Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 22
சித்தார்த் வீட்டிக்கு ஆதவன் கையில் உணவு பொட்டலங்களுடன் செல்வதையும், அதைக் கொடுத்து விட்டு வெளியேறி வருவதையும் பார்த்தார் ஈகைச்செல்வி. அவளருகில் வந்த ஆதவனை நிறுத்தினார். திருமணத்திற்கு பிறகு ஈகையையும், அன்பையும் பார்க்காமலே சுத்திக் கொண்டிருந்தான் ஆதவன். அவர்களை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் இல்லை அவனுக்கு. இன்று அத்தையிடம் வசமாகச் சிக்கிக் கொண்டான்.
“என்ன மருமகனே! கண்ணுலயே படாம ஒளிஞ்சு மறைஞ்சு திரியுறிங்க போல” எனக்கேட்க, ஏற்கனவே குற்ற உணர்வில் வந்து கொண்டிருந்தவனுக்கு மனதில் பாரமேறிய உணர்வு.
“சாரி அத்தை” என்றான் பாவமாக.
“ஏண்டா? இப்படி எல்லாம் நடக்க கூடாதுனு தானடா நாங்க இந்த ஏற்பாட பண்ணினோம். கோவில்ல எங்க கூட மதும்மா பேசிட்டானு கோபத்துல சித்து அவளை விட்டுட்டே போய்ட்டான்டா. எங்க பிள்ளைய கண்ணால கூடப் பார்க்க முடியாம போச்சே எங்க நிலைமை” எனத் தெருவென்று கூடப் பாராமல் அழுதார் ஈகை.
பைக்கிலிருந்து இறங்கியவன் அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டு, “சாரி அத்தை! கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிடும். ஆரம்பிச்சு வச்ச நானே இத முடிச்சும் வைக்கிறேன். கல்யாணம் பண்ணி உங்க கிட்டு பிரிச்ச உங்க பொண்ணையும், மாப்பிள்ளையையும் திரும்பி உங்க கூடச் சேர்த்துவச்சிட்டு, நான் காவி கட்டிக்கிட்டு சந்நியாசம் போகப் போறேன்” என ஆறுதலாக ஆரம்பித்துக் கடைசியில் கைகளை மேல் நோக்கிக் கும்பிடு போட்டுக் குறும்பாகப் பேசி ஈகையை சிரிக்க வைத்து விட்டான் ஆதவன்.
“சந்நியாசம் போறானாம் சந்நியாசம். பேச்ச பாரு” என அவன் முதுகில் செல்லமாக அடித்துச் சிரித்தார் ஈகை.
“ஹான் இப்படி சிரிச்சுட்டே இருங்க என் செல்ல அத்தை” என அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.
“அது சரி இப்போ என்ன சாப்பாடோட மது வீட்டுக்குப் போய்ட்டு வர?” எனக்கேட்க, ஏற்கனவே வேதனையில் இருப்பவரிடம் இதைக்கூறினால் இன்னமும் வேதனை அதிகரிக்கும் என நினைத்தவன்,
“அந்த வீட்டுல சமைக்குற சாப்பாடு டேஸ்ட் மேடம்க்கு பிடிக்கலயாம். அத சாப்பிட மாட்டாங்களாம் அம்மணி. அதுனால தினமும் மதியம் எனக்குக் கால் பண்ணி பிரியாணி வேணும்னு ஆர்டர் பண்றா. அதான் நானே டெலிவரிபாயா மாறி டெலிவர் பண்ணிட்டு வாரேன்.
அவளுக்கு இருக்குற குசும்ப பார்த்தீங்களா அத்தை.. சாப்பாடுக்கு மட்டும் காசு தான் தருவேன், டெலிவரி காசு, டிப்ஸ் எல்லாம் தர முடியாது, என் புருஷன் காச இப்படி எல்லாம் செலவு பண்ண முடியாதுனு நக்கல் வேற பண்றா உங்க பொண்ணு.
நான் தான் சாப்பாடுக்கு கூடக் காசு வேணாம் தாயே! உன் புருஷர் காச நீயே வச்சுக்கோனுட்டு வாரேன்” எனக் கற்பனையாக ஏதோ கதையைக் கூறி அவரிடமிருந்து மறைத்தான்.
“தினமும் வெளியே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா அவளுக்கு உடம்புக்கு ஒத்துக்காதேடா..” என மகளின் நலனில் அக்கறையோடு அவர் கூறவும் தான் அவனுக்கு அந்த விஷயமே ஞாபகத்தில வந்தது. ‘இன்னைக்கு ஒரு நாள் என்றால் பரவாயில்லை ஆனா தினமும் அவளுக்குக் கடை சாப்பாடு கொடுக்க முடியாதே’ என யோசித்தவன்,
“அது சரி அத்தை. என் கடையில இருக்குறத தான நான் குடுக்க முடியும். உங்க சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு உங்க மகளுக்கு நாக்கு தடுச்சு போச்சு.. ஆனந்தி பெரியம்மா சமையல் அம்மணிக்கு பிடிக்கலயாம் அதான் கடையில ஆடர் போடுறாங்க” எனக்கூறி அவர் முகத்தையே பார்த்தான். அதில் பல எண்ணங்கள் ஓடியது.
“ஆது! இனி ஆடர் போட்டா என்கிட்ட சொல்லு நான் சமைச்சு தாரேன்.. நீ உன் கடையில இருந்து குடுக்குற மாதிரி குடு” எனக்கூற மனதில் குத்தாட்டம் ஆடினான். அவனும் இது அவர் வாயால் வரவேண்டுமெனத் தான இப்படி நடித்தான்.
“அதெப்படி எங்க ஆடர்ர நாங்க விடுறது. அதெல்லாம் முடியாது முடியாது. காம்படீஷன் ஜாஸ்தி ஆகுது இந்த க்ளவுட் கிட்சன் வந்தாலும் வந்துச்சு ஓவர் காம்படீஷன் பா. எல்லாரும் வீட்டு சாப்பாடு வாங்கி சாப்பிடுறாங்க அப்போ நாங்க தலையில துண்ட போடவா?”
“டேய் ஒழுங்கா நான் குடுக்குற கொண்டு போய்க் குடுக்குற.. இல்ல நானே ஒரு க்ளவுட் கிட்சன் ஆரம்பிச்சிடுவேன்” எனக்கூற,
“வேண்டாம் அத்தை.. தினமும் நீங்களே பேக் பண்ணி வைங்க. நான் வந்து வாங்கிட்டு போய் உங்க மகளுக்கு டெலிவர் பண்றேன். போதுமா?” எனக்கூற அதிலிருக்கும் உள்ளர்த்தம் ஈகைக்கு புரியவில்லை. மகளுக்குத் தன் கையால் ஒருவேலை சமைத்து கொடுப்பதே பெரும் பாக்கியம் என நினைத்துச் சந்தோஷமாகத் தலையசைத்து சென்றார். அவனும் சற்று மனநிம்மதியுடன் சென்றான் வீட்டுக்கு.
கோயம்புத்தூரில் பயிற்சியில் இருந்தவனுக்கோ மதுவின் நினைப்பு தான். முன்பு ஐந்து மாதம் பயிற்சியில் இருந்த நேரம் மதுவிடம் பேசவில்லை திரும்பி வந்து பேசிக்கொள்ளலாமென நினைத்திருந்தபொழுது கூட அவளுக்காக இந்தளவுக்கு அவன் ஏங்கவில்லை.
ஆனால் இப்போது அவளை மணமுடித்து, ஒருநாள் என்றாலும்கூட அவளுடன் வாழ்ந்து விட்டவனுக்கு அவள் இல்லாமல் இருப்பது மிகவும் சிரமாயிற்று. அதாவது பசியில் இருப்பவனை அப்படியே விட்டாலாவது பசியை மறந்து இருக்க பழகிக் கொள்வான். ஆனால் கொள்ள பசியில் இருக்கும்போது கொஞ்சம் ருசியைக் காட்டிவிட்டு மீண்டும் பட்டினி போட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலையில் இருந்தான்.
எப்போது தான் இந்த டிரைனிங் முடியும், அவனவளை காண, அவளை அள்ளிக்கொஞ்ச துடித்துக்கொண்டிருந்தான். அவளிடம் காணொளியாகப் பேசும்போது அவன் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அன்று இரவு எல்லா வேலைகளும் முடிய அவளை அழைத்திருந்தான் காணொளி அழைப்பில். அவளோ அப்போது தான் குளித்து இரவு உடையை அணிந்து கொண்டு வந்தவள் அவசர அவசரமாக அழைப்பை எடுத்தாள்.
அவள் பிம்பத்தை அலைபேசியில் பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது காரணம் அவளது இரவு உடை அநியாயத்து கீழிறங்கி அவனுக்கு மூச்சடைக்க வைத்தது. சும்மாவே ருசிகண்ட பூனையாகக் குறுக்கும் நெடுக்குமாக அவன் அழைய, இவள் வேறு பால் பாத்திரத்தைக் கண்முன் வைத்துச் சீண்டுவது போலத் தூண்டிவிட்டாள்.
“சித்தத்துதுதுதுது.. என்ன நான் பேசிட்டே இருக்கேன்.. அமைதியா இருக்கீங்க என்னாச்சு?” என இவள் கத்த,
“ஹான் சொல்லு.. என்ன கேட்ட”
“சாப்பிட்டிங்களா?”
“ம்ம் கண்ணாலயே சாப்பிட்டேன்” என்றான் குறும்பாக,
“எதே! யாராவது கண்ணால சாப்பிடுவாங்களா.. லூசு சித்தத்து வாயால தான் சாப்பிடனும்”
“ஆமாம்.. ஆமாம்.. வாயால தான் சாப்பிடனும். ஆனா முடியலயே..”
“ஏன் முடியல? உடம்புக்கு முடியலயா? காய்ச்சலா?” எனப் பதட்டமாக அவள் கேட்க,
“ம்ம்.. ஆமா ரொம்ப ஹாட்டா இருக்கு” என்றான் மோகமாக,
“அச்சோ! ஹாஸ்பிடல் போனீங்களா? ஊசி, மாத்திரை எல்லாம் போட்டீங்களா?”
“அதெல்லாம் போடாமலே ஹாட்டா தான் இருக்கு”
“லூசு சித்தத்து அது போடலனா காய்சலா தான் இருக்கும்.. போட்டா தான் காய்ச்சல் சரியாகும்”
“இது சரியாகாத காய்ச்சல்”
“ஐய்யய்யோ.. டெங்கு, மலேரியா எதும் வந்துருச்சா? நீங்க வீட்டுக்கு வாங்க என்னனு பார்க்கலாம். இல்ல நான் ஆதவனை கூட்டிட்டு வரவா?”
“நீ மட்டும் வேணா வா.. அந்தக் கரடிய எதுக்கு கூட்டிட்டே வர?”
“நான் மட்டும் தனியா வந்தா எனக்குக் கோயமுத்தூர்ல என்ன தெரியும்? அவன் இருந்தா வெளியே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகத் துணையா இருக்கும்ல”
“நீ வந்தா நம்ம ரூம விட்டே வெளியே போகமாட்டோம்”
“ரூம்குள்ளயே இருந்தா காய்ச்சல் எப்படி சரியாகும்? ஹாஸ்பிடல் போக வேணாமா?”
“நீ வந்தாலே சரியாகிடும்”
“நான் என்ன டாக்டரா?”
“இந்த நோய்க்கு நீ மட்டும் தான் டாக்டர்”
“அய்யோ நீ என்னனென்னமோ ஒலறுற.. காய்ச்சல் அதிகமா இருக்கு போல.. இரு நான் மாமா, ஆதவன கூட்டிட்டு அங்க வரேன்” என அழுவது போலப் பேச, சத்தமாகச் சிரித்தவன்,
“அட லூசு பொண்டாட்டி.. நீ இல்லாம இருக்குறதே எனக்குக் கஷ்டமா இருக்கு.. இதுல நீ இப்படி டிரஸ் போட்டு என்ன மூடேத்துனா அ..ந்..த..க்காய்ச்சல் வராம என்ன வரும்? மண்டு மண்டு” எனக்கூறி இன்னும் சத்தமாகச் சிரிக்க, அப்போது தான் உடையைப் பார்த்துச் சரிசெய்துவிட்டு அவனைப் பார்த்து அசடு வழிய சிரித்தாள்.
“சாரி சித்தத்து.. கவனிக்கல”
“நான் நல்லா கவனிச்சேன்”
“ச்சீ போ.. நீ பேடா பேசுற.. அப்போ இவ்ளோ நேரமும் நீ பேடா தான் பேசினியா?” எனக் கண்ணைவிரித்தாள். அவளைப் பார்த்துக் கண்சிமிட்டி சிரித்தான் அவள் கள்வன்.
“நான் போனை வக்கிறேன்.. எனக்கு வெட்கமா இருக்கு”
“அய்யோடா வெட்கமா.. உனக்கா.. அன்னைக்கு நீ என்ன பண்ணனு நான் சொல்லவா?” எனக்கேட்க,
“ஏய்.. ஏய்! சும்மா இரு சித்தத்து.. என்னால முடியல.. நான் போறேன் போ” என அழைப்பை நிறுத்தியவள் தலையணையில் முகத்தை மறைத்துச் சிரித்துக் கொண்டாள். இருவரும் மற்றவரை நினைத்துக் கொண்டு உறக்கத்தை தொலைத்தனர்.
எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது.. உன்னக்கென்ன தோன்றுது..
ஓ.. நேரில் பார்க்க சொல்லி என்னை தூண்டுது.. அது என்னை தீண்டுது..
கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வார்த்தையில்..
நாம் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே நம் காதலில்..
காலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்..
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்..
காதல் நீதானா காதல் நீதானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா..
நெஞ்சம் இது ஒன்றுதான் அங்கும் இங்கும் உள்ளது..
உனக்கதை தருகிறேன் உயிர் என சுமந்திரு..
வானமும் என் பூமியும் உன்னிடம்..