எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 17

Lufa Novels

Moderator

சக்கரை தழுவிய நொடியல்லவா!


அத்தியாயம் 17


மறுநாள் காலையில் எழுந்தவன் முதலில் பார்த்தது தன்னருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவன் தாராவைத் தான். கைகளால் கன்னத்தைத் தாங்கியபடி அவனைப் பார்த்தவாறே படுத்திருந்தாள். சிறிது நேரம் அவளையே பார்த்தவன் தலையை உலுப்பி எழுந்தான்.


“மாயக்காரி.. பார்த்தாலே வசியம் பண்ணிடுறா” என முணுமுணுத்துக் கொண்டே எழுந்து குளியலறைக்கு சென்றான். தண்ணீர் சத்தத்தில் விழிப்பு வர எழுந்து அமர்ந்தாள் மதுதாரா.


நேற்று முழுக்க நடந்த நிகழ்வின் காரணமாக அழுதபடி தூங்கியவளுக்கு காலை எழும்பும் போதே தலைவலியோடு தான் அன்றையபொழுது விடிந்தது. கைகளால் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள் அவன் பார்க்கும்போது.


‘என்ன செய்கிறது?’ எனக் கேட்கத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தியபடி அவளைப் பார்த்தவாறே வெளியே சென்றவன் திரும்பி வரும்போது கையில் காபியுடன் ஒரு மாத்திரையையும் கொண்டுவந்தான். அவன் வந்த நேரம் அவள் குளித்துக்கொண்டிருந்தாள்.


காபியை மேஜையில் வைத்து மூடி அங்கு மாத்திரையையும் வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டான். குளித்து முடித்து வந்தவள் பார்த்தது அவளுக்கான காபியையும், மாத்திரையையும். இதழினோரம் புன்னகையுடன் காபியைக் குடித்து மாத்திரையையும் போட்டு அதை வைக்க அடுப்படிக்கு சென்றாள்.


ஆனந்தி “மஹாராணிக்கு காபி கலக்க முடியாதோ? அத கூட நாந்தேன் செஞ்சு தரனுமோ? எம்புள்ளையவுட்டு என்னாண்ட வேலை வாங்குறயா? இனி உனக்குத் தேவைனா நீயே செஞ்சிக்கனும். நான் ஒன்னியும் உவ்வூட்டு வேலைக்காரி இல்ல” எனப் பாத்திரத்தை நங்கு நங்குனு போட்டார்.


இவள் காபி டம்ளரை கழுவ செல்ல அங்குப் பாத்திரத்தைக் குவித்து வைத்திருந்தாள் ஆனந்தி. ‘என்ன இவ்ளோ பாத்திரம் இருக்கு.. டம்ளர மட்டும் கழுவவா? இல்ல மொத்தத்தையும் கழுவனுமா?’ என யோசிக்க,


“இன்னா.. சொன்னாத்தே வேலை செய்யனுமோ? திங்கிற சோத்துக்கு அத்தியாவது செய். கீளீனா கழுவி வைக்கனும்”


“சரி அத்தை” எனக்கூறி அத்தனையும் கழுவி வைக்க, காலை வேலைக்கான சமையலை தானே முடித்தார் ஆனந்தி.


“இந்தாடி இத அல்லாத்தையும் எடுத்து அந்த டேபிள்ல வச்சிப்போட்டு, சித்தார்த்து மாடிக்குப் போனான் அவன போய்ச் சாப்பிட கூட்டியா”


“சரிங்க அத்தை” என அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு மாடிக்குச் செல்ல அவனோ காலையில் உடற்பயிற்சி செய்து முடித்து, சுவற்றில் கையை ஊண்டி வீட்டின் பின்புறத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவள் கொலுசுச் சத்தத்தை வைத்தே அவள் வருகிறாளெனத் தெரிந்தும் திரும்பாமல் நின்றிருந்தான்.


‘எவ்ளோ நாள் தான் நீ மூஞ்சை திருப்புவனு பார்க்குறேன். காலையில காபி, மாத்திரை எல்லாம் குடுக்க தெரியுது, ஆனா பாசமா ஒரு வார்த்தை பேசுறியா? இந்த மாத்திரை செய்ற வேலைய உன்னோட ஒத்த வார்த்தை செஞ்சிருக்கும். ஆனாலும் வெடிமுத்து ரொம்ப ஸ்ட்ரிட் பா’ என மனதில் நினைத்தபடி மெல்ல அவனை நோக்கி வந்தாள்.


“க்கூம்” எனச் சத்தம் கொடுக்க, அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. மெதுவாக அவள் கைகளை அவன் இடையை உரசியவாறு கொண்டு சென்று வயிற்றோடு இறுக்கி அணைத்து அவன் முதுகில் முகத்தைப் பதித்தாள்.


அவனுக்கோ அவளது அணைப்பை தடுப்பதற்கு மனமும் இல்லை, ஏற்பதற்கு அவன் கோபம் விடவும் இல்லை. கண்களை இறுக மூடி, சுவற்றை பிடித்திருந்த பிடியில் இறுக்கத்தைக் கூட்டினான்.


“நகரு” என அழுத்தமாகக் கூற, மெல்ல அவனிடமிருந்து விலகியவள், அவனைத் தன்னை நோக்கி வம்படியாகத் திருப்பினாள்.


அவனோ அவளை முறைக்க, அவன் கண்களைப் பார்த்தவாறே “ஐ லவ் யூ” என இத்தனை வருடக்காதலைக் கூறி இறுக அணைத்து அவன் நெஞ்சில் முத்தம் பதித்தாள். ஆனந்தத்தில் மூச்சடைத்தது அவனுக்கு.


இந்தத் தருணம் அவர்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது. காதல் கொண்ட இரு உள்ளங்கள் தங்களின் அன்பை வார்த்தையால் பரிமாறுவது என்பது அவர்களின் வாழ்விலேயே ஒரு முக்கியமான நிகழ்வல்லவா!


அவன் நினைக்கவே இல்லை. அவள் இப்படி அதிரடியாகத் தன் காதலை தெரிவிப்பாளென. இந்த நொடி அவன் வாழ்வில் பொக்கிஷமான நொடியல்லவா? அதைத் தன் கோபத்தால் கெடுக்க மனம்வரவில்லை.


கைகள் தானாக அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்தது. அவளுக்கு அவனிடமிருந்து பதில் தேவையே இல்லையே. அவனுடைய காதலின் ஆழம் தான் அவளுக்கே தெரியுமே. தன்னை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் அவளைக் கட்டிக் கொண்டு வந்ததே அவன் காதலினால் தானே! ஆனாலும் அவனது அந்த இறுக்கமே அவளுக்கான பதிலாகத் தான் இருந்தது.


இருவரும் எதுவுமே பேசவில்லை. இறுகிய அணைப்பு, அவன் மார்பில் உணரும் அவள் கண்ணீரின் ஈரப்பதம் அனைத்துமே பொக்கிஷங்களாக அவர்களது நினைவடுக்கில் சேர்ந்து கொண்டிருந்தது. மெல்ல அவளைத் தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.


“இத சொல்ல உனக்கு இத்தனை வருஷம் தேவைப்பட்டுச்சா?” என அவள் கன்னங்களை வருடியபடியே கேட்க, அவளோ அவன் முகத்தை ஆராய்ந்த படி நின்றாள். அவன் அதைக் கோபமாகக் கேட்கிறானோவென ஆனால் அவன் முகத்தில் கோபத்தின் சாயல் கொஞ்சமும் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை கோபமாக இருந்தவன் இவனா என நினைக்கும் அளவுக்கு அவன் முகம் கனிந்திருந்தது.


அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியிருந்தான் சித்தார்த். “என்னால முடியல. என் கோபத்தை கூட இழுத்து பிடிக்க முடியல. இப்போ இந்த நிமிஷம் நீ எனக்கு வேணும்னு தோனுது. எடுத்துக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனாலும் உன்கிட்ட கேட்டு நிக்கிறேன். எடுத்துக்கவா? எனக்கே எனக்கா உன்னை எடுத்துக்கவா?” எனக் கேட்டே விட்டான்.


அவன் கோபத்தை எல்லாம் அவளின் ஒத்த வார்த்தை சரித்துவிட்டது. ஒரே ஒரு வார்த்தையில் அவனது கோபம் அனைத்தும் கரைந்து போய் அவளிடம் கரைய, குழைய, அவளுள் மூழ்கத் தயாராகிவிட்டான் அவள் சித்தத்து.


அவளோ அவன் கண்களைப் பார்த்துக்கொண்டே தன் கால் விரல்களால் எக்கி அவன் இதழில் தன் இதழைப் பதித்தாள். அவன் கண்கள் வெளிவந்துவிடும் போல் விரிந்தது, அவளது கண்கள் அவன் கண்களைப் பார்த்துக்கொண்டே மூடியது.


மூக்கும் மூக்கும் உரசிக்கொள்ள அவன் இதழ்தேனை பருகிக்கொண்டிருந்தாள் மது. கைகளை அவன் சிகைக்குள் புகுத்தி இறுக்கிக் கொண்டாள். எடுக்கவா எனக் கேட்டது அவன் ஆனால் இப்போது எடுத்துக் கொண்டிருப்பதோ அவள். மொட்டை மாடியில் அடிக்கும் வெயில் கூட இருவருக்கும் உறைக்கவில்லை.


உயிர் முழுதும் திரட்டி.. இதழ் மீது தீ மூட்டியே.. அணைத்திடவே அழைத்தேன்.. உன் இதழில் தேன் கொட்டியே..


முத்தம் முதல் முத்தம் அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு..


முத்தம் முதல் முத்தம் அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு..


முத்தம் முதல் முத்தம் அது எல்லை இல்லாத பரவசம் உணர்ந்திடு..


முத்தம் முதல் முத்தம் தரும் நாள் திருநாளடா..



கீழிருந்து இளங்கோ “சித்தார்த்து.. சித்தார்த்து” என அழைக்கும் சத்தத்தில் இருவரும் விலகினர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. இருவருமே தடுமாறி போய் நின்றனர். முதல் இதழ் சங்கமம் இருவருக்குமே. ஒருவர் சக்தியை மற்றவர் உறிஞ்சியது போல இருவரும் நிலை இல்லாமல் மிதப்பது போல இருந்தது. தட்டுத் தடுமாறி கீழே வந்துவிட்டனர்.


சாப்பாடு தயார் நிலையில் இருக்க, இளங்கோவும், சித்தார்த்தும் சாப்பிட அமற, இளங்கோ மதுவையும் அவர்களுடன் சாப்பிடக்கூற “ஊசி போட்டுட்டு சாப்பிட்டுக்கிறேன் மாமா” என யார் முகத்தையும் பார்க்காமல் அறைக்குள் புகுந்துகொண்டாள்.


மாடியில் நடந்ததை நினைத்து நினைத்துப் பார்க்கக் கன்னங்கள் எல்லாம் சிவந்துவிட்டது. அவனுக்கும் அதே நிலை தான். அவனுக்கும் தன்னை நிலைப்படுத்த அவகாசம் தேவைப்பட்டது. கூடத்திலிருந்த தொலைக்காட்சியை ஓடவிட்டு பார்த்துக்கொண்டிருந்தான்.


“மது எங்க?” எனக் கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தான் ஆதவன். இத்தனை நேரமும் கோபத்தை மறந்து அவன் காதலில் மிதந்து கொண்டிருந்தவனுக்கு ஆதவனைப் பார்க்கவும், அவன் மது அருகில் மாலையுடன் நின்ற காட்சி நினைவுக்கு வர மறைந்திருந்த கோபம் மீண்டும் மேலெழுந்தது.


அவன் குடும்பத்தில் உள்ள அனைவரின் மேலுள்ள கோபத்தில் ஆதவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே நிற்க, “கேட்குறேன்ல மது எங்க?” என்றான் ஆதவன். கையைக் கட்டிக் கொண்டு நின்றவன் கண்களால் அவன் அறையைக் காட்ட, ஆதவன் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் மது.


“ஆது! என்னாச்சு? இங்க என்ன பண்ற? கிளம்பு ஆது” என்றாள் படபடப்பாக, இப்போது தான் தன் கணவன் இறங்கி வந்திருக்கிறான் மீண்டும் அவன் முருங்கைமரம் ஏறிவிடக்கூடாதே என்ற பயம்.


வந்தவளை பார்த்தவனுக்கு மூச்சடைத்தது. அவள் இரு கன்னங்களும் சிவந்திருந்தது கூடவே சித்தார்த் அவள் கன்னங்களைத் தாங்கியபோது இறுக்கி பிடித்ததிருந்த இடம் மேலும் சிவந்திருந்தது. இதழும் சிவந்து வீங்கியிருந்தது. பார்ப்பதற்கு சித்தார்த் அவளை அறைந்தது போல இருக்க,


“என்னடி கோலம் இது?” என அவளை அதிர்ந்து பார்த்தான் ஆதவன். அவனுக்கு நேற்று காலையில் தலையில் அடிப்பட்டிருந்ததும், இப்போது கன்னத்தில் கைவிரல், உதடு வீக்கம் எல்லாம் பார்க்கவும், அகிலா கூறியது போலச் சித்தார்த் அவளை அடித்திருக்கிறானென நினைத்துக் கத்த, மது முகத்தைப் பார்த்த சித்தார்த்க்கு வெட்கம் பிடிங்கி திங்க, பின்னந்தலையை கோதியவாறு அறைக்குள் நுழைந்து கொண்டான்.


“ஹலோ! உங்கள தான் அவள எதுக்கு அடிச்சீங்க?” எனக் கேட்டுக் கொண்டே ஆதவனும் அறைக்குள் நுழைய, அவன் பின்னால் மதுவும் வந்துவிட்டாள்.


“ஆது! அவர் எப்படா என்னை அடிச்சார்? ஏண்டா பிரச்சனை பண்ற? நான் நல்லாத்தான் இருக்கேன். சண்டை போடாம வீட்டுக்குக் கிளம்புடா”


“எது அடிக்கலயா? உன் இரண்டு கன்னத்துலயும் அவர் கைவிரல் பதிஞ்சி இருக்கு. உதடு வீங்கி இருக்கு. அடிக்கலனு பொய் சொல்றியா? நான் தான் தப்பு பண்ணிட்டேன் இவர் கூட இருந்தா சந்தோஷமா இருப்பனு தான் தாலிய அவர் கிட்ட குடுத்தேன் பாரு என்னைச் சொல்லனும். நீ இங்க இனி இருக்க வேணாம் வா” என மது கைகளைப் பிடித்து இழுக்க, அவள் பார்வை எல்லாம் சித்தார்த்திடம் அதுவும் காதலாக.


“உன் காதலுக்கு எல்லாம் இங்க மதிப்பே கிடையாது. வா” என இழுக்க, அவளோ வெட்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.


“என்னடி நான் இவ்ளோ பேசுறேன் நீ அவர பார்த்துச் சிரிச்சுட்டு, வெட்கம் வேற படுற” என நிதானிச்சவன், திரும்பிச் சித்தார்த்தைப் பார்க்க, அவனும் மதுவை பார்வையாலயே கபலீகரம் செய்துகொண்டிருந்தான், கைகளால் அவன் உதட்டைத் தடவியபடி.


‘இங்க ஒருத்தன் நின்னு கத்திட்டு இருக்கான், ஆனா இதுக ரெண்டும் என்ன ரொமாஸ்ஸா பார்த்துட்டு இருக்குங்க’ என நினைத்து இருவரையும் உத்து பார்க்க, மது உதடு போலவே சித்தார்த்தின் உதடும் வீங்கி இருந்தது. அதிர்ந்து மதுவைப் பார்க்க, அவளோ அதே காதல் பார்வையை சித்தார்த்தை நோக்கி வீசிக்கொண்டிருந்தாள்.


“சுத்தம்” எனக்கூறி மதுவின் கையை விட்டுவிட்டு கட்டிலில் பொத்தென அமர்ந்தான். “அம்மா தாயே! இந்தா உன் ப்ரிஷ்கிரிப்ஷன். மருந்து இன்னையோட முடிஞ்சிருமே. நாங்க வாங்கி கொடுத்தா உன் புருஷருக்கு ஆகாது அவர விட்டே வாங்கிக்கோ. அதான் காலங்காத்தல கொடுத்துட்டு போகலாம்னு ஓடி வந்தேன்” என மருந்துச் சீட்டை நீட்ட, அதை வாங்கிக் கொண்டான் சித்தார்த்.


ஆதவன் “வலியுது இரண்டு பேருக்கும் துடச்சிக்கோங்க. தலை எழுத்து எல்லாம். இனிமேலாவது சண்டையில்லாம இருங்க. முடிஞ்சா உன் புருஷர கூட்டிட்டு வீட்டுக்கு வா” என்று சித்தார்த்திடம் ஆரம்பித்து மதுவிடம் முடித்தான்.


சித்தார்த் “மன்னிச்சது அவள மட்டும் தான். உன்னைத் தவிற உங்க வீட்டு ஆளுங்க மேல உள்ள கோபம் இன்னும் அப்படியே தான் இருக்கு. அது குறையாது” என அழுத்தமாகக் கூற,


“சரி தான். நான் கிளம்புறேன் மது. பார்த்து இரு. நீ அங்க வா.. வராத.. அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வருவேன். எப்போ வேணாலும் வருவேன். அவளுக்கு எதாவது ஆச்சு அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்”


“தாராளமா உன் மதுவ பார்க்க வரலாம்” எனக்கூற, சித்தார்த்தை அணைத்துவிட்டுக் கிளம்பினான் ஆதவன்.


அவன் கிளம்பியதும், இருவருக்குமே ஒரு மாதிரி கூச்சமாக இருக்க, சித்தார்த்தோ தலையைக் கோதிக்கொண்டான். அவளோ என்ன செய்வது எனத் தெரியாமல் அலமாரியை திறந்து இல்லாத எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.


காலைவரை அவன் கோபமாக இருக்க, இவள் வலிய வலிய சென்று அவனிடம் பேசிய போதெல்லாம் வராத தயக்கம், படபடப்பு இப்போ இருவரும் முத்தமிட்டுக் கொண்ட பிறகு வந்தது. அதுவும் முதல்படியை தானே எடுத்துவைத்த கூச்சம் அவளைக் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.


அவளை அறியாதவனல்ல அவன், பிறந்ததிலிருந்து வளர்த்தவன். அவள்மீது தீராக்காதலுடன் இருப்பவனை அவளே வந்து தீண்டி, தூண்டி விட்டிருக்க கள்ளுண்ட வண்டாய் அவளை நோக்கி வந்தான்.


அவளோ இல்லாத இல்லாத பொருளைத் தேட, அவனோ அவள் பின்னால். அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்தருகில் பட்டு, வெற்றுத் தோலில் உறச, அவளுக்கோ மூச்சடைத்தது. அவனிடமிருந்து விலகித் தள்ளிச் சென்று மூச்செடுத்தாள்.


கஜினிமுகம்மது விடாது படை எடுத்தது போல மீண்டும் அவளருகே சென்று அவள் பின்னால் நின்றான். இம்முறை அவள் விலகாமல் இருக்க வேண்டி அவள் இரு தோள்களையும் பிடித்துக்கொண்டான். அவளை உரசும் அவன் மூச்சுக்காற்றும், அவன் கைகளின் சூடும் அவளை ஏதோ மாய உலகத்திற்குள் இழுத்து செல்ல, அந்த உணர்வு தாங்காமல் பின்னால் சரிந்து அவன் மார்பில் சாய்ந்துவிட்டாள்.


இருவருக்கும் இந்த நிமிடம் அவர்களுக்கான நிமிடமாகத் தோன்ற, அவனோ அவன் கைகளைத் தோளிலிருந்து மெல்ல கீழே நகர்த்திக்கொண்டே வந்தான். அவளுக்கோ கூச்சமும், மோகமும் ஒருசேர வர, உடம்பில் ஒருவித நடுக்கம். அவள் கைகளின் வழியே தன் கையை வழிநடத்தி இறக்கியவன், அவள் வயிற்றை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தான்.


அவள் வயிற்றில் அவன் கைப்பட்ட நொடி மின்சாரம் தான் பாய்ந்ததோ! வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்க, சட்டெனத் திரும்பி அவனைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் பதித்தாள். மீண்டும் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் முகத்தைக் கையில் ஏந்தி அவள் இதழில் இதழ் பதிக்கும் நேரம் அவனிடமிருந்து மீண்டும் விலகி ஓடிக் கட்டில் அருகே நின்றாள்.


அப்படியே விடுவானா அந்தக் கள்வன், மீண்டும் அவளருகில் செல்ல இம்முறை இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கும்படி எதிரெதிரே நிற்க, அவன் விழிவீச்சு தாங்க இயலாமல் பொத்தெனக் கட்டிலில் அமர்ந்தாள். அவனும் முட்டியிட்டு அவள் முன் அமற, அவளோ அவனை எதிர்கொள்ள முடியாமல் கட்டிலில் பின்நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாள்.


அவள் நகர நகர அவளது வழவழவென இருந்த கால்கள் அவன் கண்களுக்கு விருந்தாக, அவள் இரு கால்களையும் லாவகமாகப் பிடித்துக் கொண்டான். அவள் இரு பாதமும் இப்போது அவன் கைகளில் சிக்குண்டு இருந்தது. திருமணத்திற்கு கால்களுக்கு மெஹந்தி வைக்கபோனவளைத் தடுத்து இயற்கை மருதாணி வைத்திருந்தாள்.


அது நன்றாகச் சிவந்து அவள் வெந்நிற காலில் பளீச்சென இருந்து, அவன் கண்களைக் கவர்ந்தது. மெல்ல குனிந்து கால்களில் முத்தம்வைக்க, சரட்டென உருவிக்கொண்டாள் கால்களை. அவள் மேலும் கட்டிலில் பின்னேற, அவன் அவளை நோக்கி முன்னேறினான்.


அவன் பார்வை அவளை விட்டு அகலாமல் முன்னேற, அவளுக்கோ அவன் மோக பார்வையை எதிர்கொள்ளும் சக்தி இல்லாமல் உடலைக் குறுக்கி ஒருசாய்ந்து படுத்தே விட்டாள். அவள் பின்னால் வந்து படுத்தவன் அவளைத் தன்னை நோக்கித் திருப்ப, திரும்பியவள் அவனைக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் பதித்துக் கொண்டாள்.


அதன் பின் கூச்சமும், ஆடையும் பறந்தோட, இருவருக்குமான தனிமையான, அந்தரங்கமான நிகழ்வுகள் இனிதே அரங்கேற, அதற்குச் சாட்சியாய் நின்றது நகக்கீறல்களும், முத்தச்சத்தங்களும்.


ஞாபக பறவை ஓடுகள் உடைந்து வெளியே தாவி பறக்கிறதே!


நீயும் நானும் ஒன்றாய் திரிந்த நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே!


ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும் தனிமை என்னை துரத்தியதே!


உன்னை காணும் நிமிடம் வரைக்கும் உடலே பொம்மையா கிடக்கிறதே!


இதயம் நொருங்குகிறேன்.. இதையே விரும்புகிறேன்..


இது போதும் பெண்ணே! இறப்பேனே கண்ணே!


ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்கை நிமிடத்தில் வாழ்ந்தேனோ!


இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா?


இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா?
 

Shamugasree

Well-known member
Nalla vela Sid ku Madhu mela iruntha kovam poiduchu. Ana ivan training kilambina ava enna Panna pora. Ava veetukum poga mudiyathu. Anandhi summavum irukathe
 

Lufa Novels

Moderator
Nalla vela Sid ku Madhu mela iruntha kovam poiduchu. Ana ivan training kilambina ava enna Panna pora. Ava veetukum poga mudiyathu. Anandhi summavum irukathe
அதான் பிரச்சனை.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு😒😒

Thank you so much ka🥰🥰
 

santhinagaraj

Well-known member
லவ்லி எபி 😍😍

ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலை சொல்லி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.

இவன் இதே சந்தோஷத்தோட ட்ரெய்னிங் போயிட்டு வா ஆனா மதுவோட நிலை அவ வீட்டுக்கும் போக முடியாது இந்த ஆனந்தி கொடுமையும் தாங்க முடியாமல் என்ன பண்ணப் போறாளோ 😔😔
 

Lufa Novels

Moderator
லவ்லி எபி 😍😍

ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலை சொல்லி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.

இவன் இதே சந்தோஷத்தோட ட்ரெய்னிங் போயிட்டு வா ஆனா மதுவோட நிலை அவ வீட்டுக்கும் போக முடியாது இந்த ஆனந்தி கொடுமையும் தாங்க முடியாமல் என்ன பண்ணப் போறாளோ 😔😔
கஷ்டம் தான். சமாளிப்பானு நினைக்குறேன் பார்க்கலாம் என்ன செய்ய போறானு…

Thank you so much sis🥰🥰
 

Mathykarthy

Well-known member
நைஸ் எபி 🥰🥰🥰🥰

ஆது நீ இன்னும் வளரனும் டா 😜😜😜

ஒருவழியா சித் கோபம் போயிடுச்சு 🤗
 
Top