கட்டிலில் இருந்தவாறே தூங்கிப் போயிருந்த தன் மனைவியை ஆசைதீரப் பார்த்துக்கொண்டு நின்றான் தமிழினியன். பார்க்க பார்க்க அவனுக்கு திகட்டவில்லை. அவளை இப்படித்தானே ரசிக்க முடிகின்றது. அவள் விழித்திருக்கும் நேரத்தில் எங்கே அவளை ரசிப்பது(யார் தடுத்தது).
'என் அபி அழகுதான். என்ன கொஞ்சம் பிடிவாதம்.. அதனால்தானே இங்கே வந்து கஸ்டப்படுகிறாள். அபிம்மா.. உன்னை நான் ரொம்ப கஸ்டப்படுத்துறன் என்று எனக்கு நல்லா புரியுது. ஆனால், என்னால் உன்னிடம் உரிமையாய் பழக முடியலடா. சாரிம்மா... என் கண்மணி நீ... உன்னை இப்படி நடத்தக் கூடாதுன்னுதான் இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று முடிவெடுத்தேன். தள்ளி நின்று நீ சந்தோசமாய் வாழ்வதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். நீதான்மா இந்த நிலைக்குக் காரணம். இப்போது அன்பை உனக்கு அளித்தால் நாளை ஒருவேளை.. நீ என்னைவிட்டு போக முடிவெடுத்தால் உனக்குத் தானேடா கஷ்டம்‘ என்று தனக்குத்தானே பேசியபடி அவளைப் பார்த்து நின்றான்.
அவள் தூக்கத்தில் தலையை சரிக்கவும் கழுத்து வலிக்க படுக்க வேண்டியிருந்தது. அதனைப் பார்த்ததும் கழுத்து தொங்காதவாறு பிடித்துக் கொண்டவன், மெல்ல அவளின் தூக்கம் கெடாத வண்ணம் படுக்கையில் சரித்துப் படுக்க வைத்தவன் போர்வையால் மூடி விட்டான். தான் படுக்கச் சென்றவன், ஏதோ தோன்றவும் திரும்பி அவளருகில் வந்தான். குழந்தை போல் தூங்கும் அவளது இரு கன்னங்களையும் மென்மையாகப் பற்றி நெற்றியில் முத்தம் ஒன்றைப் பதித்தான்.
சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டான். சோஃபாவில் கால்நீட்டிப் படுக்க முடியாது இரண்டு நாளாக சரியாகத் தூங்கவில்லை என்பதை யோசித்தவன், போர்வையை எடுத்து கட்டிலுக்கு அருகில் விரித்து விட்டு படுத்தான். நிலத்தில் படுத்து பழக்கமில்லாததால் உறக்கம் அவனைத் தூர நிறுத்தியது. புரண்டு புரண்டு படுத்தவனை நள்ளிரவிலேயே தூக்கம் அணைத்துக் கொண்டது.
மறுநாள் காலை சூரியன் எழுவதற்கு முன்னமே துயில் கலைந்து எழுந்தாள் அபிராமி. வழமைபோல 'சிவாயநம' சொல்லிவிட்டு பாத்ரூம் செல்ல கட்டிலிலிருந்து கீழே இறங்கினாள். காலுக்கடியில் எதுவோ இடறவும் பயத்தில் "அம்மாடி.." என்று கத்திக்கொண்டே காலைத் தூக்கி கட்டிலில் ஏறி விட்டாள். கண்களை மெல்லத் திறந்து கீழே பார்த்தாள். அங்கே தமிழினியன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். 'நல்லவேளை அவர் மீது விழவில்லை. அப்படி நடந்திருந்தால் அப்போதும் நான் வேண்டுமென்றே தன் மீது விழுந்தேன் என்று திட்டியிருப்பார். தப்பிச்சேனடா சாமி...' என்று மனதிற்குள் முணுமுணுத்தவள்,
அவன் கீழே படுத்திருப்பது மனசை உறுத்த நின்றாள்.
'தரையில் படுத்தேன் பழக்கமில்லாதவர். என்னால் இப்படி கஷ்டப்படுகின்றாரே. ஆனால், மேலே வந்து இவர் தாராளமாகப் படுக்கலாம். நான்கைந்து பேர் தாராளமாகப் படுக்கக்கூடிய இந்த பெட்டில் வந்து படுக்கலாம். ஆனால் மேலே வந்து படுக்குமாறு கூப்பிட்டால் அதிலும் குற்றம் சொல்லி என்னை திட்டுவார். ஏன் சும்மா கிடந்த சங்கை ஊதுவான்' என்று தனக்குத் தானே குட்டியும், மறு பக்கத்தால் இறங்கிச் சென்றாள்.
இவ்வாறு இவர்கள் இல்லற வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இரு வாரங்கள் கடந்துவிட்டன.
அபிராமிக்குத் தான் நேரத்தைக் கழிப்பது பெரும் சிரமமாக இருந்தது. எந்த வேலையும் இன்றி வீட்டில் இருப்பது மிகவும் சலிப்பாக இருந்தது. நிலாவுக்கு சமையலில் உதவி செய்வது மட்டுமே அவள் இப்போது செய்யும் வேலை. தோட்டத்திலாவது ஏதாவது வேலை செய்வோம் என்று அங்கு சென்றால் தோட்ட வேலைக்கென இருக்கும் வேலன் அவளை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை. அந்த வீட்டின் பின்னால் அமைந்துள்ள சிறிய வீட்டில் அவரும் அவர் மனைவியும் வசிக்கிறார்கள். ரேவதியம்மா போல் பாலாவின் தந்தை காலத்தில் இருந்தே அவரும் அந்த வீட்டில் வேலை செய்கிறார். ஊரிலிருக்கும் அவரது மகன் தங்களுடன் வந்து இருக்குமாறு பலமுறை அழைத்து விட்டான். ஆனால், தன்னுடைய இறுதி மூச்சுவரை இந்த வீட்டிலே தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கூறிவிட்டார்.
இப்போது சில மாதங்களாகத் தன் பேர்த்தியான பத்து வயது நிரம்பிய வதனாவை வரவழைத்து தங்கள் கூடவே வைத்துள்ளார்கள். அவர்களது மகன் மிகவும் வறுமையில் இருப்பதால் இங்கே அவளை அழைத்துக் கொண்டார்கள். பாலா அவளை நகரத்தின் சிறந்த பாடசாலையில் சேர்த்து விட்டுள்ளார்.
தோட்டத்திற்கு அபிராமி செல்லும் போது வேலன் அவளுடன் மிகுந்த பாசத்துடன் பழகுவார். அபிராமி அவரை வேலப்பா என்றே அழைப்பாள்.
அன்று மாலை அவர் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போதே அவள் அங்கே சென்றது. அவரோ அபிராமியை எந்த வேலையும் செய்ய விடாது மல்லிகைப் பந்தலின் கீழ் அமைக்கப்பட்டிருந்த சிமெந்து இருக்கையில் அமர வைத்துவிட்டு, அவளுடன் பேசிக் கொண்டே தன் வேலையைச் செய்தார்.
சிறிது நேரம் அவருடன் பேச்சிலேயே கழித்தாள் அபிராமி. அவர் வீட்டிலே வேலை செய்தாலும் பல்வேறு உலக விடயங்களையும் தெரிந்து வைத்திருந்தார். இவளுக்கும் அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததால் அவருடன் பேசியே பொழுதைப் போக்கினாள். சிறிது நேரத்தில் அங்கே வந்த வேலனின் மனைவி பார்வதி ஒரு தட்டில் அதிரசம் கொண்டு வந்தார். தயக்கத்துடனே அவளிடம் "எம்பேத்தி வதனா ஆசைப்பட்டாள் என்று செய்தேனம்மா... உங்களைப் பார்த்ததும் கொடுக்கத் தோணிச்சம்மா... தப்பா நினைக்காதிங்கம்மா." என்று தயக்கத்துடன் தட்டை அவளிடம் கொடுக்கத் தயக்கத்துடன் நின்றார்.
"என்னம்மா நீங்க, எனக்கு அதிரசம்னா ரொம்பப் பிடிக்கும். தாங்க" என்று அவரிடம் இருந்து தட்டை வாங்கி உண்ணத் தொடங்கினாள். "அப்படியே நிலாம்மாட குணம் உங்ககிட்டேயும் இருக்கம்மா."
"பார்வதியம்மா, உங்ககிட்ட நான் பல தடவை சொல்லிட்டேன். உங்க மகள் மாதிரி நான். வாங்க, போங்க என்று பேசாதிங்க."
"சரிம்மா நான் அப்படிப் பேசல. உன் குணத்துக்கு நீ குழந்தை குட்டியோட நூறு வருஷம் தீர்க்க சுமங்கலியாய் நல்லா இருப்ப தாயி.." என்று வாழ்த்தினார்.
அப்போது எதேச்சையாக தோட்டப் பக்கம் வந்த ஒரு உருவம் அவரின் வாழ்த்தைக் கேட்டு விட்டு உடல் விறைக்க, முகம் இருட்டடிக்க வீட்டிற்குள் திரும்பியது.
வேலையிலிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்த தமிழினியன், உடைமாற்றிவிட்டுக் கீழே இறங்கி வந்தான். தன் மனைவியை எங்கும் காணாது தாயிடம் வினவினான். அவள் பின்னால் தோட்டத்தில் இருப்பாள் என்று தாய் கூறவும் அங்கே அவளைத் தேடிச் சென்றான். அவள் மல்லிகைப் பந்தலின் கீழ் ஒரு தட்டுடன் அமர்ந்திருக்கக் கண்டான். அப்போதுதான் பார்வதி அம்மா அபிராமியை வாழ்த்திக் கொண்டு இருந்தார். அதைக் கேட்டதும் முகம் இருள வீட்டிற்குள் திரும்பி வந்தான்.
சிறிது நேரத்தின் பின் உள்ளே வந்த அபிராமி தன் கணவனைக் கண்டதும் மகிழ்ந்து அவனருகில் சென்றாள்.
"உங்களுக்கு டீ எடுத்திட்டு வரவா?" என்று கேட்டாள்.
தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன்
“வேண்டாம்” என்று உறுமலாகப் பதிலளித்தான்.
அவனது குரலில் வித்தியாசத்தை உணராமல்,
“அப்போ காஃபி..”
என்று சொல்லவும் நிமிர்ந்து அவளைப் பார்த்து தீவிழி விழித்தான்.
"உன்கிட்ட கேட்டேனா? உன் வேலை எதுவோ அதை மட்டும் பார்த்தால் போதும்" என்று வெடுக்கென பேசி விட்டு எழுந்து மாடிக்கு விறுவிறுவெனச் சென்று விட்டான்.
இதுவரை நாளும் தனித்திருக்கும் போது எப்படிப் பேசினாலும் அடுத்தவர் பார்வை படும் இடங்களில் அவன் சகஜமாகவே பேசுவான். அதிலும் யாராவது நின்றால் குழைந்தே பேசுவான். அந்தத் துணிவிலும் அங்கே வந்துகொண்டிருந்த நிலாவின் மனதைக் குளிர்விக்க தாங்கள் மனமொத்த தம்பதிகள் என்று பறைசாற்றவுமே வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவனிடம் அவள் பேசியது.
ஆனால் அவன் இப்படிச் சுள்ளென்று பதில் தந்துவிட்டு எழுந்து செல்லவும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போனாள். அதேநேரம் மகனுக்கு டீ எடுத்துக் கொண்டு வந்த நிலாவும் தன் மகன் பேசியதில் அதிர்ச்சியாகி நின்றார். ஏன் இவன் இந்த பொண்ணுமீது எரிந்து விழுந்துவிட்டு போறான் என்று யோசித்தவர்
அவன் பேச்சில் அதிர்ந்து போய் தலைகுனிந்தபடி நின்ற அபிராமியைக் கண்டதும் அவரின் மனம் பரிதவித்தது. அவள் அருகில் வந்தவர் "அபிம்மா அவன் வந்ததும் உன்னைத்தான் தேடினான். என்னிடம் வந்து கூடக் கேட்டான். அவன் தேடும் போது நீ இல்லாத கோபத்தில் அப்படிப் பேசிவிட்டான். நீ கவலைப்படாதம்மா. இந்தாம்மா இந்த டீயைக் கொண்டு போய் அவன்கிட்ட கொடும்மா" என்றார்.
தானும் அவரை சமாளிக்கும் எண்ணத்தில்
“ம்ம்.. அதுதான் அவரது கோபம் அத்தை. இப்போ என்னைக் கூப்பிட்டு பேசுவார் பாருங்க” என்றாள். அவரது மனம் ஓரளவு சமாதானம் அடைந்தது. அதனை முழுவதுமாக திருப்திப் படுத்தும் வகையில் அவன் மேலேயிருந்து “அபி…” என்று அழைக்கும் குரல் கேட்டது. அதை சாதகமாக எடுத்தவள் “பார்த்திங்களா அத்தை நான் சொல்லல. அவர் கோபமெல்லாம் கொஞ்ச நேரம் தான்” என்று சிரித்தாள்.
“சரி சரி” என்றவர் அந்த இடத்தை விட்டு அகலவும் அவர் கையில் தந்த டீ கப்புடன் நின்று என்ன செய்வதென யோசித்தாள். அப்போது அங்கே சோஃபாவில் கிடந்த அலைபேசி சிணுங்கியது. அது தமிழினியனது அதனை அவன் அங்கேயே வைத்து விட்டுச் சென்று விட்டான். அதற்குத் தான் அழைக்கிறான் போலும் என நினைத்து அதனை எடுத்துச் சென்று அவனிடம் கொடுப்போம் என்று கையில் எடுத்தவள் திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தாள். மை ஸ்வீட்டி என்ற பெயர் ஒளிர்ந்தது. அப்படியென்றால்… செல்லமாக மை ஸ்வீட்டி என்று அழைக்கும் நெருக்கத்தில் ஒருத்தி அவருக்கு இருக்கின்றாளா? அதுதான் அவருக்கு நான் வேண்டாதவளாக இருக்கின்றேனா? என்று தவிப்போடு நின்றாள் அபிராமி.