எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 21

Lufa Novels

Moderator

சக்கரை தழுவிய நொடியல்லவா!


அத்தியாயம் 21


இன்றுடன் இரு நாட்கள் கடந்துவிட்டது சித்தார்த் கோயம்புத்தூர் சென்று. யாருடனும் பேசும் மனநிலை இல்லாமல் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை அவன். தன்னுடைய அஜாக்கிரதையால், தன்னுடைய கோபத்தால் அவளைக் கஷ்டப்படுத்திவிட்டோமோ என அனுதினமும் வருந்தினான். அவளுக்கு முடியாமல் போனது பெரிதும் பாதித்தது அதனால் குற்ற உணர்வில் தவித்தான். அவளிடம் பேச ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருந்தது.


ஆனால் மதுவுக்கு முழு நேரம்வேலையும் அவனை நினைப்பது தான். நேரம் பார்த்துப் பார்த்து அவனுக்குப் போனில் அழைப்பதும், பல்லாயிரம் தடவை வாட்ஸப்பில் மன்னிப்பு வசனம் அனுப்புவதும் தான் அவளின் பிரதான வேலையே. அவன் அவளுடைய எந்த அழைப்பையும் எடுக்கவில்லை எனவும் ஆதவனிடம் கேட்டுப் புலம்ப ஆரம்பித்தாள், “அவர் என்மேல கோபமா இல்லனு சொன்ன ஆனா என் போன், மெஜேஜ் எதுவுமே எடுக்குறார் இல்ல” என அவனைப் பார்க்கும் போதெல்லாம் கேட்க ஆரம்பித்தாள்.


ஆதவன் அழைக்க அவன் அழைப்பையும் சித்தார்த் எடுக்கவில்லை, ஆதவனிடம் “தான் வரும் வரை அவளைப் பார்த்துக்கொள்” என அன்று கூறியதோடு முடித்துக்கொண்டான். அவன் பேசிய ஒரே ஒரு நபர் என்றால் அது அவன் தகப்பன் மட்டுமே! அதும் ஓரிரு வார்த்தை அவ்வளவே! அதுவும் அவனவளின் நலம் மட்டுமே கேட்டு அறிந்து கொள்வான்.


தினமும் காலையும், இரவும் மதுவும் இளங்கோவும் சேர்ந்து தான் உணவு சாப்பிடுவது. மதியம் மட்டுமே தனியாகச் சென்று சாப்பிட வேண்டிய நிலை. முதல் நாள் அவன் விட்டுச் சென்ற அன்று சாப்பிடாமல் முடியாமல் போனது. நேற்று மதியம் அவள் சாப்பாடு எடுக்கச் சென்றால் அங்கு ஒன்றுமே இல்லை. தனக்காக மட்டும் என்ன செய்து சாப்பிடுவதென அவளும் பால் இருந்ததால் அதை மட்டுமே குடித்துவிட்டு வந்தாள்.


இன்று இளங்கோ கடைக்குச் சென்றபிறகு கதவைத் தட்டினார் ஆனந்தி.


“என்னங்கத்தை”


“மஹாராணி ரூம்குள்ளயே குந்திக்கினா வேலைலாம் ஆருபாப்பா? போய்ச் சோறாக்கு போ. மதியத்துக்கு மட்டும் தான் அளவா ஆக்கு. இராவுக்கு புதுசா செய்யனும் ஆமா செல்லிட்டேன்” எனக் கத்திவிட்டு சென்றார் ஆனந்தி. இதற்கெல்லாம் காரணம் சிந்து.


காலையில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்த ஆனந்தியிடம், “இன்னாம்மா நீயி. வூட்டுக்கு மருமவனு ஒருத்தி வந்தும் நீ வேலை பாத்துத்துக்கீன.. அவள பாக்க சொல்லும்மா”


“எனக்கு அவள பாத்தாலே பத்திக்கின்னு வருது. அவ கையால நான் துண்ணமாட்டேன்”


“இன்னாம்மா நீயி. நான் இன்னா உன்னை அவகையால வாங்கியா துண்ணசொன்னேன்.. அவள வேலைக்காரியா மாத்துனு தான சொன்னேன். நீ ராணிமாதிரி இருந்து வேலை வாங்குங்குறேன். எவ்வூட்டுல எம்மாமியா எப்படி என்னைமிரட்டி உட்காந்தே துண்ணுது அதுமானிக்கே இரு” என்றாள் வன்மத்தோடு.


“அப்டீங்கிற”


“ஆமா. நம்ம இன்னாத்துக்கு அவளுக்குச் சேவகம் செய்யனும்?”


எனக்கூறி ஆனந்தியை கிளப்பிவிட, ஆனந்தி இங்கு வந்து மதுவை விரட்ட ஆரம்பித்தார். அவர் வந்து கூறிவிட்டு செல்ல, எழுத்து சமையலறைக்கு சென்றாள். இவள் சமையலறைக்குள் வரவும்,


“மதியத்துக்கு ஆட்டுக்கறி குழம்பு வச்சி, சிந்துக்கு சுவரொட்டி வாங்கிருக்கேன் அத வறுத்துரு” எனக் கூறிவிட்டு, அம்மாவும் மகளும் சேர்ந்து தொலைக்காட்சி நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


சமையலறைக்கு வந்தவளுக்கு அன்னைக்கு சித்தார்த் வாங்கிக்கொடுத்த சாக்லெட்டின் நினைவு வர, குளிர்சாதனப் பெட்டியில் அவள் வைத்த இடத்தில் சென்று தேட, காணவில்லை.


‘இங்க தானே வச்சேன்’ எனக் குனிந்து சுற்றித் தேடினாள் காணவில்லை. ‘யாரும் எடுத்தார்களா? கேட்கலாமா?’என நினைத்தவள், வெளியே வரச் சிந்து அவளைப் பார்த்துக்கொண்டே அதை முழுவதுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் வேண்டுமென்றே மது கண்முன் அதைச் சாப்பிட வேண்டுமென நினைத்து, இப்போது அவள் பார்க்கும் படி அமர்ந்து சாப்பிட்டாள்.


‘வேண்டுமென்றே செய்கிறாள்’ என நினைத்த மது கனத்த மனதுடன் மீண்டும் உள்ளே நுழைந்தவள், யூடூப் உதவியுடன் சமைக்க ஆரம்பித்தாள். அனைத்தும் சமைத்து முடித்து, எடுத்து டேபிளில் வைத்துவிட்டு ஆனந்தியிடம்,


“சாப்பாடு ரெடி ஆகிடுச்சு அத்தை” எனக்கூறிவிட்டு அவளறைக்கு சென்றாள். அடுக்களையில் நின்றது உடலெங்கும் வேர்த்து, கசகசவென இருக்க குளிக்க உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அதற்குள் இங்கு ஆனந்தியும், சிந்துவும் சாப்பிட ஆரம்பித்திருந்தனர்.


“இன்னாம்மா அவளுக்கு இம்புட்டு நல்லா சமைக்கவருமா?”


“ஆமா என்னத்த சமைச்சா சுமார்தேன்”


“அய்யே பொறாமை உனக்கு. நல்லாக்கீது” என ருசித்துச் சாப்பிட்டாள் சிந்து.


“சரி.. சரி துண்ணு. இந்தா சுவரொட்டிய துண்ணு. டாக்டர்காரி இரத்தமில்லனு திட்டினால”


“ஆமா..” என இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்ததும். கிட்சனுக்கு சென்ற சிந்து “ம்மா! என் வூட்டுக்காரருக்கு கறிகுழம்பு பிடிக்கும் நான் குடுத்துத்துண்டு வரவா?”


“இதென்னடி கேள்வி.. போட்டுக்கினு போ” எனக்கூற மீதியிருந்த அத்தனையையும் டப்பாக்களில் அடைத்துக்கொண்டு கிளம்ப, குளித்து முடித்த மது அடுக்களைக்குள் வரச் சரியாக இருந்தது.


“ஏய் மது.. அம்புட்டையும் கழுவி வச்சிடு” எனக்கூறிவிட்டு புருஷனுக்கான சாப்பாட்டுடன் அவள் வீட்டுக்குச் சென்றாள். சட்டியில் ஒட்டிய சாதம் கூட இல்லை. அத்தனை வேலையையும் செய்தும் அவளுக்காக ஒருபிடி சாதம் கூட இல்லை இன்றும் ஒரு டம்ளர் பாலைக்குடித்துவிட்டு சென்று படுத்தாள்.


மறுநாள் மதியத்துக்கு சமையல் செய்தவள் தனக்காக ஒரு தட்டில் எடுத்து அடுக்களையில் மூடி வைத்துவிட்டு மீதியை கொண்டுவந்து டேபிளில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் இன்று. வந்து பார்க்க, அவள் எடுத்து வைத்த சாப்பாடு மேல உப்பு டப்பா விழுந்து கிடந்தது காரணம் யாரென நான் சொல்லனுமா என்ன? சாப்பாடு முழுவதும் உப்பு அதனால் அன்றும் பால் தான்.


இப்படியே மூன்று நாளும் அவள் மதிய உணவை எதாவது செய்து கெடுத்துக் கொண்டே இருந்தனர் அம்மாவும், மகளும் சேர்ந்து. அவளுக்குச் சர்க்கரை இருப்பதும் தெரியும், சாப்பாடு இல்லையென்றால் அவளால் தாக்கு பிடிக்க முடியாதென்றும் தெரியும். ஆனாலும் அவளைப் பாடாய் படுத்தினர் இருவரும்.


காலையும் இரவும் இளங்கோ அருகில் சாப்பிடுவதால் மட்டுமே அவளுக்கு நல்ல சாப்பாடு சாப்பிட முடிந்தது. அனைத்தையும் அவள் சித்தத்துக்காகப் பொறுத்துக் கொண்டாள். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது எனத்தானே அன்பும், இளங்கோவும், மொத்த குடும்பமும் சேர்ந்து அவளுக்கு ஆதவனை முடிக்க இருந்தனர்.


இன்று அவர்கள் எதை நினைத்துப் பயந்தார்களோ அது தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவள் தான் அதை யாரிடமும் வெளிப்படுத்த வில்லை. மீண்டும் ஒரு பிரச்சனை வந்துவிடக் கூடாது என அத்தனையையும் அவள் மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.


இங்கு இவள் இப்படி கஷ்டப்பட்டால் அங்கு ஒருவனோ வேறு விதமாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவளை அங்கு விட்டுவிட்டு வந்து அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. பிறந்ததிலிருந்தே அவள்மேல் பைத்தியமாக இருப்பவன், இன்று குமரியாய் மாறிய அவளை முற்றும் முழுதாகப் பார்த்துவிட்டு அவளுடன் கூடிக்களித்து விட்டு, அவளை உடனேயே உதறி தள்ளிவிட்டு இங்கு வந்துவிட்டானே அதே பெரும் மன உளைச்சலாக இருந்தது.


அவளிடமிருந்து அழைப்பும், குறுஞ்செய்தியும் வரும்போது ‘நானே என் கோபத்த விட்டுட்டு வந்து என்ன நடந்ததுனு கேட்டும் நீ பதில் சொல்லலயே! இந்த ஆதவன் லூசும் சொல்ல மாட்றான்.. அப்படி என்னதாண்டி நடந்தது சொல்லித் தொலைச்சிருக்கலாமே! ஒரு நிமிஷம் ஆகாது என்ன நடந்தது என வெளியாட்களிடம் விசாரிக்க, குடும்பவிஷயம் வெளியே செல்ல வேண்டாமெனத் தான் அமைதியாக இருக்கேன்.. தினமும் நீ என்ன பண்றனு இங்குக் கிடந்து தவிக்கிறேன். அப்பாக்கிட்ட பேசி நீ நல்லா இருக்கனு சொல்ற வரைக்கும் நிம்மதியே இருக்க மாட்டிங்குதுடி.


ஒழுங்கா ஊசி, மாத்திரை போடுறியா? சாப்பிடுறியா? அன்னைக்கு உனக்கு முடியலனு சொல்லும்போது.. எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வரத்தான் நினைச்சேன் ஆனா உன் ஆசைக்காகத் தான் நான் இங்க இருக்கேன். நான் போலீஸாகனும்னு நீ தான ஆசைப்பட்ட, உனக்காகத் தாண்டி இங்க நிக்கிறேன் இப்போவரை’ என அவளையே நினைத்துக் கொண்டு அங்கு மனமே இல்லாமல் இருக்கிறான்.


ஆம்! சித்தார்த்தை போலீஸாக வேண்டுமெனக் கூறியது மது தான். அவள் தான் அவனை எஸ். ஐ தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தினாள். அவளுக்காகத் தான் அவன் படித்தான், தேர்விலும் தேர்ச்சி பெற்றான். இன்று அவளை அங்கே தவிக்கவிட்டுவிட்டு அவன் இங்கே துடிக்கிறான்.


கடைசியில் அவனாலும் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. மூன்றுநாட்கள் ஆகிவிட்டது அவன் ஊரிலிருந்து வந்து. அவனே அவள் தகப்பன் வீட்டுக்குச் செல் எனக்கூறியும் அவள் செல்லாமல் இருக்க, மலையேறியிருந்தவன் உச்சி குளிர்ந்து தான் போனத! தினமும் அவள் அழைப்பை ஏற்காது தவிர்த்தவன் இன்று அவனே அழைத்தான். தலைகால் புரியவில்லை அவளுக்கு முதல் சத்தத்திலேயே எடுத்துவிட்டாள்.


“சித்தத்து! என்மேல் கோபம் போய்டுச்சா?” என ஆனந்தத்தில் கேட்டாள் மது. அந்தப்பக்கம் அழைத்து விட்டான் தான் ஆனால் மௌனம்.


“பேசு சித்தத்து.. இனி நான் நீ என்ன சொன்னாலும் செய்வேன். நீ மட்டும் என்னோட பேசாம இருக்காத.. என்னால தாங்க முடியல” என அழுக ஆரம்பித்தாள்.


“அழாதடி. முதல்ல அழுறத நிறுத்து”


“சரி நான் அழல. நீ என்ன பண்ற? சாப்பிட்டியா?”


“அதெல்லாம் இங்க நல்லாத் தான் இருக்கேன். நான் தான் மருந்து வாங்கிக்கொடுக்க மறந்துட்டு வந்தா நீ ஊசி போடாம இருப்பியா? அன்னைக்கு அவ்ளோ கோபம் உன் மேல. உன்கிட்ட பேசவே கூடாதுனு இருந்தேன். ஆனா என்னோட கோபம் எல்லாம் உன்கிட்ட மட்டும் எடுபடவே மாட்டிங்குது. உன்னைப் பார்த்தாலே.. பார்த்தா என்ன உன்னை நினைச்சாலே கோபம் எங்க போகுதுனு தான் தெரிய மாட்டிங்குது” எனக்கூறினான்.


அவளுக்குத் தான் தெரியுமே! அவளுக்கு முடியாதபோது ஆதவனை அனுப்பி தன்னை பாதுகாத்தானென. இன்று வரை ஆதவன் மூலமாகவும், இளங்கோ மூலமாகவும் அவளைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறானென. இன்று கோபாம் குறைந்து தானே அழைக்கச் சந்தோஷ மிகுதியில் இருந்தாள்.


“லவ் யூ சித்தத்து”


“லவ் யூ டி” என்றவன்,


“சரி. நீ நல்லா இருக்கல.. அம்மா பிரச்சனை எதுவும் பண்ணுதா? எதுவா இருந்தாலும் சொல்லு சரியா? இன்னும் ஒரு இருபதே நாள் தான். முடிச்சதும் எங்கே வேலை கிடைக்குதோ அங்க போய்டலாம். அப்புறம் எனக்கு நீ உனக்கு நான். சரியா”


“ம்ம் சரி சித்தத்து” எனச் சந்தோஷமாகக் கூறினாள். அதற்குப் பிறகு அவர்கள் பேசியது அனைத்தும் ஸ்வீட் நத்திங்ஸ் தான். அவளுக்கு அவன் அவளுடன் பேசியதே போதுமென இருந்தது. இங்கு நடப்பதை அவனுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை அவள், அதனால் அவர்களின் இன்றைய சந்தோஷம் கெட விருப்பமில்லை.


தினமும் மாலை ஆதவன் மதுவைப் பார்க்க வருவான். அவனிடமும் ஆனந்தி, சிந்து செய்வதை கூறவில்லை. இன்று அவன் வரும்வழியில் மதுவுக்கு பிடித்த சிக்கன் ரோல் கடையைப் பார்த்ததும் அவளுக்காக வாங்கிக்கொண்டு மதுவைப் பார்க்க வந்தான்.


அதை அவளிடம் கொடுக்க அவளுக்கு இருக்கும் பசியில் படாரென வாங்கி இரண்டு ரோலையும் நொடியில் சாப்பிட்டாள். அவள் சாப்பிடுவதை சந்தேகமாகப் பார்த்தான் ஆதவன். அவன் பார்வையை கண்டுகொண்டவளோ தலை கவிழ்ந்து கொண்டாள்.


“மது! சாப்பிடலயா நீ?”


“சாப்பிட்டு தானடா இருக்கேன்”


“மதியம் சாப்பிட்டயானு கேட்டேன்”


“ம்ம் சாப்பிட்டேனே”


“பொய் சொல்லாத.. நீ இப்படி சாப்பிடுற ஆள் இல்லையே! பஞ்சத்துல அடிபட்ட மாதிரி சாப்பிடுற”


“அப்படியேல்லாம் இல்ல. சிக்கன்ரோல் சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சுல அதான் வேரொன்னும் இல்ல”


“நம்புற மாதிரி இல்லையே! சரி இளங்கோ பெரியப்பாக்கிட்ட கேட்டுக்கிறேன் என்ன விஷயம்னு.. எதாவது பிரச்சனையா மட்டும் இருக்கட்டும் உன் புருஷர் கிட்ட போதும்பா சாமி நீ டிரைனிங் பண்ணது உன் பொண்டாட்டிய இங்க கொன்னுடுவாங்க போல, நீ வந்து உன் பொண்டாட்டிய பார்த்துக்கோனு சொல்லிடுறேன்”


“ஏய்! ஏய்! அவரே இப்போ தான் திரும்ப நல்லா பேசினார்.. நீ எதையாவது உலறிவைக்காத”


“அப்போ நீயே சொல்லு. இன்னைக்கு என்ன சாப்பிட்ட?”


“இன்னைக்கு சாதம், முள்ளங்கி சாம்பார், பாவக்காய் பொறியல்”


“நீ சமைச்சத கேட்கல.. சாப்பிட்டத கேட்டேன்”


“அதான் சாப்பிட்டேன்”


“என்னை டென்ஸன் ஆக்காத.. இடியே விழுந்தாலும் நீ பாகற்காயும், முள்ளங்கியும் சாப்பிட மாட்டனு எனக்குத் தெரியும்” எனக்கூற, தலைகவிழ்ந்தவள். அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்து தான அவர்கள் இதைச் சமைக்க சொன்னது. கண்களில் கண்ணீர். கண்ணீருடன் இங்கு நடப்பதை அப்படியே ஒப்பித்துவிட்டாள் அவனிடம்.


அவனுக்கோ அத்தனை ஆத்திரம், இப்போ அவன் கையில் ஆனந்தியும், சிந்துவும் கிடைத்திருந்தால் மண்டையை உடைத்திருப்பான். ஆனால் அவர்கள் நல்ல நேரம் இருவரும் சிந்துக்கு காட்ட மருத்துவமனை சென்றிருந்தனர்.


“ஆது இத யார் கிட்டயும் சொல்லாத எல்லாரும் வருத்தப்படுவாங்க. சித்தத்துக்கிட்டயும் சொல்லாத அவரே இப்போ தான் நல்லா பேசினார். எனக்கு அவரோட இருக்க இந்தச் சந்தோஷத்த இப்போ இழக்க விரும்பம் இல்ல பிளீஸ்” எனக் கெஞ்சினாள்


“சொல்லாதயா? இது என்ன சின்ன விஷயமா சொல்லாம இருக்க. உனக்கு சுகர் இருக்குடி தினமும் நீ இப்படி பட்டினி கிடந்தா உடம்பு ஒன்னுமில்லாம போய்டும். உன்கிட்ட என்ன பேச்சு நான் உன் புருஷர் கிட்ட பேசிக்கிறேன்” எனச் சித்தார்த்துக்கு அழைக்கபோக, அவன் போனைப் பிடிங்கி வைத்துக்கொண்டு,


“சித்தத்து கிட்ட சொல்ல மாட்டேனு என் மேல சத்தியம் பண்ணு. இல்லனா என்ன பண்ணுவேனு தெரியாது. சத்தியம் பண்ணு” என மிரட்டி அவன் வாயை அடைத்துவிட்டாள் மது.


“உன் அத்தை மண்டைய உடைக்கிற அளவுக்கு ஆத்திரமா வருது. அந்தம்மா பண்றதுக்கு எல்லாம் ஏன் எல்லாரும் இப்படி பயப்படுறீங்க..”


“மாமாக்காகடா.. அவர் என்னை நல்லா பார்த்திக்கிறார்டா. காலையிலயும், நைட்டும் எனக்காக எனக்கு ஏத்த மாதிரி சாப்பாடு தான் அவரும் சாப்பிடுறாரு. என்னோட சேர்ந்து தான் சாப்பிடுறாரு. எனக்கு என்ன வேணும்னு கேட்டுக் கேட்டுச் செய்றார். தினமும் எனக்கு என்ன வேணும்னு கேட்டுட்டு போய் நைட் வரும்போது அத வாங்கிட்டு தான் வரார். அவருக்காகவாது அத்தையை கொஞ்சம் சகிச்சுக்கலாம் தப்பில்ல”


“என்னவோ போ. அப்போ நாழு நாளா மதிய சாப்பாடு சாப்பிடாம இருந்திருக்க”


“பால் குடிச்சேண்டா”


“வாய்ல நல்லா வருது. நான் கிளம்புறேன் இங்க இருந்தா கோபம் கோபமா தான் வருது” எனக்கூறி கிளம்பிவிட்டான்.


அவன் கிளம்பியதும் மீண்டும் சித்தார்த்திடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. பேசினார்கள் பேசினார்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். சில நேரம் காதலாக, சில நேரம் ஏக்கமாக, சில நேரம் கெஞ்சலாக, சில நேரம் கொஞ்சலாக. ஆனால் பேச்சு மட்டும் முடிவதில்லை.

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்..

என் வீட்டில் இரவு.. அங்கே இரவா? இல்ல பகலா? எனக்கும் மயக்கம்..

நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்

நானும் தான் நெனைச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசனை வரல

தூங்கினா வெளங்கும்

தூக்கம் தான் வரல

பாடுறேன் மெதுவா.. உறங்கு..

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்..


மறுநாள் மதியம் சரியாக மதிய உணவு வேலையில் வந்தான் ஆதவன் கையில் சாப்பாட்டுடன். டேபிளில் அமர்ந்து சிந்துவும், ஆனந்தியும் சாப்பிட்டுக் கொண்டுருந்தனர். அவர்களை முறைத்துக்கொண்டே வந்தான்.


ஆனந்தி “இன்னாடி தினத்திக்கும் சாயந்தரம் தான கூத்தடிப்பானுங்க இப்போ மதியமே கூத்தடிக்க வந்துட்டான் வெட்கங்கெட்டபய” எனக்கூற, அறையிலிருந்து மது வந்துவிட்டாள்.


“என்ன ஆது? இந்நேரத்துல”


“நீ பொங்கி வைக்கிறதெல்லாம் சில பேயும், பிசாசும் திண்டுட்டு போயிடுதுங்கல. அதான் நான் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்”


“அடேய் ஆரபார்த்து பேய்ங்கின? நாக்க இழுத்துவைச்சு அறுத்துடுவேன். உன்னை வூட்டுக்குள்ள விட்டதுக்கு என்ன பேய்னுவ” என ஆனந்தி கத்த,


“அதானா எங்கள எப்படி நீ பேசலாம்?” எனச் சிந்துவும் சண்டைக்கு வந்தாள்.


“இளங்கோ பெரியப்பாக்கிட்ட நீங்கப் பண்றத சொல்லட்டா?” எனக்கேட்க, இருவரும் கொஞ்சம் பம்ப,


“நீ உள்ள வா ஆது.. சண்டை வளர்க்காத” என ஆதவனை இழுத்துச் சென்றாள் மது.


“எதுக்கு இந்நேரம் வந்து அவங்க கிட்ட நீ சண்டை பண்ணிட்டு இருக்க ஆது?”


“அப்புறம் டெய்லி மதியம் உன்னைப் பட்டினி போட்டா.. கொஞ்சுவாங்களா? நான் இன்னும் சண்டை போடவே இல்ல அதுக்குள்ள உள்ள இழுத்துட்டு வந்துட்ட நீ”


“இதுக்கு தான் உன்கிட்ட ஒன்னும் சொல்றது இல்ல. நீ சண்டை வளர்க்காம கிளம்பு”


“இந்தா சாப்பாடு இருக்கு. பிரியாணி நம்ம கடையில இருந்து தான் எடுத்துட்டு வந்தேன் சாப்பிடு” என அவன் கடையிலிருந்து மதிய சாப்பாடு கொண்டு வந்து குடுத்தான்.


“எதுக்கு டா இது? இன்னைக்கு சாப்பாடு போட்டு உள்ள கொண்டு வந்துட்டேன். இதோ பாரு” என மூடியிருந்த சாப்பாடு தட்டைக் காட்ட அதில் ஒரு செத்த கரப்பான் பூச்சி கிடந்தது. இருவருக்கும் அதிர்ச்சி.


“இது.. எப்படி? மூடித் தான வச்சிருக்கேன்”


“எல்லாம் அந்த இரண்டு பேரு வேலையா தான் இருக்கும். அதுங்கள” எனக் கிளம்பியவனின் கையைப் பிடித்து இழுத்து,


“ச்ச.. போய்ட்டு போதுங்க விடு. இன்னும் ஒரு இருபது நாள் தான் அப்புறம் சித்தத்து வந்துருவாரு. இப்போ பிரச்சனை பண்ணாத” எனக்கூற கடுப்புடன்,


“இந்தா இத சாப்பிடு. தினமும் நானே கொண்டு வாரேன். அவங்க சாப்பாடு எடுக்காத” எனக்கூறினான்.


“ம்ம்ம்”


“சரி சாப்பிடு. நான் கிளம்புறேன்” என அவன் வீட்டுக்குக் கிளம்பிவிட்டான் ஆதவன்.


செல்லும் அவனின் மனம் முழுவதும் ‘எப்படி இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கின்றனர். இந்தக் கஷ்டம் எல்லாம் வரக்கூடாதுனு தான வீட்டில எல்லாரும் நினைச்சாங்க.. என்னால தான் இப்போ மது கஷ்டப்படுறாளா? அப்படியாயிருந்தா நான் அமைச்சுக் கொடுத்த இந்த வாழ்க்கையில அவளுக்குப் பக்க பலமா எப்பவும் நின்னு அவள வாழவைப்பேன்’ என நினைத்துக் கொண்டே சென்றான்.
 

admin

Administrator
Staff member
எனக்கு கோவம் கோவம் இந்த சித்தார்த் மேல என்ன புண்ணாக்கு லவ் அம்மாவை பற்றி தெரிஞ்சும் இப்படி விட்டுடான்.. அவன் சுயநலவாதி அவளை நல்லா வாழ வைக்க முடியலைன்னா ஏன் மேரேஜ் பண்ணிட்டான்..
 

santhinagaraj

Well-known member
அவனோட அம்மாவோட புத்தி தெரிஞ்சும் தனியா விட்டுட்டு வந்து போன்ல நல்லா இருக்கியான்னு கேட்டா அவ நல்லா இல்ல எங்க அம்மா என்ன பட்டினி போடுறாங்க நான் சொல்லுவா??

அவளோட உடல்நிலை தெரிஞ்சும் அவ்வளவு தனியா கஷ்டப்பட விட்டுட்டு இவன் போன்ல துடிச்சிட்டு இருக்கானாமா?? இதுல அவ மேல உயிரே வச்சு உருகி உருகி காதலிச்சனமா அவளோட ஆசையே விருப்பத்தை என்னன்னு கேட்காம அவங்க அப்பா அம்மா விட்டு பிரிச்சுட்டு
 

Lufa Novels

Moderator
எனக்கு கோவம் கோவம் இந்த சித்தார்த் மேல என்ன புண்ணாக்கு லவ் அம்மாவை பற்றி தெரிஞ்சும் இப்படி விட்டுடான்.. அவன் சுயநலவாதி அவளை நல்லா வாழ வைக்க முடியலைன்னா ஏன் மேரேஜ் பண்ணிட்டான்..
கல்யாணத்த கெடுக்க டிரை பண்ணாங்க ஆனா அவன் அம்மா இப்படி கீழ்தரமா இறங்குவாங்கனு அவனுக்கு எப்படி தெரியும். இவன் கேட்கும் போது அவளும் சொல்லலயே.. அவனுக்கு அவன் பண்ணது கெஸ்ஸிங் தான் இருக்கே தவிற அவங்க ஆட்டத்தை கண்ணால பார்க்கலல..

கண்டிப்பா அவன் அம்மாவ பத்தி தெரியும் போது கண்டிப்பா வருத்தப்படுவான்.. அதுக்கு பிறகு கண்டிப்பா அவன் தாய்க்கு என்னை தண்டனை கொடுக்கனுமோ அத கொடுப்பானு நினைக்குறேன்
 

Lufa Novels

Moderator
அவனோட அம்மாவோட புத்தி தெரிஞ்சும் தனியா விட்டுட்டு வந்து போன்ல நல்லா இருக்கியான்னு கேட்டா அவ நல்லா இல்ல எங்க அம்மா என்ன பட்டினி போடுறாங்க நான் சொல்லுவா??

அவளோட உடல்நிலை தெரிஞ்சும் அவ்வளவு தனியா கஷ்டப்பட விட்டுட்டு இவன் போன்ல துடிச்சிட்டு இருக்கானாமா?? இதுல அவ மேல உயிரே வச்சு உருகி உருகி காதலிச்சனமா அவளோட ஆசையே விருப்பத்தை என்னன்னு கேட்காம அவங்க அப்பா அம்மா விட்டு பிரிச்சுட்டு
அவன் பண்ணின தப்பு, அன்பு குடும்பம் மேல கோபத்தை வளர்த்துக்கிட்டது தான் காரணம்.

அதுக்கு அவங்களும் ஒரு வகையில காரணம் தான.. உண்மைய சொல்லி என் மகளுக்கு உன் குடும்பம் செட் ஆகாது நாங்க ஆதவனுக்கு குடுக்குறோம் என சொல்லிருக்கலாம்.

இங்குட்டு இவன்கிட்ட பேசிக்கிட்டே அவனுக்கு தெரியாம பண்ணின கோபம் தான் இப்போ அன்பு குடும்பத்து மேல காட்டுறான்.

அதே சித்து தன்னோட அம்மாவோட குணம் முழுசா தெரியும் போது அவங்களுக்கான தண்டனை கண்டிப்பா கொடுப்பான்
 

Mathykarthy

Well-known member
அம்மாவும் பொண்ணும் ராட்சசிங்க 😈😈😈😈😈😈😈
அவங்க பண்ற தப்பு தெரிஞ்சும் எல்லாரும் ஒதுங்கி கண்டுக்காம போறதுனால தான் ஓவரா ஆடுறாங்க........ 😡😡😡😡😡😡😡😡

இவ மாமாகிட்டயாவது உண்மையை சொல்லலாம் இல்லை....... 🤦

ஆது நீ பண்ணினது ஒன்னும் தப்பு இல்லை......
இவங்களுக்கு பயந்துகிட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் சந்தோசமா இருந்துடுவாளா..... சின்ன வயசுல இருந்து மனசுல இருந்தவனை மறந்துட்டு அவன் கண் முன்னாடி உன்னோட வாழ்றது கொடுமை.......

சித்தும் ஒன்னும் ஹாப்பியா இல்லை...... அவனோட கோபம் எல்லாம் இவகிட்ட கொஞ்ச நாள் தான்......

இவளுக்காக தானே அப்பா வீட்டுக்கே போகச் சொன்னான்..... அதுவும் போகாம யார்கிட்டயும் சொல்லாம எதோ தண்டனை மாதிரி அவங்களுக்கு பணிஞ்சு போனா யார் என்ன செய்ய முடியும்........
 

Lufa Novels

Moderator
அம்மாவும் பொண்ணும் ராட்சசிங்க 😈😈😈😈😈😈😈
அவங்க பண்ற தப்பு தெரிஞ்சும் எல்லாரும் ஒதுங்கி கண்டுக்காம போறதுனால தான் ஓவரா ஆடுறாங்க........ 😡😡😡😡😡😡😡😡

இவ மாமாகிட்டயாவது உண்மையை சொல்லலாம் இல்லை....... 🤦

ஆது நீ பண்ணினது ஒன்னும் தப்பு இல்லை......
இவங்களுக்கு பயந்துகிட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் சந்தோசமா இருந்துடுவாளா..... சின்ன வயசுல இருந்து மனசுல இருந்தவனை மறந்துட்டு அவன் கண் முன்னாடி உன்னோட வாழ்றது கொடுமை.......

சித்தும் ஒன்னும் ஹாப்பியா இல்லை...... அவனோட கோபம் எல்லாம் இவகிட்ட கொஞ்ச நாள் தான்......

இவளுக்காக தானே அப்பா வீட்டுக்கே போகச் சொன்னான்..... அதுவும் போகாம யார்கிட்டயும் சொல்லாம எதோ தண்டனை மாதிரி அவங்களுக்கு பணிஞ்சு போனா யார் என்ன செய்ய முடியும்........
Yes. இவளே இழுத்துக்குறா. கோபத்துல விட்டுட்டு போய்ட்டாலும் அங்க போனு தான் சொன்னான், இவ போகல.. இப்பவும் போன்ல கேட்குறான் தான அப்பவாது சொல்லிருக்கலாம் அவன் ஸ்டெப் எடுத்திருப்பான் அதுவும் பண்ணல. இவளா இழுத்து வச்சிக்கிட்டா.. இல்ல எதிர்த்து பேசனும் அதுவும் இல்ல.

Thank you sis
 
Top