கடந்த சில நாட்களாக சூரிய பகவான் பூமிப் பெண் மீது கோபம் கொண்டு தன் வெப்பப் பார்வையால் சுட்டெரித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த வருண பகவான் பூமிப் பெண்ணவள்மீது இரக்கம் கொண்டு தன் மழை என்னும் குளிர்கரங்களால் பூமியைத் தழுவி, குளிர்விக்க எண்ணினார். அதனால் தானோ என்னவோ அன்று பிற்பகல் மழை தூறியது. இல்லையில்லை கொட்டியது.
மழையைப் பார்த்ததும் அபிராமிக்கு மிகவும் ஆனந்தமானது. தன் பிறந்த வீட்டில் இருக்கும் போது மழையில் சென்று நனைந்து கொண்டு மணிக்கணக்கில் நிற்பாள். ஆடுவார், பெரிய சத்தத்தில் பாடுவாள். மழைத்துளிகளைக் கையில் ஏந்தி ரசிப்பாள். சிலவேளைகளில் மழையுடன் பேசிக்கொண்டு இருப்பாள். தாய் திட்டிய பிறகே வேண்டாவெறுப்பாய் உள்ளே வருவாள்.
இன்றும் மழையைப் பார்த்ததும் அபிராமிக்கு நனைய வேண்டும் என்று ஆசை எழுந்தது. தங்கள் அறையின் பால்கனிக்குச் சென்றவள் மழையில் நனைந்த படி நின்றாள். கண்மூடி மழைத்துளிகள் ஒவ்வொன்றும் தன்மீது தொடுவதை உணர்ந்து ரசித்தபடி நின்றாள். எத்தனையோ படங்கள், கதைகளில் மழையில் நனைந்த கதாநாயகியை நாயகன் கண்டு மையல் கொள்வதாகக் காட்டப்படுகின்றதே. அப்படி ஒரு சந்தர்ப்பம் என் வாழ்வில் நிகழாதா என்ற ஏக்கமும் பெருமூச்சாக அவளிடமிருந்து வெளிப்பட்டது.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றாள் என்று அவளுக்கே தெரியவில்லை. திடீரென மழையோடு சேர்ந்து இடியும் பெரும் காற்றும் உண்டானது. எங்கும் பேரிரைச்சல். உள்ளே சென்றவள் குளித்து உடை மாற்றி வந்தாள்.
இடைவிடாது இடியும் காற்றுடன் மழை கொட்டியது. இரவாகவும் அபிராமிக்கு சிறிதளவில் காய்ச்சல் உண்டானது. வீட்டில் யாருமில்லை. பாலாவும் நிலாவும் ரேவதியம்மாவின் உறவினர் வீட்டு விஷேசத்துக்கு அவரையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர். மாலையில் வருவதாகக் தான் கூறிச் சென்றனர். ஆனால், வீசிய புயற்காற்றால் பாதைகள் தோறும் பெரு மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. அதனால் உடனேயே பயணம் செய்ய முடியாத நிலை. நாளை காலையிலேயே வர முடியும் என்று அவளுக்கு அழைப்பெடுத்து தெரிவித்தனர். சாவித்திரி இரண்டு நாட்கள் மருத்துவமுகாம் ஒன்றில் உதவுவதற்காகக் கொடைக்கானல் சென்றிருநதாள். 'தமிழினியனிடம் சொல்லியிருக்கேன். அவன் நேரத்துக்கே வருவான். அதுவரை பார்வதியைத் துணைக்கு கூப்பிட்டுக்கோ' என்று நிலா சொல்லியிருந்தார். அவர்களுக்கு ஏன் சிரமத்தை என்று யோசித்தாள், அவரை அழைக்காமலே இருந்து விட்டாள். கொஞ்சமாகக் காய்ச்சல் அடிக்கவும் வீட்டிலிருந்த மாத்திரை ஒன்றைப் போட்டுவிட்டு இருந்துவிட்டாள்.
நேரம் ஆக ஆகக் காய்ச்சல் கூடத்தொடங்கியது. இருக்கக்கூட முடியாமல், தன் அறைக்குச் சென்று படுத்தாள். காய்ச்சல் குறையவேயில்லை. நடுக்கத்துடன் அதிகரித்தது. எழுந்து சென்று வேலனையோ பார்வதியையோ அழைப்போம் என்று நினைத்தவளால் அதனைக் கூட செயலாக்க முடியவில்லை. கால்கள் காய்ச்சல் நடுக்கத்தில் தள்ளாடியது. எழுந்தவள் திரும்பவும் கட்டிலில் விழுந்தாள்.
இரவு ஏழு மணியளவில் வீடு திரும்பிய தமிழினியன் வீடே அமைதியாக இருக்கவும் யோசனையுடன் தாயை அழைத்தான். எந்தப் பதிலும் இல்லை எனவும் யோசித்தவனுக்கு அதன்பிறகுதான் நினைவு வந்தது. அம்மாவும் அப்பாவும் விஷேசத்துக்குப் போனவர்கள் வர முடியாமல் இருக்கின்றது என அம்மா அழைத்துக் கூறியது நினைவு வந்தது. ஆனால், அபியைக் காணவில்லையே.
திருமணமான நாளிலிருந்து தான் கடையிலிருந்து திரும்பும் போது அபிராமி தோட்டத்திலோ அல்லது வரவேற்பறையிலோதான் இருப்பாள். அவளை அழைக்காவிட்டாலும் தன் குரலைக் கேட்டதும் அவள் எங்கிருந்தாலும் தான் நிற்கும் இடத்திற்கு வந்துவிடுவாள். இன்று எங்கே ஆளையே காணோம் என்று சிந்தித்தவன், உடை மாற்றிவரத் தங்கள் அறைக்குச் சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சியில் சில நொடிகள் உறைந்து போய் நின்று விட்டான். அபிராமிக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டு உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. பதட்டத்துடன் அவள் அருகே சென்றவன் அவளைத் தொட்டுப் பார்த்தான். உடம்பு நெருப்பெனக் கொதித்தது. அவள் கன்னத்தில் மெதுவாகத் தட்டி எழுப்பினான். ஆனால், அவளால் கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை.
தமிழினியன் சற்றும் தாமதிக்காமல் தொலைபேசியில் தங்கள் குடும்ப டாக்டரை உடனே வருமாறு அழைத்தான். சிறிது நேரத்திலேயே வந்த டாக்டர் உடனடியாக அவள் காய்ச்சல் குறைவதற்கு ஊசி ஒன்றைப் போட்டார். அவள் அருகிலேயே அமர்ந்து பரிசோதித்தபடி இருந்தார். அவன் தாய், தந்தைக்கு அழைத்துச் சொல்லவில்லை. சென்ற இடத்தில் அவர்களை ஏன் பதட்டப்பட வைக்க வேண்டும் என்று நினைத்தவன் அவர்களுக்கு எதுவும் கூறவில்லை.
சிறிது நேரத்தில் காய்ச்சல் சற்றுத் தணியவும் மெதுவாகக் கண்களைத் திறந்தாள் அபிராமி. காய்ச்சல் வரக் காரணத்தை அறிந்த டாக்டர், அதற்கேற்றபடி மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு தமிழினியனிடம் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் காய்ச்சல் மீண்டும் அதிகரித்தால் தன்னை அழைக்குமாறும் கூறிச் சென்றார்.
வேலனை அழைத்து டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கி வருமாறு அனுப்பி விட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
கட்டிலில் அவளைக் காணவில்லை. பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. அவள் வரட்டும் எனக் காத்திருந்தான். அதற்குள் வேலனும் மருந்தை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்து விட்டு, உதவிக்குப் பார்வதியை அனுப்பவா என்று கேட்டான். தான் பார்த்துக் கொள்வதாகவும் அவசியம் ஏற்பட்டால் கூப்பிடுவதாகவும் சொல்லி அனுப்பி வைத்தான்.
பாத்ரூமில் தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குளிக்கின்றாளோ என்று யோசித்தவன், இப்போது தான் காய்ச்சல் சற்று குறைந்திருக்கிறது. மீண்டும் குளிக்கின்றாளே என்று கோபத்துடன் எழுந்து சென்று கதவைத் தட்டினான்.
"அபிராமி, விளையாடிக் கொண்டு இருக்கிறாயா? சீக்கிரம் வெளியில் வா." என்று அழைத்தான். ஆனால், அவள் வரவில்லை. மீண்டும் தட்டினான். சிறு முனகல் சத்தம் மட்டும் கேட்டது. காது கொடுத்து கேட்டான். அபிராமிதான் இயலாமையில் முனகுவது கேட்டது.
"அபி, கதவைத் திறம்மா..."
மீண்டும் முனகல் சத்தம் கேட்கவும் பதறிப் போனான். கதவை உடைக்க ஆயத்தமானான். கைப்பிடியில் கை வைக்கவும் அது திறந்து கொண்டது. உள்ளே தாழ்ப்பாள் போடாமல் இருப்பது அப்போதுதான் தெரிந்தது. எதையும் யோசிக்காது கதவைத் திறந்து உள்ளே சென்றான். அங்கே அபிராமி கீழே விழுந்திருந்தாள். தண்ணீர் திறந்து விடப்பட்டு ஓடிக் கொண்டிருந்தது. கீழே கிடந்தவள் ஓடிய தண்ணீரில் தெப்பலாக நனைந்திருந்தாள்.
அரை மயக்கத்தில் கிடந்தவளைத் தன் கைகளில் ஏந்தியவன் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினான். உடை முழுதும் நனைந்திருந்தன. ஏற்கனவே காய்ச்சலில் இருப்பவள். ஈர உடையோடு இருந்தால் ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்தான். சிறிது தயக்கம் ஏற்பட்ட போதும் இப்போது அவளைக் கவனிப்பதே அவசியமானது என்று தனக்குத்தானே பேசியவன், அவள் உடைகளைக் களைந்தான். அரை மயக்கத்திலும் அவன் உடையைக் களையும்போது கூச்சத்தில் நெளிந்தாள். ஈரம் போகத் துடைத்தவன், நைட்டி ஒன்றை அணிவித்தான்.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சென்று திறந்தான். அங்கே கையில் சிறிய பாத்திரத்துடன் வேலன் நின்றிருந்தார்.
"தம்பி, பார்வதி சூப் செய்து கொடுத்துவிட்டா. காய்ச்சலுக்கு நல்லது. பிள்ளைக்கு கொடுங்க தம்பி." என்று கொடுத்தார். அவனும் அதனை நன்றி சொல்லி வாங்கினான்.
அபிராமியை மெதுவாக எழுப்பி தன்மேல் சாய்த்துக் கொண்டு அந்த சூப்பைப் பருக வைத்தான். பருகி முடித்ததும் டாக்டர் குறிப்பிட்டிருந்த மாத்திரைகளைக் கொடுத்தான். அவளை வாகாகப் படுக்க வைத்தவன், தானும் அவள் அருகில் படுத்து அவளது தலையை இதமாகத் தடவி விட்டான். அந்த இதம் அவளை சுகமான நித்திரைக்கு இட்டுச் சென்றது.
அவள் ஆழ்ந்து தூங்கி விட்டாள் என்பதை அறிந்தவன் படுக்கையை விட்டு எழப்போனான். ஆனால் முடியவில்லை. அப்போதுதான் கவனித்தான், அவள் நித்திரையில் தன் கைகளால் அவனது இடையை சுற்றி அணைத்திருந்ததை. கையை விலக்கப் பார்த்தான். ஆனால், அவனால் அது முடியவில்லை. அவன் கையை எடுக்கவும் அவள் இன்னும் இறுக்கி அணைத்தாள். விட்டு விலகவும் முடியாமல் விலக மனமுமில்லாமல் பெரும் தவிப்பில் இருந்தான். அவளது முகத்தையே பார்த்தவனுக்கு தன் வசம் இழப்பது புரிந்தது. குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவள் அருகாமையும் அணைப்பும் அவனைத் தன்வசம் இழக்கச் செய்தது. தொடர்ந்து அவளிடமிருந்து தன்னை மீட்டெடுக்க முடியாமல் அவள் இதழ்களைச் சிறைபிடித்தான். அவனது கைகளும் உடலும் அத்துமீறத் துடித்தன. அவளுக்கும் அவனது அணைப்பும் இதழொற்றலும் இதமாகவே இருந்தது. மெல்ல அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தவன் “அபிம்மா..” என்று தாபத்துடன் முணுமுணுத்தான். அப்பொழுது அவளது கழுத்தில் கிடந்த தாலிச் சரடு உறுத்தியது. நிமிர்ந்து அதனைப் பார்த்தவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடின.
அக் கேள்விகளின் பயனாய் திடீரென அவள் கைகளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்துவிட்டு வேகமாக எழுந்து நின்றான்அவன். அவள் அருகில் தான் இன்னும் இருந்தால் தன் வசம் இழந்து விடுவான் என்பதை உணர்ந்தவன் அறையை விட்டு வெளியேறினான்.
காய்ச்சல் மயக்கத்தில் இருந்தவளுக்கோ அவன் ஏன் தன்னை விட்டு விலகினான் என்று கேள்விக்கான பதிலை சிந்திக்கத் திராணியற்று அப்படியே தூங்கி விட்டாள்.