அலைபேசியில் ஒளிர்ந்த மை ஸ்வீட்டி என்ற பெயர் அபிராமியைப் பெரிதளவு பாதித்தது. அப்படியென்றால்… நினைக்கவே மனசு வலித்தது. அபிராமி பார்த்துக் கொண்டிருந்தபோதே அழைப்பு நின்றுவிட்டது. 'இது யாராயிருக்கும்? ஹோலை ஆன்ஸர் பண்ணி யாரெனக் கேட்போமா? அவருக்குத் தெரிந்தால் திட்டுவாரோ? யார் இந்த ஸ்வீட்டி? அவரின் மனம் கவர்ந்தவளாகவே இருக்க வேண்டும். அதனால்தான், மை ஸ்வீட்டி என்று சேஃவ் பண்ணி வைத்துள்ளார். அவள்மீது கொண்ட காதலால்தான் என்னை வெறுக்கின்றார். நிச்சயம் உண்மை அறிய வேண்டும்' என்று மனதுக்குள் புலம்பியபடி நின்ற போதே, மீண்டும் இரு தடவைகள் அழைப்பு வந்து நிறுத்தப்பட்டது.
'உண்மை அறிந்தால் என்ன செய்வாய்? அவரை விட்டு விலகிச் சென்று விடுவாயா?' என்று ஒருபக்கம் அவளது மனச்சாட்சி கேள்வி கேட்டது.
'அம்மாடியோ.. நிச்சயம் அதுமட்டும் என்னால் முடியாது. கல்யாணமான நாள் முதல் நான் அவரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவர் என்னை வெறுத்தாலும் பிரிந்து செல்ல என்னால் முடியாது. என்ன செய்வேன்? முருகா எனக்கு ஒரு வழியைக் காட்டு' என்று மனமுருகிப் பிரார்த்தித்தாள்.
மீண்டும் அழைப்பு வரவும், விடாமல் அழைக்கின்றார்கள். அவரிடம் கொண்டு போய் கொடுத்து விடுவோம் என நினைத்தவள் அலைபேசியையும் டீயையும் எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
அறையில் அவனைக் காணவில்லை. அறையின் பால்கனிக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. அங்கே சென்றாள். அந்தப் பால்கனியில் போடப்பட்டிருந்த கதிரையில் தலைசாய்த்து, கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்தபடி கண்மூடிப் படுத்திருந்தான்.
தயக்கத்துடன் அவனருகில் சென்றவளுக்கு அவனிடம் பேசப் பயமாக இருந்தது. அவள் அருகில் நிற்பதை கண்களைத் திறக்காமலே உணர்ந்தவன், சிறிது நேரம் அவள் ஏதாவது சொல்லுவாள் என்று காத்திருந்தான். ஆனால் அவளோ பதட்டத்துடன் அவனையே பார்த்திருந்தாள். அவன் மெதுவாகக் கண்களைத் திறந்து அவளைப் பார்க்கவும்,
"உங்க ஃபோன்... ஹோல் வந்தது." என்றாள்.
எதுவும் பேசாது அவளிடமிருந்து அலைபேசியை வாங்கினான். மீண்டும் தயக்கத்துடன் "டீ..." என்று இழுத்தாள். அவளிடமிருந்து டீயை எடுத்தவன் அருகிலிருந்த சிறிய மேசையில் வைத்துவிட்டு அலைபேசியில் யார் அழைத்தது எனப் பார்த்தான்.
அபிராமி அங்கேயே நின்றிருந்தாள். யார் அந்த ஸ்வீட்டி என்பதை அறிந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் நின்றாள். ஸ்வீட்டி என்ற பெயரைப் பார்த்ததும் அவன் முகத்தில் மாறுதல் தோன்றுகின்றதா என்று அவனையே பார்த்திருந்தாள்.
ஸ்வீட்டி என்ற பெயரைப் பார்த்ததும் அவன் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் தோன்றியது போலவே அவளுக்குப்பட்டது. அவன் அந்த இலக்கத்திற்கு அழைக்கவும் தன் காதுகளைக் கூர்மையாக்கி அவன் பேசுவதைச் செவிமடுத்தாள்.
"ஹாய்... எப்படியிருக்கிங்க... உங்களைப் பற்றித்தான் நினைச்சுக் கொண்டிருந்தன்... நீங்களே ஹோல் பண்ணிற்றிங்க... ஓகே... எப்போது... நிச்சயம் முடிச்சிடுவம்..... நாளை காலையில் சந்திப்போம். பை... சீ யூ."
என்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவன் பேசும்போது அடிக்கடி அவளைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே பேசினான்.
அலைபேசியை வைத்துவிட்டு டீயைக் கையில் எடுத்தவன் நிமிர்ந்து அவளிடம்
"என்ன?"என்று கேட்டான்.
"என்ன...?" என்று தானும் தடுமாறிக் கேட்டு நின்றாள்.
"நீதான் சொல்லனும். ஏதோ கேட்க வேண்டும் என்று நினைக்கிறாய். கேளு" என்றான்.
"அது.. அது..." கேட்கவந்ததைக் கேட்க முடியாமல் தவித்துப் போனாள். எப்படி அவனிடம் கேட்க முடியும் இந்த ஸ்வீட்டி யார் என்று? மூஞ்சியில் அடித்த மாதிரி அது உனக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்று விட்டால்.
அவன் எதுவும் பேசாது இவளையே பார்த்தபடி டீயைக் குடித்தான்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டே விட்டாள். "ஸ்வீட்டி யாரு?... உங்க கேர்ள் ஃபிரன்டா?"
“யெஸ்” என்றான். அபிராமியின் மனமோ தீச்சுட்டாற் போல் ஆனது. தான் நினைத்தது சரிதான் போலும் என்று வேதனையில் துவண்டாள்.
திடீரென தமிழினியன் சிரித்தான். அவளின் சிரிப்பை யோசனையுடன் பார்த்து நின்றாள் அபிராமி.
"நீ வீட்டுக்கு மளிகைப் பொருட்கள் எதுவும் வாங்கியது இல்லையா? மை ஸ்வீட்டி என்பது பிராண்ட் நேம். அந்த பிராண்டில் ஸ்வீட் வகைகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் என்று பலவகையான சரக்கு பொருட்கள் எனப் பல வருகின்றன. அந்த பிராண்ட் பொருட்களைத்தான் நம் ஸ்ரோருக்கு எடுப்போம். அந்தக் கம்பனி எம்டியின் நம்பரைத்தான் மை ஸ்வீட்டி என்று சேஃவ் பண்ணி வைச்சிருக்கேன். நீ ஏதேதோ கற்பனை பண்ணி விட்டாயோ" என்றவன் மீண்டும் சிரித்தான்.
'கொஞ்ச நேரத்தில் எவ்வளவு கற்பனை பண்ணிவிட்டேன். அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அபிராமி.
மறுநாள் நிலா, அபிராமியையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார். கோயில் பிரகாரங்களைச் சுற்றிவிட்டு மண்டபத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பிரசாதமாகக் கிடைத்த சுண்டலை இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த ஒரு வயதான பெண்மணி இவர்கள் அருகில் வந்ததும் “யாரு நிலாவா? எப்படி இருக்கிறாய்?” என்று குசலம் விசாரித்தார்.
உடனேயே எழுந்து நின்ற நிலா, அவருக்கு பதிலளித்து விட்டு தன் மருமகளை அறிமுகப்படுத்தினார்.
அபிராமியிடமும் அவரை “இது உங்க மாமாவின் பெரியம்மா” என்று அறிமுகப்படுத்தினார். அபிராமி அவருக்கு வணக்கம் சொல்லவும் அவளை ஏற இறங்கப் பார்த்தார். அந்த வயதிலும் அவர் கழுத்து நிறைந்த தங்க நகைகளும் வளையல்களும் என ஒரு நகைக் கடையையே தன் வசம் வைத்திருந்தார். அபிராமியை அளவெடுத்தவர்
“ஏன் நிலா… உன் பையனுக்கு எங்க பேர்த்தி மீனுவக் கட்டிக் கொடுத்திருந்தா இப்போ உன் கூட மகாராணி கணக்கா வந்திருப்பாள். தங்கத்தாலே நாங்க அவளை இழைச்சிருக்க மாட்டோமா? இந்தப் பொண்ணு என்னன்னா இத்துணூண்டு நகையைப் போட்டிருக்கே. அப்புறம் என் பேர்த்தியின் அழகென்ன. இந்தப் பொண்ணு நிறமும் கம்மி, உடம்பும் ஊதிப் போயிருக்கே” என்று நீட்டி முழக்கிக் கொண்டே இருந்தார்.
அபிராமியின் முகம்தான் கறுத்து விட்டது.
என்ன இந்தப் பாட்டி இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார். அவ்வளவு குண்டாகவா இருக்கேன் என்று தன் உடம்பைக் குனிந்து பார்த்தாள். கொஞ்சம் பூசினாற் போல் இருக்கேன். அவ்வளவுதானே என்று மனதிற்குள் எரிச்சலானாள்.
ஆனால், நிலாவோ முகத்தில் கடுகளவு கூட மாற்றமின்றி சிரித்த முகமாகவே பதிலளித்தார்.
“பெரியம்மா, இனியன் அப்பாவுக்கு சொந்தத்தில பெண் எடுக்க விருப்பமில்லை. அதுதான் காரணம். அப்புறம் எங்க மருமகள் எலும்பும் தோலுமாய் இல்லாம நல்லா மொழுமொழுன்னு அழகாய் இருக்காள். எங்க வீட்டில் எல்லோருக்கும் இனியனுக்குக் கூட இப்படி இருந்தால் தான் பிடிக்கும். நிறைய சாப்பிட்டு கொஞ்சம் சதை போடு என்று நம்ம சாவித்திரியக் கூடத் திட்டுவான்.
அடுத்து பெரியம்மா எங்க மருமகள் வேண்டியளவு நகையோடுதான் வந்தவள். ஆனால் அவளுக்கு இப்படி நிறைய நகை போடுறது பிடிக்காது. அதைவிட எங்க லாக்கரில் இருக்கும் அவ்வளவு நகையும் இவளுக்கு சொந்தமானது தானே” என்று ஒரு மூச்சுக்கு தன் மருமகளை தாங்கிப் பேசியவர்,
“பெரியம்மா, மீனாவதிக்கு நம்ம இனியனைவிட நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்” என்றார்.
“எங்க மீனுக்குட்டிக்கு என்ன குறை. மகாராஜா கணக்கா மாப்பிள்ளை வருவான்” என்றார் பாட்டி.
“ஓகே பாட்டி, நேரம் ஆகுது. அப்புறம் வாறன்” என்று விட்டு அபிராமியையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
வரும் வழியில் அபிராமி
“ஏன் அத்த, இந்தப் பாட்டியின் பேர்த்தியை அவருக்கு பார்த்திருந்ததா?”
“ச்சே.. அவங்களுக்கு விருப்பம் இருந்தது. மீனாவதிக்கும் இனியனக் கட்டிக்க விருப்பம்தான். ஆனால், இனியனுக்கும் அவளைப் பிடிக்கல. எங்களுக்கும் தான். அந்தப் பொண்ணு ரொம்ப அகங்காரம் பிடிச்சது. பணம் இருக்கணும் ஆனால், பணத்திமிர் இருக்கக் கூடாது” என்றார்.
அமுதத்திற்குச் செல்வதற்காக ஆயத்தமாகிக் கீழே வந்தான் தமிழினியன். சாப்பாட்டறைக்குச் சென்றவன் அங்கிருந்த பாலாவுக்கும் சாவித்திரிக்கும் குட்மார்னிங் சொன்னான். ரேவதியம்மா அவனுக்கு உணவு பரிமாறினார். அவன் சாப்பாட்டை அளைந்து கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தான். அவன் பார்வையைப் புரிந்து கொண்ட பாலா நமட்டுச் சிரிப்புடன்
"என்ன இனியா அபிராமியைத் தேடுகின்றாயா? பக்கத்தில் இருக்கிற முருகன் கோவிலுக்குப் போயிருக்கா."
"தனியாப் போயிருக்காளா?"
"இல்லப்பா... நான் உன் பொண்டாட்டிய தனியாகவெல்லாம் அனுப்பல. இன்று கார்த்திகை. கோயிலுக்கு நிலா கூடப் போயிருக்கா. உன்கிட்ட சொல்லிட்டு போகத்தான் பார்த்தாள். நீ எழும்பலையா... அதுதான் நானே சொல்லிக்கிறேன். போயிட்டு வாங்க என்று அனுப்பி வைச்சேன்."
"ம்ம்"
"இனியா... அபிராமி வேலைக்குப் போய்கிட்டு இருந்த பொண்ணு. இப்போ வீட்டுக்க அடைஞ்சிருக்க கஸ்ரமாயிருக்கும். நீ அமுதத்துக்குப் போகும்போது இடைக்கிடை கூட்டிப் போகலாம்தானே?" என்றார் பாலா.
"ஓகேபா... டைம் கிடைக்கும்போதெல்லாம் கூட்டிப் போறன். இன்று டீலர்ஸ் கூட ஒரு மீட்டிங் இருக்கு.
அவங்க ஆபிஸ் போகணும். சோ, நாளை பார்ப்போம்." என்றவன் சாப்பாட்டை முடித்து விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
அடுத்த சில வாரங்கள் மகிழ்ச்சியாகவே கழிந்ததாக அபிராமிக்குத் தோன்றியது. தமிழினியன் எந்தவித சிடுசிடுப்போ, முகம் திருப்பலோ இன்றி அவளிடம் இயல்பாகப் பேசினான். இடையிடையே பாலாவின் ஆலோசனைக்கமைய அவளை அமுதத்திற்கும் அழைத்துச் சென்றான்.
ஆரம்பத்தில் தயக்கமாகவே அமுதத்திற்குச் சென்றாள். ஒரு சில நாட்களிலையே அங்கே செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கக் தொடங்கி விட்டாள். வீட்டிலிருப்பதை விட அமுதத்தில் தன் கணவன் இயல்பாகத் தன்னுடன் இருப்பதாகத் தோன்றியதும் அதற்கு ஒரு காரணம். அதிக நேரம் கூடவே இருந்து சில நுணுக்கங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தான். சில பொறுப்புகளையும் அவளிடம் ஒப்படைத்து செய்வித்தான்.