தால் எந்தப் பிரச்சினை வந்தாலும் பெற்றோரின் காதுக்கு செல்லவிடாமல் தானே சமாளிக்க வேண்டும் என்று உறுதியும் எடுத்துக் கொண்டாள்.
அவளது பார்வையையும் முகத்தில் தோன்றிய நிம்மதியையும் அருகிலிருந்து தன்னவன் அவதானிப்பதைப் பேதையவள் சொற்ப நேரம் மறந்துவிட்டாள். அப்போது காதருகே குனிந்தவன் "நீ நினைத்ததை சாதித்துவிட்டதாகப் பெருமையில் பூரித்திருக்கிறாயா...? இனித்தான் இருக்கு உனக்கு... ஏன் இவனைக் கல்யாணம் செய்தோம் என்று தினந்தினம் வேதனைப்படப் போகிறாய்...." என்று கிசுகசுக்கும் குரலில், ஆனால் உறுதியாகக் கூறினான் தமிழினியன்.
அவன் கூறுவதைக் கேட்டதும் உள்மனதில் ஏற்பட்ட நடுக்கத்தை மறைத்து, அவனை நோக்கி அழகிய புன்னகை ஒன்றை சிந்திவிட்டு விடைபெற வந்த விருந்தினர்களை உபசாரமாகப் பேசி வழியனுப்பினாள். அவளது புன்னகை அவனைச் சிறிது ஆட்டம் காணவே வைத்தது.
அங்கே பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வந்து சேர்ந்தது தமிழினியின் நண்பர்கள் படை.
அதில் ஒருவன் “டே மச்சான்.. எப்பவும் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுகிறார் நானும் நீ இப்படியே சந்நியாசம் போயிடுவியோ என்று ரொம்பப் பயந்திட்டேன்டா”
“ஆமாடா, நம்ம பட்ச்சிலேயே லாஸ்ட்டா மரி பண்ணுறது நீதான்டா” என்றான் இன்னுமொருவன்.
அதில் இருந்த ஒருத்தி “ஆனால் காயூதான்.. “ என்று எதையோ சொல்ல வரவும் முதலில் பேசியவன் அவளது கையை யாரும் அறியாமல் கிள்ளினான். உடனேயே அவள் அப்பேச்சை விடுத்து “ நீங்க ரொம்ப அழகாயிருக்கிங்க என்றாள். கையைக் கிள்ளியவன் தமிழினியனின் வலது கையைப் பிடித்து அவளது கையில் வைத்து “எங்க கண்ணான இனியனையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். அவன் கண்கலங்காம நீங்க தான் பார்த்துக்கணும்” என்று இராகமாக இழுத்தான்.
எல்லோருமே கலகலப்பாக ப தமிழினியன் அவர்களை அறிமுகப்படுத்தினான்.லக்ஷ்மன், ஈசன், ராஜ், அனிதா, வேணு என தன் நண்பர்களை அறிமுகப்படுத்தினான். எல்லோரிடமும் சகஜமாகப் பேசிய அபிராமியின் மனதிலோ ஓர் உறுத்தல் இருந்தது. காயூ.. என்று யாரையோ குறிப்பிட்டதும், அதை சொல்லவிடாமல் கையைக் கிள்ளியதையும் கவனித்தவள் சற்று உறுத்த யோசித்தாள். ஆனால், அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் அடுத்து உறவினர்களின் வரவு தடுத்தது.
வரவேற்பு வைபவம் முடிவுற இரவு ஒன்பது மணியாகிவிட்டது. தன் வீட்டினரிடம் விடைபெற்றுக்கொண்டு தன் புகுந்தவீடு செல்ல ஆயத்தமானாள் அபிராமி.
பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கி விடைபெறும் போது அவர்கள் கலங்குவதைக் கண்டதும் அபிராமிக்கும் தன்னை மீறி அழுகை வந்தது. அருகில் நின்ற அவளது கணவனோ அவள் கலங்குவதைக் கண்டும் எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான். தந்தையைக் கட்டியணைத்தவள் வாய்விட்டு அழுதாள். அவள் எதை நினைத்து அழுகிறாள் என்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம். பக்கத்தில் நின்றிருந்த சரோஜாவும் நளாயினியும் கூட அழுதனர். அருகில் வந்த நிலா ஆறுதலாய் அவளின் தோளைத் தட்டி "பக்கத்தில் தானே உன் அம்மா வீடு... நினைத்தால் போய் பார்த்து விட்டு வரலாம். அவர்களும் அடிக்கடி உன்னை வந்து பார்ப்பார்கள்" என்றார். அவரின் வார்த்தைகள் அபிராமிக்கு சற்று ஆறுதலைத் தந்தன.
பெற்றோரிடம் விடைபெற்றபின் தன் காலைக் கட்டியபடி "சித்தி...." என்று அழைத்த ஸ்ரவனைத் தூக்கியணைத்து முத்தமிட்டாள். நளாயினியிடம் "அக்கா... அப்பாவையும் அம்மாவையும் நீதான் பார்த்துக்கணும்... அப்பாவின் கெல்த் கண்டிஸனைக் கவனமாகப் பார்" என்று கூறி அவளிடமும் விடை பெற்றாள். நளாயினியும் கலங்கிய கண்களுடன் விடைகொடுத்தாள்.
கணவனுடன் காரிலேறி தன் புது வாழ்க்கையை எதிர்கொள்ள புகுந்தவீடு நோக்கி பயணமானாள் அபிராமி.
அந்தப் புதுவாழ்வு அவளுக்கு எதைத் தரக் காத்திருக்கிறதோ...